Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல் Book Back Questions 8th Social Science Lesson 19

8th Social Science Lesson 19

19] சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சமயச்சார்பின்மை என்ற சொல் லத்தீன் வார்த்தையான செகுலம் (saeculum) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் காலம் (an age) அல்லது உள்ளுணர்வு காலம் (the spirit of an age) ஆகும். ஆங்கிலேய பத்திரிக்கை எழுத்தாளரான ஜார்ஜ் ஜேக்கப் ஹோல்யோக் என்பவர் secularism என்ற பதத்தை உருவாக்கினார்.

அசோகரின் 12வது பாறை அரசாணை: அரசானது எந்த ஒரு மதத்தைச் சார்ந்த பிரிவினருக்கும் எதிராக குற்றம் சாட்டாது என்று கி. மு (பொ. ஆ. மு) மூன்றாம் நூற்றாண்டிலேயே அறிவித்த முதல் பேரரசர் அசோகர் ஆவார். தனது 12வது பாறை அரசாணையில் அனைத்து மதப்பிரிவினருடன் சகிப்பு தன்மையோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீது மிகுந்த மரியாதைக்குரிய மனநிலையை வளர்த்துக் கொள்ளவும் தம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாத்திகம்: கடவுள் அல்லது கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருத்தல்.

சமயச்சார்பின்மை: அரசோ, சமயமோ ஒன்று மற்றொன்றின் விவகாரங்களில் தலையிடாதிருத்தல்.

முகலாய பேரரசர் அக்பர் மதசகிப்புத் தன்மை கொள்கையைப் பின்பற்றினார். அவருடைய தீன்-இலாஹி (தெய்வீக நம்பிக்கை) மற்றும் சுல்-இ-குல் (அனைத்து சமயத்தினரிடையே அமைதி மற்றும் நல்லிணக்கம்) ஆகியவை அவரின் சமய சகிப்புத் தன்மையை எடுத்தியம்புகிறது.

கஜீராஹோவில் காணப்படும் 19ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இந்து கோவிலில், வழக்கமான சிகரத்திற்குப் பதிலாக இந்து பாணியிலான கோபுரம், சமண விதானம், புத்த ஸ்தூபி மற்றும் இஸ்லாமிய பாணியிலான குவிமாடம் ஆகியவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

சமயச்சார்பற்ற இந்திய நாடானது அனைத்துச் சமய விழாக்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கிறது.

அக்பரின் கல்லறை, சிக்கந்தரா (ஆக்ரா அருகில்-இந்தியா): இஸ்லாம், இந்து சமயம் உள்ளிட்ட பல்வேறு சமயங்களைச் சார்ந்த கூறுகள் அவரது கல்லறையில் இடம் பெற வேண்டுமென அக்பர் வலியுறுத்தினார்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. சமயச்சார்பின்மை என்பது

(அ) அரசு அனைத்து சமயத்திற்கும் எதிரானது

(ஆ) அரசு ஒரே ஒரு சமயத்தை மட்டும் ஏற்றுக் கொள்கிறது

(இ) எந்த சமயத்தைச் சார்ந்த குடிமகனும் சகிப்புத் தன்மையுடன் அமைதியாக இணக்கமாக வாழ்தல்

(ஈ) இவற்றுள் எதுவுமில்லை

2. இந்தியா ஒரு __________ கொண்ட நாடாகும்.

(அ) பல்வேறு சமய நம்பிக்கை

(ஆ) பல்வேறு பண்பாட்டு நம்பிக்கை

(இ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்

(ஈ) இவற்றுள் எதுவுமில்லை

3. இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு

(அ) 1951

(ஆ) 1976

(இ) 1974

(ஈ) 1967

4. பின்வருவனவற்றுள் எது இந்தியாவை சமயச்சார்பற்ற நாடாக விவரிக்கிறது?

(அ) அடிப்படை உரிமைகள்

(ஆ) அடிப்படை கடமைகள்

(இ) அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள்

(ஈ) அரசியலமைப்பின் முகவுரை

5. சமயச் சுதந்திர உரிமை எதனுடன் தொடர்புடையது

(அ) நீதித்துறை

(ஆ) பாராளுமன்றம்

(இ) அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கை

(ஈ) அடிப்படை உரிமைகள்

6. அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தடை செய்துள்ளது?

(அ) சமய போதனைகள்

(ஆ) நீதி நெறிக்கல்வி

(இ) உடற்கல்வி

(ஈ) இவற்றுள் எதுவுமில்லை

7. ஒரு நாடு சமயச்சார்பற்ற நாடாக எப்போது கருதப்படும் எனில் அது

(அ) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளித்தால்

(ஆ) அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சமய போதனைகளைத் தடை செய்தால்

(இ) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்

(ஈ) எந்த சமய நம்பிக்கைகளையும் பரப்ப தடை விதித்தால்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. சமயம் நமக்கு ___________ போதிக்கவில்லை

2. சமயச்சார்பின்மை ஜனநாயகத்தின் ஒரு பகுதி அது ___________ அளிக்கிறது.

