Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Samacheer NotesTnpsc

தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் Notes 9th Social Science

9th Social Science Lesson 6 Notes in Tamil

6. தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

அறிமுகம்

  • தேர்தல் என்பது தமக்கான பொது சேவகர் ஒருவரை மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் முறையாகும்.

இந்தியாவில் தேர்தல் முறை

  • இந்திய தேர்தல் முறை, இங்கிலாந்தில் பின்பற்றப்படும் தேர்தல் முறையினைப் பின்பற்றி ஏற்றுக்கொள்ள்ப்பட்டது.
  • இந்தியா ஒரு சமத்துவ, மதச்சார்பற்ற, மக்களாட்சி, குடியரசு நாடாகும், மற்றும் உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாகும்.
  • தற்போதைய நவீன இந்தியாவானது ஆகஸ்ட் மாதம் 15ம் நாள் 1947ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது.
  • இந்திய அரசியலமைப்பின் XVம் பகுதியில் காணப்படும், 324 முதல் 329 வரையிலான பிரிவுகளில் கூறப்பட்டுள்ள பின்வரும் விதிமுறைக்கேற்ப நம் நாட்டின் தேர்தல் முறை அமைக்கப்பட்டிருக்கிறது.
    1. நாட்டின் சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்திட தன்னிச்சியான தேர்தல் ஆணையம் அமத்திட இந்திய அரசியலமைப்பின் பிரிவு 324ன் படி வழிவகைச் செய்கிறது.

தற்போது தேர்தல் ஆணையமானது ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களை உள்ளடக்கியுள்ளது.

    1. பாரளமன்ற தேர்தல் சம்மந்தமான வாக்காளர்களின் பட்டியல் தயாரித்தல், தொகுதிகளை வரையறை செய்தல் உட்பட அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டப் பிற அனைத்து விவகாரங்களைப் பெறுவதற்கான சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றலாம்.
    2. மாநில சட்டசபைத் தேர்தல் சம்மந்தமான வாக்காளர்களின் பட்டியல் தயாரித்தல், தொகுதிகளை வரையறை செய்தல் போன்றவற்றை அரசியலமைப்பிற்குட்பட்டு தேவையான மாற்றங்களை மாநில சட்ட சபை சட்டங்களை இயற்றலாம்.
  • தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்தில் குடவோலை என்னும் வாக்களிக்கும் முறை வழக்கத்தில் இருந்தது.
  • இந்தியாவில் ஜனவரி 25ம் நாளினை தேசிய வாக்காளர் தினமாக் கொண்டாடுகிறோம்.

தேர்தல் நடைமுறை

  • தேசிய அளவில் அரசாங்கத்தின் தலைவர் பிரதமர் ஆவார்.
  • இவர் இந்திய பாரளமன்றத்தின் கீழவையான மக்களவை (லோக்சபா) உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • நம்மை போன்ற மக்களாட்சிப் பிரதிநித்துவ நாடுகளில் தேர்தல் முறை முக்கிய பங்கு வகிக்கிறது.

நோட்டா (மேற்கண்ட எவரும் இல்லை NOTA=None Of The Above))அறிமுகம்

  • ஒரு மக்களாட்சி நடைபெறும் நாட்டில் உள்ள வாக்காளர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் தேர்வு செய்ய விருப்பம் இல்லை எனில், வாக்காளர்கள் மேற்கண்ட எவரும் இல்லை (NOTA- None Of The Above) எனும் பொத்தானை வாக்கு இயந்திரத்தில் தேர்வு செய்யாலாம்.
  • இந்திய தேர்தல் நடத்தை விதிகள்,(1961)-இல் எனும் சட்டத்தின் விதி எண் 49-0 இம்முறை பற்றி விவரிக்கிறது.

