Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் 11th History Lesson 4 Questions in Tamil

11th History Lesson 4 Questions in Tamil

4] தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

1. ஐஹோல் கல்வெட்டு ரவிகீர்த்தியால் எந்த மொழியில் எழுதப்பட்டது?

அ) பாரசீகம்

ஆ) உருது

இ) பாலி

ஈ) சமஸ்கிருதம்

குறிப்பு: இரண்டாம் புலிகேசியினுடைய அவைக்களப்புலவரான ரவிகீர்த்தி என்பவர் சமஸ்கிருதத்தில் எழுதிய ஐஹோல் கல்வெட்டு சாளுக்கியக் கல்வெட்டுகளிலேயே மிக முக்கியமானதாகும்.

2. கன்னட மொழியில் எழுதப்பட்ட இலக்கணநூல்கள்

அ) கவிராஜமார்கம்

ஆ) பம்ப- பாரதம்

இ) விக்கிரமார்ஜுன விஜயம்

ஈ) மேற்கூறிய அனைத்தும்

குறிப்பு: கன்னட மொழியில் எழுதப்பட்ட இலக்கணநூலான ‘கவிராஜமார்கம்’, ‘பம்ப- பாரதம்’, ‘விக்கிரமார்ஜுன விஜயம்’ ஆகியவை தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி குறித்த விவரங்களை அளிக்கின்றன.

3. மகாபாரதம் தெலுங்கு மொழியில் யாரால் எழுதப்பட்டது?

அ) ரவிகீர்த்தி

ஆ) நன்னையா

இ) பிளினி

ஈ) தாலமி

குறிப்பு: நன்னையாவால் தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட மகாபாரதம் முக்கிய வரலாற்றுச் செய்திகளை முன் வைக்கின்றது.

4. வைணவ ஆழ்வார்களின் பாடல்கள் ________ எனத் தொகுக்கப்பட்டது.

அ) நாலாயிர திவ்வியப்பிரபந்தம்

ஆ) திருவாசகம்

இ) மகாபாரதம்

ஈ) பன்னிருத்திருமுறைகள்

குறிப்பு: வைணவ ஆழ்வார்களின் பாடல்கள் தொகுக்கப்பட்டு நாலாயிர திவ்வியப்பிரபந்தம் எனப் போற்றப்பட்டது.

5. சைவ இலக்கியங்கள் ________ எனத் தொகுக்கப்பட்டன.

அ) நாலாயிர திவ்வியப்பிரபந்தம்

ஆ) திருவாசகம்

இ) மகாபாரதம்

ஈ) பன்னிருத்திருமுறைகள்

குறிப்பு: சைவ இலக்கியங்கள் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன.

6. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் இயற்றிய நூல்

அ) திருவாசகம்

ஆ) மகாபாரதம்

இ) தேவாரம்

ஈ) நாலாயிர திவ்வியப்பிரபந்தம்

குறிப்பு: அப்பர் (திருநாவுக்கரசர்), சம்பந்தர் (திருஞானசம்பந்தர்), சுந்தரர் ஆகியோர் இயற்றியது தேவாரம் ஆகும்.

7. திருவாசகம் யாரால் இயற்றப்பட்டது?

அ) அப்பர்

ஆ) மாணிக்கவாசகர்

இ) சுந்தரர்

ஈ) சம்பந்தர்

குறிப்பு: மாணிக்கவாசகரால் திருவாசகம் இயற்றப்பட்டது.

8. பொருத்துக.

(1) பெரிய புராணம் – மூன்றாம் நந்திவர்மன்

(2) மத்தவிலாச பிரகாசனம் – சேக்கிழார்

(3) நந்திக்கலம்பகம் – முதலாம் மகேந்திரவர்மன்

அ) 2 1 3

ஆ) 1 3 2

இ) 2 3 1

ஈ) 3 1 2

குறிப்பு: சேக்கிழாரால் எழுதப்பட்ட பெரியபுராணம் பல வரலாற்றுச் செய்திகளை முன் வைக்கின்றது. முதலாம் மகேந்திரவர்மன் எழுதிய மத்தவிலாச பிரகாசனம் பல்லவர் கால வரலாற்றிற்கு ஒரு முக்கியச் சான்றாகும். சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நந்திக்கலம்பகம் மூன்றாம் நந்திவர்மனின் போர் வெற்றிக்குச் சான்றாகும்.

9. பொருத்துக.

(1) அலகாபாத்தூண் கல்வெட்டு – பரமேஸ்வரவர்மன்

(2) ஐஹோல் கல்வெட்டு – மூன்றாம் நந்திவர்மன்

(3) கூரம் செப்பேடுகள் – இரண்டாம் புலிகேசி

(4) வேலூர்பாளையம் செப்பேடுகள் – சமுத்திரகுப்தர்

அ) 3 4 2 1

ஆ) 3 4 1 2

இ) 4 3 2 1

ஈ) 1 2 3 4

குறிப்பு: சமுத்திரகுப்தருடைய அலகாபாத்தூண் கல்வெட்டு, சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டு உள்ளிட்டபல கல்வெட்டுக்கள் பல்லவ – சாளுக்கிய மோதல்கள் குறித்தவிவரங்களை வழங்குகின்றன. பரமேஸ்வரவர்மனின் கூரம் செப்பேடுகள், மூன்றாம் நந்திவர்மனின் வேலூர்பாளையம் செப்பேடுகள் அவ்வரசர்களின் போர் வெற்றிகளைப் பதிவு செய்கின்றன.

10. பெளத்த நூல்களான தீபவம்சம், மகாவம்சம் ஆகியன எந்த மொழியில் எழுதப்பட்டன?

அ) பாலி

ஆ) சமஸ்கிருதம்

இ) பாரசீகம்

ஈ) உருது

குறிப்பு: பெளத்தநூல்களான தீபவம்சம், மகாவம்சம் ஆகியன பல்லவர் காலச் சமூக, மத பண்பாட்டு நிலைகள் குறித்தவிவரங்களை வழங்குகின்றன.

11. யுவான் சுவாங், இட்சிங் ஆகியோர் எந்த நாட்டைச் சார்ந்தோர்?

அ) பிரேசில்

ஆ) இத்தாலி

இ) ஸ்பெயின்

ஈ) சீனா

குறிப்பு: சீனப்பயணிகளான யுவான் சுவாங், இட்சிங் ஆகியோரின் பயணக் குறிப்புகள் ஆகியன பல்லவர்காலச் சமூக, மத பண்பாட்டு நிலைகள் குறித்த விவரங்களை வழங்குகின்றன.

12. கீழ்க்கண்டவர்களுள் அரப நாடுகளைச் சார்ந்த பயணிகள் யாவர்?

அ) சுலைமான்

ஆ) அல்மசூதி

இ) இபின் கவ்கா

ஈ) மேற்கூறிய அனைவரும்

குறிப்பு: ஒன்பது, பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரபு நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் மற்றும் புவியியலாளர்களுமான சுலைமான், அல்மசூதி, இபின் கவ்கா போன்றோரின் பயணக்குறிப்புகள் இக்காலகட்ட இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார நிலைகளைப்பற்றி நமக்குக் கூறுகின்றன.

13. பல்லவ – சாளுக்கிய காலகட்டப் பண்பாட்டைப் பற்றி விளக்கும் சிற்பங்கள் அமைந்துள்ள கோயில்கள்

அ) ஐஹோல்

ஆ) வாதாபி

இ) பட்டாடக்கல்

ஈ) மேற்கூறிய அனைத்தும்

குறிப்பு: ஐஹோல், வாதாபி, பட்டாடக்கல் ஆகிய இடங்களைச் சேர்ந்த கோயில்களிலுள்ள சிற்பங்கள் இக்காலகட்டப் பண்பாட்டைப் பிரதிபலிக்கின்றன.

14. குடமுனி என்று அழைக்கப்படுபவர்

அ) நாதமுனி

ஆ) திருவாசகர்

இ) அகத்தியர்

ஈ) அப்பர்

குறிப்பு: அகத்தியரே குடமுனி என்று அழைக்கப்படுகிறார்.

15. ஐஹோல் கோயில் எங்கு அமைந்துள்ளது?

அ) தமிழ்நாடு

ஆ) கர்நாடகா

இ) மகாராஷ்டிரா

ஈ) குஜராத்

குறிப்பு: ஐஹோல் (கர்நாடகா) மேகுடி கோயில் ஒரு குன்றின் மேலுள்ளது. இச்சமணக் கோயிலின் கிழக்குச் சுவரில் 19 வரிகளைக் கொண்ட சமஸ்கிருதக் கல்வெட்டு ஒன்று உள்ளது. (சக வருடம் 556: கி.பி. 634-635 காலத்தைச் சார்ந்தது)

16. ஐஹோல் கல்வெட்டுச் செய்திகளை எழுதியவர்

அ) கடம்பர்

ஆ) நாதமுனி

இ) இரண்டாம் புலிகேசி

ஈ) ரவிகீர்த்தி

குறிப்பு: ஐஹோல் கல்வெட்டுச் செய்திகளை எழுதியவர் ரவிகீர்த்தி என்றகவிஞர். இக்கல்வெட்டு சாளுக்கிய அரசர்களைக் குறிக்கும் மெய்கீர்த்தியாகும். இக்கல்வெட்டு சாளுக்கியரின் அரச வம்ச வரலாற்றை, இரண்டாம் புலிகேசி தன் பகைவர்கள் அனைவரையும் குறிப்பாக ஹர்சவர்தனரைத் தோற்கடித்ததைக் கோடிட்டுக் காட்டுகிறது.

17. சத்யஸ்ராய என்று குறிப்பிடப்படுபவர்

அ) முதலாம் சந்திரகுப்தர்

ஆ) கடோத்கஜர்

இ) ஹரிசேனர்

ஈ) சமுத்திரகுப்தர்

குறிப்பு: சத்யஸ்ராய என்றால் உண்மையின் உறைவிடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

18. எத்தனை வகையான சாளுக்கிய அரசக்குடும்பங்கள் உள்ளன?

அ) 6

ஆ) 2

இ) 3

ஈ) 5

குறிப்பு: இரண்டு சாளுக்கிய அரச குடும்பங்கள் உள்ளன. ஒன்று வாதாபி சாளுக்கியர்; மற்றொன்று கல்யாணி சாளுக்கியர்.

19. சாளுக்கிய வம்சத்தை உருவாக்கியவர்

அ) முதலாம் புலிகேசி

ஆ) இரண்டாம் புலிகேசி

இ) கீர்த்திவர்மன்

ஈ) கடம்பர்

குறிப்பு: சாளுக்கிய அரசவம்சம் அதனை உருவாக்கிய முதலாம் புலிகேசி (சுமார் கி.பி. (பொ.ஆ) 543-566) வாதாபிக்கு அருகேயுள்ள ஒரு குன்றினைச் சுற்றி கோட்டையைக் கட்டியதோடு வலுவான சக்தியாக உதயமானது.

