Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை Book Back Questions 8th Social Science Lesson 8

8th Social Science Lesson 8

8] காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஜவ்கார் என்பது அந்நியர்களால் தாங்கள் கைப்பற்றப்படுவதையும், அவமதிக்கப்படுவதையும் தவிர்ப்பதற்காக தோற்கடிக்கப்பட்ட ராஜப்புத்திர போர் வீரர்களின் மனைவிகள் மற்றும் மகள்களின் கூட்டு தன்னார்வ தற்கொலை நடைமுறையைக் குறிப்பிடுகிறது.

அக்பர் குழந்தை திருமணத்தைத் தடுத்ததுடன் திருமணத்திற்கு முன் மணமகன் மற்றும் மணமகளின் ஒப்புதலைப் பெற்றோர்கள் கட்டாயமாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். அவர் பெண்ணிற்கான திருமண வயது 14 எனவும் ஆண்களுக்கான திருமண வயது 16 எனவும் நிர்ணயித்தார்.

மதராஸ் தேவதாசி சட்டம் என்பது அக்டோபர் 9, 1947இல் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டமாகும். மதராஸ் மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் தேவதாசிகளுக்குச் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் உரிமையை வழங்கியதுடன், இந்திய கோவில்களுக்கு பெண் குழந்தைகளைத் தானமாக வழங்குவது சட்ட விரோதம் எனவும் அறிவித்தது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ___________ சமூகமானது தனக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மாற்றங்களை உட்கிரகித்தும் வெளிப்படுத்தியும் நீக்கியும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.

(அ) மனித

(ஆ) விலங்கு

(இ) காடு

(ஈ) இயற்கை

2. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

(அ) தர்மாம்பாள்

(ஆ) முத்துலட்சுமி அம்மையார்

(இ) மூவலூர் ராமாமிர்தம்

(ஈ) பண்டித ரமாபாய்

3. சதி எனும் நடைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு

(அ) 1827

(ஆ) 1828

(இ) 1829

(ஈ) 1830

4. B. M. மலபாரி என்பவர் ஒரு

(அ) ஆசிரியர்

(ஆ) மருத்துவர்

(இ) வழக்கறிஞர்

(ஈ) பத்திரிகையாளர்

5. பின்வருவனவற்றில் எவை/எது சீர்திருத்த இயக்கம்(ங்கள்)?

(அ) பிரம்ம சமாஜம்

(ஆ) பிரார்த்தனை சமாஜம்

(இ) ஆரிய சமாஜம்

(ஈ) மேற்கண்ட அனைத்தும்

6. பெதுன் பள்ளி _________ இல் J. E. D. பெதுன் என்பவரால் நிறுவப்பட்டது.

(அ) 1848

(ஆ) 1849

(இ) 1850

(ஈ) 1851

7. 1882ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்க எந்த ஆணையம் பரிந்துரைத்தது?

(அ) வுட்ஸ்

(ஆ) வெல்பி

(இ) ஹண்டர்

(ஈ) முட்டிமன்

8. சாரதா குழந்தை திருமண மசோதாவானது சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை __________ என நிர்ணயித்தது.

(அ) 11

(ஆ) 12

(இ) 13

(ஈ) 14

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. _________ 1819இல் கிறித்துவ சமயப்பரப்பு குழுக்களால் அமைக்கப்பட்டது.

2. சிவகங்கையை சேர்ந்த ___________ என்பவர் பிரிட்டிஷாரை எதிர்த்து வீரமாக போராடினார்.

3. இந்திய ஊழியர் சங்கத்தை நிறுவியவர் ___________

4. தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர் __________ ஆவார்.

5. கந்து கூரி வீரேசலிங்கம் வெளியிட்ட பத்திரிகையின் பெயர் ____________ ஆகும்.

