Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

தேசியம்: காந்திய காலகட்டம் 10th Social Science Lesson 14 Questions in Tamil

10th Social Science Lesson 14 Questions in Tamil

14] தேசியம்: காந்திய காலகட்டம்

  1. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் சமூக உரிமைகளுக்காக போராடிய பிறகு ___________ ஆண்டு தாயகம் திரும்பினார்.

A) 1912 B) 1913 C) 1915 D) 1917

(குறிப்பு: மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் சமூக உரிமைகளுக்காக சுமார் 20 ஆண்டுகள் போராடினார்.)

  1. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி __________ ஆண்டு குஜராத்தின் போர்பந்தரில் பிறந்தார்.

A) 1832 அக்டோபர் 2

B) 1847 அக்டோபர் 2

C) 1854 அக்டோபர் 2

D) 1869 அக்டோபர் 2

(குறிப்பு: காந்தியின் தந்தையார் காபா காந்தி, போர்பந்தரின் திவானாகவும் பின்னர் ராஜ்கோட்டின் திவானாகவும் பொறுப்பு வகித்தார். தீவிர வைணவ பக்தையான அவரது தாயார் புத்லிபாயின் தாக்கம் இளையவரான காந்தியின் நடவடிக்கைகளில் பெரிதும் இருந்தது.)

  1. பதின்ம பள்ளிப் படிப்பை முடித்த காந்தியடிகள் சட்டம் பயில்வதற்காக ____________ ஆண்டு இங்கிலாந்துக்குக் கடல்பயணம் மேற்கொண்டார்.

A) 1867 B) 1878 C) 1882 D) 1888

(குறிப்பு: 1891 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வழக்கறிஞர் பட்டம் பெற்ற பின்பு காந்தியடிகள் பிரிட்டிஷாரின் நீதி மற்றும் நியாய முறையில் நம்பிக்கை கொண்டவராக இந்தியாவுக்கு திரும்பினார்.)

  1. வழக்கறிஞர் பட்டம் பெற்ற காந்தியடிகள் இந்தியா திரும்பியவுடன் ___________ ல் வழக்குரைஞராக பணியாற்ற முயற்சிகள் மேற்கொண்டார்.

A) கல்கத்தா

B) குஜராத்

C) பம்பாய்

D) சென்னை

(குறிப்பு: பம்பாயில் வழக்குரைஞராக பணியாற்ற காந்தியடிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.)

  1. கூற்று 1: தென்னாப்பிரிக்காவில் இருந்த குஜராத்தி நிறுவனம் ஒன்று சட்ட உரிமை வழக்குகள் தொடர்பாக காந்தியடிகளின் சேவையை நாடியது.

கூற்று 2: இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்ட காந்தியடிகள் 1892 ஏப்ரல் மாதம் தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: குஜராத்தி நிறுவனத்தில் பணிபுரிவதற்காக காந்தியடிகள் 1893 ஏப்ரல் மாதம் தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.)

  1. டிரான்ஸ்வாலில் வசித்த இந்தியர்கள் தலைவரியாக __________ பவுண்டுகளை செலுத்த வேண்டியிருந்தது.

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: டிரான்ஸ்வாலில் வசித்த இந்தியர்கள் குறிக்கப்பட்ட பகுதிகளை விடுத்து வேறு இடங்களில் அவர்கள் நிலத்தை சொந்தமாக வைத்துக்கொள்ள முடியாத நிலை இருந்தது. இரவு 9 மணிக்கு பிறகு அனுமதியின்றி வெளியிடங்களுக்கு செல்லமுடியாத நிலையும் இருந்தது.)

  1. கூற்று 1: காந்தியடிகள், டர்பனில் இருந்து பிரிட்டோரியாவுக்கு ரயில் பயணம் மேற்கொண்ட போது பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.

கூற்று 2: காந்தியடிகள் டிரான்ஸ்வாலில் உள்ள இந்தியர்களின் கூட்டத்தைக் கூட்டி அவர்கள் தங்களுடைய குறைகளை உறுதியுடன் வெளிப்படுத்தி களைவதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

  1. ‘கடவுளின் அரசாங்கம் உணவில் உள்ளது’ என்பது யாருடைய புத்தகம்

A) ஜான் ரஸ்கின்

B) டால்ஸ்டாய்

C) காந்தியடிகள்

D) தாரோ

(குறிப்பு: தென்னாப்பிரிக்காவில் இருந்த போது காந்தியடிகளுக்கு டால்ஸ்டாய், ஜான் ரஸ்கின் ஆகியோரின் எழுத்துக்களுடன் அறிமுகம் கிடைத்தது.)

  1. சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. அண்டூ திஸ் லாஸ்ட் – ஜான் ரஸ்கின்

2. சட்டமறுப்பு – காந்தியடிகள்

A) அனைத்தும் சரி

B) 1 மட்டும் சரி

C) 2 மட்டும் சரி

D) எதுவுமில்லை

(குறிப்பு: சட்டமறுப்பு – தாரோ)

  1. ரஸ்கின் அவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட காந்தியடிகள் ஃபீனிக்ஸ் குடியிருப்பை ________ ஆண்டு நிறுவினார்.

A) 1902 B) 1904 C) 1905 D) 1906

(குறிப்பு: மேற்கத்திய சிந்தனையாளர்களால் பெரிதும் காந்தியடிகள் ஈர்க்கப்பட்டாலும் மேற்கத்திய நாகரிகம் மற்றும் தொழில்மயமாக்கல் ஆகியவை குறித்து அவர் அதிதீவிரமாக விமர்சித்தார்.)

  1. காந்தியடிகள் டால்ஸ்டாய் பண்ணையை நிறுவிய ஆண்டு

A) 1905 B) 1907 C) 1909 D) 1910

(குறிப்பு: சமத்துவம், சமூக வாழ்க்கை, தொழில் மீது மரியாதை ஆகிய நற்பண்புகள் இந்தக் குடியிருப்புகளில் ஊக்கப்படுத்தப்பட்டன. சத்தியாகிரகிகளுக்கு இவை பயிற்சிகளங்களாகத் திகழ்ந்தன.)

  1. தென்னாப்பிரிக்காவில் ஒப்பந்த தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்ட தலைவரி __________ ஒப்பந்தத்தின்படி ரத்து செய்யப்பட்டது.

A) தரோய் – காந்தி

B) ஸ்மட்ஸ் – காந்தி

C) ரெஜினால்டு – காந்தி

D) டயர் – காந்தி

(குறிப்பு: முதல் உலகப்போர் வெடித்த பிறகு காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார்.)

  1. காந்தியடிகள் __________ ஐ தமது அரசியல் குருவாக ஏற்றார்.

A) பாலகங்காதர திலகர்

B) ஜவஹர்லால் நேரு

C) மோதிலால் நேரு

D) கோபால கிருஷ்ண கோகலே

(குறிப்பு: கோபால கிருஷ்ண கோகலேவின் அறிவுரையின் படி, அரசியலில் ஈடுபடுமுன் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் காந்தியடிகள் பயணம் மேற்கொண்டார். இதனால் மக்களின் நிலையை அவர் அறிந்து கொள்ள வழி பிறந்தது.)

  1. தீன் காதியா என்ற சுரண்டல் முறையின்படி இந்திய விவசாயிகள் தங்களின் நிலத்தின் __________ பகுதியில் அவுரி பயிரிட வேண்டும் என்று ஐரோப்பிய பண்ணையாளர்களால் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

A) மூன்றில் இரண்டு பங்கு

B) பத்தில் மூன்று பங்கு

C) இருபதில் மூன்று பங்கு

D) இருபதில் இரண்டு பங்கு

(குறிப்பு: பீகாரில் உள்ள சம்பரானில் ‘தீன் காதியா’ முறை பின்பற்றப்பட்டது.)

  1. ___________ நூற்றாண்டின் கடைசியில் ஜெர்மானிய செயற்கை சாயங்களால், இண்டிகோ எனப்படும் நீலச்சாயம் சந்தையில் விற்கப்படுவது குறைந்தது.

A) 17 B) 18 C) 19 D) 20

  1. சம்பரானைச் சேர்ந்த விவசாயியான _________ என்பவர் சம்பரானுக்கு வருகை புரியுமாறு காந்தியடிகளைக் கேட்டுக்கொண்டார்.

A) பிரஜ்கிஷோர் பிரசாத்

B) ராஜ்குமார் சுக்லா

C) இரபீந்திரநாத் தாகூர்

D) மெளலானா முகமது அலி

(குறிப்பு: சம்பரானை காந்தியடிகள் சென்று சேர்ந்தவுடன், அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு காவல்துறையினர் அவரை கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர் மறுத்ததையடுத்து வழக்கைச் சந்திக்குமாறு பணிக்கப்பட்டார்.)

  1. சம்பரான் சத்தியாகிரகத்தின் வெற்றியை அடுத்து__________ ஆண்டு நடைபெற்ற அகமதாபாத் மில் வேலைநிறுத்தம், கேதா சத்தியாகிரகம் ஆகியன காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருவாக்கின.

A) 1915 B) 1916 C) 1917 D) 1918

(குறிப்பு: முந்தைய தலைவர்களைப் போலல்லாமல் நாட்டு மக்களை ஒன்றுதிரட்டும் பணியில் காந்தியடிகள் தம் திறமையை வெளிப்படுத்தினார்.)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

1. இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவராக பின்னாளில் பொறுப்பேற்ற ராஜேந்திர பிரசாத்தும் வழக்குறைஞராக தொழில் செய்த பிரஜ்கிஷோர் பிரசாத்தும் காந்தியடிகளுக்கு சம்பிரான் சத்தியாகிரகத்தில் துணையாக செயல்பட்டனர்.

