Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Book Back Questions 7th Social Science Lesson 3

7th Social Science Lesson 3

3] தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

முதலாம் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் சோழர்களுக்கு கீழைச் சாளுக்கியர்களுக்கும் இடையிலான திருமண உறவு தொடங்கியது. அவருடைய மகளான குந்தவை சாளுக்கிய இளவரசர் விமலாதித்தனை மணந்தார். அவர்களின் மகனான ராஜராஜ நரேந்திரன் முதலாம் ராஜேந்திரனின் மகளான அம்மங்கா தேவியை மணந்தார். அவர்களின் மகனே முதலாம் குலோத்துங்கன் ஆவார்.

சைவத் துறவியான திருஞானசம்பந்தர் அரிகேசரியைச் சமண மதத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினார். மதம் மாறிய பின்னர் அரிகேசரி சுமார் 8000 சமணர்களைக் கழுவேற்றியதாகக் கூறப்படுகிறது. எண்ணிக்கை மிகைப்படுத்திக் கூறப்பட்டிருப்பினும், சைவத்திற்கு மாறிய பின்னர் அரிகேசரியின் சமண எதிர்ப்புப் போக்கு சந்தேகத்திற்கு இடமில்லாதது.

பாண்டிய அரசு “செல்வச் செழிப்பு மிக்க, உலகிலேயே மிக அற்புதமான பகுதியாகும்” என மார்க்கோ போலா புகழாரம் சூட்டுகிறார். இலங்கையோடு சேர்ந்து உலகத்தில் காணப்படும் பெரும்பாலான மாணிக்கக்கற்களையும் முத்துக்களையும் உற்பத்தி செய்கிறது என மேலும் கூறுகிறார். தன்னுடைய பயணக் குறிப்புகளில் “சதி” (உடன்கட்டை ஏறுதல்) நிகழ்வுகளையும் அரசர்களின் பலதார மணத்தையும் பதிவு செய்துள்ளார்.

விரிவான அளவில் இக்காலத்தில் நடைபெற்ற குதிரை வணிகம் குறித்து வாசப் என்பவர் பதிவு செய்துள்ளார். “10, 000 க்கும் மேற்பட்ட குதிரைகள் காயலிலும் ஏனைய இந்தியத் துறைமுகங்களிலும் இறக்குமதியாயின. அவற்றில் 1400 குதிரைகள் ஜமாலுதீன் பொறுப்பில் இனப்பெருக்கம் செய்து வளர்த்து வந்த குதிரைகளாகும். ஓவ்வொரு குதிரையின் சராசரி விலை சொக்கத் தங்கத்தினாலான 200 தினார்களாகும்” என அவர் எழுதுகிறார்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்?

(அ) விஜயாலயன்

(ஆ) முதலாம் ராஜராஜன்

(இ) முதலாம் ராஜேந்திரன்

(ஈ) அதிராஜேந்திரன்

2. கீழ்க்காணும் பாண்டிய அரசர்களுள், களப்பிரர் ஆட்சியை முடித்து வைத்தவர் என அறியப்படுபவர் யார்?

(அ) கடுங்கோன்

(ஆ) வீரபாண்டியன்

(இ) கூன்பாண்டியன்

(ஈ) வரகுணன்

3. கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?

(அ) மண்டலம்

(ஆ) நாடு

(இ) கூற்றம்

(ஈ) ஊர்

4. விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?

(அ) வீர ராஜேந்திரன்

(ஆ) ராஜாதிராஜா

(இ) அதி ராஜேந்திரன்

(ஈ) இரண்டாம் ராஜாதிராஜா

5. சோழர்களின் கட்டடக்கலைகக்கான எழுத்துக்காட்டை எங்குக் காணலாம்?

(அ) கண்ணாயிரம்

(ஆ) உறையூர்

(இ) காஞ்சிபுரம்

(ஈ) தஞ்சாவூர்

6. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?

(அ) சோழ மண்டலம்

(ஆ) பாண்டிய நாடு

(இ) கொங்குப்பகுதி

(ஈ) மலைநாடு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. —————– தஞ்சாவூரிலுள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை நிர்மாணித்தார்.

2. ————— வேதக் கல்லூரி ஒன்றை எண்ணாயிரத்தில் நிறுவினார்.

3. ————— வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி ஆவார்.

4. பாண்டியப் பேரரசின் அரசுச் செயலகம் ————— என அறியப்பட்டது.

