MCQ Questions

திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் 12th Political Science Lesson 8 Questions in Tamil

12th Political Science Lesson 8 Questions in Tamil

8] திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும்

இந்தியாவுக்கான பொருளாதாரத் திட்டமிடலின் முன்னோடி என்று கருதப்படுபவர்

A) ஜவஹர்லால் நேரு

B) சுபாஷ் சந்திர போஸ்

C) எம். விஸ்வேசுவரய்யா

D) எம்.என். ராய்

(குறிப்பு: 1936இல் எம்.விஸ்வேசுவரய்யா ‘இந்தியாவுக்கான திட்டமிட்ட பொருளாதாரம்’ என்னும் தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டார். அதில் இந்தியாவுக்கான ஒரு பத்தாண்டு திட்டத்தினை முன்மொழிந்தார்.)

___________இல் நடைபெற்ற அனைத்து இந்திய காங்கிரசு கமிட்டி கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முயற்சியால் தேசியத் திட்டக்குழு உருவாக்கப்பட்டது.

A) 1937 B) 1938 C) 1939 D) 1940

(குறிப்பு: இந்திய நாடு எதிர்கொள்ள உள்ள பல்வேறு பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு விடை காணும் வகையில் ஒரு நாடு தழுவிய பொருளாதாரத் திட்டத்தினை தயாரிப்பதே இந்த திட்டக் குழுவின் நோக்கமாகும்.)

1944இல் பம்பாய் திட்டத்தினை முன்மொழிந்தவர்

A) திரு நாராயண அகர்வால்

B) ஜெய்பிரகாஷ் நாராயண்

C) எம்.என்.ராய்

D) விஸ்வேசுவரய்யா

(குறிப்பு: 1944இல் இந்திய தொழிலதிபர்களால் ஒரு பொருளாதார வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டது. இது பம்பாய் திட்டம் என்று அழைக்கப்பட்டது. இத்திட்டத்தில் வேளாண்மை வளர்ச்சிக்கும் சிறுதொழில் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.)

ஸ்ரீமன் நாராயண அகர்வால் அவர்களால் காந்தியத் திட்டம் முன்மொழியப்பட்ட ஆண்டு

A) 1943 B) 1944 C) 1945 D) 1946

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் _______________ பிரிவில் அரசு கொள்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளது.

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: அனைத்து மக்களுக்கும் சமூக-பொருளாதார நீதியை உறுதிப்படுத்தும் வண்ணம் அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் இந்திய அரசமைப்பு சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.)

பண்டிட் ஜவஹர்லால் நேரு தலைமையில் இந்தியத் திட்ட ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு

A) 1947 ஆகஸ்ட்

B) 1948 மார்ச்

C) 1949 அக்டோபர்

D) 1950 மார்ச்

(குறிப்பு: இந்திய அரசு தீர்மானத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட இந்திய திட்ட ஆணையம் நாட்டின் வளங்களை மிகுந்த திறனுடனும் சமநிலையுடனும் பயன்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கும் நோக்கமாக கொண்டுள்ளது.)

திட்ட ஆணையத்தின் பணிகளில் சரியானதை தேர்ந்தெடு.

1. நாட்டின் எதிர்கால வளர்ச்சி தேவைகளுக்கும் பயன்படும் வகையில் தேசிய மூலவளங்களை மதிப்பீடு செய்வது திட்ட ஆணைய பணியாகும்.

2. மூலவளங்களை மிகுந்த திறனுடனும் சமநிலைத் தவறாமலும் பயன்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பது ஆணையத்தின் முதன்மை பணியாகும்.

3. ஒவ்வொரு துறையிலும் குறிப்பிட்ட காலத்தில் எட்ட வேண்டிய இலக்குகளை வகுத்து, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை வரையறை செய்வதும் ஆணையத்தின் பணி ஆகும்.

A) 1, 2 சரி

B) 2, 3 சரி

C) 1, 3 சரி

D) அனைத்தும் சரி

திட்ட ஆணையம் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

A) பிரதமர், மூன்று முழு நேர உறுப்பினர்கள், கேபினட் அமைச்சர் நிலையிலுள்ள மூன்று பகுதி நேர உறுப்பினர்கள் ஆகியோரை திட்ட ஆணையம் கொண்டுள்ளது.

B) முழுநேர ஊழியர்களை பொருத்தமட்டில் தொழில்நுட்பத்துறை, பொருளாதாரம், நிர்வாகம் ஆகியத் துறைகளில் வல்லமைமிக்கவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

C) திட்ட ஆணையத்தின் தலைமைப் பொறுப்பை பிரதமர் ஏற்று, ஆணையப் பணிகள் சுமூகமாக நடைபெற ஒத்துழைக்கிறார்.

D) திட்ட வரைவுகளை தயாரித்து மத்திய அமைச்சகம், செயலகம், நான்கு முழு நேர உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்களாக உள்ள சம்மந்தப்பட்ட கேபினட் அமைச்சர்கள் ஆணையத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களான நிதி அமைச்சர், திட்ட அமைசர், உறுப்பினர் மற்றும் செயலர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டியது திட்டக்குழு உதவித் தலைவரின் பொறுப்பாகும்.

(குறிப்பு: பிரதமர், நான்கு முழு நேர உறுப்பினர்கள், கேபினட் அமைச்சர் நிலையிலுள்ள நான்கு பகுதி நேர உறுப்பினர்கள் ஆகியோரை திட்ட ஆணையம் கொண்டுள்ளது.)

கூற்று 1: நிர்வாக சீர்திருத்த ஆணையம் வழங்கிய பரிந்துரைகளை ஏற்று திட்ட ஆணையம் மாற்றியமைக்கப்பட்டது.

கூற்று 2: இதன்படி பிரதமர் தலைவராக இருந்து கூட்டங்களை தலைமை ஏற்று நடத்துவார். ஆணைய துணைத் தலைவர் பொறுப்பில் நியமிக்கப்படும் ஒருவர் ஆணையத்தின் நிர்வாகத் தலைவராக செயல்படுவார்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

கூற்று 1: கூட்டுப் பொறுப்பு எனும் நெறியின் கீழ் திட்ட ஆணையம் இயங்குகிறது.

கூற்று 2: திட்ட ஆணையம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: பொதுப் பிரிவு, பொருள் பிரிவு, நிர்வாகப் பிரிவு என மூன்று பிரிவுகளாக ஆணையம் பிரிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் தொடர்பான அனைத்து பணிகளையும் பொதுப் பிரிவு மேற்கொள்கிறது. குறிப்பிட்ட வளர்ச்சி பணிகள் குறித்த திட்டங்கள் உதாரணமாக உணவு, வேளாண்மை, மின்சாரம், நீர்ப்பாசனம், போக்குவரத்து போன்ற தனிப்பட்ட துறைகளுக்கான திட்டங்கள் பொருள் பிரிவின் கீழ் வருகின்றன. நிர்வாகப் பணிகள் நிர்வாகப் பிரிவின் கீழ் வருகின்றன.)

எந்த ஐந்தாண்டு திட்டக்காலத்தில் தேசிய திட்டக்குழு அமைக்கப்பட்டது?

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: தேசிய திட்டக்குழு 1965 இல் அமைக்கப்பட்டது. இக்குழு அறிவியல், பொறியியல், பொருளாதாரம் ஆகிய துறை வல்லுநரைக் கொண்டு உருவாக்கப்படும்.)

கூற்று 1: தேசிய திட்டக்குழு வேளாண்மை, நிலச்சீர்திருத்தம், நீர்ப்பாசனம், கல்வி, வேலை வாய்ப்பு, தொழில்துறை, வர்த்தகம், மேலாண்மை, குடும்பக்கட்டுப்பாடு, சமூக நலம், இயற்கை வளங்கள், போக்குவரத்து, பன்னாட்டு வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுகிறது.

