Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

சமூக நீதி Online Test 11th Political Science Lesson 13 Questions in Tamil

சமூக நீதி-11th Political Science Lesson 13 Questions in Tamil-Online Test

Congratulations - you have completed சமூக நீதி-11th Political Science Lesson 13 Questions in Tamil-Online Test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • கூற்று (A): ஜான் ரால்ஸ் அவர்களின் நீதிக்கோட்பாடு முழுமையானதாக அமைந்திருக்கவில்லை.
  • காரணம் (R): சமூகங்கள் இடையேயான செல்வப் பகிர்வு குறித்து ரால்ஸ் ஆய்வு செய்யவில்லை.
 
A
கூற்று (கூ) காரணம் (கா) இரண்டுமே சரி, கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது.
B
கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை.
C
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
D
கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
Question 1 Explanation: 
சமத்துவம், நீதி குறித்து சமூகங்கள் இடையிலான விவாதங்கள் இருபதாம் நூற்றாண்டு பிற்பகுதிவரை கூட நடைபெறவில்லை. அதற்கு சில வரம்புகள் பின்பற்றப்பட்டு, ஒரு சமூகத்துக்குள் மட்டும் நிகழ்ந்தன. உதாரணமாக ஜான் ரால்ஸ் அவர்களின் நீதிக்கோட்பாடு கூட முழுமையானதாக அமைந்திருக்கவில்லை. சமூகங்கள் இடையேயான செல்வப் பகிர்வு குறித்து அவர் ஆய்வு செய்யவில்லை.
Question 2
வளரும் நாடுகளில் வறுமை அதிகரித்து வருவதற்கு வளர்ந்த நாடுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுபவர் யார்?
A
ஜான் ரஸ்கின்
B
சாக்ரடீஸ்
C
தாமஸ் பொக்கே
D
ஜான் ரால்ஸ்
Question 2 Explanation: 
1990களின் போதுதான், தொழில்மய நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் அதாவது பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இடைவெளிகளால் உருவாகியுள்ள அற நெறிப் பாதிப்புகள் குறித்து தத்துவவியலாளர்கள் எண்ணிப்பார்க்கத் தொடங்கினர். வளரும் நாடுகளில் வறுமை அதிகரித்து வருவதற்கு வளர்ந்த நாடுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறும் ஜெர்மன் தத்துவவியலாளர் தாமஸ் பொக்கே, இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் மடிந்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறார்.
Question 3
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) அநீதியான பாகுபாட்டால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளான பிரிவினருக்கும் சமத்துவ ஆட்சியில் முன்னுரிமை தருவதன் அவசியமும் உணரப்பட்டுள்ளது. இதுவே சமூக நீதியின் அடிப்படைக் கோட்பாடாகும்.
  • (ii) உறுதிப்படுத்தும் நடவடிக்கை, நேர்மறை பாகுபாடு என்றும் அழைக்கப்படுகிறது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 3 Explanation: 
அதேபோல ஒரு நாட்டுக்குள் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் அநீதியான பாகுபாட்டால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளான பிரிவினருக்கும் சமத்துவ ஆட்சியில் முன்னுரிமை தருவதன் அவசியமும் உணரப்பட்டுள்ளது. இதுவே சமூக நீதியின் அடிப்படைக் கோட்பாடாகும். உறுதிப்படுத்தும் நடவடிக்கை, நேர்மறை பாகுபாடு என்றும் அழைக்கப்படுகிறது.
Question 4
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சமூகம் உருவாக்கும் எதிர்மறை மதிப்பீடுகள் சமத்துவமின்மையை ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது.
  • (ii) பல நூற்றாண்டுகளாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால் பெண்களின் 'பலவீனமான' நிலை பலருக்கு இயற்கையானதாகவும், இயல்பானதாகவும் தோன்றலாம்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 4 Explanation: 
சமூக நீதி என்றால் என்ன? சமூகம் உருவாக்கும் எதிர்மறை மதிப்பீடுகள் சமத்துவமின்மையை ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது. சட்டென்று பார்க்கும்போது சிலருக்கு ஆண் - பெண் ஏற்றத்தாழ்வு இயற்கையானதாகவே தெரியும். ஆம், பல நூற்றாண்டுகளாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால் பெண்களின் 'பலவீனமான' நிலை பலருக்கு இயற்கையானதாகவும், இயல்பானதாகவும் தோன்றலாம். ஆப்பிரிக்காவின் கருப்பு இன மக்கள் மீதான காழ்ப்புணர்ச்சியும் இதே வகையை சேர்ந்ததே.
Question 5
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சாதியின் பெயரால் வாய்ப்பு மறுக்கப்பட்ட பலரது நிலை 'இயற்கையானது' என்பது போல நமக்குச்சொல்லப்படுகிறது.
  • (ii) விருப்பு - வெறுப்பின் அடிப்படையில் நீண்ட காலமாக இருந்து வந்த மரபுகளால் சமூக சமத்துவமின்மை இறுகிப்போய்விட்டிருந்தது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 5 Explanation: 
கறுப்பின மக்கள் அறிவுலகில் பெரும்பங்களிப்பை செய்ய முடியாது என்றே திரும்ப திரும்ப சொல்லப்பட்டது. பல காலமாக தொடர்ந்த இந்த அவலம் நமக்கு இயல்பானதாக மாற்றப்பட்டிருக்கிறது. நமது நாட்டிலும் இதே நிலைதான். சாதியின் பெயரால் வாய்ப்பு மறுக்கப்பட்ட பலரது நிலை 'இயற்கையானது' என்பது போல நமக்குச்சொல்லப்படுகிறது. ஆனால் இவை அனைத்துமே செயற்கையானது.விருப்பு - வெறுப்பின் அடிப்படையில் நீண்ட காலமாக இருந்து வந்த மரபுகளால் சமூக சமத்துவமின்மை இறுகிப்போய்விட்டிருந்தது. நம் கண்களுக்கு புலப்படாத அதே சமயம் பெரும் உருவம் கொண்ட அதிகாரம் அங்கு ஊடுருவியிருக்கிறது என்பதை இன்றைய அறிஞர்கள் திட்டவட்டமாக அறிவிக்கின்றனர்.
Question 6
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சமூக அதிகாரத்தை கைக்கொள்வதில் ஏற்படும் போட்டிகளே ஒடுக்குமுறைகள் தோன்றிட காரணங்களாகும்.
  • (ii) பன்மைத்துவமான சமூக அமைப்பில் தனித்த ஒரு குழுவினர் மட்டும் சமூக மேலாதிக்கம் பெற்றவர்களாக உருவெடுப்பது அநீதியான போக்காகும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 6 Explanation: 
சமூக அதிகாரத்தை கைக்கொள்வதில் ஏற்படும் போட்டிகளே ஒடுக்குமுறைகள் தோன்றிட காரணங்களாகும். தங்களுக்கென உருவாக்கிக்கொண்ட இயல்பான அடையாள கூறுகளை தற்காத்துக் கொள்வதற்கு அதிகார அமைப்புகளை கைப்பற்றிக்கொள்ள எண்ணுகின்றனர். பன்மைத்துவமான சமூக அமைப்பில் தனித்த ஒரு குழுவினர் மட்டும் சமூக மேலாதிக்கம் பெற்றவர்களாக உருவெடுப்பது அநீதியான போக்காகும்.
Question 7
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சமூக மேலாதிக்க உணர்வினைப் பெற்ற பண்பாட்டு குழுவினர் மற்ற குழுவினரின் சமூக உரிமைகளை பறித்தெடுக்க முயலும்போது சமூகப்பகை முரண்கள் உருவாகின்றன.
  • (ii) தங்கள் மீதான மேலாதிக்கத்தை மறுத்து தங்களுக்கு உரிய உரிமைகளை சமமாக பெற்றிட நடத்துகிற போராட்ட உணர்வினையே சமூக நீதி என்கிறோம்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 7 Explanation: 
சமூக மேலாதிக்க உணர்வினைப் பெற்ற இன, மத, மொழி, சாதி மற்றும் பண்பாட்டு குழுவினர் மற்ற குழுவினரின் சமூக உரிமைகளை பறித்தெடுக்க முயலும்போது அல்லது தடுக்கும்போது சமூகப்பகை முரண்கள் உருவாகின்றன. தங்கள் மீதான மேலாதிக்கத்தை மறுத்து தங்களுக்கு உரிய உரிமைகளை சமமாக பெற்றிட நடத்துகிற போராட்ட உணர்வினையே சமூக நீதி என்கிறோம்.
Question 8
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) இந்தியாவில், புராதன காலத்து மரபு சார்ந்த சிந்தனையால் உருவான வருணாசிரம தர்மா சமூகப்படிநிலை, மேல் - கீழ் என்னும் பாகுபாட்டை கொண்டிருக்கிறது.
  • (ii) வருண படிநிலை அமைப்பு 'சதுர் வருண அமைப்பு' (நான்கு வருண அமைப்பு - அந்தணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்) என்று அழைக்கப்படுகிறது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 8 Explanation: 
சமூகப்படிநிலைகளின் பின்புலம்: இந்தியாவில், புராதன காலத்து மரபு சார்ந்த சிந்தனையால் உருவான வருணாசிரம தர்மா சமூகப்படிநிலை, மேல் - கீழ் என்னும் பாகுபாட்டை கொண்டிருக்கிறது. வருண படிநிலை அமைப்பு 'சதுர் வருண அமைப்பு' (நான்கு வருண அமைப்பு - அந்தணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்) என்று அழைக்கப்படுகிறது.
Question 9
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) நான்கு வருணங்களுக்கு அப்பாற்பட்டவர்களை  பஞ்சமர் - அவர்ணர் - பழங்குடியினர் என ஒதுக்கி வைத்தனர்.
  • (ii) பிறப்பின் அடிப்படையில் பேணப்படும் இப்பாகுபாடு, தலைமுறைகளாகத் தொடர்வதால் சமூகத்தில் ஆழமான ஏற்றத்தாழ்வுகள் உருவாயின.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 9 Explanation: 
இந்த நான்கு வருணங்களுக்கு அப்பாற்பட்டவைகளை பஞ்சமர் - அவர்ணர் - பழங்குடியினர் என ஒதுக்கி வைத்தனர். இவர்களையே பின்னர் பட்டியல் பிரிவு சாதியினர், பழங்குடியினத்தவர் என்று குறிப்பிட்டனர். பிறப்பின் அடிப்படையில் பேணப்படும் இப்பாகுபாடு, தலைமுறைகளாகத் தொடர்வதால் சமூகத்தில் ஆழமான ஏற்றத்தாழ்வுகள் உருவாயின.
Question 10
இன, மத, மொழி சிறுபான்மையினருக்கான ஐ. நா பிரகடனம் எப்போது வெளியிடப்பட்டது?
A
டிசம்பர் 12, 1992
B
டிசம்பர் 18, 1992
C
டிசம்பர் 16, 1982
D
டிசம்பர் 18, 1972
Question 10 Explanation: 
இன, மத, மொழி சிறுபான்மையினருக்கான ஐ. நா பிரகடனம் - டிசம்பர் 18, 1992 பிரகடத்தின் முக்கிய அம்சங்கள்: * சிறுபான்மை மக்கள் தனிப்பட்ட முறையிலும் பொதுவாழ்விலும் எந்த வகையான பாகுபாடும் குறுக்கீடும் இன்றி சுதந்திரமாக தங்கள் பண்பாட்டை பின்பற்றவும், மதத்தை கடைபிடிக்கவும், பிரச்ச்சாரம் செய்யவும், மொழியை பயன்படுத்தவும் உரிமை பெற்றவர்கள் ஆவர். * சிறுபான்மை மக்கள் தங்களுக்கான அமைப்புகளை உருவாக்கவும், பராமரிக்கவும் உரிமை உண்டு.
Question 11
இன, மத, மொழி சிறுபான்மையினருக்கான ஐ. நா பிரகடனம் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சிறுபான்மையினர் தங்கள் வரலாறு, மரபுகள், மொழி மற்றும் பண்பாடு பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள சிறுபான்மை மக்களுக்கு உரிய வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.
  • (ii) ஏற்கனவே உள்ள மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்திற்கு இந்தப் பிரகடனம் எந்த வகையிலும் ஊறு விளைவிப்பதாக அமையக்கூடாது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 11 Explanation: 
சிறுபான்மையினர் தங்கள் வரலாறு, மரபுகள், மொழி மற்றும் பண்பாடு பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளவும் ஒட்டுமொத்த சமுதாயம் பற்றி அறிந்து கொள்வதற்கும் சிறுபான்மை மக்களுக்கு உரிய வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.
Question 12
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) பிரிவு 15(4) சமூக மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கான சிறப்புத் திட்டங்கள் உருவாக்குவதற்கு அரசமைப்புச் சட்ட விதி 29(2) தடையாக இருக்காது.
  • (ii) பிரிவு 16(4) அரசுப்பணியில் போதிய அளவு பிரதிநிதித்துவம்பெறாத அனைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பணிநியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்க மேற்கொள்ளப்படும் செயல்களுக்கு இவ்விதி தடையாக இருக்காது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 12 Explanation: 
இந்திய அரசமைப்புச் சட்டம் 1949: பிரிவு 15(4) சமூக மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கான சிறப்புத் திட்டங்கள் உருவாக்குவதற்கு அரசமைப்புச் சட்ட விதி 29(2) தடையாக இருக்காது. இந்திய அரசமைப்புச் சட்டம் 1949: பிரிவு 16(4) அரசுப்பணியில் போதிய அளவு பிரதிநிதித்துவம்பெறாத அனைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பணிநியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்க மேற்கொள்ளப்படும் செயல்களுக்கு இவ்விதி தடையாக இருக்காது.
Question 13
இந்திய சமூக வளர்ச்சிப் போக்கில் ஏற்றத்தாழ்வுகள் எதன் அடிப்படையில் அமைந்த படிநிலைகளால் உருவாகியுள்ளன?
A
உழைப்பு
B
தொழில்
C
கல்வி
D
வருண அமைப்பு
Question 13 Explanation: 
இந்தியா பல்வேறு தட்ப, வெட்ப புவிசார் நிலவியல் அமைப்பு கொண்ட பன்மைத்துவ நாடாகும். பல்வேறு மொழிகள் பேசும் தேசிய இனங்கள் வெவ்வேறு பண்பாட்டுடன் வாழ்ந்து வருகின்றனர். எனினும், இந்திய சமூக வளர்ச்சிப் போக்கில் ஏற்றத்தாழ்வுகள் வர்ண அமைப்பின் அடிப்படையில் அமைந்த படிநிலைகளால் உருவாகியுள்ளன. இத்தகைய ஏற்றத்தாழ்வுகளால் நலிவுற்ற பிரிவினரின் வாழ்க்கை மேம்பட, அவர்களையும் அரவணைத்து வளர்ச்சிபெற்றிட, நமது அரசமைப்புச் சட்டம் பல்வேறு விதமான வழிகாட்டு நெறிமுறைகளை முன் மொழிகிறது.
Question 14
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) இயற்கை வளங்களோ தொழில் வளர்ச்சியோ இல்லாத பகுதிகளுக்கு ஏற்ப சிறப்புத் திட்டங்களை மாநில அரசு உருவாக்கிக்கொள்ள அரசமைப்புச் சட்டம் அனுமதி வழங்கியுள்ளது.
  • (ii) சமூகத்தில் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நலிந்த பிரிவினருக்குச் சிறப்புச் சட்டங்கள் மற்றும் சலுகைகளையும் அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதலின்படியே அரசு வழங்கியுள்ளது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 14 Explanation: 
இயற்கை வளங்களோ தொழில் வளர்ச்சியோ இல்லாத பகுதிகளுக்கு ஏற்ப சிறப்புத் திட்டங்களை மாநில அரசு உருவாக்கிக்கொள்ள அரசமைப்புச் சட்டம் அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் சமூகத்தில் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நலிந்த பிரிவினருக்குச் சிறப்புச் சட்டங்கள் மற்றும் சலுகைகளையும் அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதலின்படியே அரசு வழங்கியுள்ளது. அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் தன்னிறைவு பெற்ற சமூக வளர்ச்சிக்கு என்று சமூகநீதியை அடித்தளமாகக் கொண்ட சிறப்பு ஏற்பாடுகள் இன்றியமையாத தேவையாக உள்ளன.
Question 15
இன, மத பிரிவினர்கள் குழுக்கள் தங்கள் அடையாளங்களுடனும், அதிகாரப் பகிர்வுடனும், சகிப்புத்தன்மை உணர்வுடனும் வாழ்வதற்கான சமூக ஏற்பாடு எது?
A
தொழில் புரட்சி
B
தொழில் சங்கம்
C
சம வாய்ப்பு
D
சம அரசியல்
Question 15 Explanation: 
நமது நாட்டின் சமூக மக்களாட்சி தழைத்தி ட வும், பன்மை த் து வ ம் வலிமைபெறவும் இன, மத பிரிவினர்கள் குழுக்கள் தங்கள் அடையாளங்களுடனும், அதிகாரப் பகிர்வுடனும், சகிப்புத்தன்மை உணர்வுடனும் வாழ்வதற்கான சமூக ஏற்பாடே சம வாய்ப்பு என்பதாகும்.
Question 16
இந்திய சமூக அமைப்பில் ஏற்பட்டுள்ள பாகுபாடுகள்  எதன்  அடிப்படையில் நால்வருண அமைப்பாக பாகுபடுத்தப்பட்டிருக்கிறது?
A
வைதீக புராணங்கள்
B
தேவாரம்
C
திவ்ய பிரபந்தம்
D
சிவ புராணம்
Question 16 Explanation: 
தொழில் புரட்சியைத் தொடர்ந்த மேலை ஐரோப்பிய சமூக அமைப்பில் ஏற்பட்ட பிரிவினை உணர்விற்கு பொருளாதாரம் அடிப்படை காரணமாகும். இந்திய சமூக அமைப்பில் ஏற்பட்டுள்ள பாகுபாடுகள் வைதீக புராணங்கள் அடிப்படையில் நால்வருண அமைப்பாக பாகுபடுத்தப்பட்டிருக்கிறது.
Question 17
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சமூகத்தின் உற்பத்திக் கருவிகளான நிலம் மற்றும் இயற்கை வளங்களை உடைமையாக்கிக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறவர் முதலாளி ஆவார்.
  • (ii) நிலம் மற்றும் வளங்களைப் பெறும் வாய்ப்பு ஏற்படுகிறபோது அவரின் வர்க்கமும் மாற்றம் அடைகிறது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 17 Explanation: 
சமூகத்தின் உற்பத்திக் கருவிகளான நிலம் மற்றும் இயற்கை வளங்களை உடைமையாக்கிக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறவர் முதலாளியாகவும் அத்தகைய உற்பத்திக் கருவிகளைப் பெற முடியாமல் தடுக்கப்பட்டு ஏழ்மை நிலையை அடைந்தவர்கள் தொழிலாளிகளும் ஆவார். நிலம் மற்றும் வளங்களைப் பெறும் வாய்ப்பு ஏற்படுகிறபோது அவரின் வர்க்கமும் மாற்றம் அடைகிறது.
Question 18
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) மேலை ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளி முதலாளி ஆவதற்கு சமூகத்தில் நிரந்தர தடைகள் ஏதும் இல்லை.
  • (ii) புராதன நூல்களின் அடிப்படையில் உருவான நால்வருண பாகுபாட்டு முறையில் யாரும் தத்தம் வருணங்களை மாற்றிக்கொள்ள முடியாது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 18 Explanation: 
எனவே பொருளாதார அடிப்படையில் முதலாளி தொழிலாளி என சமூக பிரிவினை ஏற்பட்ட மேலை ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளி முதலாளி ஆவதற்கு சமூகத்தில் நிரந்தர தடைகள் ஏதும் இல்லை. ஆனால் புராதன நூல்களின் அடிப்படையில் உருவான நால்வருண பாகுபாட்டு முறையில் யாரும் தத்தம் வருணங்களை மாற்றிக்கொள்ள முடியாது. பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே வருணத்தில் மட்டுமே இருக்க வேண்டிய சமூகத்தடை உள்ளது.
Question 19
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) வருண அமைப்பு தனி மனித மாண்புகளையும், உரிமைகளையும் மறுக்கிறது.
