Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

தமிழ்நாட்டில் தொழில் துறை தொகுப்புகள் 10th Social Science Lesson 19 Questions in Tamil

10th Social Science Lesson 19 Questions in Tamil

19] தமிழ்நாட்டில் தொழில் துறை தொகுப்புகள்

1) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) பொதுவாக மூலப்பொருட்களை எளிதில் பயன்படுத்தக் கூடிய பொருட்களாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித நடவடிக்கையையும் நிறைவேற்றுமிடம் “தொழிற்சாலை” என்று அழைக்கப்படுகிறது.

ⅱ) நுகர்வோருக்கும் மற்ற உற்பத்தியாளர்களுக்கும் தேவைப்படும் பொருட்களை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பெருமளவில் உற்பத்திச் செய்வது தொழில்மயமாதல் எனப்படும்.

a)ⅰ) மட்டும் சரி

b)ⅱ) மட்டும் சரி

c)ⅰ) மற்றும் ⅱ)சரி

d) இரண்டுமில்லை

விளக்கம்: பொதுவாக மூலப்பொருட்களை எளிதில் பயன்படுத்தக் கூடிய பொருட்களாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித நடவடிக்கையையும் நிறைவேற்றுமிடம் “தொழிற்சாலை” என்று அழைக்கப்படுகிறது. நுகர்வோருக்கும் மற்ற உற்பத்தியாளர்களுக்கும் தேவைப்படும் பொருட்களை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பெருமளவில் உற்பத்திச் செய்வது தொழில்மயமாதல் எனப்படும்.

2) பல வட்டாரங்களுக்கிடையேயும் மக்களுக்கிடையேயும் வேளாண் தொழிலில் அதிக வேலைப்பகுப்பு முறை காணப்படுவதற்கான காரணம்?

ⅰ) உணவுத் தேவையுடன் வருமானத் தேவையும் நிலையானதாக உள்ளது

ⅱ) நுகரப்படும் உணவும் பொருளாதார விரிவால் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது.

a) ⅰ) மட்டும் சரி

b) ⅱ) மட்டும் சரி

c) ⅰ) மற்றும் ⅱ)சரி

d) இரண்டுமில்லை

விளக்கம்: முதலாவதாக உணவுத் தேவையுடன் வருமானத் தேவையும் நிலையானதாக உள்ளது. எனவே, ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருமானம் அதிகரிக்கும் பொழுது நுகர்வோர் வேளாண்மை உற்பத்திப் பொருட்களுக்கு தங்கள் வருமானத்தில் ஒரு சிறு பகுதியை மட்டும் செலவிடுகிறார்கள். இரண்டாவதாக, நுகரப்படும் உணவும் பொருளாதார விரிவால் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. அதனால் பல வட்டாரங்களுக்கிடையேயும் மக்களுக்கிடையேயும் வேளாண் தொழிலில் அதிக வேலைப்பகுப்பு முறை காணப்படுகிறது.

3) நுகர்வோர்கள் வாங்கும் விலையைவிட விவசாயிகள் பெறும் விலை குறைவாக இருப்பதற்கான காரணம் எது?

a) உணவுத் தேவையுடன் வருமானத் தேவையும் நிலையானதாக உள்ளது

b) நுகரப்படும் உணவும் பொருளாதார விரிவால் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது.

c) உணவுப் பொருட்கள் நீண்ட தூரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுப் பதப்படுத்தி முத்திரையிடப்படுகிறது.

d) நிலத்தின் இறுதிநிலை உற்பத்தித்திறன் குறைந்து கொண்டே வருகிறது.

விளக்கம்: உணவுப் பொருட்கள் நீண்ட தூரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுப் பதப்படுத்தி முத்திரையிடப்படுகிறது. இதன் விளைவாக நுகர்வோர்கள் வாங்கும் விலையைவிட விவசாயிகள் பெறும் விலை குறைவாக உள்ளது.

4) வேளாண்மை துறையில் உழைப்பாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க முடியாததற்கான காரணம் எது?

a) உணவுத் தேவையுடன் வருமானத் தேவையும் நிலையானதாக உள்ளது

b) நுகரப்படும் உணவும் பொருளாதார விரிவால் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது.

c) உணவுப் பொருட்கள் நீண்ட தூரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுப் பதப்படுத்தி முத்திரையிடப்படுகிறது.

d) நிலத்தின் இறுதிநிலை உற்பத்தித்திறன் குறைந்து கொண்டே வருகிறது.

விளக்கம்: மூன்றாவதாக, நிலத்தின் இறுதிநிலை உற்பத்தித்திறன் குறைந்து கொண்டே வருவதால் வேளாண் பணிகளுக்கு தொழிலாளர்களை ஈர்த்துக்கொள்வதில் ஆட்களை ஏற்பதில்சில வரையறைகள் பின்பற்ற நேரிடுகிறது. இதன் விளைவாக வேளாண்மை துறையில் உழைப்பாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க முடிவதில்லை. பெருமளவிலான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையை நம்பியிருப்பதாலும், கூலியை அதிகரிக்க வாய்ப்பில்லாததாலும் அதன் விளைவாக வறுமையின் அளவு தொடர்ந்து அதிகரிக்கிறது.

5) பொருளாதார முன்னேற்றத்தில் எதனை ஏற்படுத்துவது அவசியமான ஒன்று?

a) அமைப்பு ரீதியிலான மாற்றம்

b) தொழில் மாற்றம்

c) வேளாண் அல்லாத துறைகளின் மாற்றம்

d) நவீன தொழில் நுட்பங்கள்

விளக்கம்: அனைத்து காரணிகளின் விளைவாக வேளாண்துறையில் இருந்து விலகி, பொருளாதாரமானது உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பின் அடிப்படையில் ஒரு தேவையை ஏற்படுத்துகிறது. எனவே, பொருளாதார முன்னேற்றத்தில் அமைப்பு ரீதியிலான மாற்றத்தின் அவசியத்தை ஏற்படுத்துகிறது. இதனால் வேளாண்துறை அல்லாத துறைகளின் பங்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தொழில்மயமாதலால் பொருளாதாரக் கட்டமைப்பை மாற்றுவதன் மூலம் பொருளாதாரத்தின் வளர்ச்சியைக் காண்பதால் தொழில்மயமாதலின் முக்கியத்துவத்தைக் காணமுடிகிறது.

6) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) ஒரு பொருளாதாரத்தில் பிற உற்பத்தியாளர்களுக்குத் தேவையான உள்ளீடுகளை உருவாக்குவது அவசியம்.

ⅱ) வேளாண் உற்பத்தித்திறன் அதிகரிக்க உரங்கள் மற்றும் டிராக்டர்கள் போன்ற தொழில்களுக்கு உள்ளீடுகள் தேவைப்படுகிறது.

ⅲ) உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் பண்டங்கள் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு சந்தை நிலவுகிறது

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: ஒரு பொருளாதாரத்தில் பிற உற்பத்தியாளர்களுக்குத் தேவையான உள்ளீடுகளை உருவாக்குவது அவசியம். வேளாண் உற்பத்தித்திறன் அதிகரிக்க உரங்கள் மற்றும் டிராக்டர்கள் போன்ற தொழில்களுக்கு உள்ளீடுகள் தேவைப்படுகிறது. இரண்டாவதாக, உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் பண்டங்கள் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு சந்தை நிலவுகிறது. அதே போல் வங்கி, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் போன்ற பணிகள் தொழிற்சாலைகளின் உற்பத்தியைச் சார்ந்தே உள்ளது.

7) கீழ்க்கண்டவற்றுள் நவீன உற்பத்தி முறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்?

ⅰ) மலிவான விலையில் பண்டங்களை வாங்கிட உதவவும் மற்றும் அதிகளவு உற்பத்தித் தேவையை உருவாக்கவும் உதவுகிறது.

ⅱ) உற்பத்தி செய்யப்படும் அனைத்து பண்டங்களின் உற்பத்தி செலவும் குறைகிறது

ⅲ) நவீன உற்பத்தி முறைகளை பயன்படுத்துவதன் மூலம் தொழில்கள் சிறந்த உற்பத்தித்திறனை அளிக்கின்றன.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: நவீன உற்பத்தி முறைகளை பயன்படுத்துவதன் மூலம் தொழில்கள் சிறந்த உற்பத்தித்திறனை அளிக்கின்றன. இதனால் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பண்டங்களின் உற்பத்தி செலவும் குறைகிறது. இதன் காரணமாக மலிவான விலையில் பண்டங்களை வாங்கிட உதவவும் மற்றும் அதிகளவு உற்பத்தித் தேவையை உருவாக்கவும் உதவுகிறது.

8) “தொழில் மயமாதலின்” ஒரு முக்கிய நோக்கம் எது?

a) உற்பத்தி பெருக்கம்

b) வேலைவாய்ப்பை உருவாக்குதல்

c) சந்தை படுத்துதல்

d) நவீனமயமாக்கல்

விளக்கம்: பண்டங்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் தொழில்மயமாதல் வேளாண்மையில் ஈடுபடும் அதிக உழைப்பாளர் சக்தியை ஈர்க்க உதவுகிறது. எனவேலைவாய்ப்பை உருவாக்குவது “தொழில் மயமாதலின்” ஒரு முக்கிய நோக்கமாகும்.

9) தொழில்மயமாதலுக்கு நன்மை தருவது எது?

a) அமைப்பு ரீதியிலான மாற்றம்

b) தொழில்நுட்ப மாற்றம்

c) வேளாண் அல்லாத துறைகளின் மாற்றம்

d) வேளாண்மை

விளக்கம்: தொழில்மயமாதலுக்கு நன்மை தருவது “தொழில்நுட்ப மாற்றமே” ஆகும். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தொழில்மயமாதலின் முறைகளையும் அதன் வளர்ச்சியையும் அறிந்து கொள்ள முடிகிறது. அவற்றின் விளைவாக உழைப்பாளர்களின் உற்பத்தித்திறன் அதாவது, உழைப்பாளரின் உள்ளீடு அதிகரித்தது. இதனால் தொழிலாளர்கள் அதிக வருமானம் ஈட்ட உதவுகிறது.

10) கீழ்க்கண்டவற்றுள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் மற்றும் ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டவும் உதவுவது எது?

a) மரபுசார் வேளாண்மை

b) பண்டைய தொழில்நுட்பங்கள்

c) வேளாண் அல்லாத துறைகளின் மாற்றம்

d) தொழில் மயமாதல்

விளக்கம்: வருமானம் அதிகரிப்பதன் மூலம் பண்டங்கள் மற்றும் பணிகளின் தேவைக்கு வழி வகுக்கிறது. பொருளாதாரம் அத்தகைய தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான அளவு பண்டங்களை உற்பத்திசெய்ய முடியாவிட்டால் அது இறக்குமதியை நம்பியிருக்க வேண்டும். இதன் காரணமாக அதிகளவு அந்நிய செலாவணியைச் செலவிட வேண்டியுள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரம் ஏற்றுமதியில் போதுமான வருமானம் ஈட்டவில்லையென்றால் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வது கடினம். எனவே தொழில்மயமாதல் ஒரு நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் மற்றும் ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டவும் உதவுகிறது.

