MCQ Questions

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் 10th Social Science Lesson 13 Questions in Tamil

10th Social Science Lesson 13 Questions in Tamil

13] காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

1) பிளாசி போர் நடைபெற்ற ஆண்டு எது?

A) 1755ஆம் ஆண்டு

B) 1756ஆம் ஆண்டு

C) 1757ஆம் ஆண்டு

D) 1758ஆம் ஆண்டு

(குறிப்பு – 1757ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் நாள் நடைபெற்ற பிளாசிப் போரில் வங்காள நவாபான சிராஜுத் தௌலா ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியால் தோற்கடிக்கப்பட்டார்)

2) வங்காளத்தின் நவாப் படைக்கு தலைமை ஏற்று இருந்தவர் யார்?

A) சிராஜ் உத் தௌலா

B) மீர் ஜாபர்

C) ஜகத் கான்

D) இவர் யாரும் அல்ல

(குறிப்பு – வங்காளத்தின் நவாப் படைக்குத் தலைமை ஏற்று இருந்தவர் மீர் ஜாபர் ஆவார். இவர் சிராஜ்-உத்-தௌலாவின் சித்தப்பா ஆவார்)

3) பிளாசி போருக்குப் பின்னர் வங்காளத்தின் புதிய நவாபாக நியமிக்கப்பட்டவர் யார்?

A) கான் அப்துல்லா

B) மீர் ஜாபர்

C) மீர் காசிம்

D) முகமது காசிம்

(குறிப்பு – பிளாசிப்போருக்குப் பின்னர் வங்காளம் கொள்ளையடிக்கப்பட்டது. வங்காளத்தின் புதிய நவாபாக மீர் ஜாபர் நியமிக்கப்பட்டார்

4) மீர் ஜாபர் கிழக்கிந்திய கம்பெனிக்கு செலுத்திய தொகை எவ்வளவு?

A) 2 கோடியே 75 லட்சம்

B) 1 கோடியே 50 லட்சம்

C) 2 கோடியே 25 லட்சம்

D) 3 கோடியே 50 லட்சம்

(குறிப்பு – 1757 மற்றும் 1760 க்கு இடைப்பட்ட காலத்தில் கிழக்கிந்திய கம்பெனிக்கு மீர் ஜாபர் 2 கோடியே 25 லட்சம் ரூபாயை கொடுத்தார். இந்தத் தொகை பின்னர் ஆங்கிலேயர்களின் ஜவுளித்துறை அதிவேகமாக இயந்திரமாக உதவிய பிரிட்டனின் தொழிற்புரட்சிக்கு பயன்படுத்தப்பட்டது)

5) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – கிழக்கிந்திய கம்பெனியால் பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான சந்தையாக இந்தியாவை உருவாக்கியது.

கூற்று 2 – ரசி போருக்குப் பின்னர் எல்லையை விரிவாக்கும் கொள்கையை ஆங்கிலேயர் பின்பற்றினர்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – வெகுவிரைவில் இந்திய துணை கண்டத்தின் எஞ்சிய பகுதிகள் அனைத்தும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. நில வருவாய், நிர்வாகம், ராணுவம், காவல்துறை போன்ற ஆட்சி சார்ந்த நிறுவனங்களில் ஆங்கிலேயர்கள் முறையான மாற்றங்களை கொண்டு வந்தனர்)

6) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – காலனி ஆதிக்க சுரண்டல் மற்றும் காலனிய அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கத்திற்கு எதிரான இந்திய நிலைப்பாடு இரண்டு கூறுகளைக் கொண்டிருந்தது.

கூற்று 2 – பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவின் நிலைப்பாடு இந்திய தேசியவாதத்தின் வடிவத்தில் தோன்றியது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – இவை பின்னர் இந்தியாவை ஒரே நாடாக உருவகம் செய்துகொண்டு ஒற்றுமை உணர்வையும் தேசிய ஆர்வத்தையும் வலியுறுத்தியது)

7) ஆரம்ப காலத்தில் பாரம்பரியமான உயர்குடி மக்களும் விவசாயிகளும் பழங்குடியின மக்களுடன் இணைந்து எதற்காக கிளர்ச்சி செய்தனர்?

A) இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களை வெளியேற்றுவதற்காக

B) காலனியாதிக்கதிற்கு முன்னிருந்த நிலையை மீண்டும் நிலைநிறுத்துவதை வலியுறுத்தி

C) சுதந்திரம் வேண்டும் என்பதை வலியுறுத்தி

D) இவை எதுவும் அல்ல.

(குறிப்பு – ஊரகப் பகுதிகளில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மிக வலுவுடைய மற்றும் தீவிரமான போக்கு நிலவியது. காலனி ஆதிக்கத்திற்கு முன்னிருந்த நிலையை மீண்டும் நிலைநிறுத்தும் அதை வலியுறுத்தி இவர்கள் கிளர்ச்சி செய்தனர்)

8) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஆங்கிலேய ஆட்சியில் கிட்டத்தட்ட ஒரு 100 க்கும் குறையாத எண்ணிக்கையில் விவசாயிகளின் கிளர்ச்சிகள் நடந்தன.

II. மறுசீரமைத்தலுக்கான கிளர்ச்சிகள், சமய இயக்கங்கள், சமூக கொள்ளை, மக்களின் கிளர்ச்சி போன்றவை அதன் வகைகளாகும்.

III. இந்த கிளர்ச்சிகளுக்கு காரணம் பழங்குடி மக்கள் குறிப்பாக ஆங்கிலேயர்களை படையெடுப்பாளர்களாகவும், ஆக்கிரமிப்பாளர்களாகவும் காண தொடங்கினர்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – நிலம் தொடர்பான தனி சொத்து உரிமைகள் பற்றிய கொள்கை, நில வருவாயை தீவிரமாக வசூல் செய்வது, பழங்குடியினர் அல்லாதவர்கள் பழங்குடியினரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது கிறிஸ்தவ சமயப் பரப்பாளர்களின் தலையீடு போன்ற பல பிரச்சனைகள் ஆங்கிலேயர்களுக்கு எதிரான அமைதியின்மை உருவாக வழிவகுத்தன)

9) ஃபராசி இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?

A) ஹாஜி இதயத்துல்லா

B) ஹாஜி ஷரியதுல்லா

C) ஹாஜி முகமதுல்லா

D) ஹாஜி சதயத்துல்லா

(குறிப்பு – ஹாஜி ஷரியதுல்லா என்பவரால் 1818 ஆம் ஆண்டு ஃபராசி இயக்கம் தொடங்கப்பட்டது. வங்காளத்தின் கிழக்கு பகுதிகளில் தொடங்கப்பட்ட இவ்வமைப்பின் உறுப்பினர்களை இஸ்லாத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார்)

10) ஃபராசி இயக்கத்தை தோற்றுவித்த ஹாஜி ஷரியதுல்லா மறைந்த ஆண்டு எது?

A) 1835ஆம் ஆண்டு

B) 1837ஆம் ஆண்டு

C) 1839ஆம் ஆண்டு

D) 1840ஆம் ஆண்டு

(குறிப்பு – 1839 ஆம் ஆண்டு ஷரியத் உள்ள மறைந்த பிறகு விவசாய கட்சிகளுக்கு அவரது மகன் டுடுமியான் தலைமை ஏற்றார்)

11) நிலம் கடவுளுக்கு சொந்தமானது என்று அறிவித்தவர் யார்?

A) ஹாஜி ஷரியதுல்லா

B) டுடுமியான்

C) டிடுமீர்

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – டுடு மியான் என்பவர் ஃபராசி இயக்கத்தை தோற்றுவித்த ஹாஜி ஷரியதுல்லா என்பவரின் மகன் ஆவார். தந்தையின் மறைவுக்குப் பிறகு கிளர்ச்சிகளுக்கு தலைமை ஏற்றார். அவர் வரி செலுத்த வேண்டாம் என்று விவசாயிகளை கேட்டுக் கொண்டார்.நிலம் கடவுளுக்கு சொந்தமானது என்று அறிவித்தார்)

12) நிலம் கடவுளுக்கு சொந்தமானது என்று அறிவித்த டுடுமியான் மறைந்த ஆண்டு எது?

