Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி 11th Political Science Lesson 14 Questions in Tamil

11th Political Science Lesson 14 Questions in Tamil

14] தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி

1) தென்னிந்திய விடுதலைக் கூட்டமைப்பு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

a) 1914

b) 1916

c) 1919

d) 1917

விளக்கம்: 1914 – திராவிடர் கழகத்தின் தோற்றம்

1916 – தென்னிந்திய விடுதலைக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது

1917 – நீதிக் கட்சி

1919 – மாண்டேகு செம்ஸ் போஃர்டு சீர்திருத்தங்கள்

2) எங்கு நடைபெற்ற மாநாட்டில் நீதிக் கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது?

a) ஈரோடு

b) சேலம்

c) காஞ்சிபுரம்

d) சென்னை

விளக்கம்:1925 – பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.

1937 – ராஜாஜியின் தலைமையில் காங்கிரசு அமைச்சரவை உருவாக்கப்படுதல் 1937 – இந்தி எதிர்ப்புப் போராட்டம்

1944 – சேலம் மாநாட்டில் நீதிக் கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

3) 1947 ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்றவர் யார்?

a) த.பிரகாசம்

b) ஓ.பி. ராமசாமி

c) பி. குமாரசாமி ராஜா

d) பனகல் அரசர்

விளக்கம்:1949 – திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது

1946 – சென்னை மாகாணத்தில் த.பிரகாசம் தலைமையிலான காங்கிரசு அரசாங்கம் அமைந்தது.

1947 – ஓ.பி. ராமசாமி முதலமைச்சரானார்.

1949 – பி. குமாரசாமி ராஜா தலைமையிலான அமைச்சரவை அமைந்தது.

4) மாநில மறுசீரமைப்புச் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

a) 1956

b) 1965

c) 1967

d) 1952

விளக்கம்: 1952 – முதல் பொதுத் தேர்தல் நடைப்பெற்றது

1956 – மாநில மறுசீரமைப்புச் சட்டம்

1965 – இந்தி – எதிர்ப்புப் போராட்டம்

1967 – சி.என். அண்ணாதுரை தலைமையின் கீழ் தி.மு.க அரசாங்கம் அமைக்கப்பட்டது.

5) மாநில தன்னாட்சித் தீர்மானம் சட்டப்பேரவையில் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

a) 1974

b) 1965

c) 1967

d) 1952

விளக்கம்: 1969 – சி.என். அண்ணாதுரை காலமானார்

1969 – மு. கருணாநிதி மாநிலத்தின் முதலமைச்சரானார்

1972 – அ.இ.அ.தி.மு.க., எம்.ஜி.இராமச்சந்திரனால் (எம்.ஜி.ஆர்) நிறுவப்பட்டது

1974 – மாநில தன்னாட்சித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

6) தென்னிந்தியாவின் எப்பகுதி ஆங்கிலேயரின் அரசியல், நிர்வாக தேவைகளுக்காக தோற்றுவிக்கப்பட்டது?

a) சென்னை

b) மும்பை

c) கொச்சின்

d) பெங்களூர்

விளக்கம்: தமிழக அரசியல் வரலாறு இந்தியாவின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாடானது, ஆரோக்கியமான நிர்வாக மற்றும் அரசியல் பண்பாடும், கிட்டத்தட்ட நிலையான பொருளாதார வாழ்வு மற்றும் மிக தொ ன்மையான காலத்திலிருந்து தற்காலம் வரை தொ டர்ச்சியான மரபுகளையும் கொண்டதாகும். தென்னிந்தியாவின் சென்னை மாகாணம் என்பது (The Madras presidency) ஆங்கிலேயரின் அரசியல், நிர்வாக தேவைகளுக்காக தோ ற்றுவிக்கப்பட்டது.

7) சென்னை மாகாணம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

a) 1807

b) 1801

c) 1803

d) 1809

விளக்கம்: சென்னை மாகாணம் கி. பி. (பொ.ஆ) 1801-இல் உருவாக்கப்பட்டது. இந்த மாகாணமானது, 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் தற்பொழுதுள்ள மாநிலங்களான ஆந்திரா, கேரளாவின் மலபார் பகுதி, தெற்கு கர்நாடகா, ஒடிசாவின் வடபகுதி முழுவதும் மற்றும் லட்சத்தீவு ஒன்றிய பிரதேசம் ஆகியவை உள்ளடக்கிய பகுதிகளாகும்.

8) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் சென்னை மாகாணத்தின் அரசியலானது பிராமணர் -பிராமணரல்லா தோரின் மோதல் தொடர்பான ஆதிக்கம் கொண்டதாக இருந்தது.

(ii) அறிஞர்களும், அரசியல் சிந்தனையாளர்களும் இந்த பிராமணர் – பிராமணரல்லா தோர் என்ற இரு பிரிவினரிடையே உள்ள மோதல்கள் பற்றி புரிந்து கொள்வது என்பதுதான் தென்னிந்தியாவின் அரசியல் மற்றும் சமூக வாழ்வை புரிந்து கொள்வதற்கு அவசியமானது.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் சென்னை மாகாணத்தின் அரசியலானது பிராமணர் -பிராமணரல்லா தோரின் மோதல் தொடர்பான ஆதிக்கம் கொண்டதாக இருந்தது. அறிஞர்களும், அரசியல் சிந்தனையாளர்களும் இந்த பிராமணர் – பிராமணரல்லா தோர் என்ற இரு பிரிவினரிடையே உள்ள மோதல்கள் பற்றி புரிந்து கொள்வது என்பதுதான் தென்னிந்தியாவின் அரசியல் மற்றும் சமூக வாழ்வை புரிந்து கொள்வதற்கு அவசியமானது என்று நம்பினார்கள்.

9) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) சில பிராமணரல்லாத சாதி குழுக்களின் உறுப்பினர்கள் தொழிற்துறை வாணிபம் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை கோரினர்.

(ii) பிராமணரல்லாத சாதிபிரிவினர்கள் கிராமப் புறங்களில் இருந்து மாகாணத்தின் நகர்புறத்திற்கு புலம்பெயர்ந்தனர்.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: சென்னை மாகாணம் அதே நேரத்தில், சில பிராமணரல்லாத சாதி குழுக்களின் உறுப்பினர்கள் தொழிற்துறை வாணிபம் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை கோரினர். கணிசமான அளவிற்கு, பிராமணரல்லாத சாதிபிரிவினர்கள் கிராமப் புறங்களில் இருந்து மாகாணத்தின் நகர்புறத்திற்கு புலம்பெயர்ந்தனர், அவர்கள் தங்களின் அடையாளத்தை உறுதி செய்ய விரும்பினார்கள் மற்றும் படிப்படியாக சமூகத்தில், அரசியலில், நிர்வாகத்தில் பிராமணர்கள் அனுபவித்த ஏகபோக அதிகாரம் மற்றும் தனி உரிமை சலுகைகளை சவாலாக நின்று எதிர்த்தனர்.

10) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) பிராமணர்கள் ”ஆரியர்கள்” எனவும் வடமொழி நாகரிகத்தின் பாதுகாவலர் எனவும் அடையாளப்படுத்தப்பட்டனர்.

(ii) பிராமணரல்லா தோர் “திராவிடர்கள்”எனவும் அவர்கள் தமிழ்மொழி, பண்பாடு மற்றும் நாகரீகத்தின் பாதுகாவலர் எனவும் கருதப்பட்டனர்.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: திராவிடன்” என்ற வார்த்தை, அறிஞர்கள் மற்றும் தமிழரல்லாதோர்/ ஆரியரல்லாத தமிழ் பேசுவோரை அடையாளம் கண்டுகொள்ள பயன்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் பிராமணர்கள் ”ஆரியர்கள்” எனவும் வடமொழி நாகரிகத்தின் பாதுகாவலர் எனவும் அடையாளப்படுத்தப்பட்டனர் மற்றும் பிராமணரல்லா தோர் “திராவிடர்கள்”எனவும் அவர்கள் தமிழ்மொழி, பண்பாடு மற்றும் நாகரீகத்தின் பாதுகாவலர் எனவும் கருதப்பட்டனர்.

11) சென்னை மாகாணத்தில் பிராமணரல்லாதோரின் தமிழ் அடையாளம், சமூக அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாப்பிற்காக துவங்கப்பட்டஇயக்கம் எது?

a) சுதந்திர கட்சி

b) சென்னை வாசிகள் இயக்கம்

c) தென்னிந்திய உரிமைகள் சங்கம்

d) திராவிட இயக்கம்

விளக்கம்: திராவிட இயக்கத்தின் தோற்றம்: சென்னை மாகாணத்தில் பிராமணரல்லாதோரின் தமிழ் அடையாளம், சமூக அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாப்பிற்காக ஓர் பிராமணரல்லாத குழுவால் துவங்கப்பட்டதே “திராவிட இயக்கமாகும்.”

12) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) திராவிடர்கள் மற்றும் பிராமணரல்லாதோர் 1801 ஆம் ஆண்டு பன்மொழி கொண்ட சென்னை மாகாணமானது காலனிய ஆட்சியால் உருவாக்கப்பட்டது.

(ii) வங்காளத்திலும், வடஇந்தியாவின் பிற பகுகளிலும் சமஸ்கிருதம் மற்றும் வேதங்களை மையப்படுத்திய இந்திய பண்பாடு முன் எடுக்கப்பட்டது.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: திராவிடர்கள் மற்றும் பிராமணரல்லாதோர் 1801 ஆம் ஆண்டு பன்மொழி கொண்ட சென்னை மாகாணமானது (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் துலு) காலனிய ஆட்சியால் உருவாக்கப்பட்டது. இந்தியாவினுடைய பன்மைத் தன்மையை சென்னை மாகாணத்தின் அரசியல் வளர்ச்சியில் காணமுடியும். வங்காளத்திலும், வடஇந்தியாவின் பிற பகுகளிலும் சமஸ்கிருதம் மற்றும் வேதங்களை மையப்படுத்திய இந்திய பண்பாடு முன் எடுக்கப்பட்டது. இவற்றோடு இந்தோ-ஆரிய (அ) இந்தோ- ஜெர்மன் மொழிக் குடும்பம் அங்கீகரிக்கப்பட்டது. வேதமல்லாத, சமஸ்கிருதம் அல்லாத பண்பாடு அங்கீகரிக்கப்படவில்லை.

13) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) தமிழ் ஆர்வலர்களால் எல்லிஸ் தமிழை நேசிப்பவராகவும் , வள்ளுவரின் குறளை மிகவும் விரும்புவராகவும் பாராட்டப்படுகிறார்.