20. வாதாபி யாரால் நிறுவப்பட்டது?

அ) முதலாம் புலிகேசி

ஆ) இரண்டாம் புலிகேசி

இ) கீர்த்திவர்மன்

ஈ) கடம்பர்

குறிப்பு: தலைநகர் வாதாபி கீர்த்திவர்மனால் (566-597) நிறுவப்பட்டது.

21. எட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாதாபி சாளுக்கியர்கள் யாரால் தோற்கடிக்கப்பட்டனர்?

அ) சோழர்கள்

ஆ) குஷாணர்கள்

இ) ராஷ்டிரகூடர்கள்

ஈ) மௌரியர்கள்

குறிப்பு: எட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாதாபி சாளுக்கியர்கள் ராஷ்டிரகூடர்களால் வெற்றி கொள்ளப்பட்டனர்.

22. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

(1) கடம்பரின் மேலாதிக்கத்தின் கீழிருந்த முதலாம் புலிகேசி, தன்னை சுதந்திர அரசராக பிரகடனப்படுத்திக் கொண்டார். அவர் யக்ஞங்களை நடத்தியதாகவும் அஸ்வமேத

யாகம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

(2) மாளவம், கலிங்கம் மற்றும் தக்காணத்தின் கிழக்குப்பகுதியைச் சேர்ந்த அரசர்கள்

இரண்டாம் புலிகேசியின் அரசியல் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டனர்.

அ) கூற்று 1 சரி

ஆ) கூற்று 2 சரி

இ) கூற்று 1, 2 சரி

ஈ) மேற்கூறிய ஏதுமில்லை

23. இரண்டாம் புலிகேசி யாரைத் தோற்கடித்த பின்னர் தன்னை அரசராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்?

அ) கங்கர்கள்

ஆ) முதலாம் நந்திவர்மன்

இ) ஹர்சர்

ஈ) மங்களேசன்

குறிப்பு: முதலாம் புலிகேசியின் பேரன் இரண்டாம் புலிகேசி (609-642) அரசர் மங்களேசனைத் தோற்கடித்த பின்னர் தன்னை அரசராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். இந்நிகழ்வு ஐஹோல் கல்வெட்டில் விவரிக்கப்பட்டுள்ளது.

24. இரண்டாம் புலிகேசி நர்மதை நதிக்கரையில் யாரை வென்றார்?

அ) விக்ரமன்

ஆ) தேவராஜன்,

இ) ஹர்ஷர்

ஈ) சிம்ஹவிக்ரமன்

குறிப்பு: இரண்டாம் புலிகேசியின் போர் வெற்றிகளில் குறிப்பிடத்தக்கது நர்மதை நதிக்கரையில் ஹர்ஷரை வென்றதாகும்.

25. பனவாசியின் கடம்பர்களையும், மைசூரின் கங்கர்களையும் வென்ற அரசர்

அ) இரண்டாம் புலிகேசி

ஆ) முதலாம் புலிகேசி

இ) கீர்த்திவர்மன்

ஈ) முதலாம் நந்திவர்மன்

குறிப்பு: இரண்டாம் புலிகேசி பனவாசியின் கடம்பர்களையும், மைசூரின் கங்கர்களையும் வென்றார்.

26. இரண்டாம் புலிகேசி காஞ்சிபுரத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலை முறியடித்த அரசன்

அ) முதலாம் மகேந்திரவர்மன்

ஆ) இரண்டாம் மகேந்திரவர்மன்

இ) சிம்ம விஷ்ணு

ஈ) மானவர்மன்

குறிப்பு: இரண்டாம் புலிகேசி காஞ்சிபுரத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலைப் பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மன் முறியடித்தார். இது சாளுக்கியருக்கும் பல்லவருக்கும் இடையே ஒரு நீண்டகாலப்போருக்கு இட்டுச்சென்றது.

27. வாதாபியைக் கைப்பற்றிய பல்லவ அரசன்

அ) முதலாம் நரசிம்மவர்மன்

ஆ) இரண்டாம் நரசிம்மவர்மன்

இ) கீர்த்திவர்மன்

ஈ) முதலாம் மகேந்திரவர்மன்

குறிப்பு: பல்லவ அரசன் முதலாம் நரசிம்மவர்மன் (630-668) வாதாபியைத் தாக்கிக் கைப்பற்றினார். இப்போரில் இரண்டாம் புலிகேசி உயிர் துறந்தார். இதனைத் தொடர்ந்து வாதாபி சாளுக்கியப் பேரரசின் கிழக்குப்பகுதிகளின் மீதான பல்லவர்களின் கட்டுப்பாடு பல ஆண்டுகள் நீடித்தது.

28. மனுசாஸ்திரம், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய சாளுக்கிய அரசர்

அ) முதலாம் புலிகேசி

ஆ) இரண்டாம் புலிகேசி

இ) ஹர்ஷர்

ஈ) சிம்மவிஷ்ணு

குறிப்பு: நவரத்தினங்கள் எனப்பட்ட ஒன்பது அறிஞர்கள் இரண்டாம் சந்திரகுப்தரின் அவையில் இருந்தனர். இவர்களில் மாபெரும் சமஸ்கிருதக் கவிஞர் காளிதாஸர், சமஸ்கிருதப் புலவர் ஹரிசேனர், அகராதியை உருவாக்கிய அமரசிம்மர், மருத்துவர் தன்வந்திரி ஆகியோர் அடங்குவர்.

29. தொடக்கக்காலத்தில் சாளுக்கிய அரசர்கள் சூடிக்கொண்ட பட்டங்கள்

அ) மகாராஜன்

ஆ) சத்யசிரயன்

இ) ஸ்ரீபிருத்திவிவல்லபன்

ஈ) மேற்கூறிய அனைத்தும்

குறிப்பு: தொடக்கக்காலத்தில் சாளுக்கிய அரசர்கள் மகாராஜன், சத்யசிரயன், ஸ்ரீபிருத்திவிவல்லபன் எனும் பட்டங்களைச் சூடிக் கொண்டனர். விரைவில் பத்ரகாரன், மகாராஜாதிராஜன் எனும் பட்டங்களும் பிரபலமாயின.

30. ஹர்சவர்தனரை வென்ற பின்னர் இரண்டாம் புலிகேசி சூடிக்கொண்ட பட்டம்

அ) பரமேஸ்வரன்

ஆ) மகாராஜாதிராஜன்

இ) பத்ரகாரன்

ஈ) ஸ்ரீபிருத்திவிவல்லபன்

குறிப்பு: ஹர்சவர்தனரை வென்ற பின்னர் இரண்டாம் புலிகேசி பரமேஸ்வரன் எனும் பட்டத்தைச் சூட்டிக்கொண்டார்.

31. பல்லவ அரசர்கள் சூடிக்கொண்ட பட்டங்கள்

அ) தர்மமகாராஜாதி ராஜா

ஆ) மகாராஜாதி ராஜா

இ) தர்மமகாராஜா, மகாராஜா

ஈ) மேற்கூறிய அனைத்தும்

குறிப்பு: பல்லவ அரசில், அரசர்கள், தர்மமகாராஜாதி ராஜா, மகாராஜாதி ராஜா, தர்மமகாராஜா, மகாராஜா எனும் உயர்வாக ஒலிக்கும் பட்டங்களைச் சூட்டிக் கொண்டனர்.

32. ஹிரகடஹள்ளி செப்புப்பட்டயத்தின் படி, அரசர்கள் நடத்திய வேள்விகள்

அ) அக்னிஸ்தோம

ஆ) வாஜ்பேய

இ) அஸ்வமேத

ஈ) மேற்கூறிய அனைத்தும்

குறிப்பு: ஹிரகடஹள்ளி செப்புப்பட்டயத்தில், அக்னிஸ்தோம, வாஜ்பேய, அஸ்வமேத வேள்விகளை நடத்தியவர் என்று அரசர் அறிமுகம் செய்யபடுகிறார்.

33. சாளுக்கியரின் அரச முத்திரை

அ) புலி

ஆ) காளை

இ) காட்டுப்பன்றி

ஈ) சிங்கம்

குறிப்பு: காட்டுப்பன்றியின் உருவமே சாளுக்கியரின் அரச முத்திரையாகும். இது விஷ்ணுவின் வராக அவதாரத்தைக் குறிப்பதாகும்.

34. பல்லவர்களின் அரச முத்திரை

அ) புலி

ஆ) காளை

இ) காட்டுப்பன்றி

ஈ) சிங்கம்

குறிப்பு: சிவபெருமானின் வாகனமான காளை (நந்தி) பல்லவர்களின் அரச முத்திரையாகும்.

35. முதலாம் ஜெயசிம்மனின் வழிவந்த சாளுக்கிய வம்சாவளியினர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை ____________ ஆக நியமித்தனர்.

அ) அமைச்சர்கள்

ஆ) மாநில ஆளுநர்கள்

இ) முதல்வர்கள்

ஈ) தளபதிகள்

குறிப்பு: முதலாம் ஜெயசிம்மனின் வழிவந்த சாளுக்கிய வம்சாவளியினர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை மாநில ஆளுநர்களாக நியமித்தனர்.

36. _______ என்னும் பெயரைக் கொண்ட சாளுக்கிய இளவரசி கல்வெட்டாணைகளைப் பிறப்பித்துள்ளனர்.

அ) விஜயபத்திரிகா

ஆ) சமந்தா

இ) கரணா

ஈ) போகபதி

குறிப்பு: விஜயபத்திரிகா என்னும் பெயரைக் கொண்ட சாளுக்கிய இளவரசி கல்வெட்டாணைகளைப் பிறப்பித்துள்ளனர்.

37. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலிலுள்ள கல்வெட்டில் எந்த அரசியின் உருவம் காணப்படுகிறது?

அ) சமந்தா

ஆ) ரங்கபதாகா

இ) விஜயபத்திரிகா

ஈ) சாவித்திரி

குறிப்பு: ராஜசிம்மனின் அரசி ரங்கபதாகாவின் உருவம், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலிலுள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.

38. பொருத்துக.