A) 1860ஆம் ஆண்டு

B) 1862ஆம் ஆண்டு

C) 1864ஆம் ஆண்டு

D) 1866ஆம் ஆண்டு

(குறிப்பு – 1840-50களில் கோவிந்தா ரர்கள் மற்றும் பயிரிடுவோர் மத்தியில் கடுமையான மோதல்கள் நிலவின. டுடு மியான் மறைவுக்குப்பிறகு நோவாமியான் என்பவர் தலைமை ஏற்றார்)

13) ஆங்கிலேய ஆட்சிக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிராக துவங்கப்பட்ட கிளர்ச்சி எது?

A) வஹாபி கிளர்ச்சி

B) தோஹா கிளர்ச்சி

C) வேலூர் கிளர்ச்சி

D) எல்லாமே தவறு

(குறிப்பு – வஹாபி கிளர்ச்சி என்பது ஆங்கில ஆட்சிக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிராக துவங்கப்பட்டது ஆகும். இது வங்காளத்தில் தோன்றியது)

14) வஹாபி கிளர்ச்சி தோன்றிய ஆண்டு எது?

A) 1823ஆம் ஆண்டு

B) 1825ஆம் ஆண்டு

C) 1827ஆம் ஆண்டு

D) 1829ஆம் ஆண்டு

(குறிப்பு – வங்காளத்தில் பரசத் பகுதியில் 1827 ஆம் ஆண்டில் வஹாபி கிளர்ச்சி தோன்றியது. வஹாபி போதனைகளால் பெரிதும் ஆழமாக ஈர்க்கப்பட்டவராக திகழ்ந்த இஸ்லாமிய மதபோதகர் டிடுமீர் இந்தக் கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றார்)

15) வஹாபி கிளர்ச்சி குழுவின் முதல் தாக்குதல் புர்னியா நகரில் எப்போது நிகழ்த்தப்பட்டது?

A) 1831ஆம் ஆண்டு, செப்டம்பர் 6

B) 1831ஆம் ஆண்டு, அக்டோபர் 6

C) 1831ஆம் ஆண்டு, நவம்பர் 6

D) 1831ஆம் ஆண்டு, டிசம்பர் 6

(குறிப்பு – இந்த தாக்குதலுக்கு பின்னர் டிடுமீர் உடனடியாக ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்தார். இந்த போராட்டத்தின்போது 50 வீரர்களுடன் டிடுமீர் கொல்லப்பட்டார்)

16) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – நிலத்திற்கு வாடகை வசூலிப்பது அல்லது வரி விதிப்பது ஆகியன இறை சட்டத்திற்கு எதிரானது என்பது ஹாஜி ஷரியத்துல்லாவின் கூற்று ஆகும்.

கூற்று 2 – வஹாபி கிளர்ச்சி என்பது ஆங்கிலேய ஆட்சிக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிராக தொடங்கப்பட்டதாகும்.

கூற்று 3 – டுடுமியான் மறைவுக்கு பின்னர் நோவா மியான் என்பவர் ஃபராசி இயக்கத்திற்கு தலைமை ஏற்றார்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – வஹாபி கிளர்ச்சி, ஃபராசி இயக்கம் போன்ற போராட்டங்கள், இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான விவசாய போராட்டங்கள் தோன்ற வழிவகுத்தன)

17) ஜார்க்கண்ட் மற்றும் ஒரிசா ஆகிய பகுதியில் நடைபெற்ற பழங்குடியின கிளர்ச்சியின் பெயர் என்ன?

A) சந்தால் கிளர்ச்சி

B) கோல் கிளர்ச்சி

C) முண்டா கிளர்ச்சி

D) இவை எதுவும் இல்லை

(குறிப்பு – ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய பகுதியிலுள்ள சோட்டா நாக்பூர் மற்றும் சிங்பும் ஆகிய இடங்களில் 1831-32 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய பழங்குடியின கிளர்ச்சி கோல் கிளர்ச்சி ஆகும்)

18) கோல் கிளர்ச்சி யாருடைய தலைமையில் நடந்தது?

A) கேசவ் சென்

B) பிந்த்ராய்

C) சித்து

D) கணு

(குறிப்பு – கோல் கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றவர்கள் பிந்த்ராய் மற்றும் சிங்ராய் என்பவர்கள் ஆவர். சோட்டா நாக்பூர் பகுதியின் அரசர் வருவாய் வசூலிக்கும் பணியை வட்டிக்குப் பணம் கொடுப்பவரிடம் குத்தகைக்கு விட்டிருந்தார். இவரால் பாதிக்கப்பட்டவர்களால் கோல் கிளர்ச்சி எழுப்பப்பட்டது)

19) கோல் கிளர்ச்சி பற்றிய தவறான கூற்று எது?

A) இது ஜார்க்கண்ட் மற்றும் ஒரிசா ஆகிய பகுதிகளில் தோன்றுகிறது.

B) 1835ஆம் ஆண்டு காலங்களில் தோன்றிய இந்த கிளர்ச்சி, ஒரு விவசாய கிளர்ச்சி ஆகும்.

C) கோல் கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றவர்கள் பிந்த்ராய் மற்றும் சிங்ராய் என்பவர்கள் ஆவர்.

D) கோல் இனத்தவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் வட்டிக்கு பணம் கொடுப்பதற்கு எதிராக இந்த கிளர்ச்சி நடத்தினர்.

(குறிப்பு – கோல் கிளர்ச்சி 1831-32ஆண்டுகளில் தோன்றிய ஒரு பழங்குடியின கிளர்ச்சி ஆகும்)

20) ராஜ்மஹால் மலையை சுற்றி இருந்த பழங்குடியின மக்கள் யார்?

A) கோல் இனமக்கள்

B) சாந்தால் இனமக்கள்

C) முண்டா இனமக்கள்

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் பரவலாக வாழ்ந்து வந்த சார்ந்தவர்கள் நிரந்தர குடியிருப்புகளில் பெண்களை உருவாக்குவதற்காக தங்கள் பூர்வீக இடத்தை விட்டு இடம்பெயர வேண்டி காட்டாயப்படுத்தப்பட்டனர்.)

21) 1854ஆம் ஆண்டு வாக்கில் சந்தால் இனத்தவர் யாருடைய தலைமையின் கீழ் சமூக கொள்ளைகளில் ஈடுபட்டனர்?

A) அமர்

B) பீர் சிங்

C) கணு

D) உத்தம் சிங்

(குறிப்பு – பீர் சிங் என்பவரின் தலைமையின் கீழ் சமூகக் கொள்கைகள் அரங்கேற்றப்பட்டன. மகாஜன்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக குறிவைத்து இவைகள் நடந்தன)

22) 1855ஆம் ஆண்டு சாந்தலர்களுக்கு தலைமை ஏற்றவர்களில் கீழ் உள்ளவர்களில் சரியானவர் யார்?

I. சித்து

II. கணு

III. உத்தம் சிங்

A) I, II மட்டும் சரியானது

B) II, III மட்டும் சரியானது

C) I, III மட்டும் சரியானது

D) எல்லாமே சரியானது

(குறிப்பு – 1855இல் சித்து மற்றும் கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் புரட்சியை தலைமையேற்று நடத்த வேண்டி தங்களுக்கு கடவுளிடமிருந்து தேவசெய்தி கிடைத்ததாக அறிவித்தனர்)

23) 1855ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் நாள் சித்து மற்றும் கணு ஆகிய சாந்தலர் சகோதரர்கள் எதை அறிவித்தனர்?

A) கிளர்ச்சியை தலைமை ஏற்று நடத்த தேவசெய்தி வந்ததாக அறிவித்தனர்.

B) எதிரிகளின் குண்டுகள் நீராக மாறிவிடும் என்று அறிவித்தனர்.