கூற்று 2: இந்த ஒவ்வொரு துறையிலும் தேவைகள் குறித்து விரிவான ஆய்வு செய்து திட்ட ஆணையத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டியது தேசிய திட்டக்குழுவின் கடமையாகும். திட்ட ஆணையம் திட்டங்களை உருவாக்க, இது உதவுகிறது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

தேசிய வளர்ச்சிக் குழுவின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது?

A) 1950 அக்டோபர் 4-5

B) 1951 ஆகஸ்ட் 2-3

C) 1952 நவம்பர் 8-9

D) 1952 மார்ச் 8-9

(குறிப்பு: தேசிய வளர்ச்சிக் குழுவின் 57வது கூட்டம் 27.12.2012 அன்று நடைபெற்றது.)

கீழ்க்க்கண்டவற்றுள் தேசிய வளர்ச்சிக் குழுவின் நோக்கங்கள் எவை?

1. திட்டங்களை நிறைவேற்றுவதற்கான தேசிய மூலவளங்களை திரட்டுதல், வலுப்படுத்துதல்.

2. அனைத்து முக்கிய மண்டலங்களிலும் மக்கள் பொருளாதார கொள்கைகளை ஊக்கப்படுத்துதல்.

3. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சமமான அளவில் துரித வளர்ச்சியை உறுதிப்படுத்துதல்.

A) அனைத்தும் B) 1, 2 C) 2, 3 D) 1, 3

(குறிப்பு: தேசிய வளர்ச்சிக் குழு கூடுதல் அரசமைப்பு மற்றும் சட்டபூர்வமற்ற நிறுவனம் ஆகும். இது திட்ட ஆணையத்திற்கு ஆலோசனை வழங்குகிறது.)

கீழ்க்கண்டவற்றுள் தேசிய வளர்ச்சிக் குழுவின் உறுப்பினர்கள் யார்?

1. பிரதமர்

2. மத்திய அமைச்சர்கள்

3. அனைத்து மாநிலங்களின் முதல் அமைச்சர்கள்

4. யூனியன் பிரதேச நிர்வாகங்கள்

5. திட்ட ஆணைய உறுப்பினர்கள்

A) 1, 2, 3, 4 B) 1, 2, 3 C) 1, 3, 4, 5 D) அனைத்தும்

தேசிய வளர்ச்சிக் குழுவின் பணிகளில் தவறானது எது?

1. தேசிய திட்டங்களை உருவாக்குதல் மற்றும் திட்டங்களுக்கான வளங்களை மதிப்பிடுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்குதல்.

2. திட்ட ஆணையத்தால் உருவாக்கப்படும் தேசிய திட்டங்களை பரிசீலித்தல்

3. தேசிய வளர்ச்சியை பாதிக்கும் சமூக பொருளாதார கொள்கைகளை முக்கிய வினாக்களை கருத்தில் கொள்ளுதல்.

4. திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை அவ்வப்போது சீராய்வு செய்தல்.

A) 2 மட்டும்

B) 3 மட்டும்

C) 4 மட்டும்

D) எதுவுமில்லை

“அரசு குறிப்பாக வருமானத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை குறைப்பதையும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் பிரிவினர் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் மக்கள் குழுக்கள் ஆகியோரிடையிலும் தனிநபரிடையிலும் தகுதி, வசதி, வாய்ப்புகள் ஆகியவற்றில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதையும் நோக்கமாகக் கொள்ள வேண்டும்.” எனக் கூறும் அரசமைப்பு உறுப்பு

A) 32 (8) B) 38 (3) C) 38 (2) D) 36 (3)

(குறிப்பு: திட்டங்களை வகுப்போர் உறுப்பு 38 (2) வது பிரிவினை மனதில் கொண்டு திட்டங்களை வகுக்கின்றனர்.)

சர்வோதயத்திட்டம் முன்மொழியப்பட்ட ஆண்டு

A) 1944 B) 1946 C) 1948 D) 1950

மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் நிலைத் தொடர்வது அரசமைப்பில் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிரானது என்றும் எனவே இதுபோன்ற அபாயகரமான தொழில்களில் ஈடுபடுவோருக்கு உரிய பாதுகாப்புகளை உறுதிப்படுத்துவது அரசு நிறுவனங்களின் கடமை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த ஆண்டு

A) 2001 B) 2008 C) 2011 D) 2016

அடிப்படை உரிமைகள் குறித்து பேசும் அரசமைப்பின் பிரிவு

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: அரசமைப்பு உறுப்பு III ன் கீழ் வழங்கப்படுள்ளவாறு ஒருவர் முழுமையான வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான அனைத்து உரிமைகளும் அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாக்கப்படுவது அடிப்படை உரிமைகள் ஆகும்.)

இந்திய வளர்ச்சிக்கான திட்டமிடுதலின் சிற்பி ________________ ஆவார்.

A) வல்லபாய் படேல்

B) ராஜாஜி

C) காந்திஜி

D) ஜவஹர்லால் நேரு

(குறிப்பு: நேருவை பொறுத்தவரை சோவியத் யூனியன் பின்பற்றிய திட்டமிடல் முறையில் மட்டுமல்லாமல் முதலாளியம் பின்பற்றிய தாராளவாத கொள்கைகளாலும் கவரப்பட்டிருந்தார். இந்த இரண்டு கோட்பாடுகளும் இணைந்து இந்தியாவில் பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். இதுவே மக்களாட்சி சமதர்மம் என்று அழைக்கப்படுகிறது.)

சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.

1. 1956ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொழிற் கொள்கை தீர்மானம் இந்திய நாடாளுமன்றத்தில் ஏற்கப்பட்டது.

2. நாட்டின் பொருளாதாரக் கொள்கையின் வழிக்காட்டுதலாக இது பின்பற்றுப்படுகிறது.

3. இத்தீர்மானத்தின் அடிப்படையிலேயே ஐந்தாண்டுத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

தொழிற்துறை எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: முதலாவது பிரிவு முழுவதும் அரசுடைமை ஆக்கப்பட்ட தொழில்களாகும். இரண்டாவது பிரிவு, அரசுடைமை ஆக்கப்பட்டபோதிலும் பொதுத்துறை நிறுவனங்களையும் உள்ளடக்கும் வாய்ப்புகளை கொண்ட தொழில்களாகும். மூன்றாவது பிரிவு, தனியார் தொழில் நிறுவனங்களாகும்.)

நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரசு அரசில் பொருளாதார சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

A) 1991 ஏப்ரல்

B) 1991 ஜுலை

C) 1991 அக்டோபர்

D) 1991 டிசம்பர்

(குறிப்பு: இந்திய பொருளாதாரத்தின் மீது நிலவிய அதிகாரவர்க்கத்தின் கட்டுப்பாடுகளை குறைத்து இந்திய பொருளாதாரத்தை உலக பொருளாதாரத்துடன் இணைக்கும் வகையில் தாராளமயப்படுத்துவதை இந்த பொருளாதார சீர்திருத்தம் நோக்கமாக கொண்டிருந்தது.)

கூற்று 1: 1990-91, 1991-92 ஆகிய இரு ஆண்டுகளில் ஆண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

கூற்று 2: 1992இல் ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: 1992இல் எட்டாவது ஐந்தாண்டு திட்டம் கொண்டு வரப்பட்டது.)

திட்ட ஆணையத்திற்கு பதிலாக நிதி ஆயோக் (மாறும் இந்தியாவிற்கான தேசிய நிறுவனம்) எனும் புதிய ஆணையத்தினை இந்திய அரசு எப்போது அறிமுகப்படுத்தியது?

A) 2014 ஏபரல் 1

B) 2015 ஜனவரி 1

C) 2015 ஏப்ரல் 1

D) 2014 ஜனவரி 1

(குறிப்பு: ஒட்டுமொத்த திட்டமிடல் செயல்முறைகளையும் மேலும் அதிகார பரவலாக்கம் செய்யும் நோக்குடன் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த முறையின் மூலம் மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்குதல் மற்றும் நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகள் சிறப்பான முறையில் பங்கேற்க முடியும்.)

