Book Back QuestionsTnpsc

திசுக்களின் அமைப்பு Book Back Questions 9th Science Lesson 18

திசுக்களின் அமைப்பு Book Back Questions 9th Science Lesson 18

9th Science Lesson 18

18] திசுக்களின் அமைப்பு

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

உருளைக்கிழங்கில் பாரன்கைமாவின் வெற்றிடம் முழுவதும் ஸ்டார்ச்சினால் நிரம்பி உள்ளது. ஆப்பிளில் பாரன்கைமா சர்க்கரையை சேமித்து வைத்துள்ளது.

தசை நார்கள் அதிகப்படியாக இழுக்கப்படுவதால் சுளுக்கு ஏற்படுகிறது.

நமது உடல் செல்களின் வயது: கண்விழி, பெருமூளை புறணியின் நரம்பு செல்கள் மற்றும் அதிகப்படியான தசை செல்கள் வாழ்நாளில் ஒரு முறை இறந்தால் அவை மீண்டும் சீரமைக்கப்படுவதில்லை. குடலின் எபிதீலிய புறணி செல்களின் வாழ்நாள் ஐந்து நாட்களாகும்.

செல்கள் புதுபிக்க ஆகும் காலம்: தோல் செல் – ஒவ்வொரு 2 வாரங்கள். எலும்பு செல்கள் – ஒவ்வொரு 10 வருடங்கள். கல்லீரல் செல்கள் – ஒவ்வொரு 300 – 500 நாட்கள். இரத்த சிவப்பு செல்கள் 120 நாட்களில் இறந்து மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றன.

நரம்பு செல்களில் சென்ட்ரியோல்கள் இல்லாததால் அவை பகுப்படைவதில்லை. ஆனால், இவை கிலியல் செல்களிலிருந்து நரம்புருவாக்குதலின் மூலம் உருவாக்கப்படுகின்றன.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. உயிருள்ள மெல்லிய சுவருடைய பலகோண வடிவ செல்களைக் கொண்டுள்ள திசு.

(அ) பாரன்கைமா

(ஆ) கோலன்கைமா

(இ) ஸ்கிளிரைன்கைமா

(ஈ) மேலே கூறிய எதுவும் இல்லை.

2. நார்கள் கொண்டுள்ளது

(அ) பாரன்கைமா

(ஆ) ஸ்கிளிரன்கைமா

(இ) கோலன்கைமா

(ஈ) ஏதும் இல்லை

3. துணைசெல்கள் ___________ உடன் மிக நெருக்கமாக இணைந்துள்ளன.

(அ) சல்லடைக் கூறுகள்

(ஆ) பாத்திரக் கூறுகள்

(இ) ட்ரைக்கோம்கள்

(ஈ) துணை செல்கள்

4. கீழ்கண்ட எது ஒரு கூட்டுத் திசுவாகும்?

(அ) பாரன்கைமா

(ஆ) கோலன்கைமா

(இ) சைலம்

(ஈ) ஸ்கீளிரன்கைமா

5. ஏரேன்கைமா எதில் கண்டறியப்படுகிறது?

(அ) தொற்று தாவரம்

(ஆ) நீர்வாழ் தாவரம்

(இ) சதுப்புநில தாவரம்

(ஈ) வறண்ட தாவரம்

6. மிருதுவான தசை காணப்படுவது

(அ) கர்ப்பப்பை

(ஆ) தமனி

(இ) சிறை

(ஈ) அவை அனைத்திலும்

பொருத்துக:

1. ஸ்கிளிரைடுகள் – குளோரன்கைமா

2. பசுங்கணிகம் – ஸ்கிளிரைன்கைமா

3. எளியதிசு – கோளன்கைமா

4. துணைசெல் – சைலம்

5. டிரக்கீடுகள் – ஃபுளோயம்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. உள்ளுறுப்புகளுக்கு ___________ திசுக்கள் உறுதியை அளிக்கின்றன.

2. பாரன்கைமா, குளோரோன்கைமா, கோளான்கைமா, ஸ்கிளிரன்கைமா ஆகியவை ____________ வகை திசுக்களாகும்.

3. ___________ மற்றும் __________ ஆகியவை கூட்டுத்திசுக்களாகும்.

4. குறுயிலை கொண்ட எபிதீலிய செல்கள் நமது உடலின் __________ பகுதியில் உள்ளன.

5. சிறுகுடலின் புறணி ____________ ஆல் ஆனது.

6. மியாஸிஸ் நிகழ்ச்சியில் குரோமோசோம்கள் ஜோடியுறும்போது, ___________ குரோமோசோம்கள் ஒன்றின் பக்கம் ஒன்றாக அமைந்திருக்கும்.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. எபிதீலிய திசு விலங்கு உடலின் பாதுகாப்பு திசுவாகும்.

2. எலும்பு மற்றும் குருந்தெலும்பு ஆகியவை சிற்றிட இணைப்பு திசுவின் இருவகையாகும்.

3. பாரன்கைமா ஒரு எளிய திசு.

4. ஃபுளோயம் டிரக்கிடுகளால் ஆனது.

5. கோலன்கைமாவில் நாளங்கள் காணப்படுகின்றன.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. பாரன்கைமா 2. ஸ்கிளிரைன்கைமா 3. சல்லடைக் கூறுகள் 4. சைலம் 5. நீர் வாழ் தாவரம் 6. அவை அனைத்திலும்

பொருத்துக: (விடைகள்)

1. ஸ்கிளிரைடுகள் – ஸ்கிளிரைன்கைமா

2. பசுங்கணிகம் – குளோரன்கைமை

3. எளியதிசு – கோளன்கைமா

4. துணைசெல் – ஃபுளோயம்

5. டிரக்கீடுகள் – சைலம்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. கோலன்கைமா 2. எளிய 3. சைலம், ஃபுளோயம் 4. சுவாசக்குழாய்களில் (அ) சிறுநீரகக்குழல்கள் (அ) அண்டகக்குழல்கள்

5. நுண் எபிதீலிய திசுக்கள் 6. இரு ஒத்திசை

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக)

1. சரி

2. தவறு

சரியான விடை: எலும்பு மற்றும் குறுத்தெலும்பு ஆகியவை ஆதார இணைப்புத் திசுவின் இருவகையாகும்.

3. சரி

4. தவறு

சரியான விடை: சைலம் டிரக்கிடுகளால் ஆனது.

5. தவறு

சரியான விடை: கோலன்கைமாவில் நாளங்கள் காணப்படுவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!