MCQ Questions

காலனியத்துக்கு பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு 12th History Lesson 8 Questions in Tamil

12th History Lesson 8 Questions in Tamil

8] காலனியத்துக்கு பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு

1) வங்காளம் மற்றும் பஞ்சாப் மாகாணங்களை பிரித்தபோது நிகழ்ந்தவைகளில் கீழ்க்கண்டவற்றில் எது சரியானது?

கூற்று 1 – இந்துக்கள் கிழக்கு வங்காளத்தில் இருந்து மேற்கு வங்காளத்திற்கும், இஸ்லாமியர்கள் பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து கிழக்கு வங்காளத்தின் இடம்பெயர ஆரம்பித்தனர்.

கூற்று 2 – மேற்கு பஞ்சாப்பில் இருந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் கிழக்கு பஞ்சாபிற்கும், கிழக்கு பஞ்சாபில் இருந்த முஸ்லிம்கள் மேற்கு பஞ்சாபிற்க்கும் குடிபெயர்ந்தனர்.

கூற்று 3 – இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்த கிராமங்கள், அவற்றில் வாழ்ந்த பெரும்பான்மை மதத்தினரை பொருத்துப் பிரிக்கப்பட்டன.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த கிராமங்கள் பாகிஸ்தானுக்கு என பிரிக்கப்பட்டன. இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த கிராமங்கள் இந்தியாவோடு இணைக்கப்பட்டனர். அந்த கிராமங்களில் வாழ்ந்த சிறுபான்மையினரை பொருத்தமட்டில் அதாவது பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களில் வாழ்ந்த இந்துக்களும், இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்களும் சிறுபான்மையினராக வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது)

2) இங்கிலாந்து பிரதமர் கிளமண்ட் அட்லி எந்த நாளில் பிரிட்டிஷ் அரசாங்கம் 1948 ஜூன் 30-க்குள் இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்துவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறும் என்று லண்டனில் தெரிவித்தார்?

A) 1947, பிப்ரவரி 1

B) 1947, பிப்ரவரி 5

C) 1947, பிப்ரவரி 15

D) 1947, பிப்ரவரி 20

(குறிப்பு – இந்தியாவிற்கு சுதந்திரம் அளிப்பதற்கு பிரிட்டன் எடுத்த விரைவான நடவடிக்கைகளின் போது, இந்தியப் பிரிவினை சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இங்கிலாந்து பிரதமர் கிளமண்ட் அட்லி, 1947ம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் நாள் லண்டனில் வெளியிட்ட அறிவிப்பில், பிரிட்டிஷ் அரசாங்கம் 1948 ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதிக்குள் இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்து விட்டு இந்தியாவை விட்டு வெளியேறும் என்று தெரிவித்தார்)

3) வேவல் பிரபுவுக்கு பதிலாக அரச பிரதிநிதியாக(வைசிராயாக) மவுண்ட்பேட்டன் பிரபு நியமிக்கப்பட்ட நாள் எது?

A) 1947, மார்ச் 15

B) 1947, மார்ச் 20

C) 1947, மார்ச் 22

D) 1947, மார்ச் 27

(குறிப்பு – 1947 ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் நாள் வேவல் பிரபுவிற்க்கு பதிலாக, அரசப் பிரதிநிதியாக மவுண்ட்பேட்டன் பிரபு நியமிக்கப்பட்டார். அவரின் நியமன நடவடிக்கை இந்தியாவுக்கு அதிகாரம் மாற்றப்படுவதை துரிதப்படுத்தியது.இந்த நிலையில் முஸ்லிம் லீக் கட்சியின் தலைமை பெரும்பகுதி முஸ்லிம் சமூகத்தின் ஆதரவைத் திரட்டி அதன் மூலம் காங்கிரஸ் கட்சி அனைத்து இந்தியர்களையும் தான் பிரதிநிதிப்படுத்துவதாகக் கோரியதை தகர்க்க முயன்றது)

4) மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவிற்கு 1947, ஆகஸ்ட் 15ஆம் நாள் சுதந்திரம் அளிக்கப்படும் என்று எப்போது அறிவித்தார்?

A) 1947, ஜூன் 1

B) 1947, ஜூன் 3

C) 1947, ஜூன் 5

D) 1947, ஜூன் 7

(குறிப்பு – 1947 ஆம் ஆண்டு ஜூன் மூன்றாம் நாள் மௌண்ட்பேட்டன் பிரபு அட்லி அறிவித்த தேதிக்கு முன்னதாகவே 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். வகுப்புவாத பிரச்சனை, இரு நாடு கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பிரிட்டிஷ் இந்தியாவின் அதிகாரத்தை இந்தியா பாகிஸ்தான் என இரண்டு டொமினியன் அரசாங்கங்களிடம் பகிர்ந்து ஒப்படைப்பதே மவுண்ட்பேட்டன் பிரபுவின் திட்டமாகும்)

5) இந்தியப் பிரிவினையுடன் கூடிய சுதந்திரத்திற்கான மௌண்ட்பேட்டன் திட்டம் எந்த இடத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது?

A) நாக்பூர்

B) மீரட்

C) ஜான்சி

D) லக்னோ

(குறிப்பு – ஏற்கனவே முன்மொழியப்பட் படி வங்காளம் மற்றும் பஞ்சாப்பை பிரிவினை செய்து, பாகிஸ்தானை உருவாக்கும் இந்தியப் பிரிவினையை இறுதியாக காங்கிரஸ் அரசு ஏற்றுக்கொண்டது. 1947 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம்நாள் மீரட்டில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் இந்தியப் பிரிவினையுடன் கூடிய சுதந்திரத்திற்கான திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது)

6) மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட தினம் கீழ்க்கண்டவற்றுள் எது?

A) 1947, ஜனவரி 30

B) 1948, ஜனவரி 20

C) 1948, ஜனவரி 30

D) 1949, ஜனவரி 30

(குறிப்பு – தொடக்கத்தில் பிரிவினையை மிகத்தெளிவாக எதிர்த்த காந்தியடிகள், அதை தவிர்க்க முடியாததாகிவிட்டதை ஏற்றுக்கொண்டார். பஞ்சாபிலும், வங்காளத்திலும் ஏற்பட்ட வன்முறைகளும் அதில் மக்களின் பங்கேற்பும், தன்னையும் காங்கிரசையும் பிரிவினையை தடுப்பதற்கான ஆற்றல் அற்றவர்களாக ஆக்கிவிட்டதாக தெரிவித்தார். துரதிஷ்டவசமாக காலனிய கூட்டாளிகள் உருவாக்கிய வகுப்புவாதமும், பிரிவினையும் புதிதாக பிறந்த குழந்தையான இந்திய தேசத்தை பெரிதும் பாதித்தது. 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் நாள் நிகழ்ந்த மகாத்மா காந்தியடிகளின் படுகொலை இதன் தொடக்கம் ஆகும்)

7) சுதந்திர இந்தியாவின் உருவாக்கத்தின்போது முன்னின்ற சவால்கள் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. பிரிவினையை சமாளித்தல்.

II. பொருளாதார திட்டமிடல் மற்றும் கல்விமுறையை சீரமைத்தல்

III. 500க்கும் மேற்பட்ட சுதேச அரசுகளை இந்தியாவோடு ஒருங்கிணைத்தல்.

IV. மக்களால் பேசப்படும் மொழிகள் அடிப்படையிலான வேறுபாட்டை தீர்த்து வைத்தல்

A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – சுதந்திர இந்தியாவின் முன்நின்ற சவால்கள் பலவாகும். அவற்றுள் பிரிவினையை சமாளித்தல், பொருளாதார திட்டமிடல் மற்றும் கல்வி முறையை சீரமைத்தல், இந்திய விடுதலைப் போராட்டத்தால் கிளர்ந்தெழுந்து உயர்ந்த லட்சியங்களை எதிரொலிக்கும் அரசமைப்பை உருவாக்குதல், 500க்கும் அதிகமான எண்ணிக்கையில் வெவ்வேறு பரப்பளவில் இருந்த சுதேச அரசுகளை இந்தியாவோடு ஒருங்கிணைத்தல், தேசிய அரசின் தேவைகளை பூர்த்தி செய்கிற, மக்களால் பேசப்படும் மொழிகள் அடிப்படையிலான வேறுபாட்டை தீர்த்து வைத்தல் போன்ற நாட்டின் தேவைகள் உள்ளடங்கும்)

8) முஸ்லிம் லீக், இந்து-முஸ்லிம் அடிப்படையில் இந்தியாவை பிரிவினை செய்வதற்கான கோரிக்கையை 1940ஆம் ஆண்டு ____________நடந்த மாநாட்டில் தொடங்கி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

A) நாக்பூரில்

B) லாகூரில்

C) லக்னோவில்

D) பம்பாயில்

(குறிப்பு – முஸ்லிம் லீக் இந்து-முஸ்லிம் அடிப்படையில் இந்தியாவை பிரிவினை செய்வதற்கான கோரிக்கையை,1940 ஆம் ஆண்டு மார்ச் மாதம் லாகூரில் நடந்த மாநாட்டில் தொடங்கி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அந்த கோரிக்கைக்கான வடிவமும், செயலாக்கமும் 1947ஆம் ஆண்டு, ஜூன் மாதம் மூன்றாம் நாள் வெளியிடப்பட்ட மவுண்ட்பேட்டன் திட்டத்தில் இடம் பெற்றது.)

9) இந்திய வரைபடத்தை பிரிவினைக்கேற்றவாறு மாற்றி வரைவதற்கு லண்டனிலிருந்து அனுப்பப்பட்டவர் கீழ்க்கண்டவர்களில் யார்?

A) சர் ஜான் கிளிஃப்

B) சர் சிரில் ராட்க்ளிஃப்

C) சர் ஜான் வில்லியம்

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – மௌண்ட்பேட்டன் பிரபு அதிகார மாற்றத்திற்கான நாளை, ஆகஸ்ட் 15 ஆம் நாள் 1947 என்று அறிவித்ததால், மவுண்ட்பேட்டன் திட்டவெளியீடு, இந்திய விடுதலை ஆகியவற்றுக்கான கால இடைவெளி வெறும் 72 நாட்கள் மட்டுமே இருந்தது. இந்திய வரைபடத்தை பிரிவினைக்கு ஏற்றவாறு மாற்றி வரைவதற்கு லண்டனில் இருந்து அனுப்பப்பட்ட வழக்கறிஞரான சர் சிரில் ராட்க்ளிஃப், இந்தியாவைப் பற்றிய எந்த ஒரு முன் அனுபவம் இல்லாதவராகவும், இந்திய நிலைமை புரியாதவராகவும் இருந்தார்)

10) சர் சிரில் ராட்க்ளிஃப் எப்போது இந்தியா வந்தடைந்தார்?

A) 1947, ஜூலை 2ஆம் நாள்

B) 1947, ஜூலை 4ஆம் நாள்

C) 1947, ஜூலை 6ஆம் நாள்

D) 1947, ஜூலை 8ஆம் நாள்

(குறிப்பு – சர் சிரில் ராட்க்ளிஃப் உருவாக்கிய வரைப்படத்தின் அடிப்படையில் எல்லைகளை வரையறுத்து கொள்ளும் பொறுப்பு, 1947 ஆகஸ்ட் 15 பின் இந்தியா பாகிஸ்தான் என்று இரண்டு அரசமைப்பு நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 1947ஆம் ஆண்டு ஜூலை எட்டாம் நாளில் சர் சிரில் ராட்கிளிஃப் இந்தியா வந்தடைந்தார். பஞ்சாப்-வங்காளம் ஆகிய இரண்டு ஆணையங்களுக்கும் அவர் தலைமை பொறுப்பு வகித்தார்.)

