Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

சட்ட மன்றம் 12th Political Science Lesson 2 Questions in Tamil

12th Political Science Lesson 2 Questions in Tamil

2] சட்ட மன்றம்

1) சட்டமன்றம் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) சட்டமன்றமானது பிரதிநிதித்துவ மக்களாட்சியின் செயல்பாட்டிற்கு ஒரு மிக முக்கியமான நிறுவனமாகிறது.

ⅱ) சட்டமன்றத்தின் அடிப்படை நோக்கமானது, அதன் பிரதிநிதிகளை ஒற்றுமையுள்ளவர்களாகவும், பொதுநல நோக்கம் கொண்டவராகவும் மாற்றுவது ஆகும்.

ⅲ) நாட்டின் சட்டங்களை இயற்றுதல் அல்லது மாற்றுதல் ஆகியவற்றை செய்யும் ஓர் உயர்ந்த சட்டம் இயற்றும் அமைப்பே, சட்டமன்றம் என பொதுவாக குறிப்பிடப்படுகின்றது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: சட்டமன்றமானது பிரதிநிதித்துவ மக்களாட்சியின் செயல்பாட்டிற்கு ஒரு மிக முக்கியமான நிறுவனமாகிறது. சட்டமன்றத்தின் அடிப்படை நோக்கமானது, அதன் பிரதிநிதிகளை பதிலளிக்க கடமைப்பட்டவர்களாகவும், நாட்டிலுள்ள மக்களின் நலன்களுக்கு பொறுப்புடையவர்களாகச் செய்வதே நோக்கம் ஆகும். நாட்டின் அனைத்து தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு, அந்நாட்டின் சட்டங்களை இயற்றுதல் அல்லது மாற்றுதல் ஆகியவற்றை செய்யும் ஓர் உயர்ந்த சட்டம் இயற்றும் அமைப்பே, சட்டமன்றம் என பொதுவாக குறிப்பிடப்படுகின்றது.

2) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) இந்தியா முழுமைக்குமான சட்டங்களை இயற்றும் சட்டமன்றம் நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றம் என்று குறிப்பிடப்படுகின்றது.

ⅱ) மாநிலங்களிலும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள சட்டமன்றங்கள் சட்டமன்ற பேரவை என்று அழைக்கப்படுகின்றன.

ⅲ) நாடாளுமன்றம் மக்களவை மற்றும் மாநிலங்களவை என ஈரவைகளை கொண்டுள்ளது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: இந்தியா முழுமைக்குமான சட்டங்களை இயற்றும் சட்டமன்றம் நாடாளுமன்றம் அல்லது தேசிய சட்டமன்றம் என்று குறிப்பிடப்படுகின்றது. மாநிலங்களிலும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள சட்டமன்றங்கள் சட்டமன்ற பேரவை என்று அழைக்கப்படுகின்றன. நாடாளுமன்றம் ஈரவைகளை கொண்டுள்ளது. அவை மக்களவை மற்றும் மாநிலங்களவை. இது நாடாளுமன்றத்தின் ஈரவை முறை எனப்படும்.

3) இந்திய நாடாளுமன்ற முறை தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) பிரிட்டிஷ் ஈரவை முறை மற்றும் அமெரிக்காவின் நாடாளுமன்ற முறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

ⅱ) சில மாநிலங்களில் சட்டமன்ற பேரவை (சட்டப்பேரவை) மற்றும் சட்டச்சபை என ஈரவை முறையே உள்ளது.

ⅲ) ஆனால் பல மாநிலங்களில் சட்டமேலவை இன்றி ஒற்றை அவையாக சட்ட மன்ற பேரவையே உள்ளது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: இது பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறை மற்றும் அமெரிக்காவின் ஈரவை முறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதேபோல் சில மாநிலங்களில் சட்டமன்ற பேரவை (சட்டப்பேரவை) மற்றும் சட்டச்சபை என ஈரவை முறையே உள்ளது. ஆனால் பல மாநிலங்களில் சட்டமேலவை இன்றி ஒற்றை அவையாக சட்ட மன்ற பேரவையே உள்ளது.

4) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) இந்தியாவில் நாடாளுமன்றம் அதன் சட்டம் இயற்றும் பணி மற்றும் அதனை செயல்படுத்துகின்ற பொறுப்பினை 25 மாநிலங்களுடனும், 9 ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளுடனும் பகிர்ந்து கொள்கிறது.

ⅱ) ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் மத்திய அரசால் நேரடியாக ஆட்சி செய்யப்படுகின்றன. (தில்லி மற்றும் புதுச்சேரி தவிர)

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: இந்தியாவில் நாடாளுமன்றம் அதன் சட்டம் இயற்றும் பணி மற்றும் அதனை செயல்படுத்துகின்ற பொறுப்பினை 29 மாநிலங்களுடனும், ஏழு ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளுடனும் பகிர்ந்து கொள்கிறது. ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் மத்திய அரசால் நேரடியாக ஆட்சி செய்யப்படுகின்றன. (தில்லி மற்றும் புதுச்சேரி தவிர)

5) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) நாடாளுமன்றம், ஒன்றியச் சட்டமன்றம் அல்லது தேசிய சட்டமன்றம் என்று அறியப்படுகிறது.

ⅱ) அதுவே முடிவுகளை எடுக்கக்கூடிய உச்ச அமைப்பு மற்றும் மக்களாட்சியின் அடையாளம்.

ⅲ) நலன் சார்ந்த பிரச்சனைகள் மீதான விவாதத்திற்கும், அரசியல் அமைப்பில் சட்டங்களை இயற்றுவதற்கும், திருத்துவதற்கும், பதிலளிக்க கடமைபட்ட மிகவும் சக்தி வாய்ந்த தளமாக நாடாளுமன்றமே உள்ளது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: நாடாளுமன்றம், ஒன்றியச் சட்டமன்றம் அல்லது தேசிய சட்டமன்றம் என்று அறியப்படுகிறது. அதுவே முடிவுகளை எடுக்கக்கூடிய உச்ச அமைப்பு மற்றும் மக்களாட்சியின் அடையாளம். நாட்டினதும் அதன் மக்களின் நலன் சார்ந்த பிரச்சனைகள் மீதான விவாதத்திற்கும், அரசியல் அமைப்பில் சட்டங்களை இயற்றுவதற்கும், திருத்துவதற்கும், பதிலளிக்க கடமைபட்ட மிகவும் சக்தி வாய்ந்த தளமாக நாடாளுமன்றமே உள்ளது.

6) கீழ்க்கண்டவற்றுள் மழைக்காலக் கூட்டத்தொடருக்கான காலம் எது?

a) பிப்ரவரி-மே

b) ஜூலை-ஆகஸ்ட்

c) நவம்பர்-டிசம்பர்

d) ஆகஸ்ட் – செப்டம்பர்

விளக்கம்: சட்ட முன் வரைவுகளுக்கான ஒப்புதல் அளித்தல், பல்வேறு தீர்மானங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்து விவாதம் நடத்துதல், போன்றவற்றிக்காக திட்டமிடப்பட்ட ஒரு கால வரையறையில் நாடாளுமன்றம் கூடுவதைத்தான் ஒரு கூட்டத்தொடர் என்று அழைக்கிறோம். ஒரு வருடத்தில் நாடாளுமன்றம் மூன்று கூட்டத் தொடர்களை நடத்துகிறது: 1. நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் (பிப்ரவரி-மே) 2. மழைக்காலக் கூட்டத்தொடர் (ஜூலை-ஆகஸ்ட்) 3. குளிர்காலக் கூட்டத்தொடர் (நவம்பர்-டிசம்பர்)

7) நாடாளுமன்றத்தின் அதிகாரம் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) நாடாளுமன்றத்திற்கு மூன்று முக்கியமான அதிகாரங்கள் மற்றும் பணிகள் உள்ளன.

ⅱ) நிதி அதிகாரங்கள் நிதிநிலை அறிக்கை என்று அறியப்படுகிற நிதி சம்பந்தப்பட்ட நிதிநிலை அறிக்கை கணக்குகளை தயார் செய்வதற்கானது.

ⅲ) குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடத்துவதற்கான தேர்வுச் செய்யும் பணிகளும் நாடாளுமன்றத்துக்கு இருக்கின்றன.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: நாடாளுமன்றத்திற்கு இரு முக்கியமான அதிகாரங்கள் மற்றும் பணிகள் உள்ளன. அவை சட்ட அதிகாரம் மற்றும் நிதி அதிகாரம் ஆகியவைகளாகும். சட்ட அதிகாரங்கள் சட்டம் இயற்றுவதற்கானவை. நிதி அதிகாரங்கள் நிதிநிலை அறிக்கை என்று அறியப்படுகிற நிதி சம்பந்தப்பட்ட நிதிநிலை அறிக்கை கணக்குகளை தயார் செய்வதற்கானது. மேலும் இந்திய குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடத்துவதற்கான தேர்வுச் செய்யும் பணிகளும் நாடாளுமன்றத்துக்கு இருக்கின்றன.

8) தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், ஆளுநர் ஆகியோர் மீதான பதவிநீக்க தீர்மானத்தை விவாதிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது.

ⅱ) நாடாளுமன்றத்தை கூட்டுமாறு அழைப்பது குடியரசுத்தலைவரின் கடமை, அது வருடத்திற்கு இரண்டு கூட்டத்தொடர்களுக்கு குறையாமல் கூட வேண்டும்.

ⅲ) பதவி நீக்கம் செய்யப்படும் நடைமுறை “பழிச்சாட்டுதல்” நடைமுறை என்று அழைக்கப்படும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் மீதான பதவிநீக்க தீர்மானத்தை விவாதிக்கவும், நிறைவேற்றி நீக்கம் செய்யவும் நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. அவ்வாறு பதவி நீக்கம் செய்யப்படும் நடைமுறை “பழிச்சாட்டுதல்” நடைமுறை என்று அழைக்கப்படும். நாடாளுமன்றத்தை கூட்டுமாறு அழைப்பது குடியரசுத்தலைவரின் கடமை, அது வருடத்திற்கு இரண்டு கூட்டத்தொடர்களுக்கு குறையாமல் கூட வேண்டும்.

9) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) ஒவ்வொரு வருடமும், நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் குடியரசுத்தலைவர் அவரது சிறப்புரையை நிகழ்த்துவார்.

ⅱ) அதில் எதிர்காலத்தில் அரசு எடுக்கப்போகிற புதிய கொள்கைகள், திட்டங்கள் மற்றும் புது முயற்சிகளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆகியவை இருக்கும்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: ஒவ்வொரு வருடமும், நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் குடியரசுத்தலைவர் அவரது சிறப்புரையை நிகழ்த்துவார். அதில் எதிர்காலத்தில் அரசு எடுக்கப்போகிற புதிய கொள்கைகள், திட்டங்கள் மற்றும் புது முயற்சிகளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆகியவை இருக்கும்.

10) கீழ்க்கண்டவற்றுள் நாடாளுமன்றத்தின் பணிகளை தேர்ந்தெடு.

ⅰ) சட்டங்கள் இயற்றுவது

ⅱ) நிதிநிலை அறிக்கைத் திட்டத்தை நிறைவேற்றுவது

ⅲ) பொதுமக்களின் மனக்குறைகளை அவர்களின் பிரதிநிதிகள் வழியே வெளிப்படுத்துவது

ⅳ) தேசியக் கொள்கைகள் மற்றும் நாட்டின் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பது

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: இந்திய நாடாளுமன்றத்துக்கு சட்டங்கள் இயற்றுவது, அதன் நிர்வாகத்தை மேற்பார்வையிடுவது, நிதிநிலை அறிக்கைத் திட்டத்தை நிறைவேற்றுவது, பொதுமக்களின் மனக்குறைகளை அவர்களின் பிரதிநிதிகள் வழியே வெளிப்படுத்துவது, தேசியக் கொள்கைகள் மற்றும் நாட்டின் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பது போன்ற பணிகளும் உள்ளது.

11) நாடாளுமன்றம் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?

a) அமைச்சர்கள், தனித்தனியாக மட்டும் மக்களவையால் நீக்க கூடியவர்கள் பொறுப்புடையவர்கள்.

b) ஈரவைகளும் ஒரே மாதிரியான மதிப்பீடுகளையும் பொறுப்புகளையும் தன்னகத்தே கொண்டவை.

c) நிதிச் செலவு ஒப்புதல் பெறுவது போன்ற சில விதிவிலக்குகள் உள்ளன.

d) நாடாளுமன்றம் ஈரவைகளைக் கொண்டது.

விளக்கம்: அமைச்சர்கள், தனித்தனியாகவும் கூட்டாகவும் மற்றும் மக்களவையால் நீக்க கூடியவர்கள் பொறுப்புடையவர்கள்.

மக்களவையின் செயல்பாடுகள்: நாடாளுமன்றம் ஈரவைகளைக் கொண்டது. ஈரவைகளும் ஒரே மாதிரியான மதிப்பீடுகளையும் பொறுப்புகளையும் தன்னகத்தே கொண்டவை. இருப்பினும், நிதிச் செலவு ஒப்புதல் பெறுவது போன்ற சில விதிவிலக்குகள் உள்ளன.

12) மக்களவை தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) நாட்டின் 543 நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்து, நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது.

ⅱ) தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொண்ட, நாடெங்கிலுமுள்ள 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர்களால், வாக்களிக்கப்படுகிறது.

ⅲ) மக்களவையில் ஆங்கிலோ-இந்திய சமூகத்திலிருந்து நியமிக்கப்பட்ட பன்னிரண்டு உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்களாக இருப்பார்கள்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: முதலாவது மக்களவை, தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொண்ட, நாடெங்கிலுமுள்ள 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர்களால், நாட்டின் 543 நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்து, நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது மக்களவை ஆகும். மக்களவையில் ஆங்கிலோ-இந்திய சமூகத்திலிருந்து நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்களாக இருப்பார்கள்.

13) மக்களவை / மாநிலங்களவை கூட்டத்தொடர்களை நடத்துவதற்கு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் எவ்வளவு இருக்க வேண்டும்?

a) 1/5

b) 1/15

c) 1/10

d) 1/8

விளக்கம்: உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை: மக்களவை / மாநிலங்களவை கூட்டத்தொடர்களை நடத்துவதற்கு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் பத்தில் ஒரு பங்கு எண்ணிக்கை இருக்க வேண்டும்.

14) பின்வருவனவற்றுள் தவறான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) மக்களவை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543

ⅱ) நாடாளுமன்றத்தில் அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் தீர்மானத்தில் நியமன உறுப்பினர்கள் முடிவெடுக்கலாம்.

ⅲ) மக்களின் பொதுப் பிரச்சினைகள் தொடர்பான விவாதங்கள், மக்களின் சமூக பொருளாதார தேவைகள், மற்றும் கொள்கை முடிவுகள் பற்றி கலந்துரையாட, விவாதிக்க, அமைந்த ஒரு மிக உயரிய மன்றம் தான் மக்களவை.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மக்களவை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 545 நாடாளுமன்றத்தில் அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் தீர்மானத்தில் நியமன உறுப்பினர்கள் முடிவெடுக்க முடியாது. மக்களின் பொதுப் பிரச்சினைகள் தொடர்பான விவாதங்கள், மக்களின் சமூக பொருளாதார தேவைகள், மற்றும் கொள்கை முடிவுகள் பற்றி கலந்துரையாட, விவாதிக்க, அமைந்த ஒரு மிக உயரிய மன்றம் தான் மக்களவை.

15) மக்களவை தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) இரு அவைகளை சார்ந்த உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் என்றே மக்கள் பொதுவாக அழைப்பர்.

ⅱ) மாநிலத்தின் 7 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலிருந்தும் மக்களால் தேர்தல்கள் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களவையில் இருப்பர்.

ⅲ) மக்களவையின் ஆயுட்காலம் ஐந்து வருடங்களாகும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: இரு அவைகளை சார்ந்த உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் என்றே மக்கள் பொதுவாக அழைப்பர். மாநிலத்தின் ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலிருந்தும் மக்களால் தேர்தல்கள் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களவையில் இருப்பர். மக்களவையின் ஆயுட்காலம் ஐந்து வருடங்களாகும்.

16) சபாநாயகர் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) சபாநாயகர் மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.

ⅱ) நாடாளுமன்ற தலைமைச்செயலகத்தின் நிர்வாகத் தலைவர் மாநிலங்களவை தலைவர் ஆவார்.

ⅲ) சபை உறுப்பினர்களின் நடத்தை குறித்த கேள்விகளுக்கு பதில்களை பெறுவது மற்றும் அவர்களின் சலுகைகள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பது ஆகியவை சபாநாயகரின் கடமை ஆகும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: சபாநாயகரின் பங்கு மற்றும் பொறுப்புகள்: மக்களவையை தலைமை தாங்கி நடத்துபவர் சபாநாயகர் ஆவார். அவர் மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். சபையை வழிநடத்துவது, கலந்துரையாடல் மற்றும் விவாதங்களை நடத்த உதவுவது, சபை உறுப்பினர்களின் நடத்தை குறித்த கேள்விகளுக்கு பதில்களை பெறுவது மற்றும் அவர்களின் சலுகைகள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பது ஆகியவை சபாநாயகரின் கடமை ஆகும். நாடாளுமன்ற தலைமைச்செயலகத்தின் நிர்வாகத் தலைவர் மக்களவை சபாநாயகர் ஆவார்.

17) பின்வருவனவற்றுள் சபாநாயகரின் பணிகளைத் தேர்ந்தெடு.

ⅰ) உறுப்பினர்கள் பொருத்தமான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்களா என்பதை உறுதிசெய்வது

ⅱ) உறுப்பினர்களை கேள்விகள் எழுப்புவதற்கு அனுமதிப்பது

ⅲ) ஆட்சேபனைக்குரிய குறிப்புக்களை பதிவேட்டிலிருந்து நீக்குவது

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: உறுப்பினர்கள் பொருத்தமான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்களா என்பதை உறுதிசெய்வது, உறுப்பினர்களை கேள்விகள் எழுப்புவதற்கு அனுமதிப்பது, அவர்கள் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவது, மற்றும் ஆட்சேபனைக்குரிய குறிப்புக்களை பதிவேட்டிலிருந்து நீக்குவது மற்றும் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிவது ஆகியவை சபாநாயகரின் கடமையாகும்.

18) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) அவையின் விதிமுறைகள் மற்றும் விதிகளை உதாசீனப்படுத்தும் அல்லது மீறும் உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு.

ⅱ) ஒரு திருத்தச்சட்டம் முன்மொழிவதற்கு சபாநாயகரின் அனுமதி பெறப்படவேண்டும்.

ⅲ) அந்த திருத்தச்சட்டம் முன்வரைவை அனுமதிப்பதா இல்லையா என்பதை குடியரசுத்தலைவர்தான் தீர்மானிப்பார்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: அவையின் விதிமுறைகள் மற்றும் விதிகளை உதாசீனப்படுத்தும் அல்லது மீறும் உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு. ஒரு திருத்தச்சட்டம் முன்மொழிவதற்கு சபாநாயகரின் அனுமதி பெறப்படவேண்டும். அந்த திருத்தச்சட்டம் முன்வரைவை அனுமதிப்பதா இல்லையா என்பதை சபாநாயகர்தான் தீர்மானிப்பார்.

19) பின்வருவனவற்றுள் எந்த குழுக்கள் மற்றும் அவற்றின் உறுப்பினர்களின் உரிமைகளின் பாதுகாவலராக சபாநாயகர் செயல்படுகிறார்?

ⅰ) கலந்தாய்வுக் குழு

ⅱ) சிறப்புக் குழு

ⅲ) ஆலோசனைக் குழு

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மன்றத்தின் உரிமைகள், சிறப்புரிமைகள் மற்றும் கலந்தாய்வுக் குழு, சிறப்புக் குழு, ஆலோசனைக் குழு போன்ற பல்வேறு குழுக்கள் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் ஆகியோரின் உரிமைகளின் பாதுகாவலராக சபாநாயகர் செயல்படுவார்.

20) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) சிறப்புரிமை குறித்த எந்த விளக்கமும் வேண்டி ஆய்வு செய்யவும், விசாரணை நடத்தவும் மற்றும் அறிக்கை அளிக்கவும் உரிமைக்குழுவுக்கு பரிந்துரைப்பது சபாநாயகரின் மற்றொரு முக்கியமான அதிகாரமாகும்.

ⅱ) உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள், அளிக்கும் பதில்கள், விளக்கங்கள், மற்றும் அறிக்கைகள் அனைத்தும் பிரதமரை நோக்கியே இருக்க வேண்டும்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: சிறப்புரிமை குறித்த எந்த விளக்கமும் வேண்டி ஆய்வு செய்யவும், விசாரணை நடத்தவும் மற்றும் அறிக்கை அளிக்கவும் உரிமைக்குழுவுக்கு பரிந்துரைப்பது சபாநாயகரின் மற்றொரு முக்கியமான அதிகாரமாகும். உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள், அளிக்கும் பதில்கள், விளக்கங்கள், மற்றும் அறிக்கைகள் அனைத்தும் சபாநாயகரை நோக்கியே இருக்க வேண்டும்.

21) “சபாநாயகர் மன்றத்தின் பிரதிநிதியாக திகழ்கிறார். அவர்/அவள் இந்த மன்றத்தின் மாண்பு மற்றும் அதன் சுதந்திரத்தின் பிரதிநிதியாக விளங்குகிறார்” என்று கூறியவர் யார்?

a) இந்திரா காந்தி

b) நேரு

c) இராஜேந்திர பிரசாத்

d) அம்பேத்கார்

விளக்கம்: இந்தியாவின் தலைமைச் சிற்பிகளில் ஒருவரும் அதன் மக்களாட்சி அரசமைப்புத் தத்துவத்தின் உந்து சக்தியாக திகழ்ந்தவர் ஜவஹர்லால் நேரு, இந்திய சபாநாயகரின் அலுவலகத்தை குறித்து ஒரு பொருத்தமான சூழ்நிலையில் இவ்வாறு கூறுகிறார், “சபாநாயகர் மன்றத்தின் பிரதிநிதியாக திகழ்கிறார். அவர்/அவள் இந்த மன்றத்தின் மாண்பு மற்றும் அதன் சுதந்திரத்தின் பிரதிநிதியாக விளங்குகிறார்.

22) “சபாநாயகர் பதவி எப்போதும் மிகத்திறமை வாய்ந்த மற்றும் பாரபட்சமற்ற ஒருவரால் வகிக்கப்படவேண்டும்.“என்று கூறியவர் யார்?

a) இந்திரா காந்தி

b) நேரு

c) இராஜேந்திர பிரசாத்

d) அம்பேத்கார்

விளக்கம்: நாடாளு மன்றம், நாட்டின் சின்னமாக விளங்குவதால் ஒரு குறிப்பிட்ட வகையில் சபாநாயகர் இந்த நாட்டின் சுதந்திரம் மற்றும் விடுதலையின் சின்னமாக திகழ்கிறார். ஆகவே, அது ஒரு மேன்மைதாங்கிய சுதந்திரமான பதவியாக இருக்க வேண்டும். அந்தப்பதவி எப்போதும் மிகத்திறமை வாய்ந்த மற்றும் பாரபட்சமற்ற ஒருவரால் வகிக்கப்படவேண்டும்.“

23) சபாநாயகர் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) அவை ஒழுங்குப் பிரச்சினை குறித்த கேள்விக்கு குடியரசுத்தலைவர் இறுதி முடிவெடுப்பார்.

ⅱ) நிதி முன்வரைவு என்று சான்றளிக்கும் அதிகாரம் பெற்றவர்.

ⅲ) அரசமைப்பின்படி சபாநாயகர் சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளார்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: அவை ஒழுங்குப் பிரச்சினை குறித்த கேள்விக்கு சபாநாயகரே இறுதி முடிவெடுப்பார். அரசமைப்பின்படி சபாநாயகர் சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளார். அதன் மூலம் நிதி முன்வரைவு என்று சான்றளிக்கும் அதிகாரம் பெற்றவர். சிறப்பு நிகழ்வுகள், அல்லது சில சட்ட நடவடிக்கைகளில் ஈரவைகளுக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்படும் சமயங்களில் நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டுத்தொடருக்கு மக்களவையின் சபாநாயகர் தலைமை தாங்குவார்.

24) சபாநாயகரின் அதிகாரம் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து சபாநாயகரே முடிவு செய்வார்.

ⅱ) அரசமைப்பு 51-வது திருத்தச்சட்டத்தின் படி ஒரு உறுப்பினரை கட்சித்தாவலின் அடிப்படையில் தகுதியிழப்பு செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளது.

ⅲ) சபாநாயகர் நாடாளுமன்றத்தின் ஒரு உறுப்பினராக இருந்தாலும் கூட நடுநிலை வகித்து மன்றத்தில் வாக்கு செலுத்தமாட்டார்.

ⅳ) எந்த முடிவையும் எட்டாது இருபுறமும் சரிசமமாக இருக்கும் சில அரிய சந்தர்ப்பங்களில் தனது வாக்கை செலுத்துவார்.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ), ⅳ)

விளக்கம்: மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து சபாநாயகரே முடிவு செய்வார். அரசமைப்பு 52-வது திருத்தச்சட்டத்தின் படி ஒரு உறுப்பினரை கட்சித்தாவலின் அடிப்படையில் தகுதியிழப்பு செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளது. சபாநாயகர் நாடாளுமன்றத்தின் ஒரு உறுப்பினராக இருந்தாலும் கூட நடுநிலை வகித்து மன்றத்தில் வாக்கு செலுத்தமாட்டார். இருப்பினும், விதிவிலக்காக எந்த முடிவையும் எட்டாது இருபுறமும் சரிசமமாக இருக்கும் சில அரிய சந்தர்ப்பங்களில் தனது வாக்கை செலுத்துவார். இது முடிவு செய்யும் வாக்கு (casting vote) எனப்படும்.

25) பின்வருவனவற்றுள் தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

ⅰ) மாநிலங்களவை என்று அழைக்கப்படுவது, அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளிலிருந்து வரும் 248 உறுப்பினர்களை கொண்டது.

ⅱ) 2 நியமன உறுப்பினர்களையும் சேர்த்து மொத்தம் 250 உறுப்பினர்களைக் கொண்டது.

ⅲ) மாநிலங்களவை அல்லது மேலவை இந்திய நாடாளுமன்றத்தின் இரண்டாவது ஆட்சி மன்றம் என்று அழைக்கப்படுகிறது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மாநிலங்களவை என்று அழைக்கப்படுவது, அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளிலிருந்து வரும் 238 உறுப்பினர்களையும் மற்றும் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்ட 12 நியமன உறுப்பினர்களையும் சேர்த்து மொத்தம் 250 உறுப்பினர்களைக் கொண்டது. மாநிலங்களவை அல்லது மேலவை இந்திய நாடாளுமன்றத்தின் இரண்டாவது ஆட்சி மன்றம் என்று அழைக்கப்படுகிறது.

26) மாநிலங்களவை தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) பிரிட்டனிலுள்ள ஆட்சிமன்றக் குழுவைப்போல மாநிலங்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்கும் ஒரு அமைப்பு மாநிலங்களவை ஆகும்.

ⅱ) இது 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி உருவாக்கப்பட்டது.

ⅲ) மாநிலங்களவை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: அமெரிக்காவிலுள்ள ஆட்சிமன்றக் குழுவைப்போல மாநிலங்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்கும் ஒரு அமைப்பு மாநிலங்களவை ஆகும். இது 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. மாநிலங்களவை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

27) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை போன்றதுறைகளிலிருந்து புகழ் பெற்ற நபர்களை உறுப்பினர்களாக இந்தியக் குடியரசுத்தலைவர் நியமிப்பார்.

ⅱ) மக்களவையைப் போல இல்லாமல் மாநிலங்களவை கலைக்கப்படுவதில்லை.

ⅲ) ஒவ்வொரு 3 வருடத்திற்கும் அதன் உறுப்பினர்களில் இரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்கள் தங்களது பதவிகாலத்தை நிறைவு செய்வார்கள்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் தவிர, இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை போன்றதுறைகளிலிருந்து புகழ் பெற்ற நபர்களை உறுப்பினர்களாக இந்தியக் குடியரசுத்தலைவர் நியமிப்பார். மக்களவையைப் போல இல்லாமல் மாநிலங்களவை கலைக்கப்படாது, ஆனால் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும் அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் தங்களது பதவிகாலத்தை நிறைவு செய்வார்கள்.

28) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) மாநிலங்களவை உறுப்பினரின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.

ⅱ) மாநிலங்களவை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால், மாற்றத்தக்க ஒற்றை வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: ஒரு உறுப்பினரின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மாநிலங்களவை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால், மாற்றத்தக்க ஒற்றை வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

29) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) குடியரசுத் துணைத்தலைவர் மாநிலங்களவையின் அலுவல் வழி அவைத்தலைவராக இருப்பார்.

ⅱ) அவைத்தலைவர் மாநிலங்களவையின் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கி முறைப்படுத்துவார்.

ⅲ) முன்வரைவுகள் அனைத்தும் மாநிலங்களவையில் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக சமர்ப்பிக்கப்பட்டு நடைபெறும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மாநிலங்களவையின் செயல்பாடுகள்: குடியரசுத் துணைத்தலைவர் மாநிலங்களவையின் அலுவல் வழி அவைத்தலைவராக இருப்பார். அவைத்தலைவர் மாநிலங்களவையின் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கி முறைப்படுத்துவார். பணம் / நிதி சம்பந்தமான முன்வரைவுகளைத் தவிர்த்து, ஏனைய முன்வரைவுகள் அனைத்தும் மாநிலங்களவையில் விவாதத்துக்கு, கேள்விகள் கேட்கப்படுவதற்கு, முன்வரைவு மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக செயல்பாட்டு நடைமுறைகள் விதிகளின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்டு நடைபெறும்.

30) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) மாநிலங்களவையின் செயல்பாடுகள் சட்டம் இயற்றுதல், நிதியியல், விவாதத்துக்குரியவை மற்றும் கூட்டாட்சி தொடர்புடையவை.

ⅱ) மக்களவையைப் போலவே சட்டம் இயற்றுதல்தான் மாநிலங்களவையின் மிக முக்கியமான பணிகளில் ஒன்று.

ⅲ) சட்டம் இயற்றுதலில் மக்களவைக்கு இணையான அதிகாரத்தை மாநிலங்களவை கொண்டுள்ளது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மாநிலங்களவையின் செயல்பாடுகளை விரிவாக வகைப்படுத்த வேண்டுமென்றால் அவை சட்டம் இயற்றுதல், நிதியியல், விவாதத்துக்குரியவை மற்றும் கூட்டாட்சி தொடர்புடையவை ஆகும். மக்களவையைப் போலவே சட்டம் இயற்றுதல்தான் மாநிலங்களவையின் மிக முக்கியமான பணிகளில் ஒன்று. இதில் மக்களவைக்கு இணையான அதிகாரத்தை மாநிலங்களவை கொண்டுள்ளது.

31) பின்வருவனவற்றுள் மாநிலங்களவை உறுப்பினராவதற்குரிய தகுதிகளைத் தேர்ந்தெடு.

ⅰ) இந்திய நாட்டின் குடிமகனாக இருக்கவேண்டும்.

ⅱ) 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

ⅲ) மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-இன் கீழ் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட விரும்பும் ஒரு நபர் அந்த மாநிலத்தின் நாடாளுமன்ற தொகுதியில் ஒரு வாக்காளராக இருக்கவேண்டும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: யார் மாநிலங்களைவை உறுப்பினராகலாம்?

*இந்திய நாட்டின் குடிமகனாக இருக்கவேண்டும்.

* 30 வயதுக்குட்பட்டவராக இருக்கக்கூடாது.

* மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-இன் கீழ் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட விரும்பும் ஒரு நபர் அந்த மாநிலத்தின் நாடாளுமன்ற தொகுதியில் ஒரு வாக்காளராக இருக்கவேண்டும்.

32)   மக்கள் பிரதிநிதித்துவ (திருத்த)சட்டம், 2003 தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) மாநிலங்களவைக்கு போட்டியிடும் ஒருவர் எந்த மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றாரோ, அந்த மாநிலத்தில் வசிப்பவராக இருக்கவேண்டும் என்ற நிபந்தனை விலக்கிக்கொள்ளப்பட்டது.

ⅱ) அவன்/அவள் இந்தியாவின் எந்த பகுதியிலிருந்தும் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

ⅲ) மாநிலங்களவை உறுப்பினர் பதவி வெளிப்படையான ஓட்டெடுப்பின் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் மூன்றாவது பிரிவினை மக்கள் பிரதிநிதித்துவ (திருத்த)சட்டம், 2003 திருத்தியது. இதன் மூலம் மாநிலங்களவைக்கு போட்டியிடும் ஒருவர் எந்த மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றாரோ, அந்த மாநிலத்தில் வசிப்பவராக இருக்கவேண்டும் என்ற நிபந்தனை விலக்கிக்கொள்ளப்பட்டது. ϖ அவன்/அவள் இந்தியாவின் எந்த பகுதியிலிருந்தும் ஒரு நாடாளுமன்ற தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும். மாநிலங்களவை உறுப்பினர் பதவி வெளிப்படையான ஓட்டெடுப்பின் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

33) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) ஐக்கிய அமெரிக்க நாட்டில் மாநிலக் குழுவின் உறுப்பினர்கள் செனட்டர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

ⅱ) அங்கு மாநிலத்தின் பரப்பளவு மற்றும் மக்கள்தொகை ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது.

ⅲ) இந்தியாவில் மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் அந்தந்த மாநிலங்களின் மக்கள்தொகை அடிப்படையில் அமைந்துள்ளது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: ஐக்கிய அமெரிக்க நாட்டில் மாநிலக் குழுவின் உறுப்பினர்கள் செனட்டர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அங்கு மாநிலத்தின் பரப்பளவு மற்றும் மக்கள்தொகை ஆகியவற்றை பொருட்படுத்தாது ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான அளவில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் அந்தந்த மாநிலங்களின் மக்கள்தொகை அடிப்படையில் அமைந்துள்ளது.

34) பின்வருவனவற்றுள் தவறான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) மிக அதிக மக்கள்தொகையைக்கொண்ட மஹாராஷ்டிரா மாநிலம் மாநிலங்களவைக்கு 31 உறுப்பினர்களை தேர்வு செய்கிறது.

ⅱ) மிகக்குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட சிக்கிம் மாநிலம் மாநிலங்களவைக்கு 2 உறுப்பினர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறது.

ⅲ) மாநிலங்களவைக்கு தமிழ்நாடு 18 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மிக அதிக மக்கள்தொகையைக்கொண்ட உத்திரப்பிரதேச மாநிலம் மாநிலங்களவைக்கு 31 உறுப்பினர்களை தேர்வு செய்கிறது. அதே சமயம், மிகக்குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட சிக்கிம் மாநிலம் மாநிலங்களவைக்கு ஒரு உறுப்பினரைத்தான் தேர்ந்தெடுக்கிறது. மாநிலங்களவைக்கு தமிழ்நாடு 18 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது.

35) மாநிலங்களவை தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அரசமைப்பின் நான்காவது பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

ⅱ) மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.

ⅲ) அதன் பின்னர் அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அரசமைப்பின் நான்காவது பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். அதன் பின்னர் அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம். நாடாளுமன்றத்தின் நிரந்தரஅவை என்று மாநிலங்களவை அழைக்கப்படுகிறது. அது எப்போதும் முழுமையாக கலைக்கப்படுவதில்லை.

36) மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சில முக்கியமான சிறப்புரிமைகள் குறித்த பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) நாடாளுமன்றத்தில் அல்லது எந்த ஒரு குழுவிலும் அவர் தெரிவித்த கருத்துக்கள் அல்லது அளித்த வாக்குகள் குறித்து எந்த நீதிமன்றத்திலும் சட்ட நடவடிக்கைகள் தொடருவதற்கு எதிரான பாதுகாப்பு.

