Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

செல் உயிரியல் Book Back Questions 7th Science Lesson 11

7th Science Lesson 11

11] செல் உயிரியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

மூலச் செல்கள்: எந்தவொரு வகை செல்லுக்குள் செல் பிரிதல் அடைந்து பெருக்கம் அடைந்து வளர்ச்சியடையும் திறன் உடையது. ஆனால் மூலச் செல்கள் மிகவும் ஆச்சரியமானவை. கருவிலிருந்து பெறப்படும் மூலச் செல்கள் மிகவும் சிறப்பானது. ஏனெனில் உடலில் உள்ள எந்தவொரு செல்லாகவும் அவை மாறக்கூடியது. அதாவது இரத்த செல்கள், நரம்பு செல்கள், தசை செல்கள் அல்லது சுரப்பி செல்கள். எனவே, அறிவியல் அறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள், சில நோய்களைக் குணப்படுத்தவும், தடுக்கவும் மூலச் செல்களைப் பயன்படுத்தி வருகின்றனர் உதாரணமாக முதுகுத் தண்டில் ஏற்படும் காயம்.

பல்வேறு வகையான தாவரங்கள் வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டுள்ளதற்குக் காரணம் கணிகங்கள் ஆகும். பசுங்கணிகம் பச்சை நிறத்திற்கு காரணம். வண்ண கணிகங்கள் மலர் மற்றும் பழங்களுக்கு வண்ணத்தை அளிக்கிறது. பழங்கள் பழுக்கும் போது, பசுங்கணிகங்கள் வண்ண கணிக்கங்களாக மாறுகின்றன. ஸ்டார்ச் சர்க்கரையாக மாறுகிறது. இது தான் காய் கனியாவதற்கான இரகசியமாகும்.

சிவப்பு ரத்த செல்களில் உட்கரு இல்லை. உட்கருவின்றி இந்த செல்கள் விரைவில் இறக்கின்றன; சுமார் இரண்டு மில்லியன் சிவப்பு செல்கள் ஒவ்வொரு நொடியும் இறக்கின்றன. அதிர்ஷ்டவசமாக, மனித உடம்பில் புதிய சிவப்பு ரத்த செல்கள் தினமும் தோன்றுகின்றன.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. உயிரினங்களின் அடிப்படையாக உள்ளது.

(அ) செல்

(ஆ) புரோட்டோப் பிளாசம்

(இ) செல்லுலோஸ்

(ஈ) உட்கரு

2. நான் ஒரு விலங்கு செல்லின் வெளிப்புற அடுக்கு நான் யார்?

(அ) செல் சுவர்

(ஆ) உட்கரு

(இ) செல் சவ்வு

(ஈ) உட்கரு சவ்வு

3. செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?

(அ) லைசோசோம்

(ஆ) ரைபோசோம்

(இ) மைட்டோகாண்ட்ரியா

(ஈ) உட்கரு

4. ____________ செல் பகுப்பிற்கு உதவுகிறது.

(அ) எண்டோபிளாஸ்மிக் வளை

(ஆ) கோல்கை உறுப்புகள்

(இ) சென்ட்ரியோல்

(ஈ) உட்கரு

5. செல்லின் பல்வேறு உறுப்புகளுக்குப் பொருத்தமான அறிவியல் சொல் ___________

(அ) திசு

(ஆ) உட்கரு

(இ) செல்

(ஈ) செல் நுண்உறுப்பு

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. செல்லில் உள்ள ஜெல்லி போன்ற பொருள் _________ என்று அழைக்கப்படுகிறது.

2. நான் தாவரத்தில் சூரிய ஆற்றலை உணவாக மாற்றுவேன். நான் யார்? __________

3. முதிர்ந்த இரத்தச் சிவப்பு செல்லில் _________ இல்லை.

4. ஒரு செல் உயிரினங்களை ___________ மூலமே காண இயலும்.

