Samacheer NotesTnpsc

சமூக நீதி Notes 11th Political Science

11th Political Science Lesson 13 Notes in Tamil

சமூக நீதி

அறிமுகம்

சமத்துவம், நீதி குறித்து சமூகங்கள் இடையிலான விவாதங்கள் இருபதாம் நூற்றாண்டு பிற்பகுதிவரை கூட நடைபெறவில்லை. அதற்கு சில வரம்புகள் பின்பற்றப்பட்டு, ஒரு சமூகத்துக்குள் மட்டும் நிகழ்ந்தன. . உதாரணமாக ஜான் ரால்ஸ் அவர்களின் நீதிக்கோட்பாடு கூட முழுமையானதாக அமைந்திருக்கவில்லை. சமூகங்கள் இடையேயான செல்வப் பகிர்வு குறித்து அவர் ஆய்வு செய்யவில்லை. 1990களின் போதுதான், தொழில்மய நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் அதாவது பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இடைவெளிகளால் உருவாகியுள்ள அற நெறிப் பாதிப்புகள் குறித்து தத்துவ்வியலாளர்கள் எண்ணிப்பார்க்கத் தொடங்கினர். வளரும் நாடுகளில் வறுமை அதிகரித்து வருவதற்கு வளர்ந்த நாடுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறும் ஜெர்மன் தத்துவ்வியலாளர் தாமஸ் போக்கே, இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் மடிந்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறார்.

அதேபோல ஒரு நாட்டுக்குள் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் அநீதியான பாகுபாட்டால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளான பிரிவினருக்கும் சமத்துவ ஆட்சியில் முன்னுரிமை தருவதன் அவசியமும் உணரப்பட்டுள்ளது. இதுவே சமூக நீதியின் அடிப்படைக் கோட்பாடாகும். உறுதிப்படுத்தும் நடவடிக்கை, நேர்மறை பாகுபாடு என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு சமத்துவம், நீதி குறித்து மாறிவரும் கருத்தாக்கங்களையும் சமூக நீதியின் வரலாறு குறித்தும் காணலாம்.

சமூகநீதி என்றால் என்ன?

சமூகம் உருவக்கும் எதிர்மறை மதிப்பீடுகள் சமத்துவமின்மையை , ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது. சட்டென்று பார்க்கும் போது சிலருக்கு ஆண்-பெண் ஏற்றத்தாழ்வு இயற்கையானதாகவே தெரியும். ஆம், பல நூற்றாண்டுகளாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால் பெண்களின் “பலவீனமான” நிலை பலருக்கு இயற்கையானதாகவும் இயல்பானதாகவும் தோன்றலாம். ஆப்பிரிக்காவின் கருப்பு இனமக்கள் மீதான காழ்ப்புணர்ச்சியும் இதே வகையைச் சேர்ந்ததே. கருப்பின மக்கள் அறிவுலகில் பெரும் பங்களிப்பைச் செய்ய முடியாது என்றே திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. பல காலமாகத் தொடர்ந்த இந்த அவலம் நமக்கு இயல்பானதாக மாற்றப்பட்டிருக்கிறது. நமது நாட்டிலும் இதேநிலைதான் சாதியின் பெயரால் வாய்ப்பு மறுக்கப்பட்ட பலரது நிலை “இயற்கையானது” என்பது போல நமக்குச் சொல்லப்படுகிறது. ஆனால், இவை அனைத்துமே செயற்கையானது; நம் கண்களுக்குப் புலப்படாத அதேசமயம் பெரும் உருவம் கொண்ட ‘அதிகாரம்’ அங்கு ஊடுருவியிருக்கிறது என்பதை இன்றைய அறிஞர்கள் திட்டவட்டமாக அறிவிக்கின்றனர்.

சமூக அதிகாரத்தைக் கைக்கொள்வதில் ஏற்படும் போட்டிகளே ஒடுக்குமுறைகள் தோன்றிடக் காரணங்களாகும். தங்களுக்கென உருவாக்கிக் கொண்ட இயல்பான அடையாளக் கூறுகளைத் தற்காத்துக் கொள்வதற்கு அதிகார அமைப்புகளைக் கைப்பற்றிக் கொள்ள எண்ணுகின்றனர். ‘பன்மைத்துவ’மான சமூக அமைப்பில் தனித்த ஒரு குழுவினர் மட்டும் சமூகமேலாதிக்கம் பெற்றவர்களாக உருவெடுப்பது அநீதியான போக்காகும்.

சமூக மேலாதிக்க உணர்வினைப் பெற்ற இன, மத , மொழி, சாதி மற்றும் பண்பாட்டுக் குழுவினர் மற்ற குழுவினரின் சமூக உரிமைகளைப் பறித்தெடுக்க முயலும்போது அல்லது தடுக்கும்போது சமூகப் பகை முரண்கள் உருவாகின்றன. தங்கள் மீதான மேலாதிக்கத்தை மறுத்துத் தங்களுக்கு உரிய உரிமைகளைச் சமமாகப் பெற்றிட நடத்துகிற போராட்ட உணர்வினையே சமூக நீதி என்கிறோம்.

சமூகப்படி நிலைகளின் பின்புலம்

இந்தியாவில், புராதன காலத்து மரபுசார்ந்த சிந்தனையால் உருவான வருணாசிரம தர்ம சமூகப்படிநிலை, மேல்-கீழ் என்னும் பாகுபாட்டைக் கொண்டிருக்கின்றது. வருண படிநிலை அமைப்பு ‘சதுர் வருண அமைப்பு’ (நான்கு வருண அமைப்பு – அந்தணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ) என்று அழைக்கப்படுகிறது. பிறப்பின் அடிப்படையில் பேணப்படும் இப்பாகுபாடு தலைமுறைகளாகத் தொடர்வதால் சமூகத்தில் ஆழமான ஏற்றத்தாழ்வுகள் உருவாயின.

இன, மத, மொழி சிறுபான்மையினருக்கான ஐ.நா. பிரகடனம் – டிசம்பர் 18, 1992

பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள்:

  • சிறுபான்மை மக்கள் தனிப்பட்ட முறையிலும் பொதுவாழ்விலும் எந்த வகையான பாகுபாடும் குறுக்கீடும் இன்றி சுதந்திரமாக தங்கள் பண்பாட்டைப் பின்பற்றவும், மதத்தைக் கடைபிடிக்கவும், பிரச்சாரம் செய்யவும், மொழியைப் பயன்படுத்தவும் உரிமை பெற்றவர்கள் ஆவர்.
  • சிறுபான்மை மக்கள் தங்களுக்கான அமைப்புகளை உருவாக்கவும் பராமரிக்கவும் உரிமை உண்டு.
  • சிறுபான்மையினர் தங்கள் வரலாறு, மரபுகள், மொழி மற்றும் பண்பாடு பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளவும் ஒட்டுமொத்த சமுதாயம் பற்றி அறிந்து கொள்வதற்கும் சிறுபான்மை மக்களுக்கு உரிய வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.
  • ஏற்கனவே உள்ள மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்திற்கு இந்தப் பிரகடனம் எந்த வகையிலும் ஊறு விளைவிப்பதாக அமையக்கூடாது.

இந்திய அரசமைப்புச் சட்டம் 1949:

பிரிவு 15(4)

சமூக மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கான சிறப்புத் திட்டங்கள் உருவாக்குவதற்கு அரசமைப்புச் சட்ட விதி 29(2) தடையாக இருக்காது.

இந்திய அரசமைப்புச் சட்டம் 1949:

பிரிவு 16(4)

அரசுப்பணியில் போதிய அளவு பிரதிநிதித்துவம்பெறாத அனைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பணிநியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்க மேற்கொள்ளப்படும் செயல்களுக்கு இவ்விதி தடையாக இருக்காது.

இந்தியா பல்வேறு தட்ப, வெட்ப புவிசார் நிலவியல் அமைப்பு கொண்ட பன்மைத்துவ நாடாகும். பல்வேறு மொழிகள் பேசும் தேசிய இனங்கள் வெவ்வேறு பண்பாட்டுடன் வாழ்ந்து வருகின்றனர். எனினும், இந்திய சமூக வளர்ச்சிப் போக்கில் ஏற்றத்தாழ்வுகள் வர்ண அமைப்பின் அடிப்படையில் அமைந்த படிநிலைகளால் உருவாகியுள்ளன. இத்தகைய ஏற்றத்தாழ்வுகளால் நலிவுற்ற பிரிவினரின் வாழ்க்கை மேம்பட, அவர்களையும் அரவணைத்து வளர்ச்சிபெற்றிட, நமது அரசமைப்புச் சட்டம் பல்வேறு விதமான வழிகாட்டு நெறிமுறைகளை முன் மொழிகிறது.

இயற்கை வளங்களோ தொழில் வளர்ச்சியோ இல்லாத பகுதிகளுக்கு ஏற்ப சிறப்புத் திட்டங்களை மாநில அரசு உருவாக்கிக் கொள்ள அரசமைப்புச் சட்டம் அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் சமூகத்தில் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நலிந்த பிரிவினருக்குச் சிறப்பு சட்டங்கள் மற்றும் சலுகைகளையும் அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதலின்படியே அரசு வழங்கியுள்ளது. அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் தன்னிறைவு பெற்ற சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட சிறப்பு ஏற்பாடுகள் இன்றியமையாத தேவையாக உள்ளன.

நமது நாட்டின் சமூக மக்களாட்சி தழைத்திடவும் , பன்மைத்துவம் வலிமைபெறவும் இன, மத பிரிவினர்கள் குழுக்கள் தங்கள் அடையாளங்களுடனும் அதிகாரப் பகிர்வ்ய்டனும், சகிப்புத்தன்மை உணர்வுடனும் வாழ்வதற்கான சமூக ஏற்பாடே சம வாய்ப்பு என்பதாகும்.

தொழில் புரட்சியைத் தொடர்ந்த மேலை ஐரோப்பிய சமூக அமைப்பில் ஏற்பட்ட பிரிவினை உணர்விற்கு பொருளாதாரம் அடிப்படைக் காரணமாகும். இந்திய சமூக அமைப்பில் ஏற்பட்டுள்ள பாகுபாடுகள் வைதீக புராணங்கள் அடிப்படையில் நால்வருண அமைப்பாக பாகுபடுத்தப்பட்டிருக்கிறது.

சமூகத்தின் உற்பத்திக் கருவிகளான நிலம் மற்றும் இயற்கை வளங்களை உடைமையாக்கிக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறவர் முதலாளியாகவும் அத்தகைய உற்பத்திக் கருவிகளைப் பெற முடியாமல் தடுக்கப்பட்டு ஏழ்மை நிலையை அடைந்தவர்கள் தொழிலாளிகளும் ஆவார். நிலம் மற்றும் வளங்களைப் பெறும் வாய்ப்பு ஏற்படுகிறபோது அவரின் வர்க்கமும் மாற்றம் அடைகிறது. எனவே, பொருளாதார அடிப்படையில் முதலாளி தொழிலாளி என சமூகப் பிரிவினை ஏற்பட்ட மேலை ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளி முதலாளி ஆவதற்குச் சமூகத்தில் நிரந்தரத்தடைகள் ஏதும் இல்லை. ஆனால், புராதண நூல்களின் அடிப்படையில் யாரும் தத்தம் வருணங்களை மாற்றிக்கொள்ள முடியாது. பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே வருணத்தில் மட்டுமே இருக்க வேண்டிய சமூகத்தடை உள்ளது.

