Samacheer NotesTnpsc

தேசியம் : காந்திய காலகட்டம் Notes 10th Social Science Lesson 14 Notes in Tamil

10th Social Science Lesson 14 Notes in Tamil

14. தேசியம் : காந்திய காலகட்டம்

அறிமுகம்

  • மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் சமூக உரிமைகளுக்காக சுமார் 20 ஆண்டுகள் போராடிய பிறகு 1915இல் தாயகம் திரும்பினர். இந்திய அரசியலுக்கு புதிய எழுச்சியை அவர் ஏற்படுத்தினார்.
  • தென்னாப்பிரிக்காவில் அவர் கையாண்டு பண்படுத்திய ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியோர் என அனைவரும் பின்பற்றத்தக்க ‘சத்தியாகிரகம்’ என்ற புதிய வழிமுறையை அவர் அறிமுகம் செய்தார்.
  • அடித்தட்டு வறியவர்களின் மேன்மைக்காக உறுதிபூண்ட அவரால் மக்களின் நல்லெண்ணத்தை எளிதில் பெறமுடிந்தது.
  • காந்தியடிகளுக்கு முன் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசமைப்புவாதிகள் பிரிட்டிஷாரின் நீதி மற்றும் நியாய முறையை வேண்டி நின்றனர்.
  • காலனி ஆதிக்க ஆட்சியின் அடக்குமுறையை வன்முறையான வழியில் தீவிரதேசியவாத எண்ணம் கொண்ட தலைவர்கள் எதிர்கொண்டனர்.
  • மாறாக மக்கள் கூட்டத்தைக் கூட்டவும் ஆங்கிலேய ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்கவும் காந்தி வன்முறையல்லாத வழிகளைப் பின்பற்றினார். இந்திய தேசிய இயக்கத்தை காந்தியடிகள் எவ்வாறு மடைமாற்றம் பெறவைத்தார் என்பதை காண்போம்.

காந்தியடிகளும் மக்கள் தேசியமும்

அ) காந்தியடிகள் உருவாகிறார்

  • குஜராத்தின் போர்பந்தரில் ஒரு வசதியான குடும்பத்தில் 1869 அக்டோபர் 2ஆம் நாள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்தார். அவரது தந்தையார் காபா காந்தி, போர்பந்தரின் திவானாகவும் பொறுப்பு வகித்தார்.
  • தீவிர வைணவ பக்தையான அவரது தாயார் புத்லிபாயின் தாக்கம் இளையவரான காந்தியின் நடவடிக்கைகளில் பெரிதும் இருந்தது. பதின்ம பள்ளிப் (மெட்ரிகுலேசன்) படிப்பை முடித்த காந்தியடிகள் சட்டம் பயில்வதற்காக 1888இல் இங்கிலாந்துக்குக் கடல்பயணம் மேற்கொண்டார்.
  • 1891ஆம் ஆண்டு ஜூன் மாதம் வழக்கறிஞர் பட்டம்பெற்ற பின்பு அவர் பிரிட்டிஷாரின் நீதி மற்றும் நியாய முறையில் நம்பிக்கை கொண்டவராக இந்தியாவுக்குத் திரும்பினார்.
  • லண்டனில் அவருக்கு கிடைத்த அனுபவங்கள் தென்னாப்பிரிக்காவில் அவர் எதிர்கொள்ளவிருந்த இனவேறுபாட்டுக்கு அவரைத் தயார்படுத்தியிருக்கவில்லை.
  • இந்தியா திரும்பியவுடன் பம்பாயில் வழக்குரைஞராக பணியாற்ற காந்தியடிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. அந்த காலகட்டத்தில்தான் தென்னாப்பிரிக்காவில் இருந்த குஜராத்தி நிறுவனம் ஒன்று சட்ட உரிமை வழக்குகள் தொடர்பாக காந்தியடிகளின் சேவையை நாடியது.
  • இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்ட காந்தியடிகள் 1893 ஏப்ரல் மாதம் தென்னபபிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார். தென்னாப்பிரிக்காவில்தான் முதன்முறையாக அவர் இனவெறியை எதிர்கொண்டார்.
  • டர்பனில் இருந்து பிரிட்டோரியாவுக்கு ரயில்பயணம் மேற்கொண்டபோது பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
  • கூலிகளைப் போன்றுதான் இந்தியர்கள் நடத்தப்பட்டனர். ஆனால் காந்தியடிகள் இதை எதிர்த்துப்போராட உறுதிபூண்டார்.
  • காந்தியடிகள் டிரான்ஸ்வாலிஸ் உள்ள இந்தியர்களின் கூட்டத்தைக் கூட்டி அவர்கள் தங்களுடைய குறைகளை உறுதியுடன் வெளிப்படுத்தி களைவதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
  • இது போன்ற கூட்டங்களைத் தொடர்ந்து நடத்திய அவர், அந்த நாட்டின் சட்டங்களை மீறும் விதமாக நடந்த அநீதிகள் தொடர்பாக நிர்வாகத்தினருக்கு மனுக்களை அளித்தார்.
  • டிரான்ஸ்வாலிஸ் வசித்த இந்தியர்கள் தலை வரியாக 3 பவுண்டுகளை செலுத்த வேண்டியிருந்தது. அவர்களுக்கென குறிக்கப்பட்ட பகுதிகளை விடுத்து வேறு இடங்களில் அவர்கள் நிலத்தை சொந்தமாக வைத்துக்கொள்ள முடியாதநிலை இருந்தது. இரவு 9மணிக்குப் பிறகு அனுமதியின்றி வெளியிடங்களுக்கு செல்லமுடியாத நிலையும் இருந்தது. இத்தகைய நியாயமற்ற சட்டங்களை எதிர்த்து அவர் போராட்டத்தைத் தொடங்கினார்.
  • காந்தியடிகளுக்கு டால்ஸ்டாய், ஜான் ரஸ்கின் ஆகியோரின் எழுத்துகளுடன் அறிமுகம் கிடைத்தது,
  • ‘கடவுளின் அரசாங்கம் உன்னில் உள்ளது’ (The Kingdom of God is Within You) என்ற டால்ஸ்டாயின் புத்தகம் , ‘அண்டூ திஸ் லாஸ்ட்’ (Undo this Last) என்ற ஜான் ரஸ்கின் எழுதிய புத்தகம் தாதோவின் ‘சட்டமறுப்பு’ (Civil Disobedience) ஆகிய புத்தகங்களால் காந்தியடிகள் பெரும் தாக்கத்திற்குள்ளானார்.
  • இந்திய மற்றும் மேற்கத்திய சிந்தனையாளர்களின் கலவையாக காந்தியடிகளின் சிந்தனைகள் உருவாகின. மேற்கத்திய சிந்தனையாளர்களால் பெரிதும் காந்தியடிகள் ஈர்க்கப்பட்டாலும் மேற்கத்திய நாகரிகம் மற்றும் தொழில்மயமாக்கல் ஆகியவை குறித்து அவர் அதிதீவிரமாக விமர்சித்தார்.
  • ரஸ்கின் அவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட காந்தியடிகள் ஃபீனிக்ஸ் குடியிருப்பையும் (1905) டால்ஸ்டாய் பண்ணையையும் (1910) நிறுவினார். சமத்துவம், சமூக வாழ்க்கை, தொழில் மீது மரியாதை ஆகிய நற்பண்புகள் இந்தக் குடியிருப்புகளில் ஊக்கப்படுத்தபட்டன. சத்தியாகிரகிகளுக்கு இவை பயிற்சிகளங்களாகத் திகழ்ந்தன.

தென்னாப்பிரிக்காவில் ஒரு செயல்உத்தியாக சத்தியாகிரகம்

  • காந்தியடிகள் உண்மையின் வடிவமாக சத்தியாகிரகத்தை மேம்படுத்தினார். நியாயமற்ற சட்டங்களுக்கு எதிராக அமைதிப் பேரணிகளை நடத்திய பரப்புரையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தாங்களாகவே முன்வந்து கைதானார்கள்.
  • குடியேற்றம் மற்றும் இனவேறுபாடு ஆகிய பிரச்சனைகளுக்காகப் போராட அவர் சத்தியாகிரக சோதனைகளை மேற்கொண்டார். குடிபெயர்ந்தோரை பதிவு செய்யும் அலுவலகங்கள் முன் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.
  • காவல்துறையினர் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டபோதிலும் சத்தியாகிரகிகள் எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை. காந்தியடிகளும் இதர தலைவர்களும் கைதானார்கள்.
  • பெரும்பாலும், ஒப்பந்த தொழிலாளர்களாக இருந்து தெருவோர வியாபாரிகளாக மாறிய இந்தியர்கள், காவல்துறையினரின் கடுமையான நடவடிக்கையையும் பொருட்படுத்தாமல் போரட்டத்தை தொடர்ந்தனர்.
  • இறுதியாக ஒப்பந்த தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்ட தலைவரி ஸ்மட்ஸ் –காந்தி ஒப்பந்தத்தின்படி ரத்து செய்யப்பட்ட்து.
  • தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் தங்கியிருந்த காலகட்ட்த்தில் அவர் பலவற்றை அனுபவபூர்வமாகக் கற்றுக்கொண்டார். பல்வேறு மதங்களையும் பகுதிகளையும் மொழிக்குழுக்களையும் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றிணைக்க முடியும் என்று காந்தியடிகள் உணர்ந்து கொண்டார். முதல் உலகப் போர் வெடித்த பிறகு காந்தியடிகள் இந்தியா திரும்பினார்.

இந்தியாவில் காந்தியடிகள் நடத்திய தொடக்ககால சத்தியாகிரகங்கள்

  • முந்தைய இந்திய வருகைகளின்போது காந்தியடிகள் தான் சந்தித்த கோபால கிருஷ்ண கோகலே மீது பெரும் மரியாதை கொண்டு அவரையே தமது அரசியல் குருவாக ஏற்றார். அவரது அறிவுரையின்படி, அரசியலில் ஈடுபடுமுன் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் காந்தியடிகள் பயணம் மேற்கொண்டனர்.
  • இதனால் மக்களின் நிலையை அவர் அறிந்துகொள்ள வழிபிறந்தது. இதுபோன்ற ஒரு பயணத்தின்போதுதான் தமிழகத்தில் தமது வழக்கமான ஆடைகளை விடுத்து சாதாரண வேட்டிக்கு அவர் மாறினார்.
  • இந்தியா திரும்பும் முன் இங்கிலாந்துக்குச் சென்ற காந்தியடிகள் அங்கு போரில் பயன்படுத்தப்படுவதற்காக அவசர ஊர்தி சேவைகளை வழங்க உறுதியேற்றார்.
  • ஆங்கிலேய அரசின் பொறுப்புமிகுந்த குடிமகனாக தம்மைக் கருதிய அவர் இங்கிலாந்தை அதன் சோதனையான காலகட்டத்தில் ஆதரிப்பதைத் தமது கடமையாக நம்பியதோடு, ராணுவத்தில் இந்தியர்களைச் சேர்ப்பதற்கான பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். எனினும் அவரது கருத்துகள் பிந்தைய ஆண்டுகளில் மாறிப்போனது.

