MCQ Questions

சாலைப்பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் 8th Social Science Lesson 17 Questions in Tamil

8th Social Science Lesson 17 Questions in Tamil

17. சாலைப்பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

கீழ்க்கண்டவற்றுள் சாலை விபத்துகளுக்கான காரணங்கள் எவை?

1. அதிக வேகம்

2. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல்

3. சிவப்பு விளக்கில் நில்லாமை

4. பாதுகாப்பு கருவிகளை தவிர்த்தல்

5. வாகன ஓட்டிகளின் கவனச் சிதறல்

A) அனைத்தும் B) 1, 2, 4 C) 1, 2, 3, 4 D) 1, 2, 3, 5

(குறிப்பு: நான்கு சக்கர வாகனங்களில் இருக்கைப் பட்டை அணிவதும் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிவதும் சட்டமாக்கப்பட்டுள்ளது.)

ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவம் (மருத்துவ ஊர்தி), காவல் மற்றும் தீயணைப்பு சேவைகள் ஆகியவற்றை அளிக்கும் அவசரகால சேவை

A) 101 B) 103 C) 108 D) 110

(குறிப்பு: உதவிக்கு 108 என்ற எண்ணினையும் சாலை விபத்துகளுக்கு 103 என்ற எண்ணினையும் அழைக்கலாம்.)

சாலை வழி மற்றும் போக்குவரத்து துறையால் மொத்தம் __________ போக்குவரத்து எச்சரிக்கை குறியீடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

A) 20 B) 30 C) 40 D) 50

(குறிப்பு: எச்சரிக்கை குறியீடுகளின் முக்கிய செயல்பாடு சூழ்நிலைக்கேற்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாகும்.)

போக்குவரத்துக் குறியீடுகளின் முதல் வகை

A) கட்டாயக் குறியீடுகள்

B) எச்சரிக்கை குறியீடுகள்

C) தகவல் குறியீடுகள்

D) ஒலிக் குறியீடுகள்

(குறிப்பு: கட்டாயக் குறியீடுகளை மீறுவது சாலை மற்றும் போக்குவரத்து துறையினால் சட்டப்படி தண்டிக்கப்பட கூடிய குற்றமாகும்.)

எச்சரிக்கை குறியீடுகள் பொதுவாக__________ வடிவில் காணப்படும்.

A) சதுரம்

B) முக்கோணம்

C) செவ்வகம்

D) வட்டம்

(குறிப்பு: முக்கோண வடிவ எச்சரிக்கைக் குறியீடுகள் சாலையை பயன்படுத்துவோருக்கு எதிர்வரும் சாலையின் நிலை குறித்து எச்சரிக்கின்றன.)

வட்டவடிவில் காணப்படும் போக்குவரத்துக் குறியீடு

A) கட்டாயக் குறியீடுகள்

B) எச்சரிக்கை குறியீடுகள்

C) தகவல் குறியீடுகள்

D) ஒலிக் குறியீடுகள்

(குறிப்பு: வட்டவடிவக் குறியீடுகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிடும் குறியீடுகள் ஆகும்.)

தகவல் குறியீடுகள் _________ வடிவில் காணப்படும்.

A) சதுரம்

B) முக்கோணம்

C) செவ்வகம்

D) வட்டம்

(குறிப்பு: திசைகள், இலக்குகள் பற்றிய தகவல்களை தகவல் குறியீடுகள் அளிக்கின்றன.)

கூற்று 1: ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் ஒருவர் போக்குவரத்து குறியீடுகள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டியதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.

கூற்று 2: போக்குவரத்து விளக்குகள் சாலைகள் சந்திக்கும் இடங்களிலும் பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: போக்குவரத்து விளக்குகள் உலகளாவிய நிறக் குறியீடுகளை பயன்படுத்துகின்றன.)

இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடிய மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு

A) 1987 ஜூன் 1

B) 1988 ஜூலை 1

C) 1989 ஜூலை 1

D) 1990 ஜூன் 1

(குறிப்பு: மோட்டார் வாகனச் சட்டம் 1988 ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.)

கீழ்க்கண்டவற்றுள் எது சாலையின் அடிப்படைக் குறியீடு?

