Book Back QuestionsTnpsc

செவ்வியல் உலகம் Book Back Questions 9th Social Science Lesson 5

9th Social Science Lesson 5

5] செவ்வியல் உலகம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

பண்டைய கிரீஸ் மற்றும் ரோமை உள்ளடக்கியதே செவ்வியல் உலகமென்றும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த பண்டைய கிரேக்க, ரோமானிய நாகரிகங்களை உள்ளடக்கிய காலமே செவ்வியல் காலமென்றும், கிரேக்கோ-ரோமானிய கால உலகமென்றும் அறியப்படுகின்றது.

கிரேக்கத்தில் ஆளும் வர்க்கம் நிலங்களைக் கட்டுப்படுத்தியது. அடிமைகள் நிலங்களில் பாடுபட்டனர். அடிமைகளைக் கொண்டிருப்பது என்பது ஒரு நாகரிக வாழ்வின் அவசியம் என கிரேக்க எழுத்தாளர்களும் தத்துவ ஞானிகளும் கருதினர். ஆண்டானுக்கும் அடிமைக்குமான உறவை அரிஸ்டாட்டில் கணவனுக்கும் மனைவிக்குமான, தந்தைக்கும் பிள்ளைகளுக்குமான உறவுகளோடு ஒப்பிடுகின்றார்.

பெரிகிளிஸீக்குப் பின்னர் வந்த அரசாங்கம் உண்மையைக் கண்டறிய, சாக்ரடீஸ் முன்வைத்த வழிமுறைகளை விரும்பவில்லை. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கடவுள்களை சாக்ரடீஸ் ஏற்றுக் கொள்ள மறுத்தார் என்றும் இளைஞர்களைத் தவறான சிந்தனைக்கு இட்டுச் சென்றார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். நீதிமன்றக் குழு நடுவர் சாக்ரடீஸை குற்றவாளி எனத் தீர்மானித்து அவரை விஷம் (hemlock) அருந்தி உயிர்விடும்படி தீர்ப்பு வழங்கியது.

மக்களாட்சி என்னும் சொல்லின் நேர் பொருள் “மக்களே ஆட்சி புரிவது” என்பதாகும். ஆனால் நடைமுறையில் மெடிக்ஸ் (metics) என்று அழைக்கப்பட்ட அடிமைகள், பெண்கள், நகரில் தங்கியராதவர்கள் (வணிகர்கள், கைவினைஞர்கள்) ஆகியோர் விலக்கியே வைக்கப்பட்டிருந்தனர்.

அலெக்ஸாண்டரின் இறப்பிற்குப் பின்னர் பண்பாடு மிக விரைவாக வளர்ந்தது. வரலாற்று அறிஞர்கள் இதனை (கி. மு. (பொ. ஆ. மு) 323) ஹெலனிஸ்டிக் நாகரிகம் என அழைக்கின்றனர்.

அடிமைகளின் கிளர்ச்சிகள்: கிரேக்கத்தைக் காட்டிலும் ரோமில் தான் அடிமைகளின் கிளர்ச்சிகள் அதிகம் நடந்தன. ஸ்பார்டகஸின் கிளர்ச்சியே அவற்றுள் புகழ் பெற்றதாகும். 70, 000 அடிமைகள் பங்கேற்ற அக்கிளர்ச்சி கி. மு. (பொ. ஆ. மு) 73இல் தொடங்கியது. இப்புரட்சி ரோமின் அதிகாரத்தை அச்சங்கொள்ள வைத்தது. ஆனாலும் இறுதியில் ஸ்பார்டகஸ் கொல்லப்பட்டு புரட்சி ஒடுக்கப்பட்டது. ஸ்பார்ட்டகஸை பின்பற்றிய 6000 புரட்சியாளர்களும் கொல்லப்பட்டனர்.

