Book Back QuestionsTnpsc

குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை Book Back Questions 6th Social Science Lesson 11

6th Social Science Lesson 11

11] குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

“கணா” என்னும் சொல் “சரிசமமான சமூக அந்தஸ்தைக் கொண்ட மக்களை”க் குறிக்கும். ”சங்கா” என்றால் “மன்றம்” என்று பொருள். கண சங்கங்கள் சிறிய நிலப்பகுதியில் மேட்டுக்குடி மக்களைக் கொண்ட குழுவால் ஆளப்பட்டது. கண சங்கங்கள் சமத்துவ மரபுகளைப் பின்பற்றின.

“முடியாட்சி” அரசு என்பது ஒரு நிலப்பகுதியை அரசனோ அல்லது அரசியோ ஆள்வதாகும். முடியாட்சி முறை அரசில் ஒரு குடும்பம் நீண்ட காலம் ஆட்சி செய்யும் போது அது அரச வம்சமாக மாறுகிறது. இந்த அரசுகள் வைதீக வேத மரபுகளைப் பின்பற்றின.

16 மகாஜனபதங்கள்: அங்கம், மகதம், வஜ்ஜி, காசி, மல்லம், குரு, கோசலம், அவந்தி, சேதி, வத்சம், பாஞ்சாலம், மத்சயம், சூரசேனம், அஸ்மகம், காந்தாரம் மற்றும் காம்போஜம்.

நாளந்த-யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னம்: நாளந்தா பண்டைய மகத நாட்டில் இருந்த பௌத்த மடாலயம் ஆகம். குப்தர்களின் காலத்தில் அது மிகப் புகழ் பெற்ற கல்வி மையமாகத் திகழ்ந்தது. நாளந்தா என்னும் சமஸ்கிருதச் சொல் நா+அலம்+தா என்ற மூன்று சமஸ்கிருத சொற்களின் இணைப்பில் உருவானது. இதன் பொருள் “வற்றாத அறிவை அளிப்பவர்” என்பதாகும்.

மெகஸ்தனிஸ்: கிரேக்க ஆட்சியாளர் செலுக்கஸ் நிகேட்டரின் தூதுவராக, சந்திரகுப்த மௌரிய அரசவையில் இருந்தவர். பதினான்கு ஆண்டுகள் இந்தியாவில் இருந்தார். அவர் எழுதிய நூலின் பெயர் இண்டிகா. மெரியப் பேரரசைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள இந்நூல் ஒரு முக்கியச் சான்றாகும்.

பாடலிபுத்திரத்தின் பிரம்மாண்டம்: மௌரியப் பேரரசின் மாபெரும் தலைநகரான பாடலிபுத்திர நகருக்கு 64 நுழைவு வாயில்களும் 570 கண்காணிப்பு கோபுரங்களும் இருந்தன.

“அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்று வரை ஒளிர்கிறார்” – H. G. வெல்ஸ் (வரலாற்றறிஞர்).

சிங்கமுகத் தூண்: சாரநாத்திலுள்ள அசோகருடைய தூணின் சிகரப் பகுதியில் அமைந்துள்ள சிங்க உருவங்கள் இந்திய தேசிய சின்னமாகவும், வட்ட வடிவ அடிப்பகுதியில் இடம் பெற்றுள்ள சக்கரம் இந்தியாவின் தேசியக் கொடியின் மையச் சக்கரமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அசோகர் கல்வெட்டுகளில் எழுத்து முறை: சாஞ்சி – பிராமி; காந்தகார் – கிரேக்கம் மற்றும் அராமிக்; வடமேற்குப் பகுதிகள் – கரோஸ்தி.

பேராணை: அரசரால் அல்லது உயர் பதவியில் இருப்பவரால் வெளியிடப்பட்ட ஆணை அல்லது பிரகடனம் ஆகும்.

ருத்ரதாமனின் ஜீனாகத்/கிர்னார் கல்வெட்டு சுதர்சனா ஏரி எனும் நீர்நிலை உருவாக்கப்பட்டதைப் பதிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் சந்திரகுப்த மௌரியரின் காலத்தில் தொடங்கப்பட்டது. அசோகரின் காலத்தில் பணிகள் நிறைவு பெற்றன.

முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்: நறுமணப் பொருள்கள், முத்துக்கள், வைரங்கள், பருத்தி இழை துணி, தந்தத்திலான பொருட்கள், சங்குகள், சிப்பிகள்.

முக்கிய இறக்குமதிப் பொருட்கள்: குதிரைகள், தங்கம், கண்ணாடிப் பொருட்கள், பட்டு (லினன்).

யக்ஷன் என்பது நீர், வளம், மரங்கள், காடுகள், காட்டுச் சூழல் ஆகியவற்றோடு தொடர்புடைய கடவுள் ஆவார். யக்ஷி என்பது யக்ஷாவின் பெண் வடிவமாகும்.

பண்டைய பெயர் மற்றும் தற்போதைய பெயர்: ராஜகிரகம் – ராஜ்கிர், பாடலிபுத்திரம் – பாட்னா, கலிங்கா – ஒடிசா.

உலகம் அந்நாளில்: சீனப்பெருஞ்சுவர்: இது பழங்காலத்தில் கட்டப்பட்ட தொடர்ச்சியான பல கோட்டைச் சுவராகும். குன்-சி-ஹங் என்னும் பேரரசர் தனது பேரரசின் வட எல்லையை பாதுகாப்பதற்காக கி. மு. (பொ. ஆ. மு) மூன்றாம் நூற்றாண்டில் இந்தச் சுவர்களை இணைத்தார்.

ஒலிம்பியாவின் ஜியஸ் (zeus) கோயில்: கிரிஸ்நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் கி. மு. (பொ. ஆ. மு) ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் ஜியஸ் என்ற கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?

(அ) அங்கம்

(ஆ) மகதம்

(இ) கோசலம்

(ஈ) வஜ்ஜி

2. கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?

(அ) அஜாதசத்ரு

(ஆ) பிந்துசாரா

(இ) பத்மநாப நந்தா

(ஈ) பிரிகத்ரதா

3. கீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?

(அ) அர்த்த சாஸ்திரம்

(ஆ) இண்டிகா

(இ) முத்ராராட்சஷம்

(ஈ) இவை அனைத்தும்

4. சந்திர குப்த மௌரியர் அறியணையைத் துறந்து __________ என்னும் சமணத் துறவியோடு சரவணபெலகோலாவுக்குச் சென்றார்.

(அ) பத்ரபாகு

(ஆ) ஸ்துலபாகு

(இ) பார்ஸவநாதா

(ஈ) ரிஷபநாதா

5. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் ___________

(அ) டாலமி

(ஆ) கௌடில்யர்

(இ) ஜெர்சக்ஸ்

(ஈ) மெகஸ்தனிஸ்

6. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?

(அ) சந்திர குப்த மௌரியர்

(ஆ) அசோகர்

(இ) பிரிகத்ரதா

(ஈ) பிந்துசாரர்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: அசோகர் இந்தியாவின் மாபெரும் பேரரசர் என கருதப்படுகிறார்.

காரணம்: தர்மத்தின் கொள்கையின்படி அவர் ஆட்சி புரிந்தார்.

(அ) கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்

(ஆ) கூற்றும் காரணமும் உண்மையானவை, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

2. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளின் எது/எவை சரி:

கூற்று 1: ஒட்டுமொத்த இந்தியாவை ஒரே ஆட்சியின் கீழ் இணைந்த முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர் ஆவார்.

கூற்று 2: மௌரியரின் நிர்வாகம் பற்றிய செய்திகளை அர்த்த சாஸ்திரம் வழங்குகிறது.

(அ) 1 மட்டும்

(ஆ) 2 மட்டும்

(இ) 1, 2 ஆகிய இரண்டும்

(ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை

3. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக் கவனமாக கவனி. அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிடி.

1. மகதத்தின் முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர்.

2. ராஜகிரிகம் மகதத்தின் தலைநகராய் இருந்தது.