11) சர் சிரில் ராட்க்ளிஃப் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தில் எத்தனை நீதியரசர்கள் இணைந்து பணியாற்றினர்?

A) இரண்டு பேர்

B) நான்கு பேர்

C) ஆறு பேர்

D) எட்டு பேர்

(குறிப்பு – பஞ்சாப் வங்காளம் ஆகிய இரண்டு எல்லை ஆணையங்களுக்கும் அவர் தலைமை பொறுப்பு வகித்தார். அவர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தில், முஸ்லிம் சமூகம் மற்றும் இந்து சமூகத்தை சேர்ந்த தலா இரண்டு நீதியரசர்கள் இணைந்து பணியாற்றினர். இந்து மற்றும் முஸ்லீம் பெரும்பான்மையினர் வாழும் கிராமங்களை 1941ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அடையாளம் கண்டறிய ஆணையத்திற்கு 5 வார கால அவகாசம் மட்டுமே கொடுக்கப்பட்டது)

12) சீக்கிய குருத்வாரா இருந்த கிராமங்கள் இந்திய எல்லைக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இரண்டு ஆணையங்களும் எப்போது வெளியிட்டனர்?

A) 1947, ஆகஸ்ட் 3

B) 1947, ஆகஸ்ட் 6

C) 1947, ஆகஸ்ட் 9

D) 1947, ஆகஸ்ட் 12

(குறிப்பு – சீக்கிய சமூகத்தின் கோரிக்கைகளின் காரணமாக மேற்கு பஞ்சாப்பில் இருந்த கிராமங்களை சேர்ந்த சீக்கியர்களின் மக்கள்தொகையை பொருட்படுத்தாமல், சீக்கிய குருத்வாரா இருந்த கிராமங்கள் இந்திய எல்லைக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, இரண்டு ஆணையங்களும் தங்கள் அறிக்கை மூலம் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் நாள் வெளியிட்டன)

13) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – ராட்கிளிஃப் எல்லைக்கோடு அடிப்படையில் எல்லைகளை வரையறுக்கும் பணியை சுதந்திரம் வழங்கப்பட்ட பின் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மேற்கொள்ளலாம் என்று மௌண்ட்பேட்டென் தீர்மானித்தார்.

கூற்று 2 – புதிய வரைபட விவரம் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 மற்றும் 15 தெரிவிக்கப்பட்டது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – ராட்கிளிஃப் எல்லைக்கோடு அடிப்படையில் எல்லைகளை வரையறுக்கும் பணியை சுதந்திரம் வழங்கப்பட்ட பின் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மேற்கொள்ளலாம் என்று மௌண்ட்பேட்டென் தீர்மானித்தார். நிர்வாகத்தை பொறுத்தமட்டில் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கான நில வரையறையோடு, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் மற்றும் 15ம் நாள் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் இரு நாட்டு மக்களுக்கும் அவர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடும் நாளில் புதிய வரைபட விவரம் தெரிவிக்கப்படவில்லை)

14) மேற்கு பஞ்சாப் பாகிஸ்தானோடு இணையும் என்ற தீர்மானத்தை கீழ்க்காணும் எந்த மாகாண சட்டமன்றம் நிறைவேற்றியது?

A) பஞ்சாப்

B) சென்னை

C) பம்பாய்

D) கொல்கத்தா

(குறிப்பு – ராட்கிளிஃப் அறிவிப்பு பல முரண்பாடுகளை கொண்டிருந்தது. மேற்கு பஞ்சாப் பாகிஸ்தானோடு இணையும் என்ற தீர்மானத்தை பஞ்சாப் மாகாண சட்டமன்றம் நிறைவேற்றியது. பாகிஸ்தானோடு நில தொடர்ச்சியை கொண்டிருந்த மாகாணங்களாக சிந்து, பலுஜிஸ்தான், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகியவையும் இதை பின்பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றின)

15) ராட்க்ளிஃப் அளித்த திட்டத்தின்படி எந்த பகுதியின் 62 ஆயிரம் சதுர மைல்கள் கொண்ட நிலம் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டது?

A) பஞ்சாப்

B) குஜராத்

C) வங்காளம்

D) ஜம்மு காஷ்மீர்

(குறிப்பு – 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம்நாள் ராட்கிளிஃப் அளித்த திட்டத்தின்படி அதுவரையில் பஞ்சாபின் பகுதியாக இருந்து வந்த 62 ஆயிரம் சதுர மைல்கள் கொண்ட நிலம் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டது.இந்த பகுதியின் மொத்த மக்கள் தொகை 1941 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1.58 கோடி ஆகும். அவர்களில் 1.18 கோடி மக்கள் முஸ்லிம்கள் ஆவர். மேற்கு பஞ்சாப்பின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு முஸ்லிமல்லாதோர் ஆவர்)

16) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பழைய வங்காள மாகாணத்தின் இந்திய பகுதி, வங்காளத்தின் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் கால் பகுதி கொண்டிருந்தது

II. சர் ராட்க்ளிஃப் ஆணையம் பழைய வங்காள மாநிலத்தின் 49, 400 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட நிலத்தை பாகிஸ்தானுக்கு வழங்கியது.

III. பழைய வங்காள மாநிலத்தில் 50 சதவீதம் பேர் இந்துக்கள் ஆவர்.

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வாழ்ந்த வங்காள பகுதியில் இன வாரியான மக்கள் தொகையும் சிக்கலாகவே இருந்தது. இந்தியாவின் பகுதியாக இருந்த மேற்குவங்காளம் பரப்பளவில் 28 ஆயிரம் சதுர மைல்கள் கொண்டிருந்தது. பழைய வங்காள மாகாணத்தின் இந்திய பகுதி வங்காளத்தின் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் கால் பகுதி கொண்டிருந்தது.சர் ராட்க்ளிஃப் ஆணையம் பழைய வங்காள மாநிலத்தின் 49,400 சதுரமைல்களும் 3,91,00,000 மக்கள் தொகை கொண்ட பகுதியை பாகிஸ்தானுக்கு வழங்கியது. 1941 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 2,77,00,000பேர் முஸ்லிம்களாவர். வேறுவிதமாக சொல்வதெனில் 29% பேர் இந்துக்களாக இருந்தனர்)

17) பங்களாதேஷ் நாடு எந்த ஆண்டில் உதயமாகியது?

A) 1970ஆம் ஆண்டு

B) 1971ஆம் ஆண்டு

C) 1972ஆம் ஆண்டு

D) 1973ஆம் ஆண்டு

(குறிப்பு – பங்களாதேஷ் நாடு 1971ம் ஆண்டு டிசம்பரில் உருவானது.வங்காளத்தேசம் (Bangladesh) ஒரு தெற்காசிய நாடாகும். இது பண்டைய வங்காளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்தியா, மியான்மர் ஆகியவை இதன் அண்டை நாடுகளாகும். டாக்கா இதன் தலைநகரமாகும். இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைப் போன்று, இந்நாட்டிலும் வங்காள மொழியே பேசப்படுகிறது.

18) வங்காளதேசம் நாடு உருவாக்குவதற்கு முன்னர் இந்தியாவின் கீழ்க்காணும் எந்த இடங்களை உள்ளடக்கியதாக இருந்தது?

I. அருணாச்சலம்பிரதேச மாவட்டங்கள்

II. வங்காள மாகாணத்தின் பிரிக்கப்பட்ட கிழக்குப்பகுதி

III. அஸ்ஸாமின் சில்கட் மாவட்டம்

IV.குல்நா மாவட்டம்

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, III, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – கிழக்கு பாகிஸ்தான் (இதுவே 1971 டிசம்பரில் பங்களாதேஷ்) என்பது வங்காள மாகாணத்தின் பிரிக்கப்பட்ட கிழக்கு பகுதி, அஸ்ஸாமின் சில்கட் மாவட்டம், அப்பகுதியில் இருந்த குல்நா மாவட்டம், சிட்டகாங் குன்று பகுதி ஆகியவற்றை சேர்த்து உருவாக்கப்பட்டது. இந்த செயல் திட்டம் சரியான மாதிரி இல்லாமல் உருவாக்கப்பட்டது என்பதற்கு உதாரணமாக, வங்காளத்தில் முஸ்லிம் மக்கள்தொகை அதிகமாக இருந்த முர்ஷிதாபாத், மால்டா, நாடியா ஆகிய மாவட்டங்கள் இந்தியாவிற்கு வழங்கியதில் இருந்து அறிந்து கொள்ளலாம்)

19) இந்தியாவின் பிரிவினை பற்றி “பிரிவினை” என்னும் தலைப்பில் கவிதை எழுதியவர் கீழ்க்கண்டவர்களில் யார்?

A) ரவீந்திரநாத் தாகூர்

B) W.H.ஆடன்

C) சூர்யகாந்த் திரிபாதி

D) மஹாதேவி வர்மா

(குறிப்பு – விஸ்டன் ஹக் ஆடன் (W. H. Auden) ஒரு ஆங்கில-அமெரிக்க கவிஞர். ஆடனின் கவிதைகள் அதன் பாங்கு மற்றும் தொழில்நுட்ப சாதனைகள் போன்றவற்றிற்காக பரவலாக அறியப்படுகின்றன. அரசியல், ஒழுக்கநெறிகள், அன்பு மற்றும் மதம் ஆகியவற்றுடன் அதன் ஈடுபாடு மற்றும் தொனி, வடிவம் மற்றும் உள்ளடக்கம் ஆகிய அம்சங்களுக்காகவும் இவரது கவிதைகள் அறியப்படுகிறது. ” இறுதி ஊர்வலம் ” பியூனரல் புளூஸ் போன்ற காதல் கவிதைகளுக்காக இவர் பரவலாக அறியப்படுகிறார்.

20) பிரிவினைக்குப் பின்னர் இந்தியாவில் இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை எத்தனை?

A) 40 மில்லியன்

B) 42 மில்லியன்

C) 44 மில்லியன்

D) 46 மில்லியன்

(குறிப்பு – பிரிவினைக்குப் பின் இந்தியாவில் 42 மில்லியன் முஸ்லிம்களும் பாகிஸ்தானில் 20 மில்லியன் முஸ்லிம் அல்லாதோரும்( இந்துக்கள், சிந்தியர்கள் மற்றும் சீக்கியர்கள்) இருந்தனர். இந்து முஸ்லீம் வன்முறைக்கு இடையே ஏற்பட்ட உயிர் கொலைகள், அதிகார பரிமாற்றம் எதிர்பார்த்தது போல் மென்மையாக நடைபெறாது என்பதை உணர்த்தியது)

21) 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிரிவினை வன்முறைகளுக்கு தன் எதிர்ப்பை உணர்த்தும் விதத்தில் மகாத்மா காந்தி எந்த இடத்தில் உண்ணாவிரதம் இருந்தார்?

