Samacheer NotesTnpsc

காந்தியடிகள் தேசியதலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Notes 12th History Lesson 4 Notes in Tamil

12th History Lesson 4 Notes in Tamil

காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

அறிமுகம்

  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869இல் கடற்கரையோர நகரான போர்பந்தரில் பிறந்தார். 1915ஆம் ஆண்டு அவர் இந்தியா திரும்பியபோது தென்னாப்பிரிக்காவின் இனவாத அரசு விதித்த சமத்துவமில்லாத நிலைமைகளுக்கு எதிரான காந்தியடிகளின் போராட்டங்கள் ஒரு சாதனையாக இருந்தன.
  • இந்திய தேசிய சக்திகளுக்கு உதவ வேண்டும் என்று காந்தியடிகள் உறுதியாக விரும்பினார். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்காக முன்னர் ஆதரவு திரட்டியபோது காங்கிரஸ் தலைவர்களுடன் அவர் தொடர்பில் இருந்ததால் காந்தியடிகளுக்கு இந்தியத் தலைவர்களுடன் தொடர்பு இருந்தது.
  • கோபால கிருஷ்ண கோகலேவின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரைத் தனது அரசியல் குருவாக அடையாளம் கண்டார். இந்தியாவை விட்டு 20 ஆண்டுகள் வெளியே இருந்த காந்தியடிகள் கோகலேவின் அறிவுரையை ஏற்று இந்தியா திரும்பிய உடன் நாட்டின் நிலைமையோடுத் தன்னைப் பொருத்திக்கொள்ளும் விதமாக நாடு முழுவதும் ஓராண்டு காலத்துக்குப் பயணம் மேற்கொண்டார்.
  • அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவிய அவர், தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம் உள்ளிட்ட அரசியல் இயக்கங்களில் தீவிரப் பங்கேற்கவில்லை.
  • தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது இனவாத அடிப்படையில் செயல்பட்ட அந்நாட்டு அரசுக்கு எதிராக சத்யம் (உண்மை), அஹிம்சை (வன்முறையற்ற தன்மை) ஆகியவற்றின் அடிப்படையிலான சத்தியாகிரகப் போராட்டத்தைப் படிப்படியாக உருவாக்கினார்.
  • தீமை மற்றும் அநீதிக்கு எதிராக போராடியபோதிலும், ஒரு சத்தியாகிரகி தனது மனதில் அமைதியை நிலைநிறுத்துவதோடு தவறு செய்தவரை வெறுக்கக்கூடாது.
  • எதிர்ப்பின் பாதையில் ஒரு சத்தியாகிரகி சிரமங்களை ஏற்றுக்கொள்வார் மற்றும் அவரது நடவடிக்கையில் வெறுப்புணர்வுக்கு இடமில்லை.
  • அஹிம்சையும் உண்மையும் தைரியமானவர்கள் மற்றும் அச்சமற்றவர்களின் ஆயுதங்களாக விளங்கும். அவை கோழைகளின் ஆயுதங்கள் அல்ல. எண்ணப்போக்கு மற்றும் பழக்கம், நம்பிக்கை மற்றும் செயல்பாட்டுக்கு இடையே காந்தியடிகளுக்கு எந்தவித வேறுபாடுமில்லை.

காந்தியடிகளின் சத்தியாகிரக சோதனைகள்

அ) சம்பரான் இயக்கம் (1917)

  • சம்பரானில் இருந்த விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, இந்திய மக்களை ஒன்றிணைக்கும் முதல் முயற்சியைக் காந்தியடிகள் மேற்கொண்டார். அவர் போராட்டத்தைத் துவங்குமுன், நிலைமை குறித்து விரிவாக ஆராய்ந்தார். பீகாரின் சம்பரான் மாவட்டத்தில் இருந்த கருநீலச்சாய (இண்டிகோ) விவசாயிகள் ஐரோப்பிய வர்த்தகர்களால் பெரிதும் ஏமாற்றப்பட்டனர். அவர்களிடம் இருந்த 3/20 பங்கு நிலத்தில் விவசாயிகள் கருநீலச்சாயத்தைக் கட்டாயம் விளைவிக்கவேண்டும். அதனையும் வர்த்தகர்கள் நிர்ணயிக்கும் விலைக்கே விற்கவேண்டும். இந்தக் கட்டமைப்பு விவசாயிகளைச் சுரண்டியதோடு அவர்களை வறுமையின் பிடியில் சிக்கவைத்தது.
  • ராஜேந்திர பிரசாத் , மஜாருல் ஹக், ஆச்சார்ய கிருபாளினி, மஹாதேவ தேசாய் போன்ற உள்ளூர் தலைவர்களுடன் காந்தியடிகள் விரிவான விசாரணை மேற்கொண்டார்.
  • உடனடியாக அந்த மாவட்டத்தை விட்டு வெளியேறவேண்டும் என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் காந்தியடிகளுக்கு உத்தரவிட்டனர். ஆனால் வெளியேற மறுத்த காந்தியடிகள், இந்த உத்தரவு நியாயமற்றது என்று மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி உத்தரவை மீறுவதன் மூலம் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க போவதாகவும் கூறினார்.
  • காந்தியடிகளை ஒரு உறுப்பினராகக் கொண்டு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஏழை விவசாயிகளின் சிரமங்கள் குறித்து குழுவிடம் எடுத்துரைத்துப் புரியவைப்பதில் காந்தியடிகளுக்குச் சிரமம் ஏற்படவில்லை. அந்த அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அமல்படுத்தப்பட்டதில் ஐரோப்பிய வர்த்தகர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கருநீலச்சாய விவசாயிகள் மீட்கப்பட்டனர். ஐரோப்பிய வர்த்தகர்கள் படிப்படியாக சம்பரானை விட்டே வெளியேறிவிட்டனர்.

ஆ) ஆலைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் மற்றும் அகமதாபாத்தில் காந்தியடிகளின் உண்ணாவிரதம் (1918)

  • இவ்வாறாக காந்தியடிகள் தனது முதலாவது வெற்றியைத் தாய்மண்ணில் பதிவு செய்தார். விவசாயிகளின் நிலைமையை நெருக்கமாகப் புரிந்துகொள்ள இந்த போராட்டம் அவருக்கு வழிவகை செய்தது. அகமதாபாத் நகர மையத்தில் பணியாளர்களுக்காக மக்களை ஒன்றுதிரட்டும் பணி காத்திருந்தது.
  • துணிஆலைப் பணியாளர்களுக்கும், ஆலை முதலாளிகளுக்கும் இடையே பிரச்சனை நிலவியது. காந்தியடிகள் இருதரப்பையும் சந்தித்துப் பேசினார். மிகக் குறைவான ஊதியம் பெற்ற பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்க முதலாளிகள் மறுத்ததை அடுத்து 35 சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு காந்தியடிகள் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
  • தொழிலாளர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார். தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்கவேண்டிய நிலைக்கு ஆலை முதலாளிகளை நிர்ப்பந்தித்தது.

இ) கேதா போராட்டம் (1918)

  • கேதா மாவட்ட விவசாயிகள் பருவமழை பொய்த்ததன் காரணமாகச் சிரமத்தைச் சந்தித்தனர். 1918இல் நில வருவாய் வசூலை ரத்துசெய்யுமாறு காலனி ஆட்சி நிர்வாகத்திடம் அவர்கள் கோரினர்.
  • அரசின் பஞ்சகால விதியின்படி, பயிர்சாகுபடி சராசரியாக 25 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் பயிரிடுவோர் முழு நிலவரி ரத்துக்கு தகுதிபெறுவர். ஆனால் நிர்வாகத்தினர் இவ்விதியை அமல்படுத்த மறுத்துவிட்டு முழுமையாக பணத்தைச் செலுத்துமாறு துன்புறுத்தினர்.
  • பிளேக் நோயாலும் அதிக விலையேற்றத்தாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காந்தியடிகள் உறுப்பினராக அங்கம் வகித்த இந்தியப் பணியாளர் சங்கத்தை (Servants of India Society) உதவி கோரி அணுகினர்.
  • ஏழை விவசாயிகள் சார்பாக விதல்பாய் பட்டேலுடன் இணைந்து தலையிட்ட காந்தியடிகள் பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டு இந்த எதேச்சதிகாரம் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்த்து சாகும்வரைப் போராட்டம் நடத்துமாறு அறிவுறுத்தினார்.
  • இளம் வழக்கறிஞரான வல்லபாய் பட்டேலும் இந்துலால் நாயக்கும் காந்தியடிகளுடன் இந்த இயக்கத்தில் இணைந்து விவசாயிகளை உறுதியாக இருக்குமாறு வேண்டினர்.
  • பயிர்களை எடுத்துக்கொள்வது, போராட்டம் நடத்தியவர்களின் சொத்துகளையும் கால்நடைகளையும் சொந்தமாக்கிக் கொள்வது, சில நேரங்களில் அவற்றில் சிலவற்றை ஏலம் விடுவது என அரசு அடக்குமுறைகளைக் கையாண்டது.