C) அனைவரையும் கொன்று புதைக்க தேவசெய்தி வந்ததாக அறிவித்தனர்.

D) ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்த வேண்டாம் என்று அறிவித்தனர்.

(குறிப்பு – சித்து மாறும் கணு ஆகிய சாந்தலர் சகோதரர்கள், கிளர்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்துமாறு தேவசெய்தி வந்ததாக அறிவித்தனர். பின்னர் எதிரிகளின் குண்டுகள் நீராக மாறிவிடும் என்று அறிவித்தனர். இரண்டு ஆங்கிலேய அதிகாரிகள் கொல்லப்பட்டனர்)

24) எந்த கிளர்ச்சியின்போது கிட்டத்தட்ட 15 முதல் 25 ஆயிரம் கிளர்ச்சியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்?

A) கோல் கிளர்ச்சி

B) முண்டா கிளர்ச்சி

C) சாந்தல் கிளர்ச்சி

D) பெருங்கலகம்

(குறிப்பு – 1855ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சாந்தல் கிளர்ச்சி மகாஜன்கள், ஜமீன்தாரர்கள், ஆங்கிலேய அதிகாரிகளுக்கு எதிரான வெளிப்படையான கிளர்ச்சியாக உருவெடுத்தது. 25ஆயிரம் வரையிலான கிளர்ச்சியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.)

25) 1855இல் சட்டம் உருவாக்கப்பட்டு _____________என்ற தனிமண்டலம் மூலம் சாந்தலர்கள் வசம் இருந்த பகுதிகளை ஒழுங்குமுறைபபடுத்தபட்டது.

A) சாந்தல் ஹம்கானா

B) சாந்தல் பர்கானா

C) சாந்தல் பிர்கானா

D) சாந்தல் கானா

(குறிப்பு – 1855ஆம் ஆண்டு சாந்தலர்கள் வசந்தி இருந்த பகுதிகளை ஒழுங்கு முறைபடுத்துவது பற்றிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. சாந்தல் பர்கானா மண்டலம் என்ற தனி மண்டலத்தை உருவாக்கும் வகையில் இந்த சட்டம் நிறைவேறியது)

26) முண்டா கிளர்ச்சி கீழக்காணும் இடங்களில் எங்கு தோன்றியது?

A) ராஞ்சி

B) பீகார்

C) ஹரியானா

D) டில்லி

(குறிப்பு – ராஞ்சியில் நடைபெற்ற உழுகுலன் கிளர்ச்சி (பெரிய கலகம்) பழங்குடியினைக்கிளர்ச்சிகளில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.)

27) முண்டா இனமக்களின் விவசாய முறையின் பெயர் என்ன?

A) ரோகோ முறை

B) குண்ட்கட்டி முறை

C) மில்பா முறை

D) பேவார் முறை

(குறிப்பு – கூட்டாக நிலத்தை வைத்துக்கொண்டு குண்ட்கட்டி என்ற முறையில் விவசாயம் செய்வதில் முண்டா இன மக்கள் பெயர் பெற்றவர்கள் ஆவர். பிற்காலத்தில் முன்னால் என மக்கள் கொத்தடிமைகளாக வலுக்கட்டாயமாக பணியில் அமர்த்தப்பட்டனர்)

28) கடவுளின் தூதர் என்று தன்னை அறிவித்துக்கொண்ட முண்டா இனதலைவர் யார்?

A) பிர்சா முண்டா

B) ஹவேசி முண்டா

C) மில்பா முண்டா

D) இவர் யாரும் அல்ல

(குறிப்பு – பிர்சா முண்டா தன்னை கடவுளின் தூதர் என்று அறிவித்தவுடன் இந்த இயக்கத்திற்கு ஊக்கமளித்தது. தனக்கு இறை தொடர்பு இருப்பதாக கூறிய பிர்சா அண்டவெளியின் அதீத சக்திகளின் மூலமாக முண்டா இன மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண போவதாகவும் அறிவித்தார்)

29) முண்டா இன மக்கள் எந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நாளில் வன்முறையை கையில் எடுத்து கிறிஸ்துவ தூதுக்குழுக்கள், அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர்?

A) 1883ஆம் ஆண்டு

B) 1886ஆம் ஆண்டு

C) 1889ஆம் ஆண்டு

D) 1892ஆம் ஆண்டு

(குறிப்பு – 1889ஆம் ஆண்டு முண்டாக்கள் கிறிஸ்தவ தூதுக் குழுக்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், மதம் மாறிய முண்டக்கள் மீது அம்பு எறிந்து தாக்குதல் நடத்தினர்.)

30) முண்டா கிளர்ச்சிக்கு காரணமான பிர்சா முண்டா இந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்?

A) 1900ஆம் ஆண்டு, பிப்ரவரி

B) 1901ஆம் ஆண்டு, நவம்பர்

C) 1889ஆம் ஆண்டு, டிசம்பர்

D) 1902ஆம் ஆண்டு, ஜூலை

(குறிப்பு – 1900ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட பிர்சா முண்டா பின்னர் சிறையில் உயிர் நீத்தார். பழங்குடியினரின் தலைவராக அறியப்பட்ட பிர்சா முண்டா இன்றளவும் பல நாட்டுப்புறப்பாடல்களில் போற்றப்படுகிறார்)

31) சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

A) 1906ஆம் ஆண்டு

B) 1908ஆம் ஆண்டு

C) 1910ஆம் ஆண்டு

D) 1912ஆம் ஆண்டு

(குறிப்பு – முண்டா கிளர்ச்சியை அடுத்து ஆங்கிலேய அரசு பழங்குடியின நிலம் பற்றிய கொள்கையை வகுக்க முனைந்தது. எனவே 1908 ஆம் ஆண்டில் சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் நிறைவேற்றப்பட்டு பழங்குடியினர் நிலத்தில் பழங்குடியினர் அல்லாதோர் நுழைவது தடுக்கப்பட்டது)

32) ஆங்கிலேயர்களின் வாரிசு இழப்பு கொள்கை அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட இடங்கள் கீழ்கண்டவற்றுள் எது?

I. சதாரா

II. சம்பல்பூர்

III. ஜான்சி

IV. நாக்பூர்

A) I, II, III மட்டும் சரியானது

B) II, III, IV மட்டும் சரியானது

C) I, III, IV மட்டும் சரியானது

D) எல்லாமே சரியானது

(குறிப்பு – அரசு கட்டிலில் அரியணை ஏற தமக்கு ஆண் வாரிசைப் பெற்றெடுக்க உள்நாட்டு ஆட்சியாளர்கள் தவறினால் அந்த ஆட்சியாளர் இறப்புக்குப் பின் அந்த பகுதி ஆங்கிலேயரின் ஆட்சிக்கு கீழ் கொண்டு வரப்படும். இது வாரிசு இழப்பு கொள்கை என அழைக்கப்பட்டது)

33) _______________ வேலூரில் சிப்பாய்கள் சமய குறியீடுகளை நெற்றியில் அணிவதற்கும், தாடி வைத்துக் கொள்வதற்கும் தடைவிதிக்கப்பட்டனர்?

A) 1805ஆம் ஆண்டு

B) 1806ஆம் ஆண்டு

C) 1807ஆம் ஆண்டு

D) 1808ஆம் ஆண்டு

(குறிப்பு – இத்தகைய ஆடை கட்டுப்பாடுகள் சிப்பாய்களை கிறித்துவ மதத்துக்கு மாற செய்வதற்கான ஒரு முயற்சியாக அவர்கள் அஞ்சினார்கள்)

34) 1824ஆம் ஆண்டு கல்கத்தா அருகே பாரக்பூரில் சிப்பாய்கள் கடல்வழியே எந்த நாட்டுக்கு செல்ல மறுத்தனர்?

