Book Back QuestionsTnpsc

தமிழ்நாட்டில் தொழில் துறை தொகுப்புகள் Book Back Questions 10th Social Science Lesson 27

10th Social Science Lesson 27

27] தமிழ்நாட்டில் தொழில் துறை தொகுப்புகள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

தெற்கு அரைக்கோளத்தில் உள்ள நாடுகள் உலகளாவிய தெற்கு நாடுகள் (Global South) என்று அழைக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட சில தகவல் தொழில்நுட்ப பொருளாதார மண்டலங்கள்: வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier – II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, ஓசூர் மற்றும் சேலம் ஆகியவை தகவல் தொழிற்நுட்ப முதலீட்டிற்கான இடங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதனை எளிதாக்குவதற்காக ELCOT நிறுவனம் பின்வரும், எட்டு இடங்களில் ELCOSEZs (IT குறிப்பிட்ட பொருளாதார சிறப்பு மண்டலங்கள்) நிறுவியுள்ளது. சென்னை – சோழிங்கநல்லூர்; கோயம்புத்தூர் – விளாங்குறிச்சி; மதுரை – இலந்தை குளம்; மதுரை – வடபாலஞ்சி, கிண்ணிமங்கலம்; திருச்சிராப்பள்ளி – நாவல்பட்டு. மாநிலத்தின் அலகுகளை அமைக்க விரும்பும் நிறுவனங்கலுக்கு ELCOSEZs மூலம் வசதிகள் வழங்கப்படுகிறது. புதிய இடங்களில் ELCOSEZs அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், தேவை மற்றும் நம்பகத் தன்மையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. (வரைபட தகவல் தொழில் நுட்பக் கொள்கை – 2018-19). திருநெல்வேலி – கங்கைகொண்டான்; சேலம் – ஜாகீர் அம்மாபாளையம்; ஓசூர் – விஸ்வநாதபுரம்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zones – SEZs): நாட்டில் ஏற்றுமதிக்கு இடையூறு இல்லாத சூழலை கருத்தில் கொண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான ஒரு கொள்கை ஏப்ரல் 2000ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, பின்வரும் இடங்களில் ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களை அரசு அமைந்துள்ளது. நாங்குநேரி SEZ – பல்நோக்கு உற்பத்தி SEZ திருநெல்வேலி; எண்ணூர் SEZ – அனல் மின் திட்டம், வயலூர்; கோயம்புத்தூர் SEZ – தகவல் தொழிற்நுட்ப பூங்காக்கள்; ஓசூர் SEZ – தானியங்கி பொறியியல், மின்னணுவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு; பெரம்பலூர் SEZ – பல்நோக்கு உற்பத்தி SEZ; தானியங்கி நகரம் (Auto city) SEZ – தானியங்கிகள்/தானியங்கி உதிரி பாகங்கள், திருவள்ளுர்; இந்தியா-சிங்கப்பூர் SEZ – IT/ITEs, மின்னணு வன்பொருள், தளவாடங்கள் மற்றும் கிடங்குகள்-திருவள்ளுர் மாவட்டங்கள்; உயிரி-மருந்துகள் SEZ – மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு, விஷக்கட்டுப்பாட்டு மையம், மைய மீள் உருவாக்க மருத்துவம், மருத்துவ ஆராய்ச்சி.

மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் (Madras Export Processing Zone – MEPZ): மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் சென்னையில் ஒரு சிறப்புப் பொருளாதார மையமாகும். மத்திய அரசு அமைத்த நாட்டின் ஏழு ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களில் இதுவும் ஒன்றாகும். இது அந்நிய நேரடி முதலீட்டினை ஊக்குவிப்பதற்கும் அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கும், வட்டாரப் பகுதிகளில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் 1984ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. MEPZ தலைமையகம் சென்னையை அடுத்த தாம்பரம் GST சாலையில் அமைந்துள்ளது.

