Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

தமிழ்நாடு மானுடப் புவியியல் Online Test 10th Social Science Lesson 23 Questions in Tamil

தமிழ்நாடு மானுடப் புவியியல் Online Test 10th Social Science Lesson 23 Questions in Tamil

Congratulations - you have completed தமிழ்நாடு மானுடப் புவியியல் Online Test 10th Social Science Lesson 23 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அக்ரிகல்சர் என்ற சொல் __________ மொழி வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது.
A
கிரேக்கம்
B
இலத்தீன்
C
சமஸ்கிருதம்
D
ஆங்கிலம்
Question 1 Explanation: 
(குறிப்பு: அக்ரிகல்சர் என்பது அகர் மற்றும் கல்சரா என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் நிலம் மற்றும் வளர்த்தல் என்பதாகும்.)
Question 2
  • கூற்று 1: மானுடப் புவியியல் என்பது மனித சமுதாயம் வளர்ச்சி பெற்ற வழிமுறைகள் மற்றும், இயற்கை சூழலுடனான செயல்பாடுகள் குறித்துக் கற்றறிதல் ஆகும்.
  • கூற்று 2: இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து 65% கும் மேற்பட்ட மக்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண் துறையைச் சார்ந்துள்ளனர்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 2 Explanation: 
(குறிப்பு: வேளாண்மை என்பது விவசாய நடைமுறைகளான பயிர்கள் சாகுபடி, கால்நடை வளர்த்தல், பறவைகள், காடுகள் வளர்த்தல், மீன்பிடித்தல் மற்றும் அதனோடு தொடர்புடைய நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகும்.)
Question 3
தமிழக பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கு _________ சதவீதம் ஆகும்.
A
18%
B
21%
C
25%
D
30%
Question 3 Explanation: 
(குறிப்பு: வேளாண்மைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு உள்ளது.)
Question 4
தமிழகத்தின் முக்கிய உணவுப் பயிர்கள் எவை?
  1. நெல்
  2. கோதுமை
  3. தினைவகைகள்
  4. பருப்பு வகைகள்
  5. நிலக்கடலை
  6. கரும்பு
A
1, 2, 3, 4
B
2, 3, 4, 6
C
1, 3, 4, 6
D
1, 3, 4
Question 4 Explanation: 
(குறிப்பு: கரும்பு, பருத்தி, சூரியகாந்தி, தென்னை, முந்திரி, மிளகாய், எள், நிலக்கடலை, தேயிலை, காபி, ஏலக்காய், இரப்பர் ஆகியவை தமிழகத்தின் முக்கிய வணிகப்பயிர்களாகும்.)
Question 5
கீழ்க்கண்டவற்றுள் வேளாண்மையைத் தீர்மானிக்கும் புவியியல் காரணிகள் எவை?
  1. நிலத்தோற்றம்
  2. காலநிலை
  3. மண்
  4. நீர்ப்பாசனம்
A
அனைத்தும்
B
1, 2, 3
C
2, 3, 4
D
1, 3, 4
Question 6
___________ வேளாண் உற்பத்திக்கு ஏற்ற வளமான வண்டல் மண்ணை கொண்டுள்ளது.
A
மலைகள்
B
பீடபூமிகள்
C
சமவெளிகள்
D
கடற்கரை
Question 6 Explanation: 
(குறிப்பு: பீடபூமி, வேளாண்மைக்கு ஓரளவிற்கு ஏற்றதாகவும், மலைப் பிரதேசங்களில் வேளாண் நடவடிக்கைகள் மிகக் குறைந்த அளவிலும் உள்ளன.)
Question 7
  • கூற்று: தமிழ்நாட்டில் வெப்பமண்டலப் பயிர்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன.
  • காரணம்: தமிழ்நாடு பூமத்தியரேகைக்கு அருகிலும், வெப்ப மண்டலத்திலும் அமைந்துள்ளதால் வெப்ப மண்டலக் காலநிலையைப் பெறுகிறது.
A
கூற்று சரி மற்றும் காரணம் தவறு
B
கூற்று தவறு மற்றும் காரணம் சரி
C
கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது
D
கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை
Question 7 Explanation: 
(குறிப்பு: வெப்பமண்டலக் காலநிலை நிலவுவதால் தமிழ்நாட்டின் வெப்பநிலை ஆண்டு முழுவதும் அதிகமாக உள்ளது.)
Question 8
___________ தமிழ்நாட்டிற்கான முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
A
வடகிழக்கு பருவக்காற்று
B
தென்மேற்கு பருவக்காற்று
C
புயல்கள்
D
கிணறுகள்
Question 8 Explanation: 
(குறிப்பு: வடகிழக்கு பருவக்காற்று காலத்தில் பயிரிடப்படும் முக்கிய காலம் தொடங்குகிறது. இப்பருவத்தில் பெறும் மழையின் அளவு மற்றும் நீர்ப்பாசன வசதி போன்றவை வேளாண்மையை மிக அதிக அளவில் பாதிக்கிறது.)
Question 9
காவிரி மற்றும் தென்பெண்ணை ஆற்றுப் படுகைகளில் __________வேளாண்மை பின்பற்றப்படுகிறது.
A
தீவிர தன்னிறைவு வேளாண்மை
B
தோட்ட வேளாண்மை
C
கலப்பு வேளாண்மை
D
இயற்கை வேளாண்மை
Question 9 Explanation: 
(குறிப்பு: தமிழ்நாட்டில் சில பகுதிகள் தவிர்த்து அனைத்து பகுதிகளிலும் தீவிர தன்னிறைவு வேளாண்மை பின்பற்றப்படுகிறது.)
Question 10
மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைச்சரிவுகளில் __________வேளாண்மை பின்பற்றப்படுகிறது.
A
தீவிர தன்னிறைவு வேளாண்மை
B
தோட்ட வேளாண்மை
C
கலப்பு வேளாண்மை
D
இயற்கை வேளாண்மை
Question 11
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI) தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறையில் தொடங்கப்பட்ட ஆண்டு
A
1966 ஆகஸ்ட்
B
1972 ஏப்ரல்
C
1985 ஏப்ரல்
D
1988 ஜூன்
Question 11 Explanation: 
(குறிப்பு: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்(TANU) கீழ் செயல்பட்டுவரும் TRRI நெல் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் ஓர் இந்திய நிறுவனமாகும்.)
Question 12
ஏப்ரல்-மே மாதங்களை விதைக்கும் காலமாக கொண்ட சித்திரைப் பட்டத்தின் அறுவடை காலம்
A
ஜூலை-ஆகஸ்ட்
B
நவம்பர்-டிசம்பர்
C
ஜனவரி-பிப்ரவரி
D
ஆகஸ்ட்-செப்டம்பர்
Question 12 Explanation: 
(குறிப்பு: பருத்தி மற்றும் தினை வகைகள் சித்திரைப் பட்டத்தின் (செர்ணவாரி) முக்கிய பயிர்களாகும்.)
Question 13
ஜனவரி-பிப்ரவரி மாதத்தை அறுவடை காலமாக கொண்ட ஆடிப் பட்டத்தின் விதைக்கும் காலம்
A
நவம்பர்-டிசம்பர்
B
ஏப்ரல்-மே
C
ஜூலை-ஆகஸ்ட்
D
பிப்ரவரி-மார்ச்
Question 13 Explanation: 
(குறிப்பு: நெல் மற்றும் கரும்பு ஆகியவை சம்பா (ஆடிப்பட்டம்) பருவத்தின் முக்கிய பயிர்களாகும்.)
Question 14
நவரை பருவத்தில் பயிடப்படும் முக்கிய பயிர்களில் தவறானது எது?
A
நெல்
B
பழங்கள்
C
காய்கறிகள்
D
வெள்ளரி
Question 14 Explanation: 
(குறிப்பு: நவரை பருவம் விதைக்கும் காலம் - நவம்பர், டிசம்பர் அறுவடை காலம் - பிப்ரவரி, மார்ச்)
Question 15
தமிழகத்தில் __________ பரப்பளவில் நெல் பயிடப்படுகிறது.
A
2 மில்லியன் ஹெக்டேர்
B
3 மில்லியன் ஹெக்டேர்
C
2 பில்லியன் ஹெக்டேர்
D
3 பில்லியன் ஹெக்டேர்
Question 15 Explanation: 
(குறிப்பு: நெல் தமிழகம் முழுவதும் பயிரிடப்பட்டாலும் தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் கடலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.)
Question 16
நெல் உற்பத்தி செய்யும் இந்திய மாநிலங்களில் தமிழகம் ______________ இடத்தை வகிக்கிறது.
A
1
B
2
C
3
D
4
Question 16 Explanation: 
(குறிப்பு: தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதி அதிக நெல் உற்பத்தி செய்யும் பகுதியாகும். எனவே இப்பகுதி தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படுகிறது.)
Question 17
  • கூற்று 1: தமிழ்நாட்டின் முக்கியமான உணவுப்பயிர் நெல் ஆகும்.
  • கூற்று 2: பொன்னி மற்றும் கிச்சடி சம்பா தமிழகத்தில் பயிரிடப்படும் முக்கிய நெல் வகைகளாகும்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 18
தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் ____________ பகுதியினரின் முக்கியமான உணவு தினை வகைகளாக உள்ளது.
A
இரண்டில் ஒரு பங்கு
B
மூன்றில் ஒரு பங்கு
C
நான்கில் ஒரு பங்கு
D
மூன்றில் இரண்டு பங்கு
Question 18 Explanation: 
(குறிப்பு: சோளம், கேழ்வரகு மற்றும் கம்பு ஆகியன முக்கிய தினைப் பயிர்களாகும்.)
Question 19
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. கோயம்புத்தூர் பீடபூமியிலும், கம்பம் பள்ளத்தாக்கிலும் சோளம் பயிரிடப்படுகின்றன.
  2. கோயம்புத்தூர் தர்மபுரி, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கேழ்வரகு பயிரிடப்படுகிறது.
  3. இராமநாதபுரம், திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் கம்பு பயிரிடப்படுகிறது.