A) குஜராத்

B) பீகார்

C) ராஜஸ்தான்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – இரண்டு தேசங்கள் உருவான பின்னும் பிரிந்த பகுதிகள், இருபக்கமும் வாழ்ந்த சிறுபான்மை இன மக்களை பயமும், பாதுகாப்பின்மையும் ஆட்கொண்டிருந்தன. இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னின்று வழி நடத்தியவரும், காலனிய ஆட்சியாளர்களால் புறக்கணிக்க இயலாதவருமான காந்தியடிகள், இந்திய சுதந்திர தினமான 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று, பிரிவினை வன்முறைகளுக்கு தன் எதிர்ப்பை உணர்த்தும் விதத்தில் புதுடில்லிக்கு வெகுதொலைவில் உண்ணாவிரதம் இருந்தார்)

22) ஆகஸ்ட் 1947 முதல் நவம்பர் 1947 வரையிலான 4 மாத காலத்தில் எத்தனை மில்லியன் மக்கள் மேற்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர்?

A) 2.5 மில்லியன்

B) 3 மில்லியன்

C) 4 மில்லியன்

D) 4.5 மில்லியன்

(குறிப்பு – பிரிவினை வன்முறைகள் பரவியபோது காவல்துறை வேடிக்கை பார்த்தது. இது இரு தேச சிறுபான்மையினரிடமும் இடம்பெயரும் எண்ணத்தை ஏற்படுத்தியது. ஆகஸ்ட் 1947 முதல் நவம்பர் 1947 வரையிலான நான்கு மாத காலத்தில் 4.5 மில்லியன் மக்கள் மேற்கு பாகிஸ்தானில் இருந்து, இந்தியாவிற்கு குறிப்பாக கிழக்கு பஞ்சாப் நகரங்கள் மற்றும் புது தில்லிக்கு இடம்பெயர்ந்தனர்)

23) 1947 மற்றும் 1948 ஆண்டுகளில் 5 லட்சம் முஸ்லிமல்லாத அகதிகள் பஞ்சாப் மற்றும் டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர் என்று கூறிய வரலாற்று அறிஞர் யார்?

A) ஞானேந்திர பாண்டே

B) டி.டி.கோசாம்பி

C) சட்டோபாத்தியாயா

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – வரலாற்று அறிஞர் ஞான இந்திர பாண்டே கூற்றுப்படி, 1947-48களில் 5 லட்சம் முஸ்லிம் அல்லாத (இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள்) அகதிகள் பஞ்சாப் மற்றும் தில்லிக்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். டெல்லியில் வசித்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அவர்களது வீடுகளிலிருந்து காலி செய்யப்பட்டனர். வன்முறைக் கும்பலின் தாக்குதலில் இருந்து தப்ப செங்கோட்டை மற்றும் புராணஹிலா கோட்டைகளில் இருந்த முகாம்களில் மக்கள் தஞ்சம் புகுந்தனர். அகதி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும், அவற்றில் போதுமான தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லை)

24) பிரிவினையின்போது எல்லையை கடப்பதற்காக நின்ற அகதிகளின் நீண்ட வரிசை எவ்வாறு அழைக்கப்பட்டது?

A) சிஃபிலா

B) கஃபிலா

C) சுஃபிலா

D) இது எதுவும் இல்லை

(குறிப்பு – இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிலும் குடிபெயர்ந்த குடும்பங்கள் விட்டுச் சென்ற சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. எல்லையை கடப்பதற்காக நின்ற அகதிகளின் நீண்ட வரிசை கஃபிலா(Khafila) எனப்பட்டது. நடந்து சென்ற அகதிகள் மாற்று வகுப்பை சார்ந்த வன்முறை கும்பலின் பழிவாங்கலுக்கு இலக்காகினர்.பஞ்சாபின் இருபுறத்திலும் ஓடிய ரயில்களில் பயணம் செய்தோர் கொலைகார கும்பலின் வெறிக்கு பலியாகினர்)

25) ஜவஹர்லால் நேரு மற்றும் லியாகத் அலிகான் ஆகிய இருவரும் கையெழுத்திட்ட தில்லி ஒப்பந்தம் எந்த நாளில் கையெழுத்தானது

A) 1950, ஏப்ரல் 2

B) 1950, ஏப்ரல் 4

C) 1950, ஏப்ரல் 6

D) 1950, ஏப்ரல் 8

(குறிப்பு – ஏப்ரல் 1950இல் கூட இரு நாடுகளின் அரசியல் தலைமைகளும் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்றும், தங்கள் வீடுகளைத் துறந்து வந்த இரு பக்கத்தினரும் அவர்கள் பகுதிகளுக்கு திரும்ப வேண்டும் என்றும் விரும்பினர். 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் நாள் ஜவஹர்லால் நேரு மற்றும் லியாகத் அலிகான் கையெழுத்திட்ட டில்லி ஒப்பந்தம், இருதரப்பிலும் உள்ள சிறுபான்மையினரின் நம்பிக்கையை மீட்டெடுப்பது பற்றி குறிப்பிட்டது)

26) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. டில்லி ஒப்பந்தம் கையெழுத்தானபோதே மேற்கு பஞ்சாப்பில் இருந்து சென்றவர்களை கிழக்கு பஞ்சாபிலும், தில்லியிலும் தங்கவைத்து மறுவாழ்வு அளிப்பதற்கும், தொழில்திறன் பயிற்சி அளிப்பதற்கும், இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வந்தது.

II. பிரிவினையின்போதான வன்முறை ஏற்படுத்திய காயங்கள் பல பதிற்றாண்டுகள் கழிந்தும் ஆறவில்லை. பல்வேறு இலக்கிய படைப்புகள் பிரிவினை அதிர்ச்சியை விளக்கும் சான்றுகளாகத் திகழ்கின்றன.

III. டில்லி ஒப்பந்தம், 1950ஆம் ஆண்டு, ஏப்ரல் 6ஆம் நாள் ஜவாஹர்லால் நேரு மற்றும் லியாகத் அலி கான் ஆகிய இருவரிடையே கையெழுத்தானது

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – ஜவஹர்லால் நேரு, லியாகத் அலிகான் ஆகிய இருவரும் கையெழுத்திட்ட தில்லி ஒப்பந்தம் 1950ஆம் ஆண்டு, ஏப்ரல் 8ஆம் நாள் ஆகும்.நேருவுக்கும், இந்த தேசத்தின் அடிப்படை சட்டத்தை உருவாக்குவதில் முனைந்து இருந்த அரசமைப்பு நிர்ணய சபைக்கும் பிரிவினை பெரும் சவாலாக நின்றது பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசாக முடிவு எடுத்த நிலையில் இந்தியா சமய சார்பற்ற மக்களாட்சிக் குடியரசு அரசமைப்பை உருவாக்கியது.

27) இந்திய அரசமைப்பின் வரைவை இந்தியர்கள் தான் உருவாக்க வேண்டும், பிரிட்டிஷ் பாராளுமன்றம் அல்ல என்ற கோரிக்கை இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக எந்த ஆண்டில் எழுப்பப்பட்டது?

A) 1933 இல்

B) 1934 இல்

C) 1935 இல்

D) 1936 இல்

(குறிப்பு – இந்திய அரசமைப்பின் வரைவை இந்தியர்கள் தான் உருவாக்க வேண்டும், பிரிட்டிஷ் பாராளுமன்றம் அல்ல என்ற கோரிக்கை இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக 1934 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக எழுப்பப்பட்டது. காலனி அரசாங்கம் வெளியிட்ட வெள்ளை அறிக்கையை காங்கிரஸ் புறக்கணித்தது. இந்தியர்களே தங்களுக்கான அரசமைப்பை உருவாக்குவார்கள் என்ற அடிப்படைக் கருத்து 1922 களிலேயே காந்தியடிகளால் முன்வைக்கப்பட்டது.

28) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இந்திய அரசமைப்பின் வரைவை இந்தியர்கள்தான் உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை, 1934-ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக எழுப்பியது.

கூற்று 2 – இந்திய அரசமைப்பின் வரைவை இந்தியர்களை உருவாக்குவார்கள் என்ற அடிப்படைக் கருத்தை 1922 களிலேயே முன்வைத்தவர் ஜவஹர்லால் நேரு ஆவார்.

கூற்று 3 – தன்னாட்சி என்பது பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் இந்தியர்களுக்கு வழங்கப்படும் கொடையாக இல்லாமல், இந்தியர்களால் சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட, இந்தியர்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் பிரதிநிதிகளிடம் இருந்து உருவாக வேண்டும் என்று காந்தியடிகள் கூறினார்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – பிரிவினை என்பது நேருவிற்கும், இந்த தேசத்தின் அடிப்படை சட்டத்தை உருவாக்குவதில் முனைந்திருந்த அரசமைப்பு நிர்ணய சபைக்கும் பெரும் சவாலாக நின்றது. இந்திய அரசமைப்பின் வரைவை இந்தியர்கள் தான் உருவாக்க வேண்டும் என்றும், பிரிட்டிஷ் பாராளுமன்றம் அல்ல என்ற கோரிக்கை இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக 1934இல் அதிகாரப்பூர்வமாக எழுதப்பட்டது. எனினும் இந்தியர்களே தங்களுக்கான அரசமைப்பை உருவாக்குவார்கள் என்னும் அடிப்படைக் கருத்தை 1922 களிலேயே காந்தியடிகள் முன்வைத்திருந்தார்)

29) மாகாண சட்டமன்றங்களுக்கான தேர்தல் எந்த ஆண்டு நடைபெற்றது?

A) 1945 இல்

B) 1946 இல்

C) 1947 இல்

D) 1948 இல்

(குறிப்பு – இந்திய அரசாங்கச் சட்டம் 1935 அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் 1946 ஆம் ஆண்டில் மாகாண சட்டமன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. மாகாண சட்டமன்றங்கள் மத்திய சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுக்க, அது அரசமைப்பு நிர்ணயசபையாக செயல்பட்டது)

30) எந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சொத்துரிமை உரியவருக்கு மட்டுமே வாக்குரிமை என இருந்தது?

A) 1946

B) 1952

C) 1957

D) 1962

(குறிப்பு – இந்திய அரசாங்கச் சட்டம் 1935 அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் 1946 ஆம் ஆண்டில் மாகாண சட்டமன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. மாகாண சட்டமன்றங்கள் மத்திய சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுக்க, அது அரசமைப்பு நிர்ணயசபையாக செயல்பட்டது. 1946 இல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் சொத்துரிமை உரியவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என இருந்தது. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற தத்துவம் நடைமுறைக்கு வந்திருக்கவில்லை. தேர்தல் முடிவுகள் முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளில் முஸ்லிம் லீக் கட்சிக்கும், மற்ற இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் செல்வாக்கு இருந்ததை உணர்த்தின)

31) அரசமைப்பு நிர்ணய சபையில் காங்கிரஸ் எத்தனை இடங்கள் பெற்றிருந்தது?