A) இந்தோனேசியா

B) பர்மா

C) மியான்மர்

D) சிங்கப்பூர்

(குறிப்பு – கடல் கடந்து சென்றால் தங்களது ஜாதியை இழக்க நேரிடும் என்று அவர்கள் நம்பினார்கள். இதுவும் 1857 ஆம் ஆண்டின் பெரும் கலகம் உண்டாக ஒரு காரணமாக அமைந்தது)

35) முஸ்லிம்களுக்கு எந்த இறைச்சி தடை செய்யப்பட்டதாக கருதப்படுகிறது?

A) பசு இறைச்சி

B) பன்றி இறைச்சி

C) முயல் இறைச்சி

D) எருமை இறைச்சி

(குறிப்பு – 1850களில் பயன்படுத்தப்பட்ட என்ஃபீல்டு ரக துப்பாக்கிகளில் தோட்டாக்கள் பற்றிய வதந்திகள் புரட்சிக்கு வித்திட்டது. பசு மற்றும் பன்றிக் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட பசை, இத்தகைய புதிய குண்டு பொது உரைகளில் பயன்படுத்தப்பட்டதாக சிப்பாய்கள் பெரிதும் சந்தேகம் கொண்டனர்)

36) 1857 பெருங்கலகம் எப்போது துவங்கியது?

A) மார்ச் 20ஆம் நாள்

B) மார்ச் 23ஆம் நாள்

C) மார்ச் 26ஆம் நாள்

D) மார்ச் 29ஆம் நாள்

(குறிப்பு – 1857ஆம் ஆண்டு மார்ச் மதம் 29ஆம் நாள் மங்கள் பாண்டே என்ற பெயர் கொண்ட சிப்பாய் தனது ஐரோப்பிய அதிகாரியை தாக்கினார். மங்கள் பாண்டே, மற்றும் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். இதனால் கலவரம் அம்பாலா, லக்னோ, மீரட் ஆகிய ராணுவ குடியிருப்பு பகுதிகளில் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகின)

37) மீரட்டில் இருந்து இந்திய சிப்பாய்கள் தில்லி செங்கோட்டை நோக்கி வகுத்து சென்ற நாள் எது?

A) 1857ஆம் ஆண்டு, மே 11

B) 1857ஆம் ஆண்டு, மே 13

C) 1857ஆம் ஆண்டு, மே 15

D) 1857ஆம் ஆண்டு, மே 17

(குறிப்பு – மே மாதம் 11 ஆம் நாள் ஈரோட்டில் இருந்து தில்லி செங்கோட்டை நோக்கி ஒரு குழுவாக சிப்பாய்கள் அணிவகுத்து சென்றனர். முகலாய மாமன்னர் இரண்டாம் பகதூர்ஷா தங்கள் தலைவராக வேண்டும் என்று கூறுவதற்காக அங்கு குழுமியது.)

38) 1857ஆம் ஆண்டு பெரும்கலகம் நிகழ்ந்த போது வட இந்தியாவில் எந்த இடங்களில் ஆங்கிலேய ஆட்சி நீடித்தது?

I. பஞ்சாப்

II. வங்காளம்

III. டில்லி

A) I மட்டும்

B) II மட்டும்

C) I, II மட்டும்

D) II, III மட்டும்

(குறிப்பு – முகலாய மன்னர் இரண்டாம் பகதூர்ஷா ஹிந்துஸ்தானத்தின் மாமன்னராக டில்லியில் பதவி ஏற்றார். தில்லியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் செய்தி கங்கை நதி பள்ளத்தாக்கில் எட்டியவுடன் ஜூன் மாதம் தொடக்கம் வரை ஒவ்வொரு ராணுவ குடியிருப்பு பகுதிகளிலும் கிளர்ச்சிகள் நடந்தன. பஞ்சாப் மற்றும் வங்காளத்தை தவிர பிற இடங்களில் ஆங்கிலேய ஆட்சி காணாமல் போனது)

39) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1- 1857ம் ஆண்டு பெரும் கலகத்திற்கு வட இந்தியாவின் பாதிக்கப்பட்ட கிராம சமூகத்தில் வாழ்ந்த மக்களும் ஆதரவு தெரிவித்தனர்.

கூற்று 2 – வடமேற்கு மாகாணங்கள் மற்றும் அயோத்தியின் பகுதிகளில் இந்த முதலாவது உள்நாட்டு கிளர்ச்சி வெடித்தது.

கூற்று 3 – தாலுக்கா விவசாய கூட்டணி என்பது தாங்கள் இழந்ததை மீட்கும் ஒரு புது முயற்சியாக கருதப்பட்டது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – இந்திய மாநிலங்களில் ஆட்சியாளர்கள் பட்டத்தை துறக்க நேரிட்டதால் அவர்களால் ஆதரிக்கப்பட்ட கைவினை கலைஞர்கள் சரிசமமாக அவதியுற்றனர். இந்திய கைவினைப் பொருட்கள் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் வேலை இழந்தனர். ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஒட்டுமொத்த ஆத்திரம் கிளர்ச்சியாக வெடித்தது)

40) 1857இல் பெரும்கலகம் நடைபெற்ற மையங்களுள் தவறானது எது?

A) அம்பாலா

B) குவாலியர்

C) பனாரஸ்

D) மும்பை

(குறிப்பு – 1857இல் பெருங்கலகம் நடைபெற்ற மையங்கள் ஆவன, அம்பாலா, டெல்லி, மீரட், ஆக்ரா, கான்பூர், ஜான்சி, அலகாபாத், பனாரஸ் மற்றும் பாரக்பூர் ஆகும்)

41) பேஷ்வா மன்னர்களில் கடைசி பேஷ்வா மன்னர் யார்?

A) இரண்டாம் சரபோஜி

B) இரண்டாம் பாஜிராவ்

C) நானாசாகிப்

D) பாஜிராவ் போன்ஸ்லே

(குறிப்பு – கடைசி பேஷ்வா மன்னரான இரண்டாவது பாஜிராவின் தத்துப்பிள்ளை நானாசாகிப் ஆவார்)

42) ஆங்கிலேயருக்கு எதிராக தோன்றிய கிளர்ச்சிகளுக்கு தலைமை ஏற்றவர்களின் தவறான இணை எது?

A) கான்பூர் – நானா சாகிப்

B) லக்னோ – பேகம் ஹஸ்ரத் மஹால்

C) பரேலி – கான் பகதூர்

D) பாட்னா – பாஜிராவ்

(குறிப்பு – பாதிக்கப்பட்ட அரசர்கள், நவாபுகள், அரசிகள், ஜமீன்தாரர்கள் ஆகியோர் ஆங்கிலேயர்களுக்கு எதிரான தங்கள் ஆத்திரத்தை பயன்படுத்திக்கொள்ள இந்த கிளர்ச்சி ஒரு மேடையை அமைத்து கொடுத்தது)

43) 1857ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது கான்பூர் முற்றுகையின் வன்முறையின் போது கொல்லப்பட்ட ஆங்கிலேய மேஜர் யார்?

A) மேஜர் ஜெனரல் ஹக் வீலர்

B) மேஜர் ஜெனரல் ஹென்றி

C) மேஜர் ஜெனரல் பால்சான்

D) மேஜர் ஜெனரல் லெண்லித்

(குறிப்பு – கான்பூரில் சுற்றிவளைக்கப்பட்ட கம்பெனி படைகளும் ராணுவ வீரர்களும் நீட்டிக்கப்பட்ட சுற்றிவளைப்பு தயாராக இல்லாததால் நானாசாகிப் தலைமையிலான கிளர்ச்சி படைகள் சரணடைந்தனர். அவர்கள் அலகாபாத்தில் திரும்பிச் செல்லும்போது அவர்கள் சென்ற படகுகள் எரிக்கப்பட்டு மேஜர் ஜெனரல் ஹக் வீலர் எரித்துக் கொல்லப்பட்டார்)

44) வாரிசு இழப்பு கொள்கையை அறிமுகம் செய்தவர் யார்?