வருண அமைப்பு தனிமனித மாண்புகளையும் உரிமைகளையும் மறுக்கிறது. ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டம் சரியான சமூகக் கண்காணிப்பு முறைகளையும், சட்டப் பூர்வமான நீதி வழங்கும் முறையினையும் கடைபிடித்து வருகின்றது. அவ்வாறு வழங்கப்பெறும் நீதி வருண, வர்க்கவேறுபாடுகளைக் களைவதுடன் சமத்துவக் கண்ணோட்டத்துடனும் அமைந்திருக்கிறது எனலாம்.

இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களாட்சி நெறிமுறைகளின்படி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து அவர்களின் சமூக, பொருளாதார வாழ்க்கையினைப் பாதுகாக்கிறது. இத்தகைய சமூக வளர்ச்சிக்கான மாற்று செயல்மூறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் சமூக விடுதலையும் சமூக நீதியும் உறுதிப்படுத்தப்படுகின்றன. எனவே, உயிரோட்டமான சமூகநீதி இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டு உணர்வையும் பேணிக்காத்து நீதிப்பகிர்வினையும் மக்களாட்சி மாண்பினையும் உறுதிசெய்கிறது.

சமத்துவம் நிலவ சமூக நீதி அவசியம்

சமத்துவம் வேண்டும் என்று அனைவருமே ஏற்றுக்கொள்ளும் அதே நேரம், ஏற்றத்தாழ்வுகளும், பாகுபாடுகளும் நம்மை நிலைகுலைய வைக்கின்றன. வசதிகளில், வாய்ப்புகளில், பணிச் சூழலில் என்ற பல தளங்களில் நிலவும் சமத்துவமின்மை பற்றி நாம் என்ன சொல்லப்போகிறோம்? இது போன்ற ஏற்றத்தாழ்வுகளும் பாகுபாடுகளும் நமது வாழ்வில் தவிர்க்கமுடியாத மற்றும் நிரந்தரமான அம்சங்கள் என்று கருத முடியுமா? இவ்வாறு வாய்ப்புகள் இன்றித் தவிக்கும் மக்கள் நமது நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பங்களிப்பு செய்ய நாம் கூடுதலாக என்ன செய்யவேண்டும்? இது போன்ற சமத்துவமின்மைக்கு நமது சமூகத்தில் நிலவும் பண்பாட்டு மதிப்பீடுகள் எந்த அளவிற்கு காரணமாக இருக்கின்றன? இது மாதிரியான கேள்விகள் பல ஆண்டுகளாகவே நம் நாட்டினரை மட்டுமல்ல உலகெங்கிலும் பெரும் அதிர்வுகளை உருவாக்கி வந்திருக்கின்றன. அதனால்தான், சமத்துவம் என்பது சமூக, அரசுயல் கோட்பாட்டில் முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. முதலில், சமத்துவம் என்ற கோட்பாடு எதை சுட்டிக்காட்டுகிறது? நாம் அனை வரும் சமம் என்றால் அதன் உண்மையான பொருள் என்னா? சமத்துவத்தை உறுதிசெய்வது எப்படி? அவ்வாறு உறுதி செய்வதன் வழியாக நாம் சாதிக்க நினைப்பது என்னா? வருமானத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை மட்டுமே நாம் சரிசெய்ய நினைக்கிறோமஆ? எந்த மாதிரியான சமத்துவத்தை நாம் நிலைநாட்ட முயல்கிறோம்? நாம் எத்தனிக்கும் சமத்துவம் யாருக்கானது?

சிறப்பு முன்னுரிமைக்கான தேவைகள்

ஏழைக்குடும்பத்தில் குடிசையில் பிறந்த காரணத்தினால் ஒரு குழந்தைக்கு தரமான கல்வி, மருத்துவம் மறுக்கப்பட்டால் அதற்கு எதிராக நாம் குரல் கொடுக்கிறோம்.

காரணம், அது அநீதி என்று கருதுகிறோம். ஆக, நாம் எதை ஏற்கிறோம், எதை மறுக்கிறோம் என்பதை புரிந்துகொள்வோம். ஒருவர் பெரும் மரியாதையோடு நடத்தப்படுவதற்கு அவரது மதம், சாதி, மொழி, இனம் மட்டுமே காரணம் என்றால் அந்த மரியாதையை ஏற்பதில்லை. அதேசமயம், இசை போன்ற ஒரு துறையில் ஆர்வம் கொண்ட ஒருவர் அவரது துறையில் சாதிக்க முயலும்போது, அவரது மதம், சாதி, பாலினம், இனம் போன்ற சமூக அடையாளங்களினால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் போது அது அநீதிக்கு வித்திடுகிறது. மனிதர்களிடம் இருக்கும் வேறுபாடுகள் என்ன? பாகுபாடுகள் என்ன? என்பதைப் புரிந்துகொள்வது மிக அவசியம். சமூக அடையாளங்களை முன்னிறுத்தி ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது அநீதி; அதுவே சமத்துவமின்மையை உருவாக வழிகோலுகிறது.

இனம், மொழி, சாதி, பாலினம், மதம் போன்ற வேறுபாடுகள் இருந்தாலும், மனிதர்கள் அனைவரும் தங்களது தனித்துவமான திறமையினை முன்னெடுத்துச் சென்று வாழ்வில் வெற்றி பெற வாய்ப்புகள் சம அளவில் வழங்கப்பட வேண்டும்.

சமூக, அரசியல் கோட்பாடுகளில், மிக முக்கியமான அம்சமாகக் கருதப்படுவது இயற்கையாகவே மனிதர்களிடம் நிலவும் வேறுபாடுகளுக்கும் சமூக, கலாச்சார ரீதியாக இருக்கும் பாகுபாடுகளுக்குமான வேறுபாடு போல, தனிநபர் விருப்பங்கள், திறமைகள் இயல்பானவை, தனித்துவமானவை. ஒருவருக்கான அங்கீகாரமும், மதிப்பும் தனி நபர்களின் சாதனைகள், தனிநபரின் திறமைக்குமாக இருக்கவேண்டும்; ஆனால், ஒரு சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் கலாச்சார, அரசியல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் செயற்கையானவை. இவற்றை பாகுபாடுகள் எனலாம்.

மக்களாட்சி நிலவும் நாடுகளில் அரசியல் சமத்துவத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். மக்களாட்சி அரசுகள் தனது நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான குடியுரிமையை வழங்கி வருகின்றன. குடியுரிமை என்பது வாக்குரிமை, கருத்துரிமை, இணைந்து செயல்படும் உரிமை, சங்கம் அமைக்கும் உரிமை, வழிபாட்டு உரிமை என பல அம்சங்களைத் தன்னகத்தே கொண்டது. இவை அனைத்துமே மக்களாட்சி சிறப்பாகச் செயல்பட அவசியமாகும். அப்போதுதாம் , குடிமக்கள் அனைவருன் பங்களிப்புடன் அரசு செயல்படமுடியும். மேலும், அரசமைப்புச் சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் சட்ட உரிமைகளையும் வழங்கியுள்ளது. மக்களாட்சி நிலவும் பல நாடுகளில் குடியுரிமை உறுதிசெய்யப்பட்டு இருந்தாலும், சமத்துவமின்மையும், ஏற்றத்தாழ்வுகளும் நிலவத்தான் செய்கின்றன.

நியாயமான விநியோகம் (Justice Distribution)

ஒரு சமுதாயத்தில் உள்ள பல்வேறு மக்கள் மாறுபட்ட விதத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதை நம் ஏற்றுக்கொண்ட போது, யார், எப்படி நியாயத்தை உறுதிப்படுத்த முடியும் என்ற கேள்வி எழுகின்றன. சமூகத்தில் அனைவருக்கும் செல்வம், வாய்ப்பு போன்றவை சம அளவாகப் பகிர்ந்தளிக்கப்பட அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும். நியாயமாக வளங்களை அனைவருக்கும் வழங்குவதற்கு சட்டம் வழிசெய்கின்றன. சட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகள் வளங்களை விநியோகிப்பதை கண்காணிக்க வேண்டும். இதில் எந்தவிதமான அநீதிகளும் இடம்பெறக்கூடாது.

நம்மை போன்ற நாடுகளின் சமூக கலாச்சார ஏற்றத்தாழ்வுகள் நன்கு ஊன்றியுள்ளது. சமூகத்தின் அனைத்து பிரிவிற்கும் சுதந்திரம், வாய்ப்பு, செல்வம் மற்றும் சுய கௌரவத்தின் அடிப்படைகள் போன்றவை, சம அளவாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதில் எந்தவிதமான அநீதிகளும் இடம்பெறக்கூடாது.

சட்டமானது மக்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கு முன்னரே, மக்கள் சில அடிப்படை சமத்துவங்களை பெற்று வாழ்வில் தனது நோக்கங்களை தொடர தேவையான சூழ்நிலைகள் அமைய வேண்டும். அரசும், சட்டமியற்றும் அமைப்புகளும் தீண்டாமை மற்றும் பிறசாதி பாகுபாடு நடவடிக்கை அகற்றி சமூகத்தில் நீதியை முறைப்படுத்துகின்றது.

சமூகத்தில் சமத்துவத்தை உருவாக்குவதும் அதை அனைவருக்கும் உறுதிப்படுத்துவதும் அரசமைப்பின் தலையாய கடமையாகும்.

வரலாற்று ரீதியாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியகவும் , தார்மீகரீதியாகவும் உரிமை கிடைக்க அரசாங்கம் முக்கியப் பங்காற்ற வேண்டும். சமத்துவத்தை உருவாக்குவதில் பரந்த மனப்பான்மை என்றும் தொண்டு எனவும் அரசாங்கம் நினைக்கக் கூடாது. சமுதாயத்தில் சமூக நீதியை நிலைநாட்ட மக்களை மாறுபட்ட விதத்தில் நடத்துவது அரசின் கடமையாகும். மேலும் நலிவடைந்த பிரிவினரின் அடிப்படை உரிமையாகவும், இதனைக்கொண்டு சட்டரீதியாகவும் அரசமைப்பில் தீர்வு காண முடியும். நலிவடைந்த பிரிவினருக்கு சம வாய்ப்பும் வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் ஏற்படுத்துவதிலும் அரசு முக்கியப் பங்காற்றுகிறது. அரசு வேலைவாய்ப்பிலும் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதிலும் நவீன கல்வி முக்கிய பங்காற்றுகிறது. இதனை நிலைநிறுத்துவதற்கு சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தவும் , சம வாய்ப்பினை ஏற்படுத்துவதும் அரசமைப்பின் முக்கிய நோக்கமாகவும் அங்கமாகவும் இருக்கின்றது.

இதனைப் பற்றி பல கருத்துகள் சமூகத்தில் நிலவுகிறது நலிவடைந்த பிரிவினருக்கு வளங்களையும், சமவாய்ப்புகளையும் எவ்வாறு அளிப்பது என கேள்வி எழுகின்றது. மேல்தட்டு மக்கள் அரசின் மாறுபட்ட செயல்பாடு பாகுபாட்டை ஏற்படுத்தும் என கருதினர். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு நலிவடைந்தோருக்கு கிடைக்காது என்ற அச்சத்தில் இட ஒதுக்கீடு முறையை அரசு உருவாக்குவதன் மூலம் சமூகத்தில் சமவாய்ப்பினை ஏற்படுத்த முடியும் என்று நம்பினர்.

இட இதுக்கீட்டு முறையினால் நலிவடைந்த பிரிவினருக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தும்போது தகுதி பாதிக்கப்படுவதாக சிலர் கருதினர். ஆகையால் தொழிற்துறையில், பணியாளர்களின் திறமையை பாதிக்கும் என கூறப்படுகிறது.