(ii) பிற தமிழ்ப் படைப்புகளையும் நேசிப்பவராக இருப்பினும், எல்லிசின் காலனிய மற்றும் மதப் பின்னணி அறியப்படவில்லை.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: தமிழ் ஆர்வலர்களால் எல்லிஸ் தமிழை நேசிப்பவராகவும் , வள்ளுவரின் குறளை மிகவும் விரும்புவராகவும் பாராட்டப்படுகிறார். இவர் பிற தமிழ்ப் படைப்புகளையும் நேசிப்பவராக இருப்பினும், எல்லிசின் காலனிய மற்றும் மதப் பின்னணி அறியப்படவில்லை. பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்.

14) தமிழ் ஆர்வலரான திரு ராபர்ட் கால்டுவெல் எந்த நாட்டை சேர்ந்தவர்?

a) இங்கிலாந்து

b) பிரான்சு

c) ஜெர்மனி

d) இத்தாலி

விளக்கம்: பிறப்பு: மே 7, 1814 கிளாடி, இங்கிலாந்து. இறப்பு: ஆகஸ்ட் 28, 1891, கொடைக்கானல், இந்தியா. ராபர்ட் கால்டுவெல்.

15) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) ஜேம்ஸ் பிரின்சிபே மற்றும் இதர ஆய்வாளர்களால் பிராமண மூல ஆவணங்கள் மற்றும் தென்னிந்திய மொழிகளின் மீதான ஆய்வுகள் போன்றவைகள் இந்திய கலாச்சாரம் என்பது ஒரேமாதிரியானத் தன்மையைக் கொண்டது அல்ல என்று கூறுகிறது.

(ii) புத்த, திராவிட மரபுகள் கூட இந்தியாவில் இருந்தன என்பது நிரூபிக்கப்பட்டது.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: 37 ஆம் ஆண்டு ஜேம்ஸ் பிரின்சிபே மற்றும் இதர ஆய்வாளர்களால் பிராமண மூல ஆவணங்கள் மற்றும் தென்னிந்திய மொழிகளின் மீதான ஆய்வுகள் (எல்ஸிஸ் 1816 மற்றும் கால்டுவெல்- 1856) போன்றவைகள் இந்திய கலாச்சாரம் என்பது ஒரேமாதிரியானத் தன்மையைக் கொண்டது அல்ல என்றும், புத்த, திராவிட மரபுகள் கூட இந்தியாவில் இருந்தன என்பது நிரூபிக்கப்பட்டது.

16) பன்மொழி கொண்ட சென்னை மாகாணத்தில் திராவிட அடையாள எழுச்சிக்கு இட்டு சென்றவை எவை?

ⅰ) திராவிட மொழிக்குழுக்கள்

ⅱ) திராவிட பண்பாட்டு தொன்மை

ⅲ) ஆரியத்தின் வீழ்ச்சி

ⅳ) தமிழர் அறம்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ), ⅳ)

d) ⅰ), ⅱ)

விளக்கம்:தென்னிந்தியாவில், குறிப்பாக, பன்மொழி கொண்ட சென்னை மாகாணத்தில், பிராமணரல்லாதோர் இடத்தில், திராவிட மொழிக்குழுக்கள் மற்றும் திராவிட பண்பாட்டு தொன்மை ஆகியவை திராவிட அடையாள எழுச்சிக்கு இட்டு சென்றது.

17) இரண்டும் திராவிட அடையாளத்தை பிராமணரல்லாதோர் அடையாளமாக மாற்றி அமைத்தது எது/எவை?

ⅰ) பிராமணர்கள் பிராமணரல்லாதோர் மீது தங்களது மேன்மை கோருவது

ⅱ) பிராமணர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை ஏகபோகமாக்கியது

ⅲ) ஆரியத்தின் வீழ்ச்சி

ⅳ) திராவிட மொழிக்குழுக்கள்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ), ⅳ)

d) ⅰ), ⅱ)

விளக்கம்: 1) பிராமணர்கள் பிராமணரல்லாதோர் மீது தங்களது மேன்மை கோருவது மற்றும்

2) பிராமணர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை ஏகபோகமாக்கியது ஆகிய இரண்டும் திராவிட அடையாளத்தை பிராமணரல்லாதோர் அடையாளமாக மாற்றி அமைத்தது.

18) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) மகாராஷ்டிராவில் மகாத்மா ஜோதிபாபுலே ஓர் பிராமணரல்லாதோர் இயக்கத்தை துவக்கினார்.

(ii) திராவிடம் என்பது தென்னிந்தியாவில் பிராமணரல்லாதோரை குறிப்பதாயிற்று.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: மகாராஷ்டிராவில் கூட மகாத்மா ஜோதிபாபுலே இதே போன்று ஓர் பிராமணரல்லாதோர் இயக்கத்தை துவக்கினார். இவ்வாறு திராவிடம் என்பது தென்னிந்தியாவில் பிராமணரல்லாதோரை குறிப்பதாயிற்று. சென்னை மாகாண பிராமணர் அல்லாதோரின் பிரச்சனையை புதிதாக தேசிய தலைவர்கள் கவனம் கொள்ளவில்லை என்பதாக குறைபாடு இருந்தது.

19) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) கங்காலு லட்சுமி நராஷ் ஆங்கிலேய இந்திய கழகத்திலிருந்து வெளியேறி சென்னை வாழ் மக்கள் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கினார்.

(ii) சிப்பாய் கலகத்திற்கு பிந்தைய காலத்தில் பிராமணர் அல்லாத தலைவர்கள் அரசியல் சீர்திருத்தத்தை காட்டிலும் சமூக சீர்திருத்தத்தில் கவனம் கொண்டனர்.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: 1852 ஆம் ஆண்டு கங்காலு லட்சுமி நராஷ் இதனை வெளிப்படுத்தி ஆங்கிலேய இந்திய கழகத்திலிருந்து வெளியேறி சென்னை வாழ் மக்கள் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கினார். சிப்பாய் கலகத்திற்கு பிந்தைய காலத்தில் பிராமணர் அல்லாத தலைவர்கள் அரசியல் சீர்திருத்தத்தை காட்டிலும் சமூக சீர்திருத்தத்தில் கவனம் கொண்டனர். 1909 ஆம் ஆண்டு மிண்டோ மார்லி சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு சென்னை மாகாணத்தில் உள்ள பிராமணரல்லாதோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று எதிர்ப்பு காட்டத்தொடங்கினர்.

20) யார் அளித்த புள்ளியியல் விவரமானது மூன்று சதவிகிதம் மட்டும் அங்கம் வகிக்கும் பிராமணர் வாய்ப்புகளை எடுத்துக்கொண்டார்கள் என்பதை நிரூபித்தது?

a) ஹேஸ்

b) கன்னிங்

c) டி.எம்.நாயர்

d) கார்டிவ்

விளக்கம்: 1913 ஆம் ஆண்டு ஆளுநரின் செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர் ஜோர்டான் கார்டிவ் என்பவர் அளித்த புள்ளியியல் விவரமானது மூன்று சதவிகிதம் மட்டும் அங்கம் வகிக்கும் பிராமணர் வாய்ப்புகளை எடுத்துக்கொண்டார்கள் என்பதை நிரூபித்தது.

21) கூற்று(A): பிராமணர் அல்லாத உறுப்பினர்களின் கோரிக்கைகளை காங்கிரஸ் கருத்தில் கொள்ளவில்லை.

காரணம் (R): முதன்மையான கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் ஆனது பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.

a) கூற்று (கூ) காரணம் (கா) இரண்டுமே சரி, கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது.

b) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை.

c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

விளக்கம்: அக்காலத்தில் இருந்த முதன்மையான கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் ஆனது பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. எனவே பிராமணர் அல்லாத உறுப்பினர்களின் கோரிக்கைகளை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. எனவே சென்னை மாகாணத்தில் உள்ள பிராமணர் அல்லாத தலைவர்கள் பிராமணர் அல்லாதோர் அரசியல் அமைப்பு ஒன்றினை துவங்க நினைத்தனர். முதலாவது உலகப்போருக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் நிறுவனங்களில் பிரதிநிதியாகும் வாய்ப்பு போன்றவை இவர்களின் செயல்பாடுகளை ஊக்குவித்தன.

22) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) ஆண்டு டாக்டர். டி.எம்.நாயர், சர் பிட்டி தியாகராயர் மற்றும் டாக்டர் சி.நடேசனார் போன்றோர்கள் தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பை நிறுவினர்.

(ii) தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு புகழ்பெற்ற நீதிக்கட்சியானது.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: 1916 ஆம் ஆண்டு டாக்டர். டி.எம்.நாயர், சர் பிட்டி தியாகராயர் மற்றும் டாக்டர் சி.நடேசனார் போன்றோர்கள் பிராமணரல்லாதோரின் சமூக அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை முன்னேற்றுவதற்காக தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பை நிறுவினர். இவ்வாறு உருவான பின்னர் தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பை நிறுவினர். இவ்வாறு உருவான பின்னர் தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு புகழ்பெற்ற நீதிக்கட்சியானது.

23) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) நீதிக்கட்சி என்ற பெயர் ஆங்கில இதழான “நீதி” என்பதன் அடிப்படையில் பெயரிடப்பட்டது.

(ii) பிராமணரல்லாதோருக்கு 1919 ஆம் ஆண்டு சட்டப்படி அமைந்த இரட்டை ஆட்சியில் மாகாண சட்டமன்ற தேர்தலில் இடஒதுக்கீடு பெற்றுத்தந்தனர்.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: நீதிக்கட்சி என்ற பெயர் ஆங்கில இதழான “நீதி” என்பதன் அடிப்படையில் பெயரிடப்பட்டது. இவர்களின் ஓயாத முயற்சியால் பிராமணரல்லாதோருக்கு 1919 ஆம் ஆண்டு சட்டப்படி அமைந்த இரட்டை ஆட்சியில் மாகாண சட்டமன்ற தேர்தலில் இடஒதுக்கீடு பெற்றுத்தந்தனர்.

24) பின்வருவனவற்றுள் நீதிக்கட்சியின் முக்கிய நோக்கங்கள் எவை?

ⅰ) தென்னிந்தியாவின் அனைத்து பிராமணர் அல்லாதோரின் கல்வி, சமூக, பொருளாதார மற்றும் செல்வ மேம்பாட்டினை உருவாக்கி முன்னேற்றுதல்.

ⅱ) அரசமைப்பிலான அரசாங்கத்தைக்கொண்டு பிராமணரல்லாதோரின் முன்னேற்றத்திற்கு பாடுபடுதல்.

