Book Back QuestionsTnpsc

தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் Book Back Questions 8th Science Lesson 22

8th Science Lesson 22

22] தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சிப்கோ இயக்கம் முக்கியமாக ஒரு வனப் பாதுகாப்பு இயக்கமாகும். ‘சிப்கோ’என்ற சொல்லுக்கு ‘ஒட்டிக் கொள்வது’ அல்லது ‘கட்டிப் பிடிப்பது’ என்று பொருள். இந்த இயக்கத்தின் நிறுவனர் சுந்தர்லால் பகுகுனா ஆவார். மரங்களைப் பாதுகாத்தல் மற்றும் காடுகள் அழிந்துவிடாமல் அவற்றைப் பராமரித்தல் போன்ற நோக்கங்களுடன் இது 1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

சூறாவளியின் பெயர் மாநிலம் ஆண்டு

பானி ஒடிசா 2019

கஜா தமிழ்நாடு 2018

ஒக்கி தமிழ்நாடு 2018

பேத்த ஆந்திரா 2017

வர்தா தமிழ்நாடு 2016

கடுமையான சுற்றுச்சூழலிருந்து தப்பித்துக் கொள்ள பறவைகள் நீண்ட தூரம் பயணம் செய்வது இடம்பெயர்வு எனப்படும். சாதகமற்ற காநலநிலையில் பல பறவைகள் மற்றும் விலங்குகள் நீண்ட தூரம் இடம் பெயர்கின்றன. சைபீரியாவில் நிலவும் கடுமையான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்து, சாதகமான சூழ்நிலை மற்றும் உணவைப் பெறுவதற்காக சைபீரிய கிரேன் பறவைகள் குளிர்காலத்தில் சைபீரியாவிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 200 மைல்கள் பயணிக்கின்றன.

அமேசான் காடு உலகின் மிகப்பெரிய மழைக்காடு ஆகும். இது பிரேசிலில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 60,00,000 சதுர கி.மீ. ஆகும். இது CO2 வாயுவை சமன்செய்வதன் மூலம் பூமியின் கால நிலையை நிலைப்படுத்தவும், புவி வெப்ப மயமாதலைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், உலகின் 20% ஆக்சிஜனை இது உற்பத்தி செய்கிறது. இங்கு சுமார் 390 பில்லியன் மரங்கள் உள்ளன. இது பூமியின் நுரையீரல் எனப்படுகிறது.

சமூக வனவியல் என்ற சொல் முதன் முதலில் 1976ஆம் ஆண்டில் அப்போதைய தேசிய விவசாய ஆணையம் மற்றும் இந்திய அரசாங்கத்தால் அமலுக்கு வந்தது. சமூக மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு உதவும் நோக்கத்துடன் காடுகளை நிர்வகித்தல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் தரிசு நிலங்களில் காடுகளை வளர்த்தல் ஆகியன இதன் நோக்கமாகும். ஏற்கனவே உள்ள காடுகளோடு சேர்த்து, புதிதான காடுகளை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும்.

1977ஆம் ஆண்டில் கென்யாவில் ‘பச்சை வளைய இயக்கம்’ என்ற அமைப்பை வாங்கரி மாதாய் நிறுவினார். இந்த இயக்கம் 51 மில்லியனுக்கும் அதிகமான மரங்களை கென்யாவில் நட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

ஓவ்வொரு ஆண்டும், மே 22ஆம் நாள் உலக உயிரிகளின் பன்முகத்தன்மை தினமாகக் கொண்டாடப்படுகிறது. பன்முகத்தன்மை என்பது பல்வேறு தாவரங்கள், விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள், நுண்ணுயிரிகள், பூச்சிகள், வாழ்விடங்கள், சுற்றுச்சூழல் அமைப்பு போன்றவற்றை விவரிக்கப் பயன்படும் சொல், இது நமது பூமியை மிகவும் தனித்துவமாகவும், வியக்கத்தக்கதாகவும் வைத்துள்ளது.

ஏமன் பட்டாம்பூச்சி தமிழகத்தின் மாநில பட்டாம்பூச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இனம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் 32 பட்டாம்பூச்சி இனங்களுள் இதுவும் ஒன்றாகும்.

ஒரு காலத்தில் டைனோசர், ஃபெரணிகள் மற்றும் சில ஜிம்னோஸ்பெர்ம்கள் பூமியில் பரவலாகக் காணப்பட்டன. இடம் மற்றும் உணவுப் பற்றாக்குறை காரணமாகவோ அல்லது பருவநிலை மாற்றம் காரணமாகவோ அவை பூமியிலிருந்து மறைந்து போய்விட்டன.

