Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

தேசியம்: காந்திய காலகட்டம் Book Back Questions 10th Social Science Lesson 8

10th Social Science Lesson 8

8] தேசியம்: காந்திய காலகட்டம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

1919ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மூலமாக இரட்டை ஆட்சி என்பது அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் மாகாண அரசின் அதிகாரங்கள் ஒதுக்கப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட துறைகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டது. நிதி, பாதுகாப்பு, காவல்துறை, நீதித்துறை, நிலவருவாய், மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகள் ஆங்கிலேயர்கள் வசம் ஒதுக்கப்பட்டன. மாற்றப்பட்ட துறைகளில் உள்ளாட்சி, கல்வி, பொது சுகாதாரம், பொதுப்பணி, வேளாண்மை, வனங்கள் மற்றும் மீன்வளத்துறை ஆகியன இந்திய அமைச்சர்களின் கட்டுப்பாட்டின் கீழ் விடப்பட்டன. 1935ஆம் ஆண்டு மாகாண சுயாட்சி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இந்த முறை முடிவுக்கு வந்தது.

ஆங்கிலேயர்கள் 1865ஆம் ஆண்டு முதலாவது வனச்சட்டத்தை நிறைவேற்றினார்கள். சுள்ளி எடுப்பது, கால்நடைத் தீவனம் மற்றும் தேன், விதைகள், மருத்துவ மூலிகைகள், கொட்டைகள் ஆகிய சிறிய அளவிலான வன உற்பத்திப் பொருள்களையும் வனப்பகுதிகளில் இருந்து சேகரிக்க இந்தச் சட்டம் வனத்தில் வாழ்வோருக்கு தடை விதித்தது. 1878ஆம் ஆண்டின் இந்திய வனங்கள் சட்டத்தின் படி வனங்களின் உரிமை அரசிடம் இருந்தது. நன்செய் மற்றும் தரிசு நிலங்களும் வனங்களாக கருதப்பட்டன. பழங்குடியினர் பயன்படுத்திய சுழற்சி முறை விவசாயம் தடை செய்யப்பட்டது. உள்ளுர் மக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வனப்பகுதிகளை தள்ளி வைப்பதற்கு பாதிக்கப்பட்ட ஆதிவாசிகளும் தேசியவாதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பழங்குடியினர் நடத்திய தொடர் ஆர்ப்பாட்டங்களுக்கு மிக முக்கிய ஆதாரமாக ராம்பாவில் அல்லூரி சீதாராம ராஜீ தலைமையிலான ஆர்ப்பாட்டத்தைக் குறிப்பிடலாம். ராம்பா பகுதி ஆதிவாசிகளின் நலன் காப்பதற்காக ஊழல் அதிகாரிகளுடன் அல்லூரி சீதாராம ராஜீ போரடியதால் அவரது உயிரைக் குறிவைத்து ஆங்கிலேய அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. ராம்பா ஆதிவாசிகளின் கிளர்ச்சியை அடக்குவதற்காக (1922-24) மலபார் காவல்துறையின் சிறப்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டது. வனவாசிகளின் நலனுக்காகப் போராடிய அல்லூரி சீதாராம ராஜீ தியாகி ஆனார்.

ஒரு சிலர் அதிகாரத்துக்கு வருவதால் உண்மையான சுயராஜ்ஜியம் கிடைத்து விடாது, ஆனால் தாங்கள் பெற்ற அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தப்படும் போது நிர்வாகத்தினரை எதிர்க்கும் திறனை அனைவரும் பெறச்செய்வதே சுயராஜ்ஜியமாகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?

(அ) மோதிலால் நேரு

(ஆ) சைஃபுதீன் கிச்லு

(இ) முகம்மது அலி

(ஈ) ராஜ் குமார் சுக்லா

2. இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?

(அ) பம்பாய்

(ஆ) மதராஸ்

(இ) கல்கத்தா

(ஈ) நாக்பூர்

3. விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?

(இ) 1930 ஜனவரி 26

(ஆ) 1929 டிசம்பர் 26

(இ) 1946 ஜீன் 16

(ஈ) 1947 ஜனவரி 15

4. முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?

