Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

கண்டங்களை ஆராய்தல் – வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா Book Back Questions 7th Social Science Lesson 21

7th Social Science Lesson 21

21] கண்டங்களை ஆராய்தல் – வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

நிலச்சந்தி: இரண்டு மிகப் பெரிய நிலப் பகுதிகளை இணைக்கும் சிறிய துண்டு. நீர்ச்சந்தி: இரண்டு பெரிய நீர் பரப்புகளை இணைக்கும் சிறிய நீர் பரப்பு.

பல இயங்கும் எரிமலைகளை கொண்டுள்ளதால் கார்டில் லெராஸ், பசிபிக் நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இப்பகுதி நில அதிர்வுகளையும் அடிக்கடி எதிர் கொள்கிறது.

கண்டங்களும் அதன் உயரமான சிகரங்களும்: ஆசியா-எவரெஸ்ட் சிகரம் (8848 மீ). தென் அமெரிக்கா-அகான்காகுவா (6961 மீ). வடஅமெரிக்கா-மெக்கென்லீ சிகரம் (6194 மீ). ஆப்பிரிக்கா-கிளிமஞ்சாரோ (5895 மீ). ஐரோப்பா-எல்பரஸ் சிகரம் (5642 மீ). அண்டார்டிகா-வின்சன் மாசிப் சிகரம் (4892 மீ). ஆஸ்திரேலியா-காஸ்கியூஸ்கோ சிகரம் (2228 மீ).

கிராண்ட் கேன்யான் (Grand Canyon) என்பது அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் கொலராடோ ஆற்றினால் உருவாக்கப்பட்ட செங்குத்தான பக்கங்களைக் கொண்ட மிக ஆழமான பள்ளத்தாக்கு ஆகும்.

“பெரிய சேற்று ஆறு” என்ற புனைப் பெயருடன் மிஸிஸிப்பி ஆறு அழைக்கப்படுகிறது. இது மலைகளின் கீழே பாய்ந்து வரும் போது மண்ணையும் சேற்றையும் தன்னோடு இழுத்து வருவதால் இதற்கு இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கத்திய காற்றுகள் அல்லது எதிர் வர்த்தக காற்றுகள் 300 முதல் 600 வரையிலான மத்திய அட்சகோட்டுப்பகுதியில் மேற்கிலிருந்து கிழக்காக வீசும் நிலையான காற்றுகள் ஆகும்.

கிராண்ட் பேங்க்: உலகின் முக்கிய பெரிய மற்றும் வளமான இயற்கை வளங்களை கொண்டது கிராண்ட் பேங்க். இங்கு மீன் மற்றும் பெட்ரோலிய படிவுகள் காணப்படுகின்றன.

எஸ்கிமோக்கள் கடும் குளிர் மற்றும் வாழ்வதற்கு கடினமான பகுதிகளில் எங்கு மீன்கள் அதிகம் கிடைக்கிதோ, அங்கு வாழ்கிறார்கள். விலங்குகளின் மென்மையான முடிகளால் ஆன உடைகளை உடுத்தி இஃலுக்களில் வாழ்கிறார்கள். சுற்றுச்சூழலை பெரிதும் மாற்றி அமைக்க இயலாத நிலையில் இவர்கள் எளிய வாழ்க்கையை வாழ்கிறார்கள். பனிக்கட்டிகளை கொண்டு இவர்கள் கட்டும் வீடுகளுக்கு இஃக்லூ என்று பெயர்.

பனாமா கால்வாய்: 1914ல் பனாமா நிலச்சந்தியின் குறுக்கே 80 கிலோமீட்டர் நீளத்திற்கு அட்லாண்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் விதமாக பனாமா கால்வாய் வெட்டப்பட்டது. இக்கால்வாய் ஐரோப்பா மற்றும் வட தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைக்கு இடையிலான தூரத்தை வெகுவாக குறைக்கின்றது.

மத்திய அமெரிக்காவுடன் இணைந்து தென் அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா என அழைக்கப்படுகிறது. ஐரோப்பியர்கள் குறிப்பாக ஸ்பானியர்கள் மற்றும் போர்த்துகீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் காலனியாக ஆட்சி செய்யப்பட்டதால் இப்பெயரை பெறுகிறது.

பூமத்திய ரேகை பகுதிகளில் வெப்பச்சலன மழை கிட்டத்தட்ட தினமும் பிற்பகலில் நிகழ்கிறது. இது பொதுவாக மாலை 4 மணிக்கு நிகழ்கிறது. அதனால்தான் இது 4 மணி “கடிகாரமழை” என்று அழைக்கப்படுகிறது.

அமேசான் தென் அமெரிக்காவின் மிகப்பெரிய நதியாகும். அதில் பாயும் நீரின் அளவு மற்றும் அதன் வடிநில பரப்பு ஆகியவற்றைக் கொண்டு உலகின் மிகப்பெரிய வடிகால் அமைப்பாக விளங்குகிறது.