அரசியல் அறிவியல் மாணவர்களான நாம் எவ்வித தயக்கமுமின்றி நீதியில் உள்ள பிரச்சனைகளை ஆராய வேண்டும். முதலில் நீங்கள் நலிவடைந்து, முன்னெஏற்றமடையாத மக்களுக்கு உதவ சில தலையீடு தேவை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களஆ/

நாம் சுதந்திரம் அடைந்து குடியரசு ஆன பின்னும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வளங்கள் அனைத்தும் மேல்தட்டு மக்கள் வசமே இருந்தால் அது என்ன விளைவை ஏற்படுத்தும்? நாம் அனைவரையும் உள்ளடக்கிய நாட்டையா அல்லது குறிப்பிட்ட சிலருக்கான நாட்டையா? எதை அடையவேண்டும் எவ்வகையான சமூக நீதியை நாம் இறுதியில் பின்பற்ற வேண்டும்?

பகிர்ந்தளிக்கும் நீதி மற்றும் தண்டிக்கும் நீதி

நீதி என்ற கோட்பாட்டை படிக்கும்போது வளங்களை எவ்வாறு சமூகத்தில் உள்ள அனைவருக்கும் வழங்கவேண்டும் என்ற பொருள் விளங்கும். நீதி பற்றிய கருத்தை முழுமையாக புரிந்து கொள்வதற்கு இதில் உள்ள முக்கியமான கருத்துக்கள் மற்றும் பிரச்சனைகளை அறிய வேண்டும். அரசியல் தொடர்பானவற்றில் மரபு ரீதியான புரிதலில் பல நீதி பற்றிய முதன்மையான கோட்பாடுகள் நீண்ட விவாதத்திற்குட்பட்டுள்ளது. அனைவருக்கும் சமமான வளங்கள், பெறுவதற்கு பொது உரிமையாளர் கோட்பாடு, உரிமை கோட்பாடு போன்றவைகள் நீதி என்ற விவாதத்தில் குறிப்பிட்ப்பட்டுள்ளது.

அ) வளங்களில் சமத்துவம்

இது வளங்களின் விநியோகம் நியாயமான முறையில் இருக்க வேண்டும் என கூறுகிறது. ஒவ்வொரு மனிதனும் சமமான வளங்களை கொண்டிருந்தால் அது நீதியாகும். வழங்கப்பட்ட ஒரு பணிக்கு அனைவரும் சமமான ஊதியத்தையோ அல்லது வெகுமதியையோ பெறுவதே நீதியை பெறும் வழியாகும். சமத்துவமின்மைக்கு தனிமனித செயல்பாடுகளே காரணமாகின்றன. ஒருவன் உழைப்பை தேர்ந்தெடுப்பதோ? அல்லது ஓய்வைத் தேர்ந்தெடுப்பதோ அவனது தேர்வாகும்.

இது சுய உடமைத்துவத்தையும் வளங்க்ளின் உடமைத்துவத்தையும் நிராகரிக்கின்றது. அதே வேளையில் கடமைகளையும் பொறுப்புகளையும் வலியுறுத்துகிறது.

ஆ) பொது உரிமையாளர் கோட்பாடு

ஆரம்ப நிலையில் ஒவ்வொரு மனிதனும் ஒரே அளவிலான நிலங்கள் மற்றும் வளங்களை நியாயமான விநியோகத்தின் மூலம் பெற்றிருக்கவேண்டும். இது தனி மனித முன்னுரிமையிலும் மற்றும் திறமையிலும் வேறுபாடின்றியும் இருக்க வேண்டும் என்பதை தெளிவாகக் கூறுகின்றது. சமூகத்தில் உள்ள அனைத்து தனிமனிதனும் சமமான திறமையை பெற்றுள்ளனர். ஆகையால், வளங்கள் அனைத்துக்கும் அனைவரும் உரிமையாளர் என்ற நிலைமையை உறுதிசெய்வதே நீதியை உருவாக்குவதற்கான ஒரே வழி,

இ) உரிமை அளித்தல் கோட்பாடு

நிலம் மற்றும் பிற வளங்கள் வழங்கப்படுவதை வரலாற்று ரீதியாக நியாயப்படுத்த வேண்டும், என நியாயமான விநியோகம் விளக்குகிறது. தனிமனிதன் நிலம் மற்றும் பிற வளங்களுக்கு ஒருபோதும் உரிமையாளராக இல்லாதபோது தானாகவே வளங்களும், நிலங்களும் அவர்களுக்கு மாறவேண்டும். அவ்வாறு வளங்கள் அவர்களுக்கு மாறுவது முற்றிலும் தானாகவே அமையவேண்டும். மனிதனின் தீறமையும், வளங்கள் இந்த இரண்டுமே முகிய கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றன. வளங்கள் என்றால் உதாரணமாக நிலமும் மனிதனின் அறிவு எனவுன், கோட்பாடுகளில் மனிதனின் திறமை முக்கியப் பங்காற்றுகிறது.

சமூகத்தில் நீதி நிலைக்க வேண்டுமானால் நீதி தண்டிப்பை விட நியாயமான நீதி விநியோகம் இருந்தால் மட்டுமே தீர்வு என்ற பெரும் கருத்தொற்றுமை உருவானது, நாம் எவ்வாறு தண்டிக்கும் நீதியை விளக்கப்போகின்றோம்?

ஈ) தண்டிக்கும் நீதி

தண்டிக்கும் நீதி எனும் கருத்தாக்கம் ஆனது பல சூழ்நிலைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகை நீதியின் கட்டமைப்பை சில விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் அறிந்து கொள்ளலாம்.

  • தவறான செயல்களை செய்தவர்கள், தடும் குற்றம் இழைத்தவர்கள், அவர்களின் குற்றத்திற்கான சரியான தண்டனை பெற வேண்டும்.
  • சட்டப்படி தண்டிக்கும் அதிகாரம் பெற்றுள்ள ஒருவரால் குற்றவாளிக்கு, அவரின் குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே தார்மீக அடிப்படையில் சரியானதாகும். ஒவ்வொரு குற்றவாளிக்கும் தண்டனை வழங்கும் செயலானது, தண்டிக்கப்படுபவர்களுள் ஒப்பு நோக்கப்படுகிறதோ அல்லது ஒப்பு நோக்கப்படவில்லையோ, ஆனால் தண்டிப்பது என்பது அவசியம். அதுவே சமூக நன்மைக்கு அவசியமாகிறது.
  • இது வேண்டுமென்றே அப்பாவிகளை தண்டிப்பதை ஊக்குவிப்பதில்லை. மேலும் குற்றவாளிகளுக்கு அவர்கள் இழைத்த குற்றத்தை விட அதிகமான தண்டனை வழங்குவதையும் இது கண்டிக்கிறது.

தண்டிக்கும் நீதி எனும் கருத்தாக்கமானது நீதி மற்றும் தண்டனை கோட்பாட்டை உண்டக்குவதில் முக்கிய பங்காற்றினாலும், இதன் முக்கிய அம்சங்களான விகிதாச்சார தண்டனை, துன்பத்தின் இயல்பு நிலை மற்றும் தண்டனையை நியாயப்படுத்துதல் போன்றவை சர்ச்சைக்குரியதாகவே உள்ளன.

இந்தியா போன்ற நாடுகளில், சிலர் தண்டிக்கும் நீதியின்படி வன்முறையின் மூலமாக தவறிழைப்பவர்களை தண்டித்து அதன்மூலம் நீதியை நிலை நாட்டலாம் என்கின்றனர். இன்றைய நவீன காலத்தில் அதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. நம்முடைய அரசமைப்பு தண்டிக்கும் நீதியை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. நம் அரசமைப்பு சிற்பிகள் வன்முறை வழிகள் அமைதியையோ அல்லது பிரச்சனைகளுக்கான தீர்வையோ கொண்டு வராது, நிலையான நீதியை வழங்காது என்று உறுதியாக நம்பினர்.

இப்பாடத்தின் நோக்கமே, நீதி பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதுதான். அவைகளை கற்றுணரும்போது, நீதி பற்றிய எந்த கண்ணோட்டம் நம் இந்திய சூழ்நிலையில் நீதியை நிலைநாட்ட பொருத்தமானதாக இருக்கும் என்பதை நாம் அறியலாம். இந்த கண்ணோட்டங்களுள் நீதி பற்றிய ஜான் ரால்சின் கருத்துக்கள் முக்கியமானவையாக உள்ளன. நீதி பற்றிய அவர் கோட்பாட்டின் முக்கிய அம்சங்களை படிக்கலாம்.

ஜான் ரால்சின் நீதிகோட்பாடு

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவராக ஜான் ரால்சன் கருதப்படுகிறார். நேர்மையான நீதி என்ற கருத்தியலின் அடிப்படையில் ஓர் நீதி கோட்பாட்டை அவர் உருவக்கியுள்ளார்.

அவரது கட்டமைப்பு அனைத்து தனிமனித பண்புகளையும் ஒழுக்க ரீதியில் தன்னிச்சையானவை என்கிறது. இவரது நீதி சமத்துவத்தை கோருகிறது. இவரைப் பொறுத்தவரை சுதந்திரம் , வாய்ப்பு, வருவாய், வளம் மற்றும் சுயமரியாதை என அனைத்தும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

இதையே வேறு வார்த்தைகளில் கூறினால் சமத்துவமின்மையே அநீதி ஆகும். தனிமனிதன் எந்த ஒரு செயலோ அல்லது பண்போ மற்றவருக்கு பயனளிக்காத வகையில் இருக்குமாயின் அது அந்த சமூகத்தின் அநீதியான பண்பை காட்டுவதாக அமையும்.

இந்த கண்ணோட்டமானது நீதியை பற்றிய நமது புரிதலை விரிவாக்குகிறது. ரால்ஸ் நீதியைப் பற்றி என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

தண்டிக்கும் நீதி எனும் கருத்தாக்கமானது நீதி மற்றும் தண்டனை கோட்பாட்டை உண்டாக்குவதில் முக்கிய பங்காற்றினாலும், இதன் முக்கிய அம்சங்களான விகிதாச்சார தண்டனை, துன்பத்தின் இயல்பு நிலை மற்றும் தண்டனையை, நியாயப்படுத்துதல் போன்றவை சர்ச்சைக்குரியதாகவே உள்ளன.

இந்தியா போன்ற நாடுகளில், சிலர் தண்டிக்கும் நீதியின்படி வன்முறையின் மூலமாக தவறிழைப்பார்களை தண்டித்து அதன்மூலம் நீதியை நிலை நாட்டலாம் என்கின்றனர். இன்றைய நவீன காலத்தில் அதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. நம்முடைய அரசமைப்பு தண்டிக்கும் நீதியை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. நம் அரசமைப்பு சிற்பிகள் வன்முறை வழிகள் அமைதியையோ அல்லது பிரச்சனைகளுக்கான தீர்வையோ கொண்டு வராது, நிலையான நீதியை வழங்காது என்று உறுதியாக் நம்பினர்.

இப்பாடத்தின் நோக்கமே, நீதி பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதுதான். அவைகளை கற்றுணரும்போது, நீதி பற்றிய எந்த கண்ணோட்டம் நம் இந்திய சூழ்நிலையில் நீதியை நிலைநாட்ட பொருத்தமானதாக இருக்கும் என்பதை நாம் அறியலாம். இந்த கண்ணோட்டங்களுள் நீதி பற்றிய ஜான் ரால்சின் கருத்துக்கள் முக்கியமானவையாக உள்ளன. நீதி பற்றிய அவர் கோட்பாட்டின் முக்கிய அம்சங்களைப் படிக்கலாம்.

