Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் Book Back Questions 10th Social Science Lesson 16

10th Social Science Lesson 16

16] தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

1956ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, மொழியியல் அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

சென்னை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பிரித்தமைக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கிய மலைகள்: கோயம்புத்தூர் – மருதமலை, வெள்ளியங்கிரி மற்றும் ஆனைமலை. தர்மபுரி – தீர்த்த மலை, சித்தேரி மற்றும் வத்தல் மலை. திண்டுக்கல் – பழனிமலை மற்றும் கொடைக்கானல். ஈரோடு – சென்னிமலை மற்றும் சிவன் மலை. வேலூர் – ஜவ்வாது, ஏலகிரி மற்றும் இரத்தினமலை. நாமக்கல் – கொல்லிமலை. சேலம் – சேர்வராயன், கஞ்சமலை மற்றும் சுண்ணாம்புக் குன்றுகள். குள்ளக்குறிச்சி – கல்வராயன். விழுப்புரம் – செஞ்சிமலை. பெரம்பலூர் – பச்சை மலை. கன்னியாகுமரி – மருதுவாழ் மலை. திருநெல்வேலி – மகேந்திரகிரி மற்றும் அகத்திய மலை. நீலகிரி – நீலகிரி மலை.

பாம்பன், முயல் தீவு, குருசடை, நல்ல தண்ணி தீவு, புள்ளி வாசல், ஸ்ரீரங்கம், உப்பு தண்ணித் தீவு, தீவுத்திடல், காட்டுப்பள்ளித் தீவு, குவிப்பில் தீவு மற்றும் விவேகானந்தர் நினைவுப் பாறை ஆகியன தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தீவுகள் ஆகும்.

தமிழ்நாட்டின் பருவக்காலங்கள்
பருவக்காலம் காலம்
குளிர்காலம் ` ஜனவரி முதல் பிப்ரவரி
கோடைக்காலம் மார்ச் முதல் மே
தென்மேற்கு பருவக்காற்று காலம் ஜீன் முதல் செப்டம்பர்
வடகிழக்கு பருவக்காற்று காலம் அக்டோபர் முதல் டிசம்பர்

வால்பாறைக்கு அருகிலுள்ள சின்னக்கல்லார் தமிழ்நாட்டின் மிக அதிக மழை பெறும் பகுதியாகவும், இந்தியாவின் மூன்றாவது அதிக மழை பெறும் பகுதியாகவும் உள்ளது.

பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகே அமைந்துள்ளது. இது 1, 100 ஹெக்டேர் பரப்பளவுடன் (11 சதுர கிலோமீட்டர்) உலகின் இரண்டாவது மிகப் பெரிய சதுப்பு நிலக்காடாக உள்ளது. வங்க கடலிலிருந்து மணல் திட்டுகளால் இக்காடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இது அவிசீனியா மற்றும் ரைசோபோரா போன்ற தாவர இனங்களைக் கொண்டது.

கடல் பாதுகாப்பு மேலாண்மையில், சதுப்பு நிலத் தாவரங்களின் பங்கு: கடல் அலைகள் மற்றும் புயலால் ஏற்படும் பாதிப்பிலிருந்து கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்கின்றது. மேலும் பவளப்பாறைகளையும், கடலோர புல்வெளிகளையும் மணல் படிவுகளால் மூழ்கடிக்கப்படாமல் பாதுகாக்கின்றது.

தமிழ்நாட்டிலுள்ள உயிர்க்கோளப் பெட்டகங்கள்: நீலகிரி உயிர்க்கோளப் பெட்டகம். மன்னார் வளைகுடா உயிர்க்கோளப் பெட்டகம். அகத்தியர் மலை உயிர்க்கோளப் பெட்டகம்.

தமிழ்நாட்டில் அதிகக் காடுகளைக் (பரப்பளவு) கொண்ட மாவட்டங்கள்
மாவட்டம் பரப்பளவு (சதுர கிலோ மீட்டர்)
தர்மபுரி 3, 280
கோயம்புத்தூர் 2, 627
ஈரோடு 2, 427
வேலூர் 1, 857
நீலகிரி 1, 583
திண்டுக்கல் 1, 662

நீர் சேகரிப்பதற்கான சில வழிமுறைகள்: நீர் மாசுபடுதலைத் தடுத்தல், நீர் மறுசுழற்சி, சிக்கனமான நிலத்தடி நீர் பயன்பாடு, மக்கள் தொகை கட்டுப்பாடு, மரபுவழி நீர்வளங்களைப் புதுப்பித்தல், நவீன நீர்ப்பாசன முறைகளைப் பயன்படுத்தல், காடுகளின் பரப்பளவை அதிகரித்தல், பயிரிடும் முறைகளை மாற்றுதல், வெள்ளப்பெருக்கு மேலாண்மை, புவி வெப்ப நிர் பயன்பாடு ஆகியன நீர்வளத்தை பாதுகாக்கும் சில வழிமுறைகள் ஆகும்.

