Book Back QuestionsTnpsc

தென்னிந்திய அரசுகள் Book Back Questions 6th Social Science Lesson 19

6th Social Science Lesson 19

19] தென்னிந்திய அரசுகள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

கல்வெட்டுகள்: மண்டகப்பட்டு குகைக் கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு.

செப்பேடுகள்: காசக்குடிச் செப்பேடுகள்.

இலக்கியங்கள்: மத்த விலாசப் பிரகசனம், அவந்தி சுந்தரி கதை, கலிங்கத்துப்பரணி, பெரிய புராணம், நந்திக் கலம்பகம்.

அயலவர் குறிப்புகள்: யுவான் சுவாங்கின் குறிப்புகள்.

முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி, சிறுத்தொண்டர் (63 நாயன்மார்களில் ஒருவர்) எனப் பிரபலமாக அறியப்பட்டார். பரஞ்சோதி வாதாபிப் படையெடுப்பில் பல்லவர் படைக்குத் தலைமை ஏற்று நடத்தினார். அதன் வெற்றிக்குப் பின்னர் மனமாற்றம் பெற்ற அவர் சிவ பக்தராக மாறினார். – பெரிய புராணம்

அய்கோல் கல்வெட்டு: இக்கல்வெட்டு அய்கோலிலுள்ள (பாகல்கோட் மாவட்டம், கர்நாடகா) மேகுதி கோவிலில் உள்ளது. இது சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவரான ரவிகீர்த்தி என்பவரால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது. இக்கல்வெட்டு ஹர்ஷவர்த்தனர் இரண்டாம் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றது.

பட்டடக்கல்: யுனெஸ்கோ உலகப்பாரம்பரியச் சின்னம். பட்டடக்கல் கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும். அங்கு 10 கோவில்கள் உள்ளன. அவற்றில் நான்கு வட இந்திய பாணியான நாகாரா பாணியிலும் மற்றுமுள்ள ஆறு தென்னிந்திய திராவிட பாணியிலும் கட்டப்பட்டுள்ளன. விருப்பாக்ஷா கோவிலும் சங்கமேஸ்வரா கோவிலும் திராவிடப் பாணியிலும் பாப்பநாதர் கோவில் நாகாரா பாணியிலும் அமைந்துள்ளன. விருப்பாக்ஷா கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலை மாதிரியாக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கட்டுமானப் பணியில் காஞ்சிபுரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிற்பிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

உலகம் அந்நாளில்: மாபெரும் லேஷன் (Leshan) புத்தர் நிலை 71 மீட்டர் உயரம். சீனாவின் தாங் (Tang) அரச வம்சத்தினரால் கட்டப்பட்டது. (கி. பி (பொ. ஆ) 713-803).

பாக்தாத்: இஸ்லாமியப் பேரரசின் மகத்தான நகரம். 8ஆம் நூற்றாண்டிலிருந்து 10ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?

(அ) இரண்டாம் நரசிம்மவர்மன்

(ஆ) இரண்டாம் நந்திவர்மன்

(இ) தந்திவர்மன்

(ஈ) பரமேஸ்வரவர்மன்

2. கீழ்க்காண்பனவனுற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட பட்டங்கள் யாவை?

(அ) மத்தவிலாசன்

(ஆ) விசித்திரசித்தன்

(இ) குணபாரன்

(ஈ) இவை மூன்றும்

3. கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?

(அ) அய்கோல்

(ஆ) சாரநாத்

(இ) சாஞ்சி

(ஈ) ஜீனாகத்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று 1: பாறை குடைவரை கோவிலைச் செதுக்கும் முறையிலிருந்து, கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டும் மாற்றம் ஏற்பட்டதை பல்லவர் கலை உணர்த்துகிறது.

கூற்று 2: காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் பல்லவர்களின் கலை மற்றும் கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

(அ) கூற்று 1 தவறு

(ஆ) கூற்று 2 தவறு

(இ) இரு கூற்றுகளும் சரி

(ஈ) இரு கூற்றுகளும் தவறு

2. பல்லவ அரசினைப் பற்றிய கூற்றுகளைச் சிந்திக்கவும்:

கூற்று 1: இவர்களுடைய ஆட்சியில் அப்பரால் இயற்றப்பட்ட தேவாரம் முதல் மற்ற தமிழ் இலக்கியங்களும் செழித்தோங்கின.

