Book Back QuestionsTnpsc

தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் Book Back Questions 10th Science Lesson 16

10th Science Lesson 16

16] தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

பினைல் அசிடிக் அமிலம் (PAA) மற்றும் இண்டோல் 3 அசிடோ நைட்ரைல் (IAN) ஆகியவை இயற்கை ஆக்சின்களாகும். இண்டோல் 3 பியூட்ரிக் அமிலம் (IBA), இண்டோல் புரோப்பியானிக் அமிலம், நாப்தலின் அசிடிக் அமிலம் (NAA) மற்றும் 2, 4, 5 – T (2, 4, 5 – ட்ரைகுளோரோ பீனாக்சி அசிட்டிக் அமிலம் போன்றவை சில செயற்கை ஆக்சின்களாகும்.

நாளமில்லாச் சுரப்பி மண்டலம் மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றிய உயிரியல் பிரிவு “என்டோகிரைனாலாஜி” எனப்படும். தாமஸ் அடிசன் என்பவர் “நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் தந்தை” எனக் குறிப்பிடப்படுகிறார். இங்கிலாந்து நாட்டு உடற் செயலியல் வல்லுனர்களான W.H.பேய்லிஸ் மற்றும் E.H.ஸ்டார்லிங் ஆகியோர் “ஹார்மோன்” என்ற சொல்லை முதன் முதலில் 1909ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினர். அவர்கள் முதன் முதலில் கண்டறிந்த ஹார்மோன் “செக்ரிடின்” ஆகும்.

மெலட்டோனின் என்னும் ஹார்மோன் பினியல் சுரப்பியில் சுரக்கிறது. இந்த ஹார்மோன் “காலத் தூதுவர்கள்” என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் உடல் முழுமைக்கும் இரவு நேரத்தினை உணர்த்தும் பணியை இந்த ஹார்மோன் மேற்கொள்கிறது. இரவு நேரங்களில் ஒளி, குறிப்பாக குறைந்த அலை நீளம் கொண்ட ஒளி படுவதால், மெலட்டோனின் ஹார்மோன் உற்பத்தி குறைகிறது. மெலட்டோனின் உற்பத்தி குறைவதால் இயற்கையான உறக்கச் சுழற்சி பாதிக்கப்படுகிறது. இதனால் உண்டாகும் உறக்கமின்மையின் காரணமாக வளர்சிதை மாற்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன.

எட்வர்ட் C.கெண்டல் என்பார் 1914ஆம் ஆண்டில் முதன்முறையாக தைராக்சின் ஹார்மோனை படிக நிலையில் தனித்துப் பிரித்தார். சார்லஸ் ஹாரிங்டன் மற்றும் ஜார்ஜ் பார்ஜர் ஆகியோர் தைராக்சின் ஹார்மோனின் மூலக்கூறு அமைப்பை 1927ஆம் ஆண்டில் கண்டறிந்தனர். ஒவ்வொரு நாளும் தைராய்டு சுரப்பியானது தைராக்சினைச் சுரக்க “120µg” அயோடின் தேவைப்படுகிறது.

மனித இன்சுலின் ஹார்மோன் 1921ஆம் ஆண்ல் ஃபிரெட்ரிக் பான்டிங், சார்லஸ் பெஸ்ட் மற்றும் மெக்லாட் ஆகியோரால் முதன் முதலில் கண்டறியப்பட்டது. 1922ஆம் ஆண்டு ஜனவரி 11 ந்தேதி அன்று முதன் முதலில் நீரிழிவு நோயை குணப்படுத்துவதற்காக இன்சுலின் பயன்படுத்தப்பட்டது.

அட்ரினல் கார்டெக்ஸ் சுரக்கும் “கார்ட்டிசோல்” ஹார்மோன்கள் உடலை உயிர்ப்பு நிலையில் வைத்திருக்கவும், மிகுந்த பாதிப்பு மற்றும் மன அழுத்தங்களிலிருந்து மீண்டு வரவும் உதவுகிறது. கார்ட்டிசோல் என்பது உயிர் காக்கும் பணியை மிகுந்த அழுத்த நிலைகளில் மேற்கொள்கிறது. எனவே இது “உயிர் காக்கும் ஹார்மோன்” என்றும் அழைக்கப்படுகிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு ____________

(அ) மரபியல் ரீதியான நெட்டைத் தாவரங்களைக் குட்டையாக்குவது.