ⅱ) ஈரவைகளிலுமிருந்து அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் எந்த ஒரு அறிக்கை அல்லது நடவடிக்கைகளை பிரசுரிப்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எந்த நீதிமன்றத்திலும் தொடருவதற்கு எதிரான பாதுகாப்பு

ⅲ) நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றி விசாரணை நடத்துவதற்கு நீதி மன்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சில முக்கியமான சிறப்புரிமைகள் மற்றும் சட்ட விலக்களிப்புகள் பின்வருமாறு: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அதிகாரங்களும் சிறப்புரிமைகளும் 1. நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை மற்றும் நாடாளுமன்றத்தில் அல்லது எந்த ஒரு குழுவிலும் அவர் தெரிவித்த கருத்துக்கள் அல்லது அளித்த வாக்குகள் குறித்து எந்த நீதிமன்றத்திலும் சட்ட நடவடிக்கைகள் தொடருவதற்கு எதிரான பாதுகாப்பு. 2. ஈரவைகளிலுமிருந்து அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் எந்த ஒரு அறிக்கை, கட்டுரை, வாக்குகள் அல்லது நடவடிக்கைகளை பிரசுரிப்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எந்த நீதிமன்றத்திலும் தொடருவதற்கு எதிரான பாதுகாப்பு. 3. நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றி விசாரணை நடத்துவதற்கு நீதி மன்றத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

37) மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சில முக்கியமான சட்ட விலக்களிப்புகள் குறித்த பின்வருவனவற்றுள் தவறான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) ஈரவைகளில் எந்த ஒரு அவை நடவடிக்கைகளின் எந்த ஒரு அறிக்கையையும் செய்தித்தாள்களில் பிரசுரிக்கும் உரிமைக்கு எதிரான சட்ட விலக்களிப்பு

ⅱ) பிரசுரம் உண்மையான நோக்கோடு பிரசுரிக்கப்பட்டதாக இருந்தாலொழிய, அதற்கெதிரான நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்பு.

ⅲ) கூட்டத்தொடர் தொடங்குவதற்கு நாற்பது நாட்களுக்கு முன்பும், மற்றும் கூட்டத்தொடர் முடிந்து நாற்பது நாட்கள் வரையிலும் குற்றவியல் வழக்குகளின் கீழ் கைது செய்யப்படாமல் இருக்கும் சுதந்திரம்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: 4. ஈரவைகளில் எந்த ஒரு அவை நடவடிக்கைகளின் உண்மையான எந்த ஒரு அறிக்கையையும் செய்தித்தாள்களில் பிரசுரிக்கும் உரிமைக்கு எதிரான சட்ட விலக்களிப்பு, பிரசுரம் தவறான நோக்கோடு பிரசுரிக்கப்பட்டதாக இருந்தாலொழிய, அதற்கெதிரான நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்பு. 5. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதும், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு நாற்பது நாட்களுக்கு முன்பும், மற்றும் கூட்டத்தொடர் முடிந்து நாற்பது நாட்கள் வரையிலும் உரிமையியல் வழக்குகளின் கீழ் ஒரு உறுப்பினரை கைது செய்யப்படாமல் இருக்கும் சுதந்திரம்.

நாடாளுமன்ற வளாகத்தினுள் ஒரு உறுப்பினருக்கு சட்ட நடவடிக்கை அறிக்கை அளிப்பது அல்லது கைது ஆகியவற்றிலிருந்து விதிவிலக்கு.

38) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) மக்களவை மிகவும் சக்தி வாய்ந்த ஒரு அரசியல் அமைப்பு, நாட்டின் அரசியல், சமூக பொருளாதார நிலையை பிரதிபலிப்பதில்லை.

ⅱ) மிக உயரிய பொறுப்பை கொண்டுள்ள அமைப்பு மேலும் நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் பிரதிநிதியாகவும் நடைமுறையில் திகழ்கிறது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

‘c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: மக்களவை மிகவும் சக்தி வாய்ந்த ஒரு அரசியல் அமைப்பு. அது நாட்டின் அரசியல், சமூக பொருளாதார நிலையை பிரதிபலிக்கிறது. மிக உயரிய பொறுப்பை கொண்டுள்ள அமைப்பு மேலும் நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் பிரதிநிதியாகவும் நடைமுறையில் திகழ்கிறது.

39) தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டது மக்களவை.

ⅱ) இதன் உறுப்பினர்கள் மக்களின் பல்வேறு விருப்பங்களின் பிரதிநிதியாக திகழ்கிறார்கள்.

ⅲ) இது மக்களாட்சி அமைப்பின் மிக உயரிய இடத்தில் உள்ளது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: 2. மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டது மக்களவை. இதன் உறுப்பினர்கள் மக்களின் பல்வேறு விருப்பங்களின் பிரதிநிதியாக திகழ்கிறார்கள். ஆகவே இது மக்களாட்சி அமைப்பின் மிக உயரிய இடத்தில் உள்ளது. இங்கிருந்துதான் நாட்டின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள் உருவாகின்றன

40) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) ஒன்றியப் பட்டியலில் உள்ள விடயங்கள் குறித்த சட்டங்களை மட்டும் மக்களவை நிறைவேற்றுகிறது.

ⅱ) மக்களவை புதிய சட்டங்களை இயற்றவும் நடைமுறையிலுள்ள சட்டத்தை நீக்க அல்லது அதைத் திருத்தவும் முடியும்.

ⅲ) பணம் சார்ந்த முன்வரைவுகளின் மீது மக்களவைக்கு மட்டுமே முழுமையான அதிகாரம் உள்ளது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: ஒன்றியப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியலில் உள்ள விடயங்கள் குறித்த சட்டங்களை மக்களவை நிறைவேற்றுகிறது. மேலும் மக்களவை புதிய சட்டங்களை இயற்றவும் நடைமுறையிலுள்ள சட்டத்தை நீக்க அல்லது அதைத் திருத்தவும் முடியும். பணம் சார்ந்த முன்வரைவுகளின் மீது மக்களவைக்கு மட்டுமே முழுமையான அதிகாரம் உள்ளது.

41) மக்களவைவின் சிறப்பு அதிகாரம் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) நிதிநிலை அறிக்கை அல்லது பணம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு சட்டத்தையும் மக்களவை நிறைவேற்றினால், அதை மாநிலங்களவை நிராகரிக்க முடியாது.

ⅱ) மாநிலங்களவை அந்த சட்டத்தை 14 நாட்களுக்கு மட்டும் காலதாமதப்படுத்த முடியும்.

ⅲ) அந்த சட்டத்தில் மாநிலங்களவை ஏதாவது மாற்றம் செய்வதற்கு ஆலோசனை கூறினால் அதை மக்களவை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மக்களவைவின் சிறப்பு அதிகாரம் என்னவென்றால், நிதிநிலை அறிக்கை அல்லது பணம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு சட்டத்தையும் அது நிறைவேற்றினால், அதை மாநிலங்களவை நிராகரிக்க முடியாது. ஆனால் மாநிலங்களவை அந்த சட்டத்தை 14 நாட்களுக்கு மட்டும் காலதாமதப்படுத்த முடியும். மேலும் அந்த சட்டத்தில் மாநிலங்களவை ஏதாவது மாற்றம் செய்வதற்கு ஆலோசனை கூறினால் அதை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் மக்களவையின் உரிமை உண்டு.

42) பின்வரும் எவற்றின் மூலம் ஆட்சித்துறையை மக்களவை கட்டுப்படுத்துகிறது?

ⅰ) கேள்விகள் மற்றும் துணைக்கேள்விகள் எழுப்புதல்

ⅱ) முன்வரைவு நிறைவேற்றம்

ⅲ) நம்பிக்கையில்லா தீர்மானங்கள்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: நாட்டின் பொருளாதாரம் மக்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில் அமையும் நிதிநிலை அறிக்கை மற்றும் நிதி அறிக்கையை தயார் செய்வதும் சமர்ப்பிப்பதும் மக்களவையின் சிறப்புரிமைகளில் ஒன்று ஆகும். 6. கேள்விகள், மற்றும் துணைக்கேள்விகள் எழுப்புதல், முன்வரைவு நிறைவேற்றம், மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் ஆகியவற்றின் மூலம் ஆட்சித்துறையை மக்களவை கட்டுப்படுத்துகிறது.

43) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) அரசமைப்பை திருத்தி அமைக்கவும், அவசரகால நிலை பிரகடனத்தை வெளியிடவும் மக்களவை அதிகாரம் படைத்தது.

ⅱ) இந்திய நாட்டின் குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் பணியில் மக்களவை முக்கிய பங்காற்றுகிறது.

ⅲ) மக்களவை, புதிய குழுக்கள் மற்றும் ஆணையங்களை அமைக்கும் அதிகாரம் கிடையாது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: அரசமைப்பை திருத்தி அமைக்கவும், அவசரகால நிலை பிரகடனத்தை வெளியிடவும் மக்களவை அதிகாரம் படைத்தது. 8. இந்திய நாட்டின் குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் பணியில் மக்களவை முக்கிய பங்காற்றுகிறது. மக்களவை, புதிய குழுக்கள் மற்றும் ஆணையங்களை அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. மேலும் அவற்றின் அறிக்கைகளை விவாதிப்பதற்கு ஏதுவாக நாடாளுமன்றத்தின் முன் சமர்பிக்கவும். மேலும் அவ்வறிக்கைகளை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கவும் மக்களவைக்கு அதிகாரம் உண்டு.

44) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) மக்களவை பெரும்பான்மை ஆதரவை கொண்டிருக்கும் பிரதமர் மற்றும் அமைச்சரவை ஆகியோரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

ⅱ) பிரதமர் மக்களவையின் நம்பிக்கையை இழந்தால், மொத்த அரசும் வெளியேற நேரிடும் மற்றும் புதிய தேர்தல்களை சந்திக்க வேண்டும்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: மக்களவை பெரும்பான்மை ஆதரவை கொண்டிருக்கும் பிரதமர் மற்றும் அமைச்சரவை ஆகியோரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். ஒரு வேளை பிரதமர் மக்களவையின் நம்பிக்கையை இழந்தால், மொத்த அரசும் வெளியேற நேரிடும் மற்றும் புதிய தேர்தல்களை சந்திக்க வேண்டும்.

45) மாநிலங்களவையின் இடம் மக்களவையுடன் ஒப்பிடும்போது அரசமைப்பின் படியான மாநிலங்களவையின் இடத்தை எத்தனை கோணங்களில் பார்க்கலாம்?

a) மூன்று

b) நான்கு

c) இரண்டு

d) ஐந்து

விளக்கம்: மாநிலங்களவையின் அதிகாரங்கள்: மாநிலங்களவையின் இடம் மக்களவையுடன் ஒப்பிடும்போது, அரசமைப்பின் படியான மாநிலங்களவையின் இடத்தை மூன்று கோணங்களில் படிக்கலாம்.

1. மக்களவையும் மாநிலங்களவையும் சம அளவில் அதிகாரம் உள்ள இடங்கள்

2. மாநிலங்களவையும் மக்களவையும் சமமற்ற அதிகாரம் கொண்டுள்ள இடங்கள்

3. மாநிலங்களவையின் சிறப்பு அதிகாரங்கள் இவை மக்களவையுடன் பகிர்ந்து கொள்ளப்படாதவை.

46) பின்வரும் விவரங்களில் மாநிலங்களவையின் அதிகாரமும், மக்களவையின் அதிகாரமும் சம அளவில் உள்ளவற்றை தேர்ந்தெடு.

ⅰ) முன்வரைவுகளை அறிமுகப்படுத்துல் மற்றும் அதை நிறைவேற்றுதல்.

ⅱ) திருத்தச்சட்டம் முன்வரைவுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அதை நிறைவேற்றுதல்.

ⅲ) இந்திய அரசின் தொகுப்பு நிதியில் இருந்து செய்யப்படும் செலவினங்கள் தொடர்பான முன்வரைவுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் நிறைவேற்றுதல்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மாநிலங்களவையும் மக்களவையும் சம நிலையில் உள்ள இடங்கள் கீழ்க்கண்ட விவரங்களில் மாநிலங்களவையின் அதிகாரமும், மக்களவையின் அதிகாரமும் சம அளவில் உள்ளன. 1. முன்வரைவுகளை அறிமுகப்படுத்துல் மற்றும் அதை நிறைவேற்றுதல். 2. திருத்தச்சட்டம் முன்வரைவுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அதை நிறைவேற்றுதல். 3. இந்திய அரசின் தொகுப்பு நிதியில் இருந்து செய்யப்படும் செலவினங்கள் தொடர்பான முன்வரைவுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் நிறைவேற்றுதல்.

47) துணைக் குடியரசுத்தலைவரின் பதவி நீக்கம் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் தவறானவற்றைத் தேர்ந்தெடு.

ⅰ) துணைக் குடியரசுத்தலைவரின் பதவி நீக்க தீர்மானத்தை மாநிலங்களவையே துவக்க முடியும்.

ⅱ) ஒரு சாதாரண பெரும்பான்மையின் மூலம் துணைக் குடியரசுத்தலைவரை மாநிலங்களவை பதவி நீக்கம் செய்கிறது.

ⅲ) சிறப்பு பெரும்பான்மை மூலம் மக்களவை ஏற்றுக்கொள்கிறது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுத்தல் மற்றும் அவரை பதவி நீக்க நடைமுறையில் பங்கேற்றல். 5. துணைக் குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுத்தல் மற்றும் அவரை பதவி நீக்கம் செய்தல். இருப்பினும் துணைக் குடியரசுத்தலைவரின் பதவி நீக்க தீர்மானத்தை மாநிலங்களவையே துவக்க முடியும். ஒரு சிறப்பு பெரும்பான்மையின் மூலம் துணைக் குடியரசுத்தலைவரை மாநிலங்களவை பதவி நீக்கம் செய்கிறது. அதை சாதாரண பெரும்பான்மை மூலம் மக்களவை ஏற்றுக்கொள்கிறது.

48) பின்வருவனவற்றுள் மக்களவையும் மாநிலங்களவையும் சம அளவு அதிகாரம் கொண்டுள்ள இடங்கள் எவை?

ⅰ) தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இந்தியாவின் தலைமைத் தணிக்கைக் கணக்காயர் ஆகியோரை பதவி நீக்கம் செய்யும் பரிந்துரையை குடியரசுத்தலைவருக்கு அனுப்புதல்.

ⅱ) குடியரசுத்தலைவரின் அவசர சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல்.

ⅲ) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை பதவி நீக்கம் செய்யும் பரிந்துரையை குடியரசுத்தலைவருக்கு அனுப்புதல்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இந்தியாவின் தலைமைத் தணிக்கைக் கணக்காயர் ஆகியோரை பதவி நீக்கம் செய்யும் பரிந்துரையை குடியரசுத்தலைவருக்கு அனுப்புதல். 7. குடியரசுத்தலைவரின் அவசர சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல். குடியரசுத்தலைவரின் மூன்று விதமான அவசரநிலை பிரகடனங்களுக்கு ஒப்புதல் வழங்குதல்.

49) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) இந்திய அரசமைப்பின்படி பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மக்களவையில் மட்டுமே உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

ⅱ) அவர்கள் மக்களவைக்கு மட்டுமேபொறுப்பானவர்கள் ஆவர்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

‘c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: பிரதமர் உட்பட அமைச்சர்களை தேர்வு செய்தல். இந்திய அரசமைப்பின்படி பிரதமர் மற்றும் அமைச்சர்கள் இரண்டு அவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். அவர்கள் எந்த அவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் மக்களவைக்கு மட்டுமேபொறுப்பானவர்கள் ஆவர்.

50) பின்வருவனவற்றுள் மக்களவையும் மாநிலங்களவையும் சம அளவு அதிகாரம் கொண்டுள்ள இடங்கள் எவை?

ⅰ) நிதிக்குழு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் போன்ற அமைப்புகள் அளிக்கும் அறிக்கைகளை பரிசீலித்தல்.

ⅱ) உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் வரம்பை அதிகப்படுத்துதல்.

ⅲ) ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரம் வரம்பை அதிகப்படுத்துதல்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: நிதிக்குழு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் போன்ற அமைப்புகள் அளிக்கும் அறிக்கைகளை பரிசீலித்தல். 11. உச்ச நீதிமன்றம் மற்றும் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரம் வரம்பை அதிகப்படுத்துதல்.

51) மக்களவையின் அதிகாரமும், மாநிலங்களவையின் அதிகாரமும் சமமற்ற நிலையில் உள்ள இடங்களைத்தேர்ந்தெடு.

ⅰ) நிதி முன்வரைவானது மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்த இயலும், மாநிலங்களவையில் அல்ல.

ⅱ) மாநிலங்களவை நிதி முன்வரைவில் திருத்தம் செய்யவோ அதை நிராகரிக்கவோ இயலாது.

ⅲ) அம்முன்வரைவை 6 வாரத்திற்குள் மாநிலங்களவை தன் பரிந்துரையுடனோ அல்லது பரிந்துரை ஏதுமின்றியோ மக்களவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மக்களவையுடனான சமமற்ற நிலை கீழ்க்காணும் விவரங்களில், மக்களவையின் அதிகாரமும், மாநிலங்களவையின் அதிகாரமும் சமமற்ற நிலையில் உள்ளன. 1. நிதி முன்வரைவானது மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்த இயலும், மாநிலங்களவையில் அல்ல. மாநிலங்களவை நிதி முன்வரைவில் திருத்தம் செய்யவோ அதை நிராகரிக்கவோ இயலாது. அம்முன்வரைவை 14 நாட்களுக்குள் மாநிலங்களவை தன் பரிந்துரையுடனோ அல்லது பரிந்துரை ஏதுமின்றியோ மக்களவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

52) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) ஒரு நிதி முன்வரைவு சட்ட உறுப்பு 110-இல் கூறப்பட்டுள்ள விவரங்கள் தொடர்பாக இல்லாதிருப்பின் அதனை இரு அவைகளிலும் அறிமுகப்படுத்த முடியும்.