  • (ii) இந்திய அரசமைப்புச்சட்டம் சரியான சமூக கண்காணிப்பு முறைகளையும், சட்டப்பூர்வமான நீதி வழங்கும் முறையினையும் கடைப்பிடித்து வருகின்றது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 19 Explanation: 
வருண அமைப்பு தனி மனித மாண்புகளையும், உரிமைகளையும் மறுக்கிறது. ஆனால் இந்திய அரசமைப்புச்சட்டம் சரியான சமூக கண்காணிப்பு முறைகளையும், சட்டப்பூர்வமான நீதி வழங்கும் முறையினையும் கடைப்பிடித்து வருகின்றது. அவ்வாறு வழங்கப்பெறும் நீதி வருண, வர்க்க வேறுபாடுகளைக் களைவதுடன் சமத்துவக்கண்ணோட்டத்துடனும் அமைந்திருக்கிறது எனலாம்.
Question 20
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) இந்திய அரசமைப்பு சட்டம் மக்களாட்சி நெறிமுறைகளின்படி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளித்து அவர்களின் சமூக பொருளாதார வாழ்க்கையை  பாதுகாக்கிறது.
  • (ii) உயிரோட்டமான சமூக நீதி இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டு உணர்வையும் பேணிக்காத்து நீதிப்பகிர்வினையும் மக்களாட்சி மாண்பினையும் உறுதி செய்கிறது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 20 Explanation: 
இந்திய அரசமைப்பு சட்டம் மக்களாட்சி நெறிமுறைகளின்படி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளித்து அவர்களின் சமூக பொருளாதார வாழ்க்கையை பாதுகாக்கிறது. இத்தகையை சமூக வளர்ச்சிக்கான மாற்று செயல்முறைகளை கடைபிடிப்பதன் மூலம் சமூக விடுதலையும் சமூக நீதியும் உறுதிப்படுத்தப்படுகின்றன. எனவே உயிரோட்டமான சமூக நீதி இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டு உணர்வையும் பேணிக்காத்து நீதிப்பகிர்வினையும் மக்களாட்சி மாண்பினையும் உறுதி செய்கிறது.
Question 21
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சமத்துவம் வேண்டும் என்று அனைவருமே ஏற்றுக்கொள்ளும் அதே நேரம் ஏற்றத்தாழ்வுகளும், பாகுபாடுகளும் நம்மை நிலைகுலைய வைக்கின்றன.
  • (ii) சமத்துவம் என்பது சமூக அரசியல் கோட்பாட்டில் முதன்மையான இடத்தை பிடித்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 21 Explanation: 
சமத்துவம் நிலவ சமூக நீதி அவசியம்: சமத்துவம் வேண்டும் என்று அனைவருமே ஏற்றுக்கொள்ளும் அதே நேரம் ஏற்றத்தாழ்வுகளும், பாகுபாடுகளும் நம்மை நிலைகுலைய வைக்கின்றன. வசதிகளில், வாய்ப்புகளில், பணிச்சூழலில் என்று பல தளங்களில் நிலவும் சமத்துவமின்மை பற்றி நாம் என்ன சொல்லப்போகிறோம்? இது போன்ற ஏற்றத்தாழ்வுகளும் பாகுபாடுகளும் நமது வாழ்வில் தவிர்க்க முடியாத மற்றும் நிரந்தரமான அம்சங்கள் என்று கருத முடியுமா? இவ்வாறு வாய்ப்புகள் இன்றி தவிக்கும் மக்கள் நம் நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பங்களிப்பு செய்ய நாம் கூடுதலாக என்ன செய்ய வேண்டும்? இது போன்ற சமத்துவமின்மைக்கு நமது சமூகத்தில் நிலவும் பண்பாட்டு மதிப்பீடுகள் எந்த அளவிற்கு காரணமாக இருக்கின்றன? இது மாதிரியான கேள்விகள் பல ஆண்டுகளாகவே நம் நாட்டினரை மட்டும் அல்ல உலகெங்கிலும் பெரும் அதிர்வுகளை உருவாக்கி வந்திருக்கின்றன. அதனால் தான் சமத்துவம் என்பது சமூக அரசியல் கோட்பாட்டில் முதன்மையான இடத்தை பிடித்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.
Question 22
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஒருவர் பெறும் மரியாதையோடு நடத்தப்படுவதற்கு அவரது மதம், சாதி, மொழி, இனம் மட்டுமே காரணம் என்றால் அந்த மரியாதையை ஏற்பதில்லை.
  • (ii) இசை போன்ற ஒரு துறையில் ஆர்வம் கொண்ட ஒருவர் அவரது துறையில் சாதிக்க முயலும் போது, அவரது சமூக அடையாளங்களினால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் போது அது அநீதிக்கு வித்திடுகிறது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 22 Explanation: 
நாம் எதை ஏற்கிறோம், எதை மறுக்கிறோம் என்பதை புரிந்துகொள்வோம். ஒருவர் பெரும் மரியாதையோடு நடத்தப்படுவதற்கு அவரது மதம், சாதி, மொழி, இனம் மட்டுமே காரணம் என்றால் அந்த மரியாதையை ஏற்பதில்லை. அதேசமயம், இசை போன்ற ஒரு துறையில் ஆர்வம் கொண்ட ஒருவர் அவரது துறையில் சாதிக்க முயலும் போது, அவரது மதம், சாதி, பாலினம், இனம் போன்ற சமூக அடையாளங்களினால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் போது அது அநீதிக்கு வித்திடுகிறது.
Question 23
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சமூக அடையாளங்களை முன்னிறுத்தி ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது அநீதி.
  • (ii) இனம், மொழி, சாதி, பாலினம், மதம் போன்ற வேறுபாடுகள் இருந்தாலும், மனிதர்கள் அனைவரும் தங்களது தனித்துவமான திறமையினை முன்னெடுத்துச் சென்று வாழ்வில் வெற்றி பெற வாய்ப்புகள் சம அளவில் வழங்கப்பட வேண்டும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 23 Explanation: 
மனிதர்களிடம் இருக்கும் வேறுபாடுகள் என்ன? பாகுபாடுகள் என்ன? என்பதைப் புரிந்துகொள்வது மிக அவசியம். சமூக அடையாளங்களை முன்னிறுத்தி ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது அநீதி; அதுவே சமத்துவமின்மையை உருவாக வழிகோலுகிறது. இனம், மொழி, சாதி, பாலினம், மதம் போன்ற வேறுபாடுகள் இருந்தாலும், மனிதர்கள் அனைவரும் தங்களது தனித்துவமான திறமையினை முன்னெடுத்துச் சென்று வாழ்வில் வெற்றி பெற வாய்ப்புகள் சம அளவில் வழங்கப்பட வேண்டும்.
Question 24
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஒருவருக்கான அங்கீகாரமும், மதிப்பும் தனி நபர்களின் சாதனைகள், தனி நபரின் திறமைக்குமாக இருக்கவேண்டும்.
  • (ii) ஒரு சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் கலாச்சார, அரசியல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் செயற்கையானவை.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 24 Explanation: 
சமூக, அரசியல் கோட்பாடுகளில், மிக முக்கியமான அம்சமாகக் கருதப்படுவது இயற்கையாகவே மனிதர்களிடம் நிலவும் வேறுபாடுகளுக்கும் சமூக, கலாச்சார ரீதியாக இருக்கும் பாகுபாடுகளுக்குமான வேறுபாடு போல, தனிநபர் விருப்பங்கள், திறமைகள் இயல்பானவை, தனித்துவமானவை. ஒருவருக்கான அங்கீகாரமும், மதிப்பும் தனி நபர்களின் சாதனைகள், தனி நபரின் திறமைக்குமாக இருக்கவேண்டும்; ஆனால், ஒரு சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் கலாச்சார, அரசியல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் செயற்கையானவை. இவற்றை பாகுபாடுகள் எனலாம்.
Question 25
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) மக்களாட்சி அரசுகள் தனது நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான குடியுரிமையை வழங்கி வருகின்றன.
  • (ii) குடியுரிமை என்பது வாக்குரிமை, கருத்துரிமை, இணைந்து செயல்படும் உரிமை, சங்கம் அமைக்கும் உரிமை, வழிபாட்டுரிமை என பல அம்சங்களைத் தன்னகத்தே கொண்டது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 25 Explanation: 
மக்களாட்சி நிலவும் நாடுகளில் அரசியல் சமத்துவ த்தை எளிதாக ப் புரிந்துகொள்ளமுடியும். மக்களாட்சி அரசுகள் தனது நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான குடியுரிமையை வழங்கி வருகின்றன. குடியுரிமை என்பது வாக்குரிமை, கருத்துரிமை, இணைந்து செயல்படும் உரிமை, சங்கம் அமைக்கும் உரிமை, வழிபாட்டுரிமை என பல அம்சங்களைத் தன்னகத்தே கொண்டது. இவை அனைத்துமே மக்களாட்சி சிறப்பாகச் செயல்பட அவசியமாகும். அப்போதுதான், குடிமக்கள் அனைவரின் பங்களிப்புடன் அரசு செயல்படமுடியும். மேலும், அரசமைப்புச் சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் சட்ட உரிமைகளையும் வழங்கியுள்ளது. மக்களாட்சி நிலவும் பல நாடுகளில் குடியுரிமை உறுதி செய்யப்பட்டு இருந்தாலும், சமத்துவமின்மையும், ஏற்றத்தாழ்வுகளும் நிலவத்தான் செய்கின்றன.
Question 26
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சமூகத்தில் செல்வம், வாய்ப்பு அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும்.
  • (ii) நியாயமாக வளங்களை அனைவருக்கும் வழங்குவதற்கு சட்டம் வழிசெய்கின்றன.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 26 Explanation: 
நியாயமான விநியோகம்: ஒரு சமுதாயத்தில் உள்ள பல்வேறு மக்கள் மாறுபட்ட விதத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொண்ட போது யார், எப்படி நியாயத்தை உறுதிப்படுத்த முடியும் என்ற கேள்விகள் எழுகின்றன. சமூகத்தில் செல்வம், வாய்ப்பு அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும். நியாயமாக வளங்களை அனைவருக்கும் வழங்குவதற்கு சட்டம் வழிசெய்கின்றன. சட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகள் வளங்களை விநியோகிப்பதை கண்காணிக்க வேண்டும். இதில் எந்தவிதமான அநீதிகளும் இடம் பெறக்கூடாது.
Question 27
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) இந்தியா போன்ற நாடுகளில் சமூக ஏற்றத்தாழ்வுகள் நன்கு ஊன்றியுள்ளது.
  • (ii) சமூகத்தின் அனைத்து பிரிவிற்கும் சுதந்திரம், வாய்ப்பு, செல்வம் மற்றும் சுய கௌரவத்தின் அடிப்படைகள் போன்றவை, சம அளவாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 27 Explanation: 
நம்மை போன்ற நாடுகளில் சமூக ஏற்றத்தாழ்வுகள் நன்கு ஊன்றியுள்ளது. சமூகத்தின் அனைத்து பிரிவிற்கும் சுதந்திரம், வாய்ப்பு, செல்வம் மற்றும் சுய கௌரவத்தின் அடிப்படைகள் போன்றவை, சம அளவாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதில் எந்த விதமான அநீதிகளும் இடம்பெறக்கூடாது.
Question 28
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சட்டமானது மக்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கு முன்னரே, மக்கள் சில அடிப்படை சமத்துவங்களை பெற்று வாழ்வில் தனது நோக்கங்களை தொடர தேவையான சூழ்நிலைகள் அமைய வேண்டும்.
  • (ii) சமூகத்தில் சமத்துவத்தை உருவாக்குவதும் அதை அனைவருக்கும் உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 28 Explanation: 
சட்டமானது மக்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கு முன்னரே, மக்கள் சில அடிப்படை சமத்துவங்களை பெற்று வாழ்வில் தனது நோக்கங்களை தொடர தேவையான சூழ்நிலைகள் அமைய வேண்டும். அரசும், சட்டமியற்றும் அமைப்புகளும் தீண்டாமை மற்றும் பிற சாதி பாகுபாடு நடவடிக்கை அகற்றி சமூகத்தில் நீதியை முறைப்படுத்துகிறது. சமூகத்தில் சமத்துவத்தை உருவாக்குவதும் அதை அனைவருக்கும் உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.
Question 29
  • கூற்று(A): சமத்துவத்தை உருவாக்குவதில் பரந்த மனப்பான்மை என்றும் தொண்டு எனவும் அரசு நினைக்கக்கூடாது.
  • காரணம் (R): சமுதாயத்தில் சமூக நீதியை நிலைநாட்டை மக்களை மாறுபட்ட விதத்தில் நடத்துவது அரசின் கடமையாகும்.
A
கூற்று (கூ) காரணம் (கா) இரண்டுமே சரி, கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது.
B
கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை.
C
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
D
கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
Question 29 Explanation: 
வரலாற்று ரீதியாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் உரிமை கிடைக்க அரசாங்கம் முக்கிய பங்காற்ற வேண்டும். சமத்துவத்தை உருவாக்குவதில் பரந்த மனப்பான்மை என்றும் தொண்டு எனவும் அரசு நினைக்கக்கூடாது. சமுதாயத்தில் சமூக நீதியை நிலைநாட்டை மக்களை மாறுபட்ட விதத்தில் நடத்துவது அரசின் கடமையாகும். மேலும் நலிவடைந்த பிரிவினரின் அடிப்படை உரிமையாகவும் இதனைக்கொண்டு சட்ட ரீதியாகவும் அரசமைப்பில் தீர்வு காண முடியும்.
Question 30
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) அரசு வேலை வாய்ப்பிலும், வாழ்வாதாரத்தை உறுதி செய்வதிலும் நவீன கல்வி முக்கிய பங்காற்றுகிறது.
  • (ii) சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தவும், சமவாய்ப்பினை ஏற்படுத்துவதும் அரசமைப்பின் முக்கிய நோக்கமாகவும், அங்கமாகவும் இருக்கின்றது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 30 Explanation: 
நலிவடைந்த பிரிவினருக்கு சம வாய்ப்பினை வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் ஏற்படுத்துவதில் அரசு முக்கிய பங்காற்றுகிறது. அரசு வேலை வாய்ப்பிலும், வாழ்வாதாரத்தை உறுதி செய்வதிலும் நவீன கல்வி முக்கிய பங்காற்றுகிறது. இதனை நிலைநிறுத்துவதற்கு சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தவும், சமவாய்ப்பினை ஏற்படுத்துவதும் அரசமைப்பின் முக்கிய நோக்கமாகவும், அங்கமாகவும் இருக்கின்றது.
Question 31
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) அரசு வேலை வாய்ப்பிலும், வாழ்வாதாரத்தை உறுதி செய்வதிலும் நவீன கல்வி முக்கிய பங்காற்றுகிறது.
  • (ii) சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தவும், சமவாய்ப்பினை ஏற்படுத்துவதும் அரசமைப்பின் முக்கிய நோக்கமாகவும், அங்கமாகவும் இருக்கின்றது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 31 Explanation: 
நலிவடைந்த பிரிவினருக்கு சம வாய்ப்பினை வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் ஏற்படுத்துவதில் அரசு முக்கிய பங்காற்றுகிறது. அரசு வேலை வாய்ப்பிலும், வாழ்வாதாரத்தை உறுதி செய்வதிலும் நவீன கல்வி முக்கிய பங்காற்றுகிறது. இதனை நிலைநிறுத்துவதற்கு சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தவும், சமவாய்ப்பினை ஏற்படுத்துவதும் அரசமைப்பின் முக்கிய நோக்கமாகவும், அங்கமாகவும் இருக்கின்றது.
Question 32
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) மேல்தட்டு மக்கள் அரசின் மாறுபட்ட செயல்பாடு பாகுபாட்டை ஏற்படுத்தும் என கருதினர்.
  • (ii) இட ஒதுக்கீட்டு முறையினால் நலிவடைந்த பிரிவினருக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தும்போது தகுதி பார்க்கப்படுவதாக சிலர் கருதினர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 32 Explanation: 
இதனைப்பற்றி பல கருத்துக்கள் சமூகத்தில் நிலவுகிறது. நலிவடைந்த பிரிவினருக்கு வளங்களையும், சமவாய்ப்புகளையும் எவ்வாறு அளிப்பது என கேள்வி எழுகின்றது. மேல்தட்டு மக்கள் அரசின் மாறுபட்ட செயல்பாடு பாகுபாட்டை ஏற்படுத்தும் என கருதினர். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு நலிவடைந்தோருக்கு கிடைக்காது என்ற அச்சத்தில் இட ஒதுக்கீடு முறையை அரசு உருவாக்குவதன் மூலம் சமூகத்தில் சமவாய்ப்பினை ஏற்படுத்த முடியும் என்று நம்பினர். இட ஒதுக்கீட்டு முறையினால் நலிவடைந்த பிரிவினருக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தும்போது தகுதி பார்க்கப்படுவதாக சிலர் கருதினர். ஆகையால் தொழிற்துறையில் பணியாளர்களை பாதிக்கும் என்று கருதப்படுகிறது.
Question 33
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) பகிர்ந்தளிக்கும் நீதி, மற்றும் தண்டிக்கும் நீதி  என்ற கோட்பாட்டை படிக்கும் போது வளங்களை எவ்வாறு சமூகத்தில்  உள்ள அனைவருக்கும் வழங்கவேண்டும் என்ற பொருள் விளங்கும்.
  • (ii) அனைவருக்கும் சமமான வளங்கள் பெறுவதற்கு பொது உரிமையாளர் கோட்பாடு, உரிமை கோட்பாடு போன்றவைகள் நீதி என்ற விவாதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 33 Explanation: 
பகிர்ந்தளிக்கும் நீதி, மற்றும் தண்டிக்கும் நீதி நீதி என்ற கோட்பாட்டை படிக்கும் போது வளங்களை எவ்வாறு சமூகத்தில் உள்ள அனைவருக்கும் வழங்கவேண்டும் என்ற பொருள் விளங்கும். நீதி பற்றிய கருத்தை முழுமையாக புரிந்து கொள்வதற்கு இதில் உள்ள முக்கியமான கருத்துக்கள் மற்றும் பிரச்சனைகளை அறிய வேண்டும். அரசியல் தொடர்பானவற்றில் மரபு ரீதியான புரிதலில் பல நீதி பற்றிய முதன்மையான கோட்பாடுகள் நீண்ட விவாதத்திற்குட்பட்டுள்ளது. அனைவருக்கும் சமமான வளங்கள் பெறுவதற்கு பொது உரிமையாளர் கோட்பாடு, உரிமை கோட்பாடு போன்றவைகள் நீதி என்ற விவாதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Question 34
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஒவ்வொரு மனிதனும் சமமான வளங்களை கொண்டிருந்தால் அது நீதியாகும்.
  • (ii) சமத்துவமின்மைக்கு தனிமனித செயல்பாடுகளே காரணமாகின்றன.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 34 Explanation: 
வளங்களில் சமத்துவம்: இது வளங்களின் விநியோகம் நியாயமான முறையில் இருக்கவேண்டும் என கூறுகிறது. ஒவ்வொரு மனிதனும் சமமான வளங்களை கொண்டிருந்தால் அது நீதியாகும். வழங்கப்பட்ட ஒரு பணிக்கு அனைவரும் சமமான ஊதியத்தையோ அல்லது வெகுமதியையோ பெறுவதே நீதியை பெறும் வழியாகும். சமத்துவமின்மைக்கு தனிமனித செயல்பாடுகளே காரணமாகின்றன. ஒருவன் உழைப்பை தேர்ந்தெடுப்பதோ? அல்லது ஓய்வை தேர்ந்தெடுப்பதோ அவனது தேர்வாகும்.
Question 35
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) வளங்களில் சமத்துவம் சுய உடமைத்துவத்தையும் வளங்களின் உடமைத்துவத்தையும் நிராகரிக்கின்றது.
  • (ii) அதே வேளையில் கடமைகளையும் பொறுப்புகளையும் வலியுறுத்துகிறது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 35 Explanation: 
வளங்களில் சமத்துவம் சுய உடமைத்துவத்தையும் வளங்களின் உடமைத்துவத்தையும் நிராகரிக்கின்றது. அதே வேளையில் கடமைகளையும் பொறுப்புகளையும் வலியுறுத்துகிறது.
Question 36
"வளங்கள் அனைத்துக்கும் அனைவரும் உரிமையாளர் என்ற நிலைமையை உறுதிசெய்வதே நீதியை உருவாக்குவதற்கான ஒரே வழி",  என்று கூறுவது எது?