ஜான் ரால்சின் இந்தக் கேள்விக்கான பதிலை கண்டறிய முயற்சித்தார். ஒரு கற்பனை சூழ்நிலையை நம்முடைய சிந்தனைக்கு அவர் தருகீறார். ஆம், ஒரு சமுதாயத்தில் இந்த படிநிலையில் நாம் இருக்கிறோம் என்று தெரியவில்லை. ஆனால் அந்த சமுதாயம் எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கும் ஒரு முக்கிய நிலையில் நாம் இருப்பதாக கற்பனை செய்து கொள்வோம். நாம் எந்தக் குடும்பத்தில் பிறந்து இருப்போம் என்று தெரியாது. அதைப்போல் நமது சாதி இனம் மதம் பாலினம் மற்றும் எந்த இடம் என்ற எதைப் பற்றியும் நமக்குத் தெரியாது. இப்படிப்பட ஒரு சூழ்நிலையில் அந்த எதிர்கால கற்பனை சமுதாயத்தில் நாம் உருவாக்கும் விதிகள் மற்றும் சட்டங்கள் அனைவர்ய்க்கும் பொதுவானதாகவும் நியாயமானவையாகவும் மட்டுமே இருக்கும் என்று ‘ஜான் ரால்ஸ்’ கூறுகிறார். நமது எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கும்போது நாம் ஏற்படுத்தும் அமைப்பில் அனைவருக்கும் நியாயமான வழியில் அனைத்தும் கிடைப்பதாக இருக்கும்.

இந்த தருணத்தில் ஜான் ரால்ஸ் “அறியாமை திரை” யின் கீழ் சிந்திப்பது தொடர்பாக விவரிக்கிறார். நாம் சமுதாயத்தில் நம்முடைய நிலை என்னவென்று அறிந்திருக்கவில்லை புதிய சமுதாயத்தில் அவரவர் தங்களுக்கு உகந்த அளவில் சுயந்ல விருப்பங்களை கொண்டிருப்பர். ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில் எவருமே தாங்கள் தயாராக இருப்போம் என்றோ இது தங்களுக்குப் பயனளிக்கும் என்றோ அறிந்திருக்க மாட்டார்கள்.

மிக மோசமான நிலையின் வழியே தான் நாம் ஒவ்வொருவரும் எதிர்காலத்தைப் பற்றி கற்பனை செய்கிறோம். நாம் நம்மை எல்லா சிறப்புகளையும் எல்லா உரிமைகளையும் கொண்டிருக்கும் ஒருவராகத்தான் நினைப்போம். இந்த புதிய கற்பனை உலகத்தில் நாம் எங்கே எவ்வாறு இருப்போம் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. அப்படி ஓர் சூழ்நிலையில் நாம் எதிர்பாராத விதமாக சமூகத்தின் பின்தங்கிய வகுப்பில் வாய்ப்பு வசதிகள் அற்ற ஒரு இடத்தில் பிறந்தால் என்னவாகும்? இநிந்லையில் உடனே சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கும் வாய்ப்புகள் மற்றும் வளங்கள் கிடைக்கும் படியான ஓர் அமைப்பை உருவாக்க முயற்சிக்கிறோம்.

நாம் பிரியும் தருணம் வந்தாலும் நம்மால் நம் அடையாளங்களை எளிதில் அழிக்க முடியாது . அறியாமை எனும் திரையின் கீழ் இருப்பதாக கற்பனை செய்யவும் முடியாது. இதைப்போலவே மக்கள் முன்பின் அறிமுகமில்லாத ஒருவருக்கு தியாகம் செய்வதாகவோ அல்லது தங்களின் எல்ல எதிர்காலத்தை பங்கு போடுவார்கள் என்று எதிர்பார்க்கவோ முடியாது

.

இருந்தபோதிலும் அறியாமை திரையின் பலன் என்னவெனில் இது மக்களை அவர்களின் இயல்பான பகுத்தறிவுடன் இருக்கச் சொல்கிறது. அவர்கள் தங்களுக்காக சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். அவர்களின் விருப்பத்தில் எது உயர்வாக உள்ளதோ அதைத் தேர்ந்தெடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கற்பனையான அறியமை திரையை அணிந்துகொள்வது நேர்மையான சட்டங்கள் மற்றும் கொள்கைகள் கொண்ட அமைப்பை ஏற்படுத்துவதற்கான முதல் படி. இதுவே அவசியமானதுமாகும். இந்த நவீன காலத்தில் பகுத்தறிவு ஒரு புதிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கும். அதில் மக்கள் தங்கள் சுயநல விரும்பிகளின் பல இல்லாமல் ஒட்டுமொத்த சமுதாய விருப்பங்களின் படியான கொள்கைகளைப் பற்றி சிந்திருப்பார்கள் என்று ரால்ஸ் கூறுகீறார். இந்த முழுமையான அனைவரையும் உள்ளடக்கிய கண்ணோட்டம் ஜான் ரால்சின் கட்டமைப்பில் காணப்படுகிறது. இதை தெளிவாக கூறினால் சட்டங்கள் மற்றும் கொள்கைகள் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கும்படி இருத்தல் வேண்டும். குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கானதாக இருக்கக்கூடாது. இந்த நியாயமானது இரக்கத்தினாலோ அல்லது பெருந்தன்மையினாலோ இல்லாமல் காரண அறிவின் வெளிப்பாடாக இருத்தல் வேண்டும். ஜான் ரால்சின் கோட்பாடானது நவீன காலத்தின் மிகச் சிறந்த பகுத்தறிவு மனிதர்கள் நம் சமூகத்தில் நீதியின் சக்தியை உணர்ச்சி கருத்துக்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அவற்றை விடுத்து ஜான் ரால்சின் வழியே அணுகும்போது நீதியின் உண்மையான ஆற்றலை கண்டு கொள்ள முடியும்.

ஜான் ரால்ஸ் சிறந்த படைப்புகள்

  • நீதி கோட்பாடு – 1971
  • நேர்மையான நீதி – 1985
  • அரசியல்தாராளாவியல் – 1993
  • மக்களின் சட்டம் – 1993
  • வேறு நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த மக்களுக்கும் சில அடிப்படை உரிமைகளை பல நாடுகள் உறுதி செய்துள்ளன. புகலிடம் கோரிய மக்கள், தஞ்சம் அடைந்த மக்கள், அகதிகளாக குடியேறியோர் என பலதரப்பட்ட மக்களுக்கும் உரிமைகள் உள்ளன. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உறுப்பு நாடுகள் பலரும் அங்கீகரித்துள்ளனர்.

சமூக, பண்பாட்டு சமத்துவம்

சமூகத்தின் பல பிரிவினரும் தங்களது பண்பாட்டு அம்சங்களைப் பின்பற்றவும் தங்களது தனித்திறமைகளுக்கு ஏற்ற வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்ளவும் சமூகத்தில் சமத்துவம் நிலவுவது அவசியமாகும். ஒவ்வொரு நபருக்கும் நியாயமான வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கு, சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு நீக்கிட முயலவேண்டும்; அல்லது அதன் தாக்கத்தை குறைத்திட நடவடிக்கை எடுப்பது மேற்கொள்வது மிக அவசியம். உதாரணமாக, தரமான மருத்துவ வசதிகள், கல்வி, சத்தான உணவுகள், குறைந்தபட்ச ஊதியம் என்பது போன்ற அம்சங்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி கிடைத்திடச் செய்வது அவசியம். இவை இல்லாத நிலையில், சமூகத்தில் அனைவரும் சமம் என்றோ அல்லது சம வாய்ப்பு பெற்றவர்கள் என்றோ கருதமுடியாது.

நமது நாட்டின் பிரச்சினை என்ன?

சாதி-மதம் பெயரால் நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் நம்பிக்கைகள் பெரும் தடையாக்கிவிடுகிறது. உதாரணமாக , நாட்டில் பல பகுதிகளில், பெண்களின் நிலை கவலை தருவதாகவே உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை என பல உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே பெண்களின் நிலை உள்ளது. இவ்வாறு நடத்தப்படுவதுதான் எங்களது பண்பாடு என சொல்லத் தொடங்கினால், அதன் விளைவுகள் பெரும் அபாயத்தை விளைவிக்கக் கூடியவை. அதாவது, ஏற்றத்தாழ்வுதான் எங்களது பண்பாடு என்று சொன்னால், அல்லது பாகுபாடுதான் எங்கள் பண்பாடு என்றால் அது சமத்துவத்திற்கான நமது பயணம்.

பொருளாதார சமத்துவம்

ஒரு சமூகத்தில் தனி நபர்களிடம் நிலவும் சொத்து மதிப்பு, வருமானம் குறித்த ஏற்றத்தாழ்வுகளை வைத்து, அந்த சமூகத்தில் பொருளாதார சமத்துவம் இருக்கிறதா என்பதை ஓரளவிற்கு நம்மால் அறுதியிட்டுக் கூறமுடியும். அல்லது பணம் படைத்தவர்களுக்கும் ஏழைமக்களுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி அந்த சமூகத்தின் பொருளாதார நிலையினை நமக்குத் தெளிவுபடுத்தும். நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வோரின் எண்ணிக்கையினை வைத்து சில தீர்மானமான முடிவுகளுக்கு நம்மால் வரமுடியும் – இது பரவலாக பின்பற்றக்கூடிய வழிமுறை.

ஆனால், சில பாகுபாடுகள் பண்பாட்டு ரீதியாக நியாயப்படுத்தப்படும் போதுதான், பிரச்சினை பெரியதாகிறது. இத்தகைய பின்னடைவுகளை மக்கள் கவனத்துக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் காலத்தின் தேவைக்கேற்ப சீர்திருத்தவாதிகள் ஈடுபட்டனர்.

“மனிதனை மனிதனாகக் கருதமுடியாமல், அவரது சாதியை மட்டுமே வைத்து எடைபோட முயலும் சிந்தனை காட்டுமிராண்டித்தனமானது” என்று வலியுறுத்திய தந்தை பெரியார், பண்பாடு, கலாச்சாரம் , நாகரீகம் என்ற பெயரில் சமத்துவத்தை மறுக்கும் அத்தனை அம்சங்களையும் கடுமையாக நிராகரித்தார். பெண்களை அடிமைப்படுத்த நாம் உருவாக்கி வைத்திருக்கும் அத்தனை சமூக அமைப்புகளையும் வன்மையாகக் கண்டிக்கும் பெரியார், சாதி, மத, பாலின பேதமற்ற சமூகமே உயரிய சமூகம் என்று அறிவித்தார். மொழி மேல் வெறியும், தங்களது பண்பாடு மேல் தீவிர பற்றும் கொண்டுள்ள நபர்களால் நவீன சமூகத்தை உருவாக்க முடியாது என்று திட்டவட்டமாக வாதாடினார். இவ்வாறு சமத்துவதின் பல்வேறு பரிமாணங்களை நமக்கு பலரும் முன்வைத்துள்ளனர்.

இதுவரை சமூகத்தில் தங்களது குடும்ப மரபு, பிறப்பு இவற்றின் அடிப்படையில் உயர் இடத்தையும் பெரும் அங்கீகாரத்தையும் பெற்ற நபர்களின் சிறப்புநிலை முடிவுக்கு வரவேண்டும். பிறப்பின் அடிப்படையில் சமூகத்தில் ஒருவரின் தகுதி நிர்ணயிக்கப்படுவது சமத்துவமின்மையில் முதன்மையான அம்சம் எனலாம். இதை நிராகரித்து அனைவரும் சமம்; எனவே எந்த ஒரு தகுதிக்கும் அங்கீகாரத்திற்கும் பொதுவான தேர்வு முறையினைப் பின்பற்றிட முயல்வது சமத்துவத்திற்கான முதல்படி. இதுவரை, உலகின் பல நாடுகளில் ஏழை மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறது; பெண்களை கல்வி கற்கவும் பொது இடங்களில் பணி செய்யவும் தடை ச்ய்திருக்கும் நாடுகள் பல. நமது நாட்டில் ஒருசில கடை நிலைப் பணிகளைத் தவிர, சாதி ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர் பதவிகளைப் பெறுவதில் இருக்கும் பெரும் தடைகள் நாமறிந்ததே.