(அ) 1858

(ஆ) 1911

(இ) 1865

(ஈ) 1936

5. 1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?

(அ) கோவில் நுழைவு நாள்

(ஆ) மீட்பு நாள் (டெலிவரன்ஸ் டே)

(இ) நேரடி நடவடிக்கை நாள்

(ஈ) சுதந்திரப் பெருநாள்

6. மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?

(அ) 1858ஆம் ஆண்டு சட்டம்

(ஆ) இந்திய கவுன்சில் சட்டம், 1909

(இ) இந்திய அரசுச் சட்டம், 1919

(ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. காந்தியடிகளின் அரசியல் குரு ___________ ஆவார்.

2. கிலாபத் இயக்கத்துக்கு ___________ தலைமை ஏற்றார்.

3. 1919ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களில் ____________ அறிமுகம் செய்தது.

4. வடமேற்கு எல்லை மாகாணத்தில் சட்ட மறுப்பு இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர் ___________

5. சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு தனித் தொகுதிகளை வழங்கும் ————-ஐ ராம்சே மெக்டொனால்டு அறிவித்தார்.

6. _____________ என்பவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காங்கிரஸ் வானொலியை திரைமறைவாக செயல்படுத்தினார்.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. i) இந்திய பொதுவுடைமை கட்சி 1920ஆம் ஆண்டு தாஷ்கண்டில் தொடங்கப்பட்டது.

ii) M. சிங்காரவேலர் கான்பூர் சதித்திட்ட வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

iii) ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆச்சார்ய நரேந்திர தேவ், மினு மசானி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் சமதர்ம கட்சி உருவானது.

iv) வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சமதர்மவாதிகள் பங்கேற்கவில்லை.

(அ) i மற்றும் ii சரியானவை

(ஆ) ii மற்றும் iii சரியானவை

(இ) iv சரியானவை

(ஈ) i, ii மற்றும் iii சரியானவை

2. கூற்று: காங்கிரஸ் முதலாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டது.

காரணம்: காங்கிரஸ் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள காந்தி-இர்வின் ஒப்பந்தம் வழிவகை செய்தது.

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

(ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.

(இ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.

(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

3. கூற்று: காங்கிரஸ் அமைச்சரவைகள் 1939ஆம் ஆண்டு பதவி விலகின.

காரணம்: காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு போரில் பங்கேற்றது.

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

(ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது

(இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானது.

(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

பொருத்துக:

1. ரௌலட் சட்டம் – பட்டங்களைத் திரும்ப ஒப்படைத்தல்

2. ஒத்துழையாமை இயக்கம் – இரட்டை ஆட்சி

3. 1919ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டம் – M. N. ராய்

4. இந்திய பொதுவுடைமை கட்சி – நேரடி நடவடிக்கை நாள்

5. 16 ஆகஸ்ட் 1946 – கருப்புச்சட்டம்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. சைஃபுதீன் கிச்லு 2. கல்கத்தா 3. (1930 ஜனவரி 26) 4. (1865)

5. கோவில் நுழைவு நாள் 6. இந்திய அரசுச் சட்டம், 1935

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. கோபால கிருஷ்ண கோகலே 2. அலி சகோதரர்கள் (முகமது அலி மற்றும் சௌகத் அலி)

3. இரட்டை ஆட்சியை 4. கான் அப்துல் கஃபார்கான் 5. வகுப்புவாரி ஒதுக்கீட்டை

6. உஷா மேத்தா

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. i, ii மற்றும் iii சரியானது

2. கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.

3. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

பொருத்துக: (விடைகள்)

1. ரௌலட் சட்டம் – கருப்புச் சட்டம்

2. ஒத்துழையாமை இயக்கம் – பட்டங்களைத் திருப்ப ஒப்படைதல்

3. 1919 ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டம் – இரட்டை ஆட்சி

4. இந்திய பொதுவுடைமை கட்சி – M. N. ராய்

5. 16 ஆகஸ்ட் 1946 – நேரடி நடவடிக்கை நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!