2. தீன் காதியா முறை குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாண, துணைநிலை ஆளுநர் ஒரு குழுவை உருவாக்கினார். காந்தியடிகள் அக்குழுவில் ஒரு உறுப்பினர் ஆனார்.

3. இண்டிகோ பண்ணையாளர்கள் விவசாயிகள் மீது நடத்திய அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ‘தீன் காதியா’ முறையை ரத்து செய்ய அந்தக் குழு பரிந்துரைத்தது.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: சம்பிரான் சத்தியாகிரகத்தின் போது “நாடு முதன்முதலாக ஒத்துழையாமை இயக்கச் செயல்முறைப் பாடத்தை கற்றுக்கொண்டதாக” காந்தியடிகள் தெரிவித்தார்.)

  1. பிடி உத்தரவு இல்லாமல் கைது நடவடிக்கை, விசாரணை இல்லாமல் சிறையிலடைப்பது என காவல் துறையினருக்கு அதீத அதிகாரங்களை __________ சட்டம் வழங்கியது.

A) 1935 இந்திய அரசுச் சட்டம்

B) 1923 இந்திய அரசுச் சட்டம்

C) ரெளலட் சட்டம்

D) 1853 பட்டயச் சட்டம்

(குறிப்பு: காந்தியடிகள் ரெளலட் சட்டத்தை ‘கருப்புச் சட்டம்’ என்றழைத்தார்.)

  1. காந்தியடிகள் ரெளலட் சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய சத்தியாகிரகப் போராட்டத்துக்கு ____________இல் அழைப்பு விடுத்தார்.

A) 1919 பிப்ரவரி 26

B) 1919 மார்ச் 16

C) 1919 மார்ச் 27

D) 1919 ஏப்ரல் 6

(குறிப்பு: ரௌலட் சட்டத்துக்கு எதிரான போராட்டம், நாடு முழுவதும் பரவிய தொடக்க கால காலனிய எதிர்ப்பு போராட்டமாகும்.)

  1. ரௌலட் சட்டத்துக்கு எதிரான போராட்டம் எந்தெந்த இடங்களில் தீவிரமடைந்தது?

A) ஆக்ரா, அமிர்தசரஸ்

B) அமிர்தசரஸ், கல்கத்தா

C) கல்கத்தா, மதராஸ்

D) அமிர்தசரஸ், லாகூர்

(குறிப்பு: இப்போராட்டத்தின் போது காந்தியடிகள் கைது செய்யப்பட்டதுடன் பஞ்சாபிற்குள் நுழையவிடாமலும் தடுக்கப்பட்டார்.)

  1. ரௌலட் சட்டத்துக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமையேற்றதால் _________ நாள் டாக்டர். சைஃபுதீன் கிச்லு, டாக்டர். சத்யபால் என்ற இரண்டு முக்கிய உள்ளூர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

A) ஏப்ரல் 6

B) ஏப்ரல் 8

C) ஏப்ரல் 9

D) ஏப்ரல் 10

(குறிப்பு: டாக்டர். சைஃபுதீன் கிச்லு, டாக்டர். சத்யபால் ஆகியோர் ஏப்ரல் 9ல் அமிர்தசரசில் கைது செய்யப்பட்டனர்.)

  1. கூற்று 1: அமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலா பாக்கில் 1919 ஏப்ரல் 10ஆம் நாள் ரௌலட் சட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூற்று 2: சீக்கியர்களின் அறுவடைத் திருநாளான பைசாகி திருநாளில் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: அமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலா பாக்கில் 1919 ஏப்ரல் 13ஆம் நாள் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.)

  1. ஜாலியன் வாலாபாக் பொதுக்கூட்டம் பற்றி அறிந்தவுடன் அந்த இடத்தை பீரங்கி வண்டி மற்றும் ஆயுதமேந்திய வீரர்களுடன் ____________ என்பவர் சுற்றிவளைத்தார்.

A) ரௌலட்

B) மவுண்பேட்டன்

C) கர்னல் நீல்

D) ஜெனரல் ரெஜினால்டு டயர்

(குறிப்பு: உயர்ந்த மதில்களுடன் அமைந்த ஜாலியன்வாலா பாக் மைதானத்துக்கு இருந்த ஒரே வாயில் பகுதியை ஆக்ரமித்த ஆயுதமேந்திய வீரர்கள் எந்தவித முன்னெச்சரிக்கையுமின்றி கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார்கள்.)

  1. அதிகாரபூர்வ அரசு தகவல்களின் படி ஜாலியன்வாலா பாக் துப்பாக்கிச்சூட்டில் ___________ பேர் கொல்லப்பட்டனர்.

A) 175 B) 268 C) 379 D) 489

(குறிப்பு: அதிகாரபூர்வமற்ற தகவல்களின்படி ஜாலியன்வாலா பாக் படுகொலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஓராயிரத்துக்கும் அதிகம் ஆகும்.)

  1. ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு பிறகு __________ சட்டம் அறிவிக்கப்பட்டு பஞ்சாப் குறிப்பாக, அமிர்தசரஸ் மக்கள் சவுக்கடி கொடுக்கப்பட்டு தெருக்களில் தவழவிடப்பட்டார்கள்.

A) அடக்குமுறைச் சட்டம்

B) படைத்துறைச் சட்டம்

C) ஊரடங்குச் சட்டம்

D) இராணுவச் சட்டம்

  1. ஜாலியன்வாலா பாக் படுகொலையை எதிர்த்து வீரத்திருமகன் என்ற அரசுப் பட்டத்தை திருப்பிக் கொடுத்தவர்

A) காந்தியடிகள்

B) ராஜா ராம்மோகன் ராய்

C) இரபீந்திரநாத் தாகூர்

D) சர்தார் வல்லபாய் பட்டேல்

(குறிப்பு: காந்தியடிகள் கெய்சர்-இ-ஹிந்த் பதக்கத்தை ஜாலியன்வாலா பாக் படுகொலையை எதிர்த்து திருப்பிக் கொடுத்தார்.)

  1. __________ ஆண்டு முதலாவது உலகப்போர் முடிவுக்கு வந்தது.

A) 1916 B) 1917 C) 1918 D) 1919

(குறிப்பு: முதலாம் உலகப்போருக்குப் பின் இசுலாமிய மதத்தலைவர் என உலகம் முழுவதும் போற்றப்பட்ட துருக்கியின் கலிபா கடுமையாக நடத்தப்பட்டார்.)

  1. கலிபா அகத்துக்கு இருந்த அதிகாரம் மற்றும் பெருமைகளை நிலைநிறுத்தும் குறிக்கோளுடன் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்

A) வெள்ளையனே வெளியேறு இயக்கம்

B) வரிகொடா இயக்கம்

C) கிலாபத் இயக்கம்

D) சட்டமறுப்பு இயக்கம்

(குறிப்பு: மெளலானா முகமது அலி மற்றும் மெளலானா சௌகத் அலி எனும் அலி சகோதரர்கள் தலைமையில் கிலாபத் இயக்கம் நடந்தது.)

  1. காந்தி _________ ஆண்டு தில்லியில் நடைபெற்ற அகில இந்திய கிலாபத் இயக்க மாநாட்டிற்கு தலைமையேற்றார்.

A) 1918 ஏப்ரல்

B) 1918 அக்டோபர்

C) 1919 ஏப்ரல்

D) 1919 நவம்பர்

(குறிப்பு: கிலாபத் இயக்கத்திற்கு ஆதரவளித்த காந்தியடிகள் இந்த இயக்கத்தை இந்து முஸ்லிம்களை இணைக்க ஒரு வாய்ப்பாகக் கருதினார்.)

  1. சௌகத் அலி முன்மொழிந்த மூன்று தேசிய முழுக்கங்கள் எவை?

1. அல்லாஹூ அக்பர்

2. வந்தே மாதரம்

3. இந்து-முஸ்லிம் வாழ்க

4. ஜெய்ஹிந்த்

A) 1, 2, 3 B) 2, 3, 4 C) 1, 3, 4 D) 1, 2, 4

(குறிப்பு: செளகத் அலியின் மூன்று தேசிய முழக்கங்களை காந்தியடிகள் ஆதரித்தார்.)

  1. கிலாபத் குழுவின் கூட்டம் காந்தியடிகளின் அகிம்சை மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தை ஏற்றுக்கொண்ட நாள்

A) 1919 அக்டோபர் 5

B) 1919 ஜூன் 19

C) 1920 மே 29

D) 1920 ஜூன் 9

(குறிப்பு: அலகாபாத்தில் நடந்த கிலாபத் குழுவின் கூட்டத்தில் காந்தியடிகளின் அகிம்சை மற்றும் ஒத்துழையாமை இயக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.)

  1. ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்ட நாள்

A) 1920 மே முதல் நாள்

B) 1920 ஜூன் முதல் நாள்

C) 1920 ஆகஸ்ட் முதல் நாள்

D) 1920 அக்டோபர் முதல்நாள்

  1. இந்திய தேசிய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்திற்கு அனுமதி வழங்கிய நாள்

A) 1919 செப்டம்பர்

B) 1919 நவம்பர்

C) 1920 ஜூன்

D) 1920 செப்டம்பர்

(குறிப்பு: கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்திற்கு அனுமதி வழங்கியது.)

  1. ஒத்துழையாமை இயக்கத்திற்கு அனுமதி வழங்குவதற்கான தீர்மானம் சேலம் C. விஜயராகவாச்சாரியாரின் தலைமையில் ___________ல் நடந்த அமர்வில் நிறைவேற்றப்பட்டது.