A
1 மட்டும் தவறு
B
2 மட்டும் தவறு
C
1, 3 தவறு
D
எதுவுமில்லை
Question 19 Explanation: 
(குறிப்பு: தினைவகைகள் வறண்ட பிரதேசங்களில் மட்டுமல்லாமல் கடற்கரைச் சமவெளிகளிலும் விளைகின்றன.)
Question 20
இந்தியா __________ ஆண்டை தினைப் பயிர்களின் தேசிய ஆண்டாக அனுசரித்தது.
A
2016
B
2017
C
2018
D
2019
Question 21
உலக உணவு மற்றும் வேளாண்மைக் கழகம் (FAO) ____________ ஆண்டை சர்வதேச தினைப்பயிர்கள் ஆண்டாக அனுசரிக்கத் தீர்மானித்துள்ளது.
A
2020
B
2021
C
2022
D
2023
Question 22
____________ புரதச்சத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளன.
A
தினை வகைகள்
B
பருப்பு வகைகள்
C
எண்ணெய் வித்துக்கள்
D
தோட்டப்பயிர்கள்
Question 22 Explanation: 
(குறிப்பு: கொண்டைக்கடலை, உளுந்து, பச்சைப்பயறு, துவரம்பருப்பு, தட்டைப் பயறு மற்றும் கொள்ளு ஆகியன தமிழ்நாட்டில் விளையும் முக்கிய பருப்பு வகைகளாகும்.)
Question 23
கீழ்க்கண்ட எந்த மாவட்டங்களில் பருப்பு வகைகள் பயிரிடப்படுவதில்லை?
  1. சென்னை
  2. திண்டுக்கல்
  3. நீலகிரி
  4. கன்னியாகுமரி
A
அனைத்தும்
B
1, 2, 3
C
1, 3, 4
D
2, 3, 4
Question 23 Explanation: 
(குறிப்பு: பருப்பு வகைகள் கால்நடைகளுக்கு மிகச்சிறந்த தீவனமாக உள்ளன.)
Question 24
தமிழகத்தில் ___________ மாவட்டம் கொண்டக்கடலை உற்பத்தியில் மாநிலத்தில் முதன்நிலை வகிக்கிறது.
A
கோயம்புத்தூர்
B
வேலூர்
C
திருவாரூர்
D
நாகப்பட்டினம்
Question 24 Explanation: 
(குறிப்பு: வேலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் துவரம் பருப்பு கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகின்றன.)
Question 25
  • கூற்று 1: திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் அதிக அளவில் பச்சைப்பயறு மற்றும் உளுந்து ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றன.
  • கூற்று 2: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கொள்ளுப் பயிர் கூடுதலாக பயிரிடப்படுகிறது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 25 Explanation: 
(குறிப்பு: பருப்பு வகைகள் காலநிலைக்கு ஏற்றாற் போல் பரவலாகப் பயிரிடப்படுகின்றன. வறண்ட நிலப்பகுதிகளில் நீர்ப்பாசன வசதியுடனோ அல்லது நீர்பாசனமின்றியோ பயிரிடப்படுகின்றன.)
Question 26
  • கூற்று 1: இயற்கை வேளாண்மையை மேம்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசானது தேசிய இயற்கை கரிம வேளாண்மைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • கூற்று 2: விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இயற்கை உரங்களை மேம்படுத்துதல், பயிற்சியளித்தல் போன்றவற்றை இத்திட்டம் செயல்படுத்துகிறது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 26 Explanation: 
(குறிப்பு: கரிம பொருட்களை மறுசுழற்சி செய்யவும், தொழிற்கூடங்கள், உயிரி உரங்கள் , உயிரி பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி செய்யவும் தொழிற்கூடங்களுக்கு மாநிலத்தில் நிதி உதவி அளித்தல், தரமேம்பாட்டு வளர்ச்சி மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் குழுமத்தின், மனித வளத்தை மேம்படுத்துதல் போன்றவை இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.)
Question 27
____________ தமிழகத்தின் முக்கிய எண்ணெய் வித்துப் பயிராகும்.
A
எள்
B
ஆமணக்கு
C
தென்னை
D
நிலக்கடலை
Question 27 Explanation: 
(குறிப்பு: நிலக்கடலை, எள், ஆமணக்கு, தென்னை, சூரியகாந்தி மற்றும் கடுகு ஆகியன தமிழ்நாட்டில் பயிரிடப்படும் முக்கிய எண்ணெய் வித்துக்கள் ஆகும்.)
Question 28
கீழ்க்கண்ட எந்த மாவட்டங்களில் நிலக்கடலை உற்பத்தி செறிந்து காணப்படுகிறது?
  1. வேலூர்
  2. திருவண்ணாமலை
  3. விழுப்புரம்
  4. சேலம்
  5. புதுக்கோட்டை
A
அனைத்தும்
B
2, 3, 4, 5
C
1, 2, 4, 5
D
1, 2, 3, 5
Question 28 Explanation: 
(குறிப்பு: தர்மபுரி, கடலூர், பெரம்பலூர், மதுரை, ஈரோடு, இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நிலக்கடலை சிறிய அளவில் பயிரிடப்படுகிறது.)
Question 29
தென்னை மரங்கள் அதிகம் காணப்படும் மாவட்டங்களில் தவறானது எது?
A
கோயம்புத்தூர்
B
தஞ்சாவூர்
C
திருநெல்வேலி
D
கன்னியாகுமரி
Question 29 Explanation: 
(குறிப்பு: எண்ணெய் வித்துக்கள் உணவுப் பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் தொழிலகங்களில் மசகு எண்ணெய், மெருகு எண்ணெய் பொருட்கள், சோப்பு, மெழுகுவர்த்தி, அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்திக்கும் பயன்படுகின்றன.)
Question 30
கீழ்க்கண்டவற்றுள் கரும்பு பயிரிடும் மாவட்டங்கள் எவை?
  1. திருவள்ளூர்
  2. காஞ்சிபுரம்
  3. வேலூர்
  4. கடலூர்
  5. திருநெல்வேலி
  6. கோயம்புத்தூர்
  7. ஈரோடு
A
அனைத்தும்
B
1, 3, 4, 5, 6
C
1, 2, 5, 6, 7
D
2, 3, 5, 6, 7
Question 30 Explanation: 
(குறிப்பு: கரும்பு தமிழ்நாட்டின் முக்கிய வாணிப பயிராகும்.)
Question 31
கரும்புக் குறித்தக் கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.
  1. இது ஓராண்டு பயிராகும்.
  2. இதற்கு அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழைப் பொழிவும் தேவைப்படுகிறது.
  3. இது குளிர் பிரதேசங்களில் நன்கு வளரக்கூடியவை.
A
1 மட்டும் தவறு
B
2 மட்டும் தவறு
C
3 மட்டும் தவறு
D
எதுவுமில்லை
Question 31 Explanation: 
(குறிப்பு: கரும்பு வெப்ப மண்டல பிரதேசங்களில் நன்கு வளரக்கூடியவை.)
Question 32
கீழ்க்கண்டவற்றுள் பருத்தி பயிரிடுவதற்கு உகந்தவையாக இருப்பவை எவை?
  1. வண்டல் மண்
  2. நீண்ட பனிப்பொழிவற்ற காலம்
  3. மித வெப்பம்
  4. ஈரப்பத வானிலை
A
அனைத்தும்
B
2, 3, 4
C
1, 3, 4
D
1, 2, 4
Question 32 Explanation: 
(குறிப்பு: பருத்தி ஓர் இழைப்பயிர் மற்றும் வாணிபப் பயிராகும். இது வளர கரிசல் மண் ஏற்றதாகும்.)
Question 33
பருத்தி வளரும் காலத்தில் ___________ காலநிலையும், அறுவடை காலத்தில் ___________ காலநிலையும் பயிருக்கு ஏற்றதாகும்.
A
பனிப்பொழிவு, வறண்ட
B
வறண்ட, பனிப்பொழிவு
C
ஈரப்பதம், வறண்ட
D
வறண்ட, ஈரப்பதம்
Question 34
  • கூற்று 1: கோயம்புத்தூர் பீடபூமி பகுதியிலும், வைகை மற்றும் வைப்பாறு ஆற்று வடிநிலப் பகுதிகளிலும் பருத்தி பயிரிடப்படுகின்றது.
  • கூற்று 2: மதுரை, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் பருத்தி பயிடப்படுகின்றது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 35
இந்தியாவில் ____________ மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு தேயிலை பயிரிடும் பரப்பு மற்றும் உற்பத்தியில் இரண்டாமிடம் வகிக்கிறது.
A
கர்நாடகா
B
ஆந்திரா
C
அசாம்
D
ஒடிசா
Question 35 Explanation: 
(குறிப்பு: தேயிலை, காபி, இரப்பர், முந்திரி மற்றும் சின்கோனா ஆகியன மாநிலத்தின் முக்கிய தோட்டப் பயிர்களாகும்.)
Question 36
சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.
A
காபி உற்பத்தியில் ஆந்திர மாநிலத்திற்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாமிடம் வகிக்கிறது.
B
மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் காபி பயிரிடப்படுகின்றது.
C
நீலகிரி மலைகள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைச்சரிவுகளில் காபி குறிப்பிடத்தகுந்த அளவில் பயிரிடப்படுகிறது.
D
திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலுள்ள மலைச் சரிவுகளிலும் காபி பயிரிடப்படுகின்றது.
Question 36 Explanation: 
(குறிப்பு: காபி உற்பத்தியில் கர்நாடகா மாநிலத்திற்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாமிடம் வகிக்கிறது.)
Question 37
  • கூற்று 1: நீலகிரி மலைகள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலைகளில் தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன.
  • கூற்று 2: தமிழ்நாட்டிலுள்ள, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் சரிவுகளில் மிதவெப்பம் மற்றும் ஈரமான காலநிலை உள்ள பகுதிகளில் மிளகு விளைகின்றது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 38
___________ மாவட்டத்தின் பெரும் பகுதிகளில் முந்திரி பயிரிடப்படுகிறது.
A
விழுப்புரம்
B
கடலூர்
C
தஞ்சாவூர்
D
வேலூர்
Question 38 Explanation: 
(குறிப்பு: இரப்பர் தோட்டங்கள் கன்னியாகுமரியில் அதிகமாகக் காணப்படுகிறது.)
