Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் 12th History Lesson 2 Questions in Tamil

12th History Lesson 2 Questions in Tamil

2] தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்

இந்திய தேசிய காங்கிரசுக்குள்ளே மிதவாத அரசியலுக்கு எதிராக வெளிப்படையான வெறுப்பு நிலவிய காலக்கட்டம்

A) 19 ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டு

B) 19 ஆம் நூற்றாண்டின் இறுதி பத்தாண்டு

C) 19 ஆம் நூற்றாண்டின் இறுதி முப்பதாண்டு

D) 20 ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டு

(குறிப்பு: இவ்வெறுப்பு முடிவில் ஒரு புதியப் போக்காகத் தோற்றம் பெற்று அது தீவிர தேசியவாதப் போக்கெனக் குறிப்பிடப்பட்டது. தீவிர தேசியவாதிகள், மிதவாத தேசியவாதிகளின் கவனமான அணுகுமுறை, ஆங்கிலேயரிடம் மன்றாடுதல், மனுச் சமர்ப்பித்தல் போன்ற அவர்களின் ‘இறைஞ்சுதல் கொள்கைகளை’ கடுமையாக விமர்சித்தனர்.)

தவறான இணையைத் தேர்ந்தெடு.

1. மகாராஷ்டிரா – பாலகங்காதர திலகர்

2. வங்காளம் – பிபின் சந்திரபால்

3. பஞ்சாப் – லாலா லஜபதி ராய்

A) 1 மட்டும் தவறு

B) 3 மட்டும் தவறு

C) 2 மட்டும் தவறு

D) எதுவுமில்லை

(குறிப்பு: தீவிர தேசியவாதிகளின் போர்க்குணம் மேற்கண்டோரின் தலைமையில் வளர்ச்சி பெற்றது.)

தீவிர தேசியவாத போக்கு வளர்ச்சி பெற்றதற்கான அடிப்படைக் காரணங்கள் எவை?

1. காங்கிரசுக்குள் உருவான உட்குழுக்கள்

2. மிதவாத தேசியவாதிகளின் அரசியல் நடவடிக்கைகளால் ஏற்பட்ட மனச்சோர்வு

3. வங்காளத்தை பிரித்ததற்காக கர்சன் மீது ஏற்பட்ட கோபம்

4. 1857 ஆம் ஆண்டு பெருங்கலகம்

A) அனைத்தும் B) 1, 2, 3 C) 2, 3 D) 1, 3

ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு முதன்மையான எடுத்துக்காட்டு

A) பொதுக்கூட்டங்கள் சட்டம்

B) செய்தித்தாள் சட்டம்

C) வங்கப் பிரிவினை

D) இந்தியப் பத்திரிகைச் சட்டம்

(குறிப்பு: வங்கப்பிரிவினை காலனிய எதிர்ப்பு, சுதேசி, தேசியம் வளர்வதற்கு வினையூக்கியாய் அமைந்தது. பிரிவினைத் திட்டம் முதன்முதலில் மிதவாத தேசியவாதிகளால் எதிர்க்கப்பட்டது.)

கூற்று 1: காந்தியடிகளின் சகாப்தத்திற்கு (1905 – 1911) முந்தைய இந்திய தேசிய இயக்கத்தின் மிக முக்கிய கட்டமாக விளங்கியது சுதேசி இயக்கம்.

கூற்று 2: அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பது, அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி நிலையங்களைப் புறக்கணிப்பது ஆகியன சுதேசி இயக்கத்தின் ஆக்கபூர்வமானத் திட்டங்களாக இருந்தன.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

தவறான இணையைத் தேர்ந்தெடு.

A) பொதுக்கூட்டங்கள் சட்டம் – 1907

B) வெடி மருந்துச் சட்டம் – 1908

C) இந்திய பத்திரிகைச் சட்டம் – 1910

D) தூண்டுதல் குற்றச் சட்டம் – 1918

(குறிப்பு: தூண்டுதல் குற்றச் சட்டம் – 1908, செய்தித்தாள் சட்டம் – 1908)

சரியான இணையைத் தேர்ந்தெடு. (பத்திரிக்கைகள் – செயல்பட்ட இடம்)

1. சுதேசமித்திரன் – தமிழ்நாடு

2. கேசரி – மகாராஷ்டிரா

3. யுகந்தர் – பஞ்சாப்

A) 2 மட்டும் தவறு

B) 2, 3 தவறு

C) 3 மட்டும் தவறு

D) எதுவுமில்லை

(குறிப்பு: யுகந்தர் – வங்காளம்)

இந்தியாவின் தலைமை ஆளுநராகவும், அரசப் பிரதிநிதியாகவும் கர்சன் பிரபு பணி நியமனம் செய்யப்பட்ட ஆண்டு

A) 1899 ஜனவரி 6

B) 1899 ஜனவரி 9

C) 1903 ஜனவரி 8

D) 1903 ஜனவரி 3

(குறிப்பு: தொடர்ந்து ஏற்பட்ட பஞ்சங்கள், பிளேக் நோய் ஆகியவை ஏற்படுத்தியத் தாக்கத்தின் விளைவாய் ஆங்கிலேயரின் செல்வாக்கு மேன்மேலும் குறைந்து கொண்டிருந்த காலமது. கற்றறிந்த இந்திய மக்கள் பிரிவினரின் கருத்துகளை மாற்றுவதற்கு கர்சன் சிறிய அளவிலான முயற்சிகளை மேற்கொண்டார்.)

இந்தியச் செய்திப் பத்திரிக்கைகளின் தேசியவாதத் தன்மையைக் குறைப்பதற்காக அலுவலக ரகசியச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்ட ஆண்டு

A) 1899 B) 1902 C) 1904 D) 1905

கல்கத்தா மாநகராட்சிக் குழுவில் அங்கம் வகித்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கர்சன் பிரபு குறைத்த ஆண்டு

A) 1899 B) 1901 C) 1902 D) 1903

வங்காளம் பிரிக்கப்பட வேண்டியதின் அவசியம் தொடர்பாக ____________ ஆண்டு முதல் விவாதங்கள் நடைபெற்று வந்தன.