11) தொழிற்சாலைகளை கீழ்க்கண்ட எந்த முறையில் வகைப்படுத்த முடியாது?

a) அளவு

b) நிறுவன உரிமையாளர்கள்

c) பயன்படுத்தப்படும் உள்ளீடுகளின் வகை

d) தொழிலாளர்கள்

விளக்கம்: தொழிற்சாலைகளை கீழ்க்கண்ட வகைகளில் வகைப்படுத்தலாம்.

அ. பயனர்கள்

ஆ. பயன்படுத்தப்படும் உள்ளீடுகளின் வகை

இ. நிறுவன உரிமையாளர்கள்

ஈ) அளவு

12)   வெளியீடுகள் மற்றொரு உற்பத்தியாளரால் பயன்படுத்தப்பட்டால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) நுகர்வோர் பண்டங்கள் துறை

b) மூலதன பண்டங்கள் துறை

c) அடிப்படை பண்டங்கள் தொழில்கள்

d) இவை அனைத்தும்

விளக்கம்: பயனர்கள்: வெளியீடுகளை இறுதி நுகர்வோர் பயன்படுத்தினால் அது “நுகர்வோர் பண்டங்கள் துறை” என்றும் வெளியீடுகள் மற்றொரு உற்பத்தியாளரால் பயன்படுத்தப்பட்டால் அது “மூலதன பண்டங்கள் துறை” என்றும் அழைக்கப்படுகிறது. சிமெண்ட் மற்றும் எஃகு போன்ற பிற தொழில்களுக்கு மூலப்பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இத்தகைய தொழில்களை அடிப்படை பண்டங்கள் தொழில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

13)  மூலப் பொருட்களை பயன்படுத்தும் அடிப்படையிலான தொழிற்சாலை வகை எது?

a) அளவு

b) நிறுவன உரிமையாளர்கள்

c) பயன்படுத்தப்படும் உள்ளீடுகளின் வகை

d) பயனர்கள் பயன்படுத்தப்படும் உள்ளீடுகளின் வகை

விளக்கம்: பயன்படுத்தப்படும் உள்ளீடுகளின் வகை: “வேளாண் பதப்படுத்துதல்” ஜவுளித்துறை, ரப்பர் உற்பத்தி, தோல் பொருட்கள் போன்ற மூலப் பொருட்களை பயன்படுத்தும் அடிப்படையில் தொழிற்சாலைகளை வகைப்படுத்துகின்றனர்.

14) நிறுவன உரிமையாளர்கள் அடிப்படையில் தொழிற்சாலைகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?

a) பொது உரிமையாளர்

b) தனியார்

c) கூட்டுறவு

d) இவை அனைத்தும்

விளக்கம்: நிறுவன உரிமையாளர்கள்: தொழிற்சாலைகளானது தனியாருக்கு சொந்தமான, பொது உரிமையாளர் (மத்திய அல்லது மாநில அரசாங்கத்தால்) தனியார் மற்றும்பொதுத்துறை (கூட்டுறவாக) இரண்டிற்கும் சொந்தமானது அல்லது கூட்டுறவுக்கு சொந்தமானதாகவும் உள்ளன.

15) ஒரு நிறுவனம் சிறியது, நடுத்தரம் அல்லது பெரியது என்பதைத் தீர்மானிக்க இந்திய அரசு பொதுவாக பயன்படுத்தும் அளவுகோல் எது?

a) உரிமையாளர்

b) அளவு

c) முதலீடு

d) உற்பத்தி

விளக்கம்: நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி, விற்பனை, முதலீடு அல்லது வேலைவாய்ப்பு அவற்றின் அளவின் அடிப்படையில் பெரியதாகவோ, சிறியதாகவோ அல்லது நடுத்தரமாகவோ இருக்கலாம். ஒரு நிறுவனம் சிறியது, நடுத்தரம் அல்லது பெரியது என்பதைத் தீர்மானிக்க இந்திய அரசு பொதுவாக முதலீட்டை அளவுகோலாகப் பயன்படுத்துகிறது. சிறிய நிறுவனங்களை விட அளவில் சிறியதாக இருக்கும் நுண்ணிய அல்லது மிகச்சிறிய நிறுவனங்களும் உள்ளன. இந்த வகைப்பாடு முக்கியமானது, ஏனென்றால் சிறிய நிறுவனங்களுக்கு அவற்றை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பெருமளவு நிதி, உள்கட்டமைப்பு அல்லது மானிய உதவிகளை வழங்குகிறது.

16) சிறிய நிறுவனங்கள் இரண்டு காரணங்களால் முக்கியமானதாகக் கருதப்படுவதற்கான காரணம்/காரணங்கள்?

ⅰ) அதிக அளவு உற்பத்தி

ⅱ) இது பெரிய அளவிலான துறையை விட அதிக வேலைவாய்ப்பை உருவாக்குகிறது என்று நம்பப்படுகிறது

ⅲ) குறைந்த எண்ணிக்கையிலான சலுகைப் பெற்றப் பின்னணியில் இருந்து ஏராளமான தொழில் முனைவோரை வெளிப்படுத்த அனுமதிக்கிறது

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்:சிறிய நிறுவனங்கள் இரண்டு காரணங்களால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, முதலாவதாக, இது பெரிய அளவிலான துறையை விட அதிக வேலைவாய்ப்பை உருவாக்குகிறது என்று நம்பப்படுகிறது. பெரிய நிறுவனங்களானது மிகவும் மேம்படுத்தப்பட்ட மற்றும் தானியங்கி தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதால் அது போதுமான அளவு வேலைவாய்ப்பை உருவாக்குவதில்லை. இரண்டாவதாக, சிறிய அளவிலான துறை குறைந்த எண்ணிக்கையிலான சலுகைப் பெற்றப் பின்னணியில் இருந்து ஏராளமான தொழில் முனைவோரை வெளிப்படுத்த அனுமதிக்கிறது.

17) சிறிய நிறுவனங்களின் தொகுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) முத்ரா நிறுவனங்கள்

b) தொழில் முனைவோர் தொகுப்புகள்

c) தொழில்துறை தொகுப்புகள்

d) தொழில் மயமாதல்

விளக்கம்: 1980 ஆம் ஆண்டு வரை பெரிய நிறுவனங்கள் மிகவும் திறமையானவை மற்றும் சிறிய நிறுவனங்களை எதிர்த்துப் போட்டியிட முடியும் என்று பரவலாக நம்பப்பட்டது. ஆனால் தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் தொழில்மயமாதல் அனுபவங்களின் அடிப்படையில் ஒரு துறையில் நிபுணத்துவம் வாய்ந்த சிறிய நிறுவனங்கள் புவியியல் ரீதியாக குறிப்பிட்ட இடங்களில் குவிந்து உற்பத்தி மற்றும் கற்றலின் மூலம் பெரிய நிறுவனங்களின் திறன் இல்லாவிட்டாலும் அதற்கு ஈடு கொடுக்கும் அளவில் உள்ளதென நம்பப்படுகிறது. இத்தகைய சிறிய நிறுவனங்களின் தொகுப்புகளே “தொழில்துறை தொகுப்புகள்” என்று அழைக்கப்படுகின்றன.

18) வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்களின் தொகுப்பு எது?

a) முத்ரா நிறுவனங்கள்

b) சிறு நிறுவனங்களின் தொகுப்புகள்

c) தொழில்துறை தொகுப்புகள்

d) தொழில் மயமாதல்

விளக்கம்: தொழில் தொகுப்புகள் என்பது பொதுவான சந்தைகள் தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களுக்கான தேவைகளை பகிர்ந்துகொள்ள வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்களின் தொகுப்புகளாகும். தொகுப்புகளின் முக்கிய அம்சம் நிறுவனங்களுக்கிடையேயான ஒரு பரஸ்பர தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதாகும்.

19) தொழில் தொகுப்புகளின் போட்டித்தன்மைக்கு முக்கியமானவை எவை?

ⅰ) உற்பத்திச் செயல்முறைகளுக்கு உள்ளீடுகளை வழங்குதல்

ⅱ) தொகுப்புகளிடையே மற்றொரு நிறுவனத்தின் வெளியீட்டை ஈர்த்தல்

ⅲ) நிறுவனங்களுக்கிடையேயான ஒரு பரஸ்பர தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுதல்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: சிறப்பான தொழில் தொகுப்பினைப் பெற்றிருக்கும் நிறுவனங்கள் உற்பத்திச் செயல்முறைகளுக்கு உள்ளீடுகளை வழங்குதல் அல்லது தொகுப்புகளிடையே மற்றொரு நிறுவனத்தின் வெளியீட்டை ஈர்த்தல் போன்றவை தொகுப்புகளின் போட்டித்தன்மைக்கு முக்கியமானதாகும்.

20) தொழில் தொகுப்பு அல்லது மாவட்டங்களின் நன்மைகளை முதன்முதலில் கண்டறிந்தவர் யார்?

a) ஜான் மார்ஷல்

b) ஆல்பிரட் ஷோர்

c) ஜேக்கப்

d) ஆல்பிரட் மார்ஷல்

விளக்கம்: இங்கிலாந்தில் உலோகம் மற்றும் நெசவு தொழிலில் ஈடுபட்ட சிறிய நிறுவனங்களின் செயல்பாடுகளின் தொகுப்பினை புரிந்துகொள்ள 1920-களில் புகழ்பெற்ற பொருளாதார அறிஞரான ஆல்ஃபிரட் மார்ஷல் அவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்த பொழுது தொழில் தொகுப்பு அல்லது மாவட்டங்களின் நன்மைகளை முதன்முதலில் கண்டறிந்தார்.

21) தொழில்துறை மாவட்டம்” (Industrial District) என்ற கருத்து யாருடையது?

a) ஜான் மார்ஷல்

b) ஆல்பிரட் ஷோர்

c) ஜேக்கப் கிளீன்

d) ஆல்பிரட் மார்ஷல்

விளக்கம்: 1980-களில் இத்தாலியில் சிறிய நிறுவனங்கள் வெற்றி பெற்ற பின்னர்தான் மார்ஷலின் “தொழில்துறை மாவட்டம்” (Industrial District) என்ற கருத்து பிரபலமாக்கப்பட்டது. இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் கொள்கை – வகுப்பாளர்கள் தங்களுடைய நாட்டில் இது போன்ற பல சிறிய நிறுவனங்களின் தொழில் தொகுப்பினை உணர்ந்ததால் அவற்றினை ஊக்குவிக்கத் தொடங்கினர்.

22) கீழ்க்கண்டவற்றுள் வெற்றிகரமான தொழில் தொகுப்புகளின் முக்கிய பண்புகள் எவை?