ⅱ) அதை நிறைவேற்றுவதில் ஈரவைகளுக்குமே சமமான அதிகாரம் உள்ளது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: மாநிலங்களவையின் பரிந்துரைகளை மக்களவை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். எதுவாக இருப்பினும் முன்வரைவு ஈரவைகளிலும் நிறைவேறியதாகவே கருதப்படும். 4. ஒரு நிதி முன்வரைவு சட்ட உறுப்பு 110-இல் கூறப்பட்டுள்ள விவரங்கள் தொடர்பாக இல்லாதிருப்பினும் அது மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். ஆனால் அதை நிறைவேற்றுவதில் ஈரவைகளுக்குமே சமமான அதிகாரம் உள்ளது.

53) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) ஒரு முன்வரைவு, பண முன்வரைவு என்று தீர்மானிக்கும் அதிகாரம் மக்களவை சபாநாயகருக்கே உள்ளது.

ⅱ) ஈரவைகளின் கூட்டு கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகரே தலைமை தாங்குவார்.

ⅲ) மாநிலங்களவை நிதிநிலை அறிக்கை திட்டத்தின் மீது விவாதம் நடத்த முடியாது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: ஒரு முன்வரைவு, பண முன்வரைவு என்று தீர்மானிக்கும் அதிகாரம் மக்களவை சபாநாயகருக்கே உள்ளது. 6. ஈரவைகளின் கூட்டு கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகரே தலைமை தாங்குவார். மாநிலங்களவை நிதிநிலை அறிக்கை திட்டத்தின் மீது விவாதம் நடத்தலாம். ஆனால் அதற்கான வாக்கெடுப்பில் பங்கு பெற முடியாது. இது மக்களவைக்கு மட்டுமே உள்ள சிறப்பு உரிமையாகும்.

54) கூற்று: பொதுவாக, கூட்டுக் கூட்டங்களின் வாக்கெடுப்பில் மக்களவையின் நிலைப்பாடே வெற்றி பெறும்.

காரணம்: ஏனெனில் அது மாநிலங்களவையை விட அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளது.

a) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

b) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

விளக்கம்: பொதுவாக, கூட்டுக் கூட்டங்களின் வாக்கெடுப்பில் மக்களவையின் நிலைப்பாடே வெற்றி பெறும். ஏனெனில் அது மாநிலங்களவையை விட அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளது. ஈரவைகளிலும் ஆளும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த எதிர் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கும் சமயத்தில் மட்டுமே ஆளும் கட்சியின் தீர்மானம் வெற்றி பெறாது.

55) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) அமலில் உள்ள தேசிய அவசர நிலையை நீக்கும் தீர்மானம் மக்களவையில் மற்றும் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்.

ⅱ) எந்த ஒரு அமைச்சருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மாநிலங்களவை மேற்கொள்ள முடியாது.

ⅲ) மாநிலங்களவை அரசின், கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை விமர்சிக்க முடியும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: அமலில் உள்ள தேசிய அவசர நிலையை நீக்கும் தீர்மானம் மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும். 10. எந்த ஒரு அமைச்சருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மாநிலங்களவை மேற்கொள்ள முடியாது. ஏனெனில் அமைச்சர்கள் குழுவாகவும், தனிப்பட்ட முறையிலும் மக்களவைக்கே பொறுப்பானவர்கள். ஆனால் மாநிலங்களவை அரசின், கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை விமர்சிக்க முடியும்.

56) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) உறுப்பு 249-இன்படி மாநிலங்களவை மாநில பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகாரங்களில் நாடாளுமன்றம் சட்டம் இயற்ற அதிகாரமளிக்க முடியும்.

ⅱ) உறுப்பு 321-இன்படி மாநில மற்றும் மத்திய அரசுக்கு பொதுவான அனைத்து இந்தியத் தேர்வாணையத்தை உருவாக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரமளிக்க முடியும்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: மாநிலங்களவையின் சிறப்பு அதிகாரங்கள் கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மாநிலங்களவை இரண்டு பிரத்யேகமான தனித்துவமான அதிகாரங்களை பெற்றுள்ளது. 1. உறுப்பு 249-இன்படி மாநிலங்களவை மாநில பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகாரங்களில் நாடாளுமன்றம் சட்டம் இயற்ற அதிகாரமளிக்க முடியும். 2. உறுப்பு 312-இன்படி மாநில மற்றும் மத்திய அரசுக்கு பொதுவான அனைத்து இந்தியத் தேர்வாணையத்தை உருவாக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரமளிக்க முடியும்.

57) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) இந்திய மேலவையானது (மாநிலங்களவை) ஆங்கிலேய நாடாளுமன்ற அமைப்பில் உள்ள மேலவை (பிரபுக்கள் சபை) போல அதிகாரமற்று காணப்படுகிறது.

ⅱ) மாநிலங்களவையானது, நிதி விவகாரங்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான கட்டுப்பாடு தவிர மற்ற எல்லா தளங்களிலும் கிட்டத்தட்ட மக்களவைக்கு நிகரான அதிகாரத்தையே பெற்றுள்ளது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: இந்திய மேலவையானது (மாநிலங்களவை) ஆங்கிலேய நாடாளுமன்ற அமைப்பில் உள்ள மேலவை (பிரபுக்கள் சபை) போல அதிகாரமற்று இல்லாமலும், அமெரிக்க மேலவை (செனட்) போல் மிகுந்த அதிகார முடையதாகவும் இல்லாமல் இருப்பதாக புலனாகிறது. மாநிலங்களவையானது, நிதி விவகாரங்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான கட்டுப்பாடு தவிர மற்ற எல்லா தளங்களிலும் கிட்டத்தட்ட மக்களவைக்கு நிகரான அதிகாரத்தையே பெற்றுள்ளது.

58) மாநிலங்களவை தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) கவனமின்றி மக்களவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுப்பப்படும் சட்ட முன்வரைவுகளை திருப்பி அனுப்பவும் அவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளவும் மாநிலங்களவை செய்கிறது.

ⅱ) நேரடியாக தேர்தல் சந்திக்கமுடியாத புகழ்பெற்ற நிபுணர்கள், கலை, இலக்கிய வல்லுனர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு இந்த அவை பிரதிநிதித்துவம் அளிக்கிறது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: மக்களவையுடன் ஒப்பு நோக்கும்போது, மாநிலங்களவை குறைவான அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தாலும் கீழ்க்கண்ட விவகாரங்களில் இதன் பயன் அவசியமாகிறது. 1. அவசரமாகவும், குறைபாடுகளுடனும், கவனமின்றியும் மக்களவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுப்பப்படும் சட்ட முன்வரைவுகளை திருப்பி அனுப்பவும் அவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளவும் மாநிலங்களவை செய்கிறது. 2. நேரடியாக தேர்தல் சந்திக்கமுடியாத புகழ்பெற்ற நிபுணர்கள், கலை, இலக்கிய வல்லுனர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு இந்த அவை பிரதிநிதித்துவம் அளிக்கிறது. மேலும், குடியரசுத்தலைவர் இது போன்ற 12 நபர்களை இந்த அவையின் உறுப்பினராக நியமிக்கிறார்.

59) நாடாளுமன்றத்தின் அலுவல் மொழியாக இந்தியும் ஆங்கிலமும் இருக்கும் என்று கூறும் அரசமைப்பு உறுப்பு எது?

a) 125

b) 333

c) 120

d) 124

விளக்கம்: கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையான மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் காவலனாக மத்திய அரசின் அதிகார தலையீடுகளை தடுக்கிறது. நாடாளுமன்றத்தின் அலுவல் மொழியாக இந்தியும் ஆங்கிலமும் இருக்கும் என அரசமைப்பின் உறுப்பு 120 கூறுகிறது. இவ்வாறிருந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர் எவரேனும் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாதவராக இருப்பின், அவர் தனது தாய் மொழியில் உரையாற்ற அவைத்தலைவர் அனுமதிக்கலாம் என்றும் இவ்வுறுப்பு மேலும் கூறுகிறது.

60) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) இந்திய நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் நடைமுறைகள் அதன் மக்களாட்சித் தத்துவத்தின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

ⅱ) சட்டம் இயற்றும் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகளின் பங்கு மிக இன்றியமையாததாக அமைகிறது.

ⅲ) மக்களாட்சி அமைப்பினை முறைப்படுத்துவதில், ஒரு சட்ட முன்வரைவின் பொருத்தபாடு மற்றும் தொடர்பின் மீது தங்கள் கருத்துகளை எதிரொலிப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் மிக மிக முக்கிய பங்களிக்கின்றன.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: சட்டம் இயற்றும் நடைமுறைகள்: இந்திய நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் நடைமுறைகள் அதன் மக்களாட்சித் தத்துவத்தின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. சட்டம் இயற்றும் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகளின் பங்கு மிக இன்றியமையாததாக அமைகிறது. மக்களாட்சி அமைப்பினை முறைப்படுத்துவதில், ஒரு சட்ட முன்வரைவின் பொருத்தபாடு மற்றும் தொடர்பின் மீது தங்கள் கருத்துகளை எதிரொலிப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் மிக மிக முக்கிய பங்களிக்கின்றன.

61) சட்டங்கள் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) மாநிலங்கள் மற்றும் மக்களின் நலனை பேணும் பொருட்டு சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை முறைப்படுத்தி வழிகாட்டும் சக்தியாக சட்டங்கள் விளங்குகின்றன.

ⅱ) அடிப்படையில் பரிசீலனைக்காக நாடாளுமன்றத்தில் “சட்ட முன்வரைவாக” (சட்ட முன்வரைவு) சட்டங்கள் முன்மொழியப்படுகின்றன.

ⅲ) சட்ட முன்வரைவை அரசமைப்பின் கட்டமைப்புக்குள் முழுமையாக அறிந்து கொள்ளும் பொருட்டு ஒரு முழுமையான விவாதத்துக்கு நாடாளுமன்றத்தால் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மாநிலங்கள் மற்றும் மக்களின் நலனை பேணும் பொருட்டு சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை முறைப்படுத்தி வழிகாட்டும் சக்தியாக சட்டங்கள் விளங்குகின்றன. அடிப்படையில் பரிசீலனைக்காக நாடாளுமன்றத்தில் “சட்ட முன்வரைவாக” (சட்ட முன்வரைவு) சட்டங்கள் முன்மொழியப்படுகின்றன. அந்த சட்ட முன்வரைவை அரசமைப்பின் கட்டமைப்புக்குள் முழுமையாக அறிந்து கொள்ளும் பொருட்டு ஒரு முழுமையான விவாதத்துக்கு நாடாளுமன்றத்தால் எடுத்துக்கொள்ளப்படும்.

62) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு குடியரசுத்தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு சட்டமாக இயற்றப்படும்.

ⅱ) அரசமைப்பு நடைமுறைகளின் அடிப்படையில் புதிய சட்டங்களை இயற்றுவதும் நடைமுறையிலுள்ள சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவருவதும் நாடாளுமன்றத்தின் அடிப்படை நடவடிக்கைகள்.

ⅲ) இந்திய நாடாளுமன்றம் 3 வகையான முன்வரைவுகளை நிறைவேற்றுகிறது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: அந்த சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு குடியரசுத்தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு சட்டமாக இயற்றப்படும். அரசமைப்பு நடைமுறைகளின் அடிப்படையில் புதிய சட்டங்களை இயற்றுவதும் நடைமுறையிலுள்ள சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவருவதும் நாடாளுமன்றத்தின் அடிப்படை நடவடிக்கைகள். இந்திய நாடாளுமன்றம் இரு வகையான முன்வரைவுகளை நிறைவேற்றுகிறது.

63) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) பொது முன்வரைவு ஒரு சாதாரண சட்ட முன்வரைவு ஒரு சட்டமாக இயற்றப்படுவதற்கு முன் பல்வேறு நிலைகளை கடந்து வர வேண்டும்.

ⅱ) சாதாரண முன்வரைவுகளை நிறைவேற்றுவதற்கான நடைமுறைகளை 3 வேறு பகுப்புகளாக அரசமைப்பு வகுத்துள்ளது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: 1. நிதி முன்வரைவு 2. நிதிசாரா முன்வரைவு அல்லது சாதாரண அல்லது பொது முன்வரைவு ஒரு சாதாரண சட்ட முன்வரைவு ஒரு சட்டமாக இயற்றப்படுவதற்கு முன் பல்வேறு நிலைகளை கடந்து வர வேண்டும். சாதாரண முன்வரைவுகளை நிறைவேற்றுவதற்கான நடைமுறைகளை இரு வேறு பகுப்புகளாக அரசமைப்பு வகுத்துள்ளது.

64) கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒரு சாதாரண சட்ட முன்வரைவு பின்வரும் எந்த நிலைகளை கடக்கிறது?

ⅰ) முதல் நிலையில் சட்ட முன்வரைவானது ஏதாவது ஒரு அவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ⅱ) சட்ட முன்வரைவு வாசிக்கப்படுகிறது.

ⅲ) பெரும்பாலான முன்வரைவுகள் சம்பந்தப்பட்ட அமைச்சர்களால் அறிமுகப்படுத்தப்படும்.

ⅳ) முன்வரைவு குறிப்பிட்ட தொழில் துறை சார்ந்த தொழில் நுட்ப வல்லுனர்களால் முன்வரைவு செய்யப்படும்.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: இரு வேறு பகுப்புகள் பின்வருமாறு: கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒரு சாதாரண சட்ட முன்வரைவு பின்வரும் நிலைகளைக் கடந்து இரண்டு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டு ஒப்புதலைப் பெற்றிருக்கவேண்டும். “முதல் நிலையில் சட்ட முன்வரைவானது ஏதாவது ஒரு அவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அங்கு சட்ட முன்வரைவு வாசிக்கப்படுகிறது. பெரும்பாலான முன்வரைவுகள் சம்பந்தப்பட்ட அமைச்சர்களால் அறிமுகப்படுத்தப்படும். அந்த முன்வரைவு குறிப்பிட்ட தொழில் துறை சார்ந்த தொழில் நுட்ப வல்லுனர்களால் முன்வரைவு செய்யப்படும். மற்றும் அமைச்சரவை ஒப்புதல் பெறவேண்டும்.

65) தனி நபர் முன்வரைவு தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் “தனி நபர் முன்வரைவை’” அறிமுகப்படுத்தலாம்.

ⅱ) அவ்வாறு அறிமுகப்படுத்த மக்களவை சபாநாயகருக்கோ அல்லது மாநிலங்களவை தலைவருக்கோ ஒரு மாதம் முன்பே தெரிவிக்க வேண்டும்.

ⅲ) பிறகு தனிநபர் முன்வரைவை சமர்ப்பிக்கும் நாள் குறிக்கப்படும் மற்றும் நாடாளுமன்ற அவையில் அது அறிமுகப்படுத்தப்படும்.

ⅳ) பொதுவாக வரைவு நிலையிலுள்ள முன் மொழியப்பட்ட வாசிப்பு நிலையில் உள்ள முன்வரைவுகளின் மீது விவாதம் நிகழ்த்தப்படும்.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் “தனி நபர் முன்வரைவை’” அறிமுகப்படுத்தலாம். அவ்வாறு அறிமுகப்படுத்த மக்களவை சபாநாயகருக்கோ அல்லது மாநிலங்களவை தலைவருக்கோ ஒரு மாதம் முன்பே தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு தனிநபர் முன்வரைவை சமர்ப்பிக்கும் நாள் குறிக்கப்படும் மற்றும் நாடாளுமன்ற அவையில் அது அறிமுகப்படுத்தப்படும். பொதுவாக வரைவு நிலையிலுள்ள முன் மொழியப்பட்ட வாசிப்பு நிலையில் உள்ள முன்வரைவுகளின் மீது விவாதம் எதுவும் நிகழ்த்தப்படுவதில்லை ஏனென்றால் அது ஒரு அலுவல் சார்ந்த நடவடிக்கையாகும்.

66) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) முன்வரைவு சமர்ப்பிக்கப்பட்ட பிறகு இந்திய அரசிதழில் பிரசுரிக்கப்படும்.

ⅱ) சபாநாயகர் அல்லது அவைத்தலைவர் முதல் வாசிப்புக்கு முன்னரே சில முன்வரைவுகளை அரசிதழில் வெளியிட முடியாது.

ⅲ) பொதுவாக முன்வரைவின் முதல் வாசிப்பு நடைபெற்ற இரண்டு நாள் கால இடைவேளைக்கு பிறகு இரண்டவது வாசிப்பு நடைபெறும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: முன்வரைவு சமர்ப்பிக்கப்பட்ட பிறகு இந்திய அரசிதழில் பிரசுரிக்கப்படும். சபாநாயகர் அல்லது அவைத்தலைவர் முதல் வாசிப்புக்கு முன்னரே சில முன்வரைவுகளை அரசிதழில் வெளியிட அனுமதிக்கலாம். அப்போது அந்த முன்வரைவை சமர்ப்பிப்பதற்கு எந்த தீர்மானமும் தேவையில்லை. பொதுவாக முன்வரைவின் முதல் வாசிப்பு நடைபெற்ற இரண்டு நாள் கால இடைவேளைக்கு பிறகு இரண்டாவது வாசிப்பு நடைபெறும்.

67) முன்வரைவின் முதல் வாசிப்பு நடைபெற்ற பிறகு பின்பற்றப்படுபவற்றை தேர்ந்தெடு.

ⅰ) அந்த முன்வரைவு மன்றத்தின் பரிசீலனைக்காக உடனடியாக எடுத்துக்கொள்ளப்படலாம்.

ⅱ) அது நாடாளுமன்ற தேர்வுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படலாம்.

ⅲ) பொதுமக்கள் கருத்துகளை அறிந்து கொள்ளுவதற்காக சுற்றுக்கு விடப்படலாம்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: அந்த நிலையில் கீழ்கண்ட நான்கு நடைமுறைகளில் ஏதாவது ஒன்று பின்பற்றப்படும்.

*அந்த முன்வரைவு மன்றத்தின் பரிசீலனைக்காக உடனடியாக எடுத்துக்கொள்ளப்படலாம்.