அ) சம்பரான் சத்தியாகிரகம்

  • பீகாரில் உள்ள சம்பரானில் ‘தீன் காதியா’ முறை பின்பற்றப்பட்டது. இந்த சுரண்டல் முறையில் இந்திய விவசாயிகள் தங்களின் நிலத்தின் இருபதில் மூன்று பங்கு பகுதியில் அவுரி (இண்டிகோ) பயிரிட வேண்டும் என்று ஐரோப்பியப் பண்ணையாளர்கள் அவர்களைக் கட்டாயப்படுத்தினர்.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் ஜெர்மானிய செயற்கை சாயங்களால், இண்டிகோ எனப்படும் நீலச்சாயம் சந்தையில் விற்கப்படுவது குறைந்தது.
  • சம்பரானில் இண்டிகோ பயிரிட்ட ஐரோப்பியப் பண்ணையாளர்கள் நீலச்சாயம் பயிரிடும் கடமையிலிருந்து விவசாயிகளை விடுவிக்கும் தேவையை உணர்ந்து அந்த நிலைமையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார்கள்.
  • இந்தக் கடமையிலிருந்து விவசாயிகளை விடுவிக்கும்பொருட்டு சட்டத்துக்கு புறம்பான நிலுவைத்தொகைகளை வசூலித்ததோடு வாடகையையும் அதிகரித்தார்கள். எதிர்ப்பு வெடித்தது.
  • இந்த வகையில் சிரமங்களைச் சந்தித்த சம்பரானைச் சேர்ந்த விவசாயியான ராஜ்குமார் சுக்லா, சம்பரானுக்கு வருகை புரியுமாறு காந்தியடிகளைக் கேட்டுக்கொண்டனர்.
  • சம்பரானை காந்தியடிகள் சென்று சேர்ந்தவுடன், அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு காவல்துறையினர் அவரைக் கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர் மறுத்ததையடுத்து வழக்கைச் சந்திக்குமாறு பணிக்கப்பட்டார்.
  • இந்தச் செய்தி காட்டுத்தீ போன்று பரவியதை அடுத்து ஆயிரக்கணக்கானோர் அந்த இடத்தில் காந்தியடிகளுக்கு ஆதரவாகக் கூடினர்.
  • உத்தரவுக்குக் கீழ்படிய மறுத்தது குறித்து காந்தியடிகள் மன்னிப்புக் கோரியதை அடுத்து வழக்கு திரும்பப் பெறப்பட்டது.
  • ‘நாடு முதன்முதலாக ஒத்துழையாமை இயக்கச் செயல்முறைப் பாடத்தைக் கற்றுக்கொண்டதாக’ காந்தியடிகள் தெரிவித்தார். இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவராக பின்னாளில் பொறுப்பேற்ற ராஜேந்திர பிரசாத்தும் வழக்குரைஞராக தொழில் செய்த பிரஜ்கிஷோர் பிரசாத்தும் காந்தியடிகளுக்குத் துணையாக செயல்பட்டனர்.
  • அதன்பிறகு துணைநிலை காந்தியடிகள் அக்குழுவில் ஒரு உறுப்பினர் ஆனார். இண்டிகோ பண்ணையாளர்கள் விவசாயிகள் மீது நடத்திய அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ‘தீன் காதியா முறையை ரத்து செய்ய அந்தக் குழு பரிந்துரைத்தது.
  • சம்பரான் சத்தியாகிரகத்தின் வெற்றியை அடுத்து 1918இல் அகமதாபாத் மில் வேலைநிறுத்தம் , 1918இல் கேதா சத்தியாகிரகம் ஆகியன காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருவாக்கின.
  • முந்தைய தலைவர்களைப் போலல்லாமல் நாட்டு மக்களை ஒன்றுதிரட்டும் பணியில் காந்தியடிகள் தம் திறமையை வெளிப்படுத்தினார்.

ஆ) ரௌலட் சத்தியாகிரகமும் ஜாலியன்வாலா பாக் படுகொலையும்

  • முதல் உலகப்போருக்கு பிறகு ஆங்கிலேயர்களிடம் இருந்து மக்கள் தாராளமான அரசியல் சீர்திருத்தங்களை எதிர்பார்த்தனர். இந்தியர்களுக்கு உண்மையில் அதிகாரங்களை பரிமாற்றம் செய்யாததால் 1919ஆம் ஆண்டின் இந்திய அரசுச்சட்டம் ஏமாற்றத்தை அளித்தது.
  • மேலும், அரசானது போர்க்காலக் கட்டுப்பாடுகளை நிரந்தரமாக விரிவுபடுத்தி அமல்படுத்தத் தொடங்கியது. பிடிஉத்தரவு இல்லாமல் கைது நடவடிக்கை, விசாரணை இல்லாமல் சிறையிலடைப்பது என காவல் துறையினருக்கு அதீத அதிகாரங்களை ரௌலட் சட்டம் வழங்கியது. இந்தச் சட்டத்தை ‘கருப்புச் சட்டம்’ என்றழைத்த காந்தியடிகள் அதனை எதிர்த்து நாடு தழுவிய சத்தியாகிரகப் போராட்டத்துக்கு 1919 ஏப்ரல் 6 இல் அழைப்புவிடுத்தார்.
  • இது உண்ணாவிரதமிருத்தல் மற்றும் பிரார்த்தனையுடன் கூடிய ஒரு அகிம்சை போராட்டமாக இருத்தல் வேண்டும். இது நாடு முழுவதும் பரவிய தொடக்ககால காலனிய எதிர்ப்பு போராட்டமாகும்.
  • ரௌலட் சட்ட்த்துக்கு எதிரான போராட்டம் பஞ்சாபில் குறிப்பாக அமிர்தசரஸ் மற்றும் லாகூரில் தீவிரமடைந்தது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டதுடன் பஞ்சாபிற்குள் நுழையவிடாமலும் தடுக்கப்பட்டார்.
  • ஏப்ரல் 9ஆம் நாள் டாக்டர். சைஃபுதீன் கிச்லு, டாக்டர். சத்யபால் என்ற இரண்டு முக்கிய உள்ளூர் தலைவர்கள் போராட்டத்திற்கு தலைமையேற்றதால் அமிர்தசரஸில் கைது செய்யப்பட்டனர். அதனையடுத்து நடந்த போராட்டங்களில் சில ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டனர். படைத்துறைச் சட்டம் அறிவிக்கப்பட்டது.

ஜெனரல் டயரின் கொடுங்கோன்மை

  • அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலாபாக்கில் 1919 ஏப்ரல் 13ஆம் நாள் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து.
  • பைசாகி திருநாளில் (சீக்கியர்களின் அறுவடைத்திருநாள்) இந்தக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அங்கு கூடியிருந்தனர். இந்தக்கூட்டம் பற்றி அறிந்தவுடன் அந்த இடத்தை பீரங்கி வண்டி மற்றும் ஆயுதமேந்திய வீரர்களுடன் ஜெனரல் ரெஜினால்டு டயர் சுற்றி வளைத்தார்.
  • உயர்ந்த மதில்களுடன் அமைந்த அந்த மைதானத்துக்கு இருந்த ஒரே வாயில் பகுதியை ஆக்ரமித்த ஆயுதமேந்திய வீரர்கள் எந்தவித முன்னெச்சரிக்கையுமின்றி கண்மூடித்தனமாக சுடத்தொங்கினார்கள்.
  • துப்பாக்கிகளில் குண்டுகள் தீரும் வரை தொடர்ந்து 10 மணித்துளிகளுக்கு இந்தத் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர்; ஓராயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
  • ஆனால் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை ஓராயிரத்துக்கும் அதிகம் என்று தெரிவித்தது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு படைத்துறைச்சட்டம் அறிவிக்கப்பட்டு பஞ்சாப் குறிப்பாக, அமிர்தசரஸ் மக்கள் சவுக்கடி கொடுக்கப்பட்டு தெருக்களில் தவழவிடப்பட்டார்கள். இந்தக் கொடுமைகள் இந்தியர்களை கொதித்தெழச் செய்தது.
  • இரபீந்திரநாத் தாகூர் வீரத்திருமகன் (knighthood) என்ற அரசுப் பட்டத்தை திருப்பிக் கொடுத்தார். கெய்சர்-இ-ஹிந்த் பதக்கத்தை காந்தியடிகள் திருப்பிக் கொடுத்தார்.

இ) கிலாபத் இயக்கம்

  • 1918இல் முதலாவது உலகப்போர் முடிவுக்கு வந்தது. இசுலாமிய மதத்தலைவர் என உலகம் முழுவதும் போற்றப்பட்ட துருக்கியின் கலிபா கடுமையாக நடத்தப்பட்டார். அவருக்கு ஆதரவாக தோற்றுவிக்கப்பட்ட இயக்கமே கிலாபத் இயக்கம் என்றழைக்கப்பட்டது.
  • கலிபா அகத்துக்கு இருந்த அதிகாரம் மற்றும் பெருமைகளை நிலைநிறுத்தும் குறிக்கோளுடன் மௌலானா முகமது அலி மற்றும் மௌலானா சௌகத் அலி எனும் அலி சகோதரர்கள் தலைமையில் இவ்வியக்கம் நடந்தது.
  • இந்த இயக்கத்துக்கு ஆதரவளித்த காந்தியடிகள் இந்த இயக்கத்தை இந்து முஸ்லிம்களை இணைக்க இரு வாய்ப்பாகக் கருதினார். 1919ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தில்லியில் நடைபெற்ற அகில இந்திய கிலாபத் இயக்க மாநாட்டிற்கு அவர் தலைமையேற்றார்.
  • அல்லாஹூ அக்பர், வந்தே மாதரம், இந்து-முஸ்லிம் வாழ்க ஆகிய மூன்று தேசிய முழக்கங்களை முன்மொழிந்த சௌகத் அலியின் யோசனையை காந்தியடிகள் ஆதரித்தார்.
  • 1920 ஜூன் 9இல் அலகாபாத்தில் கூடிய கிலாபத் குழுவின் கூட்டம் காந்தியடிகளின் அகிம்சை மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தை ஏற்றுக்கொண்டது. ஒத்துழையாமை இயக்கம் 1920 ஆகஸ்டு முதல் நாள் தொடங்கியது.

ஒத்துழையாமை இயக்கமும் அதன் வீழ்ச்சியும்

1920 செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில்(அமர்வில்) இந்திய தேசிய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கியது. பின்னர் 1920 டிசம்பர் மாதம் சேலம் C.விஜயராகவாச்சாரியாரின் தலைமையில் நாக்பூரில் நடந்த அமர்வில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒத்துழையாமை இயக்கத் திட்டத்தின் கூறுகளாவன;

  1. பட்டங்கள் மற்றும் மரியாதை நிமித்தமான பதவிகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைப்பது.
  2. அரசின் செயல்பாடுகளில் ஒத்துழைக்காமலிருப்பது.
  3. நீதிமன்ற வழக்குகளில் வழக்குரைஞர்கள் ஆஜராகாமல் இருப்பது. நீதிமன்றத்தில் இருந்த வழக்குகளுக்கு தனியார் மத்தியஸ்தம் மூலமாகத் தீர்வு காண்பது.
  4. அரசுப் பள்ளிகளை குழந்தைகளும் அவற்றின் பெற்றோர்களும் புறக்கணிப்பது.
  5. 1919ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டப்பேரவைகளை புறக்கணிப்பது.
  6. அரசு விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் இதர அரசு விழாக்களில் பங்கேற்பதில்லை என்ற முடிவு.
  7. குடிமைப்பணி (சிவில்) அல்லது இராணுவப் பதவிகளை ஏற்க மறுப்பது.
  8. அந்நியப் பொருட்களின் புறக்கணிப்பு மற்றும் உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கம் தரும் சுதேசி இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்புவது.