ⅰ) சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புவியியல் பகுதிகளுக்கு அருகாமையில் இருத்தல்

ⅱ) துறை சார்ந்த சிறப்பு கவனம்

ⅲ) நிறுவனங்களுக்கு இடையே நெருக்கமான அல்லது பரஸ்பர முறையில் இணைந்திருத்தல்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: வெற்றிகரமான தொழில் தொகுப்புகளின் முக்கிய பண்புகள் பின்வருமாறு: • சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புவியியல் பகுதிகளுக்கு அருகாமையில் இருத்தல் (SMEs) • துறை சார்ந்த சிறப்பு கவனம். • நிறுவனங்களுக்கு இடையே நெருக்கமான அல்லது பரஸ்பர முறையில் இணைந்திருத்தல். • புத்தாக்கத்தினால் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி.

23) கீழ்க்கண்டவற்றுள் வெற்றிகரமான தொழில் தொகுப்புகளின் முக்கிய பண்பு அல்லாதது?

ⅰ) நம்பிக்கையை எளிதாக்கும் ஒரு சமூக கலாச்சார அடையாளம்

ⅱ) பல்வேறு திறமையான தொழிலாளர்கள்

ⅲ) வட்டார மற்றும் நகராட்சிகளுக்கு அரசின் ஆதரவின்மை

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ

c) ⅱ)

d) ⅲ)

விளக்கம்: • நம்பிக்கையை எளிதாக்கும் ஒரு சமூக கலாச்சார அடையாளம் • பல்வேறு திறமையான தொழிலாளர்கள் • சுய உதவி குழுக்கள் செயல்படுதல் • வட்டார மற்றும் நகராட்சிகளுக்கு அரசின் ஆதரவு.

24) மாநிலம் முழுவதும் பல்வேறு சிறிய நகரங்களில் தொழில் தொகுப்புகள் எங்கு குவிந்துள்ளன?

a) மேற்கு வட்டாரம்

b) கிழக்கு வட்டாரம்

c) தெற்கு வட்டாரம்

d) வடக்கு வட்டாரம்

விளக்கம்: பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் அவர்கள் தங்கள் திறனை விரிவுபடுத்த முடியும். போட்டியின் மூலம் அவர்கள் மிகவும் திறமையானவர்களாக மாற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். சென்னை வட்டாரத்தைத் தவிர தொழிற்துறை வளர்ச்சியானது மாநிலம் முழுவதும் பல்வேறு சிறிய நகரங்களில் தொழில் தொகுப்புகள் மேற்கு வட்டாரத்திலேயே குவிந்துள்ளன.

25) கீழ்க்கண்டவற்றுள் தொழில் தொகுப்புகளின் பல்வேறு செயல்பாடுகள் எவை?

ⅰ) ஆடை வடிவமைத்தல்

ⅱ) வீட்டு அலங்காரப் பொருட்கள் உற்பத்தி

ⅲ) கயிறு தயாரித்தல்

ⅳ) போக்குவரத்து உபகரண பணிகள்

ⅴ) பொறியியல் பணிகள்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ), ⅴ)

b) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

c) ⅱ), ⅲ), ⅳ)

d) ⅱ), ⅲ), ⅳ), ⅴ)

விளக்கம்: இந்த தொகுப்புகளின் பல்வேறு செயல்பாடுகளாக ஆடை வடிவமைத்தல், வீட்டு அலங்காரப் பொருட்கள் உற்பத்தி, ஜவுளி, தோல், கோழி வளர்த்தல், கயிறு தயாரித்தல்,போக்குவரத்து உபகரண பணிகள், பொறியியல் பணிகள், தானியங்கி உதிரி பாகங்கள் தயாரித்தல் போன்றவைகள் ஆகும்.

26) கீழ்க்கண்டவற்றுள் தொழில் தொகுப்பு தோன்றுவதற்கான காரணிகள் எவை?

ⅰ) கைவினைஞர்கள் குடியேறி நெடுங்காலமாக அங்கு தங்கி இருத்தல்

ⅱ) ஒரு பெரிய நிறுவனம் நிறுவப்படும்போது, அதன் உள்ளீடு மற்றும் பணிகளின் தேவைகளை கவனித்துக் கொள்வதற்காக ஒரு தொழில் தொகுப்பு நிறுவனங்கள் தோன்றகூடும்

ⅲ) ஒரு வட்டாரத்திலிருந்து மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கங்கள் முடிவு செய்யலாம்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: தொழில் தொகுப்பு தோன்றுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. ஒரு சில தொழிற் தொகுப்புகள் தோன்றிய இடங்களில் கைவினைஞர்கள் குடியேறி நெடுங்காலமாக அங்கு தங்கி இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது. கைத்தறி நெசவுத்தொழில் வளர்ச்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். இல்லையெனில், சில துறைகளில், ஒரு பெரிய நிறுவனம் நிறுவப்படும்போது, அதன் உள்ளீடு மற்றும் பணிகளின் தேவைகளை கவனித்துக் கொள்வதற்காக ஒரு தொழில் தொகுப்பு நிறுவனங்கள் தோன்றகூடும். சில நேரங்களில், ஒரு வட்டாரத்திலிருந்து மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கங்கள் முடிவு செய்யலாம், இது தொழில் தொகுப்பு தோன்றுவதற்கு வழிவகுக்கும்.

27) தமிழ்நாடு பல நூற்றாண்டுகளாக தென் கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்கான காரணம்?

a) பரந்துவிரிந்த கடற்கரை

b) அதிக உற்பத்தி

c) அதிக மூலதனம்

d) அதிக தேவைகள்

விளக்கம்: தமிழ்நாட்டில் காலனித்துவ முன்காலத்தில் ஜவுளி, கப்பல் கட்டுமானம், இரும்பு மற்றும் எஃகு தயாரித்தல் மற்றும் மட்பாண்டங்கள் தயாரித்தல் போன்ற தொழில்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன. தமிழ்நாடு பரந்துவிரிந்த கடற்கரையைக் கொண்டுள்ளதால், பல நூற்றாண்டுகளாக தென் கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டது.

28) காலனித்துவ காலத்தில் தொழில்மயமாதலில் பெரும்பங்கு வகித்த காரணிகள் எவை?

ⅰ) மேற்கு மற்றும் தெற்கு தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பருத்தி சாகுபடி

ⅱ) இந்த காலகட்டத்தில் வாணிபத்தின் வளர்ச்சியானது சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுக வட்டாரங்களின் அருகாமையில் தொழிற்சாலைகள் உருவாக காரணமாகவும் இருந்தது.

ⅲ) வேளாண் வளர்ச்சி

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: தொழிற்புரட்சிக்குப் பிறகு இங்கிலாந்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட இயந்திரங்களின் இறக்குமதியின் காரணமாகப் போட்டி நிலவி கைத்தறி நெசவுத்தொழில் வீழ்ச்சிக்கு காலனித்துவ கொள்கைகளும் பங்களித்தன. இருந்தபோதிலும் சில தொழில்கள் காலனித்துவக் காலத்தில் வளர்ந்தன. மேலும் மாநிலத்தில் தொழில்மயமாதலுக்கான அடிப்படையாக விளங்கியது. காலனித்துவ காலத்தில் தொழில்மயமாதலில் இரண்டு காரணிகள் பெரும்பங்கு வகித்தது. முதலாவதாக, மேற்கு மற்றும் தெற்கு தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பருத்தி சாகுபடி அதிகளவு நெசவுத்தொழில் தோன்றுவதற்குக் காரணமாகவும் இருந்தது.

29) பருத்தி நூல் சந்தையை விரிவுபடுத்தவும், நெசவு தொழில் வளரவும் காரணமாக இருந்தது எது?

a) பரந்துவிரிந்த கடற்கரை

b) அதிக பருத்தி உற்பத்தி

c) அதிக உள்ளீடு

d) இரயில்வே துறை

விளக்கம்: இந்த பருத்தி நெசவுத் தொழிலில் விதை நீக்குதல், அழுத்துதல், நெசவு மற்றும் நூற்பு போன்ற செயல்பாடுகளில் ஈடுபட வழிவகை செய்தது. மேலும் ரயில்வே துறையின் அறிமுகமானது பருத்தி நூல் சந்தையை விரிவுபடுத்தவும், இந்த தொழில் வளர ஒரு காரணமாகவும் இருந்தது. இரண்டாவதாக, இந்த காலகட்டத்தில் வாணிபத்தின் வளர்ச்சியானது சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுக வட்டாரங்களின் அருகாமையில் தொழிற்சாலைகள் உருவாக காரணமாகவும் இருந்தது.

30) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) சென்னையை சுற்றி வாகனங்கள் மற்றும் தோல் தொழிற்சாலை வளர்ச்சியைக் கண்டது

ⅱ) தென் தமிழ்நாட்டில் வெல்லம் உற்பத்தி தொழிற்சாலையின் வளர்ச்சி மற்றொரு சிறந்த உதாரணமாகும்.

ⅲ) காலனித்துவ காலத்தில் சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு பின்னர் பட்டாசு உற்பத்தி மற்றும் அச்சுத் தொழிலுக்கு முக்கிய மையமாக மாறியது.

a)ⅰ), ⅱ), ⅲ)

b)ⅰ), ⅱ)

c)ⅱ), ⅲ)

d)ⅲ),ⅰ)

விளக்கம்:சென்னையை சுற்றி வாகனங்கள் மற்றும் தோல் தொழிற்சாலை வளர்ச்சியைக் கண்டது. தென் தமிழ்நாட்டில் வெல்லம் உற்பத்தி தொழிற்சாலையின் வளர்ச்சி மற்றொரு சிறந்த உதாரணமாகும். மேலும், காலனித்துவ காலத்தில் சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு பின்னர் பட்டாசு உற்பத்தி மற்றும் அச்சுத் தொழிலுக்கு முக்கிய மையமாக மாறியது.

31) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) தோல் உற்பத்தித் தொழிலானது திண்டுக்கல், வேலூர், ஆம்பூர் ஆகிய பகுதியில் நடைபெற்றது.

ⅱ) தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் நெசவுத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியானது, இயந்திரங்களின் தேவையையும் அதற்கான தொழிற்சாலைகளையும் நிறுவ காரணமாகவும் இருந்தது.