A) 1850 B) 1860 C) 1865 D) 1890

(குறிப்பு: மார்ச் 1890இல் வங்கப் பிரிவினைக்கான திட்டத்திற்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது.)

டிசம்பர் 1903இல் இந்தியாவின் பிரதேச மறுவிநியோகம் தொடர்பான குறிப்புகளில் வங்கப் பிரிவினைக்கான திட்டத்தை தீட்டியவர்

A) வெல்லெஸ்லி பிரபு

B) டல்ஹெளசி பிரபு

C) கர்சன் பிரபு

D) மெளன்ட்பேட்டன் பிரபு

(குறிப்பு: கர்சனுடைய இந்தியாவின் பிரதேச மறுவிநியோகம் என்ற குறிப்பே பின்னர் திருத்தம் செய்யப்பட்டு ரிஸ்லி அறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்டது.)

கர்சன் பிரபு அரசப் பிரதிநிதியாக இருந்த காலத்தில் ____________ ஆண்டு இயற்றப்பட்ட பல்கலைக்கழகச் சட்டத்தின்படி கல்கத்தா பல்கலைக்கழகம் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டது.

A) 1901 B) 1902 C) 1903 D) 1904

வங்கப் பிரிவினைக்கு ஆதரவாக ரிஸ்லி அறிக்கை முன்வைத்த காரணங்கள் எவை?

1. வங்காளத்திற்கு சுமை குறைவு

2. அசாமின் முன்னேற்றம்

3. ஐரோப்பிய வணிகர்களின் முன்னேற்றம்

4. இந்து முஸ்லிம் பிரிவினை

A) 1, 2 B) 2, 3 C) 1, 3 D) 2, 4

(குறிப்பு: தொடக்கத்தில் வங்காளத்தின் சில பகுதிகளை மாற்றுவது அல்லது ஏனைய பகுதிகளை மாற்றியமைப்பது என்றிருந்த எண்ணம் டிசம்பர் 1903 முதல் 1905 க்குள் பிரிவினைக்கான முழுத்திட்டமாக மாற்றப்பட்டது.)

கூற்று 1: ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வங்காளத்தில் நடைபெறும் அரசியல் நடவடிக்கைகளை அடக்கி இந்து-முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை உருவாக்குவது என்பதே கர்சனுடைய நோக்கமாகும்.

கூற்று 2: குடிமைப் பணியாளர்கள் முன்வைத்த மாற்றுத் திட்டங்களைக் குறிப்பாக வங்காளத்தை மொழி அடிப்படையில் பிரிப்பது எனும் கருத்து வேண்டுமென்றே கர்சனால் புறந்தள்ளப்பட்டது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: வங்காளத்தை மொழி அடிப்படையில் பிரிப்பது வங்காள அரசியல்வாதிகளை மேன்மேலும் ஒருங்கிணைத்துவிடும் என்பதால் கர்சன் இத்திட்டத்தை ஏற்க மறுத்தார்.)

புவியியல் அடிப்படையில் _____________ஆறு இயற்கையாகவே வங்காளத்தை பிரிப்பதாக அமைந்திருந்தது.

A) ஹூக்ளி

B) தாமோதர்

C) பிரம்மபுத்திரா

D) பாகீரதி

முந்தைய முஸ்லிம் ஆட்சி முதலாக முஸ்லிம் மக்கள் ஒருபோதும் அனுபவித்திராத ஓர் ஒற்றுமையை புதிய மாகாணமான கிழக்கு வங்காளத்தில் அனுபவிப்பார்கள் என கர்சன் முஸ்லிம்களுக்கு உறுதியளித்த நாள் மற்றும் இடம்

A) 1899 பிப்ரவரி, டாக்கா

B) 1899 பிப்ரவரி, அலகாபாத்

C) 1904 பிப்ரவரி, அலகாபாத்

D) 1904 பிப்ரவரி, டாக்கா

(குறிப்பு: கிழக்கு வங்காளத்தில் முஸ்லிம்கள் அதிகம் இருந்தனர். மேற்கு வங்காளத்தில் இந்துக்கள் பெரும்பான்யினராக இருந்தனர். மத்திய வங்கத்தில் இரு சமூகத்தினரும் சம அளவில் வாழ்ந்து வந்தனர்.)

வங்கப் பிரிவினை அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள்

A) 1905 ஜூலை 16

B) 1905 ஜூலை 19

C) 1905 அக்டோபர் 16

D) 1905 அக்டோபர் 19

(குறிப்பு: டிசம்பர் 1903 இல் வங்கப்பிரிவினை அறிவிக்கப்பட்டதில் இருந்தே தீவிர தேசியவாதிகள், மிதவாத தேசியவாதிகள் ஆகிய இருதரப்பினரும் அதை விமர்சனம் செய்தனர்.)

கூற்று 1: வங்கப்பிரிவினைக்கு எதிராக சுரேந்திரநாத் பானர்ஜி, K.K. மித்ரா, பிரித்விஸ் சந்திர ரே போன்றவர்களின் எதிர்வினையானது வேண்டுகோள் விடுப்பது மனுச்செய்வது என்ற அளவோடு சுருங்கிப் போனது.

கூற்று 2: வங்கப் பிரிவினையைத் தடுப்பதில் ஏற்பட்ட தோல்வி, பிபின் சந்திர பால், அஸ்வினி குமார் தத்தா, அரவிந்தகோஷ் போன்ற தலைவர்கள் கொடுத்த அழுத்தம் ஆகியவற்றால் மிதவாத தேசியவாதிகள் தங்கள் உத்திகள் குறித்து மறுபரிசீலனை செய்து புதிய எதிர்ப்பு முறைகளைக் கண்டறிய வற்புறுத்தப்பட்டனர்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: மிதவாத தேசியவாதிகளின் புதிய எதிர்ப்பு முறைகளில் ஒன்றாக ஆங்கிலப் பொருட்களைப் புறக்கணிப்பது என்ற முடிவு ஏற்கப்பட்டது.)