A
பொது உரிமையாளர் கோட்பாடு
B
தண்டிக்கும் நீதி
C
உரிமை அளித்தல் கோட்பாடு
D
வளங்களில் சமத்துவம்
Question 36 Explanation: 
பொது உரிமையாளர் கோட்பாடு: ஆரம்ப நிலையில் ஒவ்வொரு மனிதனும் ஒரே அளவிலான நிலங்கள் மற்றும் வளங்களை நியாயமான விநியோகத்தின் மூலம் பெற்றிருக்கவேண்டும். இது தனி மனித முன்னுரிமையிலும் மற்றும் திறமையிலும் வேறுபாடின்றியும் இருக்கவேண்டும் என்பதை தெளிவாகக் கூறுகின்றது. சமூகத்தில் உள்ள அனைத்து தனிமனிதனும் சமமான திறமையை பெற்றுள்ளனர். ஆகையால், வளங்கள் அனைத்துக்கும் அனைவரும் உரிமையாளர் என்ற நிலைமையை உறுதிசெய்வதே நீதியை உருவாக்குவதற்கான ஒரே வழி.
Question 37
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) நிலம் மற்றும் பிற வளங்கள் வழங்கப்படுவதை வரலாற்று ரீதியாக நியாயப்படுத்த வேண்டும், என நியாயமான விநியோகம் விளக்குகிறது.
  • (ii) தனிமனிதன் நிலம், மற்றும் பிற வளங்களுக்கு ஒருபோதும் உரிமையாளராக இல்லாத போது தானாகவே வளங்களும், நிலங்களும் அவர்களுக்கு மாறவேண்டும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 37 Explanation: 
உரிமை அளித்தல் கோட்பாடு: நிலம் மற்றும் பிற வளங்கள் வழங்கப்படுவதை வரலாற்று ரீதியாக நியாயப்படுத்த வேண்டும், என நியாயமான விநியோகம் விளக்குகிறது. தனிமனிதன் நிலம், மற்றும் பிற வளங்களுக்கு ஒருபோதும் உரிமையாளராக இல்லாத போது தானாகவே வளங்களும், நிலங்களும் அவர்களுக்கு மாறவேண்டும். அவ்வாறு வளங்கள் அவர்களுக்கு மாறுவது முற்றிலும் தானாகவே அமையவேண்டும்.
Question 38
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) மனிதனின் திறமையும், வளங்கள் இந்த இரண்டுமே முக்கிய கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றன.
  • (ii) வளங்கள் என்றால் உதாரணமாக நிலமும், மனிதனின் அறிவு எனவும், கோட்பாடுகளில் மனிதனின் திறமை முக்கிய பங்காற்றுகிறது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 38 Explanation: 
மனிதனின் திறமையும், வளங்கள் இந்த இரண்டுமே முக்கிய கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றன. வளங்கள் என்றால் உதாரணமாக நிலமும், மனிதனின் அறிவு எனவும், கோட்பாடுகளில் மனிதனின் திறமை முக்கிய பங்காற்றுகிறது. சமூகத்தில் நீதி நிலைக்க வேண்டுமானால் நீதி தண்டிப்பை விட நியாயமான நீதி விநியோகம் இருந்தால் மட்டுமே தீர்வு என்ற பெரும் கருத்தொற்றுமை உருவானது.
Question 39
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) தண்டிக்கும் நீதியின் கட்டமைப்பை சில விதிகளை பின்பற்றுவதன் மூலம் ஒருவர் அறிந்து கொள்ளலாம்.
  • (ii) தவறான செயல்களை செய்தவர்கள், கடும் குற்றம் இழைத்தவர்கள், அவர்களின் குற்றத்திற்கான சரியான தண்டனை பெற வேண்டும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 39 Explanation: 
தண்டிக்கும் நீதி: தண்டிக்கும் நீதி எனும் கருத்தாக்கம் ஆனது பல சூழ்நிலைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகை நீதியின் கட்டமைப்பை சில விதிகளை பின்பற்றுவதன் மூலம் ஒருவர் அறிந்து கொள்ளலாம். * தவறான செயல்களை செய்தவர்கள், கடும் குற்றம் இழைத்தவர்கள், அவர்களின் குற்றத்திற்கான சரியான தண்டனை பெற வேண்டும்.
Question 40
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சட்டப்படி தண்டிக்கும் அதிகாரம் பெற்றுள்ள ஒருவரால் குற்றவாளிக்கு அவரை குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே தார்மீக அடிப்படையில் சரியானதாகும்.
  • (ii) ஒவ்வொரு குற்றவாளிக்கும் தண்டனை வழங்கும் செயலானது தண்டிக்கப்படுபவர்களுள் ஒப்புநோக்கப்படுகிறதோ இல்லையோ ஆனால் தண்டிப்பது அவசியம்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 40 Explanation: 
சட்டப்படி தண்டிக்கும் அதிகாரம் பெற்றுள்ள ஒருவரால் குற்றவாளிக்கு அவரை குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே தார்மீக அடிப்படையில் சரியானதாகும். ஒவ்வொரு குற்றவாளிக்கும் தண்டனை வழங்கும் செயலானது தண்டிக்கப்படுபவர்களுள் ஒப்புநோக்கப்படுகிறதோ இல்லையோ ஆனால் தண்டிப்பது அவசியம். அதுவே சமூக நன்மைக்கு அவசியமாகிறது.
Question 41
பின்வருவனவற்றுள் தண்டிக்கும் நீதி எனும் கருத்தாக்கத்தின் முக்கிய அம்சம்/கள் எது/எவை?
A
விகிதாச்சார தண்டனை
B
துன்பத்தின் இயல்பு நிலை
C
தண்டனையை நியாயப்படுத்துதல்
D
மேற்கண்ட அனைத்தும்
Question 41 Explanation: 
இது வேண்டுமென்றே அப்பாவிகளை தண்டிப்பதை ஊக்குவிக்கவில்லை. மேலும் குற்றவாளிகளுக்கு அவர்கள் இழைத்த தண்டனையைவிட அதிக தண்டனையை வழங்குவதை இது தண்டிக்கிறது. தண்டிக்கும் நீதி எனும் கருத்தாக்கமானது நீதி மற்றும் தண்டனை கோட்பாட்டை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினாலும் அதன் முக்கிய அம்சங்களான விகிதாச்சார தண்டனை, துன்பத்தின் இயல்பு நிலை, தண்டனையை நியாயப்படுத்துதல் போன்றவை சர்ச்சைக்குரியதாகவே உள்ளன.
Question 42
  • கூற்று(A): நம்முடைய அரசமைப்பு தண்டிக்கும் நீதியை முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
  • காரணம் (R): நம் அரசமைப்பு சிற்பிகள் வன்முறை வழிகள் அமைதியையோ, பிரச்சனைகளுக்குரிய தீர்வையே கொண்டு வராது, அதன் மூலம் நிலையான  நீதியை வழங்காது என்று உறுதியாக நம்பினர்.
A
கூற்று (கூ) காரணம் (கா) இரண்டுமே சரி, கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது.
B
கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை.
C
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
D
கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
Question 42 Explanation: 
இந்தியா போன்ற நாடுகளில் சிலர் தண்டிக்கும் நீதியின்படி வன்முறை மூலம் தவறிழைப்பவர்களை தண்டித்து அதன் மூலம் நீதியை நிலைநாட்டலாம் என்று கூறுகின்றனர். இன்றைய நவீன காலத்தில் நாம் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நம்முடைய அரசமைப்பு தண்டிக்கும் நீதியை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. நம் அரசமைப்பு சிற்பிகள் வன்முறை வழிகள் அமைதியையோ, பிரச்சனைகளுக்குரிய தீர்வையே கொண்டு வராது, அதன் மூலம் நிலையான நீதியை வழங்காது என்று உறுதியாக நம்பினர்.
Question 43
நேர்மையான நீதி என்ற கருத்தியலின் அடிப்படையில்  நீதிக்கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?
A
ஜான் ரஸ்கின்
B
காரல் மார்க்ஸ்
C
சாக்ரடீஸ்
D
ஜான் ரால்ஸ்
Question 43 Explanation: 
ஜான் ரால்சின் நீதிக்கோட்பாடு: இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவராக ஜான் ரால்சன் கருதப்படுகிறார்.நேர்மையான நீதி என்ற கருத்தியலின் அடிப்படையில் அவர் நீதிக்கோட்பாட்டை உருவாக்கியுள்ளார்.
Question 44
யாருடைய கட்டமைப்பு அனைத்து தனிமனித பண்புகளையும் ஒழுக்க ரீதியாக தன்னிச்சையானவை என்கிறது?
A
ஜான் ரஸ்கின்
B
காரல் மார்க்ஸ்
C
சாக்ரடீஸ்
D
ஜான் ரால்ஸ்
Question 44 Explanation: 
ஜான் ரால்சின் கட்டமைப்பு அனைத்து தனிமனித பண்புகளையும் ஒழுக்க ரீதியாக தன்னிச்சையானவை என்கிறது. இவரது நீதி சமத்துவத்தை கோருகிறது. இவரைப்பொறுத்தவரை வாய்ப்பு, சுதந்திரம், வருவாய், வளம் மற்றும் மரியாதை என அனைத்தும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.இதையே வேறு வார்த்தைகளில் கூறினால் சமத்துவமின்மையை அநீதி ஆகும்.
Question 45
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) தனிமனிதனின் எந்த ஒரு செயலோ அல்லது  பண்போ  மற்றவருக்கு பயனளிக்காத வகையில் இருக்குமாயின்  அது அந்த சமூகத்தின் அநீதியான பண்பைக்காட்டுகிறது.
  • (ii) தண்டிக்கும் நீதி எனும் கருத்தாக்கமானது நீதி மற்றும் தண்டனை கோட்பாட்டை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 45 Explanation: 
தனிமனிதனின் எந்த ஒரு செயலோ அல்லது பண்போ மற்றவருக்கு பயனளிக்காத வகையில் இருக்குமாயின் அது அந்த சமூகத்தின் அநீதியான பண்பைக்காட்டுகிறது. நீதியைப்பற்றி ஜான் ரால்ஸ் கூறுவது: தண்டிக்கும் நீதி எனும் கருத்தாக்கமானது நீதி மற்றும் தண்டனை கோட்பாட்டை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினாலும் அதன் முக்கிய அம்சங்களான விகிதாச்சார தண்டனை, துன்பத்தின் இயல்பு நிலை, தண்டனையை நியாயப்படுத்துதல் போன்றவை சர்ச்சைக்குரியதாகவே உள்ளன.
Question 46
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஒரு கற்பனை சூழ்நிலையை நம்முடைய சாக்ரடீஸ் சிந்தனைக்கு தருகிறார்.
  • (ii) நமது எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கும்போது நாம் ஏற்படுத்தும் அமைப்பில் அனைவருக்கும் நியாயமான வழியில் அனைத்தும் கிடைப்பதாக இருக்கும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 46 Explanation: 
ஒரு கற்பனை சூழ்நிலையை நம்முடைய சிந்தனைக்கு அவர் தருகிறார். ஆம், ஒரு சமுதாயத்தில் இந்த படி நிலையில் நாம் இருக்கிறோம் என்று தெரியவில்லை. ஆனால் அந்த சமுதாயம் எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கும் ஒரு முக்கிய நிலையில் நாம் இருப்பதாக கற்பனை செய்து கொள்வோம். நாம் எந்தக் குடும்பத்தில் பிறந்து இருப்போம் என்று தெரியாது. அதைப்போல் நமது சாதி இனம் மதம் பாலினம் மற்றும் எந்த இடம் என்ற எதைப் பற்றியும் நமக்குத் தெரியாது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அந்த எதிர்கால கற்பனை சமுதாயத்தில் நாம் உருவாக்கும் விதிகள் மற்றும் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாகவும் நியாயமானவையாகவும் மட்டுமே இருக்கும் என்று ’ஜான் ரால்ஸ்’ கூறுகிறார். நமது எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கும்போது நாம் ஏற்படுத்தும் அமைப்பில் அனைவருக்கும் நியாயமான வழியில் அனைத்தும் கிடைப்பதாக இருக்கும்.
Question 47
ரால்ஸ் “அறியாமை திரை” யின் கீழ் சிந்திப்பது தொடர்பாக விவரிப்பவர் யார்?
A
ஜான் ரஸ்கின்
B
காரல் மார்க்ஸ்
C
சாக்ரடீஸ்
D
ஜான் ரால்ஸ்
Question 47 Explanation: 
இந்த தருணத்தில் ஜான் ரால்ஸ் “அறியாமை திரை” யின் கீழ் சிந்திப்பது தொடர்பாக விவரிக்கிறார். நாம் சமுதாயத்தில் நம்முடைய நிலை என்னவென்று அறிந்திருக்கவில்லை புதிய சமுதாயத்தில் அவரவர் தங்களுக்கு உகந்த அளவில் சுயநல விருப்பங்களை கொண்டிருப்பர். ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில் எவருமே தாங்கள் தயாராக இருப்போம் என்றோ இது தங்களுக்குப் பயனளிக்கும் என்றோ அறிந்திருக்க மாட்டார்கள்.
Question 48
புதிய கற்பனை உலகம் குறித்து கூறுபவர் யார்?
A
ஜான் ரஸ்கின்
B
காரல் மார்க்ஸ்
C
சாக்ரடீஸ்
D
ஜான் ரால்ஸ்
Question 48 Explanation: 
மிக மோசமான நிலையின் வழியே தான் நாம் ஒவ்வொருவரும் எதிர்காலத்தைப் பற்றி கற்பனை செய்கிறோம். நாம் நம்மை எல்லா சிறப்புகளையும் எல்லா உரிமைகளையும் கொ ண்டிருக்கும் ஒருவராகத்தான் நினைப்போம். இந்த புதிய கற்பனை உலகத்தில் நாம் எங்கே எவ்வாறு இருப்போம் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. அப்படி ஓர் சூழ்நிலையில் நாம் எதிர்பாராத விதமாக சமூகத்தின் பின்தங்கிய வகுப்பில் வாய்ப்பு வசதிகள் அற்ற ஒரு இடத்தில் பிறந்தால் என்னவாகும்? இந்நிலையில் உடனே சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கும் வாய்ப்புகள் மற்றும் வளங்கள் கிடைக்கும் படியான ஓர் அமைப்பை உருவாக்க முயற்சிக்கிறோம்.
Question 49
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) அறியாமை திரையின் பலன் என்னவெனில் இது மக்களை அவர்களின் இயல்பான பகுத்தறிவுடன் இருக்கச்சொல்கிறது.
  • (ii) அவர்களின் விருப்பத்தில் எது உயர்வாக உள்ளதோ அதைத் தேர்ந்தெடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 49 Explanation: 
நாம் பிரியும் தருணம் வந்தாலும் நம்மால் நம் அடையாளங்களை எளிதில் அழிக்க முடியாது. அறியாமை எனும் திரையின் கீழ் இருப்பதாக கற்பனை செய்யவும் முடியாது. இதைப்போலவே மக்கள் முன்பின் அறிமுகமில்லாத ஒருவருக்கு தியாகம்செய்வதாகவோ அல்லது தங்களின் நல்ல எதிர்காலத்தை பங்கு போடுவார்கள் என்று எதிர்பார்க்கவோ முடியாது. இருந்தபோதிலும் அறியாமை திரையின் பலன் என்னவெனில் இது மக்களை அவர்களின் இயல்பான பகுத்தறிவுடன் இருக்கச்சொல்கிறது. அவர்கள் தங்களுக்காக சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறார்கள். அவர்களின் விருப்பத்தில் எது உயர்வாக உள்ளதோ அதைத் தேர்ந்தெடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Question 50
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) கற்பனையான அறியாமை திரையை அணிந்துகொள்வது நேர்மையான சட்டங்கள் மற்றும் கொள்கைகள் கொண்ட அமைப்பை ஏற்படுத்துவதற்கான முதல் படி.
  • (ii) அறநெறியின் அடிப்படையிலான பகுத்தறிவு ஒரு புதிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கும் என்று ரால்ஸ் கூறுகிறார்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 50 Explanation: 
கற்பனையான அறியாமை திரையை அணிந்துகொள்வது நேர்மையான சட்டங்கள் மற்றும் கொள்கைகள் கொண்ட அமைப்பை ஏற்படுத்துவதற்கான முதல் படி. இதுவே அவசியமானதுமாகும். இந்த நவீன காலத்தில் பகுத்தறிவு கொண்ட மக்களிடம் இது நம்பிக்கை கொண்டுள்ளது. அறநெறியின் அடிப்படையிலான பகுத்தறிவு ஒரு புதிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கும். அதில் மக்கள் தங்கள் சுயநல விரும்பிகளின் படி இல்லாமல் ஒட்டுமொத்த சமுதாய விருப்பங்களின் படியான கொள்கைகளைப் பற்றி சிந்திப்பார்கள் என்று ரால்ஸ் கூறுகிறார்.
Question 51
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) அனைவரையும் உள்ளடக்கிய கண்ணோட்டம் ஜான் ரால்சின் கட்டமைப்பில் காணப்படுகிறது.
  • (ii) சட்டங்கள் மற்றும் கொள்கைகள் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கும்படி இருத்தல் வேண்டும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 51 Explanation: 
இந்த முழுமையான அனைவரையும் உள்ளடக்கிய கண்ணோட்டம் ஜான் ரால்சின் கட்டமைப்பில் காணப்படுகிறது. இதை தெளிவாக கூறினால் சட்டங்கள் மற்றும் கொள்கைகள் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கும்படி இருத்தல் வேண்டும். குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கானதாக இருக்கக்கூடாது. இந்த நியாயமானது இ ரக்க த்தினா லோ அல்லது பெருந்தன்மையினாலோ இல்லாமல் காரண அறிவின் வெளிப்பாடாக இருத்தல் வேண்டும்.
Question 52
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஜான் ரஸ்கின் கோட்பாடானது நவீன காலத்தின் மிகச் சிறந்த பகுத்தறிவு மனிதர்கள் நம் சமூகத்தில் நீதியின் சக்தியை உணர வேண்டும் என்கிறது.
  • (ii) ஜான் ரால்சின் வழியே அணுகும்போது நீதியின் உண்மையான ஆற்றலை கண்டு கொள்ள முடியும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 52 Explanation: 
ஜான் ரால்சின் கோட்பாடானது நவீன காலத்தின் மிகச் சிறந்த பகுத்தறிவு மனிதர்கள் நம் சமூகத்தில் நீதியின் சக்தியை உணர வேண்டும் என்கிறது. நம் போன்ற சமூகங்களில் காரண அறிவுக்கு பொருந்தாத அடையாளங்கள் மற்றும் உணர்ச்சி கருத்துக்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அவற்றை விடுத்து ஜான் ரால்சின் வழியே அணுகும்போது நீதியின் உண்மையான ஆற்றலை கண்டு கொள்ள முடியும்.
Question 53
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) வேறு நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த மக்களுக்கும் சில அடிப்படை உரிமைகளை பல நாடுகள் உறுதி செய்துள்ளன.
  • (ii) புகலிடம் கோரிய மக்கள், தஞ்சம் அடைந்த மக்கள், அகதிகளாக குடியேறியோர் என பலதரப்பட்ட மக்களுக்கும் உரிமைகள் உள்ளன.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 53 Explanation: 
வேறு நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த மக்களுக்கும் சில அடிப்படை உரிமைகளை பல நாடுகள் உறுதி செய்துள்ளன. புகலிடம் கோரிய மக்கள், தஞ்சம் அடைந்த மக்கள், அகதிகளாக குடியேறியோர் என பலதரப்பட்ட மக்களுக்கும் உரிமைகள் உள்ளன. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உறுப்பு நாடுகள் பலரும் அங்கீகரித்துள்ளனர்.
Question 54
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சமூகத்தின் பல பிரிவினரும் தங்களது பண்பாட்டு அம்சங்களைப் பின்பற்றவும் தங்களது தனித் திறமைகளுக்கு ஏற்ற வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்ளவும் சமூகத்தில் சமத்துவம் நிலவுவது அவசியமாகும்.
  • (ii) ஒவ்வொரு நபருக்கும் நியாயமான வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 54 Explanation: 
சமூக, பண்பாட்டு சமத்துவம்: சமூகத்தின் பல பிரிவினரும் தங்களது பண்பாட்டு அம்சங்களைப் பின்பற்றவும் தங்களது தனித் திறமைகளுக்கு ஏற்ற வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்ளவும் சமூகத்தில் சமத்துவம் நிலவுவது அவசியமாகும். ஒவ்வொரு நபருக்கும் நியாயமான வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கு, சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு நீக்கிட முயலவேண்டும்; அல்லது அதன் தாக்கத்தை குறைத்திட நடவடிக்கை எடுப்பது மேற்கொள்வது மிக அவசியம். உதாரணமாக, தரமான மருத்துவ வசதிகள், கல்வி, சத்தான உணவுகள், குறைந்தபட்ச ஊதியம் என்பது போன்ற அம்சங்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி கிடைத்திடச் செய்வது அவசியம். இவை இல்லாத நிலையில், சமூகத்தில் அனைவரும் சமம் என்றோ அல்லது சம வாய்ப்பு பெற்றவர்கள் என்றோ கருதமுடியாது.