இது மாதிரியான பாகுபாடுகளைக் களைந்திட காலம் காலமாகத் தொடரும் பல சிறப்புத் தகுதிகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். சில நேரங்களில், குறிப்பிட்ட சமூகப் பிரிவினருக்கு தொடர் புறக்கணிப்புகள் காரணமாக சிறப்பான அல்லது கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. அப்போது மட்டுமே, உண்மயான சமத்துவத்தை நாம் நெருங்குகிறோம் என்று பொருள். எனவே, வரலாற்று ரீதியாக நிகழ்ந்திருக்கும் அநீதிகளை இனம் கண்டால் மட்டுமே, சமத்துவம் என்பதன் முழுப் பொருளையும் நாம் எட்டமுடியும்.

அரசின் சமச்சீர் நடவடிக்கைகளில் முக்கியமானது இடஒதுக்கீடு. கல்வி, வேலை வாய்ப்பில் குறிப்பிட்ட அளவு இடங்களை ஒதுக்கீடு செய்து, இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு முன்னுரிமை வழங்குவதே இதன் அடிப்படை நோக்கம். ஆனால், இது பாகுபாடின் மறுவடிவமே என்று வாதிடும் சிலரும் உண்டு. இடஒதுக்கிட்டின் மூலம் திறமையின்மை புதிய அங்கீகாரம் பெற்றுவிடும் எனவும், சாதிரீதியான பாகுபாடு களையப்படாமல் உறுதிப்பட்டுவிடும் என்றும் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.

பன்னெடுங்காலமாகத் தொடர்ந்துவந்த சாதி, மத பாலின ஏற்றத்தாழ்வுகளை மிக விரைவாக நம்மால் களையமுடிந்தால் அது வரவேற்கத்தக்கதே. அப்படிப்பட்ட சமூக, பண்பாட்டு மாற்றம் ஓரிரு தலைமுறைகளுக்குள்ளாகவே ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்ப்பது நடைமுறை சாத்தியங்களுக்குப் பொருந்தாத்து என்றே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சமூக நீதியும் சமத்துவமும்

உலகெங்கும் உள்ள சமூகங்கள் அனைத்துமே தங்களுக்கென்று நீதி என்பது பற்றி வரையறை வந்திருக்கின்றன. சரி-தவறு என்ற தெளிவு இல்லாத சமூகம் வரலாற்றில் இருந்ததாகத் தகவல் இல்லை. சமூகம் ஏற்றுக் கொண்ட நல்ல செயல்கள், சமூகம் மறுக்கும் அல்லது நிராகரிக்கும் செயல்கள் அந்த சமூகத்தின் ‘தர்மம்’ என்று வழங்கப்படலாயிற்று. இந்த தர்மத்தை மீறும் நபர்கள் மீது தயவுதாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்கவும் தண்டனை வழங்கவும் அரசன் தவறக்கூடாது என்பதே முக்கியமான தர்மம் என்று நமது நாட்டில் மட்டுமல்ல பல நாடுகளிலும் நிலவிய நியதியாக இருந்திருக்கிறது. கிரேக்கத் தத்துவ அறிஞர் பிளாட்டோ தனது மாணவர்களோடு நடத்திய பல உரையாடல்களில் நீதி என்றால் என்ன அதை நாம் ஏன் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விரிவாகவே பேசியிருக்கிறார்.

அறிஞர் சாக்ரடீஸ் தமது குறிப்பில், ஒரு சமூகத்தில் சில நபர்கள் கூட நியாயத்திற்கு எதிராக இருந்தால், அது ஒட்டுமொத்த சமூகத்தையும் எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றி விளக்குகிறார். நீதி என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நன்மை பயக்கும் செயலாக மட்டுமே இருக்கமுடியும் என்று தெளிவுபடுத்துகிறார். தனி நபருக்கு மட்டும் நன்மையோ, பலனையோ தரும் செயலை நீதி என்று கருதக்கூடாது என்பதே அவரது கருத்தின் சாராம்சம். ஆம், ஒட்டுமொத்த சமூக வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் நீதி பற்றிப் பேசமுடியாது; நியாயம் என்பது முழு சமூகத்திற்கும் மட்டுமானதாகவே இருக்க முடியும் அல்லது இருக்க வேண்டும் என்பதே சாக்ரடீஸ் சொல்லும் தத்துவத்தின் மையக்கருத்தாகும். இதன்படி, நமது நாட்டில் காலம் காலமாக வழங்கப்பட்டு வந்த அநீதி பாகுபாடுகளை அகற்றுவதற்காக அந்த சமூகங்களுக்கு வழங்கப்பட்ட நீதியே இடஒதுக்கீடு எனும் சமூக நீதியாகும்.

விகிதாச்சார நீதி

பாகுபாடு நிறைந்த சமூகத்தில் நீதியை நிலைநாட்டுவதில் நமது அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் சமூக நீதி என்பது வரலாற்று ரீதியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்தினரின் முன்னேற்திற்கான உதவிக்கரம் எனலாம். அதில் யாருக்கு எவ்வளவு வழங்கப்பவேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகளும் விவாதங்களும் தொடர்ந்தன. சாதியப் படிநிலையே ஏற்றத்தாழ்வுக்கான முதன்மையான கூறாக இருக்கும் நமது நாட்டில், அதனடிப்படையிலேயே சமூகநீதி நிலைநாட்டப்பட வேண்டும். ஆகவேதான், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் பிரிவினர், பழங்குடினர் என பலதரப்பாக ஒவ்வொருவரின் சமூக நிலைக்கு ஏற்ப, அரசின் திட்டங்கள் அமைந்திருக்கின்றன.

  • நாட்டில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மேம்பாட்டிற்காக முதல் ஆணையம் 1953 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. காகா காலேல்கர் அவர்களின் தலைமையில் அமையப்பெற்ற இதுவே சுதந்திர இந்தியாவின் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.

பாகுபாடு – சமூக அடிப்படைக் கோட்பாடு

மனிதர்கள் தாங்கள் சார்ந்துள்ள குழுவின் உறுப்பாகத் தம்மை அடையாளம் காண்கிண்றனர். தமது குழுவைச் சார்ந்தவர்கள் எவ்வளவுதான் புகழ்ந்தாலும் தமது குழுவைச் சார்ந்து இருப்பதையே கவுரவமாகவும் ஆற்றல் மிக்கதாகவும் கருதுவர். பாகுபாடு என்பது ஒருவர் தாம் சார்ந்த குழுவின் உறுப்பினர் என்ற அடிப்படையை இல்லாமலாக்குவது அல்லது இயற்கை மூல வளங்களை அணுகுவதில் இருந்து தடுப்பது. மேலும் , இதில் செல்வம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு குழுவில் ஒருவரின் தகுதி அல்லது சுய-மரியாதையை உருவாக்குவதில் மறைமுகமான ஊக்கம் அவரது செல்வத்தால் ஏற்படுகிறது என்று பாகுபாடு எனும் புறக்கணிப்பு அல்லது ஒதுக்கல் குறித்து சமூக-உளவியலாளர்கள் மதிப்பிடுகிறார்கள். இதை சமூக-அடையாளக் கோட்பாடு எனலாம்.

குறைவான சமூக ஏற்பு அளிக்கப்படும் மனிதர்கள் வெளிக்குழுவினர் போல மதிப்பிழப்பதாகவும் சமத்துவமின்மை அடிப்படையில் அத்தகைய மனிதர்கள் எதிரிகளாகப் பார்க்கப்படுவதாகவும் தொடக்கக்கட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துகிண்றன. வேறுபட்ட குழுவினர் (இன, மத, சிறுபான்மையினர், பெண்கள், இயலாமையில் இருப்பவர்கள், வீடற்றவர்கள்) மீது காட்டப்படும் எதிர்மறை அணுகுமுறைகள் ஒன்றுடன் ஒன்று வலுவான தொடர்புகளைக் கொண்டுள்ளன.

உறுதிப்படுத்தும் நடவடிக்கை

சமூக-பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் வழியாக சமூக சமத்துவத்தினை உருவாக்குவது உறுதிப்படுத்தும் நடவடிக்கை எனப்படுகிறது. இந்த மக்கள் காலம் காலமாக வரலாற்றுப்பூர்வமாக அடிமைகளாகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள். இதனால் உருவாகியுள்ள சமுதாய, பொருளாதார இடைவெளிகளை இணைக்க வேலைவாய்ப்புகள் மற்றும் ஊதியங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றுதல், கல்வி வாய்புகளை அதிகரித்தல், கடந்த காலங்களில் ஏற்பட்ட வலி, காயங்கள் மற்றும் தவறுகளுக்கு நிவாரணம் காணுதல், குறிப்பாக அடிமை மற்றும் அடிமை சட்டங்களால் கடந்த காலங்களில் ஏற்பட்ட சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியன உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் அடங்கும்.

உதாரணமாக, அமெரிக்காவில் ஐந்து ஆண்டுகளில் அமலான உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மீது 2017-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் “கருப்பினத்தவர் வேலைவாய்ப்பு பெறுவது அதாவது பணிகளில் கருப்பினத்தவர் பங்கு குறிப்பிடத்தக்க அளவு (0.8%) அதிகரித்துள்ளது என தெரியவந்தது.

அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் (யு.எஸ்.ஏ)

சுதந்திரம், பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் முன்னேறி வந்தபோதும் அங்கு நிறத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை நீடித்தது. இதை எதிர்த்து அங்கு குடிமை உரிமைப் போராட்டங்கள் நடந்தன.

இதைத்தொடர்ந்து உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் 1960களில் அமெரிக்க ஐக்கிய மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் உறுதிப்படுத்தும் ஆணை குடியரசு தலைவர் ஜான் எஃப் கென்னடி அவர்களால் 1961-ல் வெளியிடப்பட்டது. இது நிர்வாக ஆணை 10925 என்று அழைக்கப்படுகிறது. இதன்படி வேலை வாய்ப்புகளில் எந்த தொழிலாளரும் அல்லது விண்ணப்பதாரரும் நிறம், மொழி, இனம், தேசிய பூர்விகம், அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என அரசு கேட்டுக்கொண்டது.

1965இல் மற்றொரு ஆணையால் (11246) இது மாற்றப்பட்டது. இதன்படி தனியான நிர்வாகத் துறை மூலம் தொடர்ச்சியான நேர்மறை செயல்பாடுகளை மேற்கொண்டு வேலை வாய்ப்புகளில் சமத்துவத்தை ஏற்படுத்துவதில் மைய கூட்டாட்சி அரசின் கடமை உறுதிப்படுத்தப்பட்டது. இதன்படி பாலினம் பாதுகாக்கப்பட்ட இனங்களில் கீழ் கொண்டுவரப்பட்டது. 1964 ல் நிறைவேற்றப்பட்ட சிவில் உரிமை சட்டத்தில் நிறுவனங்களில் பாகுபாடற்ற நிலையை உருவாக்க அழுத்தம் கொடுப்பது என்ற உறுதிப்படுத்தும் நோக்கம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது. 1967ல் பெண்களுக்கு உறுதிப்படுத்தும் நடவடிக்ப்கை விரிவுபடுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள்

அனைத்து வகையான இனப் பாகுபாடுகளை ஒழிக்கும் உலகளாவிய சிறப்பு கருத்தரங்கம் அமைப்பு ரீதியாக பாகுபாட்டுக்கு உள்ளான சமூகங்களுக்கு நிவாரணம் அளிக்க உறுதிப்படுத்தும் நடவடிக்கை அவசியத் தேவை என கையொப்பமிட்ட உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டது. இந்த நடவடிக்கை அமலாக்கம் செய்யப்பட்ட பின்னர் எந்த ஒரு இனக்குழுக்கள் இடையிலும் சமத்துவமின்மை நிகழாத வகையில் திட்டங்களை உருவாக்குமாறு அக்கருத்தரங்கம் வலியுறுத்தியது.