III. பொருத்துக:

அ – ஆ

1. மதுரை – அ) உள்நாட்டு வணிகர்

2. கங்கைகொண்ட சோழபுரம் – ஆ) கடல்சார் வணிகர்

3. அஞ்சு வண்ணத்தார் – இ) சோழர்களின் தலைநகர்

4. மணி-கிராமத்தார் – ஈ) பாண்டியர்களின் தலைநகர்

IV. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. டெல்லி சுல்தானுக்குக் கட்டுப்பட்ட ஒரு முஸ்லீம் அரசு மதுரையில் உருவானது.

2. “கூடல் நகர் காவலன்” என்பது பாண்டிய அரசரின் பட்டமாகும்.

3. சோழ அரசு வைகையின் கழிமுகப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.

4. முதலாம் குலோத்துங்கன் சாளுக்கிய – சோழ அரச வம்சத்தைச் சேர்ந்தவர்.

5. சோழ அரசரின் மூத்த மகன் யுவராஜன் என அழைக்கப்பட்டார்.

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. பிற்காலச் சோழர்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?

(1) அவர்கள் ஓர் உள்ளாட்சித் துறைத் தன்னாட்சி அமைப்பைக் கொண்டிருந்தனர்.

(2) அவர்கள் வலுவான கப்பற்படையைக் கொண்டிருந்தனர்.

(3) அவர்கள் பௌத்தத்தைப் பின்பற்றினர்.

(4) அவர்கள் பெரிய கோவில்களைக் கட்டினர்.

(அ) 1, 2 மற்றும் 3

(ஆ) 2, 3 மற்றும் 4

(இ) 1, 2 மற்றும் 4

(ஈ) 1, 3 மற்றும் 4

2. ராஜேந்திர சோழனைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?

(1) அவர் கங்கைகொண்ட சோழன் எனும் பட்டத்தைச் சூட்டிக்கொண்டார்.

(2) அவர் தெற்கு சுமத்ராவைக் கைப்பற்றினார்.

(3) அவர் சோழர்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தினார் எனப் போற்றப்படுகிறார்.

(4) அவர் ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்ற அவருடைய கப்பற்படை உதவியது.

(அ) 1 மற்றும் 2

(ஆ) 3 மற்றும் 4

(இ) 1, 2 மற்றும் 4

(ஈ) இவை அனைத்தும்

3. கூற்று: யுவராஜாக்கள் மாநிலங்களின் ஆளுநர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.

காரணம்: நிர்வாகத்தில் பயிற்சி பெறுவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

(அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே

(ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

(இ) கூற்று தவறு, காரணம் சரி

(ஈ) கூற்றும் காரணமும் தவறு

4. கீழ்காணும் நிர்வாகப் பிரிவுகளை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தவும்

(1) நாடு (2) மண்டலம் (3) ஊர் (4) கூற்றம்

5. கீழ்காணும் நிகழ்வுகளைக் கால வரிசைப்படி எழுதவும்.

1. மாறவர்மன், வீரபாண்டியனைக் கூட்டு அரசராகப் பணியமர்த்தினார்.

2. உள்நாட்டுப் போர் தொடங்கியது.

3. மதுரையில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட்டது.

4. மாறவர்மன் குலசேகரனுக்கு இரண்டு மகன்கள். ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் சுந்தர பாண்டியன்.

5. சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார்.

6. மாலிக்கபூர் மதுரையின் மீது படையெடுத்தார்.

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. விஜயாலயன், 2. கடுங்கோன், 3. ஊர், 4. அதி ராஜேந்திரன், 5. தஞ்சாவூர், 6. பாண்டிய நாடு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. முதலாம் ராஜராஜ சோழன், 2. முதலாம் ராஜேந்திர சோழன், 3. ஜடில பராந்தக நெடுஞ்சடையான், 4. எழுத்துமண்டபம்

III. பொருத்துக:

1. ஈ, 2. இ, 3. ஆ, 4. அ

IV. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. சரி, 2. சரி, 3. காவிரி, 4. சரி, 5. சரி

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. 1, 2 மற்றும் 4, 2. இவை அனைத்தும், 3. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே, 4. மண்டலம், நாடு, கூற்றம், ஊர், 5. மாறவர்மன் குலசேகரனுக்கு இரண்டு மகன்கள். ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் சுந்தர பாண்டியன், மாறவர்மன், வீரபாண்டியனைக் கூட்டு அரசராகப் பணியமர்த்தினார், உள்நாட்டுப் போர் தொடங்கியது, சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார், மாலிக்கபூர் மதுரையின் மீது படையெடுத்தார், மதுரையில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!