(1) பிரதான – வெளிவிவகாரத்துறை அமைச்சர்

(2) மகாசந்தி-விக்கிரகிக – அரசு கருவூல அமைச்சர்

(3) அமத்யா – முதலமைச்சர்

(4) சமகர்த்தா – வருவாய்த்துறை அமைச்சர்

அ) 2 4 1 3

ஆ) 1 3 4 2

இ) 2 3 1 4

ஈ) 1 3 2 4

குறிப்பு: நான்கு அமைச்சர்களைக் குறித்து கல்வெட்டுகள் பேசுகின்றன. அவர்கள் பிரதான (முதலமைச்சர்), மகாசந்தி-விக்கிரகிக (வெளிவிவகாரத்துறை அமைச்சர்), அமத்யா (வருவாய்த்துறை அமைச்சர்), சமகர்த்தா (அரசு கருவூல அமைச்சர்) ஆகியோராவர்.

39. விஷ்யம், ராஷ்ட்ரம், நாடு, கிராமம் என்பன

அ) சாளுக்கியர்கள் நாட்டின் பல பிரிவுகள்

ஆ) பல்லவர்கள் நாட்டின் பல பிரிவுகள்

இ) சாளுக்கியர்கள் மாநிலங்களின் பல பிரிவுகள்

ஈ) பல்லவர்கள் மாநிலங்களின் பல பிரிவுகள்

குறிப்பு: நிர்வாக வசதிக்காகச் சாளுக்கியர்கள் நாட்டைப் பல பிரிவுகளாகப் பிரித்திருந்தனர். அவை விஷ்யம், ராஷ்ட்ரம், நாடு, கிராமம் என்பவனவாகும்.

40. பொருத்துக.

(1) விசயாபதி – கிராம அளவிலான அதிகாரிகள்

(2) சமந்தா – கிராமத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள்

(3) கிராம்போகி, கிராமகூடர் – நிலப்பிரபுக்கள்

(4) மகாத்ரா – அரசரின் கட்டளைப்படி அதிகாரங்களைக் கையாண்டவர்

அ) 2 3 4 1

ஆ) 2 4 1 3

இ) 3 1 2 4

ஈ) 3 4 2 1

குறிப்பு: கல்வெட்டுகள் விசயாபதி, சமந்தா, கிராம்போகி, மபத்ரா என்னும் அதிகாரிகள் குறித்துப் பேசுகின்றன.

41. சாளுக்கிய நிர்வாகத்தில் மாகாண ஆளுநர்கள் தங்களை எவ்வாறு அழைத்துக் கொண்டனர்?

அ) ராஜமார்க்கராஜன்

ஆ) ராஜாதித்யராஜ பரமேஸ்வரன்

இ) அ, ஆ இரண்டும்

ஈ) மேற்கூறிய ஏதும் இல்லை

குறிப்பு: மாகாண ஆளுநர்கள் தங்களை ராஜமார்க்கராஜன் என்றும், ராஜாதித்யராஜ பரமேஸ்வரன் என்றும் அழைத்துக் கொண்டனர். இவர்களில் சிலர் மகா- சமந்தா என்னும் பட்டத்தைப் பெற்றிருந்தனர். இவர்கள் படைகளை வைத்துப் பராமரித்தனர்.

42. விஷ்யாவின் தலைவர்

அ) விசாயபதி

ஆ) மஹாதாரா

இ) அமாத்யா

ஈ) தண்டநாயகா

குறிப்பு: விஷ்யாவின் தலைவர் விசாயபதியாவார். விசாயபதி அரசரின் கட்டளைப்படி அதிகாரங்களைக் கையாண்டவர்.

43. புக்தியின் தலைவர் போகபதி ஆவார்.

அ) விசாயபதி

ஆ) மஹாதாரா

) போகபதி

ஈ) தண்டநாயகா

குறிப்பு: இவ்விஷயாக்கள் மீண்டும் புக்திகளாகப் பிரிக்கப்பட்டன. புக்தியின் தலைவர் போகபதி ஆவார்.

44. பொருத்துக.

(1) நல-கவுண்ட – சிறுநகரங்களின் அதிகாரிகள்

(2) கமுண்டர் அல்லது போகிகன் – சட்ட, ஒழுங்கு, நிர்வாகக்குழு

(3) கரணா – கிராமத்தில் அமைதியைப் பாதுகாக்கும் அதிகாரி

(4) மகாஜனம் – கிராம நிர்வாகத்தின் மையப்புள்ளி

(5) மகாபுருஷ் – கிராமக் கணக்கர்

(6) நகரபதி, புறபதி – வருவாய் அலுவலர்கள்

அ) 5 4 3 2 1 6

ஆ) 6 4 5 2 3 1

இ) 5 4 3 6 2 1

ஈ) 4 3 2 6 5 1

குறிப்பு: கிராமங்களில் பாரம்பரியமாக வருவாய் அலுவலர்களாகப் பணியாற்றிவர் நல-கவுண்ட என்றழைக்கப்பட்டனர். அரசரால் நியமிக்கப்பட்ட கமுண்டர் அல்லது போகிகன், கிராம நிர்வாகத்தின் மையப்புள்ளியாக இருந்தார். கிராமக் கணக்கர் கரணா ஆவார். இவர் கிராமணி எனவும் அழைக்கப்பட்டனர். கிராம அளவில் கிராம மக்களைக் கொண்ட ‘மகாஜனம்’ என்னும் குழுவின் கைகளில் சட்டம் ஒழுங்கு நிர்வாகம் இருந்தது. ‘மகாபுருஷ்’ என்னும் சிறப்பு அதிகாரி கிராமத்தில் அமைதியைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டார். நகரபதி, புறபதி ஆகியோர் சிறுநகரங்களின் அதிகாரிகளாவர்.

45ஐஹோல், மகாகூடம் தூண் கல்வெட்டுக்களைச் சாளுக்கியர் எந்த மொழியில் பொறித்துள்ளனர்?

அ) கன்னடம்

ஆ) சமஸ்கிருதம்

இ) பாரசீகம்

ஈ) உருது

குறிப்பு: ஐஹோல், மகாகூடம் தூண் கல்வெட்டுக்களைச் சாளுக்கியர் சமஸ்கிருதத்தில் பொறித்துள்ளனர்.

46. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

(1) சைவம், வைணவம் ஆகிய இரு மதங்களையும் சாளுக்கியர் ஆதரித்தனர். சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் கோயில்களை எழுப்பினர்.

(2) சாளுக்கிய அரசர்களில் குறிப்பிடத் தகுந்த அரசர்களான முதலாம் கீர்த்திவர்மன் (566-594), மங்களேசன் (594-609), இரண்டாம் புலிகேசி (609-642) ஆகியோர் வேள்விகளை நடத்தினர். அவர்கள் பரம-வைஷ்யண, பரம-மஹேஸ்வர என்னும் பட்டங்களையும் தரித்துக்கொண்டனர்.

(3) போர்க் கடவுளான கார்த்திகேயனுக்கு முக்கியத்துவம் அளித்தனர்.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 3 மட்டும் சரி

ஈ) அனைத்தும் சரி

47. கவிஞர் ரவிகீர்த்தி ஒரு ______ அறிஞர்

அ) சமண

ஆ) பௌத்த

இ) தமிழ்

ஈ) கன்னட

குறிப்பு: கவிஞர் என இரண்டாம் புலிகேசியால் புகழ்மாலை சூட்டப்பட்ட ரவிகீர்த்தி ஒரு சமண அறிஞர் ஆவார்.

48. இரண்டாம் கீர்த்திவர்மனின் ஆட்சியின்போது சமண மதத்தைச் சேர்ந்த கிராம அதிகாரி ஒருவர் எந்த இடத்தில் சமணக் கோவிலைக் கட்டினார்?

அ) ஐஹொல்

ஆ) அனெகெரி

இ) தக்காணம்

ஈ) வாதாபி

குறிப்பு: இரண்டாம் கீர்த்திவர்மனின் ஆட்சியின்போது (744-745) சமண மதத்தைச் சேர்ந்த கிராம அதிகாரி ஒருவர் அனெகெரி என்ற இடத்தில் ஒரு சமணக் கோவிலைக் கட்டினார்.

49. குணபத்ரா என்ற சமணத் துறவியை தனது ஆசிரியராகக் கொண்டிருந்தவர்

அ) இரண்டாம் புலிகேசி

ஆ) மங்களேசன்

இ) கீர்த்திவர்மன்

ஈ) கிருஷ்ணா

குறிப்பு: இளவரசர் கிருஷ்ணா(756-775) குணபத்ரா என்ற சமணத் துறவியை தனது ஆசிரியராகக் கொண்டிருந்தார்.

50. ஜெய்னேந்திரிய வியாகரணம் என்னும் நூலை இயற்றியவர்

அ) நாதமுனி

ஆ) பூஷ்யபட்டர்

இ) ஆர்யபட்டர்

ஈ) விஜயாதித்தன்

குறிப்பு: விஜயாதித்தனின் (775-772) சமகாலத்தவரும் ஜெய்னேந்திரிய வியாகரணம் என்னும் நூலை இயற்றியவருமான பூஷ்யபட்டர் ஒரு சமணத்துறவியாவார்.

51. சாளுக்கியப் பகுதிகளில் பல பௌத்த மையங்கள் இருந்ததாகவும் அவற்றில் மகாயான, ஹீனயான பிரிவுகளைப் பின்பற்றும் 5000 பௌத்தர்கள் வாழ்ந்ததாகவும் கூறியவர்

அ) யுவான் சுவாங்

ஆ) இட்சிங்

இ) மெகஸ்தனிஸ்

ஈ) பாஹியான்

குறிப்பு: சீனப்பயணி யுவான் சுவாங் சாளுக்கியப் பகுதிகளில் பல பௌத்த மையங்கள் இருந்ததாகவும் அவற்றில் மகாயான, ஹீனயான பிரிவுகளைப் பின்பற்றும் 5000 பௌத்தர்கள் வாழ்ந்ததாகவும் கூறுகிறார்.

52. சாளுக்கிய அரசனின் ஏழாம் நூற்றாண்டுக் கல்வெட்டு கன்னட மொழியை எவ்வாறு குறிப்பிடுகின்றது?

அ) உள்ளூர் பிராகிருதம்

ஆ) மக்களின் மொழி

இ) பண்பாட்டின் மொழி

ஈ) அ, ஆ இரண்டும்

குறிப்பு: வாதாபியிலுள்ள ஒரு சாளுக்கிய அரசனின் ஏழாம் நூற்றாண்டுக் கல்வெட்டு கன்னட மொழியை ‘உள்ளூர் பிராகிருதம்’ அதாவது மக்களின் மொழியென்றும், சமஸ்கிருதத்தைப் பண்பாட்டின் மொழி என்றும் குறிக்கின்றது.

53. சப்தாவதாரம் எனும் இலக்கண நூலை எழுதியவர்

அ) முதலாம் புலிகேசியின் தளபதி

ஆ) இரண்டாம் புலிகேசி

இ) இரண்டாம் புலிகேசியின் தளபதி

ஈ) கீர்த்திவர்மன்

குறிப்பு: இரண்டாம் புலிகேசியின் தளபதி ஒருவன் ‘சப்தாவதாரம்’ எனும் இலக்கண நூலை சமஸ்கிருத மொழியில் எழுதினார்.

54. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

(1) வரலாற்று ரீதியில் தக்காணத்தில் சாளுக்கியர்களே முதன்முறையாக, சற்றே மிருதுவான மணற்கல் (sand stone) பயன்படுத்திக் கோயில்களை எழுப்பினர்.

(2) வாதாபியில் நான்கு விதமான கோயில்கள் காணப்படுகின்றன. இரண்டு கோயில்கள் விஷ்ணுவுக்கும், ஒரு கோயில் சிவனுக்கும் மற்றொன்று சமணதீர்த்தங்கரர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

(3) சாளுக்கியர்களின் கோயில்களைக் குடைவரை குகைக்கோயில்கள், கட்டுமானக் கோயில்கள் எனப் பிரிக்கலாம்..

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 3 மட்டும் சரி

ஈ) அனைத்தும் சரி

55. குடைவரைக் குகைக் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள் ஆகிய இரண்டுக்கும் பெயர் பெற்றது

அ) வாதாபி

ஆ) பட்டாடக்கல்

இ) ஐஹோல்

ஈ) மணிமங்கலம்

குறிப்பு: வாதாபி, குடைவரைக் குகைக் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள் ஆகிய இரண்டுக்கும் பெயர் பெற்றது. பட்டாடக்கல், ஐஹோல் ஆகியவை கட்டுமானக் கோயில்களுக்குப் பெயர் பெற்றவையாகும்.

56. ஐயாவொளே எனும் வணிகக் குழுமத்தின் தலைமையிடம் எங்கு அமைந்திருந்தது?

அ) வாதாபி

ஆ) பட்டாடக்கல்

இ) ஐஹோல்

ஈ) மணிமங்கலம்

குறிப்பு: 634 இல் உருவாக்கப்பட்ட ஐஹோல் இடைக்காலத்தில் புகழ் பெற்றிருந்த ஐயாவொளே எனும் வணிகக் குழுமத்தின் தலைமையிடமும், முக்கியமான வணிக மையமுமாகும்.

57. ஐஹோலில் எத்தனை கோயில்கள் உள்ளன?

அ) 40

ஆ) 50

இ) 60

ஈ) 70

58. பழமையான கற்கோவில் அமைந்துள்ள இடம்

அ) குசிமல்லிகுடி

ஆ) லட்கான்

இ) ஐஹோல்

ஈ) மேகுடி

குறிப்பு: காலத்தால் முந்தைய கற்கோயில் லட்கான் கோயிலாகும். இதனுடைய தனித்தன்மை இங்குள்ள வடஇந்திய பாணியிலிருந்து வேறுபட்ட சிகரத்தைக் கொண்ட, அழகான, நேர்த்தியான மென்சாந்து மேற்பூச்சைக் கொண்ட தூணாகும்.

59. சாளுக்கியர் காலத்தில் துர்க்கை கோவில்கள் எந்தெந்த வடிவங்களில் அமைக்கப்பட்டிருந்தன?

அ) அரை வட்டவடிவம்

ஆ) செவ்வக வடிவம்

இ) முக்கோண வடிவம்

ஈ) அ, ஆ இரண்டும்

குறிப்பு: துர்க்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு கோயில், புத்த சைத்ய பாணியில் அமைந்துள்ளது. சற்றே மேடான தளத்தின் மேல் அரை வட்டவடிவில் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று துர்க்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட குசிமல்லிகுடி எனும் மற்றொரு துர்க்கைக் கோயில் செவ்வக வடிவத்தில் அமைந்துள்ளது.

60. _______ல் உள்ள சமணக்கோயில் சாளுக்கியர் காலத்திய கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டு

அ) குசிமல்லிகுடி

ஆ) லட்கான்

இ) ஐஹோல்

ஈ) மேகுடி

குறிப்பு: மேகுடியிலுள்ள சமணக்கோயில், சாளுக்கியர் காலத்திய கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். மண்டப பாணியில் அமைக்கப்பட்டுள்ள குகைகள் ஐஹொலில் பாதுகாக்கப்படுகின்றன.

61. விஷ்ணு குகைக்கோயிலைக் கட்டியவர்

அ) முதலாம் புலிகேசி

ஆ) மங்களேசன்

இ) கீர்த்திவர்மன்

ஈ) இரண்டாம் புலிகேசி

குறிப்பு: வாதாபியில் நான்கு குகைகள் உள்ளன. மங்களேசன் (578) கட்டிய மிகப்பெரிய குகைக்கோயில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பாம்புப்படுக்கையில் சயனக் கோலத்திலுள்ள விஷ்ணு, நரசிம்மர் சிற்பங்கள் சாளுக்கியரின் கலைமேன்மைக்கு நேர்த்தி மிகுந்த எடுத்துக்காட்டுகளாகும்.

62. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

(1) கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்திலுள்ள பட்டாடக்கல் எனும் அமைதியான சிறிய கிராமம் கலையழகும், நேர்த்தியும் மிக்க கோயில்களுக்குப் பெயர் பெற்றதாகும்.

(2) பட்டாடக்கல் அரச சடங்குகள் நடத்துவதற்கான இடமாகும்.

(3) பட்டாடக்கல் கோயில் சுவரில் இடம் பெற்றுள்ள பல சிற்பங்கள் அவற்றைச் செதுக்கிய சிற்பிகளின் கையொப்பத்தையும் கொண்டுள்ளன.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 3 மட்டும் சரி

ஈ) அனைத்தும் சரி

63. இரண்டாம் விக்கிரமாதித்தன் ___________ஐக் கைப்பற்றியதன் நினைவாக விருப்பாக்சர் கோயில் கட்டப்பட்டது.

அ) காஞ்சிபுரம்

ஆ) தொண்டை மண்டலம்

இ) வாதாபி

ஈ) பட்டடக்கல்

குறிப்பு: இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றியதன் நினைவாக அவனுடைய மனைவி லோகமாதேவியின் ஆணைப்படி விருப்பாக்சர் கோயில் கட்டப்பட்டது. பல்லவ அரசன் ராஜசிம்மன் மாமல்லபுரத்தில் எழுப்பிய கட்டுமானக் கோயில்களின் தனித்தன்மைகளைத் தழுவி இக்கோயில் அமைந்துள்ளது.

64. பட்டாடக்கல்லில் உள்ள விருப்பாக்சர் கோயிலை வடிவமைத்த கட்டக் கலைஞருக்கு சூட்டப்பட்ட பட்டம்

அ) திரிபுவாசாரியா

ஆ) சத்யசிரயன்

இ) பத்ரகாரன்

ஈ) மகாராஜாதிராஜன்

குறிப்பு: பட்டாடக்கல் விருப்பாக்சர் கோயிலின் கிழக்கு வாசலில் இடம் பெற்றுள்ள ஒரு கன்னடக் கல்வெட்டு இக்கோவிலை வடிவமைத்த கட்டடக் கலைஞரை வெகுவாகப் பாராட்டுகின்றது. அக்கட்டடக் கலைஞருக்குத்‘ ‘திரிபுவாசாரியா’’ (மூன்று உலகையும் உருவாக்கியவன்) என்ற பட்டமும் சூட்டப்பட்டது.

65. பட்டாடக்கல் பாபநாத கோயிலின் கிழக்குச் சுவரிலுள்ள கன்னடக் கல்வெட்டு கருவறையை வடிவமைத்தவரின் பெயர்

அ) ரவிகீர்த்தி

ஆ) ரேவதி ஓவஜா

இ) மங்களேசன்

ஈ) கீர்த்திவர்மன்

குறிப்பு: கோயிலின் கிழக்குச் சுவரிலுள்ள ஒரு சிறிய கன்னடக் கல்வெட்டு கருவறையை வடிவமைத்தவரின் பெயர் ‘ரேவதி ஓவஜா’ எனக் குறிப்பிடுகின்றது.

66. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

(1) பட்டாடக்கல் கிராமத்தின் தென்கிழக்கு மூலையில் பாபநாத கோயில் அமைந்துள்ளது. விருப்பாக்சர் கோவிலைப் போன்ற அடித்தள கட்டுமானத் திட்டத்தின்படி கட்டப்பட்ட இக்கோயில் வடஇந்திய பாணியிலான சிகரத்தைக் கொண்டுள்ளது. வெளிப்புறச் சுவர்கள் ராமாயணக் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் சித்தரிக்கும் தொடர் சிற்பங்களால் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.

(2) சாளுக்கியர் பத்துக்கும் மேற்பட்ட கோயில்களை எழுப்பியுள்ளார்கள். இவை சாளுக்கியக் கட்டடக் கலையின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகின்றன

(3) கட்டப்பட்டபாணியின் அடிப்படையில் இக்கோயில்களை இந்தோ-ஆரியன், திராவிடகட்டடக் கலை என இரண்டாகப் பிரிக்கலாம்.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 3 மட்டும் சரி

ஈ) அனைத்தும் சரி

67. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

(1) வாதாபியில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குகைக்கோயிலில் சில ஓவியங்கள் காணப்படுகின்றன.

(2) ஓவியக்கலையில் சாளுக்கியர் வாகடகர்களின் பாணியைப் பின்பற்றினர். அவ்வாறான ஓவியங்களில் பெரும்பாலானவை விஷ்ணுவின் அவதாரங்களைப் பற்றியதாகும்.

(3) சாளுக்கிய ஓவியங்களில் மிகப்பிரபலமானது. அரசன் மங்களேசனால் (597-609) கட்டப்பட்ட அரண்மனையில் உள்ளது. அக்காட்சி நடன நிகழ்ச்சி ஒன்றை அரச குடும்ப உறுப்பினர்களும் மற்றவரும் கண்டுகளிப்பதாய் அமைந்துள்ளது.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 3 மட்டும் சரி

ஈ) அனைத்தும் சரி

68. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

(1) தொடக்ககால அறிஞர்கள் சிலர் பார்த்தியர் எனும் அரச மரபின் மற்றொரு பெயரான ‘பஹல்வ’ என்ற சொல்லின் திரிபே ‘பல்லவ’ ஆகும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.

(2) இன்றைய அறிஞர் பலர் பார்த்தியரைத் தென்னிந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் அல்லது வடஇந்தியரோடு ரத்தக்கலப்பு கொண்டவர்கள் என்றும் பல்லவர்களை கருதுகின்றனர்.