Question 39
__________ மீட்டர் முதல்__________ மீட்டர் உயரம் வரை உள்ள ஆனைமலைப் பகுதிகளில் சின்கோனா பயிரிடப்படுகிறது.
A
1600, 1800
B
1160, 1380
C
1060, 1280
D
1160, 1400
Question 39 Explanation: 
(குறிப்பு: ஏறத்தாழ 915 மீட்டர் முதல் 1525 மீட்டர் வரை உள்ள மதுரையைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் ஏலக்காய் தோட்டங்கள் காணப்படுகின்றன.)
Question 40
தமிழ்நாட்டில் மொத்தம் ___________ கால்நடைகள் உள்ளன.
A
57,88,623
B
47,86,680
C
81,43,341
D
88,92,473
Question 40 Explanation: 
(குறிப்பு: தமிழ்நாட்டில் 47,86,680 செம்மறியாடுகள், 81,43,341 வெள்ளாடுகள் மற்றும் 11,73,48,894 பண்ணை வளர்ப்புப் பிராணிகள் வளர்க்கப்படுகின்றன.)
Question 41
தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தின் (TANTEA) தேயிலை பயிரிடும் பரப்பு _____________ஹெக்டேர் ஆகும்.
A
2,500
B
3000
C
4500
D
5000
Question 41 Explanation: 
(குறிப்பு: டான் டீ (TANTEA) நிறுவனம் இந்தியாவில் கருப்பு வகை தேயிலை உற்பத்தியிலும், கலப்பு வகை தேயிலை உற்பத்தியிலும் முன்னணி வகிக்கும் நிறுவனங்களுள் ஒன்றாகும்.)
Question 42
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. தமிழ்நாடு பால் வளர்ச்சி கழகம் என்று நிறுவப்பட்ட அமைப்பானது தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் என்ற புதிய அமைப்பாக பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  2. இது பிரபலமாக ஆவின் என்று அழைக்கப்படுகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
இரண்டும் தவறு
D
இரண்டும் சரி
Question 43
வெள்ளாடுகள் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
இந்தியாவில் வெள்ளாடுகள் 'ஏழை மக்களின் பசு’ என்றழைக்கப்படுகிறது.
B
இது ஒரு நன்செய் வேளாண் அமைப்பின் மிக முக்கிய அங்கமாகும்.
C
கால்நடை வகைகளான பசு மற்றும் எருமை வளர்ப்பிற்கு ஏற்பில்லா இடங்களான நில விளிம்புப் பகுதிகள் மற்றும் மேடுபள்ளங்கள் நிறைந்த நிலத்தோற்றப் பகுதிகளில் வெள்ளாடு வளர்ப்பு ஒரு மாற்றாக உள்ளது.
D
மிகக் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் ஈட்டப்படுவதால் சிறு மற்றும் குறு விவசாயிகள் வெள்ளாடு வளர்ப்பினை மேற்கொள்கின்றனர்.
Question 43 Explanation: 
(குறிப்பு: வெள்ளாடுகள் புன்செய் வேளாண் அமைப்பின் மிக முக்கிய அங்கமாகும்.)
Question 44
கீழ்க்கண்ட எந்த மாவட்டங்களில் கோழிப்பண்ணை மையங்கள் உள்ளன?
  1. நாமக்கல்
  2. சேலம்
  3. ஈரோடு
  4. கோயம்புத்தூர்
  5. தஞ்சாவூர்
A
1, 2, 3, 4
B
2, 3, 4, 5
C
1, 3, 4, 5
D
1, 2, 4, 5
Question 44 Explanation: 
(குறிப்பு: செம்மறியாடுகள், கம்பளி, இறைச்சி, பால், தோல் மற்றும் உரம் போன்ற பல்வேறு பயனுள்ள பொருள்களை அளிப்பதால் தமிழ்நாட்டின் மலைப்பகுதிகள், வறண்ட மற்றும் அரை வறண்ட பகுதிகளில் உள்ள ஊரகப் பொருளாதாரத்தில் இவை முக்கிய பங்காற்றுகிறது.)
Question 45
இந்திய நாட்டின் கடற்கரையில், தமிழ்நாட்டு கடற்கரையின் நீளம் _____________ சதவீதம் ஆகும்.
A
8%
B
10%
C
13%
D
16%
Question 45 Explanation: 
(குறிப்பு: தமிழ்நாட்டு கடற்கரையின் நீளம் 1076 கிலோமீட்டராகும்.)
Question 46
தமிழக கடற்கரை பகுதி _____________ மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவை உடையது.
A
31, 412
B
41,412
C
48, 512
D
51,412
Question 46 Explanation: 
(குறிப்பு: தமிழகத்தில் ஏறத்தாழ 41,412 சதுர கிலோ பரப்பளவு ‘கண்டத்திட்டு’ உள்ளதால் கடற்கரை மீன்பிடிப்புக்கு சாதகமாக உள்ளது.)
Question 47
பெருங்கடல் அல்லது கடற்கரையில் இருந்து சில கிலோமீட்டர் தூரம் வரை மீன்பிடித்தல் ____________ என அழைக்கப்படுகிறது.
A
ஆழ்கடல் மீன்பிடிப்பு
B
கடலோர மீன்பிடிப்பு
C
பெருங்கடல் மீன்பிடிப்பு
D
பருவகாலமீன் பிடிப்பு
Question 47 Explanation: 
(குறிப்பு: கடற்கரையில் இருந்து பொதுவாக 20 முதல் 30 மைல்கள் தூரம் வரையிலும், பல 100 அல்லது 1000க்கும் மேற்பட்ட அடிகள் ஆழத்தில் மீன்பிடித்தல் நடக்கிறது. இது ஆழ்கடல் மீன்பிடிப்பு என அழைக்கப்படுகிறது.)
Question 48
சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகப்பட்டினம் மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் தமிழகத்தின் கடல் மீன் உற்பத்தியில் ஏறத்தாழ ______________ சதவீதம் பங்களிப்பைத் தருகின்றன.
A
30%
B
40%
C
50%
D
60%
Question 48 Explanation: 
(குறிப்பு: கடற்கரையின் அமைவிடம் மேற்கண்ட பகுதிகளில் மீன் பிடித்தலுக்கு சாதகமாக உள்ளது.)
Question 49
2017-2018ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் கடல் பொருட்களின் ஏற்றுமதி ____________ மெட்ரிக் டன்கள் ஆகும்.
A
52, 563
B
67,644
C
72,644
D
78,566
Question 49 Explanation: 
(குறிப்பு: தமிழ்நாடானது மூன்று முக்கிய மீன்பிடித் துறைமுகங்கள், மூன்று இடைநிலை மீன் பிடித் துறைமுகம் மற்றும் 363 மீன்பிடித் தளங்களைக் கொண்டுள்ளது.)
Question 50
தமிழகத்தின் உள்நாட்டு மீன் உற்பத்தியில் வேலூர் மாவட்டம் ____________ சதவீத உற்பத்தியுடன் முன்னிலையில் உள்ளது.
A
5%
B
8%
C
10%
D
15%
Question 50 Explanation: 
(குறிப்பு: ஏரிகள், ஆறுகள், குளங்கள், கழிமுகங்கள், காயல்கள் மற்றும் சதுப்புநிலப்பகுதி போன்ற நீர் நிலைகளில் உள்நாட்டு மீன்பிடித்தல் நடைபெறுகிறது.)
Question 51
உள்நாட்டு மீன் உற்பத்தியில் கடலூர், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் தலா ___________ சதவீத உள்நாட்டு மீன் உற்பத்தி செய்து தமிழகத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளன.
A
5%
B
7%
C
8%
D
9%
Question 51 Explanation: 
(குறிப்பு: மீன்பிடித்தலை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு மீன்வளத்துறை பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.)
Question 52
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் மீன்பிடித் துறையானது ___________ சதவீதம் பங்களிப்பைச் செய்கிறது.
A
0.75%
B
1.00%
C
1.25%
D
1.75%
Question 53
  • கூற்று 1: இயற்கை வேளாண்மையில் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள், தாவர வளர்ச்சி சீராக்கிகள் (செயற்கை இரசாயனம்) கால்நடை தீவனக் கலப்புகள் பயன்படுத்துவதில்லை.
  • கூற்று 2: இயற்கை வேளாண்மை பயிர்சுழற்சி, பயிர் கழிவுகள், விலங்குகளின் கழிவுகள், விவசாயம் அல்லாத கரிம கழிவுகள், உயிரியல் பூச்சிக்கொல்லிகள் ஆகியனவற்றை மண்வளப் பாதுகாப்பிற்கு நம்பியுள்ளனர்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 54
இந்திய பரப்பளவில் 4 சதவீதத்தையும் மக்கள் தொகையில் 6 சதவீதத்தையும் கொண்டுள்ள தமிழ்நாடு, இந்திய நீர்வளத்தில் ____________ சதவீதத்தைக் கொண்டுள்ளது.
A
3.5%
B
4.0%
C
1.5%
D
2.5%
Question 54 Explanation: 
(குறிப்பு: தமிழ்நாட்டின் மேற்பரப்பு நீரில் 95 சதவீதத்திற்கு அதிகமாகவும் மற்றும் நிலத்தடி நீரில் 80 சதவிகிதத்திற்கு அதிகமாவும் ஏற்கனவே பயன்பாட்டிலிருந்து வருகிறது.)
Question 55
தமிழகத்தின் ஆண்டு சராசரி மழையளவு ஏறத்தாழ __________ மில்லி மீட்டர் ஆகும்.
A
850
B
930
C
958
D
985
Question 55 Explanation: 
(குறிப்பு: தமிழகம் பருவமழையை சார்ந்தே உள்ளது.)
