Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் Book Back Questions 9th Science Lesson 5

9th Science Lesson 5

5] காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சில கடல் ஆமைகள் (லாஜெர்ஹெட் கடல் ஆமை) அவை பிறந்த கடற்கரையோரம் பல ஆண்டுகளுக்குப் பிறகும் வந்து முட்டையிடுகின்றன. ஒரு ஆராய்ச்சியில், ஆமைகள் தங்களது பிறந்த கடற்கரையைக் கண்டறிய புவிக்காந்த உருப்பதித்தல் என்னும் முறையைக் கையாளுகின்றன என்று கூறப்படுகிறது. இந்த ஆமைகள், புவியின் பல்வேறு இடங்களிலுள்ள காந்தப்புல வலிமையை நினைவில் கொள்ளும் ஆற்றல் உடையவை. இந்த நினைவாற்றல் அவை தாயகத்திற்குத் திரும்புவதற்கு உதவுகிறது.

கணக்கீடு 1: 5 A மின்னோட்டம் பாயும் 50 செ.மீ நீளமுடைய ஒரு கடத்தியானது 2 x 10-3 T வலிமையுடைய காந்தப் புலத்திற்கு செங்குத்தாக வைக்கப்படுகிறது. கடத்தி மீது செயல் படும் விசையைக் கண்டுபிடிக்க.

தீர்வு: கடத்தியின் செயல்படும் விசை:

ILB = 5 x 50 x 10-2 x 2 x 10-3 = 5 x 10-3 N

கணக்கீடு 2: காந்தப் புலத்திற்கு செங்குத்தாக வைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நீளமுடைய மின்னோட்டம் பாயும் கடத்தியானது ஒரு வலுவான விசை F க்கு உட்படுகிறது. மின்னோட்டமானது நான்கு மடங்காகவும், நீளம் பாதியாகவும் மற்றும் காந்தப்புலம் மூன்று மடங்காகவும் அதிகரித்தால் விசை எவ்வாறு அமையும்?

தீர்வு: F = I L B = (4I) x (L/2) x (3 B) = 6 F. எனவே, விசை ஆறு மடங்கு அதிகரிக்கிறது.

மைக்கேல் ஃபாரடே (22 செப்டம்பர் 1791 – 25 ஆகஸ்ட் 1867) ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி ஆவார், ஆவர் மின்காந்தவியல் மற்றும் மின்வேதியியல் போன்ற அறிவியல் பிரிவுகளுக்கு பெரும் பங்களித்தார். அவரது முக்கியக் கண்டுபிடிப்புகளில் அடிப்படை மின்காந்தத் தூண்டல், டயா காந்தத்தன்மை மற்றும் மின்னாற்பகுப்பு ஆகியவை அடங்கும்.

ஒரு ஏற்று மின்மாற்றி மின்னழுத்தத்தை அதிகரிக்கிறது. ஆனால் மின்னோட்டத்தைக் குறைக்கிறது மற்றும் மறுதலையாகவும் அமையும். அடிப்படையில் வெப்பம், ஒலி போன்ற வடிவில் ஒரு மின்மாற்றியில் ஆற்றல் இழப்பு ஏற்படும்.

கணக்கீடு 3: ஒரு மின்மாற்றியின் முதன்மைச் சுருளில் 800 சுற்றுகள் உள்ளன, துணைச் சுருள் 8 சுற்றுகளைக் கொண்டுள்ளது. இது ஒரு 220 V AC மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வெளியீடு மின்னழுத்தம் என்னவாக இருக்கும்?

தீர்வு: ஒரு மின்மாற்றியில்

ES / EP = NS/NP

ES = NS/NP x EP = 8/800 x 220 = 220/100 = 2.2 வோல்ட்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பின்வருவனவற்றுள் எது மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது?

(அ) மோட்டார்

(ஆ) மின்கலன்

(இ) மின்னியற்றி

(ஈ) சாவி

2. கீழ்க்கண்ட எவற்றில் மின்மாற்றி வேலை செய்கிறது?