ⅲ) இந்த நெசவு இயந்திரத் தொழிற்சாலைகளுக்கான இயந்திர உதிரிபாகங்கள், பழுது பார்த்தல் மற்றும் உற்பத்தி செய்வதற்கான சிறிய அளவிலான தொழிற்சாலைகள் அதிக அளவில் வளர்ச்சி அடைந்தன.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: துறைமுகம் சார்ந்த தொழில்களும் இதே காலகட்டத்தில் இப்பகுதியின் வளர்ச்சிக்குக் காரணமாகவும் இருந்தது. தோல் உற்பத்தித் தொழிலானது திண்டுக்கல், வேலூர், ஆம்பூர் ஆகிய பகுதியில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் நெசவுத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியானது, இயந்திரங்களின் தேவையையும் அதற்கான தொழிற்சாலைகளையும் நிறுவ காரணமாகவும் இருந்தது. இந்த நெசவு இயந்திரத் தொழிற்சாலைகளுக்கான இயந்திர உதிரிபாகங்கள், பழுது பார்த்தல் மற்றும் உற்பத்தி செய்வதற்கான சிறிய அளவிலான தொழிற்சாலைகள் அதிக அளவில் வளர்ச்சி அடைந்தன.

32) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) 1930களில் தமிழகத்தின் மேற்குப் பகுதியில் அனல் மின் சக்தியில் இருந்து மின்சாரம் உற்பத்தி மற்றொரு முக்கிய தொழில் வளர்ச்சி ஆகும்.

ⅱ) எண்ணெய் இயந்திரங்களுக்கு அனுமதிக்கப்பட்ட மின்சாரம் கிடைத்தமையால், வேளாண்மைத் தொழில் விரிவடைந்ததுடன் எண்ணெய் இயந்திரங்களின் தேவையும் அதிகரித்தது

ⅲ) எண்ணெய் இயந்திர உதிரிபாகங்கள் பழுதுபார்க்கும் தொழிற்சாலைகள் அதிகளவில் உருவாயின.

ⅳ) உலோகத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வேளாண்மை சார்ந்த இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டன.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅳ)

c) ⅱ), ⅲ), ⅳ)

d) ⅲ),ⅰ), ⅳ)

விளக்கம்: 1930களில் தமிழகத்தின் மேற்குப் பகுதியில் நீர் மின் சக்தியில் இருந்து மின்சாரம் உற்பத்தி மற்றொரு முக்கிய தொழில் வளர்ச்சி ஆகும். நிலத்தடிநீரை உறிஞ்சுவதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் இயந்திரங்களுக்கு அனுமதிக்கப்பட்ட மின்சாரம் கிடைத்தமையால், வேளாண்மைத் தொழில் விரிவடைந்ததுடன் எண்ணெய் இயந்திரங்களின் தேவையும் அதிகரித்தது. இதன் காரணமாக, இதனை சார்ந்த எண்ணெய் இயந்திர உதிரிபாகங்கள் பழுதுபார்க்கும் தொழிற்சாலைகள் அதிகளவில் உருவாயின. இதனால் உலோகத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வேளாண்மை சார்ந்த இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டன.

33) கொதிகலன் மற்றும் விசையாழிகள் தயாரிப்பதற்கான பாரத கனரக மின்சாதன நிறுவனத்தை மத்திய அரசு எங்கு நிறுவியது?

a) திருச்சி

b) கோயம்புத்தூர்

c) சென்னை

d) உதக மண்டலம்

விளக்கம்:தொழில்வளர்ச்சியானது சுதந்திரத்திற்குப் பிறகு மத்திய மற்றும் மாநில அரசுகளால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல பெரிய நிறுவனங்கள் நிறுவப்பட்டன. சென்னையில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் ரயில் பெட்டித் தொழிற்சாலையும் திருச்சிராப்பள்ளியில் கொதிகலன் மற்றும் விசையாழிகள் தயாரிப்பதற்காக பாரத கனரக மின்சாதன நிறுவனத்தை (Bharat Heavy Electricals Limited (BHEL) மத்திய அரசு நிறுவியது. BHEL நிறுவனம் அதனுடைய உள்ளீட்டுப் பொருட்கள் தேவைகள் தொடர்பாக பல சிறிய நிறுவனங்களின் தொழில் தொகுப்புகளின் தோற்றத்திற்கு வழிவகை செய்தது.

34) போர் தளவாடங்கள் தயாரிக்க கனரக வாகனத் தொழிற்சாலை எங்கு அமைக்கப்பட்டது?

a) திருச்சி

b) கோயம்புத்தூர்

c) உதக மண்டலம்

d) ஆவடி

விளக்கம்: சென்னை புறநகரில் உள்ள ஆவடியில் போர் தளவாடங்கள் தயாரிக்க கனரக வாகனத் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் நிறுவனமும் சென்னையில் மகிழுந்துகளை உற்பத்திச் செய்யத் தொடங்கியது. அசோக் மோட்டார்ஸ் (பின்னர் அசோக் லேலண்ட்) ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் இணைந்து சென்னை வட்டாரத்தில் வாகனத்தொழில்துறை தொகுப்புகள் வளர்ச்சிக்கு உதவியது. மேலும் இது வாகன உதிரி பாகங்களின் நகரமாக மாறியது.

35) 1950 களில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு உதவியாக தொழில் தோட்டங்கள் எங்கு நிறுவப்பட்டது?

a) திருச்சி

b) கோயம்புத்தூர்

c) சென்னை

d) ஆவடி

விளக்கம்: 1950 களில் இப்பகுதியில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு வாகன கூறுகளை வழங்குவதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு உதவியாக ஆவடியில் தொழில் தோட்டங்கள் நிறுவப்பட்டது. மாநிலத்தில் அதிக நீர் மின்சக்தி திட்டங்கள் மூலம் மின்மயமாதலை பரவலாக அதிகரிக்க வலியுறுத்தப்பட்டது. இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் அரசு பெரும் பங்கு வகித்தது.

36) சேலத்தில் இரும்பு எஃகு ஆலை எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

a) 1973

b) 1982

c) 1948

d) 1968

விளக்கம்: 1973 ஆம் ஆண்டில் எஃகு உற்பத்தி செய்வதற்காக சேலத்தில் இரும்பு எஃகு ஆலை அமைக்கப்பட்டது. கோயம்புத்தூர் பகுதியில், ஜவுளி, ஜவுளி இயந்திரங்கள், மின்சார மோட்டார்கள் மற்றும் நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கான பம்ப் குழாய்கள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் பன்முகத் தன்மையின் வளர்ச்சியைக் கண்டது.

37) 1970 மற்றும் 1980 களில் வீட்டு அலங்காரப் பொருட்ககளுக்கான தொழில் தொகுப்புகள் எங்கு உருவாகியது?

a) திருச்சி

b) கரூர்

c) கோயம்புத்தூர்

d) தஞ்சாவூர்

விளக்கம்: 1970 மற்றும் 1980 களில் கோயம்புத்தூர் பகுதியில் விசைத்தறி நெசவுத் தொழில் தொகுப்புகள் அதேபோல் திருப்பூரில் பின்னலாடைத் தொழில் தொகுப்புகள் விரிவாக்கம் மற்றும் கரூரில் வீட்டு அலங்காரப் பொருட்கள் தொழில் தொகுப்புகள் இக்காலகட்டத்தில் உருவாகியது.

38) தமிழகத்தில் விரிவாக்கப்பட்ட தொழில் தோட்டங்கள் எங்கு அமைந்துள்ளது?

a) திருச்சி

b) ஓசூர்

c) கோயம்புத்தூர்

d) சென்னை

விளக்கம்: மாநில அரசின் மூலம் பல்வேறு பகுதிகளில் தொழில்துறை தோட்டங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஊக்கப்படுத்தபட்டது. மாநிலத்தில் பின்தங்கிய வட்டாரங்களில் தொழில்துறைகளை மேம்படுத்துவதற்கு இத்தகைய கொள்கை முயற்சிகளை பயன்படுத்தி வெற்றி பெறச் செய்வதற்கு ஒரு உதாரணமாக தமிழகத்தில் ஓசூரில் விரிவாக்கப்பட்ட தொழில் தோட்டங்களை சான்றாகக் கூறலாம்.

39) தொழில் மயமாதலுக்கு தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மாநிலங்கள் அறிமுகப்படுத்தியவை எவை?

ⅰ) மலிவான நிலம்

ⅱ) வரிச்சலுகைகள்

ⅲ) மானியங்கள்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: 1990களின் முற்பகுதியில் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பிந்தைய காலகட்டத்தில் நடைபெற்ற தொழில் மயமாதலின் இறுதி கட்டம் ஆகும். இந்த சீர்திருத்தங்கள் மாநில அரசாங்கங்கள் வளங்களை திரட்டுவதற்கு பொறுப்பேற்கச் செய்தன. மேலும் அவை தொழில் மயமாதலுக்கு தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஒருவருக்கொருவர் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மலிவான நிலம், வரிச்சலுகைகள் மற்றும் மானியங்கள் போன்றசலுகைகள், ஆனால் தரமான சக்திகள் மூலம் முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்க ஊக்கப்படுத்தின.

40) கீழ்க்கண்டவற்றுள் ஏற்றுமதி சந்தைகளைத் திறக்க உதவியவை எவை?

ⅰ) போக்குவரத்து

ⅱ) வர்த்தக தாராளமயமாக்கல்

ⅲ) நாணய மதிப்பிறக்கம்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: வர்த்தக தாராளமயமாக்கல் மற்றும் நாணய மதிப்பிறக்கம் ஆகியவை ஏற்றுமதி சந்தைகளைத் திறக்க உதவியது. இது இரண்டு பெரிய முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது.

41) வர்த்தக தாராளமயமாக்கல் நடவடிக்கைகளின் விளைவுகள் எவை?

ⅰ) ஜவுளி, வீட்டு அலங்கார பொருட்கள் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி விரைவாக வளரத் தொடங்கியது.

ⅱ) முதலீடுகளை ஈர்ப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் குறிப்பாக வாகனத்துறையில் நுழைவதற்கு வழிவகுத்தன.

a) ⅰ), ⅱ)

b) ⅰ) மட்டும்

c) ⅱ) மட்டும்

d) இரண்டுமில்லை

விளக்கம்: முதலாவதாக, வர்த்தக தாராளமயமாக்கலின் நடவடிக்கைகள் காரணமாக ஜவுளி, வீட்டு அலங்கார பொருட்கள் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி விரைவாக வளரத் தொடங்கியது. இரண்டாவதாக, முதலீடுகளை ஈர்ப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் (Multi National Companies – MNCs) தமிழகத்தில் குறிப்பாக வாகனத்துறையில் நுழைவதற்கு வழிவகுத்தன.

42) MEPZ தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

a) அம்பத்தூர்

b) தாம்பரம்

c) கோயம்புத்தூர்

d) அடையார்

விளக்கம்: இது அந்நிய நேரடி முதலீட்டினை ஊக்குவிப்பதற்கும் அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கும், வட்டாரப் பகுதிகளில் அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் 1984ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. MEPZ தலைமையகம் சென்னையை அடுத்த தாம்பரம் GST சாலையில் அமைந்து ள்ளது.

43) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) ஒரு குறிப்பிடத்தக்க பங்கு முதலீட்டினால் சென்னை எல்லையில் உள்ள மாவட்டங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zones-SEZs) உருவாக்கப்பட்டன.