கீழ்க்கண்டவற்றுள் நிதி ஆயோக்கின் இலக்குகளாக கருதப்படுபவை எவை?

1. அறிவு, படைப்பாக்கம் மற்றும் தொழில் முனைவோர் ஆதரவு அமைப்பை உருவாக்குதல்.

2. நல்ல ஆளுகை வழங்குவதற்கான ஆய்வுக்கான மிகச்சிறந்த வளமையம்.

3. தொடர் படைப்பாக்க மேம்பாடுகளுக்கான பின்னூட்டம்.

4. கிராம அளவிலான மேம்பாட்டிற்கான திட்டங்களை உயர் அளவில் ஒருங்கிணைத்தல்.

5. தேசிய பாதுகாப்பு நலன்களை ஒருங்கிணைக்கும் பொருளாதாரக் கொள்கை.

A) அனைத்தும் B) 1, 2, 4, 5

C) 2, 3, 4, 5 D) 1, 3, 4, 5

(குறிப்பு: நிதி ஆயோக்கின் இதர இலக்குகள்

கூட்டுறவு கூட்டாட்சியை முன்னிலைப்படுத்துதல் அரசுகளின் தீவிர ஈடுபாடு

பொருளாதார வளர்ச்சியிலிருந்து உரிய பயன்களை பெற இயலாத பிரிவினருக்கு சிறப்பு கவனம்.

பங்குதார்களாக தேசிய மற்றும் சர்வதேச சிந்தனையாளர்கள்.

பிரிவுகள் மற்றும் துறைகளுக்குன் எழும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் மேடை.

தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தகுதிப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல்.)

நிதி ஆயோக்கின் அமைப்பு குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

A) நிதி ஆயோக் தலைவராக பிரதமர் செயல்படுவார்.

B) இரண்டு முழுநேர மற்றும் ஐந்து பகுதி நேர உறுப்பினர்கள் இருப்பர்.

C) அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் ஒன்றிய பகுதிகளின் துணை நிலை ஆளுநர்களைக் கொண்ட ஆளுநர் குழுவைக் கொண்டிருக்கும்.

D) அலுவல் சாரா உறுப்பினர்களாக மத்திய அமைச்சரவையிலிருந்து நான்கு மத்திய அமைச்சர்கள் நியமிக்கப்படுவர்.

(குறிப்பு: நிதி ஆயோக் ஐந்து முழு நேர மற்றும் இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள் இருப்பர்.

கூற்று 1: நிதி ஆயோக் அமைப்பு இந்தியாவில் 29 மாநிலங்கள் மற்றும் ஏழு ஒன்றிய பகுதிகளில் தலைவர்களை உள்ளடக்கியது. அதன் முழு நேர நிர்வாகிகளான துணைத் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிபுணர்கள் நிதி ஆயோக் தலைவர் பிரதமருக்கு நேரடியாக பதில் சொல்வர்.

கூற்று 2: திட்ட ஆணையத்தில் தேசிய வளர்ச்சிக் குழுவிடம் அதன் அறிக்கை அளிக்கப்படும்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

பசுமைப் புரட்சி எதைக் குறிப்பிடுகிறது.

A) பசுமை வளங்கள் பயன்படுத்துவது

B) அதிக பயிர் வளர்ப்பு

C) வீரிய விதைகள் திட்டம்

D) பசுமைப் பயிரிடல்

(குறிப்பு: பசுமை புரட்சியின் உயர் மகசூல் அளிக்கும் விதைகளும் பயிரிடும் முறைகளும் விவசாயிகளுக்கு ஊக்கமளித்தன.)

எந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் பசுமைப் புரட்சி கொண்டு வரப்பட்டது?

A) நான்காவது ஐந்தாண்டு திட்டம்

B) ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்

C) ஆறாவது ஐந்தாண்டு திட்டம்

D) ஏழாவது ஐந்தாண்டு திட்டம்

நிதி ஆயோக் குறித்த கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.

1. நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் பிரதமரால் நியமிக்கப்படுகிறார்.

2. இதன் ஆளுநர் குழுவில் முதலமைச்சர்களும், துணை நிலை ஆளுநர்களும் இடம்பெறுவர்.

3. இதன் உறுப்பினர் செயலர் பிரதமரால் நியமிக்கப்படுவார். இவர் தலைமை நிர்வாக அதிகாரி என்று அழைக்கப்படுகிறார்.

4. தேவையை பொறுத்து அவ்வப்போது இதன் பகுதி நேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.

5. திட்ட ஆணையத்தை விட அதிகமான எண்ணிக்கையில் முழுநேர உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்கும்.

A) 1 மட்டும் தவறு

B) 1, 3 தவறு

C) 5 மட்டும் தவறு

D) 1, 5 தவறு

(குறிப்பு: நிதி ஆயோக்கின் முழு நேர உறுப்பினர்களின் எண்ணிக்கை திட்ட ஆணையத்தை விட குறைவாக இருக்கும்.)

கூற்று 1: திட்ட ஆணைய பங்களிப்பு என்பது விரிந்த திட்டங்களை உருவாக்குவது என்றாலும் அதன் தகுதி ஆலோசனை வழங்குதல் என்று அளவிலேயே இருந்தது.

கூற்று 2: நிதி ஆயோக் மாநிலங்களின் தேவைக்கேற்ப ஆதாரங்களை ஒதுக்கீடு செய்யும் அதிகாரங்களை கொண்டு இருக்கிறது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

திட்ட ஆணையம் குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.

1. இதன் துணைத் தலைவராக கேபினட் அமைச்சர் தகுதி கொண்ட ஒருவர் நியமிக்கப்படுவார்.

2. செயலர்கள் அல்லது உறுப்பினர் செயலர்கள் வழக்கமான செயல் முறைகளின் கீழ் நியமிக்கப்படுகிறார்கள்.

3. திட்ட ஆணையத்தில் பகுதி நேர உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான பகுதி வழங்கப்படவில்லை.

4. கடைசி திட்ட ஆணையத்தில் பதினெட்டு முழு நேர உறுப்பினர்கள் இருந்தனர்.

A) அனைத்தும் சரி

B) 2, 3, 4 சரி

C) 1, 2, 3 சரி

D) 1, 3, 4 சரி

(குறிப்பு: கடைசி திட்ட ஆணையத்தில் எட்டு முழு நேர உறுப்பினர்கள் இருந்தனர்.)

கீழ்க்கண்டவற்றுள் நிதி ஆயோக் தொடங்கப்பட்ட பின்னர் முன் முயற்சி மேற்கொண்ட திட்டங்கள் எவை?

1. பதினைந்தாண்டு செயல்திட்டம்

2. ஏழு ஆண்டு கண்ணோட்டம்

3. நகர்புற மாற்றம் மற்றும் மறு உருவாக்கத்திற்கான அடல் திட்டம்

4. டிஜிட்டல் இந்தியா

5. அடல் புத்தாக்க திட்டம்

A) அனைத்தும்

B) 1, 2, 4, 5

C) 1, 3, 4, 5

D) 2, 3, 4, 5

(குறிப்பு: 2018-2022 காலக்கட்டத்திற்கான வளம் குன்றா வளர்ச்சி வடிவமைப்பு ஒன்றில் நிதி ஆயோக் கையொப்பமிட்டுள்ளது.)

நில உடமையாளர்கள் தங்களிடம் அதிகமாக உள்ள உபரி நிலங்களை தானமாக வழங்கும் பூமிதான இயக்கத்தினை தொடங்கி வைத்தவர்

A) ஜவஹர்லால் நேரு

B) வல்லபாய் படேல்

C) வினோபா பாவே

D) ஜெகன்நாதன்

(குறிப்பு: இவ்வாறு பெறப்பட்ட உபரி நிலங்கள் நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட்டன. ஏழை விவசாயிகளுக்கு உதவும் வகையில் சர்வோதயா இயக்கம் கூட்டுறவு சங்கங்களை அமைத்து வலுப்படுத்தின.)