(ஆ) குட்டைத் தாவரங்களை நீட்சி அடையச் செய்வது.

(இ) வேர் உருவாதலை ஊக்குவிப்பது.

(ஈ) இளம் இலைகள் மஞ்சளாவது.

2. நுனி ஆதிக்கத்தின் மீது நேர் விளைவை உருவாக்கும் ஹார்மோன்

(அ) சைட்டோகைனின்

(ஆ) ஆக்சின்

(இ) ஜிப்ரல்லின்

(ஈ) எத்திலின்

3. பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை?

(அ) 2, 4 D

(ஆ) GA 3

(இ) ஜிப்ரல்லின்

(ஈ) IAA

4. அவினா முளைக்குருத்து உறை ஆய்வு _____________ என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.

(அ) டார்வின்

(ஆ) N ஸ்மித்

(இ) பால்

(ஈ) F.W.வெண்ட்

5. கரும்பில் உற்பத்தியாகும் சர்க்கரையின் அளவை அதிகரிக்க அவற்றின் மீது ____________ தெளிக்கப்படுகிறது.

(அ) ஆக்சின்

(ஆ) சைட்டோகைனின்

(இ) ஜிப்ரல்லின்கள்

(ஈ) எத்திலின்

6. L.H.ஐ சுரப்பது _____________

(அ) அட்ரினல் சுரப்பி

(ஆ) தைராய்டு சுரப்பி

(இ) பிட்யூட்டரியின் முன் கதுப்பு

(ஈ) ஹைபோ தலாமஸ்

7. கீழுள்ளவற்றுள் நாளமுள்ளச் சுரப்பியை அடையாளம் காணவும்.

(அ) பிட்யூட்டரி சுரப்பி

(ஆ) அட்ரினல் சுரப்பி

(இ) உமிழ் நீர் சுரப்பி

(ஈ) தைராய்டு சுரப்பி

8. கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது?

(அ) கணையம்

(ஆ) சிறுநீரகம்

(இ) கல்லிரல்

(ஈ) நுரையீரல்

9. கீழுகண்டவற்றுள் தலைமைச் சுரப்பி என கருதப்படுவது எது?

(அ) பினியல் சுரப்பி

(ஆ) பிட்யூட்டரி சுரப்பி

(இ) தைராய்டு சுரப்பி

(ஈ) அட்ரினல் சுரப்பி

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. செல் நீட்சியடைதல், நுனி ஆதிக்கம் ஆகியவற்றை உருவாக்குவதும், உதிர்தலை தடை செய்வதும் __________ ஹார்மோன் ஆகும்.

2. தாவர உறுப்புகளின் உதிர்தல் மற்றும் கனி பழுப்பதை துரிதப்படுத்தும் வாயு நிலை ஹார்மோன் ________ ஆகும்.

3. இலைத் துளையை மூடச் செய்யும் ஹார்மோன் ______________

4. ஜிப்ரல்லின்கள் ___________ தாவரங்களில் தண்டு நீட்சியடைவதைத் தூண்டுகின்றன.

5. நுனி ஆதிக்கத்தின் மீது எதிர்மறை விளைவு கொண்ட ஹார்மோன் _____________ ஆகும்.

6. உடலில் கால்சியத்தின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது ___________

7. லாங்கர்ஹான் திட்டுகளில் உள்ள பீட்டா செல்கள் ____________ ஐச் சுரக்கிறது.

8. தைராய்டு சுரப்பியின் வளர்ச்சி மற்றும் பணிகளை ____________ கட்டுப்படுத்துகிறது.

9. குழந்தைகளில் தைராய்டு ஹார்மோன்களின் குறைவான சுரப்பின் காரணமாக __________ உண்டாகிறது.

பொருத்துக:

பகுதி பகுதி பகுதி
ஆக்சின் ஜிப்ரில்லா பியூ ஜிகுராய் உதிர்தல்
எத்திலின் தேங்காயின் இளநீர் கணுவிடைப் பகுதி நீட்சி
அப்சிசிக் அமிலம் முளைக் குருத்து உறை நுனி ஆதிக்கம்
சைட்டோகைனின் பசுங்கணிகம் பழுத்தல்
ஜிப்ரல்லின்கள் கனிகள் செல் பகுப்பு

2. ஹார்மோன்கள் குறைபாடுகள்

(அ) தைராக்சின் அக்ரோமேகலி

(ஆ) இன்சுலின் டெட்டனி

(இ) பாராதார்மோன் எளிய காய்டர்

(ஈ) வளர்ச்சி ஹார்மோன் டயாபடிஸ் இன்சிபிடஸ்

(உ) ADH டயாபடிஸ் மெல்லிடஸ்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. செல்பகுப்பைத் தூண்டி கனிம ஊட்ட இடப்பெயர்ச்சியை ஊக்குவிக்கும் தாவர ஹார்மோன் சைட்டோகைனின் ஆகும்.