(3) பல்லவர்கள் வடபெண்ணை ஆற்றுக்கும், வட வெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பான தொண்டை மண்டலத்தோடு தொடர்புடையவராவர்.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 3 மட்டும் சரி

ஈ) அனைத்தும் சரி

69. பல்லவ வம்ச ஆட்சியை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்ட அரசர்

அ) சிம்மவர்மன்

ஆ) கீர்த்திவர்மன்

இ) சிம்மவிஷ்ணு

ஈ) முதலாம் மகேந்திரவர்மன்

குறிப்பு: சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு காவேரி வரை முன்னேறி சோழர்களுக்குச் சொந்தமான பகுதிகளைக் கைப்பற்றி, தன் தந்தை தொடங்கிய பல்லவ வம்ச ஆட்சியை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டார்.

70. களப்பிரர்களை முற்றிலும் அழித்தொழித்த பல்லவ அரசன்

அ) சிம்மவர்மன்

ஆ) கீர்த்திவர்மன்

இ) சிம்மவிஷ்ணு

ஈ) முதலாம் மகேந்திரவர்மன்

குறிப்பு: சிம்மவிஷ்ணு களப்பிரர்களை முற்றிலும் அழித்தொழித்து காவேரி வரை முன்னேறி அவர்களின் பகுதிகளைக் கைப்பற்றியபோது பாண்டியர்களோடு மோத வேண்டியதாயிற்று.

71. முதலாம் மகேந்திரவர்மனை சைவராக மாற்றியவர்

அ) அப்பர்

ஆ) சம்பந்தர்

இ) சுந்தரர்

ஈ) மாணிக்கவாசகர்

குறிப்பு: சிம்மவிஷ்ணுவைத் தொடர்ந்து அவரது மகன் முதலாம் மகேந்திரவர்மன் (பொ.ஆ. 590-630) அரியணை ஏறினார். சமண மதத்தைப் பின்பற்றிய இவரை அப்பர் சைவராக மாற்றினார். கலைகளை ஆதரித்த மகேந்திரவர்மன் கவிஞனும் இசைவித்தகனுமாவார்.

72. மகேந்திரவர்மனின் ஆட்சிக்காலத்தில் பல்லவ அரசினுடைய வடபகுதிகளைக் கைப்பற்றித் தலைநகர் காஞ்சிபுரம் வரை முன்னேறி சென்ற சாளுக்கிய அரசர்

அ) இரண்டாம் புலிகேசி

ஆ) முதலாம் புலிகேசி

இ) மங்களேசன்

ஈ) கீர்த்திவர்மன்

குறிப்பு: மகேந்திரவர்மனின் ஆட்சிக்காலத்தில் இரண்டாம் புலிகேசி, பல்லவ அரசினுடைய வடபகுதிகளைக் கைப்பற்றித் தலைநகர் காஞ்சிபுரம் வரை முன்னேறினார்.

73. சாளுக்கியர்களுக்கு எதிரானப் போர்களில் பல்லவர்களுக்கு உதவிய இலங்கை இளவரசர்

அ) அபராஜிதன்

ஆ) ராஜசிம்மன்

இ) கிருஷ்ணா

ஈ) மானவர்மன்

குறிப்பு: முதலாம் நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தில் (630-668) சாளுக்கியர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் பல்லவர்கள் சாளுக்கியர்களுக்கு எதிராகப் பல வெற்றிகளை ஈட்டினர். இப்போர்களில் பல்லவர்களுக்கு மானவர்மன் எனும் இலங்கை இளவரசர் உதவினார். இவ்விளவரசரே பின்னர் இலங்கையின் அரசராகப் பதவியேற்றார்.

74. சாளுக்கிய அரசின் தலைநகரான வாதாபியைக் கைப்பற்றிய பல்லவ அரசன்

அ) முதலாம் மகேந்திரவர்மன்

ஆ) முதலாம் பரமேஸ்வரவர்மன்

இ) சிம்ம விஷ்ணு

ஈ) நரசிம்மவர்மன்

குறிப்பு: நரசிம்மவர்மன் சாளுக்கிய அரசின் தலைநகரான வாதாபியைக் கைப்பற்றினார். இரண்டாம் புலிகேசி இப்போரில் கொல்லப்பட்டார். நரசிம்மவர்மன் சேர, சோழர்களையும், களப்பிரர்களையும் வெற்றி கொண்டதாகக் கூறுகிறார். இலங்கை அரசன் மானவர்மனுக்கு ஆதரவாக இருமுறை அனுப்பப்பட்ட கப்பற்படைகள் வெற்றி பெற்றன.

75. பல்லவ அரசன் முதலாம் பரமேஸ்வரவர்மனின் ஆட்சியின்போது படையெடுத்த சாளுக்கிய அரசர்

அ) முதலாம் புலிகேசி

ஆ) மங்களேசன்

இ) விக்கிரமாதித்யன்

ஈ) கீர்த்திவர்மன்

குறிப்பு: பல்லவ அரசன் முதலாம் பரமேஸ்வரவர்மனின் ஆட்சியின்போது (670- 700) சாளுக்கிய அரசர் விக்கிரமாதித்யன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தார். முதலாம் பரமேஸ்வரவர்மன் கங்கர் பாண்டியர் ஆகியோரின் உதவியோடு விக்கரமாதித்தனை எதிர்த்துப் போரிட்டார். இதன் விளைவாகப் பின்னர் தெற்கில் பல்லவருக்கும் பாண்டியருக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டன.

76. தண்டிவர்ம பல்லவனின் ஆட்சியின்போது காஞ்சிபுரம் எந்த அரசரினுடைய தாக்குதலுக்கு உள்ளானது?

அ) விக்கிரமாதித்யன்

ஆ) மூன்றாம் நந்திவர்மன்

இ) இரண்டாம் புலிகேசி

ஈ) மூன்றாம் கோவிந்தன்

குறிப்பு: ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கக்காலத்தில், தண்டிவர்ம பல்லவனின் ஆட்சியின்போது காஞ்சிபுரம் ராஷ்ட்டிரகூட அரசர் மூன்றாம் கோவிந்தனின் தாக்குதலுக்கு உள்ளானது.

77. மூன்றாம் நந்திவர்மன், மேலைக்கங்கர், சோழர் ஆகியோரின் ஆதரவோடு பாண்டியரை எந்தப் போரில் தோற்கடித்தான்?

அ) ஸ்ரீபிரம்பியம்

ஆ) திரும்புறம்பியம்

இ) அ, ஆ இரண்டும்

ஈ) மேற்கூறிய ஏதுமில்லை

குறிப்பு: தண்டிவர்மனின் மகன் மூன்றாம் நந்திவர்மன், மேலைக்கங்கர், சோழர் ஆகியோரின் ஆதரவோடு பாண்டியரை ஸ்ரீபிரம்பியம் அல்லது திரும்புறம்பியம் போரில் தோற்கடித்தான்.

78. அபராஜிதன் தொண்டைமண்டலப் பகுதியின் மீது படையெடுத்து வந்த யாருடன் போர் புரிந்து மடிந்தான்?

அ) முதலாம் பரமேஸ்வரவர்மன்

ஆ) மூன்றாம் நந்திவர்மன்

இ) இரண்டாம் ஆதித்த சோழன்

ஈ) முதலாம் ஆதித்த சோழன்

குறிப்பு: மூன்றாம் நந்திவர்மனின் பேரனான அபராஜிதன் தொண்டைமண்டலப் பகுதியின் மீது படையெடுத்து வந்த முதலாம் ஆதித்த சோழனோடு போர் புரிந்து மடிந்தான். இத்துடன் பல்லவரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதன் பின்னர் தொண்டைமண்டலம் சோழர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

79. பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை, சேரபெருமாள் அரசர்களால் ஆளப்பட்ட பகுதி

அ) தொண்டை மண்டலம்

ஆ) தக்காணம்

இ) வாதாபி

ஈ) கேரளா

குறிப்பு: பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை கேரளா, சேரபெருமாள் அரசர்களால் ஆளப்பட்டிருந்தது.

80. பொருத்துக.

(1) அமத்யா – நன்கொடைகளுக்கான அதிகாரிகள்

(2) மந்திரி மண்டல – அந்தரங்கச் செயலாளர்

(3) ரகஸ்யதிகிரதா – அமைச்சர் குழு

(4) மாணிக்கப் பண்டாரம் காப்பான் – ஆலோசகர்

(5) கொடுக்காப்பிள்ளை – கருவூலத்தைக் காப்பவர்

அ) 4 3 5 1 2

ஆ) 5 3 2 1 4

இ) 3 2 1 4 5

ஈ) 4 5 3 2 1

குறிப்பு: (மாணிக்கப் பண்டாரம் காப்பான் மாணிக்க- விலைமதிப்பில்லா; பண்டாரம்-கருவூலம்; காப்பான்- காவல் புரிபவர்).

81. பொருத்துக.

(1) கோச-அதீயட்சா – மேல்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதங்கள்

(2) அதிகர்ணமண்டபம் – நீதிபதிகள்

(3) தர்மாதிகாரி – கீழ்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதங்கள்

(4) கர்ணதண்டம் – நீதிமன்றங்கள்

(5) அதிகர்ணதண்டம் – மாணிக்கப்பண்டாரம் காப்பாளர்களை மேற்பார்வை செய்பவர்

அ) 4 3 5 2 1

ஆ) 3 2 1 4 5

இ) 2 3 1 4 5

ஈ) 3 1 2 4 5

குறிப்பு: கோச-அதீயட்சா என்பவர் மாணிக்கப்பண்டாரம் காப்பாளர்களை மேற்பார்வை செய்பவர். நீதிமன்றங்கள் அதிகர்ணமண்டபம் என்றும், நீதிபதிகள் தர்மாதிகாரி என்றும் அழைக்கப்பட்டனர். மேல்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதங்கள் கர்ணதண்டம் ஆகும். கீழ்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதங்கள் அதிகர்ணதண்டமாகும்.

82. நந்திவர்ம பல்லவனின் அபராதங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படும் செப்பேடுகள்

அ) பஹார்பூர் செப்பேடுகள்

ஆ) கூரம் செப்புப்பட்டயம்

இ) தாமோதர்பூர் செப்பேடுகள்

ஈ) காசக்குடி செப்பேடுகள்

குறிப்பு: நந்திவர்ம பல்லவனின் காசக்குடி செப்பேடுகளில் அபராதங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

83. ஒரு பிராமணருக்கோ அல்லது சில பிராமணர்களைக் கொண்ட ஒரு குழுவுக்கோ கொடையாக வழங்கப்பட்ட கிராமங்கள்

அ) பிரம்மதேய கிராமங்கள்

ஆ) தேவதான கிராமங்கள்

இ) அ, ஆ இரண்டும்

ஈ) ஏதுமில்லை

குறிப்பு: பிரம்மதேய கிராமங்கள் ஒரு பிராமணருக்கோ அல்லது சில பிராமணர்களைக் கொண்ட ஒரு குழுவுக்கோ கொடையாக வழங்கப்பட்டன. வரி செலுத்த வேண்டியதில்லை என்பதால் இக்கிராமங்கள் ஏனைய கிராமங்களைக் காட்டிலும் செழிப்பாக இருந்தன.