A) ஆக்ரா

B) பம்பாய்

C) நாக்பூர்

D) கல்கத்தா

(குறிப்பு: இந்திய தேசிய காங்கிரசின் நாக்பூர் அமர்வு 1920 டிசம்பர் மாதம் நடைபெற்றது.)

  1. ஒத்துழையாமை இயக்கத் திட்டத்தின் முக்கியக் கூறுகளில் தவறானதை தேர்ந்தெடு.

A) பட்டங்கள் மற்றும் மரியாதை நிமித்தமான பதவிகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைப்பது.

B) நீதிமன்ற வழக்குகளில் வழக்குரைஞர்கள் ஆஜராகாமல் இருப்பது. நீதிமன்றத்தில் இருந்த வழக்குகளுக்கு தனியார் மத்தியஸ்தம் மூலமாக தீர்வு காண்பது.

C) 1919ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டப்பேரவைகளை புறக்கணிப்பது.

D) குடிமைப்பணி அல்லது ராணுவப் பதவிகளை ஏற்பது.

(குறிப்பு: முக்கிய கூறுகள்

  • அரசின் செயல்பாடுகளில் ஒத்துழைக்காமலிப்பது.
  • அரசு பள்ளிகளை குழந்தைகளும் அவற்றின் பெற்றோர்களும் புறக்கணிப்பது.
  • அரசு விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் இதர அரசு விழாக்களில் பங்கேற்பதில்லை என்ற முடிவு.
  • அந்நியப் பொருட்களின் புறக்கணிப்பு மற்றும் உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கம் தரும் சுதேசி இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்புவது.)
  1. பர்தோலியில் வரிகொடா இயக்க பிரச்சாரத்தை காந்தியடிகள் அறிவித்த ஆண்டு

A) 1922 ஜனவரி

B) 1922 பிப்ரவரி

C) 1922 மார்ச்

D) 1922 ஏப்ரல்

(குறிப்பு: வரிகொடா இயக்கங்கள் ஒரு தேசியத் தலைவராக காந்தியடிகளின் நற்பெயரைப் பெரிதும் மேம்படுத்தின, குறிப்பாக விவசாயிகள் மத்தியில் ஒரு மாபெரும் தலைவராக அவரது மரியாதையை உயர்த்தின.)

  1. செளரி செளரா சம்பவம் நடைபெற்ற நாள்

A) 1922 பிப்ரவரி 2

B) 1922 பிப்ரவரி 3

C) 1922 பிப்ரவரி 4

D) 1922 பிப்ரவரி 5

(குறிப்பு: உத்திரப்பிரதேசத்தில் உள்ள கேரக்பூர் அருகே செளரி செளரா என்ற கிராமம் உள்ளது. இங்கு தேசியவாதிகள் நடத்தியப் பேரணி காவல்துறையினரின் தூண்டுதலில் வன்முறையாக மாறியது.)

  1. செளரி செளராவில் நடைபெற்ற வன்முறையின் போது ___________ காவலர்கள் உயிரிழந்தனர்.

A) 19 B) 20 C) 21 D) 22

(குறிப்பு: செளரி சௌரா வன்முறையின் காரணமாக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப் பெற்றார்.)

  1. சௌரி சௌரா சம்பவத்திற்கு பின் கைது செய்யப்பட்ட காந்தியடிகள் _____________ ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

A) 1922 B) 1923 C) 1924 D) 1925

(குறிப்பு: ஒத்துழையாமை இயக்கம் ஊக்கம் பெறுவதாக கருதிய ஜவகர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் போன்ற இளைய தலைவர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் விருப்பத்துக்கு மாறாக இந்த இயக்கம் திரும்பப் பெறப்பட்டது.)

  1. கூற்று 1: ஒத்துழையாமை இயக்கம், அகிம்சை மற்றும் ஒத்துழையாமை ஆகிய காரணங்களால் இயக்கம் தோல்வி காணவில்லை மாறாக போதுமான எண்ணிக்கையில் அவற்றில் பயிற்சி பெற்ற தலைவர்களும் தொண்டர்களும் இல்லாமல் போனதே காரணம் என காந்தியடிகள் நம்பினார்.

கூற்று 2: துருக்கியில் இருந்த கலிபா அலுவலகம் மூடப்பட்டதையடுத்து கிலாபத் இயக்கம் முடிவுக்கு வந்தது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

  1. காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்ட போது மாற்றத்தை விரும்புவோர் அணியில் இருந்தவர்கள் யாருடைய தலைமையில் தேர்தலில் போட்டியிட விரும்பினர்?

1. மோதிலால் நேரு 2. சி.ஆர். தாஸ்

3. வல்லபாய் பட்டேல் 4. சி. ராஜாஜி

A) 1, 2 B) 2, 3 C) 1, 3 D) 1, 4

(குறிப்பு: மாற்றத்தை விரும்புவோர் அணியில் இருந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குள் சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும் என்று விரும்பினார்கள். சட்டப்பேரவைகளில் பங்கேற்று பணியாற்றுவதன் மூலம் மட்டுமே தேசநலன்கள் மேம்படும் என்றும் இரட்டை ஆட்சியில் பங்கேற்பதன் மூலம் தான் காலனி ஆதிக்க அரசை பாதிப்படைய வைக்க முடியும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.)

  1. மோதிலால் நேருவும், சி.ஆர்.தாஸும் சுயராஜ்ஜியக் கட்சியை தொடங்கிய நாள்

A) 1922 டிசம்பர் முதல் நாள்

B) 1923 ஜனவரி முதல் நாள்

C) 1923 பிப்ரவரி முதல் நாள்

D) 1923 மார்ச் முதல் நாள்

(குறிப்பு: சுயராஜ்யக் கட்சி பின்னர் காங்கிரஸ் கட்சியின் சிறப்பு அமர்வில் அங்கீகரிக்கப்பட்டது.)

  1. சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.

1. ஆங்கிலேய இந்தியாவின் பேரரசு (இம்பீரியல்) சட்டப்பேரவை மற்றும் பல்வேறு மாகாண சட்டப்பேரவைகளுக்கு பெரும் சுயராஜ்ஜிய கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2. தேசியவாதக் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்ல அவர்கள் சட்டப்பேரவையை ஒரு மேடையாகப் பயன்படுத்தினார்கள்.

3. வங்காளத்தில் அரசுடன் ஒத்துழைக்க விரும்பாததால் இந்தியர்களுக்கு என மாற்றப்பட்ட துறைகளில் பொறுப்பேற்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

  1. சுயராஜ்ய கட்சியின் தலைவர் சி.ஆர். தாஸ் மறைந்த ஆண்டு

A) 1923 B) 1924 C) 1925 D) 1926

(குறிப்பு: சி.ஆர். தாஸ் மறைந்த பிறகு சுயராஜ்ய கட்சி வீழ்ச்சி காணத் தொடங்கியது.)

  1. சி.ஆர்.தாஸ் மறைவிற்கு பின் சட்டப்பேரவைகளில் இருந்து சுயராஜ்ஜிய கட்சி விலகிய ஆண்டு

A) 1925 B) 1926 C) 1927 D) 1928

  1. ___________ சட்டத்தின் மூலம் இந்தியாவில் இரட்டை ஆட்சி அறிமுகம் செய்யப்பட்டது.

A) 1818 இந்திய அரசுச் சட்டம்

B) 1919 இந்திய அரசுச் சட்டம்

C) 1924 இந்திய அரசுச் சட்டம்

D) 1935 இந்திய அரசுச் சட்டம்

(குறிப்பு: இரட்டை ஆட்சி முறையின் படி மாகாண அரசின் அதிகாரங்கள் ஒதுக்கப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட துறைகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டது.)

  1. இரட்டை ஆட்சி முறையின் படி கீழ்க்கண்ட எந்த துறைகள் ஆங்கிலேயர்கள் வசம் ஒதுக்கப்பட்டன?

1. நிதி 2. பாதுகாப்பு 3. காவல்துறை

4. நீதித்துறை 5. நிலவருவாய் 6. நீர்ப்பாசனம்

A) அனைத்தும் B) 1, 2, 4, 5 C) 1, 2, 5, 6 D) 3, 4, 5, 6

(குறிப்பு: இரட்டை ஆட்சி முறையின் படி மாற்றப்பட்ட துறைகளில் உள்ளாட்சி, கல்வி, பொதுச்சுகாதாரம், பொதுப்பணி, வேளாண்மை, வனங்கள், மற்றும் மீன்வளத்துறை ஆகியன இந்திய அமைச்சர்களின் கட்டுப்பாட்டின் கீழ் விடப்பட்டன.)

  1. கீழ்க்கண்டவர்களுள் காங்கிரஸ் கட்சியில் மாற்றத்தை விரும்பாதவர்கள் அணியில் இருந்தவர்கள் யார்?

1. மோதிலால் நேரு 2. சி.ஆர். தாஸ்

3. வல்லபாய் பட்டேல் 4. சி. ராஜாஜி

A) 1, 2 B) 3, 4 C) 1, 3 D) 2, 4

  1. மாகாண சுயாட்சி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

A) 1919 B) 1924 C) 1928 D) 1935

(குறிப்பு: மாகாண சுயாட்சி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இரட்டை ஆட்சி முறை முடிவுக்கு வந்தது.)

