Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

சமத்துவம் Book Back Questions 7th Social Science Lesson 8

7th Social Science Lesson 8

8] சமத்துவம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை, ஏ. வி. டைசி என்ற பிரிட்டிஷ் சட்ட வல்லுநர் வாதுரைத்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு முயற்சிகள் பெண்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜாராம் மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், தயானந்த சரஸ்வதி, மகாதேவ் கோவிந்தரானடே, தாராபாய் ஷிண்டே, பேகம் ருகேயா சகாவத் உசேன் ஆகியோர் பெண்கள் சம அந்தஸ்து பெறுவதற்கு கடினமாக பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர்.

சட்டப்பிரிவு 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம் என உத்தரவாதம் அளிக்கிறது. சட்டப்பிரிவு 15 பாகுபட்டை தடை செய்கிறது. சட்டப்பிரிவு 16 பொது வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கிறது. சட்டப்பிரிவு 17 தீண்டாமையை ஒழிக்கிறது. சட்டப்பிரிவு 18 பட்டங்கள் அளித்து வேறுபடுத்துதலை தடை செய்கிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பின்வருவனவற்றுள் எது சமத்துவத்தின் கீழ் வருவதில்லை?

(அ) பிறப்பு, சாதி, மதம், இனம், நிறம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு இன்மை

(ஆ) தேர்தலில் போட்டியிடும் உரிமை

(இ) அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுதல்

(ஈ) பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்

2. கீழ்கண்டவைகளில் எது அரசியல் சமத்துவம் ஆகும்?

(அ) அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது

(ஆ) இனம், நிறம், பாலினம் மற்றும் சாதி அடிப்படையில் சமத்துவமின்மை அகற்றப்படுதல்

(இ) சட்டத்தின் முன் அனைவரும் சமம்

(ஈ) சட்டத்தின் கைகளில் செல்வம் செறிவு தடுப்பு

3. இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும் வயது —————

(அ) 21

(ஆ) 18

(இ) 25

(ஈ) 31

4. சாதி, பணம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை

(அ) இயற்கை சமத்துவமின்மை

(ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை

(இ) பொருளாதார சமத்துவமின்மை

(ஈ) பாலின சமத்துவமின்மை

5. சுவிட்சர்லாந்தில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட ஆண்டு

(அ) 1981

(ஆ) 1971

(இ) 1991

(ஈ) 1961

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. குடிமை சமத்துவம் ————-க்கு முன்பு அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது.

2. ————– முதல் ————– வரையிலான இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவுகள் சமத்துவ உரிமையைப் பற்றி குறிப்பிடுகின்றன.

3. தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது ————— உரிமை ஆகும்.

4. சமத்துவம் என்பது முதலாவதாக ————– இல்லாததாகும்.

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல், 2. சட்டத்தின் முன் அனைவரும் சமம், 3. 18, 4. பாலின சமத்துவமின்மை, 5. 1971

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. சட்டத்துக்கு, 2. 14 முதல் 18, 3. அரசியல், 4. சமூக பிறப்புரிமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!