*அது நாடாளுமன்ற தேர்வுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படலாம்.

*அது ஈரவைகளும் இணைந்த தேர்வுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படலாம் அல்லது

*பொதுமக்கள் கருத்துகளை அறிந்து கொள்ளுவதற்காக சுற்றுக்கு விடப்படலாம். முன்வரைவுகளை பரிசீலனைக்கு நேரடியாக எடுத்துக்கொள்ளுவது மிக அரிதாகவே நிகழும்.

68) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) முன்வரைவு சுற்றுக்கு விடப்பட்டால் அவையின் செயலர் மாநில அரசிதழ்களில் வெளியிடச்சொல்லி மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்ளுவார்.

ⅱ) அவ்வாறு பெறப்பட்ட கருத்துக்கள் மக்களிடையே சுற்றுக்கு விடப்படும்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: முன்வரைவு சுற்றுக்கு விடப்பட்டால் (4- வது வழிமுறைப்படி) அவையின் சம்பந்தப்பட்ட செயலர் உள்ளாட்சி அமைப்புக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும் வகையில் மாநில அரசிதழ்களில் வெளியிடச்சொல்லி மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்ளுவார். அவ்வாறு பெறப்பட்ட கருத்துக்கள் உறுப்பினர்களிடையே சுற்றுக்கு விடப்படும்.

69) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) முன்வரைவு தேர்வுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டால், அதை சமர்ப்பித்த உறுப்பினர் குழு உறுப்பினர்களை தெரிவு செய்வார்.

ⅱ) சமர்ப்பித்த உறுப்பினர் அந்தக் குழுவின் ஒரு உறுப்பினரையும் மற்றும் தலைவரையும் நியமிப்பார்.

ⅲ) அக்குழு அந்த முன்வரைவை பரிசீலித்து அவைக்கு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: குழு நிலை: அந்த முன்வரைவு தேர்வுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டால், அதை சமர்ப்பித்த உறுப்பினர் குழு உறுப்பினர்களை தெரிவு செய்வார், அவையின் சபாநாயகர் அல்லது அவைத்தலைவர் அந்தக் குழுவின் ஒரு உறுப்பினரையும் மற்றும் தலைவரையும் நியமிப்பார். அக்குழு அந்த முன்வரைவை பரிசீலித்து அவைக்கு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.

70) முன்வரைவின் உட்கூறுகள் ஒவ்வொன்றும் விவாதத்துக்கு உட்படுத்தப்படுவது எந்த நிலை?

a) முதல் வாசிப்பு

b) மூன்றாவது வாசிப்பு

c) குழு நிலை

d) அறிக்கை நிலை

விளக்கம்: அறிக்கை நிலை: என்பது மிக முக்கியமான ஒரு நிலையாகும். அதில்தான், அந்த முன்வரைவின் உட்கூறுகள் ஒவ்வொன்றும் விவாதத்துக்கு உட்படுத்தப்படும். இந்த நிலையில் அந்த அறிக்கை அசல் முன்வரைவு மற்றும் தேர்வுக்கமிட்டி அறிக்கையுடன் இணைத்து சுற்றுக்கு விடப்படும்.

71) நாடாளுமன்றத்தின் முறையான ஒப்புதல் பெறுவதற்கான நிலை எது?

a) முதல் வாசிப்பு

b) மூன்றாவது வாசிப்பு

c) குழு நிலை

d) அறிக்கை நிலை

விளக்கம்: அறிக்கை நிலை என்பது அந்த முன்வரைவுக்கு இறுதி வடிவம் கொடுப்பது. பிறகு அந்த முன்வரைவு மூன்றாவது வாசிப்புக்கு சமர்ப்பிக்கப்படும். அதில் அந்த முன்வரைவு பெரும்பான்மை வாக்குகள் பெற்று நிறைவேற்றப்படும். மூன்றாவது வாசிப்பு என்பது நாடாளுமன்றத்தின் முறையான ஒப்புதல் பெறுவதற்கானதாகும்.

72) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) மூன்றாவது வாசிப்புக்குப் பிறகு ஏதாவது ஒரு அவையில் அந்த முன்வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அடுத்த அவைக்கு அது மாற்றப்பட்டு அங்கு அனைத்து நிலைகளையும் கடந்து செல்லும்.

ⅱ) அடுத்த அவை அந்த முன்வரைவை அப்படியே மாற்றமின்றி ஏற்றுக்கொள்ளலாம்.

ⅲ) அனைத்து நிலைகளையும் கடந்த நிலையில் அவைத்தலைவரின் ஒப்புதலுக்காக அது அனுப்பி வைக்கப்படும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மூன்றாவது வாசிப்புக்குப் பிறகு ஏதாவது ஒரு அவையில் அந்த முன்வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அடுத்த அவைக்கு அது மாற்றப்பட்டு அங்கு மேற்கண்ட அனைத்து நிலைகளையும் கடந்து செல்லும். அடுத்த அவை அந்த முன்வரைவை அப்படியே மாற்றமின்றி ஏற்றுக்கொள்ளலாம். அனைத்து நிலைகளையும் கடந்த நிலையில் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அது அனுப்பி வைக்கப்படும்.

73) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) முன்வரைவு முதலில் சமர்ப்பிக்கப்பட்டு அவையில் நிறைவேற்றப்பட்ட பிறகும் அடுத்த அவையில் அது நிராகரிக்கப்படலாம்.

ⅱ) முதல் அவையினால் ஏற்றுக்கொள்ளப்படாத மாற்றங்களை அறிமுகம் செய்யலாம்.

ⅲ) ஆறு வார காலத்திற்கு திருப்பி அனுப்பாமல் நிறுத்தி வைத்துக்கொள்ளலாம்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: அந்த முன்வரைவு முதலில் சமர்ப்பிக்கப்பட்டு அவையில் நிறைவேற்றப்பட்ட பிறகும் அடுத்த அவையில் அது நிராகரிக்கப்படலாம். மாறாக முதல் அவையினால் ஏற்றுக்கொள்ளப்படாத மாற்றங்களை அறிமுகம் செய்யலாம் அல்லது ஆறு மாத காலத்திற்கு திருப்பி அனுப்பாமல் நிறுத்தி வைத்துக்கொள்ளலாம். அம்மாதிரியான சந்தர்ப்பங்களில் ஈரவைகளுக்குமிடையே அரசியல் சாசனம் முடக்கப்படலாம். அப்போது சபாநாயகர் அல்லது அவர் இல்லாத காலங்களில் துணை சபாநாயகர் ஈரவைகளின் கூட்டு கூட்டங்களுக்கு தலைமை ஏற்று நடத்துவார். இந்த முடக்கம் பெரும்பான்மையான வாக்குகளால் கலைக்கப்பட்டது.

74) குடியரசுத்தலைவர் ஒப்புதல் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) முன்வரைவு ஈரவைகளினாலும் நிறைவேற்றப்பட்ட பிறகு குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும்.

ⅱ) முன்வரைவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிப்பாரே ஆனால் அது சட்டமாக்கப்பட்டுவிடும்.

ⅲ) குடியரசுத்தலைவர் அதை மறு பரிசீலனைக்காக திருப்பி அனுப்ப முடியாது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: இறுதியாக, அந்த முன்வரைவு ஈரவைகளினாலும் நிறைவேற்றப்படும். குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும். முன்வரைவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிப்பாரே ஆனால் அது சட்டமாக்கப்பட்டுவிடும். ஆனால் குடியரசுத்தலைவர் அதை மறு பரிசீலனைக்காக திருப்பி அனுப்பி வைக்கலாம்.

75) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) முன்வரைவு மாற்றம் செய்யப்படாமல் அல்லது மாற்றம் செய்யப்பட்டு திரும்பவும் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுமேயானால் குடியரசுத்தலைவர் அவரது ஒப்புதல் அளிக்க தேவையில்லை.

ⅱ) சிக்கல் நிறைந்த, காலம் அதிகம் பிடிக்கும் வழிமுறைகள், அவசர நிலையிலும் குறைபாடுகளுடனும் சட்டம் இயற்றப்படுவதை தடுக்கும் நோக்கத்தோடு பின்பற்றப்படுகிறது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: அந்த முன்வரைவு மாற்றம் செய்யப்படாமல் அல்லது மாற்றம் செய்யப்பட்டு திரும்பவும் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுமேயானால் குடியரசுத்தலைவர் அவரது ஒப்புதலை அளித்தே ஆக வேண்டும். இவ்வாறான சிக்கல் நிறைந்த, காலம் அதிகம் பிடிக்கும் வழிமுறைகள், அவசர நிலையிலும் குறைபாடுகளுடனும் சட்டம் இயற்றப்படுவதை தடுக்கும் நோக்கத்தோடு பின்பற்றப்படுகிறது.

76) மத்திய மற்றும் மாநிலங்களின் சட்டரீதியான அதிகாரங்களும் செயல்பாடுகளும் எந்த அட்டவணையில் வரையறுக்கப்பட்டுள்ளன?

a) நான்காவது

b) ஐந்தாவது

c) ஆறாவது

d) ஏழாவது

விளக்கம்: சட்டமன்றத்தின் அமைப்பு, அதிகாரம் மற்றும் செயல்பாடுகள்: இந்திய அரசமைப்பின் ஏழாவது அட்டவணையில், மத்திய மற்றும் மாநிலங்களின் சட்டரீதியான அதிகாரங்களும் செயல்பாடுகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இவையே மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரங்கள் மூன்றாக வகுக்கப்பட்டுள்ளன. 1. ஒன்றியப் பட்டியல் 2. மாநிலப் பட்டியல் 3. பொதுப் பட்டியல்.

77) பின்வருவனவற்றுள் மத்திய அரசுச் சட்டம் இயற்ற அதிகாரம் உள்ள துறைகள் எவை?

ⅰ) பாதுகாப்பு

ⅱ) நாணயம்

ⅲ) தகவல் தொடர்பு

ⅳ) நீர்ப்பாசனம்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: மத்திய அரசாங்கம் ஒன்றியப் பட்டியல் மத்திய அரசுச் சட்டம் இயற்ற அதிகாரம் உள்ள துறைகள்

• பாதுகாப்பு

• வங்கி சேவை

• நாணயம்

• வெளிநாட்டு விவகாரங்கள்

• தகவல் தொடர்பு

ஒன்றியப் பட்டியலில் அடங்கியுள்ள துறைகள் மீது சட்டங்களை இயற்றுவதற்கும், நடைமுறையில் உள்ள சட்டங்களை மாற்றுவதற்கும் பிரத்யேகமான அதிகாரம் நாடாளுமன்றத்திடமே உள்ளது.

78) பின்வருவனவற்றுள் மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டம் இயற்ற அதிகாரம் உள்ள துறைகள் எவை?

ⅰ) வாரிசுரிமை

ⅱ) வனம்

ⅲ) காவல்

ⅳ) திருமணம்

a) ⅰ), ⅱ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: பொதுப் பட்டியல்: மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டுமே பொதுவானப் பட்டியல் இரு அரசுகளும் இதில் உள்ள துறைகளில் சட்டம் இயற்றலாம்.

• கல்வி

• வனம்

• திருமணம்

• தத்து எடுத்தல்

• வாரிசுரிமை

மாநிலப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள துறைகள் மீது பிரத்யேகமான அதிகாரம் மாநிலச் சட்டமன்றத்திடம் உள்ளது.

79) பின்வருவனவற்றுள் மாநில அரசு சட்டம் இயற்ற அதிகாரம் உள்ள துறைகள் எவை?

ⅰ) காவல்

ⅱ) விவசாயம்

ⅲ) தகவல் தொடர்பு

ⅳ) நாணயம்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: மாநில அரசாங்கம் மாநிலப் பட்டியல் மாநில அரசுச் சட்டம் இயற்ற அதிகாரம் உள்ள துறைகள்

• காவல்

• விவசாயம்

• நீர்ப்பாசனம்

பொதுப்பட்டியலில் குறிப்பிட்டுள்ள துறைகள் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டம் இயற்றலாம் . மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் இடையே முரண்பாடுகளின் போது மத்திய அரசின் அதிகாரமே மேலோங்கும். இந்த பட்டியலில் குறிப்பிடப்படாத எஞ்சியுள்ள அதிகாரங்கள் மத்திய அரசிடமே உள்ளது.

80) சாதாரண சட்ட முன்வரைவு தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) இது மக்களவை அல்லது மாநிலங்களவை எதில் வேண்டுமானாலும் கொண்டு வரப்படலாம்.

ⅱ) அமைச்சர் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும்

ⅲ) குடியரசுத்தலைவரின் பரிந்துரையில்லாமலே இது அறிமுகப்படுத்தப்படலாம்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: சாதாரண சட்ட முன்வரைவு:

இது மக்களவை அல்லது மாநிலங்களவை எதில் வேண்டுமானாலும் கொண்டு வரப்படலாம். இது அமைச்சர் அல்லது எந்த ஒரு உறுப்பினராலும் அறிமுகப்படுத்தப்படலாம். குடியரசுத்தலைவரின் பரிந்துரையில்லாமலே இது அறிமுகப்படுத்தப்படலாம். இதை மாநிலங்களவை திருத்தவோ நிராகரிக்கவோ முடியும்.

81) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) எந்த முடிவும் எடுக்காமல் ஆறுமாத காலத்திற்கு மாநிலங்களவை சாதாரண முன்வரைவை நிறுத்தி வைக்க முடியும்.

ⅱ) சாதாரண முன்வரைவு மக்களவையிலிருந்து வந்திருந்தாலும், அதற்கு மக்களவை சபாநாயகரின் சான்றளிப்பு தேவையில்லை.

ⅲ) குடியரசுத்தலைவர் சாதாரண முன்வரைவை நிராகரிக்க, மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்ப முடியும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: எந்த முடிவும் எடுக்காமல் ஆறுமாத காலத்திற்கு மாநிலங்களவை இம்முன்வரைவை நிறுத்தி வைக்க முடியும். இம்முன்வரைவு மக்களவையிலிருந்து வந்திருந்தாலும், அதற்கு மக்களவை சபாநாயகரின் சான்றளிப்பு தேவையில்லை. குடியரசுத்தலைவர் இம்முன்வரைவை நிராகரிக்க, மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்ப முடியும்.

82) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) ஈரவைகளும் ஏற்றுக் கொண்ட பிறகே முன்வரைவு குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

ⅱ) ஈரவைகளின் கருத்து வேறுபாட்டால் முடக்கம் ஏற்பட்டால், ஈரவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு குடியரசுத்தலைவர் அழைப்பு விடுப்பார்.

ⅲ) மாநிலங்களவையில் இம்முன்வரைவு தோல்வி அடைந்தால், அரசாங்கம் பதவி விலக நேரிடும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: ஈரவைகளும் ஏற்றுக் கொண்ட பிறகே இது குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இம்முன்வரைவை நிறைவேற்றுவதில், ஈரவைகளின் கருத்து வேறுபாட்டால் முடக்கம் ஏற்பட்டால், ஈரவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு குடியரசுத்தலைவர் அழைப்பு விடுப்பார். மக்களவையில் இம்முன்வரைவு தோல்வி அடைந்தால், அரசாங்கம் பதவி விலக நேரிடும். (முன்வரைவு ஓர் அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே)

83) நிதி சட்ட முன்வரைவு தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) இது மக்களவையில் மட்டுமே கொண்டுவரப்பட முடியும்.

ⅱ) நாடாளுமன்றத்தின் எந்த ஒரு உறுப்பினரும் இம்முன்வரைவை அறிமுகப்படுத்த முடியும்.

ⅲ) குடியரசுத்தலைவரின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே இது அறிமுகப்படுத்தலாம்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: நிதி சட்ட முன்வரைவு: இது மக்களவையில் மட்டுமே கொண்டுவரப்பட முடியும். அமைச்சர் மட்டுமே இம்முன்வரைவை அறிமுகப்படுத்த முடியும். குடியரசுத்தலைவரின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே இது அறிமுகப்படுத்தலாம்.

84) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) நிதி சட்ட முன்வரைவினை மாநிலங்களவை திருத்தவோ நிராகரிக்கவோ முடியாது.

ⅱ) மாநிலங்களவை, அதன் பரிந்துரையுடனோ அல்லது பரிந்துரையில்லாமலோ மக்களவைக்கு இம்முன்வரைவை திருப்பி அனுப்ப வேண்டும்.

ⅲ) நிதி முன்வரைவை 30 நாட்கள் வரை மட்டுமே மாநிலங்களவையில்வைத்திருக்க முடியும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: இதை மாநிலங்களவை திருத்தவோ நிராகரிக்கவோ முடியாது. மாநிலங்களவை, அதன் பரிந்துரையுடனோ அல்லது பரிந்துரையில்லாமலோ மக்களவைக்கு இம்முன்வரைவை திருப்பி அனுப்ப வேண்டும். அதை மக்களவை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். இம்முன்வரைவை 14 நாட்கள் வரை மட்டுமே மாநிலங்களவையில்வைத்திருக்க முடியும். மாநிலங்களவைக்கு இம்முன்வரைவு செல்லும்போது மக்களவை சபாநாயகரின் சான்றளிப்பு அவசியம்.

85) நிதி முன்வரைவு தொடர்பான பின்வருவனவற்றுள் தவறானவற்றைத்தேர்ந்தெடு.

ⅰ) மக்களவையில் மட்டுமே நிறைவேற்றினாலும்கூட இம்முன்வரைவு குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

ⅱ) முடக்கத்திற்கு இடமில்லாததால் கூட்டுக் கூட்டத்திற்கும் வழிவகையில்லை.

ⅲ) நிதி முன்வரைவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் மட்டுமே அளிக்க முடியும் நிராகரிக்க முடியாது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மக்களவையில் மட்டுமே நிறைவேற்றினாலும்கூட இம்முன்வரைவு குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஈரவைகளுக்கிடையே கருத்து வேறுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லாததால் முடக்கம் ஏற்படாது, கூட்டுக் கூட்டத்திற்கும் வழிவகையில்லை. மக்களவையில் இம்முன்வரைவு தோல்வி அடைந்தால் அரசாங்கம் பதவி விலக வேண்டும். இதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆனால் மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்ப முடியாது.