A) மத்தியில் உள்ள இடைவிடப்பட்ட வெள்ளைக் கோடு

B) தொடர்ச்சியான வெள்ளைக்கோடு

C) தொடர்ச்சியான மஞ்சள் கோடு

D) இரண்டு தொடர்ச்சியான மஞ்சள் கோடுகள்

(குறிப்பு: மத்தியில் உள்ள இடைவிடப்பட்ட வெள்ளைக் கோடு குறியீடு உள்ள இடத்தில் சாலையில் தடம் மாறலாம், வாகனங்களை முந்தி செல்லலாம் அல்லது பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் U-திருப்பத்தில் திரும்பலாம்.)

தொடர்ச்சியான வெள்ளைக்கோடு குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.

1. இவை முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் காணப்படும்.

2. வாகனங்களை முந்தவோ, தடம் மாறவோ, அனுமதியில்லை என்பதை இக்குறியீடு குறிக்கின்றது.

3. வலப்புறம் மட்டுமே வாகனங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும்.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: இடதுபுறம் மட்டுமே வாகனங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதை தொடர்ச்சியான வெள்ளைக்கோடு உணர்த்துகிறது.)

கூற்று 1: தொடர்ச்சியான ஒரு மஞ்சள் கோடு வாகனங்களை முந்திச் செல்லலாம் மற்றும் இடதுபுறம் மட்டுமே வாகனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

கூற்று 2: இரண்டு தொடர்ச்சியான மஞ்சள் கோடுகள் தடம் மாறுவதை தடை செய்கிறது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: தொடர்ச்சியான மஞ்சள் கோடுகள் வெளிச்சம் குறைவான பகுதிகளில் உள்ள சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.)

கீழ்க்கண்டவற்றுள் எது ஆபத்தான மற்றும் இருவழி போக்குவரத்து உள்ள சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது?

A) தொடர்ச்சியான ஒரு மஞ்சள் கோடு

B) இரண்டு தொடர்ச்சியான மஞ்சள் கோடுகள்

C) நிறுத்த கோடு

D) தொடர்ச்சியான வெள்ளைக்கோடு

(குறிப்பு: இரண்டு தொடர்ச்சியான மஞ்சள் கோடுகள் உள்ள சாலைகளில் நாம் நமது தடத்திற்குள்ளாக வாகனங்களை முந்திச் செல்லலாம்.)

சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

1. நிறுத்தக்கோடு: பாதசாரிகள் கடக்கும் கோட்டிற்கு முன்பாக குறியிடப்பட்டிருக்கும். இவை போக்குவரத்து சமிக்ஞைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டிய பகுதியைக் குறிக்கின்றது.

2. தொடர்ச்சியான மற்றும் இடைவிடப்பட்ட கோடுகள்: இடைவிடப்பட்ட கோட்டின் பக்கமாக ஓட்டும்போது பிற வாகனங்களை முந்திச் செல்லலாம். ஆனால் தொடர்ச்சியான கோட்டின் பக்கமாக செல்லும்போது பிற வாகனங்களை முந்தி செல்லக்கூடாது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு

A) ஒரு வழி சாலையில் ஓட்டுநர் தனது வலதுபுறம் வாகனம் முந்திச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

B) இருவழி சாலையில் வலப்புறம் மட்டுமே ஓட்டுநர் வாகனத்தை செலுத்த வேண்டும்.

C) தடை செய்யப்பட்ட இடங்களான மருத்துவமனை, பள்ளிக்கூடம், போன்றவைகளின் அருகில் ஓட்டுநர்கள் ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது.

D) ஓட்டுநர் வாகனத்தினை நிறுத்தும்பொழுது பின்வரும் வாகனங்களுக்கு தெரியும் பொருட்டு தனது கையினை செங்குத்தாக மேல் உயர்த்த வேண்டும்.

(குறிப்பு: ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தினை குறைக்கும் பொழுது தனது வலது கையினை மேல் உயர்த்தி நிதானமாக மேலும் கீழுமாக அசைக்க வேண்டும்.)

கண்மூடித்தனமாக ஓட்டுவதாலும் ஓட்டுநரின் அலட்சியம் காரணமாகவும் ஏற்படும் இறப்பு தொடர்பான குற்றங்களுக்கு ஓட்டுநர் மீது காவல்துறை _________ பிரிவின் கீழ் கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்ய நேரிடும்.

