Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

சர்வதேச அமைப்புகள் 12th Political Science Lesson 11 Questions in Tamil

12th Political Science Lesson 11 Questions in Tamil

11] சர்வதேச அமைப்புகள்

1) சர்வதேச சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?

A) 1917 ஆம் ஆண்டு

B) 1918 ஆம் ஆண்டு

C) 1919 ஆம் ஆண்டு

D) 1920 ஆம் ஆண்டு

(குறிப்பு – சர்வதேச அமைப்புகளை பற்றி சிந்திக்கும் போதெல்லாம் அவை இருபதாம் நூற்றாண்டை சார்ந்த வரலாற்று நிகழ்வுகளாகவும், குறிப்பாக சர்வதேச சங்கம் 1919 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பிறகு தோன்றியவையாகும் கருதுகிறோம். உண்மையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அமைப்பாக உலக நாடுகளால் சர்வதேச அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன)

2) சர்வதேச தந்தி கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?

A) 1860 ஆம் ஆண்டு

B) 1865 ஆம் ஆண்டு

C) 1870 ஆம் ஆண்டு

D) 1875 ஆம் ஆண்டு

(குறிப்பு – 1865 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது சர்வதேச தந்தி கழகம் என அழைக்கப்படும் சர்வதேச தொலைத்தொடர்பு கழகம்(ITU). இது தற்போது ஐநாவின் அங்கமாக உள்ளது.)

3) சர்வதேச அஞ்சல் கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?

A) 1870 ஆம் ஆண்டு

B) 1872 ஆம் ஆண்டு

C) 1874 ஆம் ஆண்டு

D) 1876 ஆம் ஆண்டு

(குறிப்பு – சர்வதேச சங்கம் 1919 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. எனினும் ஏற்கனவே சர்வதேச அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அவை 1865 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச தந்தி கழகம் என அழைக்கப்படும் சர்வதேச தொலைத்தொடர்பு கழகம் மற்றும் 1874ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சர்வதேச அஞ்சல் கழகம் போன்றவைகள் ஆகும். இவை இரண்டும் தற்போது ஐநாவின் அங்கங்களாக உள்ளன)

4) 1899 ஆம் ஆண்டு சர்வதேச அமைதிக்கான மாநாடு கீழ்க்காணும் எந்த நகரில் நடைபெற்றது?

A) லண்டன்

B) தி ஹேக்

C) நியூயார்க்

D) ரோம்

(குறிப்பு – 1899ம் ஆண்டு தி ஹேக் நகரில் நடைபெற்ற சர்வதேச அமைதிக்கான மாநாடானது, அமைதியான வழியில் போரினை தடுப்பதற்கான முறைகளையும் மற்றும் போர் குறித்த சட்டங்களையும் வரையறை செய்தன.சர்வதேச பிரச்சினைகளை அமைதியான வழியில் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது)

5) 1899 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச அமைதிக்கான மாநாட்டின் விளைவாக ஒரு நிரந்தர தீர்ப்பாயம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

A) 1900 ஆம் ஆண்டு

B) 1902 ஆம் ஆண்டு

C) 1904 ஆம் ஆண்டு

D) 1906 ஆம் ஆண்டு

(குறிப்பு – சர்வதேச பிரச்சினைகளை அமைதியான வழியில் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய சர்வதேச அமைதிக்கான மாநாடு, நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளில் சமரசம் செய்வதற்கு ஒரு நிரந்தர தீர்ப்பாயத்தை 1902 ஆம் ஆண்டு ஏற்படுத்தியது. இந்த அமைப்பே சர்வதேச நீதிமன்றம் தோன்றுவதற்கு காரணமாக இருந்தது.)

6) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – முதலாம் உலகப்போர் 1914 முதல் 1919 ஆம் ஆண்டு வரை நடந்தது.

கூற்று 2 – முதலாம் உலகப் போரில் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் மாண்டனர்.

கூற்று 3 – ஓட்டாமன், ஆஸ்ட்டிரோ, ஹங்கேரியன், போன்ற பேரரசுகள் வீழ்ச்சி அடைந்தன.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – முதல் உலகப்போர் நடைபெற்ற 1914-ம் ஆண்டு முதல் 1919 ஆம் ஆண்டு வரை உலகம் மாபெரும் மனிதப் பேரழிவை கண்டது. இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் மாண்டனர். பேரரசுகளான ஓட்டாமன், ஆஸ்திரோ, ஹங்கேரியன் போன்றவைகளின் வீழ்ச்சியும், புதிய தேசங்களாக செக்கோஸ்லோவியா எஸ்தோனியா மற்றும் பின்லாந்து தோன்றின. முற்போக்கு புரட்சியாளர்கள் ரஷ்யாவை வெற்றி கொண்டது மற்றும் ஜெர்மனியின் வீழ்ச்சி என உலகம் ஒரு புதிய ஒழுங்கமைவுடன் இருந்தது.)

7) சர்வதேச சங்கத்திற்கான தனது கருத்தினை வெளிப்படுத்திய அமெரிக்க அதிபர் யார்?

A) உட்ரோவில்சன்

B) கென்னடி

C) வாரன் ஹார்டிங்

D) காரன் ஹார்டிங்

(குறிப்பு – முதல் உலகப்போரின் இறுதியில் அமெரிக்க அதிபர் உட்ரோவில்சன் சர்வதேச சங்கத்திற்கான தனது கருத்தை வெளிப்படுத்தினார். இதற்கு பெரும் அளவிலான ஆதரவு கிடைத்தது. மேலும் முதலாம் உலகப் போர் ஏற்படுத்திய பெரும் அழிவுக்கு இக்கருத்து வலுசேர்த்தது. இராணுவ மோதல்கள் நடைபெறு வதற்கு முன்பாகவே பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு சர்வதேச அமைப்புகள் தேவை என முடிவுக்கு வந்தனர்.)

8) அமெரிக்க முன்னாள் அதிபர் உட்ரோ வில்சன் எந்த ஆண்டு சர்வதேச சங்கத்திற்கான தனது கருத்தை வெளிப்படுத்தினார்?

A) 1917 இல்

B) 1918 இல்

C) 1919 இல்

D) 1920 இல்

(குறிப்பு – (குறிப்பு – முதல் உலகப்போரின் இறுதியில் அமெரிக்க அதிபர் உட்ரோவில்சன் சர்வதேச சங்கத்திற்கான தனது கருத்தை 1918ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் வெளிப்படுத்தினார்.இதற்கு பெரும் அளவிலான ஆதரவு கிடைத்தது. மேலும் முதலாம் உலகப் போர் ஏற்படுத்திய பெரும் அழிவுக்கு இக்கருத்து வலுசேர்த்தது. இராணுவ மோதல்கள் நடைபெறு வதற்கு முன்பாகவே பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு சர்வதேச அமைப்புகள் தேவை என முடிவுக்கு வந்தனர்.

9) வெர்செல்ஸ் அமைதி மாநாட்டிற்கு தலைமை ஏற்ற அமெரிக்க அதிபர் யார்?

A) உட்ரோவில்சன்

B) கென்னடி

C) வாரன் ஹார்டிங்

D) காரன் ஹார்டிங்

(குறிப்பு – முதல் உலகப்போரின் இறுதியில் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் 1918 ஆம் ஆண்டு சர்வதேச சங்கத்திற்கான தனது கருத்தினை வெளிப்படுத்தினார்.அமெரிக்காவானது சர்வதேச அமைப்பில் இணையவில்லை. ஆனபோதும் குடியரசு தலைவர் உட்ரோ வில்சன் வெர்சேல்ஸ் அமைதி மாநாட்டிற்கு தலைமை நடத்தி சர்வதேச அமைப்பு உருவாக செய்தார். வில்சன் அமெரிக்க காங்கிரசின் இரு அவையும் இணைந்த கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார்)

10) முதலில் சர்வதேச அமைதிக்கான சங்கம் எந்த இடத்தில் செயல்பட்டது?

A) அமெரிக்கா

B) பிரான்ஸ்

C) லண்டன்

D) ஜெர்மனி

(குறிப்பு – அமெரிக்க அதிபர் வில்சன் அமெரிக்க காங்கிரசின் இரு அவையும் இணைந்த கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு அறிவித்தார் “இது அமைதிக்கான நிச்சயமான ஒரு உத்தரவாதம் ஆகும். ஆக்கிரமிப்புக்கு எதிரான வார்த்தைகளை கொண்டது, நாகரீக உலகை கிட்டத்தட்ட அழிவின் விளிம்பிற்கே கொண்டு சென்ற ஒன்றுக்கு எதிரானது இது. இதன் நோக்கங்கள் அனைவருக்கும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது” இந்த சங்கமானது தற்காலிகமாக லண்டனில் இருந்து செயல்பட்டது)

11) 1920 ஆம் ஆண்டு முதல் சர்வதேச சங்கமானது எந்த இடத்தில் செயல்பட ஆரம்பித்தது?

A) ஜெனிவா

B) பாரிஸ்

C) லண்டன்

D) நியூயார்க்

(குறிப்பு – சர்வதேச சமூகமானது தற்காலிகமாக லண்டனில் இருந்து செயல்பட்டது. பின்பு 1920 ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இருந்து இயங்கி வந்தது. ஆரம்பத்தில் சில பிரச்சினைகளை தீர்வு காண்பதில் வெற்றி பெற்றது. குறிப்பாக பின்லாந்து மற்றும் சுவீடன் இடையிலான ஆலன்ட் தீவு பிரச்சனை, ஜெர்மனி மற்றும் போலந்து இடையிலான மேல் சைலேசியா பிரச்சனை போன்றவைகளுக்கு தீர்வு கண்டது)

12) சர்வதேச சங்கத்தால் தீர்த்து வைக்கப்பட்ட மொசூல் நகர பிரச்சனை கீழ்க்காணும் எந்த இரு நாடுகளுக்கு இடையே ஆனதாகும்?

A) பின்லாந்து மற்றும் சுவீடன்

B) ஈராக் மற்றும் துருக்கி

C) ஜெர்மனி மற்றும் போலந்து

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – சர்வதேச சங்கம் ஆரம்பத்தில் சில பிரச்சனைகளை தீர்வு காண்பதில் வெற்றிபெற்றது. குறிப்பாக பின்லாந்து மற்றும் ஸ்வீடன் இடையிலான ஆலண்ட் தீவு பிரச்சனை, ஜெர்மனி மற்றும் போலந்து இடையிலான மேல் சைலேசியா பிரச்சனை, ஈராக் மற்றும் துருக்கி நாடுகளுக்கு இடையேயான மொசூல் நகர பிரச்னை போன்றவைகளுக்கு தீர்வு கண்டது. மேலும் சில வெற்றிகளை குறிப்பாக ரஷ்யாவின் அகதிகள் பிரச்சினையை தீர்த்து வைப்பதிலும் மற்றும் சர்வதேச அபினி வர்த்தகத்தை ஒழிப்பதிலும் வெற்றிகண்டது)

13) சர்வதேச சங்கமானது கீழ்க்காணும் எந்த நாடுகளின் மேலாதிக்கத்தின் கீழ் இருந்தது?

I. பிரான்ஸ்

II. ஜப்பான்

III. இங்கிலாந்து

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – சர்வதேச சங்கமானது முதல் உலகப் போரில் வெற்றி பெற்ற நாடுகளின் மேலாதிக்கத்தின் கீழ் இருந்தது. இதில் குறிப்பாக பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் இத்தாலி நாடுகளின் மேலாதிக்கத்தின் சங்கம் இருந்தது. சர்வதேச சங்கத்தின் தலைமையின் கீழ் சர்வதேச அமைப்புகளான, தொழிலாளர்களுக்கான சர்வதேச கழகம் மற்றும் சர்வதேச நீதிக்கான நிரந்தர நீதிமன்றம் போன்றவை செயல்பட்டன)

14) துவக்கத்தில் சர்வதேச சங்கத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?

A) 26 உறுப்பினர்கள்

B) 28 உறுப்பினர்கள்

C) 30 உறுப்பினர்கள்

D) 32 உறுப்பினர்கள்

(குறிப்பு – சர்வதேச சங்கமானது முதல் உலகப் போரில் வெற்றி பெற்ற நாடுகளின் மேலாதிக்கத்தின் கீழ் இருந்தது. இதில் குறிப்பாக பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் இத்தாலி நாடுகளின் மேலாதிக்கத்தின் சங்கம் இருந்தது. துவக்கத்தில் 28 உறுப்பினர்களை பிரதிநிதியாக கொண்ட பொதுச் சபையானது பெரும்பாலும் ஐரோப்பிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளை கொண்டவையாக காணப்பட்டன)

15) சர்வதேச அமைதிக்கான சங்கம் தோல்வி அடைந்ததற்கான காரணங்களுள் சரியானது கீழ்க்கண்டவற்றுள் எது?

I. அமெரிக்கா இதில் பங்கேற்கவில்லை. எனவே இது வலிமை குறைந்து காணப்பட்டது.

II. ஜெர்மனி மற்றும் சோவியத் யூனியன் நாடுகள் இந்த அமைப்பின் எந்த முக்கிய பொறுப்பை ஏற்காமல் வெறுமனே உறுப்பினராக மட்டுமே இருந்தன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – துவக்கத்தில் 28 உறுப்பினர்களை பிரதிநிதியாக கொண்ட பொதுச் சபையானது பெரும்பாலும் ஐரோப்பிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளை கொண்டவையாக காணப்பட்டன. இதன் காரணமாக சர்வதேச சமூகமானது ஐரோப்பிய நாடுகளை மையப்படுத்தியே செயல்பட்டது. அப்போது ஆப்பிரிக்க, ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் ஐரோப்பிய ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் கீழ் இருந்தன)

16) சர்வதேச அமைதிக்கான சங்கத்தில் ஜெர்மனி எந்த ஆண்டு இணைந்தது?

A) 1924ஆம் ஆண்டு

B) 1926ஆம் ஆண்டு

C) 1928ஆம் ஆண்டு

D) 1930ஆம் ஆண்டு

(குறிப்பு – முதலில் ஜெர்மனி மற்றும் சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் இந்த அமைப்பின் எந்த முக்கிய பொறுப்பை ஏற்காமல் வெறுமனே உறுப்பினராக மட்டுமே இருந்தன.1926 ஆம் ஆண்டு ஜெர்மனியானது இச்சங்கத்தில் இணைந்தது.பின்பு நாஜிக்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து, 1933 ஆம் ஆண்டு இந்த அமைப்பில் இருந்து வெளியேறியது.)

17) சர்வதேச அமைதிக்கான அமைப்பில் சோவியத் யூனியன் எந்த ஆண்டு இணைந்தது?

A) 1931ஆம் ஆண்டு

B) 1933ஆம் ஆண்டு

C) 1935ஆம் ஆண்டு

D) 1937ஆம் ஆண்டு

(குறிப்பு – 1933 ஆம் ஆண்டு சோவியத் யூனியனானது இச்சங்கத்தில் இணைந்தது. இருந்தபோதும் 1939 ஆம் ஆண்டு பின்லாந்து மீது தாக்குதல் தொடுத்ததைடுத்து சோவியத் யூனியன் சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது)

18) அமைதிக்கான சர்வதேச சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரே நாடு கீழ்க்கண்டவற்றுள் எது?