Question 55
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சாதி – மதம் பெயரால் நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் நம்பிக்கைகள் பெரும் தடையாக இருப்பது நமது நாட்டின் பிரச்சினை ஆகும்.
  • (ii) நாட்டில் பல பகுதிகளில், பெண்களின் நிலை கவலை தருவதாகவே உள்ளது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 55 Explanation: 
நமது நாட்டின் பிரச்சினை என்ன? சாதி – மதம் பெயரால் நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் நம்பிக்கைகள் பெரும் தடையாகிவிடுகிறது. உதாரணமாக, நாட்டில் பல பகுதிகளில், பெண்களின் நிலை கவலை தருவதாகவே உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை என பல உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே பெண்களின் நிலை உள்ளது. இவ்வாறு நடத்தப்படுவதுதான் எங்களது பண்பாடு என சொல்லத்தொடங்கினால், அதன் விளைவுகள் பெரும் அபாயத்தை விளைவிக்கக்கூடியவை. அதாவது, ஏற்றத்தாழ்வுதான் எங்களது பண்பாடு என்று சொன்னால், பாகுபாடுதான் எங்களது பண்பாடு என்றால் அது சமத்துவத்திற்கான நமது பயணம்.
Question 56
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஒரு சமூகத்தில் தனி மனிதர்களிடம் நிலவும் சொத்து மதிப்பு, வருமானம் குறித்த ஏற்றத்தாழ்வுகளை வைத்து, அந்த சமூகத்தில் பொருளாதார சமத்துவம் இருக்கிறதா என்பதை ஓரளவிற்கு அறுதியிட்டு சொல்ல முடியும்.
  • (ii) நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்வோரின் எண்ணிக்கையை வைத்து சில தீர்மானமான முடிவுகளுக்கு நம்மால் வர முடியும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 56 Explanation: 
பொருளாதார சமத்துவம்: ஒரு சமூகத்தில் தனி மனிதர்களிடம் நிலவும் சொத்து மதிப்பு, வருமானம் குறித்த ஏற்றத்தாழ்வுகளை வைத்து, அந்த சமூகத்தில் பொருளாதார சமத்துவம் இருக்கிறதா என்பதை ஓரளவிற்கு அறுதியிட்டு சொல்ல முடியும். அல்லது பணம் படைத்தவர்களுக்கும் ஏழை மக்களுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி அந்த சமூகத்தின் பொருளாதார நிலையினை நமக்கு தெளிவுபடுத்தும். நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்வோரின் எண்ணிக்கையை வைத்து சில தீர்மானமான முடிவுகளுக்கு நம்மால் வர முடியும். - இது பரவலாக பின்பற்றக்கூடிய வழிமுறை.
Question 57
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சில பாகுபாடுகள் பண்பாட்டு ரீதியாக நியாயப்படுத்தப்படும்போது பிரச்சனை பெரிதாகிறது.
  • (ii) இத்தகைய பின்னடைவுகளை மக்கள் கவனத்துக்கு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் காலத்தின் தேவைக்கேற்ப சீர்திருத்தவாதிகள் ஈடுபட்டனர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 57 Explanation: 
ஆனால், சில பாகுபாடுகள் பண்பாட்டு ரீதியாக நியாயப்படுத்தப்படும்போது தான் பிரச்சனை பெரிதாகிறது. இத்தகைய பின்னடைவுகளை மக்கள் கவனத்துக்கு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் காலத்தின் தேவைக்கேற்ப சீர்திருத்தவாதிகள் ஈடுபட்டனர்.
Question 58
"மனிதனை மனிதனாக கருத முடியாமல், அவரது சாதியை மட்டும் வைத்து எடைபோட முயலும் சிந்தனை காட்டுமிராண்டித்தனமானது" என்று வலியுறுத்தியவர் யார்?
A
ஜோதிபாபூலே
B
பெரியார்
C
சாக்ரடீஸ்
D
ஜான் ரால்ஸ்
Question 58 Explanation: 
"மனிதனை மனிதனாக கருத முடியாமல், அவரது சாதியை மட்டும் வைத்து எடைபோட முயலும் சிந்தனை காட்டுமிராண்டித்தனமானது" என்று வலியுறுத்திய தந்தை பெரியார், பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் என்ற பெயரில் சமத்துவத்தை மறுக்கும் அத்தனை அம்சங்களையும் கடுமையாக நிராகரித்தார்.
Question 59
மொழி மேல் வெறியும், தங்களது பண்பாடு மேல் தீவிரப்பற்றும் கொண்டுள்ள நபர்களால் நவீன சமூகத்தை உருவாக்க முடியாது என்று திட்டவட்டமாக வாதாடியவர் யார்?
A
ஜோதிபாபூலே
B
பெரியார்
C
சாக்ரடீஸ்
D
ஜான் ரால்ஸ்
Question 59 Explanation: 
பெண்களை அடிமைப்படுத்த நாம் உருவாக்கி வைத்திருக்கும் அத்தனை சமூக அமைப்புகளையும் வன்மையாக கண்டிக்கும் பெரியார் சாதி, மத, பாலின, பேதமற்ற சமூகமே உயரிய சமூகம் என்று அறிவித்தார். மொழி மேல் வெறியும், தங்களது பண்பாடு மேல் தீவிரப்பற்றும் கொண்டுள்ள நபர்களால் நவீன சமூகத்தை உருவாக்க முடியாது என்று திட்டவட்டமாக வாதாடினார். இவ்வாறு சமத்துவத்தின் பல்வேறு பரிமாணங்களை நமக்கு பலரும் முன் வைத்துள்ளனர்.
Question 60
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) பிறப்பின் அடிப்படையில் சமூகத்தில் ஒருவரின் தகுதி நிர்ணயிக்கப்படுவது சமத்துவமின்மையில் முதன்மையான அம்சம் எனலாம்.
  • (ii) ஒரு தகுதிக்கும் அங்கீகாரத்திற்கும் பொதுவான தேர்வு முறையினை பின்பற்றிட முயல்வது சமத்துவத்திற்கான முதல் படி.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 60 Explanation: 
இதுவரை சமூகத்தில் தங்களது குடும்ப மரபு, பிறப்பு இவற்றின் அடிப்படையில் உயர் இடத்தையும், பெரும் அங்கீகாரத்தையும் பெற்ற நபர்களின் சிறப்புநிலை முடிவுக்கு வர வேண்டும். பிறப்பின் அடிப்படையில் சமூகத்தில் ஒருவரின் தகுதி நிர்ணயிக்கப்படுவது சமத்துவமின்மையில் முதன்மையான அம்சம் எனலாம். இதை நிராகரித்து அனைவரும் சமம்; எனவே எந்த ஒரு தகுதிக்கும் அங்கீகாரத்திற்கும் பொதுவான தேர்வு முறையினை பின்பற்றிட முயல்வது சமத்துவத்திற்கான முதல் படி.
Question 61
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) இதுவரை உலகின் பல நாடுகளில் ஏழை மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறது.
  • (ii) பெண்களை கல்வி கற்கவும், பொது இடங்களில் பணிபுரியவும் தடை செய்திருக்கும் நாடுகள் பல.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 61 Explanation: 
இதுவரை உலகின் பல நாடுகளில் ஏழை மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறது. பெண்களை கல்வி கற்கவும், பொது இடங்களில் பணிபுரியவும் தடை செய்திருக்கும் நாடுகள் பல. நமது நாட்டில் ஒரு சில கடைநிலை பணிகளை தவிர, சாதி ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர் பதவிகளை பெறுவதில் இருக்கும் பெரும் தடைகள் நாம் அறிந்ததே.
Question 62
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சில நேரங்களில் குறிப்பிட்ட சமூகப்பிரிவினர்க்கு தொடர் புறக்கணிப்புகள் காரணமாக சிறப்பான அல்லது கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.
  • (ii) அப்போது மட்டுமே உண்மையான சமத்துவத்தினை நாம் நெருங்குகிறோம் என்று பொருள்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 62 Explanation: 
இது மாதிரியான பாகுபாடுகளை களைந்திட காலம் காலமாக தொடரும் பல சிறப்பு தகுதிகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். சில நேரங்களில் குறிப்பிட்ட சமூகப்பிரிவினர்க்கு தொடர் புறக்கணிப்புகள் காரணமாக சிறப்பான அல்லது கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. அப்போது மட்டுமே உண்மையான சமத்துவத்தினை நாம் நெருங்குகிறோம் என்று பொருள்.
Question 63
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) அரசின் சமச்சீர் நடவடிக்கைகளில் முக்கியமானது இடஒதுக்கீடு.
  • (ii) கல்வி, வேலை வாய்ப்பில் குறிப்பிட்ட அளவு இடங்களை ஒதுக்கீடு செய்து, இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு முன்னுரிமை வழங்குவதே இதன் அடிப்படை நோக்கம்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 63 Explanation: 
எனவே வரலாற்று ரீதியாக நிகழ்ந்திருக்கும் அநீதிகளை நாம் இனங்கண்டறிந்தால் மட்டுமே சமத்துவம் என்பதன் முழுப்பொருளையும் நாம் எட்ட முடியும். அரசின் சமச்சீர் நடவடிக்கைகளில் முக்கியமானது இடஒதுக்கீடு. கல்வி, வேலை வாய்ப்பில் குறிப்பிட்ட அளவு இடங்களை ஒதுக்கீடு செய்து, இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு முன்னுரிமை வழங்குவதே இதன் அடிப்படை நோக்கம்.
Question 64
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) இடஒதுக்கீடு பாகுபாடின் மறுவுருவமே என்று வாதிடுவோரும் உண்டு.
  • (ii) இடஒதுக்கீட்டின் மூலம் திறமையின்மை முழு அங்கீகாரம் பெற்றுவிடும் என்றும் சாதிரீதியான பாகுபாடு களையப்படாமல் உறுதிப்பட்டுவிடும் என்றும் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 64 Explanation: 
இடஒதுக்கீடு பாகுபாடின் மறுவுருவமே என்று வாதிடுவோரும் உண்டு. இடஒதுக்கீட்டின் மூலம் திறமையின்மை முழு அங்கீகாரம் பெற்றுவிடும் என்றும் சாதிரீதியான பாகுபாடு களையப்படாமல் உறுதிப்பட்டுவிடும் என்றும் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.
Question 65
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சமூக பண்பாட்டு மாற்றம் ஓரிரு தலைமுறைகளுக்குள்ளாகவே ஏற்பட்டு விடும் என்று எதிர்பார்ப்பது நடைமுறை சாத்தியங்களுக்கு பொருந்தாது என்றே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • (ii) பன்னெடுங்காலமாக தொடர்ந்து வந்த சாதி, மத, பாலின ஏற்றத்தாழ்வுகளை மிக விரைவாக நம்மால் களைவது மிக எளிமையான ஒன்று.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 65 Explanation: 
பன்னெடுங்காலமாக தொடர்ந்து வந்த சாதி, மத, பாலின ஏற்றத்தாழ்வுகளை மிக விரைவாக நம்மால் களைய முடிந்தால் வரவேற்கத்தக்கதே. அப்படிப்பட்ட சமூக பண்பாட்டு மாற்றம் ஓரிரு தலைமுறைகளுக்குள்ளாகவே ஏற்பட்டு விடும் என்று எதிர்பார்ப்பது நடைமுறை சாத்தியங்களுக்கு பொருந்தாது என்றே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Question 66
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) உலகெங்கும் உள்ள சமூகங்கள் அனைத்துமே தங்களுக்கென்று ஒரு நீதியை வரையறுத்து வைத்திருக்கின்றன.
  • (ii) சரி-தவறு என்ற தெளிவில்லாத சமூகம் வரலாற்றில் இருந்ததாகத் தகவல் இல்லை.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 66 Explanation: 
சமூக நீதியும், சமத்துவமும்: உலகெங்கும் உள்ள சமூகங்கள் அனைத்துமே தங்களுக்கென்று ஒரு நீதியை வரையறுத்து வைத்திருக்கின்றன. சரி-தவறு என்ற தெளிவில்லாத சமூகம் வரலாற்றில் இருந்ததாகத் தகவல் இல்லை. சமூகம் ஏற்றுக்கொண்ட நல்ல செயல்கள், சமூகம் மறுக்கும் அல்லது நிராகரிக்கும் செயல்கள் அந்த சமூகத்தின் தர்மம் என்று அழைக்கப்படலாயிற்று.
Question 67
நீதி என்றால் என்ன? ' எனும் தலைப்பில் தனது மாணவர்களோடு  பல உரையாடல்களை நடத்தியவர் யார்?
A
பிளாட்டோ
B
அலெக்சாண்டர்
C
சாக்ரடீஸ்
D
ஜான் ரால்ஸ்
Question 67 Explanation: 
இந்த தர்மத்தை மீறும் நபர்கள் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கவும், தண்டனை வழங்கவும் அரசன் தவறக்கூடாதே என்பதே முக்கியமான தர்மம் என்று நமது நாட்டில் மட்டுமல்ல பல நாடுகளிலும் நிலவி வந்த நியதியாக இருக்கிறது. கிரேக்க தத்துவ அறிஞர் பிளாட்டோ தனது மாணவர்களோடு நடத்திய பல உரையாடல்களில் நீதி என்றால் என்ன? அதை ஏன் நாம் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விரிவாகவே பேசியிருக்கிறார்.
Question 68
சமூகத்தில் சில நபர்கள் கூட நியாயத்திற்கு எதிராக இருந்தால், அது ஒட்டு மொத்த சமூகத்தையும் எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றி விளக்குபவர் யார்?
A
பிளாட்டோ
B
அலெக்சாண்டர்
C
சாக்ரடீஸ்
D
ஜான் ரால்ஸ்
Question 68 Explanation: 
அறிஞர் சாக்ரடீஸ் தமது குறிப்பில் சமூகத்தில் சில நபர்கள் கூட நியாயத்திற்கு எதிராக இருந்தால், அது ஒட்டு மொத்த சமூகத்தையும் எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றி விளக்குகிறார். நீதி என்பது ஒட்டு மொத்த சமூகத்திற்கும் நன்மை பயக்கும் செயலாகவே இருக்க முடியும் என்று தெளிவுபடுத்துகிறார். தனி நபருக்கு மட்டும் நன்மையோ பலனையே தரும் செயலை நீதி என கருதக்கூடாது. என்பதே அவரது கருத்தின் சாராம்சம்.
Question 69
நியாயம் என்பது முழு சமூகத்திற்கும் மட்டுமானதாகவே இருக்க முடியும், இருக்க வேண்டும் என்பது யாருடைய தத்துவத்தின் மையக்கருத்தாகும்?
A
பிளாட்டோ
B
அலெக்சாண்டர்
C
சாக்ரடீஸ்
D
ஜான் ரால்ஸ்
Question 69 Explanation: 
ஒட்டு மொத்த சமூகத்தின் வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் நீதி பற்றி பேச முடியாது; நியாயம் என்பது முழு சமூகத்திற்கும் மட்டுமானதாகவே இருக்க முடியும், இருக்க வேண்டும் என்பதே சாக்ரடீஸ் சொல்லும் தத்துவத்தின் மையக்கருத்தாகும். இதன்படி நாட்டில் கால காலமாக வழங்கப்பட்டு வந்த அநீதி, பாகுபாடுகளை அகற்றுவதற்காக அந்த சமூகங்களுக்கு வழங்கப்பட்ட நீதியே இடஒதுக்கீடு எனும் சமூக நீதியாகும்.
Question 70
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சாதியப் படிநிலையே ஏற்றத்தாழ்வுக்கான முதன்மையான கூறாக இருக்கும் நமது நாட்டில், அதனடிப்படையிலேயே சமூகநீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
  • (ii) பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் பிரிவினர், பழங்குடியினர் என பலதரப்பாக ஒவ்வொருவரின் சமூக நிலைக்கு ஏற்ப, அரசின் திட்டங்கள் அமைந்திருக்கின்றன.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 70 Explanation: 
விகிதாச்சார நீதி: பாகுபாடு நிறைந்த சமூகத்தில் நீதியை நிலைநாட்டுவதில் நமது அரசமைப்பு சட்டம் முன்வைக்கும் சமூக நீதி என்பது வரலாற்று ரீதியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்தினரின் முன்னேற்றத்திற்கான உதவிக்கரம் எனலாம். அதில் யாருக்கு எவ்வளவு வழங்கப்படவேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகளும் விவாதங்களும் தொடர்ந்தன. சாதியப் படிநிலையே ஏற்றத்தாழ்வுக்கான முதன்மையான கூறாக இருக்கும் நமது நாட்டில், அதனடிப்படையிலேயே சமூகநீதி நிலைநாட்டப்பட வேண்டும். ஆகவேதான், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் பிரிவினர், பழங்குடியினர் என பலதரப்பாக ஒவ்வொருவரின் சமூக நிலைக்கு ஏற்ப, அரசின் திட்டங்கள் அமைந்திருக்கின்றன.
Question 71
சுதந்திர இந்தியாவின் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் யாருடைய தலைமையில் அமையப்பெற்றது?
A
ரோகிணி
B
காகா காலேல்கர்
C
பி.பி.மண்டல்
D
சந்தானம்
Question 71 Explanation: 
நாட்டில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மேம்பாட்டிற்காக முதல் ஆணையம் 1953 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. காகா காலேல்கர் அவர்களின் தலைமையில் அமையப்பெற்ற இதுவே சுதந்திர இந்தியாவின் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.
Question 72
சமூக – அடையாளக் கோட்பாடு எனப்படுவது எது?
A
நீதிக்கோட்பாடு
B
உரிமை அளிக்கும் கோட்பாடு
C
பொதுச்சொத்து கோட்பாடு
D
பாகுபாடு – சமூக அடிப்படைக் கோட்பாடு
Question 72 Explanation: 
பாகுபாடு – சமூக அடிப்படைக் கோட்பாடு: மனிதர்கள் தாங்கள் சார்ந்துள்ள குழுவின் உறுப்பாகத் தம்மை அடையாளம் காண்கின்றனர். தமது குழுவைச் சார்ந்தவர்கள் எவ்வளவுதான் புகழ்ந்தாலும் தமது குழுவைச் சார்ந்து இருப்பதையே கவுரவமாகவும் ஆற்றல் மிக்கதாகவும் கருதுவர். பாகுபாடு என்பது ஒருவர் தாம் சார்ந்த குழுவின் உறுப்பினர் என்ற அடிப்படையை இல்லாமலாக்குவது அல்லது இயற்கை மூல வளங்களை அணுகுவதில் இருந்து தடுப்பது. மேலும், இதில் செல்வம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு குழுவில் ஒருவரின் தகுதி அல்லது சுய – மரியாதையை உருவாக்குவதில் மறைமுகமான ஊக்கம் அவரது செல்வத்தால் ஏற்படுகிறது என்று பாகுபாடு எனும் புறக்கணிப்பு அல்லது ஒதுக்கல் குறித்து சமூக – உளவியலாளர்கள் மதிப்பிடுகிறார்கள். இதை சமூக – அடையாளக் கோட்பாடு எனலாம்.
Question 73
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) குறைவான சமூக ஏற்பு அளிக்கப்படும் மனிதர்கள் வெளிக்குழுவினர் போல மதிப்பிழப்பதாகவும் தொடக்க்கட்ட ஆ ய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
  • (ii) வேறுபட்ட குழுவினர்  மீது காட்டப்படும் எதிர்மறை அணுகுமுறைகள் ஒன்றுடன் ஒன்று வலுவான தொடர்புகளைக் கொண்டுள்ளன.
 
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 73 Explanation: 
குறைவான சமூக ஏற்பு அளிக்கப்படும் மனிதர்கள் வெளிக்குழுவினர் போல மதிப்பிழப்பதாகவும் சமத்துவமின்மை அடிப்படையில் அத்தகைய மனிதர்கள் எதிரிகளாக ப்  பார்க்கப்படுவதாகவும் தொடக்க்கட்ட ஆ ய் வு க ள் உறுதிப்படுத்துகின்றன. வேறுபட்ட குழுவினர் (இன, மத சிறுபான்மையினர், பெண்கள், இயலாமையில் இருப்பவர்கள், வீடற்றவர்கள்) மீது காட்டப்படும் எதிர்மறை அணுகுமுறைகள் ஒன்றுடன் ஒன்று வலுவான தொடர்புகளைக் கொண்டுள்ளன.