கூற்று 2: முதலாம் மகேந்திரவர்மன் மத்த விலாச பிரகசனம் எனும் நூலின் ஆசிரியர் ஆவார்.

(அ) கூற்று 1 மட்டும் சரி

(ஆ) கூற்று 2 மட்டும் சரி

(இ) இரு கூற்றுகளும் சரி

(ஈ) இரு கூற்றுகளும் தவறு

3. ராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்தித்து அவற்றில் எவை சரியான கூற்றென்று கண்டறியவும்.

1. இவ்வம்சத்தை நிறுவியவர் தந்திதுர்கா.

2. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்.

3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.

(அ) 1 மட்டும் சரி

(ஆ) 2, 3 சரி

(இ) 1, 3 சரி

(ஈ) மூன்றும் சரி

4. கீழ்க்காண்பனவற்றில் எது சரியான இணையில்லை:

(அ) எல்லோரா குகைகள் – ராஷ்டிர கூடர்கள்

(ஆ) மாமல்லபுரம் – முதலாம் நரசிம்மவர்மன்

(இ) எலிபெண்டா குகைகள் – அசோகர்

(ஈ) பட்டடக்கல் – சாளுக்கியர்கள்

5. தவறான இணையைக் கண்டறிக:

அ) தந்தின் – தசகுமார சரிதம்

ஆ) வாத்ஸ்யாயர் – பாரத வெண்பா

இ) பாரவி – கிரதார்ஜீனியம்

ஈ) அமோகவர்ஷர் – கவிராஜமார்க்கம்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ___________ ஹர்ஷவர்தனரை நர்மதை ஆற்றின் கரையில் தோற்கடித்தார்.

2. ___________ வாதாபியை அழித்து வாதாபி கொண்டான் எனப் பட்டம் சூட்டிக்கொண்டார்

3. அய்கோல் கல்வெட்டின் ஆசிரியர் ___________ ஆவார்.

4. ____________ முதலாம் நரசிம்மவர்மனின் படைத் தளபதியாவார்.

5. ____________, ___________ ஆகிய இடங்களில் உள்ள இசைக் கல்வெட்டுக்கள் பல்லவர்களின் இசையார்வத்தை உணர்த்துகின்றன.

பொருத்துக:

1. பல்லவர் – கல்யாணி

2. கீழைச் சாளுக்கியர் – மான்யகேட்டா

3. மேலைச் சாளுக்கியர் – காஞ்சி

4. ராஷ்டிரகூடர் – வெங்கி

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. புகழ்பெற்ற இசைக் கலைஞர் ருத்ராச்சாரியார் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்தவர்.

2. ராஷ்டிரகூட வம்சத்தின் தலைசிறந்த அரசர் இரண்டாம் புலிகேசி.

3. மாமல்லபுரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும்.

4. தேவாரம் ஆழ்வார்களால் இயற்றப்பட்டது.

5. விருப்பாக்ஷி கோவில் காஞ்சி கைலாச நாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. தந்திவர்மன் 2. இவை மூன்றும் 3. அய்கோல்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. இரு கூற்றுகளும் சரி

2. இரு கூற்றுகளும் சரி

3. மூன்றும் சரி

4. சரியான இணையற்றது:

இ) எலிபெண்டா குகைகள் – அசோகர்

5. தவறான இணை:

அ) வாத்ஸ்யாயர் – பாரத வெண்பா

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. இரண்டாம் புலிகேசி 2. முதலாம் நரசிம்மவர்மன் 3. ரவிகீர்த்தி 4. பரஞ்சோதி

5. திருமயம், குடுமியான்மலை

பொருத்துக: (விடைகள்)

1. பல்லவர் – காஞ்சி

2. கீழைச் சாளுக்கியர் – வெங்கி

3. மேலைச் சாளுக்கியர் – கல்யாணி

4. ராஷ்டிரகூடர் – மான்யகேட்டா

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (விடைகள்)

1. சரி

2. தவறு

சரியான விடை: ராஷ்டிரகூட வம்சத்தின் தலைசிறந்த அரசர் அமோகவர்சர்

3. சரி

4. தவறு

சரியான விடை: தேவாரம் நாயன்மார்களால் இயற்றப்பட்டது.

5. சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!