Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

தமிழகத்தில் வேளாண்மை Book Back Questions 9th Social Science Lesson 29

9th Social Science Lesson 29

29] தமிழகத்தில் வேளாண்மை

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

பயிர் செய்யப்படும் மொத்த பரப்பளவில் பாசன வசதி பெற்ற பரப்பளவு 57 விழுக்காடு ஆகும்.

மறைநீர்: மறைநீர் எனும் பதம் 1990ஆம் ஆண்டு டோனி ஆலன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது விவசாயம் அல்லது தொழிற்சாலை உற்பத்தியின் போது நுகரப்படும் நீர் மறைநீர் என அழைக்கப்படுகிறது. மறைநீர் என்பது உணவு அல்லது மற்ற உற்பத்தி பொருட்கள் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு வாணிகம் செய்யப்படும் போது அவற்றோடு மறைமுகமாக அவற்றிற்காக செலவிடப்படும் நீரும் செல்கிறது. இதுவே மறைநீர் ஆகும். உதாரணமாக ஒரு மெட்ரிக் டன் கோதுமை உற்பத்தி செய்வதற்கு உலக அளவிலான சராசரியாக 1, 340 கியூபிக் மீட்டர் நீர் தேவைப்படுகிறது. அப்படியெனில் ஒரு மெட்ரிக் டன் கோதுமை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் போது அதை விளைவிக்கப் பயன்படுத்தப்பட்ட 1, 340 கியூபிக் மீட்டர் நீரும் அதனுடன் செல்கிறது என்பது பொருள். உலக அளவில் இந்தியா மிக அதிகமான நன்னீர் பயன்பாட்டாளராக உள்ளது. இது மிகவும் அதிகமான எச்சரிக்கக் கூடிய அளவாகும். உலகின் ஐந்தாவது மிகப்பெரிய மறைநீர் ஏற்றுமதியாளராக இந்தியா விளங்குகிறது.

தென் இந்தியாவின் மூன்றாவது பெரிய ஆறு காவிரி ஆகும். இது 765 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டில் மேட்டூர் அணை மற்றும் கல்லணை கட்டப்பட்டுள்ளன.

நுண்ணீர் பாசனத் தொழில்நுட்பம்: நுண்ணீர் பாசனத் தொழில் நுட்பம் பாசன நீர் பற்றாக்குறைக்கு நல்ல தீர்வாக விளங்குகிறது. இத்தொழில் நுட்பம் பாரம்பரிய நீர்பாசன முறைகளை விட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க வழி செய்கிறது. சீரான கால இடைவெளியில் அளவாக நீர் பாய்ச்சப்படுவதால் உற்பத்தித் திறன் மற்றும் நீர் பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பதுடன் பணி ஆட்களின் செலவைக் கணிசமாக குறைத்து, களை வளர்ச்சியினைக் கட்டுப்படுத்துகிறது. நுண்ணீர் பாசனத்தின் மூலம் நீர் வழி உரமிடுவதால் உரப்பயன்பாட்டுத் திறன் அதிகரிப்பதோடு தரமான விளைபொருளும் கிடைக்கிறது. தமிழகம் ஒரு தண்ணீர் பற்றாக்குறை மாநிலமாக இருப்பதால் நுண்ணீர் பாசனத் திட்டத்தினை, அதிக தண்ணீர் தேவைப்படும் விவசாய பயிர்களின் தீவிரமாக செயல்படுவதில் அரசு கவனம் செலுத்துகிறது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற நிலத்தின் பரப்பளவு

(அ) 27%

(ஆ) 57%

(இ) 28%

(ஈ) 49%

2. இவற்றுள் உணவல்லாத பயிர் எது?

(அ) கம்பு

(ஆ) கேழ்வரகு

(இ) சோளம்

(ஈ) தென்னை

3. 2014-15ஆம் ஆண்டில் நெல் உற்பத்தித் திறன்

(அ) 3, 039 கி. கி

(ஆ) 4, 429 கி. கி

(இ) 2, 775 கி. கி

(ஈ) 3, 519 கி. கி

4. தமிழகத்தின் வேளாண் உற்பத்தித் திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே

(அ) குறைந்துள்ளது

(ஆ) எதிர்மறையாக உள்ளது

(இ) நிலையாக உள்ளது

(ஈ) அதிகரித்துள்ளது

5. தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை பொழியும் மாதங்கள்

(அ) ஆகஸ்டு-அக்டோபர்

(ஆ) செப்டம்பர்-நவம்பர்

(இ) அக்டோபர்-டிசம்பர்

(ஈ) நவம்பர்-ஜனவரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. தமிழக மக்களில் பெரும்பான்மையினர் —————— தொழிலையே சார்ந்திருக்கின்றனர்.

2. தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது —————- பருவ மழையாகும்.

3. தமிழகத்தின் மொத்தப் புவியியல் பரப்பு ————— ஹெக்டேர்கள் ஆகும்.

III. பொருத்துக:

1. உணவல்லாத பயிர்கள் – அ] 79, 38, 000

2. பருப்பு வகைகள் – ஆ] ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி செய்வோர்

3. வடகிழக்குப் பருவமழை – இ] அக்டோபர்-டிசம்பர்

4. குறு விவசாயிகள் – ஈ ] உளுந்து, துவரை, பாசிப்பயிறு

5. 2015இல் விவசாயிகளின்

எண்ணிக்கை – உ] தேங்காய், கொண்டை கடலை (Channa)

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. 57%, 2. தென்னை, 3. 4, 429 கி. கி, 4. அதிகரித்துள்ளது, 5. அக்டோபர்-டிசம்பர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வேளாண், 2. வட கிழக்கு, 3. 1, 30, 33, 000

III. பொருத்துக:

1. உ, 2. ஈ, 3. இ, 4. ஆ, 5. அ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!