2. ஜிப்ரல்லின்கள் தக்காளியில் கருவுறாக் கனிகளை உருவாக்குகின்றன.

3. எத்திலின் இலைகள், மலர்க்ள மற்றும் கனிகள் மூப்படைவதைத் தடை செய்கின்றது.

4. எக்சாப்தல்மிக் காய்டர், தைராக்சின் மிகைச் சுரப்பின் காரணமாக ஏற்படுகிறது.

5. பிட்யூட்டரி சுரப்பி நான்கு கதுப்புகளாக பிரிந்துள்ளது.

6. கார்பஸ் லூட்டியம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைச் சுரக்கிறது.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.

(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

1. கூற்று: சந்தைப்படுத்தப்படும் காய்கறிகளில் சைட்டோகைனினைத் தெளிப்பது அவை பல நாட்கள் கெடாமல் இருக்கச் செய்யும்.

காரணம்: சைட்டோகைனின்கள் கனிம ஊட்ட இடப்பெயர்ச்சியினால் இலைகள் மற்றும் ஏனைய உறுப்புகள் முதுமையடைவதைத் தாமதப்படுத்துகின்றன.

2. கூற்று: பிட்யூட்டரி சுரப்பி “தலைமை சுரப்பி” என்று அழைக்கப்படுகிறது.

காரணம்: இது பிற நாளமில்லா சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகிறது.

3. கூற்று: டயாபடிஸ் மெல்லிடஸ் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.

காரணம்: இன்சுலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. குட்டைத் தாவரங்களை நீட்சி அடையச் செய்வது, 2. ஆக்சின், 3. (2,4,D) 4. F.W.வெண்ட்

5. ஜிப்ரல்லின்கள், 6. பிட்யூட்டரியின் முன் கதுப்பு, 7. உமிழ்நீர் சுரப்பி, 8. கணையம்,

9. பிட்யூட்டரி சுரப்பி

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. ஆக்சின், 2. எத்திலின், 3. அப்சிசிக் அமிலம், 4. இலையடுக்கம் கொண்ட, 5. சைட்டோகைனின்,

6. பாராதார்மோன், 7. இன்சுலின், 8. தைராய்டை தூண்டும் ஹார்மோன்(TSH), 9. கிரிட்டினிசம்

பொருத்துக: (விடைகள்)

1.

பகுதி I பகுதி II பகுதி III
ஆக்சின் முளைக்குருத்து உறை நுனி ஆதிக்கம்
எத்திலின் கனிகள் பழுத்தல்
அப்சிசிக் அமிலம் பசுங்கணிகம் உதிர்தல்
சைட்டோகைனின் தேங்காயின் இளநீர் செல் பகுப்பு
ஜிப்ரலின்கள் ஜிப்ரில்லா பிஜிகுராய் கணுவிடைப் பகுதி நீட்சி

2.

ஹார்மோன்கள் குறைபாடுகள்

1. தைராக்சின் – எளிய காய்டர்

2. இன்சுலின் – டயாபடிஸ் மெல்லிடஸ்

3. பாராதார்மோன் – டெட்டனி

4. வளர்ச்சி ஹார்மோன் – அக்ரோமெகலி

5. ADH – டயாபடிஸ் இன்சிபிடஸ்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறானதைத் திருத்தி எழுதுக:

1. சரி

2. சரி

3. தவறு

சரியான விடை: எத்திலின் இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் மூப்படைவதைத் துரிதப்படுத்தும்.

4. சரி

5. தவறு

சரியான விடை: பிட்யூட்டரி சுரப்பி இரண்டு கதுப்புகளாகப் பிரிந்துள்ளது.

6. தவறு

சரியான விடை: கார்பஸ் லூட்டியம் புரோஜெஸ்டிரான் ஹார்மோனைச் சுரக்கிறது.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

3. கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!