  1. “உங்கள் மாவட்டங்களுக்குச் செல்லுங்கள். கதர், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு ஆகியன பற்றிய செய்திகளைப் பரப்புங்கள். இளைஞர்களை ஒன்றுதிரட்டி அவர்களை சுயராஜ்யத்தின் உண்மையான வீரர்களாக உருமாற்றுங்கள்.” என்று காங்கிரசாருக்கு அறிவுறுத்தியவர்

A) அம்பேத்கர்

B) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

C) காந்தியடிகள்

D) லாலா லஜபதி ராய்

(குறிப்பு: காங்கிரஸ் உறுப்பினர்கள் கதர் உடுப்பதை காந்தியடிகள் கட்டாயமாக்கினார். அகில இந்திய நெசவாளர் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த குறிக்கோளை அடையாமல் சுயராஜ்ஜியத்தை அடைய முடியாது என்று காந்தியடிகள் நம்பினார்.)

  1. __________காலம் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே தொடர்ச்சியான வகுப்பு மோதல்களை கண்ட காலகட்டமாக இருந்தது.

A) 1910 B) 1920 C) 1930 D) 1940

(குறிப்பு: கிலாபத் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றின் போது, இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் ஒத்துழைப்பு இருந்தபோதிலும் அந்த ஒற்றுமை விரிசலடையக் கூடியதாகவே இருந்தது.)

  1. 1920 காலக்கட்டத்தில் முஸ்லிம் லீக் அலி சகோதரர்கள் தலைமையிலும் இந்து மகாசபை ____________ தலைமையிலும் பிரபலம் அடைந்து கொண்டிருந்தன.

A) மோதிலால் நேரு

B) பாலகங்காதர திலகர்

C) பண்டித மதன் மோகன் மாளவியா

D) சி.ஆர். தாஸ்

  1. வகுப்புவாத அரசியலில் ஈடுபட்ட இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் இதயங்களை ஈர்க்கும் வகையில் காந்தியடிகள் 1924 இல் ____________நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

A) 14 B) 18 C) 20 D) 21

(குறிப்பு: இந்து முஸ்லிம் ஒற்றுமையின் மூலமாக மட்டுமே சுயராஜ்யம் சாத்தியப்படும் என்று அப்போதைக்கு நம்பிய முகம்மது அலி ஜின்னாவும் காந்தியடிகளும் மேற்கொண்ட தீவிர முயற்சிகள் வகுப்புவாத கலவரங்களை அடியோடு அழிக்குத் தவறிவிட்டன.)

  1. ___________நாள் இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான இந்திய சட்டப்பூர்வ ஆணையத்தை நியமிப்பதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது.

A) 1925 அக்டோபர் 5

B) 1926 நவம்பர் 18

C) 1927 நவம்பர் 8

D) 1928 டிசம்பர் 28

(குறிப்பு: சர் ஜான் சைமன் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டது.)

  1. 1927ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சைமன் குழுவில் ___________ உறுப்பினர்கள் இடம்பெற்றனர்.

A) 4 B) 5 C) 6 D) 7

(குறிப்பு: இந்தியர்கள் எவரும் இடம்பெறாமல் அனைவரும் வெள்ளையர்களாக சைமன் குழுவில் இடம்பெற்றனர்.)

  1. சைமன் குழு முன்மொழிவுகளுக்கு மாற்றாக இந்தியாவுக்கு அரசியல் சாசனம் உருவாக்குவதை குறிக்கோளாகக் கொண்டு __________ ஆண்டு அனைத்துக் கட்சி மாநாடு நடைபெற்றது.

A) 1926 B) 1927 C) 1928 D) 1929

(குறிப்பு: இந்தியாவில் இருந்த பல்வேறு அரசியல் கட்சிகளை சைமன் குழு புறக்கணிப்பு ஒன்றிணைத்தது.)

  1. 1928ஆம் ஆண்டு அனைத்துக் கட்சி மாநாட்டு கொள்கைகளின் அடிப்படையில் அரசியல் சாசன வரைவுக்காக திட்டம் வகுக்க ____________ தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது.

A) சி.ஆர். தாஸ்

B) மோதிலால் நேரு

C) ஜவஹர்லால் நேரு

D) காந்தியடிகள்

(குறிப்பு: இந்தக் கமிட்டியின் அறிக்கை ‘நேரு அறிக்கை’ என்று அழைக்கப்பட்டது.)

  1. நேரு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவையில் சரியானதைத் தேர்ந்தெடு.

1. இந்தியாவுக்கு தன்னாட்சிப் பகுதி என்ற டொமினியன் தகுதி.

2. மத்திய சட்டப்பேரவை மற்றும் மாகாண சட்டப்பேரவைகளுக்கு கூட்டு மற்றும் கலவையான வாக்காளர் தொகுதிகளுடன் தேர்தல் நடைபெறுவது.

3. மத்திய சட்டப்பேரவை மற்றும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ள மாகாண சட்ட பேரவைகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அதேபோல் இந்துக்களுக்கு அவர்கள் சிறுபான்மையினராக உள்ள வடமேற்கு எல்லை மாகாணத்தில் இடஒதுக்கீடு.

4. பொது வாக்களிப்பு முறையும் அடிப்படை உரிமைகளும் வழங்கப்படுவது

A) அனைத்தும் சரி

B) 1, 2, 3 சரி

C) 2, 3, 4 சரி

D) 1, 3, 4 சரி

  1. மத்திய சட்டப்பேரவையில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஜின்னா கொண்டு வந்த சட்டத்திருத்தத்தில் ____________ இடங்கள் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார்.

A) மூன்றில் இரண்டு பங்கு

B) மூன்றில் ஒரு பங்கு

C) நான்கில் ஒரு பங்கு

D) ஐந்தில் இரண்டு பங்கு

(குறிப்பு: ஜின்னாவை ஆதரித்த தேஜ் பஹதூர் சாப்ரூ ஜின்னாவின் இந்த சட்டத்திருத்தம் பெரும் மாற்றத்தைத் தராது என்று வேண்டினார்.)

  1. கூற்று 1: ஜின்னாவின் 14 அம்சங்கள் என்று அழைக்கப்பட்ட தீர்மானத்தை தேஜ் பஹதூர் சாப்ரூ அனைத்து கட்சி மாநாட்டில் முன்மொழிந்தார். எனினும் இத்தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

கூற்று 2: இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் தூதுராக பாராட்டப்பட்ட ஜின்னா பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு முஸ்லிம்களுக்கு தனிநாடு என வலியுறுத்த ஆரம்பித்தார்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

  1. 1929 டிசம்பர் மாதம் லாகூரில் நடந்த காங்கிரஸ் அமர்வு யாருடைய தலைமையில் நடந்தது?

A) காந்தியடிகள்

B) மோதிலால் நேரு

C) சுபாஷ் சந்திர போஸ்

D) ஜவகர்லால் நேரு

(குறிப்பு: இம்மாநாட்டில் முழுமையான சுதந்திரம் என்பது இலக்காக அறிவிக்கப்பட்டது. வட்டமேசை மாநாட்டை புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டதுடன், சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.)

  1. கூற்று 1: 1930 ஜனவரி 26ஆம் நாள் சுதந்திரத் திருநாளாக அறிவிக்கப்பட்டு வரிகொடா இயக்கம் உள்ளிட்ட சட்டமறுப்பு இயக்கம் மூலமாகவும் வன்முறையற்ற முறையில் முழுமையான சுதந்திரத்தை அடைவது குறித்தும் நாடு முழுவதும் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

கூற்று 2: லாகூர் காங்கிரஸ் மாநாட்டிற்கு பிறகு 1930 ஜனவரி 31ஆம் நாளுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற காலக்கெடுவுடன் அரசப் பிரதிநிதி (வைசிராய்) இர்வின் பிரபுவிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: இர்வின் பிரபுவிடம் அளிக்கப்பட்ட மனுவில் இருந்தவை:

  • ராணுவம் மற்றும் ஆட்சிப் பணி சேவைகளுக்கான செலவுகளை 50 சதவிகிதம் வரை குறைப்பது.
  • முழுமையான புறக்கணிப்பை அறிமுகம் செய்வது.
  • அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வது.
  • நிலவருவாயை 50 சதவிகிதமாக குறைப்பது.
  • உப்பு வரியை ரத்து செய்வது.)
  1. காந்தியடிகள் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தனது புகழ் பெற்ற தண்டி யாத்திரையைத் தொடங்கிய நாள்

A) 1930 ஜனவரி 12

B) 1930 ஜனவரி 21

C) 1930 பிப்ரவரி 12

D) 1930 மார்ச் 12

(குறிப்பு: இர்வின் பிரபுவிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவுக்கு அரசப் பிரதிநிதி பதில் தெரிவிக்காத நிலையில் காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கினார்.)

  1. காந்தியடிகளின் தண்டி யாத்திரை ___________ பேர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தொடங்கப்பட்டது.

A) 65 B) 68 C) 75 D) 78

(குறிப்பு: உப்பு மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒரு அறிவுப்பூர்வமான முடிவாகும். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் பாதிக்கும் விஷயமாக உப்பு இருந்தது. பெண்கள் உட்பட அனைத்துப் பிரிவு மக்களும் பங்கேற்று சட்டமறுப்பு இயக்கத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினர்.)

  1. உப்புசத்தியாகிரகத்தின் போது காந்தியடிகள் 241 மைல் தொலைவு யாத்திரையாக நடந்து சென்று __________நாள் மாலை தண்டி கடற்கரையை அடைந்தார்.

A) 1930 மார்ச் 21

B) 1930 மார்ச் 28

C) 1930 ஏப்ரல் 2

D) 1930 ஏப்ரல் 5

(குறிப்பு: காந்தியடிகள் தனது 61வது வயதில் 24 நாட்களில் தண்டி கடற்கரையை அடைந்தார்.)