(அ) AC இல் மட்டும்

(ஆ) DC இல் மட்டும்

(இ) AC மற்றும் DC

3. மின்னோட்டத்தை AC மின்னியற்றியின் சுருளிருந்து வெளிச் சுற்றுக்கு எடுத்துச் செல்லும் மின்னியற்றியின் பகுதி.

(அ) புலக்காந்தம்

(ஆ) பிளவு வளையங்கள்

(இ) தூரிகைகள்

(ஈ) நழுவு வளையங்கள்

4. காந்தப் பாய அடர்த்தியின் அலகு

(அ) வெபர்

(ஆ) வெபர் / மீட்டர்

(இ) வெபர் / மீட்டர்2

(ஈ) வெபர் மீட்டர்2

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. காந்தப் புலத் தூண்டலின் SI அலகு ________ ஆகும்.

2. உயர் மாறுதிசை மின்னோட்டத்தை குறைந்த மாறுதிசை மின்னோட்டமாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் ___________ ஆகும்.

3. மின் மோட்டார் __________ ஐ மாற்றுகிறது.

4. மின்னோட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு கருவி _________ ஆகும்.

பொருத்துக:

1. காந்தப் பொருள் – அ. ஒயர்ஸ்டெட்

2. காந்தமல்லாத பொருள் – ஆ. இரும்பு

3. மின்னோட்டம் மற்றும் காந்தவியல் – இ. தூண்டல்

4. மின்காந்தத் தூண்டல் – ஈ. மரம்

5. மின்னியற்றி – உ. ஃபாரடே

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. ஒரு மின்னியற்றி இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது.

2. காந்தப் புலக் கோடுகள் எப்போதும் ஒன்றையொன்று விலக்குகின்றன வெட்டிக்கொள்வதில்லை.

3. ஃப்ளெமிங்கின் இடது கை விதி மின்னியற்றி விதி எனவும் அழைக்கப்படுகிறது.

4. சுருளின் பரப்பைக் குறைப்பதன் மூலம் மின் மோட்டாரின் சுழற்சி வேகத்தை அதிகரிக்கலாம்.

5. ஒரு மின்மாற்றி நேர்திசை மின்னோட்டத்தை மாற்றுகிறது.

6. ஒரு இறக்கு மின்மாற்றியில் முதன்மைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கை துணைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. மோட்டார் 2. AC இல் மட்டும் 3. தூரிகைகள் 4. வெபர்/மீட்டர்2

கோடிட்ட இடத்தை நிரப்புக: (விடைகள்)

1. டெஸ்லா 2. இறக்கு மின்மாற்றி 3. மன்னாற்றலை இயந்திர ஆற்றலாக 4. மின்னியற்றி

பொருத்துக: (விடைகள்)

1. காந்தப் பொருள் – இரும்பு

2. காந்தமல்லாப் பொருள் – மரம்

3. மின்னோட்டம் மற்றும் காந்தவியல் – அயர்ஸ்டெட்

4. மின்காந்தத் தூண்டல் – ஃபாரடே

5. மின்னியற்றி – தூண்டல்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக)

1. சரி

2. சரி

3. தவறு

சரியான விடை: ஃபிளெமிங்கின் வலது கை விதி மின்னியற்றி விதி எனவும் அழைக்கப்படுகிறது.

4. தவறு

சரியான விடை: சுருளின் பரப்பை அதிகரிப்பதின் மூலம் மின்மோட்டாரின் சுழற்சி வேகத்தை அதிகரிக்கலாம்.

5. தவறு

சரியான விடை: ஒரு மின்மாற்றி மாறுதிசை மின்னோட்டத்தை மாற்றுகிறது.

6. தவறு

சரியான விடை: ஒரு இறக்கு மின்மாற்றியில் முதன்மைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கையைவிட துணைச்சுற்றில் உள்ள எண்ணிக்கை குறைவாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!