  • 2014 நடைபெற்ற பொதுத் தேர்தலில் முதல் முறையாக NOTA அறிமுகப்படுத்த்ப்பட்டது.
  • உலகில் NOTAவை அறிமுகப்படுத்திய 14ஆவது நாடு இந்தியாவாகும்.

இந்தியாவில் தேர்தல் வகைகள்

  • இந்தியாவில் இரண்டு வகையான தேர்தல்கள் நடைபெறுகின்றன.
  • அவை நேரடியாகத் தேர்தல் மற்றும் மறைமுகத் தேர்தல் ஆகும்.

நேரடித் தேர்தல்

  • நேரடித் தேர்தலில் வாக்காளர்கள் தமது பிரதிநிதிகளைத் தாங்களே நேரடியாக தேர்ந்தெடுக்கிறார்கள்.
  • 18 வயது பூர்த்தியடைந்த மக்கள் நேரடித் தேர்தல் முறைக்குப் பின்வரும் சில எடுத்துக்காட்டுக் காணலாம்.
  1. மக்களவை தேர்தலில் நாடாளமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தல்.
  2. சட்டமன்றத் தேர்தல்களில் சட்டப்பேரவை உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தல்.
  3. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தல்.

நிறைகள்

  1. வாக்காளர்கள் தங்களது பிரதிநிதிகளை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதால், நேரடித் தேர்தல் முறையானது வலுவான மக்களாட்சி கொண்டதாகக் கருதப்படுகிறது.
  2. அரசாங்க நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வும், தகுதியான பிரதிநிதிளைத் தேர்ந்தெடுக்கவும் மக்களுக்குக் கற்பிக்கிறது.மேலும் மக்கள் அரசியலில் முக்கிய பங்கு வகிக்க ஊக்கமளிக்கிறது.
  3. மக்களைத் தீவிரமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டுகிறது.

குறைகள்

  1. நேரடித் தேர்தல் முறை அதிக செலவு கொண்டதாக உள்ளது.
  2. எழுத்தறிவற்ற வாக்காளர்கள், பொய்யானப் பரப்புரைகளால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.

சில நேரங்களில் சாதி, மதம் மற்றும் இன்ன பிற பிரிவுகளை அடிப்படையாக்க் கொண்டு நடத்தப்படும் பிரச்சாரங்கள் மற்றும் பொய்யானப் பரப்புரைகளாலும் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.

  1. நேரடித் தேர்தல் நடத்துவது மிகப்பெரும் பணியாக இருப்பதால், ஒவ்வொரு வாக்கு மையங்களிலும் சுதந்திரமான, நியாயமான தேர்தல் முறையை உறுதி செய்வது என்பது தேர்தல் ஆணையத்திற்கு மிக பெரும் சவாலாக உள்ளது.
  2. சில அரசியல் கட்சி வேட்பாளர்கள், வாக்காளர்கள் மீது பணம், பொருள் (அ) பணிகள் மூலமாக தங்களது செல்வாக்கைச் செலுத்துவது என்பது ஒரு மற்றொரு சவாலாகும்.
  3. தேர்தல் பரப்புரைகளின் போது சில நேரங்களில் வன்முறைகள், பதற்றங்கள்,சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முறை பாதிக்கப்படுகிறது.

மறைமுகத் தேர்தல்

  • மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் வாக்களித்துத் தேர்வு செய்யும் முறையே மறைமுகத் தேர்தல் ஆகும்.
  • குடியரசுத் தலைவர் தேர்தலில் இத்தகைய முறையானது கடைபிடிக்கப் படுகிறது.

நிறைகள்

  1. மறைமுகத் தேர்தல்கள் நடத்த செலவு குறைவானதாகும்.
  2. மறைமுகத் தேர்தல் முறையானது பெரிய நாடுகளுக்கு உகந்தது.