Question 74
பின்வருவனவற்றுள் உறுதிபடுத்தும் நடவடிக்கைகளில் அடங்குபவை எவை?
  • ⅰ) ஊதியங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றுதல்
  • ⅱ) கல்வி வாய்ப்புகளை அதிகரித்தல்
  • ⅲ) கடந்த காலங்களில் ஏற்பட்ட வலி, காயங்கள் மற்றும் தவறுகளுக்கு நிவாரணம் காணுதல்
  • ⅳ) அடிமை மற்றும் அடிமை சட்டங்களால் கடந்த காலங்களில் ஏற்பட்ட சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்தல்
A
ⅰ), ⅱ), ⅲ), ⅳ)
B
ⅰ), ⅱ), ⅲ)
C
ⅱ), ⅲ), ⅳ)
D
ⅲ), ⅳ)
Question 74 Explanation: 
உறுதிப்படுத்தும் நடவடிக்கை: சமூக – பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் வழியாக சமூக சமத்துவத்தினை உருவாக்குவது உறுதிப்படுத்தும் நடவடிக்கை எனப்படுகிறது. இந்த மக்கள் காலம் காலமாக வரலாற்றுப்பூர்வமாக அடிமைகளாகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள். இதனால் உருவாகியுள்ள சமுதாய, பொருளாதார இடைவெளிகளை இணைக்க வேலைவாய்ப்புகள் மற்றும் ஊதியங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றுதல், கல்வி வாய்ப்புகளை அதிகரித்தல், கடந்த காலங்களில் ஏற்பட்ட வலி, காயங்கள் மற்றும் தவறுகளுக்கு நிவாரணம் காணுதல், குறிப்பாக அடிமை மற்றும் அடிமை சட்டங்களால் கடந்த காலங்களில் ஏற்பட்ட சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியன உறுதிபடுத்தும் நடவடிக்கைகளில் அடங்கும்.
Question 75
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) அமெரிக்காவில் ஐந்து ஆண்டுகளில் அமலான உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மீது 2017-இல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • (ii) “கருப்பினத்தவர் வேலைவாய்ப்பு பெறுவது அதாவது பணிகளில் கருப்பினத்தவர் பங்கு குறிப்பிடத்தக்க அளவு (0.8%) அதிகரித்துள்ளது என தெரியவந்தது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 75 Explanation: 
அமெரிக்காவில் ஐந்து ஆண்டுகளில் அமலான உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மீது 2017-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் “ கருப்பினத்தவர் வேலைவாய்ப்பு பெறுவது அதாவது பணிகளில் கருப்பினத்தவர் பங்கு குறிப்பிடத்தக்க அளவு (0.8%) அதிகரித்துள்ளது என தெரியவந்தது.
Question 76
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் பல துறைகளில் அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் முன்னேறி வந்தபோதும் அங்கு நிறத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது இருபதாம் நுற்றாண்டின் பிற்பகுதி வரை நீடித்தது.
  • (ii) இதை எதிர்த்து அங்கு குடிமை உரிமைப் போராட்டங்கள் நடந்தன.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 76 Explanation: 
அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் (யு. எஸ். ஏ) சுதந்திரம், பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் முன்னேறி வந்தபோதும் அங்கு நிறத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது இருபதாம் நுற்றாண்டின் பிற்பகுதி வரை நீடித்தது. இதை எதிர்த்து அங்கு குடிமை உரிமைப் போராட்டங்கள் நடந்தன.
Question 77
முதல் உறுதிப்படுத்தும் ஆணை அமெரிக்காவின் எந்த குடியரசுத்தலைவரால் வெளியிடப்பட்டது?
A
பிராங்க்ளின் பியர்ஸ்
B
ஆபிரகாம் லிங்கன்
C
ரூதர் போர்டு
D
ஜான் எஃப் கென்னடி
Question 77 Explanation: 
இதைத்தொடர்ந்து உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் 1960களில் அமெரிக்க ஐக்கிய மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் உறுதிப்படுத்தும் ஆணை குடியரசு தலைவர் ஜான் எஃப் கென்னடி அவர்களால் 1961 இல் வெளியிடப்பட்ட்து. இது நிர்வாக ஆணை 10925 என்று அழைக்கப்படுகிறது.
Question 78
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) உறுதிப்படுத்தும் ஆணையின்படி வேலை வாய்ப்புகளில் எந்த தொழிலாளரும் அல்லது விண்ணப்பதாரரும் நிறம், மொழி, இனம், தேசிய பூர்விகம், அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என அரசு கேட்டுக்கொண்டது.
  • (ii) 1965 இல் மற்றொரு ஆணையால் (11246) இது மாற்றப்பட்டது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 78 Explanation: 
உறுதிப்படுத்தும் ஆணையின்படி வேலை வாய்ப்புகளில் எந்த தொழிலாளரும் அல்லது விண்ணப்பதாரரும் நிறம், மொழி, இனம், தேசிய பூர்விகம், அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என அரசு கேட்டுக்கொண்டது. 1965 இல் மற்றொரு ஆணையால் (11246) இது மாற்றப்பட்டது. இதன்படி தனியான நிர்வாகத் துறை மூலம் தொடர்ச்சியான நேர்மறை செயல்பாடுகளை மேற்கொண்டு வேலை வாய்ப்புகளில் சமத்துவத்தை ஏற்படுத்துவதில் மைய கூட்டாட்சி அரசின் கடமை உறுதிபடுத்தப்பட்டது. இதன்படி பாலினம் பாதுக்காக்கப்பட்ட இனங்களில் கீழ் கொண்டுவரப்பட்ட து .
Question 79
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) 1964 ல் நிறைவேற்றப்பட்ட சிவில் உரிமை சட்டத்தில் நிறுவனங்களில் பாகுபாடற்ற நிலையை உருவாக்க அழுத்தம் கொடுப்பது என்ற உறுதிப்படுத்தும் நோக்க ம் ச ட்டப் பூர்வமக்கப்பட்ட து.
  • (ii) 1967 ல் பெண்களுக்கு உறுதிப்படுத்தும் நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 79 Explanation: 
1964 ல் நிறைவேற்றப்பட்ட சிவில் உரிமை சட்டத்தில் நிறுவனங்களில் பாகுபாடற்ற நிலையை உருவாக்க அழுத்தம் கொடுப்பது என்ற உறுதிப்படுத்தும் நோக்க ம் ச ட்டப் பூர்வமக்கப்பட்ட து . 1967 ல் பெண்களுக்கு உறுதிப்படுத்தும் நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டது.
Question 80
அவசியத்தேவை என கையொப்பமிட உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்ட அமைப்பு எது?
A
பிம்ஸ்டெக்
B
சார்க்
C
ஐ.நா அமைப்பு
D
பசிபிக் பிராந்தியம்
Question 80 Explanation: 
ஐக்கிய நாடுகள் அனைத்து வகையான இனப் பாகுபாடுகளை ஒழிக்கும் உலகளாவிய சிறப்பு கருத்தரங்கம் அமைப்பு ரீதியாக பாகுபாட்டுக்கு உள்ளான சமூகங்களுக்கு நிவாரணம் அளிக்க உறுதிப்படுத்தும் நடவடிக்கை அவசியத்தேவை என கையொப்பமிட்ட உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டது. இந்த நடவடிக்கை அமலாக்கம் செய்யப்பட்ட பின்னர் எந்த ஒரு இனக்குழுக்கள் இடையிலும் சமத்துவமின்மை நிகழாத வகையில் திட்டங்களை உருவாக்குமாறு அக்கருத்தரங்கம் வலியுறுத்தியது.
Question 81
"சில அரசுகளால் கடைப்பிடிக்கப்பட்ட பாகுபாட்டுக் கொள்கை களா ல் பாதிப்புக்குள்ளான சமுதாயங்களுக்கு உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அமலாக்கம் செய்வது அந்நாடுகளின் சமத்துவக் கொள்கையில் தேவைப்படுகிறது" என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்ட அமைப்பு எது?
A
பன்னாட்டு நிதியம்
B
சர்வதேச நீதிமன்றம்
C
ஐ.நா மனித உரிமைகள் குழு
D
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித்திட்டம்
Question 81 Explanation: 
சில அரசுகளால் கடைப்பிடிக்கப்பட்ட பாகுபாட்டுக் கொள்கை களா ல் பாதிப்புக்குள்ளான சமுதாயங்களுக்கு உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அமலாக்கம் செய்வது அந்நாடுகளின் சமத்துவக் கொள்கையில் தேவைப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழு வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளது.
Question 82
தென் ஆப்பிரிக்கா சமூகம் மக்களாட்சிக்கு மாறிய ஆண்டு எது?
A
1993
B
1990
C
1994
D
1998
Question 82 Explanation: 
தென்னாப்பிரிக்காவில் சமூக நீதி சட்டம்: 1994-ல் தென் ஆப்பிரிக்கா சமூகம் மக்களாட்சிக்கு மாறியதைத் தொடர்ந்து முன்னர் நிலவிய இன ஒதுக்கல் ஆட்சியின் பாதிப்புகளை அகற்றி சமூகங்கள் இடையே சமத்துவம் ஏற்படும் வழிவகைகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவாக உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
Question 83
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) முன்னர் சட்டத்தின் அடிப்படையில் இன ஒதுக்கல் செய்யப்பட்ட  மக்கள் அனைவருக்கும் முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பில் சமத்துவம் அளிக்க சட்டம் இயற்றப்பட்டது.
  • (ii) 50 பேருக்கு அதிகமாகப் பணியாற்றும் நிறுவனங்களில் மேற்கூறிய பாதிக்கப்பட்ட வகுப்பினர்க்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தமக்குத் தாமே திட்டம் வகுத்து அரசுக்கு அளித்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 83 Explanation: 
உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் படி முன்னர் சட்டத்தின் அடிப்படையில் இன ஒதுக்கல் செய்யப்பட்ட பூர்வீக கருப்பினத்தவர்கள், இந்தியர்கள், பழுப்பு நிறத்தவர்கள் ஆகியோருக்கும் வெள்ளை இனத்தவர் உள்ளி ட்ட பெண்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பில் சமத்துவம் அளிக்க சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி 50 பேருக்கு அதிகமாகப் பணியாற்றும் நிறுவனங்களில் மேற்கூறிய பாதிக்கப்பட்ட வகுப்பினர்க்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தமக்குத் தாமே திட்டம் வகுத்து அரசுக்கு அளித்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.
Question 84
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள்   கருப்பினத்தவர்களுக்கு பொருளாதார ஆற்றல் அளிக்கும் சட்டத்தின் ஒரு உறுப்பாக வகுக்கப்பட்டிருந்தது.
  • (ii) கருப்பினத்தவருக்கு முன்னுரிமை வழங்குவதில் தவறில்லை என்று தென் ஆப்பிரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 84 Explanation: 
இது கருப்பினத்தவர்களுக்கு பொருளாதார ஆற்றல் அளிக்கும் சட்டத்தின் ஒரு உறுப்பாக வகுக்கப்பட்டிருந்தது. இது குறித்த வழக்கில் கருப்பினத்தவருக்கு முன்னுரிமை வழங்குவதில் தவறில்லை என்று தென் ஆப்பிரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Question 85
பின்வரும் எந்த நாட்டில் வாழும் சிறுபான்மை தேசிய இனங்களுக்கு கல்வியில் முன்னுரிமை வழங்குவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அமலில் உள்ளன?
A
ஆஸ்திரேலியா
B
ஜப்பான்
C
சீனா
D
பாகிஸ்தான்
Question 85 Explanation: 
சீனா: சீனாவில் வாழும் சிறுபான்மை தேசிய இனங்களுக்கு கல்வியில் முன்னுரிமை வழங்குவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அமலில் உள்ளன.
Question 86
ரஷ்யா சோவியத் ஒன்றியம் இருந்தபோது பின்வருபவர்களு யாருக்கு அரசு பதவிகளில்  ஒதுக்கீடுள் வழங்கப்பட்டிருந்தது?
  • ⅰ) இனக்குழு சிறுபான்மையினர்
  • ⅱ) பெண்கள்
  • ⅲ) தொழிற்சாலை தொழிலாளர்கள்
  • ⅳ) ஆரியர்
A
ⅰ), ⅱ), ⅲ), ⅳ)
B
ⅰ), ⅱ), ⅲ)
C
ⅱ), ⅲ), ⅳ)
D
ⅲ), ⅳ)
Question 86 Explanation: 
ரஷ்யா சோவியத் ஒன்றியம் இருந்தபோது இனக்குழு சிறுபான்மையினருக்கும், பெண்களுக்கும் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கும் பல்கலைக்கழக நுழைவு மற்றும் அரசு பதவிகளில் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது.
Question 87
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) புதிய கல்வியும் புதிய தேவைகளும் பண்டைக்காலத்தில் நமது நாட்டில் நிலவிவந்த கல்விமுறை சமத்துவ கல்வி முறை அல்ல.
  • (ii) அவரவர் வர்ணம் / சாதி சார்ந்த தொழில்களை மட்டுமே கற்க அனுமதிக்கப்பட்டனர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 87 Explanation: 
புதிய கல்வியும் புதிய தேவைகளும் பண்டைக்காலத்தில் நமது நாட்டில் நிலவிவந்த கல்விமுறை சமத்துவ கல்வி முறை அல்ல. அவரவர் வர்ணம் / சாதி சார்ந்த தொழில்களை மட்டுமே கற்க அனுமதிக்கப்பட்டனர். பிற்காலத்தில் நவீன கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அங்கும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
Question 88
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் நவீன கல்வி, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த கிறித்துவ மிஷனரி அமைப்புகளால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • (ii) 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் ஆங்கிலேய காலனி ஆட்சியின் கீழ் வந்த பின்னர் இங்கிலாந்து நாட்டின் கிறித்துவ மிஷனரிகள் பல இடங்களில் பள்ளிகள் தொடங்கினர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 88 Explanation: 
இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் நவீன கல்வி, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த கிறித்துவ மிஷனரி அமைப்புகளால் அறிமுகப்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் ஆங்கிலேய காலனி ஆட்சியின் கீழ் வந்த பின்னர் இங்கிலாந்து நாட்டின் கிறித்துவ மிஷனரிகள் பல இடங்களில் பள்ளிகள் தொடங்கினர். கல்வி மறுக்கப்பட்டு வந்த பல சமுதாயங்களுக்கு இவை நல் வாய்ப்பாக அமைந்தன.
Question 89
இந்தியா முழுவதும்அரசு நிர்வாக மொழியாக ஆங்கிலம் மட்டுமே பின்பற்றப்படும் என்று எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?
A
1824
B
1833
C
1835
D
1852
Question 89 Explanation: 
சென்னை மாகாணத்தில் சமூகநீதி இதே காலகட்டத்தில் அன்றைய சென்னை மாகாணத்தில் இங்கிலாந்து அரசின் நேரடி நிர்வாகம் விரிவடைந்தது. ரயத்துவாரி போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. வரி வசூல் செய்யும் நிர்வாக அமைப்புகள் உருவாயின. சென்னையில் ராணுவ அமைப்புகள் உருவாயின. 1835 இல் இந்தியா முழுவதும்அரசு நிர்வாக மொழியாக ஆங்கிலம் மட்டுமே பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
Question 90
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ராணுவத்தில் அனைவரையும் சேர்த்துக்கொண்ட காலனி அரசு, பள்ளிகளில் இந்திய மொழிகளை அனுமதிக்கவில்லை.
  • (ii) பெரும்பாலும் பிராமணரல்லாதவர்கள்  தாழ்த்தப்பட்ட வகுப்பினரே ராணுவத்தில் சேர்ந்தனர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 90 Explanation: 
ஆங்கிலேயரால் எற்படுத்தப்பட்ட இந்திய ராணுவத்தில் இந்தியர்கள் சேர்க்கப்பட்டனர். பெரும்பாலும் பிராமணரல்லாதவர்கள்,, தாழ்த்தப்பட்ட வகுப்பினரே ராணுவத்தில் சேர்ந்தனர். ராணுவத்தில் அனைவரையும் சேர்த்துக்கொண்ட காலனி அரசு, பள்ளிகளில் இந்திய மொழிகளை அனுமதிக்கவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இந்நிலை நீடித்தது.
Question 91
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஐரோப்பியர்கள் தவிர இந்திய – ஆங்கிலேயர்கள், பிராமணர்கள் ஆகியோரே அரசு பணிகளில் நிறைந்திருந்தனர்.
  • (ii) நவீன கல்விமுறையின் கீழ் ஆங்கிலம் கற்றவர்கள் பணிகளில் அமர்த்தப்பட்டனர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 91 Explanation: 
நவீன கல்விமுறையின் கீழ் ஆங்கிலம் கற்றவர்கள் இப் பணிகளில் அமர்த்தப்பட்டனர். ஐரோப்பியர்கள் தவிர இந்திய – ஆங்கிலேயர்கள், பிராமணர்கள் ஆகியோரே அரசு பணிகளில் நிறைந்திருந்தனர்.
Question 92
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜமீன்தாரி, ராயத்துவாரி முறைகள் அமலாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜமீன்தார்கள், மிராசுதாரர்கள், நிலச்சுவாந்தார்கள் உருவாயினர்.
  • (ii) இவர்கள் அனைவரும் உயர்சாதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 92 Explanation: 
இதேபோல, 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜமீன்தாரி, ராயத்துவாரி முறைகள் அமலாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜமீன்தார்கள், மிராசுதாரர்கள், நிலச்சுவாந்தார்கள் உருவாயினர். இவர்கள் அனைவரும் உயர்சாதியினர் என்பது குறிப்பிடத்தக்கது. இது கிராம நில உறவுகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்கள் நிலத்தின் மீது எந்த உரிமை ஆனார்கள்.
Question 93
ரயத்துவாரி முறை மீது ஆய்வு செய்யுமாறு பணிக்கப்பட்ட அன்றைய ஆங்கிலேய அதிகாரி யார்?
A
தாமஸ் மன்றோ
B
ஹேஸ்டிங்ஸ்
C
கலால்கர்
D
பிரான்ஸிஸ் எல்லீஸ்
Question 93 Explanation: 
இதைத் தொடர்ந்து ரயத்துவாரி முறை மீது ஆய்வு செய்யுமாறு அன்றைய ஆங்கிலேய அதிகாரி பிரான்ஸிஸ் எல்லீஸ் பணிக்கப்பட்டார். இதேபோல் தாமஸ் மன்றோ எனும் அதிகாரியும் ராயத்துவாரி முறை மீது ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார்.
Question 94
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டவர்?
A
தாமஸ் மன்றோ
B
ஹேஸ்டிங்ஸ்
C
கலால்கர்
D
பிரான்ஸிஸ் எல்லீஸ்
Question 94 Explanation: 
அவர்கள் அறிக்கைகளில் ‘காலம் காலமாக நிலத்துடன் தொடர்பு கொண்டிருந்த மக்களிடமிருந்து நிலம் பறிக்கப்பட்டு மேல்தட்டு வகுப்புகளைச் சேர்ந்த ஜமீன்தார்கள், மிராசுதாரர்களிடம் நிலம் அளிக்கப்பட்டதால் வேளாண்மையின் தரமும் விளைச்சலும் குறைந்துவிட்டதாகவும் இதனால் நில வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தனர். மேலும், ஏராளமான நிலங்களை தரிசாகப் போட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று கோரினர்.
Question 95
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) காலனிஆட்சியில் நிலங்களில் இருந்து விரட்டப்பட்டு கல்வியும் மறுக்கப்பட்ட நிலையில் தாழ்த்தப்பட்ட வகுப்பாரின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்வதை உயர் வகுப்பார் எதிர்த்து தடுத்தனர்.
  • (ii) பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்படுவதைத் தடுக்கக்கூடாது என்று 1854 இல் நீதிமன்றம் ஆணையிட்டது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 95 Explanation: 
இவ்வாறு காலனிஆட்சியில் நிலங்களில் இருந்து விரட்டப்பட்டு கல்வியும் மறுக்கப்பட்ட நிலையில் தாழ்த்தப்பட்ட வகுப்பாரின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்வதை உயர் வகுப்பார் எதிர்த்து தடுத்தனர். பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்படுவதைத் தடுக்கக்கூடாது என்று 1854 இல் நீதிமன்றம் ஆணையிட்டது. நீதிமன்ற ஆணைகளுக்கும் உயர்வகுப்பார் பணியவில்லை. 1865 இல் இங்கிலாந்தில் உள்ள இந்தியாவுக்கான அமைச்சரே ஆணையிட்டார். அப்போதும் நிலைமையில் மாற்றமில்லை.