அ) வரிகொடா இயக்கம் மற்றும் சௌரி சௌரா சம்பவம்

  • வரிகொடா இயக்கம் போன்ற பிரச்சாரத் திட்டங்கள் விவசாயிகளின் கவனத்தைக் கவர்ந்தன. 1922 பிப்ரவரி மாதம் பர்தோலியில் வரிகொடா இயக்க பிரச்சாரத்தை காந்தியடிகள் அறிவித்தார்.
  • இந்த இயக்கங்கள் ஒரு தேசியத் தலைவராக காந்தியடிகளின் நற்பெயரைப் பெரிதும் மேம்படுத்தின. குறிப்பாக விவசாயிகள் மத்தியில் ஒரு மாபெரும் தலைவராக அவரது மரியாதையை உயர்த்தின.
  • காந்தியடிகள் நாடுதழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அவர் பயணம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் அந்நியத் துணிகள் குவிக்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
  • ஆயிரக்கணக்கானவர்கள் அரசு வேலைகளைத் துறந்தனர், மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் தங்கள் கல்வியைக் கைவிட்டனர், பெருமளவிலான வழக்குரைஞர்கள் தங்கள் தொழில் பயிற்சியைக் கைவிட்டனர்.
  • ஆங்கிலேயப் பொருட்கள் மற்றும் நிறுவனங்கள் புறக்கணிப்புத் தீவிரமாக நடந்தது. வேல்ஸ் இளவரசரின் இந்தியப் பயணத்தை புறக்கணிப்பது வெற்றிகரமாக நடந்துமுடிந்தது.
  • இந்தப் புறக்கணிப்பில் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் தீவிரமாகப் பங்கேற்றனர். எனினும் சௌரி சௌரா நிகழ்வைத் தொடர்ந்து காந்தியடிகள் உடனடியாக இந்த இயக்கத்தைத் திரும்பப் பெற்றார்.
  • 1922 பிப்ரவரி 5ஆம் எநாள் தற்போதைய உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அருகே சௌரி சௌரா என்ற கிராமத்தில் தேசியவாதிகள் நடத்தியப் பேரணி காவல்துறையினரின் தூண்டுதலில் வன்முறையாக மாறியது.
  • தாம் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதை உணர்ந்த காவல்துறையினர் பாதுகாப்புக்காக தங்களை காவல்நிலையத்துக்குள் அடைத்துக் கொண்டனர். ஆனால் ஆத்திரம்கொண்ட கூட்டத்தினர் 22 காவலருடன் காவல்நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவலர்களும் உயிரிழந்தனர்.
  • காந்தியடிகள் உடனடியாக இயக்கத்தை திரும்பப்பெற்றார். இயக்கம் ஊக்கம் பெறுவதாகக் கருதிய ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற இளைய தலைவர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் விருப்பத்துக்கு மாறாக இந்த இயக்கம் திரும்பப் பெறப்பட்டது.
  • அப்போது கைது செய்யப்பட்ட காந்தியடிகள் பின்னர் 1924ஆம் ஆண்டு தான் விடுதலை செய்யப்பட்டார். அகிம்சை மற்றும் ஒத்துழையமை ஆகிய காரணங்களால் இயக்கம் தோல்வி காணவில்லை மாறாக போதுமான எண்ணிக்கையில் அவற்றில் பயிற்சி பெற்ற தலைவர்களும் தொண்டர்களும் இல்லாமல் போனதே காரணம் என்று காந்தியடிகள் நம்பினார்,
  • அதன் பிறகு விரைவில் துருக்கியில் இருந்த கலிபா அலுவலகம் மூடப்பட்டதையடுத்து கிலாபத் இயக்கமும் முடிவுக்கு வந்தது.

ஆ) சுயராஜ்ஜியக் கட்சியினர்

  • இதனிடையே காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. அவையாவன, மாற்றத்தை விரும்புவோர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பாதவர்கள் என இரண்டு பிரிவுகள் ஆகும்.
  • மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ் ஆகியோர் தலைமையிலான காங்கிரசார் தேர்தலில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும் என்று விரும்பினார்கள்.
  • சட்டப் பேரவைகளில் பங்கேற்று பணியாற்றுவதன் மூலம் மட்டுமே தேசநலன்கள் மேம்படும் என்றும் இரட்டை ஆட்சியில் பங்கேற்பதன் மூலம்தான் காலனி ஆதிக்க அரசை பாதிப்படைய வைக்க முடியும் என்றும் இரட்டை ஆட்சியில் பங்கேற்பதன் மூலம்தான் காலனி ஆதிக்க அரசை பாதிப்படைய வைக்க முடியும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.
  • அவர்களே மாற்றத்தை விரும்புவோர்கள் என்று அழைக்கப்பட்டனர். வல்லபாய் பட்டேல், சி.ராஜாஜி உள்ளிட்ட காந்தியடிகளைத் தீவிரமாகப் பின்பற்றிய பலர் மாற்றத்தை விரும்பாதவர்களாக அரசுடன் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடர விரும்பினார்கள்.
  • எதிர்ப்புக்கு இடையே மோதிலால் நேருவும் சி.ஆர். தாஸும் 1923 ஜனவரி முதல் நாள் சுயராஜ்ஜியக் கட்சியை தொடங்கினார்கள். இந்தக் கட்சி பின்னர் காங்கிரஸ் கட்சியின் சிறப்பு அமர்வில் அங்கீகரிக்கப்பட்டது.
  • ஆங்கிலேய இந்தியாவின் பேரரசு (இம்பீரியல்) சட்டப் பேரவை மற்றும் பல்வேறு மாகாண சட்டப்பேரவைகளுக்கு பெரும் எண்ணிக்கையில் சுயராஜ்ஜியக் கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • தேசியவாதக் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்ல அவர்கள் சட்டப்பேரவையை ஒரு மேடையாகப் பயன்படுத்தினார்கள். வங்காளத்தில் அரசுடன் ஒத்துழைக்க விரும்பாததால் இந்தியர்களுக்கு என மறுத்துவிட்டனர்.
  • காலனி அரசின் உண்மையான இயல்பை அவர்கள் வெளிக்கொணர்ந்தனர். எனினும் 1925 இல் அக்கட்சியின் தலைவர் சி.ஆர். தாஸ் மறைந்த பிறகு சுயராஜ்ஜிய கட்சி வீழ்ச்சி காணத் தொடங்கியது.
  • சுயராஜ்ஜிய கட்சி உறுப்பினர்கள் சிலர் அரசுப் பதவிகளை ஏற்கத் தொடங்கினர். 1926இல் சட்டப்பேரவைகளில் இருந்து சுயராஜ்ஜியக் கட்சி விலகிக் கொண்டது.
  • 1919ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மூலமாக இரட்டை ஆட்சி என்பது அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் மாகாண அரசின் அதிகாரங்கள் ஒதுக்கப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட துறைகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டது. நிதி வருவாய் மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகள் ஆங்கிலேயர்கள் வசம் ஒதுக்கப்பட்டன. மாற்றப்பட்ட துறைகளில் உள்ளாட்சி, கல்வி, பொதுசுகாதாரம், பொதுப்பணி, வேளாண்மை, வனங்கள் மற்றும் மீன்வளத்துறை ஆகியன இந்த்ய அமைச்சர்களின் கட்டுப்பாட்டின் கீழ் விடப்பட்டன. 1935ஆம் ஆண்டு மாகாண சுயாட்சி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இந்த முறை முடிவுக்கு வந்தது.

இ) காந்தியடிகளின் ஆக்கப்பூர்வத் திட்டம்

  • சௌரி சௌரா நிகழ்வுக்குப் பிறகு ஆர்வலர்களும் மக்களும் அகிம்சை போராட்டம் குறித்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று காந்தியடிகள் உணர்ந்தார்.
  • அதன் ஒருபகுதியாக காதி இயக்க மேம்பாடு, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்தினார். “உங்கள் மாவட்டங்களுக்குச் செல்லுங்கள். கதர், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு ஆகிய பற்றிய செய்திகளைப் பரப்புங்கள். இளைஞர்களை ஒன்றுதிரட்டி அவர்களை சுயராஜ்ஜியத்தின் உண்மையான வீரர்களாக உருமாற்றுங்கள்.” என்று காந்தியடிகள் காங்கிரசாருக்கு அறிவுறுத்தினார்.
  • காங்கிரஸ் உறுப்பினர்கள் கதர் உடுப்பதை அவர் கட்டாயமாக்கினார். அகில இந்திய நெசவாளர் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தக் குறிக்கோள்களை அடையாமல் சுயராஜ்ஜியத்தை அடைய முடியாது என்று காந்தியடிகள் உறுதியாக நம்பினார்.
  • கிலாபத் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றின் போது, இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் ஒத்துழைப்பு இருந்தபோதிலும் அந்த ஒற்றுமைப்பு இருந்தபோதிலும் அந்த ஒற்றுமை விரிசலடையக் கூடியதாகவே இருந்தது.
  • 1920களின் காலம் இந்துகள் மற்றும் முஸ்லிம்கள் இடையே தொடர்ச்சியான வகுப்பு மோதல்களை கண்ட காலகட்டமாகவே இருந்தது. இந்து மகாசபை பண்டித மதன் மோகன் மாளவியா தலைமையிலும், முஸ்லிம் லீக் அலி சகோதரர்கள் தலைமையிலும் பிரபலம் அடைந்து கொண்டிருந்தன.
  • வகுப்புவாத அரசியலில் ஈடுபட்ட இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் இதயங்களை ஈர்க்கும் வகையில் காந்தியடிகள் 1924இல் 21 நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.
  • இந்து முஸ்லிம் ஒற்றுமையின் மூலமாக மட்டுமே சுயராஜ்யம் சாத்தியப்படும் என்று அப்போதைக்கு நம்பிய முகம்மது அலி ஜின்னாவும் காந்தியடிகளும் மேற்கொண்ட தீவிரமுயற்சிகள் வகுப்புவாத கலவரங்களை அடியோடு அழிக்கத் தவறிவிட்டன.

ஈ) சைமன் குழு புறக்கணிப்பு

  • 1927 நவம்பர் 8ஆம் நாள் இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான இந்திய சட்டபூர்வ ஆணையத்தை (Indian Statutory Commission) நியமிப்பதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது. சர் ஜான் சைமன் தலைமையிலான இந்தக் குழுவில் ஏழு உறுப்பினர்கள் இடம்பெற்றனர். இது “சைமன் குழு” என்றே அழைக்கப்பட்டது.
  • இந்தியர்கள் எவரும் இடம்பெறாமல் அனைவரும் வெள்ளையர்களாக இந்தக் குழுவில் இடம்பெற்றனர். இந்தியர் ஒருவர் கூட உறுப்பினராக இல்லாத காரணத்தால் இந்தியர்கள் ஆத்திரமும் அவமானமும் அடைந்தனர்.
  • தங்கள் அரசியல் சாசனத்தை நிர்ணயிக்க தங்களுக்கு உரிமை இல்லாத நிலைகண்டு கொதித்தனர். காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்து இந்திய பிரிவுகளும் இந்த சைமன் குழுவினைப் புறக்கணிப்பது என முடிவு செய்தன.
  • இந்தக்குழு சென்ற இடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டங்களும், கருப்புக்கொடி ஏந்தியபடி ‘சைமனே திரும்பிப் போ’ எனும் முழக்கங்களும் இடம்பெற்றன. போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டனர்.
  • அவ்வாறு நடந்த ஒரு கடுமையான தாக்குதலில் லாலா லஜ்பத் ராய் மிக மோச்சமாக காயமடைந்து பின்னர் சில நாட்களில் உயிரிழந்தார்.