சில அரசுகளால் கடைப்பிடிக்கப்பட்ட பாகுபாட்டுக் கொள்கைகளால் பாதிப்புக்குள்ளான சமுதாயங்களுக்கு உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அமலாக்கம் செய்வது அந்நாடுகளின் சமத்துவக் கொள்கையில் தேவைப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழு வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் சமூக நீதி சட்டம்

1994-ல் தென் ஆப்பிரிக்கா சமூகம் மக்களாட்சிக்கு மாறியதைத் தொடர்ந்து முன்னர் நிலவிய இன ஒதுக்கல் ஆட்சியின் பாதிப்புகளை அகற்றி சமூகங்கள் இடையே சமத்துவம் ஏற்படும் வழிவகைகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவாக உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன்படி முன்னர் சட்டத்தின் அடிப்படையில் இன ஒதுக்கல் செய்யப்பட்ட பூர்வீக கருப்பினத்தவர்கள், இந்தியர்கள், பழுப்பு நிறத்தவர்கள் ஆகியோருக்கும் வெள்ளை இனத்தவர் உள்ளிட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பில் சமத்துவம் அளிக்க சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி 50 பேருக்கு அதிகமாகப் பணியாற்றும் நிறுவனங்களில் மேற்கூறிய பாதிக்கப்பட்ட வகுப்பினர்க்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தமக்குத் தாமே திட்டம் வகுத்து அரசுக்கு அளித்து ஒப்புதல் அளிக்க வேண்டும். இது கருப்பினத்தவர் களுக்கு பொருளாதார ஆற்றல் அளிக்கும் சட்டத்தின் ஒரு உறுப்பாக வகுக்கப்பட்டிருந்தது. இது குறித்த வழக்கில் கருப்பினத்தவருக்கும் முன்னுரிமை வழங்குவதில் தவறில்லை என்று தென் ஆப்பிரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீனா:

சீனாவில் வாழும் சிறுபான்மை தேசிய இனங்களுக்கு கல்வியில் முன்னுரிமை வழங்குவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அமலில் உள்ளன.

ரஷ்யா

சோவியத் ஒன்றியம் இருந்தபோது இனக்குழு சிறுபான்மையினருக்கும், பெண்களுக்கும் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கும் பல்கலைக்கழக நுழைவு மற்றும் அரசு பதவிகளில் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது.

புதிய கல்வியும் புதிய தேவைகளும்

பண்டைக்காலத்தில் நமது நாட்டில் நிலவிவந்த கல்விமுறை சமத்துவ கல்வி முறை அல்ல. அவரவர் வர்ணம்/ சாதி சார்ந்த தொழில்களை மட்டுமே கற்க அனுமதிக்கப்பட்டனர். பிற்காலத்தில் நவீன கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அங்கும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் நவீன கல்விமுறை சமத்துவ கல்வி முறை அல்ல. அவரவர் வர்ணம்/ சாதி சார்ந்த தொழில்களை மட்டுமே கற்க அனுமதிக்கப்பட்டனர். பிற்காலத்தில் நவீன கல்விமுறை அறிமுகப்படுத்தட்ட போதும் அங்கும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் நவீன கல்வி, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த கிறித்துவ மிஷனரி அமைப்புகளால் அறிமுகப்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் ஆங்கிலேய காலனி ஆட்சியின் கீழ் வந்த பின்னர் இங்கிலாந்து நாட்டின் கிறித்துவ மிஷனரிகள் பல இடங்களில் பள்ளிகள் தொடங்கினர். கல்வி மறுக்கப்பட்டு வந்த பல சமுதாயங்களுக்கு இவை நல் வாய்ப்பாக அமைந்தன.

சென்னை மாகாணத்தில் சமூகநீதி

இதே காலகட்டத்தில் அன்றைய சென்னை மாகாணத்தில் இங்கிலாந்து அரசின் நேரசி நிர்வாகம் விரிவடைந்தது. ரயத்துவாரி போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. வரி வசூல் செய்யும் நிர்வாக அமைப்புகள் உருவாயின. சென்னையில் ராணுவ அமைப்புகள் உருவாயின. 1832இல் இந்தியா முழுவதும் அரசு நிர்வாக மொழியாக ஆங்கிலம் மட்டுமே பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்ட இந்திய ராணுவத்தில் இந்தியர்கள் சேர்க்கப்பட்டனர். பெரும்பாலும் பிராமணரல்லாதவர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினரே ராணுவத்தில் சேர்த்தனர். ராணுவத்தில் அனைவரையும் சேர்த்துக்கொண்ட காலனி அரசு பள்ளிகளில் இந்திய மொழிகளை அனுமதிக்கவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இந்நிலை நீடித்தது.

நவீன கல்வி முறையின் கீழ் ஆங்கிலம் கற்றவர்கள் இப்பணிகளில் அமர்த்தப்பட்டனர். ஐரோப்பியர்கள் தவிர இந்திய-ஆங்கிலேயர்கள், பிராமணர்கள் ஆகியோரே அரசு பணிகளில் நிறைந்திருந்தனர்.

இதேபோல 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜமீன்தாரி , ரயத்துவாரி முறைகள் அமலாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜமீன்தார்கள், மிராசுதாரர்கள், நிலச்சுவாந்தார்கள் உருவாயினர். இவர்கள் அனைவரும் உயர்சாதியினர் என்பது குறிப்பிடத்தக்கது. இது கிராம நில உறவுகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்கள் நிலத்தின் மீது எந்த உரிமை ஆனார்கள்.

இதைத்தொடர்ந்து ரயத்துவாரி முறை மீது ஆய்வு செய்யுமாறு அன்றைய ஆங்கிலேய அதிகாரி பிரான்சிஸ் எல்லீஸ் பணிக்கப்பட்டார். இதேபோல் தாமஸ் மன்றோ எனும் அதிகாரியும் ரயத்துவாரி முறை மீது ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார்.

அவர்கள் அறிக்கைகளில் ‘கால, காலமாக நிலத்துடன் தொடர்பு கொண்டிருந்த மக்களிடமிருந்து நிலம் பறிக்கப்பட்டு மேல்தட்டு வகுப்புகளைச் சேர்ந்த ஜமீன்தார்கள், மிராசுதாரர்களிடம் நிலம் அளிக்கப்பட்டதால் வேளாண்மையின் தரமும் விளைச்சலும் குறைந்துவிட்டதாகவும் இதனால் நில வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தனர். மேலும் , ஏராளமான நிலங்களை தரிசாகப் போட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று கோரினர்.

இவ்வாறு காலனி ஆட்சியில் நிலங்களில் இருந்து விரட்டப்பட்டு கல்வியும் மறுக்கப்பட்ட நிலையில் தாழ்த்தப்பட்ட வகுப்பாரின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்வதை உயர் வகுப்பார் எதிர்த்து தடுத்தனர். பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்படுவதைத் தடுக்கக்கூடாது என்று 1854இல் நீதிமன்றம் ஆணையிட்டது. நீதிமன்ற ஆணைகளுக்கும் உயர்வகுப்பார் பணியவில்லை. 1865இல் இங்கிலாந்தில் உள்ள இந்தியாவிக்கான அமைச்சரே ஆணையிட்டார். அப்போதும் நிலைமையில் மாற்றமில்லை.

இவ்வாறு, 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலனி ஆட்சியின் கீழ் சமூகம், பொருளாதாரம், அதிகாரம் , வேலை வாய்ப்புகள் ஆகிய துறைகளில் ஒருபக்கம் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில் சமூகத்தில் பெரும்பான்மையாக இருந்த பிராமணரல்லாதவர்கள், சிறுபான்மை மதத்தினர் மிகுதியாகப் புறக்கணிக்கப்பட்டிருந்தனர்.

இக்காலக்கட்டத்தில் தொடங்கப்பட்ட பள்ளிகள் மூலம் நவீன கல்விகற்ற பிராமணரல்லாத வகுப்பினம் சிறுபான்மை மத்தினர் மத்தியில் இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தங்களுக்கும் அரசுப்பணிகளின் பிரதித்துவம் வேண்டும் என்று கோரினர்.

குறிப்பாக கல்விகற்ற அயோத்திதாச பண்டிதர், ம.சிங்காரவேலர், இரட்டைமலை சீனிவாசன், பிட்டி தியாகராயர், பனகல் அரசர் போன்றோர் முன்னணியில் நின்றனர்.

இவ்வாறு எழுந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து 1892ஆம் ஆண்டில் சென்னை மாவட்ட அனைத்துத் துறைகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளித்து ஆணை வெளியிட்டது. இது 128(2) என்று அழைக்கப்பட்டது. இதனை சென்னை மாகாணம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று அமைக்கப்பட்டது.

தமிழாத்தில் ஒடுக்கப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் முன்னெடுத்த கல்வி முயற்சிகளைப் போலவே மகாராஷ்டிராவிலும் கல்வி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திட மகாத்மா ஜோதிராவ்பூலே, அன்னை சாவித்ரிபாய்பூலே போன்றோர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

தாழ்த்தப்பட்டோருக்கான முன்னுரிமைகள்

சென்னை மாகாண அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதி உதவித்திட்டங்களை 1885 இல் அறிவித்தது. சில இடங்களில் தாழ்த்தப்பட்டோருக்கான பள்ளிகளை அரசே திறந்தது.

இதற்கிடையே, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரிமென்கீரே என்பவர் செங்கல்பட்டு மாவட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.

அதன் சுருக்கம் வருமாறு: தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக, பொருளாதார, கல்வி ரீதியாக மிகவும் மோசமடைந்துள்ளனர். அவர்களுக்கு நிலம் மறுக்கப்படுகிறது. வீடு கட்டிக்கொள்ளக்கூட அனுமதிக்கப்படுவதில்லை. கல்வி நிராகரிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள். ஏராளமான நிலம் வேண்டுமென்றே தரிசாகப் போடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் குறைகிறது. இந்த நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிரித்து வழங்கலாம்.

அவரது அறிக்கையில் மேலும் பல பரிந்துரைகளும் இருந்தன. இந்த அறிக்கையை பரிசீலித்த அரசு 1892இல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 12 லட்சம் ஏக்கர் நிலத்தை பிரித்து வழங்கியது. இது பஞ்சமி நிலம் என அழைக்கப்பட்டது. இதேபோல தாழ்த்தப்பட்டோரின் குழந்தைகளுக்கான பள்ளிகளை அரசு பஞ்சமர் பள்ளிகள் என அழைத்தது.

‘பஞ்சமர்’ என்பது, வைதீக மதத்தின்படி நான்கு வர்ணங்களுக்கும் வெளியே நிறுத்தப்பட்ட மக்களைக் குறிக்கும் பெயர் ஆகும். எனவே பஞ்சமர் பள்ளிகள் என அழைப்பதை ஆதிதிராவிடர் பள்ளிகள் என அழைக்கப்படவேண்டும் என்று அயோத்திதாச பண்டிதர் , ம.சிங்காரவேலர் போன்றோர் கூறினர்.

