Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

தமிழக மக்களும் வேளாண்மையும் 9th Social Science Lesson 17 Questions in Tamil

9th Social Science Lesson 17 Questions in Tamil

17. தமிழக மக்களும் வேளாண்மையும்

1) 2001 ஆம் ஆண்டில் மொத்த தொழிலாளர்களில் ____________ விழுக்காட்டினர் வேளாண்துறையின் இருந்தனர்.

A) 49.3

B) 57.5

C) 63.8

D) 79.2

(குறிப்பு – 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் விவசாயிகளின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டு காலத்தில் குறைந்தது தெரியவந்துள்ளது. அதேபோல் விவசாய தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது)

2) 2011ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்த விவசாய தொழிலாளர்களின் எண்ணிக்கை என்ன?

A) 90 லட்சம்

B) 96 லட்சம்

C) 78 லட்சம்

D) 84 லட்சம்

(குறிப்பு – 2011 ஆண்டு தமிழகத்தில் மொத்தமாக 3 கோடியே 29 லட்சம் தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களில் 96 லட்சம் பேர் விவசாய தொழிலாளர்கள் ஆவர்)

3) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – 2001ஆம் ஆண்டின் மொத்த தொழிலாளர்களில் 49.3 விழுக்காட்டினர் வேளாண்துறையில் துறையில் இருந்தனர்.

கூற்று 2 – 2011ஆம் ஆண்டு மொத்த தொழிலாளர்களில் 42.1 விழுக்காட்டினர் வேளாண்துறையில் இருந்தனர்.

கூற்று 3 – 2011ம் ஆண்டு தமிழகத்தில் மொத்தமாக 96 லட்சம் பேர் விவசாய தொழிலாளர்கள் ஆவர்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – இந்தியா விடுதலை பெற்ற போதும் அதன் பின் 40 ஆண்டு காலம் வரையும் தமிழ் மக்களில் பெரும்பான்மையோர் வேளாண் தொழிலையே நம்பி இருந்தனர். எனினும் அந்த நிலை சமீப காலங்களில் குறைந்து வருகிறது)

4) தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் பரப்பளவு 64.88 லட்சம் ஹெக்டேர்கள் என்பதிலிருந்து _________ ஹெக்டர்களாக குறைந்து போனது.

A) 55.67 லட்சம்

B) 59.71 லட்சம்

C) 62.64 லட்சம்

D) 68.75 லட்சம்

(குறிப்பு – தமிழகத்தில் 2015ம் ஆண்டு சாகுபடி செய்யப்படும் பரப்பளவு 64.88 லட்சம் ஹெக்டர்கள் என்பதில் இருந்து 59.71லட்சம் ஹெக்டர்களாக குறைந்துபோனது)

5) சராசரியாக ஆண்டொன்றுக்கு____________ சாகுபடி நிலத்தை 2010 முதல் 2015 வரையான ஆண்டுகளில் தமிழகம் இழந்துள்ளது.

A) 1, 03, 800 ஹெக்டேர்

B) 1, 03, 700 ஹெக்டேர்

C) 1, 03, 400 ஹெக்டேர்

D) 1, 03, 900 ஹெக்டேர்

(குறிப்பு – தமிழகத்தில் சராசரியாக ஆண்டொன்றுக்கு 1, 03, 400 ஹெக்டேர் சாகுபடி நிலத்தை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளில் தமிழகம் இழந்துள்ளது)

6) தமிழகத்தின் விவசாயம் செய்பவர்களில்____________ மட்டுமே பட்டியல் இனத்தவர் ஆவர்.

A) ஐந்தில் ஒருவர்

B) பத்தில் ஒருவர்

C) மூன்றில் ஒருவர்

D) ஐந்தில் இருவர்

(குறிப்பு – தமிழகத்தில் விவசாயம் செய்பவர்களின் பத்தில் ஒருவர் மட்டுமே பட்டியல் இனத்தவர் ஆவர் அவர்களில் 96 விழுக்காட்டினர் சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆவர்.)

