Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு Book Back Questions 10th Science Lesson 8

10th Science Lesson 8

8] தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

மந்த வாயுக்கள் எலக்ட்ரான்களை ஏற்கும் தன்மையற்றவை. ஏனெனில், அவற்றின் வெளிமட்டத்தில் உள்ள s மற்றும் p ஆர்பிட்டால்கள் முழுமையாக எலக்ட்ரான்களால் நிரம்பி உள்ளவை. அதனால் மேலும் ஒரு எலக்ட்ரானை சேர்ப்பது இயலாது. எனவே இவற்றின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜிய மதிப்பை பெறுகின்றன.

உலோக ஆக்சைடிலிருந்து உலோகத்தைப் பிரித்தல் 3 வகைப்படும்
அதி வினைபடும் உலோகங்கள் சாதாரணமாக வினைபடும் உலோகங்கள் குறைவாக வினைபடும் உலோகங்கள்
Na, K, Ca, Mg, Al Zn, Fe, pb, Cu Ag, Hg
உலோக ஆக்சைடு உலோகமாக மின்னாற் பகுப்பின் மூலம் ஒடுக்கம் அடைகிறது உலோக ஆக்சைடு உலோகமாக கார்பன் (CoKe) உதவியுடன் வேதி ஒடுக்கம் அடைகிறது செஞ்சூடேற்றி சிதைவுறுதலால் உலோக ஆக்சைடு உலோகமாக ஒடுக்கம் அடைகிறது

நீர்த்த மற்றும் அடர் நைட்ரிக் அமிலம் அலுமினியத்தோடு வினைபுரிவதில்லை. மாறாக அலுமினியத்தின் மேல் ஆக்சைடு படலம் உருவாவதால், அதன் வினைபடும் திறன் தடுக்கப்படுகிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை ____________

(அ) 6, 16

(ஆ) 7, 17

(இ) 8, 18

(ஈ) 7, 18

2. நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை ____________

(அ) அணு எண்

(ஆ) அணு நிறை

(இ) ஐசோடோப்பின் நிறை

(ஈ) நியுட்ரானின் எண்ணிக்கை

3. ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்து

(அ) 17வது

(ஆ) 15வது

(இ) 18வது

(ஈ) 16வது

4. ____________ என்பது ஒப்பிட்டு ஆவர்த்தன பண்பு

(அ) அணு ஆரம்

(ஆ) அயனி ஆரம்

(இ) எலக்ட்ரான் நாட்டம்

(ஈ) எலக்ட்ரான் கவர்தன்மை

5. துருவின் வாய்ப்பாடு _____________

(அ) FeO.xH2O

(ஆ) FeO4.xH2O

(இ) Fe2O3.xH2O

(ஈ) FeO

6. அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின் பங்கு

(அ) ஆக்ஸிஜனேற்றி

(ஆ) ஆக்ஸிஜன் ஒடுக்கி

(இ) ஹைட்ரஜனேற்றி

(ஈ) சல்பர் ஏற்றி

7. மெல்லிய படலமாக துத்தநாக படிவை, பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு __________ எனப்படும்.

(அ) வர்ணம் பூசுதல்

(ஆ) நாகமுலாமிடல்

(இ) மின்முலாம் பூசுதல்

(ஈ) மெல்லியதாக்கல்

8. கீழ்க்கண்ட மந்த வாயுக்களில், எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டது.

(அ) He

(ஆ) Ne

(இ) Ar

(ஈ) Kr

9. நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம் ஆக காரணம் ___________

(அ) நியுட்ரானின் உறுதியான வரிசை அமைப்பு

(ஆ) எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பு

(இ) குறைந்த உருவளவு

(ஈ) அதிக அடர்த்தி

10. இரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம் ___________

(அ) Ag

(ஆ) Hg

(இ) Mg

(ஈ) Al

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒரு மூலக்கூறில் இரு பிணைப்புற்ற அணுக்கட்டு இடையில் உள்ள எலக்ட்ரான் கவர் ஆற்றல் வித்தியாசம் 1.7 க்கு மேல் எனில், பிணைப்பின் இயல்பு ____________ ஆகும்.

2. நவீன ஆவர்த்தன அட்டவணையின் அடிப்படை ___________ ஆகும்.

3. தனிம வரிசை அட்டவணையில் மிக நீள் தொடர் ___________ ஆகும்.

4. Cl2 மூலக்கூறில் உள்ள ‘Cl’ அணுக்களுக்கு இடையில் உள்ள தூரம் 1.98 Ao எனில் ‘Cl’ அணுவின் ஆரம்___________

5. A, A+ மற்றும் A இவற்றில் மிகச்சிறிய உருவ அளவு உள்ளது ______________

6. நவீன ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கிய விஞ்ஞானியின் பெயர் _____________

7. அயனி ஆரம், தொடரில் _____________ (குறைகின்றது, அதிகரிக்கின்றது).

8. _____________ மற்றும் ____________ ஆனது உள் இடைத் தனிமங்கள் எனப்படும்.