3. ___________ என்பது கடவுள் மற்றும் கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருப்பதாகும்.

4. நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் ____________ மற்றும் __________ ஊக்குவிப்பதாகும்.

5. பிரிவு 15 சமயம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் ___________ காட்டுவதைத் தடை செய்கிறது.

பொருத்துக:

1. நாத்திகம் – Secularism என்ற பதத்தை உருவாக்கியவர்

2. குழந்தைகள் – சமூகச் சீர்திருத்தவாதி

3. தீன்-இலாஹி – கடவுள் நம்பிக்கையற்றிருப்பது

4. அரசியலமைப்பு – வருங்கால குடிமக்கள்

5. ஹோல்யோக் – தெய்வீக நம்பிக்கை

6. இராஜாராம் மோகன்ராய் – 1950

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. இந்திய நாட்டிற்கென ஒரு சமயம் உள்ளது.

2. சமயச்சார்பின்மை என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளது.

3. மொகலாய பேரரசர் அக்பர் சமயச் சகிப்புத் தன்மைக் கொள்கையைப் பின்பற்றினார்.

4. சமண சமயம் சீனாவில் தோன்றியது.

5. இந்திய அரசாங்கம் அனைத்துச் சமய விழாக்களுக்கும் விடுமுறையை அறிவிக்கிறது.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. (i) இந்தியா போன்ற சமயப் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்குச் சமயச்சார்பின்மை விலைமதிப்பற்ற ஒன்றாகும்.

(ii) சமயச்சார்பற்ற என்ற சொல்லானது 1950ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை.

(iii) அரசியலமைப்பு பிரிவு 26 ஒரு குறிப்பிட்ட சமயத்திற்காக வரி செலுத்துவதற்கு ஊக்கமளிக்கிறது.

(iv) அக்பரின் கல்லறை ஆக்ராவிற்கு அருகிலுள்ள சிக்கந்தராவில் உள்ளது.

(அ) i, ii மட்டும்

(ஆ) ii, iii மட்டும்

(இ) iv மட்டும்

(ஈ) i, ii, iv மட்டும்

2. கூற்று: ஒரு வெளிநாட்டவர் இந்தியாவில் தனது சமயத்தைப் பின்பற்றலாம்.

காரணம்: அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள சமய சுதந்திரம் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டவருக்கும் உண்டு.

(i) கூற்று சரி காரணம் தவறு

(ii) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

(iii) கூற்று தவறு, காரணம் சரி

(iv) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

3. கூற்று: இந்தியாவில் சமயச்சார்பின்மை என்ற கொள்கை மிக்க மதிப்புள்ளதாகும்.

காரணம்: இந்தியா பல்வேறு சமயம் மற்றும் பன்முக கலாச்சாரம் கொண்ட நாடாகும்.

(i) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது

(ii) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

(iii) கூற்று தவறு, காரணம் சரி

(iv) இரண்டும் தவறு

4. தவறான இணையைக் கண்டறிக:

(i) தீன் இலாகி – ஒரு புத்தகம்

(ii) கஜீராஹோ – இந்து கோவில்

(iii) அசோகர் – பாறைக் கல்வெட்டு

(iv) இக்பால் – கவிஞர்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. எந்த சமயத்தைத் சார்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாக வாழ்தல்

2. அ மற்றும் ஆ இரண்டும் 3. 1976 4. அரசியலமைப்பின் முகவுரை

5. அடிப்படை உரிமைகள் 6. சமய போதனைகள்

7. ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்.

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. பகைமை 2. ஒற்றுமையை 3. நாத்திகம்

4. தேசிய ஒற்றுமையும், ஒருமைப்பாட்டையும் 5. பாகுபாடு

பொருத்துக: (விடைகள்)

1. நாத்திகம் – கடவுள் நம்பிக்கையற்றிருப்பது

2. குழந்தைகள் – வருங்கால குடிமக்கள்

3. தீன் – இலாஹி – தெய்வீக நம்பிக்கை

4. ஹோல்யோக் – சமயச்சார்பின்மை என்ற பதத்தை ஒருவாக்கியவர்.

5. இராஜாராம் மோகன்ராய் – சமூக சீர்திருத்தவாதி

சரியா தவறா எனக் குறிப்பிடுக: (விடைகள்)

1. தவறு

சரியான விடை: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு

2. தவறு

சரியான விடை: சமயச்சார்பின்மை என்ற சொல் லத்தீன் மொழிலியிலிருந்து பெறப்பட்டது.

3. சரி

4. தவறு

சரியான விடை: சமண சமயம் இந்தியாவில் தோன்றியது.

5. சரி

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. i, ii, iv மட்டும்

2. கூற்றுஇ காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

3. கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

4. தீன் இலாகி – ஒரு புத்தகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!