ரோம் அரசுக்கு அதிக வருவாயை அள்ளிக் கொடுத்தது அடிமை வியாபாரமாகும். டெலாஸ் தீவு மிகப்பெரிய அடிமைச் சந்தையாக மாறியது.

பீயூனிக் போர்களும் ஏகாதிபத்திய ரோமப் பேரரசின் தோற்றமும்: இத்தாலியில் ரோம் வளர்ச்சி பெற்ற போது வட ஆப்பிரிக்காவில் கார்த்தேஜ் வலிமையான சக்தியாக வளர்ந்தது. கார்த்தேஜ் மக்கள் கடற்பயணங்களிலும் வணிகத்திலும் சிறந்து விளங்கிய பீனிசியர்களின் சந்ததிகள் ஆவர். ரோமும் கார்த்தேஜீம் கிரேக்கர்களை வெளியேற்ற ஒன்றிணைந்தனர். அதன் பின்னர் கார்த்தேஜ் சிசிலியைக் கைப்பற்றியது ரோம அரசுக்கே ஆபத்தாய் மாறியது. இவ்விரு சக்திகளிடையே நடைபெற்ற மூன்று போர்களே பியூனிக் போர்கள் என அழைக்கப்படுகின்றன. கார்த்தேஜ், ஹன்னிபால் என்ற தளபதியை அனுப்பி வைத்தது. ரோமின் படையைத் தோற்கடித்த அவர் இத்தாலியின் பெரும்பகுதியை பாலைவனமாக்கினார். ரோம் படைக்கு தலைமையேற்றிருந்த பாபியஸ் மனம் தளரவில்லை. இரண்டாம் பியூனிக் போரில் ஹன்னிபாலை எதிர்கொண்ட பாபியஸ், ஜாமா போர்க்களத்தில் அவரைத் தோற்கடித்தார். ரோமானியப் படைகளால் பின் தொடரப்பட்ட ஹன்னிபால் விஷமருந்தி மாண்டார். கார்த்தேஜின் மீது மூன்றாவது பியூனிக் போரை ரோம் அறிவித்தது. இப்போரில் கார்த்தேஜ் வெற்றி கொள்ளப்பட்டு அழிக்கப்பட்டது. இதன் பின்னர் மேலை உலகில் நிகரற்ற சக்தியாக ரோம் மாறியது.

பட்டு வழித்தடம் அல்லது பட்டுப்பாதை: சீனாவிலிருந்து ஆசியா மைனர் மற்றும் இந்தியா வரையிலான வணிக வழித்தடம், பட்டுப்பாதை/பட்டுச் சாலை/பட்டு வழித்தடம் என்று அறியப்படுகிறது. இது சீனாவை மேலை நாடுகளோடு இணைக்கின்றது. இப்பாதை வழியாக இரு பெரும் நாகரிகங்களான சீனா மற்றும் ரோம் ஆகியவற்றுக்கிடையே பண்டங்களும், கருத்துக்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. பட்டு மேற்கு நோக்கிச் செல்ல, கம்பளி, தங்கம், வெள்ளி ஆகியன கிழக்கு நோக்கிச் சென்றன. சீனா பௌத்தத்தை இந்தியாவிலிருந்து இவ்வழியின் மூலமே பெற்றது.

புனித சோபியா ஆலயம்: புனித சோபியா ஆலயம் கி. பி. ஆறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டதாகும். அக்கால ஐரோப்பாவின் மிக நேர்த்தியான கட்டடமான இத்தேவாலயம் அதன் புதுமையான கட்டடக்கலை நுணுக்கங்களுக்கு பெயர் பெற்றதாகும். கான்ஸ்டாண்டி நோபிள் நகரை உதுமானிய துருக்கியர் கைப்பற்றிய போது இத்தேவாலயம் ஒரு மசூதியாக மாற்றப்பட்டது.

