Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

கணினி – ஓர் அறிமுகம் Book Back Questions 6th Science Lesson 7

6th Science Lesson 7

7] கணினி – ஓர் அறிமுகம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ENIAC (Electronic Numerical Integrator and Computer) என்பதே முதலாவது கணினி ஆகும். இது 1946ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவே, பொதுப் பயன்பாட்டிற்கான முதலாவது கணினி ஆகும்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

(அ) மார்ட்டின் லூதர் கிங்

(ஆ) கிரகாம்பெல்

(இ) சார்லி சாப்ளின்

(ஈ) சார்லஸ் பாபேஜ்

2. கீழ்க்காண்பவற்றுள் கணினியின் மறுவடிவம் எது?

(அ) கரும்பலகை

(ஆ) கைப்பேசி

(இ) வானொலி

(ஈ) புத்தகம்

3. முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு;

(அ) 1980

(ஆ) 1947

(இ) 1946

(ஈ) 1985

4. கணினியின் முதல் நிரலர் யார்?

(அ) லேடி வில்லிங்டன்

(ஆ) அகஸ்டா அடாலவ்லேஸ்

(இ) மேரி க்யூரி

(ஈ) மேரிக்கோம்

5. பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக:

(அ) கணிப்பான்

(ஆ) அபாகஸ்

(இ) மின்அட்டை

(ஈ) மடிக்கணினி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. தரவு என்பது ______________ விவரங்கள் ஆகும்.

2. உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி ______________

3. தகவல் என்பது ___________ விவரங்கள் ஆகும்.

4. ஐந்தாம் தலைமுறைக் கணினி ___________ நுண்ணறிவு கொண்டது

5. குறியீட்டு எண்களைப் பயன்படுத்திக் கணக்கிடும் கருவி ______________

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக: தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக:

1. கணினி ஒரு மின்னணு இயந்திரம்

2. கணினியைக் கண்டறிந்தவர் சர் ஐசக் நியூட்டன்.

3. கணினி, கணக்கீடுகளை மிகவும் விரைவாகச் செய்யக்கூடியது.

IV. பொருத்துக:

1. முதல் தலைமுறை – அ. செயற்கை நுண்ணறிவு

2. இரண்டாம் தலைமுறை – ஆ. ஒருங்கிணைந்த சுற்று

3. மூன்றாம் தலைமுறை – இ. வெற்றிடக் குழாய்கள்

4. நான்காம் தலைமுறை – ஈ. மின்மயப் பெருக்கி

5. ஐந்தாம் தலை முறை – உ. நுண்செயலி

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. சார்லஸ் பாபேஜ், 2. கைப்பேசி, 3. 1946, 4. அகஸ்டா அடாலவ்லேஸ், 5. மின்அட்டை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. முறைப்படுத்தப்பட வேண்டிய, 2. அபாகஸ், 3. முறைப்படுத்தப்பட்ட, 4. செயற்கை, 5. அனலாக் கம்ப்யூட்டர்

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக: தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக:

1. சரி, 2. சார்லஸ் பாபேஜ், 3. சரி

IV. பொருத்துக:

1. இ, 2. ஈ, 3. ஆ, 4. உ, 5. அ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!