  • எந்த விவசாயியால் பணம் செலுத்தமுடியுமோ அவர்களிடம் இருந்து மட்டுமே வருவாயை வசூல் செய்யவேண்டும் என்று அரசு நிர்வாகத்தினர் அறிவுறுத்தல்களை வெளியிட்டனர். இதனை அறிந்த காந்தியடிகள் போராட்டத்தை விலக்கிக்கொள்ள முடிவு செய்தார்.
  • காந்தியடிகள் தலைமையில் நடந்த மூன்று போராட்டங்களும் இந்திய நாடு எங்கிருக்கிறது என்ற உணர்வை அவருக்கும் வழங்கும் விதமாக அமைந்தது. ஏழை விவசாயிகள், இந்தியாவின் மூலை முடுக்கில் வாழ்ந்த அனைத்து வகுப்புகள், சாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க இந்தப் போராட்டங்களின் வாயிலாக காந்தியடிகள் ஆதரவு திரட்டினார்.
  • காலனி ஆதிக்கவாத மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சுரண்டல்காரர்கள் இருதரப்பையும் எதிர்கொண்ட அவர் இருதரப்பிலும் பேச்சுகளை நடத்தினார்.
  • ஒடுக்கப்பட்டவர்களை ஒன்று திரட்டி அவர்களின் தலைவராகவும் அதே நேரத்தில் ஒடுக்கும் நபர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் திறனும் பெற்று ஒரு தலைவராக அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவரை மக்களிடம் தலைவராகவும் மகாத்மாவாகவும் இந்த பண்புகள் நிலைநிறுத்தின.

மாண்டேகு – செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்கள்

  • இந்தியாவுக்கான பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் எட்வின் மாண்டேகு-வும் அரசப்பிரதிநிதி (வைசிராய்) செம்ஸ்ஃபோர்டும் இந்தியாவுக்கான அரசியல்சாசன மாற்றங்களை அறிவித்தனர்.
  • அவையே பின்னர் 1919இல் இந்திய கவுன்சில்கள் சட்டம் என்று அழைக்கப்பட்டன. மாகாண சட்டப்பேரவைகளைப் பெரும்பான்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் விரிவுபடுத்த இந்தச் சட்டம் வகைசெய்தது. இரட்டை ஆட்சியின் கீழ் மாகாணஅரசுகளுக்கு நிர்வாகத்தில் அதிகப் பங்கு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு, நிதி ஆகிய முக்கியமான துறைகள் ஆங்கிலேயருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் ஆளுநர்களின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ்வந்தனர்.
  • சுகாதாரம், கல்வி, உள்ளாட்சி போன்ற இதர துறைகள் இந்தியப் பிரதிநிதிகளுக்கு மாற்றப்பட்டது. இத்தகௌய மாற்றப்பட்ட துறைகளுக்குப் பொறுப்பேற்ற அமைச்சர்கள் சட்டப்பேரவைகளுக்குக் கடமைப்பட்டவர்களானார்கள். ஒதுக்கீடு செய்யப்பட்டத்துறைகளுக்குப் பொறுப்பேற்றவர்கள் சட்டப்பேரவைகளுக்குக் கடமைப்பட்டவர்கள் இல்லை. மேலும் சிறப்பு (மறுப்பானை) அதிகாரங்களின் கீழ் அந்தந்த மாகாணங்களும் ஆளுநர்கள் அமைச்சர்களை அதிகாரம் செய்ய இயலும். இதனால் இந்த அமைப்பு முழுவதுமே நகைப்புக்கிடமாய் ஆகின. மத்திய சட்டப்பேரவை குறித்து விவரிக்கும் சட்ட அம்சம், இரண்டு அவைகளுடன் இரட்டைஅடுக்கு சட்டப்பேரவை மற்றும் மேலவையை உருவாக்கியது.
  • மத்திய சட்டப்பேரவையில் இருந்த 144 மொத்த உறுப்பினர்களில் 41 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படவேண்டும். மாநிலங்களவை என்றழைக்கப்பட்ட மேலவையில் மொத்தம் இருந்த 60 உறுப்பினர்களில் 26 நபர்கள் நியமன உறுப்பினர்களாக இருந்தனர்.
  • கவர்னர் ஜெனரல் மற்றும் அவரது நிர்வாகக்கவுன்சில் மீது இரண்டு அவைகளுக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆனால் மாகாண அரசுகள் மீது மத்திய அரசுக்கு முழுக் கட்டுப்பாடு இருந்தது. இதன் விளைவாக ஐரோப்பிய/ஆங்கிலேய அதிகாரிகளின் கைகளில் அதிகாரம் குவிந்திருந்தது. வாக்களிக்கும் உரிமையும் தொடர்ந்து கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தது.
  • பிரிட்டனின் போர் முயற்சிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவுகொடுத்த இந்தியாவின் பொதுநலன் மீது அக்கறை கொண்ட மக்கள் இன்னும் நிறைய எதிர்பார்த்தனர். இந்தத் திட்டம் 1918ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டபோது இந்தியா முழுவதும் விமர்சனத்துக்கு உள்ளானது. 1918ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பம்பாயில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸின் சிறப்பு அமர்வில் இந்தத் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தத் திட்டம் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் அளிப்பதாகக் காங்கிரஸ் தெரிவித்தது.
  • பொதுக்கருத்தை உருவாக்குவதில் தாங்கள் வழக்கமாகப் பின்பற்றிய ஆசைகாட்டி மோசம் செய்யுன் கொள்கையை காலனியாதிக்க அரசி பின்பற்றியது. சீர்திருத்தங்களை முயன்று அதற்காக உழைக்கவேண்டும் என்று கோரிய மிதவாத/தாராளக் கொள்கையுடைய அரசியல் தலைவர்களின் குழு ஒன்று செயல்பட்டது.
  • சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையிலான இந்தக் குழு பெம்பான்மைக் கருத்தை எதிர்த்ததோடு இந்திய லிபரல் (தாராளமய) கூட்டமைப்பு என்ற பெயரில் தனது சொந்தக் கட்சியைத் தொடங்க காங்கிரசுக்கு வழியமைத்தது.

பிராமணரல்லாதார் இயக்கம்

  • பல்வேறு அடுக்குகள் கொண்ட இந்திய சமூகமும் அதனுள் இருந்த முரண்பாடுகளும் இயர் வகுப்பு ஆளுமையைக் கேள்சி கேட்கும் சாதி அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் தொடங்கப்பட ஏதுவாக அமைந்தன.
  • உற்பத்தியின் காரணிகளை மேல் வர்க்கத்தினர் கட்டுப்படுத்திய நிலையில் வாழ்வாதாரத்தை நடுத்தர மற்றும் ஒடுக்கப்பட்டோர் சார்ந்திருந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்களை ஆளுமைப்படுத்திய மற்றும் இணைந்து செயல்பட்ட தாராளமயமாக்கலும், மனிதாபிமானமும் சமூகத்தைப் பாதித்ததோடு அதனைச் சற்றுத் திருப்பிப்போட்டது.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி இருபத்தைந்தாண்டுகளில் இந்த விழிப்புணர்வுக்கான அறிகுறிகள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்துவிட்டன. வங்காளத்திலும் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளிலும் தொடங்கப்பட்ட நாமசூத்ரா இயக்கம், இந்தியாவின் வடமேற்கு பகுதியில் தொடங்கப்பட்ட ஆதிதர்மா இயக்கம், மேற்கு இந்தியாவில் சத்யசோதக் இயக்கம் மற்றும் தென்னிந்தியாவின் திராவிட இயக்கங்கள் இந்த நூற்றாண்டின் திருப்பத்தில் தங்கள் குரல்களை எழுப்பின.
  • பிராமணர் அல்லாத தலைவர்களால் நடத்தப்பட்ட இந்த இயக்கங்கள் பிராமணர்கள் மற்றும் இதர உயர் வகுப்பினரின் மேன்மை குறித்துக் கேள்வி எழுப்பின.