ⅲ) அரசமைப்பிலான உண்மையான பிரதிநிதித்துவ அரசாங்கமாக ஆக்குதல்

ⅳ) பிராமணரல்லாதோரின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக பொதுக்கருத்தை உருவாக்குதல்.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ), ⅳ)

d) ⅲ), ⅳ)

விளக்கம்: நீதிக்கட்சியின் முக்கிய நோக்கங்கள்:

அ) தென்னிந்தியாவின் அனைத்து பிராமணர் அல்லாதோரின் கல்வி, சமூக, பொருளாதார மற்றும் செல்வ மேம்பாட்டினை உருவாக்கி முன்னேற்றுதல்.

ஆ) அரசமைப்பிலான அரசாங்கத்தைக்கொண்டு பிராமணரல்லாதோரின் முன்னேற்றத்திற்கு பாடுபடுதல்.

இ) அரசமைப்பிலான உண்மையான பிரதிநிதித்துவ அரசாங்கமாக ஆக்குதல்

ஈ) பிராமணரல்லாதோரின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக பொதுக்கருத்தை உருவாக்குதல்.

25) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) 1919 ஆம் ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தமானது மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறையை கொண்டு வந்ததன் மூலம் சில துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அமைச்சருக்கு என ஒதுக்கப்பட்டது.

(ii) இரட்டை ஆட்சியின் கீழ் 1920 ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஒத்துழையாமையின் ஒரு பகுதியாக தேர்தலை புறக்கணித்தது.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: 1919 ஆம் ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தமானது மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறையை கொண்டு வந்ததன் மூலம் சில துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அமைச்சருக்கு என ஒதுக்கப்பட்டது. இரட்டை ஆட்சியின் கீழ் 1920 ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஒத்துழையாமையின் ஒரு பகுதியாக தேர்தலை புறக்கணித்தது. ஆனால் பல்வேறு அடையாளங்களில் காங்கிரசை சேர்ந்த பலர் தேர்தலில் போட்டியிட்டனர்.

26) எந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று சென்னை மாகாணத்திற்கு எ.சுப்பராயலு முதலமைச்சரானார்?

a) 1920

b) 1923

c) 1926

d) 1929

விளக்கம்: முதல் தேர்தலில் நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று சென்னை மாகாணத்திற்கு எ.சுப்பராயலு முதலமைச்சரானார். அவரின் இறப்பிற்கு பிறகு பனகல் ராஜா முதலமைச்சரானார்.

27) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) நீதிக்கட்சி 1921 முதல் 1937 வரை தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருந்தது.

(ii) வகுப்புவாரி அரசாணை மூலம் ஒவ்வொரு பிராமணரல்லாத பிரிவினருக்கும் அனைத்து துறைகளிலும் போதுமான வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட்டது.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: நீதிக்கட்சியின் பங்களிப்பு: அடுத்தடுத்த தேர்தல்களில் நல்வாய்ப்புகளில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும் நீதிக்கட்சி 1921 முதல் 1937 வரை தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருந்தது. அவர்கள் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்கள். வகுப்புவாரி அரசாணை மூலம் ஒவ்வொரு பிராமணரல்லாத பிரிவினருக்கும் அனைத்து துறைகளிலும் போதுமான வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட்டது.

28) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) நீதிக்கட்சி ஆட்சியாளர்கள் இந்து சமய அறநிலைய வாரியத்தை அமைத்ததின் மூலம் ஆலய விவகாரங்களை ஒழுங்குபடுத்தினர்.

(ii) பஞ்சமர்களுக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்து கொடுத்தனர்(பஞ்சமி நிலம்).

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: அவர்கள் சூத்திரர்களுக்கு மற்றும் பஞ்சமர்களுக்கு எதிராக இருந்த பொது வழி, போக்குவரத்து, உணவு விடுதிகள் மற்றும் பொது கிணறுகளைப்பயன்படுத்துதல் போன்றவற்றில் இருந்த பாகுபாடுகளை நீக்கினர். இந்து சமய அறநிலைய வாரியத்தை அமைத்ததின் மூலம் ஆலய விவகாரங்களை ஒழுங்குபடுத்தினர். பஞ்சமர்களுக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்து கொடுத்தனர்(பஞ்சமி நிலம்).

29) பின்வருவனவற்றுள் நீதிக்கட்சி செய்தனவற்றை தேர்ந்தெடு.

ⅰ) தொழிற்பேட்டைகளையும் அறிமுகப்படுத்தினர்.

ⅱ) ஒடுக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்கு சிறப்பு முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ⅲ) சில பள்ளிகளில் “மதிய உணவு திட்டத்தை” பரிசோதனை முறையில் கொண்டுவந்தனர்.

ⅳ)மருத்துவ கல்விக்கு சமஸ்கிருதம் அறிவு அடிப்படைத் தகுதி என்பது நீக்கப்பட்டு பிராமணரல்லாத மாணவர்கள் மருத்துவக் கல்வியில் நுழைவதற்கு வழி செய்யப்பட்டது.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ), ⅳ)

d) ⅲ), ⅳ)

விளக்கம்: தொழிற்பேட்டைகளையும் அறிமுகப்படுத்தினர். ஒடுக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்கு சிறப்பு முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனால் சில பள்ளிகளில் “மதிய உணவு திட்டத்தை” பரிசோதனை முறையில் கொண்டுவந்தனர். மருத்துவ கல்விக்கு சமஸ்கிருதம் அறிவு அடிப்படைத் தகுதி என்பது நீக்கப்பட்டு பிராமணரல்லாத மாணவர்கள் மருத்துவக் கல்வியில் நுழைவதற்கு வழி செய்யப்பட்டது.

30) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) டாக்டர். முத்துலட்சுமி அவர்களின் முயற்சியால் இந்தியாவில் முதல் முறையாக தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.

(ii) மிராசுதார் முறை ஒழிக்கப்பட்டதுடன் மற்றும் 1923 ஆம் ஆண்டு நீர்ப்பாசனத்திட்டங்களும் உருவாக்கப்பட்டன.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: டாக்டர். முத்துலட்சுமி அவர்களின் முயற்சியால் இந்தியாவில் முதல் முறையாக தேவதாசி முறை ஒழிக்கப்பட்டதுடன், பெண்கள் வாக்குரிமையைப் பெற்றனர். கூட்டுறவு சங்கங்கள் மேம்படுத்தப்பட்டன. மிராசுதார் முறை ஒழிக்கப்பட்டதுடன் மற்றும் 1923 ஆம் ஆண்டு நீர்ப்பாசனத்திட்டங்களும் உருவாக்கப்பட்டன.

31) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் ஆந்திரா பல்கலைக் கழகம் ஆகியவை உருவாக்கப்பட்டன.

(ii) சில துறைகள் ஒதுக்கப்பட்டாலும் நீதிக் கட்சி மட்டுமே மிகவும் சிறப்பான அரசாங்கத்தை கொடுத்தது.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: மேலும் இந்த ஆட்சிக்காலத்தில் தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் ஆந்திரா பல்கலைக் கழகம் ஆகியவை உருவாக்கப்பட்டன. சில துறைகள் ஒதுக்கப்பட்டாலும் நீதிக் கட்சி மட்டுமே மிகவும் சிறப்பான அரசாங்கத்தை கொடுத்தது.

32) இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவது தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை அழித்து “வட இந்திய ஏகாதிபத்தியத்தை” நிறுவும் முயற்சி என கருதியவர்?

a) சி.என்.அண்ணா துரை

b) பெரியார்

c) திரு.வி.க

d) மறைமலையடிகள்

விளக்கம்: ராஜாஜி அரசாங்கம் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவது என முடிவெடுத்ததை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை அழித்து “வட இந்திய ஏகாதிபத்தியத்தை” நிறுவும் முயற்சி என பெரியார் கருதினார். மேலும் இந்திதிணிப்பு என்பது திராவிடர்களை அடிமைப்படுத்தி ஆரியர்களின் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான முயற்சி என்று பெரியார் கூறினார்.

33) பதினைந்து ஆண்டுகளில் இருபத்து மூன்று முறை சிறை சென்றவர் யார்?

a) சி.என்.அண்ணா துரை

b) பெரியார்

c) திரு.வி.க

d) மறைமலையடிகள்

விளக்கம்: சென்னை மாகாணத்தில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றதன் விளைவாக மாகாண அரசாங்கத்தால் பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார். பதினைந்து ஆண்டுகளில் இருபத்து மூன்று முறை சிறை சென்றார் என்பதனால் ‘சிறைப்பறவை‘ என்றும் அடைமொழியிட்டு அழைக்கப்பட்டார்.

34) பெரியார் எந்த ஆண்டு நீதிக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

a) 1938

b) 1937

c) 1935

d) 1925

விளக்கம்: 1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவர் நீதிக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு நீதிக் கட்சியானது ஆங்கிலேய அரசாங்கத்தின் கீழ் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்ற தீர்மானத்தை இயற்றியதுடன் இது ஆங்கிலேய அரசாங்கத்தின் இந்தியாவிற்கான அமைச்சருடைய நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என்றது.

35) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) பிராமணரல்லாதோர் அரசியலில் பங்குபெறுவதற்கான விகிதாச்சார பிரதிநிதித்துவத்திற்குச் சாதகமாக காங்கிரசில் தீர்மானம் கொண்டு வந்ததில் மிகச் சிறப்பாக பெரியார் தனது முயற்சியை செய்தார்.

(ii) வைக்கம் சத்தியாகிரக போராட்டத்திற்கு தனது சிறப்பான தலைமையை அளித்ததுடன் காங்கிரஸ் கட்சி நிறுவிய சேரன்மா தேவி குருகுலத்தில் நடந்த சாதிப்பாகுபாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: சென்னை மாகாண காங்கிரசில் பெரியார் முன்னோடியாக இருந்ததால் அரசியல் அரங்கில் பிராமணரல்லாதோர் அரசியலில் பங்குபெறுவதற்கான விகிதாச்சார பிரதிநிதித்துவத்திற்குச் சாதகமாக காங்கிரசில் தீர்மானம் கொண்டு வந்ததில் மிகச் சிறப்பாக தனது முயற்சியை செய்தார். வைக்கம் சத்தியாகிரக போராட்டத்திற்கு தனது சிறப்பான தலைமையை அளித்ததுடன் காங்கிரஸ் கட்சி நிறுவிய சேரன்மா தேவி குருகுலத்தில் நடந்த சாதிப்பாகுபாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.

36) கூற்று(A): 1925 ஆம் ஆண்டு பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்.