உ) நேரு அறிக்கை

  • இந்தியாவில் இருந்த பல்வேறு அரசியல் கட்சிகளை சைமன் குழு புறக்கணிப்பு ஒன்றிணைத்தது. சைமன் குழு முன்மொழிவுகளுக்கு மாற்றாக இந்தியாவுக்கு அரசியல் சாசனம் உருவாக்குவதை குறிக்கோளாகக் கொண்டு 1928இல் அனைத்துக் கட்சி மாநாடு நடைபெற்றது.
  • இந்தக் கொள்கைகளின் அடிப்படையில் அரசியல் சாசன வரைவுக்காக திட்டம் வகுக்க மோதிலால் நேரு தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டியின் அறிக்கை ‘நேரு அறிக்கை’ என்று அழைக்கப்பட்டது. அதில் பரிந்துரை செய்யப்பட்டவை:
  • இந்தியாவுக்கு தன்னாட்சிப் பகுதி என்ற டொமினியன் தகுதி.
  • மத்திய சட்டப் பேரவை மற்றும் மாகாண சட்டப் பேரவைகளுக்கு கூட்டு மற்றும் கலவையான வாக்காளர் தொகுதிகளுடன் தேர்தல் நடைபெறுவது.
  • மத்திய சட்டப் பேரவை மற்றும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ள மாகாண சட்ட பேரவைகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அதேபோல் இந்துக்களுக்கு அவர்கள் சிறுபான்மையினராக உள்ள வடமேற்கு எல்லை மாகாணத்தில் இடஒதுக்கீடு.
  • பொது வாக்களிப்பு முறையும் அடிப்படை உரிமைகளும் வழங்கப்படுவது.
  • மத்திய சட்டப்பேரவையில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஜின்னா சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தார். மூன்றில் ஒருபங்கு இடங்கள் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார்.
  • அவரை ஆதரித்த தேஜ் பஹதூர் சாப்ரூ இது பெரும் மாற்றத்தைத் தராது என்று வேண்டினார். எனினும் அதுவும் நிராகரிக்கப்பட்டது.
  • இந்து-மூஸ்லிம் ஒற்றுமையின் தூதராக பாராட்டப்பட்ட ஜின்னா பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு முஸ்லிம்களுக்கு தனிநடு என வலியுறுத்த ஆரம்பித்தார்.

முழுமையான சுயராஜ்ஜியத்துக்கான போராட்டம் மற்றும் சட்டமறுப்பு இயக்கத் தொடக்கம்

  • இதனிடையே டொமினியன் எனப்படும் தன்னாட்சிப் பகுதி குறித்து திருப்தி அடையாத காங்கிரசார் சிலர், முழுமையான சுதந்திரம் வேண்டி கோரிக்கை வைத்தனர்.
  • 1929இல் டிசம்பர் மாதம் லாகூரில் ஜவகர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் அமர்வு நடந்தது. அதில் முழுமையான சுதந்திரம் என்பது இலக்காக அறிவிக்கப்பட்டது.
  • வட்டமேசை மாநாட்டை புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டதுடன் , சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது. 1930 ஜனவரி 26ஆம் நாள் சுதந்திரத் திருநாளாக அறிவிக்கப்பட்டு வரிகொடா இயக்கம் உள்ளிட்ட சட்டமறுப்பு இயக்கம் மூலமாகவும் வன்முறையற்ற முறையில் முழுமையான சுதந்திரத்தை அடைவது குறித்தும் நாடு முழுவதும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த இயக்கத்தைத் தொடங்க இந்திய தேசிய காங்கிரஸ் காந்தியடிகளுக்கு அங்கீகாரம் அளித்தது.

அ) உப்பு சத்தியாகிரகம்

1930 ஜனவரி 31ஆம் நாளுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற காலக்கெடுவுடன் அரசப்பிரதிநிதி (வைசிராய்) இர்வின் பிரபுவிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது. அவை கீழ்க்கண்டவையாகும்.

  • ராணுவம் மற்றும் ஆட்சிப்பணி சேவைகளுக்கான செலவுகளை 50 சதவிகிதம் வரை குறைப்பது.
  • முழுமையான புறக்கணிப்பை அறிமுகம் செய்வது.
  • அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வது.
  • நிலவருவாயை 50 சதவிகிதமாக குறைப்பது.
  • உப்பு வரியை ரத்துசெய்வது.
  • கோரிக்கை மனுவுக்கு அரசப்பிரதிநிதி பதில் தெரிவிக்காத நிலையில் காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கினார். உப்பு மீதான வரியை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒரு அறிவுபூர்வமான முடிவாகும்.
  • சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் பாதிக்கும் விஷயமாக உப்பு இருந்தது. பெண்கள் உட்பட அனைத்துப் பிரிவு மக்களும் பங்கேற்று சட்டமறுப்பு இயக்கத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினார்.
  • காந்தியடிகள் 1930 மார்ச் மாதம் 12ஆம் நாள் 78 பேர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தனது புகழ்பெற்ற தண்டி யாத்திரையைத் தொடங்கினார். இந்த யாத்திரையில் நூற்றுக்கணக்கானோர் சேரச்சேர அது நீண்டுகொண்டே போனது.
  • காந்தியடிகள் தனது 61ஆவது வயதில் 24 நாட்களில் 241 மைல் தொலைவு யாத்திரையாக நடந்து சென்று 1930 ஏப்ரல் 5ஆம் நாள் மாலை தண்டி கடற்கரையை அடைந்தார். அடுத்த நாள் காலை ஒரு கைப்பிடி உப்பைக் கையில் எடுத்து உப்புச்சட்டத்தை மீறினார்.

மாகாணங்களில் உப்பு சத்தியாகிரகம்

  • தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் இருந்து வேதாரண்யம் வரை இதேபோன்ற ஒரு யாத்திரையை சி.ராஜாஜி மேற்கொண்டார். கேரளா, ஆந்திரா மற்றும் வங்காளத்திலும் உப்பு சத்தியாகிரக யாத்திரை நடந்தன.
  • வடமேற்கு எல்லை மாகாணத்தில் கான் அப்துல் கஃபார்கான் என்பவர் இந்த இயக்கத்திற்குத் தலைமை ஏற்றார்.
  • செஞ்சட்டைகள் என்றழைக்கப்பட்ட ‘குடைகிட்மட்கர்’ இயக்கத்தை அவர் நடத்தினார். இந்த இயக்கத்தை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியதில் பலர் பாதிப்படைந்தனர்.
  • ஆயுதம் ஏந்தாத சத்தியாகிரகிகள் மீது தாக்குதல் நடத்த கட்வாலி படையணியின் வீரர்கள் மறுத்துவிட்டனர்.
  • காந்தியடிகள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். ஜவஹர்லால் நேரு, கான் அப்துல் கான் மற்றும் இதர தலைவர்கள் விரைவாக கைதானார்கள்.
  • அந்நிய துணிகள் புறக்கணிப்பு, மதுக்கடைகள் முன் ஆர்ப்பாட்டங்கள், வரி கொடா இயக்கம், வனச்சட்டங்களை பின்பற்ற மறுப்பது ஆகியன உள்ளிட்ட பல ஆர்ப்பாட்ட வடிவங்கள் பின்பற்றப்பட்டன.
  • பெண்கள், விவசாயிகள், பழங்குடியினர், மாணவர்கள் மற்றும் குழந்தைகளும் என சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களும் நாடு தழுவிய போராட்டத்தில் பங்கேற்றனர்.
  • இந்தியா சந்தித்த மக்கள் இயக்கங்களிலேயே இது மிகப்பெரியது. 90,000க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.
  • காந்தியடிகள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். ஜவர்கர்லால் நேரு, கான் அப்துல் கஃபார் கான் மற்றும் இதர தலைவரகள் விரைவாக கைதானார்கள்.
  • அந்நிய துணிகள் புறக்கணிப்பு , மதுக்கடைகள் முன் ஆர்ப்பாட்டங்கள், வரி கொடா இயக்கம், வனச்சட்டங்களை பின்பற்ற மறுப்பது ஆகியன உள்ளிட்ட பல ஆர்ப்பாட்ட வடிவங்கள் பின்பற்றப்பட்டன.
  • பெண்கள் , விவசாயிகள், பழங்குடியினர், மாணவர்கள் மற்றும் குழந்தைகளும் என சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களும் நாடு தழுவிய போராட்டத்தில் பங்கேற்றனர்.
  • இந்தியா சந்தித்த மக்கள் இயக்கங்களிலேயே இது மிகப் பெரியது. 90,000 க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.
  • ஆங்கிலேயர்கள் 1865ஆம் ஆண்டு, முதலாவது வனச்சட்டத்தை நிறைவேற்றினார்கள். சுள்ளி எடுப்பது, கால்நடைத் தீவனம் மற்றும் தேன், விதைகள், மருத்துவ மூலிகைகள், கொட்டைகள் ஆகிய சிறிய அளவிலான வன உற்பத்திப் பொருட்களையும் வனப்பகுதிகளில் இருந்து சேகரிக்க இந்தச் சட்டம் வனத்தில் வாழ்வோருக்கு தடைவிதித்தது.
  • 1878ஆம் ஆண்டின் இந்திய வனங்கள் சட்டத்தின்படி வனங்களின் உரிமை அரசிடம் இருந்தது. நன்செய் மற்றும் தரிசு நிலங்களும் வனங்களாக கருதப்பட்டன.
  • பழங்குடியினர் பயன்படுத்திய சுழற்சிமுறை விவசாயம் தடைசெய்யப்பட்டது. உள்ளூர் மக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வனப்பகுதிகளை தள்ளி வைப்பதற்கு பாதிக்கப்பட்ட ஆதிவாசிகளும் தேசியவாதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • பழங்குடியினர் நடத்திய தொடர் ஆர்ப்பாட்டங்களுக்கு மிக முக்கிய ஆதாரமாக ராம்பாவில் அல்லூரி சீதாராம ராஜு தலைமையிலான ஆர்ப்பாட்டத்தைக் குறிப்பிடலாம்.
  • கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்த (விசாகப்பட்டினம் மற்றும் கோதாவரி மாவட்டங்களைச் சேர்ந்த) ஆதிவாசி பகுதிகளை தனது இல்லமாக கருதிய அவர் அங்கிருந்து ஆதிவாசிகளுக்காக உழைத்தார்.
  • அல்லூரி சீதாராம ராஜு அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதிவாசிகள் கடுமையான வறுமையில் வாடினார்கள். மான்யம் (என்றழைக்கப்பட்ட வனப்பகுதியில்) காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளால் அவர்கள் துன்புறுத்தப்பட்டனர்.
  • ராம்பா பகுதி ஆதிவாசிகளின் நலன் காப்பதற்காக ஊழல் அதிகாரிகளுடன் அல்லூரி சீதாராம ராஜு போராடியதால் அவரது உயிரைக் குறிவைத்து ஆங்கிலேய அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.
  • ராம்பா ஆதிவாசிகளின் கிளர்ச்சியை அடக்குவதற்காக (1922 -24) மலபார் காவல்துறையின் சிறப்புக்குழு அனுப்பி வைக்கப்பட்டது. வனவாசிகளின் நலனுக்காகப் போராடிய அல்லூரி சீதாராம ராஜு தியாகி ஆனார்.