  • 1872ஆம் ஆண்டு ஜோதி ராவ் பூலேவின் புத்தகம் குலாம்கிரி என்ற தலைப்பில் முதலில் வெளிவந்தது. அவரது அமைப்பு, சத்யசோதக் சமாஜ், பிரமாணியத்தின் கொடுங்கோல் மற்றும் சுரண்டல் ஆகியவற்றிலிருந்து ஒடுக்கப்பட்ட சாதியினரை விடுவிப்பதற்கான அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது.
  • காலனித்துவ நிர்வாகிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை மறைமுகமாக இப்போக்கை ஊக்குவித்தன.
  • காலனித்துவ காலத்தில் இந்நாட்டு மக்களுக்கென அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து புதிய வாய்ப்புகளிலும் பிராமணிய ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கிய போது காலனிய அரசாங்கம் பத்தாண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியது. இந்த அறிக்கைகளில் சாதிகள் வகைப்படுத்தப்பட்டன. ‘உள்ளூர் பொதுக் கருத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சமூக முன்னுரிமை’யின் அடிப்படையில் சாதிகளை வகைப்படுத்தி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறிப்பிட்ட போது சாதிகளுக்கு இடையே மோதல்கள் எழுந்தன.
  • உரிமை கோரல்களும், அவற்றை எதிர்த்து உரிமையோடு மறுப்பதும் என இந்த அமைப்புகளின் தலைவர்கள் தாங்கள் முக்கியத்துவம் பெறுவதற்காகப் போராடத் துவங்கினர். பலர் புதிய அமைப்புக்களையும் தொடங்கினார்கள். இந்த முயற்சிகளுக்கு அப்போது உருவாகிய அரசியல் சூழ்நிலை மேலும் உதவியாக இருந்தது.
  • சமூக அடையாளத்தைப் பெறுவதற்குத் தங்கள் சாதிகளைப் போராட்டத்துக்கு ஒருங்கிணைக்க வேண்டும் என்று சாதிகளின் முன்னணித் தலைவர்கள் உணர்ந்தனர். அங்கீகாரத்தை எதிர்த்து அவர்களில் பலர், ஆண்டுகள் செல்லச் செல்ல, அவர்களது சாதி சார்ந்த மாணவர்கள் கல்வி பெறவும், கல்வி பெற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெறவும் உதவுனர்.
  • இதனிடையே, வாக்குரிமை அரசியல் 1880களில் அறிமுகம் செய்யப்பட்டு இது போன்ற அமைப்புகளின் இடத்தை அவை நிரப்பின. சாதி விழிப்புணர்வு, சாதி ஒற்றுமை என்ற பெயரில் சமூகப் பொருளாதார பதற்றங்களின் வெளிப்பாடாக இவற்றின் முடிவுகள் இருந்தன.
  • பிராமணரல்லாதார் இயக்கங்களில் இருந்து இரண்டு போக்குகள் வெளியாகின. கீழ்நிலை சாதிகளுக்குச் சமஸ்கிருதத்தைச் சொல்லிக் கொடுப்பது, மற்றொன்று அந்தக் காலகட்டத்தில் தீவிரமாக இருந்த ஏழைகளுக்கு ஆதரவாகவோ அல்லது முற்போக்குத் தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவான இயக்கங்கள் ஆகியன செயல்பட்டன.
  • வடக்கு மற்றும் கிழக்கு சாதி இயக்கங்கள் பெரும்பாலும் சமஸ்கிருதம் சார்ந்தும் மேற்கத்திய மற்றும் தெற்கத்திய இயக்கங்கள் பிளவுபட்டு அப்போது வளர்ந்துவந்த தேசியவாத மற்றும் திராவிட-இடதுசாரி இயக்கங்களைச் சேர்த்துக்கொண்டன. ஆனால், அனைத்து இயக்கங்களுமே பிராமண ஆதிக்கம் என்று குறிப்பிட்டு அதனை எதிர்த்துக் கடுமையாக விமர்சனம் செய்தன.
  • தங்கள் அமைப்புகள் மூலம் நீதிவேண்டி அரசிடம் கோரிக்கை வைத்தன. பம்பாய் மற்றும் மதராஸ் மாகாணங்களில் அரசு சேவைகள் மற்றும் பொதுக் கலாச்சாரம் சார்ந்த துறைகளில் பிராமணர்கள் தெளிவாக ஆதிக்கம் செலுத்தியதன் விளைவு பிராமணர் அல்லாதோரின் அரசியலுக்கு வழிவகுத்தது.
  • தெற்கில் இந்த இயக்கத்தின் வடிவமைப்பு சற்று வித்தியாசமாக இருந்தது. பிராமணர்கள் ஆதிக்கத்திற்கு அதிகக் காரணம் அவர்கள் வெறும் 3.2 சதவீதம் மட்டுமே மக்கள் தொகையில் இடம்பெற்றிருந்தாலும் அவர்களில் 72 சதவீதம் பட்டதாரிகளாய் இருந்தனர்.
  • பிராமணரல்லாதார் சாதிகளைச் சேர்ந்தக் கல்வி கற்ற மற்றும் வர்த்தக சமூக உறுப்பினர்களின் சவால்களை அவர்கள் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் தொடக்கத்தில் மேல்குடி மக்களாக இருந்ததோடு அவர்களது சவால் 1916 இறுதியில் பிராமணரல்லாதார் உருவாக்கிய அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டது.
  • வரி செலுத்துவோரில் பெரும் பகுதியாகவும், பெரும்பான்மையாக ஜமீன்தாரர்களாகவும், நிலப்பிரபுக்களாகவும், வேளாண் விவசாயிகளாகவும் தாங்கள் இருந்தபோதிலும் அரசிடமிருந்து எந்த பலன்களையும் பெறவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
  • இந்தியாவைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் பிராமணரல்லாதோரின் உண்மையான குறைகளைப் பயன்படுத்திக் கொள்ள காலனி ஆதிக்க அரசு முயன்றது. பம்பாய் மாகாண பிராமணேதரா பிரிஷத், மதராஸ் மாகான நீதிக்கட்சி ஆகியவைகளுக்கு இது குறைந்தபட்சம் 1930 வரை பொருந்தியது.
  • தீவிரமான தலித் பகுஜன் இயக்கம் அம்பேத்கர் தலைமையிலும் சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமி தலைமையிலும் உருவாகி சமூக நீதி சார்ந்து அடிப்படை மாற்றம் கோரும் இயக்கங்கள் இந்த இரண்டு பகுதிகளிலும் செயல்பட்டன.

  • இந்தியாவின் கீழ்த்தட்டு மக்கள் விழிப்புணர்வு பெற்ற தேசியவாதிகளால் கூறிய தாராளமய ஜனநாயக கருத்துகளை அறிந்துகொள்ள முடியவில்லை. இந்தத் திருப்பங்களைத் தேசியவாதிகளின் ஒரு குழுவினர் முற்றிலுமாக நிராகரித்த நிலையில் அவர்களில் பெரும்பான்மையோர் குறிப்பாக அடிப்படை மாற்றம் விழைவோர் தீவிரத்தன்மையுடன் இந்த இயக்கங்களை எதிர்த்தனர்.
  • பிரிட்டிஷார், தேசவிரோத சக்திகள் போன்றவற்றுக்குக் கைத்தடிகள் என்று இந்த இயக்கங்களைச் சிலர் குறிப்பிட்டனர். காலனி அரசுக்கு எதிராகப் பூர்வாங்க தேசியவாதத் தலைவர்கள் எந்த மாதிரியான உத்தியைப் பயன்படுத்தினார்களோ அதே மாதிரியான உத்தியைப் பிராமணர் அல்லாத இயக்கத்தி பூர்வாங்கத் தலைவர்களும் பின்பற்றத் தொடங்கினர்.

ஒத்துழையாமை இயக்கம்

அ) ரௌலட் சட்டம்

  • மிதவாத தேசியவாதிகளுக்கு முக்கியத்துவம் தருவதும் தீவிர தேசியவாதிகளைத் தனிமைப்படுத்துவதும் பிரிட்டிஷாரின் கொள்கையின் ஒரு பகுதியாக இருந்தது.
  • 1919இல் இந்திய கவுன்சில்கள் சட்டம் மற்றும் ரௌலட் சட்டம் ஆகியன அரே ஆண்டில் இயற்றப்பட்டன. உலகப் போர் நடந்த கால கட்டத்தில் தீவிரத்தன்மையுடையோர் மற்றும் தேசபக்த புரட்சியாளர்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகள் தொடர்ந்தன.
  • பல தூக்கில் தொங்கவிடப்பட்டனர் அல்லது நீண்ட காலத்துக்குச் சிறையில் அடைக்கப்பட்டனர். பொதுவாக மக்களிடையே போராட்ட எண்ணம் வலுத்த நிலையில் இன்னும் பல அடக்குமுறை அதிகாரங்களுடன் தன்னைப் பலப்படுத்திக்கொள்ள அரசு விரும்பியது.
  • மத்திய சட்டப்பேரவையின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த மசோதாவை எதிர்த்த நிலையில் 1919இல் மார்ச் மாதம் ரௌலட் சட்டத்தை அரசு நிறைவேற்றியது. எந்தவித நீதிமன்ற விசாரணையுமின்றி எவரையும் சிறையில் அடைக்க அரசுக்கு இந்தச் சட்டம் அதிகாரமளித்தது.
  • காந்தியடிகளும் அவரது சகாக்களும் அதிர்ச்சி அடைந்தனர். காந்தியடிகள் நிறுவிய சத்தியாகிரக சபை, இந்தச் சட்டத்தை மீறுவது என்று முதன்முதலாக ஊறுதி ஏற்றது.
  • கூட்டங்கள், அந்நியத் துணிகளைப் புறக்கணிப்பது, பள்ளிகளைப் புறக்கணிப்பது, கள்ளுக்கடைகளுக்கு முன் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது, மனுக்கள், போராட்டங்கள் ஆகியப் பழமையான ஆர்ப்பட்ட முறைகளை கைவிட்டு புதுமையான ஆர்ப்பாட்ட முறைகளை கைவிட்டு புதுமையான முறை பின்பற்றப்பட்டது.
  • தொழிலாளர்கள் , கைவினைக் கலைஞர்கள், விவசாயிகள் ஆகியோரின் பெரும் பங்கேற்புடன் சத்தியாகிரகம் என்ற ஆயுதம் பயன்படுத்தப்பட்டது.
  • காதி இதன் அடையாளமாகவும் பின்னர் தேசியவாதிகளின் உடையாகவும் மாறிப்போனது. மக்கள் விழிப்புணர்வு அடைந்து அரசியல் பணிகளில் தீவிரம் காட்டினால்தான் இந்தியாவில் சுயராஜ்யம் என்பது நடைமுறைக்கு வரும்.
  • 1919 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் ரௌலட் சட்டத்துக்கு எதிராக வேலைநிறுத்தத்தைக் கடைபிடிக்குமாறு காந்தியடிகள் அழைப்பு விடுத்தவுடன் நாடு முழுவதும் ஊக்கம் பிறந்தது. இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைத்த கிலாபத் இயக்கத்தையும் இத்துடன் இணைத்தார்.