ⅱ) உற்பத்தி முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் (SEZs) வழிகளைப் பயன்படுத்தி வெற்றியடைந்ததில் ஒரு முன் மாதிரியாக விளங்கிய தமிழ்நாடு பெரிதும் பாராட்டத்தக்கது.

ⅲ) தமிழகத்தில் மிக நீண்ட காலமாக உருவாகிய முக்கிய தொழில்களான சர்க்கரை, உரங்கள், சிமெண்ட், விவசாயக் கருவிகள், இரும்பு மற்றும் எஃகு ரசாயனங்கள், மின்மாற்றிகள் மற்றும் காகிதங்கள் போன்றவைகளாகும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: ஒரு குறிப்பிடத்தக்க பங்கு முதலீட்டினால் சென்னை எல்லையில் உள்ள மாவட்டங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zones-SEZs) உருவாக்கப்பட்டன. உற்பத்தி முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் (SEZs) வழிகளைப் பயன்படுத்திவெற்றியடைந்ததில் ஒரு முன் மாதிரியாக விளங்கிய தமிழ்நாடு பெரிதும் பாராட்டத்தக்கது. தமிழகத்தில் மிக நீண்ட காலமாக உருவாகிய முக்கிய தொழில்களான சர்க்கரை, உரங்கள், சிமெண்ட், விவசாயக் கருவிகள், இரும்பு மற்றும் எஃகு ரசாயனங்கள், மின்மாற்றிகள் மற்றும் காகிதங்கள் போன்றவைகளாகும்.

44) கீழ்க்கண்டவற்றுள் தமிழ்நாட்டின் முக்கிய தொழில்கள் எவை?

ⅰ) உணவுப் பொருட்கள்

ⅱ) பருத்தி

ⅲ) இலகுரக மற்றும் கனரக பொறியியல்

ⅳ) போக்குவரத்து உபகரணங்கள்

ⅴ) இரசாயனங்கள் மற்றும் தோல் பொருட்கள்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ), ⅴ)

b) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

c) ⅱ), ⅲ), ⅳ)

d) ⅱ), ⅲ), ⅳ), ⅴ)

விளக்கம்: இந்தக் காரணிகளின் விளைவாக தற்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும்விட தமிழ்நாடு அதிக தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. மேலும் உற்பத்தித் துறையில் வேலைப்பணி இடங்களிலும் அதிகப் பங்கினை பெற்றுள்ளது. முக்கியமாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற முன்னேறிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இது அதிக உழைப்பு மிகுந்ததாகும். வாகன தொழில்கள், தானியங்கி கூறுகள், இலகுரக மற்றும் கனரக பொறியியல், இயந்திரங்கள், பருத்தி, ஜவுளி, ரப்பர், உணவுப் பொருட்கள், போக்குவரத்து உபகரணங்கள், இரசாயனங்கள் மற்றும் தோல் பொருட்கள் போன்றவைகள் முக்கியத் தொழில்களாகும்.

45) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் (13 மாவட்டங்களில் 27 தொழில் தொகுப்புகள்) தொழில்துறைகள் பரவியிருக்கின்றன

ⅱ) அவற்றுள் பல தொழில்கள் ஏற்றுமதி சார்ந்தவையாகும்

ⅲ) மாநிலத்தின் சாலைகள், ரயில் போக்குவரத்து, வான்வழிப் போக்குவரத்து மற்றும் முக்கிய துறைமுகங்கள் அனைத்தும் போக்குவரத்து இணைப்பினால் நன்கு வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் (13 மாவட்டங்களில் 27 தொழில் தொகுப்புகள்) தொழில்துறைகள் பரவியிருக்கின்றன. மேலும் அவற்றுள் பல தொழில்கள் ஏற்றுமதி சார்ந்தவையாகும். மாநிலத்தின் சாலைகள், ரயில் போக்குவரத்து, வான்வழிப் போக்குவரத்து மற்றும் முக்கிய துறைமுகங்கள் அனைத்தும் போக்குவரத்து இணைப்பினால் நன்கு வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது.

46) தொழிற்சாலைகளின் அதிகப்படியான பரவலை பெற்றுள்ள மாநிலம்?

a) கேரளா

b) பீகார்

c) ஒடிசா

d) தமிழ்நாடு

விளக்கம்: தொழில்மயமாதல் பரவலினால் தொழில் முனைவோர்களின் சமூக நலத்தினை விரிவுபடுத்தியது. தமிழ்நாட்டில் பெரும்பாலும் வணிக சமூகங்கள் வட இந்திய தொழில் முனைவோர் மற்றும் வணிகக் குழுக்களைப் போல் அல்லாமல் ஒரு பின்தங்கிய சமூக பின்னணியில் இருப்பதனால் ஒரு வியாபாரத்தினைத் தொடங்குவதற்கு மூலதனத்தின் ஒப்பீட்டளவில் ஒரு சிறிய அளவிலேயே முதலீடு செய்யமுடிகிறது. ஆனால் தமிழ்நாடு தொழிற்சாலைகளின் அதிகப்படியான பரவலை பெற்றுள்ளது.

47) தமிழ்நாட்டில் சிறந்த கிராம மற்றும் நகர்ப்புற இணைப்புகளுக்கு வழிவகுத்தது எது?

ⅰ) தொழில்மயமாதல்

ⅱ) நகரமயமாதல்

ⅲ) வியாபார சந்தைகள்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: தமிழகத்தில் பெரிய, சிறிய மற்றும் வீட்டு தொழில்கள் போன்றவைகளின் கலவையாக தொழில்கள் உள்ளது. இந்த பரவலான தொழில்மயமாதல் மற்றும் நகரமயமாதலின் செயல் முறைகளால் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் சிறந்த கிராம மற்றும் நகர்ப்புற இணைப்புகளுக்கு வழிவகுத்தது.

48) நாட்டின் மொத்தம் எத்தனை ஏற்றுமதி செயலாக்க மண்டலங்கள் உள்ளன?

a) ஏழு

b) எட்டு

c) ஆறு

d) ஒன்பது

விளக்கம்: மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் (Madras Export Processing Zone) மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்கமையம் சென்னையில் ஒரு சிறப்புப் பொருளாதார மையமாகும். மத்திய அரசு அமைத்த நாட்டின் ஏழு ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களில் இதுவும் ஒன்றாகும்.

49) கீழ்க்கண்டவற்றுள் உள்நாட்டு நிறுவனம் அல்லாதது எது?

a) TI சைக்கிளஸ்

b) அசோக் லேலண்ட்

c) ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ்

d) ஹுன்டாய்

விளக்கம்: சில உள்நாட்டு நிறுவனங்களான TVS, TI சைக்கிளஸ், அசோக் லேலண்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் ஆகியன இதற்கு முன்னர் இருந்தன. பொருளாதார சீர்த்திருத்தத்திற்கு பின்னர் ஹுன்டாய், ஃபோர்டு, டைம்லர்பென்ஸ் மற்றும் ரெனால்ட் – நிசான் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் (Multi National Companies) (MNC) இப்பகுதியில் தொழிற்சாலைகளைத் திறந்துள்ளன.

50) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) ஒசூர் ஒரு தானியங்கி தொகுப்பாகும்.

ⅱ) இங்கு TVS மற்றும் அசோக்லேலண்ட் போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இயக்கி வருகின்றன.

ⅲ) கோயம்புத்தூர் பகுதி ஒரு தானியங்கிகளின் தொகுப்பாக வளர்ந்து வருகிறது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: எனவே வெளிநாடுகளிலிருந்து பல உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளரின் கவனங்கள் இங்கே ஈர்க்கப்பட்டுள்ளது. பல உள்நாட்டு நிறுவனங்களும் சேர்ந்து அனைத்து நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களின் உற்பத்தித் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. ஒசூர் மற்றொரு தானியங்கி தொகுப்பாகும். இங்கு TVS மற்றும் அசோக்லேலண்ட் போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இயக்கி வருகின்றன. கோயம்புத்தூர் பகுதி ஒரு தானியங்கிகளின் தொகுப்பாக வளர்ந்து வருகிறது.

51) கீழ்க்கண்டவற்றுள் சுமை தூக்கும் வாகன முழுபாக க ட்டமைப்பிற்கான தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்ற இடங்கள் எவை?

ⅰ) திருச்சி

ⅱ) நாமக்கல்

ⅲ) திருச்செங்கோடு

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: தமிழகத் தி ன் மேற்கு பகுதியில் உள்ள நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதிகள் சுமை தூக்கும் வாகன முழுபாக கட்டமைப்பிற்கான தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்ற இடங்களாகும். சுமை தூக்கும் வாகனக் கட்டுமானத் துறையில் 150 தொழில்களில் 250 அலகுகளில் இந்த தொகுப்பில் 12 பெரிய அளவிலான சுமை தூக்கும் வாகனக் கட்டுமான துறைகள் உள்ளன.

52) சுமை தூக்கும் வாகன முழுபாக கட்டமைப்பிற்கான 50க்கும் மேற்பட்ட அலகுகள் எங்கு காணப்படுகின்றன?

a) தஞ்சாவூர்

b) தூத்துக்குடி

c) கரூர்

d) ஆவடி

விளக்கம்: 50க்கும் மேற்பட்ட அலகுகளைக் கொண்டு கரூர் மற்றொரு முக்கிய மையமாகத் திகழ்கிறது. பல தொழில் முனைவோர்கள் பெரிய அளவிலான வாகனக் கட்டுமானத் துறையில் பணி புரிந்து தற்போது தங்கள் சொந்த அலகுகளை அமைக்க முன்வந்துள்ளனர்.

53) இந்தியாவில் மிகப்பெரிய நெசவுத் தொழில் துறைகளுக்கு தாயகமாக விளங்குவது எது?

a) தமிழ்நாடு

b) கர்நாடக

c) குஜராத்

d) ஆந்திரா

விளக்கம்: இந்தியாவில் மிகப்பெரிய நெசவுத் தொழில் துறைகளுக்கு தமிழ்நாடு தாயகமாக விளங்குகிறது. காலனித்துவ காலத்திலிருந்து பருத்தி நெசவுத் தொழில் தொழில் வளர்ச்சியின் காரணமாக கோயம்புத்தூர் “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என அழைக்கப்படுகிறது. தற்போது நெசவு ஆலைகளில் பெரும்பாலானவை கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள சிறு நகரங்கள் கிராமங்களுக்கு நகர்ந்துள்ளன. அவைகள் கோயம்புத்தூரைச் சுற்றி 100 முதல் 150 கி.மீ சுற்று வட்டார பகுதிகளாகும். எனவே நமது நாட்டின் மிகப் பெரிய பருத்தி நெசவு தொழில் உற்பத்தியில் தமிழகம் பெரும்பங்கு வகிக்கிறது.

54) அதிகளவிலான மின்தறி அலகுகள் காணப்படும் இடங்கள் எவை?