ஆ) வட்டமேசை மாநாடு

  • இந்த இயக்கத்தின் மத்தியில் 1930ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லண்டனில் முதலாவது வட்ட மேசை மாநாடு நடந்தது. பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு மாகாண சுயாட்சியுடன் கூடிய மத்திய அரசு பற்றிய யோசனையை அறிவித்தார்.
  • சிறுபான்மையினருக்கு தனித்தொகுதிகள் வழங்குவது குறித்த பிரச்சனையில் சிக்கல் நீடித்தது. காங்கிரசின் தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தால் இந்த வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளவில்லை. இந்தப் பிரச்சனை குறித்து எந்தவித முடிவும் எட்டப்படாமலேயே மாநாடு நிறைவடைந்தது.
  • காங்கிரஸ் பங்கேற்பின்றி விவாதங்கள் நடத்துவதால் எந்தவொரு பயனும் இல்லை என்பது தெளிவானது. நிபந்தனையின்றி காந்தியடிகள் விடுதலை செய்யப்பட்டார்.

இ) காந்தி – இர்வின் ஒப்பந்தம்

  • காந்தியடிகளுடன் அரசப் பிரதிநிதி இர்வின் பிரபு பேச்சுவார்த்தைகளை நடத்தியதையடுத்து 1931 மார்ச் 5ஆம் நாள் காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது.
  • வன்முறையில் ஈடுபடாத அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்வது, கைப்பற்றப்பட்ட நிலத்தைத் திரும்பத் தருவது, பதவி விலகிய அரசு ஊழியர்கள் விஷயத்தில் நீக்குபோக்காக நடந்துகொள்வது ஆகிய கோரிக்கைகளை ஆங்கிலேய அரசு ஏற்றுக்கொண்டது.
  • கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பயன்பாட்டுக்காக உப்புக் காய்ச்சவும் வன்முறை இல்லாமல் ஆர்ப்பாட்டங்கள் செய்யவும் இந்த ஒப்பந்தம் வகை செய்தது.
  • சட்டமறுப்பு இயக்கத்தை ரத்து செய்துவிட்டு இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டது.
  • 1931 செப்டம்பர் 7ஆம் நாள் நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் கலந்துகொண்டார். சிறுபான்மையினருக்கு தனித்தொகுதிகள் வழங்குவதை காந்தியடிகள் ஏற்கவில்லை. இதன் விளைவாக, இரண்டாவது வட்டமேசை மாநாடு எந்தவித முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.

ஈ) சட்டமறுப்பு இயக்கத்திற்கு புத்துயிரூட்டல்

  • இந்தியா திரும்பிய பிறகு காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிரூட்டினார். இந்தமுறை அரசு எதிர்ப்பை சமாளிக்க ஆயத்தமாக இருந்தது.
  • படைத்துறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு 1932 ஜனவரி 4ஆம் நாள் காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். விரைவில் அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
  • ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மறியல் செய்த மக்கள் படைகொண்டு அடக்கப்பட்டனர். நான்கு மாத காலத்துக்குள் சுமார் 80,000 மக்கள் கைது செய்யப்பட்டனர். தேசியவாத ஊடகம் முழுமையாக மூடப்பட்டது.
  • அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளையும் மீறி இந்த இயக்கம் 1934 ஏப்ரல் மாதம் வரை நீடித்தது என்பதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.
  • இதனிடையே, 1932 ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் நாள் முதல் டிசம்பர் 24ஆம் நாள் வரை மூன்றாவது வட்டமேசை மாநாடு நடத்தப்பட்டது. சட்டமறுப்பு இயக்கத்திற்கு புத்துயிரூட்டியதால் காங்கிரஸ் கட்சி இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.

உ) வகுப்புவாரி ஒதுக்கீடு மற்றும் பூனா ஒப்பந்தம்

  • 1932 ஆகஸ்டு 16ஆம் நாள் வகுப்புவாரி ஒதுக்கீட்டை ராம்சே மெக்டொனால்டு அறிவித்தார். முஸ்லிம்கள், சீக்கியர்கள், இந்திய கிறித்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் பெண்கள் மற்றும் ‘ஒடுக்கப்பட்ட வகுப்பினர்’ என சிறுபான்மையினருக்கு தனித்தொகுதிகள் இது வழங்கியது.
  • ஒடுக்கப்பட்ட வகுப்பினரை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்ப்பதை காந்தியடிகள் வலுவாக எதிர்த்தார். இது இந்துக்கள்ன் இடையே பிளவை ஏற்படுத்துவதோடு, இந்துக்களை விட ஒடுக்கப்பட்ட வகுப்பினர் தனித்து அடையாளம் காணப்படுவதால் தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரத்தை அர்த்தமில்லாதது ஆக்கிவிடும் என்று காந்தியடிகள் வாதிட்டார். எனினும் தொகுதிகள் ஒதுக்கீட்டை அவர் ஆதரித்தார்.
  • ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராகிய B.R. அம்பேத்கர், தமது கருத்துப்படி தனித்தொகுதிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் பிரதிநித்துவம் மற்றும் அதிகாரத்தை வழங்கும் என்று வாதிட்டார்.
  • 1932 செப்டம்பர் 20ஆம் நாள் காந்தியடிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் ஒதுக்கீட்டிற்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் போராட்டத்தை தொடங்கினார்.
  • மதன் மோகன் மாளவியா, ராஜேந்திர பிரசாத் மற்றும் பல தலைவர்கள் B.R.அம்பேத்கார் மற்றும் M.C.ராஜா மற்றும் இதர ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.
  • தீவிரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் இடையே ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டது. இதுவே பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.

அதன் முக்கிய விதிமுறைகள்

  • தனித்தொகுதிகள் பற்றிய கொள்கைகள் கைவிடப்பட்டன. மாறாக, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் கூட்டுத்தொகுதிகள் பற்றிய யோசனை ஏற்கப்பட்டது.
  • ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71 லிருந்து 148 ஆக அதிகரிக்கப்பட்டது. மத்திய சட்டப் பேரவையில் 18 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டன.

ஊ) தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரம்

  • அடுத்த சில ஆண்டுகள் தீண்டாமையை ஒழிப்பதற்கு காந்தியடிகள் செலவிட்டார். அம்பேத்கர் உடனான அவரது தொடர்புகள் சாதி அமைப்புகள் பற்றிய காந்தியடிகளின் கருத்துக்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • அவர் தமது இருப்பிடத்தை வார்தாவில் இருந்த சத்தியாகிரக ஆசிரமத்துக்கு மாற்றினார். அரிஜனர்களுக்கான பயணம் என்ற நாடுதழுவிய பயணத்தை காந்தியடிகள் மேற்கொண்டார்.
  • அரிஜனர் சேவை சங்கத்தை அமைத்து சமூகத்திலுள்ள பாரபட்சங்களை முழுமையாக அவர் அகற்றுவதற்கு பணியாற்றத் தொடக்கினார்.
  • கல்வி, சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தவும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே மதுப் பழக்கத்தை கைவிடவும் அவர் பணியாற்றினார்.
  • இதற்காக 1933இல் இரண்டு உண்ணாவிரதங்களை மேற்கொண்டார். கோயில் நுழைவுப் போராட்டம் என்பது இந்தப் பிரச்சாரத்தின் முக்கியமான பகுதியாகும்.
  • 1933 ஜனவரி 8ஆம் நாள் ‘கோவில் நுழைவு நாள்’ என அனுசரிக்கப்பட்டது. அவரது பிரச்சாரம் ஆச்சாரமான இந்துக்களின் கோபத்தை ஈட்டியது அவரது வாழ்க்கையைக் குறிவைத்து உண்மையை மூடிமறைக்க உயர்வகுப்பு இந்துக்கள் முயற்சி மேற்கொண்டனர்.
  • ஆனால் அவரது இயக்கத்தை இந்த நடவடிக்கைகள் பாதிக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர் இடையேயான அவரது பணிகள் தேசியவாதமென்ற செய்தியை அடிமட்ட நிலைக்கு கொண்டு சென்றது.

சமதர்மவாத (சோஷியலிஸ்ட்) இயக்கங்களின் தொடக்கங்கள்

  • 1917ஆம் ஆண்டின் ரஷ்யப் புரட்சியால் ஈர்க்கப்பட்ட இந்திய பொதுவுடைமை (கம்பூனிஸ்டு) கட்சி (CPI), 1920 அக்டோபர் மாதம் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நிறுவப்பட்டது.
  • M.N.ராய், அபானி முகர்ஜி , M.P.T.ஆச்சார்யா ஆகியோர் அதன் நிறுவன உறுப்பினர்களாவர்.
  • 1920களில் அடுத்தடுத்து வழக்குகளைத் தொடுத்து கம்யூனிச இயக்கத்தை அடக்குவதற்கு இந்தியாவில் இருந்த ஆங்கிலேய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
  • மேலும் கம்யூனிசம் தொடர்பான அச்சுறுத்தலை அடக்கும் மற்றொரு முயற்சியாக M.N.ராய், S.A.டாங்கே, முசாஃபர் அஹமது, M.சிங்காரவேலர் ஆகிய தலைவர்கள் கைது செய்யப்பட்டதோடு, 1924-ஆம் ஆண்டின் கான்பூர் சதித்திட்ட வழக்கிலும் விசாரிக்கப்பட்டனர்.
  • “இந்தியாவை பிரிட்டனின் அரசாட்சியில் இருந்து முழுமையாகப் பிரித்து இந்தியாவின் மீதான தனது இறையாண்மையை பிரிட்டிஷ் மன்னர் கைவிடச் செய்யும்’ பணிகளில் ஈடுபட்டதாக கம்யூனிசத் தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அ) பொதுவுடைமை (கம்யூனிச) கட்சி நிறுவப்படுதல்

  • தங்கள் கருத்துக்களை பரப்பவும், ‘இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் உண்மையான முகத்தை’ எடுத்துக்காட்டவும் பொதுவுடைமைவாதிகள் இதனை ஒரு மேடையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
  • ஒரு கட்சியை ஆரம்பிக்கும் முயற்சியாக 1925ஆம் ஆண்டு கான்பூரில் அகில இந்திய பொதுவுடைமை மாநாடு நடந்தது. அதில் சிங்காரவேலர் தலைமை உரையாற்றினார். இந்திய மண்ணில் இந்திய பொதுவுடைமை கட்சியை ஆரம்பிக்க அது வழியமைத்தது.
  • ‘தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின்’ அமைப்புகளை இந்தியாவின் பலபகுதிகளில் பொதுவுடைமைவாதிகள் உருவாக்கினார்கள். 1920களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
  • அவர்களது பல்வேறு முயற்சிகளின் பலனாக ‘அகில இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி’ 1928ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • 1929ஆம் ஆண்டு மீரட் சதித்திட்ட வழக்கு காரணமாக இந்த திசையில் முன்னேற்றம் தடைபட்டது.
  • முசாஃபர் அஹமது, S.A. டாங்கே, S.V.காட்டே, டாக்டர்.G.அதிகாரி, P.C.ஜோஷி, S.S. மிராஜ்கர், ஷௌகத் உஸ்மானி, பிலிப் ஸ்டிராட் மற்றும் இதர இருபத்துமூன்று நபர்கள் ரயில்வே துறையில் வேலைநிறுத்தம் செய்ததற்காக கைது செய்யப்பட்டனர். இந்தியாவில் ஆங்கிலேய அரசைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆ) புரட்சிகர நடவடிக்கைகள்

  • ஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் திடீரென திரும்பப்பெற்றதால் குழப்பமடைந்த இளைஞர்கள் வன்முறையைக் கையில் எடுத்தனர். காலனி ஆட்சியை ஆயுதக்கிளர்ச்சி மூலம் அகற்றும் நோக்கில் 1924இல் இந்துஸ்தான் குடியரசு ராணுவம் (HRA) கான்பூரில் உருவாக்கப்பட்டது.
  • 1925ஆம் ஆண்டு ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபாகுல்லா கான் மற்றும் பலர் லக்னோ அருகே காகோரி என்ற கிராமத்தில் அரசுப்பணத்தை கொண்டுச்சென்ற ஒரு ரயில்வண்டியை நிறுத்திக் கொள்ளையடித்தனர்.
  • அவர்கள் காகோரி சதி வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்களில் நான்கு பேருக்கு மரணதண்டனையும் மற்றவர்களுக்குப் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டன.
  • பஞ்சாபில் பகத்சிங், சுக்தேவ் மற்றும் அவர்களது தோழர்கள் இந்துஸ்தான் குடியரசு ராணுவத்தை மீண்டும் அமைத்தனர். பொதுவுடைமை கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அந்த அமைப்புக்கு இந்துஸ்தான் சமதர்மவாத குடியரசு அமைப்பு என்று 1928இல் பெயர் மாற்றம் செய்தனர்.
  • லாலா லஜ்பதி ராயின் உயிரிழப்புக்குக் காரணமான தடியடியை நடத்திய ஆங்கிலேய காவல்துறை அதிகாரி சாண்டர்ஸ் படுகொலை செய்யப்பட்டார். 1929இல் மத்திய சட்டப் பேரவையில் புகைக்குண்டு ஒன்றை பகத்சிங்கும் B.K.தத்தும் வீசினார்கள்.
  • எவரையும் காயப்படுத்தும் நோக்கில் அந்தகுண்டு எறியப்படவில்லை. துண்டுப்பிரசுரங்ஜளை வீசிஎறிந்த அவர்கள் “இன்குலாப் ஜிந்தாபாத்” “பாட்டாளி வர்க்கம் வாழ்க” ஆகிய முழக்கங்களை எழுப்பினார்கள்.
  • ராஜகுருவும் பகத்சிங்கும் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. பகத்சிங்கின் அசாத்தியமான துணிச்சல் இந்தியா முழுவதும் வாழ்ந்த இளைஞர்களின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து அவர் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார்.
  • காந்தி-இர்வின் பேச்சுக்களின் போது பகத்சிங் மற்றும் ராஜகுருவின் வழக்கையும் சேர்க்க வேண்டும் என்று விரிவான கோரிக்கை எழுந்தது. மரணதண்டனையைக் குறைக்க அரசப்பிரதிநிதி மறுத்து விட்டார்.
  • 1930 ஏப்ரலில் சிட்டகாங் ஆயுதக்கிடங்கு மீதான தாக்குதல் சூர்யா சென் மற்றும் அவரது நண்பர்களால் மேற்கொள்ளப்பட்டது.
  • சிட்டகாங்கில் இருந்த ஆயுதக் கிடங்குகளைக் கைப்பற்றிய அவர்கள் அங்கு புரட்சிகர அரசை நிறுவினார்கள். அரசு நிறுவனங்களைக் குறிவைத்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர்களை தாக்குதல்களை நடத்தினார்கள். 1933ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சூர்யா சென் ஓராண்டுக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டார்.

இ) 1930களில் இடதுசாரி இயக்கங்கள்

  • உலகம் முழுவதும் நிலவிய பொருளாதார மந்தநிலை உருவாக்கிய பொருளாதார நெருக்கடிகளை அடுத்து, 1930களில் இந்திய பொதுவுடைமைக் கட்சி வலுப்பெற்றது.
  • பிரிட்டனில் இருந்த மந்தநிலை அதன்கீழ் இருந்த காலனிகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக வர்த்தக லாபங்களிலும் வேளாண் பொருட்களின் விலைகளிலும் சரிவு ஏற்பட்டன.
  • ஏற்கனவே சரிந்திருந்த வேளாண் பொருட்களின் ஐம்பது சதவிகித விலை வீழ்ச்சி காரணமாக கட்டாயமாக செய்யப்பட்ட அரசின் நிலவருவாய் வசூல் இருமடங்காக அதிகரித்தது.
  • பணப்புழக்கத்தில் இருந்த பணம் திரும்பப் பெறப்படுவது, வளர்ச்சிப் பணிகளுக்கான பணியாளர்கள் எண்ணிக்கையும் செலவுகளையும் குறைப்பது ஆகியன அரசின் இதர நடவடிக்கைகளாக இருந்தன.
  • இந்தச்சூழலில் வருவாய்ப் மற்றும் ஊதியக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றுக்காகப் போராடிய பொதுவுடைமை கட்சி முக்கியத்துவம் பெற்றதையடுத்து 1934ம் ஆண்டு அக்கட்சிதடை செய்யப்பட்டது.
  • தீவிர இடதுசாரி ஆதரவு முதல் தீவிர வலதுசாரி ஆதரவு வரையான அகன்ற அரசியல் சார்பு பெற்ற ஓர் இயக்கமாக சுயராஜ்ஜியம் என்ற குறிக்கோளுடன் காங்கிரஸ் கட்சி வலுவான மைப்பாக உருவெடுத்தது.
  • 1930களில் காங்கிரஸ் இடது மற்றும் வலதுசாரி சித்தாந்தங்கள் இடையே எப்போதும் சண்டை இருந்துகொண்டே இருந்தது.
  • 1934ஆம் ஆண்டில் ஜெயப்பிரகாஷ்நாராயண், ஆச்சார்ய நரேந்திரதேவ் மற்றும் மினுமசானி ஆகியோரின் முன்முயற்சியால் காங்கிரஸ் சமதர்ம (சோஷலிஷ) கட்சி உருவானது.
  • தேசியவாதம் தான் சமதர்மத்துக்கான பாதை என்று நம்பிய அவர்கள் அதற்காக காங்கிரசுக்குள் இருந்து உழைக்க விரும்பினார்கள். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவு கட்சியாக காங்கிரஸ் கட்சியை மாற்ற அவர்கள் பணியாற்றினார்கள்.
  • ஒருசிலர் அதிகாரத்துக்கு வருவதால் உண்மையான சுயராஜ்ஜியம் கிடைத்துவிடாது, ஆனால் தாங்கள் பெற்ற அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தப்படும்போது நிர்வாகத்தினரை எதிர்க்கும் திறனை அனைவரும் பெறச்செய்வதே சுயராஜ்ஜியமாகும்.
  • காந்தியடிகள்

1935ஆம் ஆண்டுஇந்திய அரசுச் சட்டத்தின் கீழ் அமைந்த முதல் காங்கிரஸ் அமைச்சரவைகள்

  • சட்டமறுப்பு இயக்கத்தின் ஆக்கப்பூர்வ வெளிப்பாடுகளில் 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டமும் ஒன்றாகும். மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம், மத்தியில் இரட்டையாட்சி ஆகியன இந்தச்சட்டத்தின் உக்கிய அம்சங்களாகும்.
  • அகில இந்திய கூட்டமைப்பு ஏற்பட வேண்டும் என்று இந்த சட்டம் வலியுறுத்துகிறது. அதன்படி , 11 மாகாணங்கள், 6 தலைமை ஆணையரக மாகாணங்கள் மற்றும் இந்தக் கூட்டமைப்பில் இடம்பெற்றன.
  • மாகாணக்களின் தன்னாட்டசிக்கும் இந்த சட்டம் வகைசெய்தது. அனைத்து துறைகளும் இந்திய அமைச்சர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன.
  • மாகாணங்களில் நடைமுறையில் இருந்து வந்த இரட்டை ஆட்சி மத்திய அரசுக்கும் விரிவாக்கப்பட்டது. வாக்குரிமையானது சொத்தின் அடிப்படையில் நீட்டிக்கப்பட்டதால் மக்கள் தொகையில் பத்து சதவிகித மக்கள் மட்டுமே வாக்களிக்கும் தகுதிபெற்றனர். இந்தச் சட்டத்தின்படி, பர்மா இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டது.

அ) காங்கிரஸ் அமைச்சரவைகளும் அவற்றின் பணியும்

  • 1937ஆம் ஆண்டு தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதுடன் 1935ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. சட்டமறுப்பு இயக்கத்தால் காங்கிரஸ் பெரிதும் பலன்பெற்றது.
  • சட்டப்பேரவை புறக்கணிப்பைக் கைவிட்ட காங்கிரஸ் தேர்தல்களில் போட்டியிட்டது. பதினோரு மாகாணங்களில் போட்டியிட்டு ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது.
  • மதராஸ், பம்பாய், மத்திய மாகாணங்கள், ஒடிசா, பீகார், ஐக்கிய மாகாணங்கள், வடமேற்கு எல்லை மாகாணம், சர் முஹம்மது சாதுல்லா தலைமையிலான அசாம் பள்ளத்தாக்கு முஸ்லிம் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசு உட்பட எட்டு மாகாணங்களில் அது ஆட்சி அமைத்தது.
  • காங்கிரஸ் அரசுகள் பிரபலமான அரசுகளாக செயல்பட்டன. மக்களின் தேவைகளை அவை நிறைவேற்றின. அமைச்சர்களின் ஊதியம் மாதம் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 500 ரூபாயாக குறைக்கப்பட்டது.
  • தேசியவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட முந்தைய நடவடிக்கைகள் ரத்துசெய்யப்பட்டன. அரசிடம் அவசரகால அதிகாரங்களை தந்த சட்டங்களை அவர்கள் திரும்பப் பெற்றனர்.
  • கம்யூனிஸ்ட் கட்சி தவிர இதர கட்சிகள் மீது விதிக்கப்பட்ட தடைகளை ரத்துசெய்தனர். தேச அளவில் பத்திரிக்கைகள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அவர்கள் அகற்றிவிட்டனர்.
  • காவல்துறை அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. அரசியல் பேச்சுக்கள் பற்றி சி.ஐ.டி. சார்பாக அறிக்கை தருவது விலக்கிக் கொள்ளப்பட்டது. விவசாயிகளின் கடன்கள் குறையவும் தொழிலக தொழிலாளர்களின் பணிநிலைமை மேம்படவும் சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • கோயில் நுழைவுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கல்வி மற்றும் பொது சுகாதாரத்துக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.

