Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

கண்டங்களை ஆராய்தல் – ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா Book Back Questions 8th Social Science Lesson 15

8th Social Science Lesson 15

15] கண்டங்களை ஆராய்தல் – ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஆப்பிரிக்க கண்டத்தின் உட்பகுதிகள் குறித்து பெரும்பாலானோர் குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை. எனவே ஆப்பிரிக்கா ஒரு “இருண்ட கண்டம்” என்று அழைக்கப்படுகிறது. ஐரோப்பியக் கடற்பயண ஆய்வாளர் ஹென்றி எம். ஸ்டான்லி என்பவர் இருண்ட கண்டம் (1878) என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தினார்.

வட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான மொராக்கோ, அல்ஜீரியா, லிபியா, மோரிடானியா மற்றும் துனிசியா ஆகிய நாடுகளின் குழு “மேக் ரெப்” (Maghreb) என்று அழைக்கப்படுகிறது. அரபு மொழியில் இதன் பொருள் “மேற்கு” என்பதாகும்.

கிளிமஞ்சாரோவின் மலை உச்சியிலுள்ள பனிப்படிவுகள் இருபதாம் நூற்றாண்டிலிருந்து மறைந்து வருகின்றன. இந்நிலை தொடர்ந்தால் 2025ஆம் ஆண்டிற்குள் இப்பகுதியில் பனிப்படிவுகள் இல்லாத நிலை உருவாகும்.

தென் ஆப்பிரிக்காவின் அரை வறண்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் செம்மறி ஆடு வளர்ப்பு “காரூஸ்” என்று அழைக்கப்படுகிறது.

நைல் நதி எகிப்தின் வாழ்வாதாரமாக விளங்குவதால் இந்நதி “எகிப்தின் நன்கொடை” என அழைக்கப்படுகிறது. நைல் நதி எகிப்தில் இல்லையெனில் இந்நாடு பாலைவனமாக இருந்திருக்கும்.

வெப்பப் பாலைவனங்கள் கண்டங்களின் மேற்கு விளிம்புகளில் புவி நடுக்கோட்டின் வடக்கு மற்றும் தென் பகுதிகளில் (20o முதல் 30o) அட்சங்கள் வரை அமைந்துள்ளன. இப்பாலைவனங்கள் வியாபாரக் காற்று வீசும் மண்டலத்தில் அமைந்துள்ளன. இவ்வியாபாரக் காற்றுகள் வட கோளத்தில் வடகிழக்கில் இருந்தும் தென் கோளத்தில் தென்கிழக்கிலிருந்தும் வீசுகின்றன. இக்காற்றானது பொதுவாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசுகிறது. இக்காற்று கண்டங்களின் கிழக்கு விளிம்புங்களில் அதிக மழைப்பொழிவை ஏற்படுத்தி மேற்கு பகுதியை அடையும் பொழுது ஈரப்பதத்தை இழந்து வறண்ட காற்றாகவும் வீசுகின்றது. எனவே கண்டங்களின் மேற்கு பகுதிகள் பாலைவனங்களாக உள்ளன.

சகாரா பாலைவனத்தில் இருந்து கினியா கடற்கரையை நோக்கி வீசும் வறண்ட வெப்ப புழுதி தலக்காற்று “ஹார்மாட்டான்” என்று அழைக்கப்படுகிறது. சகாரா பாலைவனத்திலிருந்து மத்திய தரைக்கடல் நோக்கி வீசும் வெப்ப தலக்காற்று “சிராக்கோ” என்று அழைக்கப்படுகிறது. வெப்ப மண்டல மழைக்காடுகள் புவியின் அணிகலன் என்றும் உலகின் பெரும் மருந்தகம் என்றும் அழைக்கப்படுகிறது.

