Book Back QuestionsTnpsc

தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் Book Back Questions 7th Social Science Lesson 20

7th Social Science Lesson 20

20] தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சமணத்தின் ஐம்பெரும் உறுதிமொழிகள்: 1. எந்த உயிரினத்தையும், துன்புறுத்தாமலிருப்பது – அகிம்சை. 2. உண்மை – சத்யா; 3. திருடாமை – அசௌர்யா; 4. திருமணம் செய்து கொள்ளாமை – பிரம்மச்சரியா; 5. பணம், பொருள், சொத்துக்கள் மீத ஆசை கொள்ளாமை – அபரிக்கிரகா.

கல்பசூத்ராவின் ஜைனசரிதா எனும் சமண நூல் சமண தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை வரலாறுகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக சமண சமயத்தை நிறுவியவரும் முதல் தீர்த்தங்கரருமான பார்சவநாதர், கடைசியும் 24வது தீர்த்தங்கரருமான மகாவீரர் ஆகியோரின் வரலாறுகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்நூலின் ஆசிரியராகக் கருதப்படும் பத்ரபாகு, சந்திரகுப்த மௌரியரோடு மைசூருக்குப் புலம்பெயர்ந்து (ஏறத்தாழ கி. மு. 296) பின் அங்கேயே குடியமர்ந்தார்.

நிர்வாண நிலையை அடைந்து அதன் பின்னர் இவ்வுலகிற்கும் அடுத்த உலகத்திற்குமிடையே பாதை அமைப்போரே தீர்த்தங்கரர்கள் ஆவர்.

2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் சமணர்களின் எண்ணிக்கை 83, 359 ஆகும். மொத்த மக்கள்தொகையில் இது 0. 12 விழுக்காடாகும்.

விகாரா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு ‘வாழ்விடம்’ அல்லது ‘இல்லம்’ என்று பொருள். தொடக்கத்தில் சுற்றியலைந்து திரியும் துறவிகள் இவற்றை மழைக்காலங்களின் போது தங்குமிடங்களாகப் பயன்படுத்தினர். பணம் படைத்த, சாமானிய பௌத்தர்ளால் வழங்கப்பட்ட கொடைகளின் மூலம் இவை கல்வி மையங்களாக மாற்றம் பெற்றன. அரசர்கள் அளித்த ஆதரவினால் இஸ்லாமிய ஆட்சிக்கு முந்தைய இந்தியா, பல விகாரைகளைக் கொண்ட நாடாக விளங்கியது. அவை பல்கலைக்கழகக் கல்வியை வழங்கியதோடு, புனித நூல்களின் கருவூலச் சேகரங்களாகவும் திகழ்ந்தன. நாளந்தாவைப் போன்றே பல விகாரைகள் உலகப்புகழ் பெற்றவையாகும்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. சமணப்பேரவை முதன்முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்?

(அ) பாடலிபுத்திரம்

(ஆ) வல்லபி

(இ) மதுரா

(ஈ) காஞ்சிபுரம்

2. ஆகம சூத்திரங்கள் எம் மொழியில் எழுதப்பட்டன?

(அ) அர்த்த-மகதி பிராகிருதம்

(ஆ) இந்தி

(இ) சமஸ்கிருதம்

(ஈ) பாலி

3. கீழ்க்கண்டவற்றுள் எது களப்பிரர்களால் ஆதரிக்கப்பட்டது?

(அ) புத்தமதம்

(ஆ) சமணமதம்

(இ) ஆசீவகம்

(ஈ) இந்து மதம்

4. தலையணைப்பகுதி செதுக்கப்படாமல் உள்ள கற்படுக்கைகளை எங்கு காணலாம்?

(அ) வேலூர்

(ஆ) காஞ்சிபுரம்

(இ) சித்தன்னவாசல்

(ஈ) மதுரை

5. கழுகு மலை குடைவரைக் கோவில் யாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது?

(அ) மகேந்திரவர்மன்

(ஆ) பராந்தக நெடுஞசடையான்

(இ) பராந்தக வீரநாராயண பாண்டியன்

(ஈ) இரண்டாம் ஹரிஹரர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிக உயரமாகக் கருதப்படும் சிலை ———

2. புத்த சரிதத்தை எழுதியவர் ——— ஆவார்.