ⅰ) தஞ்சாவூர்

ⅱ) புதுக்கோட்டை

ⅲ) சேலம்

ⅳ) ஈரோடு

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅳ)

c) ⅱ), ⅲ), ⅳ)

d) ⅲ), ⅳ)

விளக்கம்: கோயம்புத்தூரைச் சுற்றி அருகிலுள்ள பல்லடம் மற்றும் சோமனூர் சுற்றி சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் நன்கு செயல்படும் விசைத்தறி நெசவுத் தொழில் தொகுப்புகள் தங்களது வீடுகளிலேயே சொந்தமாக உற்பத்தி செய்கின்றன. ஈரோடு மற்றும் சேலம் பகுதியிலும் அதிகளவிலான மின்தறி அலகுகள் இருப்பதால் மின்விசைத்தறித் தொழில் மிகவும் பரவலாக உள்ளது.

55) நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% பங்கினைக் கொண்டுள்ள மாவட்டம்?

a) சேலம்

b) ஈரோடு

c) திருப்பூர்

d) கோயம்புத்தூர்

விளக்கம்: திருப்பூரானது பின்னலாடை தயாரிக்கும் ஏராளமான நிறுவனங்களின் தொகுப்புகளுக்கு புகழ்பெற்ற இடமாகும். இது நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% பங்கினைக் கொண்டுள்ளது.

56) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) திருப்பூரானது 1980 களின் பிற்பகுதியிலிருந்து மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது

ⅱ) இது உள்நாட்டுச் சந்தையில் ஒரு மிகப்பெரிய உற்பத்தியாளராகத் திகழ்கிறது

ⅲ) இந்த மிகப்பெரிய வெற்றியின் காரணமாக உலகச் சந்தையில் உலகின் தெற்கு அரைக் கோளத்தில் ஒரு சக்தி வாய்ந்த தொகுப்பாக இந்த இடம் உள்ளது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: திருப்பூரானது 1980 களின் பிற்பகுதியிலிருந்து மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இது உள்நாட்டுச் சந்தையில் ஒரு மிகப்பெரிய உற்பத்தியாளராகத் திகழ்கிறது. இந்த மிகப்பெரிய வெற்றியின் காரணமாக உலகச் சந்தையில் உலகின் தெற்கு அரைக் கோளத்தில் ஒரு சக்தி வாய்ந்த தொகுப்பாக இந்த இடம் உள்ளது. ஆரம்பத்தில் உள்ளூர் தொழில்முனைவோரால் பெரும்பாலான நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் இங்கு தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளனர்.

57) தெற்கு அரைக்கோளத்தில் உள்ள நாடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

a) தெற்கு நாடுகள்

b) தென்னரைக்கோள நாடுகள்

c) உலகளாவிய தெற்கு நாடுகள்

d) தெற்காசிய நாடுகள்

விளக்கம்: உலகளாவிய தெற்கு நாடுகள் (Global South) தெற்கு அரைக்கோளத்தில் உள்ள நாடுகள் உலகளாவிய தெற்கு நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

58) பின்வறுவனவற்றுள் எந்தெந்த பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக கரூர் உள்ளது?

ⅰ) மேசைத்துணி

ⅱ) திரைச்சீலைகள்

ⅲ) படுக்கை விரிப்புகள்

ⅳ) துண்டுகள்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅳ)

c) ⅱ), ⅲ), ⅳ)

d) ⅲ),ⅰ), ⅳ)

விளக்கம்: வாகனக் கட்டுமானத் தொழிலமைப்பைத் தவிர மேசைத்துணி, திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள் போன்ற வீட்டு அலங்கார பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக கரூர் உள்ளது.

59) உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு தரை விரிப்புகளை உற்பத்திச் செய்யும் முக்கிய மையங்கள் எவை?

ⅰ) தளவானூர்

ⅱ) பவானி

ⅲ) குமாரபாளையம்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: பவானி மற்றும் குமாரபாளையம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு தரை விரிப்புகளை உற்பத்திச் செய்யும் முக்கிய மையங்களாகத் திகழ்கின்றன.

60) பட்டு மற்றும் கைத்தறிப் புடவைகளுக்கு பிரபலமான இடங்கள் எவை?

ⅰ) திருப்பூர்

ⅱ) மதுரை

ⅲ) காஞ்சிபுரம்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: இத்தகைய நவீன தொகுப்புகளைத் தவிர பட்டு மற்றும் கைத்தறிப் புடவைகளுக்கு பிரபலமான மதுரை மற்றும் காஞ்சிபுரம் போன்ற பாரம்பரிய கைவினைத் தொகுப்புகளும் உள்ளன. இந்த விசைத்தறி தொகுப்புகளில் பல அலகுகள் பயன்படுத்தியதன் மூலம் புதுமைமயமாதலின் அளவை அடைந்தன.

61) தோல் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதன்மை மாவட்டமாக திகழ்வது?

a) வேலூர்

b) கிருஷ்ணகிரி

c) திருவண்ணாமலை

d) சென்னை

விளக்கம்: இந்தி யாவி ன் 60% தோல் பதனிடும் உற்பத்தித்திறனையும் 38% தோல் காலணிகள் மற்றும் தோல் உதிரி பாகங்கள் அதனைச் சார்ந்த பொருட்களின் உற்பத்தியையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. வேலூர் அதனைச் சுற்றியுள்ள ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய நகரங்களில் நூற்றுக்கணக்கான தோல் உற்பத்தி மற்றும் பதனிடும் வசதியைக் கொண்டுள்ளது. தோல் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதன்மை மாவட்டமாக வேலூர் திகழ்கிறது.

62) தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிற்சாலைகளின் தொகுப்பு எங்கு காணப்படுகிறது?

a) ஈரோடு

b) கிருஷ்ணகிரி

c) திண்டுக்கல்

d) a) மற்றும் c)

விளக்கம்: சென்னையிலும் பல தோல் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலை நிறுவனங்கள் உள்ளன. திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிற்சாலைகளின் தொகுப்பு காணப்படுகிறது. தோல் உற்பத்தித் தொழிற்சாலையும் வேலைவாய்ப்பை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

63) பட்டாசு மற்றும் அச்சிடும் தொழிலில் நாட்டின் சிறந்த நகரமாகத் திகழ்வது எது?

a) மதுரை

b) காட்பாடி

c) ஆரணி

d) சிவகாசி

விளக்கம்: தீப்பெட்டி உற்பத்தித் தொழிற்சாலையில் புகழ்பெற்று விளங்கும் சிவகாசி பகுதியானது தற்பொழுது பட்டாசு மற்றும் அச்சிடும் தொழிலில் நாட்டின் சிறந்த நகரமாகத் திகழ்கிறது. இந்தியா 90% பட்டாசு உற்பத்தி 80% பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்தி மற்றும் 60% அச்சுப்பணி தேர்வுகளுக்கு முக்கிய பங்காக இதனையே சார்ந்துள்ளது. அச்சிடும் தொழிற்சாலை ஒவ்வொன்றும் அவற்றின் பணிகளில் தனித்துவம் பெற்று மேலோங்கி விளங்குகிறது. காலனித்துவ காலத்தில் தொடங்கப்பட்ட இத்தொழிலானது தற்பொழுது அதிகளவில் வேலை வாய்ப்பை அளிக்கிறது.

64) நாட்டின் மின்னணு சாதன உற்பத்தியின் மையமாக திகழ்வது எது?

a) சென்னை

b) மதுரை

c) சேலம்

d) கோயம்புத்தூர்

விளக்கம்: 1990-களில் ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்தத்திற்குப் பின் வந்த நோக்கியா, ஃபாக்ஸ்கான், மோட்டோரோலா, சோனி எரிக்ஸன், சாம்சங் மற்றும் டெல் போன்ற வன் பொருள் மற்றும் மின்னணு பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் கைபேசி கருவிகள், சுழல் பலகைகள், நுகர்வோர் மின் சாதனப் பொருள் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்தன. இந்நிறுவனங்கள் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறுவனங்களை நிறுவின. நோக்கியா நிறுவனம் மூடப்பட்ட போதிலும் சென்னை தொடர்ந்து நாட்டின் மின்னணு சாதன உற்பத்தியின் மையமாகவே உள்ளது.

65) மென்பொருள் உற்பத்தி சேவையில் சிறந்த மையங்களாக விளங்குபவை எவை?

ⅰ) திருநெல்வேலி

ⅱ) சென்னை

ⅲ)கோயம்புத்தூர்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: அதே போல் மென்பொருள் உற்பத்தித்துறை விரிவாக்கம் சென்னையிலும் குறிப்பிட்ட அளவு கோயம்புத்தூரிலும் மென்பொருள் உற்பத்தி சேவையில் சிறந்த மையங்களாக விளங்குகிறது.

66) தகவல் தொழிற்நுட்ப முதலீட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டடுக்கு நகரங்கள்?

ⅰ) கோயம்புத்தூர்

ⅱ) மதுரை

ⅲ) திருச்சிராப்பள்ளி

ⅳ) திருநெல்வேலி

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅳ)

c) ⅱ), ⅲ), ⅳ)

d) ⅲ),ⅰ), ⅳ)

விளக்கம்: வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, ஓசூர் மற்றும் சேலம் தகவல் தொழிற்நுட்ப முதலீட்டிற்கான இடங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

67) ELCOT நிறுவனம் எத்தனை இடங்களில் ELCOSEZs (IT குறிப்பிட்டபொருளாதார சிறப்பு மண்டலங்கள்) நிறுவியுள்ளது?

a) எட்டு

b) பதின்மூன்று

c) ஐந்து

d) இருபது

விளக்கம்: ELCOT நிறுவனம் பின்வரும், எட்டு இடங்களில் ELCOSEZs (IT குறிப்பிட்டபொருளாதார சிறப்பு மண்டலங்கள்) நிறுவியுள்ளது. • சென்னை – சோழிங்கநல்லூர் • கோயம்புத்தூர் – விளாங்குறிச்சி • மதுரை – இலந்தை குளம் • மதுரை – வடபாலஞ்சி, கிண்ணிமங்கலம் • திருச்சிராப்பள்ளி – நாவல்பட்டு

68) புதிய இடங்களில் ELCOSEZs அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தேவை மற்றும் நம்பகத் தன்மையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது?

a) தேவை

b) நம்பகத்தன்மை

c) உற்பத்தித்திறன்

d) a) மற்றும் b)

விளக்கம்: மாநிலத்தின் அலகுகளை அமைக்க விரும்பும் நிறுவனங்கள் ELCOSEZs மூலம் வசதிகள் வழங்கப்படுகிறது. புதிய இடங்களில் ELCOSEZs அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தேவை மற்றும் நம்பகத் தன்மையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. (வரைபட தகவல் தொழில்நுட்பக் கொள்கை – 2018-19)

69) கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைத் தேர்ந்தெடு.

a) திருநெல்வேலி – கங்கைகொண்டான்

b) சேலம் – ஜாகீர் அம்மாபாளையம்

c) ஓசூர் – விஸ்வநாதபுரம்

d) திருச்சிராப்பள்ளிவிளாங்குறிச்சி

விளக்கம்:

• திருநெல்வேலி – கங்கைகொண்டான்

• சேலம் – ஜாகீர் அம்மாபாளையம்

• ஓசூர் – விஸ்வநாதபுரம்

• திருச்சிராப்பள்ளி – நாவல்பட்டு

70) பின்வருவனவற்றுள் தமிழ்நாட்டில் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு உதவும் கொள்கைக் காரணிகள் எவை?