எஸ்டான்சியாஸ்: கால்நடைகள் வளரும் பெரும் புல்வெளி பரப்புகள் எஸ்ட்டென்ஷன் என அழைக்கப்படுகின்றன. இவை சிறிய புல்வெளி தளங்களாக பிரிக்கப்படுகின்றன. இவை மேலும் பராமரிப்பு தளங்களாக பிரிக்கப்பட்டு இங்கு கால்நடைகள் தரம் பிரித்து முத்திரை இடப்படுகின்றன. “எஸ்டான்சியாரே” எனப்படும் எஸ்டான்சியா பராமரிப்பாளரின் கீழ் “கவ்சோ” எனப்படும் வேலையாட்கள் வேலை செய்கின்றனர்.

தென் அமெரிக்க நாடுகளில் பல்வேறு வகையான இசைகள் உள்ளன. பிரேசிலிலிருந்து சம்பா, அர்ஜென்டினாவைச் சேர்ந்த டேங்கோ மற்றும் உருகுவே மற்றும் கொலம்பியாவைச் சேர்ந்த கும்பியா ஆகியவை மிகவும் பிரபலமான வகைகளில் அடங்கும்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. வட அமெரிக்காவையும் ஆசியாவையும் —– பிரிக்கிறது.

(அ) பேரிங் நீர் சந்தி

(ஆ) பாக் நீர் சந்தி

(இ) மலாக்கா நீர் சந்தி

(ஈ) ஜிப்ரால்டர் நீர் சந்தி

2. ——- உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படுகிறது

(அ) மெக்ஸிகோ

(ஆ) அமெரிக்கா

(இ) கனடா

(ஈ) கியூபா

3. ——- வட அமெரிக்காவின் நீளமான ஆறுகள் ஆகும்.

(அ) மிஸிஸிப்பி மற்றும் மிஸ்சௌரி

(ஆ) மெக்கென்ஸி ஆறு

(இ) புனித லாரன்சு ஆறு

(ஈ) கொலரடோ ஆறு

4. உலகின் மிக நீண்ட மலைத்தொடர் ———-

(அ) ஆன்டிஸ்

(ஆ) ராக்கி

(இ) இமயமலை

(ஈ) ஆல்ப்ஸ்

5. பூமத்திய ரேகை பகுதியில் இருப்பதால் —— வடிநிலப் படுகை தினந்தோரும் மழை பெறுகிறது

(அ) மெக்கென்ஸி

(ஆ) ஒரினாகோ

(இ) அமேசான்

(ஈ) பரானா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வட அமெரிக்காவின் தாழ்வான பகுதியான ——– கடல் மட்டத்திலிருந்து 86 மீட்டர் ஆழத்தில் உள்ளது.

2. உலகின் தலை சிறந்த மீன்பிடித் தளமாக —— விளங்குகிறது.

3. சிலி அர்ஜென்டினா எல்லையில் அமைந்துள்ள —— ஆண்டிஸ் மலைத் தொடரின் உயரமான சிகரமாகும்.

4. பூமத்திய ரேகைப் பகுதியில் இருக்கும் ——— உலகின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.

5. ——–ற்கு உலகின் காப்பி பானை என்ற பெயரும் உண்டு.

III. பொருத்துக:

1. மெக்கென்லீ சிகரம் – அ) வெப்ப மண்டல காடுகள்

2. கிராண்ட் கேன்யான் – ஆ) பறக்க இயலாத பறவை

3. எபோனி – இ) கொலரடோ ஆறு

4. நான்கு மணி கடிகார மழை – ஈ) 6194 மீ

5. ரியா -உ) பூமத்திய ரேகை பகுதி

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று (A): வட அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பருத்தி நன்றாக வளருகிறது

காரணம் (R): மழையுடன் கூடிய வெப்பமான கோடைகாலம் மற்றும் வளமான மண் ஆகியவை பருத்தி விளைவதற்கான ஏற்ற சூழல்களாக உள்ளன

(அ) கூற்றும் காரணமும் சரி

(ஆ) கூற்று சரி. காரணம் தவறு

(இ) காரணம் தவறு. கூற்று சரி

(ஈ) காரணம் மற்றும் கூற்று தவறு

2. கூற்று: தென் அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன.

காரணம்: தொழில்மயமாவதற்கான அடிப்படை வசதிகள் குறிப்பாக போக்குவரத்து வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது

(அ) கூற்றும் காரணமும் சரி (ஆ) கூற்று சரி. காரணம் தவறு

(இ) காரணம் தவறு. கூற்று சரி (ஈ) காரணம் மற்றும் கூற்று தவறு

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பேரிங் நீர் சந்தி, 2. கியூபா, 3. மிஸிஸிப்பி மற்றும் மிஸ்சௌரி, 4. ஆன்டிஸ், 5. அமேசான்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. மரணப்பள்ளத்தாக்கு, 2. கிராண்ட் பேங்க், 3. அகான்காகுவா சிகரம், 4. அமேசான் காடுகள், 5. பிரேசில்

III. பொருத்துக:

1. ஈ, 2. இ, 3. உ, 4. அ, 5. ஆ

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்றும் காரணமும் சரி, 2. கூற்று தவறு காரணம் சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!