கூற்று 1: தமிழ்நாட்டில் கிராமப்புற மக்கள் மத்தியில் பூமிதான இயக்கமும் சர்வோதயா இயக்கமும் வலுப்பெற அரும்பாடுபட்டவர்கள் ஜெகன்நாதன், கிருஷ்ணம்மாள் தம்பதியர் ஆவர்.

கூற்று 2: 1950 – 60களில் நில உச்சவரம்பிற்கான சட்டங்கள் பல்வேறு மநிலங்களில் இயற்றப்பட்டன.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: நிலம் சமமாக பிரித்து வழங்கப்பட வேண்டும் என்பதுதான் சுதந்திர இந்தியாவில் கவனம் பெற்ற முதல் பிரச்சனையாக அமைந்தது.)

இந்திய அரசமைப்பு முகப்புரையில் சமதர்மம் என்ற சொல் சேர்க்கப்பட்ட ஆண்டு

A) 1951 B) 1972 C) 1976 D) 1978

கூற்று 1: அரசமைப்பில் அந்தந்த மாநிலங்களே தமக்கான நிலச்சீர்திருத்தச் சட்டங்களை உருவாக்கி கொள்ளும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

கூற்று 2: விவசாயிகள் மத்தியில் நிலவும் வறுமை, ஏழை – பணக்கார ஏற்றத்தாழ்வு, ஆகியவற்றிற்கு முடிவு கண்டு சமூக-பொருளாதார சமத்துவத்தை உருவாக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு கொள்கைக்கான வழிகாட்டு நெறிகள் அரசுக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்துள்ளது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

நிலச்சீர்திருத்தங்கள் எத்தனை பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன?

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு:

முதல் பிரிவு குத்தகை விவசாய முறை தொடர்பான சட்டங்களை இயற்றுவதாகும். இச்சட்டங்கள் மூலமாக குத்தகை விவசாய ஒப்பந்தங்கள் முறைப்படுத்தப்பட்டன.

இரண்டாவது, இடைத்தரகர்களை தடை செய்யும் நிலச்சீர்திருத்த சட்டங்கள் ஆகும்.

மூன்றாவது, நிலச்சீர்திருத்த சட்டங்கள் ஒருவர் எவ்வளவு நிலத்தை உரிமையாக வைத்துக் கொள்ளலாம் என்பதை வரையறை செய்வதாகும்.

நான்காவது, பிரிவு நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் நாம் மாறுபட்ட நிலங்களை வைத்திருப்பது தொடர்பானதாகும்.)

கீழ்க்கண்டவற்றுள் நிலச்சீர்திருத்தங்களின் நோக்கங்களாக கருதப்படுபவை எவை?

1. ஜமீன்தாரி முறை ஒழிப்பு, இடைத்தரகர் முறை ஒழிப்பு

2. நில உச்சவரம்பு கொண்டுவருதல்

3. குத்தகை விவசாயிகள், உழவர்கள், விவசாய தொழிலாளர்கள் பாதுகாப்பு

4. விவசாய சமுதாயங்கள் இடையே கூட்டுறவு

A) அனைத்தும்

B) 1, 2, 3

C) 2, 3, 4

D) 1, 2, 4

அனைத்து மாநிலங்களிலும் இடைத்தரகர் முறை _____________ ஆண்டுக்கு முன்னதாகவே தடை செய்யப்பட்டுவிட்டது.

A) 1956 B) 1957 C) 1958 D) 1959

(குறிப்பு: காலனி ஆட்சியில் ஜமீன்தார்களின் கீழ் பணியாற்றிய இடைத்தரகர்கள் குத்தகை வாரம் வசூலிக்கும்போது அரசுக்கு அளிக்க வேண்டியதை விட மிக அதிகமான பங்கினை எடுத்துக்கொண்டு உபரியை தமக்காக வைத்து கொண்டனர்.)

கீழ்க்கண்ட எந்த மாநிலங்களில் ஜமீன்தாரர் முறை ஒழிப்பு அமல்படுத்துவது எளிமையாக அமைந்தது?

1. தமிழ்நாடு 2. உத்திரப்பிரதேசம்

3. மகாராஷ்டிரா 4. மத்தியப்பிரதேசம்

A) 1, 2 B) 2, 3 C) 1, 4 D) 2, 4

(குறிப்பு: உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பத்திரப்பதிவுகள் முறை மற்றும் நிர்வாக இயந்திரம் ஏற்கனவே இருந்தது காரணமாகும்.)

கூற்று 1: நில உடமை மற்றும் பயன்பாட்டில் சமத்துவத்தை எட்டும் வகையில் நில உடமைக்கு உச்சவரம்பு விதிக்கும் உச்சவரம்பு சட்டங்கள் அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரப்பட்டன.

கூற்று 2: அசாம், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நில உச்சவரம்பு முறையே 50 ஏக்கர், 22.75 ஏக்கர், 25 ஏக்கர் என ஒரே சீராக அமைந்தது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: மாநிலங்களுக்குள் நிலவிய நில உச்சவரம்பு வேறுபாடுகள் காரணமாக இது ஒரு அரசியல் பிரச்சனையாக மாறியது. இதனால் இந்த நில உச்சவரம்பு சட்டங்கள் முறையாக அமல்படுத்த இயலவில்லை.)

ஒருங்கிணைந்த தஞ்சை பகுதியில் நில உடமைத்துவ பண்ணையடிமை முறையினால் பாதிக்கப்பட்ட சிறு குத்தகை விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாக்க பண்ணையாள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு

A) 1951 B) 1952 C) 1953 D) 1954

(குறிப்பு: இச்சட்டம் காலத்தின் தேவைக்கேற்ப தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் சிறு குத்தகை விவசாயிகள் தங்கள் விளைச்சலில் நியாயமான பங்கினை பெற்றனர். அவ்வாறு குத்தகை விவசாயிகளுக்கு விளைச்சலில் நியாயமான பங்கினை வழங்காதவர்களிடம் இருந்து நிலம் பெறப்பட்டு உழுபவருக்கே நிலம் சொந்தம் எனும் அடிப்படையில் வழங்கப்பட்டது.)

கூற்று 1: நில உச்சவரம்புச் சட்டம், 1961 நிறைவேற்றப்பட்டு அவ்வப்போது காலத்தின் தேவைக்கேற்ப விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கூற்று 2: இதன் மூலம் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக நிலம் வைத்திருப்பவர்களிடம் இருந்து நிலம் பெறப்பட்டு நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

இந்தியக் கூட்டுறவுச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

A) 1903 B) 1904 C) 1932 D) 1934

(குறிப்பு: இந்தியக் கூட்டுறவுச் சட்டத்தின் அடிப்படையில் அன்றைய சென்னை மாகாண கூட்டுறவுச் சட்டம் 1932 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.)

சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

1. கூட்டுறவு வங்கிகள், நிலவள வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் என மூன்று வழிகளில் கூட்டுறவு அமைப்புகள் இயங்குகின்றன.

2. வேளாண் தொழில்கள் மட்டுமல்லாமல் கைத்தறி நெசவு, பட்டு நெசவு, மண்பாண்டம் செய்தல் போன்ற பல கைவினைத் தொழில்களுக்கும் கூட்டுறவு அமைப்புகள் இயங்குகின்றன.

3. தமிழ்நாட்டில் 10,000க்கும் அதிகமான கூட்டுறவு அமைப்புகள் இயங்குகின்றன.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

காங்கிரசு அரசு மத்திய-மாநில அரசுகளில் விவசாயக் கொள்கையை கொண்டு வந்ததன் நோக்கம்

A) வேளாண் பொருட்களின் விலை ஏற்றம்

B) வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க

C) வறுமையை ஒழிக்க

D) வேளாண்மை தொழிலில் நிலவிய சுரண்டலை தடுக்க

(குறிப்பு: விவசாய பிரிவினர் அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இச்சட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் திட்ட ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டன.)

கூற்று: ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வேளாண்மை, தொழில்மயமாக்கம் இரண்டும் சமமுக்கியத்துவம் கொண்டதாகும்.