ஆ) ஜாலியன் வாலாபாக் படுகொலை

  • நாடு முழுவதும் நடந்த மக்கள் போராட்டங்கள் மற்றும் மக்களிடம் காணப்பட்ட மகத்தான தன்னெழுச்சி காரணமாக காலனி அரசு ஆத்திரமடைந்தது. 1919 ஏப்ரல் 13இல், அம்ர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் பகுதியில் நிராயுதபாணிகளான மக்கள் திரள் மீது மிகக் கொடுமையான அரசியல் குற்றங்கள் இழைக்கப்பட்டன.
  • சத்தியபால், சாய்புதீன் கிச்லு ஆகியோரைக் கைது செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் போராட்டக் களத்தில் குழுமியிருந்தனர். பஞ்சாபின் துணை நிலை ஆளுநராக மைக்கேல் ஓ டையரும், ராணுவக் கமாண்டராக ஜெனரல் ரெஜினால்டு டையரும் பதவி வகித்தனர். அவர்கள் இருவரும் தங்களுடைய அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களுக்குப் பாடம் புகட்ட விரும்பினர்.
  • ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியிருந்த இடத்துக்கு ஒரே ஒரு குறுகிய வாயில் மட்டுமே இருந்தது. அங்கு சிக்கிக்கொண்ட மக்களைக் குறிவைத்து எந்திரத் துப்பாக்கிகளில் குண்டுகள் தீரும் வரை சுடுமாறு ஜெனரல் டையர் உத்தரவிட்டார்.
  • அரசு தகவல்களின் படி உயிரிழப்புகள் 379 என்ற எண்ணிக்கையில் இருந்தபோதிலும் உண்மையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக்கூடும். ராணுவச் சட்டம் பஞ்சாப் முழுவதும் அமல்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் சொல்லமுடியாத அளவுக்கு துயரங்களை சந்தித்தனர்.
  • இந்தக் கொடுமைகளைக் கண்டு நாடு முழுவதும் கொந்தளித்தது. பம்பாய், கல்கத்தா, டெல்லி, லாகூர் ஆகிய இடங்களில் ரௌலட் சட்டத்துக்கு எதிராகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்த நிலையில் அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டன.
  • பல நகரங்கள் மற்றும் மாநகரங்களில் வன்முறை நிகழ்வுகள் அரங்கேறின. இந்த கொடுமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரவீந்திரநாத் தாகூர் உட்பட பல பிரபலங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டங்களைத் துறந்தனர்.

  • கிலாபத், பஞ்சாப் கொடுமை ஆகிய இரண்டு காரணங்களால் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது. துருக்கி சுல்தான் மற்றும் இசுலாமிய புனிதத் தலங்கள் தொடர்பானது கிலாபத் இயக்கம்.
  • ஜாலியன் வாலாபாக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு பஞ்சாப் கொடுமை எனப்பட்டது.
  • பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் உறுதிமொழிகளுக்கு எதிராக இசுலாமிய புனிதத் தலங்களின் கட்டுப்பாட்டை இசுலாம் அல்லாத சக்திகள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட நிலையில் ஜாலியன் வாலாபாக்கில் நடத்தப்பட்ட கொடுமைகளுக்குக் காரணமான ரெஜினால்டு டையர், மைக்கேல் ஓ டையர் இருவரையும் பிரிட்டிஷ் நீதிமன்றங்கள் குற்றங்களில் இருந்து விடுதலை செய்துவிட்டது.
  • இந்து – முஸ்லிம் ஒற்றுமை குறித்து அக்கறை கொண்ட காந்தியடிகளும் காங்கிரசும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டதாக உணரப்பட்ட முஸ்லிம் தோழர்களுக்குத் துணையாக நின்றனர்.
  • மௌலானா சௌகத் அலி மற்றும் முகமது அலி என்ற சகோதரர்கள் மௌலானா அபுல்கலாம் ஆசாத் உடன் இணைந்து கிலாபத் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களாக விளங்கினர்.

  • ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பிறகு இரவீந்திரநாத் தாகூர் தனது அரசப் பட்டத்தை உடனடியாகத் துறந்தார். 1919ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி அரசப்பிரதிநிதிக்கு (வைசிராய்) அனுப்பிய எதிர்ப்புக் கடிதத்தில் தாகூர் இவ்வாறு எழுதினார். “இணக்கமற்ற சூழல் நிலவும் வேளையில் அவமானத்தின் சின்னமாக இந்த மதிப்புக்குரிய பட்டம் திகழ்கிறது. மனிதர்களாகக் கூடக் கருத முடியாத நிலையில் மதிப்பிழந்து போன எனது நாட்டு மக்களுக்கு ஆதரவாக எனது தரப்பில் நான் மேற்கொள்ளும் செயலாக, எனக்கு வழங்கப்பட்ட அனைத்து சிறப்புப் பட்டங்களையும் திரும்ப ஒப்படைக்கிறேன்”.

  • கால்சா ஆதரவற்றோர் காப்பகத்தில் வளர்க்கப்பட்ட சீக்கிய பதின்பருவ இளைஞரான உதம் சிங் இந்த நிகழ்வை தனது கண்களால் கண்டார். ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்குப் பழி தீர்க்கும் விதமாக 1940 மார்ச் 30 இல் லண்டனின் காக்ஸ்டன் அரங்கில் மைக்கேல் ஓ டையரை உதம் சிங் படுகொலை செய்தார். லண்டனின் பெண்டோன்வில்லே சிறையில் உதம் சிங் தூக்கிலிடப்பட்டார்.

இ) ஒத்துழையாமை இயக்கத்தின் தொடக்கம்

  • கிலாபத் மாநாட்டில், காந்தியடிகளின் வற்புறுத்தலின் பேரில் 1920 ஆகஸ்டு 31 முதல் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நீதிமன்றங்களைப் புறக்கணிக்கும் திட்டத்தை அலகாபாத்தில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிவு செய்தது.
  • 1920ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் சிறப்பு அமர்வில் காலனி ஆதிக்க அரசுடன் ஒத்துழையாமையைக் கடைபிடிப்பது என்ற காந்தியடிகளின் யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • கிலாபத் மற்றும் பஞ்சாப் குறைகள் சரிசெய்யப்பட்டு தன்னாட்சி அரசு நிறுவப்படும் வரை இந்த ஒத்துழையாமையைக் கடைபிடிக்க உறுதி ஏற்கப்பட்டது.

  • பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், சட்டப்பேரவைகள், அந்நியப் பொருட்களைப் புறக்கணித்தல், அரசு வழங்கிய பட்டங்களையும் விருதுகளையும் திரும்ப ஒப்படைப்பது ஆகியன ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்க்கப்பட்டன.
  • மாற்றாக, தேசியப்பள்ளிகள், பஞ்சாயத்துகள் ஆகிய அமைக்கப்பட்டு சுதேசிப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும். வரிகொடா இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் போன்ற பல இயக்கங்களைப் பின்னர் இந்தப் போராட்டத்தில் இணைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
  • 1920ஆம் ஆண்டு நாக்பூரில் நிகழ்ந்த காங்கிரஸ் அமர்வில் முந்தைய தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மொழிசார்ந்த மாகாண காங்கிரஸ் கமிட்டிகளை அங்கீகரித்து அமைப்பதற்கு வகை செய்யும் மற்றொரு முக்கியத் தீர்மானம் நாக்பூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இதனால் பெரும் எண்ணிக்கையிலானப் பணியாளர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்தனர்.
  • காங்கிரஸின் அடிப்படையை விரிவாக்கும் நடவடிக்கையாகப் பணியாளர்கள் கிராமங்களுக்குச் சென்று 4 அணா (25 பைசா) என்கிற குறைவான கட்டணத்தில் கிராமத்தினரைக் காங்கிரஸில் சேர்க்கவேண்டும். இதனால் காங்கிரஸின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் மாற்றம் பெற்றன.
  • நாட்டின் பெயரில் ஒன்றுசேர்ந்த மக்கள் தேசியப் போராட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் மக்கள் போராட்டத்தை எதிர்த்தப் பழைமைவாதிகள் பலர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக வழி அமைத்தது.
  • மேல் குடிக்கானது என்ற அடையாளத்தைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி மெதுமெதுவே உண்மையான தேசிய அமைப்பு என்ற தோற்றத்தில் மக்கள் அமைப்பாக காந்தியடிகளின் தலைமையிலான காங்கிரஸ் மாறியது.