A) 220 இடங்கள்

B) 222 இடங்கள்

C) 224 இடங்கள்

D) 226 இடங்கள்

(குறிப்பு – முஸ்லிம் லீக் அரசமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்து, தனிநாடு கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. மாகாண சட்ட மன்றங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அரசமைப்பு நிர்ணய சபைக்கான காங்கிரஸ் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தனர். அரசமைப்பு நிர்ணய சபையில் காங்கிரஸ் 224 இடங்கள் பிடித்து ஆதிக்கம் செலுத்திய போதிலும், கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள் குறைந்த எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்தனர்)

32) டாக்டர் பி ஆர் அம்பேத்கர், அரசமைப்பு நிர்ணய சபைக்கு எந்த இடத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்?

A) பம்பாய்

B) கொல்கத்தா

C) பீகார்

D) புது டில்லி

(குறிப்பு – டாக்டர் பி ஆர் அம்பேத்கர் பம்பாயிலிருந்து அரசமைப்பு நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுமாறு பார்த்துக்கொண்ட காங்கிரஸ், அவரை அரசமைப்பு வரைவு குழுவின் தலைவராகவும் தேர்ந்தெடுத்தது.காங்கிரஸ் தலைமை தன் கட்சியின் வல்லுனர்களோடு, புகழ்பெற்ற அரசமைப்பு வழக்கறிஞர்களையும் அரசமைப்பு நிர்ணய சபையில் இடம்பெறச் செய்தது)

33) 1931-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் கூட்டம் எந்த இடத்தில் நடைபெற்றது?

A) லாகூர்

B) கராச்சி

C) குஜராத்

D) மீரட்

(குறிப்பு – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 1931ஆம் ஆண்டு, மார்ச் மாதம் கராச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அடிப்படை உரிமைகள் தீர்மானத்தில் இடம்பெற்ற தன்னாட்சி என்பதன் பொருள் மற்றும் விடுதலைப் போராட்டத்தின் இலக்கியல் (Idealism) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்திய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் அரசமைப்பு நிர்ணய சபையை உருவாக்கியது.)

34) இந்திய அரசமைப்புக்கான குறிக்கோள் தீர்மானத்தை அரசமைப்பு நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தியவர் யார்?

A) டாக்டர் அம்பேத்கர்

B) சர்தார் வல்லபாய் பட்டேல்

C) ஜவஹர்லால் நேரு

D) மௌண்ட்பேட்டன் பிரபு

(குறிப்பு – அரசமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர்கள் உலகின் பல்வேறு அமைப்புகளின் அம்சங்களை கற்றுக் கொள்வதிலும், அவற்றை இந்திய அரசமைப்பு உருவாக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்வதிலும் எவ்வித தயக்கமும் காட்டவில்லை. அதே சமயத்தில் இந்திய அரசமைப்பு உருவாக்கம் என்பது, பிற உலக நாடுகளின் அரசமைப்புகளை பார்த்து அப்படியே எழுதிவிடும் பணி அல்ல, என்பதையும் என்பதிலும் தெளிவாக இருந்தனர். ஜவஹர்லால் நேரு இந்திய அரசமைப்பிற்கான குறிக்கோள் தீர்மானத்தை அரசமைப்பு நிர்ணயசபையில் அறிமுகப்படுத்தினார்)

35) ஜவஹர்லால் நேருவினால், இந்திய அரசின் அரசமைப்புக்கான குறிக்கோள் தீர்மானம் அரசமைப்பு நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் எது?

A) 1946ஆம் ஆண்டு, டிசம்பர் 10

B) 1946ஆம் ஆண்டு, டிசம்பர் 11

C) 1946ஆம் ஆண்டு, டிசம்பர் 12

D) 1946ஆம் ஆண்டு, டிசம்பர் 13

(குறிப்பு – 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 13 அன்று ஜவஹர்லால் நேரு, இந்திய அரசமைப்பிற்கான குறிக்கோள் தீர்மானத்தை அரசமைப்பு நிர்ணயசபையில் அறிமுகப்படுத்தினார். நேரு அறிமுகப்படுத்திய குறிக்கோள் தீர்மானம், இந்திய அரசமைப்பின் உணர்வு மற்றும் உள்ளடக்கத்திற்கு மிகச் சுருக்கமான அறிமுகமாக அமைந்தது. சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த தீர்மானத்தின் முக்கியத்துவத்தை இந்திய அரசமைப்பின் முகப்புரை, அடிப்படை உரிமைகள், அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் ஆகியவற்றில் நாம் பார்த்து புரிந்து கொள்ளலாம்)

36) இந்திய அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது?

A) 1950, டிசம்பர் 7

B) 1950, டிசம்பர் 8

C) 1950, டிசம்பர் 9

D) 1950, டிசம்பர் 10

(குறிப்பு – இந்திய அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் நாள் நடைபெற்றது. ராஜேந்திர பிரசாத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். ஜவஹர்லால் நேரு இந்திய அரசமைப்பு கால குறிக்கோள் தீர்மானத்தை அரசமைப்பு நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தினார்)

37) அரசமைப்பு நிர்ணய சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கீழ்கண்டவருள் யார்?

A) ஜவஹர்லால் நேரு

B) டாக்டர் அம்பேத்கர்

C) ராஜேந்திர பிரசாத்

D) சர்தார் வல்லபாய் பட்டேல்

(குறிப்பு – இந்திய அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் நாள் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ராஜேந்திர பிரசாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் மற்றும் இந்திய காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தவர் ஆவார்.)

38) இந்திய அரசமைப்பு, அரசமைப்பு நிர்ணய சபையால் எந்த நாளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது?

A) நவம்பர் 26

B) டிசம்பர் 26

C) ஜனவரி 25

D) ஜனவரி 30

(குறிப்பு – நேரு அறிமுகப்படுத்திய குறிக்கோள் தீர்மானம், இந்திய அரசமைப்பின் உணர்வு மற்றும் உள்ளடக்கத்திற்கு மிகச் சுருக்கமான அறிமுகமாக அமைந்தது. சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த தீர்மானத்தின் முக்கியத்துவத்தை இந்திய அரசமைப்பின் முகப்புரை, அடிப்படை உரிமைகள், அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் ஆகியவற்றை பார்த்து புரிந்து கொள்ளலாம். இந்திய அரசமைப்பு 1949 ஆம் ஆண்டு, நவம்பர் 26ம் நாளில் அரசமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.)

39) இந்திய அரசமைப்பின் அடிப்படை உரிமைகள் குறிக்கோள் தீர்மானத்தின் எந்த பிரிவில் இருந்து உருவாக்கப்பட்டது?

A) நான்காம் பிரிவில் இருந்து

B) ஐந்தாம் பிரிவில் இருந்து

C) ஆறாம் பிரிவில் இருந்து

D) ஏழாம் பிரிவில் இருந்து

(குறிப்பு – இந்திய அரசமைப்பு இந்தியாவிற்கான ஒரு புதிய விடியலை உருவாக்கியதோடு, இந்திய தொன்மையையும் தொடர்ச்சியையும் நிறுவியது. அடிப்படை உரிமைகள், குறிக்கோள் தீர்மானத்தின் ஐந்தாம் பிரிவிலிருந்து உருவாக்கப்பட்டன. அதே போல் இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி கூட்டத்தில் பட்டியலிடப்பட்ட உரிமைகளும் இதற்கு மூலங்களாய் அமைந்தன. இந்திய அரசமைப்பின் உணர்வு(The Spirit of the Conatitution) சுதந்திரப்போரின் அனுபவத்திலிருந்து பெறப்பட்டதாகும்)

40) ஐக்கிய நாடு சபையால் அனைத்துலக மனித உரிமைகள் பேரறிக்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

A) 1948ஆம் ஆண்டு

B) 1949ஆம் ஆண்டு

C) 1950ஆம் ஆண்டு

D) 1951ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்திய அரசமைப்பின் உணர்வு (The Spirit of the Constitution) சுதந்திரப் போரின் அனுபவத்தில் இருந்து பெறப்பட்டதாகும். அதேபோல் அரசமைப்பின் சட்ட மொழி, குறிக்கோள் தீர்மானத்தில் இருந்தும் அதை விட முக்கியமாக ஐக்கிய நாடுகள் சபையால் 1948ஆம் ஆண்டு டிசம்பர் பத்தாம் நாளில் வெளியிடப்பட்ட, அனைத்துலக மனித உரிமைகள் பேரறிக்கையில் இருந்தும் எடுக்கப்பட்டது. குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளையும், அரசு கொள்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் நம்பிக்கையுடன் உறுதி செய்யும் ஓர் ஆவணமாக இந்திய அரசமைப்பு உருவாக்கப்படுவதற்கு இவை அனைத்தும் அடிப்படை காரணமாக அமைந்தது.)

41) சுதேச அரசுகள் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் பணியின் போது கீழ்காணும் எந்த சுதேச அரசுகள் இணைப்பு ஆவணத்தில்(Instrument of Acession) கையெழுத்திடவில்லை?

I. காஷ்மீர்

II. ஜூனாகத்

III. ஹைதராபாத்

A) I, II மட்டும்

B) I, III மட்டும்

C) II, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – சுதந்திர இந்தியாவிற்காக அரசமைப்பு வரைவுப்பணி தொடங்கியபோது, இந்தியப் பகுதிகள் அல்லது சுதேச அரசுகளை ஒன்றிணைப்பது முக்கியமானதாக இருந்தது. சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் பணி, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாளுக்குள் விரைவாக முடிக்கப்பட்டது.காஷ்மீர், ஜூனாகத், ஹைதராபாத் ஆகியவற்றைத் தவிர மற்ற சுதேச அரசுகள் அனைத்தும் இணைப்புறுதி ஆவணத்தில்(Instrument of Accession) கையெழுத்திட்டு பாதுகாப்பு வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பில் இந்தியாவின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டன)

42) அனைத்திந்திய மாநில மக்கள் மாநாடு கீழ்க்காணும் எந்த ஆண்டுகளில் நடைபெற்றது?

I. டிசம்பர், 1945

II. டிசம்பர் 1946

III. ஏப்ரல், 1947

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) மூன்றும் சரி

(குறிப்பு – இந்தியாவின் ஏதேனும் ஒரு மாகாணத்துடன் சுதேச அரசுகளை ஒருங்கிணைக்கும் பணி எளிதாக செய்து முடிக்கப்பட்டது. டிசம்பர் 1945 மற்றும் ஏப்ரல் 1947ஆகிய மாதங்களில் நடைபெற்ற அனைத்திந்திய மக்கள் மாநில மக்கள் மாநாட்டில், இந்திய அரசமைப்பு நிர்ணய சபையோடு இணைய மறுக்கும் மாநிலங்கள், இந்திய ஒன்றியத்தின் எதிரியாக கருதப்படும் என்ற அச்சுறுத்தலான அறிவிப்பே, பல சுதேச அரசுகள் இணைப்பு ஆவணத்தில் கையெழுத்திட்டு இந்தியாவோடு இணைய போதுமானதாக இருந்தது.)

43) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் பணி 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டது.

கூற்று 2 – இந்திய ஒன்றியத்தோடு இணையும் சுதேச மன்னர்களுக்கு, தாராளமாக மன்னர் மானியங்கள் (Privy Purse to the Princes) வழங்கப்பட்டன.