Question 56
தவறான இணையைத் தேர்ந்தெடு. (தமிழகம் பெறும் மழையின் அளவு)
A
வடகிழக்கு பருவக் காற்று - 47%
B
தென்மேற்கு பருவக் காற்று - 35%
C
கோடைகாலம் - 18%
D
குளிர்காலம் – 4%
Question 56 Explanation: 
(குறிப்பு: கோடை காலம் - 14%)
Question 57
பொருத்துக. (தமிழ்நாட்டின் மேற்பரப்பு நீர்வள ஆதாரங்கள் - எண்ணிக்கை)
  1. ஆற்று வடிநிலம்                                                                        i) 81
  2. நீர்த்தேக்கங்கள்                                                                        ii) 17
  3. ஏரிகள்                                                                                             iii) 41,127
  4. ஆழ்துளை கிணறுகள் மற்றும் மற்ற கிணறுகள்     iv) 15,06,919
  5. திறந்தவெளி கிணறுகள்                                                       v) 4,98,644
A
i ii iv iii v
B
ii iv iii i v
C
ii i iii v iv
D
ii i iii iv v
Question 58
மேட்டூர் அணை சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலுள்ள ________________ ஏக்கர் விளை நிலத்திற்கு நீர்ப்பாசன வசதியை அளிக்கிறது.
A
1,71,000
B
2,71,000
C
3,20,000
D
3,80,000
Question 58 Explanation: 
(குறிப்பு: காவிரி ஆறு சமவெளியில் நுழையும் இடத்திற்கு முன்னுள்ள மலையிடுக்கப் பகுதியில் மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிகப் பழமையான அணைகளில் ஒன்றாகும்.)
Question 59
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.(பவானி சாகர் அணை)
  1. ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பவானிசாகர் அணை, கோயம்புத்தூர் நகரிலிருந்து ஏறத்தாழ 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
  2. இது பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
  3. இந்த அணை நாட்டின் மண்-கல் கலவையால் கட்டப்பட்ட மிகப்பெரிய அணைகளுள் ஒன்றாகும்.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 60
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.(அமராவதி அணை)
A
அமராவதி அணை, திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டையில் இருந்து ஏறத்தாழ 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
B
இவ்வணை வைகையின் துணையாறான அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
C
இவ்வணை நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டை முதன்மை நோக்கமாகக் கொண்டது.
D
இந்த நீர்த்தேக்கத்தில் பெரும் எண்ணிக்கையிலான சதுப்பு நில (சீங்கன்னி) முதலைகள் காணப்படுகின்றன.
Question 60 Explanation: 
(குறிப்பு: அமராவதி அணை காவிரியின் துணையாறான அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும்.)
Question 61
கிருஷ்ணகிரி அணை ____________ சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குப் பாசனவசதியை அளிக்கிறது.
A
2,425
B
3, 271
C
5,428
D
6,725
Question 61 Explanation: 
(குறிப்பு: கிருஷ்ணகிரி அணை, கிருஷ்ணகிரியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் தர்மபுரிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது.)
Question 62
சாத்தானூர் அணை செங்கம் தாலுகாவில் ___________ ஆற்றின் குறுக்கேக் கட்டப்பட்டுள்ளது.
A
பாலாறு
B
வைகை
C
தென்பெண்ணை
D
காவிரி
Question 62 Explanation: 
(குறிப்பு: சாத்தனூர் அணை சென்னகேசவ மலையின் நடுவே அமைந்துள்ளது.)
Question 63
சாத்தனூர் அணையின் நீர்கொள்ளளவு திறன் ______________ மில்லியன் கன அடிகளாகும்.
A
5,312
B
6,525
C
7,321
D
6,725
Question 63 Explanation: 
(குறிப்பு: கிருஷ்ணகிரி அணை, கிருஷ்ணகிரியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் தர்மபுரிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது.)
Question 64
  • கூற்று 1: தண்டராம்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஒன்றியங்கள் சாத்தனூர் அணை மூலம் நீர்ப்பாசன வசதியைப் பெறுகின்றன.
  • கூற்று 2: சாத்தனூர் அணையின் உள்ளே உள்ள பூங்காக்கள் திரைப்படப் படப்பிடிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 64 Explanation: 
(குறிப்பு: சாத்தனூர் அணையில் பெரிய முதலைப் பண்ணையும் வண்ணமீன் பண்ணையும் அமைந்துள்ளன.)
Question 65
முல்லைப் பெரியாறு அணை ________ ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நிர்வாகத்தால் கட்டப்பட்டது.
A
1882
B
1858
C
1884
D
1895
Question 65 Explanation: 
(குறிப்பு: முல்லைப் பெரியாறு அணை கேரளாவில், தேக்கடி மலையில் உருவாகும் பெரியாறு ஆற்றின் குறுக்கேக் கட்டப்பட்டுள்ளது.)
Question 66
முல்லைப் பெரியாறு அணை ____________ அடி உயரம் மற்றும் ___________ அடி நீளம் கொண்டதாகும்.
A
125, 1700
B
175, 1700
C
175, 1200
D
150, 1200
Question 66 Explanation: 
(குறிப்பு: தமிழ்நாட்டில் நிரந்தரமாக வறட்சிக்குள்ளாகும் சில வேளாண் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் அளிப்பதற்காக இவ்வணை கட்டப்பட்டது. இது கேரள மாநிலத்தில் அமைந்திருந்தாலும் இதன் நீர் அதிகமாக தமிழ்நாட்டிற்குப் பண்படுகிறது.)
Question 67
111 அடி உயரம் கொண்ட வைகை அணையில் ____________ அடி உயரம் மட்டுமே நீரை சேமிக்க முடியும்.
A
50
B
61
C
71
D
91
Question 67 Explanation: 
(குறிப்பு: ஆண்டிப்பட்டிக்கு அருகே வைகை ஆற்றின் குறுக்கே வைகை அணை கட்டப்பட்டுள்ளது. இது மதுரையிலிருந்து 70 கி.மீ. தூரத்திலும் ஆண்டிப்பட்டியிலிருந்து 7 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.)
Question 68
வைகை அணை திறக்கப்பட்ட நாள் ___________.
A
1958 மார்ச் 21
B
1959 ஜனவரி 21
C
1959 மார்ச் 21
D
1960 அக்டோபர் 21
Question 68 Explanation: 
(குறிப்பு: வைகை அணையில் அமைந்துள்ள தோட்டம் “சிறிய பிருந்தாவனம்'' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணை ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.)
Question 69
  • கூற்று 1: தூத்துக்குடி நகரிலிருந்து ஏறத்தாழ 47 கி.மீ தொலைவில் மணிமுத்தாறு அணை கட்டப்பட்டுள்ளது.
  • கூற்று 2: மணிமுத்தாறு அணையிலிருந்து ஏறத்தாழ 5 கி.மீ தூரத்தில் அழகிய வண்ணமயமான பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 69 Explanation: 
(குறிப்பு: திருநெல்வேலி நகரிலிருந்து ஏறத்தாழ 47 கி.மீ தொலைவில் மணிமுத்தாறு அணை கட்டப்பட்டுள்ளது.)
Question 70
பாபநாசம் அணையில் ஏறத்தாழ _________ மெகாவாட் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
A
18
B
23
C
25
D
28
Question 70 Explanation: 
(குறிப்பு: பாபநாசம் அணை திருநல்வேலியிலிருந்து 49 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.)
Question 71
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள __________ஹெக்டேர் நிலங்கள் பாபநாசம் அணை மூலம் பாசன வசதியைப் பெறுகின்றன.
A
24862
B
34861
C
84361
D
48361
Question 71 Explanation: 
(குறிப்பு: பாபநாசம் அணை 'கரையார் அணை’ என்றும் அழைக்கப்படுகிறது.)
Question 72
தவறான இணையைத் தேர்ந்தெடு. (தமிழகத்தில் உள்ள மேற்பரப்பு நீர் வள ஆதாரங்கள்)
  1. பெரிய ஆற்று வடிநிலப் பகுதிகள் - 17
  2. நீர்த்தேக்கங்கள் – 61
  3. ஏரிகள் – 41262
A
1 மட்டும் தவறு
B
2 மட்டும் தவறு
C
2, 3 தவறு
D
3 மட்டும் தவறு
Question 72 Explanation: 
(குறிப்பு: நீர்த்தேக்கங்கள் - 81)
Question 73
தமிழ்நாட்டின் தனிநபர் நீர் நுகர்வின் அளவு ___________ கனமீட்டர் ஆகும்.
A
500
B
700
C
900
D
1100
Question 73 Explanation: 
(குறிப்பு: இது தேசிய சராசரியான 2200 கனமீட்டரை ஒப்பிடும்பொழுது குறைவானதாகும்.)
Question 74
தமிழகத்தில் உள்ள நீர்வளத்தில் ___________ சதவீதம் வேளாண்மைக்காக நுகரப்படுகிறது.
A
50%
B
65%
C
75%
D
80%
Question 75
தமிழகத்தில் பயன்படுத்திக்கொள்ளத்தக்க நிலத்தடி நீர்வளம்___________ மில்லியன் கன மீட்டர் ஆகும்.
A
11,623
B
18,078
C
22,433
D
28,643
Question 75 Explanation: 
(குறிப்பு: நீரின் தற்போதைய பயன்பாட்டின் அளவு 13,558 மில்லியன் கன மீட்டராகும். இது மறுவூட்டம் மூலம் கிடைக்கும் நீரில் 60 சதவீதமாகும். மீத இருப்பு நீரானது ஏறத்தாழ 8,875 மி.க.மீ ஆகும்.)
Question 76
தமிழ்நாட்டின் மொத்த மேற்பரப்பு நீரின் அளவு ஏறத்தாழ ___________ மில்லியன் கனமீட்டராகும்.
A
14,684
B
25,688
C
34,568
D
41,262
Question 76 Explanation: 
(குறிப்பு: ஏறத்தாழ 24 இலட்சம் ஹெக்டேர் விளைநிலம் மேற்பரப்பு நீர் மூலம் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம் பாசன வசதியைப் பெறுகின்றன.)
Question 77
பொருத்துக. (தாதுக்கள் - நாட்டின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு)
  1. பழுப்பு நிலக்கரி         i) 55.3%
  2. வெர்மிகுலைட்            ii) 75%
  3. டுனைட்                          iii) 59%
  4. செம்மணிக்கல்          iv) 59%
  5. மாலிப்டினம்                v) 52%
  6. டைட்டானியம்             vi) 30%
A
iv i iii ii v vi
B
vi v vi iii ii i
C
iii iv vi v ii i
D
i ii iii iv v vi
Question 78
கீழ்க்கண்ட எந்த வளங்களின் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி உற்பத்தியாளராக உள்ளது?