காரணம்: விவசாய நலன்களில் சமரசம் செய்து கொள்ளாமல் தொழிற்துறை மேம்படுத்தப்பட வேண்டும்.

A) கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணமானது கூற்றுக்கு சரியான விளக்கம்

B) கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணமானது கூற்றுக்கு சரியான விளக்கமல்ல

C) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

D) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

1960களின் இறுதி வரை 1.88 இலட்சம் உறுப்பினர்களுடன் _____________ கூட்டுறவு விவசாய சங்கங்கள் இயங்கின.

A) 5,768 B) 6,894 C) 7,294 D) 7,924

(குறிப்பு: இந்த கூட்டுறவு விவசாய சங்கங்களின் கீழ் 3.93 இலட்சம் ஹெக்டர் பயிரிடப்பட்டது.)

உள்கட்டமைப்பு உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்கு நிலம் தேவைப்படும்போது அந்நிலங்களை வைத்திருப்போரிடமிருந்து கையகப்படுத்துவதற்காக மத்திய அரசு சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்பட்ட ஆண்டு

A) 2010 B) 2011 C) 2012 D) 2013

(குறிப்பு: 2013ல் திருத்தம் செய்யப்பட்ட சட்டம் நிலச்சட்டம் என அழைக்கப்படுகிறது.)

நிலம் கையகப்படுத்தும்போது வெளிப்படைத்தன்மை, நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் மறுக்குடியிருப்பு (திருத்தம்) சட்டம் 2015, நிலப்பயன்பாட்டில் ______________ வகைமைகளை உருவாக்கியது.

A) 3 B) 4 C) 5 D) 6

(குறிப்பு:

பாதுகாப்பு

ஊரக உள்கட்டமைப்பு

எளிய மக்கள் வீட்டு வசதித் திட்டங்கள்

தொழிற்சாலைத் தொகுப்பு

அரசு, தனியார் பங்கேற்புடனான உள்கட்டமைப்புத் திட்டங்கள் மத்திய அரசு நிலங்களில்)

LARR Act 2013 சட்டத்தின்படி அரசு தனியார் பங்களிப்புத் திட்டங்களில் _________ விழுக்காடு நில உரிமையாளர்களின் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

A) 60 B) 70 C) 80 D) 90

(குறிப்பு: LARR Act 2013 சட்டத்தின்படி தனியார் நிலங்களுக்கு நிலம் கையகப்படுத்த அந்நிலத்தின் உரிமையாளர்களில் 80 விழுக்காடு உரிமையாளர்களின் ஒப்புதல் பெறுவது, அரசு தனியார் பங்களிப்புத் திட்டங்களில் 70 விழுக்காடு நில உரிமையாளர்களின் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.)

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு _______________ சதவீதம் ஆகும்.

A) 8-10% B) 9-12% C) 10-15% D) 12-15%

(குறிப்பு: இந்தியாவின் பொருளாதாரச் செயல்பாடுகளில் வேளாண்மைத் தொழில்தான் மிகவும் அடர்த்தியாகச் செயல்படும் தொழிலாக உள்ளது.)

நிதி ஆயோக் அமைப்பினை கொண்டு வந்த பிரதமர்

A) மன்மோகன் சிங்

B) நரசிம்ம ராவ்

C) வாஜ்பாய்

D) நரேந்திர மோடி

விடுதலையை அடுத்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை ஆண்டுக்கு _____________ சதவீதம் அதிகரித்து வந்தது.

A) 1.5% B) 2% C) 2.5% D) 3%

(குறிப்பு: 1960களில் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப உணவுத் தேவையை ஈடுகட்டுவதில் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது. இதையொட்டியே பசுமைப் புரட்சி உருவானது.)

ஃபோர்ட் அறக்கட்டளை பரிந்துரைகள் அடிப்படையில் புதிய வேளாண் கொள்கை உருவாக்கப்பட்ட ஆண்டு

A) 1951 B) 1956 C) 1960 D) 1966

(குறிப்பு: இந்தியாவின் உணவு நெருக்கடியும் அதை எதிர்கொள்ளும் வழிகளும் எனும் தலைப்பில் அளிக்கப்பட்ட பரிந்துரை அறிக்கையில் அதிக விளைச்சல் அளிக்கும் விதைகளைப் பயன்படுத்துதல், வேளாண் நடவடிக்கைகளை இயந்திரமயமாக்குதல் மூலம் உற்பத்தி முறைகள் தீவிரமாதல், போதுமான உரங்களைப் பயன்படுத்துதல், விளைச்சலைச் சேமிக்கும் முறைகள், விளைபொருள் வீணாவதைத் தவிர்க்கும் முறைகள் போன்ற முன்னேற்றம் காணப்பட்டு உணவுத் தேவையை நிறைவு செய்ய இயலும் என்று வல்லுநர்கள் கூறியிருந்தனர்.)

சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

1. ஃபோர்ட் அறக்கட்டளை பரிந்துரைகளை ஏற்று அமல்படுத்தி மெக்சிகோ பெரும் வளர்ச்சி கண்டிருந்தது.

2. பிலிப்பைன்ஸ் நாடும் விவசாய உற்பத்தியில் தன்னிறைவு காண பரிந்துரைகளை ஏற்றது.

3. வேளாண் அறிவியலாளர் M.S.சுவாமிநாதன் அவர்கள் “பசுமைப் புரட்சியின் தந்தை” என அழைக்கப்படுகிறார்.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

சரியான கூற்றை தேர்ந்தெடு.

1. பசுமைப் புரட்சியின் முதல் கட்டமாக 1960 இல் ஐந்து மாநிலங்களில் ஐந்து மாவட்டங்கள் முன்மாதிரி மாவட்டங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அடர்த்தியான பகுதி மேம்பாட்டுத் திட்டம் (IADP) எனும் பெயரில் செயல்படுத்தப்பட்டது.

2. இதன் விளைவுகள் திருப்தியாக இருந்ததால் பிற மாநிலங்களுக்கும் மாநிலத்துக்கு ஒரு மாவட்டம் என விரிவுபடுத்தப்பட்டது.

3. இது 1965 இல் 144 மாவட்டங்கள் என மேலும் விரிவடைந்தது.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: பசுமைப் புரட்சியின் முதல் கட்டமாக 1960 இல் ஏழு மாநிலங்களில் ஏழு மாவட்டங்கள் முன்மாதிரி மாவட்டங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அடர்த்தியான பகுதி மேம்பாட்டுத் திட்டம் (IADP) எனும் பெயரில் செயல்படுத்தப்பட்டது.)

IADP திட்டம் தொடக்கத்தில் ____________ஹெக்டேர் நிலங்களில் செயல்படுத்தப்பட்டது.

A) 2 மில்லியன்

B) 8 மில்லியன்

C) 20 மில்லியன்

D) 70 மில்லியன்

(குறிப்பு: இந்த திட்டம் படிப்படியாக மேலும் விரிவுபடுத்தப்பட்டு 70 மில்லியன் அதாவது 7 கோடி ஹெக்டேர் நிலங்களில் செயல்படுத்தப்பட்டது. இது இந்தியாவின் மொத்த நிலங்களில் 40% ஆகும். இந்த மாபெரும் வெற்றியே பசுமைப் புரட்சியாக எழுச்சி கண்டது.)

கூற்று 1: பாசன வசதிகள் அதிகரிப்பு, புதிய உரங்களின் பயன்பாடு ஆகியனவே இந்திய பசுமைப் புரட்சி என அறியப்படுகிறது.

கூற்று 2: பசுமைப் புரட்சியின் மூலம் 1967-78 இல் வேளாண் உற்பத்தி 50% அதிகரித்தது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

கூற்று 1: பசுமைப் புரட்சியின் நல்விளைவுகள் கோதுமை விளைவிக்கும் பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் துரிதமாகவே காணப்பட்டன.

