Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Book Back Questions 8th Social Science Lesson 3

8th Social Science Lesson 3

3] கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது?

(அ) மகல்வாரி முறை

(ஆ) இரயத்துவாரி முறை

(இ) ஜமீன்தாரி முறை

(ஈ) இவற்றில் எதுவுமில்லை

2. எந்த கவர்னர்-ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?

(அ) ஹேஸ்டிங்ஸ் பிரபு

(ஆ) காரன்வாலிஸ் பிரபு

(இ) வெல்லெஸ்லி பிரபு

(ஈ) மிண்டோ பிரபு

3. மகல்வாரி முறையில் “மகல்” என்றால் என்ன?

(அ) வீடு

(ஆ) நிலம்

(இ) கிராமம்

(ஈ) அரண்மனை

4. மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்து கொள்ளப்பட்டது?

(அ) மகாராஷ்டிரா

(ஆ) மதராஸ்

(இ) வங்காளம்

(ஈ) பஞ்சாப்

5. கீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

(அ) ஹேஸ்டிங்ஸ் பிரபு

(ஆ) காரன்வாலிஸ் பிரபு

(இ) வெல்லெஸ்லி பிரபு

(ஈ) வில்லியம் பெண்டிங் பிரபு

6. ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தபடாத பகுதி எது?

(அ) பம்பாய்

(ஆ) மதராஸ்

(இ) வங்காளம்

(ஈ) இவற்றில் எதுவுமில்லை

7. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது?

(அ) மகாத்மா காந்தி

(ஆ) கேசப் சந்திர ராய்

(இ) திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்

(ஈ) சர்தார் வல்லபாய் பட்டேல்

8. பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?

(அ) சர்தார் வல்லபாய் பட்டேல்

(ஆ) மகாத்மா காந்தி

(இ) திகம்பர் பிஸ்வாஸ்

(ஈ) கேசப் சந்திர ராய்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ___________ என்பது ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட முறையாகும்.

2. மகல்வாரி முறை ___________ என்பவரின் சிந்தனையில் உதித்த திட்டம் ஆகும்.

3. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி ____________ ல் நடைபெற்றது.

4. மாப்ளா கலகம் ___________ ல் நடைபெற்றது.

5. “சம்பரான் விவசாயச் சட்டம்” நிறைவேற்றப்பட்ட ஆண்டு ____________

பொருத்துக:

1. நிரந்தர நிலவரி திட்டம் – மதராஸ்

2. மகல்வாரி முறை – இண்டிகோ விவசாயிகளின் துயரம்

3. இரயத்துவாரி முறை – வடமேற்கு மாகாணம்

4. நீல் தர்பன் – வங்காளம்

5. சந்தால் கலகம் – முதல் விவசாயிகள் கிளர்ச்சி

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. வாரன் ஹேஸ்டிங்ஸ் ஐந்தாண்டு நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

2. இரயத்துவாரி முறை, தாமஸ் மன்றோவால் அறிமுகப்படுத்தப்பட்டது.

3. குஜராத்தின் யூசுப்ஷாகி என்ற பர்கானாவில் பாப்னா கலகம் ஏற்பட்டது.

4. “பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம்” 1918இல் நிறைவேற்றப்பட்டது.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ஜமீன்தாரி முறைப் பற்றிய தவறான கூற்றாகும்.

(அ) இந்த முறை 1793இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

(ஆ) ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர் ஆவர்.

(இ) விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.

(ஈ) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 19% நிலப்பரப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

2. கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் நடைபெற்ற விவசாய புரட்சி பற்றிய சரியான கூற்று எது?

(அ) சந்தால் கலகம் வங்காளத்தில் நடைபெற்றது.

(ஆ) நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது

(இ) தக்காண கலகம் 1873இல் பூனாவில் உள்ள கிராமம் ஒன்றில் துவங்கியது.

(ஈ) மாப்ளா கலகம் தமிழகத்தில் நடைபெற்றது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. ஜமீன்தாரி முறை 2. காரன்வாலிஸ் பிரபு 3. கிராமம் 4. பஞ்சாப்

5. வில்லியம் பெண்டிங் பிரபு 6. வங்காளம்

7. திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ் 8. சர்தார் வல்லாபாய் படேல்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. மகல்வாரி 2. ஹோல்ட் மெகன்சி 3. (1859)

4. ஆகஸ்ட் 1921 5. மே 1918

பொருத்துக: (விடைகள்)

1. நிரந்தர நிலவரி திட்டம் – வங்காளம்

2. மகல்வாரி முறை – வடமேற்கு மாகாணம்

3. இரயத்துவாரி முறை – மதராஸ்

4. நீல் தர்பன் – இண்டிகோ விவசாயிகளின் துயரம்

5. சந்தால் கலகம் – முதல் விவசாயிகள் கிளர்ச்சி

சரியா தவறா எனக் குறிப்பிடுக: (விடைகள்)

1. சரி

2. சரி

3. தவறு

சரியான விடை: வங்காளத்தின் யூசுப்ஷாகி என்ற பர்கானாவில் பாப்னா கலகம் ஏற்பட்டது.

4. தவறு

சரியான விடை: “பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம்” 1900 இல் நிறைவேற்றப்பட்டது.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.

2. நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!