Book Back QuestionsTnpsc

கார்பனும் அதன் சேர்மங்களும் Book Back Questions 10th Science Lesson 11

10th Science Lesson 11

11] கார்பனும் அதன் சேர்மங்களும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஈஸ்ட் என்பது பூஞ்சை வகுப்பைச் சார்ந்த ஒரு செல் நுண்ணுயிரி ஆகும். பெரிய சிக்கலான கரிம வினைகளில் பூஞ்சைகளில் உள்ள நொதியானது வினை வேக மாற்றியாக செயல்படுகிறது. நொதிகளின் மூலமாக சிக்கலான கரிமச் சேர்மங்களில் மெதுவாக வேதிவினை நிகழ்ந்து எளிய மூலக்கூறுகள் உருவாவதே நொதித்தல் எனப்படும். எடுத்துக்காட்டு: பால் தயிராக மாறுதல்.

சாதாரண சோப்பை ஏன் கடின நீரில் பயன்படுத்த இயலாது? சாதாரண சோப்பு கடின நீருடன் பயன்படுத்தப்படும் போது கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகளை வீழ்படிய செய்கிறது. இது துணிகளின் மேற்பரப்பில் ஸ்கம் படிவை உருவாக்குகிறது. எனவே சோப்பை கடின நீரில் எளிதாக பயன்படுத்த இயலாது.

‘TFM’ என்ற குறியீட்டை சோப்பு உறைகளில் பார்த்துள்ளீர்களா? TFM என்றால் மொத்த கொழுப்பு பொருட்கள்(Total Fatty Matter). இது சோப்பின் தரத்தை குறிக்க கூடிய முக்கிய அம்சமாகும். உயர்ந்த TFM பெற்றுள்ள சோப்புகள் சிறந்த குளியல் சோப்பாக பயன்படுகிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு C3H6 அந்தச் சேர்மத்தின் வகை

(அ) அல்கேன்

(ஆ) அல்கீன்

(இ) அல்கைன்

(ஈ) ஆல்கஹால்

2. ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3- மெத்தில்பியூட்டன் – 1 – ஆல் இது எந்த வகைச் சேர்மம்

(அ) ஆல்டிஹைடு

(ஆ) கார்பாசிலிக் அமிலம்

(இ) கீட்டோன்

(ஈ) ஆல்கஹால்

3. IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை முன்னொட்டு __________

(அ) ஆல்

(ஆ) ஆயிக் அமிலம்

(இ) ஏல்

(ஈ) அல்

4. பின்வரும் படி வரிசை சேர்மங்களில், தொடர்ச்சியாக வரும் இணை எது?

(அ) C3H8 and C4H10

(ஆ) C2H2 and C2H4

(இ) CH4 and C3H6

(ஈ) C2H5OH and C4H8OH

5. C2H5OH + 3 O2 🡪 2 CO2 + 3 H2O என்பது

(அ) எத்தனால் ஒடுக்கம்

(ஆ) எத்தனால் எரிதல்

(இ) எத்தனாயிக் அமிலம் ஆக்சிஜனேற்றம்

(ஈ) எத்தனேல் ஆக்சிஜனேற்றம்

6. எரி சாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல். இதிலுள்ள எத்தனாலின் சதவீதம் _________

(அ) 95.5%

(ஆ) 75.5%

(இ) 55.5%

(ஈ) 45.5%

7. கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது.

(அ) கார்பாக்சிலிக் அமிலம்

(ஆ) ஈதர்

(இ) எஸ்டர்

(ஈ) ஆல்டிஹைடு

8. TFM என்பது சோப்பின் எந்த பகுதிப் பொருளைக் குறிக்கிறது.

(அ) தாது உப்பு

(ஆ) வைட்டமின்

(இ) கொழுப்பு அமிலம்

(ஈ) கார்போஹைட்ரேட்

9. கீழ்கண்டவற்றுள் டிடர்ஜெண்ட்டை பற்றி தவறான கூற்று எது?

(அ) நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு அமிலத்தின் சோடிய உப்பு

(ஆ) சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்பு

(இ) டிடர்ஜெண்ட்டின் அயனி பகுதி SO3Na+

(ஈ) கடின நீரிலும் சிறப்பாக செயல்படும்.