குறைகள்

  1. வாக்காளர் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதால் ஊழல், கையூட்டு, குதிரை பேரம் ஆகியவற்றிற்கு வாய்ப்புகள் அதிகம் காணப்படும்.
  2. மக்கள் தனது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க நேரடியாக பங்கு பெறாமல், மாறாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகளே இம்முரையில் பங்கு பெறுவதால், மக்கள் பிரதிநிதித்துவம் குறைந்த மக்களாட்சி முறையாக காணப்படுகிறது.
  3. எனவே, மக்களின் உண்மைய்யன விருப்பத்தை பிரதிபலிக்காமல் இருக்க நேரிடுகிறது.

இந்தியக் குடியரசுத் தலைவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

  • இந்தியக் குடியரசுத் தலைவர் பின்வரும் உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் குழாம் (Electoral Collage) மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவை
  1. பாராளுமன்றத்தின் இரு அவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
  2. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்.

(குறிப்பு: பாராளுமன்ற இரு அவைகள் மற்றும் மாநில சட்டமன்றங்களில் நியமிக்கப்படும் நியமன அங்கம் இக்குழுவில் இடம் பெற மாட்டார்கள்)

அரசியல் கட்சிகள்

  • மக்களாட்சி அரசாங்கத்தில் அரசியல் கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இந்த அரசியல் கட்சிகள் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது.

அரசியல் கட்சி என்பதன் பொருள்

  • ஓர் அரசியல் கட்சி என்பது அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்காகத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிகழ்ச்சி நிரல்களையும், குறிப்பிட்ட கொள்கைகளையும் கொண்ட, மக்கள் குழுவின் அமைப்பாகக் காணப்படும்.
  • தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் எனும் மூன்று அங்கங்களை ஓர் அரசியல் கட்சி பெற்றுள்ளது.

கட்சி முறையின் வகைகள்

  • உலகில் கட்சி முறையினை மூன்று வகைகளாக வகைப்படுத்தலாம்.
  1. ஒரு கட்சி முறை – ஒரே ஒரு ஆளும் கட்சி மட்டும் பங்கு பெறுவது ஆகும்.இம்முறையில் எதிர்கட்சிகள் அனுமதிக்கப்படுவதில்லை.(எ.கா. சீனா, கியூபா, முன்னாள் சோவித் யூனியன்)
  2. இரு கட்சி முறை – இரு முக்கிய கட்சிகள் மட்டுமே பங்கு பெறுவது ஆகும்.(எ.கா. அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து)
  3. பல கட்சி முறை – இரண்டிற்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கு பெறுவது ஆகும்.(எ.கா. இந்தியா, இலங்கை, பிரான்ஸ், இத்தாலி)

அரசியல் கட்சியின் வகைகள்

  • இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளானது செல்வாக்குப் பெறும் பிரதேசத்திற்கு ஏற்ப இரு முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.அவை
  1. தேசியக் கட்சிகள்
  2. மாநிலக் கட்சிகள்

தேசியக் கட்சிகள்

  • ஒரு கட்சி குறைந்து நான்கு மாநிலங்களிலாவது மாநிலக் கட்சி என்ற தகுதியை பெற்றிருக்குமானால் அது ‘தேசியக் கட்சி’ என்ற தகுதியை பெறுகிறது.
  • அனைத்து அரசியல் கட்சிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தல் வேன்டும்.
  • இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகலையும் சமமாகப் பாவித்துப் போதிலும், தேசியக் கட்சிகளுக்கும், மாநிலக் கட்சிகளுக்கும் சில சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது.
  • இக்கட்சிகளுக்கு தனித்தனிச் சின்னங்கள் வழங்கப்படுகிறது.
  • ஒரு லட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மட்டுமே அக்கட்சியின் சின்னத்தை உபயோகிக்க முடியும்.
  • 2017 நிலவரப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய கட்சிகளின் எண்ணிக்கை ஏழு ஆகும்.