  1. வெர்மிகுலைட்
  2. மேக்னடைட்
  3. டுனைட்
  4. ரூட்டைல்
  5. செம்மணிக்கல்
  6. மாலிப்டினம்
  7. இல்மனைட்
A
அனைத்தும்
B
2, 3, 5, 6, 7
C
1, 2, 5, 7
D
3, 4, 6, 7
Question 79
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. நெய்வேலி, மிகப்பெரிய பழுப்பு நிலக்கரி வளங்களைக் கொண்டுள்ளது.
  2. தூத்துக்குடி பகுதிகளில் நிலக்கரி படிமங்கள் காணப்பபடுகின்றன.
  3. காவிரி வடிநிலப் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு படிவுகள் காணப்படுகின்றன.
A
1 மட்டும் தவறு
B
2 மட்டும் தவறு
C
3 மட்டும் தவறு
D
எதுவுமில்லை
Question 79 Explanation: 
(குறிப்பு: இராமநாதபுரம் பகுதிகளில் நிலக்கரி படிமங்கள் காணப்பபடுகின்றன.)
Question 80
கீழ்க்கண்ட எந்த பகுதிகளில் இரும்புத்தாது படிவுகள் காணப்படுகின்றன?
  1. கஞ்சமலை
  2. கல்வராயன் மலை
  3. பழனிமலை
  4. கொல்லிமலை
                 
A
1, 2     
B
2, 3
C
1, 4
D
2, 3
Question 80 Explanation: 
(குறிப்பு: கஞ்சமலை - சேலம், கல்வராயன் மலை - திருவண்ணாமலை)
Question 81
பாக்சைட் தாதுக்கள் கீழ்க்கண்ட எந்தப் பகுதிகளில் காணப்படுகின்றன?
  1. சேர்வராயன் குன்றுகள்
  2. கோத்தகிரி
  3. உதகமண்டலம்
  4. பழனிமலை
  5. கொல்லிமலை
A
அனைத்தும்
B
2, 3, 4
C
1, 3, 4
D
2, 4, 5
Question 81 Explanation: 
(குறிப்பு: சேலம் அருகே மேக்னசைட் தாது கிடைக்கிறது.)
Question 82
பாபநாசம் அணையில் ஏறத்தாழ _________ மெகாவாட் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
A
18
B
23
C
25
D
28
Question 82 Explanation: 
(குறிப்பு: பாபநாசம் அணை திருநல்வேலியிலிருந்து 49 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.)
Question 83
  • கூற்று 1: திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் ஜிப்சம் கிடைக்கிறது.
  • கூற்று 2: கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், இராமநாதபுரம், சேலம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுண்ணாம்பு கிடைக்கிறது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 84
___________ கடற்கரை மணல் பரப்புகளில் இல்மனைட் மற்றும் ரூட்டைல் காணப்படுகிறது.
A
சென்னை
B
கடலூர்
C
தஞ்சாவூர்
D
கன்னியாகுமரி
Question 84 Explanation: 
(குறிப்பு: கோயம்புத்தூர், தர்மபுரி, கரூர், நாமக்கல், நீலகிரி, சேலம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூர் மாவட்டங்களில் மேக்னசைட் கிடைக்கிறது.)
Question 85
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு ____________ சதவீதம் ஆகும்.
A
20%
B
30%
C
40%
D
50%
Question 85 Explanation: 
(குறிப்பு: தமிழ்நாட்டில் பருத்தி ஆடைகள் உற்பத்தி செய்ய ஏறத்தாழ 3 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள் உள்ளன.)
Question 86
  • கூற்று 1: தமிழ்நாட்டிலுள்ள திண்டுக்கல் கைத்தறி, விசைத்தறி மற்றும் ஆயத்த ஆடைகளின் விற்பனைக்கு புகழ்பெற்றது.
  • கூற்று: கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 86 Explanation: 
(குறிப்பு: தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு கைத்தறி, விசைத்தறி மற்றும் ஆயத்த ஆடைகளின் விற்பனைக்கு புகழ்பெற்றது.)
Question 87
  • கூற்று: கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு எனக் குறிப்பிடப்படுகிறது.
  • காரணம்: கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் நெசவுத்தொழில் மூலம் மாநில பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன.
A
கூற்று சரி மற்றும் காரணம் தவறு
B
கூற்று தவறு மற்றும் காரணம் சரி
C
கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது
D
கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை
Question 88
___________ தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம் என அழைக்கப்படுகிறது.
A
ஈரோடு
B
திருப்பூர்
C
பல்லடம்
D
கரூர்
Question 88 Explanation: 
(குறிப்பு: பருத்தி நெசவாலைகள் கோவை, திருப்பூர், சேலம், பல்லடம், கரூர், திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் செறிந்து காணப்படுகிறது.)
Question 89
நாட்டின் பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு__________ இடத்தை வகிக்கிறது.
A
2
B
3
C
4
D
5
Question 89 Explanation: 
(குறிப்பு: காஞ்சிபுரம் பட்டு என்பது அதன் தனித்தன்மை, தரம் மற்றும் பாரம்பரிய மதிப்பு ஆகியவற்றால் உலகம் முழுவதும் அறியப்படுகிறது.)
Question 90
தமிழ்நாட்டின் ஆண்டு பட்டு உற்பத்தி ஏறத்தாழ ___________ மெட்ரிக் டன்கள் ஆகும்.
A
600
B
900
C
1200
D
1500
Question 90 Explanation: 
(குறிப்பு: கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகியவை தமிழ்நாட்டின் முக்கிய பட்டு நெசவு மையங்களாகும். இராமநாதபுரத்தின் சில பகுதிகளில் செயற்கை பட்டு துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.)
Question 91
இந்தியாவில் தோல் பதனிடும் தொழிலகங்களில் தமிழ்நாடு_________ சதவிகித உற்பத்தியை அளிக்கிறது.
A
40%
B
50%
C
60%
D
70%
Question 91 Explanation: 
(குறிப்பு: வேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இராணிப்பேட்டை, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி நகரங்களில் நூற்றுக்கணக்கான தோல் பதனிடும் தொழிலகங்கள் உள்ளன.)
Question 92
இந்தியாவில்  காலணிகள், தோல் ஆடைகள் மற்றும் தோல் உபபொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு_________ சதவிகித உற்பத்தியை அளிக்கிறது
A
28%
B
28%
C
32%
D
40%
Question 92 Explanation: 
(குறிப்பு: அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR) கீழ் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆய்வகம் (CLRI) சென்னையில் அமைந்துள்ளது.)
Question 93
உற்பத்தி செய்யப்பட்ட தோல் மற்றும் தோல் சார்ந்த பொருட்கள் (தோல் ஆடைகள், கையுறைகள் மற்றும் தோல் காலணிகள்) ஏற்றுமதியில் வேலூர் மாவட்டத்தின் பங்களிப்பு
A
23%
B
32%
C
37%
D
39%
Question 93 Explanation: 
(குறிப்பு: தமிழகத்தில் வேலூர் மாவட்டம் உற்பத்தி செய்யப்பட்ட தோல் மற்றும் தோல் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியில் முதன்மை மாவட்டமாக விளங்குகிறது.)
Question 94
கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
A
1972
B
1974
C
1976
D
1979
Question 94 Explanation: 
(குறிப்பு: TNPL தொழிலகம் ஆண்டுக்கு 2.45 லட்சம் மெட்ரிக் டன் காகிதம் உற்பத்தி செய்யும் திறன் பெற்றது.)
Question 95
கீழ்க்கண்டவற்றுள் காகித ஆலை காணப்படாத இடம் எது?
A
தொப்பம்பட்டி
B
உடுமலைப்பேட்டை
C
மயிலாடுதுறை
D
கோயம்புத்தூர்
Question 95 Explanation: 
(குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள புக்காதுரை, பவானிசாகர், பள்ளிபாளையம், பரமத்திவேலூர், கோவை, உடுமலைப்பேட்டை, தொப்பம்பட்டி, நிலக்கோட்டை மற்றும் சேரன்மாதேவி ஆகியன மாநிலத்தில் உள்ள மற்ற காகித ஆலைகளாகும்.)
Question 96
சிமெண்ட் உற்பத்தியில் இந்தியா உலகளவில் __________ இடத்தை வகிக்கிறது.
A
1
B
2
C
3
D
4
Question 96 Explanation: 
(குறிப்பு: இந்தியாவின் வருடாந்திர சிமெண்ட் உற்பத்தி 181 மில்லியன் டன்கள் ஆகும்.)
Question 97
  • கூற்று 1: தமிழகத்தில் அரியலூர் மற்றும் ஆலங்குளம் ஆகிய இடங்களில் சிமெண்ட் உற்பத்தி ஆலைகள் (TANCEM) இயங்குகின்றன.
  • கூற்று 2: ஆலங்குளத்தில் உள்ள கல்நார் சிமெண்ட் அட்டை அலகும், விருத்தாசலத்தில் உள்ள கற்கலன் குழாய் அலகு ஆகியன தமிழகத்தின் மற்ற சிமெண்ட் உற்பத்தி ஆலைகள் (TANCEM) ஆகும்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 97 Explanation: 
(குறிப்பு: சங்கர் சிமெண்ட், ஜீவாரி சிமெண்ட், அல்ட்ராடெக் சிமெண்ட், மதராஸ் சிமெண்ட் மற்றும் டால்மியா சிமெண்ட் ஆகியன தமிழ்நாட்டின் முக்கிய தனியார் சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களாகும்.)
Question 98
தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்கள் இணைந்து இந்தியாவின் மொத்த மென்பொருள் ஏற்றுமதியில் __________ சதவிகிதத்தை செய்கின்றன.
A
45.6%
B
49.6%
C
59.6%
D
62.7%
Question 98 Explanation: 
(குறிப்பு: நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் கர்நாடகாவுக்கு அடுத்ததாக தமிழ்நாடு இரண்டாவது பெரிய ஏற்றுமதி செய்யும் மாநிலமாக உள்ளது.)