பொருத்துக:

1. பிரம்ம ஞான சபை – இத்தாலிய பயணி

2. சாரதா சதன் – சமூக தீமை

3. வுட்ஸ் கல்வி அறிக்கை – அன்னிபெசன்ட்

4. நிக்கோலோ கோண்டி – பண்டித ரமாபாய்

5. வரதட்சணை – 1854

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. ரிக் வேத காலத்தில் பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.

2. தேவதாசி முறை ஒரு சமூக தீமை

3. இந்திய சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி ராஜா ராம்மோகன் ராய்.

4. பெண்களுக்கான 23 சதவீத இட ஒதுக்கீடு என்பது பெண்களின் சமூக – அரசியல் நிலையை மேம்படுத்துவதைக் குறிக்கிறது.

5. 1930ஆம் ஆண்டு சாரதா சட்டம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான திருமண வயதை உயர்த்தியது.

பொருத்துக:

1. மகளிர் பல்கலைக்கழகம் – பேராசிரியர் D. K. கார்வே

2. நீதிபதி ரானடே – ஆரிய சமாஜம்

3. விதவை மறுமணச் சட்டம் – 1855

4. ராணி லட்சுமிபாய் – டெல்லி

2. தவறான இணையைக் கண்டறிக:

அ) குழந்தை திருமணம் ஆ) சதி (இ) தேவதாசி முறை (ஈ) விதவை மறுமணம்

3. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

i) பேகம் ஹஸ்ரத் மஹால், ராணி லட்சுமி பாய் ஆகியோர் ஆங்கிலேயர் மீது ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

ii) தமிழ்நாட்டின் சிவகங்கையைச் சேர்ந்த வேலு நாச்சியார், பிரிட்டிஷாருக்கு எதிராக வீரமாக போராடினார்.

மேலே கொடுக்கப்பட்ட எந்த வாக்கியம்(ங்கள்) சரியானவை?

(அ) i மட்டும்

(ஆ) ii மட்டும்

(இ) i மற்றும் ii

(ஈ) இரண்டுமில்லை

4. கூற்று: ராஜா ராம்மோகன் ராய் அனைத்து இந்தியர்களாலும் மிகவம் நினைவு கூறப்படுகிறார்.

காரணம்: இந்திய சமுதாயத்தில் இருந்த சதி என்ற தீய பழக்கத்தை ஒழித்தார்.

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானவை

(ஆ) கூற்று சரியானது. காரணம் தவறு

(இ) கூற்று சரியானது. காரணம் கூற்றை விளக்குகிறது

(ஈ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. மனித 2. முத்துலட்சுமி அம்மையார் 3. (1829) 4. பத்திரிகையாளர்

5. மேற்கண்ட அனைத்தும் 6. (1849) 7. ஹண்டர் 8. (14)

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. பெண் சிறார் சங்கம் 2. வேலுநாச்சியார் 3. கோபால கிருஷ்ண கோகலே

4. பெரியார் ஈ. வெ. ரா 5. விவேகவர்தினி

பொருத்துக: (விடைகள்)

1. பிரம்மஞான சபை – அன்னிபெசன்ட்

2. சாரதா சதன் – பண்டித ரமாபாய்

3. வுட்ஸ் கல்வி அறிக்கை – 1854

4. நிக்கோலோ கோண்டி – இத்தாலிய பயணி

5. வரதட்சணை – சமூக தீமை

சரியா / தவறா எனக் குறிப்பிடுக: (விடைகள்)

1. சரி

2. சரி

3. சரி

4. தவறு

சரியான விடை: பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது பெண்களின் சமூக – அரசியல் நிலையை மேம்படுத்துவதைக் குறிக்கிறது.

5. சரி

சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்:

1. சரியான இணையைக் கண்டுபிடி.

விடை: மகளிர் பல்கலைக்கழகம் – பேராசிரியர் D. K. கார்வே

2. மாறுபட்ட ஒன்றினைக் கண்டுபிடி.

விடை: விதவை மறுமணம்

3. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க

விடை: i மற்றும் ii

4. கூற்று சரியானது. காரணம் கூற்றை விளக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!