1905 ஜூலை 17ல் கல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் ஆங்கிலப் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அறைகூவல் விடுத்தவர்

A) அரவிந்த கோஷ்

B) சுரேந்திரநாத் பானர்ஜி

C) பிபின் சந்திர பால்

D) அஸ்வினி குமார் தத்தா

(குறிப்பு: ஆகஸ்டு 7இல் கல்கத்தா நகர அரங்கில் நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில் சுதேசி இயக்கம் முறையாகப் பிரகடனம் செய்யப்பட்டது.)

அதிகாரப்பூர்வமாக வங்காளம் பிரிக்கப்பட்ட நாள் _____________.

A) 1905 ஜூலை 19

B) 1905 ஆகஸ்ட் 16

C) 1905 செப்டம்பர் 16

D) 1905 அக்டோபர் 16

(குறிப்பு: வங்காளம் அதிகாரப்பூர்வமாக பிரிக்கப்பட்ட நாளான 1905 அக்டோபர் 16 துக்கதினமாக கடைபிடிக்கப்பட வேண்டுமென தேசியவாதிகளால் அறிவிக்கப்பட்டது.)

“தேசிய வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் தங்களின் சார்பு நிலைக்கு எதிரான புரட்சி” என்று சுதேசி இயக்கத்தின் குறிக்கோள் குறித்து விளக்கியவர்

A) அரவிந்த கோஷ்

B) சுரேந்திரநாத் பானர்ஜி

C) G. சுப்பிரமணியம்

D) கோபால கிருஷ்ண கோகலே

(குறிப்பு: G.சுப்பிரமணியம் என்பவர் சென்னையை சேர்ந்த தேசியவாதி ஆவார்.)

“சுதேசி இயக்கமானது நம்முடையத் தொழில்களின் முன்னேற்றத்திற்கானது மட்டுமல்ல; நமது தேசிய வாழ்க்கை சார்ந்த அனைத்துத் துறைகளின் மேம்பாட்டிற்குமானது.” என்று சுதேசி இயக்கத்தை விளக்கியவர்

A) அரவிந்த கோஷ்

B) காந்தி

C) G. சுப்பிரமணியம்

D) கோபால கிருஷ்ண கோகலே

“சுதேசி என்பது நமக்குள்ளிருக்கும் ஆன்மபலம் அது வெகு தொலைவிலிருந்து கிடைப்பனவற்றை ஒதுக்கி வைத்து நமக்கு வெகு அருகேயுள்ள சுற்றுப்புறத்திலிருந்து கிடைக்கும் பயன்களையும் சேவைகளையும் பயன்படுத்தும் வண்ணம் இங்கு உள்ளவர்களால் தயார் செய்யப்படும் பொருட்களை மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும். அப்படியான தொழில்கள் எங்கு தேவைப்படுகின்றனவோ அங்கே அவைகள் திறம்படவும் முழுமையாகவும் செயல்படச் சேவை செய்ய வேண்டும்” என்று கூறியவர்

A) காந்தியடிகள்

B) மகாதேவ் கோவிந்த ரானடே

C) G. சுப்பிரமணியம்

D) கோபால கிருஷ்ண கோகலே

(குறிப்பு: 1920களில் காந்தியடிகள் அனைத்து இந்தியர்களும் தாங்கள் பிறந்த நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைகளோடு இணைத்துச் சுதேசி சிந்தனைக்கு புதிய பொருளைக் கொடுத்தார்.)

ஒருவரது சொந்த நாடு என பொருள்படும் சுதேசி என்ற தத்துவத்தை 1872 ல் பூனாவில் தொடர் சொற்பொழிவுகளின் மூலம் பிரபலப்படுத்தியவர்

A) விவேகானந்தர்

B) மகாதேவ் கோவிந்த ரானடே

C) லால் பகதூர் சாஸ்திரி

D) கோபால கிருஷ்ண கோகலே

(குறிப்பு: ரானேடேயின் கருத்துப்படி ஒருவரது சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு அப்பொருட்களின் பயன்பாடு குறைவான மனநிறைவைக் கொடுத்த போதிலும் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.)

சுயஉதவி (ஆத்ம சக்தி) எனும் செய்தியை மக்களிடம் பரப்புவதற்கு மேளாக்கள் எனும் திருவிழாக்களை பயன்படுத்த அழைப்பு விடுத்தவர்

A) விவேகானந்தர்

B) அரவிந்த கோஷ்

C) ரவீந்திரநாத் தாகூர்

D) பாலகங்காதர திலகர்

(குறிப்பு: தாகூர சுயஉதவி (ஆத்ம சக்தி) எனும் ஆக்கத் திட்டத்தினை தனது எழுத்துகள் மூலம் கோடிட்டு காட்டினார். கல்வியானது தாய்மொழியில் வழங்கப்பட வேண்டுமென வற்புறுத்தினார்.)

சதீஷ் சந்திராவால் விடிவெள்ளிக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு

A) 1901 B) 1903 C) 1904 D) 1905

(குறிப்பு: வட்டார மொழியில் கல்வி, எனும் கருத்து சுதேசி இயக்கத்திற்கு வெகு முன்னரே விடிவெள்ளிக் கழகம் உருவாக்கப்பட்டபோதே உருவாகிவிட்டது.)

கூற்று 1: 1905 நவம்பர் 5 இல் விடிவெள்ளிக் கழகத்தின் முன்னெடுப்பில் கல்விக்கான தேசிய கழகம் உருவாக்கப்பட்டது.

கூற்று 2: விடிவெள்ளி கழகத்தின் சார்பில் நவம்பர் 1906இல் வங்காள தேசியக் கல்லூரியும் பள்ளியும் நிறுவப்பட்டன.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: விடிவெள்ளி கழகத்தின் சார்பில் ஆகஸ்ட் 1906இல் வங்காள தேசியக் கல்லூரியும் பள்ளியும் நிறுவப்பட்டன. அடிமை நிறுவனங்களிலிருந்து வெளியே வரும்படி சதிஷ் சந்திரா மாணவர்கட்கு ஒரு உணர்ச்சிகரமான வேண்டுகோள் விடுத்தார். இருந்தபோதிலும் இவ்வாறான முயற்சிகள் வேலைவாய்ப்புக்கான உத்திரவாதம் எதுவும் இல்லாததால் தோல்வியடைந்தன.)