A) இங்கிலாந்து

B) இத்தாலி

C) சோவியத் யூனியன்

D) ஜெர்மனி

(குறிப்பு – துவக்கத்தில் இந்த சங்கத்தின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் சோவியத் யூனியன் அமைப்பின் எந்த முக்கிய பொறுப்பை ஏற்காமல் வெறுமனே உறுப்பினராக மட்டுமே இருந்தது.1933 ஆம் ஆண்டு சோவியத் யூனியனானது இச்சங்கத்தில் இணைந்தது. இருந்தபோதும் 1939 ஆம் ஆண்டு பின்லாந்து மீது தாக்குதல் தொடுத்ததையடுத்து சோவியத் யூனியன் சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரே நாடு சோவியத் யூனியன் ஆகும்.

19) கீழ்க்காணும் எந்த நாட்டை ஆக்கிரமித்ததையடுத்து ஜப்பான் சர்வதேச அமைதிக்கான அமைப்பிலிருந்து வெளியேறியது?

A) மன்சூரியா

B) தைவான்

C) மனிலா

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – துவக்கத்தில் சர்வதேச அமைதிக்கான சங்கத்தில் உறுப்பினராக இருந்த ஜப்பான் 1933ஆம் ஆண்டு மன்சூரியாவை ஆக்கிரமித்ததை சங்கம் விமர்சித்தது. இதனையடுத்து ஜப்பானும் இந்த அமைப்பில் இருந்து வெளியேறியது. மேலும் இதே காரணத்திற்காக எத்தியோப்பியாவின் மீது தாக்குதல் நடத்தி அதனை ஆக்கிரமித்துக் கொண்ட இத்தாலியின் உறுப்பினர் ஆவதற்கான விருப்பமானது, சங்கத்தால் நிராகரிக்கப்பட்டது.)

20) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – சர்வதேச அமைதிக்கான சங்கத்தினால், பிற நாடுகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

கூற்று 2 – 1930 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. இது சர்வதேச அமைதிக்கான அமைப்பையும் தோல்விக்கு வழி வகுத்தது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – ஜப்பான், மன்சூரியாவை ஆக்கிரமித்ததையடுத்து அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டது. இத்தாலி எத்தியோப்பியாவின் மீது தாக்குதல் நடத்தியதால் உறுப்பினர் ஆகும் தகுதியை இழந்தது. இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை சங்கத்தினால் கட்டுப்படுத்த முடியவில்லை மேலும் 1930 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார மந்தநிலை இப்பிரச்சினைகளை மேலும் தீவிரமாகியது. இவை சர்வதேச அமைதிக்கான அமைப்பின் தோல்விக்கு வழி வகுத்தது)

21) மூனிச் மாநாடு கீழ்காணும் எந்த ஆண்டில் நடைபெற்றது?

A) 1932 இல்

B) 1934 இல்

C) 1936 இல்

D) 1938 இல்

(குறிப்பு – 1938 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் ஹிட்லரின் அரசு செக்கோஸ்லோவியாவை ஆக்கிரமித்ததையும், சூடட்டன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டதை பிரிட்டனும், பிரான்சும் ஏற்றுக்கொண்டன. பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் இந்த ஆக்கிரமிப்புப் போர்களை கண்டிக்கவில்லை ஏனெனில் இவை அந்நாடுகளின் தேசிய பாதுகாப்பினை உடனடியாக பாதிக்கவில்லை)

22) சோவியத் யூனியன் கீழ்காணும் எந்த ஆண்டு ஜெர்மனி, போலந்து மீது தாக்குதல் நடத்தியது?

A) 1938 ஆம் ஆண்டு

B) 1939 ஆம் ஆண்டு

C) 1940 ஆம் ஆண்டு

D) 1941 ஆம் ஆண்டு

(குறிப்பு – 1939ஆம் ஆண்டு சோவியத் யூனியன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு ஜெர்மனி மற்றும் போலந்து மீது தாக்குதல் நடத்தியது. சர்வதேச சங்கத்திற்கான எல்லா வாய்ப்புகளையும் தகர்த்தெறிந்தது.சர்வதேச சங்கமானது ஆக்கிரமிப்பு நாடுகளின் மீது தனது அதிகாரத்தை செலுத்த முடியவில்லை. மேலும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக ராணுவ குறுக்கீடு செய்யமுடியாமல் வெறும் பெயரளவிலான பொருளாதாரத் தடையை மட்டுமே அந்த நாடுகளின் மீது விதிக்க முடிந்தது.)

23) சர்வதேச சங்கத்தின் தோல்விக்கான முக்கிய காரணமாக கருத்தபடுவது எது?

A) ஜப்பான் வெளியேற்றம்

B) சோவியத் யூனியன் வெளியேற்றம்

C) ஜெர்மனி வெளியேற்றம்

D) இது அனைத்தும்

(குறிப்பு – சர்வதேச சங்கத்திற்க்கென்று படைகள் என்று எதுவும் இல்லை. இராணுவ நடவடிக்கைகளின் போது உறுப்பு நாடுகள் குறிப்பாக பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தங்களது படைகளை அனுப்ப வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் சர்வதேச சங்கத்திலிருந்து 1939 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் வெளியேற்றப்பட்டது. இதுவே சர்வதேச சங்கத்தின் தோல்விக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது)

24) இரண்டாம் உலகப் போரின்போது பலியானவர்கள் எண்ணிக்கை எத்தனை?

A) 5 கோடி பேர்

B) 7 கோடி பேர்

C) 10 கோடி பேர்

D) 12 கோடி பேர்

(குறிப்பு – சர்வதேச சங்கமானது தனது நோக்கத்தில் வெற்றி பெறாததையடுத்து உலக அமைதியைப் பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் பணியானது ஒரு கனவாக நிறைவேறாமலே இருந்தது. இரண்டாம் உலகப்போர் 7 கோடி பேருக்கு மேற்பட்டவர்களை பலிகொண்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையை தோற்றுவிப்பதற்கான கருத்தானது உலக தலைவர்களை ஒருங்கிணைத்து போரை முடிவுக்கு கொண்டு வந்ததுடன், அமைதியை பாதுகாத்து எதிர்காலத்தில் போர் ஏற்படாமல் இருப்பதற்கான வலுவானதொரு கட்டமைப்பை ஏற்படுத்தவும் செய்தது.)

25) ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கிய அமெரிக்க அதிபர் யார்?

A) ஜான் எப்.கென்னடி

B) ஐசனோவர்

C) பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்

D) உட்ரோவில்சன்

(குறிப்பு – அமெரிக்க குடியரசுத் தலைவர் பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட் என்பவரால் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சங்கத்தை போலல்லாமல் இது அனைத்து நாடுகளின் கூட்டணியோடு தொடங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையை தோற்றுவிப்பதற்கான கருத்தானது, உலக தலைவர்களை ஒருங்கிணைத்து போரை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், அமைதியை பாதுகாத்து எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதற்கான வலுவானதொரு கட்டமைப்பை ஏற்படுத்தவும் செய்தது.)

26) ஐக்கிய நாடுகள் சபைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் எண்ணிக்கை எத்தனை?

A) 26 நாடுகள்

B) 28 நாடுகள்

C) 28 நாடுகள்

D) 30 நாடுகள்

(குறிப்பு – அமெரிக்க குடியரசுத் தலைவர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் என்பவரால் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை என்ற பெயரானது முதன்முதலாக 1942 ஆம் ஆண்டு 26 நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்து ஏற்றுக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபைக்கான ஒப்பந்தத்தில் பயன்படுத்தப்பட்டது. மேலும் இந்த அணி அச்சு நாடுகளின் அதிகாரத்திற்கு எதிராக அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து போராடி வந்தது.)

27) அமெரிக்காவின் எந்த துறைமுகத்தின் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தியது?

A) பேர்ல் துறைமுகம்

B) காகோஷிமா துறைமுகம்

C) தோபா துறைமுகம்

D) ஷிமோடா துறைமுகம்

(குறிப்பு – சர்வதேச சங்கத்தை போலல்லாமல் ஐக்கிய நாடுகள் சபை அனைத்து நாடுகளின் கூட்டணியுடன் தொடங்கியது. ஜப்பானின் பேர்ல் துறைமுக தாக்குதலுக்கு பிறகு போரில் இறங்கிய அமெரிக்கா முதல் உலகப்போருக்குப்பின் மீண்டெழுந்து அமெரிக்காவுடன் போர் பிரகடனம் செய்த ஜெர்மனியும் இணைந்தது.)

28) எந்த ஆண்டு டம்பார்டன் ஓக்சில் புதிய சர்வதேச அமைப்பிற்கான அடிப்படை வரைவு உருவாக்கப்பட்டது?

A) 1940 ஆம் ஆண்டு

B) 1942 ஆம் ஆண்டு

C) 1944 ஆம் ஆண்டு

D) 1946 ஆம் ஆண்டு

(குறிப்பு – 1944 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் டம்பார்டன் ஓக்சில் புதிய சர்வதேச அமைப்பிற்கான அடிப்படை வரைவு உருவாக்கப்பட்டது. இது 1944 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனமாக மாறியது)

29) 1944ஆம் ஆண்டு டம்பார்டன் ஓக்சில் நடைபெற்ற ஐநா அமைப்பிற்கான அடிப்படை வரைவு சந்திப்பில் பங்கு பெறாத நாடு எது?

A) சீனா

B) சோவியத் யூனியன்

C) பிரான்ஸ்

D) அமெரிக்கா

(குறிப்பு – 1944 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் சீனா, சோவியத் யூனியன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் டம்பார்டன் ஓக்சில் சந்தித்து புதிய சர்வதேச அமைப்பிற்கான அடிப்படை வரைவை உருவாக்கினர். இது 1944 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனமாக மாறியது)

30) கீழ்க்கண்டவற்றுள் எது ஐநாவின் முக்கிய நோக்கங்கள் அல்லாதவை ஆகும்?

A) ராணுவ பாதுகாப்பு

B) பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு

C) மனித உரிமைகளை பாதுகாப்பது

D) சர்வதேச நிதி உதவி

(குறிப்பு – ஐக்கிய நாடுகள் சபையின் நான்கு முக்கிய நோக்கங்கள் ஆவன, ராணுவ பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு, மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் சர்வதேச நீதி என்பன ஆகும்.)

31) 1945 ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று எத்தனை நாடுகளின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் கையெழுத்திட்டனர்?

A) 40 நாடுகள்

B) 50 நாடுகள்

C) 60 நாடுகள்

D) 70 நாடுகள்

(குறிப்பு – 1945ஆம் ஆண்டு ஜெர்மனி சரண் அடைந்தது. இதனையடுத்து 1945 ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் நாள், 50 நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி ஐக்கிய நாடு சபைக்கான சாசனத்தில் கையெழுத்திட்டனர். இதற்கிடையே சாசனத்தை வரைவதில் இந்த பிரச்சனையை சர்வதேச சமூகம் எதிர்கொண்டதோ, அதே பிரச்சனை எந்த மாற்றமும் இல்லாமல் ஐநா சபையும் எதிர்கொண்டது)

32) 1945ஆம் ஆண்டு, 50 நாடுகளின் பிரதிநிதிகள் எந்த நகரில் கூடி சபைக்கான சாசனத்தில் கையெழுத்திட்டனர்?

A) நியூயார்க்

B) கலிபோர்னியா

C) சான் பிரான்சிஸ்கோ

D) வாஷிங்க்டன்

(குறிப்பு – 1945ஆம் ஆண்டு ஜெர்மனி சரண் அடைந்தது. இதனையடுத்து 1945 ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் நாள், 50 நாடுகளின் பிரதிநிதிகள் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒன்று கூடி ஐக்கிய நாடு சபைக்கான சாசனத்தில் கையெழுத்திட்டனர். இதற்கிடையே சாசனத்தை வரைவதில் இந்த பிரச்சனையை சர்வதேச சமூகம் எதிர்கொண்டதோ, அதே பிரச்சனை எந்த மாற்றமும் இல்லாமல் ஐநா சபையும் எதிர்கொண்டது)

33) ஐக்கிய நாடுகள் சபையின் மறுதலிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நாடுகளில் அல்லாதது கீழ்க்கண்டவற்றுள் எது?

A) சீனா

B) சோவியத் யூனியன்

C) ஜெர்மனி

D) அமெரிக்கா

(குறிப்பு – ஒரு நாடு ஐநா அமைப்பை விட்டு எளிதாக வெளியேறாமல் தடுப்பதற்காக மறுதலிக்கும் அதிகாரத்தை ஐநா அமைப்பின் சாசன வரைவாளர்கள் கொண்டு வந்தனர். மறுதலிக்கும் அதிகாரமானது ஐநாவின் 5 ஆரம்பகால உறுப்பினர்களான சீனா, பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது)

34) ஐநா சாசனத்தின் எந்த உறுப்பு சர்வதேச சங்கத்தின் தீர்மானத்தை போலவே சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது?

A) உறுப்பு 21

B) உறுப்பு 23

C) உறுப்பு 25

D) உறுப்பு 27

(குறிப்பு – ஐக்கிய நாடுகள் சபையை துவக்கியவர்கள் மிகவும் நன்றாக சர்வதேச சங்கத்தின் தோல்விக்கான காரணங்களை அறிந்து இருந்ததால் அந்த அனுபவங்களைக் கொண்டு, ஐநா சாசனத்தின் முக்கிய கூறுகளை வடிவமைத்தனர். ஏற்கனவே இதனை பிரதிபலிக்கும் வகையில் ஐநா சாசனத்தின் உறுப்பு-23ஆவது, சர்வதேச சங்கத்தின் தீர்மானத்தை போலவே சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளது.)

35) ஐ நா சபைக்கான பத்து நிரந்தரமற்ற உறுப்பினர்களின் பதவி ஆண்டு காலம் எத்தனை?

A) இரண்டு ஆண்டுகள்

B) மூன்று ஆண்டுகள்

C) நான்கு ஆண்டுகள்

D) ஐந்து ஆண்டுகள்

(குறிப்பு – ஐ நா சபை மறுதலிக்கும் அதிகாரம் கொண்ட ஐந்து நிரந்தர உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அவை சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் என்பன ஆகும். மேலும் இரண்டு ஆண்டு காலத்திற்கு ஒருமுறை தேர்வு செய்யப்படும் பத்து நிரந்தரமற்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.)

36) தற்போது ஐ நா வின் பொதுச் சபையின் உறுப்பினர் எண்ணிக்கை எத்தனை?

A) 191 உறுப்பினர்கள்

B) 192 உறுப்பினர்கள்

C) 193 உறுப்பினர்கள்

D) 194 உறுப்பினர்கள்

(குறிப்பு – தற்போது ஐ நா வின் பொதுச் சபையின் உறுப்பினர் எண்ணிக்கை 193 ஆகும். ஐநாவின் பொதுச் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.ஒரு நாட்டிற்கு ஒரு ஓட்டு என வழங்கப்பட்டுள்ளது).

37) 1945 ஆம் ஆண்டில் ஐநா கீழ்க்காணும் எந்த அமைப்புகளை கொண்டதாக இருந்தது?

I. பொதுசபை

II. பாதுகாப்பு குழு

III. பொருளாதார மற்றும் சமூக குழு

IV. அறங்காவலர் குழு

A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – 1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை ஆறு முக்கிய அமைப்புகளை கொண்டதாக இருந்தது. அவை, பொதுசபை, பாதுகாப்பு குழு, பொருளாதார மற்றும் சமூகக் குழு, அறங்காவலர் குழு, சர்வதேச நீதிமன்றம் மற்றும் செயலகம் ஆகும்.)