5. சைட்டோபிளாசம் + உட்கரு ____________

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. விலங்கு செல்களில் செல் சுவர் உள்ளது.

2. சால்மோனெல்லா என்பது ஒரு செல்லால் ஆன பாக்டீரியா ஆகும்.

3. செல் சவ்வு அனைத்தையும் ஊடுருவ அனுமதிக்கக்கூடியது.

4. தாவர செல்களில் மட்டுமே பசுங்கணிகங்கள் உள்ளன.

5. மனித வயிறு ஒரு உறுப்பாகும்.

6. ரைபோசோம் ஒரு சவ்வுடன் கொண்ட சிறிய நுண் உறுப்பு ஆகும்.

பொருத்துக:

1. கடத்தும் கால்வாய் – உட்கரு

2. தற்கொலைப்பை – எண்டோபிளாச வலைப்பின்னல்

3. கட்டுப்பாட்டு அறை – லைசோசோம்

4. ஆற்றல் மையம் – பசுங்கணிகம்

5. உணவு தயாரிப்பாளர் – மைட்டோகாண்ட்ரியா

ஒப்புமை தருக:

1. பாக்டீரியா: நுண்ணுயிரி:: மாமரம்: ___________

2. அடிப்போஸ்: திசு: கண்: ____________

3. செல் சுவர்: தாவரம்:: சென்ட்ரியோல்: ____________

4. பசுங்கணிகம்: ஒளிச்சேர்க்கை:: மைட்டோகாண்ட்ரியா: ____________

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. வலியுறுத்தல் (A): திசு என்பது மாறுபட்ட செல்களைக் கொண்ட ஒரு குழு.

காரணம் (R): தசைத் திசு தசை செல்களால் ஆனது.

(அ) A மற்றும் R இரண்டும் சரியானவை

(ஆ) A மற்றும் R ஆகிய இரண்டும் தவறானவை

(இ) A சரி ஆனால் R தவறானது

(ஈ) A தவறு ஆனால் R சரியானது

2. வலியுறுத்தல் (A): பெரும்பான்மை செல்களை நேரடியாக வெறும் கண் கொண்டு பார்க்க முடியாது ஏனெனில்.

காரணம் (R): செல்கள் மிக நுண்ணியது.

(அ) A மற்றும் R இரண்டும் சரியானவை

(ஆ) A மற்றும் R ஆகிய இரண்டும் தவறானவை

(இ) A சரி ஆனால் R தவறானது

(ஈ) A தவறு ஆனால் R சரியானது

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. செல் 2. செல் சவ்வு 3. உட்கரு 4. சென்ட்ரியோஸ் 5. செல் நுண்உறுப்பு

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. சைட்டோபிளாசம் 2. பசுங்கணிகம் 3. உட்கரு 4. நுண்ணோக்கியின்

5. புரோட்டோபிளாசம்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தைத் திருத்தி எழுதுக:

1. தவறு

சரியான விடை: விலங்கு செல்களில் செல் சவ்வு உள்ளது.

2. சரி

3. தவறு

சரியான விடை: செல் சவ்வு அனைத்தையும் ஊடுருவ அனுமதிப்பதில்லை.

4. சரி

5. சரி

6. சரி

பொருத்துக: (விடைகள்)

1. கடத்தும் கால்வாய் – எண்டோபிளாச வலைப்பின்னல்

2. தற்ககொலைப் பை – லைசோசோம்

3. கட்டுப்பாட்டு அறை – உட்கரு

4. ஆற்றல் மையம் – மைட்டோகாண்ட்ரியா

5. உணவு தயாரிப்பாளர் – பசுங்கணிகம்

ஒப்புமை தருக: (விடைகள்)

1. பல்உயிரி 2. உறுப்பு 3. விலங்கு செல் 4. ஆற்றல் மையம்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. A தவறு ஆனால் R சரியானது.

2. A மற்றும் R இரண்டும் சரியானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!