Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

ஒளியியல் Book Back Questions 8th Science Lesson 3

8th Science Lesson 3

3] ஒளியியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

16ஆம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டிலுள்ள வெனிஸ் நகரத்தில் கண்ணாடித் தகட்டின் மீது எதிரொளிக்கும் உலோகத்தை மெல்லிய படலமாகப் பூசும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. அவர்கள் பாதரசம் மற்றும் வெள்ளி கலந்த உலோகக் கலவையினை இதற்குப் பயன்படுத்தினர். தற்காலத்தில், கண்ணாடித் தகட்டின் மீது உருகிய அலுமினியம் அல்லது வெள்ளி உலோகத்தினை மெல்லிய படலமாகப் பூசி, ஆடியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வாகனங்களில் பின்புற பார்வைக் கண்ணாடியாகப் பயன்படுத்தப்படும் குவி ஆடிகளில் ‘இக்கண்ணாடியில் தோன்றும் பிம்பமானது அதன் உண்மைத் தொலைவை விட அருகில் உள்ளது’ என்ற எச்சரிக்கை வாசகம், எழுதப்பட்டிருக்கும். ஏனெனில், கண்ணாடியில் பார்க்கும் போது வாகனங்கள் வெகு தொலைவில் வருவது போல் நமக்குத் தோன்றும்.

கிரேக்க-உரோமானியர் காலத்திலிருந்தே பரவளைய ஆடிகள் வேலை செய்யும் தத்துவமானது அறியப்பட்டிருந்தது. கணித வல்லுநர் டையோகிள்ஸ் எழுதிய ‘எரிக்கும் ஆடிகள்’ என்ற நூலில் இதன் வடிவம் பற்றிய தகவல் முதன்முதலாக இடம் பெற்றுள்ளது. இபின் ஷால் என்ற இயற்பியலாளர் 10ஆம் நூற்றாண்டில் பரவளைய ஆடிகளைப் பற்றி ஆராய்ந்தார். முதலாவது பரவளைய ஆடியை 1888 ஆம் ஆண்டு ஜெர்மன் இயற்பியலாளர் ஹென்றி ஹெர்ட்ஸ் என்பவரால் எதிரொளிக்கும் வானலை வாங்கி (antenna) வடிவில் வடிவமைக்கப்பட்டது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடிகள்

அ) சமதள ஆடிகள்

ஆ) சாதாரண ஆடிகள்

இ) கோளக ஆடிகள்

ஈ) இவற்றில் எதுவுமில்லை

2. உட்புறமாக எதிரொளிக்கும் பரப்பை உடைய வளைவு ஆடி

அ) குவி ஆடி

ஆ) குழி ஆடி

இ) வளைவு ஆடி

ஈ) இவற்றில் எதுவுமில்லை

3. வாகனங்களில் பின் காட்சி ஆடியாகப் பயன்படுத்தப்படும் ஆடி

அ) குழி ஆடி

ஆ) குவி ஆடி

இ) சமதள ஆடி

ஈ) எதுவுமில்லை

4. ஒரு ஆடியின் ஆடி மையத்தையும், வளைவு மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு ___________ எனப்படும்.

அ) வளைவு மையம்

ஆ) ஆடி மையம்

இ) முதன்மை அச்சு

ஈ) வளைவு ஆரம்

5. முதன்மைக் குவியத்திற்கும், ஆடி மையத்திற்கும் இடையே உள்ள தொலைவு _______________ என்று அழைக்கப்படுகிறது.

அ) வளைவு நீளம்

ஆ) குவிய தொலைவு

(இ) முதன்மை அச்சு

ஈ) இவற்றில் எதுவுமில்லை

6. ஒரு கோளக ஆடியின் குவிய தொலைவு 10 செ.மீ எனில், அதன் வளைவு ஆரம் ______

அ) 10 செ.மீ

ஆ) 5 செ.மீ

இ) 20 செ.மீ

ஈ) 15 செ.மீ

7. பொருளின் அளவும், பிம்பத்தின் அளவும் சமமாக இருந்தால், பொருள் வைக்கப்பட்டுள்ள இடம் ____________

அ) ஈறிலாத் தொலைவு

ஆ) F ல்

இ) F க்கும் P க்கும் இடையில்

ஈ) C ல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. அழகு நிலையங்களில் அலங்காரம் செய்யப் பயன்படும் கோளக ஆடி _____________.

2. கோளக ஆடியின் வடிவியல் மையம் ____________ எனப்படும்

3. குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் தன்மை ___________.

4. கண் மருத்துவர் கண்களைப் பரிசோதிக்கப் பயன்படுத்தும் ஆடி __________.

5. ஒளிக் கதிர் ஒன்றின் படுகோணத்தின் மதிப்பு 45o எனில் எதிரொளிப்புக் கோணத்தின் மதிப்பு __________.

6. இணையாக உள்ள இரண்டு சமதள ஆடிகளுக்கிடையே ஒரு பொருளானது வைக்கப்பட்டால், உருவாகும் பிம்பங்களின் எண்ணிக்கை ___________.

III. பொருத்துக:

1. குவி ஆடி – அ. ரேடியோ தொலைநோக்கிகள்

2. பரவளைய ஆடி – ஆ. பின்னோக்குப் பார்வை ஆடி

3. ஸ்நெல் விதி – இ. கலைடாஸ்கோப்

4. நிறப்பிரிகை – ஈ. sin i/sin r = µ

5. ஒளிவிலகல் எண் – உ. வானவில்

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கோளக ஆடிகள், 2. குழி ஆடி, 3. குவி ஆடி, 4. முதன்மை அச்சு, 5. குவியத்தொலைவு, 6. 20 செ.மீ, 7. C ல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. குழி ஆடி, 2. ஆடி மையம், 3. நேரான சிறிய மாய பிம்பம், 4. குழி ஆடி, 5. 45°, 6. முடிவில்லாதது

III. பொருத்துக:

1. ஆ, 2. அ , 3. ஈ, 4. உ, 5. இ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!