காரணம் (R): பெரியார் தன்னுடைய திட்டங்களை காங்கிரசு கட்சி ஏற்றுக்கொள்ளச் செய்வதில் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தபோது காங்கிரசை விட்டு விலகினார்.

a) கூற்று (கூ) காரணம் (கா) இரண்டுமே சரி, கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது.

b) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை.

c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

விளக்கம்: பெரியார் தன்னுடைய திட்டங்களை காங்கிரசு கட்சி ஏற்றுக்கொள்ளச் செய்வதில் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தபோது காங்கிரசை விட்டு விலகி 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். இவ்வியக்கம் தேர்தல் அரசியலை தவிர்த்ததுடன் சமூக சீர்திருத்தம், சாதிமுறையை ஒழிப்பது, மாண்பற்ற தன்மையை நீக்குவது, பெண்கள் மீதான பாலின அடிப்படையிலான தடை நீக்கம் பரம்பரை அர்ச்சகர் உரிமையை எதிர்ப்பது போன்றவற்றிற்காக பிரச்சாரம் செய்தது.

37) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) சுயமரியாதை இயக்கம் மிக தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டு பழங்காலம் முதலான மூடநம்பிக்கைகளையும், பழக்கவழக்கங்களையும் எதிர்த்தது.

(ii) பகுத்தறிவற்ற மரபுகள் மற்றும் சமத்துவமற்ற தன்மைகள் நீடித்திருப்பதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் மதத்தின் பங்குப்பற்றியும் சுயமரியாதை இயக்கம் வினா எழுப்பியது.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: சுயமரியாதை இயக்கம் மிக தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டு பழங்காலம் முதலான மூடநம்பிக்கைகளையும், பழக்கவழக்கங்களையும் எதிர்த்ததுடன் பகுத்தறிவற்ற மரபுகள் மற்றும் சமத்துவமற்ற தன்மைகள் நீடித்திருப்பதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் மதத்தின் பங்குப்பற்றியும் வினா எழுப்பியது. இந்த சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு மாண்பு மறுப்பினை எதிர்த்தல் மற்றும் தனிமனித சமத்துவம் (பெண்கள் உட்பட) போன்றவை மரபு மற்றும் மதத்தின் கோரப்பிடியின் கீழ் இருப்பதை எதிர்த்து பிரச்சாரம் செய்தது.

38) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) சுயமரியாதை இயக்கம் அதன் இயக்க உறுப்பினர்களுக்கு சாதி துணைப்பெயர்களை துறப்பதுடன், சாதி-மத அடையாளங்களையும் கைவிட ஆணையிட்டது.

(ii) சாதியற்ற, புரோகிதர்அற்ற தவிர சம்பிரதாய சடங்குகள் அற்ற ஒப்பந்தத் திருமணங்கள் சுயமரியாதைத் திருமணம் எனப்பட்டது.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: சுயமரியாதை இயக்கம் அதன் இயக்க உறுப்பினர்களுக்கு சாதி துணைப்பெயர்களை துறப்பதுடன், சாதி-மத அடையாளங்களையும் கைவிட ஆணையிட்டது. அது சாதியற்ற, புரோகிதர்அற்ற தவிர சம்பிரதாய சடங்குகள் அற்ற ஒப்பந்தத் திருமணங்களை அறிமுகம் செய்தது. இது சுயமரியாதைத் திருமணம் எனப்பட்டது.

39) பின்வருவனவற்றுள் சுயமரியாதை இயக்கம் எவற்றை எதிர்த்து போராடியது?

ⅰ) தீண்டாமை

ⅱ) சாதிமுறை அமைப்பு

ⅲ) சாதி அடிப்படையிலான பலவீனங்கள்

ⅳ) தனிமனிதர்கள் மீது திணிக்கப்படும் மாண்பு குறைவு நடவடிக்கைகள்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ), ⅳ)

d) ⅲ), ⅳ)

விளக்கம்: இவ்வியக்கம் தீண்டாமைக்கு எதிராக மட்டும் போராடவில்லை, மாறாக சாதிமுறை அமைப்பு மற்றும் சாதி அடிப்படையிலான பலவீனங்கள், தனிமனிதர்கள் மீது திணிக்கப்படும் மாண்பு குறைவு நடவடிக்கைகள் ஆகியவற்றினையும் எதிர்த்து போராடியது. சுயமரியாதை இயக்கம் வெறும் பெயருக்காக மட்டும் பெண்ணுரிமை பற்றி பேசவில்லை. அது பெண்களின் சம உரிமை, சமநிலை மற்றும் சம வாய்ப்புக்காக பிரச்சாரம்செய்தது.

40) கூற்று (A): பெண்கள் மாநாட்டில் ஈ.வெ. ராமசாமிக்கு “பெரியார்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.

காரணம் (R): பெண் விடுதலையில் சுயமரியாதை இயக்கத்தின் பங்குப்பணி ஓர் ஈடு இணையில்லாதது.

a) கூற்று (கூ) காரணம் (கா) இரண்டுமே சரி, கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது.

b) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை.

c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

விளக்கம்: பெண் விடுதலையில் சுயமரியாதை இயக்கத்தின் பங்குப்பணி ஓர் ஈடு இணையில்லாதது, என்பதால் அதன் காரணமாகவே பெண்கள் மாநாட்டில் ஈ.வெ. ராமசாமிக்கு “பெரியார்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. பெரியாரின் நாளேடுகளான “குடியரசு,” “ புரட்சி”, பின்பு ‘விடுதலை’ போன்றவை சுயமரியாதைக் கருத்துக்களை சிறப்பான முறையில் பிரச்சாரம் செய்தன.

41) முதலாவது சுயமரியாதை மாநாடு எங்கு நடைபெற்றது?

a) காஞ்சிபுரம்

b) சென்னை

c) செங்கல்பட்டு

d) இராணிப்பேட்டை

விளக்கம்: 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் முதலாவது சுயமரியாதை மாநாடு நடந்தது. 1937ஆம் ஆண்டு ராஜாஜி என்று புகழ்பெற்ற C.ராஜகோபாலாச்சாரியின் தலைமையில் வழிநடத்தப்பட்ட காங்கிரசு கட்சி ஓரிடத்தை தவிர அனைத்து இடங்களிலும் வெற்றிப் பெற்றது.

42) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) காங்கிரசு கட்சியின் வெற்றியானது நீதிக்கட்சியின் வீழ்ச்சினால் கிடைத்ததாகும்.

(ii) காங்கிரசு அரசாங்கம் அமைக்கப்பட்டு, சென்னை மாகாணத்தின் முதன்மை அமைச்சராக ராஜாஜி ஆனார்.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: காங்கிரசு கட்சியின் வெற்றியானது நீதிக்கட்சியின் வீழ்ச்சினால் கிடைத்ததாகும். காங்கிரசு அரசாங்கம் அமைக்கப்பட்டு, சென்னை மாகாணத்தின் முதன்மை அமைச்சராக ராஜாஜி ஆனார். அதிகாரத்திற்கு வந்த உடனே காங்கிரசு அரசாங்கம் பள்ளிக் கூடங்களில் இந்தியினை கட்டாயப்பாடமாக அறிமுகப்படுத்தியது. பெரியார் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை தொடங்கினார்.

43) பொதுவுடைமைக் கட்சி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

a) 1924

b) 1926

c) 1925

d) 1930

விளக்கம்: இக்கால கட்டத்தில் பொதுவுடைமைக் கட்சி (முன்னதாக 1925-இல் உருவாக்கப்பட்டது) சமதர்மத் திட்டங்களுக்காக தொழிலாளர் இயக்கங்களை ஒன்றிணைத்து தீவிரமாக பரப்புரை செய்து கொண்டிருந்தது.

44) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) M. சிங்காரவேலர் மற்றும் அவரின் உடன் இருந்தோர் சுயமரியாதை இயக்கத்தின் சமூக சீர்திருத்த திட்டங்களால் கவரப்பட்டனர்.

(ii) சமூகங்களின் பொருளாதார திட்டங்களுக்கான ஆதரவை விரிவுபடுத்துபடுவதுடன், ஓர் பொதுத் திட்டத்தின் அடிப்படையில் செயலாற்ற ஒத்துக்கொண்டனர்.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: M. சிங்காரவேலர் மற்றும் அவரின் உடன் இருந்தோர் சுயமரியாதை இயக்கத்தின் சமூக சீர்திருத்த திட்டங்களால் கவரப்பட்டனர். இதன்படி சமூகங்களின் பொருளாதார திட்டங்களுக்கான ஆதரவை விரிவுபடுத்துபடுவதுடன், ஓர் பொதுத் திட்டத்தின் அடிப்படையில் செயலாற்ற ஒத்துக்கொண்டனர். (ஈரோடு திட்டம்).

45) பின்வருவனவற்றுள் சுயமரியாதை இயக்கத்தின் நோக்கங்கள் எவை?

ⅰ)திராவிட சமுதாயத்தை சீர்திருத்துவது மற்றும் அதனை உண்மையான பகுத்தறிவுடையதாக்குதல்.

ⅱ) திராவிடர்களின் பண்டைய தமிழ் பண்பாட்டினை அவர்களுக்குக் கற்பித்தல்.

ⅲ) ஆரிய பண்பாட்டின் ஆதிக்கத்தில் இருந்து திராவிட சமூகத்தைக் காப்பாற்றுதல்

ⅳ) மூடநம்பிக்கையான நடவடிக்கைகளை நீக்குவதன் மூலம் இந்து மதத்தை சீர்திருத்துவதுடன் பிராமணர்களின் செல்வாக்கினைக் குறைத்தல்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ), ⅳ)

d) ⅲ), ⅳ)

விளக்கம்: சுயமரியாதை இயக்கத்தின் நோக்கங்கள் :

அ.  திராவிட சமுதாயத்தை சீர்திருத்துவது மற்றும் அதனை உண்மையான பகுத்தறிவுடையதாக்குதல்.

ஆ. திராவிடர்களின் பண்டைய தமிழ் பண்பாட்டினை அவர்களுக்குக் கற்பித்தல். இ.  ஆரிய பண்பாட்டின் ஆதிக்கத்தில் இருந்து திராவிட சமூகத்தைக் காப்பாற்றுதல்

ஈ. மூடநம்பிக்கையான நடவடிக்கைகளை நீக்குவதன் மூலம் இந்து மதத்தை சீர்திருத்துவதுடன் பிராமணர்களின் செல்வாக்கினைக் குறைத்தல்.

46) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) பெரியார் பொதுவாக பிராமணரல்லாதவர்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் தொன்மையான திராவிட பண்பாட்டின் புகழை மீட்டெடுக்க விரும்பினார்.