A) கேனிங் பிரபு

B) டல்ஹவுசி பிரபு

C) வில்லியம் பெண்டிங் பிரபு

D) வெல்லெஸ்லி பிரபு

(குறிப்பு – வாரிசு இழப்பு கொள்கையை அறிமுகம் செய்தவர் டல்ஹவுசி பிரபு ஆவார். இக்கொள்கையின் மூலம் ஜான்சி போன்ற பல இடங்கள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது)

45) 1858ஆம் ஆண்டு அலகாபாத்தில் இருந்து கான்பூர் வரை கர்னல் நீலின் ஆணைப்படி போராட்டக்காரர்களும், கிளர்ச்சியாளர்களும் இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவித்த லண்டன் டைம்ஸ் பத்திரிகையின் செய்தியாளர் யார்?

A) வில்லியம் ஹோவர்ட் ரஸ்ஸல்

B) வில்லியம் ஹென்றி

C) வில்லியம் பாரடே ஹக்

D) ஜார்ஜ் பூலே

(குறிப்பு – 1858 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்த லண்டன் டைம்ஸ் பத்திரிகையாளரின் செய்தியாளர் வில்லியம் ஹோவர்ட் ரஸ்ஸல், பேரணியில் கலந்து கொண்ட இரண்டு நாட்களில் 42 பேர் சாலை ஓரத்தில் தூக்கிலிடப்பட்டதாக தெரிவித்தார். கண்ணில் தென்பட்ட ஒவ்வொரு இந்தியரும் சுடப்பட்டு அல்லது சாலையோரம் வரிசையாக நடப்பட்டிருந்த மரங்களில் தூக்கிலிடப்பட்டதாக அறிவித்தார்)

46) 1857ஆம் ஆண்டு புரட்சி தோல்வி பெற்றதற்கான காரணங்களில் சரியானது எது?

I. ஆங்கில அறிவு பெற்ற நடுத்தர இந்தியர்கள் கிளர்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை

II. மத்திய தலைமை இல்லாததால் கிளர்ச்சியில் தோல்வியடைந்தது.

III. ஆயுதம் கிடைக்கப் பெறாமை, அமைப்பாற்றல் இன்மை, ஒழுக்கமின்மை ஆகிய காரணங்களால் கிளர்ச்சி தலைவர்கள் தோல்வி அடைந்தனர்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – பெரும்பாலும் இந்திய அரசர்கள் காலனி அரசுக்கு விசுவாசமாக அல்லது ஆங்கில அதிகாரத்தை அழிந்து அச்சப்பட்டு ஒதுங்கி இருந்தனர். பெரும்பாலும் அவர்கள் ஐந்தாம் படையாக செயல்பட்டனர். இவை அனைத்தும் 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சி தோல்வி பெற காரணமாக அமைந்தது)

47) 1857ஆம் ஆண்டு டில்லி அரசராக முடிசூட்டிக் கொண்ட பகதூர்ஷா, ஆங்கிலேயர்களால் எந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டார்?

A) சீனா

B) பர்மா

C) மியான்மர்

D) நேபாளம்

(குறிப்பு – 1857 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தில்லி ஆங்கிலேய துருப்புகளால் கைப்பற்றப்பட்டது. சிறைபிடிக்கப்பட்ட பகதூர்ஷா பர்மாவுக்கு கொண்டுசெல்லப்பட்டார். பின்னர் பர்மாவில் அவர் உயிரிழந்தார்)

48) இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேரடியாக ஆட்சி அதிகாரம் செய்யும் ஆங்கிலேய அரசின் காலணிகளில் ஒன்றாக இந்தியா எப்போது அறிவிக்கப்பட்டது?

A) 1857, டிசம்பர்

B) 1858, நவம்பர்

C) 1857, டிசம்பர்

D) 1858, டிசம்பர்

(குறிப்பு – 1857ஆம் ஆண்டு நிகழ்வுகளை அறிந்து ஆங்கிலேயர்கள் அதிர்ந்தனர். 1858 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசு சட்டம் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்தால் நேரடியாக ஆட்சி அதிகாரம் செலுத்தப்படும் ஆங்கிலேய அரசின் காரணிகளில் ஒன்றாக இந்திய அறிவிக்கப்பட்டது)

49) விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையில் கூறப்பட்டவைகளில் கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

I. அரசு பணிகளில் இந்தியர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

II. பாரம்பரிய நிறுவனங்கள் மற்றும் மதம் தொடர்பான விஷயங்களில் ஆங்கிலேய அரசு தலையிடாது.

III. விரைவில் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்படும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – முக்கியமான பகுதிகள் மற்றும் பொறுப்புகள் வகிப்பதில் இருந்து இந்தியர்கள் விலக்கி வைக்கப்பட்டனர். 1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சியின் போது ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்த சமூகங்களுக்கும் மாற்றினார்கள். இந்திய ராணுவத்தின் கட்டமைப்பும் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன)

50) 1857ஆம் ஆண்டு கிளர்ச்சிக்கு பின்னர் கீழ்க்காணும் குழுக்களில் யாருக்கு ஆங்கிலேய அரசு அதிக பிரதிநிதித்துவமும் முக்கியத்துவமும் கொடுத்தது?

I. ராஜபுத்திரர்கள்

II. சீக்கியர்கள்

III. கூர்க்காக்கள்

IV. பதான்கள்

A) I, II, III மட்டும்

B) I, III, IV மட்டும்

C) II, III, IV மட்டும்

D) எல்லாமே சரி

(குறிப்பு – ராஜபுத்திரர்கள், பிராமணர்கள், வட இந்திய முஸ்லிம்கள் ஆகியோரை விளக்கி வைத்த ஆங்கிலேயர்கள் கூர்க்காக்கள், சீக்கியர்கள், பதான்கள் ஆகிய இந்து அல்லாத குழுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். இவ்வாறு சாதி மதம் மொழி மற்றும் மண்டலம் ஆகிய வேறுபாடுகளை ஆங்கிலேயர்கள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டதை பிரித்தாளும் கொள்கை என்று அறியப்பட்டது)

51) இண்டிகோ கிளர்ச்சி எந்த ஆண்டு தொடங்கியது?

A) 1857ஆம் ஆண்டு

B) 1858ஆம் ஆண்டு

C) 1859ஆம் ஆண்டு

D) 1860ஆம் ஆண்டு

(குறிப்பு – பல ஐரோப்பியர்கள் இந்தியாவில் இந்திய தோட்டக்காரர்கள் ஆக மாறுவதன் மூலம் தங்கள் செல்வத்தை ஈட்ட முயன்றனர். உணவு தானிய பயிர்களுக்கு பதிலாக இண்டிகோ பயிரை பயிரிட விவசாயிகள் வற்புறுத்தப்பட்டனர்)

52) இண்டிகோ கிளர்ச்சி எந்த மாநிலத்தில் துவங்கியது?

A) வங்காளம்

B) பீஹார்

C) மேகாலயா

D) ஜார்கண்ட்

(குறிப்பு – 1859 ஆம் ஆண்டு வங்காளத்தின் மெடிய மாவட்டத்தின் ஒரு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் இன் இண்டிகோ போரிடப் போவதில்லை என மறுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த இயக்கம் இண்டிகோ பயிரிடப்பட்ட வங்காளத்தின் இதர மாவட்டங்களுக்கும் பரவியது.)

53) நீல் தர்ப்பன் (இண்டிகோவின் கண்ணாடி) என்ற தலைப்பில் நாடகத்தை எழுதியவர் யார்?

A) தீனதயாள் உபாத்யாயா

B) தீனபந்து மித்ரா

C) தீனபந்து சத்யதேவ்

D) சத்தியேந்திர பால்

(குறிப்பு – ஆங்கிலேய முகவர்களின் கொடுமைகள் குறித்து கல்கத்தாவில் வாழ்ந்த அப்போதைய இந்திய பத்திரிகையாளரான, தீனபந்து மித்ரா நீல் தர்ப்பன் என்ற ஒரு நாடகத்தை எழுதினார்)

54) வட்டிக்கு பணம் வணங்குவோர்க்கு எதிரான கலவரங்கள் எந்த இடத்தில் வெடித்தது?