86) அரசமைப்புச் திருத்தச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதைப் பற்றி குறிப்பிடும் அரசமைப்பு உறுப்பு எது?

a) 368

b) 372

c) 328

d) 360

விளக்கம்: திருத்தச்சட்டங்களுக்கான நடைமுறைகள் மற்றும் வழிமுறைகள் இந்திய அரசமைப்பு, மாறும் காலச்சூழல் மற்றும் தேவைகளுக்கு பொருத்தமான வகையில் இருக்கும்படியும், அதேசமயம் அடிப்படை கட்டமைப்பு மாறாவண்ணம் இருக்குமாறும் ஒரு தனித்துவமான அமைப்பை கொண்டுள்ளது. உறுப்பு 368, அரசமைப்புச் திருத்தச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதைப் பற்றி குறிப்பிடுகிறது. அந்த திருத்தச்சட்டத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாடாளுமன்றத்திற்கு உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது.

87) கீழ்க்கண்டவற்றுள் அரசமைப்பு திருத்தச்சட்டத்தை மேற்கொள்ளும் நடைமுறைகள் எவை?

ⅰ) அரசமைப்பில் ஏற்படுத்தப்படும் திருத்தம், நாடாளுமன்றத்தின் ஈரவைகளிலும் ஒரு முன்வரைவாக சமர்ப்பிக்கப்படும்.

ⅱ) தனித்தனியாக ஒவ்வொரு அவையிலும், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 60 சதவீதத்திற்கு மேல் ஆதரவு பெற்றிருக்க வேண்டும்.

ⅲ) வாக்கு செலுத்தியவர்களின் எண்ணிக்கை, மூன்றில் இரண்டு பங்குக்கு குறையாத பெரும்பான்மை ஆதரவைப்பெற்று நிறைவேற்றப்பட வேண்டும்.

ⅳ) பின்னர் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ), ⅳ)

விளக்கம்: அரசமைப்பு திருத்தச்சட்டத்தை மேற்கொள்ளும் நடைமுறைகள் பின் வருமாறு: 1. அரசமைப்பிலுள்ள சில விதிகளில் திருத்தங்களை செய்ய, சிலவற்றை சேர்க்க, மாற்றியமைக்க அல்லது நீக்க, நாடாளுமன்றம் இந்த பிரிவில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளின்படி செயல்படலாம். 2. அரசமைப்பில் ஏற்படுத்தப்படும் திருத்தம், நாடாளுமன்றத்தின் ஈரவைகளிலும் ஒரு முன்வரைவாக சமர்ப்பிக்கப்பட்டு, தனித்தனியாக ஒவ்வொரு அவையிலும், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மேல் ஆதரவும், வாக்கு செலுத்தியவர்களின் எண்ணிக்கை, மூன்றில் இரண்டு பங்குக்கு குறையாத பெரும்பான்மை ஆதரவைப்பெற்று நிறைவேற்றப்பட்டால், அது பின்னர் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.

88) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) திருத்தச்சட்ட முன்வரைவு ஒவ்வொரு அவையிலும் ஒரு சிறப்பு பெரும்பான்மை பெற்று நிறைவேற்றப்பட வேண்டும்.

ⅱ) அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான பெரும்பான்மை எண்ணிக்கை கொண்டிருக்க வேண்டும்.

ⅲ) வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும்.

ⅳ) ஒவ்வொரு அவையும் தனித்தனியாக அந்த முன்வரைவை நிறைவேற்ற வேண்டும்.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: அந்த முன்வரைவு ஒவ்வொரு அவையிலும் ஒரு சிறப்பு பெரும்பான்மை பெற்று நிறைவேற்றப்பட வேண்டும். அதாவது அந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான பெரும்பான்மை எண்ணிக்கை கொண்டிருக்க வேண்டும். மற்றும் வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும். ஒவ்வொரு அவையும் தனித்தனியாக அந்த முன்வரைவை நிறைவேற்ற வேண்டும்.

89) தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) ஒருவேளை திருத்த நடவடிக்கைகள் காரணமாக ஈரவைகளுக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றுமென்றால் கூட்டு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கலாம்.

ⅱ) ஒருவேளை முன்வரைவில் அரசமைப்பின் கூட்டாட்சி வகைமுறைகள் குறித்து திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருந்தால், மொத்த மாநிலங்களின் எண்ணிக்கையில், பாதி மாநிலங்களின் தனிப்பெரும்பான்மை தேவை.

ⅲ) சட்டமன்றங்களில் வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களின் பெரும்பான்மை தேவை.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: ஒருவேளை திருத்த நடவடிக்கைகள் காரணமாக ஈரவைகளுக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றுமென்றால் ஈரவைகளையும் இணைந்து நடத்துவதற்கான வழிமுறைகள் எதுவுமில்லை. ஒருவேளை முன்வரைவில் அரசமைப்பின் கூட்டாட்சி வகைமுறைகள் குறித்து ஏதேனும் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருந்தால், மொத்த மாநிலங்களின் எண்ணிக்கையில், பாதி மாநிலங்களின் தனிப்பெரும்பான்மை ஏற்படுத்தி அதாவது அத்தகைய சட்டமன்றங்களில் வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களின் பெரும்பான்மை தேவை.

90) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) தேவைப்பட்ட இடங்களில் அந்தந்த மாநிலச் சட்டமன்றங்களால் உறுதிசெய்யப்பட்ட பிறகு முன்வரைவு ஒப்புதலுக்காக குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும்.

ⅱ) அந்த முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது அல்லது மறு பரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்றத்துக்கு திருப்பி அனுப்புவது போன்றவற்றை குடியரசுத்தலைவரால் செய்ய இயலாது.

ⅲ) குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு அது சட்டமாகிறது, அரசமைப்பு விதிமுறைகளின் அடிப்படையில் அந்த சட்டம் திருத்தமடைகிறது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: நாடாளுமன்றத்தின் ஈரவைகளிலும் முறையாக நிறைவேற்றப்பட்டு மற்றும் தேவைப்பட்ட இடங்களில் அந்தந்த மாநிலச் சட்டமன்றங்களால் உறுதிசெய்யப்பட்ட பிறகு அந்த முன்வரைவு ஒப்புதலுக்காக குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது அல்லது மறு பரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்றத்துக்கு திருப்பி அனுப்புவது போன்றவற்றை குடியரசுத்தலைவரால் செய்ய இயலாது. குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு அது சட்டமாகிறது. (அதாவது ஒரு அரசமைப்பு திருத்தச்சட்டம்) அரசமைப்பு விதிமுறைகளின் அடிப்படையில் அந்த சட்டம் திருத்தமடைகிறது.

91) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) உறுப்பு 360, இரண்டு வகையான சட்ட திருத்தச்சட்டங்களுக்கு வழிவகை செய்கிறது.

ⅱ) நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மற்றும் 50% மாநிலங்கள் தனி பெரும்பான்மை மூலம் திருத்தச்சட்டங்கள் மேற்கொள்ளலாம்.

ⅲ) சட்டம் இயற்றல் நடவடிக்கையைப் போன்றே தனித்தனியாக ஒவ்வொரு சபையிலும், வருகை புரிந்து வாக்கு அளிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மை தேவை.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: திருத்தச்சட்டங்களின் வகைகள்: உறுப்பு 368, இரண்டு வகையான சட்ட திருத்தச்சட்டங்களுக்கு வழிவகை செய்கிறது. நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மற்றும் 50% மாநிலங்கள் தனி பெரும்பான்மை மூலம் திருத்தச்சட்டங்கள் மேற்கொள்ளலாம். ஆனால் வேறு சில உறுப்புகள் அரசமைப்பில் உள்ள சில வகைமுறைகளில் திருத்தச்சட்டம் மேற்கொள்ள நாடாளுமன்றத்தின் தனிப்பெரும்பான்மை மட்டுமே தேவை. அதாவது அது சட்டம் இயற்றல் நடவடிக்கையைப் போன்றே தனித்தனியாக ஒவ்வொரு சபையிலும், வருகை புரிந்து வாக்கு அளிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மை தேவை.

92) அரசமைப்பு திருத்தச்சட்டங்களை பின்வரும் எந்த வழிகளில் மேற்கொள்ளலாம்?

ⅰ) நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை

ⅱ) நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை

ⅲ) நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை மற்றும் சரி பாதி மாநிலச் சட்டமன்றங்களால் ஏற்புறுதி செய்யப்படுவது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: அரசமைப்பு திருத்தச்சட்டங்களை மூன்று வழிகளில் மேற்கொள்ளலாம்: 1. நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை 2. நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை, மற்றும் 3. நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை மற்றும் சரி பாதி மாநிலச் சட்டமன்றங்களால் ஏற்புறுதி செய்யப்படுவது.

93) பின்வருவனவற்றுள் நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை மூலம் நிறைவேற்றப்படுபவை எவை?

ⅰ) புதிய மாநிலங்களை அனுமதிப்பது மற்றும் உருவாக்குவது

ⅱ) தற்போது இருக்கும் மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைப்பது அவற்றின் பெயர்களில் மாற்றங்கள் செய்வது.

ⅲ) மாநிலப்பட்டியலில் உள்ளவற்றை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: 1. நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை: உறுப்பு 368-இன்படி அரசமைப்பின் பெரும் எண்ணிக்கையிலான சட்ட விதிகள் நாடாளுமன்றத்தின் ஈரவைகளில் தனிப்பெரும்பான்மை மூலம் திருத்தி அமைக்கப்படலாம். விதிமுறைகள், பின்வருவனவற்றில் உள்ளடக்கம்:

* புதிய மாநிலங்களை அனுமதிப்பது மற்றும் உருவாக்குவது. மேலும் தற்போது இருக்கும் மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைப்பது, அவற்றின் பெயர்களில் மாற்றங்கள் செய்வது.

* மாநிலங்களில் மேலவையை உருவாக்குவது அல்லது நீக்குவது.

94) பின்வருவனவற்றுள் அரசமைப்பு இரண்டாம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருப்பது எது?

a) குடியரசுத்தலைவர், மாநில ஆளுநர், சபாநாயகர், நீதிபதிகள் போன்றோருக்கு ஊதியம், படிகள், சிறப்புச் சலுகைகளை நிர்ணயிப்பது.

b) நாடாளுமன்றத்தில் அமர்விற்கு குறைந்த பட்ச உறுப்பினர் எண்ணிக்கையை முடிவு செய்வது.

c) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் படிகள் நிர்ணயிப்பது.

d) நாடாளுமன்றம், நாடாளுமன்றக் குழுக்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோரின் சிறப்பு உரிமைகள்

விளக்கம்: நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை:

* குடியரசுத்தலைவர், மாநில ஆளுநர், சபாநாயகர், நீதிபதிகள் போன்றோருக்கு அரசமைப்பு இரண்டாம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊதியம், படிகள், சிறப்புச் சலுகைகளை நிர்ணயிப்பது.

* நாடாளுமன்றத்தில் அமர்விற்கு குறைந்த பட்ச உறுப்பினர் எண்ணிக்கையை முடிவு செய்வது.

* நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் படிகள் நிர்ணயிப்பது.

95) பின்வருவனவற்றுள் நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை மூலம் நிறைவேற்றப்படுபவை எவை?

ⅰ) நாடாளுமன்ற நடைமுறை விதிகளை உருவாக்குதல்

ⅱ) நாடாளுமன்றத்தில் ஆங்கில மொழி பயன்பாடு

ⅲ) உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்தல்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: நாடாளுமன்ற நடைமுறை விதிகளை உருவாக்குதல்

* நாடாளுமன்ற நடைமுறை விதிகளை உருவாக்குதல்.

* நாடாளுமன்றம், நாடாளுமன்றக் குழுக்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோரின் சிறப்பு உரிமைகள்.

* நாடாளுமன்றத்தில் ஆங்கில மொழி பயன்பாடு.

* உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்தல்.

* உச்ச நீதிமன்றத்தின் மேலும் அதிக அதிகாரம் வழங்குதல்.

* அலுவல் ஆட்சி மொழியை பயன்படுத்துதல்.

96) கீழ்க்கண்டவற்றுள் பழங்குடி இன பகுதிகளை நிர்வகித்தல் குறித்து கூறும் அட்டவணை எது?

a) இரண்டாம் அட்டவணை

b) ஐந்தாம் அட்டவணை

c) நான்காம் அட்டவணை

d) ஆறாம் அட்டவணை

விளக்கம்: * குடியுரிமை அளித்தல் மற்றும் ரத்து செய்தல்.

* நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள்.

* தொகுதிகளின் எல்லைகளை வரையறுத்தல்.

* ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதி.

* ஐந்தாம் அட்டவணை-பட்டியலின மற்றும் பழங்குடி இன பகுதிகளை நிர்வகித்தல்.

* ஆறாம் அட்டவணை-பழங்குடி இன பகுதிகளை நிர்வகித்தல்.

97) நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மை மற்றும் வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சமாக இரண்டில் ஒரு பங்கு பெரும்பான்மை.

ⅱ) அவையின் மொத்த உறுப்பினர்கள் என்று குறிப்பிடுவது அவையில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையாகும்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மூலமாக அரசமைப்பின் பெரும்பாலான சட்ட விதிகள் நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மூலம் திருத்தி அமைக்கப்பட வேண்டும். அதாவது ஒவ்வொரு அவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மை (அதாவது 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக) மற்றும் ஒவ்வொரு அவையிலும் வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சமாக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை. அவையின் மொத்த உறுப்பினர்கள் என்று குறிப்பிடுவது அவையில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையாகும்.

98) பின்வருவனவற்றுள் நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மூலம் நிறைவேற்றப்படுபவை எவை?

ⅰ) அடிப்படை உரிமைகள்

ⅱ) அரசுக்கொள்கைகளை வழி நடத்தும் நெறிமுறைகள்

ⅲ) முதல் மற்றும் மூன்றாவது பிரிவுகளில் குறிப்பிடப்படாத மற்ற விதிமுறைகள்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: முன்வரைவின் மூன்றாவது வாசிப்பின் போது இந்த சிறப்பு பெரும்பான்மை தேவைப்படும். (i) அடிப்படை உரிமைகள் (ii) அரசுக்கொள்கைகளை வழி நடத்தும் நெறிமுறைகள் மற்றும் (iii) முதல் மற்றும் மூன்றாவது பிரிவுகளில் குறிப்பிடப்படாத மற்ற விதிமுறைகள். இவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளும்போது மேற்கண்ட வழிமுறை பின்பற்றப்பட வேண்டும்.

99) நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மூலம் திருத்தம் செய்தலும் மற்றும் மாநிலங்களின் ஒப்புதலும் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) குடியுரிமையின் கூட்டாட்சி அமைப்புடன் தொடர்புடைய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு இவ்வாறு திருத்தியமைக்கப்படலாம்.

ⅱ) மாநிலங்கள் முன்வரைவுக்கு தனது ஒப்புதலை அளிக்க 6 மாத கால அவகாசம் உண்டு.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மூலம் திருத்தம் செய்தலும் மற்றும் மாநிலங்களின் ஒப்புதலும்: குடியுரிமையின் கூட்டாட்சி அமைப்புடன் தொடர்புடைய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மற்றும் 50% மாநிலச் சட்டமன்றங்களின் தனிப்பெரும்பான்மை ஒப்புதலுடன் திருத்தியமைக்கப்படலாம். மாநிலங்கள் முன்வரைவுக்கு தனது ஒப்புதலை அளிக்க எந்த விதமான கால வரையறையும் கிடையாது.

100) பின்வருவனவற்றுள் நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மூலம் திருத்தப்படுபவை எவை?

ⅰ) பிரதமரைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் அதன் முறைகள்.

ⅱ) மத்திய மற்றும் மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தின் விரிவாக்கம்.

ⅲ) உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதி மன்றங்கள்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மூலம் திருத்துதல் மற்றும் மாநிலங்களின் ஒப்புதல் பெறும் வகையில் கீழ்க்கண்ட விதிமுறைகள் திருத்தி அமைக்கப்படலாம்.

* குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் அதன் முறைகள்.

* மத்திய மற்றும் மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தின் விரிவாக்கம்.

* உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதி மன்றங்கள்.

* மத்திய மற்றும் மாநிலங்களிக்கிடையில் சட்டம் இயற்றும் அதிகாரத்தை பகிர்ந்தளித்தல்.

101) ஏழாவது அட்டவணையில் அடங்கியுள்ள எந்த ஒரு பட்டியலும் எந்த வகை திருத்தத்தின் மூலம் திருத்தப்படும்?

a) சாதாரண பெரும்பான்மை

b) நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை

c) நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மற்றும் மாநிலங்களின் ஒப்புதல் பெறுதல்

d) a) மற்றும் b)

விளக்கம்: ஏழாவது அட்டவணையில் அடங்கியுள்ள எந்த ஒரு பட்டியலும். ϖ  நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம். ϖ  அரசமைப்பு மற்றும் அதன் நடைமுறைகளை திருத்தியமைக்கும் நாடாளுமன்றத்தின் அதிகாரம். (உறுப்பு-368)

102) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) மாநிலச் சட்டமன்ற கட்டமைப்பு அரசமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பில் மாநிலங்கள் இரண்டாவது அடுக்கில் இருக்கிறது.

ⅱ) ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களுக்கு தனி அரசமைப்பு இருப்பதால் அவற்றைத் தவிர மற்ற மாநிலங்களை ஆட்சி செய்யும் விதிமுறைகள் அரசமைப்பு VI பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ⅲ) 152-லிருந்து 237 வரையிலான மாநிலச் சட்டமன்றங்கள் குறித்து முழுமையாக விளக்குகிறது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மாநிலச் சட்டமன்றம்: கட்டமைப்பு, அதிகாரம் மற்றும் செயல்பாடுகள்: மாநிலச் சட்டமன்ற கட்டமைப்பு அரசமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பில் மாநிலங்கள் இரண்டாவது அடுக்கில் இருக்கிறது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களுக்கு தனி அரசமைப்பு இருப்பதால் அவற்றைத் தவிர மற்ற மாநிலங்களை ஆட்சி செய்யும் விதிமுறைகள் அரசமைப்பு VI பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 152-லிருந்து 237 வரையிலான மாநிலச் சட்டமன்றங்கள் குறித்து முழுமையாக விளக்குகிறது.