கூற்று 2: நெல் பயிரிடும் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகம் போன்ற மாநிலங்கள் பசுமைப் புரட்சியில் குறைவான வெற்றியைக் கண்டன.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

1950களில் நிலவிய உணவு பற்றாக்குறை காரணமாக _______________ திட்டத்தின் கீழ் அமெரிக்காவிலிருந்து உணவுத் தானியங்களை இந்தியா இறக்குமதி செய்தது.

A) IADP B) PQL30 C) LP40 D) PL40

(குறிப்பு: பசுமைப் புரட்சியின் காரணமாக இந்தியாவில் வேளாண் உற்பத்தி இரண்டிலிருந்து மூன்று மடங்குகள் அதிகரித்தது.)

கீழ்க்கண்டவற்றுள் பசுமைப் புரட்சியின் பின்னடைவுகளாக கருதப்படுபவை எவை?

1. பகுதி சார்ந்த, மகசூல் சார்ந்த, பண்ணைமுறை சார்ந்த வேறுபாடுகள்.

2. ஏழை, பணக்கார விவசாயிகளிடம் காணப்பட்ட நீண்ட இடைவெளி.

3. வேளாண் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தேவையான தொடக்க முதலீடு, சிறு விவசாயிகளிடம் இல்லாதது.

4. மகசூலை அதிகரிப்பதற்காக கேடு விளைவிக்கும் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகமாக பயன்படுத்தியது.

5. புதிய தொழில்நுட்பப் பயன்பாட்டை சமூக மயப்படுத்துவதிலும் முன் தயாரிப்பிலும் பின்னடைவு.

6. மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த இயலாததால் இது ஒரு முடிவில்லா செயல்முறையாக நீண்டது.

A) அனைத்தும்

B) 1, 2, 4, 5

C) 2, 3, 4, 5

D) 1, 2, 4, 6

கூற்று: பசுமைப் புரட்சியின் காரணமாக இந்தியாவின் அந்நிய செலவாணி வரவு அதிகரித்தது.

காரணம்: பசுமைப் புரட்சியில் பணப்பயிர்கள் மற்றும் நறுமணப் பொருள்கள் உற்பத்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பணப்பயிர்களை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவானது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்

D) கூற்று, காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கமல்ல

தேசிய பால்வளம் மேம்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சி திட்டமாக தொடங்கப்பட்ட ஆண்டு

A) 1950 B) 1960 C) 1970 D) 1980

(குறிப்பு: இந்த மத்திய அமைப்பு பால் உற்பத்தியை அதிகப்படுத்தி நாடு முழுவதும் விநியோகிப்பதால் பால்பொருள் பற்றாக்குறை தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.)

தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

1. தமிழ்நாட்டில் கூட்டுறவு முறையில் பால் வளத்தைப் பெருக்கும் வகையில் 1962இல் தமிழ்நாடு பால்வள மேம்பாட்டுக் கழகம் தொடங்கப்பட்டது.

2. இது டாக்டர் குரியன் வழியில் 1981இல் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பாக விரிவுபடுத்தப்பட்டது.

3. ஊரக, ஒன்றிய, மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் இது இயங்கியது. தற்போது ஆவின் எனும் வணிக முத்திரையுடன் தமிழகம் முழுவதும் பால் தேவையை தன்னிறைவு செய்கிறது.

A) 1, 2 தவறு

B) 1 மட்டும் தவறு

C) 2 மட்டும் தவறு

D) 3 மட்டும் தவறு

(குறிப்பு: தமிழ்நாட்டில் கூட்டுறவு முறையில் பால் வளத்தைப் பெருக்கும் வகையில் 1972இல் தமிழ்நாடு பால்வள மேம்பாட்டுக் கழகம் தொடங்கப்பட்டது.)

இந்தியாவில் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்காக கொண்டு வரப்பட்டத் திட்டத்திற்கு ” என்றும் நீங்கா பசுமைப் புரட்சி” என்று பெயரிட்டவர்

A) நார்மன் போர்லாக்

B) M.S.சுவாமிநாதன்

C) சுப்பிரமணியன்

D) R.K.V. ராவ்

2018-19 இல் தமிழ்நாட்டில் தனிநபர் பால் நுகர்வு நாள் ஒன்றுக்கு

A) 169 கிராம்

B) 188 கிராம்

C) 248 கிராம்

D) 268 கிராம்

(குறிப்பு: ஆவின் செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் தனிநபர் பால் நுகர்வு 1993-94 இல் நாள் ஒன்றுக்கு 169 கிராம் என்பதிலிருந்து 2018-19 இல் 268 கிராமாக அதிகரித்துள்ளது.)

“இந்தியாவில் வெண்மைப் புரட்சி தொடங்கப்பட்டு பால் உற்பத்தியில் தன்னிறைவு காணப்பட்டது. இச்சாதனை முழுவதும் கூட்டுறவு முறையில் எட்டப்பட்டது.” என்று கூறியவர்

A) இந்திரா காந்தி

B) நார்மன் போர்லாக்

C) ராஜ் கிருஷ்ணா

D) வர்கீஸ் குரியன்

1950இல் ஆனந்த் பால் ஒன்றிய நிறுவனம் (அமுல்) வர்கீஸ் குரியன் அவர்களால் _____________ மாநிலத்தில் தொடங்கப்பட்டது.

A) மகாராஷ்டிரா

B) குஜராத்

C) ராஜஸ்தான்

D) தமிழ்நாடு

(குறிப்பு: தொடக்கத்தில் அமுல் நிறுவனத்தில் 200க்கும் குறைவானவர்களே உறுப்பினர்களாக இருந்தனர். இந்த விவசாயிகளிடம் இருந்து பால் சேகரிக்கப்பட்டு மும்பை நுகர்வோர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.)

1966இல் நாடு தழுவிய வெண்மைப் புரட்சியை தொடங்கி வைத்த பிரதமர்

A) ஜவஹர்லால் நேரு

B) இந்திராகாந்தி

C) லால் பகதூர் சாஸ்திரி

D) மொரார்ஜி தேசாய்

(குறிப்பு: இந்த தேசிய முயற்சிக்கு வர்கீஸ் குரியன் தலைமையாக நியமிக்கப்பட்டார்.)

கூற்று 1: நாடு முழுவதும் 1970களில் எழுச்சிக்கண்ட வெண்மைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன் ஆவார்.

கூற்று 2: வர்கீஸ் குரியனின் வழிகாட்டல், திட்டமிடல் மற்றும் தொழில்முறை அணுகுதல் காரணமாக இந்தியாவின் வெண்மைப்புரட்சி வெற்றிக் கண்டது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

கீழ்க்கண்டவற்றுள் வெண்மைப் புரட்சியின் இலக்குகள் எவை?

1. கிராமப்புற பால் பண்ணைகளில் வருவாய் அதிகரித்தல்

2. நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்குதல்

3. நாட்டில் அந்நிய செலவாணி இருப்புக்கு சுமையாக இறக்குமதி செய்வதைக் குறைத்தல்

4. தேசிய பால் தொகுப்பு உருவாக்குதல்

5. நுண்ணூட்டத் தேவைகளை சமாளித்தல்

A) அனைத்தும் B) 1, 2, 3, 5

C) 2, 3, 4, 5 D) 1, 2, 4, 5

“1955இல் நாம் ஆண்டுக்கு 500 டன் வெண்ணெய் இறக்குமதி செய்து வந்தோம். இன்று நமது கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே ஆண்டுக்கு 12,000 டன்களுக்கு அதிகமாக உற்பத்தி செய்கின்றன. இதேபோல் 1955 இல் நாம் 3000 டன் குழந்தைகளுக்கு உணவு இறக்குமதி செய்து வந்தோம். இன்று நமது கூட்டுறவு சங்கங்கள் 38,000 டன்களுக்கு அதிகமாக உற்பத்தி செய்கின்றனர். அனைத்து வகையான பால் மற்றும் பால் பொருள்களை இறக்குமதி செய்யும் நிலைமை 1975 இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.” என்று கூறியவர்

A) இந்திரா காந்தி

B) நார்மன் போர்லாக்

C) ராஜ் கிருஷ்ணா

D) வர்கீஸ் குரியன்

வெண்மைப் புரட்சி எத்தனை கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டது?