(ii) பெரியார் எந்த ஒரு சமூக நிகழ்வுகளிலும் பிராமணர்களின் சேவைகளை பயன்படுத்தாமல் இருக்கச் செய்தார்.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: பெரியார் பொதுவாக பிராமணரல்லாதவர்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் தொன்மையான திராவிட பண்பாட்டின் புகழை மீட்டெடுக்க விரும்பினார். பிராமண புரோகிதர்கள் இல்லாத சுயமரியாதைத் திருமணத்தை மேற்கொள்ள ஆதரவு தெரிவித்தார். அவர் மத விழாக்களை மக்கள் பின்பற்றுவதை ஆதரிக்கவில்லை. எந்த ஒரு சமூக நிகழ்வுகளிலும் பிராமணர்களின் சேவைகளை பயன்படுத்தாமல் இருக்கச் செய்தார்.

47) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) 1929-ஆம் ஆண்டு வரை சுயமரியாதை இயக்கமானது சென்னை மாகாணத்தில் ஓர் முன்னோடி இயக்கமாக இருந்தது.

(ii) 1930 ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாணத்தில் அதன் புகழ் மங்கத்தொடங்கியது.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: 1929-ஆம் ஆண்டு வரை சுயமரியாதை இயக்கமானது சென்னை மாகாணத்தில் ஓர் முன்னோடி இயக்கமாக இருந்தது. 1930 ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாணத்தில் அதன் புகழ் மங்கத்தொடங்கியது. இந்த வீழ்ச்சிக்கு மூன்று முக்கிய காரணங்கள் இருந்தன.

48) பின்வருவனவற்றுள் நீதிக்கட்சியின் வீழ்ச்சிக்கான காரணங்கள் எவை?

ⅰ) இயக்கமானது ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை பிரிவு மக்களிடையே ஆதரவை இழந்தது.

ⅱ) பெரியார் தலைமையில் இருந்த சுயமரியாதை இயக்கம் மிகவும் புரட்சிகரமான சீர்திருத்த இயக்கமானது.

ⅲ) உயர்குடியின மற்றும் ஆங்கில ஆதரவு கண்ணோட்டம்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: இந்த இயக்கமானது ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை பிரிவு மக்களிடையே ஆதரவை இழந்தது. இரண்டாவதாக, பெரியார் தலைமையில் இருந்த சுயமரியாதை இயக்கம் மிகவும் புரட்சிகரமான சீர்திருத்த இயக்கமானது. இறுதியாக உயர்குடியின மற்றும் ஆங்கில ஆதரவு கண்ணோட்டம் ஆகியவை பெருமளவு அதன் வீழ்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களித்தன.

49) கூற்று(A): 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாண தேர்தலில் வெற்றிபெற்று ராஜாஜி முதல் அமைச்சரானார்.

காரணம் (R): நீதிக் கட்சியின் வீழ்ச்சியும், தேர்தல் அரசியலில் நுழைய பெரியார் மறுத்ததும், வளர்ந்து வந்த மகாத்மா காந்தியின் புகழும், இந்திய தேசிய காங்கிரசை 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாண தேர்தலில் வெற்றிபெற செய்தது.

a) கூற்று (கூ) காரணம் (கா) இரண்டுமே சரி, கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது.

b) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை.

c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

விளக்கம்: நீதிக் கட்சியின் வீழ்ச்சியும், தேர்தல் அரசியலில் நுழைய பெரியார் மறுத்ததும், வளர்ந்து வந்த மகாத்மா காந்தியின் புகழும், இந்திய தேசிய காங்கிரசை 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாண தேர்தலில் வெற்றிபெற செய்தது. ராஜாஜி முதல் அமைச்சரானார்.

50) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) ராஜாஜி முழுமையான மது விலக்கு (மது விற்கத் தடை) மற்றும் ஜமீன்தாரி முறை ஒழிப்பை நடைமுறைப்படுத்தினார்.

(ii) ராஜாஜி ஒடுக்கப்பட்டோர் ஆலய நுழைவுக்கு இருக்கும் தடையை நீக்குவதற்கு சட்டம் கொண்டுவந்தார்.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: அவர் முழுமையான மது விலக்கு (மது விற்கத் தடை) மற்றும் ஜமீன்தாரி முறை ஒழிப்பை நடைமுறைப்படுத்தினார். மேலும் ஒடுக்கப்பட்டோர் ஆலய நுழைவுக்கு இருக்கும் தடையை நீக்குவதற்கு சட்டம் கொண்டுவந்தார்.

51) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) இந்தி மொழியை கட்டாயமாக பள்ளியில் அறிமுகப்படுத்திய நடவடிக்கையானது பல பள்ளிக் கூடங்களை மூடுவதற்கு காரணமானது.

(ii) 1937 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒன்று சேர்ந்தனர்.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: இந்தி மொழியை கட்டாயமாக பள்ளியில் அறிமுகப்படுத்திய நடவடிக்கையானது பல பள்ளிக் கூடங்களை மூடுவதற்கு காரணமானது. இது சுயமரியாதைக்காரர்கள் மற்றும் தேசியவாதிகளான மறைமலை அடிகள் போன்றோரை ஆத்திரமடையச் செய்தது. இதனால் 1937 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒன்று சேர்ந்தனர். பெரியார் உள்ளிட்ட ஆயிரக் கணக்காண போராட்டக்காரர்கள் கைதானார்கள், மேலும் பல பேர் சிறையிலேயே இறந்தனர்.

52) நீதிக் கட்சியின் பெயரை திராவிடர் கழகம் (தி.க) என்று மாற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை கொண்டுவந்தவர் யார்?

a) சி.என்.அண்ணா துரை

b) பெரியார்

c) திரு.வி.க

d) மறைமலையடிகள்

விளக்கம்: 1944-ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் நடைபெற்ற சேலம் மாநாட்டில், ஏற்கெனவே பெரியாரின் தளபதியாகிவிட்ட திற மையான சொபொற் ழிவாளரான சி.என். அண்ணாதுரை நீதிக் கட்சியின் பெயரை திராவிடர் கழகம் (தி.க) என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை கொண்டுவந்தார்.

53) பின்வருவனவற்றுள் திராவிடர் கழகமானது எவற்றை விரும்பியது?

ⅰ) சாதியற்ற சமூகத்தை ஏற்படுத்துதல்

ⅱ) மதச் சடங்குகளைக் கண்டித்தல்

ⅲ) பழமை மற்றும் மூடநம்பிக்கைகள் அற்ற சமூகத்தை அமைத்தல்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: தனித் “திராவிட நாடு” கோரிக்கையைத் தவிர திராவிடர் கழகமானது சாதியற்ற சமூகத்தை ஏற்படுத்துதல், மதச் சடங்குகளைக் கண்டித்தல், பழமை மற்றும் மூடநம்பிக்கைகள் அற்ற சமூகத்தை அமைத்தல் ஆகியவற்றை விரும்பியது.

54) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) திராவிடர் கழகமானது கிராம மற்றும் நகர் புறங்களில் குறிப்பாக மாணவர்களிடத்தில் மிகவும் புகழ்பெற்றது.

(ii) பல பிராமணர் அல்லாத தலைவர்கள் மற்றும் மாணவர்கள் தங்களுடைய பெயர்களை தூய தமிழில் மாற்றி கொண்டனர்.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: திராவிடர் கழகமானது கிராம மற்றும் நகர் புறங்களில் குறிப்பாக மாணவர்களிடத்தில் மிகவும் புகழ்பெற்றது, பல பிராமணர் அல்லாத தலைவர்கள் மற்றும் மாணவர்கள் தங்களுடைய பெயர்களை தூய தமிழில் மாற்றி கொண்டனர்.

55) எந்த அரசு அமைப்பு உறுப்பின் படி இந்தி மொழி இந்திய நாட்டின் அலுவலக மொழியாக ஆக்கப்பட்டது?

a) 314

b) 312

c) 313

d) 318

விளக்கம்: 1965 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் நாள் இந்திய அரசு அமைப்புச் சட்டத்தின் உறுப்பு 313-ன் படி இந்தி மொழி இந்திய நாட்டின் அலுவலக மொழியாக ஆக்கப்பட்டது.

56) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) மத்திய அரசாங்கம் இந்தி மொழியை இந்திய நாட்டின் அலுவலக மொழியாக ஆக்கியது

(ii) 1965 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாளை தி.மு.க. துக்க தினமாக அனுசரிக்கத் தீர்மானித்தது.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: மத்திய அரசாங்கம் இந்தி மொழியை இந்திய நாட்டின் அலுவலக மொழியாக ஆக்கியதை எதிர்த்து 1965 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாளை தி.மு.க. துக்க தினமாக அனுசரிக்கத் தீர்மானித்தது. அதன் பல தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

57) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) தமிழ்நாடு பெருமளவிலான இந்தி எதிர்ப்பு போராட்டங்களை சந்தித்தது.

(ii) இந்தி எதிர்ப்பு கிளர்ச்சியால் தி.மு.க. மாணவர் சமூகத்திடம் இருந்து பெருமளவு ஆதரவை பெற்றது.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: தமிழ்நாடு பெருமளவிலான இந்தி எதிர்ப்பு போராட்டங்களை சந்தித்தது. இந்த கிளர்ச்சியால் தி.மு.க. மாணவர் சமூகத்திடம் இருந்து பெருமளவு ஆதரவை பெற்றது. இதன் மற்றொரு பக்கம் காங்கிரசு கட்சி தமிழ்நாட்டில் தனது ஆதரவையும், தளத்தையும் இழந்தது. இதற்கிடையில் தி.மு.க. “திராவிட நாடு” கோரிக்கையை திரும்ப பெற்றுக்கொண்டு தமிழ் நாட்டின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற தேர்தல் அரசியலில் ஊக்கத்துடன் பங்கெடுத்தது.

58) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) 1939ஆம் ஆண்டு இந்தியா இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேய அரசாங்கத்தால் ஈடுபடுத்தப்படுவதை விரும்பாத காங்கிரசு அமைச்சரவை பதவியை துறந்தது.

(ii) பெரியார் திராவிட நாடு கோரிக்கையை எழுப்பினார்.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: 1939ஆம் ஆண்டு இந்தியா இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேய அரசாங்கத்தால் ஈடுபடுத்தப்படுவதை விரும்பாத காங்கிரசு அமைச்சரவை பதவியை துறந்தது. பெரியார் திராவிட நாடு கோரிக்கையை எழுப்பினார்.

59) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) 1944 ஆம் ஆண்டு நீதிக்கட்சி பெரியார் தலைமையிலான சேலம் மாநாட்டில் அதன் பெயரை “திராவிடர் கழகம்” என மாற்றியது.