38) காலனியை ஒழிப்பிற்கான நடைமுறை தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட ஐநாவின் குழு எது?

A) பொதுசபை

B) பாதுகாப்பு குழு

C) பொருளாதார மற்றும் சமூக குழு

D) அறங்காவலர் குழு

(குறிப்பு – 1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை ஆறு முக்கிய அமைப்புகளை கொண்டதாக இருந்தது. அவை, பொதுசபை, பாதுகாப்பு குழு, பொருளாதார மற்றும் சமூகக் குழு, அறங்காவலர் குழு, சர்வதேச நீதிமன்றம் மற்றும் செயலகம் ஆகும். இதில் அறங்காவலர் குழுவானது காலனிய ஒழிப்பிற்கான நடைமுறை தேவைகளை கொண்டிருந்தது. காலனிய ஒழிப்பிற்குப் பிறகு இதன் பணி தேவையற்றதாக மாறிவிட்டது. இருந்தபோதும் இது ஐநாவின் முக்கிய அடிப்படை அமைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது.)

39) கீழ்க்காணும் எது ஐநாவிற்கான நாடாளுமன்றமாக திகழ்கிறது?

A) பொதுச்சபை

B) அறங்காவலர் குழு

C) சர்வதேச நீதிமன்றம்

D) செயலகம்

(குறிப்பு – ஐநாவின் அனைத்து அமைப்புகளும் முறையே கூடி முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கின்றனர்.உறுப்பினர்களின் ஓட்டெடுப்பின் மூலமே முடிவுகளும், அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. இருந்த போதும் இதன் ஒவ்வொரு அமைப்பின் நடைமுறைகளும் ஒன்றுக்கு ஒன்று வேறுபடுகின்றன. குறிப்பாக பொதுச் சபையானது ஐநாவிற்கான நாடாளுமன்றமாகவும், பாதுகாப்பு குழு நிர்வாக குழுவாகவும், செயலகம் நடைமுறைப்படுத்துவதற்கான அமைப்பாக அல்லது ஐநாவின் நிர்வாகப் பிரிவாக செயல்படுகின்றது).

40) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – ஐநாவின் உறுப்பு நாடுகள் பரப்பளவில் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், செல்வாக்குமிக்கதாக இருந்தாலும், அவை அனைத்திற்கும் சமமாக ஒரு ஓட்டு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

கூற்று 2 – ஐநாவின் சாசனத்தில் கீழ் எழும் பிரச்சனைகள் குறித்த விவாதமானது பொதுச்சபையில் நடைபெறுகிறது.

கூற்று 3 – சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்வது போன்றவைகள் பொதுச் சபையின் மூலம் நடைபெறுகிறது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – ஐநா விற்கான நிதிநிலை அறிக்கை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஒரு நாட்டிற்கு ஒரு ஓட்டு என்ற விதியின் அடிப்படையில் நிறைவேற்றப்படுகிறது. உறுப்பு நாடுகளால் முன்மொழியப்படும் பிரச்சனைகள் மீது பொதுச்சபையில் தீர்மானங்கள் கொண்டுவரப்படுகின்றன. பொதுச் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அடிப்படையில் பரிந்துரைகளை, ஆனால் உலக மக்களில் பெரும்பான்மையோரின் கருத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் இருப்பதால் அந்தப் பரிந்துரைகள் மதிப்பு மிகுந்ததாக உள்ளது.)

41) ஐநாவின் பொதுச்சபைக் கூட்டமானது ஒவ்வொரு வருடமும் எந்த மாதத்தில் நடைபெறுகிறது?

A) மே மாதம்

B) ஜூன் மாதம்

C) செப்டம்பர் மாதம்

D) ஜனவரி மாதம்

(குறிப்பு – பொதுச்சபையின் கூட்டமானது ஒவ்வொரு செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. பெரும்பான்மையான தீர்மானங்கள் செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிறைவேற்றப்படுகின்றன. சிறப்பு கூட்டத்திற்கான கோரிக்கையானது பாதுகாப்பு குழுவினாலோ அல்லது பெரும்பான்மை உறுப்பினர்களாலாலோ முன்மொழியப்படவேண்டும். பொதுச்சபையின் வழக்கமான கூட்டத்தொடரின் முதல் இரண்டு வாரங்கள் உறுப்பு நாடுகளின் கருத்தை அறியும் வண்ணம் பொது விவாதம் நடத்தப்படுகிறது.)

42) ஐநாவின் பொதுச்சபையின் ஆறு முக்கிய குழுக்களை பொருத்துக.

I. முதல் குழு – a) சமூகம், மனித நேயம் மற்றும் பண்பாடு

II. இரண்டாம் குழு – b) பொருளாதாரம் மற்றும் நிதி

III. மூன்றாம் குழு – c) ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு

IV. நான்காம் குழு – d) சிறப்பு அரசியல் மற்றும் காலணியை ஒழிப்பு

A) I-c, II-b, III-a, IV-d

B) I-b, II-a, III-c, IV-d

C) I-d, II-b, III-a, IV-c

D) I-b, II-c, III-a, IV-d

(குறிப்பு – ஐநாவின் பொது சபையில் ஆறு முக்கிய குழுக்கள் உள்ளன அவை முறையே முதல் குழு( ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு), இரண்டாவது குழு( பொருளாதாரம் மற்றும் நிதி), மூன்றாவது குழு( சமூகம், மனித நேயம் மற்றும் பண்பாடு) நான்காவது குழு( சிறப்பு அரசியல் மற்றும் காலனிய ஒழிப்பு), ஐந்தாவது குழு( நிர்வாகம் மற்றும் நிதி நிலை அறிக்கை) மற்றும் ஆறாவது குழு( சட்டம்) என்பன ஆகும்)

43) ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கையின் பட்டியலின்படி கண்டங்கள் மற்றும் அதன் பணியின் பெயரை பொருத்துக.

I. ஆப்பிரிக்கா – a) UNMIK

II. ஆசியா – b) ONUC

III. ஐரோப்பா – c) UNMIH

IV. வட அமெரிக்கா – d) UNIPOM

A) I-b, II-d, III-a, IV-c

B) I-b, II-a, III-c, IV-d

C) I-d, II-b, III-a, IV-c

D) I-b, II-c, III-a, IV-d

(குறிப்பு – ONUC என்பது ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள காங்கோவின் ஐக்கிய நாடுகளின் செயல்பாடு என்பது ஆகும். UNMIK ஐநாவின் இடைக்கால நிர்வாக தூதுக்குழு கோசாவா என்பதாகும்.UNMIH என்பது ஐநாவின் தூதுக்குழு ஹைட்டி என்பதாகும்.UNIPOM என்பது ஐக்கிய நாடுகள் சபை இந்தியா-பாகிஸ்தான் கண்காணிப்பு பணி என்பதாகும்.)

44) கீழ்காணும் நாடுகளின் பிரச்சினையையும், அதற்கு ஐநா சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டினையும் பொருத்துக.

I. கோசாவா போர் – a) 1995-2002

II. சிரியா உள்நாட்டு போர் – b) 1999

III. ஹைட்டி கிளர்ச்சி – c) 2012

IV. போஸ்னியா போர் – d) 2017

A) I-b, II-c, III-d, IV-a

B) I-b, II-a, III-c, IV-d

C) I-d, II-b, III-a, IV-c

D) I-b, II-c, III-a, IV-d

(குறிப்பு – 1999ஆம் ஆண்டு கோசாவா போரின் போது ஐநாவின் இடைக்கால நிர்வாக தூதுக்குழு கோசாவா(UNMIK) அமைக்கப்பட்டது. 1995ஆம் ஆண்டு போஸ்னியா போர் நடைபெற்றபோது ஐநாவின் தூதுக்குழு போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா(UNMIBH) அமைக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு சிரியா உள்நாட்டு போரின்போது ஐநாவின் கண்காணிப்புக்குழு சிரியா (UNMIBS) அமைக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு ஹைட்டி கிளர்ச்சியின் போது, ஐநாவின் நீதிக்கு ஆதரவான தூதுக்குழு ஹைட்டி (MINUJUSTH) அமைக்கப்பட்டது. இவை அனைத்தும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கை ஆகும்)

45) பிரச்சனைகளையும் அது தோன்றிய ஆண்டுகளையும் பொருத்துக.

I. இந்தியா பாகிஸ்தான் போர் – a) 1993-1996

II. காங்கோ நெருக்கடி – b) 1965-1966

III. சியாரா லியோன் உள்நாட்டுப் போர் – c) 1999-2006

IV. ருவாண்டா உள்நாட்டுப்போர் – d) 1960-1964

A) I-b, II-d, III-c, IV-a

B) I-b, II-a, III-c, IV-d

C) I-d, II-b, III-a, IV-c

D) I-b, II-c, III-a, IV-d

(குறிப்பு – காங்கோ நெருக்கடி(1960-1964), இந்தியா பாகிஸ்தான்(1965-1966), சோமாலியா உள்நாட்டுப் போர்(1992-1993), போஸ்னியா போர்(1995-2002), சியாரா லியோன் உள்நாட்டுப் போர்(1999-2006), இரண்டாவது சூடான் உள்நாட்டுப் போர்(2005-2011), சிரியா உள்நாட்டு போர்(2012), ஹைட்டி கிளர்ச்சி (2017) ஆகியவை ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கை பட்டியலின் கீழ், ஐநா சபை தலையிட்டு தீர்த்து கொண்டு வந்த போர்கள் ஆகும்)

46) ஐநாவின் கீழ் காணும் எந்த சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக விருப்பம் தெரிவிக்கிறது?

A) பாதுகாப்பு சபை

B) பொது சபை

C) அறங்காவலர் குழு

D) சர்வதேச நீதிமன்ற சபை

(குறிப்பு – ஐநாவின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இடம் பெறும் இந்தியாவின் விருப்பமானது, அது பாதுகாப்புச் சபையுடன் வரலாற்று பூர்வமாக கொண்டிருக்கும் உறவை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்தியாவின் விருப்பமானது பாதுகாப்பு சபையில் நீண்ட பல இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்த விபரங்களை ஏற்படுத்தியது. தாராளவாத தன்மையுடன் சர்வதேச அமைப்பிற்கான பொறுப்பு மிக்க ஒரு நாடாக இருக்குமா அல்லது சர்வதேச நிகழ்வுகளின் மரபுகளை மாற்றியமைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் அரசாக இருக்குமா என்ற விவாதங்கள் நடைபெற்றன)

47) ஐநாவின் பாதுகாப்பு சபையில் 2014ஆம் ஆண்டு தனது மறுதலிக்கும் அதிகாரத்தை பயன்படுத்திய நாடு எது?

A) சீனா

B) ரஷ்யா

C) அமெரிக்கா

D) இங்கிலாந்து

(குறிப்பு – மறுதலிக்கும் அதிகாரமானது அதன் மக்களாட்சியின் பண்புகளற்ற தன்மைக்காக விமர்சிக்கப்படுகிறது. அது பாதுகாப்பு சபையின் பெரும்பான்மையினரின் முடிவை ஒரு தனிப்பட்ட நாடு தடுப்பதாகும்.உதாரணமாக அமெரிக்காவானது தொடர்ச்சியாக இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானங்கள் மீது தனது மறுதலிக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி வருகிறது. மேலும் நிரந்தர உறுப்பினர்கள் தங்களுக்கு எதிரான விமர்சன தீர்மானங்களின் மீது மறுதலிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் வழக்கமாகும். 2014ம் ஆண்டு ரஷ்யா கிரிமியாவை இணைத்துக் கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தனது மறுதலிக்கும் அதிகாரத்தை பயன்படுத்தியது.)

48) ஐக்கிய நாடுகள் சபையினால் மறுதலிக்கும் அதிகார பிரச்சினை தொடர்பாக A/RES/377 என்ற தீர்மானம், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பு நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

A) 1950 இல்

B) 1955 இல்

C) 1960 இல்

D) 1965 இல்

(குறிப்பு – “அமைதிக்கான ஒற்றுமை” என்ற தீர்மானத்தை நிறைவேற்றும் போதும் நடைபெற்ற விவாதத்தில் வழக்கமான ஐநா சட்டங்களின்படி பொதுச்சபையின் அதிகாரமானது பாதுகாப்பு சபையின் “மறுதலிக்கும் அதிகாரம் “பிரச்சனையுடன் தொடர்புடையதாகும். 1950 ஆம் ஆண்டு நவம்பர் மூன்றாம் நாள் ஐநாவின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பு நாடுகளால் ஏற்றுக் கொள்ளப் பட்ட A/RES/377 தீர்மானமானது குறிப்பிடுவது யாதெனில், ஐநாவின் சாசனப்படி ஒருவேளை பாதுகாப்பு சபையானது தனது முதன்மை நோக்கமான அமைதியை பாதுகாப்பதில் இருந்து தவறினால் அப்போது சர்வதேச அமைதிக்காக பொதுச்சபை எடுக்கும் மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்தும் நடவடிக்கைகளை பாதுகாப்பு சபை தடுக்க முடியாது, தடுக்க கூடாது என்பதாகும்.

49) ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை எத்தனை நிரந்தர உறுப்பினர்களை கொண்டுள்ளது?

A) ஐந்து

B) ஆறு

C) ஏழு

D) எட்டு

(குறிப்பு – ஐநாவின் சாசனப்படி பாதுகாப்பு சபையானது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான பொறுப்புமிக்க அமைப்பாகும். இது பொது சபையை போல் வழக்கமாக கூடுவதில்லை. மாறாக சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது எந்த நேரத்திலும் இதன் கூட்டமானது நடைபெறும். இது ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் உள்பட 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. பிற பத்து உறுப்பினர்கள் பொதுச் சபையினால் இரண்டு ஆண்டுகள் காலத்திற்கு சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.)

50) ஐநாவின் பாதுகாப்புச் சபையின் அதிகாரங்கள் கீழ்கண்டவற்றுள் எது?

I. பேச்சுவார்த்தை மூலம் போர்நிறுத்தத்தை அறிவித்தல்

II. பொருளாதார தடை விதித்தல்

III. ஐநாவின் உறுப்பினர்களின் ஒப்புதலின் பெயரில் படைபலத்தை பயன்படுத்துதல்

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – ஐநாவின் பாதுகாப்பு சபை அமைதிக்கான அச்சுறுத்தல் ஏற்படும் போது பிரச்சினைக்குரிய நாடுகளை அழைத்துப் பேசி அமைதியான வழியில் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும், மோதல்களை தவிர்க்கவும் செய்கிறது. மேலும் பாதுகாப்பு சபை அல்லது பேச்சுவார்த்தையின் மூலம் போர் நிறுத்தத்தை அறிவிக்கவும், பொருளாதார தடை விதிக்கவும் அல்லது ஐநாவின் உறுப்பினர்களின் ஒப்புதல் பெயரில் அதிகாரபூர்வமாக படை பலத்தைப் பயன்படுத்தவும் செய்கிறது)

51) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – ஐநாவின் பாதுகாப்புச் சபையில் இந்தியா ஒரு நிரந்தர உறுப்பினர் நாடாக உள்ளது.

கூற்று 2 – பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு எதிராக நிரந்தர உறுப்பினர் ஓட்டு அளிப்பதை மறுதலிக்கும் அதிகாரமாக குறிப்பிடப்படுகிறது.