  1. தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் இருந்து வேதாரண்யம் வரை உப்பு சத்தியாகிரகத்திற்கான யாத்திரையை மேற்கொண்டவர்

A) கான் அப்துல் கஃபார்கான்

B) சத்தியமூர்த்தி

C) சி. ராஜாஜி

D) பாரதியார்

(குறிப்பு: கேரளா, ஆந்திரா மற்றும் வங்காளத்திலும் உப்பு சத்தியாகிரக யாத்திரை நடந்தன.)

  1. வடமேற்கு எல்லை மாகாணத்தில் _________ என்பவர் உப்புசத்தியாகிரக இயக்கத்திற்கு தலைமை ஏற்றார்.

A) கான் அப்துல் கஃபார்கான்

B) சத்தியமூர்த்தி

C) சி. ராஜாஜி

D) பாரதியார்

(குறிப்பு: கான் அப்துல் கஃபார்கான் செஞ்சட்டைகள் என்றழைக்கப்பட்ட ‘குடைகிட்மட்கர்’ இயக்கத்தை நடத்தினார்.)

  1. ஆங்கிலேயர்கள் __________ ஆண்டு முதலாவது வனச்சட்டத்தை நிறைவேற்றினர்.

A) 1855 B) 1858 C) 1862 D) 1865

(குறிப்பு: சுள்ளி எடுப்பது, கால்நடை தீவனம் மற்றும் தேன், விதைகள், மருத்துவ மூலிகைகள், கொட்டைகள் ஆகிய சிறிய அளவிலான வன உற்பத்திப் பொருட்களையும் வனப்பகுதிகளில் இருந்து சேகரிக்க இந்தச் சட்டம் வனத்தில் வாழ்வோருக்கு தடைவிதித்தது.)

  1. __________ ஆண்டின் இந்திய வனங்கள் சட்டத்தின் படி வனங்களின் உரிமை அரசிடம் இருந்தது.

A) 1865 B) 1868 C) 1872 D) 1878

(குறிப்பு: இந்திய வனங்கள் சட்டத்தின் படி நன்செய் மற்றும் தரிசு நிலங்களும் வனங்களாக கருதப்பட்டன. பழங்குடியினர் பயன்படுத்திய சுழற்சி முறை விவசாயம் தடை செய்யப்பட்டது.)

  1. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

1. கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்த (விசாகப்பட்டினம் மற்றும் கோதாவரி மாவட்டங்களைச் சேர்ந்த) ஆதிவாசி பகுதிகளை தனது இல்லமாக கருதிய அல்லூரி சீதாராம ராஜு அங்கிருந்து ஆதிவாசிகளுக்காக உழைத்தார்.

2. மான்யம் என்றழைக்கப்பட்ட வனப்பகுதியில் காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளால் அங்கிருந்த ஆதிவாசிகள் துன்புறுத்தப்பட்டனர்.

3. ராம்பா பகுதி ஆதிவாசிகளின் நலன் காப்பதற்காக ஊழல் அதிகாரிகளுடன் அல்லூரி சீதாராம ராஜு போராடியதால் அவரது உயிரைக் குறிவைத்து ஆங்கிலேய அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.

4. ராம்பா ஆதிவாசிகளின் கிளர்ச்சியை அடக்குவதற்காக மலபார் காவல்துறையின் சிறப்புக்குழு அனுப்பி வைக்கப்பட்டது.

A) 1 மட்டும் தவறு

B) 2, 3 தவறு

C) 2, 4 தவறு

D) எதுவுமில்லை

  1. கூற்று 1: இந்தியா சந்தித்த மக்கள் இயக்கங்களிலேயே உப்பு சத்தியாகிரகம் மிகப்பெரியது.

கூற்று 2: இதில் 90,000க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

  1. லண்டனில் முதலாவது வட்ட மேசை மாநாடு நடந்த ஆண்டு

A) 1930 ஜனவரி

B) 1930 மார்ச்

C) 1930 அக்டோபர்

D) 1930 நவம்பர்

(குறிப்பு: முதல் வட்டமேசை மாநாட்டில் பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு மாகாண சுயாட்சியுடன் கூடிய மத்திய அரசு பற்றிய அறிவித்தார்.)

  1. காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு

A) 1931 பிப்ரவரி 5

B) 1931 ஏப்ரல் 15

C) 1931 மார்ச் 5

D) 1931 மார்ச் 25

(குறிப்பு: இந்த ஒப்பந்தத்தின் மூலம் வன்முறையில் ஈடுபடாத அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்வது, கைப்பற்றப்பட்ட நிலத்தைத் திரும்பத் தருவது, பதவி விலகிய அரசு ஊழியர்கள் விஷயத்தில் நீக்குபோக்காக நடந்துகொள்வது ஆகிய கோரிக்கைகளை ஆங்கிலேய அரசு ஏற்றுக்கொண்டது.)

  1. __________ நாள் நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் கலந்துகொண்டார்.

A) 1931 மார்ச் 7

B) 1931 ஏப்ரல் 7

C) 1931 ஜூன் 17

D) 1931 செப்டம்பர் 7

(குறிப்பு: காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்படி, சட்டமறுப்பு இயக்கத்தை ரத்து செய்துவிட்டு இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ள காங்கிரசு கட்சி ஒப்புக் கொண்டது.)

  1. இரண்டாவது வட்டமேசை மாநாட்டிற்கு பிறகு படைத்துறைச்சட்டம் அமல்படுத்தப்பட்டு ___________நாள் காந்தியடிகள் கைது செய்யப்பட்டார்.

A) 1931 நவம்பர் 4

B) 1931 டிசம்பர் 24

C) 1932 ஜனவரி 4

D) 1932 ஜனவரி 14

(குறிப்பு: இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் சிறுபான்மையினருக்கு தனித் தொகுதிகள் வழங்குவதை காந்தியடிகள் ஏற்கவில்லை. இதன் விளைவாக, இரண்டாவது வட்டமேசை மாநாடு எந்தவித முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.)

  1. கூற்று 1: இரண்டாவது வட்டமேசை மாநாட்டிற்கு பிறகு இந்தியா திரும்பிய காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிரூட்டினார்.

கூற்று 2: அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளையும் மீறி சட்டமறுப்பு இயக்கம் 1934 ஏப்ரல் மாதம் வரை நீடித்தது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

  1. மூன்றாவது வட்டமேசை மாநாடு 1932 ஆம் ஆண்டு __________நாள் முதல்________நாள் வரை நடத்தப்பட்டது.

A) நவம்பர் 7, நவம்பர் 27

B) நவம்பர் 17, டிசம்பர் 24

C) அக்டோபர் 17, டிசம்பர் 24

D) அக்டோபர் 17, நவம்பர் 24

(குறிப்பு: சட்டமறுப்பு இயக்கத்திற்கு புத்துயிரூட்டியதால் காங்கிரஸ் கட்சி இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.)

  1. வகுப்புவாரி ஒதுக்கீட்டை ராம்சே மெக்டொனால்டு அறிவித்த ஆண்டு

A) 1931 ஆகஸ்ட் 15

B) 1931 ஜனவரி 25

C) 1932 ஜனவரி 26

D) 1932 ஆகஸ்ட் 16

(குறிப்பு: முஸ்லிம்கள், சீக்கியர்கள், இந்திய கிறித்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் பெண்கள் மற்றும் ‘ஒடுக்கப்பட்ட வகுப்பினர்’ என சிறுபான்மையினருக்கு தனித்தொகுதிகளை இது வழங்கியது.)

  1. கூற்று: வகுப்புவாரி ஒதுக்கீட்டின் படி, ஒடுக்கப்பட்ட வகுப்பினரை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்ப்பதை காந்தியடிகள் வலுவாக எதிர்த்தார்.

காரணம்: இது இந்துக்களிடையே பிளவை ஏற்படுத்துவதோடு, இந்துக்களை விட ஒடுக்கப்பட்ட வகுப்பினர் தனித்து அடையாளம் காணப்படுவதால் தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரத்தை அர்த்தமில்லாதது ஆக்கிவிடும் என்று காந்தியடிகள் வாதிட்டார்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்

D) கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் சரியான விளக்கமல்ல

(குறிப்பு: B.R.அம்பேத்கர், தமது கருத்துப்படி தனித்தொகுதிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரத்தை வழங்கும் என்று வாதிட்டார். காந்தியடிகள் தொகுதிகள் ஒதுக்கீட்டை ஆதரித்தார்.)

  1. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கீட்டிற்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் போராட்டத்தை காந்தியடிகள் தொடங்கிய ஆண்டு

A) 1932 ஆகஸ்ட் 20

B) 1932 ஆகஸ்ட் 28

C) 1932 செப்டம்பர் 2

D) 1932 செப்டம்பர் 20

(குறிப்பு: மதன்மோகன் மாளவியா, ராஜேந்திர பிரசாத் மற்றும் பல தலைவர்கள் B.R.அம்பேத்கர் மற்றும் M.C.ராஜா மற்றும் இதர ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். தீவிரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு காந்தியடிகள், அம்பேத்கர் இடையே பூனா ஒப்பந்தம் ஏற்பட்டது.)

  1. பூனா ஒப்பந்தத்தின் படி ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71லிருந்து __________ ஆக அதிகரிக்கப்பட்டு மத்திய சட்டப்பேரவையில் ____________ சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டன.

A) 184, 12

B) 184, 18

C) 148, 18

D) 148, 12

(குறிப்பு: பூனா ஒப்பந்தத்தின் மூலம் தனித்தொகுதிகள் பற்றிய கொள்கைகள் கைவிடப்பட்டன. மாறாக, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் கூட்டுத்தொகுதிகள் பற்றிய யோசனை ஏற்கப்பட்டது.)