ஆ) காங்கிரஸ் அமைச்சரவையின் பதவி விலகல்

  • 1939இல் இரண்டாம் உலகப்போர் மூண்டது. காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் கூட்டணிப் படைகள் சார்பாக இந்த போரில் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு நுழைந்தது. எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகின. முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையை உறுதியுடன் வலியுறுத்தும்படி லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய ஜின்னா 1934ஆம் ஆண்டு முஸ்லும் லீக்கிற்கு புத்துயிர் ஊட்டினார்.
  • காங்கிரஸ் அமைச்சரவைகளை கடுமையாக விமர்சித்தவர்களில் ஜின்னாவும் ஒருவர். காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகிய நாளை ‘மீட்பு நாள்’ என்று அறிவித்தார். சுதந்திர இந்தியாவில் தங்களது அனைத்து அரசியல் அதிகாரங்களையும் முஸ்லிம்கள் இந்துக்களிடம் இழந்துவிடுவர் என்று வாதிட்ட அவர் 1940ஆம் ஆண்டு வாக்கில் முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இ) இரண்டாம் உலகப் போரின் போது தேசிய இயக்கம், 1939 – 45

  • காந்தியடிகளின் வேட்பாளரான பட்டாபி சீதாராமய்யாவை வீழ்த்தி 1939இல் சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவரானார். காந்தியடிகள் ஒத்துழைக்க மறுத்ததை அடுத்து, சுபாஷ் சந்திர போஸ் அப்பதவியிலிருந்து விலகி பார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார்.
  • இரண்டாம் உலகப்போரினை ஏகாதிபத்திய போர் என்று அழைத்த பொதுவுடைமைவாதிகள் ஆரம்பத்தில் அதை எதிர்த்தனர். எனினும் நாஜிக்கள் சோவியத் யூனியன் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து அதனை ‘மக்களின் போர்’ என்று பொதுவுடைமைவாதிகள் அழைத்ததோடு பிரிட்டிஷாருக்கு ஒத்துழைப்பு நல்கினார்கள். அதன்முடிவாக, 1942இல் பொதுவுடைமை கட்சி மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்து வகுப்புவாதம், முஸ்லிம் வகுப்புவாதம் மற்றும் இந்திய தேசியம்

  • காங்கிரஸை ஒரு இந்து அமைப்பு என்று குறைகூறிய முஸ்லிம் லீக், இந்தியாவில் முஸ்லிம்களின் ஒரேயொரு பிரதிநிதியாக தாம்மட்டுமே விளங்குவதாக அது தெரிவித்தது.
  • அதே போன்று இந்துமகா சபா மற்றும் ராஷ்டிரிய சுவயம் சேவக் சங் (R.S.S) ஆகியன முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் நலன்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை மற்றும் எதிரானவை என்று இந்து மகா சபையும் முஸ்லிம் லீக்கும் கோரின.
  • ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கையின் சில நடவடிக்கைகளான வங்கப் பிரிவினை, தனித் தொகுதிகள் ஆகியவை மத வேறுபாடுகளைத் தூண்டி தங்கள் நலன்களைப் பாதுகாக்கும் செயல்களுக்கு ஊக்கம் கொடுத்தன.
  • கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவரான ரஹ்மத் அலி 1933இல் பஞ்சாப், காஷ்மீர், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து மற்றும் பலுச்சிஸ்தான் ஆகிய மாகாணங்களை இணைத்து பாகிஸ்தானை உருவாக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தினார்.
  • இந்து –முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்து வந்த முஹம்மது இக்பால் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்.
  • இந்திய தேசியத்தை வலியுறுத்திவந்த காந்தியடிகள், நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் இதர தலைவர்கள் நாட்டை இரண்டாகப் பிரிக்கும் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு வழிவகுத்த நடவடிக்கைகள்

அ) தனி நபர் சத்தியாகிரகம்

  • 1940 ஆகஸ்டு மாதம், காங்கிரஸ் இரண்டாம் உலகப்போரின் போது இந்தியர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அரசப்பிரதிநிதி லின்லித்கோ ஒரு சலுகையை வழங்க முன்வந்தார். எனினும் குறிப்பிடப்படாத எதிர்காலத்தில் தன்னாட்சி (டொமினியன்) தகுதி சலுகை, காங்கிரசுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. எனினும் ஜெர்மனி மற்றும் இத்தாலியின் பாசிச சக்திகளுக்கு எதிராகப் போராடிய பிரிட்டிஷ் அரசுக்கு இடையூறுகளை ஏற்படுத்த காங்கிரஸ் விரும்பவில்லை.
  • எனவே வரையறைக்கு உட்பட்ட சத்தியாகிரகப் போராட்டத்தை காந்தியடிகள் அறிவித்தார்.
  • இதில் ஒருசிலர் மட்டுமே கலந்துகொண்டனர். இந்தியா நாசிசத்தை எதிர்த்த போதிலும் அது தானாகவே முன்வந்து போரில் இறங்காது என்பதை உலகுக்கு உணர்த்துவதே இதன் நோக்கமாகும்.
  • 1940 அக்டோபர் 17ஆம் நாள் வினோபா பாவே சத்தியாகிரகப் போராட்டத்தை முதன் முதலாக ஆரம்பித்தார். அந்த ஆண்டின் இறுதிவரை சத்தியாகிரகம் தொடர்ந்தது. இந்த காலகட்டத்தில் 25,000 க்கும் அதிகமான மக்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆ) கிரிப்ஸ் தூதுக்குழு

  • ஜப்பானியர்கள் இந்தியாவின் கதவுகளைத் தட்டிய நிலையில் 1942 மார்ச் 22ஆம் நாள் அமைச்சரவை (காபினட்) அமைச்சர் சர் ஸ்ட்ராஃபோர்டு கிரிப்ஸ் தலைமையில் ஒரு தூதுக்குழுவை பிரிட்டிஷ் அரசு அனுப்பியது.
  • உரிய அதிகாரத்தை உடனடியாக மாற்றித்தர பிரிட்டன் விருப்பப்படாத நிலையில் காங்கிரஸ் மற்றும் கிரிப்ஸ் தூதுக்குழு இடையேயான பேச்சுகள் தோல்வி அடைத்தன. கிரிப்ஸ் தூதுக்குழு கீழ்க்கண்டவற்றை வழங்க முன்வந்தது.
  1. போருக்குப் பிறகு தன்னாட்சி (டொமினியன் தகுதி) வழங்குவது.
  2. பாகிஸ்தான் உருவாக்க கோரிக்கையை ஏற்கும் விதமாக இந்திய இலவரசர்கள் பிரிட்டிஷாருடன் தனி ஒப்பந்தத்தை கையெழுத்திடலாம்.
  3. போரின் போது பாதுகாப்புத் துறை பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருப்பது.

காங்கிரஸ், முஸ்லிம் லீக் இரண்டுமே இந்தத் திட்ட அறிக்கையை நிராகரித்து விட்டன. திவாலாகும் வங்கியில் பின் தேதியிட்ட காசோலை என காந்தியடிகள் இந்த திட்டங்களை அழைத்தார்.

இ) காந்தியடிகளின் “செய் அல்லது செத்து மடி” முழக்கம்

  • கிரிப்ஸ் தூதுக்குழுவின் வெளிப்பாடு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. போர்க்கால பற்றாக்குறைகளினால் விலைகள் பெரிதும் அதிகரித்து அதிருப்தி தீவிரமடைந்தது. பம்பாயில் 1942 ஆகஸ்டு மாதம் 8ஆம் நாள் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெள்ளையனே வெளியேறு தீர்மானத்திற்கு வித்திட்டதுடன் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு உடனடியாக முடிவு கட்ட கோரிக்கை வைத்தது.
  • செய் அல்லது செத்து மடி என்ற முழக்கத்தை காந்தியடிகள் வெளியிட்டார். “நாம் நமது முயற்சியின் விளைவாக இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவோம், அல்லது நாம் நமது அடிமைத்தனத்தைக் காண உயிருடன் இருக்கமாட்டோம்”, என்று காந்தியடிகள் கூறினார்.
  • காந்தியடிகளின் தலைமையின் கீழ் அகிம்சையான மக்கள் போராட்டம் தொடங்கப்பட இருந்தது. ஆனால் அடுத்த நாள் காலை அதாவது 9 ஆகஸ்டு 1942 அன்று காந்தியடிகளும் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

ஈ) சமதர்மவாத (சோஷலிச) தலைவர்களின் பங்குபணி

  • காந்தியடிகள் மற்றும் இதர முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் அடைபட்டதையடுத்து இந்த இயக்கத்துக்கு சமதர்மவாதிகல் தலைமை தாங்கினார்கள்.
  • சிறையில் இருந்து தப்பிய ஜெயபிரகாஷ் நாராயண், ராமாநந்த் மிஷ்ரா ஆகியோர் திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டனர்.
  • அருணா ஆசப் அலிச் போன்ற பெண் தலைவர்கள் முக்கியப் பணி ஆற்றினார்கள், உஷா மேத்தா நிறுவிய காங்கிரஸ் வானொலி திரைமறைவில் இருந்தபடியே 1942 நவம்பர் மாதம் வரை வெற்றிகரமாகச் செயல்பட்டது. இந்தக் கிளர்ச்சியை கட்டுப்படுத்த ஆங்கிலேய அரசு முழு பலத்தையும் பயன்படுத்தியது.
  • இயந்திரத் துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டதில் ஆயிரனக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். சில இடங்களில் விமானங்கள் மூலமாகவும் குண்டுகள் வீசப்பட்டன. மொத்தமாக அபராதங்கள் விதிக்கப்பட்டு அவை உரிய வேகத்தில் வசூலிக்கப்பட்டன.
  • காந்தி 1943 பிப்ரவரி மாதம் இருத்தோரு நாட்களுக்கான உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இதனால் அவரது உயிருக்குப் பெரும் அச்சுறுத்தல் நிலவியது. இறுதியாக பிரிட்டிஷ் அரசு இறங்கி வந்தது. 1944ஆம் ஆண்டு காந்தியடிகள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

ஊ) மக்களின் வெளிப்பாடு

  • இந்தியாவின் பல பகுதிகளுக்கும் இந்தச் செய்தி பரவியதை அடுத்து அனைத்து இடங்களிலும் ஆங்காங்கே வன்முறை ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
  • வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மறியல் என தாங்கள் அறிந்த வகைகளில் மக்கள் போராட்டங்களை நடத்தினார்கள். இரும்புக் கரம் கொண்டு அரசு இந்த இயக்கத்தைக் கட்டுப்படுத்தியது. அரசுக் கட்டடங்கள், ரயில் நிலையங்கள் , தொலைபேசி மற்றும் தந்தி கம்பிகள் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரத்தின் அடையாளங்களாக நின்ற அனைத்தின் மீதும் மக்கள் தாக்குதல்களை நடத்தினார்கள்.
  • மதராஸில் இது முக்கியமாக தீவிரமாகப் பரவியது. சதாரா, ஒரிஸா (தற்போதைய ஒடிசா), பீகார், ஐக்கிய மாகாணங்கள், வங்காளம் ஆகிய இடங்களில் இணை அரசுகள் நிறுவப்பட்டன.
  • இந்த இயக்கத்தை முடக்கியபோதும், தேசியவாதம் ஆழமாக விவரிக்கப்பட்டதோடு மக்கள் அவற்றில் பங்கேற்று தியாகம் செய்ய ஆயத்தமாக இருப்பதும் தெரியவந்தது.
  • சுமார் 7,000 பேர் கொல்லப்பட்டனர். 60,000க்கும் அதிகமானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். காலனி ஏகாதிபத்திய அரசின் கட்டுப்பாடு, ஆட்சி அதிகாரத்தில் வலுவிழந்திருப்பதை இது முக்கியமாக விளக்கியது.
  • காவல்தூறையினர் உட்பட பல அதிகாரிகள் தேசியவாதத் தலைவர்களுக்கு உதவினார்கள். ரயில் வண்டி இஞ்சின் ஓட்டுனர்களும் மற்றும் கப்பலோட்டிகளும் குண்டு வெடிப்புப் பொருட்களையும் இதரப் பொருட்களையும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்காக கடத்தினார்கள்.