ⅰ) கல்வி

ⅱ) உள்கட்டமைப்பு

ⅲ) தொழில்துறை ஊக்குவிப்பு

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: தமிழ்நாட்டில் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு உதவும் கொள்கைக் காரணிகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

கல்வி, உள்கட்டமைப்பு, தொழில்துறை ஊக்குவிப்பு ஆகியன.

71) இந்தியாவில் அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி மையம் போன்றவைகளின் புகலிடமாக உள்ள மாநிலம் எது?

a) தமிழ்நாடு

b) குஜராத்

c) கேரளா

d) மகாராஷ்ட்ரா

விளக்கம்: திறமை வாய்ந்த மனித வளங்கள் தொழிற்சாலைக்குத் தேவைப்படுகிறது. நமது மாநிலமானது தொடக்கக் கல்விக்காக அதிகமான கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், படித்தவர்களின், எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அடிப்படை எண் கணித திறன்களை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இது நாட்டில் மிக அதிகப்படியான தொழில்நுட்ப வல்லுநர்களைத் தருவதிலும் பெயர் பெற்ற இடமாகும். இந்தியாவில் அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி மையம் போன்றவைகளின் புகலிடமாக தமிழகம் உள்ளது.

72) பின்வருவனவற்றுள் சரியான கூற்றினை தேர்ந்தெடு.

ⅰ) மாநிலங்களில் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் தொழில்மயமாதல் பரவுதலுக்கு மின்சார விநியோகம் சிறப்பான பங்கினை வகிக்கிறது.

ⅱ) மின்சார விநியோகம் மட்டுமல்லாது, தமிழ்நாடானது மிகச் சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்புக்குப் பெயர் போனது ஆகும்.

ⅲ) குறிப்பாக கிராமப்புற சிறு சாலை வசதிகளால் அருகிலுள்ள சிறு நகரங்களுடனும், பெரு நகரங்களுடனும் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: மாநிலங்களில் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் தொழில்மயமாதல் பரவுதலுக்கு மின்சார விநியோகம் சிறப்பான பங்கினை வகிக்கிறது. மின்சார விநியோகம் மட்டுமல்லாது, தமிழ்நாடானது மிகச் சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்புக்குப் பெயர் போனது ஆகும். குறிப்பாக கிராமப்புற சிறு சாலை வசதிகளால் அருகிலுள்ள சிறு நகரங்களுடனும், பெரு நகரங்களுடனும் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளது.

73) சிறு உற்பத்தியாளர்களை சிறந்த சந்தைகளோடு இணைத்து அவர்களுக்கு நற்பலனைக் கொடுப்பது எது?

a) மின்சாரம்

b) போக்குவரத்து

c) இணையம்

d) தகவல் தொழில்நுட்பம்

விளக்கம்:பொது மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைகள் ஒருங்கிணைந்து கிராமப்புற மற்றும் நகர்புறங்களின் இணைப்பை எளிதாக்கியுள்ளது, சிறு உற்பத்தியாளர்களை சிறந்த சந்தைகளோடு இணைத்து அவர்களுக்கு நற்பலனைக் கொடுக்கிறது.

74) பின்வருவனவற்றுள் சரியான கூற்றினை தேர்ந்தெடு.

ⅰ) சிறந்த தொழிற் பிரிவுக்கான தொழிற்சாலை விரிவாக்கங்களை சிறந்தபகுதிகளில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ⅱ) தானியங்கி, தானியங்கிக் கருவிகள், உயிரி தொழில்நுட்பம் மற்றும் செய்தி மற்றும் செய்தித் தொடர்புக்கான பிரிவுகள் சிறந்த முறையில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது

ⅲ)நாடு முழுவதும் பல இடங்களில் தொழில்துறை மேம்பாட்டு முகமைகளை அரசு நிறுவியுள்ளது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: கல்வி, போக்குவரத்து மற்றும் ஆற்றல் வாய்ந்த உள்கட்டமைப்புகளுக்கு முதலீடு செய்வது மட்டுமல்லாமல், சிறந்த தொழிற் பிரிவுக்கான தொழிற்சாலை விரிவாக்கங்களை சிறந்தபகுதிகளில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பொருளாதார சீர்திருத்தத்திற்கு பின் குறிப்பிட்ட காரணிகளான தானியங்கி, தானியங்கிக் கருவிகள், உயிரி தொழில்நுட்பம் மற்றும் செய்தி மற்றும் செய்தித் தொடர்புக்கான பிரிவுகள் சிறந்த முறையில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. எனவே பெரிய, சிறிய மற்றும் நடுத்தர பிரிவில் மேம்படுத்த உதவும் ஆதரவான உள்கட்டமைப்புகளை நாடு முழுவதும் பல இடங்களில் தொழில்துறை மேம்பாட்டு முகமைகளை அரசு நிறுவியுள்ளது.

75) தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

a) 1973

b) 1972

c) 1971

d) 1978

விளக்கம்: தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT – State Industries Promotion Corporation of Tamil Nadu), 1971. தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (Sipcot) என்பது 1971ல் தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு. தொழிற் தோட்டங்களை அமைத்தது.

76) சிறு தொழிற்பிரிவின் புதிய நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் தொழிற் நுட்ப உதவிகளை வழங்கும் நிறுவனம் எது?

a) தமிழ்நாடு சிறுதொழில் கழகம்

b) தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்

c) தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம்

d) தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்

விளக்கம்: தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO – Tamil Nadu Small Industries Development Corporation) 1970தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO) என்பது 1970ல் தமிழக அரசால் நம் மாநிலத்தில் சிறுதொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும். சிறு தொழிற்பிரிவின் புதிய நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் தொழிற் நுட்ப உதவிகளையும் இந்த நிறுவனம் வழங்குகிறது.

77) தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

a) 1965

b) 1995

c) 1985

d) 1975

விளக்கம்: தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO – Tamil Nadu Industrial Development Corporation) 1965 நம் மாநிலத்தில் தொழில் தோட்டங்களை நிறுவுவதற்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் மற்றுமொரு அரசு நிறுவனமாகும்.

78) தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.

ⅰ)புதிய தொழில் பிரிவுகளை நிறுவுவதற்கும் தற்போதுள்ள தொழில் பிரிவுகளை பெருக்குவதற்கும் இது குறைந்த அளவிலான நிதி உதவியைச் செய்கிறது.

ⅱ) அனைத்து வகையான தொழில் நிறுவனங்களுக்கும் உதவும் என்றாலும் குறிப்பாக 90% மிகச்சிறு, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது உதவுகிறது.

a) ⅰ), ⅱ)

b) ⅰ)மட்டும்

c) ⅱ)மட்டும்

d) இரண்டுமில்லை

விளக்கம்: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் – வரையறுக்கப்பட்டது (TIIC – Tamil Nadu Industrial Investment Corporation Ltd) 1949 புதிய தொழில் பிரிவுகளை நிறுவுவதற்கும் தற்போதுள்ள தொழில் பிரிவுகளை பெருக்குவதற்கும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமானது குறைந்த அளவிலான நிதி உதவியைச் செய்கிறது. அனைத்து வகையான தொழில் நிறுவனங்களுக்கும் உதவும் என்றாலும் குறிப்பாக 90% மிகச்சிறு, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது உதவுகிறது.

79) சிறு நிறுவனங்களுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில்துறை நிறுவனம் எது?

a) தமிழ்நாடு சிறுதொழில் கழகம்

b) தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்

c) தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம்

d) தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்

விளக்கம்: தமிழ்நாடு சிறுதொழில் கழகம் – வரையறுக்கப்பட்டது (TANSI – Tamil Nadu Small Industries Corporation Ltd) 1965 தொழில் மற்றும் வணிக நிறுவனங்களால் அமைப்புத் துறையில் நிறுவப்பட்டு, செயல்படுத்தப்பட்டு, வரும் சிறுதொழில் அமைப்புகளை 1965இல் தமிழ்நாடு சிறுதொழில் கழகமானது (TANSI) தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது. சிறு நிறுவனங்களுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில்துறை நிறுவனமாகும்.

80) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) தொழில்நுட்ப மாற்றங்களால், தொழிற்சாலைகளில் பணியாளர்களை பணிக்கு நியமிப்பது என்பது முடியாதது ஆகிறது.

ⅱ) தானியங்கிகளின் பயன்பாட்டால், உற்பத்தியில் தொழிலாளர்களின் தேவையானது குறைந்துவிட்டது.

ⅲ) கடந்த மூன்று சகாப்தங்களாக மிக அதிகமான பணியாளர்கள், பணிகள் துறையினால் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: தொழில்நுட்ப மாற்றங்களால், தொழிற்சாலைகளில் பணியாளர்களை பணிக்கு நியமிப்பது என்பது முடியாதது ஆகிறது. தானியங்கிகளின் பயன்பாட்டால், உற்பத்தியில் தொழிலாளர்களின் தேவையானது குறைந்துவிட்டது. கடந்த மூன்று சகாப்தங்களாக மிக அதிகமான பணியாளர்கள், பணிகள் துறையினால் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

81) மென்பொருள் சேவைகள் மிக அதிகமாக குவிந்துள்ள இடம் எது?

a) சென்னை

b) கோயம்புத்தூர்

c) திருச்சி

d) ஓசூர்

விளக்கம்: சில முக்கியமான மற்றும் சக்தி வாய்ந்த தொழில் பிரிவுகளான மென்பொருள் பணிகள், சுகாதாரம் மற்றும் கல்வி துறைக்கான சக்தி வாய்ந்த இடமாக தமிழகம் திகழ்கிறது. சுகாதாரம் மற்றும் கல்வித் துறையானது சென்னை மற்றும் கோயம்புத்தூரிலும் பரவலாக செயல்படுகிறது. மென்பொருள் சேவைகள் மிக அதிகமாக சென்னையிலேயே குவிந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, சில மென்பொருள் நிறுவனங்கள் கோயம்புத்தூருக்கு மாறியுள்ளன.

82) நமது நாட்டின் சிறந்த தொழில்மயமான மாநிலமாக இருந்த போதிலும் தமிழகம் சந்திக்கும் குறைகள் எவை?

ⅰ) வேதிப்பொருட்கள், ஜவுளித் துறை மற்றும் தோல் தொகுப்புகள் மூலம் வரும் திரவக் கழிவுகள் நமது சுகாதாரத்தைகெடுக்கிறது.