84. கிராமஅளவில் அடிப்படையான அமைப்பு

அ) சபை

ஆ) ஊரார்

இ) நாடு

ஈ) அரசு

குறிப்பு: சபை என்பது நிர்வாக முறையைச் சேர்ந்த அமைப்பாகும். கிராமத்தவர் அனைவரும் பங்கேற்கும் நிர்வாக முறை சாராத மக்கள் மன்றமான ‘ஊரார்’ என்ற அமைப்போடு இது இணைந்து செயல்பட்டது. இதற்கு மேலான மாவட்ட குழு ‘நாடு’ அல்லது மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட்டது.

85. கோயில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட கிராமங்கள்

அ) பிரம்மதேய கிராமங்கள்

ஆ) தேவதான கிராமங்கள்

இ) அ, ஆ இரண்டும்

ஈ) ஏதுமில்லை

குறிப்பு: தேவதான கிராமங்களின் வருவாயை கோயில் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனரேயன்றி அரசு பெறவில்லை.

86. கிராம அளவிலான அமைப்புகளுக்கும் அரசு நிர்வாகத்திற்குமிடையே பாலமாக செயல்பட்டவர்

அ) அரசர்

ஆ) மாவட்ட ஆளுநர்

இ) கிராமத்தலைவர்

ஈ) அமத்யா

87. வேளாண் மக்கள் விளைச்சலில் எத்தனை பங்கில் தொடங்கி பத்தில் ஒரு பங்கு வரை வரியாக அரசுக்குச் செலுத்தினர்?

அ) நான்கில் ஒரு பங்கு

ஆ) ஐந்தில் ஒரு பங்கு

இ) ஆறில் ஒரு பங்கு

ஈ) ஏழில் ஒரு பங்கு

குறிப்பு: வேளாண் மக்கள் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கில் தொடங்கி பத்தில் ஒரு பங்கு வரை வரியாக அரசுக்குச் செலுத்தினர். இவ்வரியை கிராமமே வசூல் செய்து அரசின் வசூல் அதிகாரியிடம் கட்டியது.

88. கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) 1879இல் புதுச்சேரிக்கு அருகே உருக்காட்டுக்கோட்டம் என்னுமிடத்தில் இருபுறமும் இணைக்கப்பட்டு லிங்கம், நந்தி ஆகியன (பல்லவர்களின் முத்திரை) பொறிக்கப்பட்ட செப்பு வளையத்தில் கோர்க்கப்பட்ட பதினோரு செப்புப்பட்டயங்கள் கண்டறியப்பட்டன.

(2) அரசன் நந்திவர்மனின் (பொ.ஆ 753) இருபத்திரண்டாவது ஆட்சியாண்டில், மானியமாகத் தரப்பட்ட ஒரு கிராமம் குறித்த செய்திகள் பதினோரு செப்புப்பட்டயங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

(3) மேற்கூறியவற்றின் உள்ளடக்கம் அரசரைப் பற்றிய சமஸ்கிருத மொழியில் புகழ்வதில் தொடங்கி மானியத்தைப் பற்றிய விவரங்களைத் தமிழில் கூறி இறுதியில் சமஸ்கிருத செய்யுளோடு முடிவடைகிறது.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 3 மட்டும் சரி

ஈ) அனைத்தும் சரி

89. நந்திவர்மன் காலத்தில் பல்லவப்படைகள் ஒரு கோட்டையைத் தாக்குவது போன்ற போர்க்களக் காட்சிகள் தொடர் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ள வைகுண்டப்பெருமாள் கோயில் அமையப்பெற்றுள்ள இடம்

அ) ஐஹோல்

ஆ) மாமல்லபுரம்

இ) வாதாபி

ஈ) காஞ்சிபுரம்

குறிப்பு: காஞ்சிபுரம் வைகுண்டப்பெருமாள் கோயிலில் நந்திவர்மன் காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகள், குறிப்பாகப் பல்லவப்படைகள் ஒரு கோட்டையைத் தாக்குவது போன்ற போர்க்களக் காட்சிகள், தொடர் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. அக்கோட்டை உயரமான மதிற்சுவர்களை கொண்டதாயும், வீரர்கள் அதைத்தாக்குவது போலவும் அருகில் யானைகள் நிற்பது போலவும் அக்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

90. பல்லவர்கள் கப்பல்தளங்களைக் கட்டிய இடங்கள்

அ) மாமல்லபுரம்

ஆ) நாகப்பட்டினம்

இ) தூத்துக்குடி

ஈ) அ, ஆ இரண்டும்

91. பல்லவர் காலத்தில் முக்கியமான வணிக மையாக இருந்த இடம்

அ) காஞ்சிபுரம்

ஆ) நாகப்பட்டினம்

இ) மாமல்லபுரம்

ஈ) தூத்துக்குடி

குறிப்பு: பல்லவர் காலத்தில் காஞ்சிபுரம் முக்கியமான வணிக மையாக இருந்தது. வணிகர்கள் தங்கள் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கு அரசிடம் உரிமம் பெறவேண்டும். பொதுவாகப் பண்டமாற்று முறையே நடைமுறையில் இருந்தது.

92. கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) பல்லவர் காலத்தில் வணிகர்கள் தங்களுக்கென ‘மணிக்கிராமம்’ போன்ற அமைப்புகளைக் கொண்டிருந்தனர்.

(2) பல்லவர் காலத்தில் வெளிநாட்டு வணிகத்தில் நறுமணப் பொருள்கள், பருத்தி ஆடைகள், விலையுயர்ந்த கற்கள், மூலிகைகள் ஆகியவை ஜாவா, சுமத்ரா, கம்போடியா, இலங்கை, சீனா, மியான்மர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மாமல்லபுரம் ஒரு முக்கியத் துறைமுகமாக விளங்கியது.

(3) பல்லவர் காலத்தில் வணிகர்கள் தங்களுக்கெனத் தனிக்குழுக்களை (guild) சுதேசி, நானாதேசிகர், ஐநூற்றுவர் என்ற பெயர்களில் அமைத்துக் கொண்டனர். அவர்களின் முக்கிய அமைப்பு ஐஹோல் நகரினை மையமாகக் கொண்டு செயல்பட்டது.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 3 மட்டும் சரி

ஈ) அனைத்தும் சரி

93. வெளிநாடுகளோடு வணிகம் மேற்கொண்ட வணிகர்களின் குழு ஆகும்.

அ) நானாதேசி

ஆ) சுதேசி

இ) ஐநூற்றுவர்

ஈ) சபை

குறிப்பு: வெளிநாடுகளோடு வணிகம் மேற்கொண்ட வணிகர்களின் குழு நானாதேசி ஆகும். இவ்வமைப்பு மையப்பகுதியில் காளையின் வடிவத்தைக் கொண்ட தனிக் கொடியைக் கொண்டிருந்தது. வீரசாசனம் என்ற பிரகடனங்களை வெளியிடும் உரிமையையும் பெற்றிருந்தது. நானாதேசியின் செயல்பாடுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் விரிந்து பரந்திருந்தது.

94. நானாதேசியின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டதாகக் கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது?

அ) பட்டன்சாமி

ஆ) பட்டணக்கிழார்

இ) தண்டநாயகன்

ஈ) மேற்கூறிய அனைத்தும்

குறிப்பு: நானாதேசியின் தலைவர் பட்டன்சாமி, பட்டணக்கிழார், தண்டநாயகன் என்ற பெயர்களில் கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதன் உறுப்பினர்கள் ஐஹொல் பரமேஸ்வரியார் என்றழைக்கப்பட்டனர்.

95. பொருத்துக.

(1) காம்போஜா – தெற்கு மலேசிய தீபகற்பம், சுமத்ரா

(2) சம்பா – கம்போடியா

(3) ஶ்ரீவிஜயா – ஆனம்

அ) 2 1 3

ஆ) 3 1 2

இ) 3 2 1

ஈ) 2 3 1

குறிப்பு: தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு கடல் கடந்த வணிகத்தில் பல்லவர் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் இக்காலத்தில் காம்போஜா(கம்போடியா), சம்பா(ஆனம்), ஸ்ரீவிஜயா(தெற்கு மலேசிய தீபகற்பமும் சுமத்ராவும்) மூன்று முக்கிய அரசுகள் இருந்தன.

96. மத்தவிலாச பிரகசனம் என்ற நூலை எழுதியவர்

அ) முதலாம் பரமேஸ்வரவர்மன்

ஆ) விக்கிரமாதித்யன்

இ) முதலாம் மகேந்திரவர்மன்

ஈ) தாலமி

குறிப்பு: முதலாம் மகேந்திரவர்மன் மத்தவிலாச பிரகசனம் என்ற நூலை சமஸ்கிருதத்தில் எழுதினார்.

97. பல்லவர் பகுதிகளில் குடைவரைக் கோயில்களை அறிமுகம் செய்த பெருமைக்குரியவர்

அ) விக்கிரமாதித்யன்

ஆ) முதலாம் மகேந்திரவர்மன்

இ) கீர்த்திவர்மன்

ஈ) முதலாம் பரமேஸ்வரவர்மன்

குறிப்பு: பல்லவர் பகுதிகளில் குடைவரைக் கோயில்களை அறிமுகம் செய்த பெருமை முதலாம் மகேந்திரவர்மனைச் சேரும்.

98. பொருத்துக.

(1) கீர்த்தர்ஜூன்யம் – தண்டி

(2) தசகுமாரசரிதம் – தண்டி பல்லவ

(3) காவிய தர்சா – பாரவி

அ) 3 2 1

ஆ) 2 1 3

இ) 3 1 2

ஈ) 2 3 1

குறிப்பு: தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வியக்கத்தக்க இரு நூல்கள் சமஸ்கிருத இலக்கியத்திற்கான தர அளவுகளை உருவாக்கின. அவை பாரவியின் கீர்த்தர்ஜூன்யம், தண்டியின் தசகுமாரசரிதம் ஆகிய நூல்களாகும். மிகச் சிறந்த அணி இலக்கணமாகிய ‘காவிய தர்சா’ என்னும் நூலை இயற்றிய தண்டி பல்லவ அரசவையைச் சில ஆண்டுகள் அலங்கரித்ததாகத் தெரிகிறது.

99. கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) பிரம்மா, ஈஸ்வரா, விஷ்ணு ஆகியோர்க்கு, தான் கட்டிய கோயில்கள், கோயில் கட்டுவதற்குப் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் செங்கல், மரம், உலோகம், சாந்து ஆகியன கொண்டு கட்டப்படவில்லை என முதலாம் மகேந்திரவர்மன் தனது மண்டகப்பட்டுக் கல்வெட்டில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

(2) மகேந்திரவர்மனின் குடைவரைக் கோயில்கள் வழக்கமாக மண்டபபாணியில் தூண்களைக் கொண்ட ஒரு மண்டபத்தைக் கொண்டிருக்கும்; அல்லது முதலில் ஒரு மண்டபத்தையும் அதற்குப் பின்புறமோ, பக்கவாட்டிலோ ஒரு கருவறையைக் கொண்டிருக்கும்

(3) காஞ்சிப்பகுதியிலும் கிருஷ்ணா கோதாவரி நதிகளுக்கிடைப்பட்ட பகுதிகளிலும் பௌத்தத்துறவி மடாலயங்கள் அமைந்திருந்தன. இவையே பௌத்தக் கல்வி முறையின் மையமாக இருந்தன.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 3 மட்டும் சரி

ஈ) அனைத்தும் சரி

100. எல்லோரா, அஜந்தா குகைகள் காணப்படும் இடம்

அ) மகாராஷ்டிரா

ஆ) குஜராத்

இ) மத்தியப்பிரதேசம்

ஈ) ராஜஸ்தான்

குறிப்பு: மகாராஷ்டிர மாநிலத்தின் ஔரங்காபாத் மாவட்டத்தில் எல்லோரா, அஜந்தா என்னுமிடங்களில் திரளாகக் குகைகளும் கோயில்களும் அமைந்துள்ளன. எல்லோரா குகைக் கோயில்கள் அவற்றின் சிற்பங்களுக்காகப் பெயர் பெற்றவை. அஜந்தா குகைக் கோயில்கள் அவற்றின் ஓவியங்களுக்காகப் புகழ் பெற்றவை. இக்கோயில்களின் காலம் சுமார் பொ.ஆ. 500-950 ஆகும்.

101. எல்லோராவிலுள்ள குடைவரைக் கோயில்களில் எத்தனை வகையான குகைகள் உள்ளன?

அ) 32

ஆ) 24

இ) 30

ஈ) 34

குறிப்பு: எல்லோராவிலுள்ள குடைவரைக் கோயில்களில் 34 குகைகள் சரணத்ரி மலையில் அமைந்துள்ளன.

102. எல்லோராவில் எத்தனை குகைகளில் சுவரோவியங்கள் காணப்படுகின்றன?

அ) 6

ஆ) 7

இ) 4

ஈ) 5

குறிப்பு: எல்லோராவில் ஐந்து குகைகளில் சுவரோவியங்கள் காணப்படுகின்றன. ஆனால் கைலாசநாதர் கோயிலில் உள்ளவை மட்டும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன.

103. எல்லோரா குகைகளை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்த ஆண்டு

அ) 1938

ஆ) 1983

இ) 1987

ஈ) 1986

குறிப்பு: எல்லோரா குகைகளை 1983இல் உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

104. எல்லோராவில் மொத்தம் எத்தனை பௌத்தக் குகைகள் உள்ளன?

அ) 10

ஆ) 12

இ) 14

ஈ) 16

குறிப்பு: எல்லோராவில் மொத்தம் 12 பௌத்தக் குகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவம் கொண்ட கட்டடக்கலைப்பாணியைக் கொண்டுள்ளது. அவற்றில் சில அளவில் சிறியன. மற்றவை இரண்டு அல்லது மூன்று அடுக்குகளைக் கொண்டவை.

105. அஜந்தா குகைகளில் குகை எண் ஒன்பதிலும் பத்திலும் காணப்படும் சுவரோவியங்கள் யாருடைய காலத்தைச் சேர்ந்தவை?

அ) ஹரிசேனர்

ஆ) சாதவாகனர்

இ) அகத்தியர்

ஈ) சத்ரியர்

குறிப்பு: அஜந்தா குகைகள் சிறப்பு வாய்ந்த சுவரோவியங்களின் கருவூலமாகும். முதல் கட்ட ஓவியங்கள் பெரும்பாலானவை குகைஎண் ஒன்பதிலும் பத்திலும் காணப்படுகின்றன. இவை சாதவாகனர் காலத்தைச் சேர்ந்தனவாகும்.

106. பொருத்துக.

(1) தியான முத்ரா – போதனை செய்யும் புத்தர்

(2) வியாக்கியான முத்ரா – பூமி ஸ்பர்ஸ முத்ரா

(3) பூமி ஸ்பர்ஸ முத்ரா – தியான புத்தர்

அ) 2 1 3

ஆ) 2 3 1

இ) 1 3 2

ஈ) 3 1 2

குறிப்பு: புத்தரின் மூன்று வகைத் தோற்றங்கள்; 1. தியான புத்தர் (தியான முத்ரா) 2. போதனை செய்யும் புத்தர் (வியாக்கியான முத்ரா) 3. வலது கைஆள்காட்டி விரலால் பூமியைத் தொடும் புத்தர் (பூமி ஸ்பர்ஸ முத்ரா).

107. கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத் நகரத்திற்கு வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் அஜந்தா குகைகள் அமைந்துள்ளன. எரிமலைப் பாறைகளிலிருந்து மொத்தம் 30 குகைகள் குடைந்தெடுக்கப்பட்டுள்ளன. இவை சுவரோவியங்களுக்குப் பெயர் பெற்றனவாக இருந்தாலும் இங்குச் சிற்பங்களும் உள்ளன.

(2) ஹீனயான பௌத்த மதப்பிரிவினைச் சேர்ந்தவர்களே முதன்முதலில் அஜந்தா குகைகளை அமைக்கத் துவங்கினர். பொ.ஆ.மு. 200 பொ.ஆ. 200 வரையில் தக்காண பீடபூமிப் பகுதிகளை ஆண்ட அரசர்கள் இம்முயற்சிகளுக்கு ஆதரவளித்தனர்.

(3) முதற்கட்டக் குகைகள் பொ.ஆ.மு. 200 – பொ.ஆ. 200 காலகட்டத்தைச் சேர்தவையாகும். இரண்டாவது கட்டக் குகைகள் சுமார் பொ.ஆ.200 – பொ.ஆ.400 காலப்பகுதியைச் சேர்ந்தனவாகும்.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 3 மட்டும் சரி

ஈ) அனைத்தும் சரி

108. போதிசத்துவர் ஓவியம் காணப்படும் இடம்

அ) அஜந்தா

ஆ) எல்லோரா

இ) மாமல்லபுரம்

ஈ) காஞ்சிபுரம்

109. கட்டடக்கலை நோக்கில் அஜந்தா குகைகளை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?

அ) 3

ஆ) 2

இ) 4

ஈ) 5

குறிப்பு: கட்டடக்கலை நோக்கில் அஜந்தா குகைகளை இரு குழுக்களாகப் பிரிக்கலாம். ஒன்று சைத்தியங்கள்; மற்றொன்று விகாரங்கள்.

110. பல்லவர்களின் அடையாளமாகக் கருதப்படும் கடற்கரைக் கோயில் யாருடைய ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது?

அ) சிம்மவிஷ்ணு

ஆ) ராஜசிம்மன்

இ) முதலாம் மகேந்திரவர்மன்

ஈ) மங்களேசன்

குறிப்பு: பல்லவர்களின் அடையாளமாகக் கருதப்படும் மாமல்லபுரம் (மகாபலிபுரம்) கடற்கரைக் கோயில் ராஜசிம்மனின் (700-728) ஆட்சிக் காலத்தில் எழுப்பியதாகும். இக்கோயில் மூன்று கருவறைகளைக் கொண்டுள்ளது.

111. கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலின் வெளிப்புறச் சுவர் விஷ்ணுவிற்குப் படைத்தளிக்கப்பட்டுள்ளது. எல்லைச் சுவற்றின் உட்பக்கம் விரிவான செதுக்கு வேலைப்பாடுகளையும் சிற்பங்களையும் கொண்டுள்ளது. தென்னிந்தியாவில் கட்டுமானக் கோயில்களில் இது முதன்மையானதாகும்.

(2) இப்பகுதியிலுள்ள ஏனைய கோயில் கட்டடங்களைப் போலின்றி இக்கடற்கரைக் கோயில் பாறையில் செதுக்கப்பட்ட ஐந்து அடுக்குகளைக் கொண்ட கோவிலாகும்.

(3) ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விமானங்கள் மாமல்லபுரபல்லவர் கோயில்களின் சிறப்புப் பண்பாகும்.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 3 மட்டும் சரி

ஈ) அனைத்தும் சரி

112. பஞ்சபாண்டவர் ரதங்களில் மிக நேர்த்தியானது

அ) அர்ச்சுன ரதம்

ஆ) தர்மராஜ ரதம்

இ) நகுல, சகாதேவ ரதம்

ஈ) பீம ரதம்

குறிப்பு: மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலிலுள்ள ஒற்றைக்கல் தேர்கள் பஞ்சபாண்டவர் ரதம் என அறியப்படுகின்றன. இவ்வைந்து ரதங்களில் மிக நேர்த்தியானது தர்மராஜ ரதமாகும். இது சதுர வடிவிலான அடித்தளத்தையும் மூன்றடுக்கு விமானத்தையும் கொண்டுள்ளது.

113. கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) தமிழ் பக்தி இயக்கத்தின் வலுவான அலை பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை நாடு முழுதும் வீசியது

(2) நாயன்மார், ஆழ்வார் ஆகியோர் இயற்றிய பாடல்களே தமிழ் பக்தி இயக்கத்தின் அடிப்படையாகும்.

(3) பன்னிரு ஆழ்வார்களும் அறுபத்து மூன்று நாயன்மார்களும் தமிழ்ச் சமூகத்தின் கைவினைஞர்கள், வேளாண்குடியினர் போன்ற பல பிரிவுகளிலிருந்து வந்தவராவர்.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 3 மட்டும் சரி

ஈ) அனைத்தும் சரி

114. பன்னிரு ஆழ்வார்களுள் இருந்த பெண் ஆழ்வார்

அ) முடத்தாமக்கண்ணியார்

ஆ) காரைக்கால் அம்மையார்

இ) ஆண்டாள்

ஈ) மங்கையற்கரசியார்

குறிப்பு: கவிஞர் காரைக்கால் அம்மையார், பாண்டிய அரசி மங்கையற்கரசியார் ஆகியோர் பெண் நாயன்மார்கள் ஆவர்.

