Book Back QuestionsTnpsc

கரைசல்கள் Book Back Questions 10th Science Lesson 9

10th Science Lesson 9

9] கரைசல்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

திரவத்தில் வாயுவின் கரை திறனில் அழுத்தத்தின் விளைவை ஹென்றியின் விதி விளக்குகிறது. இவ்விதிப்படி அழுத்த அதிகரிப்பு, வாயுக்களில் கரைதன்மையை அதிகரிக்கும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட பருமனளவு நீர்மத்தில் கரைந்துள்ள வாயுவின் நிறை அதன் மீது செலுத்தப்பட்ட அழுத்தத்திற்கு நேர்விகிதப் பொருத்தமுடையது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது _____________ கலவை.

(அ) ஒரு படித்தான

(ஆ) பலபடித்தான

(இ) ஒரு படித்தான மற்றும் பல்படித்தானவை

(ஈ) ஒரு படித்தானவை அல்லாதவை

2. இரு மடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை ____________

(அ) 2

(ஆ) 3

(இ) 4

(ஈ) 5

3. கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது ____________

(அ) அசிட்டோன்

(ஆ) பென்சீன்

(இ) நீர்

(ஈ) ஆல்கஹால்

4. குறிப்பிட்ட வெப்ப நிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க முடியாத கரைசல் _____________ எனப்படும்.

(அ) தெவிட்டிய கரைசல்

(ஆ) தெவிட்டாத கரைசல்

(இ) அதி தெவிட்டிய கரைசல்

(ஈ) நீர்த்த கரைசல்

5. நீரற்ற கரைசலை அடையாளம் காண்க:

(அ) நீரில் கரைக்கப்பட்ட உப்பு

(ஆ) நீரில் கரைக்கப்பட்ட குளுக்கோஸ்

(இ) நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட்

(ஈ) கார்பன்-டை-சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர்

6. குறிப்பிட்ட வெப்ப நிலையில், அழுத்தத்தை அதிகரிக்கும் போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன் _____________

(அ) மாற்றமில்லை

(ஆ) அதிகரிக்கிறது

(இ) குறைகிறது

(ஈ) வினை இல்லை

7. 100 கி. நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி. 25 கி. சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும் ____________

(அ) 12 கி

(ஆ) 11 கி

(இ) 16 கி

(ஈ) 20 கி

8. 25% ஆல்கஹால் கரைசல் என்பது ____________

(அ) 100 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

(ஆ) 25 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

(இ) 75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

(ஈ) 25 மி.லி நீரில் 75 மி.லி ஆல்கஹால்

9. ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம் ____________

(அ) ஈரம் மீது அதிக நாட்டம்

(ஆ) ஈரம் மீது குறைந்த நாட்டம்

(இ) ஈரம் மீது நாட்டம் இன்மை

(ஈ) ஈரம் மீது மந்தத்தன்மை

10. கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது ______________

(அ) ஃபெரிக் குளோரைடு

(ஆ) காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட்

(இ) சிலிக்கா ஜெல்

(ஈ) இவற்றுள் எதுமில்லை

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒரு கரைசலில் உள்ள மிகக் குறைந்த அளவு கொண்ட கூறினை ______________ என அழைக்கிறோம்.

2. திண்மத்தில் நீர்மம் வகை கரைசலுக்கு ஒரு எடுத்துக்காட்டு ___________

3. கரைதிறன் என்பது ____________ கி கரைப்பானில் கரைக்கப்படும் கரைபொருளின் அளவு ஆகும்.

4. முனைவுறும் சேர்மங்கள் ____________ கரைப்பானில் கரைகிறது.

5. வெப்பநிலை அதிகரிக்கும் போது கனஅளவு சதவீதம் குறைகிறது. ஏனெனில் _____________

பொருத்துக:

1. நீல விட்ரியால் – CaSo4.2H2O

2. ஜிப்சம் – CaO

3. ஈரம் உறிஞ்சிக் கரைபவை – CuSO4.5H2O

4. ஈரம் உறிஞ்சி – NaOH

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. இருமடிக்கரைசல் என்பது மூன்று கூறுகளைக் கொண்டது.

2. ஒரு கரைசலில் குறைந்த அளவு (எடை) கொண்ட கூறுக்கு கரைப்பான் என்று பெயர்.

3. சோடியம் குளோரைடு நீரில் கரைந்து உருவாகும் கரைசல் நீரற்ற கரைசலாகும்.

4. பச்சை விட்ரியாலின் மூலக்கூறு வாய்ப்பாடு MgSO4.7H2O

5. சிலிகா ஜெல் காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்கிறது. ஏனெனில் அது ஒரு ஈரம் உறிஞ்சும் தன்மை கொண்ட சேர்மம் ஆகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. ஒரு படித்தான, 2. (2), 3. நீர், 4. தெவிட்டிய கரைசல், 5. கார்ப்ன-டை-சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர், 6. அதிகரிக்கிறது,
7. (11கி), 8. 75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால், 9. ஈரம் மீது அதிக நாட்டம் , 10. சிலிக்கா ஜெல்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. கரைபொருள், 2. இரசக்கலவை, 3. (100கி), 4. முனைவுறும், 5. திரவங்கள் வெப்பத்தால் விரிவடையும்

பொருத்துக: (விடைகள்)

1. நீல விட்ரியால் – CuSo4.5H2O

2. ஜிப்சம் – CaSO4.2H2O

3. ஈரம் உறிஞ்சிக் கரைபவை – NaOH

4. ஈரம் உறிஞ்சி – CaO

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறானதைத் திருத்தி எழுதுக).

1. தவறு

சரியான விடை: இருமடிக்கரைசல் என்பது இரண்டு கூறுகளைக் கொண்டது.

2. தவறு

சரியான விடை: ஒரு கரைசலில் குறைந்த அளவு (எடை) கொண்ட கூறுக்கு கரைபொருள் என்று பெயர்.

3. தவறு

சரியான விடை: சோடியம் குளோரைடு நீரில் கரைந்து உருவாகும் கரைசல் நீர்க் கரைசலாகும்.

4. தவறு

சரியான விடை: பச்சை விட்ரியாலின் மூலக்கூறு வாய்ப்பாடு.

5. சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!