(ii) திராவிடர் கழகம் திராவிட நாடு அடைவதே தனது லட்சியம் என்று அறிவித்தது.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: 1944 ஆம் ஆண்டு நீதிக்கட்சி பெரியார் தலைமையிலான சேலம் மாநாட்டில் அதன் பெயரை “திராவிடர் கழகம்” என மாற்றியும், திராவிட நாடு அடைவதே தனது லட்சியம் என்றும் அறிவித்து, சமூக பண்பாட்டு சமத்துவத்திற்கு முன்பாக விடுதலை அடைவது தமிழர்களின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று கூறினார்.

60) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) 1949 ஆம் ஆண்டில், திராவிட கழகத்தை விட்டு பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணாதுரையால் ஆரம்பிக்கப்பட்டது.

(ii) 1951 ஆம் ஆண்டில் உச்ச நீதி மன்றமானது உயர்கல்வியில் சாதிவாரி இடஒதுக்கீட்டை உடைத்து எறிந்தது.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: 1949 ஆம் ஆண்டில், திராவிட கழகத்தை விட்டு பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணாதுரையால் ஆரம்பிக்கப்பட்டது. 1951 ஆம் ஆண்டில் உச்ச நீதி மன்றமானது உயர்கல்வியில் சாதிவாரி இடஒதுக்கீட்டை உடைத்து எறிந்தது. உடனடியாக பெரியாரின் திராவிடர் கழகம் மீண்டும் சாதிவாரி இட ஒதுக்கீட்டை திரும்ப பெற போராட்டத்தை துவக்கியது.

61) சட்டமும் விதிகளும் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டவை; சட்டத்துக்காகவும், விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை என்று கூறியவர் யார்?

a) சி.என்.அண்ணா துரை

b) பெரியார்

c) காமராசர்

d) குமாரசாமி

விளக்கம்: சட்டமும் விதிகளும் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டவை; சட்டத்துக்காகவும், விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை – பெருந்தலைவர் காமராசர்

62) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) பெரியார் “திராவிட நாடு” மாநாட்டைக் கூட்டி திராவிடர்களுக்குத் தனி “திராவிட நாடு” கோரினார்.

(ii) பெரியாரின் புகழ் பெற்ற வாசகமான “திராவிட நாடு திரவிடர்களுக்கே” எனவும் முழக்கமிட்டார்.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: பெரியார் “திராவிட நாடு” மாநாட்டைக் கூட்டி திராவிடர்களுக்குத் தனி “திராவிட நாடு” கோரினார். மேலும் அவரின் புகழ் பெற்ற வாசகமான “திராவிட நாடு திரவிடர்களுக்கே” எனவும் முழக்கமிட்டார்.

63) பின்வருவனவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.

ⅰ) திராவிட முன்னேற்ற கழகமும் கூட சாதிவாரி இட ஒதுக்கீட்டை திரும்ப பெறும் போராட்ட இயக்கத்தில் சேர்ந்து கொண்டது.

ⅱ) காமராஜர் இட ஒதுக்கீட்டு சிக்கலை மத்தியில் இருக்கும் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

ⅲ) சமூக மற்றும் கல்வி அடிப்படையில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சாதகமாக இடஒதுக்கீடு அளிக்கும் முதலாவது நாடாளுமன்ற சட்டத்திருத்தம் இயற்றப்பட்டது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: திராவிட முன்னேற்ற கழகமும் கூட சாதிவாரி இட ஒதுக்கீட்டை திரும்ப பெறும் போராட்ட இயக்கத்தில் சேர்ந்து கொண்டது. காங்கிரசு தலைவர் காமராஜர் இந்த சிக்கலை மத்தியில் இருக்கும் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதனைத்தொடர்ந்து சமூக மற்றும் கல்வி அடிப்படையில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சாதகமாக இடஒதுக்கீடு அளிக்கும் முதலாவது நாடாளுமன்ற சட்டத்திருத்தம் இயற்றப்பட்டது.

64) பின்வருவனவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.

ⅰ) சென்னை மாகாண அரசியலானது பழமைமாறா சக்திகளுக்கும், சீர்திருத்தவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து நடக்கும் போராட்டத்தின் சாட்சியாகவே இருந்தது.

ⅱ) சென்னை மாகாணத்தின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையை வழிநடத்திய திரு.சி.ராஜாஜி பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையை குறைத்தார்.

ⅲ) பள்ளிகளில் இந்தி மொழியை திணித்தார்.

ⅳ) புதிய பள்ளிக்கூடங்களில் பகுதி நேரமாக கற்பதற்கு பரம்பரைத்தொழில் எனப்படும் புதிய தொடக்க கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ), ⅳ)

d) ⅲ), ⅳ)

விளக்கம்: ராஜாஜி ஆட்சி(1952-1954): சென்னை மாகாண அரசியலானது குடியரசு இந்தியாவில் பழமைமாறா சக்திகளுக்கும், சீர்திருத்தவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து நடக்கும் போராட்டத்தின் சாட்சியாகவே இருந்தது. சென்னை மாகாணத்தின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையை வழிநடத்திய திரு.சி.ராஜாஜி மீண்டும் குடியரசினுடைய அரசமைப்பின் கீழ் பள்ளிக்கூடங்களில் எண்ணிக்கையை குறைத்தார். பள்ளிகளில் இந்தி மொழியை திணித்தார். புதிய பள்ளிக்கூடங்களில் பகுதி நேரமாக கற்பதற்கு பரம்பரைத்தொழில் எனப்படும் (குலக்கல்வி) புதிய தொடக்க கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

65) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) ராஜாஜியின் நடவடிக்கைகளை எதிர்த்து திராவிடத்தலைவர்கள் மாநிலம் முழுவதும் போராடத்துவங்கினர்.

(ii) காங்கிரசு தலைவர்களின் ஒரு பகுதியினரும் ராஜாஜியின் திட்டத்தால் கோபம் அடைந்தனர்.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: ராஜாஜியின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து திராவிடத்தலைவர்கள் மாநிலம் முழுவதும் போராடத்துவங்கினர். காங்கிரசு தலைவர்களின் ஒரு பகுதியினரும் ராஜாஜியின் திட்டத்தால் கோபம் அடைந்தனர். இதுவே ராஜாஜி பதவி விலகுவதற்கு காரணமாக அமைந்தது. அவரைத்தொடர்ந்து காமராசர் முதலமைச்சர் ஆனார்.

66) பின்வருவனவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.

ⅰ) காமராசர் குலக்கல்வி திட்டத்தை ஒழித்தார்.

ⅱ) பள்ளிகளின் எண்ணிக்கையை பன்மடங்கு உயர்த்தினார்.

ⅲ).நிறைய தொழிற்பேட்டைகளை அமைத்தார்.

ⅳ) குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ), ⅳ)

d) ⅲ), ⅳ)

விளக்கம்: காமராசர் காலம் (1954 – 1963): காமராசர் தொடக்க கல்வி திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்ததுடன் குலக்கல்வி திட்டத்தை ஒழித்தார். பள்ளிகளின் எண்ணிக்கையை பன்மடங்கு உயர்த்தினார். நிறைய தொழிற்பேட்டைகளை அமைத்தார். அதன் மூலம் மாநிலத்தில் வியக்கத்தக்க அளவிற்கு தொழில்வளர்ச்சியை உறுதி செய்தார். ஏழை கிராமப்புற குழந்தைகளும் கல்வி பெறச்செய்தார். அவர் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

67) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) 1967 ஆம் ஆண்டு பொது தேர்தலில் காங்கிரசு கட்சி தோற்கடிக்கப்பட்டது.

(ii) தி.மு.க வெற்றி பெற்று மு.கருணாநிதி முதலமைச்சரானார்.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: திராவிட கட்சிகளின் ஆட்சி: 1967 ஆம் ஆண்டு பொது தேர்தலில் காங்கிரசு கட்சி தோற்கடிக்கப்பட்டது. தி.மு.க வெற்றி பெற்று சி.என்.அண்ணாதுரை முதலமைச்சரானார்.

68) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) 1956 இல் மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் மூலமாக சென்னை மாகாணம் தமிழர்களின் மாநிலமாக உருவானது.

(ii) சென்னை மாகாணத்தில் இருந்து மலையாளப்பகுதிகள் கேரளாவிற்கும், தெலுங்கு பகுதிகள் ஆந்திரப்பிரதேசத்திற்கும், கன்னடப்பகுதிகள் மைசூர் மாநிலத்திற்கும் தரப்பட்டது.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: 1956 இல் மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் மூலமாக சென்னை மாகாணத்தில் இருந்து மலையாளப்பகுதிகள் கேரளாவிற்கும், தெலுங்கு பகுதிகள் ஆந்திரப்பிரதேசத்திற்கும், கன்னடப்பகுதிகள் மைசூர் மாநிலத்திற்கும் தரப்பட்டது. இங்ஙனம் சென்னை மாகாணம் தமிழர்களின் மாநிலமாக உருவானது. காமராசர் ஒரு நிலையான ஆட்சியை தந்தார்.

69) பின்வருவனவற்றுள் நகர்ப்புற ஏழை மக்களிடம் அண்ணாவிற்கு ஆதரவு பெருகியதற்கான காரணங்கள் எவை?

ⅰ) அனைத்து ஏழைகளுக்குமான வீட்டு வசதி

ⅱ) படியரிசி திட்டத்தின் மூலம் உணவு பாதுகாப்பிற்கு முன்னோடியாக இருந்தது

ⅲ) குடிசை மாற்று வாரியம் அமைத்தது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: அனைத்து ஏழைகளுக்குமான வீட்டு வசதி, படியரிசி திட்டத்தின் மூலம் உணவு பாதுகாப்பிற்கு முன்னோடியாக இருந்தது மற்றும் குடிசை மாற்று வாரியம் அமைத்தது போன்றவற்றால் நகர்ப்புற ஏழை மக்களிடம் போதுமான அளவு அண்ணாவிற்கு ஆதரவு பெருகியது.

70) மெட்ராஸ் மாநிலத்தின் பெயரை “தமிழ்நாடு” என எந்த ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது?

a) 1969

b) 1966

c) 1967

d) 1968

விளக்கம்: மிகவும் முக்கியமாக 1969 ஆம் ஆண்டு சி.என். அண்ணாதுரையின் தலைமையிலான அரசாங்கம் மெட்ராஸ் மாநிலத்தின் பெயரை “தமிழ்நாடு” என பெயர் மாற்றம் செய்தது.

71) பின்வருவனவற்றுள் தி.மு.க வின் சாதனைகள் எவை?

ⅰ) 75 மைல் தொலைவிற்கு மேல் உள்ள பேருந்து தடங்களை தேசியமயமாகியது.

ⅱ) அனைத்து சாதி ஏழை மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வி மற்றும் தொழிற்கல்விக்கு முந்தைய படிப்புகளுக்கு கல்வி கட்டண விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

ⅲ) முதலாவது உலக தமிழ் மாநாடு நடத்தப்பட்டது.