  1. காந்தியடிகள் _________ சங்கத்தை அமைத்து சமூகத்தில் உள்ள பாரபட்சங்களை முழுமையாக அகற்றுவதற்குப் பணியாற்றத்தொடங்கினார்.

A) பொதுவுடைமை சங்கம்

B) அரிஜனர் சங்கம்

C) இந்தியர் சங்கம்

D) இந்துக்கள் சங்கம்

(குறிப்பு: கல்வி, சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தவும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே மதுப்பழக்கத்தை கைவிடவும் காந்தி பணியாற்றினார். இதற்காக 1933இல் இரண்டு உண்ணாவிரதங்களை மேற்கொண்டார்.)

  1. கோவில் நுழைவு நாள் அனுசரிக்கப்பட்ட தினம்

A) 1932 ஜனவரி 5

B) 1932 ஜனவரி 8

C) 1933 ஜனவரி 8

D) 1933 ஜனவரி 5

(குறிப்பு: ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர் இடையேயான காந்தியடிகளின் பணிகள் தேசியவாதமென்ற செய்தியை அடிமட்ட நிலைக்கு கொண்டு சென்றது.)

  1. 1917ஆம் ஆண்டின் ரஷ்யப் புரட்சியால் ஈர்க்கப்பட்ட இந்திய பொதுவுடைமை கட்சி _________ ஆண்டு உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நிறுவப்பட்டது.

A) 1919 அக்டோபர்

B) 1919 டிசம்பர்

C) 1920 அக்டோபர்

D) 1920 நவம்பர்

(குறிப்பு: M.N.ராய், அபானி முகர்ஜி, M.P.T ஆச்சார்யா ஆகியோர் அதன் நிறுவன உறுப்பினர்களாவர்.)

  1. 1924ஆம் ஆண்டின் கான்பூர் சதித்திட்ட வழக்கில் விசாரிக்கப்பட்ட கம்யூனிச தலைவர்கள் யார்?

1. M.N. ராய் 2. S.A. டாங்கே

3. முசாஃபர் அஹமது 4. M. சிங்காரவேலர்

A) அனைத்தும் B) 1, 3, 4 C) 2, 3, 4 D) 1, 2, 4

(குறிப்பு: “இந்தியாவை பிரிட்டனின் அரசாட்சியில் இருந்து முழுமையாகப் பிரித்து இந்தியாவின் மீதான தனது இறையாண்மையை பிரிட்டிஷ் மன்னர் கைவிடச் செய்யும்” பணிகளில் ஈடுபட்டதாக கம்யூனிசத் தலைவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.)

  1. _________ ஆண்டு கான்பூரில் அகில இந்திய பொதுவுடைமை மாநாடு நடந்தது.

A) 1923 B) 1924 C) 1925 D) 1926

(குறிப்பு: அம்மாநாட்டில் சிங்காரவேலர் தலைமை உரையாற்றினார். இம்மாநாடு இந்திய மண்ணில் இந்திய பொதுவுடைமை கட்சியை ஆரம்பிக்க வழியமைத்தது.)

  1. அகில இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி _________ ஆண்டு நிறுவப்பட்டது.

A) 1920 B) 1922 C) 1926 D) 1928

(குறிப்பு: 1929ஆம் ஆண்டு மீரட் சதித்திட்ட வழக்கு காரணமாக இந்திய பொதுவுடைமை கட்சியின் திசையில் முன்னேற்றம் தடைப்பட்டது.)

  1. காலனி ஆட்சியை ஆயுதக் கிளர்ச்சி மூலம் அகற்றும் நோக்கில் ____________ ஆண்டு இந்துஸ்தான் குடியரசு இராணுவம் கான்பூரில் உருவாக்கப்பட்டது.

A) 1921 B) 1922 C) 1923 D) 1924

  1. கூற்று 1: 1925 ஆம் ஆண்டு ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபாகுல்லா கான் மற்றும் பலர் லக்னோ அருகே காகோரி என்ற கிராமத்தில் அரசுப் பணத்தை கொண்டுச்சென்ற ஒரு ரயில்வண்டியை கொள்ளையடித்தனர்.

கூற்று 2: அரசுப் பணத்தை கொள்ளையடித்தவர்கள் காகோரி சதி வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: காகோரி சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேருக்கு மரண தண்டனையும் மற்றவர்களுக்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டன.)

  1. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

1. பஞ்சாபில் பகத்சிங், சுக்தேவ், மற்றும் அவர்களது தோழர்கள் இந்துஸ்தான் குடியரசு இராணுவத்தை மீண்டும் அமைத்தனர்.

2. பொதுவுடைமை கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அந்த அமைப்புக்கு இந்துஸ்தான் சமதர்மவாத குடியரசு அமைப்பு என்று 1926இல் பெயர் மாற்றம் செய்தனர்.

3. லாலா லஜ்பதி ராயின் உயிரிழப்புக்குக் காரணமான தடியடியை நடத்திய ஆங்கிலேய காவல்துறை அதிகாரி சாண்டர்ஸ் படுகொலை செய்யப்பட்டார்.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 1, 3 தவறு

D) 2, 3 தவறு

(குறிப்பு: பொதுவுடைமை கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இந்துஸ்தான் குடியரசு இராணுவ அமைப்புக்கு இந்துஸ்தான் சமதர்மவாத குடியரசு அமைப்பு என்று 1928இல் பெயர் மாற்றம் செய்தனர்.)

  1. _________ ஆண்டு மத்திய சட்டப்பேரவையில் புகைக்குண்டு ஒன்றை பகத்சிங்கும் B.K. தத்தும் வீசினர்.

A) 1925 B) 1927 C) 1928 D) 1929

(குறிப்பு: துண்டு பிரசுரங்களை வீசி எறிந்த பகத்சிங்கும், B.K. தத்தும் “இன்குலாப் ஜிந்தாபாத்”, “பாட்டாளி வர்க்கம் வாழ்க” ஆகிய முழக்கங்களை எழுப்பினார்கள்.)

  1. சூர்யா சென் மற்றும் அவரது நண்பர்களால் மேற்கொள்ளப்பட்ட சிட்டகாங் ஆயுதக்கிடங்கு மீதான தாக்குதல் __________ ஆண்டு நடைபெற்றது.

A) 1929 ஏப்ரல்

B) 1929 நவம்பர்

C) 1930 ஏப்ரல்

D) 1930 டிசம்பர்

(குறிப்பு: சிட்டகாங்கில் இருந்த ஆயுதக்கிடங்குகளைக் கைப்பற்றிய அவர்கள் அங்கு புரட்சிகர அரசை நிறுவினார்கள். அரசு நிறுவனங்களைக் குறி வைத்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர்கள் தாக்குதல்களை நடத்தினார்கள்.)

  1. சிட்டகாங் ஆயுதக்கிடங்கு தாக்குதலில் ஈடுபட்ட சூர்யா சென் _________ ஆண்டு கைது செய்யப்பட்டார்.

A) 1930 B) 1931 C) 1932 D) 1933

(குறிப்பு: சூர்யா சென் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டார்.)

  1. இந்திய பொதுவுடைமைக் கட்சி _________ ஆண்டு தடைசெய்யப்பட்டது.

A) 1930 B) 1932 C) 1933 D) 1934

(குறிப்பு: உலக பொருளாதார மந்த நிலையின் காரணமாக வருவாய் மற்றும் ஊதியக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றுக்காக பொதுவுடைமைக் கட்சி போராடியதால் தடை செய்யப்பட்டது.)

  1. _________ ஆண்டில் ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆச்சார்ய நரேந்திர தேவ் மற்றும் மினுமசானி ஆகியோரின் முன்முயற்சியால் காங்கிரஸ் சமதர்ம கட்சி உருவானது.

A) 1924 B) 1930 C) 1932 D) 1934

(குறிப்பு: தேசியவாதம் சமதர்மத்துக்கான பாதை என்று நம்பிய அவர்கள் அதற்காக காங்கிரசுக்குள் இருந்து உழைக்க விரும்பினார்கள். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவு கட்சியாக காங்கிரஸ் கட்சியை மாற்ற அவர்கள் பணியாற்றினர்.)

  1. “ஒரு சிலர் அதிகாரத்துக்கு வருந்தால் உண்மையான சுயராஜ்ஜியம் கிடைத்துவிடாது, ஆனால் தாங்கள் பெற்ற அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தப்படும் போது நிர்வாகத்தினரை எதிர்க்கும் திறனை அனைவரும் பெறச்செய்வதே சுயராஜ்ஜியமாகும்” என்று கூறியவர்

A) ஜெயப்பிரகாஷ் நாராயண்

B) ஆச்சார்ய நரேந்திர தேவ்

C) மினுமசானி

D) காந்தியடிகள்

  1. அகில இந்திய கூட்டமைப்பு ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்திய சட்டம்

A) ரெளலட் சட்டம்

B) 1935 இந்திய அரசுச் சட்டம்

C) 1853 பட்டயச் சட்டம்

D) 1923 இந்திய அரசுச் சட்டம்

(குறிப்பு: இச்சட்டத்தின்படி 11 மாகாணங்கள், 6 தலைமை ஆணையரக மாகாணங்கள் மற்றும் இந்தக் கூட்டமைப்பில் சேர விரும்பிய அனைத்து சிற்றரசுகளும் இந்தக் கூட்டமைப்பில் இடம்பெற்றன.)