கூற்று 3 – டிசம்பர் 1945, ஏப்ரல் 1947 ஆகிய ஆண்டுகளில் அனைத்திந்திய மாநில மக்கள் மாநாடு நடைபெற்றது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – சுதந்திர இந்தியாவிற்காக அரசமைப்பு வரைவுப்பணி தொடங்கியபோது, இந்தியப் பகுதிகள் அல்லது சுதேச அரசுகளை ஒன்றிணைப்பது முக்கியமானதாக இருந்தது. சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் பணி, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாளுக்குள் விரைவாக முடிக்கப்பட்டது.காஷ்மீர், ஜூனாகத், ஹைதராபாத் ஆகியவற்றைத் தவிர மற்ற சுதேச அரசுகள் அனைத்தும் இணைப்புறுதி ஆவணத்தில்(Instrument of Accession) கையெழுத்திட்டு பாதுகாப்பு வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பில் இந்தியாவின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டன.இந்திய ஒன்றியத்தோடு இணையும் சுதேச மன்னர்களுக்கு, தாராளமாக மன்னர் மானியங்கள் (Privy Purse to the Princes) வழங்கப்பட்டன.)

44) சுதேச அரசுகளை இந்தியாவோடு இணைக்கும் பணியை திறம்பட செய்து முடித்த அமைச்சர கீழ்கண்டவர்களில் யார்?

A) ஜவஹர்லால் நேரு

B) சர்தார் வல்லபாய் பட்டேல்

C) சர்தார் பல்தேவ் சிங்

D) ரபி அகமது கித்வாய்

(குறிப்பு – சுதேச அரசுகளை இந்தியாவோடு நிறைவாக இணைக்கும் பணியை, அப்போதைய இடைக்கால அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும், மாநில நிர்வாகங்களுக்கான அமைச்சராகவும் இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் திறம்படச் செய்துமுடித்தார். சுதேச அரசுகள் இந்திய ஒன்றியத்தோடு இணைப்பதற்கான உரிய அழுத்தத்தைக் கொடுத்ததில், மக்கள் இயக்கங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. சுதேச அரசுகள் இணைப்பில் முக்கிய பங்கு வகித்த போராட்டங்களும் உண்டு.

45) சுதேச அரசுகளின் இணைப்பின் போது நடத்தப்பட்ட புன்னப்புரா – வயலார் ஆயுதப்போராட்டத்தின்போது திருவாங்கூர் மாநிலத்தின் திவானாக இருந்தவர் யார்?

A) சி.பி.ராமசாமி

B) ஆர்.பி.ராமசாமி

C) ஈ.வே.ராமசாமி

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – சுதேச அரசுகளின் இணைப்பில் முக்கிய பங்கு வகித்த போராட்டங்களாக 3 போராட்டங்களை குறிப்பிடலாம். அவற்றுள் திருவாங்கூர் மாநிலத்தின் பொறுப்பரசாங்கம் வேண்டி, அந்த மாநிலத்தின் திவானாகிய சிபி ராமசாமி எதிர்த்து நடத்தப்பட்ட புன்னப்புரா – வயலார் ஆயுதப்போராட்டம் முக்கியமானதாகும்)

46) சுதேச அரசுகளின் இணைப்பின் போது நடந்த போராட்டங்களுள் அல்லாதது கீழ்க்கண்டவற்றுள் எது?

A) புன்னப்புரா – வயலார் ஆயுத போராட்டம்

B) பிரஜா மண்டல் போராட்டம்

C) மைசூர் மகாராஜாவிற்கு எதிரான போராட்டம்

D) ராஜபுத்திரர்களுக்கு எதிரான போராட்டம்

(குறிப்பு – சுதேச அரசுகளின் இணைப்பில் முக்கிய பங்கு வகித்த போராட்டங்களாக 3 போராட்டங்களை குறிப்பிடலாம். திருவாங்கூர் மாநிலத்தின் பொறுப்பு அரசாங்கம் வேண்டி அந்த மாநிலத்தின் திவானாகிய சி.பி.ராமசாமியை எதிர்த்து நடத்தப்பட்ட புன்னப்புரா-வயலார் ஆயுதப் போராட்டம் முக்கியமானது. இன்னொரு முக்கியமான போராட்டம் பிரஜா மண்டல் மற்றும் ஒரிசாவில் நடந்த பழங்குடியினர் கிளர்ச்சிகள் (நீலகிரி, தெங்கனால் மற்றும் தல்ஸர்) இந்தியாவில் நடந்த இரண்டாவது முக்கிய சுதேச எதிர்ப்பு போராட்டம் ஆகும். மைசூர் மகாராஜாவிற்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் நடத்திய போராட்டங்களும் இந்திய சுதேச அரசுகளின் இணைப்புக்கு முக்கிய பங்காற்றின)

47) இணைப்புறுதி ஆவணம் (Instrument of Accession) கீழ்க்காணும் எந்த சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது?

A) இந்திய அரசாங்கச் சட்டம் 1930

B) இந்திய அரசாங்கச் சட்டம் 1935

C) இந்திய அரசாங்கச் சட்டம் 1940

D) இந்திய அரசாங்கச் சட்டம் 1945

(குறிப்பு – இந்திய அரசாங்கச் சட்டம் 1935 இன் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டபூர்வமான ஆவணம் இணைப்புறுதி ஆவணம் ஆகும். இந்த ஆவணமே பிரிவினையின்போது இந்திய சுதேசஅரசர்கள் இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய ஏதேனும் ஒரு நாட்டுடன் இணைவதற்கான ஒப்பந்தமாகவும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. இந்த ஆவணத்தின் அடிப்படையிலேயே காஷ்மீர், ஹைதராபாத், ஜூனாகத் போன்ற பல சுதேச அரசுகள் இந்திய ஒன்றியத்தோடு இணைக்கப்பட்டன)

48) சுதேச அரசுகளின் இணைப்பின் போது காஷ்மீரின் இந்து அரசராக இருந்தவர் கீழ்க்கண்டவற்றில் யார்?

A) மகாராஜா ஹரிசிங்

B) மகாராஜா வீர்சிங்

C) மகாராஜா ஹரிலால்

D) மகாராஜா ஸ்ரீராம்

(குறிப்பு – ஹைதராபாத் நிஜாம் இந்திய ஆளுகைக்கு கீழ்ப்படிய மறுத்து, அவர் ஐதராபாத் அரசை அரசு என்று அறிவித்தார். ஜுனாகத் அரசர் மக்கள் விருப்பத்திற்கு எதிராக பாகிஸ்தானுடன் சேர விரும்பினார். இதேபோல் காஷ்மீரில் இந்து அரசரான மகாராஜா ஹரிசிங், காஷ்மீர் சுதந்திர அரசாக இருக்கும் என்று அறிவித்த போது, அந்நாட்டு மக்கள் தேசிய மாநாட்டு தலைமையில் ‘காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்’ என்ற போராட்டத்தை அரசருக்கு எதிராக தொடங்கினர்)

49) இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின்னர் பாகிஸ்தானியர்கள் காஷ்மீரை எப்போது தாக்கினர்?

A) செப்டம்பர், 1947

B) அக்டோபர், 1947

C) நவம்பர், 1947

D) டிசம்பர், 1947

(குறிப்பு – 1946 முதலே சர்தார் வல்லபாய் பட்டேல் காஷ்மீர் மகாராஜாவோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்த போதிலும் காஷ்மீர் அரசர் ஹரி சிங் இந்தியாவோடு இணைய மறுத்து வந்தார். எனினும் இந்திய விடுதலைக்கு சில மாதங்களுக்குப் பின்னர் அக்டோபர் 1947ம் ஆண்டு பாகிஸ்தானியர்கள் சிலர் காஷ்மீரை சூறையாடியபோது, மகாராஜா ஹரிசிங் அவர்களால் அந்த நடவடிக்கையை தடுக்க முடியவில்லை. காஷ்மீர் அரசருக்கு உதவுவதற்காக இந்திய ராணுவம் அனுப்படுவதற்கு முன், காஷ்மீர் அரசர் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதில் பட்டேல் உறுதியாக இருந்தார். இவ்வாறு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியானது)

50) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – காலனிய ஆட்சியாளர்கள் இந்திய துணைக் கண்டத்தை நிர்வாக அலகுகளாக, அதாவது இந்திய நிலப்பரப்பு, மொழி, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அமையாத, நிர்வாக வசதிக்காக மட்டுமே பிரிக்கப்பட்ட மாகாணங்களாக விட்டுச் சென்றனர்.

கூற்று 2 – மொழிவாரி மாநில மறுசீரமைப்பு, இந்திய அரசமைப்பு நிர்ணய சபையின் 1947 மற்றும் 1949 இடைப்பட்ட ஆண்டுகளில் எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டது.

கூற்று 3 – அரசமைப்பு நிர்ணய சபை, மொழிவாரி மாநில மறுசீரமைப்பினை பெரும்பணி என்பதற்கான காரணத்தைக் கூறி நிலுவையில் வைத்தது

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவின் உருவாக்கத்தில் முக்கியமான ஒரு அம்சம், மொழிவாரியாக மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆகும்.காலனி ஆட்சியாளர்கள் இந்திய துணைக்கண்டத்தை நிர்வாக அலகுகளாக அதாவது, இந்திய நிலப்பரப்பு, மொழி, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அமையாத, நிர்வாக வசதிக்காக மட்டுமே பிரிக்கப்பட்ட மாகாணங்களாக விட்டுச்சென்றனர்.விடுதலையும், அரசமைப்பு அடிப்படையிலான மக்களாட்சி கருத்தாக்கமும் மக்களை இறையாண்மை உள்ளவர்களாகவும், இந்தியாவை வெறும் நிர்வாக ரீதியாக அணுகாமல் பன்முக கலாச்சாரம் கொண்ட தேசமாக, கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் முழுமையாக அணுகவேண்டும் என்பதை வெளிப்படுத்தின)

51) மொழிவாரி மாநில மறுசீரமைப்பு கொள்கை மூலம் முதன்முதலில் பிரிக்கப்பட்ட மாநிலம் எது?

A) உத்தரப் பிரதேசம்

B) கர்நாடகா

C) ஆந்திர பிரதேசம்

D) தமிழ்நாடு

(குறிப்பு – இந்திய அரசமைப்பு நடைமுறைக்கு வந்தபின் மொழிவாரி மாநில மறுசீரமைப்பு கொள்கை படிப்படியாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. 1956 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசம் உருவாக்குவதில் தொடங்கி, 1966 இல் பஞ்சாப் மாநிலத்தை பஞ்சாபி மொழி பேசும் பஞ்சாப் மாநிலம் மற்றும் அதில் இருந்து பிரிக்கப்பட்ட ஹரியானா மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்கள் என மூன்றாகப் பிரித்ததில் முற்றுப்பெற்றது)

52) மொழி வாரியான மாகாண காங்கிரஸ் குழுக்கள் அமைக்கப்படுவதன் மூலம் மொழி அடையாளத்தின் அடிப்படையில் அமைந்த தேசிய அடையாளம் பாதுகாக்கப்படும், என இந்திய தேசிய காங்கிரஸ் 1920ஆம் ஆண்டு எந்த இடத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது உறுதியளித்தது?