நமது சுற்றுச் சூழலில் வேப்பமரம், குடைமரம், ஆலமரம் போன்ற உள்ளுர் மரங்களை நடுவது விலங்குகளுக்கு உதவியாக இருக்கும். பல பறவைகளும், விலங்குகளும் அவற்றை உறைவிடமாகக் கொள்கின்றன.

உலக வனவிலங்குகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.

IUCN-இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம். WWF-உலக வனவிலங்கு நிதி. ZSI-இந்திய விலங்கியல் ஆய்வு. BRP-உயிர்கோள பாதுகாப்புத் திட்டம். CPCW-மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.

1759ஆம் ஆண்டு வியன்னாவில் உள்ள சோஹன்பிரம் நகரில் நிறுவப்பட்ட மிருகக்காட்சி சாலையே மிகப் பழமையான மிருகக்காட்சி சாலையாகும். இந்தியாவில் முதல் மிருகக்காட்சி சாலை 1800ஆம் ஆண்டு பரக்பூரில் நிறுவப்பட்டது.

அமெரிக்காவில் அமைந்திருக்கின்ற டெக்சாஸ் A&M பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் முனைவர்.க.சகிலாபானு எனும் அறிவியல் விஞ்ஞானி குரோமியம் உலோகத்தால் நீர் மாசுபாடு அடைவதன் காரணமாக பெண் உயிரினங்களில் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது என்றும், அது மனிதர்களின் நஞ்சுக்கொடியில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்துவதால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது என்றும் கண்டறிந்துள்ளார். இவர் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள புதுப்பட்டினம் என்ற கிராமத்தைச சேர்ந்தவர் ஆவார்.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரின் தெருக்களில் காணப்பட்ட குதிரைகளைப் பராமரிப்பதற்காக ப்ளு கிராஸ் நிறுவப்பட்டது. 1906ஆம் ஆண்டு, மே 15 அன்று லண்டன் மாநகரின் விக்டோரியா எனும் இடத்தில் முதலாவது விலங்கு மருத்துவமனை திறக்கப்பட்டது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தாவரங்கள் _______________ என அழைக்கப்படுகின்றன.

அ) விலங்கினங்கள்

ஆ) தாவர இனங்கள்

இ) உள்ளுர் இனம்

ஈ) அரிதானவை

2. காடு அழிப்பு என்பது ____________

அ) காடுகளை அழித்தல்

ஆ) தாவரங்களை வளர்ப்பது

இ) தாவரங்களைக் கவனிப்பது

ஈ) இவை ஏதுவுமில்லை

3. சிவப்பு தரவு புத்தகம் _____________ பற்றிய பட்டியலை வழங்குகிறது.

அ) உள்ளுர் இனங்கள்

ஆ) அழிந்துபோன இனங்கள்

இ) இயற்கை இனங்கள்

ஈ) இவை எதுவுமில்லை

4. உள்வாழிடப் பாதுகாப்பு என்பது உயிரினங்களை ______________

அ) ஓரிடத்திற்குள் பாதுகாத்தல்

ஆ) ஓரிடத்திற்கு வெளியே பாதுகாத்தல்

இ) இரண்டும்

ஈ) இவை எதுவுமில்லை

5. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் _______________ ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

அ) 1986

ஆ) 1972

இ) 1973

ஈ) 1971

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. WWF என்பது __________ஐக் குறிக்கிறது.

2. ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் விலங்குகள் _____________ என அழைக்கப்படுகின்றன.

3. சிவப்பு தரவுப் புத்தகம் ______________ஆல் பராமரிக்கப்படுகிறது

4. முதுமலை வனவிலங்கு சரணாலயம் _______________ மாவட்டத்தில் அமைந்துள்ளது

5. __________ நாள் உலக வனவிலங்கு தினமாகக் கொண்டாடப்படுகிறது

III. பொருத்துக:

1. கிர் தேசியப் பூங்கா – அ. மத்திய பிரதேசம்

2. சுந்தரபன்ஸ் தேசியப் பூங்கா – ஆ. உத்தரகண்ட்

3. இந்திரா காந்தி தேசியப் பூங்கா – இ. மேற்கு வங்கம்

4. கார்பெட் தேசியப் பூங்கா – ஈ. குஜராத்

5. கன்ஹா தேசியப் பூங்கா – உ. தமிழ்நாடு

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. உள்ளுர் இனம், 2. காடுகளை அழித்தல், 3. இவை எதுவுமில்லை, 4. ஓரிடத்திற்குள் பாதுகாத்தல், 5. 1972

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. உலக வனவிலங்கு நிதியம், 2. ஃபானா, 3. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், 4. நீலகிரி, 5. மார்ச் 3

III. பொருத்துக:

1. ஈ, 2. இ, 3. உ, 4. ஆ, 5. அ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!