கூற்று 3 – பாதுகாப்பு சபை தீர்மானத்திற்கு எதிராக நிரந்தர உறுப்பினர் ஓட்டளிக்கும் போது அந்தத் தீர்மானம் நிறைவேறுவதில்லை.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – நாவின் பாதுகாப்பு சபை ஐந்து நிரந்தர உறுப்பினர்களை கொண்டுள்ளது. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தின் மீது ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் யார் ஒருவரும் தீர்மானத்திற்கு எதிராக ஓட்டு அளிப்பதை மறுதலிக்கும் அதிகாரமாக குறிப்பிடப்படுகிறது. மேலும் தீர்மானமானது நிறைவேற்றப்படுவது இல்லை. பாதுகாப்பு குழுவில் மேலும் அதிக நிரந்தர உறுப்பினர்கள் இணைப்பதற்கான கோரிக்கைகள் எழுந்தால் அந்த கோரிக்கையானது ஐநாவின் உறுப்பு நாடுகளால் தீர்மானிக்கப்படும்)

52) ஐநாவின் பொருளாதார மற்றும் சமூக குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?

A) 50 உறுப்பினர்கள்

B) 52 உறுப்பினர்கள்

C) 54 உறுப்பினர்கள்

D) 56 உறுப்பினர்கள்

(குறிப்பு – ஐநாவின் பொருளாதார மற்றும் சமூக குழுவிற்கான 54 உறுப்பினர்கள் அனைத்து கண்டங்களையும் பிரதிநிதிதுவப்படுத்தும் வகையில் மூன்று ஆண்டு காலத்திற்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இது ஐநாவிற்கான மைய அமைப்பாக ஐநாவின் பொருளாதார மற்றும் சமூக பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்கிறது.)

53) ஐநாவின் பொருளாதாரம் மற்றும் சமூக குழுவின் பணிகள் அல்லாதது எது?

A) வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது

B) மனித உரிமையை பாதுகாப்பது

C) வறுமை மட்டும் வளர்ச்சி இன்மையை ஒழிப்பதற்காக போராடுவது

D) பொருளாதார தடை விதிப்பது

(குறிப்பு – ஐநா சபையின் பொருளாதார மற்றும் சமூக குழுவின் 70 சதவீத திட்டங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே. வறுமையை ஒழிக்கும் வகையில் முழு வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சமூக மேம்பாடு மற்றும் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது. இது வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது, மனித உரிமைகளை பாதுகாப்பது, வறுமையை ஒழிப்பதற்கான உலகம் தழுவிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்கிறது.)

54) ஐநாவின் அறங்காவலர் குழு எத்தனை முன்னாள் காலனிய நில பகுதிகளின் நிர்வாகத்தை கண்காணித்து வருகிறது?

A) பத்து

B) பதினொன்று

C) பன்னிரெண்டு

D) பதிமூன்று

(குறிப்பு – ஐநாவின் சாசனப்படி அறங்காவலர் குழுவானது 11 முன்னாள் காலனிய நிலப்பகுதிகளில் நிர்வாகத்தை கண்காணித்து வருகிறது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் தற்சார்பற்ற இந்நிலப் பகுதியை சேர்ந்த மக்களின் வளர்ச்சிக்காக சுயாட்சி அரசுகள் ஏற்படவும் அல்லது விடுதலை அடைவதற்கான ஒரு நவீன முறையாகவும் இது உருவாக்கப்பட்டது.)

55) எந்த ஆண்டுக்கு பின்னர் அறங்காவலர் குழுவானது தனது பணியை நிறுத்திக் கொள்ளவும் தேவைப்படும்போது மட்டும் கூடுவதாக முடிவுசெய்தது?

A) 1992ஆம் ஆண்டு முதல்

B) 1994 ஆம் ஆண்டு முதல்

C) 1996ஆம் ஆண்டு முதல்

D) 1998 ஆம் ஆண்டு முதல்

(குறிப்பு – பதினோரு காலனிய பகுதிகள் மற்றும் 70க்கும் மேற்பட்ட காலணிகளும் விடுதலை அடைவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அறங்காவலர் குழு உதவியாக இருந்தது. 1994 ஆம் ஆண்டு கடைசி பகுதியான பலாவ் ஆனது விடுதலை அடைந்ததை அடுத்து அறங்காவலர் குழுவானது தனது பணியை நிறுத்திக் கொள்ளவும், தேவைப்படும்போது மட்டும் இக்குழு கூடுவதாகவும் முடிவு செய்தது. சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்காவை நிரந்தர உறுப்பினர்களாக கொண்ட ஐநா அறங்காவலர் குழுவை அமைத்து இருந்தது)

56) ஐநாவின் சர்வதேச நீதிமன்றம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?

A) ஸ்வீடன்

B) நெதர்லாந்து

C) பின்லாந்து

D) இங்கிலாந்து

(குறிப்பு – ஐநாவின் முக்கிய நீதித்துறை அமைப்பாக சர்வதேச நீதிமன்றமானது செயல்படுகிறது. இது நெதர்லாந்தில் உள்ள தி ஹேக் என்ற நகரத்தில் அமைந்துள்ளது. சர்வதேச நீதிமன்றம் அல்லது உலக நீதிமன்றம் ஒரு நிரந்தர நடுவர் நீதிமன்றமாக செயல்படுகிறது.)

57) ஐநாவின் சர்வதேச நீதிமன்றம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

A) 1945 ஆம் ஆண்டு

B) 1950 ஆம் ஆண்டு

C) 1955 ஆம் ஆண்டு

D) 1960 ஆம் ஆண்டு

(குறிப்பு – ஐநாவின் சர்வதேச நீதிமன்றம் 1945 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு, 1946 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றமானது சர்வதேச சட்டங்களின்படி நாடுகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறது. மாறாக இது தனிநபர்களின் வழக்குகளை விசாரிப்பதில்லை. எந்த நாடும் இதன் விசாரணை தேவையில்லை எனக் கருதினால் தாமாகவே விலகிக் கொள்ளலாம், எந்த சிறப்பு ஒப்பந்த விதிமுறைகளும் இல்லை.)

58) ஐநாவின் சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை எத்தனை?

A) 10 நீதிபதிகள்

B) 15 நீதிபதிகள்

C) 20 நீதிபதிகள்

D) 25 நீதிபதிகள்

(குறிப்பு – 1946 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச நீதிமன்றமானது நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. குறிப்பாக பொருளாதார உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போக்குவரத்து வழிக்கான உரிமைகள், படையை பயன்படுத்தாமல் இருக்கவும், நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருக்கவும், இருதரப்பு உறவுகள் போன்ற பிரச்சினைகள் போன்றவற்றிற்கு தீர்வு கண்டிருக்கிறது. இந்த நீதிமன்றம் 15 நீதிபதிகளை கொண்டது. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ள 15 நீதிபதிகள் 9 ஆண்டு காலத்திற்காக தேர்வு செய்யப்படுகின்றனர்.)

59) ஐநாவின் சர்வதேச நீதிமன்றத்திற்கான கட்டிடத்தை கொடுத்த அறக்கட்டளை கீழ்க்கண்டவற்றுள் எது?

A) பில் கேட்ஸ் அறக்கட்டளை

B) ஆக்ஸ்போர்டு அறக்கட்டளை

C) கார்னேஜ் அறக்கட்டளை

D) சர்வதேச அறக்கட்டளை

(குறிப்பு – நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் மற்றும் அதன் அலுவலகமும் “அமைதிக்கான அரண்மனை” என்று அழைக்கப்படுகின்றன. இதன் கட்டிடமானது கார்னேஜ் அறக்கட்டளை என்ற லாப நோக்கமில்லாத அமைப்பால் சர்வதேச நீதிக்கான நிரந்தர நீதிமன்றத்தின் தலைமை இடமாக சர்வதேச சங்கத்திற்கு வழங்கப்பட்டது. ஐநாவானது இக்கட்டிடத்தை பயன்படுத்துவதற்கான ஆண்டு நிதியை இந்த அறக்கட்டளைக்கு வழங்குகிறது.)

60) ஐநாவின் தலைமைச் செயலாளரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் ஆகும்?

A) ஐந்து ஆண்டுகள்

B) ஆறு ஆண்டுகள்

C) மூன்று ஆண்டுகள்

D) இரண்டு ஆண்டுகள்

(குறிப்பு – ஐநாவின் செயலக அதிகாரிகள், ஐநாவின் பிற முக்கிய அமைப்புகளுக்கான திட்டங்களையும் மற்றும் கொள்கைகளையும் வடிவமைக்கின்றனர். இச்செயலகத்திற்கான தலைமை செயலாளரை பொதுச் சபையானது, பாதுகாப்பு சபையின் பரிந்துரையின் பேரிலேயே நியமிக்கிறது. தலைமை செயலாளர் ஐந்து ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்படுகின்றனர்)

61) ஐநாவின் செயலகத்திற்கு தலைமை அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?

A) பாரிஸ்

B) நியூயார்க்

C) லண்டன்

D) பிரான்ஸ்

(குறிப்பு – ஐநாவின் தலைமைச் செயலாளர் ஐந்து ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்படுகின்றார். அவர் மீண்டும் நியமிக்கப்படலாம். தலைமை செயலாளர் ஐநாவிற்கான தலைமை நிர்வாக அதிகாரியாக, பிற அமைப்புகளையும் அதன் அலுவலர்களையும் இயக்கலாம். இவர்கள் சர்வதேச குடிமை பணியாளர்களாக அறியப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட நாட்டின் பிரதிநிதியாக செயல்படும் தூதர் போல அல்லாமல் 193 உறுப்பு நாடுகளிலும் சர்வதேச குடிமை பணியாளர்களாக பணியாற்றுகின்றனர். ஐநா செயலகத்திற்கான தலைமை அலுவலகம் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது).

62) ஐநாவின் செயலக அலுவலகம் கீழ்க்காணும் எந்த இடத்தில் இல்லை?

A) ஜெனீவா

B) வியன்னா

C) கேப்டவுன்

D) நைரோபி

(குறிப்பு – ஐநாவின் செயலககத்தின் தலைமை அலுவலகம் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது பிற அலுவலகங்கள் ஜெனீவா வியன்னா, நைரோபி, அடிஸ்அபாபா, பெய்ரூட், சாண்டியாகோ மற்றும் பாங்காக் நகரங்களில் அமைந்துள்ளன உறுப்பு நாடுகளில் இருந்து பெற்ற 16 ஆயிரம் ஊழியர்களை கொண்டு செயலக அதிகாரிகள் அமைப்பின் தினசரி பணிகளை மேற்கொள்கின்றனர்.).

63) ஐ நா எத்தனைமுகவாண்மைகளை கொண்டதாகும்?

A) பத்து

B) பதினைந்து

C) இருபது

D) இருபத்தியைந்து

(குறிப்பு – ஐநாவின் குடும்பம் மிகப்பெரியது பதினைந்து முகவாண்மைகள், பல திட்டங்கள் மற்றும் நிறுவனங்களை கொண்டது, இதில் சில நிறுவனங்கள் சர்வதேச சமூகத்தின் காலத்திலேயே துவக்கப்பட்டன. குறிப்பாக சர்வதேச தொழிலாளர் கழகம் மற்றும் சில அமைப்புகள் 1945இல் தோற்றுவிக்கப்பட்டு குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் மற்றும் நிகழ்வுகளை தீர்ப்பதற்கான அமைப்பாக அதிலிருந்து செயல்படுகின்றன. இதன் காரணமாக ஐநாவானது பன்முகத் தன்மை வாய்ந்ததாக காட்சியளிக்கிறது).

64) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – ஐநாவின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அமைப்பு (UNHCR)என்பது ஒரு நிரந்தர அமைப்பு அல்ல.

கூற்று 2 – ஐநா சபையானது தற்போது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகின்றது.

கூற்று 3 -ஐநா சாசன உறுப்பு 77வது, அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதற்கு ஏதுவாக தேவையான ஏற்பாடுகளை ஐநா செய்து கொள்ளலாம் எனக் கூறுகிறது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – ஐநாவின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அமைப்பு (UNHCR)என்பது ஒரு நிரந்தர அமைப்பு அல்ல. ஐநா சபையானது தற்போது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகின்றது.ஐநா சாசன உறுப்பு 77வது, அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதற்கு ஏதுவாக தேவையான ஏற்பாடுகளை ஐநா செய்து கொள்ளலாம் எனக் கூறுகிறது. இதன் காரணமாக ஐநா நூற்றுக்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்களைக் கொண்டு பிரச்சினைக்குரிய பகுதிகளில் மனிதநேயப் பணிகளை மேற்கொள்ள முடிகிறது)

65) உலகப் பொருளாதார அதிகாரமானது கீழ்க்காணும் எந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இல்லை?

A) உலக வங்கி

B) சர்வதேச நிதி நிறுவனம்

C) உலக வர்த்தக கழகம்

D) உலகப் பொருளாதார கழகம்

(குறிப்பு – ஐநாவின் பொருளாதார மற்றும் சமூக குழுவானது(ECOSOC) ஐநாவின் குடும்ப அமைப்பாக, ஐநாவின் பொருளாதாரம் மற்றும் சமூக பணிகளை ஒருங்கிணைக்கிறது. இதன் முக்கிய பணியில் வளர்ச்சிக்கான சர்வதேச ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதாகும். உண்மையில் உலக பொருளாதார அதிகாரமானது மூன்று சகோதரிகள் அமைப்புகள் என்ற அமைப்புகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவை உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் மற்றும் உலக வர்த்தக கழகம் என்பதாகும்)

66) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – ஐநாவின் பொருளாதாரம் மற்றும் சமூக குழுவானது மற்ற குழுக்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்த அதிகாரங்களை கொண்ட அமைப்பாகும்.

கூற்று 2 – மனித உரிமைக்கான குழுவானது உலக அளவில் மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் கண்காணிப்பது போன்ற பணிகளை செய்கிறது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – ஐநாவின் பொருளாதாரம் மற்றும் சமூக குழுவானது மற்ற குழுக்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்த அதிகாரங்களை கொண்ட அமைப்பாகும். மனித உரிமைக்கான குழுவானது உலக அளவில் மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் கண்காணிப்பது போன்ற பணிகளை செய்கிறது. பிற அமைப்புகள் சமூக வளர்ச்சியை மையப்படுத்தும் விதமாக பெண்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குற்றத்தடுப்பு மற்றும் போதை மருந்து ஒழிப்பு போன்ற பணிகளை மேற்கொள்கின்றன. இருந்தபோதும் பொருளாதார மற்றும் சமூகக் குழுவின் நோக்கம் கானல் நீராகவே இருக்கிறது)

67) உலக வங்கி கீழ்காணும் எந்த இடத்தில் அமைந்துள்ளது?

A) நியூயார்க்

B) கலிபோர்னியா

C) வாஷிங்டன்

D) மிசோரி

(குறிப்பு – வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள உலக வங்கியானது உண்மையில் மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கியாகும். உலக வங்கி அல்லது உலக வங்கிக் குழுமம் உலகில் வளர்ந்து வரும் நாடுகளில் தேவைக்கான மிகப்பெரும் நிதியையும் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.)

68) உலக வங்கி கீழ்காணும் எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது?