கூற்று 1: உறுப்பினர்களுக்கு உடற்பயிற்சி அளித்தல், அறநெறிகளைக் கற்றுக் கொடுத்தல், பஞ்சங்களின்போதும் நோய்களின் தாக்கத்தின் போதும் சேவையாற்றுதல், விழாக்காலங்களில் சுதேசி செய்தியைப் பரப்புரை செய்தல், உள்ளூரளவில் பள்ளிகளையும் நடுவர் நீதிமன்றங்களையும் உருவாக்குதல் போன்ற பல பணிகளில் சமிதிகள் எனப்படும் தொண்டர் படைகள் ஈடுபடுத்தப்பட்டன.

கூற்று 2: தனது இயல்பான அமைதிவழிப் போராட்டத்தின் மூலம் ஆங்கில அரசு நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தராமல் இருப்பதே சமிதிகளின் நோக்கம் ஆகும்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

கீழ்க்கண்டவர்களுள் லால் – பால் – பால் எனக் குறிப்பிடப்படும் முப்பெரும் தலைவர்கள் யார்?

1. பாலகங்காதர திலகர் 2. பிபின் சந்திர பால்

3. லாலா லஜபதி ராய் 4. லால் பஹதூர் சாஸ்திரி

5. அரவிந்த கோஷ்

A) 1, 2, 3 B) 2, 3, 4 C) 1, 3, 4 D) 1, 2, 4

(குறிப்பு: லால் – பால் – பால் எனக் குறிப்பிடப்படும் முப்பெரும் தலைவர்களின் இயக்க நடவடிக்கைகளின் விளைவாக மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப் ஆகிய மூன்றும் சுதேசி இயக்கக் காலப்பகுதியில் தீவிர தேசியவாதத்தின் மையப்புள்ளிகளாகத் திகழ்ந்தன.)

சுவரில் தொங்கிய இந்திய வரைபடத்தைச் சுட்டிக்காட்டி “பாரதத்தை வாழ்கின்ற தாயாக நினைத்து கவனம் செலுத்தி ஒன்பது மடங்கு அதிக பக்தியுடன் அவளை வழிபடு” என்று நாட்டுப்பற்றை விளக்கியவர்

A) பங்கிம் சந்திர சாட்டர்ஜி

B) அரவிந்த கோஷ்

C) G. சுப்பிரமணியம்

D) ரவீந்திரநாத் தாகூர்

(குறிப்பு: 1905இல் ஒரு சமயம் அரவிந்த கோஷிடம் ஒருவர் எவ்வாறு நாட்டுப்பற்று உடையவராக ஆவது? எனக் கேட்டார். சுவரில் தொங்கிய இந்திய வரைபடத்தை சுட்டிக்காட்டி அரவிந்தர், “நீ அந்த வரைபடத்தைப் பார்க்கிறாயா? அது ஒரு வரைபடமல்ல மாறாக பாரத மாதாவின் உருவப்படம் அதனுடைய நகரங்களும் மலைகளும் ஆறுகளும் காடுகளும் அவளுடைய உடலை உருவாக்கியுள்ளன. அவளுடைய குழந்தைகளே அவளுடைய பெரிதும் சிறியதுமான நரம்புகள். வாழ்கின்ற தாயாக நினைத்து கவனம் செலுத்தி ஒன்பது மடங்கு அதிக பக்தியுடன் அவளை வழிபடு” என பதிலுரைத்தார்.)

சுயராஜ்ஜியம் என்பது அந்நியர் ஆட்சியிலிருந்து முற்றிலுமாக விடுதலையடைதல் என்பது யாருடைய கருத்து

A) திலகர்

B) லாலா லஜபதி ராய்

C) அரவிந்த கோஷ்

D) பிபின் சந்திரபால்

“சுயராஜ்ஜியம் என்பது நிர்வாகத்தின் மீதான இந்தியர்களின் கட்டுப்பாடு அல்லது சொந்த மக்களின் நிர்வாகம் என்பது மட்டுமே தவிர இங்கிலாந்துடனான உறவுகள் அனைத்தையும் துண்டித்துக் கொள்வதல்ல.” என்பது யாருடைய கருத்தாக இருந்தது

A) திலகர்

B) லாலா லஜபதி ராய்

C) அரவிந்த கோஷ்

D) பிபின் சந்திரபால்

சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

1. வங்காளம், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் வளர்ந்து வந்த புரட்சிகர தேசியவாதம் குறித்து தீவிர தேசியவாதிகள், மிதவாத தேசியவாதிகளிடமிருந்து வேறுபட்டனர்.

2. மிதவாத தேசியவாதிகள் புரட்சிகரவாதிகளைப் பற்றி குறைகூறி விமர்சனம் செய்தனர். ஆனால் தீவிர தேசியவாதிகள் அவர்களின் மேல் அனுதாபம் கொண்டனர்.

3. தீவிர தேசியவாதத் தலைவர்களின் பொதுவான குறிக்கோள்களில் ஒன்று சுயராஜ்ஜியம் அல்லது சுயாட்சி என்பதாகும்.

A) அனைத்தும் சரி

B) 1, 3 சரி

C) 2, 3 சரி

D) 1, 2 சரி

தீவிர தேசியவாதம் சரியத் தொடங்கிய ஆண்டு

A) 1906 B) 1907 C) 1908 D) 1909

(குறிப்பு: தங்களின் முந்தையத் தலைவர்களைப் போலவே சுதேசி இயக்கத் தலைவர்கள் சமூகத்தின் பெரும் பகுதி மக்களை ஊடுருவத் தவறினர். 1907 இல் ஏற்பட்ட சூரத் பிளவு தீவிர தேசியவாதத்தின் வீழ்ச்சிக்கான மற்றுமொரு காரணமாகும்.)