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு:

முதற்கட்டமாக (1970 – 79), நாட்டின் முக்கிய பால் பண்ணைகளில் 18 பண்ணைகள் தேர்வு செய்யப்பட்டு மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் நுகர்வோரோடு இணைக்கப்பட்டன.

இரண்டாம் கட்டத்தில் (1981-1985), பால் பண்ணைகளின் எண்ணிக்கை 18லிருந்து 136 ஆக அதிகரிக்கப்பட்டு 290 நகர்ப்புற சந்தைகளில் நுகர்வோருடன் இணைக்கப்பட்டு பால் விநியோகம் வழங்கப்பட்டது.

மூன்றாவது கட்டத்தில் (1985-1996) கூட்டுறவு பால் சங்கங்கள் தமக்கு தேவையான இடுபொருள்களை கொள்முதல் செய்வதற்கும் சந்தையை அதிகரிப்பதற்கும் ஏற்ற வகையில் வலுப்பெற்று விரிவடைந்தன.)

முதற்கட்ட வெண்மைப் புரட்சியின் மொத்த மதிப்பீடு

A) ₹ 96 கோடி

B) ₹ 112 கோடி

C) ₹ 116 கோடி

D) ₹ 118 கோடி

உள்நாட்டு பால் பவுடர் உற்பத்தியின் அளவு வெண்மைப் புரட்சி திட்டத்திற்கு பின் 1989 இல் ______________ டன்களாக உயர்ந்தது.

A) 1 இலட்சத்து 20 ஆயிரம்

B) 1 இலட்சத்து 40 ஆயிரம்

C) 2 இலட்சத்து 20 ஆயிரம்

D) 2 இலட்சத்து 40 ஆயிரம்

(குறிப்பு: உள்நாட்டு பால் பவுடர் உற்பத்தியின் அளவு வெண்மைப் புரட்சி திட்டத்திற்கு முந்தைய ஆண்டு 22 ஆயிரம் டன்களாக இருந்தது.)

பசுமை புரட்சியின் காரணமாக 1988-89 இல் பால் பண்ணைகளின் எண்ணிக்கை ______________ ஆக அதிகரித்தது.

A) 98 B) 120 C) 152 D) 173

கூற்று 1: உலகின் மிகப்பெரிய பால் மாடுகள் வளர்ப்பு நாடாக இந்தியா திகழ்கிறது.

கூற்று 2: இந்திய கால்நடை வளர்ப்பாளர்களின் மத்தியில் பசு, எருமை போன்ற பால் மாடுகளை வளர்ப்பதில் அரிய ஆர்வம் ஏற்பட்டதால் தற்போது நாட்டில் 500 மில்லியன் அதாவது 50 கோடி பால் மாடுகள் உள்ளன.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: இந்தியாவின் நீள-அகலங்களில் குறுக்கு-நெடுக்கிலுமாக 22 மாநிலங்களில் 180 மாவட்டங்களில் 1 இலட்சத்து 25 ஆயிரம் கிராமங்களில் பால் கூட்டுறவு இயக்கம் பரந்து விரிந்துள்ளது.)

தொழில்மயமாக்கல் தொடர்பாக நமது அரசுகள் மேற்கொண்ட முன் முயற்சிகள் காரணமாக இந்தியா உலகின்______________வது பெரிய தொழிற்துறை நாடாக விளங்குகிறது.

A) 4 B) 5 C) 6 D) 7

1948ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம் குறித்த கூற்றுகளில் சரியானதைத் தேர்ந்தெடு.

1. பொதுத்துறை மற்றும் தனியார் துறைகள் தங்களுக்கான பகுதிகளில் தொடர்ந்து இயங்கும் என்பதை வலியுறுத்தியது.

2. ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் உற்பத்தி, மின்னணு ஆற்றல் உற்பத்தி, கட்டுப்பாடு மற்றும் இரயில்வே போன்றவற்றை பொதுத்துறை நிறுவனங்கள் கட்டுப்படுத்தின. இத்துறையில் மத்திய அரசு ஏகபோகம் செலுத்தியது.

3. நிலக்கரி, இரும்பு, ஸ்டீல், விமானம் உற்பத்தி, கப்பல் கட்டுதல் போன்ற துறைகளிலும் அரசு கட்டுப்பாடு செலுத்தியது.

4. மீதமுள்ள துறைகளில் தனியார் நிறுவனங்களும் கூட்டுறவு நிறுவனங்களும் இயங்கின.

A) அனைத்தும் சரி

B) 1, 2, 4 சரி

C) 1, 2, 3 சரி

D) 1, 3, 4 சரி

லைசன்ஸ் ராஜ்ஜியம் எனப்படும் உரிமம் முறையிலிருந்து பெரிய தொழில்களை விடுவிப்பதை நோக்கமாக கொண்ட தொழிற்கொள்கை

A) 1948 B) 1956 C) 1977 D) 1980

(குறிப்பு: இந்த தாராளவாதக் கொள்கையால் ஏகபோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் (MRTP), அந்நிய செலவாணிச் சட்டம் போன்றவற்றின் பிடியிலிருந்து பெரும் நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டது. மேலும், பின்தங்கிய பகுதியென்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் புதிய தொழில்களை தொடங்குவோருக்கு உரிமங்களிலிருந்து முழுவிலக்கு அளிக்கப்பட்டது.)

1956 ஏப்ரலில் நிறைவேற்றப்பட்ட தொழிற்கொள்கை தீர்மானத்தின் படி ____________ வகைத் தொழில்கள் வகைமைப்படுத்தப்பட்டன.

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: மூன்று வகை தொழில்கள்

முழுவதும் அரசுக்கட்டுப்பாட்டின் கீழ் வரும் நிறுவனங்கள்

அரசும் தனியாரும் இணைந்து நிர்வகிக்கும் நிறுவனங்கள்

முழுவதும் தனியாருக்கு ஒதுக்கப்பட்ட தொழில்கள்)

கூற்று 1: 1977 டிசம்பரில் ஜனதா அரசு புதிய தொழிற்கொள்கையை அறிவித்தது.

கூற்று 2: இதன் முக்கிய அம்சம் சிறு தொழில்கள் துறை, குறுந்தொழில்கள், குடிசைத் தொழில்கள், சிறுதொழில்கள் மற்றும் வீட்டுத் தொழில்கள் என பிரிக்கப்பட்டன.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: சிறுதொழில்கள் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும் என்பதும் செல்வமும் அதிகாரமும் பெரிய தொழில்களின் கைககளில் குவிவதைத் தடுக்கும் என்பது இக்கொள்கையின் நோக்கமாகும். இருந்தபோதும், பெரிய தொழில்கள் விரிவாக்கம் செய்ய அல்லது புதிய தொழில்களை தொடங்க ஜனதா அரசு விரைவில் கவிழ்ந்ததால் இக்கொள்கை மாற்றம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.)

தொழில்ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் அணுமின் நிலையங்கள் அமைத்து தொழில் வளர்ச்சியை ஒருங்கிணைப்பதற்கு அழுத்தம் கொடுத்த தொழிற்கொள்கை

A) 1948 B) 1956 C) 1977 D) 1980

(குறிப்பு: 1980 ஜூலையில் ஒரு புதிய தொழிற்கொள்கை காங்கிரசு அரசால் அறிவிக்கப்பட்டது. தொழிற்கொள்கை தீர்மானம் 1956இல் ஏற்பட்ட வளர்ச்சியினை அங்கிகரிக்கும் விதமாக இத்தொழிற்கொள்கை கொண்டுவரப்பட்டது.)

தொழிற்கொள்கை 1980 குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

1. பொதுத்துறை நிறுவனங்கள் பலப்படுத்தப்பட வேண்டிய தேவையை இக்கொள்கை வலியுறுத்தியது.