Question 99
கீழ்க்கண்டவற்றுள் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைந்துள்ள இடங்கள் எவை?
  1. நாங்குநேரி
  2. எண்ணூர்
  3. ஒசூர்
  4. பெரம்பலூர்
A
அனைத்தும்
B
2, 3, 4
C
1, 3, 4
D
1, 2, 4
Question 99 Explanation: 
(குறிப்பு: தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலங்களான டைடல் பூங்கா - 2, டைடல் பூங்கா - 3 மற்றும் உயிரி மருந்தகம் போன்றவை சென்னையிலும் டைடல் பூங்கா - 4 கோயம்புத்தூரிலும் அமைந்துள்ளன.)
Question 100
  • கூற்று 1: சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பது (SEZ) மற்ற பகுதிகளிலிருந்து வேறுபட்ட வாணிப சட்ட திட்டங்களை உள்ளடக்கிய ஒரு பகுதியாகும்.
  • கூற்று 2: வணிக சமநிலையை அதிகரித்தல், வேலை, முதலீட்டை அதிகரித்தல், புதிய வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் சிறந்த நிர்வாகம் ஆகியன SEZன் முக்கிய நோக்கங்களாகும்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 100 Explanation: 
(குறிப்பு: SEZ சர்வதேச அளவில் மிகச்சிறந்த பகுதிகளாகவும் ஏற்றுமதியை ஊக்குவிக்கக் கூடிய சூழலைப் பெற்றதாகவும் உள்ளது.)
Question 101
இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு ____________ சதவீதமாகும்.
A
52%
B
35%
C
28%
D
17%
Question 101 Explanation: 
(குறிப்பு: தொழில்துறை உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு நாட்டின் உற்பத்தியில் ஏறத்தாழ 11 முதல் 12% வரையிலும், மென்பொருளை தவிர்த்து நாட்டின் ஏற்றுமதியில் 15% பங்களிப்பு செய்கின்றன.)
Question 102
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகனத் தொழில்கள், பயணிகள் மகிழுந்து, வணிக வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள் ஆகியவற்றில் முறையே _____________சதவிகித பங்களிப்பை தமிழ்நாடு வழங்குகிறது.
A
35%, 21%, 33%
B
21%, 35%, 33%
C
21%, 33%, 35%
D
33%, 21%, 35%
Question 102 Explanation: 
(குறிப்பு: வாகனத் தொழிலகம் தமிழக பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கினை வகிக்கின்றது. மாநிலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீத பங்களிப்பினை அளிப்பதுடன் 2 லட்சத்து 20 ஆயிரம் மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பினை வழங்குகிறது.)
Question 103
இரசாயன தொழிலகம் தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் _________ சதவீதமும், நாட்டின் மொத்த ஏற்றுமதியில் ___________ சதவீதமும் பங்களிப்பு செய்கின்றன.
A
8, 13
B
13, 8
C
23, 7
D
7, 23
Question 104
  • கூற்று 1: கைத்தறித் துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருளாதார நடவடிக்கைகள் 4.29 இலட்சம் நெசவாளர் குடும்பங்கள் மற்றும் 11.64 இலட்சம் நெசவாளர்களுக்கு நல்ல வருவாயுள்ள வேலைவாய்ப்பினை அளிக்கின்றது.
  • கூற்று 2: நெசவாளர் சங்கங்கள், ‘பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா சீருடையும், விலையில்லா வேட்டி மற்றும் சேலை’ திட்டத்திற்கு தேவையான துணிகளையும் உற்பத்தி செய்கின்றன.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 104 Explanation: 
(குறிப்பு: கைத்தறித் துறையானது தமிழகத்தின் மிகப்பெரிய குடிசைத் தொழிலாகும்.)
Question 105
தமிழ்நாட்டில் மொத்தம் __________ சர்க்கரை ஆலைகள் உள்ளன.
A
24
B
32
C
34
D
36
Question 105 Explanation: 
(குறிப்பு: இவற்றில் 16 கூட்டுறவுத் துறையாலும் 18 தனியார் துறையாலும் நிர்வகிக்கப்படுகின்றன.)
Question 106
2013ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் __________ வருவாயை ஈட்டி முதன்மை மாநிலமாக திகழ்கின்றது.
A
12 கோடி
B
20 கோடி
C
22 கோடி
D
25 கோடி
Question 106 Explanation: 
(குறிப்பு: தமிழகத்தில் சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தால் (TTDC) ஊக்குவிக்கப்படுகிறது.)
Question 107
தமிழகத்தில் சுற்றுலாத்துறை தொழிலின் ஆண்டு வளர்ச்சி விகிதம் ____________ ஆகும்.
A
8%
B
12%
C
14%
D
16%
Question 107 Explanation: 
(குறிப்பு: ஆண்டிற்கு ஏறத்தாழ 28 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் 11 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர்.)
Question 108
மக்கள்தொகைப் பண்புகள் பற்றிய புள்ளிவிவர ஆய்வுகள் _____________ என அழைக்கப்படுகின்றது.
A
மக்கட்தொகை எண்ணிக்கை
B
மக்கட்தொகையியல்
C
மக்கள்தொகை வளர்ச்சி
D
மக்கள்தொகை விகிதம்
Question 108 Explanation: 
(குறிப்பு: ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கையே மக்கள்தொகை எனப்படுகிறது.)
Question 109
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை
A
5.75 கோடி
B
6.71 கோடி
C
7.21 கோடி
D
7.58 கோடி
Question 109 Explanation: 
(குறிப்பு: 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை 7,21,47,030. 2001ஆம் ஆண்டு 6.24 கோடியாக இருந்த மக்கள் தொகை 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள்தொகை அதிகரித்துள்ளது.)
Question 110
2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஆண், பெண் மக்கள் தொகை முறையே
A
3,60,09,055; 3,61,37,975
B
3,61,37,975; 3,60,09,055
C
3,54,67,232; 3,58,09,004
D
3,89,69,864; 3,96,64,265
Question 110 Explanation: 
(குறிப்பு: 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் ஆண், பெண் மக்கள் தொகை 3,14,00,909, 3,10,04,770.)
Question 111
2001-2011 வரையிலான 10 ஆண்டு காலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி _____________.
A
11.19%
B
13.69%
C
14.78%
D
15.6%
Question 111 Explanation: 
(குறிப்பு: 2001-2011 ஆண்டுக்கு முந்தைய பத்தாண்டுகளில் இது 11.9 சதவீதமாக இருந்தது.)
Question 112
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் தமிழ்நாட்டின் மக்கள்தொகை____________.
A
2.46%
B
4.57%
C
5.96%
D
6.32%
Question 112 Explanation: 
(குறிப்பு: 2001இல் இது 6.07 சதவீதம் ஆகும்.)
Question 113
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் அதிக அளவு நகப்புற மக்கள்தொகையைக் கொண்ட இடம்
A
கோவை
B
திருவள்ளூர்
C
காஞ்சிபுரம்
D
சென்னை
Question 113 Explanation: 
(குறிப்பு: சென்னை 4.219 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.)
Question 114
  • கூற்று: கோவை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தர்மபுரி, சேலம், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகியவை தமிழ்நாட்டில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டங்களாகும்.
  • காரணம்: இம்மாவட்டங்களில் அதிக அளவிலான மக்கள்தொகை இருப்பதற்குக் காரணம் விவசாயம் மற்றும் தொழில்துறை மேம்பாடு ஆகும்.
A
கூற்று சரி மற்றும் காரணம் தவறு
B
கூற்று தவறு மற்றும் காரணம் சரி
C
கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது
D
கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை
Question 115
திருவண்ணாமலை, கடலூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் _____________ மக்கள்தொகையைப் பெற்றுள்ளன.
A
10 - 15 இலட்சம்
B
20 - 25 இலட்சம்
C
25 - 30 இலட்சம்
D
30 - 35 இலட்சம்
Question 115 Explanation: 
(குறிப்பு: வேலூர், திண்டுக்கல், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் ஒவ்வொன்றும் 15 – 20 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளன.)
Question 116
2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மிகக்குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட மாவட்டம்
A
திருவாரூர்
B
இராமநாதபுரம்
C
சிவகங்கை
D
நீலகிரி
Question 116 Explanation: 
(குறிப்பு: நீலகிரி மாவட்டம் 10 இலட்சத்திற்கும் குறைவான (7,64,826) மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.)
Question 117
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்களடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு ____________ ஆகும்.
A
333
B
444
C
555
D
666
Question 117 Explanation: 
(குறிப்பு: 2001ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மக்களடர்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 480 ஆக இருந்தது.)
Question 118
இந்தியாவின் மக்களடர்த்தியில் தமிழ்நாடு ______________வது இடத்தில் உள்ளது.
A
8
B
10
C
11
D
12
Question 118 Explanation: 
(குறிப்பு: 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தேசிய சராசரி மக்களடர்த்தி 382 ஆகும்.)
Question 119
சென்னை ஒரு சதுர கிலோமீட்டருக்கு __________ மக்களடர்த்தி கொண்ட மாவட்டமாகும்.
A
18,623
B
23,968
C
26,903
D
28,683
Question 119 Explanation: 
(குறிப்பு: சென்னையை அடுத்து கன்னியாகுமரி (1106), திருவள்ளூர் (1049), காஞ்சிபுரம் (927), மதுரை (823), கோயம்புத்தூர்(748), கடலூர்(702), தஞ்சாவூர் (691), நாகப்பட்டினம் (668), சேலம் (663), வேலூர்(646) மற்றும் திருச்சி (602) ஆகிய மாவட்டங்கள் அதிக மக்களடர்த்தி கொண்ட மாவட்டங்களாகும்.)
Question 120
பொருத்துக. (தமிழக மக்கள் பின்பற்றும் மதம் - பின்பற்றும் மக்களின் சதவிகிதம்)
  1. இந்துக்கள்                  i) 87.58%
  2. கிறித்தவர்கள்           ii) 6.12%
  3. இஸ்லாமியர்கள்     iii) 5.86%
  4. சமணர்கள்                  iv) 0.12%
  5. சீக்கிய மதத்தினர்   v) 0.002%
  6. புத்த மதத்தினர்         vi) 0.02%
A
i iii ii iv v vi
B
iii ii i v iv iv
C
i ii iii iv v vi
D
ii ii iii iv v vi
Question 120 Explanation: 
(குறிப்பு: தமிழகத்தில் பிற மதங்களைச் சார்ந்தவர்களும் (0.01%) குறிப்பிடவியலா மதத்தைச் சேர்ந்தவர்களும் (0.26%) உள்ளனர்.)