மாநிலக் கட்சிகள்

  • ஏழு தேசிய கட்சிகளைத் தவிர, நாட்டின் பெரும்பான்மையாக முக்கிய கட்சிகளை “மாநிலக் கட்சி” களாக தேர்தல் ஆணையம் வகைப்படுத்தப்படுகிறது.
  • இக்கட்சிகள் பொதுவாகப் “பிராந்தியக் கட்சிகள்” என்று குறிப்பிடுவர்.
  • மக்களவை தேர்தலிலோ அல்லது மாநில சட்ட சபைத் தேர்தலிலோ ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களை வெற்றி பெற்ற அல்லது குறிப்பிட்ட சதவிகத வாக்குகளைப் பெற்றதின் அடிப்படையில் இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு கட்சியை மாநிலக் கட்சியாக அங்கீகாரம் அளிக்கிறது.

கட்சிகளின் அங்கீகாரம்

  • இந்தியத் தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி தேசியக் கட்சி எனும் பங்கு பெற பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்திருத்தல் வேண்டும்.
  1. மக்களவை தேர்தலிலோ (அ) மாநில சட்டசபைத் தேர்தலிலோ குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களில் பதிவான மொத்தச் செல்லத்தகுந்த வாக்குகளில் குறைந்தபட்சம் 6% பெற்றிருக்க வேண்டும்.
  2. குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களில் ‘மாநிலக் கட்சியாக’ அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள்

  • கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடுகின்றன.
  • பெரும்பாலான மக்களாட்சி நாடுகளால் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் இடையேத்ஹன் கடும் போட்டிகள் நிலவுகின்றன.
  • கட்சிகள் தங்களைத் தேர்ந்தெடுக்க அவர்களது கொள்கைகளையும், திட்டங்களையும் தேர்தல் தொகுதிகளில் முன்னிறுத்துகின்றனர்.
  • நாட்டில் சட்டங்கள் இயற்றுவதில் அரசியல் கட்சிகள் முறையாக சட்டங்கள் முக்கிய பங்களிப்புச் செய்கின்றன.
  • முறையாக சட்டங்கள் நாடளுமன்றங்களிடும், சட்டமன்றங்களிலும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றுகின்றன.
  • அரசியல் கட்சிகள் அரசாங்கத்தினை அமைத்து, அவற்றை வழிநடத்துகின்றனர்.
  • தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகள் எதிகாட்சியாகப் பங்களிப்புச் செய்கின்றன.
  • இவை அரசின் குறைகள் மற்றும், தவறான கொள்கைகளை எதிர்த்து பல்வேறுபட்ட பார்வைகளை முன்வைக்கின்றன, விமர்சனம் செய்கின்றன.
  • மக்கள் கருத்திற்கு அரசியல் கட்சிகள் வடிவம் கொடுக்கப்படுகின்றன.மேலும் அவை முக்கிய நிகழ்வுகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றன.
  • அரசாங்கத்திற்கும் மக்களும் இடையில் ஒரு பாலமாக அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன.

மக்களாட்சியில் எதிர்கட்சிகளின் பங்கு

  • மக்களாட்சியில், அமெரிக்க ஐக்கிய நாட்டைப் போல் இரு கட்சி ஆட்சி முறையோ அல்லது இந்தியா, பிரெஞ்சு நாடுகளைப் போல் பல கட்சி முறையோ இருக்கலாம்.
  • பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெற்றக் கட்சியாக ஆளும் கட்சியும், எஞ்சிய மக்களின் ஆதரவு பெற்றக் கட்சியாக எதிர் கட்சியும் இருக்கும்.
  • மக்களாட்சி முறையிலான அனைத்து அரசாங்களிலும் எதிர்கட்சித் தலைவர் முக்கிய பங்கை வகிக்கிறார்.
  • இவர் பொது நடவடிக்கைகளை பாதிக்கும் ஆளும் கட்சியின் தவறான கொள்கைகளை எதிர்க்கிறார்.
  • பொதுக்கணக்குக் குழுவின் தலைவராக இவர் அரசுத் துறைகளின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளக்குவதோடு மக்கள் நலனுக்காக்ச் செலவிடப்படும் பொதுப் பணத்தை ஆய்வு செய்கிறார்.
  • இதே போன்று அவர் மத்தியக் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறார்.
  • மக்களாட்சியில் எதிர்க்கட்சிகள் ஒரு பொறுப்பானப் பங்கினையும் மக்களின் நியாயமானக் கோரிக்கைகள் மற்றும் விருப்பத்தையும் பிரதிபலிக்கின்றது.