103) மாநிலச் சட்டமன்றம் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) மாநிலச் சட்டமன்றத்தில் மக்கள் மன்றமாக சட்டசபை மட்டுமே அமையப்பெற்றிருந்தால் அது சட்டபேரவை என்று அழைக்கப்படும்.

ⅱ) பெரும்பாலான அதிகாரங்களும் மற்றும் செயல்பாடுகளும் கிட்டத்தட்ட ஒன்றியச் சட்டமன்ற அமைப்பைப் போன்றதே.

ⅲ) சட்டமன்றம் மாநிலச் சட்டசபையை மட்டும் கொண்டிருக்கும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மாநிலச் சட்டமன்றத்தில் மக்கள் மன்றமாக சட்டசபை மட்டுமே அமையப்பெற்றிருந்தால் அது சட்டபேரவை என்று அழைக்கப்படும். பெரும்பாலான அதிகாரங்களும் மற்றும் செயல்பாடுகளும் கிட்டத்தட்ட ஒன்றியச் சட்டமன்ற அமைப்பைப் போன்றதே. சட்டமன்றம் மாநிலச் சட்டசபை மற்றும் சட்ட மேலவை இரண்டையும் கொண்டிருக்கும்.

104) ஆளுநர் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) மாநில நிர்வாகத்தின் உண்மையான நிர்வாக தலைவராக ஆளுநர் இருப்பார்.

ⅱ) மாநிலத்தின் செயல் அதிகாரம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும்.

ⅲ) மாநிலத்தில் அனைத்து செயல்திட்ட நடவடிக்கைகளும் ஆளுநரின் பெயராலேயே நடைபெற வேண்டும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: ஆளுநர்: மாநில நிர்வாகத்தின் அரசமைப்புத் தலைவராக ஆளுநர் இருப்பார். மற்றும் மாநிலத்தின் செயல் அதிகாரம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும். மாநிலத்தில் அனைத்து செயல்திட்ட நடவடிக்கைகளும் ஆளுநரின் பெயராலேயே நடைபெற வேண்டும். மாநிலத்தின் ஆளுநர் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுவார். ஆளுநர் ஐந்தாண்டு காலம் பதவியிலமர்த்தப்படுவார். அல்லது குடியரசுத்தலைவரின் விரும்பும் காலம் வரை பதவியிலிருப்பார்; அல்லது அவரைத் தொடர்ந்து வேறொருவர் பதவியில் அமர்த்தப்படும்வரை பதவியில் இருப்பார்.

105) ஆளுநரின் தகுதி தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) ஆளுநராக பதவியில் அமர்த்தப்படுவதற்கான தகுதி அவர்/அவள் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.

ⅱ) ஆளுநர் ஒரு முறைக்கு மேல் பதவியிலமர்த்தப்படலாம்.

ⅲ) அவசர தேவைக்காக (உடனடி) அல்லது ஒரு மாற்று ஏற்பாடாக ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு உதவி ஆளுநராக பதவியில் இருக்கலாம்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: ஆளுநராக பதவியில் அமர்த்தப்படுவதற்கான தகுதி அவர்/அவள் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். இலாபம் ஈட்டும் பதவி எதுவும் வகிக்கக் கூடாது. மேலும் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ஆளுநர் ஒரு முறைக்கு மேல் பதவியிலமர்த்தப்படலாம். அவசர தேவைக்காக (உடனடி) அல்லது ஒரு மாற்று ஏற்பாடாக ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக பதவியில் இருக்கலாம்.

106) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) ஒரு மாநில ஆளுநர் குடியரசுத்தலைவரைப் போலவே ஆட்சித்துறை, சட்டமன்றம், நீதித்துறை மற்றும் அவசரகால அதிகாரங்களைக் கொண்டிருப்பார்.

ⅱ) இலக்கியம், அறிவியல், கலை கூட்டுறவு இயக்கம் ஆகியவற்றில் சிறப்பு அறிவு படைத்தவர்களை மேலவை உறுப்பினர்களாக காலியாக இருக்கும் இடங்களில் நியமிக்கும் அதிகாரம் பெற்றவர்.

ⅲ) ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தில் அமைச்சரவை நியமனம், மாநிலத்தின் சட்டமன்றத்துக்கு ஆங்கிலோ- இந்திய இனத்திலிருந்து உறுப்பினர்களை நியமிப்பது போன்றவைகளும் அடங்கும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: ஆளுநரின் அதிகாரங்களும் பணிகளும்: ஒரு மாநில ஆளுநர் குடியரசுத்தலைவரைப் போலவே ஆட்சித்துறை, சட்டமன்றம், நீதித்துறை மற்றும் அவசரகால அதிகாரங்களைக் கொண்டிருப்பார். ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தில் அமைச்சரவை நியமனம், மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர் மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் நியமனம், மாநிலத்தின் சட்டமன்றத்துக்கு ஆங்கிலோ- இந்திய இனத்திலிருந்து உறுப்பினர்களை நியமிப்பது போன்றவைகளும் அடங்கும். இலக்கியம், அறிவியல், கலை கூட்டுறவு இயக்கம் ஆகியவற்றில் சிறப்பு அறிவு படைத்தவர்களை மேலவை உறுப்பினர்களாக காலியாக இருக்கும் இடங்களில் நியமிக்கும் அதிகாரம் பெற்றவர்.

107) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) ஆளுநர் மக்களவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 1/5 பங்கு உறுப்பினர்களை நியமிக்கமுடியும்.

ⅱ) ஆளுநர் “தன் விருப்புரிமைக்கு’’ ஏற்ப சிறப்பு அரசமைப்புக் கடமைகளை நிறைவேற்றும் அதிகாரம் கொண்டவர்.

ⅲ) சில எதிர்பாராத சந்தர்ப்பங்களில் ஆளுநர் அமைச்சரவை ஆலோசனைகள் இன்றி செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: ஆளுநர் மக்களவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 1/6 பங்கு உறுப்பினர்களை நியமிக்கமுடியும். ஆளுநர் “தன் விருப்புரிமைக்கு’’ ஏற்ப சிறப்பு அரசமைப்புக் கடமைகளை நிறைவேற்றும் அதிகாரம் கொண்டவர். அவ்வப்போது குடியரசுத்தலைவர் வழிகாட்டுதலின் அடிப்படையில் அவரது சிறப்பு கடமைகளை அதிகார பூர்வமாக நிறைவேற்றலாம். சில எதிர்பாராத சந்தர்ப்பங்களில் ஆளுநர் அமைச்சரவை ஆலோசனைகள் இன்றி செயல்படலாம்.

108) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) ஆளுநர் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடையே பாலமாக செயல்படுகிறார்.

ⅱ) எந்த ஒரு முன்வரைவும் சட்டமாக இயற்றப்படுவதற்கு ஆளுநரின் ஒப்புதல் தேவை.

ⅲ) மாநிலத்தின் நிகழ்வுகளை ஆளுநர் ஆறு மாதத்திற்கு ஒருமுறை குடியரசுத்தலைவருக்கு தெரிவிப்பார்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: ஆளுநர் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடையே பாலமாக செயல்படுகிறார். மாநிலத்தின் நிகழ்வுகளை ஆளுநர் உடனுக்குடன் குடியரசுத்தலைவருக்கு தெரிவிப்பார். ஆளுநர் மாநிலச் சட்டமன்றத்தின் ஒரு அங்கமாவார். ஆளுநரின் சட்ட அதிகாரம் சட்டமன்றத்தில் உரையாற்றுதல், மற்றும் செய்திகள் அனுப்புதல், சட்டமன்றத்தை கூட்டுதல், கூட்டத்தொடரை ஒத்திவைத்தல் மற்றும் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைத்தல் ஆகியவையாகும். எந்த ஒரு முன்வரைவும் சட்டமாக இயற்றப்படுவதற்கு ஆளுநரின் ஒப்புதல் தேவை.

109) ஆளுநரின் மறுப்புரிமை அதிகாரங்கள் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) அவர் ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைக்கலாம் அப்போது அது சட்டமாவது தவிர்க்கப்படும்.

ⅱ) முன்வரைவைத் தவிர்த்து எந்த ஒரு முன்வரைவையும் மறு பரிசீலனைக்காக மாநிலச் சட்டமன்றத்துக்கு திருப்பி அனுப்ப முடியாது.

ⅲ) ஆளுநர், தேவை என்று கருதினால் ஒரு முன்வரைவை குடியரசுத்தலைவரின் கருத்துக்காக நிறுத்திவைக்கலாம்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: ஆளுநரின் மறுப்புரிமை அதிகாரங்கள் பின்வருமாறு: 1. அவர் ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைக்கலாம் அப்போது அது சட்டமாவது தவிர்க்கப்படும் 2. முன்வரைவைத் தவிர்த்து எந்த ஒரு முன்வரைவையும் மறு பரிசீலனைக்காக மாநிலச் சட்டமன்றத்துக்கு திருப்பி அனுப்பலாம். இதில் அவர்/அவள் மறுப்புரிமை அதிகாரத்தை இரண்டாவதுமுறை பயன்படுத்த முடியாது. மாநிலச் சட்டமன்றம் திருத்தியோ அல்லது திருத்தாமலோ மீண்டும் அந்த முன்வரைவை நிறைவேற்றி திரும்ப அனுப்பும் பட்சத்தில் அதற்கு ஒப்புதல் அளிப்பதைத்தவிர அவருக்கு வேறு வழியில்லை. 3. ஆளுநர், தேவை என்று கருதினால் ஒரு முன்வரைவை குடியரசுத்தலைவரின் கருத்துக்காக நிறுத்திவைக்கலாம்.

110) ஆளுநரின் நீதித்துறை அதிகாரம் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) மாநிலத்தின் செயலதிகாரத்துக்கு உட்பட்ட எந்த ஒரு குற்றத்துக்காகவும் எந்த ஒரு சட்டத்தின்தொடர்பாகவும் தண்டிக்கப்பட்ட ஒரு நபருக்கு மன்னிப்பளிப்பது.

ⅱ) தண்டனையை நிறுத்தி வைப்பது

ⅲ) நிறைவேற்றுவதை தாமதப்படுத்துவது

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: ஆளுநரின் நீதித்துறை அதிகாரம் என்பது, மாநிலத்தின் செயலதிகாரத்துக்கு உட்பட்ட எந்த ஒரு குற்றத்துக்காகவும் எந்த ஒரு சட்டத்தின்தொடர்பாகவும் தண்டிக்கப்பட்ட ஒரு நபருக்கு மன்னிப்பளிப்பது, தண்டனையை நிறுத்தி வைப்பது, நிறைவேற்றுவதை தாமதப்படுத்துவது அல்லது தண்டனையைக் குறைப்பது போன்றவையாகும்.

111) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) ஆளுநருக்கு மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளை பணியமர்த்தும் அதிகாரம் உண்டு.

ⅱ) இந்த விவகாரத்தில் குடியரசுத்தலைவர் ஆளுநரிடம் ஆலோசிக்க வேண்டிய உரிமையைக் கொண்டவர்.

ⅲ) உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பணியில் அமர்த்தும் அதிகாரம் நீதித்துறை இந்தியக் குடியரசுத்தலைவர் அதிகாரத்தின் கீழ் வருகிறது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: ஆளுநருக்கு மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளை பணியமர்த்தும் அதிகாரம் கிடையாது. ஆனால் இந்த விவகாரத்தில் குடியரசுத்தலைவர் அவரிடம் ஆலோசிக்க வேண்டிய உரிமையைக் கொண்டவர். உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பணியில் அமர்த்தும் அதிகாரம் நீதித்துறை இந்தியக் குடியரசுத்தலைவர் அதிகாரத்தின் கீழ் வருகிறது.

112) மாநிலத்தில் அரசியல் சாசன சீர்குலைவு தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) குடியரசுத்தலைவருக்கு இருப்பதைப் போன்ற அவசரகால அதிகாரங்கள் ஆளுநருக்கு கிடையாது.

ⅱ) அரசியல் சாசன சீர்குலைவு அல்லது மாநிலத்தில் ஏதாவது நெருக்கடி நேரும்போது குடியரசுத்தலைவரை பதவியேற்குமாறு ஆலோசனை வழங்கி அறிக்கை அனுப்ப இயலும்.

ⅲ) 352 – உறுப்பின்படி மாநில அரசுப் பணிகளை அவர் மேற்கொள்ள முடியும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: குடியரசுத்தலைவருக்கு இருப்பதைப் போன்ற அவசரகால அதிகாரங்கள் ஆளுநருக்கு கிடையாது. ஆனால் அரசியல் சாசன சீர்குலைவு அல்லது மாநிலத்தில் ஏதாவது நெருக்கடி நேரும்போது குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டுமென்றால் குடியரசுத்தலைவரை பதவியேற்குமாறு ஆலோசனை வழங்கி ஆளுநர் குடியரசுத்தலைவருக்கு அறிக்கை அனுப்ப இயலும். அவ்வாறான சூழ்நிலைகளில் ஆளுநர் குடியரசுத்தலைவரின் முகவராக செயல்படுகிறார். அப்போது 356 – உறுப்பின்படி மாநில அரசுப் பணிகளை அவர் மேற்கொள்ள முடியும்.

113) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) அரசு, நிர்வாகம், மற்றும் அமைச்சரவைக்கு தலைமை ஏற்று நடத்த முதலமைச்சரை ஆளுநர் பதவியிலமர்த்துகிறார்.

ⅱ) மக்கள் சார் அரசமைப்பு கொள்கைகளின் அடிப்படையில் ஈரவைகளிலும் உறுப்பினர் அல்லாத ஒருவரைகூட முதலமைச்சராக நியமிக்க முடியும்.

ⅲ) அவர்/அவள் பதவியிலமர்த்தப்பட்ட தினத்திலிருந்து 3 மாத காலத்துக்குள் ஏதாவதொரு தொகுதியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: முதலமைச்சரின் செயல்பாடுகளும் அதிகாரங்களும்: அரசு, நிர்வாகம், மற்றும் அமைச்சரவைக்கு தலைமை ஏற்று நடத்த முதலமைச்சரை ஆளுநர் பதவியிலமர்த்துகிறார். அமைச்சரவை முதலமைச்சரின் பரிந்துரைப்படி ஆளுநரால் நியமிக்கப்படுகிறது. மக்கள் சார் அரசமைப்பு கொள்கைகளின் அடிப்படையில் ஈரவைகளிலும் உறுப்பினர் அல்லாத ஒருவரைகூட முதலமைச்சராக நியமிக்க முடியும். ஆனால் அவர்/அவள் பதவியிலமர்த்தப்பட்ட தினத்திலிருந்து ஆறு மாத காலத்துக்குள் ஏதாவதொரு தொகுதியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

114) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) மாநிலச் சட்டமன்றத்தின் குழுக்கள் மற்றும் அதிகாரிகளும் மாநிலச் சட்டமன்றத்தின் சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினர்களால் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

ⅱ) சட்டமன்ற நடவடிக்கைகளை ஒழுங்காகவும், கண்ணியத்தை கடைபிடித்து நடக்கவும் அதிகாரங்களையும் பெற்றவராவார்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: விளக்கம்: மாநிலச் சட்டமன்றத்தின் குழுக்கள் மற்றும் அதிகாரிகளும் மாநிலச் சட்டமன்றத்தின் சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினர்களால் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சட்டமன்றத்தை தலைமை தாங்கி நடத்துபவர் அவர்தான். சட்டமன்ற நடவடிக்கைகளை ஒழுங்காகவும், கண்ணியத்தை கடைபிடித்து நடக்கவும் மற்றும் அதன் நடவடிக்கைகளின் போது உறுப்பினர்களை கேள்வி கேட்க அனுமதிப்பது, முக்கியமான விஷயங்களில் மற்றும் நிதிநிலை அறிக்கை மற்றும் நிதி ஒதுக்கீடு சமயங்களில் பேச அனுமதிப்பது போன்ற கடமைகளையும் அதிகாரங்களையும் பெற்றவராவார்.

115) சபாநாயகரின் அதிகாரம் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) பேரவைக்குள் சட்டமன்ற நடவடிக்கை முன்மாதிரிகள் ஆகியவற்றின் பொருள் விளக்குவது

ⅱ) சபாநாயகர்தான் சட்டமன்ற நடவடிக்கைகளின் போது விதிகள் நடைமுறைகள் மற்றும் ஒழுங்கு முறைகள் மீறப்படுமேயானால் சட்டமன்றச் கூட்டத்தொடரை ஒத்தி வைக்கவும் சபாநாயகருக்கு அதிகாரம் உண்டு.

ⅲ) கூட்டுத்தொடரில் பங்குபெறாமல் உறுப்பினர்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: அரசியல் சாசனத்திலுள்ள விதிகள், சட்டமன்ற நடைமுறை விதிகள், பேரவைக்குள் சட்டமன்ற நடவடிக்கை முன்மாதிரிகள் ஆகியவற்றின் பொருள் விளக்குவது சபாநாயகர்தான் சட்டமன்ற நடவடிக்கைகளின் போது விதிகள் நடைமுறைகள் மற்றும் ஒழுங்கு முறைகள் மீறப்படுமேயானால் சட்டமன்றச் கூட்டத்தொடரை ஒத்திவைக்கவும், தற்காலிகமாக நிறுத்திவைக்கவும் மற்றும் மீண்டும் தொடரச் செய்யவும் மற்றும் கூட்டுத்தொடரில் பங்குபெறாமல் உறுப்பினர்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் சபாநாயகருக்கு அதிகாரம் உண்டு.

116) தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) சட்டமன்றம் நடைபெறும்பொழுது சபாநாயகர் பொதுவாக நடுநிலை மற்றும் பாரபட்சமின்மையை மேற்கொள்ளுவார்.