செவ்வியல் காலத்தில் இந்தியா: குஷாணர்கள் காலம் ரோமனியப் பேரரசின் இறுதி காலகட்டமான ஜீலியஸ் சீசரின் ஆட்சி காலத்தின் சமகாலமாகும். ஜீலியஸ் சீசரின் காலத்துக்குப் பின் ஆட்சிக்கு வந்த அகஸ்டஸ் சீசர் அவைக்கு குஷாணர்கள் ஒரு தூதுக்குழுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

செவ்வியல் காலத்தின் சமகாலமான சங்ககாலத்தில் (கி. மு. (பொ. ஆ. மு)-3ம் நூற்றாண்டு முதல் கி. பி. (பொ. ஆ)-3ம் நூற்றாண்டில்) பதினெண் மேல் கணக்கு என்றழைக்கப்படும் சங்க இலங்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் தொகுக்கப்பட்டன. சங்க இலக்கியம் இந்தியாவின் முதல் சமயச் சார்பற்ற இலக்கியம் என போற்றப்படுகிறது.

செவ்வியல் காலத்தின் இறுதிக் காலத்துடன் (நான்கு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகள்) பொருந்திய களப்பிரர் காலத்தில் பாபிலோனியா, எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோம் ஆகியவற்றோடு மலபார் கடற்கரை வழி நடந்த வணிகம் மேலும் செழிப்படைந்தது. தேக்கு, மிளகு, மணிகள் மற்றும் தந்தம் போன்றவை ஏற்றுமதியாயின.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ————– என்ற கிரேக்க நகர அரசு, பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது.

(அ) அக்ரோபொலிஸ்

(ஆ) ஸ்பார்ட்டா

(இ) ஏதென்ஸ்

(ஈ) ரோம்

2. கிரேக்கர்களின் மற்றொரு பெயர் ————– ஆகும்.

(அ) ஹெலனிஸ்டுகள்

(ஆ) ஹெலனியர்கள்

(இ) பீனிசியர்கள்

(ஈ) ஸ்பார்ட்டன்கள்

3. ஹன் அரச வம்சத்தை தோற்றுவித்தவர் ——— ஆவார்.

(அ) வு-தை

(ஆ) ஹங் சோவ்

(இ) லீயு-பங்

(ஈ) மங்கு கான்

4. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் ——— ஆவார்.

(அ) முதலாம் இன்னசென்ட்

(ஆ) ஹில்ட்பிராண்டு

(இ) முதலாம் லியோ

(ஈ) போன்டியஸ் பிலாத்து

5. பெலப்பொனேஷியப் போர் ————- மற்றும் ————– ஆகியோர்களுக்கிடையே நடைபெற்றது.

(அ) கிரேக்கர்கள் மற்றும் பாரசீகர்கள்

(ஆ) பிளேபியன்கள் மற்றும் பெட்ரீசியன்கள்

(இ) ஸ்பார்ட்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்

(ஈ) கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. கிரேக்கர்கள் —————- என்ற இடத்தில் பாரசீகர்களைத் தோற்கடித்தனர்.

2. ரோமானியக் குடியரசில் ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தவர் ————

3. ———— வம்சத்தினரின் ஆட்சியின் போது தான் பௌத்தம் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு வருகை தந்தது.

4. ———- ஐரோப்பியாவின் மிக நேர்த்தியான கட்டடம்.

5. —————- மற்றும் ————— ரோம நீதிபதிகள் ஆவார்கள்.

III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. (i) கிரீஸின் மீதான முதல் பாரசீகத் தாக்குதல் தோல்வியடைந்தது.

(ii) ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஜீலியஸ் சீஸர் ஒரு காரணமாயிருந்தார்.

(iii) ரோமின் மீத படையெடுத்த கூட்டத்தினர் பண்பாட்டில் மேம்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர்.

(iv) பௌத்தமும் ரோமப் பேரரசை வலுவிழக்கச் செய்தது.