அழுத்தக் குழுக்கள்

  • அழுத்தக் குழுக்கள் என்ற சொல் ஐக்கிய அமெரிக்க நாட்டில் உருவாக்கப்பட்டது.
  • பொது நலங்களைப் பாதுக்காக்கவும் ஊக்குவிக்கவும் தீவிரமாக செயல்படும் குழு அழுத்தக் குழு என்று அழைக்கப்படுகிறது.
  • அரசு மீது அழுத்தம் செலுத்தி அரசின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரும்படி நெருக்கடி தருவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
  • அழுத்தக் குழுக்கள் ‘நலக் குழுக்கள்’ அல்லது தனிப்பட்ட நலக்குழுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
  • அதே சமயம் இவை அரசியல் கட்சியிலிருந்து வேறுபட்டவை.
  • தேர்தலில் போட்டியிடுவதில்லை.
  • அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற விளைவதும் இல்லை.

இந்தியாவில் அழுத்தக் குழுக்கள்

  • இந்தியாவில் தற்போது அதிக எண்ணிக்கையிலான அழுத்தக் குழுக்கள் உள்ளன. ஆனால் அவைகள் அமெரிக்கா அல்லது மேற்கத்திய நாடுகளான இங்கிலாந்து, பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருப்பதைப் போல் வளர்ச்சி அடைந்தவையாக காணப்படுவதில்லை.

இந்தியாவில் செயல்படும் அழுத்தக் குழுக்களைக் கீழ்க்காணும் வகைகளாக வகைப்படுத்தலாம்.

  1. வணிகக்குழுக்கள்
  2. தொழிற்சங்கங்கள்
  3. விவசாயக் குழுக்கள்
  4. தொழில் முறைக் குழுக்கள்
  5. மாணவர் அமைப்புகள்
  6. மத அமைப்புகள்
  7. பழங்குடி அமைப்புகள்
  8. மொழிக் குழுக்கள்
  9. கோட்பாட்டு அடிப்படைக் குழுக்கள்
  10. சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுக்கள்

இந்தியாவில் அழுத்தக் குழுக்களின் செயல்பாடுகள்

  • அரசின் கொள்கையில் செல்வாக்குச் செலுத்துவதன் மூலம் குறிப்பிட்ட நலன்களைப் பெறச் செயல்படும் நலக் குழுக்கள் அழுத்தக் குழுக்கள் எனப்படும். அவை எந்த அரசியல் கட்சியுடனும் அணி சேருவதில்லை.
  • ஆனால் மறைமுக முடிவுகள் எடுப்பதுல் அதிக செல்வாக்குச் செலுத்தும் அளவுக்கு ஆற்றல் மிக்கவை.
  • பிரதிநிதித்துவப்படுத்துதல், அரசியல் பங்கேற்பு, கல்வி, கொள்கை உருவாக்கம் மற்றும் கொள்கை அமலாக்கம் போன்ற பல வகைகளான செயல்பாடுகளை அழுத்தக் குழுக்கள் மேற்கொள்கின்றன.