9. அலுமினியத்தின் முக்கிய தாது _______________ ஆகும்.

10. துருவின் வேதிப்பெயர் ___________ ஆகும்.

பொருத்துக:

1. முலாம் பூசுதல் – மந்த வாயுக்கள்

2. காற்றில்லா வறுத்தல் – துத்தநாகம் பூச்சு

3. ஆக்ஸிஜனேற்ற ஒடுக்கவினை – சில்வர்-டின் ரசக்கலவை

4. பற்குழி அடைத்தல் – அலுமினோ வெப்ப ஒடுக்க வினை

5. 18 ஆம் தொகுதி தனிமங்கள் – காற்றிலா சூழ்நிலையில் சூடேற்றும் நிகழ்வு

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. மோஸ்லேவின் தனிம வரிசை அட்டவணை அணுநிறையைச் சார்ந்தது.

2. இடப்புறத்திலிருந்து வலப்புறம் செல்கையில், அயனி ஆரமானது, தொடரில் அதிகரிக்கும்.

3. எல்லா தாதுக்களும் கனிமங்களே, ஆனால் எல்லா கனிமங்களும் தாதுக்கள் ஆகா.

4. அலுமினியக்கம்பிகள், மின்கம்பிகள் உருவாக்க பயன்படுவதன் காரணம் அதன், வெள்ளியைப் போன்ற நிறமே.

5. உலோகக் கலவை என்பது உலோகங்களின் பல படித்தான கலவை ஆகும்.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

பின்வரும் வினாக்களை, கீழ்கண்ட குறிப்புகள் மூலம் விடையளிக்கவும்:

i. கூற்றும், காரணமும் சரியானது. காரணம், கூற்றை நன்கு விளக்குகிறது

ii. கூற்று சரி, காரணம் தவறு

iii. கூற்று தவறு, காரணம் சரி

iv. கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றை விவரிக்கவில்லை.

1. கூற்று: HF மூலக்கூறில் உள்ள பிணைப்பு அயனிப்பிணைப்பு

காரணம்: ‘H’ க்கும் ‘F’ க்கும் இடையே உள்ள எலக்ட்ரான் கவர் ஆற்றல் வித்தியாசம் 1.9

2. கூற்று: மெக்னீசியத்தை இரும்பின் மீது பூசுவதால், துருப்பிடித்தலிருந்து பாதுகாக்கப்படுகிறது.

காரணம்: மெக்னீசியம், இரும்பைவிட வினைபுரியும் தன்மைமிக்கது.

3. கூற்று: சுத்தப்படுத்தப்படாத, தாமிரபாத்திரத்தில் பச்சை படலம் உருவாகிறது.

காரணம்: தாமிரம், காரங்களால் பாதிக்கப்படுவதில்லை

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. (7, 18), 2. அணு எண், 3. (17வது), 4. எலக்ட்ரான் கவர்தன்மை, 5. Fe2O3.×H2O, 6. ஆக்ஸிஜன் ஒடுக்கி, 7. நாகமுலாமிடல்,
8. He, 9. எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பு, 10. Hg

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. அயனிப் பிணைப்பு, 2. அணு எண், 3. ஆறாவது தொடர் மற்றும் ஏழாவது தொடர், 4. (0.99 Å),
5. A+, 6. ஹென்றி மோஸ்லே, 7. குறைகின்றது, 8. லாந்தனைடுகள், ஆக்டினைடுகள், 9. பாக்சைட், 10. நீரேரிய ஃபெர்ரிக் ஆக்சைடு

பொருத்துக: (விடைகள்)

1. முலாம் பூசுதல் – துத்தநாகம் பூச்சு

2. காற்றில்லா வறுத்தல் – காற்றில்லா சூழ்நிலையில் சூடேற்றும் நிகழ்வு

3. ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினை – அலுமினோ வெப்ப ஒடுக்க வினை

4. பற்குழி அடைத்தல் – சில்வர் – டின் ரசக்கலவை

5. 18 ம் தொகுதி தனிமங்கள் – மந்த வாயுக்கள்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறான வாக்கியத்தைத் திருத்தி எழுதுக)

1. தவறு

சரியான விடை: மோஸ்லேவின் தனிம வரிசை அட்டவணை அணு எண்ணைச் சார்ந்தது.

2. தவறு

சரியான விடை: இடப்புறத்திலிருந்து வலப்புறம் செல்கையில் அயனி ஆரமானது தொடரில் குறையும்.

3. சரி

4. தவறு

சரியான விடை: அலுமினியக் கம்பிகள், மின் கம்பிகள் உருவாக்கப் பயன்படுவதன் காரணம் அதன் நல்ல கடத்துத் திறனே ஆகும்.

5. தவறு

சரியான விடை: உலோகக் கலவை என்பது உலோகங்களின் ஒரு படித்தான கலவையாகும்.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்க:

1. கூற்றும், காரணமும் சரியானது. காரணம், கூற்றை நன்கு விளக்குகிறது.

2. கூற்றும், காரணமும் சரியானது. காரணம், கூற்றை நன்கு விளக்குகிறது.

3. கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றை விவரிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!