மிண்டோ பிரபு இந்திய அரசப் பிரதிநிதியாகப் பணியமர்த்தப்பட்ட ஆண்டு

A) 1905 B) 1906 C) 1907 D) 1908

(குறிப்பு: மிண்டோ பிரபு அரசப் பிரதிநிதியாகப் பணியமர்த்தப்பட்டதிலிருந்து மிதவாத தேசியவாதிகளுக்கும் தீவிர தேசியவாதிகளுக்கும் இடையில் நிலவிய கருத்து வேற்றுமை மேலும் தீவிரமடைந்தது.)

1906 இல் கல்கத்தா மாநாட்டில் மிதவாத தேசியவாதிகளின் கோரிக்கையை ஏற்று _____________ தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிளவு தவிர்க்கப்பட்டது.

A) பெரோஸ்ஷா மேத்தா

B) அரவிந்த கோஷ்

C) தாதாபாய் நௌரோஜி

D) ராஷ்பிகாரி கோஷ்

(குறிப்பு: பெரோஸ்ஷா மேத்தாவின் தலைமையிலான பல மிதவாத தேசியவாதிகள் இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர்.)

1906 கல்கத்தா மாநாட்டில் தீவிர தேசியவாதிகளால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எவை?

1. சுதேசி 2. புறக்கணிப்பு 3. தேசியக் கல்வி

4. சுயாட்சி 5. சட்டசபை ஒத்துக்கீடு

A) 1, 2, 4, 5 B) 1, 2, 3, 4 C) 1, 3, 4, 5 D) 2, 3, 4, 5

(குறிப்பு: 1906 கல்கத்தா மாநாட்டைத் தொடர்ந்து நடைபெற்ற சூரத் மாநாட்டில் மேற்கண்ட தீர்மானங்களை பின்பற்றுவதா? இல்லையா என்ற கேள்வியை ஒட்டி நிலைமை கொதி நிலையை எட்டியது. பெரோஸ்ஷா மேத்தாவின் குழு இத்தீர்மானங்களை நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்பட வேண்டுமெனக் கோரியது.)

தீவிர தேசியவாதிகளின் கோட்டை எனக் கருதப்பட்ட இடம்

A) சூரத்

B) கல்கத்தா

C) அலகாபாத்

D) பூனா

சூரத் மாநாட்டில் காங்கிரசின் அடுத்த தலைவர் பொறுப்புக்கு முன்மொழியப்பட்ட தீவிர தேசியவாதிகளின் வேட்பாளர்

A) ராஷ்பிகாரி கோஷ்

B) லாலா லஜபதி ராய்

C) பெரோஸ்ஷா மேத்தா

D) அரவிந்த கோஷ்

(குறிப்பு: சூரத் மாநாட்டில் முன்மொழியப்பட்ட மிதவாத தேசியவாதிகளின் வேட்பாளர் ராஷ்பிகாரி கோஷ் ஆவார். இயக்கத்தில் பிளவு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக லாலா லஜபதி ராய் போட்டியிட மறுத்தார்.)

தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

A) சூரத் பிளவுக்குப் பின் உருவான காங்கிரஸ் முன்பிருந்ததைக் காட்டிலும் ஆங்கிலேயரிடம் அதிக விசுவாசத்துடன் நடந்து கொண்டது.

B) தீவிர தேசியவாதிகள் இல்லாத புதிய காங்கிரஸ் “மேத்தா காங்கிரஸ்” என அழைக்கப்பட்டது.

C) 1908 இல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தீவிர தேசியவாதிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

D) 1908 இல் தீவிர தேசியவாதம் சரிவுற்று புரட்சிகரச் செயல்பாடுகள் மேலெழுந்தன.

(குறிப்பு: 1908 இல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மிதவாத தேசியவாதிகள் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்கள் ஆங்கில அரசின் மீதான தங்கள் விசுவாசத்தை மீண்டும் வலியுறுத்தினர்.)

கூற்று 1: தீவிர தேசியவாதம் சரிவுற்ற பிறகு, 1870களில் பங்கிம் சந்திர சாட்டர்ஜி விளக்கியவாறு எஃகினாலான உடலையும் நரம்புகளையும் வளர்ப்பதற்காக பல்வேறு இடங்களில் அக்காரா எனப்படும் உடற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டன.

கூற்று 2: பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ஆனந்மத் (ஆனந்த மடம்) எனும் நாவல் வங்காளத்துப் புரட்சிகர தேசியவாதிகளால் பரவலாகப் படிக்கப் பெற்றது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: 1870களில் அக்காரா உடற்பயிற்சி நிலையங்கள் பற்றி விளக்கியவர் விவேகானந்தர். ஆனந்த மடம் நாவலின் ஒரு பகுதியான வந்தே மாதரம் பாடல் சுதேசி இயக்கத்தின் கீதமாயிற்று.)

சுதேசி இயக்கத்தின் போது தனிநபர் வன்முறை எழுச்சி பெறுவதற்கான காரணிகள் எவை?

1. அந்நிய அடக்குமுறை ஆட்சியின் கீழ் வெகுவாகப் பொறுமை இழந்து கொண்டிருந்த இளைஞர்கள் அரசியலற்ற ஆக்கசார் செயல்பாடுகளை ஓரளவே ஏற்றுக் கொண்டனர்.

2. இளம் வயது மக்களுக்குத் தலைமையேற்று அவர்களை ஒரு நீண்டகால வெகுஜனப் போராட்டத்தில் ஈடுபத்துவதில் தீவிர தேசியவாதிகள் தோல்வியடைந்தது தனிநபர் செயல்பாடுகள் வளர்வதற்குக் காரணமாயிற்று.

3. புரட்சிகர செயல்பாடானது இந்திய தறுகாண்மையை (வீரத்தை) மீட்டெடுக்கும் குறியீட்டு முயற்சியின் ஒரு பகுதியாகவும் கருதப்பட்டது. அத்தன்மையை ஆங்கிலேயர் அடிக்கடி எதிர்ப்பதாயும் இகழ்வதாயும் புரட்சிகர தேசியவாதிகள் நம்பினர்.

A) அனைத்தும் B) 1, 2 C) 2, 3 D) 1, 3

கூற்று 1: வங்காளத்தில் 1902 இல் பல ரகசிய சங்கங்கள் நிறுவப்பட்டதிலிருந்தே புரட்சிகர தேசியவாதத்தின் கதை தொடங்குகிறது.