A) 1945 இல்

B) 1948 இல்

C) 1952 இல்

D) 1956 இல்

(குறிப்பு – உலக வங்கி 1945ல் உருவாக்கப்பட்டது. உலக வங்கி என்ற பெயரானது மறு கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கியின் பொருளாதார சட்ட பிரிவினால் 1944 ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் நாள், பிரெட்டன் உட்ஸ் மாநாட்டில் அளித்த அறிக்கையில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. இந்த வங்கியின் முதன்மை நோக்கமாக ஏழை மக்கள் மற்றும் ஏழை நாடுகளில் தனது ஐந்து நிறுவனங்கள் மூலம் வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதாகும்)

69) உலகவங்கியின் நிர்வாகமானது யாரால் மேற்கொள்ளப்படுகிறது?

A) அமெரிக்க அரசால்

B) ஐநா சபையால்

C) உறுப்பினர் நாடுகளால்

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – உலக வங்கியின் முதன்மை நோக்கமாக ஏழை மக்கள் மற்றும் ஏழை நாடுகளில் தனது ஐந்து நிறுவனங்கள் மூலமாக வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது, வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது போன்ற பணிகளில் தனது நிதி ஆதாரங்களையும் மற்றும் தனது எண்ணற்ற அனுபவங்களையும் கொண்டு செயல்படுகிறது. உலக வங்கியின் நிர்வாகமானது அதன் உறுப்பு நாடுகளால் மேற்கொள்ளப்படுகிறது. அவர்களே கடன்அளிப்பவராகவும், பெறுபவர்களாகவும், நன்கொடையாளராகவும் இருக்கின்றனர்)

70) உலக வங்கி குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – உலகின் பெரும்பான்மையான வளரும் நாடுகள் உலக வங்கியின் உதவிகளை கடன் மற்றும் மானியங்கள், தொழில்நுட்ப உதவி மற்றும் கொள்கை உருவாக்கத்திற்கான அறிவுரைகளை பெறுகின்றன.

கூற்று 2 – உலக வங்கியானது மிகப் பரந்த அளவில் செயல்பாட்டாளர்களை கொண்டுள்ளது.

கூற்று 3 – அரசு துறை நிறுவனங்கள், குடிமைச் சமூக அமைப்புகள், பிற உதவி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினர் போன்றோரின் மூலமாக உலக வங்கி செயல்படுகிறது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – உலக வங்கியின் அடிப்படை நோக்கமாக வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்க்கை தரம் மேம்பாடு போன்றவை எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து இருக்கின்றன. ஆனால் தற்போது புதிய பொருளாதார சூழலின் அடிப்படையில், வளரும் நாடுகளுக்கான தேவையை கருதி தனது அணுகுமுறையில் மாற்றம், கொள்கையில் நெகிழ்வை கடைபிடிக்கிறது. தற்போதைய சவால்களை எதிர்கொள்ள நிறுவனங்கள் மக்களுக்கு நெருக்கமாக இருந்தால் மட்டும் போதாது.மேலும் அவை சர்வதேச நெருக்கடிகளை சமாளிக்கும் விதத்தில் அரசு, தனியார் மற்றும் குடிமைச் சமூகத்தில் உள்ள ஆற்றல் மிக்கோரை ஒருங்கிணைக்கவும் வேண்டும்)

71) உலகவங்கியின் நிர்வாக உத்தி மற்றும் ஆளுகை முன்னேற்றம் போன்றவற்றில் கொண்டு வரப்பட்டுள்ள ஐந்து பகுதிகளில் அல்லாதது எது?

A) சுய சார்பானதாக

B) வெளிப்படையானதாக

C) புதுமையானதாக

D) செயலாக்கம் குறைவானதாக

(குறிப்பு – உலக வங்கியானது தன்னுடைய நிர்வாக உத்திகள் மாற்றம் மற்றும் ஆளுகையில் முன்னேற்றம் போன்றவற்றை கொண்டுவந்துள்ளது. இந்த மாற்றங்கள் சுய சார்பானதாக, புதுமையானதாக, திறமையானதாக, செயலாக்கம் மிக்கதாக மற்றும் வெளிப்படையானதாக என ஐந்து பகுதிகளைக் கொண்டதாக உள்ளது)

72) உலக வங்கியின் ஐந்து நிறுவனங்களுள் அல்லாதது எது?

A) சர்வதேச வளர்ச்சி கூட்டமைப்பு

B) சர்வதேச நிதிக் கழகம்

C) சர்வதேச முதலீட்டு கழகம்

D) மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கி

(குறிப்பு – உலக வங்கியின் ஐந்து நிறுவனங்கள் ஆவன, மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கி, சர்வதேச வளர்ச்சி கூட்டமைப்பு, சர்வதேச நிதிக் கழகம், பல்தேசிய முதலீட்டுக்கான உத்திரவாதத்திற்கான பாதுகாப்பு குழுமம் மற்றும் முதலீடு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான சர்வதேச மையம் என்பன ஆகும்)

73) உலகவங்கி குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – உலக வங்கியானது கடன் உரைகளில் சிறு திருத்தம் கொண்டு வந்துள்ளது. மிகவும் நவீனப்படுத்தப்பட்ட நிதி சேவை மற்றும் கடன் முறைகளை கொண்டு வங்கியானது கடன் பெறுபவரின் தேவையை அறிந்து மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்கிறது.

கூற்று 2 – உலக வங்கியானது இயக்குனர்கள் குழுவில் கூடுதல் இடங்களை பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு அளிப்பதன் மூலம் வளர்ந்து வரும் நாடுகளின் ஓட்டு அதிகாரத்தை அதிகரிக்கச் செய்கிறது.

கூற்று 3 – உலக வங்கியானது, முக்கிய பகுதியாக அனைத்துத்துறைகள் மற்றும் நாடுகளிலும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – உலக வங்கி தனது நிர்வாக உத்திகள் மாற்றம் மற்றும் ஆளுகையில் முன்னேற்றம் போன்றவற்றை கொண்டுவந்துள்ளது. கடன் முறைகளில் சீர்திருத்தம், முன்னேறும் நாடுகளின் பங்கேற்பை அதிகப்படுத்தி குரலை ஒலிக்கச் செய்தல், பொறுப்புமிக்க நல்ல அரசை ஏற்படுத்துதல், மிகவும் வெளிப்படையான பொறுப்புமிக்க தகவல்களை அளித்தல், புதுப்பிக்கப்பட்ட அமைப்பு போன்றவைகள் உலக வங்கியால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் ஆகும்)

74) உலக வங்கியின் 1946ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?

A) 23

B) 33

C) 43

D) 53

(குறிப்பு – உலக வங்கி புதுப்பிக்கப்பட்ட அமைப்பு என்னும் நோக்கில் வளர்ச்சிக்கான மிகச் சிறந்த பங்காளராக பல சீர்திருத்தங்களை கொண்டு வருகிறது. சீர்திருத்தங்கள் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டது அவை நவீன கடன் அளிப்பு, அறிவாற்றல் உதவி மற்றும் சேவைகளை தனது வாடிக்கையாளருக்கு வழங்குதல். இதன் துவக்கம் ஆனது 1946 ஆம் ஆண்டு 33 உறுப்பினர்களைக் கொண்டு துவக்கப்பட்டது. மிகப் பெருமளவிலான மாற்றங்களை இதன் உறுப்பினர்கள் இடையேயும் மற்றும் உலக அளவிலும் ஏற்படுத்தியுள்ளது. காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்த பல நாடுகள் மெல்ல வங்கியில் உறுப்பினர் ஆகின.கூடவே உறுப்பு நாடுகளின் வளர்ச்சிக்கான தேவையும் அதிகரித்தது.)

75) மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கி(IBRD) எந்த ஆண்டு துவக்கப்பட்டது?

A) 1945 இல்

B) 1946 இல்

C) 1947 இல்

D) 1948 இல்

(குறிப்பு – மறு கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கி(IBRD) 1945 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கமானது நடுத்தர வருவாய் நாடுகள் மற்றும் குறைவான வருவாய்க்கான கடன்களை பெறும் நாடுகளில் வறுமை ஒழிப்பு மற்றும் சுயசார்பான வளர்ச்சியை ஏற்படுத்துவது, உத்திரவாதம் அளிப்பது, பகுப்பாய்வு மற்றும் ஆலோசனைகளை வழங்குவது என்பதாகும்.)

76) மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கியின் (IBRD) தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?

A) 180 நாடுகள்

B) 183 நாடுகள்

C) 184 நாடுகள்

D) 190 நாடுகள்

(குறிப்பு – மறு கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கியின் தற்போதைய உறுப்பு நாடுகள் 184 ஆகும். இதன் மொத்த வருவாய் மற்றும் நிதியாண்டுகளில் கிடைக்கும் வருவாய் என 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 698 பில்லியன் அமெரிக்க டாலரை கொண்டு இருந்தது)

77) சர்வதேச வளர்ச்சி கூட்டமைப்பு(IDA) கீழ்காணும் எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது?

A) 1945 இல்

B) 1950 இல்

C) 1955 இல்

D) 1960 இல்

(குறிப்பு – சர்வதேச வளர்ச்சி கூட்டமைப்பு 1960 இல் உருவாக்கப்பட்டது. இது உறுப்பு நாடுகளின் துணையுடன் ஏழை நாடுகளில் வறுமை ஒழிப்பிற்கான வட்டியில்லா கடன்கள், மானியங்களை உறுப்பினர்களிடம் இருந்து நிதி உதவியை பெற்று வழங்குகிறது. இந்த அமைப்பு தனது பொறுப்பில் 24 பில்லியன் அமெரிக்க டாலரை ஜூன் 2018 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் மேலாண்மை செய்தது)

78) சர்வதேச நிதிக் கழகம் கீழ்க்காணும் எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது?

A) 1950 இல்

B) 1953 இல்

C) 1956 இல்

D) 1959 இல்

(குறிப்பு – சர்வதேச நிதிக் கழகம் (IFC) வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான கடன்களை தனியார் துறையினருக்கு வழங்குகின்றது 1956 இல் உருவாக்கப்பட்டது இந்த அமைப்பில் தற்போது 176 உறுப்பினர்கள் உள்ளனர் 2018 ஆம் நிதியாண்டில் 23.3 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடாக செய்துள்ளது)

79) பல்தேசிய முதலீட்டு உத்தரவாதமான பாதுகாப்புக் குழுமத்தின்(MIGA)தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?

A) 160

B) 162

C) 164

D) 166

(குறிப்பு – பல்தேசிய முதலீட்டு உத்திரவாதத்திற்கான பாதுகாப்பு குழுமம்(MIGA) 1988 இல் உருவாக்கப்பட்டது. இக்குழுமானது வளரும் நாடுகளில் தனியார் துறையினரின் முதலீட்டை அதிகரிக்க செய்கிறது. மேலும் ஒப்பந்தங்கள், பிரச்சனைகள் மற்றும் பண பரிமாற்ற விகிதங்களினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து முதலீட்டிற்கான பாதுகாப்பை வழங்குகிறது.தற்போது இந்த அமைப்பு 164 உறுப்பினர்கள் கொண்டு செயல்படுகிறது)

80) முதலீடு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான சர்வதேச மையம் (ICSID)எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

A) 1960 இல்

B) 1963 இல்

C) 1966 இல்

D) 1969 இல்

(குறிப்பு – வளரும் நாடுகளில் வெளிநாட்டு முதலீட்டை ஆதரிப்பது முதலீடு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான சர்வதேச மையத்தின் (ICSID)முக்கிய நோக்கம் ஆகும். மேலும் இது முதலீடு தொடர்பான பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறது. 1966-ல் ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பில் தற்போது 140 உறுப்பினர்கள் உள்ளனர்.)

81) சர்வதேச நிதி நிறுவனத்தின் தற்போதைய உறுப்பினரின் எண்ணிக்கை எத்தனை?

A) 180 நாடுகள்

B) 185 நாடுகள்

C) 188 நாடுகள்

D) 193 நாடுகள்

(குறிப்பு – சர்வதேச நிதி நிறுவனம் அல்லது நிதியமானது உலகின் மிகப்பெரிய முதன்மையான சர்வதேச நிதி நிறுவனம் ஆகும். 1930 இல் ஏற்பட்ட உலக நாடுகளின் பெரும் பொருளாதார மந்த நிலைக்கு பதிலாக 1944ஆம் ஆண்டு பிரிட்டன் உட்ஸ் மாநாட்டில் இது உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு நாடும் பக்கத்து நாடுகளிடம் கடன் வாங்குவது இதனால் குறைந்தது. இது தற்பொழுது 185 உறுப்பு நாடுகளை கொண்டுள்ளது)

82) கீழ்க்காணும் எது ஐநாவின் நிரந்தர பார்வையாளராக உள்ளது?

A) சர்வதேச வளர்ச்சி கூட்டமைப்பு

B) சர்வதேச நிதிக் கழகம்

C) சர்வதேச நிதி நிறுவனம்

D) எதுவும் அல்ல

(குறிப்பு – சர்வதேச நிதி நிறுவனம் ஒரு சுதந்திரமான சர்வதேச அமைப்பாகும். இது 185 உறுப்பினர்களை கொண்டுள்ளது. இதன் நோக்கமானது பொருளாதார நிலைத் தன்மையை ஏற்படுத்தி வளர்ச்சிக்கு வித்திடுவது ஆகும். இது ஐநாவின் பல்வேறு தன்னாட்சி நிறுவனங்களில் ஒன்றாக சிறப்பு முகவாண்மையாக குறிப்பிடப்படுகிறது. மேலும் இது ஐநாவின் நிரந்தர பார்வையாளராகவும் உள்ளது)

83) சர்வதேச நிதி நிறுவனத்தின் விதி எண் ஒன்றின்படி கீழ்க்காணும் எந்த நோக்கம் சரியானது?

I. சர்வதேச நிதி நிறுவனம், சர்வதேச பணவியல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கான வழிமுறைகளை உருவாக்குகிறது.

II. பரிவர்த்தனை விகிதங்களில் நிலைத்த தன்மை, உறுப்பு நாடுகளிடையே ஒழுங்கமைந்த பரிமாற்றத்திற்கான வழிமுறைகளை ஏற்படுத்துகிறது.

III. உறுப்பினர்களிடையே செலுத்தும் நிலையில் ஏற்படும் நிலையற்ற தன்மையின் தாக்கம் மற்றும் அதன் கால அளவினை குறைக்க செய்கிறது.

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – உறுப்பினர்களுக்கு இடையே நடைபெறும் நடப்பு பரிவர்த்தனையில் பல்தேசிய பணம் வழங்கல் முறை ஏற்படுவதற்கான உதவியை செய்தல், உலக வர்த்தக வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் அந்நிய செலாவணி பரிமாற்று விகிதங்களின் மீதான கட்டுப்பாடுகளை நீக்குதல், தனது பொது நிதி வளங்களை உறுப்பினர்களுக்கு தற்காலிகமாக பயன்படுத்தி தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான நம்பிக்கையை அளித்தல். மேற்கண்டவை அனைத்தும் சர்வதேச நிதி நிறுவனத்தின் விதி எண் ஒன்றின் படி முக்கிய நோக்கங்களாக கருதப்படுகிறது.)

84) சர்வதேச நிதி நிறுவனத்தின் செயல்பாடுகள் கீழ்கண்டவற்றுள் எது?