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒரு சேர்மத்தின் சிறப்பு பண்புகளுக்கு காரணமான அணு அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதி அச்சேர்மத்தின் __________ ஆகும்.

2. அல்கைனின் பொதுவான மூலக்கூறு வாய்ப்பாடு _____________

3. IUPAC பெயரிடுதலில் கரிமச் சேர்மத்தின் கட்டமைப்பை குறிப்பிடுவது ___________ (அடிப்படைச் சொல் / பின்னொட்டு / முன்னொட்டு)

4. (நிறைவுற்ற / நிறைவுறா) _____________ சேர்மங்கள் புரோமின் நீரை நிறமாற்றம் அடையச் செய்யும்.

5. அடர் சல்பியூரிக் அமிலத்தைக் கொண்டு எத்தனாலை நீர் நீக்கம் செய்யும் பொழுது ____________ (ஈத்தீன் / ஈத்தேன்) கிடைக்கிறது.

6. 100% தூய ஆல்கஹால் _____________ என்று அழைக்கப்படுகிறது.

7. எத்தனாயிக் அமிலம் ___________ லிட்மஸ் தாளை ____________ ஆக மாற்றுகிறது.

8. கொழுப்பு அமிலங்களை காரத்தைக் கொண்டு நீராற்பகுத்தல் _____________ எனப்படும்.

9. உயிரிய சிதைவு டிடர்ஜெண்ட்கள்____________ (கிளை / நேரான) சங்கிலி தொடரினை உடையவை.

பொருத்துக:

வினைச் செயல் தொகுதி – OH – பென்சீன்

பல்லின வளையச் சேர்மங்கள் – பொட்டாசியம் ஸ்டிரேட்

நிறைவுறா சேர்மங்கள் – ஆல்கஹால்

சோப்பு – பியூரான்

கார்போ வளையச் சேர்மங்கள் – ஈத்தீன்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

கீழ்கண்ட வினாக்களுக்கு பின்வரும் தரவுகளைப் பயன்படுத்தி விடையளி:

(அ) A மற்றும் R சரி R, A ஐ விளக்குகிறது

(ஆ) A சரி R தவறு

(இ) A தவறு R சரி

(ஈ) A மற்றும் R சரி R, A க்கான் சரியான விளக்கம் அல்ல.

1. கூற்று A: கடின நீரில் சோப்பை விட டிடர்ஜெண்ட்கள் சிறப்பாக செயல் புரிகின்றன.

காரணம் R: டிடர்ஜெண்ட்கள் கால்சியம் மற்றம் மெக்னீசியம் உப்புக்களை வீழ்படிய செய்வதில்லை.

2. கூற்று A: அல்கேன்கள் நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள்.

காரணம் R: ஹைட்ரோ கார்பன்கள் சக பிணைப்பைப் பெற்றுள்ளன.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. அல்கீன், 2. ஆல்கஹால், 3. ஏல், 4. C3H8 மற்றும் C4H10, 5. எத்தனால் எரிதல், 6. (95.5%), 7. ஈதர், 8. கொழுப்பு அமிலம்
9. நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு அமிலத்தின் சோடிய உப்பு

கோடிட்ட இடத்தை நிரப்புக: (விடைகள்)

1. வினை செயல் தொகுதி, 2. CnH2n-2, 3. அடிப்படைச் சொல், 4. நிறைவுறா, 5. ஈத்தீன், 6. தனி ஆல்கஹால், 7. நீலநிற, சிவப்பு நிறமாக, 8. சோப்பாக்கல் வினை, 9. நேரான

பொருத்துக: (விடைகள்)

1. வினை செயல் தொகுதி-OH – ஆல்கஹால்

2. பல்லின வளைய சேர்மங்கள் – பியூரான்

3. நிறைவுறா சேர்மங்கள் – ஈத்தீன்

4. சோப்பு – பொட்டாசியம் ஸ்டிரேட்

5. கார்போ வளையச் சேர்மங்கள் – பென்சீன்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. A மற்றும் R சரி R, A ஐ விளக்குகிறது.

2. A மற்றும் R சரி R, A க்கான சரியான விளக்கம் அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!