ⅳ) தமிழக ஏழை மக்களுக்கு மானிய விலையில் அரிசி வழங்கப்பட்டது.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅳ)

c) ⅱ), ⅲ), ⅳ)

d) ⅲ), ⅳ)

விளக்கம்: தி.மு.க வின் இதர சாதனைகள்:

1. 75 மைல் தொலைவிற்கு மேல் உள்ள பேருந்து தடங்களை தேசியமயமாகியது.

2. அனைத்து சாதி ஏழை மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வி மற்றும் தொழிற்கல்விக்கு முந்தைய படிப்புகளுக்கு கல்வி கட்டண விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

3. இரண்டாவது உலக தமிழ் மாநாடு நடத்தப்பட்டது.

4. தமிழக ஏழை மக்களுக்கு மானிய விலையில் அரிசி வழங்கப்பட்டது.

72) பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) கடந்த 68 ஆண்டுகளாக தமிழகத்தை திராவிட கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன.

ⅱ) 1957 ஆம் ஆண்டு தி.மு.க தேர்தல் அரசியலில் நுழைய தீர்மானித்தது.

ⅲ) இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்ததின் விளைவாகவும் புதிதாக திருத்தம் செய்யப்பட்ட தேர்தல் விதிகளை கடந்து வரவும், தனது “திராவிட நாடு” கோரிக்கையை கைவிட்டது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: கடந்த 62 ஆண்டுகளாக தமிழகத்தை திராவிட கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. 1957 ஆம் ஆண்டு தி.மு.க தேர்தல் அரசியலில் நுழைய தீர்மானித்தது. இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்ததின் விளைவாகவும் புதிதாக திருத்தம் செய்யப்பட்ட தேர்தல் விதிகளை கடந்து வரவும், தனது “திராவிட நாடு” கோரிக்கையை கைவிட்டது.

73) பின்வருவனவற்றுள் அண்ணாவின் குறிப்பிடத்தகுந்த சாதனைகள் எவை?

ⅰ) சென்னை மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தது.

ⅱ) திருமணச்சட்டத்தை இயற்றியது

ⅲ) மத்திய அரசாங்கத்தின் மும்மொழி கொள்கையை எதிர்த்தது.

ⅳ) தமிழகத்தில் இருமொழிக்கொள்கையை (தமிழ், ஆங்கிலம்) நடைமுறைப்படுத்தியது

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ), ⅳ)

d) ⅲ), ⅳ)

விளக்கம்: 1967 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அண்ணாதுரை சிறிது காலமே ஆட்சி புரிந்தார். (1967-1969) இருந்தபோதிலும், சென்னை மாநிலத்தை தமிழ்நாடு என்றும், திருமணச்சட்டத்தை இயற்றியது. மத்திய அரசாங்கத்தின் மும்மொழி கொள்கையை எதிர்த்தது. தமிழகத்தில் இருமொழிக்கொள்கையை(தமிழ், ஆங்கிலம்) நடைமுறைப்படுத்தியது ஆகியவை அவரின் குறிப்பிடத்தக்க சாதனைகள் ஆகும்.

74) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) சி.என்.அண்ணாதுரை முதன்முறையாக, மலிவு விலை அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்

ⅱ) 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ராமச்சந்திரன் தன்னுடைய திராவிட கட்சியை தொடங்கினார்.

ⅲ) எம்.ஜி.ராமச்சந்திரன் 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைக்கைப்பற்றினார்.

ⅳ) எம்.ஜி.ராமச்சந்திரன் 1987 இல் தனது இறப்பு வரை ஆட்சியை தக்கவைத்து கொண்டார்.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ), ⅳ)

d) ⅲ), ⅳ)

விளக்கம்: சி.என்.அண்ணாதுரை முதன்முறையாக, மலிவு விலை அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். (படி அரிசி, ஒரு ரூபாய்) அவருக்கு பின் வந்த திரு மு.கருணாநிதி அம்மரபினைத்தொடர்ந்தார். 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ராமச்சந்திரன் தன்னுடைய திராவிட கட்சியை தொடங்கினார்.(அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் – அ.இ.அ.தி.மு.க) 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைக்கைப்பற்றினார். 1987 இல் தனது இறப்பு வரை தக்கவைத்து கொண்டார்.

75) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) மு.கருணாநிதி தலைமையில் தி.மு.க.வும் செல்வி.ஜெ.ஜெயலலிதா தலைமையில் அ.இ.அ.தி.மு.க – வும் அடுத்தடுத்த தேர்தலில் மாறிமாறி வெற்றி பெற்று அமைச்சரவையை ஏற்படுத்தினர்.

(ii) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் போன்ற உடைப்பின் வழி திராவிட கட்சிகளும் உள்ளன.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: அதன்பிறகு மு.கருணாநிதி தலைமையில் தி.மு.க.வும் செல்வி.ஜெ.ஜெயலலிதா தலைமையில் அ.இ.அ.தி.மு.க – வும் அடுத்தடுத்த தேர்தலில் மாறிமாறி வெற்றி பெற்று அமைச்சரவையை ஏற்படுத்தினர். மேலும் இவை இரண்டோடு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் போன்ற உடைப்பின் வழி திராவிட கட்சிகளும் உள்ளன.

76) திராவிட ஆட்சி யாளர்கள் குறித்த பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) அறுபது வருடங்களுக்கு மேலாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு திராவிட ஆட்சி பங்களித்துள்ளது.

ⅱ) தமிழ்மொழியின் நலன், தமிழக மக்கள், தமிழ்நாடு ஆகியவற்றின் நலனை உறுதியுடன் பாதுகாத்தனர்

ⅲ) சாதாரண மக்களின் துன்பங்களை போக்குவதற்காக பல்வேறு சமூக நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ⅳ) மலிவு விலையில் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்தது.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ), ⅳ)

d) ⅲ), ⅳ)

விளக்கம்: அறுபது வருடங்களுக்கு மேலாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு திராவிட ஆட்சி பங்களித்துள்ளது. அவர்கள் தமிழ்மொழியின் நலன், தமிழக மக்கள், தமிழ்நாடு ஆகியவற்றின் நலனை உறுதியுடன் பாதுகாத்தனர். சாதாரண மக்களின் துன்பங்களை போக்குவதற்காக பல்வேறு சமூக நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை மலிவு விலையில் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்தது.

77) பின்வருவனவற்றுள் திராவிட ஆட்சியாளர்களின் சாதனைகள் எவை?

ⅰ) சைக்கிள் ரிக்ஷா ஒழிப்பு

ⅱ) கையால் மலம் அள்ளுவது ஒழிப்பு

ⅲ) தொட்டில் குழந்தை திட்டம்

ⅳ) ஒருவரை ஒருவர் அழிக்கும் சாதி சண்டைக்கும் “சமத்துவபுரமும்”, “உழவர் சந்தையும்” உருவாக்கப்பட்டன.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ), ⅳ)

d) ⅲ), ⅳ)

விளக்கம்: பின்னர் இலவச அரிசித்திட்டம், சத்துணவுத்திட்டம், பட்டப்படிப்பு வரை இலவச கல்வி, விவசாயத்திற்கு இலவச மின்சாரம், ‘சைக்கிள் ரிக்ஷா ஒழிப்பு’ “கையால் மலம் அள்ளுவது ஒழிப்பு” கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான “தொட்டில் குழந்தை திட்டம்”, அமைப்பு சாரா பணியாளர்களுக்கு பல்வேறு நல வாரியங்கள், இன்னும் கூறினால் மாற்றுப்பாலினத்தவர் நலன் போன்றவற்றை உறுதி செய்தன. ஒருவரை ஒருவர் அழிக்கும் சாதி சண்டைக்கும் “சமத்துவபுரமும்”, “உழவர் சந்தையும்” உருவாக்கப்பட்டன.

78) பின்வருவனவற்றுள் திராவிட ஆட்சியாளர்களின் சாதனைகள் எவை?

ⅰ) குடிசைகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டது.

ⅱ) குடிசைவாசிகளின் குடியிருப்புத் தேவைக்கு குடிசை மாற்று வாரியம் ஏற்படுத்தப்பட்டது.

ⅲ) இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக வியக்கத்தக்க அளவு தொழில் வளர்ச்சி அதிகரிக்கப்பட்டது.

ⅳ) தமிழ்நாடு மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் (HDI) உயர்ந்த மதிப்பைப் பதிவு செய்தது.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ), ⅳ)

d) ⅲ), ⅳ)

விளக்கம்: குடிசைகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டது. குடிசைவாசிகளின் குடியிருப்புத் தேவைக்கு குடிசை மாற்று வாரியம் ஏற்படுத்தப்பட்டது. இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக வியக்கத்தக்க அளவு தொழில் வளர்ச்சி அதிகரிக்கப்பட்டது. இந்த வளர்ச்சியின் விளைவாக தமிழ்நாடு மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் (HDI) உயர்ந்த மதிப்பைப் பதிவு செய்தது.

79) பின்வருவனவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.

ⅰ) இன்று தமிழ்நாடு மோட்டார் வாகனத்தொழில், (தானியங்கி), மின்னணு, மற்றும் மருந்து உற்பத்தி துறைகளில் முன்னணி நிலையில் இருக்கிறது.

ⅱ) புதிய பொருளாதார மண்டலங்கள் பெருமளவு முதலீடுகளை ஈர்த்துள்ளன.

ⅲ) தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் சாதனைகள் அனைவராலும் புகழ்ந்து பேசப்படுகிறது.

ⅳ) சாலைகள், துறைமுகங்கள், மின்சாரவசதி, திறன் பெற்ற தொழிலாளர்கள் கிடைப்பது போன்றவைகள் தொழில் வளர்ச்சியை எளிமைப்படுத்தியுள்ளன.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ), ⅳ)

d) ⅲ), ⅳ)

விளக்கம்: இன்று தமிழ்நாடு மோட்டார் வாகனத்தொழில், (தானியங்கி), மின்னணு, மற்றும் மருந்து உற்பத்தி துறைகளில் முன்னணி நிலையில் இருக்கிறது. அதன் புதிய பொருளாதார மண்டலங்கள் பெருமளவு முதலீடுகளை ஈர்த்துள்ளன. தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் சாதனைகள் அனைவராலும் புகழ்ந்து பேசப்படுகிறது. சாலைகள், துறைமுகங்கள், மின்சாரவசதி, திறன் பெற்ற தொழிலாளர்கள் கிடைப்பது போன்றவைகள் தொழில் வளர்ச்சியை எளிமைப்படுத்தியுள்ளன.