115. பக்தி இயக்க வரலாற்றிற்கான முக்கியச் சான்றுகள்

அ) தேவாரம், நாலாயிரத்திவ்வியபிரபந்தம்,

ஆ) திருத்தொண்டர்தொகை

இ) திருவாசகம், பெரியபுராணம்

ஈ) மேற்கூறிய அனைத்தும்

குறிப்பு: தேவாரம், நாலாயிரத்திவ்வியபிரபந்தம், திருத்தொண்டர்தொகை, மாணிக்கவாசகரின் திருவாசகம், பெரியபுராணம் முதலான பக்தி இயக்கப்பாடல்களே பக்தி இயக்க வரலாற்றிற்கான முக்கியச் சான்றுகளாகும்.

116. ஆழ்வார்களின் வைணவப்பாடல்களை எந்தப் பெயரில் நாதமுனி தொகுத்தார்?

அ) தேவாரம், நாலாயிரத்திவ்வியபிரபந்தம்,

ஆ) திருத்தொண்டர்தொகை

இ) திருவாசகம், பெரியபுராணம்

ஈ) மேற்கூறிய அனைத்தும்

குறிப்பு: ஆழ்வார்கள் வைணவப்பாடல்களை இயற்றினர். ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இப்பாடல்கள் அனைத்தையும் (நான்காயிரம்) நாலாயிரதிவ்வியபிரபந்தமாக நாதமுனி தொகுத்தார்.

117. திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றியவர்.

அ) சுந்தரர்

ஆ) அப்பர்

இ) நாதமுனி

ஈ) பெரியாழ்வார்

குறிப்பு: நாதமுனி திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றியவர்.

118. பாண்டிய மன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபனின் ஆட்சிக்காலத்தில் திருவில்லிபுத்தூரில் வாழ்ந்தவர்

அ) நம்மாழ்வார்

ஆ) திருமங்கையாழ்வார்

இ) பேயாழ்வார்

ஈ) பெரியாழ்வார்

குறிப்பு: ஒன்பதாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபனின் ஆட்சிக்காலத்தில் திருவில்லிபுத்தூரில் வாழ்ந்தவர் பெரியாழ்வார். கண்ணனின் குழந்தைப்பருவமே அவருடையபாடல்களின் கருவாயிருந்தது.

119. ஆழ்வார்களில் தலைசிறந்தவராகக் கருதப்படுபவர்

அ) நம்மாழ்வார்

ஆ) திருமங்கையாழ்வார்

இ) பேயாழ்வார்

ஈ) பெரியாழ்வார்

குறிப்பு: நம்மாழ்வார் ஆழ்வார்களில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். அவர் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குருகூரைச் (ஆழ்வார்திருநகரி) சேர்ந்தவர். திருவாய்மொழி உட்பட நான்கு நூல்களை அவர் எழுதியுள்ளார். அவருடைய பாடல்கள் நான்கு வேதங்களின் சாரத்தை வடித்தெடுத்து எழுதப்பட்டதென்பது வைணவ நம்பிக்கை.

120. சைவக் கவிஞர்களில் முக்கியமானவர்கள்

அ) திருநாவுக்கரசர்

ஆ) திருஞானசம்பந்தர், சுந்தரர்

இ) மாணிக்கவாசகர்

ஈ) மேற்கூறிய அனைவரும்

குறிப்பு: சைவக் கவிஞர்களில் முக்கியமானவர்கள் திருநாவுக்கரசர் (அப்பர்), திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆவர்.

121. பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர்

அ) திருநாவுக்கரசர்

ஆ) திருஞானசம்பந்தர், சுந்தரர்

இ) மாணிக்கவாசகர்

ஈ) நம்பியாண்டார்நம்பி

குறிப்பு: பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் திருநாவுக்கரசர் (அப்பர்), திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் பாடல்களை நம்பியாண்டார்நம்பி பன்னிரு திருமுறைகளாகத் தொகுத்தார்.

122. கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) தேவாரம் என்றறியப்படும் முதல் ஏழு நூல்களில் உள்ள பாடல்கள் சம்பந்தர் (1-3), அப்பர் (4-6), சுந்தரர் (7) ஆகியோரால் இயற்றப்பட்டனவாகும்.

(2) எட்டாம் திருமுறை மாணிக்கவாசகரின் பாடல்களைக் கொண்டதாகும்.

(3) சேக்கிழாரின் பெரியபுராணத்தோடு சேர்த்து பன்னிரண்டு நூல்கள் உள்ளதாலும் இவை பன்னிரு திருமுறை என்று போற்றப்படுகின்றன.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 3 மட்டும் சரி

ஈ) அனைத்தும் சரி

123. பெரியபுராணம் யாருடைய காலத்தில் இயற்றப்பட்டது?

அ) சேரர்

ஆ) சோழர்

இ) பாண்டியர்

ஈ) சாளுக்கியர்கள்

குறிப்பு: பெரியபுராணம் சோழர் காலத்தில் இயற்றப்பட்டதாகும். இது அறுபத்துமூன்று நாயன்மார்களின் வரலாற்றைச் சொல்லுவதோடல்லாமல் அவர்தம் வாழ்வில் நடந்த அதிசய சம்பவங்கள் குறித்தும் பெரியபுராணம் கூறுகிறது.

124. ஆதிசங்கரர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்

அ) கேரளா

ஆ) ஆந்திரா

இ) தமிழ்நாடு

ஈ) கர்நாடகா

குறிப்பு: இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய அரச வம்சங்களுக்கு அரசு என்ற ஒன்றை உருவாக்க ஒரு சித்தாந்தம் தேவைப்பட்டதின் பின்னணியில் ஒரு புதிய கோட்பாடு கேரள மாநிலம் காலடியைச் சேர்ந்த சங்கரர் என்பவரால் முன் வைக்கப்பட்டது.

125. கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) ஆதிசங்கரரின் காலம் 788 – 820. மாயை கோட்பாடு குறித்துப் பல்வேறு மதப்பிரிவுகளைச் சார்ந்தவர்களோடு விவாதம் செய்து வென்றார்.

(2) அடிப்படையில் ஆதிசங்கரரின் அத்வைதக் கோட்பாடு வேதாந்தம் அல்லது உபநிடதத்தத்துவங்களில் வேரூன்றி இருந்தது.

(3) பௌத்தமதத்தை வேரறுத்துவிட்டு ஸ்மார்த்தமடங்களை நிறுவ ஆதிசங்கரர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாய் சிருங்கேரி, துவாரகை, பத்ரிநாத், பூரி ஆகிய இடங்களில் மடங்கள் உருவாயின. பிராமணமடாதிபதிகள் அவற்றிற்குத் தலைமை தாங்கினர்.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 3 மட்டும் சரி

ஈ) அனைத்தும் சரி

126. ஸ்ரீ ராமானுஜர் பிறந்த ஊர்

அ) ஶ்ரீவில்லிப்புத்தூர்

ஆ) ஸ்ரீபெரும்புதூர்

இ) ஸ்ரீரங்கம்

ஈ) திருப்பரங்குன்றம்

குறிப்பு: ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ஸ்ரீ ராமானுஜர் (1017- 1138) காஞ்சிபுரத்தில் சங்கரரின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட யாதவபிரகாசரிடம் தத்துவப்பயிற்சி பெற்றார்.

127. “பக்தியெனும் ஒருங்கிணைக்கும் சக்தி அரசர்களையும் பிராமண குருமார்களையும் சாதாரண மக்களையும் முரண்பாடில்லாத விதத்தில் ஒருங்கிணைத்து சாதிய அமைப்பைக் கொண்ட புதிதாக நிறுவப்பட்ட இந்து அரசுகளின் ஆட்சியை வலிமைப்படுத்தியது’’. என்று கூறியவர்

அ) எம்.ஜி.எஸ். நாராயணன்

ஆ) கேசவன் வேலுதாட்

இ) நாதமுனி

ஈ) அ, ஆ இரண்டும்

குறிப்பு: எம்.ஜி.எஸ். நாராயணன், கேசவன் வேலுதாட் ஆகியோரின் சொற்களில் பக்திக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தைச் சொல்வதென்றால் “பக்தியெனும் ஒருங்கிணைக்கும் சக்தி அரசர்களையும் பிராமண குருமார்களையும் சாதாரண மக்களையும் முரண்பாடில்லாத விதத்தில் ஒருங்கிணைத்து சாதிய அமைப்பைக் கொண்ட புதிதாக நிறுவப்பட்ட இந்து அரசுகளின் ஆட்சியை வலிமைப்படுத்தியது”.

128. ஸ்ரீ ராமானுஜர் இறப்பிற்கு நூறு ஆண்டுகளுக்குப்பின் அவரைப் பின்பற்றுவரோரிடம் கோட்பாட்டின் அடிப்படையில் முரண்பாடு ஏற்பட்டு தோன்றிய இரு பிரிவுகளைத் தலைமை தாங்கியவர்கள்

அ) வேதாந்ததேசிகர்

ஆ) மணவாளமாமுனிகள்

இ) கேசவன் வேலுதாட்

ஈ) அ, ஆ இரண்டும்

குறிப்பு: ஸ்ரீ ராமானுஜர் இறப்பிற்கு நூறு ஆண்டுகளுக்குப்பின் அவரைப் பின்பற்றுவரோரிடம் கோட்பாட்டின் அடிப்படையில் முரண்பாடு ஏற்பட்டு வேதாந்ததேசிகர், மணவாளமாமுனிகள் ஆகியோரின் தலைமையில் இரு பிரிவுகள் தோன்றின.

129. கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) ராமானுஜர் திருவரங்கத்திற்குச் சென்றவசில நாட்களில் யமுனாச்சாரியார் இயற்கை எய்தினார். இதனைத் தொடர்ந்து ராமானுஜரே திருவரங்கம் மடத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

(2) ராமானுஜர் ஆதிசங்கரரின் அத்வைதக் கோட்பாட்டை மறுத்தார்.

(3) ராமானுஜர் வைணவத்தின் சமூகத்தளத்தை விரிவடையச் செய்யும் நோக்கில் பிராமணர் அல்லாதோரையும் இணைத்துக் கொண்டார்.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று 3 மட்டும் சரி

ஈ) அனைத்தும் சரி

130. விசிஷ்டாத்வைதம் என்ற கோட்பாட்டை முன் வைத்தவர்

அ) வேதாந்ததேசிகர்

ஆ) ஆதிசங்கரர்

இ) ராமானுஜர்

ஈ) யமுனாச்சாரியார்

குறிப்பு: அத்வைதத்திற்கு மாற்றாக ராமானுஜர் முன் வைத்த விசிஷ்டாத்வைதம் சிந்தனையாளர்களிடம் செல்வாக்குப் பெற்று தனி மரபாக வளர்ச்சி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!