ஈ) காந்தியடிகளின் தலைமை ஏற்படுத்தியத் தாக்கம்

  • உள்ளூர் மக்களால் ஆயிரக்கணக்கான பள்ளிகள், நூற்றுக்கணக்கான கல்லூரிகள் மற்றும் வித்யாபீடங்கள் நிறுவப்பட்டன. பல முன்னணி வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலைக் கைவிட்டனர்.
  • ஆயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அரசு நிறுவனங்களை விட்டு வெளியேறினர்.
  • தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்ட அலி சகோதரர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்குமாறு மக்களுக்கு அந்தந்த பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் அழைப்பு விடுத்தன. அரசு வழக்கம் போல் அடக்குமுறையைக் கையாண்டது.
  • பாரபட்சமில்லாமல் கைது செய்யப்பட்டத் தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்தியாவின் பல நகரங்களுக்கு 1921இல் வேல்ஸ் இளவரசர் மேற்கொண்ட பயணமும் புறக்கணிக்கப்பட்டது.
  • இந்திய மக்களின் விசுவாச உணர்வை வேல்ஸ் இளவரசரின் பயணம் தூண்டும் என்று எதிர்பார்த்த காலனி ஆதிக்க அரசின் கணக்கு தவறாகப் போனது.
  • நாடு முழுவதும் தொழிலாளர்களும் விவசாயிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தியர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை வன்முறையற்ற வகையில் பின்பற்றினால் ஓராண்டுக்குள் சுயராஜ்ஜியத்தைப் பெற்றுத்தருவதாக காந்தியடிகள் உறுதி கூறினர்.
  • போராட்டத்தின் இந்தக் கட்டத்தில் தென்னிந்தியா முன்னேறிச் சென்றது. ஆந்திர விவசாயிகள் ஜமீன்தார்களுக்கு வழங்கவேண்டிய வரிகளை நிறுத்திவைத்தனர்.
  • சிராலா-பெராலாப் பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களும் வரி செலுத்த மறுத்த கூட்டம் கூட்டமாக நகரங்களைக் காலி செய்து வெளியேறினர். நூற்றுக்கணக்கான கிராம பட்டேல்களும் ஷான்போக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
  • சி.இராஜாஜி, எஸ். சத்தியமூர்த்தி, தந்தை ஈ.வே.ரா. பெரியார் ஆகிய தலைவர்கள் தலைமையில் தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கம் நட்த்தப்பட்டது. கேரளாவில் ஜென்மி-க்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர்.
  • உத்திரப்பிரதேசம், வங்காளம், அசாம், பீகார், ஒரிசா (ஒடிசா) ஆகியவற்றின் பல பகுதிகளில் இருந்த கீழ் வகுப்பு மக்கள் இந்த போராட்டங்கள் காரணமாக தீவிரமாக அவமதிக்கப்பட்டதாக இந்திய அரசுத்துறைச் செயலாளருக்கு எழுதியக் கடிகத்தில் அரசப்பிரதிநிதி (வைசிராய்) ஒப்புக்கொண்டிருந்தார்.
  • இந்த இயக்கத்தின் தீவிரம் கண்டு ஊக்கம்பெற்ற காங்கிரஸ் தனது சிறப்பு மாநாட்டில் இவ்வியக்கத்தை இன்னும் தீவிரமாக்குவது பற்றி உறுதியுடன் குஊறியது.
  • அரசு ஏழு நாட்களுக்குள் பத்திரிக்கைச் சுதந்திரத்தை மீட்டு சிறைக்கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் பர்தோலியில் வரிகொடா பிரச்சாரங்கள் உட்பட சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கப்போவதாக காந்தியடிகள் பிப்ரவரி 1922இல் அறிவித்தார்.

உ) சௌரி சௌரா சம்பவம் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப் பெறுதல்

  • நாடு விடுதலை அடைந்து சுயராஜ்யம் கிடைத்துவிடும் என்று பொதுமக்களும் தேசியவாதத் தொண்டர்களும் அதிக ஊக்கம் கொண்டு போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றனர்.
  • காடுகளில் வசித்த பழங்குடிகள் உட்பட அனைத்து வகுப்பு மக்களையும் இது பாதித்ததோடு அவர்களை ஈர்க்கவும் செய்தது.
  • கலவரங்கள் மற்றும் மோசமான வன்முறைகளும் நாட்டில் நிகழ்ந்தன. மலபார் மற்றும் ஆந்திராவில் இரண்டு வன்முறைக் கிளர்ச்சிகள் நடந்தன.
  • கரையோர ஆந்திராவின் ராம்பா பகுதியில் அல்லூரி சீதாராம ராஜு தலைமையில் பழங்குடியினர் கிளர்ச்சி செய்தனர்.
  • மலபாரில் முஸ்லிம் (மாப்பிள்ளை) விவசாயிகள் ஆயுதமேந்தி உயர்வகுப்பு நிலப்பிரபுக்கள் மற்றும் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
  • உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் சௌரி சௌரா என்ற கிராமத்தில் மதுக் கடைகள் மற்றும் உள்லூர் சந்தையில் அதிக விலைக்குப் பொருட்கள் விற்கப்படுவதைக் கண்டித்து ஒரு தன்னார்வக் குழு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
  • 1922 பிப்ரவரி 5இல், 3000 நபர்களுடன் நடந்த ஒரு காங்கிரஸ் கட்சிப் பேரணி மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக் குழுவினர் காவல் நிலையத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதோடு அதை எரித்ததில் 22 போலீசார் உயிரிழந்தனர். இந்த நிகழ்வை அடுத்து காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப்பெறுவதாக அறிவித்தார்.
  • தேசியவாதத் தொண்டர்களுக்கு ஏமாற்றம் தரும் விதமாக பர்தோலியில் இந்த முடிவை காங்கிரஸ் செயற்குழு ஏற்றுக்கொண்டது. இந்த முடிவை இளம் தொண்டர்கள் எதிர்த்த நிலையில் காந்தியடிகள் மீது நம்பிக்கை கொண்ட இதரத் தொண்டர்கள் இது ஒரு தந்திரமான முடிவு என்று கருதினர்.
  • கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற காந்தியடிகள் பற்றி ஜவஹர்லால் நேருவும் சுபாஷ் சந்திர போஸும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இப்படியாக ஒத்துழையாமை இயக்கம் முடிவுக்கு வந்தது.
  • துருக்கி மக்கள் முஸ்தபா கமால் பாட்சா தலைமையில் கிளர்ந்தெழுந்து சுல்தானிடம் இருந்து அரசியல் அதிகாரத்தைப் பறித்து கலிபா என்ற நடைமுறையை ரத்து செய்துவிட்டு, மதமும் அரசியலும் இணைந்து பயணிக்க முடியாது என்று அறிவித்த நிலையில் கிலாபத் இயக்கம் தேவையற்றுப் போனது.

சுயராஜ்ய கட்சி மற்றும் அதன் செயல்பாடுகள்

  • ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப் பெற்ற பிறகு, அடுத்து என்ன என்ற கேள்வி எழுந்தது. சித்தரஞ்சன் தாஸ் மோதிலால் நேரு ஆகியோர் புதிய வழியில் செயல்பாட்டை அறிவித்தனர்.
  • தீவிர அரசுயலுக்குத் திரும்பவேண்டும் என்றும் அதில் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது அடக்கம் என்றும் அவர்கள் விரும்பினார்கள்.
  • சீர்திருத்தம் பெற்ற சட்டப்பேரவையைக் கைப்பற்றி தேசியவாத உணர்வூட்டி அதன் செயல்பாடுகளை முடக்கும் ஆற்றலைத் தேசியவாதிகள் வெளிப்படுத்தினர். சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் (Pro-changers) என்று இந்தக் குழு அழைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தி இந்தக் குழுவில் இணைந்தார்.
  • சட்டப்பேரவை நுழைவை எதிர்த்த மற்றொரு குழு காந்தியடிகளின் வழியைப் பின்பற்றி மக்களை ஒன்றுதிரட்டும் பணிகளில் ஆர்வம் காட்டியது. இந்தக் குழுவுக்கு இராஜாஜி, வல்லபாய் பட்டேல், இராஜேந்திர பிரசாத் ஆகியோர் தலைமை ஏற்றனர்.
  • எந்த மாற்றமும் தேவையில்லை என்று இந்த அணி வலியுறுத்தியது. இவர்கள் மாற்றம் விரும்பாதோர் (No-changers) என்று அழைக்கப்பட்டனர்.
  • தேர்தல் அரசியல் தேசியவாதிகளின் கவனத்தைத் திசை திருப்பும் என்றும் மக்களை ஒன்றுதிரட்டும் பணிகளில் இருந்து அவர்கள் விலகிச்செல்ல வைத்துவிடும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.
  • நூல் நூற்பது, மது அருந்தாமை, இந்து-முஸ்லிம் ஒற்றுமை , தீண்டாமையை ஒழிப்பது, ஊரகப்பகுதி மக்களை ஒன்று திரட்டி மக்கள் இயக்கங்களில் பற்கேற்கச் செய்வது ஆகிய காந்தியடிகளின் ஆக்கப்பணிகளைத் தொடர அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
  • மாற்றம் வேண்டுவோர் சுயராஜ்ய கட்சியை காங்கிரசின் ஒரு பகுதியாகத் தொடங்கினார்கள். இரண்டு குழுக்களுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்தப்பட்டு காங்கிரஸ் திட்டங்களில் இரண்டு குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டு காந்தியடிகள் ஆக்கப்பணிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அவரது தலைமையின் கீழ் ஒரு குழுவுக்கு மற்றொரு குழுவின் செயல்பாடுகள் துணை செய்யவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
  • மத்திய சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தல்களில் சுயராஜ்ய கட்சி சிறப்பாகப் பங்கேற்று 101 இடங்களில் 42 இடங்களைக் கைப்பற்றியது. மற்ற உறுப்பினர்களின் ஆதரவோடு காலனி ஆதிக்க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் விரோதச் சட்டங்களைத் தீவிரமாக எதிர்க்க முடிந்தது.
  • 1919ஆம் ஆண்டுச் சட்டத்தின் குறைபாடுகள் குறித்து தெரிவிப்பதிலும் வெற்றி அடைந்தனர். காலம் செல்லச்செல்ல அவர்களுடைய முயற்சிகளும் ஊக்கமும் குறைந்து சுயநினைவுடனோ அல்லது சுயநினைவின்றியோ அரசு நியமித்த பல குழுக்களில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டதை ஏற்றனர்.
  • தேசிய அளவில் மக்கள் போராட்டம் நடைபெறாத நிலையில் பிரிவினைவாத சிந்தனைப்போக்கு அவர்களை ஆட்டிப்படைத்தது. அடிப்படைவாத சக்திகள் இடத்தை ஆக்ரமிக்கத் தொடர்ச்சியாகப் பல வகுப்புக்கலவரங்கள் நடந்தன.
  • சுயராஜ்ய கட்சியும் பிரிவினைவாதத்தால் பாதிப்படைந்தது. இந்து நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் அரசுக்கு ஒத்துழைக்கப் போவதாக ஒரு குழுவினர் ஆதரவாளர்கள் என்ற பெயரில் செயல்பட்டனர்.
  • முஸ்லிம் அடிப்படைவாதிகளும் தேசியப் போராட்டத்தில் தங்களுக்குக் கிடைத்த இடத்தைப் பிடித்துக்கொண்டு மதவாத உணர்வுகளைப் பரப்பத் தொடங்கினர்.
  • இடதுசாரித் தீவிரத்தன்மை கொண்டவர்களின் செயல்பாடுகளால் காந்தியடிகள் வேதனை அடைந்தர். மதவாதப் போக்கு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காந்தியடிகள் 21 நாட்கள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