7) தமிழகத்தில் உள்ள மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையில் குறு விவசாயிகளின் விழுக்காடுகள் எத்தனை?

A) 72 விழுக்காடு

B) 74 விழுக்காடு

C) 76 விழுக்காடு

D) 78 விழுக்காடு

(குறிப்பு – தமிழகத்தின் பெரும்பாலான விவசாயிகள் குறு விவசாயிகள் ஆவர். குறு விவசாயிகள் என்பவர்கள் ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி செய்பவர் ஆவர். மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையில் குறு விவசாயிகள் 78 விழுக்காடு உள்ளனர்)

8) தமிழகத்தில் உள்ள மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையில் சிறு விவசாயிகளின் விழுக்காடு எத்தனை?

A) 14 விழுக்காடு

B) 24 விழுக்காடு

C) 34 விழுக்காடு

D) 44 விழுக்காடு

(குறிப்பு – தமிழ்நாட்டில் சிறு விவசாயிகள் என்பவர்கள் 1 முதல் 2 ஹெக்டேர் வரை சாகுபடி செய்பவர்கள் ஆவர். தமிழ்நாட்டின் சிறு விவசாயிகள் 14 விழுக்காடு உள்ளனர். அவர்கள் விவசாயம் செய்யும் பரப்பளவு 26 விழுக்காடு ஆகும்.)

9) தமிழகத்தின் மொத்த புவியியல் பரப்பின் அளவு கீழ்க்கண்டவற்றுள் எது?

A) 1, 30, 33, 000 ஹெக்டேர்

B) 1, 40, 34, 000 ஹெக்டேர்

C) 1, 35, 00, 000 ஹெக்டேர்

D) 1, 25, 30, 000 ஹெக்டேர்

(குறிப்பு – தமிழகத்தின் மொத்த புவியியல் பரப்பு ஒரு கோடியே 30 லட்சத்து 33 ஆயிரம் ஹெக்டேர்கள் ஆகும். இப்பரப்பில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பு மட்டுமே பயிர் செய்ய பயன்படுத்தப்படுகிறது.)

10) தமிழகத்தில் வேளாண் அல்லாத பயன்பாட்டிற்கு எத்தனை விழுக்காடு நிலம் பயன்படுத்தப்படுகிறது?

A) 15 விழுக்காடு

B) 17 விழுக்காடு

C) 19 விழுக்காடு

D) 21 விழுக்காடு

(குறிப்பு – வேளாண் அல்லாத பயன்பாட்டுக்கு 17 விழுக்காடு நிலம் பயன்படுத்தப்படுகிறது ஏறத்தாழ இதே அளவு நிலம் (2,125 ஆயிரம் ஹெக்டேர்கள்) காடுகளாக உள்ளன)

11) பொருத்துக

I. சிறு விவசாயி சாகுபடி – a) 17 விழுக்காடு

II. குறு விவசாயி சாகுபடி – b) 5 விழுக்காடு

III. வேளாண் அல்லாத பயன்பாடு – c) 36 விழுக்காடு

IV. மேய்ச்சல் நிலங்கள் – d) 14 விழுக்காடு

A) I-d, II-c, III-a, IV-b

B) I-b, II-a, III-c, IV-d

C) I-d, II-a, III-c, IV-b

D) I-a, II-c, III-d, IV-b

(குறிப்பு – தமிழகத்தில் நிகரமாக பயிர் செய்யப்படும் பரப்பளவு 45, 44, 000 ஹெக்டேர்கள் ஆகும். இப்பரப்பு ஆண்டுக்கு ஆண்டு மாறும். மழைப்பொழிவு காலத்தில் போதுமான அளவு மழை இருந்தால் இப்பரப்பு கூடும். மழை பொய்த்தாலோ அல்லது மழையளவு குறைந்தாலோ இப்பரப்பு குறையும் )

12) ஒரு ஆண்டுக்கு ஒருமுறைக்கு மேல் பயிர் செய்யும் வாய்ப்பை வழங்கும் நிலப்பரப்பின் அளவு எவ்வளவாக இருந்தது?

