Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

காற்று Book Back Questions 6th Science Lesson 11

6th Science Lesson 11

11] காற்று

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஒரு குறிப்பிட்ட இடத்தில் காற்று வீசும் திசையைக் கண்டறிய காற்றுத் திசைகாட்டி பயன்படுகிறது. காற்றின் திசையறிய நீங்கள் ஒரு திசைகாட்டியையும் உருவாக்கலாம். நீங்களே செய்து பார்த்து மகிழவும்.

கார்பன்-டை-ஆக்சைடை -57oC க்கு குளிர்விக்கும் பொழுது, அவை திரவ நிலையை அடையாமல், நேரடியாக திட நிலைக்கு மாறுகிறது. இதனை உலர் பனிக்கட்டி என்றழைக்கின்றனர். இது குளிர்விக்கும் காரணியாகப் பயன்படுகின்றது. இறைச்சி மற்றும் மீன்கள் போன்றவற்றை சரக்குந்து மற்றும் சரக்குப் பெட்டிகளில் ஏற்றுமதி செய்யும் பொழுது, அப்பொருள்களைப் பதப்படுத்த உலர் பனிக்கட்டியைப் பயன்படுத்துகின்றனர்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. காற்றில் நைட்ரஜனின் சதவீதம் ______________

(அ) 78%

(ஆ) 21%

(இ) 0.03%

(ஈ) 1%

2. தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் _____________ ஆகும்.

(அ) இலைத்துளை

(ஆ) பச்சையம்

(இ) இலைகள்

(ஈ) மலர்கள்

3. காற்றுக் கலவையில் எரிதலுக்கு துணைபுரியும் பகுதி _________ ஆகும்.

(அ) நைட்ரஜன்

(ஆ) கார்பன்-டை-ஆக்சைடு

(இ) ஆக்சிஜன்

(ஈ) நீராவி

4. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் _______________

(அ) உணவிற்கு நிறம் அளிக்கிறது.

(ஆ) உணவிற்கு சுவை அளிக்கிறது

(இ) உணவிற்கு புரதத்தையும், தாது உப்புக்களையும் அளிக்கிறது

(ஈ) உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.

5. காற்றில் உள்ள _________ மற்றும் ___________ வாயுக்களின் கூடுதல் காற்றின் 99% இயைபாகிறது.

i. நைட்ரஜன் ii. கார்பன்-டை-ஆக்சைடு iii. மந்த வாயுக்கள் iv. ஆக்சிஜன்

(அ) i மற்றும் ii

(ஆ) i மற்றும் iii

(இ) ii மற்றும் iv

(ஈ) i மற்றும் iv

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. காற்றில் காணப்படும் எளிதில் வினைபுரியக்கூடிய பகுதி _________ ஆகும்.

2. ஒளிச்சேர்க்கையின் பொழுது வெளிவரும் வாயு ___________ ஆகும்.

3. சுவாசக் கோளாறு உள்ள நோயாளிக்கு கொடுக்கப்படும் வாயு _________ ஆகும்.

4. இருண்ட அறையினுள் வரும் சூரிய ஒளிக்கற்றையில் __________ காண முடியும்.

5. ________ வாயு சுண்ணாம்பு நீரை பால் போல மாற்றும்.

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. உள்ளிழுக்கும் காற்றில் அதிக அளவு கார்பன்-டை-ஆக்சைடு உள்ளது.

2. புவி வெப்பமயமாதலை மரங்களை நடுவதன் மூலம் குறைக்கலாம்.

3. காற்றின் இயைபு எப்பொழுதும் சமமான விகிதத்தில் இருக்கும்.

4. திமிங்கலம் ஆக்சிஜனை சுவாசிக்க நீரின் மேற்பரப்பிற்கு வரும்.

5. காற்றில் ஆக்ஸிஜனின் இயைபானது, தாவரங்களின் சுவாசம் மூலமும், விலங்குகளின் ஒளிச்சேர்க்கை மூலமும் சமன் செய்யப்படுகிறது.

IV. பொருத்துக:

1. இயங்கும் காற்று – அ] அடிவளிமண்டலம்

2. நாம் வாழும் அடுக்கு – ஆ] ஒளிச்சேர்க்கை

3. வளிமண்டலம் – இ] தென்றல் காற்று

4. ஆக்சிஜன் – ஈ] ஓசோன் படலம்

5. கார்பன்-டை-ஆக்சைடு- உ] எரிதல்

V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக:

1. தாவரங்கள் உணவு தயாரிக்கும் முறைக்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர்.

2. தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.

3. தாவரங்களும் விலங்குகளைப் போல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகின்றன.

4. தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில், பச்சையத்தின் துணையோடு, வளி மண்டலத்திலிருந்து கார்பன்-டை-ஆக்சைடை எடுத்துக் கொண்டு உணவு தயாரிக்கின்றன.

5. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இந்த முறையில் சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்கிறது.

6. இந்த முறையில், தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.

VI. ஒப்புமை தருக:

1. ஒளிச்சேர்க்கை: ____________ : : சுவாசம்: ஆக்சிஜன்.

2. காற்றின் 78%: எரிதலுக்கு துணை புரிவதில்லை: : ______________: எரிதலுக்கு துணை புரிகிறது.

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. 78%, 2. இலைத்துளை, 3. ஆக்சிஜன், 4. உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது, 5. i மற்றும் iv

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஆக்சிஜன், 2. ஆக்சிஜன், 3. ஆக்சிஜன், 4. தூசு பொருள்களை, 5. கார்பன் டை ஆக்ஸைடு

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. ஆக்சிஜன், 2. சரி, 3. இடத்திற்கு இடம் வேறுபடும், 4. சரி, 5. தாவரங்களின் ஒளிசேர்க்கை மூலம்

IV. பொருத்துக:

1. இ, 2. அ, 3. ஈ, 4. உ, 5. ஆ

V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக:

1. தாவரங்கள் உணவு தயாரிக்கும் முறைக்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர்.

2. தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.

3. தாவரங்களும் விலங்குகளைப் போல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகின்றன.

4. தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில், பச்சையத்தின் துணையோடு, வளி மண்டலத்திலிருந்து கார்பன்-டை-ஆக்சைடை எடுத்துக் கொண்டு உணவு தயாரிக்கின்றன.

5. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இந்த முறையில் சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்கிறது.

6. இந்த முறையில், தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.

VI. ஒப்புமை தருக:

1. கார்பன் டை ஆக்ஸைடு, 2. காற்றில் 21%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!