80) பின்வருவனவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.

ⅰ) பல்வேறு வகைகளில் பன்மடங்கு பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கைகள் உயர்ந்துள்ளன.

ⅱ) பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்துள்ளது.

ⅲ) தமிழ்நாட்டில் பெண்களுக்கென்று தனியாகப் பெண்கள் பல்கலைக் கழகம் உள்ளது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: பல்வேறு வகைகளில் பன்மடங்கு பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கைகள் உயர்ந்துள்ளன. இங்கு பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்துள்ளது. இவற்றுள் தனித்தன்மையான பல்கலைக் கழகங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் பெண்களுக்கென்று தனியாகப் பெண்கள் பல்கலைக் கழகம் உள்ளதுடன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சட்டம், மருத்துவம், சித்த மருத்துவம், விளையாட்டு போன்றவற்றிற்கும் தனியாகப் பல்கலைக்கழகம் உள்ளன.

81) தமிழ்மொழியை அனைத்து வகையிலும் முன்னேற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடிவடிக்கைகள் எவை?

ⅰ) தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்

ⅱ) உலகத் தமிழ்மாநாடு

ⅲ) செம்மொழி மாநாடு

ⅳ) எழுத்து சீர்திருத்தம்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ), ⅳ)

d) ⅲ), ⅳ)

விளக்கம்: தமிழ்பல்கலைக்கழகம் மூலம் தமிழ்மொழி மேம்பாடு, தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழ்மாநாடு, செம்மொழி மாநாடு, எழுத்து சீர்திருத்தம் என தமிழ்மொழியை அனைத்து வகையிலும் முன்னேற்றுவதற்கு நடிவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

82) பின்வருவனவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடு

ⅰ) திராவிட கட்சிகள், அண்ணாதுரை அவர்களின் காலத்தில் இருந்து மதச்சார்பற்ற தன்மை மாநில தன்னாட்சி போன்றவற்றிற்காகப் பாடுபட்டிருக்கிறது.

ⅱ) திராவிடக் கட்சிகள் தேசிய அரசியலின் நீடித்த தன்மைக்குக் கூட பங்காற்றியிருக்கின்றன.

ⅲ) தமிழகத்தில் திராவிட அரசியல் செல்வாக்கு தொடர்ந்து வல்லமை பெற்றதாக இருக்கிறது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: திராவிட கட்சிகள், அண்ணாதுரை அவர்களின் காலத்தில் இருந்து மதச்சார்பற்ற தன்மை மாநில தன்னாட்சி போன்றவற்றிற்காகப் பாடுபட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகள் தேசிய அரசியலின் நீடித்த தன்மைக்குக் கூட பங்காற்றியிருக்கின்றன. தமிழகத்தில் திராவிட அரசியல் செல்வாக்கு தொடர்ந்து வல்லமை பெற்றதாக இருக்கிறது.

83) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) அரசியல் கட்சிகள், குறிப்பாக தேர்தல் நேரத்தின் பொழுது உருவாக்கி கொள்ளும் தற்காலிக உடன்படிக்கை கூட்டணி ஆகும்.

(ii) ஓர் சமூக நிறுவனம், அங்கு அனைத்து சொத்துக்களும் சமூகத்திற்கு சொந்தமாக இருப்பதே பொதுவுடைமை

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: கூட்டணி: அரசியல் கட்சிகள், குறிப்பாக தேர்தல் நேரத்தின் பொழுது உருவாக்கி கொள்ளும் தற்காலிக உடன்படிக்கை ஆகும்.

பொதுவுடைமை: ஓர் சமூக நிறுவனம், அங்கு அனைத்து சொத்துக்களும் சமூகத்திற்கு சொந்தமாக இருக்கும். மேலும், ஒவ்வொரு மனிதனும் தங்களின் திறமைகளுக்கு ஏற்ப பங்களிப்பர், தேவைகளுக்கு ஏற்ப பெறுவர்.

84) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா பிரதேசம் மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளில் வாழும் திராவிடமொழி பேசும் மக்கள்.

(ii) மின்-ஆளுகை என்பது பொதுமக்களுக்கு தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டின் மூலம் சேவை வழங்குதல் ஆகும்

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: திராவிடர்: தென்னிந்திய பகுதிகளில் பேசப்படும் குடும்ப மொழிகளின் பதத்தினை குறிக்கும். குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா பிரதேசம் மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளில் வாழும் திராவிடமொழி பேசும் மக்கள். மின்ஆளுகை: மின்-ஆளுகை என்பது பொதுமக்களுக்கு தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டின் மூலம் சேவை வழங்குதல் ஆகும் (ICT).

85) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) கூட்டாட்சி யில் அதிகாரங்கள் அரசாங்கத்தில் பல்வேறு அலகுகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும்

(ii) அரசியல் கூட்டணிகள் என்பது பிற கட்சிகள் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காக ஏற்படுத்தப்படுவதாகும்

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: கூட்டாட்சி: இது ஓர் அரசாங்க முறையாகும். இங்கு அதிகாரங்கள் அரசாங்கத்தில் பல்வேறு அலகுகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும். அரசியல் கூட்டணி: அரசியல் கூட்டணிகள் என்பது பிற கட்சிகள் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காக ஏற்படுத்தப்படுவதாகும்.

86) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) பொதுமக்களுக்கு நலகத் திட்டங்களை வழங்க அவர்களின் ஆதரவை பெறும் நோக்கத்துடன் செய்யப்படும் அரசியல் நடவடிக்கை மக்கள் ஈர்ப்புவாதம் ஆகும்.

(ii) தங்கள் கொள்கைகளை, திட்டங்களை மிகவும் தீவிரமான வழிகளில் ஆதரித்து பேசுவது முற்போக்குவாதம்.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: மக்கள் ஈர்ப்புவாதம்: பொதுமக்களுக்கு நலகத் திட்டங்களை வழங்க அவர்களின் ஆதரவை பெறும் நோக்கத்துடன் செய்யப்படும் அரசியல் நடவடிக்கை ஆகும். முற்போக்குவாதம்: தங்கள் கொள்கைகளை, திட்டங்களை மிகவும் தீவிரமான வழிகளில் ஆதரித்து பேசுவோர்.

87) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது மாநிலத்தின் நலனில் குறிப்பாக ஆவணம் செலுத்துவது பிராந்தியவாதம்.

(ii) இடஒதுக்கீடு ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகத்தினரை சமூக-அரசியல்- பொருளாதார அரங்கில் அதிகாரமளிப்பதைக் குறிக்கும்.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: பிராந்தியவாதம்: இது ஒரு அரசியல் கொள்கை. இது ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது மாநிலத்தின் நலனில் குறிப்பாக ஆவணம் செலுத்தும், தேசத்திற்காக அல்ல. இடஒதுக்கீடு: இது முக்கியமாக, ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகத்தினரை சமூக-அரசியல்- பொருளாதார அரங்கில் அதிகாரமளிப்பதைக் குறிக்கும். நேர்முக பாகுபாடு என்பது இதன் பொருளாகும்.

88) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) ஒரு அரசியல் கருத்து எல்லா மக்களும் செல்வம் சுகாதாரம் நலம், நீதி வாய்ப்பு, ஆகியவற்றை சமமாக பெறும்படியாக செய்யவேண்டும் என்பதைதாங்கிப் பிடிக்கிறது சமூகநீதி.

(ii) ஏழைகள், தேவை உடையோர், ஒதுக்கப்பட்ட மக்கள் ஆகியோருக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவி, சேவைகளைக் குறிப்பது சமூக நலம்.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: சமூகநீதி: இது ஒரு அரசியல் கருத்து எல்லா மக்களும் செல்வம் சுகாதாரம் நலம், நீதி வாய்ப்பு, ஆகியவற்றை சமமாக பெறும்படியாக செய்யவேண்டும் என்பதைதாங்கிப் பிடிக்கிறது. சமூக நலம்: ஏழைகள், தேவை உடையோர், ஒதுக்கப்பட்ட மக்கள் ஆகியோருக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவி, சேவைகளைக் குறிக்கும்.

89) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) உற்பத்தியானது அரசால் கட்டுபடுத்தப்பட வேண்டும். தனியார்கள் அல்ல என்று கூறும் முக்கியமான அரசியல் கோட்பாடு சமதர்மம்.

(ii) மாநில சுயாட்சி என்பது அரசாங்கங்கள் அரசியல் மற்றும் பொருளாதார அரங்கில் முழுமையான தன்னாட்சியுடன் இருப்பதற்கான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு கோட்பாடாகும்.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம்: சமதர்மம்: உற்பத்தியானது அரசால் கட்டுபடுத்தப்பட வேண்டும். தனியார்கள் அல்ல என்று கூறும் முக்கியமான அரசியல் கோட்பாடாகும். மாநில சுயாட்சி: மாநில சுயாட்சி என்பது அரசாங்கங்கள் அரசியல் மற்றும் பொருளாதார அரங்கில் முழுமையான தன்னாட்சியுடன் இருப்பதற்கான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு கோட்பாடாகும்.

90) சுப்பாராயலுவுக்கு பின் ஆட்சிப் பொறுப்பேற்றவர் யார்?

a) முனுசாமி

b) பொப்பிலி ராஜா

c) பனகல் அரசர்

d) சுப்பராயன்

விளக்கம்:

91) தமிழ்நாடு அரசு எந்த வருடம் மாநில ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டது?

a) 1947

b) 1948

c) 1946

d) 1945

விளக்கம்:

92) பின்வருவனவற்றில் தமிழகத்தில் காமராசரின் ஆட்சிக்காலம் எது?

a) 1954 – 1963

b) 1955 – 1962

c) 1953 – 1964

d) 1954 – 1962

விளக்கம்:

93) காமராசருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்றவர் யார்?

a) முனுசாமி

b) பக்தவத்சலம்

c) அண்ணாதுரை

d) ராஜாஜி

விளக்கம்:

94) 1988 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்தவர் யார்?

a) எம்.ஜி.ராமச்சந்திரன்

b) ஜெயலலிதா

c) ஜானகி ராமச்சந்திரன்

d) மு.கருணாநிதி

விளக்கம்:

95) 2002 – 2006 கால கட்டத்தில் முதலமைச்சராக இருந்தவர் யார்?

a) எம்.ஜி.ராமச்சந்திரன்

b) ஜெயலலிதா

c) ஜானகி ராமச்சந்திரன்

d) மு.கருணாநிதி

விளக்கம்:

96) 2012 ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்தவர் யார்?

a) பழனிச்சாமி

b) ஜெயலலிதா

c) ஓ.பன்னீர் செல்வம்

d) மு.கருணாநிதி

விளக்கம்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!