Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

சூழ்நிலை அறிவியல் Book Back Questions 9th Science Lesson 24

9th Science Lesson 24

24] சூழ்நிலை அறிவியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

மண்புழுக்கள் உழவனின் நண்பன் என அழைக்கப்படுகின்றன. கரிமப் பொருள்களை செரிமானம் செய்த பின் இவை நைட்ரஜன் சத்து நிறைந்த புழுவிலக்கிய மண் (Vermicasting) எனப்படும் கழிவை வெளியேற்றுகின்றன.

நீரின் முக்கியத்துவத்தினைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் மார்ச் 22ஆம் தேதியானது உலக நீர் தினமாக பின்பற்றப்படுகிறது.

சுவிட்சர்லாந்து நாட்டில் கிலான்ட் என்ற இடத்தில் 1948ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் நாள் ஐ.யூ.சி.என் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப் பெருக்கத்தினையும் பாதிக்கக் கூடிய உயிர்க் கோளத்தில் காணப்படும் அனைத்துக் காரணிகளும் __________ என அழைக்கப்படுகின்றன.

(அ) உயிரியல் காரணங்கள்

(ஆ) உயிரற்ற காரணிகள்

(இ) உயிர்க் காரணிகள்

(ஈ) இயற் காரணிகள்

2. வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகளிலுள்ள பனிக்கட்டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை _________ எனப்படும்.

(அ) ஆவியாதல்

(ஆ) குளிர்வித்தல்

(இ) பதங்கமாதல்

(ஈ) உட்செலுத்துதல்

3. வளிமண்டல கார்பன் டைஆக்ஸைடு (CO2) தாவரங்களுக்குள் உட்செல்லும் நிகழ்வு _________ எனப்படும்.

(அ) ஒளிச்சேர்க்கை

(ஆ) உட்கிரகித்தல்

(இ) சுவாசித்தல்

(ஈ) சிதைத்தல்

4. __________ ன் அளவு வளிமண்டலத்தில் உயர்வதன் விளைவாக பசுமை வீட்டு விளைவும் புவி வெப்பமயமாதலும் ஏற்படுகின்றன.

(அ) கார்பன் மோனாக்சைடு

(ஆ) கந்தக டைஆக்ஸைடு

(இ) நைட்ரஜன் டை ஆக்ஸைடு

(ஈ) கரியமில வாயு

பொருத்துக:

நுண்ணுயிரிகள் அதன் பங்கு

1. நைட்ரஜன் நிலைப்படுத்துதல் – நைட்ரசோமோனாஸ்

2. அமோனியாவாதல் – அசோடோபாக்டர்

3. நைட்ரேட்டாதல் – சூடோமோனாஸ் சிற்றினங்கள்

4. நைட்ரேட் வெளியேற்றம் – அழுக வைக்கும் பாக்டீரியாக்கள்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. நைட்ரஜன் ஒரு பசுமை வாயு ஆகும்.

2. நன்றாக வளர்ச்சியடையாத வேர்த் தகவமைப்பு இடைநிலைத்தாவரங்களில் காணப்படுகின்றது.

3. பாலூட்டிகளில் வெளவால்கள் மட்டுமே பறக்கும்.

4. மண்புழுக்கள் அதிக அதிர்வெண் கொண்ட எதிரொலித்தல் என அழைக்கப்படும் அமைப்பைப் பயன்படுத்துக்கின்றன.

5. கோடைகால உறக்கம் என்ற தகவமைப்பானது குளிர் நிலையைச் சமாளிக்க பயன்படுவதாகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. உயிர்க்காரணிகள் 2. பதங்கமாதல் 3. ஒளிச்சேர்க்கை 4. கரியமில வாயு

பொருத்துக:

1. நைட்ரஜன் நிலைப்படுத்துதல் – அசோடோபாக்டர்

2. அமோனியாவாதல் – அழுகவைக்கும் பாக்டீரியங்கள்

3. நைட்ரேட்டாதல் – நைட்ரசோமோனாஸ்

4. நைட்ரேட் வெளியேற்றம் – சூடோமோனாஸ் சிற்றினங்கள்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக)

1. தவறு

சரியான விடை: கார்பன்டை ஆக்ஸைடு ஒரு பசுமையான வாயு ஆகும்.

2. தவறு

சரியான விடை: நன்றாக வளர்ச்சியடைந்த வேர்த் தகவமைப்பு இடைநிலைத் தாவரங்களில் காணப்படகிறது.

3. சரி

4. தவறு

சரியான விடை: வெளவால்கள் அதிக அதிர்வெண் கொண்ட எதிரொலித்தல் என அழைக்கப்படும் அமைப்பை பயன்படுத்துகின்றன.

5. தவறு

சரியான விடை: கோடை கால உறக்கம் என்ற தகவமைப்பானது வெப்பமான, வறண்ட நிலையைச் சமாளிக்க பயன்படுவதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!