  1. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் குறித்த கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு

1. மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம், மத்தியில் இரட்டையாட்சி ஆகியன இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.

2. வாக்குரிமையானது சொத்தின் அடிப்படையில் நீட்டிக்கப்பட்டதால் மக்கள்தொகையில் 50 சதவிகித மக்கள் மட்டுமே வாக்களிக்கும் தகுதிபெற்றனர்.

3. இச்சட்டத்தின்படி பர்மா இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டது.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) எதுவுமில்லை

(குறிப்பு: வாக்குரிமையானது சொத்தின் அடிப்படையில் நீட்டிக்கப்பட்டதால் மக்கள்தொகையில் 10 சதவிகித மக்கள் மட்டுமே வாக்களிக்கும் தகுதிபெற்றனர்.)

  1. ___________ ஆண்டு தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதன் மூலம் 1935 ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

A) 1935 B) 1936 C) 1937 D) 1938

(குறிப்பு: சட்டப்பேரவை புறக்கணிப்பைக் கைவிட்ட காங்கிரஸ் தேர்தல்களில் போட்டியிட்டது.)

  1. 1937ஆம் ஆண்டு தேர்தலில் பதினொரு மாகாணங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் _________ மாகாணங்களில் வெற்றிப் பெற்றது.

A) 6 B) 7 C) 8 D) 9

(குறிப்பு: மதராஸ், பம்பாய், மத்திய மாகாணங்கள், ஒடிசா, பீகார், ஐக்கிய மாகாணங்கள், வடமேற்கு எல்லை மாகாணம், சர் முஹம்மது சாதுல்லா தலைமையிலான அசாம் பள்ளத்தாக்கு முஸ்லிம் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசு உட்பட எட்டு மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.)

  1. 1937ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் தவறானதை தேர்ந்தெடு.

A) அமைச்சர்களின் ஊதியம் 2000 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக குறைக்கப்பட்டது.

B) கம்யூனிஸ்ட் கட்சி உட்பட அனைத்து கட்சிகள் மீது விதிக்கப்பட்ட தடைகளை ரத்து செய்தனர்.

C) தேச அளவில் பத்திரிக்கைகள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அகற்றிவிட்டனர்.

D) கோயில் நுழைவுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

(குறிப்பு: கம்யூனிஸ்ட் கட்சி தவிர இதர கட்சிகள் மீது விதிக்கப்பட்ட தடைகளை ரத்து செய்தனர். அரசியல் பேச்சுக்கள் பற்றி சி.ஐ.டி சார்பாக அறிக்கை தருவது விலக்கிக் கொள்ளப்பட்டது. விவசாயிகளின் கடன்கள் குறையவும் தொழிலக தொழிலாளர்களின் பணி நிலைமை மேம்படவும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.)

  1. _________ ஆண்டு இரண்டாம் உலகப்போர் மூண்டது.

A) 1937 B) 1938 C) 1939 D) 1940

(குறிப்பு: காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் கூட்டணிப் படைகள் சார்பாக இரண்டாம் உலகப்போரில் இந்தியாவின் காலணி ஆதிக்க அரசு நுழைந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகின.)

  1. ஜின்னா _________ ஆண்டு வாக்கில் முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்று வலியுறுத்தினார்.

A) 1934 B) 1938 C) 1939 D) 1940

(குறிப்பு: ஜின்னா காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகிய நாளை ‘மீட்பு நாள்’ என்று அறிவித்தார்.)

  1. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் _________ ஆண்டு காங்கிரஸ் தலைவரானார்.

A) 1937 B) 1938 C) 1939 D) 1940

(குறிப்பு: காந்தியடிகளின் வேட்பாளரான பட்டாபி சீதாராமய்யாவை வீழ்த்தி நேதாஜி காங்கிரஸ் தலைவரானார்.)

  1. கூற்று 1: காந்தியடிகள் ஒத்துழைக்க மறுத்ததையடுத்து, சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகி பார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார்.

கூற்று 2: 1942இல் பொதுவுடைமை கட்சி மீதான தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: இரண்டாம் உலகப் போரினை ஏகாதிபத்திய போர் என்று அழைத்த பொதுவுடைமைவாதிகள் ஆரம்பத்தில் அதை எதிர்த்தனர். எனினும் நாஜிக்கள் சோவியத் யூனியன் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து அதனை மக்களின் போர் என்று பொதுவுடைமைவாதிகள் அழைத்ததோடு பிரிட்டிஷாருக்கு ஒத்துழைப்பு நல்கினார்கள்.)

  1. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவரான ரஹ்மத் அலி __________ ஆண்டு பஞ்சாப், காஷ்மீர், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து மற்றும் பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களை இணைத்து பாகிஸ்தானை உருவாக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

A) 1922 B) 1933 C) 1938 D) 1940

(குறிப்பு: இந்து – முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி வந்த முஹம்மது இக்பால் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்.)

  1. 1940 ஆகஸ்டு மாதம், காங்கிரஸ் இரண்டாம் உலகப்போரின் போது இந்தியர்களின் ஆதரவை பெற___________ டொமினியன் சலுகையை வழங்க முன்வந்தார்.

A) ரெளலட்

B) கிரிப்ஸ்

C) சைமன்

D) லின்லித்கோ

(குறிப்பு: எனினும் குறிப்பிடப்படாத எதிர்காலத்தில் தன்னாட்சி (டொமினியன்) தகுதி என்ற சலுகை, காங்கிரசுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.)

  1. ___________ நாள் வினோபா பாவே தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தை முதன்முதலாக ஆரம்பித்தார்.

A) 1940 ஆகஸ்ட் 16

B) 1940 ஜூன் 17

C) 1940 செப்டம்பர் 27

D) 1940 அக்டோபர் 17

(குறிப்பு: 1940ஆம் ஆண்டின் இறுதி வரை சத்தியாகிரகம் தொடர்ந்தது. இந்த காலகட்டத்தில் 25,000க்கும் அதிகமான மக்கள் கைது செய்யப்பட்டனர்.)

  1. கேபினட் அமைச்சர் ஸ்ட்ராஃபோர்டு கிரிப்ஸ் தலைமையிலான தூதுக்குழுவை பிரிட்டிஷ் அரசு அனுப்பிய ஆண்டு

A) 1942 பிப்ரவரி 22

B) 1942 மார்ச் 22

C) 1942 மார்ச் 27

D) 1942 ஏப்ரல் 22

(குறிப்பு: உரிய அதிகாரத்தை உடனடியாக மாற்றித்தர பிரிட்டன் விருப்பப்படாத நிலையில் காங்கிரஸ் மற்றும் கிரிப்ஸ் தூதுக்குழு இடையேயான பேச்சுகள் தோல்வி அடைந்தன.)

  1. கிரிப்ஸ் தூதுக்குழுவின் திட்டங்களை “திவாலாகும் வங்கியில் பின் தேதியிட்ட காசோலை” என அழைத்தவர்

A) முகமது அலி ஜின்னா

B) ஜஹர்லால் நேரு

C) காந்தியடிகள்

D) சுபஷ் சந்திர போஸ்

(குறிப்பு: கிரிப்ஸ் தூதுக்குழு கீழ்க்கண்டவற்றை வழங்க முன்வந்தது.

  • போருக்குப் பிறகு தன்னாட்சி (டொமினியன் தகுதி) வழங்குவது.
  • பாகிஸ்தான் உருவாக்க கோரிக்கையை ஏற்கும் விதமாக இந்திய இளவரசர்கள் பிரிட்டிஷாருடன் தனி ஒப்பந்தத்தைக் கையெழுத்திடலாம்.
  • இரண்டாம் உலகப் போரின் போது பாதுகாப்புத் துறை பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருப்பது.)
  1. வெள்ளையனே வெளியேறு தீர்மானத்திற்கு வித்திட்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி___________நாள் பம்பாயில் கூடியது.

A) 1942 செப்டம்பர் 18

B) 1942 அக்டோபர் 8

C) 1942 மார்ச் 28

D) 1942 மார்ச் 22

(குறிப்பு: இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு உடனடியாக முடிவு கட்ட இம்மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.)

  1. “நாம் நமது முயற்சியின் விளைவாக இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவோம், அல்லது நாம் நமது அடிமைத்தனத்தைக் காண உயிருடன் இருக்கமாட்டோம்” என்று கூறியவர்

A) முகமது அலி ஜின்னா

B) ஜஹர்லால் நேரு

C) காந்தியடிகள்

D) சுபாஷ் சந்திர போஸ்

(குறிப்பு: செய் அல்லது செத்து மடி என்ற முழக்கத்தை காந்தியடிகள் வெளியிட்டார்.)

  1. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது___________ நிறுவிய காங்கிரஸ் வானொலி திரைமறைவில் இருந்தபடியே வெற்றிகரமாக செயல்பட்டது.

A) அருணா ஆசப் அலி

B) உஷா மேத்தா

C) ஜெயபிரகாஷ் நாராயண்

D) ராமாநந்த் மிஷ்ரா

(குறிப்பு: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது அருணா ஆசப் அலி போன்ற பெண் தலைவர்கள் முக்கிய பணி ஆற்றினார்கள்.)

  1. விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?

A) 1930 ஜனவரி 26

B) 1929 டிசம்பர் 26

C) 1946 ஜூன் 16

D) 1947 ஜனவரி 15

  1. காந்தி 1943 பிப்ரவரி மாதம் _________ நாட்களுக்கான உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

A) 14 B) 18 C) 21 D) 28

(குறிப்பு: 9 ஆகஸ்ட் 1942 அன்று கைது செய்யப்பட்ட காந்தி உண்ணாவிரதத்தின் காரணமாக 1944ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.)