இடதுசாரி இயக்கம்

  • இதனிடையே சோஷலிசக் கருத்துக்களும் அதன் ஆர்வலர்களும் தங்களுக்கான களத்தை அமைத்து விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடையே செயல்பட ஆரம்பித்தனர்.
  • இடதுசாரிகள் தொழிலாளர் மற்றும் விவசாய இயக்கங்களைத் தொடங்கினார்கள். காலனி ஆதிக்கவாதம் மற்றும் முதலாளித்துவத்தை விமர்சனம் செய்யும் மார்க்சீய சித்தாந்தம் வேரூன்றியது.
  • தொழிற்சங்கங்கள் தவிர மாணவர்களையும் இளைஞர்களையும் ஒருங்கிணைப்பதில் அது பெரும் பங்காற்றியது. இடதுசாரி சித்தாந்தத்தைப் பரப்புவதில் ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் இடதுசாரி சித்தாந்தங்களையும் பரப்புவதற்கு தங்கள் பங்களிப்பை நல்கினார்கள்.
  • காலனி ஆதிக்க சுரண்டல் மற்றும் உள்நாட்டில் முதலாளிகள் நடத்திய சுரண்டல் மற்றும் உள்நாட்டில் முதலாளிகள் நடத்திய சுரண்டல் இரண்டுக்கும் எதிராகச் சண்டையிடவேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்.
  • எஸ்.ஏ.டாங்கே, எம்.என்.ராய், முஜாஃபர் அகமது ஆகியோர் கட்சியின் மூத்தத் தலைவரான தமிழ்நாட்டின் சிங்காரவேலர் உள்ளிட்ட தலைவர்களுடன் சேர்ந்து விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சிகளைத் தொடங்கி வைத்தனர்.
  • கம்யூனிச சோஷலிசவாதிகள் மற்றும் புரட்சியாளர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை எடுத்த அரசு அவர்கள் மீது சதித்திட்ட வழக்குகளைத் தொடர்ச்சியாக கான்பூர், மீரட், காக்கோரி ஆகிய இடங்களில் பதிவு செய்தது.

  • இந்தக் காலகட்டத்தில் பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் முக்கியப் பணியாற்றினர். நவஜவான் பாரத் சபை, இந்துஸ்தான் குடியரசு அமைப்பு ஆகியன தொடங்கப்பட்டன.
  • ஆயிரக்கணக்கான இளம் ஆடவர் மற்றும் பெண்கள் காலனி ஆதிக்க ஆட்சிக்கு எதிரானவர்களாகவும் புரட்சியாளர்களாகவும் மாறினார்கள்.
  • இந்தியா முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர் மாநாடுகள் நடத்தப்பட்டன. இதனிடையே ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபக்குல்லா ஆகிய இருவருக்கும் மரண தண்டனையும், வேறு 17 பேருக்கு நீண்டகால சிறைத் தண்டனையும் காக்கோரி சதித்திட்ட வழக்கில் வழங்கப்பட்டன.
  • பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், ராஜகுரு ஆகியோர் லாலா லஜ்பத் ராய் கொல்லப்பட்டது மற்றும் காவல்துறை அராஜகத்தை எதிர்த்து, பிரிட்டிஷ் காவல்துறை அராஜகத்தை எதிர்த்து, பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி சாண்டர்ஸை கொன்றுவிட்டனர்.
  • இந்த அதிகாரி லாகூரில் நடத்தப்பட்ட தடியடிக்குத் தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • மத்திய சட்டப்பேரவை அரங்குக்குள் 1929 ஏப்ரக் 8இல் பகத் சிங்கும், படுகேஷ்வர் தத்தும் வெடிகுண்டு ஒன்றை எறிந்தனர்.
  • 1929இல் மீரட் சதித்திட்ட வழக்கு பதியப்பட்டு மூன்று டஜன் கம்யூனிச தலைவர்கள் நீண்ட கால சிறைத்தண்டனைகளைப் பெற்றனர்.

சைமன் குழு – நேரு அறிக்கை – லாகூர் காங்கிரஸ்

  • 1929-30 ஆம் ஆண்டில் அரசியல்சாசன சீர்திருத்தங்களின் முதல் தவணையை பிரிட்டிஷார் பரிசீலித்து அறிவிக்க வேண்டியிருந்தது. இதன் ஆயத்தத்தில் சட்ட உருவாக்கக் குழுவான சைமன் குழு நிறுவப்பட்டது. அதன் தலைவரான சைமனின் பெயரில் இந்தக் குழு அமைந்தது.
  • வெள்ளையர்கள் மட்டுமே இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். அது இந்தியர்களுக்கு அவமானமாகக் கருதப்பட்டது. 1927 இல் மதராஸில் நடந்த காங்கிரஸ் வரிடாந்திர மாநாட்டில் இந்தக் குழுவை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது.
  • இந்து மகா சபையும் முஸ்லிம் லீக் அமைப்பும் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்தன.
  • இந்தியா தொடர்பான காலனி ஆதிக்க மனப்பான்மைக்கு சவால் விடுக்க பெரும்பான்மையான கட்சிகள் ஒப்புக்கொண்டன.
  • இதன் முடிவாக மோதிலால் நேரு அறிக்கை வெளியானது. எனினும் டிசம்பர் 1928இல் கல்கத்தாவில் கூடிய அனைத்துக் கட்சிகளும் வகுப்புவாதப் பிரதிநிதித்துவம் என்ற விஷயத்தை ஏற்கத் தவறின.

சைமனே திரும்பிச் செல்

  • சைமன் குழுவுக்கு எதிரான மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்தான் முக்கிய திருப்பமாக அமைந்தது. சைமன் குழு எங்குச் சென்றாலும் எப்போது சென்றாலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
  • சைமனே திரும்பிப் போ முழக்கம் காதைப் பிளந்தது. போராட்டத்தின் அடுத்த கட்டத்துக்கு மக்கள் தயாராகி வருவதை இந்தப் போராட்டம் எடுத்துக்காட்டியது.
  • டிசம்பர் 1928இல் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் மாநாட்டின்போது, இடதுசாரிகளை சாந்தப்படுத்தும் முயற்சியாக 1929இல் நடக்கவிருக்கும் அடுத்த மாநாட்டிற்கு ஜவஹர்லால் நேரு தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
  • 1928இல் காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்த மோதிலால் நேருவைத் தொடர்ந்து அவரது மகன் ஜவஹர்லால் நேரு 1929இல் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்தார்.

லாகூர் காங்கிரஸ் மாநாடு – பூரண சுயராஜ்ஜியம்

  • 1929 – 30ஆம் ஆண்டில் அரசியல்சாசன சீர்திருத்தங்களின் முதல் தவணையை பிரிட்டிஷார் பரிசீலித்து அறிவிக்க வேண்டியிருந்தது. இதன் ஆயத்தத்தில் சட்ட உருவாக்கக் குழுவான சைமன் குழு நிறுவப்பட்டது. அதன் தலைவரான சைமனின் பெயரில் இந்தக் குழு அமைந்தது.
  • வெள்ளையர்கள் மட்டுமே இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். அது இந்தியர்களுக்கு அவமானமாகக் கருதப்பட்டது.
  • 1927இல் மதராஸில் நடந்த காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் இந்தக் குழுவை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது.
  • இந்து மகா சபையும் முஸ்லிம் லீக் அமைப்பும் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்தன. இந்தியா தொடர்பான காலனி ஆதிக்க மனப்பான்மைக்கு சவால் விடுக்க பெரும்பான்மையான கட்சிகள் ஒப்புக்கொண்டன. இதன் முடிவாக மோதிலால் நேரு அறிக்கை வெளியானது.
  • எனினும் டிசம்பர் 1928இல் கல்கத்தாவில் கூடிய அனைத்துக் கட்சிகளும் வகுப்புவாதப் பிரதிநிதித்துவம் என்ற விஷயத்தை ஏற்கத் தவறின.

சைமனே திரும்பிச் செல்

  • சைமன் குழுவுக்கு எதிரான மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்தான் முக்கிய திருப்பமாக அமைந்தது. சைமன் குழு எங்குச் சென்றாலும் எப்போது சென்றாலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
  • சைமனே திரும்பிப் போ முழக்கம் காதைப் பிளந்தது. போராட்டத்தின் அடுத்த கட்டத்துக்கு மக்கள் தயாராகி வருவதை இந்தப் போராட்டம் எடுத்துக்காட்டியது.
  • டிசம்பர் 1928இல் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் மாநாட்டின்போது, இடதுசாரிகளை சாந்தப்படுத்தும் முயற்சியாக 1929இல் நடக்கவிருக்கும் அடுத்த மாநாட்டிற்கு ஜவஹர்லால் நேரு தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
  • 1928இல் காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்த மோதிலால் நேருவைத் தொடர்ந்து அவரது மகன் ஜவஹர்லால் நேரு 1929இல் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்தார்.