A) 302 A B) 303 A C) 304 A D) 305 A

குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களின் வாகனங்களில் பயன்படுத்தப்படும் இலக்கத் தகடுகள் (Number plates)

A) சிவப்பு வண்ணத்தகடு

B) நீல வண்ணத்தகடு

C) வெள்ளை வண்ணத்தகடு

D) மஞ்சள் வண்ணத்தகடு

அயல்நாட்டு பிரதிநிதிகள்/ தூதர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு அளிக்கப்படும் இலக்கத்தகடுகள்

A) சிவப்பு வண்ணத்தகடு

B) நீல வண்ணத்தகடு

C) வெள்ளை வண்ணத்தகடு

D) மஞ்சள் வண்ணத்தகடு

கூற்று 1: சாதாரண குடிமகனுக்கு சொந்தமான வாகனத்தின் இலக்கத்தகடு மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

கூற்று 2: வணிக ரீதியான வாகனங்களின் இலக்கத்தகடு வெள்ளை நிறத்தில் காணப்படும்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு:

சாதாரண குடிமகனுக்கு சொந்தமான வாகனத்தின் இலக்கத்தகடு வெள்ளை நிறத்தில் காணப்படும்.

வணிக ரீதியான வாகனங்களின் இலக்கத்தகடு மஞ்சள் நிறத்தில் காணப்படும்.)

ஓட்டுநர் வாகனம் ஓட்டும் போது பின்வரும் எந்த ஆவணங்களை கட்டாயமாக வைத்திருக்கவேண்டும்.

1. ஓட்டுநர் உரிமம் 2. வாகனத்தின் பதிவுச் சான்றிதழ்

3. வரிச் சான்றிதழ் 4. காப்பீட்டுச் சான்றிதழ்

5. வாகன உறுதித்தன்மை 6. அனுமதிச் சான்றிதழ்

A) அனைத்தும் B) 1, 2, 4 C) 1, 2, 3, 4 D) 1, 2, 4, 5

__________அமைச்சகம் சாலை விபத்துக்களையும் சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தவிர்க்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

A) உள்துறை அமைச்சகம்

B) மனித நல மேம்பாட்டு அமைச்சகம்

C) சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்

D) பாதுகாப்புத் துறை அமைச்சகம்

சாலை பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பன்முக யுக்தியான ‘4E’ல் அடங்குபவை

1. பொறியியல் 2. செயலாக்கம் 3. கல்வி

4. அவசரம் 5. உந்துபொறி

A) 1, 2, 3, 4 B) 2, 3, 4, 5 C) 1, 2, 3, 5 D) 1, 3, 4, 5

(குறிப்பு: இவை மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான சாலை பொறியியலையும் மேம்பட்ட வாகன பாதுகாப்பு தரநிலைகளையும் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளித்தல், செம்மைப்படுத்தப்பட்ட அவசர சிகிச்சை பராமரிப்பு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு சிறந்த பாதுகாப்பான யோசனை ஆகும்.)

சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

1. சரக்கு வாகனங்கள் வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும் கம்பிகளை ஏற்றிச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

2. கனரக வாகனங்களில் பூட்டுகளில்லா நிறுத்தும் அமைப்பும் இரு சக்கர வண்டிகளில் நிறுத்தக்கருவியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

3. இருசக்கர வண்டிகள் தெளிவாக தெரியும் பொருட்டு தானியங்கி முகப்பு விளக்கு ஒளிர்விப்பான் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

சாலை விபத்தில் சிக்கியவர்கள் பணமில்லா பரிவர்த்தனை மூலம் சிகிச்சை அளிக்கும் முன்னோட்டத் திட்டம் கீழ்க்கண்ட எந்த இடங்களில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது?

1. தேசிய நெடுஞ்சாலை எண் 8

2. தேசிய நெடுஞ்சாலை எண் 33

3. தேசிய நெடுஞ்சாலை எண் 38

4. நாற்கர சாலைகள்

5. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு இணைப்பு சாலைகள்

A) அனைத்தும் B) 1, 2, 4, 5 C) 1, 2, 3, 5 D) 1, 3, 4, 5

தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு __________ கி.மீ தொலைவிலும் ஒரு அவசர சிகிச்சை ஊர்தி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிறுத்தப்பட்டிருக்கின்றது.