  1. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது கீழ்க்கண்ட எந்த இடங்களில் இணை அரசுகள் நிறுவப்பட்டன?

1. சதாரா 2. ஒரிஸா 3. பீகார்

4. ஐக்கிய மாகாணங்கள் 5. வங்காளம்

A) அனைத்தும் B) 1, 2, 4 C) 2, 3, 5 D) 1, 4, 5

(குறிப்பு: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது 7,000 பேர் கொல்லப்பட்டனர். 60,000க்கும் அதிகமானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.)

  1. வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் 1941 __________மாதம் அவரது இல்லத்தில் இருந்து தப்பித்தார்.

A) பிப்ரவரி

B) மார்ச்

C) ஏப்ரல்

D) மே

(குறிப்பு: வீட்டுக்காவலில் இருந்து தப்பிய போஸ் ஆப்கானிஸ்தான் சென்றடைந்தார்.)

  1. வீட்டுக்காவலில் இருந்து தப்பிய சுபாஷ் சந்திர போஸ் முதலில் __________ ஆதரவைப் பெற விரும்பினார்.

A) சோவியத் யூனியன்

B) ஜெர்மனி

C) ஜப்பான்

D) பர்மா

(குறிப்பு: பிரிட்டன் உள்ளிட்ட கூட்டணிப் படைகளுடன் சோவியத் யூனியன் அரசு சேர்ந்ததால் சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனிக்கு சென்றார்.)

  1. சுபாஷ் சந்திர போஸ் __________ ஆண்டு நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக ஜப்பான் சென்று இந்திய தேசிய இராணுவத்தின் கட்டுப்பாட்டைக் கையில் எடுத்தார்.

A) 1942 நவம்பர்

B) 1943 பிப்ரவரி

C) 1943 ஏப்ரல்

D) 1943 அக்டோபர்

(குறிப்பு: சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூரில் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை நிறுவினார்.)

  1. இந்தியப் போர்க்கைதிகளைக் கொண்டு மலாயா மற்றும் பர்மாவில் இருந்த ஜப்பானியர்களின் ஆதரவோடு இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர்

A) சுபாஷ் சந்திரபோஸ்

B) லட்சுமி செகல்

C) மோகன் சிங்

D) விஜயலட்சுமி பண்டிட்

(குறிப்பு: மோகன் சிங்கிற்கு பிறகு இந்திய தேசிய இராணுவம் கேப்டன் லட்சுமி செகல் என்பவரால் நடத்தப்பட்டது.)

  1. இந்திய தேசிய இராணுவத்தை சுபாஷ் சந்திர போஸ் __________ படையணிகளாக மறுசீரமைத்தார்.

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: மூன்று படையணிகள்

  • காந்தி பிரிகேட்
  • நேரு பிரிகேட்
  • ராணி லஷ்மிபாய் பிரிகேட் (பெண்கள் பிரிவு))
  1. “தில்லிக்கு புறப்படு” (தில்லி சலோ) என்ற முழக்கத்தை வெளியிட்டவர்

A) மோகன் சிங்

B) லட்சுமி செகல்

C) காந்தி

D) சுபாஷ் சந்திர போஸ்

  1. கூற்று 1: பிரிட்டிஷ் அரசு இந்திய தேசிய ராணுவ அதிகாரிகளை கைது செய்து செங்கோட்டையில் அவர்களை விசாரணைக்காக வைத்தது.

கூற்று 2: காங்கிரஸ் அமைத்த பாதுகாப்புத்துறை கமிட்டி ஜவஹர்லால் நேரு, தேக் பகதூர் சாப்ரூ, புலாபாய் தேசாய், ஆசப் அலி ஆகியோரை உள்ளடக்கியதாக இருந்தது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: இந்திய தேசிய ராணுவத்தின் அதிகாரிகளுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் பொதுமக்கள் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.)

  1. பம்பாயில் ராயல் இந்திய கடற்படை மாலுமிகள் கிளர்ச்சி செய்த ஆண்டு

A) 1945 ஆகஸ்ட்

B) 1945 நவம்பர்

C) 1946 ஜனவரி

D) 1946 பிப்ரவரி

(குறிப்பு: ஜபல்பூரில் இருந்த இந்திய விமானப்படை, இந்திய சமிக்ஞை படை ஆகியவற்றிலும் வேலைநிறுத்தங்கள் நடந்தன.)

  1. வேவல் திட்டம் அறிவிக்கப்பட்ட ஆண்டு

A) 1945 ஜனவரி

B) 1945 மார்ச்

C) 1945 ஜூன்

D) 1945 ஜூலை

(குறிப்பு: இத்திட்டத்தின் மூலம் அரசப்பிரதிநிதியின் செயற்குழுவில் இந்துக்களும் முஸ்லிம்களும் சம எண்ணிக்கையில் இடம்பெற்ற ஓர் இடைக்கால அரசுக்கு வகை செய்யப்பட்டது.)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

1. பிரிட்டனில் தொழிற்கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்று கிளைமண்ட் அட்லி பிரதம மந்திரியாக பொறுப்பேற்றார்.

2. பெதிக் லாரன்ஸ், சர்ஸ்ட்ராஃபோர்ட் கிரிப்ஸ், A.V.அலெக்சாண்டர் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் தூதுக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பினார்.

3. பாகிஸ்தானை தனிநாடாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரவை தூதுக்குழு நிராகரித்தது.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: பாதுகாப்பு, தகவல்தொடர்பு மற்றும் வெளியுறவு ஆகிய துறைகளில் கட்டுப்பாட்டுடன் கூடிய மத்திய அரசை நிறுவ அமைச்சரவை தூதுக்குழு வகை செய்தது.)

  1. அமைச்சரவை தூதுக்குழு பரிந்துரையின்படி இந்திய மாகாணங்கள் _____________ வகையாக பிரிக்கப்பட்டன.

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: மூன்று வகை மாகாணங்கள்

  • முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இல்லாத மாகாணங்கள்
  • வடமேற்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்கள்
  • வடகிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்கள்)
  1. _____________ நாளை நேரடி நடவடிக்கை நாளாக ஜின்னா அறிவித்தார்.

A) 1946 ஜனவரி 26

B) 1946 பிப்ரவரி 28

C) 1946 ஆகஸ்டு 16

D) 1946 ஆகஸ்டு 26

(குறிப்பு: இந்து-முஸ்லிம் மோதலின் போது நவகாளி மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.)

  1. ஜவஹர்லால் நேருவின் தலைமையில் இடைக்கால அரசு __________ ஆண்டு அமைக்கப்பட்டது.

A) 1946 ஆகஸ்ட்

B) 1946 பிப்ரவரி

C) 1946 ஜனவரி

D) 1946 செப்டம்பர்

(குறிப்பு: சில தயக்கங்களுக்கு முஸ்லிம் லீக் இந்த இடைக்கால அரசில் 1946ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இணைந்தது.)

  1. இடைக்கால அரசில் முஸ்லிம் லீக்கின் பிரதிநிதியாக __________ என்பவர் நிதி உறுப்பினராக ஆக்கப்பட்டார்.

A) முகமது அலி ஜின்னா

B) சௌகத் அலி

C) லியாகத் அலி கான்

D) மவுண்ட்பேட்டன்

  1. 1948ஆம் ஆண்டு ஜூன் மாதவாக்கில் அதிகாரமாற்றம் ஏற்படும் என்று _________மாதம் கிளெமன்ட் அட்லி அறிவித்தார்.

A) 1947 ஜனவரி

B) 1947 பிப்ரவரி

C) 1947 ஏப்ரல்

D) 1947 ஜூலை

(குறிப்பு: இந்த ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யும் பொறுப்புடன் மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவுக்கு அரசுப் பிரதிநிதியா அனுப்பப்பட்டார்.)

  1. மவுண்ட்பேட்டன் திட்டம் அறிவிக்கப்பட்ட நாள்

A) 1947 ஜனவரி 26

B) 1947 பிப்ரவரி 3

C) 1947 மே 16

D) 1947 ஜூன் 3

(குறிப்பு: மவுண்ட்பேட்டன் திட்டத்தின் அம்சங்கள்:

  • இந்தியா பாகிஸ்தானுக்கு, பிரிட்டனின் தன்னாட்சிப் பகுதி என்ற தகுதியுடன் அதிகாரமாற்றம் நடைபெறும்.
  • சிற்றரசுகள் இந்தியா அல்லது பாகிஸ்தானில் சேர வேண்டும்.
  • ராட்கிளிஃப் பிரவ்ன் தலைமையில் எல்லைகளை நிர்ணயிக்கும் ஆணையம் அமைக்கப்பட்டு அதிகார மாற்றத்துக்குப் பிறகு இந்த ஆணையத்தின் முடிவு அறிவிக்கப்படும்.
  • பஞ்சாப் மற்றும் வங்காள சட்டப்பேரவைகள் அவைகள் பிரிக்கப்பட வேண்டுமா என்பது பற்றி வாக்கெடுப்ப்பு நடத்தும்.)
  1. பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்திய விடுதலைச் சட்டத்தை எப்போது இயற்றியது?

A) 1947 ஜூன் 3

B) 1947 ஜூன் 18

C) 1947 ஜூலை 18

D) 1947 ஜூலை 28

(குறிப்பு: இந்திய விடுதலைச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு மவுண்பேட்டன் திட்டம் செயல் வடிவம் பெற்றது.)

  1. 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது காந்தியடிகள் எங்கிருந்தார்?

A) புதுதில்லி

B) அகமதாபாத்

C) வார்தா

D) நவகாளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!