எ) சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இந்திய தேசிய இராணுவம்

  • காங்கிரசை விட்டு விலகிய சுபாஷ் சந்திர போஸ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பிரிட்டிதாரின் எதிரிகளோடு கைகோர்த்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்த அவர் விரும்பினார்.
  • 1941 மார்ச் மாதம், அவர் தனது இல்லத்தில் இருந்து நாடகத்தனமாக (மாறுவேடமணிந்து) தப்பித்து ஆப்கானிஸ்தான் சென்றடைந்தார்.
  • முதலில் அவர் சோவியத் யூனியனின் ஆதரவைப் பெற விரும்பினார். ஆனால் பிரிட்டன் உள்ளிட்ட கூட்டணிப் படைகளுடன் சோவியத் யூனியன் அரசு சேர்ந்ததால் அவர் ஜெர்மனிக்கு சென்றார்.
  • 1943 பிப்ரவரி மாதம், நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக ஜப்பான் சென்ற அவர், நிதிய ராணுவத்தின் கட்டுப்பாட்டைக் கையில் எடுத்தார்.
  • இந்தியப் போர்க்கைதிகளைக் கொண்டு மலாயா மற்றும் பர்மாவில் இருந்த ஜப்பானியர்களின் ஆதரவோடு இந்திய தேசிய ராணுவத்தை (ஆசாத் ஹிந்த் ஃபாஜ்) ஜெனரல் மோகன் சிங் உருவாக்கினார்,
  • அதன்பிறகு இது கேப்டன் லட்சுமி செகல் என்பவரால் நடத்தப்பட்டது. இது காந்தி பிரிகேட், நேரு பிரிகேட், பெண்கள் பிரிவாக ராணி லக்ஷ்மி பாய் பிரிகேட் என மூன்று படையணிகளாக சுபாஷ் சந்திர போஸ் மறுசீரமைத்தார். சுபாஷ் சந்திர போஸ் , சிங்கப்பூரில் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை நிறுவினார்.
  • ‘தில்லிக்கு புறப்படு’ (தில்லி சலோ) என்ற முழக்கத்தை சுபாஷ் வெளியிட்டார். ஜப்பானிய படைகளின் ஒரு பகுதியாக இந்திய தேசிய ராணுவம் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
  • எனினும் ஜப்பான் தோல்வி அடைந்த பிறகு இந்திய தேசிய ராணுவம் முன்னேறுவது தடைபட்டது. சுபாஷ் சந்திர போஸ் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானதால் சுதந்திரத்துக்காக போராடிய அவரது தீவிரப்பணிகள் முடிவுக்கு வந்தன.
  • பிரிட்டிஷ் அரசு இந்திய தேசிய ராணுவ அதிகாரிகளை கைது செய்து செங்கோட்டையில் அவர்களை விசாரணைக்காக வைத்தது. தேசியவாத பிரச்சாரத்துக்கு ஒரு மேடையாக இந்த விசாரணை அமைந்தது.
  • காங்கிரஸ் அமைத்த பாதுகாப்புத்துறை கமிட்டி ஜவகர்லால் நேரு, தேஜ் பஹதூர் சாப்ரூ, புலாபாய் தேசாய், ஆசப் அலி ஆகியோரை உள்ளடக்கியதாக இருந்தது.
  • இந்திய தேசிய ராணுவத்தின் அதிகாரிகளுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கட்டாலும் பொதுமக்கள் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
  • இந்திய தேசிய ராணுவத்தின் தாக்குதல்களும் அதனை அடுத்த வழக்கு விசாரணைகளும் இந்தியர்களுக்கு ஊக்கமாக அமைந்தது.

விடுதலையை நோக்கி

அ) ராயல் இந்திய கடற்படைக் கிளர்ச்சி

  • 1946ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பம்பாயில் ராயல் இந்திய கடற்படை மாலுமிகள் கிளர்ச்சி செய்தனர். விறைவில் அங்கிருந்து வேறு நிலையங்களுக்கும் பரவிய இந்த கிளர்ச்சியில் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட மாலுமிகள் ஈடுபட்டனர். இதேபோன்று ஜபல்பூரில் இருந்த இந்திய விமானப்படை, இந்திய சமிக்ஞை (சிக்னல்) படை ஆகியவற்றிலும் வேலைநிறுத்தங்கள் நடந்தன. இவ்வாறு ஆயுதப்படைகளைலும் கூட பிரிட்டிஷாரின் மேலாதிக்க கட்டுப்பாடு இல்லை.
  • போரில் வெற்றிபெற்ற நிலையிலும் அது முற்றிலுமாக ஆங்கிலேயர்களை வலுவிழந்தவர்களாக ஆக்கியது. தென்கிழக்காசியாவில் ஜப்பானியர்களிடம் பிரிட்டிஷார் சரணடைந்தது ஏகாதிபத்திய ஆட்சிக்குப் பேரிடியாக அமைந்தது. அனைத்து அரசியல் தலைவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். காங்கிரஸ் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஆ) சுதந்திரம் பற்றிய பேச்சுவார்த்தை: சிம்லா மாநாடு

  • 1945ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் நாள் வேவல் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்ததிட்டம் மூலமாக அரசப்பிரதிநிதியின் செயற்குழுவில் இந்துக்களும் முஸ்லிம்களும் சம எண்ணிக்கையில் இடம்பெற்ற ஓர் இடைக்கால அரசுக்கு வகை செய்யப்பட்டது.
  • போர் தொடர்பான துறை தவிர்த்து அனைத்து இதர துறைகளும் இந்திய அமைச்சர்கள் வசம் கொடுக்கப்பட இருந்தன. எனினும் சிம்லா மாநாட்டில் காங்கிரசும் மூஸ்லிம்லீக்கும் ஓர் ஒப்பந்தத்தை எட்டமுடியவில்லை.
  • அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும் முஸ்லிம் லீக்கில் இருந்துதான் இடம்பெற வேண்டும் மற்றும் அவர்கள் அனைத்து முக்கிய விஷயங்களிலும் வீட்டோ அதிகாரங்களையும் பெறவேண்டும் என்று ஜின்னா கோரினார்.
  • 1946-ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடந்த மாகாணத் தேர்தல்களில் பொதுத்தொகுதிகளில் பெரும்பானாவையை காங்கிரஸ் வென்றது. முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் முஸ்லிம் லீக் வென்று தனது கோரிக்கைக்கு வலுசேர்த்தது.

இ) அமைச்சரவைத் தூதுக்குழு

  • பிரிட்டனில் தொழிற்கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்று கிளெமன்ட் அட்லி பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்றார். உடனடியாக ஆட்சி மாற்றம் வேண்டும் என்று விரும்பினார்.
  • அவர் பெதிக் லாரன்ஸ், சர் ஸ்டராஃபோர்ட் கிரிப்ஸ் A.V.அலெக்ஸாண்டர் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் தூதுக்குழுவை இந்தியாவுக்கு அனுப்பினார்.
  • பாகிஸ்தானை தனிநாடாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த அக்குழுவினர் பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் வெளியுறவு ஆகிய துறைகளில் கட்டுப்பாட்டுடன் கூடிய மத்திய அரசை நிறுவ வகைசெய்தது.
  • முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இல்லாத மாகாணங்கள், வடமேற்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்கள் மற்றும் வடகிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்கள் என மூன்றுவகையாக மாகாணங்கள் பிரிக்கப்பட்டன.
  • இந்திய அரசியல் சாசன நிர்ணயமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்து சமூகங்களில் இருந்தும் பிரதிநிதித்துவம் கொண்ட இடைக்கால அரசு நிறுவப்பட வேண்டும்.
  • இந்த திட்டத்தை காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் ஏற்றுக்கொண்டன. எனினும் இரண்டு கட்சிகளுமே தங்களுக்கு சாதகமாக இந்த திட்டம் குறித்து விவரித்தன. மாகாணங்களைப் பிரிப்பது தற்காலிகமாக இருக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்பியபோது முஸ்லிம் லீக் அது ஒரு நிரந்தர அமைப்பாக இருக்கவேண்டும் என்று விரும்பியது.

ஈ) நேரடி நடவடிக்கை நாளுக்கு முஸ்லிம் லீக் அழைப்பு விடுத்தல்

  • காங்கிரஸ் ஒரு முஸ்லிம் உறுப்பினரை நியமித்ததை அடுத்து காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவின. தான் மட்டுமே முஸ்லிம்களின் பிரதிநிதியாக இருக்கவேண்டும் என்று வாதிட்ட முஸ்லிம் லீக் தனது அனுமதியை விலக்கிக்கொண்டது.
  • 1946ஆம் ஆண்டு ஆகஸ்டு 16ஆம் நாளை “நேரடி நடவடிக்கை நாளாக” ஜின்னா அறிவித்தார். ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்பு போராட்டங்களும் நடந்தது விரைவில் அது இந்து-முஸ்லிம் மோதலாக உருவெடுத்தது. இது வங்காளத்தின் இதர மாவட்டங்களுக்கும் பரவியது. நவகாளி மாவட்டம் மிகமோசமாக பாதிக்கப்பட்டது.
  • மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொண்ட காந்தியடிகள் காலணி அணியாமல் நடைபயணம் சென்று வகுப்புவாத மோதல்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததோடு அமைதி மற்றும் அகிம்சை பற்றிய செய்தியைப் பரப்பினார்.

உ) மவுண்ட்பேட்டன் திட்டம்

  • ஜவகர்லால் நேரு தலைமையில் இடைக்கால அரசு 1946ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டது. சில தயக்கங்களுக்குப் பிறகு முஸ்லிம் லீக் இந்த இடைக்கால அரசில் 1946ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இணைந்தது. அதன் பிரதிநிதி லியாகத் அலிகான் நிதி உறுப்பினராக ஆக்கப்பட்டார்.
  • 1948ஆம் ஆண்டு ஜூன் மாதவாக்கில் அதிகாரமாற்றம் ஏற்படும் என்று 1947ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிளெமன்ட் அட்லி அறிவித்தார். இந்த ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யும் பொறுப்புடன் மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவுக்கு அரசுப் பிரதநிதியாக அனுப்பப்பட்டார்.
  • 1947ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் நாள் மவுண்ட்பேட்டன் திட்டம் அறிவிக்கப்பட்டது. கீழ்க்கண்டவை அதில் கூறப்பட்ட அம்சங்கள்:
  • இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு, பிரிட்டனின் தன்னாட்சிப் பகுதி (டொமினியன்) என்ற தகுதியுடன் அதிகாரமாற்றம் நடைபெறும்.
  • சிற்றரசுகல் இந்தியா அல்லது பாகிஸ்தானில் சேரவேண்டும்.
  • ராட்கிளிஃப் பிரவ்ன் தலைமையில் எல்லைகளை நிர்ணயிக்கும் ஆணையம் அமைக்கப்பட்டு அதிகாரமாற்றத்துக்குப் பிறகு இந்த ஆனையத்தின் முடிவு அறிவிக்கப்படும்.
  • பஞ்சாப் மற்றும் வங்காள சட்டப்பேரவைகள் அவைகள் பிரிக்கப்பட வேண்டுமா என்பது பற்றி வாக்கெடுப்பு நடத்தும்.

ஊ) விடுதலையும் பிரிவினையும்

1947ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்திய விடுதலைச் சட்டத்தை இயற்றியதையடுத்து மவுண்பேட்டன் திட்டத்துக்கு செயல்வடிவம் தரப்பட்டது. இந்தியாவின் மீதான ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இறையாண்மையை இந்தச் சட்டம் ரத்து செய்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு பகுதிகளாக இந்தியா பிரிக்கப்பட்டது. 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள் இந்தியா விடுதலை அடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!