A) 9 லட்சம் ஹெக்டேர்கள்

B) 5 லட்சம் ஹெக்டேர்கள்

C) 3 லட்சம் ஹெக்டேர்கள்

D) 1 லட்சம் ஹெக்டேர்கள்

(குறிப்பு – ஒரு ஆண்டில் ஒரு முறைக்கு மேல் பயிர் செய்யும் வாய்ப்பை வழங்கும் நிலப்பரப்பு ஒன்பது லட்சம் ஹெக்டேர்களாக இருந்தது. அது பின்னர் 6 லட்சம் ஹெக்டேர்களாக குறைந்து போனது)

13) 2012-13 ஆம் ஆண்டில் மொத்தமாக பயிரிடப்பட்ட நிலப்பரப்பில் ஏறத்தாழ ____________ பரப்பளவில் உணவுப் பயிர்கள் பயிரிடப்பட்டன.

A) 61 விழுக்காடு

B) 72 விழுக்காடு

C) 83 விழுக்காடு

D) 94 விழுக்காடு

(குறிப்பு – 2012-13ஆம் ஆண்டுகளில் மொத்தமாக பயிரிடப்பட்ட நிலப்பரப்பில் ஏறத்தாழ 72 விழுக்காடு பரப்பளவில் உணவுப் பயிர்கள் பயிரிடப்பட்டன. மற்ற இடங்களில் உணவற்ற பயிர்கள் பயிரிடப்பட்டன)

14) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – தமிழகத்தில் வற்றாத நதிகள் இல்லை

கூற்று 2 – தமிழகம் தனது தேவைக்கான நீரை வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழைகளிலிருந்து பெறுகிறது.

கூற்று 3 – பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற பரப்பளவு 50 விழுக்காடு ஆகும்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – தமிழகத்தில் பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற பரப்பளவு 57 விழுக்காடு ஆகும் )

15) தமிழகத்தில் உள்ள வாய்க்கால்களின் எண்ணிக்கை என்ன?

A) 2239

B) 2189

C) 2456

D) 2100

(குறிப்பு – தமிழகத்திலுள்ள வாய்க்கால்களில் எண்ணிக்கை 2239 ஆகும் )

16) பொருத்துக

I. தமிழகத்தில் வாய்க்கால்கள் எண்ணிக்கை – a) 33,142

II. தமிழகத்தின் பெரிய ஏரிகள் – b) 15 லட்சம்

III. தமிழகத்தின் சிறிய ஏரிகள் – c) 2239

IV. திறந்தவெளிக் கிணறுகள் – d) 7985

A) I-c, II-a, III-d, IV-b

B) I-d, II-c, III-b, IV-a

C) I-a, II-b, III-d, IV-c

D) I-d, II-b, III-c, IV-a

(குறிப்பு – இது அல்லாது தமிழகத்தில் 3 லட்சத்து 54 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை நீர் ஆதாரங்களைக் கொண்டே தமிழகத்தின் வேளாண்மை மேற்கொள்ளப்படுகின்றன)

17) பாசனவசதி பெரும் நிலத்தின் அளவை பொருத்துக

I. ஏரி பாசனம் – a) 6.68 லட்சம் ஹெக்டேர் நிலங்கள்

II. வாய்க்கால் பாசனம் – b) 4.93 லட்சம் ஹெக்டேர் நிலங்கள்

III. ஆழ்துளை கிணறு பாசனம் – c) 3.68 லட்சம் ஹெக்டேர் நிலங்கள்

IV. திறந்த வெளிகிணறு பாசனம் – d) 11.91 லட்சம் ஹெக்டேர் நிலங்கள்

A) I-c, II-a, III-b, IV-d

B) I-b, II-a, III-c, iV-d

C) I-d, II-b, III-a, IV-c

D) I-d, II-c, III-b, IV-a

(குறிப்பு – ஏரிகளில் இருந்து பாசன வசதி பெறும் நிலத்தின் பரப்பளவு தான் மிகவும் குறைவானது. தமிழக வேளாண்மை பெரும் அளவிற்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறது)

18) தமிழகத்தில் எத்தனை ஒன்றியங்கள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை பயன்படுத்துகின்றன?