ⅱ) முதன்மையான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதால் நிலையான வேலை வாய்ப்புக்கான குறை ஏற்படுகிறது.

a) ⅰ), ⅱ)

b) ⅰ) மட்டும்

c) ⅱ) மட்டும்

d) இரண்டுமில்லை

விளக்கம்: தமிழகம், நமது நாட்டின் சிறந்த தொழில்மயமான மாநிலமாக இருந்த போதிலும் சில குறைகளை சந்திக்க வேண்டியுள்ளது. வேதிப்பொருட்கள், ஜவுளித் துறை மற்றும் தோல் தொகுப்புகள் மூலம் வரும் திரவக் கழிவுகள் நமது சுகாதாரத்தைகெடுக்கிறது. இந்த திரவக் கழிவுகள் சேரும் நீர் நிலைகளை மட்டுமல்லாமல் அதையொட்டியுள்ள விவசாய நிறுவனங்களையும் மாசுபடுத்துகிறது. இந்த குறைகள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியதாகும். உலகளாவிய அளவில் போட்டிப் போடுவதற்காக முதன்மையான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதால் நிலையான வேலை வாய்ப்புக்கான குறை ஏற்படுகிறது. பணியாளர்களின் தரமானது, இன்றைய காலகட்டத்தில் தற்காலிகமாக பணியமர்த்துவதால்குறை ஏற்படுகிறது. இந்த குறையும் உடனடியாக கொள்கை வகுப்பாளர்கள் கவனிக்க வேண்டிய ஒரு குறை ஆகும்.

83) ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

a) ஜனவரி 16, 2016

b) ஜனவரி 16, 2015

c) ஏப்ரல் 5, 2015

d) ஏப்ரல் 5, 2016

விளக்கம்: ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் (தொடங்கப்பட்டது: ஜனவரி 16, 2016) ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என்பது இந்திய அரசின் ஒரு முன் முயற்சித் திட்டமாகும். இதன் முதன்மையான நோக்கம் தொழில் தொடங்குவதற்கான தொடக்க முயற்சிகளை ஏற்படுத்துதல், வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் வளங்களை உருவாக்குதல்.

84) ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

a) ஜனவரி 16, 2016

b) ஜனவரி 16, 2015

c) ஏப்ரல் 5, 2015

d) ஏப்ரல் 5, 2016

விளக்கம்: ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் (தொடங்கப்பட்டது: ஏப்ரல் 5, 2016) ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் என்பது பச்சைப் புல்வெளி(Greenfield Enterprise) நிறுவனம் அமைப்பதற்காக குறைந்தபட்சம் 10 லட்சத்துக்கும், 1 கோடிக்கும் இடையில், ஒரு பட்டியல் சாதியினர் (SC) அல்லது பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் ஒரு வங்கிக் கிளைக்கு ஒரு பெண் கடன் பெறுபவர் என கடன் வழங்கி வங்கிக்கடன்களை எளிதாக்குவதே இத்திட்டமாகும்.

85) பின்வருவனவற்றுள் சரியான கூற்றினை தேர்ந்தெடு.

ⅰ) ஒரு “தொழில் முனைவோர்” என்பவர் புதிய சிந்தனைகளுக்கும், வணிக செயல்முறைகளுக்கும் புத்தாக்கம் புனைபவர் ஆவார்.

ⅱ) இவர்களிடம் சிறந்த நிர்வாகத் திறன்கள், வலிமையான குழுவை அமைக்கும் திறமைகளும் மற்றும் தேவையான தலைமைக்கான பண்புகளும் இருக்கும்.

ⅲ) தொழில் முனைவு தொழில் முனைவோர் தங்கள் தொழிலை பெருக்குவதற்கான செயல்முறைகளே தொழில் முனைவு எனப்படும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅲ),ⅰ)

விளக்கம்: ஒரு “தொழில் முனைவோர்” என்பவர் புதிய சிந்தனைகளுக்கும், வணிக செயல்முறைகளுக்கும் புத்தாக்கம் புனைபவர் ஆவார். இவர்களிடம் சிறந்த நிர்வாகத் திறன்கள், வலிமையான குழுவை அமைக்கும் திறமைகளும் மற்றும் தேவையான தலைமைக்கான பண்புகளும் இருக்கும். தொழில் முனைவு தொழில் முனைவோர் தங்கள் தொழிலை பெருக்குவதற்கான செயல்முறைகளே தொழில் முனைவு எனப்படும். இவை ஒன்றை உருவாக்குவதற்கும் மேலும் பெரிதுபடுத்துவதற்குமான திறன் ஆகும்.

86) நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தொழில் முனைவோரின் பங்கு யாது?

ⅰ) தொழில் முனைவோர் கிராமப்புற மற்றும் பின்தங்கிய தொழிற்சாலைகளை முன்னேற்றுவதுடன், நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலவும் வட்டார ஏற்றதாழ்வுகளை நீக்குகிறார்கள்.

ⅱ) இவர்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் தலா வருமானம் உயர்வதற்கு உதவி புரிகிறார்கள்.

a) ⅰ), ⅱ)

b) ⅰ) மட்டும்

c) ⅱ) மட்டும்

d) இரண்டுமில்லை

விளக்கம்: நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தொழில் முனைவோரின் பங்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 1.  தொழில் முனைவோர் கிராமப்புற மற்றும் பின்தங்கிய தொழிற்சாலைகளை முன்னேற்றுவதுடன், நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலவும் வட்டார ஏற்றதாழ்வுகளை நீக்குகிறார்கள்.

2. இவர்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் தலா வருமானம் உயர்வதற்கு உதவி புரிகிறார்கள்.

87) பின்வருவனவற்றுள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தொழில் முனைவோரின் பங்கு அல்லாதது?

ⅰ) வருமானம் மற்றும் செல்வத்தின் செறிவைக் குறைப்பதன் மூலம் அவை சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன

ⅱ)குடிமக்களின் அசையா சேமிப்புகள் மற்றும் நாட்டின் ஏற்றுமதி வியாபாரம் மூலமாக மூலதனத்தைச் செயல்பட வைக்கிறார்கள்.

a) ⅰ), ⅱ)

b) ⅰ) மட்டும்

c) ⅱ) மட்டும்

d) இரண்டுமில்லை

விளக்கம்: * வருமானம் மற்றும் செல்வத்தின் செறிவைக் குறைப்பதன் மூலம் அவை சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.

* குடிமக்களின் அசையா சேமிப்புகள் மற்றும் நாட்டின் ஏற்றுமதி வியாபாரம் மூலமாக மூலதனத்தைச் செயல்பட வைக்கிறார்கள்.

88) 86) நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தொழில் முனைவோரின் பங்கு யாது?

ⅰ) தொழில்முனைவோர் கைவினைஞர்கள், தொழில்நுட்பத் தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை வழங்குகிறார்கள்.

ⅱ) தொழில்முனைவோர், குறைந்த விலையில் சிறந்த தரமான பொருட்களைப் பெற மக்களுக்கு உதவுகின்றனர், இதன் விளைவாக அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது

a) ⅰ), ⅱ)

b) ⅰ) மட்டும்

c) ⅱ) மட்டும்

d) இரண்டுமில்லை

விளக்கம்: * தொழில்முனைவோர் கைவினைஞர்கள், தொழில்நுட்பத் தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை வழங்குகிறார்கள். தொழில்நுட்பத்தை மாற்றும் சூழலில் பணியாற்றி மேலும் புத்தாக்கத்தின் மூலம் இலாபத்தினை அதிகரிக்க முயற்சிக்கின்றனர். * தொழில்முனைவோர், குறைந்த விலையில் சிறந்த தரமான பொருட்களைப் பெற மக்களுக்கு உதவுகின்றனர், இதன் விளைவாக அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.

89) நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான ஒரு கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

a) ஏப்ரல் 2000

b) மார்ச் 2002

c) ஜூன் 2003

d) ஜூலை 2004

விளக்கம்: நாட்டில் ஏற்றுமதிக்கு இடையூறு இல்லாத சூழலை கருத்தில் கொண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான ஒரு கொள்கை ஏப்ரல் 2000ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. SEZ அலகுகளில் சுய சான்றிதழ் அடிப்படையில் அலகுகள் அமைக்கப்படலாம். பொதுத் துறை, தனியார் துறை அல்லது கூட்டுத் துறை அல்லது மாநிலங்களில் SEZ அமைப்பதற்கான கொள்கை வழங்கப்படுகிறது. தற்போதுள்ள சில ஏற்றுமதி செயலாக்க மண்டலங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக மாற்றப்படும்.

90) பின்வருவனவற்றுள் ஏற்றுமதி செயலாக்க மண்டலங்கள் அமைந்துள்ள இடங்கள் எவை?

ⅰ) ஓசூர்

ⅱ) நாங்குநேரி

ⅲ) வயலூர்

ⅳ) எண்ணூர்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅳ)

c) ⅱ), ⅲ), ⅳ)

d) ⅲ),ⅰ), ⅳ)

விளக்கம்: அதன்படி, பின்வரும் இடங்களில் அமைந்துள்ள ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களை அரசு அமைத்துள்ளது. நாங்குநேரி SEZ – பல் நோக்கு உற்பத்தி SEZ திருநெல்வேலி எண்ணூர் SEZ – அனல் மின் திட்டம், வயலூர் கோயம்புத்தூர் SEZ – தகவல் தொழிற்நுட்ப பூங்காக்கள் ஓசூர் SEZ – தானியங்கி பொறியியல், மின்னணுவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு

91) பல்நோக்கு உற்பத்தி SEZ எங்கு அமைந்துள்ளது?

a) பெரம்பலூர்

b) கிருஷ்ணகிரி

c) திருவள்ளூர்

d) ஓசூர்

விளக்கம்: பெரம்பலூர் SEZ – பல்நோக்கு உற்பத்தி SEZ

தானியங்கி நகரம் – தானியங்கிகள்/ தானியங்கி உதிரி பாகங்கள், தளவாடங்கள் மற்றும் கிடங்குகள் – திருவள்ளூர் மாவட்டங்கள்

இந்தியா – சிங்கப்பூர் SEZ – IT/ITEs,

மின்னணு வன்பொருள், தளவாடங்கள் மற்றும் கிடங்குகள் – திருவள்ளூர் மாவட்டங்கள்.

உயிரி-மருந்துகள் SEZ – மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு, விஷக்கட்டுப்பாட்டு மையம், மைய மீள் உருவாக்க மருத்துவம், மருத்துவ ஆராய்ச்சி

92) விசைத்தறி மற்றும் மஞ்சள் தொழில் வகுப்புகள் எங்கு காணப்படுகிறது?

a) ஈரோடு

b) கிருஷ்ணகிரி

c) சேலம்

d) ஓசூர்

விளக்கம்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!