3. ———— நூற்றாண்டில் சீனப் பயணி யுவான்சுவாங் பல்லவ நாட்டிற்கு வந்திருந்தார்.

4. பௌத்தம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சமயம் என ——- எடுத்துரைக்கின்றது

5. மௌரியப் பேரரசர் அசோகரும் அவருடைய பேரன் தசரதாவும் ——— ஆதரித்தனர்.

III. பொருத்துக:

1. கல்ப சூத்ரா – அ) திருத்தக்கத் தேவர்

2. சீவகசிந்தாமணி – ஆ) மதுரை

3. நேமிநாதர் – இ) நாகசேனர்

4. மிலிந்தபன்கா – ஈ) பத்ரபாகு

5. கீழக்குயில் குடி 22வது தீர்த்தங்கரர்

IV. பொருந்தாததை வட்டமிடுக:

1. திருப்பருத்திக் குன்றம், கீழக்குயில் குடி, கழுகுமலை, நாகப்பட்டினம், சித்தன்னவாசல்

2. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

கூற்று: பழைய மதங்களின் குருமார்களிடமிருந்து தான் கற்றுக்கொள்வதற்கு எதுவுமில்லை என கௌதமர் தெரிந்து கொண்டார்.

காரணம்: துறவு வாழ்க்கையை மேற்கொள்வதே முக்தி அடைவதற்கான ஒரேவழி என மதங்கள் அறிவித்தன.

(அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

(ஆ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

(இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு

(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

3. i) கி. மு. ஆறாம் நூற்றாண்டில், இந்தியாவில் வெவ்வேறான 62 தத்துவ சமயப்பள்ளிகள் செழிப்புற்று இருந்தன

ii) “பள்ளி” என்பது புத்தமதத்தாரின் கல்வி மையமாகும்.

iii) அரசர்கள் அளித்த ஆதரவினால் இஸ்லாமிய ஆட்சிக்கு முந்தைய இந்தியா, பல விகாரைகளைக் கொண்ட நாடாக விளங்கியது

iv) ஆசீவகம் பதினைந்தாம் நூற்றாண்டுவரை தொடர்ந்து செயல்பட்டது

(அ) i மற்றும் iii சரி

(ஆ) i, ii மற்றும் iv சரி

(இ) i மற்றும் ii சரி

(ஈ) ii, iii மற்றும் iv சரி

4. தவறான இணையைக் கண்டறிக:

1. பார்சவநாதர் – 22வது தீர்ததங்கரர்

2. மகாபாஷ்யா – இலங்கையைச் சேர்ந்த வரலாற்றுத் தொகுப்பு

3. விசுத்திமக்கா – புத்தகோசா

4. புத்தர் – எண்வகை வழிகள்

V. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. 12வது ஆகமசூத்திரம் தொலைந்து போனதாகக் கருதப்படுகிறது

2. வரலாறு முழுவதிலும் ஆசீவகர்கள் அனைத்து இடங்களிலும் அடக்கமுறையைச் சந்திக்க நேர்ந்தது.

3. சமண நிறுவனங்களில் சமூக, சமய வேறுபாடுகளின்றி அனைவருக்கும் கல்வி கற்பிக்கப்பட்டது.

4. நாளந்தா, தட்சசீலம், விக்கிரமசீலா ஆகியன மிகச்சிறந்த புனிதத்தலங்களாயின

5. சோழர்காலம் முதலாகவே பௌத்தம் சைவ, வைணவ சமயங்களின் சவால்களை எதிர்கொண்டது

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பாடலிபுத்திரம், 2. அர்த்த-மகதி பிராகிருதம், 3. சமணமதம், 4. வேலூர், 5. பராந்தக நெடுஞ்சடையான்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. நேமிநாதர், 2. அஸ்வகோஷர், 3. கி. பி 7ம், 4. மத்தவிலாச பிரகாசனம், 5. ஆசீவர்களை

III. பொருத்துக:

1. ஈ, 2. அ, 3. உ, 4. இ, 5. ஆ

IV. பொருந்தாததை வட்டமிடுக:

1. நாகப்பட்டினம், 2. கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம், 3. ) i மற்றும் iii சரி, 4. பார்சவநாதர் – 22வது தீர்ததங்கரர்

V. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. சரி, 2. சரி, 3. சரி, 4. கல்விநிலையங்கள், 5. தவறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!