Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் Book Back Questions 10th Science Lesson 12

10th Science Lesson 12

12] தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ATP அடினோசைன் ட்ரை பாஸ்பேட்
ADP அடினோசைன் டை பாஸ்பேட்
NAD நிகோடினமைடு அடினைன் டை நியூக்ளியோடைடு
NADP நிகோடினமைடு அடினைன் டை நியூக்ளியோடைடு பாஸ்பேட்

ஒரு செல்லானது நேரிடையாக ஆற்றலை குளுக்கோஸிலிருந்து பெற முடியாது. சுவாசித்தலின் போது குளுக்கோஸ் ஆக்ஸிகரணமடைந்து வெளியேறும் ஆற்றல் ATP யில் சேமிக்கப்படுகிறது.

சூரிய ஒளியைப் பயன்படுத்தி செயற்கை ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பாரத ரத்னா C.N.R. ராவ் அவர்கள் அதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கை ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சி மூலம் ஹைட்ரஜன் எரிபொருளை உற்பத்தி செய்தார். (புதுப்பிக்கும் ஆற்றல்)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. காஸ்பேரியன் பட்டைகள் வேரின் _____________ பகுதியில் காணப்படுகிறது.

(அ) புறணி

(ஆ) பித்

(இ) பெரிசைக்கிள்

(ஈ) அகத்தோல்

2. உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?

(அ) வேர்

(ஆ) தண்டு

(இ) இலைகள்

(ஈ) மலர்கள்

3. சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது ____________ எனப்படும்.

(அ) ஆரப்போக்கு அமைப்பு

(ஆ) சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை

(இ) ஒன்றிணைந்தவை

(ஈ) இவற்றில் எதுவுமில்லை

4. காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது

(அ) கார்போஹைட்ரேட்

(ஆ) எத்தில் ஆல்கஹால்

(இ) அசிட்டைல் கோ.ஏ

(ஈ) பைருவேட்

5. கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது.

(அ) பசுங்கணிகம்

(ஆ) மைட்டோகாண்ட்ரியாவின் உட்கூழ்ம மேட்ரிக்ஸ்

(இ) புறத்தோல் துளை

(ஈ) மைட்டோ காண்ட்ரியாவின் உட்புறச்சவ்வு

6. ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது?

(அ) ATP யானது ADP யாக மாறும் போது

(ஆ) CO2 நிலை நிறுத்தப்படும் போது

(இ) நீர் மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது

(ஈ) இவை அனைத்திலும்.

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வேரில் புறணியின் உட்புற அடுக்கு ____________ ஆகும்.

2. சைலமும் புளோயமும் வெவ்வேறு ஆரங்களில் காணப்படும் வாகுலார் கற்றை __________ அமைவாகும்.

3. கிளைக்காலிஸிஸ் நடைபெறும் இடம் ____________

4. ஒளிச்சேர்க்கையின் போது வெளிப்படும் ஆக்ஸிஜன் ______________ லிருந்து கிடைக்கிறது.

5. செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலை ______________

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. தாவரங்களில் நீரை கடத்துவதில் ஈடுபடும் திசு புளோயம்.

2. தாவரத்தின் வெளிப்புறத்தில் காணப்படும் மெழுகுப்படலம் கியூடிக்கிள்.

3. ஒருவிதையிலைத் தாவரத் தண்டில் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படுகிறது.

4. இருவிதையிலைத் தாவர வேரில் மேற்புறத் தோலுக்கு கீழே பாலிசேட் பாரன்கைமா உள்ளது.

5. இலையிடைத் திசு பசுங்கணிகங்களைப் பெற்றுள்ளது.

6. காற்று சுவாசத்தை விட காற்றில்லா சுவாசம் அதிக ATP மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது.

பொருத்துக:

1. புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை – டிரசீனா

2. கேம்பியம் – உணவு கடத்துதல்

3. சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை – பெரணிகள்

4. சைலம் – இரண்டாம் நிலை வளர்ச்சி

5. புளோயம் – நீரைக் கடத்துதல்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. அகத்தோல், 2. தண்டு, 3. ஒன்றினைந்தவை, 4. எத்தில் ஆல்கஹால், 5. மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதி(ஸ்ட்ரோமா),
6. நீர் மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. புறத்தோல் மற்றும் அகத்தோல், 2. ஒன்றினைந்த வாஸ்குலார் கற்றை, 3. சைட்டோபிளாசம், 4. நீரில்,
5. மைட்டோகாண்ட்ரியா

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறானதைத் திருத்தி எழுதுக:

1. தவறு

சரியான விடை: தாவரங்களில் நீரை கடத்துவதில் ஈடுபடும் திசு சைலம்.

2. சரி

3. தவறு

சரியான விடை: இருவித்திலைத் தாவரத் தண்டில் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படுகிறது.

4. தவறு

சரியான விடை: இருவித்திலைத் தாவர இலையின் மேற்புறத் தோலுக்கு கீழே பாலிசேட் பாரன்கைமா காணப்படுகிறது.

5. சரி

6. தவறு

சரியான விடை: காற்று சுவாசத்தை விட காற்றில்லா சுவாசம் குறைந்த யவி மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது.

பொருத்துக: (விடைகள்)

1. புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை – பெரணிகள்

2. கேம்பியம் – இரண்டாம் நிலை வளர்ச்சி

3. சைலம் சூழ் வாஸ்குலார் – டிரசீனா

4. சைலம் – நீரைக்கடத்துதல்

5. புளோயம் – உணவு கடத்துதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!