A) நாக்பூர்

B) பம்பாய்

C) கொல்கத்தா

D) சென்னை

(குறிப்பு – 1920 ஆம் ஆண்டு முதலே இந்திய விடுதலை இயக்கத்தோடு மொழிவாரி மாநில கொள்கை கோரிக்கை ஒன்றிணைந்து இருந்தது.இந்திய தேசிய காங்கிரஸ் 1920 ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற கூட்டத்தில், மொழி வாரியான மாகாண காங்கிரஸ் குழுக்கள் அமைக்கப்படுவதன் மூலம் மொழி அடையாளத்தின் அடிப்படையில் அமைந்த தேசிய அடையாளம் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்தது.)

53) நிதி மற்றும் நிர்வாக காரணங்களுக்கு உட்பட்டு பெரும்பான்மை மக்கள் வாழும் இட அடிப்படையில் மாநிலங்களை மொழி வாரியாக அமைக்கவேண்டும் என்று ஜவஹர்லால்நேரு எந்த ஆண்டு கூறினார்?

A) 1918 ஆம் ஆண்டு

B) 1922 ஆம் ஆண்டு

C) 1924 ஆம் ஆண்டு

D) 1928 ஆம் ஆண்டு

(குறிப்பு – 1928 ஆம் ஆண்டு வெளியான நேரு அறிக்கை பிரிவு 86 இல், பின்வருமாறு தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.”நிதி மற்றும் நிர்வாக காரணங்களுக்கு உட்பட்டு பெரும்பான்மை மக்கள் வாழும் இட அடிப்படையில் மாநிலங்களை மொழி வாரியாக அமைப்பதற்கான கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் “என்பதாகும்)

54) கீழ்க்காணும் எந்த ஆண்டு மாகாண மற்றும் மத்திய சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெற்றது?

A) 1943ஆம் ஆண்டு

B) 1944ஆம் ஆண்டு

C) 1945ஆம் ஆண்டு

D) 1946ஆம் ஆண்டு

(குறிப்பு – 1945 ஆம் ஆண்டு நடந்த மாகாண மற்றும் மத்திய சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தலின் போது, இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மொழிவாரி மாகாணங்கள் பற்றிய கருத்தை ஆணித்தரமாக இடம் பெற்று இருந்தது. “காங்கிரஸ் ஒவ்வொரு குழுவின் சுதந்திரத்திற்கும் துணை நிற்பதோடு அந்தக் குழுக்களின் தனிப்பட்ட வாழ்வு, கலாச்சாரம் போன்றவற்றை மேம்படுத்த தேசத்திற்குள் மொழி மற்றும் கலாச்சார அடிப்படையில் மாகாணங்களை அமைக்க துணை செய்யும் என்று குறிப்பிட்டது)

55) ஆந்திரா மாகாணத்திற்கான கோரிக்கையை பட்டாபி சீதாராமையா கீழ்காணும் எந்த நாளில் அரசமைப்பு நிர்ணய சபையின் முன் வைத்தார்?

A) 1946, ஆகஸ்ட் 1

B) 1946, ஆகஸ்ட் 11

C) 1946, ஆகஸ்ட் 21

D) 1946, ஆகஸ்ட் 31

(குறிப்பு – அரசமைப்பு நிர்ணய சபைக்கான தேர்தல் முடிவடைந்து ஒரு மாதத்திற்கு பின்னர், 1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் நாள் பட்டாபி சீதாராமையா ஆந்திரா மாகாணத்திற்கான கோரிக்கையை அரசமைப்பு நிர்ணய சபையில் முன் வைத்தார் மேலும் இந்த முழு பிரச்சனையை முதல் பிரச்சனையாகவும், முக்கிய பிரச்சனையாகவும் எடுத்து அரசமைப்பு நிர்ணய சபை தீர்வு காணவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்)

56) பட்டாபி சீதாராமையா கீழ்க்காணும் எந்த நாளில் நடைபெற்ற மாநாட்டில் தலைமை தாங்கிய போது நிறைவேற்றிய தீர்மானத்தில் மொழிவாரி மாநில மறுசீரமைப்பு கொள்கையை அரசமைப்பு நிர்ணய சபை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்?

A) 1946, டிசம்பர் 2

B) 1946, டிசம்பர் 4

C) 1946, டிசம்பர் 6

D) 1946, டிசம்பர் 8

(குறிப்பு – 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் நாள் ஒரு மாநாட்டிற்கு தலைமை தாங்கிய பட்டாபி சீதாராமையா அவர் தலைமை தாங்கிய போது நிறைவேற்றிய தீர்மானத்தில் மொழிவாரி மாநில மறுசீரமைப்பு கொள்கையை அரசமைப்பு நிர்ணய சபை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார். இந்திய அரசாங்கத்தின் அறிக்கை ஒன்று, புதிய அரசமைப்பில் சிந்து, ஒரிசா மாகாணங்கள் போல ஆந்திராவும் தனி அலகாக குறிப்பிடப்படும் என்று தெரிவித்ததோடு மட்டுமின்றி இந்திய அரசாங்க சட்டம் 1935 இலும் அவ்வாறே இடம்பெற்றது)

57) 1948ஆம் ஆண்டில் மூவர் ஆணையம் அமைக்கப்பட்டபோது அரசமைப்பு நிர்ணய சபை தலைவராக இருந்தவர் கீழ்க்கண்டவர்களில் யார்??

A) ஜவஹர்லால் நேரு

B) இராஜேந்திர பிரசாத்

C) அம்பேத்கர்

D) சர்தார் வல்லபாய் பட்டேல்

(குறிப்பு – இந்திய அரசாங்கத்தின் அறிவிக்கை ஒன்று, புதிய அரசமைப்பில் சிந்து, ஒரிசா மாகாணங்கள் போல ஆந்திராவும் தனி அலகாக குறிப்பிடப்படும் என்று தெரிவித்ததோடு மட்டுமின்றி, இந்திய அரசாங்கச் சட்டம் 1935 யிலும்அவ்வாறு இடம் பெற்றது. ஆனால் அரசமைப்பு வரைவுக்குழு அதற்கான புவியியல் மாகாண எல்லைகள் வகுக்கப்படும் வரை ஆந்திராவை தனி அலகாக குறிப்பிட முடியாது எனக் கருதியது. 1948 ஆம் ஆண்டு அரசமைப்பு நிர்ணய சபைத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் மூவர் ஆணையம் ஒன்றை அமைத்தார்)

58) கீழ்காணும் எந்த நாளில் இராஜேந்திரபிரசாத் அவர்களால் மூவர் ஆணையம் அமைக்கப்பட்டது?

A) 1948, ஜூன் 7

B) 1948, ஜூன் 11

C) 1948, ஜூன் 17

D) 1948,, ஜூன் 23

(குறிப்பு – 1948 ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் நாள் அரசமைப்பு நிர்ணய சபை தலைவர் ராஜேந்திர பிரசாத், மூவர் ஆணையம் ஒன்றை அமைத்தார். மொழிவாரி மாகாணங்கள் ஆணையம் என்று அழைக்கப்பட்ட அது புதிய மொழிவாரி மாகாணங்களாக ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகியவற்றை உருவாக்குவது குறித்து ஆராய்ந்தது)

59) மூவர் ஆணையம் கீழ்க்காணும் எந்த நாளில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது?

A) 1948, டிசம்பர் 2

B) 1948, டிசம்பர் 5

C) 1948, டிசம்பர் 7

D) 1948, டிசம்பர் 10

(குறிப்பு – 1948ம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள், அரசியல் நிர்ணய சபை தலைவரான ராஜேந்திர பிரசாத் அவர்களால் அமைக்கப்பட்ட மூவர் ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த ஆணையத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை, மொழிவாரி மாகாணம் மறுசீரமைப்பு என்னும் கருத்தாக்கத்துக்கு எதிராக காரணங்களைப் பட்டியலிட்டது.முன்மொழியப்பட்ட 4 மாநிலங்களான ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகியவற்றை உருவாக்குவதற்கு எதிராக இந்த ஆணையம் கருத்துரைத்தது.)

60) மூவர் ஆணையம் கீழ்காணும் எந்த மாநிலத்தை புதிய மொழிவாரி மாகாணமாக உருவாக்குவதைப் பற்றி ஆராயவில்லை?

A)ஆந்திரம்

B) தமிழகம்

C) கேரளம்

D) கர்நாடகம்

(குறிப்பு – 1948 ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் நாள் அரசமைப்பு நிர்ணய சபை தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் மூவர் ஆணையம் ஒன்றை அமைத்தார். மொழிவாரி மாகாணங்கள் ஆணையம் என்று அழைக்கப்பட்ட அது, புதிய மொழிவாரி மாகாணங்களாக ஆந்திரம், கேரளம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகியவற்றை உருவாக்குவது குறித்து ஆராய்ந்தது)

61) கீழ்காணும் எந்த இடத்தில் நடைபெற்ற மாநாட்டில் பட்டாபி சீதாராமையா இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?

A) நாக்பூர்

B) ஜெய்ப்பூர்

C) கான்பூர்

D) மிர்பூர்

(குறிப்பு – ஜெய்ப்பூர் மாநாட்டில் பட்டாபி சீதாராமையா இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் மொழிவாரி மாகாண கோரிக்கை மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் காரணமாக மொழிவாரி மாகாணம் கோரிக்கையை ஆராய ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் பட்டாபி சீதாராமையா ஆகிய மூவரையும் கொண்ட ஜேவிபி குழு அமைக்கப்பட்டது)

62) ஜேவிபி குழு தனது அறிக்கையை கீழ்காணும் எந்த நாளில் சமர்ப்பித்தது?

A) 1948, ஏப்ரல் 1

B) 1949, ஏப்ரல் 1

C) 1948, ஏப்ரல் 11

D) 1949, ஏப்ரல் 11

(குறிப்பு – ஜேவிபி குழு தனது அறிக்கையை 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் நாள் சமர்ப்பித்தது. துரதிஷ்டவசமாக இந்தக் குழுவும் மொழிவாரி மாகாண ஆணையத்தின் முடிவை ஆதரித்தது. இந்தக் குழு “மொழிவாரி மாகாணங்கள் குறுகிய பிராந்திய வாதத்தை வலியுறுத்துகின்றன என்றும், அது நாட்டின் மேம்பாட்டிற்கு அச்சுறுத்தலாக உருவாகக் கூடும்” என்றும் தெரிவித்தது)

63) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – ஜேவிபி குழு, ” மொழியானது பிணைக்கும் ஆற்றலை கொண்டிருப்பதோடு பிரிக்கும் ஆற்றலும் உடையது” என்று குறிப்பிட்டது.

கூற்று 2 – மொழிவாரி மாநிலங்கள் குறுகிய பிராந்தியவாதத்தை வலியுறுத்துகின்றன என்றும், அது நாட்டின் மேம்பாட்டிற்கு அச்சுறுத்தலாக உருவாகக் கூடும் என்றும் ஜேவிபி குழு தெரிவித்தது.

கூற்று 3 – ஜேவிபி குழு தனது அறிக்கையில் 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் நாள் சமர்ப்பித்தது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – ஜேவிபி குழு, ” மொழியானது பிணைக்கும் ஆற்றலை கொண்டிருப்பதோடு பிரிக்கும் ஆற்றலும் உடையது” என்று குறிப்பிட்டது.மொழிவாரி மாநிலங்கள் குறுகிய பிராந்தியவாதத்தை வலியுறுத்துகின்றன என்றும், அது நாட்டின் மேம்பாட்டிற்கு அச்சுறுத்தலாக உருவாகக் கூடும் என்றும் ஜேவிபி குழு தெரிவித்தது. 1949 ஆம் ஆண்டு ஜேவிபி குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. தனது அறிக்கையின் முடிவுரையில் மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்பிர்க்கு இது உகந்த நேரம் இல்லை என்று தெரிவித்தது)

64) ஆந்திரா தனி மாநிலமாக பிரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி 1952 ஆம் ஆண்டு சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கியவர் கீழ்கண்டவர்களில் யார்?