(அ) 1 மட்டும்

(ஆ) 2 மட்டும்

(இ) 1 மற்றும் 2

(ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை

4. கீழ்க்காண்பனவற்றைக் காலக்கோட்டின்படி வரிசைப்படுத்தவும்.

(அ) நந்தா சிசுநாகா ஹரியங்கா மௌரியா

(ஆ) நந்தா சிசுநாகா மௌரியா ஹரியங்கா

(இ) ஹரியங்கா சிசுநாகா நந்தா மௌரியா

(ஈ) சிசுநாகா மௌரியா நந்தா ஹரியங்கா

5. கீழ்க்கண்டவைகளில் எது மகதப் பேரரசின் எழுச்சிக்குக் காரணமாயிற்று

1. முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம்

2. அடர்ந்த காடுகள் மரங்களையும், யானைகளையும் வழங்கின

3. கடலின் மீதான ஆதிக்கம்

4. வளமான இரும்புத் தாது கிடைத்தமையால்

(அ) 1, 2 மற்றும் 3 மட்டும்

(ஆ) 3 மற்றும் 4 மட்டும்

(இ) 1, 2 மற்றும் 4 மட்டும்

(ஈ) இவையனைத்தும்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. _________ மகதத்தின் தொடக்க காலத் தலைநகராக இருந்தது.

2. முத்ரராட்சசத்தை எழுதியவர் __________

3. __________ பிந்துசாரரின் மகனாவார்.

4. மௌரியப் பேரரசை தோற்றுவித்தவர் ___________

5. நாடு முழுவதிலும் தர்மத்தைப் பரப்புவதற்காக ___________ பணியமர்த்தப்பட்டனர்.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. தேவனாம்பியா எனும் பட்டம் சந்திரகுப்த மௌரியருக்கு வழங்கப்பட்டது.

2. அசோகர் கலிங்கப் போரில் தோல்வியடைந்த பின்னர் போரைக் கைவிட்டார்.

3. அசோகருடைய தம்மா பௌத்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.

4. நமது காகிதப் பணத்தில் இடம் பெற்றுள்ள சிங்கங்கள் ராம்பூர்வா தூண்களின் காளை சிகரப் பகுதியிலிருந்து பெறப்பட்டவையாகும்.

5. புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூயின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

பொருத்துக:

(அ) கணா – 1. அர்த்த சாஸ்திரம்

(ஆ) மெகஸ்தனிஸ் – 2. மதச் சுற்றுப்பயணம்

(இ) சாணக்கியா – 3. மக்கள்

(ஈ) தர்மயாத்திரை – 4. இண்டிகா

(அ) 3 4 1 2

(ஆ) 2 4 3 1

(இ) 3 1 2 4

(ஈ) 2 1 4 3

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. மகதம் 2. அஜாதசத்ரு 3. இவை அனைத்தும்

4. பத்ரபாகு 5. மெகஸ்தனிஸ் 6. பிரிகத்ரதா

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

2. (1, 2 ஆகிய இரண்டும்)

3. (2 மட்டும்)

4. ஹரியங்கா சிசுநாகா நந்தா மௌரியா

5. (1, 2 மற்றும் 4 மட்டும்)

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. ராஜகிருகம் 2. விசாகதத்தர் 3. அசோகர்

4. சந்திரகுப்த மௌரியர் 5. தர்ம மகா மாத்திரியர்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (விடைகள்)

1. தவறு

சரியான விடை: தேவனாம்பியா எனும் பட்டம் அசோகருக்கு வழங்கப்பட்டது.

2. தவறு

சரியான விடை: அசோகர் கலிங்கப்போரில் வெற்றி அடைந்தார்.

3. சரி

4. தவறு

சரியான விடை: நமது காகிதப் பணத்தில் இடம் பெற்றுள்ள சிங்கங்கள் அசோகர் தூண்களின் காளை சிகரப் பகுதியிலிருந்து பெறப்பட்டவையாகும்.

5. சரி

பொருத்துக: (விடைகள்)

1. கணா – மக்கள்

2. மெகஸ்தனிஸ் – இண்டிகா

3. சாணக்கியர் – அர்த்தசாஸ்திரம்

4. தர்மயாத்திரை – மதச் சுற்றுப்பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!