உலகில் காணப்படும் முக்கிய பழங்குடி இன மக்கள் அப்பிரதேசத்தின் பூர்வீக குடிமக்கள் ஆவார்கள். பூர்வீக குடிமக்கள் தங்களின் பூர்வீக நிலம், மொழிகள் மற்றும் கலாச்சாரங்களுடன் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ளனர். அபர், பாட்வா, புஷ்மன், டிங்கா, மசாய், பிக்மீஸ், ஜீலு, சுவான் மற்றும் எஃபி ஆகியோர் ஆப்பிரிக்காவின் முக்கிய பழங்குடி இனங்களாகும்.

ஆஸ்திரேலியா கண்டத்தை 1770இல் கேப்டன் ஜேம்ஸ் குக் என்ற ஆங்கில மாலுமி கண்டுபிடித்தார்.

ஆஸ்திரேலியாவின் மத்திய தாழ் நிலங்களில் அமைந்துள்ள பௌர்க்கி (Bourke) என்னும் இடத்தில் இக்கண்டத்தின் அதிகபட்சமாக 53o செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெராவில் குறைந்த பட்ச வெப்பநிலையாக -22o செல்சியஸ் பதிவாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள செம்மறி ஆட்டு பண்ணைகளில் பணிபுரியும் மக்களை “ஜாகருஸ்” என்று அழைக்கப்படுகிறார்கள். ஆஸ்திரேலியாவின் பூர்வ குடிமக்கள் அபாரிஜின்கள் ஆவர்.

ஆடு வளர்ப்புத் தொழில் ஆஸ்திரேலியாவில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. ஆட்டு உரோமம் “ஆஸ்திரேலியாவின் பணப்பயிர்” என அழைக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள மித வெப்ப மண்டல புல்வெளிகள் “டவுன்ஸ்” என்று அழைக்கப்படுகிறது.

உலகின் எந்த ஒரு நாட்டின் அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் அண்டார்டிகாவில் ஆய்வுகள் மேற்கொள்ளவும், தரவுகள் சேகரிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே இக்கண்டம் “அறிவியல் கண்டம்” என அழைக்கப்படுகிறது.

அண்டார்டிகா, புவியின் மேற்பரப்பில் காணப்படும் மிகப்பெரிய பனித் தொகுப்பு ஆகும். புவியில் காணப்படும் நன்னீரில் 70% இக்கண்டத்தில் பனிக் குமிழ்களாக உள்ளது.

அண்டார்டிகாவிலுள்ள உயரமான சிகரம் வின்சன் மாஸிப் (5140 மீ) இது இக்கண்டத்தின் சென்டினல் மலைத்தொடரின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இக்கண்டத்திலுள்ள லாம்பர்ட் பனியாறு உலகின் மிகப்பெரிய பனியாறாகும்.

அண்டார்டிகாவில் உள்ள மிகப் பெரிய ஆராய்ச்சி நிலையமான மெக்முர்டோ ஆகும். இது அமெரிக்க ஐக்கிய நாடுகளால் அமைக்கப்பட்டுள்ளது. அண்டார்டிகாவில் அமைக்கப்பெற்ற முதல் இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிலையம் தட்சின் கங்கோத்ரி ஆகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை ___________

(அ) கேப்பிளாங்கா

(ஆ) அகுல்காஸ் முனை

(இ) நன்னம்பிக்கை முனை

(ஈ) கேப்டவுன்

2. எகிப்திற்கும் சினாய் தீபகற்பத்திற்கும் இடையில் ஒரு நிலச்சந்தி வழியாக உருவாக்கப்பட்ட செயற்கை கால்வாய் __________

(அ) பனாமா கால்வாய்

(ஆ) அஸ்வான் கால்வாய்

(இ) சூயஸ் கால்வாய்

(ஈ) ஆல்பர்ட் கால்வாய்

3. மத்திய தரைக்கடல் காலநிலையோடு தொடர்புடைய பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்க.

(i) சராசரி மழையளவு 15 சென்டி மீட்டர்.

(ii) கோடைகாலம் வெப்பமாகவும் வறண்டதாகவும் குளிர்காலம் மழையுடனும் இருக்கும்.

(iii) குளிர்காலம் குளிர்ச்சியாகவும், வறண்டும், கோடை வெப்பமாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும்.