A) 25 B) 40 C) 50 D) 60

(குறிப்பு: அவசர ஊர்திகளுக்காக பெறப்படும் அழைப்புகளை ஏற்க 24×7 செயல்படும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதுடன் சாலை பாதுகாப்பு தன்னார்வத் தொண்டர்களுக்கு முதலுதவி அளிப்பதில் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.)

தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாக மற்றும் தடையற்ற பயணம் செய்ய பாலங்களை கட்டுவதற்கான திட்டம் ________ ஆண்டு தொடங்கப்பட்டது.

A) 2014 B) 2015 C) 2016 D) 2019

(குறிப்பு: இத்திட்டம் சேது பாரதம் என அழைக்கப்படுகிறது.)

சேது பாரத திட்டத்தின் மூலம் __________ ஆண்டிற்குள் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும், இருப்புப்பாதை குறுக்கீடு இல்லாமல் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

A) 2017 B) 2018 C) 2019 D) 2020

சாலை பாதுகாப்புக்கான பிரேசிலியா பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்ட ஆண்டு

A) 2014 B) 2015 C) 2016 D) 2017

(குறிப்பு: பிரேசிலியா பிரகடனம் என்பது ஐ.நா. உலக சுகாதார அமைப்பு இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பிற்கான இரண்டாவது உலகளாவிய உயர்மட்ட மாநாடு ஆகும்.)

பொருத்துக.

1.

i) வேகக் கட்டுப்பாட்டு அளவு

2.

ii) கனரக வாகனங்களுக்குத் தடை

3.

iii) வழி விடு

4.

iv) நில்

5.

v) செங்குத்தான மேடு

A) i ii iv iii v

B) ii iii iv i v

C) v iv iii ii i

D) iv iii ii i v

பொருத்துக.

1.

i) வலது எதிர் திருப்பம்

2.

ii) இடது எதிர் திருப்பம்

3.

iii) குறுகிய சாலை எதிர்வருகிகிறது

4.

iv) அகண்ட சாலை எதிர்வருகிறது

5.

v) வழுக்கும் சாலை

A) i ii iv iii v

B) ii iii iv i v

C) v iv iii ii i

D) iv iii ii i v

குழந்தைகளிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கத்தோடு வெளியிடப்பட்ட புத்தகங்கள் எவை?

1. சுவச்ச சேஃபர் 2. சுவச்ச யாத்ரா

3. சுவரஷித் யாத்ரா 4. சுவரஷித் சேஃபர்

A) அனைத்தும் B) 1, 2 C) 2, 3 D) 1, 3

(குறிப்பு: இந்த இரு சித்திர புத்தகங்களை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.)

வாழ்வை காப்பாற்று நிறுவனம் (Save Life Foundation) பற்றிய கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.

1. இது ஒரு சுதந்திரமான, இலாப நோக்கில்லாத, அரசு சாரா, பொதுத் தொண்டு அறக்கட்டளையாகும்.

2. இது இந்தியா முழுவதும் சாலை பாதுகாப்பு மற்றும் அவசர மருத்துவ வசதியினை மேம்படுத்துவதற்காக பணியாற்றி வருகின்றது.

A) இரண்டும் சரி

B) 1 மட்டும் சரி

C) 2 மட்டும் சரி

D) இரண்டும் தவறு

சாலை பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு ஆண்டும் ____________மாதம் அனுசரிக்கப்படுகின்றது.

A) ஜனவரி

B) பிப்ரவரி

C) ஏப்ரல்

D) டிசம்பர்

(குறிப்பு: சாலை பாதுக்காப்பு வாரம் என்பது சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் சாலை விபத்துக்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதையும் நோக்கமாக கொண்ட தேசிய நிகழ்வு ஆகும்.)

இந்தியாவில் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் _________ ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது.

A) சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்

B) இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சில்

C) சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்

D) உள்துறை அமைச்சகம்

(குறிப்பு: இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சில், பாதுகாப்பு உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து பொதுமக்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.)

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கொண்டாட்டம் ___________ ஆல் துவங்கப்பட்டதாகும்.

A) சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்

B) இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சில்

C) சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்

D) உள்துறை அமைச்சகம்

(குறிப்பு: சாலை பாதுகாப்பு வாரம் சாலையினை உபயோகிப்பவர்களுக்கு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்துகிறது.)

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் ________ வரையிலான பத்தாண்டுகள் சாலை பாதுகாப்பு நடவடிக்கைக்கான பதிற்றாண்டாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

A) 2001-2010

B) 2004-2014

C) 2005-2015

D) 2011-2020

(குறிப்பு: சாலைகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது, சாலை உபயோகிப்பவர்களின் நடவடிக்கைகளை மேம்படுத்துவது மற்றும் அவசர கால சேவையினை மேம்படுத்துவது ஆகியவற்றின் மூலம் இப்பபதிற்றாண்டில் இலட்சக்கணக்கான மக்களின் உயிரினை காக்க முற்படுகின்றது.)

செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு எத்தனை உறுதிமொழிகளைப் பரிந்துரைத்துள்ளது?

A) 5 B) 8 C) 10 D) 20

சிவப்பு விளக்கு ஒளிரும் போது

A) பாதை தெளிவாக இருக்கும் போது தொடர்ந்து செல்லலாம்.

B) வாகனத்தை நிறுத்தி பச்சைவிளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்.

C) நண்பனின் குறுந்தகவலுக்கு விரைவாக பதில் அனுப்பலாம்.

D) செல்லிடப்பேசியில் உரையாடலாம்.

(குறிப்பு: இரவில் போக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கும்போது பல குறுக்கு சந்திப்புகளில் உள்ள சைகை விளக்குகளை காவலர்கள் அணைத்து விடலாம். ஆனால் அப்பகுதிகளைக் கடக்கும் போது மிகவும் எச்சரிக்கையுடன் தொடரலாம். வாகனங்களை நிறுத்தத் தேவையில்லை.)

பாதசாரிகள் சாலையை கடக்குமிடம்

A) எங்கு வேண்டுமானாலும்

B) சமிக்ஞைகளுக்கு அருகில்

C) வரிகோட்டுப் பாதையில்

D) இவற்றில் எதுவுமில்லை

(குறிப்பு: அனைத்து சாலை சந்திப்புகளிலும் மற்றும் பாதசாரி கடக்கும் கோடுகள் உள்ள இடங்களிலும் ஓட்டுநர் கட்டாயமாக வாகனத்தின் வேகத்தை குறைக்க வேண்டும்.)

ABS என்பதனை விரிவாக்கம் செய்க.

A) எதிர் நிறுத்தி ஆரம்பம் (Anti Brake Start)

B) வருடாந்திர அடிப்படை அமைப்பு (Annual Bare System)

C) பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti lock Braking System)

D) இவற்றுள் எதுவுமில்லை

அவசர சிகிச்சை ஊர்தி வரும்பொழுது

A) முன்பக்கம் வாகனம் இல்லாத போது கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.

B) முன்னுரிமை எதுவும் அளிக்கத் தேவையில்லை

C) நம் வாகனத்தினை சாலை ஓரமாக செலுத்தி தடையில்லாமல் கடக்க அனுமதிக்க வேண்டும்

D) அவசர சிகிச்சை ஊர்தியின் பின்புறம் மிகுந்த வேகத்துடன் பின் தொடர வேண்டும்

பொருத்துக.

1. மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் i) வரிக்கோட்டு பாதை

2. புதிய சிற்றுந்துகளுக்கான ஒரு முறை வரி ii) சாலைப்பாதுகாப்பு

குறித்த சித்திர புத்தகம்

3. பாதசாரி iii) ஆறு மாதங்கள்

4. பிரேசிலியா பிரகடனம் iv) 15 வருடங்கள்

5. சுவச்ச சேஃபர் v) பன்னாட்டு மாநாடு

A) ii iii i iv v

B) iii i iv ii v

C) iii iv i v ii

D) v iv iii ii i

கூற்று: சாலை குறியீடுகள் எளிதில் புரிந்துகொள்ள கூடிய ஒன்று.

காரணம்: அவைகள் பெரும்பாலும் படங்களாக இருக்கின்றன.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.

C) கூற்று தவறு, காரணம் சரி

D) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!