நீதிக்கட்சி

1913ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் கார்டியூ தலைமையிலான ராயல் ஆணையம் வந்தபோது அதனிடம் ஏராளமான விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. சென்னை மாகாணம் மட்டுமல்லாமல் ரங்கூன் திராவி சங்கம் உள்பட பல அமைப்புகள் வீண்ணப்பங்களை அளித்தன. அவற்றில் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மை மதத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வேலை வாய்ப்புகளில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன.

டாக்டர் சி.நடேசன், சர்.பி.தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் அறிக்கை ஒன்றினைத் தயாரித்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டனர். சர்.பி.தியாகராயர் எழுதிவெளியிட்ட அந்த அறிக்கை ‘பிராமணரல்லாதார் அறிக்கை’ என்று அழைக்கப்படுகிறது. 1916ஆம் ஆண்டு பிராமணரல்லாதோர் நலன் காக்க சர்.பி.தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோர் ‘தென்னிந்தியர் சுதந்திரம் சங்கம்’ (South Indian Liberal Federation) என்ற இயக்கத்தைத் தொடங்கினர். இவ்வியக்கத்தின் சார்பில் ‘ஜஸ்டிஸ்’ என்னும் இதழ் வெளியானது. எனவே, இவ்வியக்கம் மக்களிடையே ‘நீதிக்கட்சி’ (Justice party) என வழங்கப்பெற்றது. இவ்வியக்கம் பிராமணரல்லாதார் மக்கள் மத்தியில் கல்வி, வேலைவாய்ப்பு பெறுவதற்கான ‘வகுப்புவாரி உரிமை’ குறித்த விழிப்புணர்வை உருவாக்கியது.

உயர்கல்வியில் ஆங்கிலம், சமஸ்கிருதம் மட்டும் அனுமதிக்கப்படுவதைக் கண்டித்தும் தமிழ் உள்ளிட்ட பழமையான மொழிகளையும் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிக்கட்சி சார்பில் 1915 இல் அரசுக்கு மனு அளிக்கப்பட்டது.

1917இல் இந்தியா வந்த தூதுக்குழுவை சென்னை மாகாணத்தைச் சேர்ந்த 54 அமைப்புகள் சந்தித்து பிராமணரால்லாதோர் மற்றும் சிறுபான்மை மதத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று கோரினர். அதுமட்டுமல்லாமல் வகுப்புவாரி பிரிதிநிதித்துவம் கோரி ஆங்காங்கு மாநாடுகள் நடத்தப்பட்டன.

முதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை

சென்னை மாகாண சட்டமன்றத்தில் நீதிக்கட்சி ஆட்சியின் அமர்ந்ததைத் தொடர்ந்து இக்கோரிக்கைகள் சட்டமன்றத்திலும் எதிரொலித்தன. தொடர்ந்து நீதிக்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் இவற்றுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக அரசு அனுமதி அளித்ததன் பேரில் அரசு பணியிடங்களில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அளித்து 1921இல் தீர்மானம் நிறைவேறியது . இது வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை என்று அழைக்கப்படுகிறது.

இந்திய வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஆகும். காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த பிரிவினர்கள் தாங்களும் சமூக, பொருளாதார இழிவுகளில் இருந்து விடுதலை பெற்று சுயமரியாதையுடனும் சமத்துவத்துடனும் எதிர்காலத்தில் வாழ முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது.

“எல்லா அரசு பணிகளிலும் பிராமணர் அல்லாதவர்களை அவர்களுக்குக் குறைந்தபட்ச கல்வித்தகுதி இருந்தாலோ போதும் என்று கருதி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என அனைவரும் அரசுப்பணிகளில் அமர்த்தப்பட வேண்டும். இதற்கான ஒரு நிலையான ஆணை வெளியிட வேண்டும். நூறுரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் உத்தியோகமாக இருந்தால் 75% அளவு மக்களை அது அடையும்வரை ஏழாண்டுகாலம் வரை அமலில் இருக்க வேண்டும்” எனும் தீர்மானத்தினை சட்டசபையின் உறுப்பினரான முனுசாமி கொண்டுவந்தார்.

இத்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய சர்.ஆர்.கே.சண்முகம் “இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நாம் நிறைவேற்றினால் நம் எதிர்கால சந்ததி நம்மையெல்லாம் நமது நாட்டுக்கு உரிமை வாங்கித் தந்தவரென்றே கொண்டாடும்” என்று குறிப்பிட்டார். அத்தீர்மானத்தை வழிமொழிந்த டாக்டர் சி.நடேசனார் ‘எங்கள் மக்களுக்கு வேலைகளில் சரியான பிரதிநிதித்துவம் தரப்படாவிட்டால், நாங்கள் வரி கொடுக்க மாட்டோம்’ என்று பேசினார்.

காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக இயங்கி வந்த தந்தை பெரியார், ஜஸ்டிஸ் கட்சியினரின் கருத்துக்களை ஆதரித்தார். காங்கிரஸ் கட்சிக்குள்ளும், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரிக்கையை எழுப்பினார். 1925-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரும் தீர்மானத்தை பெரியார் கொண்டுவந்தார். இதற்கு காங்கிரஸ் தலைமை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அவர் காங்கிரஸில் இருந்து வெளியேறினார்.

1928 வாக்கில் இரா. முத்தையா அவர்களின் தலைமையில் நீதிக்கட்சி செயல்பட்டபோது அரசின் எல்லாத்துறைகளிலும், பணிநியமனங்கள் முறைப்படுத்தப்பட்டு அரசாணையின் மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நிரந்தரமாக்கப்பட்டது.

முதல்சட்டத்திருத்தம்

இந்தியா சுதந்திரம் அடைந்து இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின் அதில் குறிப்பிடப்பட்டிருந்த சட்டப்பிரிவுகளைக் காட்டி, தமிழகத்தில் வகுப்புவாரி ஆணை பின்பற்றப்படுவதால், மருத்துவக் கல்லூரியில் தனக்கு இடம் கிடைக்கவில்லை எனக்கூறி செண்பகம் துரைராஜன் என்பவர் 1951ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தார்.

இவ்வழக்கினை விசாரித்து தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம் தமிழகத்தில் பின்பற்றப்படும் வகுப்புவாரி ஆணையானது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றமும் அத்தீர்ப்பினை உறுதி செய்தது. எனவே தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வந்த வகுப்புவாரி (இடஒதுக்கீடு) முறை ரத்து செய்யப்பட்டது.

வகுப்புவாரிமுறை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் எழுந்தன. எனவே, தந்தை பெரியார் உடனடியாக அரசமைப்புச் சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் தந்தை பெரியார், தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கு.காமராஜ், பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திய அரசமைப்புச் சட்ட சிற்பி டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் ஆகியோர் முயற்சியால் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நீடிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் திருத்தம் ஆகும். இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீண்டும் இடஒதுக்கீடு பெறும் வாய்ப்பு ஏற்பட்டது.

அரசமைப்புச் சட்டம் , பிரிவு 15 மற்றும் 16 ஆகிய பிரிவுகள் “சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பின் தங்கியவர்களுக்குச் சில சிறப்புச் சட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கலாம்” என அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் பிரதமர் நேரு முதலாவது சட்டத் திருத்தத்தினை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார். அத்திருத்தத்தின்படி அரசமைப்புச் சட்ட பிரிவுகள் 15(4) & 16(4) என்னும் உட்பிரிவுகள் இனைக்கப்பட்டன.

இந்திய அரசமைப்புச் சட்டத்திருத்தத்திற்குப் பின் தமிழ்நாட்டில் 1951ஆம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டோருக்கு 25%, தாழ்த்தப்பட்டோருக்கு 16% என இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இட ஒதுக்கீடு விரிவாக்கம்

மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பிற்படுத்தப்பட்டோர் நலப் குறித்து ஆராய்ந்திர சட்டநாதன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 1971 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கு 31%, தாழ்த்தப்பட்டோருக்கு 18% என இட ஒதுக்கீட்டு வரம்பு மாற்றியமைக்கப்பட்டது.

1979ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில அரசின் சமூக நலத்துறை அரசாணை (G.O.Ms.No.1156, 02.02.1979) ஒன்றினைப் பிறப்பித்தது. அவ்வாணையின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின், குடும்ப ஆண்டு வருமானம் ₹9000 நிர்ணயிக்கப்பட்டது. பின் அந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டு புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டது. அப்புதிய ஆணையின்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டு வரம்பு 31% லிருந்து 50% ஆக உயர்த்தப்பட்டது. எனவே, அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50%, தாழ்த்தப்பட்டவர்கள் & பழங்குடியினருக்கு 18% என்று மொத்த இடஒதுக்கீடு 68% நடைமுறைக்கு வந்தது.

1989ஆம் ஆண்டு பழங்குடியினருக்குத் தனியிட ஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30%, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20%, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18%, பழங்குடியினருக்கு 1% என இடஒதுக்கீட்டு வரம்புகள் மாற்றியமைக்கப்பட்டு இடஒதுக்கீசு 69% என நடைமுறைக்கு வந்தது.

மத்திய அரசில் இட ஒதுக்கீடு: மண்டல் ஆணையம்

வி.பி.சிங் ஆட்சியின் போது மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். அதன் அடிப்படையில் மத்தியஅரசின் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. அதனை எதிர்த்து, இந்திரா சகானி இடஒதுக்கீட்டு முறையானது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்னும் அரசமைப்புச் சட்ட விதிகளை மீறும் வகையில் அமைந்துள்ளது. எனவே இடஒதுக்கீட்டு முறையினை ரத்து செய்திட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தார்.

அவ்வழக்கினை விசாரித்த நீதிமன்றம் வி.பி.சிங் தலைமையிலான அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கிய 27 சதவீதம் இடஒதுக்கீசு செல்லும் என்று தீர்ப்பளித்தது. மேலும், இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்திற்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. அரசியல் சட்டத்தில் உச்ச வரம்பு குறித்துக் குறிப்பிடப்படாத நிலையில் உச்சநீதிமன்றம் 50 சதவீதம் என்று உச்சவரம்பினை நிர்ணயித்தது. எனினும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் ஒரு பகுதியில் உச்சவரம்பிற்கும் விலக்கு உண்டு என்பதைப் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது.

“உச்சநீதிமன்றத்தில் மண்டல் ஆணைய உத்தரவு பற்றிய தீர்ப்பில்” 50% என்பது விதியாக இருந்த போதிலும் கூட பலதரப்பட்ட மக்கள் பல்வேறு வகையில் பரந்துப்பட்ட இந்நாட்டில் வேரூன்றி உள்ள சில அசாதாரணமான நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது நமது வாதமல்ல. நாட்டின் தொலை தூரத்தில் உள்ள பகுதிகளிலோ அல்லது தள்ளியிருக்கும் பரப்புகளிலோ வாழ்வதன் மூலம் தேசிய நீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொள்ள வாய்ப்பற்ற மக்களுக்கு அவர்களுக்கே உரியதனித்தன்மை காரணமாக அவர்களுக்கு வேறுவகையில், விதிகளிலிருந்து விலக்கு என்பது மிகவும் அவசியமாகும்”. 50% இட ஒதுக்கீட்டிற்கு விலக்கு உண்டு எனத் தீர்ப்பளித்த நீதீதிபதிகளே ஏற்றுக் கொண்டுள்ளனர், என்பதை மேற்கண்டத் தீர்ப்பின் ஒருபகுதி உறுதி செய்துள்ளது. எனினும் தமிழகத்தில் நடைமுறையிலிருந்த 69% இடஒதுக்கீசு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்றும் அதனை ரத்து செய்திட வேண்டுமென்றும் நுகர்வோர் அமைப்பின் அறக்கட்டளை உறுப்பினரான கே.என்.விஜயன் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 50% மேல் இடஒதுக்கீடு அளிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது.