Question 96
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) தாழ்த்தப்பட்டோருக்கான முன்னுரிமைகள் சென்னை மாகாண அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதி உதவித்திட்டங்களை 1885 இல் அறிவித்தது.
  • (ii) சில இடங்களில் தாழ்த்தப்பட்டோருக்கான பள்ளிகளை அரசே திறந்தது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 96 Explanation: 
தாழ்த்தப்பட்டோருக்கான முன்னுரிமைகள் சென்னை மாகாண அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதி உதவித்திட்டங்களை 1885 இல் அறிவித்தது. சில இடங்களில் தாழ்த்தப்பட்டோருக்கான பள்ளிகளை அரசே திறந்தது.
Question 97
காலனியாதிக்க காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் யார்?
A
வார்னே
B
பெண்டிக்
C
எல்லிஸ்
D
திரிமென்கீரே
Question 97 Explanation: 
இதற்கிடையே, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரிமென்கீரே என்பவர் செங்கல்பட்டு மாவட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதன் சுருக்கம் வருமாறு: தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக, பொருளாதார, கல்வி ரீதியாக மிகவும் மோசமடைந்துள்ளனர். அவர்களுக்கு நிலம் மறுக்கப்படுகிறது. வீடு கட்டிக்கொள்ளக்கூட அனுமதிக்கப்படுவதில்லை. கல்வி நிராகரிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள். ஏராளமான நிலம் வேண்டுமென்றே தரிசாகப் போடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் குறைகிறது. இந்த நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிரித்து வழங்கலாம்.
Question 98
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) எல்லிஸ் அறிக்கையை பரீசிலித்த அரசு 1892இல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 12 லட்சம் ஏக்கர் நிலத்தை பிரித்து வழங்கியது.
  • (ii) தாழ்த்தப்பட்டோரின் குழந்தைகளுக்கான பள்ளிகளை அரசு பஞ்சமர் பள்ளிகள் என அழைத்தது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 98 Explanation: 
திரிமென்கீரே அறிக்கையில் மேலும் பல பரிந்துரைகளும் இருந்தன. இந்த அறிக்கையை பரீசிலித்த அரசு 1892இல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 12 லட்சம் ஏக்கர் நிலத்தை பிரித்து வழங்கியது. இது பஞ்சமி நிலம் என அழைக்கப்பட்டது. இதேபோல தாழ்த்தப்பட்டோரின் குழந்தைகளுக்கான பள்ளிகளை அரசு பஞ்சமர் பள்ளிகள் என அழைத்தது.
Question 99
பஞ்சமர் பள்ளிகள் என அழைப்பதை ஆதிதிராவிடர் பள்ளிகள் என அழைக்கப்படவேண்டும் என்று கூறியவர்/கள் யார்/யாவர்?
  • ⅰ) தியாகராயர்
  • ⅱ) ராஜாஜி
  • ⅲ) அயோத்திதாச பண்டிதர்
  • ⅳ) ம. சிங்காரவேலர்
A
ⅰ), ⅱ), ⅲ), ⅳ)
B
ⅰ), ⅱ), ⅲ)
C
ⅱ), ⅲ), ⅳ)
D
ⅲ), ⅳ)
Question 99 Explanation: 
பஞ்சமர்’ என்பது, வைதீக மதத்தின்படி நான்கு வர்ணங்களுக்கும் வெளியே நிறுத்தப்பட்ட மக்களைக் குறிக்கும் பெயர் ஆகும். எனவே பஞ்சமர் பள்ளிகள் என அழைப்பதை ஆதிதிராவிடர் பள்ளிகள் என அழைக்கப்படவேண்டும் என்று அயோத்திதாச பண்டிதர், ம. சிங்காரவேலர் போன்றோர் கூறினர்.
Question 100
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலனி ஆட்சியின் கீழ் சமூகம், பொருளாதாரம், அதிகாரம், வேலை வாய்ப்புகள் ஆகிய துறைகளில் ஒரு பக்கம் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
  • (ii) சமூகத்தில் பெரும்பான்மையராக இருந்த பிராமணர் அல்லாதவர்கள், சிறுபான்மை மதத்தினர் மிகுதியாக புறக்கணிக்கப்பட்டிருந்தனர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 100 Explanation: 
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலனி ஆட்சியின் கீழ் சமூகம், பொருளாதாரம், அதிகாரம், வேலை வாய்ப்புகள் ஆகிய துறைகளில் ஒரு பக்கம் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில் சமூகத்தில் பெரும்பான்மையராக இருந்த பிராமணர் அல்லாதவர்கள், சிறுபான்மை மதத்தினர் மிகுதியாக புறக்கணிக்கப்பட்டிருந்தனர்.
Question 101
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சிறுபான்மையினர்  தங்களுக்கும் அரசுப்பணிகளின் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கோரினர்.
  • (ii) குறிப்பாக கல்வி கற்ற அயோத்திதாச பண்டிதர்,  ம. சிங்காரவேலர், இரட்டைமலை சீனுவாசன், பிட்டி தியாகராயர், பனகல் அரசர் போன்றோர் முன்னணியில் இருந்தனர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 101 Explanation: 
இக்காலகட்டத்தில் தொடங்கப்பட்ட பள்ளிகள் மூலம் நவீன கல்வி கற்ற பிராமணரல்லாத வகுப்பினம் சிறுபான்மையினர் மத்தியில் இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தங்களுக்கும் அரசுப்பணிகளின் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கோரினர். குறிப்பாக கல்வி கற்ற அயோத்திதாச பண்டிதர், ம. சிங்காரவேலர், இரட்டைமலை சீனுவாசன், பிட்டி தியாகராயர், பனகல் அரசர் போன்றோர் முன்னணியில் இருந்தனர்.
Question 102
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) 1922 ஆம் ஆண்டில் சென்னை மாவட்ட அனைத்து துறைகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளித்து ஆணை வெளியிட்டது.
  • (ii) இது 128(2) என்று அழைக்கப்பட்டது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 102 Explanation: 
1922 ஆம் ஆண்டில் சென்னை மாவட்ட அனைத்து துறைகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளித்து ஆணை வெளியிட்டது. இது 128(2) என்று அழைக்கப்பட்டது. இதனை சென்னை மாகாணம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று அமைக்கப்பட்டது.
Question 103
மஹாராஷ்டிராவில்  கல்வி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் யார்?
A
பெரியார்
B
ராஜாஜி
C
சாகுமகராஜ்
D
ஜோதிபாபூலே
Question 103 Explanation: 
தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் முன்னெடுத்த கல்வி முயற்சிகளை போலவே மஹாராஷ்டிராவிலும் கல்வி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திட மகாத்மா ஜோதிராவ் பூலே, அன்னை சாவித்ரிபாய் பூலே சாகுமகராஜ் போன்றோர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
Question 104
திருவிதாங்கூர் மன்னராட்சியில் பிராமண ஏகபோகத்தை எதிர்த்து, உள்ளூர்வாசிகளுக்கு அரசாங்கப்பணிகளில் உரிய பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று அளிக்கப்பட்ட விண்ணப்பம் எது?
A
ஈழவ விண்ணப்பம்
B
அவர்ணர் விண்ணப்பம்
C
மலையாளி விண்ணப்பம்
D
குருவர் விண்ணப்பம்
Question 104 Explanation: 
1891 இல் திருவிதாங்கூர் மன்னராட்சியில் ஈழவ விண்ணப்பம் பிராமண ஏகபோகத்தை எதிர்த்து, உள்ளூர்வாசிகளுக்கு அரசாங்கப்பணிகளில் உரிய பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று 'மலையாளி விண்ணப்பம்' அளிக்கப்பட்டது.
Question 105
அவர்ணர்களுக்கு (பிற்படுத்தப்பட்டவர்களுக்கு) கல்வியிலும் அரசுப்பணிகளிலும் உரிய பங்கு தரப்பட வேண்டும்  என்று அளிக்கப்பட்ட விண்ணப்பம் எது?
A
ஈழவ விண்ணப்பம்
B
அவர்ணர் விண்ணப்பம்
C
மலையாளி விண்ணப்பம்
D
குருவர் விண்ணப்பம்
Question 105 Explanation: 
1896 இல் அவர்ணர்களுக்கு (பிற்படுத்தப்பட்டவர்களுக்கு) கல்வியிலும் அரசுப்பணிகளிலும் உரிய பங்கு தரப்பட வேண்டும் என்ற ஈழவ விண்ணப்பம் தரப்பட்டது.நாராயண குருவும் புறக்கணிக்கப்பட்ட சாதியினருக்காக அமைப்புகளை நிறுவுவதிலும், கல்வி நிறுவனங்களை அடைய பதிலும் அதிக முனைப்பு காட்டினார்.
Question 106
கோலாலம்பூர் அரசில் ஐம்பது விழுக்காடு அரசுப்பணிகளை பிராமணரல்லாதாருக்கு ஒதுக்கும் ஆணையை பிறப்பித்தவர் யார்?
A
பேரிங்க்டன்
B
ஸ்காட்டி
C
சாகுமகராஜ்
D
நரசிம்மராஜ்
Question 106 Explanation: 
சென்னை ராஜதானியல் இடஒதுக்கீடு கோரிக்கை வலுப்பெறும் முன்பே கோலாலம்பூர் அரசில் ஐம்பது விழுக்காடு அரசுப்பணிகளை பிராமணரல்லாதாருக்கு ஒதுக்கும் ஆணையை 1902 ஆம் ஆண்டு கோலாலம்பூர் அரசர் சாகு மகராஜ் பிறப்பித்தார்.
Question 107
'மில்லர் குழு' பரிந்துரையின் அடிப்படையில் அரசுப்பணிகளில் நியமங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவத்தை  கொண்டு வந்தவர் யார்?
A
பனகல் அரசர்
B
மைசூர் அரசர்
C
திருவிதாங்கூர் மன்னர்
D
பரோடா மன்னர்
Question 107 Explanation: 
ஏறக்குறைய இதே காலத்தில் 'மில்லர் குழு' பரிந்துரையின் அடிப்படையில் அரசுப்பணிகளில் நியமங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவத்தை மைசூர் அரசர் கொண்டு வந்தார்.
Question 108
1913 ஆம் ஆண்டில் யாருடைய  தலைமையில்  ராயல் ஆணையம் இந்தியா வந்தது?
A
வின்னிங்ஸ்
B
ஹேஸ்
C
அலெக்சாண்டர் கார்டியூ
D
அக்னியூ
Question 108 Explanation: 
நீதிக்கட்சி: 1913 ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் கார்டியூ தலைமையிலான ராயல் ஆணையம் வந்தபோது அதனிடம் ஏராளமான விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. சென்னை மாகாணம் மட்டுமல்லாமல் ரங்கூன் திராவிட சங்கம் உள்பட பல அமைப்புகள் விண்ணப்பங்களை அளித்தன. அவற்றில் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மை மதத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வேலை வாய்ப்புகளில் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன.
Question 109
‘ பிராமணரல்லாதார்  அ றிக்கை’ யாரால் எழுதி வெளியிடப்பட்டது?
A
சி. நடேசன்
B
சர்.பி.தியாகராயர்
C
டி.எம். நாயர்
D
பெரியார்
Question 109 Explanation: 
டாக்டர் சி. நடேசன், சர்.பி.தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் அறிக்கை ஒன்றினை தயாரித்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டனர். சர்.பி. தியாகராயர் எழுதி வெளியிட்ட அந்த அறிக்கை ‘ பிராமணரல்லாதார்  அ றிக்கை’ என்று அழைக்கப்படுகிறது .
Question 110
‘தென்னிந்தியர் சுதந்திர சங்கம்’ எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A
1913
B
1942
C
1945
D
1916
Question 110 Explanation: 
1916 ஆம் ஆண்டு பிராமண ரல்லாதோர் நலன்  காக்க சர்.பி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் ‘தென்னிந்தியர் சுதந்திர சங்கம்’ (South Indian Liberal Federation) என்ற இயக்கத்தைத் தொடங்கினர்.
Question 111
தென்னிந்தியர் சுதந்திர சங்கத்தின் சார்பில் வெளியான இதழ் எது?
A
ஜஸ்டிஸ்
B
பகுத்தறிவு
C
குடியரசு
D
தமிழன்
Question 111 Explanation: 
தென்னிந்தியர் சுதந்திர சங்கத்தின் சார்பில் ‘ஜஸ்டிஸ்’ என்னும் இதழ் வெளியானது. எனவே, இவ்வியக்கம் மக்களிடையே ‘நீதிக்கட்சி’(Justice Party) என வழங்கப்பெற்றது.
Question 112
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) தென்னிந்தியர் சுதந்திர சங்கம் பிராமணரல்லாதார் மக்கள் மத்தியில் கல்வி, வேலைவாய்ப்பு பெறுவதற்கான ‘வகுப்புவாரி உரிமை’ குறித்த விழிப்புணர்வை உருவாக்கியது.
  • (ii) உயர்கல்வியில் ஆங்கிலம், சமஸ்கிருதம் மட்டும் அனுமதிக்கப்படுவதைக் கண்டித்தும் தமிழ் உள்ளிட்ட பழமையான மொழிகளையும் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிக்கட்சி சார்பில் 1915 இல் அரசுக்கு மனு அளிக்கப்பட்டது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 112 Explanation: 
தென்னிந்தியர் சுதந்திர சங்கம் பிராமணரல்லாதார் மக்கள் மத்தியில் கல்வி, வேலைவாய்ப்பு பெறுவதற்கான ‘வகுப்புவாரி உரிமை’ குறித்த விழிப்புணர்வை உருவாக்கியது. உயர்கல்வியில் ஆங்கிலம், சமஸ்கிருதம் மட்டும் அனுமதிக்கப்படுவதைக் கண்டித்தும் தமிழ் உள்ளிட்ட பழமையான மொழிகளையும் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிக்கட்சி சார்பில் 1915 இல் அரசுக்கு மனு அளிக்கப்பட்டது.
Question 113
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) 1917 இல் இந்தியா வந்த தூதுக்குழுவை சென்னை மாகாணத்தைச் சேர்ந்த 54 அமைப்புகள் சந்தித்து பிராமணரல்லாதோர் மற்றும் சிறுபான்மை மதத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று கோரினர்.
  • (ii) வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி ஆங்காங்கு மாநாடுகள் நடத்தப்பட்டன.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 113 Explanation: 
1917 இல் இந்தியா வந்த தூதுக்குழுவை சென்னை மாகாணத்தைச் சேர்ந்த 54 அமைப்புகள் சந்தித்து பிராமணரல்லாதோர் மற்றும் சிறுபான்மை மதத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று கோரினர். அதுமட்டுமல்லாமல் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி ஆங்காங்கு மாநாடுகள் நடத்தப்பட்டன.
Question 114
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சென்னை மாகாண சட்டமன்றத்தில் நீதிக்கட்சி ஆட்சியின் அமர்ந்ததைத் தொடர்ந்து வகுப்புவாரி பிரதிநிதித்துவ  கோரிக்கைகள்  சட்டமன்றத்திலும் எதிரொலித்தன.
  • (ii) அரசு பணியிடங்களில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அளித்து 1921 இல் தீர்மானம் நிறைவேறியது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 114 Explanation: 
முதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை சென்னை மாகாண சட்டமன்றத்தில் நீதிக்கட்சி ஆட்சியின் அமர்ந்ததைத் தொடர்ந்து இக் கோரிக்கைகள் சட்டமன்றத்திலும் எதிரொலித்தன. தொடர்ந்து நீதிக்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் இவற்றுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக அரசு அனுமதி அளித்ததன் பேரில் அரசு பணியிடங்களில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அளித்து 1921 இல் தீர்மானம் நிறைவேறியது. இது வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை என்று அழைக்கப்படுகிறது.
Question 115
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) இந்திய வரலாற்றில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஆகும்.
  • (ii) காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த பிரிவினர்கள் தாங்களும் சமூக, பொருளாதார இழிவுகளில் இருந்து விடுதலை பெற் று சுயமரியா தையுடனும் சமத்துவத்துடனும் எதிர்காலத்தில் வாழ முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 115 Explanation: 
இந்திய வரலாற்றில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஆகும். காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த பிரிவினர்கள் தாங்களும் சமூக, பொருளாதார இழிவுகளில் இருந்து விடுதலை பெற் று சுயமரியா தையுடனும் சமத்துவத்துடனும் எதிர்காலத்தில் வாழ முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது.
Question 116
“எல்லா அரசு பணிகளிலும் பிராமணர் அ ல்லாதவர்களை அவர்களுக்குக் குறைந்தபட்ச கல்வித்தகுதி இருந்தாலே போதும் என்று கருதி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்" என்று தீர்மானம் கொண்டு வந்தவர் யார்?
A
இரட்டைமலை சீனுவாசன்
B
சி. நடேசனார்
C
முனுசாமி
D
ஆர். கே. சண்முகம்
Question 116 Explanation: 
: “எல்லா அரசு பணிகளிலும் பிராமணர் அ ல்லாதவர்களை அவர்களுக்குக் குறைந்தபட்ச கல்வித்தகுதி இருந்தாலே போதும் என்று கருதி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என அனைவரும் அரசுப்பணிகளில் அமர்த்தப் படவேண்டும். இதற்கான ஒரு நிலையான ஆணை வெளியிட வேண்டும். நூறுரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் உத்தியோகமாக இருந்தால் 75% அளவு மக்களை அது அடையும்வரை ஏழாண்டுகாலம் வரை அமலில் இருக்கும் வண்ணமும் இவ்வாணை அமலில் இருக்க வேண்டும்” எனும் தீர்மானத்தினை சட்டசபையின் உறுப்பினரான முனுசாமி கொண்டுவந்தார்.
Question 117
“வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தை நாம் நிறைவேற்றினால் நம் எதிர்கால சந்ததி நம்மையெல்லாம் நமது நாட்டுக்கு உரிமை வாங்கித் தந்தவரென்றே கொண்டாடும்” என்று குறிப்பிட்டார் யார்?
A
இரட்டைமலை சீனுவாசன்
B
சி. நடேசனார்
C
முனுசாமி
D
ஆர். கே. சண்முகம்
Question 117 Explanation: 
இத்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய சர். ஆர். கே. சண்முகம் “இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நாம் நிறைவேற்றினால் நம் எதிர்கால சந்ததி நம்மையெல்லாம் நமது நாட்டுக்கு உரிமை வாங்கித் தந்தவரென்றே கொண்டாடும்” என்று குறிப்பிட்டார்.
Question 118
'எங்கள் மக்களுக்கு வேலைகளில் சரியான பிரிதிநிதித்துவம் தரப்படாவிட்டால், நாங்கள் வரி கொடுக்க மாட்டோம்’ என்று பேசியவர் யார்?
A
இரட்டைமலை சீனுவாசன்
B
சிங்கார வேலர்
C
சி. நடேசனார்
D
குமாரசாமி
Question 118 Explanation: 
அத்தீர்மானத்தை வழிமொழிந்த டாக்டர் சி. நடேசனார் ‘எங்கள் மக்களுக்கு வேலைகளில் சரியான பிரிதிநிதித்துவம் தரப்படாவிட்டால், நாங்கள் வரி கொடுக்க மாட்டோம்’ என்று பேசினார்.
Question 119
காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் மாநாடு எந்த ஆண்டு  நடைபெற்றது?
A
1924
B
1922
C
1927
D
1925
Question 119 Explanation: 
காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக இயங்கி வந்த தந்தை பெரியார், ஜஸ்டிஸ் கட்சியினரின் கருத்துக்களை ஆதரித்தார். காங்கிரஸ் கட்சிக்குள்ளும், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரிக்கையை எழுப்பினார். 1925ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரும் தீர்மானத்தை பெரியார் கொண்டுவந்தார். இதற்கு காங்கிரஸ் தலைமை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அவர் காங்கிரஸில் இருந்து வெளியேறினார்.
Question 120
யாருடைய தலைமையில் நீதிக்கட்சி செயல் பட்டபோது அரசின் எல்லாத்துறைகளிலும், பணிநியமனங்கள்முறைப்படுத்தப்பட்டு அரசாணையின் மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நிரந்தரமாக்கப்பட்டது?