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் (ஜனவரி 16, 2016): ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என்பது இந்திய அரசின் ஒரு முன் முயற்சித் திட்டமாகும். இதன் முதன்மையான நோக்கம் தொழில் தொடங்குவதற்கான தொடக்க முயற்சிகளை ஏற்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வளங்களை உருவாக்குதல் ஆகும்.

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் (ஏப்ரல் 5, 2016): ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் என்பது பச்சைப் புல்வெளி (Greenfield Enterprise) நிறுவனம் அமைப்பதற்காக குறைந்தபட்சம் 10 லட்சத்துக்கும், 1 கோடிக்கும் இடையில், ஒரு பட்டியல் சாதியினர் (SC) அல்லது பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் ஒரு வங்கிக் கிளைக்கு ஒரு பெண் கடன் பெறுபவர் என கடன் வழங்கி வங்கிக்கடன்களை எளிதாக்குவதே இத்திட்டமாகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது __________

(அ) தூத்துக்குடி

(ஆ) கோயம்புத்தூர்

(இ) சென்னை

(ஈ) மதுரை

2. குழாய்கள் மற்றும் நீரிறைக்கும் இயந்திரம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவது ____________

(அ) சேலம்

(ஆ) கோயம்புத்தூர்

(இ) சென்னை

(ஈ) தருமபுரி

3. ___________ என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியின் முக்கிய அம்சமாகும்.

(அ) வேளாண்மை

(ஆ) தொழில்

(இ) இரயில்வே

(ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

4. திருப்பூர் ___________ தொழிலுக்குப் பெயர்பெற்றது.

(அ) தோல் பதனிடுதல்

(ஆ) பூட்டு தயாரித்தல்

(இ) பின்னலாடை தயாரித்தல்

(ஈ) வேளாண் பதப்படுத்துதல்

5. __________ இல் ஒரு வெற்றிகரமான தொழில் துறை தொகுப்பு முற்றிலும் தமிழ்நாட்டால் உருவாக்கப்பட்டது.

(அ) ஓசூர்

(ஆ) திண்டுக்கல்

(இ) கோவில்பட்டி

(ஈ) திருநெல்வேலி

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் தமிழ்நாட்டில் _________ மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ளன.

2. சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கைகள் __________ ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

3. ­­____________ என்பவர் புத்தாக்க சிந்தனைகள் மற்றும் வணிக செயல்முறைகளின் புத்தாக்கம்புனைபவர் ஆவார்.

தவறான ஒன்றினை தேர்வு செய்க:

1. பின்வருவனவ்றில் தோல் தொழிற்சாலைகள் இல்லாதது எது?

(அ) ராணிப்பேட்டை

(ஆ) தர்மபுரி

(இ) ஆம்பூர்

(ஈ) வாணியம்பாடி

2. பின்வருவனவற்றில் எது தொழில்துறை வளர்ச்சி நிறுவனம் அல்ல?

(அ) TIDCO

(ஆ) SIDCO

(இ) MEPG

(ஈ) SIPCOT

பொருத்துக:

1. தொழில் முனைவோர் – ஏற்றுமதி செயலாக்க மண்டலம்

2. MEPZ – கோயம்புத்தூர்

3. இந்திய ஒழுங்குமுறை தொழிற்சாலை – அமைப்பாளர்

4. TNPL – அரவங்காடு

5. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் – கரூர்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. சென்னை 2. கோயம்பத்தூர் 3. தொழில் 4. பின்னலாடை தயாரித்தல்

5. ஓசூர்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. வேலூர் 2. ஏப்ரல் 2000 3. தொழில் முனைவோர்

தவறான ஒன்றினை தேர்வு செய்க: (விடைகள்)

1. தர்மபுரி 2. MEPG

பொருத்துக: (விடைகள்)

1. தொழில் முனைவோர் – அமைப்பாளர்

2. MEPZ – ஏற்றுமதி செயலாக்க மண்டலம்

3. இந்திய ஒழுங்குமுறை தொழிற்சாலை – அரவங்காடு

4. TNPL – கரூர்

5. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!