அரசியல் பங்கேற்பு

  • அரசியலின் மற்றொரு முகம் என்று அழுத்தக் குழுக்களைக் கூறலாம். மனுக்கள் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்ற அரசியல் செயல்பாடுகள் மூலம் மக்கள் ஆதரவைத் திரட்டி தங்கள் செல்வாக்கினை அழுத்தக் குழுக்கள் விரிவுபடுத்துகின்றன.
  • இத்தகைய செயல்பாடுகள் இளைய சமுதாயத்தினரை வெகுவாகக் கவர்ந்திழுக்கின்றன.

கல்வி

  • பல அழுத்தக் குழுக்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது, இணையத்தளம் பராமரிப்பு, அரசுக் கொள்கைகள் மீது கருத்துகள் வெளியிடுவது மற்றும் உயர்நிலைக் கல்வியாளர்கள், அறிவியலாளர்கள் மட்டுமல்லாமல் முக்கிய பிரபலங்களிடமிருந்தும் கருத்துகளைத் திரட்சி வல்லுநர்களின் ஆதரவினைப் பெறுவது ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன.

கொள்கை உருவாக்கம்

  • அழுத்தக் குழுவினர் கொள்கைகளை உருவாக்குபவர்கள் இல்லை என்ற போதிலும் கொள்கை உருவாக்கச் செயல்முறைகளில் அவர்கள் பங்கேற்பதைத் தடுப்பதில்லை.
  • அரசுக்குக் குழுவினர் வலுவான பங்களிப்புச் செய்து வருகின்றனர். கொள்கை உருவாக்கச் செயல்முறைகளில் அவர்கள் தொடர்ந்து ஆலோசனை தருகின்றன.

மக்கள் குழுவும் பங்கேற்பும்

மக்கள் குழு

  • மக்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தும் சமூக ரீதியிலான ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை நோக்கி மக்கள் குழுவை திரட்டுவது அவசியமே.
  • சில சில நேரங்களில் நில நடுக்கம், சுனாமி, வெள்ளப்பெருக்கு மற்றும் பிற இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது மீட்பு, நிவாரணம் போன்ற அவசரப் பணிகளுக்கு உடனடியாக மக்களைத் திரட்ட நேரிடும்.

மக்களாட்சியில் பங்கேற்பு

  • நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் மக்கள் பெருவாரியாகப் பங்கேற்கும்போதே மக்களாட்சி அமைப்பு வெற்றிகரமாக இயங்க முடியும்.
  • அதே சமயத்தில் வரி மற்றும் வருவாய் வசூலிக்கும் முறையிலும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சுத்தம் சுகாதாரம், உடல் ஆரோக்கியம் மற்றும் போலியோ சொட்டுமருந்து அளித்தல் போன்ற சிறப்புத் திட்டங்களிலும் ஒவ்வொரு குடிமகனும் சிறிய உள்ளூர் குழுக்களும் பங்கு பெறும் போது மட்டுமே மக்களாட்சி வெற்றி பெற முடியும்.
  • எனவே, மக்களாட்சி அரசாங்கத்தை விட சிறந்த அரசாங்கம் இல்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
  • சிறந்த சமூகத்தையும் நாட்டையும் உருவாக்க, இந்திய மக்களாகிய நாம் மத்திய மற்றும் மாநில அரசாங்கத்துடன் இணைந்து மனித வாழ்க்கையின் துன்பங்களை ஒழித்திட ஒற்றுமையுடன் போராட வேண்டும்.

அழுத்தக் குழுக்களுக்கான எடுத்துக்காட்டுகள்

  1. இந்திய வணிகம் மற்றும் தொழிற்துறை சம்மேளத்தின் கூட்டமைப்பு (FICCI)
  2. அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC)
  3. அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS)
  4. இந்திய மருத்துவச் சங்கம் (IMA)
  5. அகில இந்திய மாணவர் சம்மேளனம் (AISF)
  6. அகில இந்திய சீக்கிய மாணவர் பேரவை
  7. இளம் பதாகா சங்கம் (YBA)
  8. தமிழ்ச்சங்கம்
  9. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
  10. நர்மதா பச்சாவோ அந்தோலன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!