I. உறுப்பினர்களின் பொருளாதார கொள்கையினை கண்காணிப்பது.

II. செலுத்துநிலை தேவைக்கான தற்காலிக நிதி வழங்கல்.

III. குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் வறுமை தடுப்பு.

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – எந்த நாடு சர்வதேச நிதி நிறுவனத்தில் உறுப்பினராக இணைந்து அதன் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதோ அது தனது பொருளாதார கொள்கையை சர்வதேச நிதியத்தின் நோக்கத்திற்கு இணையானதாக கொண்டு செயல்பட வேண்டும். செலுத்துநிலை தேவைக்கான கடன்களை நிதியமானது உறுப்பு நாடுகளுக்கு தற்காலிகமாக வழங்குகிறது. நிதியமானது வருவாய் குறைந்து நாடுகளுக்கு நிபந்தனையற்ற கடன்களை அளித்து அந்நாடுகளில் வருமை ஒழிப்பிற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது.)

85) சர்வதேச நிதி நிறுவனத்தின் கடன்களில் இருந்து மீள்வதற்கான சர்வதேச பணிகளாக கருதப்படுபவை எது?

I. மிக அதிக கடனில் உள்ள ஏழை நாடுகள்(HIPC)

II. பல்தேசிய கடனில் இருந்து மீள்வதற்கான முன்னெடுப்பு(MDRI)

A) I மட்டும்

B) II மட்டும்

C) I, II இரண்டும்

D) I, II இரண்டும் அல்ல

(குறிப்பு – சர்வதேச நிதி நிறுவன மானது வருவாய் குறைந்து நாடுகளுக்கு நிபந்தனையற்ற கடன்களை அளித்து அந்த நாடுகளில் வறுமை ஒழிப்புக்கான முயற்சிகளை மேற்கொள்கிறது. இந்த முயற்சியில் சர்வதேச நிதி நிறுவனமானது உலக வங்கி மற்றும் பிற வளர்ச்சிக்கான பங்குதாரர்களும் கொண்டு பணியாற்றுகிறது. கூடுதலாக இந்த நிதியானது கடன்களில் இருந்து மீள்வதற்கான இரண்டு சர்வதேச பணிகளையும் மேற்கொள்கிறது. அவை மிக அதிக கடலில் உள்ள ஏழை நாடுகள் (HIPC) மற்றும் பல்தேசிய கடலில் இருந்து மீள்வதற்கான முன்னெடுப்பு(MDRI) என்பதாகும்

86) பல்தேசிய வளர்ச்சி வங்கியை கீழ்காணும் எந்த வகையின் கீழ் பிரிக்கமுடியாது?

A) உலக அளவில்

B) நாடு அளவில்

C) மண்டல அளவில்

D) துணை மண்டல அளவில்

(குறிப்பு – பல்தேசிய வளர்ச்சி வங்கிகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.அவை உலக அளவில், மண்டல அளவில் மற்றும் துணை மண்டல அளவில் என மூன்றாக பிரிக்கலாம்.இதன் மூலம் அவற்றின் ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை எளிதில் கண்டறியலாம். பல பல் தேசிய வளர்ச்சி வங்கிகள் மேலே குறிப்பிட்ட மூன்று வித பிரிவுகளையும் உள்ளடக்கியதாக குறிப்பிட்ட ஒரு கண்டத்தினை மட்டுமே நேரடியாக கொண்டு செயல்படுகின்றன. அவை ஆசிய வளர்ச்சி வங்கி, ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டுமான மற்றும் முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி, அமெரிக்க வளர்ச்சி வங்கி போன்றவைகள் ஆகும்)

87) ஒயிட் என்பவர் எந்த ஆண்டு ஐக்கிய மற்றும் துணை நாடுகளுக்கான சர்வதேச நிதியம் மற்றும் வளர்ச்சிக்கான வங்கியும் உருவாக்கக் கோரி ஐநாவிற்கு கோரிக்கை விடுத்தார்?

A) 1940 இல்

B) 1942 இல்

C) 1944 இல்

D) 1946 இல்

(குறிப்பு – ஒயிட் என்பவர் 1942ம் ஆண்டு, வளர்ச்சியை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு ஒரு கோரிக்கையை ஐநாவிற்கு அளித்தார். ஐக்கிய மற்றும் துணை நாடுகளுக்கான சர்வதேச நிதியத்தையும், மறு கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான வங்கியும் உருவாக்க கோரினார். இது போருக்குப் பிந்தைய சர்வதேச பணவியல் சீர்திருத்தங்களுக்கான அடிப்படைகளை வழங்கியது. இந்த கோரிக்கையானது போருக்குப் பிந்தைய பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில் இரண்டு நிறுவனங்களையும் அதிகாரம், வளங்கள் மற்றும் கட்டமைப்பை கொண்டதாக உருவாக்கக்கோரியது.)

88) பல் தேசிய வளர்ச்சி வங்கியின் உறுப்பினர் நாடு அல்லாதது கீழ்க்கண்டவற்றுள் எது?

I. பாகிஸ்தான்

II. வடகொரியா

III. கியூபா

A) I, II மட்டும்

B) I, III மட்டும்

C) II, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – பல் தேசிய வங்கிகள், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிகள் போலவே பொதுவான நிதி நிறுவனங்களாக உறுப்பு நாடுகளின் வளர்ச்சிக்கான பொறுப்புமிக்க அமைப்பாகும். கியூபா மற்றும் வட கொரியாவை தவிர உலகில் பெரும்பான்மையான நாடுகள் பல தேசிய வளர்ச்சி வங்கியின் உறுப்பினர் நாடு ஆகும் தேசிய வங்கியின் உறுப்பினரான எல்லா நாடுகளும் தங்கள் பங்களிப்பை அளித்து வங்கியானது அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து கடன்களை அவர்களுக்கு அளித்து வருகிறது)

89) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – பல்தேசிய வளர்ச்சி வங்கிகள் பெரும் அளவிலான வளர்ச்சி திட்டங்கள் குறிப்பாக நீர்மின் நிலையங்களுக்கான அணைகள், பாசன திட்டங்கள், போக்குவரத்து வளர்ச்சிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்கள், வறுமையை குறைத்து பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்து வளர்ச்சிக்கு வித்திடுவதாக இருக்கிறது.

கூற்று 2 – சர்வதேச நிதி நிறுவனமானது பெரும்பாலும் சுயநிதி இணை சார்ந்தது ஆனால் பல்தேசிய வளர்ச்சி வங்கிகள் தங்கள் சேவைகளுக்கு பெரும்பாலும் பங்குதாரர்களின் பங்களிப்பை சார்ந்தே செயல்படுகின்றன.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – பல பல்தேசிய வளர்ச்சி வங்கிகள் குறிப்பிட்ட ஒரு கண்டத்தினை மட்டுமே நேரடியாக கொண்டு செயல்படுகின்றன. அவை ஆசிய வளர்ச்சி வங்கி, ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டுமான மற்றும் முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி அமெரிக்க வளர்ச்சி வங்கி, இஸ்லாமிய வங்கி, ஐரோப்பிய முதலீட்டு வங்கி போன்றவைகளாகும். 1930 களின் பிற்பகுதியில் மற்றும் 1940 களின் முற்பகுதி பிற்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் தற்கால பொருளாதார வளர்ச்சிக்கான கருதுகோள்கள் தோற்றம் எடுத்தன. இது முக்கியமாக ஆங்கிலேய பொருளாதார அறிஞர் ஜான்மேயார்டு கீன்ஸ் குறிப்பிட்டதுபோல போருக்குப் பிந்தைய கால பொருளாதார மற்றும் சமூக தேவையாக தோற்றம் எடுத்தன).

90) ஆசிய வங்கி குறித்து கீழ்காணும் கூற்றுகளில் எது தவறானது?

A) ஆசிய வளர்ச்சி வங்கி ஒரு மண்டல பல்தேசிய நிதி நிறுவனம் ஆகும்

B) இது ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளில் வறுமையைக் குறைப்பதற்கான பணிகளை மேற்கொள்கிறது.

C) 1960 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது

D) இது தற்போது 66 உறுப்பினர்களைக் கொண்டது.

(குறிப்பு – ஆசிய வளர்ச்சி வங்கி ஒரு மண்டல பல்தேசிய நிதி நிறுவனம் ஆகும். இது ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளில் வறுமையைக் குறைப்பதற்கான பணிகளை மேற்கொள்கிறது.இது 1966ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது தற்போது 66 உறுப்பினர்களைக் கொண்டது. இவற்றில் பெரும்பான்மையான நாடுகள் ஆசிய பகுதியை சார்ந்தவை ஆகும் வங்கியின் பங்கு முதலீடாக 44 பில்லியன் அமெரிக்க டாலரையும் மற்றும் இருப்பாக 7.9 பில்லியன் அமெரிக்க டாலரையும் கொண்டுள்ளது)

91) ஆசிய வளர்ச்சி வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?

A) 1960

B) 1962

C) 1964

D) 1966

(குறிப்பு – ஆசிய வளர்ச்சி வங்கி 1966ல் உருவாக்கப்பட்டது. இந்த வங்கியில் தற்போது 66 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இவற்றில் பெரும்பான்மை ஆசிய பகுதியை சார்ந்தவை ஆகும்.1966 ஆம் ஆண்டில் இருந்து 2002-ம் ஆண்டு வரை இவ்வங்கியானது பொது மற்றும் தனியார் துறையினருக்கு 98.831 பில்லியன் தொகையை கடனாக வழங்கி உள்ளது. மேலும் 5 பில்லியன் கடன்களை பல்வேறு திட்டங்களுக்கு மண்டலத்திற்கு வெளியிலும் வழங்கியுள்ளது. இதன் ஆண்டு வருவாய் 500 பில்லியன் ஆகும்.)

92) ஆசிய வளர்ச்சி வங்கி நிர்வாக காரணங்களுக்காக ஆசியப் பகுதிகளை ஐந்து புவியியல் பகுதிகளாக பிரித்துள்ளது. அவற்றுள் தவறானது எது?

A) கிழக்கு மற்றும் மத்திய ஆசியா

B) பசிபிக்

C) தெற்கு ஆசியா

D) சுமத்ரா தீவுகள்

(குறிப்பு – ஆசிய வளர்ச்சி வங்கியானது தற்போது 5 புவியியல் பகுதியாக நாடுகளை பிரித்து அதற்கு ஏற்ப துறை ரீதியாக பணிகளை கொண்டு செயல்படுகிறது. அவை கிழக்கு மற்றும் மத்திய ஆசியா, பசிபிக், தி மெக்காங், தெற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியா என்பன ஆகும்.)

93) ஆசிய வளர்ச்சி வங்கிக்கு ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் பங்களிப்பு கண்டவற்றுள் எது?

A) 12.5 சதவீதம்

B) 13.5 சதவீதம்

C) 15.9 சதவீதம்

D) 18.6 சதவீதம்

(குறிப்பு – ஒவ்வொரு மண்டல துறைகளும் அதன் நாடுகளுக்கான திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளையும் மேற்கொள்கின்றன.துணை மண்டலங்கள் குறிப்பிட்ட நாட்டிற்கான உதவிகள் என்பதாக பணிகளை மேற்கொள்கின்றன. பிற வங்கிகளை போலவே ஆசிய வளர்ச்சி வங்கியும் தனக்கான நிதியினை பங்குதாரர்களிடம் இருந்து பெறுகிறது. ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் பங்களிப்பு இதன் 62 உறுப்பு நாடுகளை விட அதிகமாக 15.9 சதவீதமாகும்.)

94) ஷாங்காய் கூட்டமைப்பு(SCO) எந்த ஆண்டு துவக்கப்பட்டது?

A) 1995 இல்

B) 1997 இல்

C) 2001 இல்

D) 2003 இல்

(குறிப்பு – சீனாவின் விருப்பமான பட்டு சாலை முன்னெடுப்பில் இந்தியா இணைவதற்கு மறுத்துவிட்டது. ஷாங்காய் கூட்டமைப்பு பகுதியின் முழுமையான பாதுகாப்பிற்கான செயல் யுத்திகளை இந்தியா வகுத்துள்ளது. இது ஓர் ஐரோப்பிய ஆசிய அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு அமைப்பாகச் 2001 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.)

95) ஷாங்காய் கூட்டமைப்பின்(SCO) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

A) பீஜிங்

B) ஷாங்காய்

C) மியான்யாங்

D) ஷியான்

(குறிப்பு – ஷாங்காய் கூட்டமைப்பின் தலைமையகம் பீஜிங்கில் அமைந்துள்ளது. இது ஓர் ஐரோப்பிய ஆசிய அரசியல் பொருளாதார மற்றும் பாதுகாப்பு அமைப்பாக துவக்கப்பட்டது. இதன் துவக்கத்திற்கு காரணமாக ஷாங்காய் எனப்படும் ஐந்து நாடுகள் அமைந்திருந்தது. அவை சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜகிஸ்தான் ஆகிய நாடுகளை கொண்ட பல்தேசிய அமைப்பு ஆகும்)

96) தற்பொழுது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு எத்தனை உறுப்பினர்களை கொண்டுள்ளது?

A) ஐந்து உறுப்பினர்கள்

B) ஆறு உறுப்பினர்கள்

C) ஏழு உறுப்பினர்கள்

D) எட்டு உறுப்பினர்கள்

(குறிப்பு – 1996 ஆம் ஆண்டில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜகிஸ்தான் ஆகிய நாடுகளை கொண்டு, 2006 ஆம் ஆண்டு ஷாங்காய் கூட்டமைப்பு உருவானது. தற்பொழுது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 8 உறுப்பினர்களை கொண்டுள்ளது அவை இந்தியா, கஜகஸ்தான், சீனா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜகஸ்தான், ரஷ்யா மற்றும் உஸ்பெகிஸ்தான் என்பன ஆகும்.)

97) ஷாங்காய் கூட்டமைப்பின் எந்த ஆண்டு நடந்த கூட்டத்தில் இந்தியா அதன் முழுநேர உறுப்பினராக முதன் முறையாக கலந்து கொண்டது?

A) 2012 இல்

B) 2014 இல்

C) 2016 இல்

D) 2018 இல்

(குறிப்பு – 2018 ஆம் ஆண்டில் நடந்த ஷாங்காய் கூட்டமைப்பு கூட்டத்தில் இந்தியா அதன் முழுநேர உறுப்பினராக முதல் முறையாக கலந்துகொண்டது. இந்தியாவுடன் பாகிஸ்தான் 2017ஆம் ஆண்டில் கஜகஸ்தானில் நடந்த அஸ்தானா உச்சிமாநாட்டில் முழுநேர உறுப்பினராக இணைந்தன)

98) ஷங்காய் கூட்டமைப்பின் கீழ் தற்போது எத்தனை அரசுகள் பார்வையாளராக உள்ளன?

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

(குறிப்பு – ஷாங்காய் கூட்டமைப்பின் கீழ் நான்கு அரசுகள் பார்வையாளராக மற்றும் 6 அரசுகள் விவாத பங்கேற்பு உறுப்பினர்களாகவும் உள்ளன. ஷாங்காய் கூட்டமைப்பின் தத்துவமானது “ஷாங்காய் உற்சாகம் “என அறியப்படுகிறது. இது நல்லிணக்கம், நற்சிந்தனையான பணி, பிற கலாச்சாரங்களை மதித்தல், பிறநாட்டு உள் விவகாரங்களில் தலையிடாமல் இருத்தல் மற்றும் அணிசேராமை என்பன ஆகும்.)

99) பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (OPEC)எந்த ஆண்டிலிருந்து சந்தை நிலைக்கு ஏற்ப கச்சா எண்ணெய் விலையை தீர்மானிக்கும் முறையை துவங்கியது?