A) பிங்காலி வெங்கையா

B) பொட்டி ஸ்ரீராமுலு

C) பட்டாபி சீதாராமையா

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – இந்திய அரசமைப்பை உருவாக்கியவர்கள் மாநில மறுசீரமைப்பு, மொழி அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்று குறுக்காமல் மாநில மறுசீரமைப்பை ஒத்துக்கொள்ளக்கூடிய வேறு காரணங்கள் அடிப்படையிலும் அமைக்கலாம் என பரந்த பார்வை கொண்டிருந்தனர். முதல் பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர் மீண்டும் மொழிவாரி மாநில கருத்தாக்கம் எழுச்சி பெற்றது. ஆந்திரா தனி மாநிலமாக பிரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, 1952ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் நாள் சாகும் வரை உண்ணாவிரதத்தை பொட்டி ஸ்ரீராமுலு தொடங்கினார்)

65) இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் ஒரு மாநிலத்தை நிலத்தின் அடிப்படையில் அதிகரிக்கவும், குறைக்கவும், எல்லைகளை மாற்றி அமைக்க முடியும் என்பதை கூறுகிறது?

A) உறுப்பு 2

B) உறுப்பு 3

C) உறுப்பு 5

D) உறுப்பு 7

(குறிப்பு – இந்திய அரசமைப்பின் உறுப்பு 3 (Article – 3) பின்வருமாறு தெரிவிக்கிறது.அதாவது நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கலாம். ஒரு மாநிலத்திலிருந்து நிலப் பகுதியை பிரித்து அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அல்லது மாநிலங்களின் பகுதிகளை இணைத்து அல்லது ஏதேனும் நிலப்பகுதியை மாநில பகுதிகளோடு இணைத்து புதிய மாநிலத்தை உருவாக்க முடியும். மேலும் எந்த ஒரு மாநிலத்தின் நிலப்பகுதியும் அதிகரிக்கவும் குறைக்கவும் எல்லைகளை மாற்றி அமைக்க முடியும்)

66) மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

A) சர்தார் வல்லபாய் பட்டேல்

B) கே.எம்.பணிக்கர்

C) எச்.என்.குன்ஸ்ரூ

D) பசல் அலி

(குறிப்பு – ஆந்திரா தனி மாநிலமாக பிரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி 1952 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் நாள் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கிய பொட்டி ஸ்ரீராமுலு 1952 ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று இரவு காலமானார். இதன் காரணமாக பசல் அலியை தலைவராகவும், கே.எம்.பணிக்கர், எச்.என்.குன்ஸ்ரூ ஆகியோரை உறுப்பினராகவும் கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது)

67) பசல் அலி தலைமையிலான மாநில மறுசீரமைப்பு ஆணையம் தனது அறிக்கையை கீழ்க்காணும் எந்த ஆண்டில் சமர்ப்பித்தது?

A) 1953ஆம் ஆண்டு

B) 1955ஆம் ஆண்டு

C) 1957ஆம் ஆண்டு

D) 1959ஆம் ஆண்டு

(குறிப்பு – பசல் அலி தலைமையிலான மாநில மறுசீரமைப்பு ஆணையம் தனது அறிக்கையை 1955ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் சமர்ப்பித்தது.பசல் அலியை தலைவராகவும், கே.எம்.பணிக்கர், எச்.என்.குன்ஸ்ரூ ஆகியோரை உறுப்பினராகவும் கொண்டது மாநில மறுசீரமைப்பு ஆணையம் ஆகும்.

68) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பசல் அலி தலைமையிலான மாநில மறுசீரமைப்பு ஆணையம், மதராஸ், கேரளம், கர்நாடகம், ஹைதராபாத், ஆந்திரம், பம்பாய், விதர்பா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஒரிசா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகியவைகளை உள்ளடக்கியதுதான் இந்திய யூனியன் என அறிவித்தது.

II. பசல் அலி தலைமையிலான மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரைகள் நிர்வாக காரணங்கள் மற்றும் மொழிவாரி மாகாணம் கோரிக்கைகள் ஆகியவற்றுக்கு இடையேயான சமாதான நடவடிக்கைகளாக அமைந்தன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – பாசல் அலி (Fazl Ali) இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளுள் ஒருவர் ஆவார். இந்திய விடுதலைக்கு முன்னரும், இந்திய ஆங்கில அரசின் நீதிபதிகளில் ஒருவராகவும் இருந்தார். 1950களில் அசாம், ஒரிசா மாநில ஆளுநராக இருந்தார். அந்த மாநில எல்லைகளை வகுக்க, முக்கியக் காரணமாக இருந்து, எல்லைப் பிணக்குகளைத் தீர்த்தார்.)

69) கீழ்க்காணும் எந்த ஆண்டில் குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்டது?

A) 1960ஆம் ஆண்டு

B) 1961ஆம் ஆண்டு

C) 1962ஆம் ஆண்டு

D) 1963ஆம் ஆண்டு

(குறிப்பு – நேரு ஆட்சி காலத்தில் மொழிவாரி மாநில மறுசீரமைப்பு கொள்கை மாநில மறுசீரமைப்பு சட்டமாக 1956 இல் நிறைவேற்றப்பட்டு உறுதியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது. குஜராத்தி மொழி பேசும் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மே மாதம் 1960 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் இருந்து குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்டது)

70) 1966 ஆம் ஆண்டு பஞ்சாப் மாகாணம் மூன்று மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. அவற்றுள் அல்லாதது கீழ்க்கண்டவற்றுள் எது?

A) பஞ்சாப்

B) ஹரியானா

C) இமாச்சலப்பிரதேசம்

D) உத்தராகண்ட்

(குறிப்பு – பஞ்சாபி சபாவினால் முன்வைக்கப்பட்ட பஞ்சாப் மாநில கோரிக்கை 1966 வரை பிரிவினைவாதமாகபார்க்கப்பட்டு வந்தாலும், 1966 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாகாணம் பஞ்சாப், அரியானா, இமாச்சலபிரதேசம் என மூன்று மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதன் மூலம் 1920 இல் இந்திய தேசிய காங்கிரசால் தொடங்கப்பட்ட மொழிவாரி மாகாண சீரமைப்பு முடிவுக்கு வந்தது)

71) இந்திய வெளியுறவுக் கொள்கையின் முதன்மையான சிற்பி எனக் கருதப்படுபவர் கீழ்க்கண்டவர்களில் யார்?

A) சர்தார் வல்லபாய் பட்டேல்

B) ராஜேந்திர பிரசாத்

C) ஜவஹர்லால் நேரு

D) டாக்டர் அம்பேத்கர்

(குறிப்பு – சுதந்திர இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படை கோட்பாடுகள் இந்தியா விடுதலை அடைவதற்கு குறைந்தது 30 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டன எனலாம்.இந்தக் கோட்பாடு விடுதலைப் போராட்டத்தின் போது படிப்படியாக வளர்ச்சியுற்றது. காலனியம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்ப்பது என்பது இந்த கோட்பாட்டின் அடிநாதமாகும். ஜவஹர்லால் நேருவே இந்திய வெளியுறவுக் கொள்கையின் முதன்மையான சிற்பி ஆவார்)

72) கீழ்க்கண்டவற்றில் எது இந்திய வெளியுறவு கொள்கையின் அடிப்படை கோட்பாடுகள் அல்ல?

A) ஏகாதிபத்திய எதிர்ப்பு

B) இன ஒதுக்கலை எதிர்த்தல்

C) இனவெறியை எதிர்த்தல்

D) வல்லரசு நாடுகளுடன் அணி சேர்தல்

(குறிப்பு – இந்திய வெளியுறவுக் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் பின்வருமாறு, காலனிய எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, இன ஒதுக்கலை எதிர்த்தல், இன வெறியை எதிர்த்தல், வல்லரசு நாடுகளுடன் அணிசேராமை, ஆப்பிரிக்க ஆசிய ஒற்றுமை, பிற நாடுகளை ஆக்கிரமிக்காமல் இருத்தல், பிற நாடுகளின் உள்நாட்டு நிகழ்வுகளில் தலையிடாமல் இருத்தல், ஒரு நாடு மற்றொரு நாட்டின் இறையாண்மை மற்றும் நிலையை மதித்தல், உலக அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல், நாடுகளுக்கு இடையேயான அமைதியை நிலை நிறுத்துவதில் வெற்றிடம் ஏற்படா வண்ணம் இரு நாடுகளும் சமநீதியை பாதுகாத்தல் போன்றவைகளாகும்.)

73) சீனா தன்னை ஜப்பானிய காலனிய விரிவாக்கத்தில் இருந்து விடுவித்துக் கொண்ட ஆண்டு எது?

A) 1948ஆம் ஆண்டு

B) 1949ஆம் ஆண்டு

C) 1950ஆம் ஆண்டு

D) 1951ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்தியா விடுதலை பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப்பின் 1949 ஆம் ஆண்டு சீன ஜப்பானிய காலனியாதிக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. இந்தியா சீனாவுடன் ஒரு நீண்ட எல்லையை கொண்டிருந்ததால், நேரு சீனாவுடனான நட்புறவுக்கு அதிக முக்கியத்துவம் தந்தார்)

74) இந்தியா எந்த ஆண்டு சீன மக்கள் குடியரசை அங்கீகரித்தது?

A) 1950 இல்

B) 1951 இல்

C) 1952 இல்

D) 1953 இல்

(குறிப்பு – சீன மக்கள் குடியரசை 1950-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் நாள் முதன் முதலாக அங்கீகரித்த நாடு இந்தியா ஆகும். காலனி ஆதிக்கத்தால் பெற்ற துன்பம், அதன் விளைவுகளான வறுமை மற்றும் பின்தங்கிய வளர்ச்சி ஆகியவைகளின் காரணமாக இந்தியாவும் சீனாவும் கைகோர்த்து உலகில் ஆசியாவுக்கு ஓர் இடத்தை நிலைநிறுத்த முடியும் என்று நேரு கருதினார். ஐநா பாதுகாப்பு அவையில் கம்யூனிச சீனாவை உறுப்பினராக ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்)

75) 1950ஆம் ஆண்டு திபெத்தை கீழ்காணும் எந்த நாடு ஆக்கிரமித்தது?

A) நேபாளம்

B) மியான்மர்

C) பாகிஸ்தான்

D) சீனா

(குறிப்பு – சீன மக்கள் குடியரசை 1950-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் நாள் முதல் முதலாக அங்கீகரித்த நாடு இந்தியா ஆகும். காலனி ஆதிக்கத்தால் பெற்ற துன்பம் அதன் விளைவுகள் மற்றும் பின்தங்கிய வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக இந்தியாவும் சீனாவும் கைகோர்த்து ஆசியாவில் ஒரு இடத்தை நிலைநிறுத்த வேண்டும் என நேரு விரும்பினார். ஆனால்1950 ஆம் ஆண்டில் சீனா திபெத்தை ஆக்கிரமித்தபோது இந்தியா வருத்தமடைந்தது.இந்தியாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ளவில்லை என இந்தியா கருதியது.)