2. வளர்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறுதொழில் நிறுவனங்களும் குறு தொழில் நிறுவனங்களும் தொடங்கப்பட வேண்டுமென்று ஊக்கப்படுத்தியது.

3. அகல அலைவரிசை எனும் கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது.

4. மூலதனத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூலச்சொத்து வரம்பு ₹20 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது ₹100 கோடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் இச்சட்டத்தின் கீழ் கட்டாய உரிமம் பெறும் நிறுவனங்களாக 56 பெரும் நிறுவனங்கள் இருந்தது 26 ஆக குறைந்தன.

A) 1, 2 தவறு

B) 1, 4 தவறு

C) 2, 3 தவறு

D) எதுவுமில்லை

நாட்டின் பொருளாதார வரலாற்றில் ஒரு மைல் கல் என்று அழைக்கப்படும் 1991 ஆண்டு தொழிற்கொள்கையை அறிமுகப்படுத்தி பிரதமர்

A) மன்மோகன் சிங்

B) P.V.நரசிம்மராவ்

C) ராஜீவ் காந்தி

D) இந்திராகாந்தி

(குறிப்பு: 24.07.1991 அன்று புதிய பொருளாதாரக் கொள்கை அறிவித்த போது டாக்டர் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்தார். இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கையின் தந்தை என்று இவர் அழைக்கப்படுகிறார்.)

புதிய பொருளாதார கொள்கை 1991ன் படி கட்டாயம் உரிமம் பெற வேண்டிய தொழில்களின் பட்டியலில் _____________ தொழில்கள் மட்டுமே இருந்தன.

A) 16 B) 17 C) 18 D) 19

(குறிப்பு: நிலக்கரி, லிக்னைட், பெட்ரோலியம், சர்க்கரை, தொழில்துறை வெடி மருந்துகள், கேடு விளைவிக்கும் இரசாயனப் பொருள்கள், விமானப்படை மற்றும் இராணுவத்திற்கு தேவையான மின்னணுப் பொருள்கள், மருந்துகள் போன்றவை தொடர்பான தொழில்கள் மட்டும் உரிமம் பெறும் தொழில்களின் கீழ் கொண்டுவரப்பட்டன.)

கூற்று 1: புதிய பொருளாதார கொள்கை 1991ன் படி கட்டாயம் உரிமம் பெற வேண்டிய தொழில்களின் பட்டியலிலிருந்து 1993இல் மூன்று தொழில்கள் விடுவிக்கப்பட்டன.

கூற்று 2: அவை மோட்டார் வாகனங்கள், வெள்ளை பொருள்கள் என்று அழைக்கப்படும் குளிரூட்டும் சாதனங்கள், சலவை எந்திரம், குளிரூட்டும் பெட்டிகள் மற்றும் காப்புரிமைப் பெற்ற தோல் பொருள்கள் ஆகும்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

புதிய தொழிற்கொள்கையின் படி பெரும் மூலதனமும், முன்னேறிய தொழில்நுட்பங்களும் தேவைப்படும் தொழில்களில் அந்நிய மூலதனம் ______________ விழுக்காடு அளவிற்கு அனுமதிக்கப்பட்டது.

A) 48 B) 50 C) 51 D) 55

(குறிப்பு: புதிய தொழிற்கொள்கையில் இந்திய பொருள்களை உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய உதவும்படி அந்நிய நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.)

வர்த்தக நடவடிக்கைகள் ஏகபோக தடுப்புச் சட்டம் (MRTP Act), 1969இல் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக போட்டிச்சட்டம் _____________ ஆண்டு கொண்டுவரப்பட்டது.

A) 1970 B) 1982 C) 1998 D) 2002

(குறிப்பு: போட்டிச் சட்டம் 2002 மத்திய குழும நிறுவனங்கள் அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டது.)

போட்டிச் சட்டம் 2002 கீழ்க்கண்ட எந்த ஆண்டுகளில் திருத்தப்பட்டது?

1. 2003 2. 2004 3.2006 4. 2007

5. 2009

A) 1, 3 B) 1, 4 C) 4, 5 D) 3, 5

கூற்று 1: தெற்காசிய நாடுகளிலேயே சுகாதாரம் மற்றும் கல்வி வழங்குவதில் தமிழ்நாடு மாநிலமும் கேரள மாநிலமும் மிக உயர்ந்த நிலையில் காணப்படுகின்றன.

கூற்று 2: அமர்தியாசென், ஜீன் டிரெஸ் இருவரும் எழுதிய நிச்சயமற்ற பெருமை-இந்தியாவும் அதன் முரண்பாடுகளும் (2013) என்ற புத்தகத்தில் வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி போன்ற மனித மேம்பாடுகளின் பல்வேறு அம்சங்களில் தமிழகம் எவ்வாறு முன்னேறியுள்ளது என்பதை தெளிவாக விவரித்துக் கூறியுள்ளனர்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

காவிரி டெல்டா பகுதியில் 1952 இல் ஆய்வு செய்த கேதலீன் ஹாக் அச்சமயத்தில் _____________ பங்கு மட்டுமே குத்தகை விவசாயிகளுக்கு அளிக்குப்பட்டதாக பதிவு செய்துள்ளார்.

A) 5-7% B) 5-9% C) 7-10% D) 8-12%

(குறிப்பு: இத்தகைய சுரண்டலுக்கும் முறைக்கேடான பரிமாணத்திற்கும் எதிராக 1943 இல் இந்திய பொதுவுடைமைக் கட்சியால் விவசாயிகள் சங்கம் தொடங்கப்பட்டது.)

பொதுவுடைமைக் கட்சியால் விவசாயத் தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு

A) 1948 B) 1950 C) 1952 D) 1954

(குறிப்பு: இந்த சங்கம் கிழக்கு டெல்டா பகுதியில் வலுவாக வளர்ந்தது.)

தமிழ்நாடு பயிரிடும் குத்தகைத்தாரர்கள் (தனிப்பிரிவுகள்) சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

A) 1952 B) 1958 C) 1964 D) 1968

(குறிப்பு: இச்சட்டம் குத்தகைப்பாக்கிகளை எளிமையான தவணை முறைகளில் செலுத்துவதை அனுமதித்தது. இதனால் குத்தகை விவசாயிகளின் சுமை குறைந்தது.)

கூற்று 1: தமிழ்நாடு விவசாய நிலங்கள் (குத்தகை உரிமைகள் பதிவு) சட்டம், 1969 குத்தகை விவசாயிகள் விவரங்களை பதிவு செய்வதை கட்டாயமாக்கியது.

கூற்று 2: இந்த சட்டத்தின் கீழ் அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் மட்டும் குத்தகை விவசாயிகளாக சுமார் ஐந்து லட்சம் விவசாயிகளும், குத்தகை நிலங்களாக சுமார் ஏழு இலட்சம் ஏக்கர் நிலமும் பதிவு செய்யப்பட்டன.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

______________ ஆண்டு குத்தகைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குத்தகை விவசாயிகள் அளிக்க வேண்டிய பங்கினை 25% ஆக குறைத்தது.

A) 1969 B) 1972 C) 1798 D) 1979

(குறிப்பு: 1979 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டம் இயற்கைப் பேரிடர் காரணமாக குத்தகை செலுத்த முடியாத நிலமைகள் ஏற்படின் அதற்கான குத்தகை விவசாயிகள் வெளியேற்றப்படுவதையும் தடை செய்தது.)

சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.

1. குடியிருப்போர் உரிமை உறுதிப்படுத்தும் சட்டம், 1971இல் குத்தகை விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்ளின் நலன்களை பாதுகாப்பதில் முக்கிய மைல்கல்லாகும்.

2. இந்த முக்கிய சட்டம் நில உடமைத்துவத்தில் இருந்து நிலமற்ற விவசாயிகளை விடுதலை செய்தது.

3. 1972 இல் தமிழ்நாடு அரசு மற்றொரு சட்டம் இயற்றி அனைத்து குத்தகைப் பாக்கிகளையும் ரத்து செய்தது.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!