மாநில/யூனியன் பிரதேச அமைப்புகள்: (1) மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (தலைவர்-முதலமைச்சர்). (2) நிவாரண/பேரிடர் மேலாண்மை துறை. (3) காவல்துறை. (4) வனத்துறை. (5) தீ மற்றும் குடிமையியல் பாதுகாப்பு சேவைகள். (6) சுகாதார சேவைகள். (7) போக்குவரத்துத் துறை. (8) பொதுப்பணித் துறை. (9) கால்நடைத் துறை. (10) உணவு மற்றும் வட்ட வழங்கல் துறை.

மாவட்ட அமைப்புகள் கீழ்க்கண்டவாறு: (1) மாவட்ட நீதிபதி (தலைவர் – மாவட்ட ஆட்சியர்). (2) வருவாய்த்துறை. (3) குடிமை பணி நிர்வாகம். (4) உள்ளுர் காவல்துறை. (5) குடிமை பாதுகாப்பு. (6) தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள். (7) ஊர்க் காவல் படை (உள்ளுர், சமூகம், அரசு சாரா அமைப்பு, தன்னார்வ நிறுவனங்கள்).

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. தமிழ்நாட்டின் அட்சப் பரவல் _________ முதல் ________ வரை உள்ளது.

(அ) 8o 4’ வ முதல் 13o 35’ வ வரை

(ஆ) 8o 5’ தெ முதல் 13o 35’ தெ வரை

(இ) 8o 0’ வ முதல் 13o 05’ வ வரை

(ஈ) 8o 0’ தெ முதல் 13o 05’ தெ வரை

2. தமிழ்நாட்டின் தீர்க்க பரவல் _________ முதல் _________ வரை உள்ளது.

(அ) 76o18’ கி முதல் 80o 20’ கி வரை

(ஆ) 76o 18’ மே முதல் 80o 20’ மே வரை

(இ) 10o 20’ கி முதல் 86o 18’ கி வரை

(ஈ) 10o 20’ கி முதல் 86o 18’ மே வரை

3. தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் _________ ஆகும்.

(அ) ஆனைமுடி

(ஆ) தொட்டபெட்டா

(இ) மகேந்திரகிரி

(ஈ) சேர்வராயன்

4. கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சிமலையில் அமையாத கணவாய் எது?

(அ) பாலக்காடு

(ஆ) செங்கோட்டை

(இ) போர்காட்

(ஈ) அச்சன்கோவில்

5. கீழ்க்கண்டவற்றில் அரபிக் கடலில் கலக்கும் ஆறு எது?

(அ) பெரியார்

(ஆ) காவிரி

(இ) சிற்றார்

(ஆ) பவானி

6. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது?

(அ) இராமநாதபுரம்

(ஆ) நாகப்பட்டினம்

(இ) கடலூர்

(ஈ) தேனி

7. பின்னடையும் பருவக்காற்று __________ லிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது.

(அ) அரபிக்கடல்

(ஆ) வங்கக் கடல்

(இ) இந்தியப் பெருங்கடல்

(ஈ) தைமுர்க்கடல்

8. கீழ்க்கண்டவற்றுள் மண் அரிப்பினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாவட்டம் __________

(அ) தேனி

(ஆ) மதுரை

(இ) தஞ்சாவூர்

(ஈ) இராமநாதபுரம்

9. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டம் ____________

(அ) தர்மபுரி

(ஆ) வேலூர்

(இ) திண்டுக்கல்

(ஈ) ஈரோடு

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கிடையே காணப்படும் பீடபூமி __________ ஆகும்.

2. கிழக்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள உயரமான சிகரம் ___________ ஆகும்.

3. ஆற்றுத் தீவான ஸ்ரீரங்கம் ___________ மற்றும் ___________ ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது.

4. ____________ தமிழ்நாட்டின் மாநில விலங்கு ஆகும்.

பொருத்துக:

1. குளிர்காலம் – முன் பருவ மழை

2. கோடைக்காலம் – ஜீன் – செப்டம்பர்

3. தென்மேற்கு பருவக்காற்று – மார்ச் – மே

4. வடகிழக்கு பருவக்காற்று – டிசம்பர் – பிப்ரவரி

5. மாஞ்சாரல் – அக்டோபர் – நவம்பர்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: தமிழ்நாடு தென்மேற்கு பருவகாற்று காலங்களில் அதிக மழையைப் பெறுவதில்லை.

காரணம்: இது மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

(இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.

(ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று தவறு.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. (804’ வ முதல் 13035’ வ வரை) 2. (76018’ கி முதல் 80020’ கி வரை) 3. தொட்டபெட்டா

4. போர்காட் 5. பெரியார் 6. கடலூர் 7. வங்கக்கடல் 8. தேனி 9. தருமபுரி

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. கோயம்புத்தூர் பீடபூமி 2. சோலைக்கரடு 3. கொள்ளிடம், காவிரி 4. வரையாடு

பொருத்துக: (விடைகள்)

1. குளிர்காலம் – டிசம்பர் – பிப்ரவரி

2. கோடைக்காலம் – மார்ச் – மே

3. தென்மேற்கு பருவக்காற்று – ஜீன் – செப்டம்பர்

4. வடகிழக்கு பருவக்காற்று – அக்டோபர் – நவம்பர்

5. மாஞ்சாரல் – முன் பருவக்காற்று

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!