Question 121
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் நகர்ப்புற மக்கள்தொகை
A
24,917,263
B
28,440,687
C
33,440,917
D
34,917,440
Question 121 Explanation: 
(குறிப்பு: இது தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் 48.40% ஆகும்.)
Question 122
2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் ____________ மாவட்டத்தில் குறைந்த அளவு மக்களடர்த்தி பதிவாகியுள்ளது.
A
திண்டுக்கல்
B
திருநெல்வேலி
C
தூத்துக்குடி
D
நீலகிரி
Question 122 Explanation: 
(குறிப்பு: நீலகிரியின் மக்களடர்த்தி 288 ச.கி.மீ ஆகும்.)
Question 123
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் கிராமப்புற மக்கள்தொகை
A
34,917,440
B
35,623,467
C
37,229,590
D
37,623,962
Question 123 Explanation: 
(குறிப்பு: இது தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் 51.60 சதவீதம் ஆகும்.)
Question 124
தமிழகத்தின் பாலின விகிதம் 2001ஆம் ஆண்டு ____________ ஆக இருந்தது.
A
923
B
933
C
968
D
987
Question 124 Explanation: 
(குறிப்பு: பாலின விகிதம் என்பது 1000 ஆண்களுக்கு இணையாக உள்ள பெண்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. 2011ஆம் ஆண்டு தமிழகத்தின் பாலின விகிதம் 996 ஆகும்.)
Question 125
இந்தியாவின் பாலின விகிதம் 2001ஆம் ஆண்டு ____________ ஆக இருந்தது.
A
922
B
933
C
948
D
952
Question 125 Explanation: 
(குறிப்பு: 2011ஆம் ஆண்டு இந்தியாவின் பாலின விகிதம் 940 ஆகும்.)
Question 126
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் 32 மாவட்டங்களில் __________ மாவட்டங்கள் பாலின விகிதம் ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது.
A
10
B
12
C
15
D
18
Question 126 Explanation: 
(குறிப்பு: 2001 ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போதும் இதே நிலை காணப்பட்டது.)
Question 127
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் __________ மாவட்டத்தின் பாலின விகிதம் சரியாக 1000 ஆக உள்ளது.
A
புதுக்கோட்டை
B
விருதுநகர்
C
கிருஷ்ணகிரி
D
சிவகங்கை
Question 127 Explanation: 
(குறிப்பு: 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 980 முதல் 1000 வரையிலான குறைவான பாலின விகிதம் காணப்படுகிறது.)
Question 128
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் அதிகம் கொண்ட மாவட்டங்கள் எவை?
  1. தர்மபுரி
  2. சேலம்
  3. நீலகிரி
  4. தஞ்சாவூர்
A
1, 2
B
2, 3
C
1, 4
D
3, 4
Question 128 Explanation: 
(குறிப்பு: பாலின விகிதம் நீலகிரி – 1041 தஞ்சாவூர் – 1031)
Question 129
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் குறைவாக கொண்ட மாவட்டங்கள் எவை?
  1. தர்மபுரி
  2. சேலம்
  3. நாமக்கல்
  4. திருவாரூர்
A
1, 2
B
2, 3
C
1, 4
D
3, 4
Question 129 Explanation: 
(குறிப்பு: பாலின விகிதம் தர்மபுரி – 946 சேலம் - 954)
Question 130
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் __________ சதவீதம் ஆகும்.
A
73.45%
B
80.09%
C
83.79%
D
87.68%
Question 130 Explanation: 
(குறிப்பு: 2001ல் கல்வியறிவு விகிதம் 73.45 சதவீதமாகும்.)
Question 131
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில்,
  1. ஆண்களின் கல்வியறிவு விகிதம் - 86.77%
  2. பெண்களின் கல்வியறவு விகிதம் - 64.43%
A
இரண்டும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 131 Explanation: 
(குறிப்பு: 2001 நிலவரப்படி ஆண்களின் கல்வியறிவு 82.42% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 64.43% ஆகவும் இருந்தது.)
Question 132
தமிழகத்தில் ____________ மாவட்டம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலுள்ள ஆண்களில் நான்கில் மூன்று பகுதியினர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.
A
கிருஷ்ணகிரி
B
தர்மபுரி
C
சேலம்
D
நாமக்கல்
Question 132 Explanation: 
(குறிப்பு: தமிழகத்தில் 8 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். அவை, தர்மபுரி (60.03%), கிருஷ்ணகிரி (64.86%), திருவண்ணாமலை (65.71%), விழுப்புரம்(63.51%), சேலம் (65.43%), ஈரோடு (65.07%), பெரம்பலூர்(66.11%) மற்றும் அரியலூர் (62.2%). )
Question 133
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் கல்வியறிவு விகிதம் ____________ சதவீதம் ஆகும்.
A
63.3%
B
68.7%
C
72.15%
D
74.04%
Question 133 Explanation: 
(குறிப்பு: இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 82.14% ஆகவும் பெண்களின் கல்வியறிவு விகிதம் 68.46% ஆகவும் உள்ளது.)
Question 134
2001இல் இந்தியாவில் கல்வியறிவு விகிதம் ___________.
A
58.4%
B
62.4%
C
64.8%
D
65.8%
Question 134 Explanation: 
(குறிப்பு: இதில் ஆண் பெண் முறையே 75.3% மற்றும் 53.7% ஆக இருந்தது.)
Question 135
தமிழகத்தில் கல்வியறிவு விகிதம் அதிகம் கொண்ட மாவட்டம்
A
தர்மபுரி
B
தூத்துக்குடி
C
சென்னை
D
கன்னியாகுமரி
Question 135 Explanation: 
(குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்வியறிவு விகிதம் 91.75% ஆகும்.)
Question 136
தமிழகத்தில் குறைந்த கல்வியறிவு விகிதம் கொண்ட மாவட்டம்
A
கிருஷ்ணகிரி
B
தூத்துக்குடி
C
சென்னை
D
தர்மபுரி
Question 136 Explanation: 
(குறிப்பு: தர்மபுரி மாவட்டத்தின் கல்வியறிவு விகிதம் 68.54% ஆகும்.)
Question 137
தவறான இணையைத் தேர்ந்தெடு. (மாவட்டங்களின் கல்வியறிவு விகிதம்)
A
சென்னை - 90.18%
B
தூத்துக்குடி – 86.16%
C
நீலகிரி – 75.20%
D
காஞ்சிபுரம் - 84.49%
Question 137 Explanation: 
(குறிப்பு: நீலகிரி - 85.20%)
Question 138
தமிழகத்தின் மொத்த சாலைகளின் நீளம் ____________ கிலோமீட்டர் ஆகும்.
A
60,028
B
82,928
C
1,67,000
D
1,82,223
Question 138 Explanation: 
(குறிப்பு: இதில் 60,628 கிலோமீட்டர் மாநில நெடுஞ்சாலை துறை மூலம் பராமரிக்கப்படுகிறது.)
Question 139
பொதுத்துறை மற்றும் தனியார்துறை கூட்டணி இயக்கத்திட்டத்தின் கீழ் (PPP) மொத்த சாலைத் திட்டங்களில் 20% பங்களிப்புடன் தமிழகம், இந்தியாவில் _________ இடத்தில் உள்ளது.
A
2
B
3
C
4
D
5
Question 140
பொருத்துக. ( 2017 தமிழ்நாடு புள்ளியியல் கையேட்டின் படி - சாலைகளின் வகைகள் மற்றும் அவற்றின் நீளம் (கி.மீ))
  1. தேசிய நெடுஞ்சாலைகள்               i) 4,994
  2. மாநில நெடுஞ்சாலைகள்              ii) 57,291
  3. ஊராட்சி ஒன்றியசாலைகள்       iii) 1,47,543
  4. கிராம பஞ்சாயத்து சாலைகள்   iv) 21,049
A
ii i iii iv
B
iii ii i iv
C
iv iii ii i
D
i ii iii iv
Question 141
தென் இரயில்வேயின் தலைமையகம் ______________ல் அமைந்துள்ளது.
A
கன்னியாகுமரி
B
திருச்சி
C
சென்னை
D
திருவனந்தபுரம்
Question 141 Explanation: 
(குறிப்பு: தற்போது தெற்கு இரயில்வேயின் வலைப்பின்னல் இந்தியாவின் தென் தீபகற்பப் பகுதியான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திராவின் சில பகுதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.)
Question 142
தமிழ்நாட்டின் மொத்த இருப்புப் பாதையின் நீளம் ___________ கி.மீ ஆகும்.
A
5,623
B
6,693
C
7,128
D
7,698
Question 142 Explanation: 
(குறிப்பு: தெற்கு இரயில்வே மண்டலத்தில் 690 ரயில் நிலையங்கள் உள்ளன.)
Question 143
தமிழகத்தில் மெட்ரோ இரயில்வே அமைப்பு ___________ முதல் பாதாள இரயில் இயக்கத்துடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
A
2016 ஜூன்
B
2016 மே
C
2017 ஜூலை
D
2017 மே
Question 144
தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களின் எண்ணிக்கை
A
2
B
3
C
4
D
5
Question 144 Explanation: 
(குறிப்பு: கோவை, மதுரை, சென்னை, திருச்சி ஆகியன தமிழகத்தின் சர்வதேச விமான நிலையங்களாகும்.)
Question 145
  • கூற்று 1: சென்னை சர்வதேச விமான நிலையமானது மும்பை மற்றும் புதுடெல்லிக்கு அடுத்ததாக இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக உள்ளது.
  • கூற்று 2: தொழில் துறை வளர்ச்சியானது ஆண்டிற்கு 18 சதவீதத்திற்கும் அதிகமான விமான போக்குவரத்து வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 146
தமிழ்நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எண் __________ ஐ உடையதாகும்.