A) பீஹார்

B) வங்காளம்

C) பூனா

D) கான்பூர்

(குறிப்பு – 1875 ஆம் ஆண்டு மே மாதத்தில் தக்காணத்தில் வட்டிக்கு பணம் வழங்குவோருக்கு எதிரான கலவரங்கள் பூனா அருகே உள்ள சூபா என்ற கிராமத்தில் முதன்முதலாக வெடித்தது)

55) ஆங்கிலேய ஆட்சி விவசாயிகள் மத்தியில் முகலாயர்கள் காலத்தில் இருந்ததைவிட வேதனை மட்டும் இடர்பாடுகளை கொண்டுவந்தது என்பது கீழ்கண்டவர்களில் யாருடைய கூற்றாகும்?

A) கேத்லீன் கௌ

B) கேத் பின்னி

C) கேத் ஸின்ரா

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – மானிடவியலாளர் கேத்லீன் கௌ கூறும் தகவலின்படி ஆங்கிலேயே ஆட்சி விவசாயிகள் மத்தியில் முகலாயர் காலத்தில் இருந்ததைவிட வேதனை மற்றும் இடர்பாடுகளை கொண்டுவந்தது. விவசாயிகளின் பிரச்சினைகள் பல வகைகளில் பல அளவுகளில் உள்ளூர் கலவரங்களில் தொடங்கி போர் போன்ற நிலவரங்கள் வரை பல மாவட்டங்களில் பரவியது)

56) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – குஜராத்தில் வட்டிக்கு பணம் வழங்கும் ஒரே குறி வைத்து கலவரங்கள் பெரும்பாலும் அரங்கேறின.

கூற்று 2 – ஆங்கிலேய ஆட்சியின் கீழ் விவசாயிகள் நேரடியாக வருவாயை அரசுக்கு செலுத்த நிர்பந்திக்கப்பட்டனர்.

கூற்று 3 – எந்த நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கப்பட்டது அந்த நிலத்தை எடுத்துக் கொண்டு ஏலம் விட்டு கடன் தொகையை எடுத்துக் கொள்ள கடன் வழங்கி அவருக்கு அனுமதி கிடைத்திருந்தது

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) கூற்று 2, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – உழும் வர்க்கத்திடம் இருந்து நிலம் உழாத இடம் கை மாறத் தொடங்கியது, கடன் எனும் மாய வலையில் சிக்கிய விவசாயிகள் நிலுவைத் தொகையை செலுத்த இயலாமல் விடுதலையும் விவசாயத்தையும் கைவிட வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்)

57) கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் ஆங்கில கல்வி பெற்ற இந்தியர்களின் புதிய சமூக வகுப்பினர் மத்தியில் தேசிய அரசியல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.

கூற்று 2 – பல்வேறு பிரச்சாரங்கள் மூலமாக தேசம் தேசியம் மற்றும் பல்வேறு மக்களாட்சியின் உயர்ந்த லட்சியங்கள் பற்றிய கருத்துக்களை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய பணியை இந்திய அறிவாளர்கள் மேற்கொண்டனர்.

கூற்று 3 – குடியுரிமை, நாடு பற்றிய கருத்து, குடியியல், சமூகம் போன்ற விஷயங்களில் நவீன எண்ணங்களை இந்திய அறிவாளர்கள் தெளிவுபடுத்தினர்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) கூற்று 2, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – வட்டார மொழி மற்றும் ஆங்கில அச்சு ஊடகங்களின் வளர்ச்சி இதுபோன்ற கருத்துகளை பரப்புவதில் முக்கிய பங்காற்றியது. எண்ணிக்கையில் அவர்கள் குறைவாக இருந்தாலும் தேசிய அளவிலான வீச்சை கொண்டு அகில இந்தியா முழுவதும் தொடர்புகளை உருவாக்கும் திறன் பெற்றிருந்தனர்)

58) பொருத்துக

I. சென்னைவாசிகள் சங்கம் – a) 1866

II. கிழக்கிந்திய அமைப்பு – b) 1852

III. சென்னை மகாஜன சபை – c) 1870

IV. பூனா சர்வஜனிக் சபை – d) 1884

A) I-b, II-a, III-d, IV-c

B) I-d, II-a, III-d, IV-c

C) I-d, II-c, III-a, IV-b

D) I-b, II-a, III-c, IV-d

(குறிப்பு – இதுபோன்ற பல அரசியல் அமைப்புகளை தொடங்குவதில் இந்திய அறிவாளர்கள் முனைப்பு காட்டினார்கள்.)

59) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தை உருவாக்குவதே தொடக்க கால இந்திய தேசியவாதிகளின் பங்களிப்புகளில் முக்கியமான ஒன்றாக இருந்தது.

II. இந்தியா பொருளாதார ரீதியாக கட்டுப்படுத்தப்பட்டதோடு, பெட்டனின் தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருட்களை அனுப்பும் உறுப்பினராக இந்தியா மாற்றம் பெற்றது.

III. பிரிட்டிஷாரின் மூலதனத்தை முதலீடு செய்யவும், ஆங்கிலேய உற்பத்திப் பொருட்களை கொண்டு சேர்க்கும் ஒரு சந்தையாகவும் இந்தியா உருவானது.

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு தொடர்ந்து வளங்களை பரிமாற்றம் செய்யும் விதமாக காலனி ஆட்சியின் கீழ் பொருளாதாரம் அமைந்தது இது செல்வச் சுரண்டல் என்று அறியப்பட்டது)

60) காலனி ஆட்சியின் பொருளாதாரம் பற்றிய விமர்சனங்களை எடுத்துரைப்பதில் முக்கிய பங்காற்றியவர்கள் யார்?

I. தாதாபாய் நௌரோஜி

II. நீதிபதி ராணடே

III. ரொமேஷ் சந்திர தத்

IV. லாலா லஜபதி ராய்

A) I, II, III மட்டும் சரி

B) I, III, IV மட்டும் சரி

C) II, III, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – இந்தியாவை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அடக்கி ஆள்வது தான் பிரிட்டிஷாரின் வழக்கு அடிப்படையானது என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்து எடுத்துரைத்தனர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் காலனி ஆதிக்கமே முக்கிய தடையாக உள்ளது என்று அவர்கள் முடிவு செய்தனர்).

61) இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

A) 1884ஆம் ஆண்டு

B) 1885ஆம் ஆண்டு

C) 1886ஆம் ஆண்டு

D) 1887ஆம் ஆண்டு

(குறிப்பு – ஒரு அகில இந்திய அமைப்பை உருவாக்க முனைந்து அதன் காரணமாக 1885 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது. பம்பாய், மதராஸ், கல்கத்தா ஆகிய மூன்று மாகாணங்களிலும் அரசியல் ரீதியாக தீவிரம் காட்டிய கல்வி அறிவு பெற்ற இந்தியர்களின் குழுக்கள் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பை உருவாக்க முடிந்தது.)

62) இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவராக இருந்தவர் யார்?

A) சத்தியேந்திர நாத் பானர்ஜி

B) உமேஷ் சந்திர பானர்ஜி

C) உமேஷ் யாதவ் பேனர்ஜி.

D) சுரேந்திரநாத் பானர்ஜி

(குறிப்பு – இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பை உருவாக்க ஆலன் ஆக்டேவியன் ஹும் தமது சேவைகளை வழங்கினார். இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவராக உமேஷ் சந்திர பானர்ஜி (1885ம் ஆண்டு) இருந்தார்.

63) இந்திய தேசிய காங்கிரசின் முதல் அமர்வு எப்போது நடைபெற்றது?

A) டிசம்பர் 25

B) டிசம்பர் 26

C) டிசம்பர் 27

D) டிசம்பர் 28

(குறிப்பு – 1885 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசின் முதல் அமர்வு நடைபெற்றது. முத் தேசிய ஒற்றுமை குறித்த உணர்வுகளை ஒருங்கிணைப்பது காங்கிரசின் ஆரம்பகால முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது)

64) ஆங்கிலேய அரசின் முன் இந்திய தேசிய காங்கிரஸ் வைத்த முக்கிய கோரிக்கைகளில் தவறானது எது?

