Book Back QuestionsTnpsc

டெல்லி சுல்தானியம் Book Back Questions 7th Social Science Lesson 4

7th Social Science Lesson 4

4] டெல்லி சுல்தானியம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சித்தூர் சூறையாடல் (1303): சித்தூரில் ராஜபுத்திரப் படைகளை அலாவுதீனின் படைகள் திணறடித்த நிலையில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற சூழலில் கோட்டைக்குள் இருந்த ஆடவரும் பெண்டிரும் தங்களது பண்டைய மரபின்படி “ஜவ்ஹர்” எனப்படும் சடங்கை நடத்தினர், இதன் படி ஆடவர் கோட்டையை விட்டு வெளியேறிப் போர்க்களத்தில் மாள்வர். பெண்கள் தீப்புகுந்து தங்களை மாய்த்துக் கொள்வர்.

டெல்லியிலிருந்து தௌலதாபாத் செல்ல நாற்பது நாட்கள் நடந்தே செல்ல வேண்டும். பெரும்பாலான மக்கள் தௌலதாபாத் புறப்பட்டுச் சென்றனர். சிலர் ஒளிந்து கொண்டனர். அவர்கள் கண்டுபிடிக்கப்படுகையில் அவர்களில் ஒருவர் பார்வையற்றவராக இருந்தபோதும் மற்றொருவர் பக்கவாத நோயாளியாக இருந்தபோதும் கொடூரமான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். எட்டு அல்லது பத்து மைல் அளவு பரவியிருந்த அந்நகரைப் பற்றி ஒரு வரலாற்றறிஞர் “அனைத்தும் அழிக்கப்பட்டன. நகரத்தின் அரண்மனைகளில், கட்டடங்களில், புறநகர் பகுதிகளில் என எங்கும் ஒரு நாயோ, பூனையோ கூட விட்டுவைக்கப்படவில்லை எனும் அளவுக்கு முழுமையாகப் பாழானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமியக் கலை, கட்டடக்கலை: உயர்வகுப்பைச் சேர்ந்த முஸ்லீம் பிரபுக்கள், அதிகாரிகள், வீரர்கள் ஆகியோர் தங்கள் குடியிருப்புக் கட்டடங்களை முதலில் நகரங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் கட்டிக் கொண்டனர். அவற்றைச் சுற்றிப் பேரரசு பாணியிலான அழகு மிக்க மசூதிகளை டெல்லி முஸ்லீம் ஆட்சியாளர்கள் கட்டினர். மசூதிகளும் மதரசாக்களும் (கல்வி நிலையங்கள்) கட்டட வடிவத்தில் வேறுபட்டிருந்தன. குரானிலுள்ள வரிகளைச் செதுக்கி நேர்த்தியாகவும் நளினமாகவும் அலங்கரிக்கப்பட்ட கதவுகளும், சுவர்களும் அக்கட்டங்களுக்குத் தனித்தன்மையான தோற்றத்தை வழங்கின. அக்கட்டடங்களின் வடிவங்கள் பாரசீகப் பாணியிலும் அலங்கார வேலைப்பாடுகள் இந்தியப் பாணியிலும் அமைந்திருந்தன. எனவே அப்பாணி இந்தோ-சாராசானிக் கலைவடிவம் என அழைக்கப்பட்டது. குதுப்மினார். ஆலெய் தர்வாசா, குவ்வத் உல் இஸ்லாம் மசூதி, மோத்தி மசூதி, இல்துமிஷ், பால்பன் ஆகியோரின் கல்லறைகள், தௌலதாபாத், பிரோஷ் ஷா பாத் ஆகிய இடங்களிலுள்ள கோட்டைகள் என அனைத்தும் அப்பாணியில் அமைக்கப்பட்டனவாகும்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ———– மம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.

(அ) முகமது கோரி

(ஆ) ஜலாலுதீன்

(இ) குத்புதீன் ஐபக்

(ஈ) இல்துமிஷ்

2. குத்புதீன் தனது தலைநகரை ————- லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.

(அ) லாகூர்

(ஆ) புனே

(இ) தௌலதாபாத்

(ஈ) ஆக்ரா

3. ————– குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.

(அ) ரஸ்ஸியா

(ஆ) குத்புதீன் ஐபக்

(இ) இல்துமிஷ்

(ஈ) பால்பன்

4. டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் ————– ஆவார்.