A) 139 ஒன்றியங்கள்

B) 150 ஒன்றியங்கள்

C) 163 ஒன்றியங்கள்

D) 178 ஒன்றியங்கள்

(குறிப்பு – நிலத்தடி நீரின் அளவையும் தன்மையையும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் தொடர்ந்து கண்காணிக்கிறது. இந்தத் தொடர் கண்காணிப்பின் அடிப்படையில் நீர் பயன்பாடு அளவைக் கொண்டு ஊராட்சி ஒன்றியங்களை இவ்வாறு எம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.)

19) தமிழகத்தில் எத்தனை ஒன்றியங்களில் நீரின் தரம் குன்றி உள்ளது?

A) 10 ஒன்றியங்கள்

B) 15 ஒன்றியங்கள்

C) 11 ஒன்றியங்கள்

D) 20 ஒன்றியங்கள்

(குறிப்பு – தமிழகத்தில் 11 ஒன்றியங்களில் நீரின் தரம் குன்றி உள்ளது. 100 ஒன்றியங்கள் மிகையாக பயன்படுத்தும் நிலையை அடையும் நிலையில் உள்ளன)

20) கீழ்காணும் கூற்றுகளில் சரியானது எது?

கூற்று 1 – தமிழக வேளாண்மை நிலத்தடி நீரை நம்பி உள்ளது.

கூற்று 2 – நிலத்தடி நீரின் பயன்பாட்டை சீர் செய்வது மிகவும் அவசரமும் அவசியமும் ஆகும்.

கூற்று 3 – தமிழகத்தில் 136 ஒன்றியங்கள் மட்டுமே நிலத்தடி நீரின் அளவு குன்றாமலும் தரம் குறையாமல் உள்ளன.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – தமிழகத்தில் 139 ஒன்றியங்கள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. 11 ஒன்றியங்களில் நீரின் தரம் குன்றி உள்ளது)

21) தென் இந்தியாவின் மூன்றாவது பெரிய ஆறு எது?

A) காவிரி

B) வைகை

C) கோதாவரி

D) கிருஷ்ணா

(குறிப்பு – தென் இந்தியாவின் மூன்றாவது பெரிய ஆறு காவிரி ஆகும். இது 765 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டில் மேட்டூர் அணை மற்றும் கல்லணை கட்டப்பட்டுள்ளன)

22) மறை நீர் என்னும் பதம் எந்த ஆண்டு டோனி ஆலன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

A) 1990ஆம் ஆண்டு

B) 1995ஆம் ஆண்டு

C) 1997ஆம் ஆண்டு

D) 1999ஆம் ஆண்டு

(குறிப்பு – விவசாயம் அல்லது தொழிற்சாலை உற்பத்தியின்போது நுகரப்படும் நீர் மறைநீர் என்று அழைக்கப்படுகிறது)

23) உலக அளவில் ______________ மிகப்பெரிய மறைநீர் ஏற்றுமதியாளராக இந்தியா விளங்குகிறது.

A) மூன்றாவது

B) நான்காவது

C) ஐந்தாவது

D) ஆறாவது

(குறிப்பு – உலக அளவில் இந்தியா மிக அதிகமான நன்னீர் பயன்பாட்டாளராக உள்ளது. இது மிகவும் அதிகமான எச்சரிக்கை கூடிய அளவாகும். உலகின் ஐந்தாவது மிகப்பெரிய மறைநீர் ஏற்றுமதியாளராக இந்தியா விளங்குகிறது)

24) தமிழகத்தின் சாகுபடி அளவை பொருத்துக.