A) வாகன மற்றும் மத்திய அளவில் சட்டமேலவைகளை உருவாக்குவது.

B) நிர்வாகத்துறையையும் நீதித்துறையையும் இணைப்பது.

C) சட்டமேலவைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது.

D) ஒரே நேரத்தில் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் ஆட்சிப்பணி தேர்வுகளை நடத்துவது.

(குறிப்பு – காவல்துறை சீர்திருத்தங்கள், வனச்சட்டத்தை மறுபரிசீலனை செய்தல், நீதிபதி மூலமாக விசாரணையை விரிவு செய்வது போன்றவைகள் இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய கோரிக்கைகள் ஆகும்.)

65) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. தொடக்க கால இந்திய தேசியவாதிகளின் மிதவாத கோரிக்கைகள் தொடர்பான ஆங்கிலேயர்களின் அணுகுமுறை குறிப்பிடத்தக்க அளவில் மாறவில்லை.

II. தீவிர தேசியவாதிகள் என்று அழைக்கப்பட்ட தலைவர்களின் குழுவால் மிதவாத தேசியவாதிகள் விமர்சிக்கப்பட்டனர்.

III. இந்தியாவில் தொழில்மயமாக்கல் நிகழவேண்டாம் என்று தொடக்க கால இந்திய தேசியவாதிகள் விரும்பினர்.

IV. இந்தியாவில் வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு வறுமை அதிகரிப்பதற்கும் பொருளாதாரச் சுரண்டலை முக்கிய காரணம் என்று தொடக்க கால காங்கிரஸ் தலைவர்கள் நம்பினார்கள்.

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, II, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – சுரண்டல் வாத ஆங்கிலேய கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு தீவிரத்தன்மை கொண்ட நேரடி செயல் திட்டங்கள் தேவை என்று பிரச்சாரம் செய்பவர்களுக்கு வங்கப்பிரிவினை ஒரு உந்துதலாக அமைந்தது)

66) இந்தியாவின் அரசுப் பிரதிநிதியாக கர்சன் பிரபு எந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்?

A) 1899ம் ஆண்டு

B) 1898ம் ஆண்டு

C) 1897ம் ஆண்டு

D) 1896ம் ஆண்டு

(குறிப்பு – 1899 ஆம் ஆண்டு இந்தியாவின் அரசுப் பிரதிநிதியாக (இந்திய வைசிராய்) கர்சன் பிரபு நியமிக்கப்பட்டார். இந்திய அறிவாளர்கள் மூலமாக பஞ்சம் மற்றும் பிளேக் பிரச்சனைகளை கையாள்வதை விடுத்து உள்ளாட்சி அமைப்பு, உயர் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி ஆகியவற்றை குறைத்து மதிப்பிடுவது போன்றவற்றை செய்தார்)

67) வங்கப்பிரிவினை எந்த ஆண்டு நிகழ்ந்தது?

A) 1915ம் ஆண்டு

B) 1905ம் ஆண்டு

C) 1903ம் ஆண்டு

D) 1901ம் ஆண்டு

(குறிப்பு – 1905 ஆம் ஆண்டில் வங்கப் பிரிவினை நிகழ்ந்தது. இந்துக்கள் முஸ்லிம்கள் இடையே பிளவை உருவாக்கி வங்காளத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அரசியல் நடவடிக்கைகளை அடக்க வங்கப் பிரிவினை வகுக்கப்பட்டது)

68) வங்கப் பிரிவினைக்கான நோக்கமாக வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது எது?

A) வங்காளிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வது.

B) முஸ்லிம்களுக்கு அதிக உரிமை கொடுப்பது

C) இந்துக்களுக்கு அதிக உரிமை கொடுப்பது.

D) இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே ஒற்றுமையை உருவாக்குவது.

(குறிப்பு – வங்காளிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதேவங்கப்பிரிவினைக்கான நோக்கம் என்று வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டது. வங்காளத்தை பிரித்து இரண்டு நிர்வாகப் பிரிவுகளின் கீழ் வைத்ததன் மூலம் வங்காள மொழி பேசும் மக்களை ஒரு மொழிச் சிறுபான்மையினர் என்ற தகுதிக்கு கர்சன் பிரபு குறைத்து விட்டார்)

69) வங்கப் பிரிவினை அறிவிக்கப்பட்ட நாள் எது?

A) ஜூலை 19

B) ஜூன் 19

C) ஜூலை 21

D) ஜூன் 21

(குறிப்பு – மத அடிப்படையில் வங்காள மக்களை பிரிக்க நினைத்த பிரிவினை செயலானது அவர்களை பிடிப்பதற்கு பதிலாக ஒன்றிணைத்தது. 1905ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் நாள் வங்கப்பிரிவினை அறிவிக்கப்பட்டது)

70) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. 1905 ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் நாள் வங்கப் பிரிவினை அறிவிக்கப்பட்டது,

II. 1905 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் வங்காளம் அதிகாரபூர்வமாக பிரிவினை ஆனது.

III. பிரிவினையை எதிர்த்து ஆயிரக்கணக்கானவர்கள் கங்கை நதியில் புனித நீராடினர்.

A) I, II மட்டும் சரியானது

B) II, III மட்டும் சரியானது

C) I, III மட்டும் சரியானது

D) எல்லாமே சரியானது

(குறிப்பு – வங்கப் பிரிவினையை தடுக்க தவறிய மித தேசியவாத தலைவர்கள் தங்களுடைய உத்திகள் பற்றி மறு சிந்தனைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். பிரிவினையை எதிர்த்து வந்தே மாதரம் பாடலை பாடியபடி கல்கத்தாவின் சாலைகளில் அணிவகுத்துச் சென்றார்கள்.)

71) வங்காளத்தில் சுதேசி இயக்கத்தின் போது காணப்பட்டவைகளில் கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. அரசியல் சாராத ஆக்கபூர்வ திட்டங்களில் இந்திய தேசிய வாதிகளின் ஒரு பிரிவினர் ஓரளவு பொறுமை மட்டுமே கொண்டிருந்தனர்.

II. மித தேசியவாத தலைவர்களுக்கு புறக்கணிப்பு மற்றும் சுதேசி இயக்கம் இரண்டுமே குறைந்த அளவு முக்கியத்துவம் உடையவையாக இருந்தன.

III. பொதுமக்கள் இயக்கத்திலிருந்து தனிநபர் செயல்பாட்டுக்கு மாற்றம் பெறுவதை குறிப்பதாக இருந்தது.

A) I, II மட்டும் சரியானது

B) II, III மட்டும் சரியானது

C) I, III மட்டும் சரியானது

D) எல்லாமே சரியானது

(குறிப்பு – மிதவாத போக்கு, ஆக்கபூர்வ சுதேசி, தீவிரத் தேசியவாதம், புரட்சிகர தேசியவாதம் போன்ற நான்கு முக்கிய போக்குகள் சுதேசி இயக்கத்தின் போது காணப்பட்டன)

72) 1906-ஆம் ஆண்டின்போது சுதேசி இயக்கம் கொண்டிருந்த அம்சங்களுள் சரியானது எது?

I. அன்னிய பொருட்களை புறக்கணிப்பது

II. அரசு பள்ளிகள் கல்லூரிகள் ஆகியவற்றை புறக்கணிப்பது

III. நீதிமன்றங்கள் பட்டங்கள் மற்றும் அரசு சேவைகளை புறக்கணிப்பது

IV. சுதேசி தொழிற்சாலைகளை மேம்படுத்துவது

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, II, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – பொறுத்துக் கொள்ளும் அளவைத் தாண்டி ஆங்கிலேயர்களின் அடக்கு முறை இருக்குமேயானால் ஆயுதமேந்திய போராட்டத்துக்கு ஆயத்தமாவது எனவும் முடிவு செய்யப்பட்டிருந்தது)

73) கீழ்கண்டவற்றுள் சரியான இணை எது?