எனினும் 1951 ஆம் ஆண்டு எழுந்ததைப் போன்ற சட்ட நெருக்கடிகள் எழுந்ததால் அரசியல் சட்டத்தில் உள்ள மாநில அரசுகளுக்கான அதிகார வரம்பு என்னும் வாய்ப்பினைப் பயன்படுத்தி அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அரசியல் சட்டப்பிரிவு 31(C) (Directive principles of state policy) –யினைப் பயன்படுத்தித் தனிச்சட்ட மசோதா ஒன்றினை 30.12.1993 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. அதன்பின் தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட 69% இடஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் தனிச்சட்டமசோதாவிற்கு 19.07.1994 அன்று அன்றைய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததால் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீசு உரியசட்டப் பாதுகாப்பினைப் பெற்றுவிட்டது.

தமிழக அஎஅசின் இச்சட்டத்தினை எதிர்த்தும் வழக்குத்தொடரும் சூழலைத் தவிர்க்க இந்திய அரசமைப்புச் சட்டத்தின் IX ஆவது அட்டவணையில் சேர்க்க தமிழக அரசு பெரும் முயற்சி எடுத்தது. நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பெற்ற 76-வது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் தமிழக அரசின் இடஒதுக்கீட்டுச் சட்டம் இந்திய அரசியல் சட்டத்தின் IX ஆவது அட்டவணையில் இணைக்கப்பெற்றது. அத்துடன் , 1992 நவம்பர் 16ஆம் தேதி முதல் இச்சட்டம் முன்தேதியிட்டு நடைமுறைக்கு வந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இடஒதுக்கீட்டு முறை என்பது அரசு அதிகாரங்களைப் பெறுவதற்கான தற்காலிக முயற்சியே ஆகும். சமூக நன்மதிப்பு உருவாகிடவும் , சாதிய அடுக்கு முறைகள் ஒழிந்து சமத்துவம் பிறந்திட வேண்டும். அத்தகைய சமத்துவம் பிறப்பதற்கான வழிமுறைகளுள் ஒன்று ‘சாதிக்கலப்பு திருமணங்களாகும்’. சாதிகளுக்குள்ளேயே நடைபெறும் திருமணங்களே நடைபெறும் திருமணங்களே சாதிக்கட்டமைப்பை வலிமைப்படுத்தி வருவதுடன் சமத்துவம் உருவாக்குவதற்கானத் தடைக்கல்லாகவும் இருக்கின்றன. எனவே “சாதிமறுப்புத் திருமணங்களும்” முற்போக்கான உயர் எண்ணங்களுமே உண்மையான சமூகமாற்றத்தை முன்னெடுக்கும் கருவிகளாகும்.

பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்

இந்திய அரசியல் சட்டப்பிரிவு 340 இதன்படி “சமூக அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள்” எவை என அடையாளம் கண்டிடவும் மற்றும் அவர்களின் நிலை குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரைகளை வழங்கவும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்திடவும் குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கிறது.

அதனடிப்படையில் இந்திய அரசு பின்வரும் இரண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களை இதுவரை அமைத்துள்ளது.

  1. திரு. காகா கலேல்கர் ஆணையம்

காகா கலேல்கர் ஆணையம் என்றழைக்கப்படுகிற முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 29.01.1953 அன்று அமைக்கப்பட்டது. இவ்வாணையத்தில் காகா கலேல்கர் உட்பட 11 பேர் இடம் பெற்றிருந்தனர். இக்குழுவின் அறிக்கையினை அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

  1. மண்டல் ஆணையம்

பிரதமர் மொரார்ஜிதேசாய் தலைமையிலான மத்திய அரசு பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் கமிஷன் என்றழைக்கப்படுகிற மண்டல் ஆணையத்தினை 1979ஆம் ஆண்டு அமைத்தது. இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது ஆணையமாகும் . இவ்வாணையத்தின் செயலராக எஸ்.எஸ்.கில் செயல்பட்டார்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்து ஆய்வு செய்திட 1979ஆம் ஆண்டு பி.பி. மண்டல் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பெற்றது. அக்குழு இந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இவ்வாணையம் 11 காரணங்களை அடிப்படையாகக் கொண்டு சமூக அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் 3743 சாதிகள் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளாக உள்ளன என அடையாளம் கண்டது.

மண்டல் தன் அறிக்கையின் முகப்புரையில் “வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு மெட்ராஸ் முன்னோடியாக இருப்பதுடன் அம்மாநிலமே பிற்படுத்தப்பட்ட வகுப்பார்களுக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கியுள்ளது” என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் தமிழ்நாடு சமூகநீதியின் பிறப்பிடமாகவும் முகவரி ஆகவும் இருப்பதை அறியலாம்.

மக்கள் தொகையில் 52% உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பார்க்கு மத்திய அரசுப் பணிகளில் 27% வழங்கிட மண்டல் ஆணையம் பரிந்துரைத்தது. இவ்வாணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு 13.08.1990ஆம் ஆண்டு பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு மத்திய அரசுப் பணிகளில் மட்டும், பிற்படுத்தப்பட்ட வகுப்பாருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தது. இவ்வாணை 13.08.90ஆம் தேதி முதல் அமல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுப் பணிகளில் சமூக அடிப்படையிலும், கல்வி அடிப்படையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்திய அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமூக நீதியை மேம்படுத்துதல்

சமூக நீதியை ஏற்படுத்துவதில் இட ஒதுக்கீடு முக்கியமான கருவியாக உள்ளது, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டு முறை சமூக நீதியை நிலை நாட்டுகிறது என்பதை உணர வேண்டும். பிறப்பின் அடிப்படையில் யாவரும் யாருக்கும் உயர்ந்தவர் மற்றும் தாழ்ந்தவரும் இல்லை என்பன சமதர்ம தத்துவத்தின் அடிப்படையாகவும் சமூக நீதிக்கு இன்றியமையாத ஒன்றாகவும் கருதப்படுகின்றன. தன் பிறப்பின் அடிப்படையில் பயன்பெறுபவர்கள் அது இந்த நவீன உலகத்திற்கு பொருந்தாது என உணரவேண்டும். சமூகத்தில் உள்ள அனைவருடனும் உணர்வுப்பூர்வமாகவும், சமத்துவத்துடன் இருப்பதே நவீன மனிதனாக இருப்பதற்கு அவசியமாகும். சமீய காலத்தில் சொத்துக்கள் மற்றும் ஆடம்பரப்பொருள்களை கொண்டும் ஒருவரை மதிப்பிடும் போக்கு அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கக்கூடிய ஒன்றாகும். சமீபகால நோக்கங்கள் நம்மை நவீனமாக்குகின்றன. நவீன இந்தியாவை உருவாக்க அனைத்து துறைகளிலும் முழுமையான மாற்றம் தேவை. ஆகையால்தான் நவீன இந்தியா எனும் கருத்தாக்கம் சமூகநீதியை இயற்கையாகவே உள்ளடக்கியதாக இருக்கிறது.

1979ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் பின்தங்கிய வகுப்பிற்கான இரண்டாவது ஆணையம் பி.பி. மண்டல் தலைமையில் உருவாக்கப்பட்டது. பின்தங்கிய மக்களின் சமூக, கல்வியினை மேம்படுத்த வழிமுறைகள், திட்டங்கள் பற்றிய பரிந்துரைகள் கேட்கப்பட்டன. இந்த ஆணையம் அரசு பதவிகளில் 27 சதவிகிதம் சமூக மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றி பரிந்துரைத்தது.

1980ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மண்டல் ஆணையம் அதன் அறிக்கையை உள்துறை அமைச்சராக இருந்த ஜெயில் சிங்கிடம் சமர்ப்பித்தனர். அப்போது பி.பி, மண்டல் “இந்த அறிக்கையை தயார் செய்வதில் அதிகமான உழைப்பை கொடுத்துள்ளோம். மிக சரியாக கூறினால் நாம் உன்னதமான சடங்கை செய்துள்ளோம்” என்று கூறினார்.

அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த மண்டல ஆணைய அறிக்கை உள்துறை அலுவலகத்திலேயே இருந்தது. அதை தேசிய முன்னணி அரசில் பிரதமராக இருந்த வி.பி.சிங் (1938 – 2001) 1990-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தினார். அந்த நேரத்தில் மண்டல் ஆணைய பரிந்துரைகள் பெரும் விவாதங்களை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. தேசிய அரசியலில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டன. சந்தர்ப்பவாத அரசியலை செய்வதாக வி.பி.சிங். குற்றஞ்சாட்டப்பட்டார். எந்த ஒரு பெரிய தேசிய கட்சியும் மண்டல் ஆணைய பரிந்துரைகளுக்கு ஆதரவாக இல்லை.

சில அமைப்புகள் மற்றும் பிரிவினர் இந்த பரிந்துரைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இரு தரப்பு வாதங்களையும் பிதினோரு நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கேட்ட பின்பு உச்சநீதிமன்றம் இந்த மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் செல்லும் என தீர்ப்பளித்தது. அந்த அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகள் இந்த 1992-ஆம் ஆண்டு தீர்ப்பை வழங்கினர். ஆனால் அதே சமயத்தில் பரிந்துரைகளில் சில மாற்றங்களை செய்ய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

1993 ஆம் செப்டம்பர் 8ஆம் தேதி பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்பின் அறிக்கை பற்றிய சர்ச்சை முடிவிற்கு வந்து, திட்டம் தொடர ஆரம்பித்தது.

இந்திரா சகானி V.இந்திய யூனியன் AIR 1993 SC 477

  • இது மண்டல குழு வழக்கு எனவும் அழைக்கப்படும்.
  • பிரதம மந்திரி மொரார்ஜிதேசாய் தலைமையில் 1979-ஆம் ஆண்டு ஜனவரியில் பி.பி. மண்டல் தலைமையில் , சட்ட்ப்பிரிவு 340-ன் படி பின்தங்கிய வகுப்பினருக்கான இரண்டாவது ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.
  • பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் (SC/ST) மக்களை தவிர்த்து, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மொத்த மக்கள் தொகையில் 52%இடம் பெற்றுள்ளனர், அரசு பதவியில் 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்தால்தான் அது பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் (SC/ST) இதர பிற்பட்ட வகுப்பினருக்கான (OBC) மொத்த 50 சதவிகித இட ஒதுக்கீடு ஆகும் என இந்த ஆணையம் பரிந்துரை செய்தது.
  • மண்டல ஆணைய அறிக்கை சமர்பித்த பிறகு எந்த ஒரு நடவடிக்கையும் மற்றும் செயல்பாடும் இல்லை. பாராளுமன்றத்தில் இருமுறை 1982 மற்றும் 1983-ஆம் ஆண்டுகளில் மண்டல் ஆணையம் அறிக்கை மீது விவாதம் மட்டுமே நடைபெற்றது.
  • 1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி வி.பி.சிங் அரசாங்கம் ஒரு ஆணையின் மூலம் மண்டல் ஆணையம் அறிக்கையின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு 27 சதவிகித இட ஒதுக்கீடு சமூகத்தில் பிற்பட்ட வகுப்பினருக்கு இந்திய அரசுப் பணிகளில் வழங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!