A) 1980 முதல்

B) 1982 முதல்

C) 1984 முதல்

D) 1986 முதல்

(குறிப்பு – பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (OPEC)என்பது ஆசிய நாடுகளுக்கான எண்ணெய் விற்பனையில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் மேல் அதிக கட்டணம் வசூலிப்பதாகும்.இது 1986 ஆம் ஆண்டில் இருந்து சந்தை நிலைக்கு ஏற்ப கச்சா எண்ணெய் விலையை தீர்மானிக்கும் முறையில் இருந்து துவங்குகிறது. உலக சந்தையில் ஆசிய பகுதிக்கான எண்ணெய் விலையை தீர்மானிப்பதில் மூன்று முக்கிய சந்தைகள் திகழ்கின்றன.)

100) உலக சந்தையில் ஆசிய பகுதிக்கான எண்ணெய் விலையை தீர்மானிக்கும் சந்தை கீழ்க்கண்டவற்றுள் எது?

I. ஐரோப்பிய சந்தையின் லயிட் சுவிட் எண்ணெய் நிறுவனமான ப்ரென்ட்.

II. அமெரிக்க சந்தையின் பிரதிநிதியாக ஃவெஸ்ட் டாக்ஸ் இடைநிலையாலர்கள்(WTI)

III. மத்திய கிழக்கு மற்றும் ஆசிய சந்தைக்கான துபாய்/ஓமன் நாடுகள் ஆகும்.

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – உலக சந்தையில் ஆசிய பகுதிக்கான எண்ணெய் விலையில் தீர்மானிப்பதில் மூன்று முக்கிய சந்தைகள் திகழ்கின்றன அவை, ஐரோப்பிய சந்தையின் லயிட் சுவிட் எண்ணெய் நிறுவனமான ப்ரென்ட், அமெரிக்க சந்தையின் பிரதிநிதியாக ஃவெஸ்ட் டாக்ஸ் இடைநிலையாலர்கள்(WTI) மற்றும் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய சந்தைக்கான துபாய்/ஓமன் நாடுகள் ஆகும்.)

101) ஒபெக் (OPEC) கூட்டமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

A) துபாய்

B) கத்தார்

C) வியன்னா

D) ஈராக்

(குறிப்பு – ஒபெக் கூட்டமைப்பு என்பது ஒரு அரசுகளுக்கு இடையிலான அமைப்பு ஆகும் இதன் நோக்கம் உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒரே விதமான பெட்ரோலிய கொள்கையை உருவாக்குவதற்கான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது ஆகும். இதன் அடிப்படையில் பெட்ரோலிய நாடுகளுக்கு பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிலையானதாக மற்றும் பாதுகாப்பானதாக பொருளாதார திறன்பட்டதாக தொடர்ந்து வழங்குவதாகும். இதன் தலைமையகம் ஆஸ்திரியாவின், வியன்னா நகரில் அமைந்துள்ளது.)

102) 1960ஆம் ஆண்டு கூட்டமைப்பின் மாநாடு கீழ்க்காணும் எந்த இடத்தில் நடந்தது?

A) துபாய்

B) பாக்தாத்

C) கத்தார்

D) குவைத்

(குறிப்பு – ஒப்பக் கூட்டமைப்பின் 1960 ஆம் ஆண்டு நடந்த பாக்தாத் மாநாட்டில் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசுலா நாடுகளை உறுப்பினராகக் கொண்டு துவக்கப்பட்டது. இதன் தலைமையகம் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் அமைந்துள்ளது. இது ஓர் அரசுகளுக்கு இடையிலான அமைப்பு ஆகும். இதன் நோக்கம் உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒரே விதமான பெட்ரோலிய கொள்கையை உருவாக்குவதற்காக ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதாகும்)

103) ஒபெக் (OPEC) நாடுகள் உலக எண்ணெய் உற்பத்தியில் எத்தனை சதவீதத்தை கொண்டுள்ளன?

A) 40 சதவீதம்

B) 42 சதவீதம்

C) 44 சதவீதம்

D) 46 சதவீதம்

(குறிப்பு – ஒபெக்(OPEC) நாடுகள் உலக எண்ணெய் உற்பத்தியில் 44 சதவீதத்தையும் மற்றும் உலகின் 81.5 சதவீத எண்ணெய் வளத்தையும் கொண்டுள்ளன. ஒபெக் (OPEC)நாடுகள் என்பது ஈரான், ஈராக், குவைத், சவுதிஅரேபியா மற்றும் வெனிசுலா நாடுகளை உறுப்பினர்களாக கொண்டதாகும். இதன் தலைமையகம் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் அமைந்துள்ளது. இது 1986ஆம் ஆண்டிலிருந்து சந்தை நிலைக்கு ஏற்ப கச்சா எண்ணெய் விலையை தீர்மானிக்கும் முறையிலிருந்து துவக்கியது.)

104) சர்வதேச அணுசக்தி கழகம் (IAEA)எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

A) 1953 இல்

B) 1955 இல்

C) 1957 இல்

D) 1959 இல்

(குறிப்பு – சர்வதேச அணுசக்தி கழகம்(IAEA) என்பது அணு சக்திக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஒருங்கிணைப்பாக அரசுகளுக்கு இடையிலான உலகம் தழுவிய அமைப்பாகும். இது 1957 ஆம் ஆண்டு ஐநா அமைப்பினால் சர்வதேச தன்னாட்சி நிறுவனமாக உருவாக்கப்பட்டது.அணுசக்தி கழகமானது தனது நிலையை நிலைநிறுத்துவதற்கான தனி சர்வதேச ஒப்பந்தத்தை கொண்டுள்ளது.)

105) அணுசக்தி கழகமானது ஐநாவின் கீழ்க்காணும் எந்த சபைக்கு தனது அறிக்கையை அளிக்கிறது?

I. பாதுகாப்பு சபை

II. பொது சபை

III. அறங்காவலர் குழு

A) I க்கு மட்டும்

B) II க்கு மட்டும்

C) I, II க்கு மட்டும்

D) இவை அனைத்திற்கும்

(குறிப்பு – அணுசக்தி கழகமானது ஐநாவின் பொது சபை மற்றும் பாதுகாப்பு சபை ஆகிய இரண்டிற்கும் தனது அறிக்கையை அளிக்கிறது. இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பாதுகாப்பானதாக மற்றும் அமைதியான வழியில் பயன்படுத்துவதற்கான பணியை மேற்கொள்கிறது.)

106) சர்வதேச அணுசக்தி கழகத்தின் தலைமையகம் கீழ்காணும் எந்த நாட்டில் அமைந்துள்ளது?

A) பிரான்ஸ்

B) அமெரிக்கா

C) இத்தாலி

D) ஆஸ்திரியா

(குறிப்பு – சர்வதேச அணுசக்தி கழகத்தின் தலைமையகம் ஆஸ்திரியாவின் வியன்னாவில் அமைந்துள்ளது. இதில் இந்தியா உறுப்பினராக உள்ளது. சர்வதேச அணுசக்தி கழகம் அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பாதுகாப்பானதாக மற்றும் அமைதியான வழியில் பயன்படுத்துவதற்கான பணியை மேற்கொள்கிறது. இது மேலும் ஐநாவின் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய தனது பங்களிப்பை செய்கிறது.)

107) எந்த ஆண்டு இந்திய அரசு மற்றும் அணுசக்தி கழகத்தின் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது?

A) 2003 ஆம் ஆண்டு

B) 2006 ஆம் ஆண்டு

C) 2009 ஆம் ஆண்டு

D) 2012 ஆம் ஆண்டு

(குறிப்பு – 2009 ஆம் ஆண்டு இந்திய அரசு மற்றும் அணுசக்தி கழகத்தின் இடையே “பாதுகாப்பான சிவில் அணுசக்தி வாய்ப்பிற்கான “ஒப்பந்தம் கையெழுத்தானது. பிறகு 2014இல் இந்தியா இதனை மாற்றி கூடுதல் நெறிமுறையாக (அமெரிக்க இந்திய அணு ஒப்பந்தத்தில் ஒரு பகுதியாக) ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை அணுசக்தி கழகத்துடன் ஏற்படுத்திக் கொண்டது)

108) அணுசக்தி சர்வதேச அணுசக்தி கழகம் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – சர்வதேச அணுசக்தி கழகம் 1957ஆம் ஆண்டு உருவானது.

கூற்று 2 – சர்வதேச அணுசக்தி கழகமானது தனது நோக்கமாக அணு ஆயுத பரவலைத் தடுத்து பாதுகாக்கிறது.

கூற்று 3 – சர்வதேச அணுசக்தி கழகத்தின் இந்தியா உறுப்பினர் நாடு அல்ல.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – சர்வதேச அணுசக்தி கழகமானது தனது நோக்கமாக அணு ஆயுத பரவலைத் தடுத்து பாதுகாக்கிறது. மேலும் அணுசக்தி சார்ந்த பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத்தினை தவறாக பயன்படுத்துவதை முன்னறிந்து தடுக்கிறது. இதன் தலைமையகம் ஆஸ்திரியாவின் வியன்னாவில் அமைந்துள்ளது. இதில் இந்தியா உறுப்பினராக உள்ளது.)

109) பிம்ஸ்டெக் (BIMSTEC) என்றழைக்கப்படும் வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டமைப்பின் உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை எத்தனை?

A) ஆறு

B) ஏழு

C) எட்டு

D) ஒன்பது

(குறிப்பு – வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டமைப்பு என்ற அழைக்கப்படும் பிம்ஸ்டெக் (BIMSTEC) ஓர் மண்டல கூட்டமைப்பாகும். இதன் உறுப்பு நாடுகளான ஏழு நாடுகள் நிலவியல் ரீதியாக நெருங்கிய மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் அமைந்துள்ள நாடுகள் ஆகும்.)

110) பிம்ஸ்டெக் கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாத நாடு கீழ்க்கண்டவற்றுள் எது?

A) பங்களாதேஷ்

B) சீனா

C) இந்தியா

D) மியான்மர்

(குறிப்பு – பிம்ஸ்டெக்(BIMSTEC) ஒரு மண்டலக் கூட்டமைப்பாகும். இதன் உறுப்பு நாடுகளான ஏழு நாடுகள் நிலவியல் ரீதியாக நெருங்கிய மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் அமைந்துள்ள பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், ஸ்ரீலங்கா, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகும் இது ஓர் துணை மண்டல கூட்டமைப்பாகும்.)

111) பிம்ஸ்டெக் கூட்டமைப்பு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

A) 1995 இல்

B) 1996 இல்

C) 1997 இல்

D) 1998 இல்

(குறிப்பு – பிம்ஸ்டெக் கூட்டமைப்பு( வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டமைப்பு) 1997 ஆம் ஆண்டு ஜூன் ஆறாம் நாள் பாங்காக் தீர்மானத்தின்படி தோற்றுவிக்கப்பட்டது. இதன் செயலகம் டாக்காவில் உள்ளது.)

112) தெற்கு தெற்கு ஒத்துழைப்பு ஏற்படுவதன் காரணமான பாண்டுங் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

A) 1954 இல்

B) 1955 இல்

C) 1956 இல்

D) 1957 இல்

(குறிப்பு – தெற்கு-தெற்கு ஒத்துழைப்பானது (SSC) உலகின் தென் பகுதியில் உள்ள நாடுகள் தங்களுடைய வளர்ச்சிக்கான தொழில்நுட்பங்களை பரிமாறிக் கொள்வதாகும்.1955 ஆம் ஆண்டு நடந்த பாண்டுங் மாநாடானது தெற்கு தெற்கு ஒத்துழைப்பு ஏற்படுவதற்கான காரணமாக அமைந்தது.)

113) இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு(IBSA) எந்த ஆண்டு துவக்கப்பட்டது?

A) 2001 இல்

B) 2003 இல்

C) 2005 இல்

D) 2007 இல்

(குறிப்பு – இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு(IBSA) என்பது ஒரு சர்வதேச முத்தரப்பு அமைப்பாகும். இந்த நாடுகள் இடையே சர்வதேச ஒருங்கிணைப்பு ஏற்படுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இது முறையே இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர்களால் 2003 ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் நாள் பிரேசிலியா தீர்மானத்தின்படி உருவாக்கப்பட்டது.)

114) வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளின் கூட்டமைப்பு (NATO)எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

A) 1947 இல்

B) 1949 இல்

C) 1951 இல்

D) 1953 இல்

(குறிப்பு – வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளின் கூட்டமைப்பு (NATO) 1949 ஆம் ஆண்டில் அமெரிக்கா, கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் சோவியத் யூனியனுக்கு எதிரான கூட்டு பாதுகாப்பு அமைப்பாக ஏற்படுத்தப்பட்டது. இது மேற்கு உலக நாடுகளுடன் போர் இல்லாத அமைதி காலத்தில் அமெரிக்கா ஏற்படுத்திக் கொண்ட முதல் ராணுவ ஒப்பந்தம் ஆகும்.)

115) வட அட்லாண்டிக் ஒப்பந்தத்துடன் தொடர்பில்லாத நாடு கீழ்கண்டவற்றுள் எது?

A) டென்மார்க்

B) ஸ்வீடன்

C) நெதர்லாந்து

D) நார்வே

(குறிப்பு – 1949 ஆம் ஆண்டு, வட அட்லாண்டிக் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் குறிப்பாக அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளில் யார் ஒருவர் தாக்கப்பட்டாலும் அனைவரும் கலந்தாலோசித்து கூட்டாக தாக்குவது என்பதை ஏற்றுக் கொண்டன. இந்த ராணுவக் கூட்டு பாதுகாப்பு ஏற்பாட்டின்படி நேட்டோவானது மேற்கு ஐரோப்பிய பகுதி முழுவதையும் அமெரிக்காவின் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தது.)

116) ஐநாவின் உலக தீவிரவாத தடுப்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கையில் எத்தனை அமைப்புகள் இணைந்து இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது?

A) 30

B) 32

C) 34

D) 36

(குறிப்பு – ஐநாவின் உலக தீவிரவாத தடுப்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கை என்பது ஒரு 36 அமைப்புகள் இன்டர்போல் எனப்படும் சர்வதேச அமைப்பு மற்றும் உலக அமைப்பு ஆகியவை ஐநாவின் தலைமையின் கீழ் சர்வதேச தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு உதவுவதற்காக ஏற்படுத்திக்கொண்ட கூட்டணி ஆகும். இதன் நோக்கமானது ஐநாவின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஐநாவின் உலக தீவிரவாத எதிர்ப்பு செய்யும் உத்திகள் மற்றும் இவை சார்ந்த தீர்மானங்களை உறுப்பு நாடுகளிடையே ஒருங்கிணையும் திறனை வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்துகிறது.)

117) முழுமையான அணு சோதனை தடை உடன்படிக்கை (CTBT)எந்த ஆண்டு கையெழுத்தானது?

A) 1993 இல்

B) 1996 இல்

C) 1998 இல்

D) 1999 இல்

(குறிப்பு – முழுமையான அணு சோதனை தடை உடன்படிக்கை (CTBT)என்பது எல்லா விதமான ராணுவ மற்றும் சிவில் சார்ந்த அனைத்து பரிசோதனைகளையும் தடை செய்யும் ஒரு பல்தேசிய உடன்படிக்கையாகும். இது ஜெனிவாவில் நடந்த ஆயுத குறைப்பு மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் நாள் ஐநாவின் பொது சபையில் கையெழுத்தானது.)