A) பஞ்சாப் – லாலா லஜபதி ராய்

B) மகாராஷ்டிரா – பால கங்காதர திலகர்

C) வங்காளம் – பிபின் சந்திர பால்

D) எல்லாமே சரி

(குறிப்பு – சுதேசி காலத்தில் எப்போதும் லால் – பால் – பால் (Lal-Bal-Pal) என்று இம்மூவரும் குறிக்கப்பட்டனர்.)

74) சுதேசி இயக்கத்தின் போது தீவிர தேசியவாதத்தின் இயங்குதளமாக இருந்த இடங்கள் எது?

I. பஞ்சாப்

II. மகாராஷ்டிரா

III. வங்காளம்

IV. மதராஸ்

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, II, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – சுதேசி இயக்கத்தின் போது தீவிர தேசியவாதத்தின் இயங்குதளமாக பஞ்சாப், மஹாராஷ்டிரா, வங்காளம் ஆகியன உருவெடுத்தன)

75) சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கியவர் யார்?

A) வ.உ.சிதம்பரனார்

B) லாலா லஜபதி ராய்

C) சத்தியேந்திர நாத் பால்

D) சுப்ரமணிய பாரதி

(குறிப்பு – வ.உ.சிதம்பரனார் சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கியதை அடுத்து தூத்துக்குடி சுதேசி இயக்கத்தின் முக்கிய தளமாக விளங்கியது)

76) தீவிரவாத தன்மை கொண்ட தலைவர்களின் பொது குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது கீழ்க்கண்டவற்றுள் எது?

A) சுயராஜ்யம்

B) சுதந்திரம்

C) பத்திரிக்கை சுதந்திரம்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – சுயராஜ்ஜியம் அல்லது தன்னாட்சி அடைவதே தீவிரவாத தன்மை கொண்ட தலைவர்களின் பொது குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தன. எனினும் சுயராஜ்யம் என்ற வார்த்தையின் பொருளில் தலைவர்கள் வேறுபட்டனர்)

77) தன்னாட்சி இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

A) 1915ம் ஆண்டு

B) 1916ம் ஆண்டு

C) 1917ம் ஆண்டு

D) 1918ம் ஆண்டு

(குறிப்பு – 1916ஆம் ஆண்டு தன்னாட்சி இயக்கம் (ஹோம் ரூல் லீக் ) தோற்றுவிக்கப்பட்டது. தன்னாட்சி இயக்கத்தின் போது இந்திய தேசிய இயக்கம் புத்துயிரூட்டப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டது)

78) தன்னாட்சி இயக்கத்தை தோற்றுவித்தவர்கள் யார்?

I. லாலா லஜபதி ராய்

II. பால கங்காதர திலகர்

III. அன்னிபெசன்ட் அம்மையார்

IV. பிபின் சந்த்ர பால்

A) I, II, III மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) II, III, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – முதல் உலகப் போரும், இந்தியா அந்தப் போரில் பங்கேற்றதும் தான் தன்னாட்சி இயக்கத்துக்கான பின்னணி ஆகும். பாலகங்காதர திலகரும், அன்னிபெசன்ட் அம்மையாரும் தன்னாட்சி இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களாவர்)

79) இந்திய தேசிய காங்கிரசின் 1916 ஆம் ஆண்டு அமர்வின் முக்கிய மாற்றங்களாக இருந்தவை என்ன?

I. காங்கிரசின் 1916ஆம் அமர்வின் ஒரு காரணியாக ஃபிரோஸ்ஷா மேத்தா, கோகலே ஆகியோரின் மறைவு இருந்தது.

II. காலனித்துவ அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பொதுவான முன்னணியை வைக்க மிததேசியவாதிகளை கட்டாயப்படுத்திய அன்னிபெசன்ட் அவர்களின் அதிகரித்துவரும் புகழும் ஒரு காரணமாக அமைந்தது.

III. 1916ம் ஆண்டு காங்கிரஸ் அமர்வு மிததேசியவாதிகளையும், தீவிர தேசியவாதிகளையும் இணைக்கும் நோக்கமாகவும் இருந்தது.

A) I, II, III மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) II, III, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – மேற்கண்ட காரணங்களுக்காக 1916 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் அமர்வு கூடியது.)

80) 1916ஆம் ஆண்டின் இந்திய தேசிய காங்கிரசின் அமர்வு எங்கு நிகழ்ந்தது?

A) பம்பாய்

B) லக்னோ

C) மதராஸ்

D) கல்கத்தா

(குறிப்பு – இந்திய தேசிய காங்கிரஸ் தனது 1916ஆம் ஆண்டின் அமர்வை லக்னோவில் நடத்தியது)

81) இந்தியாவின் தன்னாட்சி இயக்கம் தனது பெரும்பான்மையான கொள்கைகளை எந்த நாட்டில் இருந்து பெற்றது?

A) அயர்லாந்து

B) ஸ்விட்சர்லாந்து

C) இங்கிலாந்து

D) பின்லாந்து

(குறிப்பு – இந்தியாவின் தன்னாட்சி இயக்கம் தனது பெரும்பான்மையான கொள்கைகளை அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கத்திலிருந்து பெற்றது. 1916ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தைத் துவக்கினார்)

82) தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோள்களுள் சரியானது எது?

I. அரசியலமைப்பு வழிகளை பயன்படுத்தி பிரிட்டிஷ் பேரரசிற்குள் தன்னாட்சியை அடைவது.

II. தன்னாட்சி பகுதி( டொமினியன்) என்ற தகுதியை அடைவது.

III. வன்முறை அல்லாத அரசியல் சாசன வழிமுறைகளை கையாள்வது.

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – ” தன்னாட்சி மூலம் இந்த நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சதைகளை கொண்ட அரசை கொள்ளலாம் என நான் கருதுகிறேன் ” என்று 1915 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அன்னிபெசன்ட் அம்மையார் அறிவித்திருந்தார்)

83) லக்னோ ஒப்பந்தம் எந்த ஆண்டு போடப்பட்டது?

A) 1915ஆம் ஆண்டு

B) 1916ஆம் ஆண்டு

C) 1917ஆம் ஆண்டு

D) 1918ஆம் ஆண்டு

(குறிப்பு – தன்னாட்சி இயக்கமும் அதனையடுத்து மித தேசியவாதிகள் மற்றும் தீவிர தேசியவாதிகளின் மறு இணைப்பு காரணமாக முஸ்லிம்களுடன் புதிய பேச்சுக்கான சாத்தியக்கூறு லக்னோ ஒப்பந்தத்தின் போது ஏற்பட்டது)

84) லக்னோ ஒப்பந்தத்தின் போது இந்தியாவில் விரைவில் தன்னாட்சி வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டவர்கள் யார்?

A) காங்கிரஸ்

B) முஸ்லிம் லீக்

C) இவர்கள் இருவரும்

D) இவர்கள் இருவரும் அல்ல

(குறிப்பு – லக்னோ ஒப்பந்தம் 1916 ஆம் ஆண்டு போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் போது காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் லீக்கும் இந்தியாவில் விரைவில் தன்னாட்சி வேண்டுமென்பதை ஏற்றுக்கொண்டது. இதற்கு பதிலாக முஸ்லிம்களுக்கு தனி தொகுதிகள் வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைமை ஏற்றது)

85) மாண்டேகு- செம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தம் அறிவிக்கப்பட்ட ஆண்டு எது?

A) 1917ம் ஆண்டு

B) 1919ம் ஆண்டு

C) 1920ம் ஆண்டு

D) 1921ம் ஆண்டு

(குறிப்பு – 1919ம் ஆண்டு மாண்டேகு – செம்ஸ்ஃபோர்ட் சீர்த்திருத்தங்களை ஆங்கிலேய அரசு அறிவித்தது. இதன் மூலம் இந்தியா தன்னாட்சி நோக்கி படிப்படியாக முன்னேற உறுதி கூறப்பட்டது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!