A
இரட்டைமலை சீனுவாசன்
B
சிங்கார வேலர்
C
இரா. முத்தையா
D
குமாரசாமி
Question 120 Explanation: 
1928 வாக்கில் இரா. முத்தையா அவர்களின் தலைமையில் நீதிக்கட்சி செயல் பட்டபோ து அ ர சி ன் எல்லாத்துறைகளிலும், பணிநியமனங்கள் முறைப்படுத்தப்பட்டு அரசாணையின் மூலம் வ கு ப் புவாரி பி ர தி நி தி த் து வ ம் நிரந்தரமாக்கப்பட்டது.
Question 121
தமிழகத்தில் வகுப்புவாரி ஆணை பின்பற்றப்படுவதால், மருத்துவக் கல்லூரியில் தனக்கு இடம் கிடைக்கவில்லை எனக்கூறி  உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தவர் யார்?
A
இரட்டைமலை சீனுவாசன்
B
சிங்கார வேலர்
C
செண்பகம் துரைராஜன்
D
குமாரசாமி
Question 121 Explanation: 
முதல் சட்டத்திருத்தம் இந்தியா சுதந்திரம் அடைந்து இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின் அதில் குறிப்பிடப்பட்டிருந்த சட்டப்பிரிவுகளைக் காட்டி, தமிழகத்தில் வகுப்புவாரி ஆணை பின்பற்றப்படுவதால், மருத்துவக் கல்லூரியில் தனக்கு இடம் கிடைக்கவில்லை எனக்கூறி செண்பகம் துரைராஜன் என்பவர் 1951ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தார்.
Question 122
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஆர்.கே. சண்முகம் தொடுத்த வழக்கினை விசாரித்து தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம் தமிழகத்தில் பின்பற்றப்படும் வகுப்புவாரி ஆணையானது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று தீர்ப்பளித்தது.
  • (ii) தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வந்த வகுப்புவாரி (இடஒதுக்கீடு) முறை ரத்து செய்யப்பட்டது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 122 Explanation: 
இவ்வழக்கினை விசாரித்து தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம் தமிழகத்தில் பின்பற்றப்படும் வகுப்புவாரி ஆணையானது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றமும் அத் தீர்ப்பினை உறுதி செய்தது. எனவே தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வந்த வகுப்புவாரி (இடஒதுக்கீடு) முறை ரத்து செய்யப்பட்டது.
Question 123
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) தந்தை பெரியார் உடனடியாக அரசமைப்புச் சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
  • (ii) தமிழகத்தில் தந்தை பெரியார், தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கு. காமராஜ், பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திய அரசமைப்புச் சட்ட சிற்பி டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் ஆகியோர் முயற்சியால் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நீடிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தப்பட்டது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 123 Explanation: 
வகுப்புவாரிமுறை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் எழுந்தன. எனவே, தந்தை பெரியார் உடனடியாக அரசமைப்புச் சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் தந்தை பெரியார், தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கு. காமராஜ், பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திய அரசமைப்புச் சட்ட சிற்பி டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் ஆகியோர் முயற்சியால் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நீடிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் திருத்தம் ஆகும். இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீண்டும் இடஒதுக்கீடு பெறும் வாய்ப்பு ஏற்பட்டது.
Question 124
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) அரசமைப்புச் சட்டம், பிரிவு 15 மற்றும் 16 ஆகிய பிரிவுகள் “சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பின் தங்கியவர்களுக்குச் சில சிறப்புச் சட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கலாம்” என அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
  • (ii) பிரதமர் நேரு முதலாவது சட்டத் திருத்தத்தினை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 124 Explanation: 
அரசமைப்புச் சட்டம், பிரிவு 15 மற்றும் 16 ஆகிய பிரிவுகள் “சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பின் தங்கியவர்களுக்குச் சில சிறப்புச் சட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கலாம்” என அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் பிரதமர் நேரு முதலாவது சட்டத் திருத்தத்தினை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார். அத் திருத்தத்தின்படி அரசமைப்புச் சட்ட பிரிவுகள் 15 (4) & 16(4) என்னும் உட்பிரிவுகள் இணைக்கப்பட்டன.
Question 125
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்குப் பின் தமிழ்நாட்டில் 1951 ஆம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டோருக்கு 25% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
  • (ii) தாழ்த்தப்பட்டோருக்கு 16% என இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தபட்டது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 125 Explanation: 
இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்குப் பின் தமிழ்நாட்டில் 1951 ஆம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டோருக்கு 25%, தாழ்த்தப்பட்டோருக்கு 16% என இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தபட்டது.
Question 126
மு. கருணாநிதி முதலமைச்சராக  இருந்தபோது பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்து ஆராய்ந்திட யாருடைய தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப் பட்டது.
A
ஆர்.கே.சண்முகம்
B
சுப்பிரமணியன்
C
சட்டநாதன்
D
ராஜராஜன்
Question 126 Explanation: 
இட ஒதுக்கீடு விரிவாக்கம் : மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்து ஆராய்ந்திட சட்டநாதன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப் பட்டது. அந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 1971 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கு 31%, தாழ்த்தப்பட்டோருக்கு 18% என இட ஒதுக்கீட்டு வரம்பு மாற்றியமைக்கப்பட்டது.
Question 127
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) 1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில அரசின் சமூக நலத்துறை அரசாணை (G.O. Ms.No. 1156, 02.02.1979) ஒன்றினைப்பிறப்பித்தது .
  • (ii) அவ்வாணையின் படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின், குடும்ப ஆண்டு வருமானம் ` 9000 நிர்ணயிக்கப்பட்டது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 127 Explanation: 
1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில அரசின் சமூக நலத்துறை அரசாணை (G.O. Ms.No. 1156, 02.02.1979) ஒன்றினைப்பிறப்பித்தது . அவ்வாணையின் படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின், குடும்ப ஆண்டு வருமானம் ` 9000 நிர்ணயிக்கப்பட்டது. பின் அந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டு புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டது. அப்புதிய ஆணையின் படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டு வரம்பு 31% லிருந்து 50% ஆக உயர்த்தப்பட்டது. எனவே, அன்றைய காலக ட்ட த் தி ல் த மி ழ கத்தி ல் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 50 % , தாழ்த்தப்பட்டவர்கள்& பழங்குடியினருக்கு 18% என்று மொத்த இடஒதுக்கீடு 68% நடைமுறைக்கு வந்தது.
Question 128
பழங்குடியினருக்குத் தனியிட ஒதுக்கீடு கோரி வழக்கு  தொடரப்பட்ட ஆண்டு எது?
A
1989
B
1987
C
1986
D
1983
Question 128 Explanation: 
1989 ஆம்ஆண்டு பழங்குடியினருக்குத் தனியிட ஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீ ர்ப்பின் அடிப்படையி ல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30%, மிகவும் பிற்படுத்தபட்ட வர்களுக்கு 20 % , தாழ்த்தப்பட்ட வகளுக்கு 18 % , பழங்குடியினருக்கு 1% என இடஒதுக்கீட்டு வரம்புகள் மாற்றியமைக்கப்பட்டு இடஒதுக்கீடு 69% என நடைமுறைக்கு வந்தது.
Question 129
மண்டல்ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த பிரதமர் யார்?
A
வாஜ்பாய்
B
ஜெயில் சிங்
C
வி.பி.சிங்
D
சந்திர சேகர்
Question 129 Explanation: 
மத்திய அரசில் இட ஒதுக்கீடு: மண்டல் ஆணையம் வி.பி. சிங் ஆட்சியின் போது மண்டல்ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். அதன் அடிப்படையில் மத்தியஅ ர சி ன் வேலை வாய் ப் புகளி ல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. அதனை எதிர்த்து, இந்திரா சகானி இடஒதுக்கீட்டு முறையானது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்னும், அரசமைப்புச் சட்ட விதிகளை மீறும் வகையில் அமைந்துள்ளது. எனவே, இடஒதுக்கீட்டு முறையினை ரத்து செய்திட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தார்.
Question 130
வி.பி.சிங் தலைமையிலான அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு எத்தனை  சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது?
A
27%
B
28%
C
31%
D
20%
Question 130 Explanation: 
அவ்வழக்கினை விசாரித்த நீதிமன்றம் வி.பி.சிங் தலைமையிலான அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கிய 27 சதவீதம் இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தது.
Question 131
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) அரசியல் சட்டத்தில் உச்சவரம்பு குறித்து குறிப்பிடாத நிலையில் உச்சநீதிமன்றம் 50 சதவீதம் என்ற உச்சவரம்பினை நிர்ணயித்தது.
  • (ii) உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் ஒரு பகுதியில் உச்சவரம்பிற்கும் விலக்கு உண்டு என்பதை குறிப்பிட்டிருந்தது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 131 Explanation: 
மேலும் இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்திற்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. அரசியல் சட்டத்தில் உச்சவரம்பு குறித்து குறிப்பிடாத நிலையில் உச்சநீதிமன்றம் 50 சதவீதம் என்ற உச்சவரம்பினை நிர்ணயித்தது. எனினும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் ஒரு பகுதியில் உச்சவரம்பிற்கும் விலக்கு உண்டு என்பதை குறிப்பிட்டிருந்தது.
Question 132
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) தேசிய நீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொள்ள வாய்ப்பற்ற மக்களுக்கு அவர்களுக்கே உரிய தனித்தன்மை காரணமாக அவர்களுக்கு வேறுவகையில் விதிகளிலிருந்து விலக்கு என்பது அவசியமாகும்.
  • (ii) 50% இடஒதுக்கீட்டிற்கு விலக்கு உண்டு எனத்தீர்ப்பளித்த நீதிபதிகளே ஏற்றுக்கொண்டுள்ளனர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 132 Explanation: 
"உச்சநீதிமன்றத்தில் மண்டல் ஆணைய உத்தரவு பற்றிய தீர்ப்பில் " 50% என்பது விதியாக இருந்தபோதிலும் கூட பலதரப்பட்ட மக்கள் பல்வேறு வகையில் பரந்துபட்ட இந்நாட்டில் வேரூன்றி உள்ள சில அசாதாரணமான நிலைமைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது நமது வாதமல்ல. நாட்டின் தொலைதூரத்தில் உள்ள பகுதிகளிலோ அல்லது தள்ளியிருக்கும் பரப்புகளிலோ வாழ்வதன் மூலம் தேசிய நீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொள்ள வாய்ப்பற்ற மக்களுக்கு அவர்களுக்கே உரிய தனித்தன்மை காரணமாக அவர்களுக்கு வேறுவகையில் விதிகளிலிருந்து விலக்கு என்பது அவசியமாகும்". 50% இடஒதுக்கீட்டிற்கு விலக்கு உண்டு எனத்தீர்ப்பளித்த நீதிபதிகளே ஏற்றுக்கொண்டுள்ளனர். என்பதை மேற்கண்ட தீர்ப்பின் ஒரு பகுதி உறுதி செய்துள்ளது.
Question 133
தமிழகத்தில் நடைமுறையிலிருந்த 69% இடஒதுக்கீடு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்றும் அதனை ரத்து செய்திட வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் யார்?
A
ஆர்.கே.சண்முகம்
B
சுப்பிரமணியன்
C
செண்பகம் துரை ராஜன்
D
கே.என்.விஜயன்
Question 133 Explanation: 
எனினும் தமிழகத்தில் நடைமுறையிலிருந்த 69% இடஒதுக்கீடு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்றும் அதனை ரத்து செய்திட வேண்டும் என்றும் நுகர்வோர் அமைப்பின் அறக்கட்டளை உறுப்பினரான கே.என்.விஜயன் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மருத்துவம் மற்றும் பொறியில் கலோரிகளில் 50% மேல் இடஒதுக்கீடு அளிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
Question 134
தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட 69% இடஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் தனிச்சட்ட மசோதா எந்த சட்டப்பிரிவினை பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டது?
A
31 (C)
B
13 (C)
C
36 (D)
D
39 (B)
Question 134 Explanation: 
எனினும் 1951 ஆம் ஆண்டு எழுந்ததை போன்ற சட்ட நெருக்கடிகள் எழுந்தால் அரசியல் சட்டத்தில் உள்ள மாநில அரசுகளுக்கான அதிகார உச்சவரம்பு என்னும் வாய்ப்பினை பயன்படுத்தி அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அரசியல் சட்டப்பிரிவு 31 (C) யினை பயன்படுத்தி தனிச்சட்ட மசோதா ஒன்றினை 30.12.1993 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.
Question 135
தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட 69% இடஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் தனிச்சட்ட மசோதா எப்போது குடியரசுத்தலைவ ரின் ஒப்புதல் பெற்றது?
A
19.07.1994
B
18.07.1997
C
19.07.1992
D
19.08.1993
Question 135 Explanation: 
தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட 69% இடஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் தனிச்சட்ட மசோதாவிற்கு 19.07.1994 அன்று அன்றைய குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததால் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு உரிய சட்ட பாதுகாப்பினை பெற்றுவிட்டது.
Question 136
நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பெற்ற எத்தனையாவது அரசியல் சட்ட திருத்தத்தின் மூலம் தமிழக அரசின் இடஒதுக்கீட்டு சட்டம் இந்திய அரசியல் சட்டத்தின் ⅸ ஆவது அட்டவணையில் இணைக்கப்பெற்றது?
A
74
B
76
C
78
D
71
Question 136 Explanation: 
தமிழக அரசின் இச்சட்டத்தினை எதிர்த்து வழக்கு தொடரும் சூழலைத்தவிர்க்க இந்திய அரசமைப்புச்சட்டத்தின் ⅸ ஆவது அட்டவணையில் சேர்க்க தமிழக அரசு பெரும் முயற்சி எடுத்தது.நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பெற்ற 76 வது அரசியல் சட்ட திருத்தத்தின் மூலம் தமிழக அரசின் இடஒதுக்கீட்டு சட்டம் இந்திய அரசியல் சட்டத்தின் ⅸ ஆவது அட்டவணையில் இணைக்கப்பெற்றது.
Question 137
69% இடஒதுக்கீடு சட்டம் எப்போது முதல் முன்தேதியிட்டு நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது?
A
1990 நவம்பர் 18
B
1992 நவம்பர் 16
C
1992 நவம்பர் 17
D
1992 நவம்பர் 11
Question 137 Explanation: 
அத்துடன் 1992 நவம்பர் 16 ஆம் தேதி முதல் இச்சட்டம் முன்தேதியிட்டு நடைமுறைக்கு வந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
Question 138
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) தேசிய நீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொள்ள வாய்ப்பற்ற மக்களுக்கு அவர்களுக்கே உரிய தனித்தன்மை காரணமாக அவர்களுக்கு வேறுவகையில் விதிகளிலிருந்து விலக்கு என்பது அவசியமாகும்.
  • (ii) 50% இடஒதுக்கீட்டிற்கு விலக்கு உண்டு எனத்தீர்ப்பளித்த நீதிபதிகளே ஏற்றுக்கொண்டுள்ளனர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 138 Explanation: 
"உச்சநீதிமன்றத்தில் மண்டல் ஆணைய உத்தரவு பற்றிய தீர்ப்பில் " 50% என்பது விதியாக இருந்தபோதிலும் கூட பலதரப்பட்ட மக்கள் பல்வேறு வகையில் பரந்துபட்ட இந்நாட்டில் வேரூன்றி உள்ள சில அசாதாரணமான நிலைமைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது நமது வாதமல்ல. நாட்டின் தொலைதூரத்தில் உள்ள பகுதிகளிலோ அல்லது தள்ளியிருக்கும் பரப்புகளிலோ வாழ்வதன் மூலம் தேசிய நீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொள்ள வாய்ப்பற்ற மக்களுக்கு அவர்களுக்கே உரிய தனித்தன்மை காரணமாக அவர்களுக்கு வேறுவகையில் விதிகளிலிருந்து விலக்கு என்பது அவசியமாகும்". 50% இடஒதுக்கீட்டிற்கு விலக்கு உண்டு எனத்தீர்ப்பளித்த நீதிபதிகளே ஏற்றுக்கொண்டுள்ளனர். என்பதை மேற்கண்ட தீர்ப்பின் ஒரு பகுதி உறுதி செய்துள்ளது.
Question 139
தமிழகத்தில் நடைமுறையிலிருந்த 69% இடஒதுக்கீடு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்றும் அதனை ரத்து செய்திட வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் யார்?
A
ஆர்.கே.சண்முகம்
B
சுப்பிரமணியன்
C
செண்பகம் துரை ராஜன்
D
கே.என்.விஜயன்
Question 139 Explanation: 
எனினும் தமிழகத்தில் நடைமுறையிலிருந்த 69% இடஒதுக்கீடு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்றும் அதனை ரத்து செய்திட வேண்டும் என்றும் நுகர்வோர் அமைப்பின் அறக்கட்டளை உறுப்பினரான கே.என்.விஜயன் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மருத்துவம் மற்றும் பொறியில் கலோரிகளில் 50% மேல் இடஒதுக்கீடு அளிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
Question 140
தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட 69% இடஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் தனிச்சட்ட மசோதா எந்த சட்டப்பிரிவினை பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டது?
A
31 (C)
B
13 (C)
C
36 (D)
D
36 (1)
Question 140 Explanation: 
எனினும் 1951 ஆம் ஆண்டு எழுந்ததை போன்ற சட்ட நெருக்கடிகள் எழுந்தால் அரசியல் சட்டத்தில் உள்ள மாநில அரசுகளுக்கான அதிகார உச்சவரம்பு என்னும் வாய்ப்பினை பயன்படுத்தி அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அரசியல் சட்டப்பிரிவு 31 (C) யினை பயன்படுத்தி தனிச்சட்ட மசோதா ஒன்றினை 30.12.1993 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.
Question 141
தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட 69% இடஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் தனிச்சட்ட மசோதா எப்போது குடியரசுத்தலைவ ரின் ஒப்புதல் பெற்றது?
A
19.07.1994
B
18.07.1997
C
19.07.1992
D
19.08.1993
Question 141 Explanation: 
தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட 69% இடஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் தனிச்சட்ட மசோதாவிற்கு 19.07.1994 அன்று அன்றைய குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததால் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு உரிய சட்ட பாதுகாப்பினை பெற்றுவிட்டது.
Question 142
நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பெற்ற எத்தனையாவது அரசியல் சட்ட திருத்தத்தின் மூலம் தமிழக அரசின் இடஒதுக்கீட்டு சட்டம் இந்திய அரசியல் சட்டத்தின் ⅸ ஆவது அட்டவணையில் இணைக்கப்பெற்றது?
A
74
B
76
C
78
D
81
Question 142 Explanation: 
தமிழக அரசின் இச்சட்டத்தினை எதிர்த்து வழக்கு தொடரும் சூழலைத்தவிர்க்க இந்திய அரசமைப்புச்சட்டத்தின் ⅸ ஆவது அட்டவணையில் சேர்க்க தமிழக அரசு பெரும் முயற்சி எடுத்தது.நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பெற்ற 76 வது அரசியல் சட்ட திருத்தத்தின் மூலம் தமிழக அரசின் இடஒதுக்கீட்டு சட்டம் இந்திய அரசியல் சட்டத்தின் ⅸ ஆவது அட்டவணையில் இணைக்கப்பெற்றது.
Question 143
69% இடஒதுக்கீடு சட்டம் எப்போது முதல் முன்தேதியிட்டு நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது?
A
1990 நவம்பர் 18
B
1992 நவம்பர் 16
C
1993 நவம்பர் 14
D
1993 நவம்பர் 11
Question 143 Explanation: 
அத்துடன் 1992 நவம்பர் 16 ஆம் தேதி முதல் இச்சட்டம் முன்தேதியிட்டு நடைமுறைக்கு வந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
Question 144
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) இடஒதுக்கீட்டு முறை என்பது அரசு அதிகாரங்களை பெறுவதற்கான தற்காலிக முயற்சியே ஆகும்.
  • (ii) சமத்துவம் பிறப்பதற்கான வழிமுறைகளுள் ஒன்று 'சாதிக்கலப்பு திருமணங்களாகும்'.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 144 Explanation: 
இடஒதுக்கீட்டு முறை என்பது அரசு அதிகாரங்களை பெறுவதற்கான தற்காலிக முயற்சியே ஆகும். சமூக மாற்றம் நிகழ்ந்திடவும், உண்மையான சமூக நன்மதிப்பு உருவாகிடவும், சாதிய அடுக்கு முறைகள் ஒழிந்து சமத்துவம் பிறந்திட வேண்டும். அத்தகைய சமத்துவம் பிறப்பதற்கான வழிமுறைகளுள் ஒன்று 'சாதிக்கலப்பு திருமணங்களாகும்'. சாதிகளுக்குள்ளேயே நடைபெறும் திருமணங்களே சாதிக்கட்டமைப்பை வலிமைப்படுத்தி வருவதுடன் சமத்துவம் உருவாவதற்கான தடைக்கல்லாகவும் இருக்கின்றன. எனவே சாதி மறுப்புத்திருமணங்களும் முற்போக்கான உயர் எண்ணங்களுமே உண்மையான சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் கருவிகளாகும்.