(அ) முகமதுபின் துக்ளக்

(ஆ) பிரோஷ் ஷா துக்ளக்

(இ) ஜலாலுதீன்

(ஈ) கியாசுதீன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. துக்ளக் அரசவம்சத்தைத் தோற்றுவித்தவர் ————- ஆவார்.

2. முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து ——————க்கு மாற்றினார்.

3. புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமிர் குஸ்ருவை —————- ஆதரித்தார்.

4. டெல்லியிலுள்ள குவ்வத் உல் இஸ்லாம் மசூதியை ————- கட்டினார்.

5. இந்தியாவிற்கு செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியரின் அச்சுறுத்தல் —————- ஆட்சியின் போது ஏற்பட்டது.

III. பொருத்துக:

அ – ஆ

1. துக்ரில்கான் – அ) காராவின் ஆளுநர்

2. அலாவுதீன் – ஆ) ஜலாலுதீன் யாகுத்

3. பகலூல் லோடி – இ) வங்காள ஆளுநர்

4. ரஸ்ஸியா – ஈ) சிர்கந்தின் ஆளுநர்

IV. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. குத்புதீன் இனங்காண முடியாத காய்ச்சலால் மரணமடைந்தார்

2. ரஸ்ஸியா திறமை மிக்க, மனவலிமை கொண்ட போர்வீரர்.

3. ஐபக்கின் மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் இலதுமிஷைத் துருக்கியப் பிரபுக்கள் சுல்தானாகத் தேர்வு செய்தனர்.

4. தக்காண விசயங்களில் தலையிடக்கோரி பாமினி இளவரசர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள பிரோஷ் ஷா மறுத்துவிட்டார்.

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: மங்கோலியருடன் பால்பன் சுமூகமான உறவை மேற்கொண்டார்.

காரணம்: செங்கிஸ்கானின் பேரனான மங்கோலிய அரசன், சட்லஜ் நதியைக் கடந்து மங்கோலியர் படையெடுத்து வரமாட்டார்கள், என உறுதி கூறியிருந்தார்.

(அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே

(ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

(இ) காரணமும் கூற்றும் தவறானவை

(ஈ) கூற்று தவறு காரணம் சரி

2. சரியானவற்றை தேர்வு செய்க:

1. ஹொய்சாளர் – தேவகிரி

2. யாதவர் – துவாரசமுத்திரம்

3. காகதியர் – வாராங்கல்

4. பல்லவர் – மதுரை

3. தவறான கூற்றினை/கூற்றுகளைக் கண்டறிக:

1. 1206இல் கோரி முகமதுவின் மரணத்திற்குப் பின்னர், அவருடைய அடிமையான குத்புதீன் ஐபக், இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்குத் தன்னை அரசனாக அறிவித்துக்கொண்டார்.

2. ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றியும் இடையூறு ஏற்படுத்துவோர் பற்றியும் செய்திகள் சேகரிக்க ஒற்றர்கள் துறையொன்றை நிறுவினார்.

3. மங்கோலியரின் தாக்குதலிலிருந்து தனது நாட்டைப் பாதுகாக்கப் பால்பன் கோட்டைகளைக் கட்டினார்.

4. இப்ராகிம் லோடி 1526இல் பாபரால் தோற்கடிக்கப்பட்டார்.

VI. பொருத்துக:

தந்தை – மகன்

1. குத்புதீன் ஐபக் – அ) ருக்குதீன் பிரோஷ்

2. இல்துமிஷ் – ஆ) கைகுபாத்

3. பால்பன் – இ) அலாவுதீன்

4. கியாசுதீன் – ஈ) சிக்கந்தர் லோடி

5. பகலூல் லோடி – உ) ஆரம் ஷா

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. குத்புதீன் ஐபக், 2. லாகூர், 3. இல்துமிஷ், 4. கியாசுதீன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. கியாசுதீன் துக்ளக், 2. தேவகிரி, 3. பால்பன்,

4. குத்புதீன் ஐபக், 5. இல்துமிஷ்

III. பொருத்துக:

1. இ, 2. அ, 3. ஈ, 4. ஆ

IV. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. போலோ விளையாட்டின் போது, 2. வீராங்கனை, 3. மருமகன், 4. சரி

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே, 2. காகதியர்-வாராங்கல், 3. ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றியும் இடையூறு ஏற்படுத்துவோர் பற்றியும் செய்திகள் சேகரிக்க ஒற்றர்கள் துறையொன்றை நிறுவினார்.

VI. பொருத்துக:

1. உ, 2. அ, 3. ஆ, 4. இ, 5. ஈ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!