Book Back QuestionsTnpsc

சமத்துவம் பெறுதல் Book Back Questions 6th Social Science Lesson 8

6th Social Science Lesson 8

8] சமத்துவம் பெறுதல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

இனநிறவெறிக்கு முடிவு: தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா அவர்கள், 27 ஆண்டுகள் சிறைவாழ்க்கைக்குப்பின் 1990 ஆம் ஆண்டு விடுதலையானார். இவர் தென்னாப்பிரிக்காவிலிருந்த இனநிறவெறிக்கு முடிவு கட்டினார். தென்னாப்பிரிக்காவில் உலகளவில் அமைதி நிலவவும், மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னோடியாகவும் திகழ்ந்தார்.

டாக்டர். பி. ஆர். அம்பேத்கார்: இவர் பாபா சாஹேப் என பிரபலமாக அழைக்கப்படுகிறார். இவர் இந்திய சட்ட நிபுணராகவும், பொருளாதார நிபுணராகவும், அரசியல்வாதியாகவும், சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். இவர் 1915 இல் எம். ஏ. பட்டத்தை பெற்றார். பின்னர் 1927 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பி. எச். டி பட்டத்தை பெற்றார். அதற்கு முன்னர் இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் D. Sc பட்டத்தையும் பெற்றிருந்தார். இவர் அரசியலமைப்பு நிர்ணய சபையின் வரைவு குழுவின் தலைவராக இருந்தார். எனவே, இவர் இந்திய அரசியலமைப்பின் தந்தையாகக் கருதப்படுகிறார். இவர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றினார். இவரது மறைவுக்குப் பின்னர், 1990 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

எழுத்தறிவு விகிதம் – 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பு

அதிகம்

குறைவு

வ. எண் மாவட்டத்தின் பெயர் விகிதம் வ. எண் மாவட்டத்தின் பெயர் விகிதம்
1 கன்னியாகுமரி 92. 14% 1 தருமபுரி 64. 71%
2 சென்னை 90. 33% 2 அரியலூர் 71. 99%
3 தூத்துக்குடி 86. 52% 3 விழுப்புரம் 72. 08%
4 நீலகிரி 85. 65% 4 கிருஷ்ணகிரி 72. 41%
பாலின விகிதம் – 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பு தலா ஆயிரம் ஆண்களுக்கு நிகரான பெண்களின் எண்ணிக்கை

அதிகம்

குறைவு

வ. எண் மாவட்டத்தின் பெயர் பாலின விகிதம் வ. எண் மாவட்டத்தின் பெயர் பாலின விகிதம்
1 நீலகிரி 1041 1 தருமபுரி 946
2 தஞ்சாவூர் 1031 2 சேலம் 954
3 நாகப்பட்டிணம் 1025 3 கிருஷ்ணகிரி 956
4 தூத்துக்குடி, திருநெல்வேலி 1024 4 இராமநாதபுரம் 977

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. பின்வருவனவற்றில் எது பாரபட்சத்திற்கான காரணம் அல்ல

(அ) சமூகமயமாக்கல்

(ஆ) பொருளாதார நன்மைகள்

(இ) அதிகாரத்துவ ஆளுமை

(ஈ) புவியியல்

2. பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு

(அ) பாலின பாகுபாடு

(ஆ) சாதி பாகுபாடு

(இ) மத பாகுபாடு

(ஈ) சமத்துவமின்மை

3. பாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தரிக்கப்படுவது

(அ) திரைப்படங்கள்

(ஆ) விளம்பரங்கள்

(இ) தொலைகாட்சி தொடர்கள்

(ஈ) இவை அனைத்தும்

4. ஏ. பி. ஜே. அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகம்/கள்

(அ) இந்தியா 2020

(ஆ) அக்கினிச்சிறகுகள்

(இ) எழுச்சி தீபங்கள்

(ஈ) இவை அனைத்தும்

5. ஏ. பி. ஜே அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு

(அ) 1997

(ஆ) 1996

(இ) 1995

(ஈ) 1994

6. விஸ்வநாத் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு

(அ) 1985

(ஆ) 1986

(இ) 1987

(ஈ) 1988

7. இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு

(அ) செஸ்

(ஆ) மல்யுத்தம்

(இ) கேரம்

(ஈ) டென்னிஸ்

8. அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ், எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக்கூறுகிறது?

(அ) 14 (1)

(ஆ) 15 (1)

(இ) 16 (1)

(ஈ) 17 (1)

9. பி. ஆர். அம்பேத்கார் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு

(அ) 1990

(ஆ) 1989

(இ) 1988

(ஈ) 1987

10. 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்

(அ) நாமக்கல்

(ஆ) சேலம்

(இ) கன்னியாகுமரி

(ஈ) சிவகங்கை

பொருத்துக:

1. பாரபட்சம் – அ. தீண்டாமை ஒழிப்பு

2. மாறாக்கருத்து உருவாதல் – ஆ. மற்றவர்களை காட்டிலும் சிலரை தாழ்வாக நடத்துவது

3. பாகுபாடு – இ. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்

4. பிரிவு 14 – ஈ. தவறான பார்வை அல்லது தவறான கருத்து

5. பிரிவு 17 – உ. பிறரை பற்றி எதிர்மறையாக மதிப்பிடுதல்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. __________ என்பது மற்றவர்களைப் பற்றி எதிர்மறையாக அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.

2. _________ ஆம் ஆண்டு ஏ. பி. ஜே. அப்துல்கலாம் பிறந்தார்

3. இந்தியாவில் மிக உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதினை முதன் முதலில் பெற்றவர் __________

4. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்__________

5. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குறைந்த பாலின விகிதம் உள்ள மாவட்டம் _________

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. புவியியல் 2. பாலின பாகுபாடு 3. இவை அனைத்தும்

4. இவை அனைத்தும் 5. (1997) 6. (1988) 7. கேரம் 8. 15(1) 9. (1990)

10. கன்னியாகுமரி

பொருத்துக: (விடைகள்)

1. பாரபட்சம் – பிறரை பற்றி எதிர்மறையாக மதிப்பிடுதல்

2. ஒத்தக் கருத்து உருவாதல் – தவறான பார்வை அல்லது தவறான கருத்து

3. பாகுபாடு – மற்றவர்களை காட்டிலும் சிலரை தாழ்வாக நடத்துவது

4. பிரிவு 14 – சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்

5. பிரிவு 17 – தீண்டாமை ஒழிப்பு

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. ஒத்த கருத்து 2. 1931 3. விஸ்வநாதன் ஆனந்த் 4. Dr B. R. அம்பேத்கர் 5. தர்மபுரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!