76) நேரு வகுத்த பஞ்சசீலக் கொள்கைகளில் அல்லாதது எது?

A) இரு நாடுகளும் ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்காமல் இருத்தல்

B) இரு நாடுகளுக்கு இடையே ஆன சமத்துவம் மற்றும் ஒன்றுகொன்று பயன் அடைவதற்கான கூட்டுறவு

C) ஒரு நாடு மற்றொரு நாட்டின் உள் நிகழ்வுகளில் தலையிடாமல் இருத்தல்

D) ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் வணிகம் செய்தல்

(குறிப்பு – பஞ்சசீல கொள்கைகளை ஜவஹர்லால் நேரு வடிவமைத்தார். இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று அவற்றின் நில எல்லை மற்றும் இறையாண்மையை மதித்து நடத்தல், இரு நாடுகளும் ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்காமல் இருத்தல், ஒரு நாடு மற்றொரு நாட்டின் உள்நிகழ்வுகளில் தலையிடாமல் இருத்தல், இரு நாடுகளுக்கு இடையேயான சமத்துவம் மற்றும் ஒன்றுக்கொன்று அடைவதற்கான கூட்டுறவு மற்றும் சமாதான சகவாழ்வு போன்றவை பஞ்சசீல கொள்கைகள் ஆகும்)

77) பாண்டுங் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

A) 1954 இல்

B) 1955 இல்

C) 1956 இல்

D) 1957 இல்

(குறிப்பு – ஏப்ரல் மாதம் 1955 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாண்டுங் மாநாட்டில் சீனாவையும் அதன் தலைவரான சூ-யென்-லாயும் முன்னிலைப்படுத்த நேரு சிறப்பான முயற்சிகள் எடுத்தார். 1954 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனாவிடையே கையெழுத்தான ஒப்பந்தம் சீனாவிற்கு திபெத் மீதிருந்த உரிமையை அங்கீகரித்தது. அத்தோடு இந்திய சீன உறவுக்கான கோட்பாடுகளாக பஞ்சசீலக் கொள்கையை வகுத்தது.)

78) சீனா லடாக்கில் உள்ள கொங்காய் கணவாயில் காவல் இருந்த இந்தியப் படை மீது எந்த ஆண்டு தாக்குதல் நடத்தியது?

A) அக்டோபர், 1958இல்

B) அக்டோபர், 1959இல்

C) அக்டோபர், 1960இல்

D) அக்டோபர், 1961இல்

(குறிப்பு – 1959 ஆம் ஆண்டில் சீன அரசாங்கம் பௌத்தர்களின் கிளர்ச்சியை ஒடுக்கியதால், பௌத்தர்களின் தலைவரான தலாய்லாமா ஆயிரக்கணக்கான அகதிகளுடன் திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இந்தியா தலாய்லாமா-விற்க்கு தஞ்சம் வழங்கியது, சீனாவை வருத்தமடையச் செய்தது. அதன் பின்னர் அக்டோபர் 1959 ஆம் ஆண்டில் லடாக்கில் இருந்த கொங்காய் கணவாயில் காவல் இருந்த இந்தியப்படை மீது சீனா தாக்குதல் நடத்தியது. இதில் 5 இந்திய காவலர்கள் கொல்லப்பட்டனர்.12 பேர் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்)

79) இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போர் எந்த ஆண்டு நிகழ்ந்தது?

A) 1962 இல்

B) 1963 இல்

C) 1964 இல்

D) 1965 இல்

(குறிப்பு – 1960ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சூ-யென்-லாய் டெல்லிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட போதிலும் இந்திய சீன உறவில் போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை. 1962 இந்திய சீன போர் ஏற்பட்டது. 1962 செப்டம்பர் எட்டாம் நாள் சீனப் படைகள் தக்லா மலைப்பகுதியில் தாக்குதல் நடத்தின.இதன் விளைவாக இந்தியா சீனா ஒரு இணைந்து ஆசிய மண்டலத்தை உருவாக்கும் கனவு தகர்ந்து போனது)

80) 1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லியில் ஆசிய உறவுக்கான மாநாட்டை ஏற்பாடு செய்தவர் யார்?

A) மகாத்மா காந்தி

B) சுபாஷ் சந்திர போஸ்

C) ஜவஹர்லால் நேரு

D) டாக்டர் அம்பேத்கர்

(குறிப்பு – உலகுக்கான இந்தியாவின் பங்களிப்பு இந்திய சீன உறவு மற்றும் பஞ்சசீல கொள்கைகளுடன் மட்டும் நிறைவடையவில்லை. வல்லரசு நாடுகளுடன் கூட்டு சேராத அணிசேராமை என்ற கருத்தாக்கம் வலுப்பெறவும் பாண்டுங் மாநாடு உதவியது. மார்ச் 1947ஆம் ஆண்டில் டெல்லியில் நேரு ஏற்பாடு செய்த ஆசிய உறவுக்கான மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. ஆசிய நாடுகளின் விடுதலை மற்றும் உலகில் ஆசியாவின் நிலையை உறுதிசெய்தல் என்பதே மாநாட்டின் மையக் கருத்தாகும்)

81) ஆசிய உறவுக்கான மாநாடு 1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எந்த இடத்தில் நடைபெற்றது?

A) இந்தியா

B) சீனா

C) இந்தினேஷியா

D) நேபாளம்

(குறிப்பு – மார்ச் 1947ஆம் ஆண்டில் டெல்லியில் நேரு ஏற்பாடு செய்த ஆசிய உறவுக்கான மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. ஆசிய நாடுகளின் விடுதலை மற்றும் உலகில் ஆசியாவின் நிலையை உறுதிசெய்தல் என்பதே மாநாட்டின் மையக் கருத்தாகும். இத்தகைய மாநாடு மீண்டும் ஒருமுறை டிசம்பர் 1948 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் மறுகாலனியாக்கத்தை உட்படுத்த விரும்பிய டச்சுக்காரர்களுக்கு பதில் கூறும் வகையில் நடத்தப்பட்டது. காலனி ஆதிக்க நீக்க முயற்சிகள் 1954 ஆம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற ஆசிய தலைவர்கள் மாநாட்டில் மேலும் முன்னெடுத்துச் செல்லப்பட்டது)

82) 1961 ஆம் ஆண்டில் அணுசக்தி ஆயுதக் குறைப்பு மற்றும் சமாதானத்திற்காக அழைப்பு விடுத்தவர்கள் அல்லாதவர் கீழ்க்கண்டவர்களில் யார்?

A) இந்தியாவின் ஜவஹர்லால் நேரு

B) எகிப்தின் நாசர்

C) யூகோஸ்லாவியாவின் டிட்டோ

D) சீனாவின் சூ-யென்-லாய்

(குறிப்பு – சுதந்திர இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் சிற்பியான ஜவஹர்லால் நேரு, எகிப்து அதிபர் நாசர் மற்றும் யூகோஸ்லாவியாவின் டிட்டோ ஆகியோருடன் இணைந்து 1961ம் ஆண்டில், அணுசக்தி ஆயுதக் குறைப்பு மற்றும் சமாதானத்திற்காக அழைப்பு விடுத்தார். அணிசேராமையின் முக்கியத்துவம் மற்றும் உலகத்திற்கு அதன் தேவை குறித்து நேரு குறிப்பிட்டார்.)

83) பொருத்துக

I. ஜேவிபி குழு அறிக்கை – a) 1947, ஜூன் 3

II. பசல் அலி குழு அறிக்கை – b) 1949, ஏப்ரல் 1

III. நேரு தீர்மானம் – c) 1955, அக்டோபர்

IV. மௌண்பேட்டன் அறிக்கை – d) 1946, டிசம்பர் 13

A) I-b, II-c, III-d, IV-a

B) I-b, II-a, III-d, IV-c

C) I-d, II-a, III-b, IV-c

D) I-c, II-a, III-b, IV-d

(குறிப்பு – 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 13 அன்று ஜவஹர்லால் நேரு இந்திய அரசமைப்புக்கான குறிக்கோள் தீர்மானத்தை அரசமைப்பு நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தினார்.ஜேவிபி குழு தனது அறிக்கையை 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் நாள் சமர்ப்பித்தது. பசல் அலி தலைமையிலான ஆணையம் தனது அறிக்கையை அக்டோபர் மாதம் 1955 ஆம் ஆண்டு சமர்ப்பித்தது. 1947 ஆம் ஆண்டு ஜூன் மூன்றாம் நாள் மவுண்ட்பேட்டன் திட்டம் வெளியிடப்பட்டது.)

84) மாநிலங்கள் உருவான ஆண்டினை பொருத்துக

I. ஆந்திர பிரதேசம் – a) 2000ஆம் ஆண்டு

II. ஹரியானா – b) 1987ஆம் ஆண்டு

III. சத்தீஸ்கர் – c) 1966ஆம் ஆண்டு

IV. கோவா – d) 1956ஆம் ஆண்டு

A) I-d, II-c, III-a, IV-b

B) I-b, II-a, III-c, IV-d

C) I-c, II-b, III-a, IV-d

D) I-b, II-a, III-c, IV-d

(குறிப்பு – அதே ஆண்டில் பாசல் அலி என்பவரைத் தலைவராகவும் பணிக்கர், குன்சுரு போன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரைகளின் படி 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இதே அடிப்படையில் மகாராஷ்டிராவில் இருந்து குஜராத் (1960) பிரிக்கப்பட்டது.1963ல் நாகாலாந்து, 1966ல் அரியானா, 1971ல் இமாச்சலப் பிரதேசம், 1972ல் திரிபுரா, மேகலா மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்கள் உருவானது.)

85) பொருத்துக

I. ராட்கிளிஃப் – a) ஜேவிபி குழு

II. ஜவஹர்லால் நேரு – b) பசல் அலி குழு

III. எச்.என்.குன்ஸ்ரூ – c) எல்லை வரையறை

IV. வல்லபாய் பட்டேல் – d) பஞ்சசீல கொள்கை

A) I-c, II-d, III-b, IV-a

B) I-b, II-a, III-d, IV-c

C) I-c, II-b, III-d, IV-a

D) I-a, II-d, III-c, IV-b

(குறிப்பு – உலக அமைதியையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்காக ஐநா சாசனத்தின் 10 அம்ச கோட்பாடுகளை உள்ளடக்கிய பாண்டுங் பேரறிக்கை கீழ்கண்டவைகளை கொண்டிருந்தது. அடிப்படை மனித உரிமைகள் மற்றும் ஐநா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஆகியவற்றை மதித்து நடத்தல் அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் எல்லை ஒருமைப்பாட்டிற்கு மரியாதை அளித்தல், அனைத்து இனங்களின் சமத்துவத்தையும் பெரிய மற்றும் சிறிய அளவிலான அனைத்து நாடுகளின் சமத்துவத்தையும் அங்கீகரித்தல், மற்றொரு நாட்டின் உள்நிகழ்வுகளில் தலையீடு அல்லது தலையீடுகளில் இருந்து விலகுதல் போன்றவைகள் ஆகும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!