A
23
B
74
C
48
D
44
Question 146 Explanation: 
(குறிப்பு: இது ஓசூரிலிருந்து தர்மபுரி, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை 627.2 கிலோமீட்டர் தூரம் செல்கிறது.)
Question 147
தமிழ்நாட்டின் மிகக்குறைவான நீளங்கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண்  _____________ ஐக் கொண்டதாகும்.
A
587
B
692
C
785
D
875
Question 147 Explanation: 
(குறிப்பு: தேசிய நெடுஞ்சாலை எண் 785 மதுரையிலிருந்து நத்தம் வரை செல்கிறது. இதன் நீளம் 38 கிலோ மீட்டர் ஆகும்.)
Question 148
தமிழகத்தில் அதிக நிலக்கரி மற்றும் தாதுக்களைக் கையாளும் துறைமுகம்
A
சென்னை
B
தூத்துக்குடி
C
நாகப்பட்டினம்
D
எண்ணூர்
Question 148 Explanation: 
(குறிப்பு: இடைநிலை துறைமுகமான எண்ணூர் சமீபத்தில் பெரிய துறைமுகமாக மேம்படுத்தப்பட்டு உள்ளது.)
Question 149
தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.
A
சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் மூன்று முக்கிய துறைமுகங்களாகும்.
B
நாகப்பட்டினத்தில் இடைநிலை துறைமுகமும் பிற பகுதிகளில் 15 சிறிய துறைமுகங்களும் தமிழகத்தில் உள்ளன.
C
தமிழக துறைமுகங்கள் ஏறத்தாழ 73 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை ஆண்டுதோறும் கையாளுகிறது.
D
சென்னை துறைமுகம் இயற்கை துறைமுகம் ஆகும்.
Question 149 Explanation: 
(குறிப்பு: சென்னை துறைமுகம் செயற்கை துறைமுகம் ஆகும். இது சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் நாட்டின் இரண்டாவது துறைமுகமாகும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறு துறைமுகங்களும் தமிழ்நாட்டின் கடல் சார் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.)
Question 150
தகவல் தொடர்பு என்பது _____________ மொழி வார்த்தையான 'கம்யூனிகேர்’ என்பதிலிருந்து பெறப்பட்டது.
A
சமஸ்கிருதம்
B
ஆங்கிலம்
C
போர்ச்சுகீசியம்
D
இலத்தீன்
Question 150 Explanation: 
(குறிப்பு: கம்யூனிகேர் என்பதற்கு பகிர்தல் என பொருள்.)
Question 151
தவறான இணையைத் தேர்ந்தெடு. (தமிழ்நாட்டின் அஞ்சலக மாவட்டங்கள் - தலைமையகம்)
A
சென்னை - சென்னை
B
மேற்கு மண்டலம் – கோயம்புத்தூர்
C
மத்திய மண்டலம் – கரூர்
D
தெற்கு மண்டலம் – மதுரை
Question 151 Explanation: 
(குறிப்பு: மத்திய மண்டலம் - திருச்சி.)
Question 152
தகவல் தொடர்புகள் ___________ பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
A
2
B
3
C
4
D
5
Question 152 Explanation: 
(குறிப்பு: இரு பிரிவுகள் தனிமனித தகவல்தொடர்பு பொதுத் தகவல்தொடர்பு)
Question 153
இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு _____________ சதவீதம் ஆகும்.
A
8.4%
B
10.2%
C
11.6%
D
12.2%
Question 153 Explanation: 
(குறிப்பு: ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பிற்கு இடையேயான வேறுபாடு ‘வர்த்தக சமநிலை’ என அழைக்கப்படுகிறது.)
Question 154
தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வேளாண் பொருட்களில் தவறானது எது?
A
புகையிலை
B
நெல்
C
வாழை
D
நிலக்கடலை
Question 154 Explanation: 
(குறிப்பு: புகையிலை, தானியங்கள், பருத்தி, கரும்பு, நெல், நிலக்கடலை வாசனைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வேளாண் பொருட்கள் ஆகும்.)
Question 155
  • கூற்று 1: சிறுதோல் பைகள், பணப்பைகள், கைப்பைகள், இடுப்பு கச்சை, காலணிகள், கையுறைகள் ஆகியவை தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்கள் ஆகும்.
  • கூற்று 2: விலை மதிப்புமிக்க கற்கள், முத்துக்கள், தங்க நகைகள், கலை மற்றும் அலங்காரப் பொருட்கள் ஆகியவை தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 155 Explanation: 
(குறிப்பு: காகிதம், இரசாயனங்கள், இரப்பர் மற்றும் கண்ணாடி ஆகிய இரசாயன மற்றும் இரசாயனம் சார்ந்த பொருட்களும் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.)
Question 156
இந்தியாவின் வணிகத்தில் தமிழ்நாட்டின் முக்கிய துறைமுகங்கள் __________ சதவீத பங்களிப்பை தருகின்றன.
A
8.56%
B
10.94%
C
11.67%
D
12.48%
Question 157
இந்தியாவின் பட்டாசு உற்பத்தியின் தலைநகர் _____________ என கருதப்படுகிறது.
A
விருதுநகர்
B
மதுரை
C
சிவகாசி
D
திண்டுக்கல்
Question 157 Explanation: 
(குறிப்பு: பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் அதிகமுள்ள விருதுநகர் மற்றும் சிவகாசியில் உள்ள தொழிலகங்களில் தொடர்ச்சியாக ஏற்படும் விபத்துகளால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.)
Question 158
  • கூற்று 1: 2012 செப்டம்பர் 5 அன்று தமிழகத்தில் ஒரு தனியார் பட்டாசு தொழிலகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் 40 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 70 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
  • கூற்று 2: 2016 பிப்ரவரி 2ஆம் நாள் கோவையில் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 6 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 158 Explanation: 
(குறிப்பு: 2016 பிப்ரவரி 2ஆம் நாள் கோவையில் டயர் உருக்கும் ஆலையில் நடந்த விபத்தில் 6 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.)
Question 159
தமிழ்நாட்டில் துறையூர் அருகே முத்தியம்பாளையம் கிராமத்தில் உள்ள கருப்புசாமி கோயில் திருவிழாவில் எப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது?
A
21 ஆகஸ்ட் 2017
B
21 ஏப்ரல் 2018
C
21 ஏப்ரல் 2019
D
21 ஆகஸ்ட் 2017
Question 159 Explanation: 
(குறிப்பு: இங்கு நடைபெற்ற கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்தனர்.)
Question 160
பேரிடர் அவசரகால தொலைபேசி எண் ____________.
A
1023
B
1058
C
1077
D
1099
Question 160 Explanation: 
(குறிப்பு: பேரிடர் அவசரகால தொலைபேசியின் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் / நீதிபதி.)
Question 161
2013ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட 14,504 விபத்துகளில் ___________ பேர் உயிரிழந்தனர்.
A
14504
B
14672
C
15234
D
15563
Question 161 Explanation: 
(குறிப்பு: 2017ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்துகள் 1,47,913 இல் 16,157 உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளன.)
Question 162
2002-2012 வரையிலான 10 ஆண்டுகளில் இந்திய மாநிலங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் அதிக எண்ணிக்கையைக் கொண்டு முதலிடம் வகிக்கும் மாநிலம்
A
கர்நாடகா
B
ஒடிசா
C
ஆந்திரா
D
தமிழகம்
Question 162 Explanation: 
(குறிப்பு: நாட்டில் பதிவாகும் மொத்த விபத்துகளில் 15% தமிழ்நாட்டில் நடப்பதாக அறிக்கையில் தெரியவந்துள்ளது.)
Question 163
2018ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் தமிழகத்தை சேர்ந்த உயிரிழப்புகள்
A
16,157
B
15, 627
C
13,428
D
12,213
Question 164
தவறான இணையைத் தேர்ந்தெடு. (புவியியல் குறியீடுகள்)
A
ஆரணி – பட்டு
B
காஞ்சிபுரம் – பட்டு
C
கோயம்புத்தூர் - மாவு அரைக்கும் இயந்திரம்
D
ஈரோடு – வெண்பட்டு
Question 164 Explanation: 
(குறிப்பு: சேலம் மாவட்டம் வெண்பட்டு உற்பத்திக்கு புவியியல் குறியீட்டை பெற்றுள்ளது.)
Question 165
பொருத்துக. (புவியியல் குறியீடுகள்)
  1. கோவை                          i) மஞ்சள்
  2. நாகர்கோவில்              ii) கோரா பட்டுசேலை
  3. ஈரோடு                            iii) கோயில் நகைகள்
  4. பவானி                           iv) போர்வைகள்
A
iv ii i iii
B
ii iii iv i
C
ii iii i iv
D
iii ii iv i
Question 166
தவறான இணையைத் தேர்ந்தெடு. (புவியியல் குறியீடுகள்)
A
மதுரை – சுங்கடி சேலை
B
சுவாமி மலை – வெண்கலச்சிலை
C
நாச்சியார்கோவில் – குத்துவிளக்கு
D
சிறுமலை – பாய்
Question 166 Explanation: 
(குறிப்பு: சிறுமலை மலைவாழைக்கு புவியியல் குறியீட்டை பெற்றுள்ளது.)
Question 167
தவறான இணையைத் தேர்ந்தெடு. (புவியியல் குறியீடுகள்)
A
பத்தமடை - பாய்
B
நீலகிரி - பாரம்பரிய பூத்தையல்
C
மகாபலிபுரம் – சிற்பங்கள்
D
ஏத்தோமொழி – பாக்கு
Question 167 Explanation: 
(குறிப்பு: ஏத்தோ மொழி தேங்காய்க்கு புவியியல் குறியீட்டை பெற்றுள்ளது.)
Question 168
தஞ்சாவூர் கீழ்க்கண்டஎந்த பொருள்களுக்கு புவியியல் குறியீட்டைப் பெற்றுள்ளது?
  1. ஓவியங்கள்
  2. கலைநயம் மிக்க தட்டுகள்
  3. வீணை
  4. தலையாட்டி பொம்மைகள்
A
அனைத்தும்
B
1, 3, 4
C
1, 4
D
1, 2, 4
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 168 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!