கூற்று 2: ஜதிந்தரநாத் பானர்ஜி, அரவிந்த கோஷின் சகோதரரான பரீந்தர்குமார் கோஷ் ஆகியோரால் கல்கத்தாவில் அனுசீலன் சமிதி நிறுவப்பெற்றது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

புலின் பிகாரி தாஸ் என்பவரின் முயற்சியினால் டாக்கா அனுசீலன் சமிதி ____________ ஆண்டு உருவாக்கப்பட்டது.

A) 1902 B) 1904 C) 1905 D) 1906

(குறிப்பு: டாக்கா அனுசீலன் சமிதி உருவாக்கப்பட்டதன் தொடர்ச்சியாக புரட்சிகர வார இதழான யுகாந்தர் தொடங்கப்பெற்றது.)

கல்கத்தா அனுசீலன் சமிதி நிதி திரட்டுவதற்காக சங்பூரில் _____________ ஆண்டு தனது முதல் சுதேசிக் கொள்ளையை நடத்தியது.

A) 1902 ஆகஸ்ட்

B) 1902 அக்டோபர்

C) 1906 ஆகஸ்ட்

D) 1906 அக்டோபர்

மணிக்தலா எனுமிடத்திலிருந்த பண்ணை வீட்டில் மதச்சார்பு பள்ளியோடு குண்டுகள் தயாரிப்பதற்கான ஒரு தொழிற்கூடத்தையும் நிறுவியவர்

A) குதிராம் போஸ்

B) பரிந்தர் குமார் கோஷ்

C) ஹேம்சந்திர கனுங்கோ

D) அரவிந்த கோஷ்

(குறிப்பு: 1906 ஆம் ஆண்டு ஹேம்சந்திர கனுங்கோ இராணுவப் பயிற்சி பெறுவதற்காக பாரிஸ் சென்றார். 1908 இல் நாடு திரும்பிய அவர் மணிக்தலாவில் தொழிற்கூடத்தை நிறுவினார்.)

சுதேசி போராட்டக்காரர்களை கொடூரமாக நடத்திய டக்ளஸ் கிங்ஸ்போர்டு எனும் ஆங்கில அதிகாரியை கொல்வதற்கான திட்டம் தீட்டப்பட்ட இடம்

A) அலிப்பூர்

B) மணிக்தலா

C) கல்கத்தா

D) பூனா

(குறிப்பு: டக்ளஸ் கிங்ஸ்போர்டை கொலை செய்யும் பொறுப்பு இளம் புரட்சிவாதிகளான 18 வயது நிரம்பிய குதிராம் போஸ், 19 வயதான பிரஃபுல்லா சாக்கி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.)

அலிப்பூர் குண்டுவெடிப்பு நிகழ்வு நடைபெற்ற நாள்

A) 1908 மார்ச் 30

B) 1908 ஆகஸ்ட் 15

C) 1908 அக்டோபர் 5

D) 1908 ஏப்ரல் 30

(குறிப்பு: 1908 ஏப்ரல் 30 இல் குதிராம் போஸ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி ஆகியோர் தவறுதலாக ஒரு சாரட் வண்டியின் மீது குண்டை வீச கிங்ஸ் போர்டுக்கு பதிலாக வேறு இரண்டு ஆங்கில பெண்கள் அதில் கொல்லப்பட்டனர். பிரஃபுல்லா சாக்கி தற்கொலை செய்து கொள்ள குதிராம் போஸ் கைது செய்யப்பட்டு பின்னர் கொலை குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டார்.)

அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் புரட்சிகர தேசியவாதிகளுக்காக வாதாடியவர்

A) ஜவஹர்லால் நேரு

B) காந்தியடிகள்

C) சித்தரஞ்சன் தாஸ்

D) அரவிந்த கோஷ்

(குறிப்பு: அலிப்பூர் குண்டுவெடிப்பு நிகழ்விற்காக அரவிந்த கோஷ், அவரின் சகோதரர் பரிந்தர் குமார் கோஷ் அவர்களுடன் மேலும் முப்பத்தைந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர்.)

தவறான கூற்றைத் தேர்ந்தெடு. (அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு)

1. ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரவிந்த கோஷ் சதியில் ஈடுபட்டார் என்பது நிரூபனமானதால் தூக்கிலிடப்பட்டார்.

2. பரீந்தர் கோஷ், உல்லாஸ்கர்தத் ஆகியோருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது (பின்னர் அது ஆயுட்கால நாடு கடத்தல் தண்டனையாக மாற்றப்பட்டது).

3. ஒரு வருட காலம் நடைபெற்ற அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) எதுவுமில்லை

(குறிப்பு: ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரவிந்த கோஷ் சதியில் ஈடுபட்டார் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை என வழங்கப்பட்ட தீர்ப்பால் அனைத்துக் குற்றச் சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.)

அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு விடுதலைக்கு பின்னர் அரவிந்த கோஷ் ______________ ஆண்டு தான் இயற்கை எய்தும் வரை பாண்டிச்சேரியிலேயே தங்கியிருந்தார்.

A) 1940 B) 1943 C) 1945 D) 1950

(குறிப்பு: அரவிந்த கோஷ் விடுதலைக்கு பின்னர் ஆன்மிக பாதையை தேர்ந்தெடுத்ததால், ஆயுதமேந்திய புரட்சியை முன்னெடுப்பது எனும் அரவிந்தரின் கருத்து நிறைவேறவேயில்லை.)

கூற்று 1: டிசம்பர் 1908 இல் மிண்டோ-மார்லி அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன.

கூற்று 2: மிண்டோ-மார்லி அரசியல் சீர்திருத்தங்களை மிதவாத தேசியவாதிகள் வரவேற்றனர்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: மிண்டோ மார்லி சீர்திருத்தங்களில் அதிகாரங்கள் எதுவும் மாற்றப்படவில்லை என்பதை மிதவாத தேசியவாதிகள் விரைவில் உணர்ந்தனர்.)

தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

1. 1908 செய்தித்தாள் சட்டம் – அச்சக உரிமையாளர்களும் வெளியீட்டாளர்களும் பிணைத்தொகை கட்டுவதைக் கட்டாயமாக்கியது. விரும்பத்தகாத தீங்கு விளைவிக்கக்கூடிய செய்திகளை அவர்கள் வெளியிட்டால் அத்தொகை எடுத்துக் கொள்ளப்படும்.

2. 1910 இந்தியப் பத்திரிக்கைச் சட்டம் – இச்சட்டம் ஆட்சேபனைக்குரிய வகையிலான செய்திகளை வெளியிடும் அச்சகங்களின் சொத்துகளைப் பரிமுதல் செய்யும் அதிகாரத்தை நீதிபதிகளுக்கு வழங்கியது.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) இரண்டும் தவறு

D) எதுவுமில்லை

(குறிப்பு:

1. 1908 செய்தித்தாள் சட்டம் – இச்சட்டம் ஆட்சேபனைக்குரிய வகையிலான செய்திகளை வெளியிடும் அச்சகங்களின் சொத்துகளைப் பரிமுதல் செய்யும் அதிகாரத்தை நீதிபதிகளுக்கு வழங்கியது.

2. 1910 இந்தியப் பத்திரிக்கைச் சட்டம் – அச்சக உரிமையாளர்களும் வெளியீட்டாளர்களும் பிணைத்தொகை கட்டுவதைக் கட்டாயமாக்கியது. விரும்பத்தகாத தீங்கு விளைவிக்கக்கூடிய செய்திகளை அவர்கள் வெளியிட்டால் அத்தொகை எடுத்துக் கொள்ளப்படும்.)

தமிழ்நாட்டில் மெரினாக் கடற்கரையை தவிர்த்து, சுதேசி கூட்டங்கள் நடைபெறும் மற்றொரு இடம்

A) ஆயிரம் விளக்கு

B) மெளண்ட் ரோடு

C) மூர்மார்க்கெட் வளாகம்

D) சென்ட்ரல் ரயில் நிலையம்

பிபின் சந்திரபால்_____________ ஆண்டு சென்னைக்கு வருகை தந்தார்.

A) 1905 B) 1906 C) 1907 D) 1908

(குறிப்பு: சென்னைக் கடற்கரையில் பிபின் சந்திர பால் ஆற்றிய உரைகள் பார்வையாளர்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தின. அவருடைய வருகை தமிழகம் முழுவதும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.)

வ.உ.சி. சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி எனும் கூட்டுப்பங்கு நிறுவனத்தைப் பதிவு செய்த ஆண்டு

A) 1904 B) 1905 C) 1906 D) 1907

(குறிப்பு: 1906 இல் வ.உ.சிதம்பரம் ஆங்கிலேயரின் கடற்பயண முற்றுரிமைக்கு எதிராகச் சுதேசி கப்பல் கம்பெனி ஒன்றை ஏற்படுத்தும் கருத்தை வெளிப்படுத்தியபோது தமிழ்நாட்டின் சுதேசி இயக்கம் தேசத்தின் கவனத்தைப் பெற்றது.)

சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனிக்காக வ.உ.சி வாங்கிய இரண்டு நீராவிக் கப்பல்கள்

1. S.S. கலியா 2. S.S. பாரதி

3. S.S. சிதம்பரம் 4. S.S. லாவோ

A) 1, 2 B) 2, 3 C) 2, 4 D) 1, 4

(குறிப்பு: சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியின் மொத்த முதலீடான ₹10 லட்சம் 40,000 பங்குகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு பங்கு ₹25 வீதம் இந்தியர்கள், இலங்கையைச் சேர்ந்தவர்கள், ஆசிய நாடுகளைச் சேர்ந்தோருக்கு மட்டும் விற்பனை செய்யப்பட்டது.)

கோரல் பருத்தி நூற்பாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆண்டு

A) 1907 மார்ச்

B) 1907 ஆகஸ்ட்

C) 1908 மார்ச்

D) 1908 மே

(குறிப்பு: இந்தியாவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தொடக்க கால வேலை நிறுத்தங்களில் கோரல் நூற்பாலை வேலை நிறுத்தமும் ஒன்றாகும்.)

1907இல் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வ.உ.சி, சுப்ரமணிய சிவா இருவரும் ______________ கடற்கரையில் தினந்தோறும் பொதுக்கூட்டங்களில் பேசினர்

A) சென்னை

B) கடலூர்

C) தூத்துக்குடி

D) திருநெல்வேலி

(குறிப்பு: வ.உ.சி, சுப்ரமணிய சிவா இருவரும் மக்களுக்குச் சுதேசி குறித்தும் புறக்கணித்தல் பற்றியும் கற்றுக் கொடுத்தனர். ஆயிரக்கணக்கில் மக்கள் இக்கூட்டங்களில் கலந்து கொண்டனர். இப்பொதுக்கூட்டங்களை அரசு உன்னிப்பாகக் கண்காணித்தது.)

கோரல் நூற்பாலை தொழிலாளர்களின் வெற்றி “கற்றறிந்த மக்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே ஒரு இணைப்பை உருவாக்கியுள்ளது. அதுவே சுயராஜ்ஜியத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட உன்னதமான முதல் அடியாகும். இந்தியத் தொழிலாளியின் ஒவ்வொரு வெற்றியும் நாட்டிற்கு கிடைத்த வெற்றி” என புகழாரம் சூட்டியவர்

A) சுப்ரமணிய பாரதி

B) சுப்ரமணிய சிவா

C) அரவிந்த கோஷ்

D) வ.உ.சி.

செய்திப் பத்திரிகையை பயன்படுத்தி தேசியவாதச் செய்திகளை விரிந்துபட்ட பார்வையாளர்களிடையே பரப்புரை செய்த தலைவர்களுள் முதன்மையானவர்

A) சுப்ரமணிய பாரதி

B) சுப்ரமணிய சிவா

C) G.சுப்ரமணியம்

D) வ.உ.சி.

(குறிப்பு: G.சுப்ரமணியம் வேறு ஐந்து நபர்களுடன் இணைந்து தி இந்து மற்றும் சுதேசமித்திரன் எனும் பத்திரிக்கைகளை நிறுவினார்.)