I. உணவு பயிர்கள் சாகுபடி – a) 6 விழுக்காடு

II. சோளம் சாகுபடி – b) 30 விழுக்காடு

III. சிறுதானியம் சாகுபடி – c) 7 விழுக்காடு

IV. நெல் சாகுபடி – d) 12 விழுக்காடு

A) I-d, II-c, III-a, IV-b

B) I-b, II-a, III-c, iV-d

C) I-d, II-b, III-a, IV-c

D) I-d, II-c, III-b, IV-a

(குறிப்பு – தமிழகத்தில் பயிரிடப்பட்ட நிலத்தின் மொத்த பரப்பளவில் 2014-2015 ஆம் ஆண்டில் 59லட்சத்து 94 ஆயிரம் ஹெக்டேர்களாக இருந்தது.)

25) தமிழகத்தில் மொத்த உணவு தானிய உற்பத்தியில் நெல்லின் பங்கு ______________ ஆகும்.

A) 60 விழுக்காடுகள்

B) 62 விழுக்காடுகள்

C) 64 விழுக்காடுகள்

D) 66 விழுக்காடுகள்

(குறிப்பு – 2014 -15 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மிகக் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்ட உணவு தானியங்களின் அளவு ஒரு கோடியே 27 லட்சத்து 35 ஆயிரம் டன்கள் ஆகும். நெல் மட்டும் ஏறத்தாழ 80 லட்சம் டன்கள் விளைந்தன)

26) பாசன நீர் பற்றாக்குறைக்கு நல்ல தீர்வாக விளங்குவது கீழ்க்கண்டவற்றுள் எது?

A) நுண்நீர் பாசன தொழில்நுட்பம்

B) வாய்க்கால் பாசன தொழில்நுட்பம்

C) துளை கிணறு பாசன தொழில்நுட்பம்

D) இவை எதுவும் இல்லை

(குறிப்பு – நுண்ணீர் பாசன தொழில்நுட்பம் பாரம்பரிய நீர்ப்பாசன முறைகளை விட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க வழி செய்கிறது)

27) தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பயிரிடப்படும் பயிர் எது?

A) மக்காச்சோளம்

B) கேழ்வரகு

C) சோளம்

D) சிறுதானியம்

(குறிப்பு – தமிழகத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம் ஹெக்டேருக்கு 8,824 கிலோ விளைந்தது)

28) இதில் பருப்பு வகைகளில் அதிகமாக பயிரிடப்படுவது எது?

A) துவரை பருப்பு

B) கடலை பருப்பு

C) உளுந்து

D) இது எதுவும் இல்லை

(குறிப்பு – தமிழகத்தில் பருப்பு வகைகளில் அதிகமாக பயிரிடப்படுவது உளுந்து ஆகும். உளுந்து ஹெக்டேருக்கு 645கிலோ விளைந்தது )

29) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் நெல் உற்பத்தித் திறன் மூன்று மடங்கிற்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது.

கூற்று 2 – உணவு தானிய உற்பத்தியை நோக்கினால் 1965ஆம் ஆண்டிற்கும் 2015ஆம் ஆண்டிற்கும் இடையே ஏறத்தாழ 3.5மடங்கு உயர்ந்துள்ளது.

கூற்று 3 – மொத்த உணவு தானிய உற்பத்தி 2014-15ஆண்டுகளில் ஒரு கோடியே 28 லட்சம் டன்னுக்கு சிறிது குறைவாக இருந்தது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – தமிழகத்தின் உற்பத்தித் திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் உணவு தானிய உற்பத்தி செய்யப்படும் பரப்பளவு குறைந்துள்ளது. பரப்பளவு குறைந்த போதிலும் உற்பத்தி குறையாதது மட்டுமல்ல கூடி இருப்பதற்கும் உற்பத்தி திறனின் உயர்வே காரணமாகும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!