Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் Book Back Questions 8th Social Science Lesson 21

8th Social Science Lesson 21

21] சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

இரவில் விளக்குகள்: இரவில் போக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கும் போது பல குறுக்கு சந்திப்புகளில் உள்ள சைகை விளக்குகளை காவலர்கள் அணைத்து விடலாம். ஆனால் அப்பகுதிகளைக் கடக்கும் போது மிகவும் எச்சரிக்கையுடன் தொடரலாம். வாகனங்களை நிறுத்தத் தேவையில்லை.

இந்திய தண்டனைச் சட்டம் 304 A பிரிவு: கண்மூடித்தனமாக ஓட்டுவதாலும் ஓட்டுநரின் அலட்சியம் காரணமாகவும் ஏற்படும் இறப்பு தொடர்பான குற்றங்களுக்கு ஓட்டுநர் மீது காவல் துறை மேற்கூறிய பிரிவின் கீழ் கிரிமினல் குற்ற வழக்குப் பதிவு செய்ய நேரிடும்.

சேது பாரதம்: தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாக மற்றும் தடையற்ற பயணம் செய்ய பாலங்களைக் கட்டுவதற்கான திட்டம் 2016இல் தொடங்கப்பட்டது. அது 2019ஆம் ஆண்டிற்குள் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும், இருப்புப்பாதை குறுக்கீடு இல்லாமல் உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

வாழ்வைக் காப்பாற்று நிறுவனம் (Save LIFE Foundation): இது ஒரு சுதந்திரமான, இலாப நோக்கில்லாத, அரசு சாரா, பொதுத் தொண்டு அறக்கட்டளையாகும். இது இந்தியா முழுவதும் சாலை பாதுகாப்பு மற்றும் அவசர மருத்துவ வசதியினை மேம்படுத்துவதற்காக பணியாற்றி வருகின்றது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. சிவப்பு விளக்கு ஒளிரும் போது

(அ) பாதை தெளிவாக இருக்கும் போது நீங்கள் தொடர்ந்து செல்லலாம்

(ஆ) நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சை விளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்

(இ) உன் நண்பனின் குறுந்தகவலுக்கு விரைவாக பதில் அனுப்பலாம்

(ஈ) செல்லிடப் பேசியில் உரையாடலாம்

2. பாதசாரிகள் சாலையைக் கடக்குமிடம்

(அ) எங்கு வேண்டுமானாலும்

(ஆ) சமிக்ஞைகளுக்கு அருகில்

(இ) வரிகோட்டு பாதையில்

(ஈ) இவற்றில் எதுவுமில்லை

3. சாலை பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் மாதம்

(அ) டிசம்பர்

(ஆ) ஜனவரி

(இ) மார்ச்

(ஈ) மே

4. அவசர காலத்தில், அவசர சிகிச்சை ஊர்தி சேவைக்காக அழைக்க வேண்டிய எண்

(அ) 108

(ஆ) 100

(இ) 106

(ஈ) 101

5. சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் யாவை?

(அ) அதிவேகம்

(ஆ) குடிபோதையில் ஓட்டுதல்

(இ) ஓட்டுநர்கள் கவனச்சிதறல்

(ஈ) இவை அனைத்தும்

6. போக்குவரத்துக் குறியீடுகளின் முதல் வகை

(அ) கட்டாய குறியீடுகள்

(ஆ) எச்சரிக்கை குறியீடுகள்

(இ) தகவல் குறியீடுகள்

(ஈ) இவற்றில் எதுவுமில்லை

7. சேது பாரதம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு

(அ) 2014

(ஆ) 2015

(இ) 2016

(ஈ) 2017

8. ABS என்பதனை விரிவாக்கம் செய்க:

(அ) எதிர் நிறுத்தி ஆரம்பம் (Anti Brake Start)

(ஆ) வருடாந்திர அடிப்படை அமைப்பு (Annual Bare System)

(இ) பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti-lock Braking System)

(ஈ) இவற்றுள் எதுவுமில்லை

9. வளைவில் முந்துவது

(அ) அனுமதிக்கப்படுகிறது

(ஆ) அனுமதியில்லை

(இ) கவனத்துடன் அனுமதிக்கப்படுகிறது

(ஈ) நமது விருப்பம்

10. அவசர சிகிச்சை ஊர்தி வரும்பொழுது

(அ) முன்பக்கம் வாகனம் இல்லாத போது கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும்

(ஆ) முன்னுரிமை எதுவும் அளிக்கத் தேவையில்லை

(இ) நம் வாகனத்தினைச் சாலை ஓரமாக செலுத்தி தடையில்லாமல் கடக்க அனுமதிக்க வேண்டும்

(ஈ) அவசர சிகிச்சை ஊர்தியின் பின்புறம் மிகுந்த வேகத்துடன் பின் தொடர வேண்டும்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வாகனம் ஓட்டும் பொழுது எப்போதும் ___________ புறம் செல்லவும்.