(அ) i சரி

(ஆ) ii சரி

(இ) ii மற்றும் iii சரி

(ஈ) iv சரி

2. (i) யூகிளிட் கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பது குறித்து ஒரு மாதிரியை உருவாக்கினார்.

(ii) எட்ரூஸ்கர்களை முறியடித்து, ரோமானியர்கள் ஒரு குடியரசை நிறுவினர்.

(iii) அக்ரோபொலிஸ் புகழ்பெற்ற அடிமைச் சந்தை ஆனது.

(iv) ரோமும் கார்த்தேஜீம் கிரேக்கர்களைத் துரத்துவதற்கு ஒன்றிணைந்தன.

(அ) i சரி

(ஆ) ii சரி

(இ) ii மற்றும் iv சரி

(ஈ) iv சரி

3. (i) பட்டு வழித்தடம் ஹன் வம்ச ஆட்சியின் போது மூடப்பட்டது.

(ii) வேளாண் குடிமக்களின் எழுச்சி, ஏதேனிய குடியரசுக்கு அச்சத்தைக் கொடுத்தது.

(iii) விர்ஜில் எழுதிய “ஆனெய்ட்” ரோம ஏகாதிபத்தியத்தைப் புகழ்வதாய் அமைந்தது.

(iv) ஸ்பார்ட்டகஸ், ஜீலியஸ் சீஸரைக் கொன்றார்.

(அ) i சரி

(ஆ) ii சரி

(இ) ii மற்றும் iv சரி

(ஈ) iii சரி

4. (i) ரோமப் பேரரசர் மார்க்கஸ் அரிலியஸ் ஒரு கொடுங்கோலன்.

(ii) ரோமுலஸ் அரிலிஸ், ரோமானிய வரலாற்றில் மிகவும் மெச்சத்தக்க அரசர்.

(iii) பேபியஸ் ஒரு புகழ்பெற்ற ஒரு கார்த்தேஜியப் படைத்தலைவர் ஆவார்.

(iv) வரலாற்றாளராக, லிவியை விட, டாசிடஸ் மதிக்கத்தக்கவர்.

(அ) i சரி

(ஆ) ii சரி

(இ) ii மற்றும் iii சரி

(ஈ) iv சரி

5. (i) பௌத்த மதம் ஜப்பானில் இருந்து சீனாவிற்கு பரவியது.

(ii) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்னர், புனித தோமையர் கிறித்தவக் கொள்கைகளைப் பரப்பினார்.

(iii) ஐரோப்பாவில் புனித சோபியா ஆலயம் மிக நேர்த்தியான கட்டடம் ஆகும்.

(iv) டிராஜன், ரோமனின் மோசமான சர்வாதிகாரிகளில் ஒருவராவார்.

(அ) i சரி

(ஆ) ii சரி

(இ) iii சரி

(ஈ) iv சரி

IV. பொருத்துக:

1. அக்ரோபொலிஸ் – அ] கான்சல்

2. பிளாட்டோ – ஆ] ஏதென்ஸ்

3. மாரியஸ் – இ] தத்துவ ஞானி

4. ஜீயஸ் – ஈ] பொருள் முதல் வாதி

5. எபிகியுரஸ் – உ] பாதுகாக்கப்பட்ட நகரம்

விடைகள்:

1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஏதென்ஸ், 2. ஹெலனியர்கள், 3. லீயு-பங், 4. போன்டியஸ் பிலாத்து, 5. ஸ்பார்ட்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. மராத்தான், 2. டைப்பிரியஸ் கிராக்கஸ், காரியஸ் டோ கிராக்கஸ், 3. ஹன், 4. புனித சோபியா, 5. பிளினி தியங்கர், புளுட்டாக்

III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. i சரி, 2. ii மற்றும் iv சரி, 3. iii சரி, 4. iv சரி, 5. iii சரி

IV. பொருத்துக:

1. உ, 2. இ, 3. அ, 4. ஆ, 5. ஈ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!