Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

சாலைப்பாதுகாப்பு Book Back Questions 7th Social Science Lesson 26

7th Social Science Lesson 26

26] சாலைப்பாதுகாப்பு

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

கார்பூலிங் ஒவ்வொருவரும் ஒரு இடத்திற்கு வழக்கமாக மகிழுந்தில் செல்லும் போது அந்த இடத்திற்கு அதிகமான மகிழுந்து செலுத்தப்படுகிறது. இதை தவிர்க்க மகிழுந்தில் பணயப்பகிர்வு மேற்கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அதிக மகிழுந்து செல்வதை தடுத்தல். ஒரே பகுதியிலிருந்தோ அல்லது ஒரே வழித்தடத்தில் தினந்தோறும் மகிழுந்து அல்லது இரு சக்கதர வாகனத்தில் செல்பவர்கள் அதே இடத்திற்கோ அல்லது அதே தடத்தில் செல்பவர்களை உடன் அழைத்துச் செல்வதே கார்பூலிங் ஆகும்.

ரக்க்ஷா பாதுகாப்பான வாகன இயக்கம். ரக்ஷா ஒரு தானியங்கி கருவி. இது வாகனத்தில் பொருத்தப்பட்டு வாகனம் தற்போது எங்கு உள்ளது என்பதையும், வாகனத்தின் இயந்திரத்தின் செயல்பாட்டினை கண்காணிக்கவும், வாகனத்தின் பதட்ட நிலையையும் உடனடியாக வெளிப்படுத்துகிறது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. சாலைப்பாதுகாப்பு என்பது இவர்களுக்கானது

(அ) வழிப்போக்கர்கள்

(ஆ) ஓட்டுநர்கள்

(இ) பொதுமக்கள்

(ஈ) சாலையைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும்

2. சாலை விபத்துகள் ஒரு நாட்டின் —— பாதிக்கின்றன

(அ) முன்னேற்றத்தை

(ஆ) வாழ்வை

(இ) பொருளாதாரத்தை

(ஆ) மேற்கூறிய அனைத்தையும்

3. அனுமதி என்பது

(அ) இயக்குவதற்கு அனுமதி

(ஆ) பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதி

(இ) ஓட்டுநருக்கு சான்றிதழ்

(ஈ) வாகனத்தை பதிவு செய்த சான்றிதழ்

4. ரக்க்ஷா பாதுகாப்பு

(அ) பாதசாரிகள்

(ஆ) மோட்டார் வாகன ஓட்டிகள்

(இ) கார் இயக்குபவர்கள்

(ஈ) பயணிகள்

5. இந்தியாவில் சாலைப்பாதுகாப்பு வாரம் முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட வருடம்

(அ) 1947

(ஆ) 1990

(இ) 1989

(ஈ) 2019

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. போக்குவரத்தில் மனிதனின் மிக பயனள்ள கண்டுபிடிப்பு ———- ஆகும்.

2. நமது வாழ்க்கைப் பயணத்தில் ———–யைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகும்.

3. சாலைகளில் அதிகமான வாகங்களால் ———— மற்றும் ————– மாசுபாடும் ஏற்படுகின்றன.

4. ————குடும்பத்திற்கு வருமானம் ஈட்டித் தருபவர் ஆவார்.

5. மருத்துவ உதவியின் அவசர தேவைக்கு ———- எண்ணை அழைக்கலாம்.

III. பொருத்துக:

1. தகவல் குறியீடுகள் – அ) போக்குவரத்து விளக்குகள்

2. வரிக்குதிரை கடப்பு – ஆ) குறுகிய வளைவு குறியீடு

3. கட்டாயக் குறியீடுகள் – இ) பெட்ரோல் பங்க் குறியீடு

4. எச்சரிக்கைக் குறியீடுகள் – ஈ) ஓட்டுநர் உரிமம்

5. வாகனம் ஓட்டும் உரிமை -உ) பாதசாரிகள்

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: கார் பூலிங் என்பது ஒரே தடத்திலிருந்து பலர் ஒன்று கூடி ஒரே வாகனத்தைப் பயன்படுத்துவது.

காரணம்: அது எரிபொருள், நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்துகிறது.

(அ) கூற்று சரி, காரணம் தவறு

(ஆ) கூற்று சரி, காரணமும் சரி

(இ) கூற்று தவறு, காரணம் சரி

(ஈ) இரண்டுமே தவறு

V. பொருந்தாத இணையைக் கண்டறிக:

(அ) கார் (ஆ) டிரக் (இ) டெம்போ (ஈ) ஏரோப்ளேன்

VI. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

(அ) பள்ளிப் பாடத்திட்டத்தில், சாலைப் பாதுகாப்புக் கல்வியை இணைப்பது மாணவர்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதே ஆகும்.

(ஆ) சாலைகளில் மண் குவிப்பதைத் தடை செய்ய வேண்டும்.

(இ) குழந்தைப் பருவத்திலிந்தே சாலைப் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்தல், பிற்காலத்தில் அவர்களது பழக்க வழக்கமாகிவிடும்

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. சாலையைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும், 2. மேற்கூறிய அனைத்தையும், 3. இயக்குவதற்கு அனுமதி, 4. கார் இயக்குபவர்கள், 5. 1989

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. சக்கரம், 2. வாகனங்களை, 3. போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று, 4. குடும்பத்தலைவன், 5. 108

III. பொருத்துக:

1. இ, 2. உ, 3. அ, 4. ஆ, 5. ஈ

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று சரி, காரணமும் சரி

V. பொருந்தாத இணையைக் கண்டறிக:

ஏரோப்ளேன்

VI. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

குழந்தைப் பருவத்திலிந்தே சாலைப் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்தல், பிற்காலத்தில் அவர்களது பழக்க வழக்கமாகிவிடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!