Question 145
அரசுக்குப் பரிந்துரைகளை வழங்கவும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்திடவும் குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் அரசமைப்பு உறுப்பு எது?
A
340
B
324
C
325
D
367
Question 145 Explanation: 
பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 340 இன்படி “சமூக அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள்” எவை என அடையாளம் கண்டிடவும் மற்றும் அவர்களின் நிலை குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரைகளை வழங்கவும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்திடவும் குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கிறது. அதனடிப்படையில் இந்திய அரசு இரண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களை இதுவரை அமைத்துள்ளது.
Question 146
முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எப்போது அமைக்கப்பட்டது?
A
29.01.1953
B
30.01.1957
C
29.05.1955
D
26.06.1954
Question 146 Explanation: 
1. திரு. காகா கலேல்கர் ஆணையம்: காகா கலேல்கர் ஆணையம் என்றழைக்கப்ப டுகிற முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 29.01.1953 அன்று அமைக்கப்பட்டது. இவ்வாணையத்தில் காகா கலேல்கர் உட்பட 11 பேர் இடம் பெற்றிருந்தனர். இக்குழுவின் அறிக்கையினை அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
Question 147
மண்டல் ஆணையத்தினை யாருடைய   தலைமையிலான மத்திய அரசு அமைத்தது?
A
மொரார்ஜிதேசாய்
B
வி.பி.சிங்
C
நேரு
D
இந்திரா காந்தி
Question 147 Explanation: 
மண்டல் ஆணையம் பிரதமர் மொரார்ஜிதேசாய் தலைமையிலான மத்திய அரசு பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் கமிஷன் என்றழைக்கப்படுகிற மண்டல் ஆணையத்தினை 1979 ஆம் ஆண்டு அமைத்தது.
Question 148
மண்டல் ஆணையத்தின் செயலராக  செயல்பட்டவர் யார்?
A
எஸ்.எஸ்.கில்
B
வி.பி.சிங்
C
நேரு
D
இந்திரா காந்தி
Question 148 Explanation: 
மண்டல் ஆணையம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரு க்கா ன இ ரண்டாவது ஆணையமாகும். இவ்வாணையத்தின் செயலராக எஸ்.எஸ்.கில் செயல்பட்டார்.
Question 149
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்து ஆய்வு செய்திட பி.பி. மண்டல் தலைமையிலான குழு எந்த ஆண்டு அமைக்கப்பெற்றது?
A
1976
B
1979
C
1977
D
1970
Question 149 Explanation: 
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்து ஆய்வு செய்திட 1979 ஆம் ஆண்டு பி.பி. மண்டல் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பெற்றது. அக்குழு இந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இவ்வாணையம் 11 காரணங்களை அடிப்படையாகக் கொண்டு சமூக அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் 3743 சாதிகள் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளாக உள்ளன என அடையாளம் கண்டது.
Question 150
“வகுப்பு வாரி பிரதிநிதித் துவத்திற்கு மெட்ராஸ் முன்னோடியாக இருப்பதுடன் அம்மாநிலமே பிற்படுத்தப்பட்ட வகுப் பினர்களுக்கு பிரதிநிதித் துவத்தை வழங்கியுள்ளது” என்று யாருடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது?
A
நேரு
B
காகா காலேல்கர்
C
மண்டல்
D
மேனகா
Question 150 Explanation: 
மண்டல் தன் அறிக்கையின் முகப்புரையில் “வகுப்பு வாரி பிரதிநிதித் துவத்திற்கு மெட்ராஸ் முன்னோடியாக இருப்பதுடன் அம்மாநிலமே பிற்படுத்தப்பட்ட வகுப் பினர்களுக்கு பிரதிநிதித் துவத்தை வழங்கியுள்ளது” என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் தமிழ்நாடு சமூகநீதியின் பிறப்பிடமாகவும் முகவரி ஆகவும் இருப்பதை அறியலாம்.
Question 151
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) மக்கள்தொகையில் 52% உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பார்க்கு மத்தியஅரசுப் பணிகளில் 27% வழங்கிட மண்டல் ஆணையம் பரிந்துரைத்தது.
  • (ii) இவ்வாணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு 13.08.1990 ஆம் ஆண்டு பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான அரசு மத்திய அரசுப் பணிகளில் மட்டும், பிற்படுத்தப்பட்ட வகுப்பாருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 151 Explanation: 
மக்கள்தொகையில் 52% உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பார்க்கு மத்தியஅரசுப் பணிகளில் 27% வழங்கிட மண்டல் ஆணையம் பரிந்துரைத்தது. இவ்வாணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு 13.08.1990 ஆம் ஆண்டு பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு மத்திய அரசுப் பணிகளில் மட்டும், பிற்படுத்தப்பட்ட வகுப்பாருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தது. இவ்வாணை 13.08.90 ஆம் தேதி முதல் அமல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுப் பணிகளில் சமூக அடிப்படையிலும், கல்வி அடிப்படையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்திய அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Question 152
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சமூக நீதியை ஏற்படுத்துவதில் இட ஒதுக்கீடு முக்கியமான கருவியாக உள்ளது.
  • (ii) கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டு முறை சமூக நீதியை நிலை நாட்டுகிறது என்பதை உணரவேண்டும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 152 Explanation: 
சமூக நீதியை மேம்படுத்துதல்: சமூக நீதியை ஏற்படுத்துவதில் இட ஒதுக்கீடு முக்கியமான கருவியாக உள்ளது, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டு முறை சமூக நீதியை நிலை நாட்டுகிறது என்பதை உணரவேண்டும். பிறப்பின் அடிப்படையில் யாவரும் யாருக்கும் உயர்ந்தவர் மற்றும் தாழ்ந்தவரும் இல்லை என்பன சமதர்மதத்துவத்தின் அடிப்படையாகவும் சமூக நீதிக்கு இன்றியமையாத ஒன்றாகவும் கருதப்படுகின்றன. தன் பிறப்பின் அடிப்படையில் பயன்பெறுபவர்கள் அது இந்த நவீன உலகத்திற்கு பொருந்தாது என உணரவேண்டும்.
Question 153
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சமூகத்தில் உள்ள அனைவருடனும் உணர்வுபூர்வமாகவும், சமத்துவத்துடன் இருப்பதே நவீன மனிதனாக இருப்பதற்கு அவசியமாகும்.
  • (ii) நவீன இந்தியா எனும் கருத்தாக்கம் சமூக நீதியை இயற்கையாகவே உள்ளடக்கியதாக இருக்கிறது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 153 Explanation: 
சமூகத்தில் உள்ள அனைவருடனும் உணர்வுபூர்வமாகவும், சமத்துவத்துடன் இருப்பதே நவீன மனிதனாக இருப்பதற்கு அவசியமாகும். சமீப காலத்தில் சொத்துக்கள் மற்றும் ஆடம்பர பொருள்களைக்கொண்டும் ஒருவரை மதிப்பிடும் போக்கு அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கக்கூடிய ஒன்றாகும். சமீப கால நோக்கங்கள் நம்மை நவீனமாக்குகின்றன. நவீன இந்தியாவை உருவாக்க அனைத்து துறைகளிலும் முழுமையான மாற்றம் தேவை. ஆகையால் தான் நவீன இந்தியா எனும் கருத்தாக்கம் சமூக நீதியை இயற்கையாகவே உள்ளடக்கியதாக இருக்கிறது.
Question 154
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) 1976 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் பின்தங்கிய வகுப்பிற்கான இரண்டாவது ஆணையம் பி.பி.மண்டல் தலைமையில் உருவாக்கப்பட்டது.
  • (ii) அரசு பதவிகளில் 31 சதவிகிதம் சமூக மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 154 Explanation: 
1979 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் பின்தங்கிய வகுப்பிற்கான இரண்டாவது ஆணையம் பி.பி.மண்டல் தலைமையில் உருவாக்கப்பட்டது. பின்தங்கிய மக்களின் சமூக, கல்வியினை மேம்படுத்த வழிமுறைகள், திட்டங்கள் பற்றிய பரிந்துரைகள் கேட்கப்பட்டன. இந்த ஆணையம் அரசு பதவிகளில் 27 சதவிகிதம் சமூக மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.
Question 155
மண்டல் ஆணையம் அதன் அறிக்கையை யாரிடம் சமர்ப்பித்தது?
A
மொரார்ஜிதேசாய்
B
வி.பி.சிங்
C
ஜெயில் சிங்
D
சந்திரசேகர்
Question 155 Explanation: 
1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மண்டல் ஆணையம் அதன் அறிக்கையை உள்துறை அமைச்சராக இருந்த ஜெயில் சிங்கிடம் சமர்ப்பித்தனர் அப்போது பி.பி.மண்டல் "இந்த அறிக்கையை தயார் செய்வதில் அதிகமான உழைப்பை கொடுத்துள்ளோம். மிக சரியாக கூறினால் நாம் உன்னதமான சடங்கை செய்துள்ளோம்" என்று கூறினார்.
Question 156
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) பத்தாண்டுகளுக்கு மண்டல் ஆணைய அறிக்கை உள்துறை அலுவலகத்திலேயே இருந்தது.
  • (ii) தேசிய முன்னணி அரசில் பிரதமராக இருந்த வி.பி.சிங் (1938 - 2001) 1990 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தினார்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 156 Explanation: 
அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த மண்டல் ஆணைய அறிக்கை உள்துறை அலுவலகத்திலேயே இருந்தது. அதை தேசிய முன்னணி அரசில் பிரதமராக இருந்த வி.பி.சிங் (1938 - 2001) 1990 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தினார். அந்த நேரத்தில் மண்டல் ஆணைய பரிந்துரைகள் பெரும் விவாதங்களை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. தேசிய அரசியலில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டன. சந்தர்ப்பவாத அரசியலை செய்வதாக வி.பி.சிங் குற்றம் சாட்டப்பட்டார். எந்த ஒரு பெரிய தேசிய கட்சியும் மண்டல் ஆணைய பரிந்துரைகளுக்கு ஆதரவாக இல்லை.
Question 157
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சில அமைப்புகள் மற்றும் பிரிவினர் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
  • (ii) இருதரப்பு வாதங்களையும் பதினோரு நீதிபதிகளை கொண்ட அமர்வு கேட்ட பின்பு உச்சநீதிமன்றம் இந்த மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் செல்லும் என தீர்ப்பளித்தது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 157 Explanation: 
சில அமைப்புகள் மற்றும் பிரிவினர் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இருதரப்பு வாதங்களையும் பதினோரு நீதிபதிகளை கொண்ட அமர்வு கேட்ட பின்பு உச்சநீதிமன்றம் இந்த மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் செல்லும் என தீர்ப்பளித்தது. அந்த அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகள் இந்த 1992 ஆம் ஆண்டு தீர்ப்பை வழங்கினர். ஆனால் அதே சமயத்தில் பரிந்துரைகளில் சில மாற்றங்களை செய்ய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
Question 158
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • (ii) இதன்பின் மண்டல் அறிக்கை பற்றிய சர்ச்சை முடிவிற்கு வந்து, திட்டம் தொடர ஆரம்பித்தது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 158 Explanation: 
1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்பின் அறிக்கை பற்றிய சர்ச்சை முடிவிற்கு வந்து, திட்டம் தொடர ஆரம்பித்தது.
Question 159
இந்திரா சகானி V. இந்திய யூனியன் வழக்கு எதனோடு தொடர்புடையது?
A
நேரு அறிக்கை
B
காகா காலேல்கர் அறிக்கை
C
மண்டல் குழு அறிக்கை
D
மேனகா காந்தி அறிக்கை
Question 159 Explanation: 
இந்திரா சகானி V. இந்திய யூனியன் AIR 1993 SC 477 * இது மண்டல குழு வழக்கு எனவும் அழைக்கப்படும். * பிரதம மந்திரி மொரார்ஜிதேசாய் தலைமையில் 1979-ஆம் ஆண்டு ஜனவரியில் பி.பி. மண்டல் தலைமையில், சட்டபிரிவு 340-ன் படி பின்தங்கிய வகுப்பினருக்கான இரண்டாவது ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.
Question 160
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) மண்டல்  ஆணைய அறிக்கை சமர்பித்த பிறகு எந்த ஒரு நடவடிக்கையும் மற்றும் செயல்பாடும் இல்லை.
  • (ii) பாராளுமன்றத்தில் இருமுறை 1982 மற்றும் 1983-ஆம் ஆண்டுகளில் மண்டல் ஆணையம் அறிக்கை மீது விவாதம் மட்டுமே நடைபெற்றது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 160 Explanation: 
பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர்(SC/ST) மக்களை தவிர்த்து, இதர பிற்பட்ட வகுப்பினர் மொத்த மக்கள் தொகையில் 52% இடம் பெற்றுள்ளனர், அரசு பதவியில் 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்தால்தான் அது பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர்(SC/ST) இதர பிற்பட்ட வகுப்பினருக்கான (OBC) மொத்த 50 சதவிகித இட ஒதுக்கீடு ஆகும் என இந்த ஆணையம் பரிந்துரை செய்தது. * மண்டல் ஆணைய அறிக்கை சமர்பித்த பிறகு எந்த ஒரு நடவடிக்கையும் மற்றும் செயல்பாடும் இல்லை, பாராளுமன்றத்தில் இருமுறை 1982 மற்றும் 1983-ஆம் ஆண்டுகளில் மண்டல் ஆணையம் அறிக்கை மீது விவாதம் மட்டுமே நடைபெற்றது
Question 161
வி.பி. சிங் அரசாங்கம்  மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை எந்த ஆண்டு ஏற்றுக்கொண்டது?
A
1990, ஆகஸ்ட் 13
B
1993, ஆகஸ்ட் 16
C
1993, ஆகஸ்ட் 18
D
1996, ஆகஸ்ட் 15
Question 161 Explanation: 
1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி வி.பி. சிங் அரசாங்கம் ஒரு ஆணையின் மூலம் மண்டல் ஆணையம் அறிக்கையின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு 27 சதவிகித இட ஒதுக்கீடு சமூகத்தில் பிற்பட்ட வகுப்பினருக்கு இந்திய அரசுப் பணிகளில் வழங்கியது.
Question 162
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சாதி, இன, மதம், மொழி என்ற பேதங்களில்லாமல் அனைத்து மனிதர்களையும் சகோதர சகோதரிகளாக பாவிக்கும் மனப்பாங்கு சகோதரத்துவம் எனப்படும்.
  • (ii) வளங்களை தேவைக்கதிகமாக பயன்படுத்துவதும், குறைந்த ஊதியத்திற்கு அதிக உழைப்பை பணியாளர்களிடம் பெறுவதும் சுரண்டல்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 162 Explanation: 
சகோதரத்துவம்: சாதி, இன, மதம், மொழி என்ற பேதங்களில்லாமல் அனைத்து மனிதர்களையும் சகோதர சகோதரிகளாக பாவிக்கும் மனப்பாங்கு. சுரண்டல்: வளங்களை தேவைக்கதிகமாக பயன்படுத்துவதும், குறைந்த ஊதியத்திற்கு அதிக உழைப்பை பணியாளர்களிடம் பெறுவதும்.
Question 163
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) வர்க்க, இன, பொருளாதார, மொழி, மத பேதங்களில்லாமல் அனைவரையும் சமமாக நடத்தும் சமுதாயம் சமத்துவ சமுதாயம்.
  • (ii) ஒரு சில குறிப்பிட்ட நபர்களுக்கு, அவர்களின் பதவியின் காரணமாவோ, சிறப்பு திறமைகளின் காரணமாகவோ, சாதியின் காரணமாகவோ வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் தனிச்சலுகைகள் ஆகும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 163 Explanation: 
சமத்துவ சமுதாயம்: வர்க்க, இன, பொருளாதார, மொழி, மத பேதங்களில்லாமல் அனைவரையும் சமமாக நடத்தும் சமுதாயம். தனிச்சலுகைகள்: ஒரு சில குறிப்பிட்ட நபர்களுக்கு, அவர்களின் பதவியின் காரணமாவோ, சிறப்பு திறமைகளின் காரணமாகவோ, சாதியின் காரணமாகவோ வழங்கப்படும் சிறப்பு சலுகைகள்.
Question 164
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சமுதாயத்தின் ஒரு பிரிவில் உறுப்பினராக இருப்பதன் மூலம், ஒரு நபருக்கு கிடைக்கும் அடையாளம் சமூக அடையாளம்.
  • (ii) ஒருவரையோ அல்லது ஒரு குழுவினரையோ, அவர்களது நிறத்தின் அடிப்படையில் பாகுபாடாக நடத்துவது நிறவெறி.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 164 Explanation: 
சமூக அடையாளம்: சமுதாயத்தின் ஒரு பிரிவில் உறுப்பினராக இருப்பதன் மூலம், ஒரு நபருக்கு கிடைக்கும் அடையாளம். நிறவெறி: ஒருவரையோ அல்லது ஒரு குழுவினரையோ, அவர்களது நிறத்தின் அடிப்படையில் பாகுபாடாக நடத்துவது.
Question 165
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை வகைப்படுத்திய பழங்கால நடைமுறை வர்ண அமைப்பு
  • (ii) நாட்டின் அல்லது ஒரு பகுதியில் உள்ள மொத்த மக்கள் தொகையில் மத, இன, சாதி அடிப்படையில் குறைவான எண்ணிக்கையில் உள்ளோர் சிறுபான்மையினர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 165 Explanation: 
வர்ண அமைப்பு: பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை வகைப்படுத்திய பழங்கால நடைமுறை சிறுபான்மையினர்: நாட்டின் அல்லது ஒரு பகுதியில் உள்ள மொத்த மக்கள் தொகையில் மத, இன, சாதி அடிப்படையில் குறைவான எண்ணிக்கையில் உள்ளோர்.
Question 166
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு வாய்ப்பளிக்கும் வகையில், அரசமைப்பால் ஏற்படுத்தப்பட்ட ஒரு முறை இடஒதுக்கீடு.
  • (ii) பல்வேறு மொழி, மத, இன மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் ஒன்றாக வாழும் சமூகம் பன்மை சமூகம்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 166 Explanation: 
இடஒதுக்கீடு: அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு வாய்ப்பளிக்கும் வகையில், அரசமைப்பால் ஏற்படுத்தப்பட்ட ஒரு முறை. பன்மை சமூகம்: பல்வேறு மொழி, மத, இன மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் ஒன்றாக வாழும் சமூகம்.
Question 167
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஒரு சமூகத்தில் வாழும் பெரும்பான்மை மக்களின் மன மற்றும் நடவடிக்கைளில் ஏற்படும் மாற்றம் சமூக மாற்றம்.
  • (ii) ஒரு சமூகத்தில் கண்ணியத்துடன் வாழ்வதற்காக அரசமைப்பினால் உத்திரவாதமளிக்கப்பட்ட உரிமைகள் குடிமை உரிமைகள்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 167 Explanation: 
சமூக மாற்றம்: ஒரு சமூகத்தில் வாழும் பெரும்பான்மை மக்களின் மன மற்றும் நடவடிக்கைளில் ஏற்படும் மாற்றம். குடிமை உரிமைகள்: ஒரு சமூகத்தில் கண்ணியத்துடன் வாழ்வதற்காக அரசமைப்பினால் உத்திரவாதமளிக்கப்பட்ட உரிமைகள்.
Question 168
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைத்து மக்களும் சமமான பொருளாதார நிலையில் இருத்தல் பொருளாதார சமத்துவம்.
  • (ii) வர்ணாசிரம முறையில் குறிப்பிடப்படாத வர்க்கத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பஞ்சமர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 168 Explanation: 
பொருளாதார சமத்துவம்: ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைத்து மக்களும் சமமான பொருளாதார நிலையில் இருத்தல். நிலப்பிரபுத்துவம்: அதிக அளவு, நிலங்களை உடைமையாக கொண்டவர்கள். பஞ்சமர்: வர்ணாசிரம முறையில் குறிப்பிடப்படாத வர்க்கத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 168 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!