1906இல் பர்சால் காங்கிரஸ் மாநாட்டின் போது ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை விமர்சித்து புத்தகம் வெளியிட்டவர்

A) அரவிந்த கோஷ்

B) வ.உ.சி

C) சுப்ரமணிய பாரதி

D) G. சுப்ரமணியம்

தமிழில் வெளியிடப்பட்ட முதல் தினசரி

A) தி இந்து

B) ஒரு பைசாத் தமிழன்

C) சுதேசமித்திரன்

D) காமன்வீல்

(குறிப்பு: சுதேசமித்திரன் தேசியவாதிகளின் செயல்பாடுகள் குறித்து குறிப்பாக வ.உ.சி. தூத்துக்குடியில் ஆற்றிய உரைகள் பற்றி விரிவான செய்திகளை வெளியிட்டது.)

கீழ்க்கண்டவற்றுள் பெண்களின் மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிகை எது?

A) சுதேசமித்திரன்

B) சக்ரவர்த்தினி

C) தி இந்து

D) திராவிடம்

(குறிப்பு; பாரதி சக்ரவர்த்தினி எனும் மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.)

சுப்ரமணிய பாரதி சுதேசமித்திரன் பத்திரிகையின் துணையாசிரியராகப் பணியமர்த்தப்பட்ட ஆண்டு

A) 1902 B) 1903 C) 1904 D) 1905

அயர்லாந்து நாட்டுப் பெண்மணியும் விவேகானந்தரின் சீடருமான சகோதரி நிவேதிதாவை பாரதி சந்தித்த ஆண்டு

A) 1903 B) 1904 C) 1905 D) 1906

(குறிப்பு: குருமணி (ஆசிரியர்) என பாரதியால் குறிப்பிடப்பட்ட நிவேதிதா பாரதியின் தேசியவாத சிந்தனைகளுக்கு ஊக்கமளித்தார்.)

திலகரின் Tenets of New party எனும் நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர்

A) G. சுப்ரமணியம்

B) சுப்ரமணிய சிவா

C) சுப்ரமணிய பாரதி

D) வ.உ.சி

(குறிப்பு: காங்கிரசின் சூரத் மாநாட்டிற்கு (1907) பின்னர் திலகர் மீது பாரதி கொண்டிருந்த ஆர்வமும் பற்றும் மேலும் பெருகியது.)

“சூரத் சென்று வந்த பயணம் சென்னை மாகாணத் தீவிர தேசியவாதிகள் குறித்து” எனும் சிறு புத்தகத்தை பாரதி வெளியிட்ட ஆண்டு

A) 1907 B) 1908 C) 1909 D) 1910

(குறிப்பு: பாரதி ஆசிரியராகப் பணியாற்றிய இந்தியா என்ற வார இதழ் தீவிர தேசியவாதிகளின் குரலாக மாறியது.)

தமிழ்நாட்டு சுதேசி இயக்கத் தலைவர்கள் ____________ நாளை “சுதேசி தினமாக” திருநெல்வேலியில் கொண்டாட முடிவு செய்தனர்.

A) 1906 மார்ச் 9

B) 1907 மார்ச் 9

C) 1908 மார்ச் 9

D) 1908 மார்ச் 12

(குறிப்பு: ஆறு மாத காலச் சிறை தண்டனைக்கு பின்னர் பிபின் சந்திரபால் 1907 மார்ச் 9 இல் விடுதலை செய்யப்பட்டார். அந்நாளை சுதேசி தினமாக கொண்டாட அரசு நிர்வாகம் அனுமதி மறுத்ததையும் மீறி வ.உ.சி, சுப்ரமணிய சிவா, பத்மநாபர் ஆகியோர் செயல்பட்டனர். இதனால் அவர்கள் 1908 மார்ச் 12 இல் தேச துரோக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.)

_____________ இல் வ.உ.சி.யும், சுப்ரமணிய சிவாவும் குற்றம் செய்தனர் என அறிவிக்கப்பட்டு தேச துரோகக் குற்றத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனர்.

A) 1908 ஜூன் 7

B) 1908 ஜூன் 18

C) 1908 ஜூலை 7

D) 1908 ஜூலை 17

(குறிப்பு: அரசுக்கு எதிராக பேசிய குற்றத்திற்காக சிவாவுக்கு 10 ஆண்டுகள் நாடு கடத்துதல் தண்டனையும் அவருக்கு உடந்தையாக இருந்ததற்காக வ.உ.சிக்கு ஆயுள் தண்டனையும் (20 ஆண்டுகள்) விதிக்கப்பெற்றது. வ.உ.சி அரசை எதிர்த்துப் பேசிய குற்றத்திற்காக மேலும் ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்றார்.)

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஷ், மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட நாள்

A) 1911 பிப்ரவரி

B) 1911 மார்ச்

C) 1911 ஜூன்

D) 1911 ஜூலை

(குறிப்பு: 1880இல் திருவாங்கூர் அரசின் பகுதியில் பிறந்த வாஞ்சிநாதன் அவ்வரசின் ஆட்சியிலிருந்த புனலூரில் வனத்துறையில் காவலராக பணியாற்றினார்.)

வாஞ்சிநாதனுக்கு கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தும் பயிற்சியை வழங்கியவர்

A) G.சுப்ரமணியம்

B) சுப்ரமணிய சிவா

C) சுப்ரமணிய பாரதி

D) வ.வே.சுப்ரமணியம்

(குறிப்பு: வ.வே.சுப்ரமணியம் வாஞ்சிநாதனுக்கு பாண்டிச்சேரியில் துப்பாக்கி பயிற்சி அளித்தார்.)

பொருத்துக.

1. இந்திய பத்திரிகைச் சட்டம், 1910 i) சுய ஆட்சி

2. விடிவெள்ளிக் கழகம் ii) சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி

3. சுயராஜ்யம் iii) தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது

4. சுதேசி iv) கல்விக்கான தேசியக்கழகம்

A) iii i iv ii

B) i ii iii iv

C) iii iv i ii

D) i ii iv iii

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!