2. கட்டாய குறியீடுகள் ___________ வடிவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

3. __________ வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துகின்றது.

4. அதிக வேகம்: _________ ஆபத்து.

5. நான்கு சக்கர வாகனத்தில் ____________ அணிவதும் இரு சக்கர வாகனத்தில் _________ அணிவதும் கட்டாயம் எனச்சட்டம் உள்ளது.

பொருத்துக:

1. மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் – வரிக்கோட்டு பாதை

2. புதிய சிற்றுந்துகளுக்கான ஒரு முறை வரி – சாலைப்பாதுகாப்புக் குறித்த சித்திர புத்தகம்

3. பாதசாரி – ஆறு மாதங்கள்

4. பிரேசிலியா பிரகடனம் – 15 வருடங்கள்

5. சுவச்ச சேஃபர் – பன்னாட்டு மாநாடு

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. சாலை விபத்துக்கள் தொடர்பான பிரச்சனை சாலையில் மட்டுமே உள்ளது.

2. பாதை தடத்தை மாற்றும் முன்பு கண்ணாடியினைப் பார்க்க வேண்டும்.

3. ஒளிரும் மஞ்சள் விளக்கு, வேகத்தினை குறைத்தும் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. இரு சக்கர வண்டியில் ஒருவர் மட்டுமே பின் இருக்கையில் அமர அனுமதிக்கப்படுகிறார்கள்.

5. சாலைகள் மனிதனின் மிக மோசமான கண்டுபிடிப்புகளில் ஒன்று.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. பின்வரும் கூற்று(களில்) சரியல்லாதது எது?

(i) முன்புற வாகனத்திலிருந்து சரியான இடைவெளியில் தொடரவும்.

(ii) வேக கட்டுப்பாட்டு அளவினைக் கடைபிடிக்க வேண்டும். ஒரு போதும் வேகத்திற்கான எல்லையினைத் தாண்டக்கூடாது.

(iii) வாகனம் ஓட்டும் பொழுது இருக்கை வார்பட்டை அணியத் தேவையில்லை.

(iv) வளைவுகளிலும் திருப்பங்களிலும் வேகத்தினைக் குறைக்க வேண்டாம்.

(அ) i, iii மட்டும்

(ஆ) ii, iv மட்டும்

(இ) i, ii மட்டும்

(ஈ) iii, iv மட்டும்

2. கூற்று: மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது விபத்துக்களை ஏற்படுத்துகின்றது.

காரணம்: மயக்கம் காரணமாக பார்வை பாதிக்கப்படுகின்றது.

(அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்

(ஆ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல

(இ) கூற்று சரி காரணம் தவறு

(ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு

3. கூற்று: சாலை குறியீடுகள் எளிதில் புரிந்துகொள்ள கூடிய ஒன்று.

காரணம்: அவைகள் பெரும்பாலும் படங்களாக இருக்கின்றன.

(அ) கூற்று சரி, காரணம் தவறு

(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்

(இ) கூற்று தவறு, காரணம் சரி

(ஈ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

4. பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி (சாலை பாதுகாப்பு விதிகள்).

(அ) வளைவுகளில் மெதுவாக செல்

(ஆ) வேக கட்டுப்பாட்டு அளவினைக் கடைபிடி

(இ) வாகனம் ஓட்டும் பொழுது செல்லிடப் பேசியைப் பயன்படுத்து

(ஈ) சாலைகளில் நடப்பதைத் தவிர்க்கவும்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சை விளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்.

2. வரிகோட்டு பாதையில் 3. ஜனவரி 4. (108) 5. இவை அனைத்தும்

6. கட்டாய குறியீடுகள் 7. (2016) 8. பூட்டுதலில்லா நிறுத்தம் அமைப்பு 9. அனுமதியில்லை

10. நம் வாகனத்தினைச் சாலை ஓரமாக செலுத்தி தடையில்லாமல் கடக்க அனுமதிக்க வேண்டும்.

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. இடது 2. வட்ட 3. வேக கட்டுப்பாட்டுக் கருவி 4. அதிக

5. இருக்கை பட்டை, தலைக்கவசம்

பொருத்துக: (விடைகள்)

1. மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் – ஆறு மாதங்கள்

2. புதிய சிற்றுந்துகளுக்கான ஒரு முறை வரி – 15 வருடங்கள்

3. பாதசாரி – வரிக்கோட்டு பாதை

4. பிரேசிலியா பிரகடனம் – பன்னாட்டு மாநாடு

5. சுவச்ச சேஃபர் – சாலைப்பாதுகாப்பு குறித்த சித்திர புத்தகம்

சரியா / தவறா எனக் குறிப்பிடுக: (விடைகள்)

1. தவறு

2. சரி

3. சரி

4. சரி

5. தவறு

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. iii, iv மட்டும்

2. கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.

3. கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.

4. வாகனம் ஓட்டும் பொழுது செல்லிடப் பேசியைப் பயன்படுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!