118) முழுமையான அணு சோதனை தடை உடன்படிக்கையில் எத்தனை நாடுகள் கையெழுத்திட்டுள்ளன?

A) 170 நாடுகள்

B) 175 நாடுகள்

C) 180 நாடுகள்

D) 183 நாடுகள்

(குறிப்பு – முழுமையான அணு சோதனை தடை உடன்படிக்கையில் 183 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன மற்றும் 163 ஒப்புதல்களைமிகப் பெரும் ஆதரவுடன் பெற்ற அணு ஆயுதக் உழைப்பிற்கான உடன்படிக்கையாகும். இது அணு தொழில்நுட்ப ஆற்றலைக் கொண்ட நாடுகளான சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், இஸ்ரேல், வடகொரியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின். ஒப்புதல் பெற்ற பின்பே நடைமுறைக்கு வந்தது.)

119) முழுமையான அணு சோதனை தடை உடன்படிக்கை(CTBT) எனும் அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

A) வியன்னா

B) பாரிஸ்

C) லண்டன்

D) நியூயார்க்

(குறிப்பு – முழுமையான அணு சோதனை தடை உடன்படிக்கையால் அது முழுமையான அணு ஆயுத சோதனை தடை அமைப்பை ஏற்படுத்தியது.ஆஸ்திரியாவின் வியன்னாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகள் உறுப்பு நாடுகள் பின்பற்றுவதை உறுதி செய்கிறது. இந்த உடன்படிக்கைக்கு 1996 ஆம் ஆண்டில் இந்தியா ஆதரவு அளிக்கவில்லை. பின்வரும் காரணங்களால் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்காமல் உள்ளது. இந்த உடன்படிக்கை ஆயுதக்குறைப்பை முழுமையாக தடுக்கும் நோக்கில் இல்லை மற்றும் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களுக்கு ஆதரவாக அவர்களின் ஆயுதக்குவிப்பை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது என்பதாகும்)

120) அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம்(NPT) எந்த ஆண்டு கையெழுத்தானது?

A) 1966 இல்

B) 1968 இல்

C) 1970 இல்

D) 1972 இல்

(குறிப்பு – அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் 1968ஆம் ஆண்டு கையெழுத்தானது. இதன் நோக்கமானது அணு ஆயுதம் மற்றும் ஆயுத தொழில்நுட்பம் பரவாமல் தடுப்பதாகும். மேலும் அணுசக்தியை அமைதியான வழியில் பயன்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது என்பதுடன் தனது எதிர்கால இலக்காக அணு ஆயுதக் குறைப்பு மற்றும் முழுமையான பொது ஆகிற குறைப்பை கொண்டுள்ளது)

121) அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் பங்கேற்காத நாடு எது?

I. இந்தியா

II. பாகிஸ்தான்

III. இஸ்ரேல்

IV. வடகொரியா

A) I, II, III மட்டும்

B) I, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் 1968ஆம் ஆண்டு கையெழுத்தானது. இதன் நோக்கமானது அணு ஆயுதம் மற்றும் ஆயுத தொழில்நுட்பம் பரவாமல் தடுப்பதாகும். மேலும் அணுசக்தியை அமைதியான வழியில் பயன்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது என்பதுடன் தனது எதிர்கால இலக்காக அணு ஆயுதக் குறைப்பு மற்றும் முழுமையான பொது ஆகிற குறைப்பை கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா, இஸ்ரேல், வடகொரியா, பாகிஸ்தான் மற்றும் தெற்கு சூடான் பங்கேற்கவில்லை.)

122) சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. சர்வதேச பொது மன்னிப்பு சபை

II. மனித உரிமை கண்காணிப்பகம்

III.மருத்துவ சான்ஸ் பிராண்டியர்ஸ்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – சர்வதேச அரசு சாரா நிறுவனங்களின் அதிகரித்துவரும் எண்ணிக்கையானது உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இவற்றின் செயல்பாடு, எல்லை, அளவு, உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் அமைந்துள்ள இடத்தை பொருத்து பெருமளவில் வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக சர்வதேச பொதுமன்னிப்பு சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், மருத்துவ சான்ஸ் பிராண்டியர்ஸ் போன்றவற்றைக் கூறலாம்).

123) 1910 ஆம் ஆண்டு எத்தனை அமைப்புகள் ஒரு குழுவாக இணைந்து சர்வதேச அமைப்புகளுக்கான சங்கத்தை துவக்கினர்?

A) 120

B) 130

C) 132

D) 140

(குறிப்பு – 1945இல் ஐநாவின் சாசனம் ஏற்றுக்கொள்ளப்படும் வரை அரசு சாரா நிறுவனங்கள் என்ற பதமே வழக்கத்தில் இல்லை. 1910 ஆம் ஆண்டு 132 அமைப்புகள் ஒரு குழுவாக இணைந்து சர்வதேச அமைப்புகளுக்கான சங்கத்தை துவக்கினர். 1929இல் சில அமைப்புகள் தொடர்ச்சியாக சர்வதேச சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டன.மேலும் தனியார் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அமைப்புகள் இணைந்து ஜெனிவாவில் ஓர் கூட்டமைப்பை ஏற்படுத்தினர்.)

124) சர்வதேச பொதுமன்னிப்பு சபை எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

A) 1960 இல்

B) 1961 இல்

C) 1962 இல்

D) 1963 இல்

(குறிப்பு – சர்வதேச பொதுமன்னிப்பு சபையானது மிகப்பெரிய சர்வதேச அரசு சாராத நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் பணியானது உலகம் தழுவிய அளவில் மனித உரிமைகளை பாதுகாப்பது ஆகும். இது தனது பணிக்காக சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் மற்றும் பிற சர்வதேச மனித உரிமைகளுக்கான கருவிகளைக் கொண்டு எல்லாவிதமான மனித உரிமைகளையும் மேம்படுத்துவதற்கான உலக அளவிலான பிரச்சார இயக்கத்தை மேற்கொள்கிறது. இது 1961ம் ஆண்டு லண்டனில் தோற்றுவிக்கப்பட்டது.

125) சர்வதேச பொதுமன்னிப்பு சபை எந்த ஆண்டு தனது பிரசாரத்திற்காக நோபல் பரிசை பெற்றது?

A) 1975 இல்

B) 1976 இல்

C) 1977 இல்

D) 1978 இல்

(குறிப்பு – சர்வதேச பொதுமன்னிப்பு சபை 1971ம் ஆண்டு லண்டனில் அதன் ஸ்தாபகரான பீட்டர் பென்டன் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. 1977ம் ஆண்டு சர்வதேச பொது மன்னிப்பு சபையானது சித்திரவதைகளுக்கு எதிரான தனது பிரச்சாரத்திற்காக நோபல் பரிசை வென்றது.)

126) சர்வதேச பொது மன்னிப்பு சபையின் முக்கிய குறிக்கோள்கள் கீழ்கண்டவற்றுள் எது?

I. பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாத்தல்

II. கைதிகளுக்கான மரணதண்டனை சித்திரவதைகள் மற்றும் கொடூர தண்டனை முறைகளை ஒழித்தல்.

III. உலக ஆயுத வியாபாரத்தை ஒழுங்குபடுத்துவது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – சர்வதேச பொது மன்னிப்பு சபையின் முக்கிய குறிக்கோள்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாத்தல், சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளை முடிவுக்கு கொண்டு வருதல், கைதிகளின் கருத்துரிமையை பாதுகாத்தல், அகதிகளை பாதுகாத்தல், உடல் மற்றும் உளவியல் ரீதியான மனித உரிமை மீறல்கliடம் இருந்து விடுவித்தல் மற்றும் பாதுகாத்தல், கைதிகளுக்கான மரண தண்டனை, சித்திரவதைகள் மற்றும் கொடூர தண்டனை முறைகளை ஒழித்தல், அரசியல் கைதிகளுக்கான வெளிப்படையான விசாரணை, உலக ஆயுத வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல் போன்றவைகள் ஆகும்.)

127) மனித உரிமை கண்காணிப்பகம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

A) 1974 இல்

B) 1978 இல்

C) 1982 இல்

D) 1986 இல்

(குறிப்பு – 1978 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட மனித உரிமை கண்காணிப்பகமானது துவக்கத்தில் ஐரோப்பா மற்றும் ஆசிய பகுதிகளின் “ஹெல்சிங்கி வாட்ச் ” ஆக அறியப்பட்டது. இது ஒரு சர்வதேச லாப நோக்கமில்லாத அரசு சாரா நிறுவனம் ஆகும். இதனை ஊழியர்களாக மனித உரிமையில் மிகவும் திறமை பெற்றவர்கள், பல்வேறு நாடுகளில் புகழ்பெற்ற அறிஞர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள், பல்வேறுபட்ட பின்புறங்களில் தேசங்கடந்த செயல்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது)

128) மனித உரிமை கண்காணிப்பகத்திற்கு ஐநா விருது எந்த ஆண்டு கொடுக்கப்பட்டது?

A) 2006 இல்

B) 2008 இல்

C) 2010 இல்

D) 2012 இல்

(குறிப்பு – மனித உரிமை இயக்கங்களுக்கு பங்களித்தல் மற்றும் கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வருதல் போன்றவற்றில் சிறப்பான செயல்பாட்டிற்காக மனித உரிமை கண்காணிப்பகத்திற்கு ஐநா விருது வழங்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்த விருது சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் அறுபதாம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அமெரிக்காவின் நியூயார்க்கில் மனித உரிமை கண்காணிப்பகத்திற்கு வழங்கப்பட்டது.)

129) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவை(UNHRC) எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

A) 2004 இல்

B) 2006 இல்

C) 2008 இல்

D) 2010 இல்

(குறிப்பு – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவை, உலக அளவில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் 2006ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு நிபுணத்துவம் கொண்ட நிறுவனம் ஆகும். சில காலம் முன்பு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவைக்கு இந்தியாவை அதிக வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தேர்ந்தெடுத்து உறுப்பினர் ஆக்கியது)

130) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவையின் உறுப்பினர் எண்ணிக்கை எத்தனை?

A) 41

B) 43

C) 45

D) 47

(குறிப்பு – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவை 47 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கிறது. உறுப்பினர்கள் பொது அவையால் ஆண்டுக்கு ஒரு முறை நேரடியாக, ரகசிய வாக்கெடுப்பு முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களின் பதவி காலம் ஓராண்டு ஆகும். இதன் உறுப்பினர்கள் அனைவரும் புவியியல் ரீதியான சமத்துவ சுழற்சி அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் மண்டல குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்படுவர். உறுப்பினர் நாடுகள் இரண்டு முறைக்கு மேல் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் பதவியில் இருக்க முடியாது.)

131) கிரீன்பீஸ் அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

A) இங்கிலாந்து

B) பின்லாந்து

C) நெதர்லாந்து

D) போலந்து

(குறிப்பு – கிரீன்பீஸ் அமைப்பு ஓர் அரசு சாரா சுற்றுச்சூழல் நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நகரில் உள்ளது மேலும் 39 நாடுகளில் தனது அலுவலகங்களைக் கொண்டுள்ளது. சூழலியல் செயல்பாட்டாளர் கனடாவைச் சார்ந்த ஸ்டோவே மற்றும் அமெரிக்காவின் டோரதி ஸ்டோவே என்ற இருவரால் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது)

132) கிரீன்பீஸ் அமைப்பு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

A) 1970 இல்

B) 1971 இல்

C) 1972 இல்

D) 1973 இல்

(குறிப்பு – கிரீன்பீஸ் அமைப்பு 1971 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. பல் வகை உயிர்களும் தாவரங்கள் செழித்து வளருமாறு அமைந்துள்ள பூமியின் திறனை காப்பதே இதன் நோக்கமாக இந்த அமைப்பு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் வன அழிப்பு, பருவநிலை மாற்றம், அளவுக்கு அதிகமாக கடல் வளங்களைப் பயன்படுத்தல் மற்றும் அணு ஆயுதம் போன்றவற்றிற்கு எதிராக இந்த அமைப்பு பிரசாரம் மேற்கொண்டு உள்ளது)

133) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவை என்பது சுதந்திரமான ஒரு சர்வதேச அமைப்பாகும்.

கூற்று 2 – கிரீன்பீஸ் அமைப்பு என்பது ஒரு அரசு சாரா சுற்றுச்சூழல் நிறுவனமாகும்.

கூற்று 3 – கிரீன்பீஸ் அமைப்பு எந்த அரசாங்கத்திடமிருந்தும், வர்த்தக நிறுவனங்களிடம் இருந்தும், அரசியல் கட்சிகளிடம் இருந்தும் நிதியை பெறுவதில்லை.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – கிரீன்பீஸ் அமைப்பு எந்த அரசாங்கத்திடமிருந்தும், வர்த்தக நிறுவனங்களிடம் இருந்தும், அரசியல் கட்சிகளிடம் இருந்தும் நிதியை பெறுவதில்லை. மாறாக 30 லட்சத்துக்கும் மேலாக உலகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களிடம் இருந்தும், அறக்கட்டளைகள் இடமிருந்தும் இதற்கான நிதியை பெறுகிறது.ஐநாவின் பொருளாதார மற்றும் சமூக அமைப்பிற்கு ஆலோசனை அளிக்கும் குழுவிலும், சர்வதேச அரசு சாரா நிறுவனங்களின் அமைப்பின் உறுப்பினராகவும் இந்த கிரீன்பீஸ் அமைப்பு உள்ளது. கிரீன்பீஸ் அமைப்பு அதன் நேரடி கள செயல்பாட்டிற்காக பாராட்டப்பட்டுள்ளது.)

134) பொருத்துக

I. சர்வதேச தொலைத்தொடர்பு கழகம் – a) 1919

II. சர்வதேச அஞ்சல் கழகம் – b) 1920

III. சர்வதேச அமைதி மாநாடு – c) 1865

IV. சர்வதேச சங்கம் – d) 1874

A) I-c, II-d, III-a, IV-b

B) I-d, II-c, III-b, IV-a

C) I-a, II-d, III-c, IV-b

D) I-b, II-d, III-a, IV-c

(குறிப்பு – சர்வதேசத் தந்தி கழகம் என்று அழைக்கப்படும் சர்வதேச தொலைத்தொடர்பு கழகம் 1775 ஆம் ஆண்டு மே 15 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற சர்வதேச தந்தி கழகத்தின் கூட்டத்தில் உருவாக்கப்பட்டது. சர்வதேச அஞ்சல் கழகம் 1874ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சர்வதேச அமைதி மாநாடு 1919 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் நாள் முதல் உலகப்போரின் முடிவில் நேச நாடுகளின் சார்பில் அமைதியை மையமாகக் கொண்டதாக நடைபெற்ற பாரிஸ் அமைதி மாநாடு ஆகும்.)

135) ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கியின்(AIIB) தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?

A) 50

B) 60

C) 70

D) 80

(குறிப்பு – ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கி (AIIB)என்பது ஓர் பல்தேசிய வளர்ச்சி வங்கி ஆகும். இதன் நோக்கம் ஆசிய பசிபிக் பகுதியில் உள்கட்டுமானத்தை வளர்ப்பதாகும். இந்த வங்கி தற்போது 70 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மேலும் தனது நோக்கத்திற்கு ஆதரவாக உலகம் முழுவதும் இருபத்தி ஏழு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!