லாகூர் காங்கிரஸ் மாநாடு – பூரண சுயராஜ்ஜியம்

  • இந்திய விடுதலை மற்றும் காங்கிரஸ் வரலாற்றில் காங்கிரஸ் கட்சியின் கட்சியின் லாகூர் மாநாடு சிறப்பு வாய்ந்ததாகும்.
  • முழுமையான சுதந்திரம் அடைவது என்பதைக் குறிக்கோளாகக் காங்கிரஸ் கட்சி இம்மாநாட்டில் அறிவித்தது. 1929 டிசம்பர் 31இல் லாகூரில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது.
  • ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் நாளை விடுதலை நாளாகக் கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது. சட்டமறுப்பு இயக்கம் காந்தியடிகளின் தலைமையில் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தண்டி யாத்திரை

  • இயக்கத்தின் ஒரு பகுதியாக காந்தியடிகள் தண்டி யாத்திரையை அறிவித்தார். அனைவருக்கும் அவசியமான பொருளான உப்பு மீது அநியாய வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டம் இதுவாகும்.
  • காலனி ஆதிக்க அரசு உப்பு மீது வரி விதித்ததோடு அதன் மீது ஆளுமை செலுத்திவந்தது.
  • காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து குஜராத் கடற்கரையோரம் உள்ள தண்டி வரை 375 கிலோமீட்டர் தொலைவுக்குத் தண்டி யாத்திரை நடைபெற இருந்தது.
  • அனைத்துப் பகுதிகளின் சமூகக் குழுக்களைச் சேர்ந்த 78 தொண்டர்களுடன் காலனி ஆதிக்க அரசுக்கு முன்னரே அறிவித்த பிறகு, காந்தியடிகள் யாத்திரையாக நடந்து தண்டியை 25ஆவது நாளில் அதாவது 1930 ஏப்ரல் 6இல் சென்று அடைந்தார்.
  • இந்த நடைபயணத்தின் முழுமையான காலத்திலும் முழு உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பத்திரிகைகள் இது பற்றிய செய்திகளை வெளியிட்டிருந்தன.
  • ஒரு பிடி உப்பைக் கையில் அள்ளி உப்புக்கு வரி செலுத்தும் சட்டத்தைத் தவிடுபொடியாக்கினார். அடக்குமுறைச் சார்ந்த காலனி ஆதிக்க அரசு மற்றும் அதன் அநியாய சட்டங்களுக்கு எதிராக இந்தியர்கள் ஒன்றுதிரண்டு அவற்றை ஏற்க மறுப்பதன் அடையாளமாக இந்த நிகழ்வு அமைந்தது.

வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்

  • தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையில் உப்பு சத்தியாகிரக யாத்திரை வேதாரண்யம் நோக்கி நடந்தது. திருச்சிராப்பள்ளியில் தொடங்கி 150 மைல்கள் தொலைவில் தஞ்சாவூர் மாவட்டத்தின் கரையோர கிராமமான வேதாரண்யம் வரை இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
  • தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது தான் இராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 1930 ஏப்ரல் 13இல் ஆரம்பித்த இந்த நடைபயணம் ஏப்ரல் 28இல் முடிவடைந்தது.
  • நடைபயணத்தில் ஈடுபடுவோருக்கு அடைக்கலம் தந்தால் கடும் நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஜெ.ஏ.தார்ன் எச்சரிக்கை விடுத்தார்.
  • ஆனாலும் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட தொண்டர்களை மக்கள் இன்முகத்துடன் வரவேற்று உண்ண உணவும் இளைப்பாற இடமும் கொடுத்தனர். யாரெல்லாம் உணவும் உறைவிடமும் கொடுக்க தைரியத்துடன் முனைந்தார்களோ அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
  • கும்பகோணம், செம்மங்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்கள் வழியாக சென்ற சத்தியாகிரகத் தொண்டர்களுக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது.

  • வேதாரண்யம் இயக்கம் உண்மையில் தென்னிந்திய மக்களைத் தட்டியெழுப்பிக் காலனி ஆதிக்க ஆட்சிக்கு எதிராக விழிப்புணர்வை ஊட்டி போராட்டத்தில் பங்கேற்கத் தூண்டியது.

வட்ட மேசை மாநாடுகள்

  • சைமன் குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. காங்கிரச், இந்து மகா சபை, முஸ்லிம் லீக் ஆகியன அதனைப் புறக்கணித்தன. இந்த அறிக்கையை ஏற்பதற்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் முயன்றனர்.
  • ஆனால் இந்தியத் தலைவர்களுடன் ஆலோசனைகள் இல்லாத நிலையில் இது பயனற்றுப் போகும். இந்த அறிக்கையைச் சட்டப்பூர்வமாகவும் நம்பிக்கைக்கு உரியதாகவும் ஆக்கும் நோக்கில் இந்தியக் கருத்தை உருவாக்கும் வல்லமை உடைய பலதரப்பட்ட தலைவர்களுடன் லண்டனில் ஒரு வட்டமேசை மாநாட்டைக் கூட்டவிருப்பதாக அரசு அறிவித்தது.
  • ஆனால் சுதந்திரம் பெற்றே ஆக வேண்டும் என்ற கருத்தில் இந்த வட்ட மேசை மாநாட்டை புறக்கணிக்கப் போவதாகக் காங்கிரஸ் அறிவித்தது.
  • காங்கிரஸ் பங்கேற்காவிட்டால் மாநாட்டை அரசு நடத்துவது பயனற்றுப்போகும் ஒரு நடவடிக்கை என்று அனைவரும் அறிந்திருந்தனர்.
  • காங்கிரசுடன் பேச்சுகள் தொடங்கின. 1931 மார்ச் 5இல் காந்தி –இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவில் சட்டமறுப்பு இயக்கத்தின் முடிவைக் குறிப்பதாக அது அமைந்தது.
  • உலகம் தழுவிய விளம்பரத்தை இந்த இயக்கம் தந்தது. அரசப்பிரதிநிதி (வைசிராய்) இர்வின் இதனை முடித்து வைக்க வழி காண விரும்பினார். ஜனவரி 1931இல் காந்தியடிகள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
  • காந்தியடிகளும் இர்வின் பிரபுவும் ஒப்பந்தத்தின் அம்சங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
  • சத்தியாகிரக பிரச்சாரத்தைக் கைவிட காந்தியடிகள் உறுதி ஏற்றார். இந்த இயக்கத்தின்போது சிறையில் அடைக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான இந்தியர்களை விடுதலை செய்ய இர்வின் ஒப்புக்கொண்டார்.

  • காங்கிரசின் ஒரேயொருப் பிரதிநிதியாக லண்டனில் அந்த ஆண்டு நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் கலந்துகொண்டார். உப்பைச் சுய பயன்பாட்டுக்குப் பயன்படுத்த மக்களை அனுமதிப்பது, வன்முறையில் ஈடுபடாத அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, சாராயம் மற்றும் அந்நியத்துணிகளை விற்கும் கடைகளின் முன் ஆர்ப்பாட்டங்களை நடத்த அனுமதிப்பது ஆகியவற்றுக்கு அரசு இணக்கம் தெரிவித்தது.
  • காந்தி-இர்வின் ஒப்பந்தத்தைக் கராச்சியில் நடந்த காங்கிரஸ் மாநாடு ஏற்றுக்கொண்டது. பகத் சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைக்க அரசப்பிரதிநிதி (வைசிராய்) மறுத்துவிட்டார்.
  • காந்தியடிகள் இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட போதும் அரசு அவரது கோரிக்கைகளை ஏற்க முன்வராமல் பிடிவாதம் செய்தது. வெறும் கையோடு அவர் திரும்பியதை அடுத்து சட்டமறுப்பு இயக்கத்தை மீண்டும் கையில் எடுப்பது என்று காங்கிரஸ் தீர்மானித்தது.
  • பொருளாதார வீழ்ச்சி காரணமாக குறிப்பாக விவசாயிகள் உட்பட பொதுவாகவே நாட்டு மக்களின் பொருளாதார நிலைமை மோசமடைந்தது.
  • நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டங்கள் நடைபெற்றன. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களை இடதுசாரிகள் முன்னின்று நடத்தினார்கள்.
  • இந்த இயக்கத்தை முடக்க அரசு நினைத்தது. நேரு, கான் அப்துல் கபார் கான், இறுதியில் காந்தியடிகள் என அனைத்து முக்கியத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
  • சுமார் ஒரு லட்சம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு தேசியவாதம் தொடர்பான பிரசுரங்கள் அனைத்தும் சட்டத்துக்குப் புறம்பானவை என அறிவிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
  • இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற நிராயுதபாணிகளான மக்கள் மீது தீவிர வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட காலகட்டமாகும். இந்த இயக்கம் மெதுவாக மந்த நிலை அடைந்து மே 1933இல் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டு பின்னர் மே 1934இல் முற்றிலும் முடிவுக்கு வந்தது.