ⅱ) ஒரு முன்வரைவு, மற்றும் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க முடியாமல் வாக்கு சமநிலையிலிருந்தால் சபாநாயகரின் வாக்கு மிக முக்கியத்துவம் பெறுகிறது.

ⅲ) சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து அல்லது சட்டமன்றத்தில் ஒழுங்கை பராமரிப்பது ஆகியவற்றில் நீதிமன்றத்தின் முடிவே இறுதியானது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: சட்டமன்றம் நடைபெறும்பொழுது சபாநாயகர் பொதுவாக நடுநிலை மற்றும் பாரபட்சமின்மையை மேற்கொள்ளுவார். ஒரு முன்வரைவு, மற்றும் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க முடியாமல் வாக்கு சமநிலையிலிருந்தால் சபாநாயகரின் வாக்கு மிக முக்கியத்துவம் பெறுகிறது. உறுப்பினர்களின் நடத்தையை ஒழுங்குபடுத்துவதில் மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து அல்லது சட்டமன்றத்தில் ஒழுங்கை பராமரிப்பது ஆகியவற்றில் சபாநாயகரின் முடிவே இறுதியானது. அம்மாதிரி விஷயங்களில் சபாநாயகரின் நடவடிக்கைகளில் நீதிமன்றம் குறுக்கிடமுடியாது. அனைத்து குழுக்களின் தலைவர்களையும் சபாநாயகர்தான் நியமிக்கிறார் மற்றும் அவர்களின் செயல்பாடுகளையும் மேற்பார்வையிடுகிறார்.

117) துணை சபாநாயகர் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களில் ஒருவரையே துணை சபாநாயகராகவும் தேர்ந்தெடுப்பார்கள்.

ⅱ) சபாநாயகர் அவையில் இல்லாத பொழுது, துணை சபாநாயகர், சபாநாயகரின் கடமைகளையும் பொறுப்புகளையும் செயல்படுத்துவார்.

ⅲ) துணை சபாநாயகருக்கு, சபாநாயகருக்கு சமமான அதிகாரங்கள் கிடையாது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: துணை சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களில் ஒருவரையே துணை சபாநாயகராகவும் தேர்ந்தெடுப்பார்கள். சபாநாயகர் அவையில் இல்லாத பொழுது, துணை சபாநாயகர், சபாநாயகரின் கடமைகளையும் பொறுப்புகளையும் செயல்படுத்துவார், அவைக்குத் தலைமை தாங்குவார். துணை சபாநாயகருக்கு, சபாநாயகருக்கு சமமான அதிகாரங்கள் அவைக்குள் உண்டு. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இருவரும் அவையில் இல்லாத பொழுது, அவையில் உள்ள மூத்த உறுப்பினர் யார் வேண்டுமானாலும் அவைக்குத் தலைமை தாங்கலாம்.

118) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) நாடாளுமன்றக் குழுக்கள் நாடாளுமன்றக் குழுக்களை 3 வகைகளாகப் பிரிக்கலாம்.

ⅱ) நிலைக் குழுக்கள், நிரந்தரமானவையாகும், தொடர்ந்து பணியில் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக உருவாக்கப்படும்.

ⅲ) தற்காலிக குழுக்கள் நிரந்தரமானவை அல்ல. ஒரு குறிப்பிட்ட பணிக்காக உருவாக்கப்படும். அப்பணி நிறைவடைந்தவுடன் அவை கலைக்கப்படும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: நாடாளுமன்றக் குழுக்கள் நாடாளுமன்றக் குழுக்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நிலைக் குழுக்கள் மற்றும் தற்காலிகக் குழுக்கள். நிலைக் குழுக்கள், நிரந்தரமானவையாகும், தொடர்ந்து பணியில் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக உருவாக்கப்படும். ஆனால் தற்காலிக குழுக்கள் நிரந்தரமானவை அல்ல. ஒரு குறிப்பிட்ட பணிக்காக உருவாக்கப்படும். அப்பணி நிறைவடைந்தவுடன் அவை கலைக்கப்படும்.

119) நிலைக் குழுக்கள் அவற்றின் பணி தன்மைக்கேற்ப எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன?

a) ஆறு

b) ஐந்து

c) நான்கு

d) ஏழு

விளக்கம்: நிலைக் குழுக்கள்: நிலைக் குழுக்கள் அவற்றின் பணி தன்மைக்கேற்ப ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 1. நிதிக் குழுக்கள் அ) பொதுக் கணக்குக் குழு ஆ) மதிப்பீட்டுக் குழு இ) பொதுத்துறை நிறுவனக் குழு 2. துறைசார் நிலைக் குழுக்கள் 3. விசாரணைக் குழுக்கள் அ) மனுக்கள் குழு ஆ) சிறப்புரிமைக் குழு இ) நன்னெறிக் குழு

4. கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழுக்கள்

5. அவையின் தினசரி அலுவல்களுக்கான குழுக்கள்

6. சேவை குழு (உறுப்பினர்களுக்கு வசதிகள் மற்றும் சேவைகள் தொடர்பான குழு)

120) கீழ்க்கண்டவற்றுள் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழுக்கள் எவை?

ⅰ) அரசாங்க உத்திரவாதங்களுக்கான குழு

ⅱ) துணைச் சட்டங்களுக்கான குழு

ⅲ) அட்டவணையில் எழுத்தப்பட்ட ஆவணங்களின் குழு

ⅳ) அலுவல் ஆலோசனைக் குழு

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழுக்கள்: அ) அரசாங்க உத்திரவாதங்களுக்கான குழு ஆ) துணைச் சட்டங்களுக்கான குழு இ) அட்டவணையில் எழுத்தப்பட்ட ஆவணங்களின் குழு ஈ) பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான குழு உ) பெண்கள் அதிகாரமளித்தலுக்கான குழு ஊ) ஆதாயம் தரும் பதவிகளுக்கான இணைக் குழு

121) கீழ்க்கண்டவற்றுள் அவையின் தினசரி அலுவல்களுக்கான குழுக்கள் எவை?

ⅰ) தனிநபர் முன்வரைவு மற்றும் தீர்மானங்களுக்கான குழு

ⅱ) துணைச் சட்டங்களுக்கான குழு

ⅲ) சட்டமன்றக் கூட்டத்தொடரில் வராத உறுப்பினர்கள் குழு

ⅳ) அலுவல் ஆலோசனைக் குழு

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ), ⅳ)

விளக்கம்: அவையின் தினசரி அலுவல்களுக்கான குழுக்கள்: அ) அலுவல் ஆலோசனைக் குழு ஆ) தனிநபர் முன்வரைவு மற்றும் தீர்மானங்களுக்கான குழு இ) விதிகள் குழு ஈ) சட்டமன்றக் கூட்டத்தொடரில் வராத உறுப்பினர்கள் குழு

சேவை குழு (உறுப்பினர்களுக்கு வசதிகள் மற்றும் சேவைகள் தொடர்பான குழு): அ) பொது தேவைகள் குழு ஆ) அவை குழுக்கள் இ) நூலகக் குழு ஈ) உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் மற்ற படிகளுக்கான இணை குழு

122) விசாரணை குழு மற்றும் ஆலோசனை குழு எந்த குழுவின் வகைகளாகும்?

a) அவையின் தினசரி அலுவல்களுக்கான குழுக்கள்

b) தற்காலிகக் குழுக்கள்

c) சேவை குழு

d) பொதுக் கணக்குக் குழு

விளக்கம்: தற்காலிகக் குழுக்கள்: தற்காலிகக் குழுக்கள் இரண்டு வகைப்படும். அவை, விசாரணை குழு மற்றும் ஆலோசனை குழு. மதிப்பீட்டுக் குழு: பரிசோதகருக்கும் மதிப்பீட்டாளருக்கும் அறிவுறுத்துவது மற்றும் பொருளாதாரம் சார்ந்த கொள்கைகள், மாற்றுக் கொள்கைகள், நிர்வாக சீர்திருத்தங்கள், மதிப்பீடு ஆய்விலுள்ள வெவ்வேறு திட்டத்திற்காக மாநிலத்திற்கு உள்ளும் வெளியிலும் பயணம் மேற்கொள்வது போன்ற விடயங்களில் பரிந்துரை அளிப்பது ஆகியவை குழுவின் முக்கிய பொறுப்பகளாகும்.

123) கணக்கு தொடர்புடையதாக பற்றுரிமை உள்ளதா என்றும் சரிபார்ப்பது எந்த குழுவின் வேலை?

a) அவையின் தினசரி அலுவல்களுக்கான குழுக்கள்

b) தற்காலிகக் குழுக்கள்

c) சேவை குழு

d) பொதுக் கணக்குக் குழு

விளக்கம்: பொதுக் கணக்குக் குழு: மாநிலத்தின் ஒதுக்கீடு கணக்குகளையும் இந்திய அரசுக் கணக்குத் தணிக்கைத் தலைவரின் (குடிசார்) அறிக்கையையும் ஆய்வு செய்வதே குழுவின் முக்கிய பணி. மேலும் வருவாய் பற்றுச்சீட்டுகளும் பணப்பட்டுவாடாவும் எந்த சேவைக்காக அல்லது பயன்பாட்டிற்காக கணக்கு ஏற்படுத்தப்பட்டதோ அந்த கணக்கு தொடர்புடையதாக பற்றுரிமை உள்ளதா என்றும் சரிபார்ப்பதே இந்த குழுவின் வேலை.

124) தணிக்கை அறிக்கை கணக்குகளையும் பொதுத்துறை நிறுவன கணக்குகளையும் அவ்வப்போது ஆய்வு செய்வதற்காக உள்ள குழு எது?

a) அவையின் தினசரி அலுவல்களுக்கான குழுக்கள்

b) தற்காலிகக் குழுக்கள்

c) சேவை குழு

d) பொதுத்துறை நிறுவனங்களின் குழு

விளக்கம்: பொதுத்துறை நிறுவனங்களின் குழு: தணிக்கை அறிக்கை கணக்குகளையும் பொதுத்துறை நிறுவன கணக்குகளையும் அவ்வப்போது ஆய்வு செய்வதற்காக இந்தக் குழு உள்ளது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களின் தன்னாட்சியையும் பயன்திறனையும் இந்தக் குழு ஆய்வு செய்கிறது. மேலும் நல்ல வியாபாரக் கொள்கைகளையும் மதிநுட்ப வணிக நடைமுறைகளையும் பின்பற்றி பொதுத்துறை நிறுவனங்களின் அலுவல்கள்நடைபெறுகிறதா என்று கருத்தில் கொள்கிறது.

125) நிறுவனங்களின் செயல்பாட்டை எல்லைவரை ஆய்வு செய்து அவைக்கு பரிந்துரைகளை அளிக்கும் குழு எது?

a) அவையின் தினசரி அலுவல்களுக்கான குழுக்கள்

b) தற்காலிகக் குழுக்கள்

c) சேவை குழு

d) பொதுத்துறை நிறுவனங்களின் குழு

விளக்கம்: பொதுத்துறை நிறுவனங்களின் குறித்த இந்திய அரசுக் கணக்குத் தணிக்கைத் தலைவரின் அறிக்கைகளை இந்தக் குழு ஆய்வு செய்கிறது. மேலும் நிறுவனங்களின் செயல்பாட்டை நோக்கி எல்லைவரை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விசாரித்தோ அப்படிப்பட்ட நிறுவனங்களின் சம்பந்தப்பட்ட ஆதாரத்தைப் பெற்றோ இந்தக் குழு அவைக்கு பரிந்துரைகளை அளிக்கிறது.

126) கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) ஒரு சட்டப்பேரவையை மட்டுமே மக்களவையாக கொண்டுள்ள தேசிய சட்டமன்றம் ஓரவை என்று அழைக்கப்படும்.

ⅱ) சட்டமன்றப் பேரவை மற்றும் சட்டமன்ற மேலவை கொண்டுள்ள சட்டமன்ற அமைப்பு ஈரவை முறை என்று அழைக்கப்படும்.

ⅲ) கூட்டத்தொடர்களை நடத்துவதற்கு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் பத்தில் ஒரு பங்கு எண்ணிக்கை இருக்க வேண்டும்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: * ஓரவை: ஒரு சட்டப்பேரவையை மட்டுமே மக்களவையாக கொண்டுள்ள தேசிய சட்டமன்றம் ஓரவை என்று அழைக்கப்படும்.

* ஈரவை: சட்டமன்றப் பேரவை மற்றும் சட்டமன்ற மேலவை கொண்டுள்ள சட்டமன்ற அமைப்பு ஈரவை முறை என்று அழைக்கப்படும்.

* உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை: மக்களவை மாநிலங்களவைக் கூட்டத்தொடர்களை நடத்துவதற்கு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் பத்தில் ஒரு பங்கு எண்ணிக்கை இருக்க வேண்டும்.

127) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) ஒரு சட்டம், அது சட்டமாவதற்கு முந்தைய நிலையில் இது பரிசீலனைக்காக நாடாளுமன்றத்தில் “சட்ட முன்வரைவுவாக” முன்மொழியப்படுகின்றது.

ⅱ) சட்ட முன்வரைவவை அரசமைப்புக் கட்டமைப்புக்குள் முழுமையாக அறிந்துகொள்ளும் பொருட்டு ஒரு பொது வாக்ககெடுப்பு நடத்தப்படுகிறது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: சட்டமுன்வரைவு: ஒரு சட்டம், அது சட்டமாவதற்கு முந்தைய நிலையில் இது பரிசீலனைக்காக நாடாளுமன்றத்தில் “சட்ட முன்வரைவுவாக” முன்மொழியப்படுகின்றது. அந்த சட்ட முன்வரைவவை அரசமைப்புக் கட்டமைப்புக்குள் முழுமையாக அறிந்துகொள்ளும் பொருட்டு ஒரு முழுமையான விவாத்திற்கு நாடாளுமன்றம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

128) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) இந்திய அரசமைப்புக்கோட்பாட்டின் அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டை மாற்றாமல் மாறும் தனித்துவமான ஏற்பாட்டை இந்திய அரசியமைப்பைக் கொண்டுள்ளது.

ⅱ) அந்த வகையில் நடைமுறையில் இல்லாத சட்டங்களை திருத்துவது அல்லது மாற்றுவது சட்டத் திருத்தம் ஆகும்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: திருத்தச்சட்டம்: இந்திய அரசமைப்புக்கோட்பாட்டின் அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டை மாற்றாமல் மாறும் நிலைமைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு சமகாலத்திற்கு பொருத்தமாக திருத்தக்கூடிய ஒரு தனித்துவமான ஏற்பாட்டை இந்திய அரசியமைப்பைக் கொண்டுள்ளது. அந்த வகையில் நடைமுறையில் உள்ள சட்டங்களை திருத்துவது அல்லது மாற்றுவது சட்டத் திருத்தம் ஆகும்.

129) கண்டன தீர்மானம் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?

ⅰ) குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் ஆகியோரை பதவி நீக்கம் செய்வதற்கான நீதித்துறைச் சார்ந்த பணிகளும் நாடாளுமன்றத்திற்கு உள்ளது.

ⅱ) அவர்களுக்கெதிராக கண்டன தீர்மானம் ஈரவைகளிலும் நிறைவேற்றினால் அவர்களின் பதவி நீக்கம் செல்லாது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: கண்டன தீர்மானம்: குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், உச்ச நீதி மன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை பதவி நீக்கம் செய்வதற்கான நீதித்துறைச் சார்ந்த பணிகளும் நாடாளுமன்றத்திற்கு உள்ளது. அவர்களுக்கெதிராக கண்டன தீர்மானம் ஈரவைகளிலும் நிறைவேற்றினால் அவர்களின் பதவி பறிபோகும்.

130) கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?

ⅰ) ஈரவைகளுக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்படும் சமயங்களில் நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தொடருக்கு மக்களவையின் சபாநாயகர் தலைமை தாங்குவார்.

ⅱ) திட்டமிடப்பட்ட ஒரு கால வரையறையில் நாடாளுமன்றம் கூடுவதைத்தான் ஒரு கூட்டத்தொடர் என்று அழைக்கிறோம்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும் இல்லாத

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் இல்லை

விளக்கம்: உறுப்பினர்களுக்கான விலக்களிப்புகள்: அவையின் எல்லைக்குள் கைதுக்கு எதிரான பாதுகாப்பு

கூட்டுக் கூட்டத்தொடர்: சிறப்பு நிகழ்வுகள் அல்லது சில சட்ட நடவடிக்கைகளில் ஈரவைகளுக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்படும் சமயங்களில் நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தொடருக்கு மக்களவையின் சபாநாயகர் தலைமை தாங்குவார்.

கூட்டத்தொடர்: சட்டமுன் வரைவுகளுக்கான ஒப்புதல் அளித்தல், தீர்மானங்கள் ஆகியவை போன்ற பல்வேறு செயல்குறிப்புக்கள் குறித்து விவாதம் நடத்துவதற்காக, திட்டமிடப்பட்ட ஒரு கால வரையறையில் நாடாளுமன்றம் கூடுவதைத்தான் ஒரு கூட்டத்தொடர் என்று அழைக்கிறோம்.

131) நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) பிரதமர் / முதலமைச்சர் அரசாங்கத்திற்கு தலைமைத் தாங்குவதற்காக மக்களவை/ சட்டமன்றத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கையை பெருவதற்கான வழிமுறையாகும்.

ⅱ) ஒருவேளை அந்த தீர்மானம் வெற்றி பெற வில்லையெனில், மொத்த அரசாங்கமும் வெளியேற நேரிடும், புதிய தேர்தலை சந்திக்க நேரிடும்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரதமர் / முதலமைச்சர் அரசாங்கத்திற்கு தலைமைத் தாங்குவதற்காக மக்களவை/ சட்டமன்றத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கையை பெருவதற்கான வழிமுறையாகும். ஒருவேளை அந்த தீர்மானம் வெற்றி பெற்றால், மொத்த அரசாங்கமும் வெளியேற நேரிடும், புதிய தேர்தலை சந்திக்க நேரிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!