(iv) சிட்ரஸ் வகை பழங்கள் வளர்க்கபடுகின்றன.

(அ) i சரியானது

(ஆ) ii மற்றும் iv சரியானவை

(இ) iii மற்றும் iv சரியானவை

(ஈ) அனைத்தும் சரியானவை

4. ஆஸ்திரேலியாவின் மேற்கு மற்றும் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளை பிரிக்கும் மலைத்தொடர் ____________

(அ) பெரிய பிரிப்பு மலைத்தொடர்

(ஆ) இமய மலைத்தொடர்

(இ) பிளிண்டர்கள் மலைத்தொடர்

(ஈ) மெக்டோனெல் மலைத்தொடர்

5. கல்கூர்லி சுரங்கம் ____________ கனிமத்திற்குப் புகழ்பெற்றது.

(அ) வைரம்

(ஆ) பிளாட்டினம்

(இ) வெள்ளி

(ஈ) தங்கம்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. அட்லஸ் மலை ___________ கண்டத்தில் அமைந்துள்ளது.

2. ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம் ____________ ஆகும்.

3. ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் மரம் ___________

4. ஆஸ்திரேலியாவில் உள்ள மிதவெப்ப மண்டல புல்வெளிகள் ___________ என அழைக்கப்படுகின்றன.

5. அண்டார்டிகாவில் நிறுவப்பட்ட முதல் இந்திய ஆய்வு நிலையம் ____________

பொருத்துக:

1. பின்னாக்கள் – புவியிடைக் கோட்டுக்காடுகள்

2. கிரில் – உப்பு ஏரி

3. நெருப்புக்கோழி – சிறிய செம்மீன்

4. ஐரி ஏரி – பறக்க இயலாத பறவை

5. புவியின் அணிகலன் – சுண்ணாம்பு பாறை தூண்கள்

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்:

1. கூற்று: அரோரா என்பது வானத்தில் தோன்றும் வண்ண ஒளிகள் ஆகும்,

காரணம்: அவை வளிமண்டலத்pன் மேலடுக்குக் காந்த புயலால் ஏற்படுகின்றன.

அ) கூற்று மற்றும் காரணம் உண்மைஇ கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்.

ஆ) கூற்று மற்றும் காரணம் உண்மை கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம் அல்ல.

இ) கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு.

ஈ) காரணம் உண்மை ஆனால் கூற்று தவறு

2. கூற்று: ஆப்பிரிக்காவின் நிலவியல் தோற்றங்களில் ஒரு முக்கிய அம்சம் பெரிய பிளவுப் பள்ளத்தாக்கு ஆகும்.

காரணம்: புவியின் உள்விசை காரணமாக புவியின் மேற்பரப்பில் உண்டான பிளவு.

அ) கூற்று மற்றும் காரணம் சரி கூற்றுகான காரணம் சரியான விளக்கம்.

ஆ) கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் கூற்றுக்கான காரணம் சரியான விளக்கம் அல்ல.

இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

ஈ) காரணம் சரி ஆனால் கூற்று தவறு.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. அகுல்காஸ் முனை 2. சூயஸ் கால்வாய் 3. ii மற்றும் iv சரியானவை

4. பெரிய பிரிப்பு மலைத்தொடர் 5. தங்கம்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. வடமேற்கு ஆப்பிரிக்கா 2. கிளிமஞ்சாரோ 3. யூக்கலிப்டஸ் 4. டவுன்ஸ்

5. தட்சின் கங்கோத்ரி

பொருத்துக: (விடைகள்)

1. பின்னாக்கள் – சுண்ணாம்பு பாறை தூண்கள்

2. கிரில் – சிறிய செம்மீன்

3. நெருப்புக்கோழி – பறக்க இயலாத பறவை

4. ஐரி ஏரி – உப்பு ஏரி

5. புவியின் அணிகலன் – புவியிடைக் கோட்டுக்காடுகள்

சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்: (விடைகள்)

1. கூற்று மற்றும் காரணம் உண்மை, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்.

2. கூற்று மற்றும் காரணம் உண்மை, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!