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் தலைமை மற்றும் தனித்தொகுதிகளின் உருவாக்கம்

1920களில் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களின் மையப்புள்ளியாக டாக்டர் அம்பேத்கர் விளங்கினார். நாட்டின் மையப்பகுதியில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சாதியாகக் கருதப்பட்ட மஹர் சாதியில் ராணுவ வீரரின் மகனாகப் பிறந்த டாக்டர் அம்பேத்கர் அவரது சமாதியில் பத்தாம் வகுப்பை நிறைவு செய்த முதலாமவராகத் திகழ்ந்தார்.

அம்பேத்கரின் கல்வியும் அவர் பெற்ற பட்டங்களும்

  • எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்த அம்பேத்கர் கல்வி உதவித்தொகை பெற்று 1912இல் பட்டதாரி ஆனார். பரோடா அரசரி கல்வி உதவித்தொகை பெற்ற அவர் அமெரிக்கா சென்று பட்டமேற்படிப்புப் பட்டத்தையும், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். சட்டம் மற்றும் பொருளாதார படிப்புகளுக்காக அவர் லண்டன் சென்றார்.
  • அம்பேத்கரின் அறிவாற்றல் பலரது கவனத்தை ஈர்த்தது. 1916இல் மானுடவியல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு ‘இந்தியாவின் சாதிகள்’ (Castes in India) என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்தார். இந்தக் கட்டுரை பின்னர் ‘அரிய இந்தியப் புத்தகம்’ (Indian Antiquary) என்ற தொகுப்பில் பதிப்பிக்கப்பட்டது.
  • இந்தியாவில் ஒடுக்கப்பட்டோரிடையே திறமையுடையோரைத் தேடி வந்த பிரிட்டிஷ் அரசு இந்திய வாக்காளர்களுக்கு வாக்குரிமை பெற வயது மற்றும் தகுதி பற்றி தகவல் சேகரித்து வந்த சவுத்பொரோ குழுவுடன் கலந்துரையாட வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தது.
  • இந்தக் கலந்துரையாடல்களின்போதுதான் அம்பேத்கர் முதன்முறையாக தனித் தொகுதிகள் பற்றி பேசினார். தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் மற்றும் இடங்கள் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று வாதிட்டார்.
  • இந்தத் திட்டத்தின்படி தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் மட்டுமே அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வாக்களிக்க முடியும், தேர்தலில் போட்டியிடும் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் மட்டுமே அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வாக்களிக்க முடியும்.
  • தேர்தலில் போட்டியிடும் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வேட்பாளர் தீண்டத்தக்க வாக்காளர்களைச் சார்ந்திருக்க நேரிட்டால், வாக்களிக்கும் பின்னவருக்குக் கடமைப்பட்டவராகவும் அவர் மாறவேண்டிய நிலைமை ஏற்படும் என்று அம்பேத்கர் கருதினார்.
  • அவர்கள் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் நலனுக்காகச் சுதந்திரமாகப் பணியாற்ற முடியாத நிலைமை ஏற்படும் என்றும் அவர் நினைத்தார். இட ஒதுக்கீடு பெறப்பட்ட இடங்களில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தார் அவர்கள் தங்களின் உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முடியும்.

அம்பேத்கரின் தீவிரச் செயல்பாடு

  • அம்பேத்கர் புதிய பத்திரிக்கைகள் மற்றும் அமைப்புகளைத் தோற்றுவித்தார். மூக் நாயக் (வாய்பேச முடியாதவர்களின் தலைவர்) என்ற பத்திரிக்கை தனது கருத்துகளை வெளிப்படுத்துவதற்காகவும் பஹிஷ்கிரித் ஹிடாகரினி சபை (தனித்துவிடப்பட்டவர்களின் நலனுக்கான அமைப்பு) என்ற அமைப்பைத் தனது செயல்பாடுகளுக்காகவும் அவர் தொடங்கினார்.
  • பம்பாய் சட்டப்பேரவையின் உறுப்பினராக அவர் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் மீது விதிக்கப்பட்ட திறன்குறைபாடுகளைக் களைவதற்காக அயராது பாடுபட்டார். ஊருணிகள் மற்றும் கிணறுகளில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தரவேண்டிய அடிப்படை உரிமைகளை மீட்டுத்தர மஹத் சத்தியாகிரகம் என்ற அமைப்பைத் தொடங்கினார்.
  • அம்பேத்கரின் அறிவாற்றல் மற்றும் பொதுநடவடிக்கைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் காலனி ஆதிக்க ஆட்சியின் அதிகாரிகளைக் குறிவைத்து அவரது நேரடித் தாக்குதல்கள் இருந்தன.
  • இதனிடையே காங்கிரஸ் கட்சி மற்றும் காந்தியடிகளின் கீழ் சுதந்திரப் போராட்டம் ஒரு முடிவெடுக்கும் கட்டத்தை எட்டியது. பூரண சுதந்திரம் அல்லது முழுமையான விடுதலை என்பதற்காகப் போராடுவதைக் குறிக்கோளாக அறிவிக்கும் இறுதி நிலையச் சுதந்திரப் போர் அடைந்தது.

தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் பெறுவதில் அம்பேத்கர்

  • சுதந்திர இந்தியாவில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்காலம் குறித்து அம்பேத்கர் பெரிதும் கவலை அடைந்தார்.
  • காங்கிரசின் கட்டுப்பாட்டில் சாதி இந்துகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என அவர் கவலையடைந்தார். அனைத்துக் கட்சி மாநாடுகள், சைமன் குழு, வட்டமேசை மாநாடு என அனைத்து இடங்களிலும் தனித் தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
  • தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் தருவது தேசிய இயக்கத்தை மேலும் வலுவிழக்கச் செய்யும் என்று காங்கிரசும் காந்தியடிகளும் கவலைப்பட்டனர்.
  • முஸ்லிம்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்குத் தனித்தொகுதிகள் மற்றும் இதர சிறப்பு நலன்கள் ஆகியன பிரிட்டிஷாரின் பிரித்தாள்ய்ம் கொள்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வழியமைக்கும் என்று அவர்கள் வருத்தப்பட்டனர்.
  • தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களை இந்துகளில் இருந்து அரசியல் ரீதியாகப் பிரிப்பது சமூகப் பாதிப்புகளை உருவாக்கும் என்று காந்தியடிகள் அச்சப்பட்டார்.

வகுப்புவாரி தொகுதி ஒதுக்கீடு

லண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகக் காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் செல்வதற்கு முன் அவர்கள் இடையே தனித்தொகுதிகள் பற்றிய கருத்தில் நடந்த பேச்சுகள் தோல்வி அடைந்தன.

வட்டமேசை மாநாட்டின்போது இருதலைவர்கள் இடையே இதே கருத்துக் குறித்து விவாதம் நடந்தது. பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு இதில் தலையிட்டு முடிவெடுக்கவேண்டும் என்று இந்த கருத்தில் முடிவு எட்டப்படாமல் இருந்தது. ஆகஸ்ட் 1932ஒஇல் வகுப்புவாரித் தொகுதி ஒதுக்கீடுகள் குறித்து பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. இவ்வாறாக இடஒதுக்கீட்டுடன் கூடிய தனித்தொகுதிகள் பற்றிய அம்பேத்கரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.

பூனா ஒப்பந்தம்

  • தீண்டத்தகாதோருக்குத் தனித் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதைத் தனது வாழ்நாள் முழுவதும் எதிர்க்கப்போவதாக மிகவும் வருத்தத்துடன் காந்தியடிகள் அறிவித்தார்.
  • தான் அடைக்கப்பட்ட எரவாடா சிறையில் அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கமுயன்றார். காந்தியடிகளின் உயிரைக் காப்பாற்ரும் அழுத்தம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது.
  • ஆலோசனைகள், கூட்டங்கள் பிரார்த்தனைகள் அனைத்தும் நடத்தப்பட்டன. அதன் விளைவாகக் காந்தியடிகளுடன் சிறைச்சாலையில் நடந்த சந்திப்புக்குப் பிறகு வகுப்புவாரித் தொகுதி ஒதுக்கீடு திருத்தப்பட்டது. அம்பேத்கர் மற்றும் காந்தியடிகளுக்கு இடையே ஏற்பட்ட புதிய ஒப்பந்தம் பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
  • தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகளைப் பறித்துக்கொண்டாலும் இடங்களின் ஒதுக்கீடு குறித்து உத்தரவாதமளிக்கப்பட்டது.
  • இடஒதுக்கீடு பெற்ற தொகுதிகள் என்ற சட்ட அம்சம் அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டு திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்திலும் இது இடம்பெற்றது.

அம்பேத்கரும் கட்சி அரசியலும்

  • அம்பேத்கர் இரண்டு கட்சிகளை ஆரம்பித்தார். சுதந்திர தொழிலாளர் கட்சியை 1937-லும் பட்டியல் இனத்தவர் கூட்டமைப்பை 1942-லும் அவர் தொடங்கினார். அவரது போராட்டங்களை அங்கீகரித்த காலனி அரசு தனது ஆதவை சமன்படுத்த அம்பேத்கரின் சேவைகளைப் பயன்படுத்தியது.
  • 1942ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறை ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு அரசப்பிரதிநிதியின் (வைசிராய்) அமைச்சரவையில் அமைச்சராக இடம்பிடித்தார்.
  • நாட்டுக்கு அவர் ஆற்ரிய சேவைகளுக்கு மகுடம் சூட்டும் விதமாக சுதந்திர இந்தியாவின் அரசியல்சாசன வரைவுக் குழுவின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரம் பெற்ற பிறகு நேரு அமைச்சரவையில் அவர் அமைச்சராக இடம் பெற அழைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!